வாழும்-புலம்

எதனையும் துணிந்து செய்யும் ஆற்றல் பெண்களுக்கும் உள்ளது பாடகி, பெண் விமானி சாதனைப்பெண் அர்ச்சனா செல்லத்துரை உடனான நேர்காணல்

Sat, 19/08/2017 - 19:41
எதனையும் துணிந்து செய்யும் ஆற்றல் பெண்களுக்கும் உள்ளது

 

பாடகி, பெண் விமானி சாதனைப்பெண் அர்ச்சனா செல்லத்துரை உடனான  நேர்காணல்

 

எந்­தத்­து­றையும் யாருக்கும் தனித்­த­தொன்­றல்ல. எத­னையும் அச்­ச­மின்றி எதிர்­கொள்ளும் சக்தி பெண்­க­ளுக்கும் இருக்­கின்­றது என்­பதை உணர்ந்து கொண்டு தன்­னம்­பிக்­கையுடன் அர்ப்­பணிப்பாகச் செயற்­பட்டால் வெற்றி நிச்­சயம் என்­கிறார் பாட­கி­யா­கவும், பெண் விமா­னி­யா­கவும் வலம் வந்து கொண்­டி­ருக்கும் எம் நாட்டைப் பூர்­வி­க­மாகக் கொண்ட இளம் தமிழ் பெண் அர்ச்­சனா செல்­லத்­துரை.

மறத்தி இசைத் தொகுப்­பினை தாய் மண்ணில் வெளியீடு செய்­வ­தற்­காக வருகை தந்­தி­ருந்த அர்ச்­சனா செல்­லத்­துரை கேச­ரிக்கு வழங்­கிய நேர்காணலிலேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் வழங்­கிய நேர்காணலின் முழு வடிவம் வரு­மாறு,

கேள்வி:- காற்று வெளியிலும், கலைத்­து­றை­யிலும் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்கும் உங்­களைப் பற்றிக் கூறுங்கள்?

பதில்:- எனது பெயர் அர்ச்­சனா செல்­லத்­துரை. எனது பூர்­வீகம் வல்­வெட்­டித்­துறை. அசா­