ஊர்ப்புதினம்

யாழ்.போதனா வைத்தியசாலையின் எரியூட்டி, கோம்பயன்மணல் இந்து மயானத்தில் திறந்து வைப்பு.

2 hours 44 minutes ago
spacer.png யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு!
யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

01-3-2-1-600x338.jpg

https://athavannews.com/2024/1375554

தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன

4 hours 9 minutes ago
ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன 15-22.jpg

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது.

குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

30 வருட காலமாக

அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிர்வாக அடக்குமுறை

இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

https://akkinikkunchu.com/?p=272438

சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்

4 hours 11 minutes ago
சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்
March 29, 2024
 
WhatsApp Image 2024 03 22 at 8.26.51 AM சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் - வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்
 

இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.
 
கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?
 

பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது.

கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்?

பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

sea சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் - வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்கேள்வி

 – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது.

கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது.

கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன?

பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது.

கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும்.

தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு.

பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது.

ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை.

மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு.

https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/

இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா்

4 hours 16 minutes ago
இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா்
March 29, 2024
 

9 2 இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை - புனரமைப்பையும் ஆரம்பித்தனா்
 

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
“நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
 

https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/

பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன

4 hours 22 minutes ago
பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன

ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர்.

கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை.

இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341

முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு !

4 hours 30 minutes ago
 முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு !
620139104.jpg

(புதியவன்)

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல்.

மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.

அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 

https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!

 

மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!

4 hours 34 minutes ago
மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!
629024181.jpg
 

புதியவன்

சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க)

https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி விஜயம்

6 hours 22 minutes ago

Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM

image

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது.

IMG-20240328-WA0032.jpg

குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/179939

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம் - பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு

18 hours 32 minutes ago
28 MAR, 2024 | 09:33 PM
image
 

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் . 

இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.  

குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.   

குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது . 

DSC_0009.JPG

https://www.virakesari.lk/article/179920

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய துணைத்தூதர்

18 hours 53 minutes ago
28 MAR, 2024 | 09:36 PM
image
 

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார். 

அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

01__7_.jpg

01__1___1_.jpg

https://www.virakesari.lk/article/179913

McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்

20 hours 4 minutes ago

Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67

facebook sharing button
twitter sharing button
print sharing button
whatsapp sharing button

அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர்.

“இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது.

கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது.

Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை

20 hours 7 minutes ago

28 MAR, 2024 | 12:07 PM

சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.  

இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.   

மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.   

கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .  

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு

20 hours 10 minutes ago

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு. 

(புதியவன்)

அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன.

அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள்.

இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். 

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். 

அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார். 

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ)

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)

முன்னாள் போராளியை 3 நாள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு

1 day 5 hours ago
முன்னாள் போராளியை 3 நாள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு
March 28, 2024
 

18 முன்னாள் போராளியை 3 நாள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தனை (ஆனந்தவர்மன்) மூன்று நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்கப் பாதுகாப்பு அமைச்சால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு நேற்றுமுன் தினம் வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் போராளிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவரைப் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் மூன்று நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்கப் பாதுகாப்பு அமைச்சால் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் வகையில் முகநூலில் அரவிந்தன் பதிவிட்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டியே அவரைப் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
 

https://www.ilakku.org/ex-militant-detained-for-3-days-and-ordered-to-be-interrogated/

 

ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் – அல் – ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

1 day 5 hours ago
ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் – அல் – ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
March 28, 2024
 

555 ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் - அல் - ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயும் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருவதாக அல் – ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மட்டுமல்லாது இருதரப்பிலும் இலங்கையர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அல் – ஜசீரா அறிக்கை யொன்றையும் தயார்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்டதில் குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய பதுங்கு குழியின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த சக இலங்கையர் ஒருவரால் அவர் அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்காக போராடிய மூன்று இலங்கையர்களுடன் இந்த இரண்டு இறப்புகளும் சேர்ந்துள்ளன என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இப்போது உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். குறித்த இலங்கையர்கள் ரஷ்யாவில் மாதாந்தம் 3,000 டொலர் சம்பளம் மற்றும் ரஷ்ய குடியுரிமையை எதிர்பார்த்து ஆயுதமேந்தி போராடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பெரும்பாலும் ஓய்வுபெற்ற இலங்கைப் படையினர் – ரஷ்ய இராணுவத்தில் சேர தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், இலங்கையில் உள்நாட்டில் கடுமையான வறுமையின் மத்தியில் மொஸ்கோவின் பணத்திற்கு ஈடாக உக்ரேனியப் படைகளின் கைகளில் மரணத்தைப் பணயம் வைக்கத் தயாராக இருப்பதாகவும் அல் ஜசீரா மேலும் தெரிவித்துள்ளது.

டிசெம்பரில், சிறப்புப் போராளிகள் பிரிவுக்கு தலைமை தாங்கிய கப்டன் ரனிஷ் ஹேவகே மற்றும் எம்.எம். பிரியந்த மற்றும் ரொட்னி ஜெயசிங்க ஆகிய இரு இலங்கையர்களும் ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு கொல்லப்பட்டனர்.
டிசெம்பர் 15 அன்று பல உக்ரேனிய வீரர்களுடன் கீவ் நகருக்கு கிழக்கே 400 கி.மீ. (240 மைல்) தொலைவில் உள்ள மிலினோவ் என்ற இடத்தில் ஹேவகே புதைக்கப்பட்டார், ஆனால் மற்ற இரண்டு இலங்கையர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை.

உக்ரேனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையணியில் பணியாற்றிய சுமார் 20 இலங்கையர்கள் ஹேவகேவின் மரணத்திற்குப் பிறகு அப்பகுதியை விட்டு வெளியேறினர், 25 வயதான லஹிரு ஹத்துருசிங்க, காயமடைந்த ரனிஷ் ஹேவகேவை பல கிலோமீற்றர்கள் தாண்டி பாதுகாப்புக்காக அழைத்துச் சென்றனர். ஆனாலும் அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.

உக்ரேனுக்காகப் போரிடுவதற்காக இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறிய ஹத்துருசிங்க, ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பக்கம் இன்னும் இணைந்திருக்கும் ஒரே இலங்கையர் என நம்பப்படுகிறது.

https://www.ilakku.org/sri-lankans-participating-in-the-russo-ukraine-war/

திருகோணமலையில் சிவலிங்கம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பௌத்த தேரர்கள்

1 day 5 hours ago
திருகோணமலையில் சிவலிங்கம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பௌத்த தேரர்கள்
Vhg மார்ச் 28, 2024
Photo_1711586805190.jpg

 

திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பினால் நேற்று(27-03-2024) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பௌத்தப்பிக்கு ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சார்பாக குரல் எழுப்பும் விதத்தில் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம்.

துறைமுக அதிக அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி ஊடாக இதுவரை 4445 குடும்பங்களை திட்டம் என்ற நோக்கில் விரட்டி அடிப்பதற்கு தற்போது செயற்திட்டங்கள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள்

கடந்த காலங்களில் திமுதுகம கரடிபுல் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விரட்டும் நடவடிக்கையில் நீதிமன்ற கட்டளைகளை எடுத்துக்கொண்டு அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானித்தோம்.

அதேபோன்று சமன்புற கிராமத்தில் உள்ளவர்களுக்கும் சட்டங்களை பயன்படுத்தி அவர்களை எழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்படி எங்களை மக்களுக்கு தெளிவூட்டும் விதத்திலேயே திருகோணமலை கோகனபுர காக்கும் அமைப்பு செயல்பட்டு வருகின்றது.

மேலும் திருவண்ணாமலையில் பௌத்த மக்களுக்கு இடம்பெற்று வரும் நிகழ்ச்சி நிரல்களும்மாவட்டத்தில் 1008 சிவலிங்கங்களை வைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் சிங்கள மக்களின் காணிகளுக்குரிய உறுதி பத்திரங்கள் வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்தும் தொல்பொருளுக்குரிய இடங்களை சேதமாக்குவதை கண்டித்தும் எங்களுடைய எதிர்ப்பினை மேற்கொண்டு வருகின்றோம்.

திருகோணமலையில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பலர் முயற்சித்து வருவதாகவும் அதற்கு இடம் அளிக்க மாட்டோம் எனவும் திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பின் பிரதானி இதன் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்தப்பிக்குகளுக்கு வலுவூட்டும் விதத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.
 

https://www.battinatham.com/2024/03/blog-post_160.html

ஒட்டுசுட்டானில் பாரிய குழாய்க் கிணறு; போராடத் தயாராகும் மக்கள்

1 day 5 hours ago
ஒட்டுசுட்டானில் பாரிய குழாய்க் கிணறு; போராடத் தயாராகும் மக்கள்
168542315.jpeg

(செல்வன்) 

ஒட்டுசுட்டானில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அமைக்கப்படவுள்ள பாரிய குழாய்க் கிணறு  போராடத் தயாராகும் மக்கள் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள ஒட்டுசுட்டான் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் அலுவலக காணிக்குள் 300 அடி ஆழம் கொண்ட குழாய் கிணறு தோண்டப்படுவதால் அருகில் உள்ள விவசாயிகளின் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் என தெரிவித்து விவசாயிகள் மக்கள் இணைந்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள்.

ஒட்டுசுட்டான், சிவநகர் ,காதலியார் சமணங்குளம்,போன்ற கிராமங்களில் வசிக்கும் குடும்பங்கள் விவசாயத்தினை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள் இந்த மக்கள் நிலக்கடலை,மிளகாய்,பப்பாசி போன்ற தோட்டங்களை அவர்களின் கிணற்று நீரினை பயன்படுத்தி செய்கை பண்ணிவருகின்றார்கள்.

இந்தநிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச குடிநீர் திட்டத்திற்காக நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை ஒட்டுசுட்டான் நீர்ழங்கல் விநியோகத்திட்ட அலுவலக காணிக்குள் அனுமதியற்ற முறையில் 300அடி ஆழத்தில் நிலத்தடி நீரினை உறுஞ்சி ஏனைய பிரதேச மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஒட்டுசுட்டான் நீர்வழங்கல் விநியோகத்திட்ட அலுவலகம் அமைக்கும் போது பேராற்றில் இருந்து நீரினை கொண்டுவந்து சுத்திகரித்து மக்களுக்கு வழங்குவதாக அறிவித்தே நீர்வழங்கல் திட்டத்தினை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் அலுவலகம் அமைந்த காணிக்குள் 300 அடி அழம் கொண்ட நிலத்தடி நீரினை உறுஞ்சும் குழாய் கிணறுஅமைக்கும் பணிகள் அண்மை நாட்களாக நடைபெற்று வந்ததை அறிந்த கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 26.03.2024 ஒன்று கூடியபோது அங்கு கிராம சேவையாளர் மற்றும் பொலீசார் வருகைதந்து மக்களின் பிரச்சினையினை கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.

எவரின் அனுமதியும் இன்றி நிலத்தடி நீரினை உறுஞ்சும் இந்த செயற்பாட்டிற்கு அருகில் உள்ள கிராம மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் இந்த குழாய் கிணறு அமைக்கு நடவடிக்கையினை கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.

பொலிசாரின் பிரசன்னத்துடன் குழாய்கிணறு அமைக்கும் இயந்திரம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பில் அரச மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியபின்னர் முடிவிற்கு வருவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.(ஏ) 
 

https://newuthayan.com/article/ஒட்டுசுட்டானில்_பாரிய_குழாய்க்_கிணறு;_போராடத்_தயாராகும்_மக்கள் 

 

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

1 day 5 hours ago
tero.jpg ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

https://athavannews.com/2024/1375370

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின் உற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் - அமைச்சர் டக்ளஸ்

1 day 6 hours ago
28 MAR, 2024 | 09:56 AM
image
 

வட மாகாணத்துக்கு தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 ஆயிரம் சூரிய மின் உற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் ஜனாதிபதியின் இணக்கத்தோடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க, வட மாகாணத்தில் முன்னர் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்ட 25 ஆயிரம் வீடுகளுக்குப் பதிலாக 50 ஆயிரம் வீடுகள் வழங்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே வீடுகள் வழங்கப்பட்டு, அவற்றில் நிறைவு செய்யப்படாத வீடுகளுக்காக பதிவு செய்தவர்களும், மீள்குடியேற்றத்தின் பின்னர் காணி இல்லாமல் போனவர்களும், சொந்தக்காணி இருந்தும் இதுவரை வீடு கிடைக்காதவர்கள் மற்றும் வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு வேறு ஏதேனும் வழியில் தகைமையுடையவர்களும் இந்த விசேட திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

download.jpg

https://www.virakesari.lk/article/179870

தமது சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

1 day 19 hours ago

Published By: DIGITAL DESK 3.   27 MAR, 2024 | 03:25 PM

image
 

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று புதன்கிழமை (27) கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு இலங்கையின் இராணுவ தளபதி முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இராணுவ படை தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தார். அவரிடம் தமது சொந்த காணிகளை விடுவித்து தருமாறு கோரி மகஜர் கையளிக்க  குறித்த இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக ஒன்று கூடி கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும் இராணுவ தளபதியை தற்போது சந்திக்க முடியாதெனவும் இன்றைய தினம் மாலை 3 மணியளவில் 5 நபர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு மேற்கொண்டு தருவதாகவும் இராணுவத்தினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த கவனயீர்ப்பினை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தனர்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கடந்த 11.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர். இதன்போது குறித்த கடிதத்தை தான் உரிய தரப்புக்களுக்கு அனுப்பி  பத்து நாட்களில் ஒரு பதிலை பெற்று வழங்குவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் திங்கட்கிழமை (25) கேப்பாபிலவு மக்கள் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடிய போது தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு இதுவரை கிடைக்கவில்லை என மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபிலவு  மக்கள் தெரிவித்திருந்தனர்.

கேப்பாப்பிலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம், ஆலயங்கள், தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.

குறிப்பாக மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் பல குறித்த காணியிலேயே காணப்படுகின்றன. 62 நபர்களின் 171 ஏக்கர் காணிகள் தற்போது விடுவிக்கப்படாது இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பல போராட்டங்கள் செய்தும் இதுவரை தீர்வு இல்லை என்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்திருந்த நிலையிலே இன்றையதினம் கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/179835

 

 

Checked
Fri, 03/29/2024 - 10:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr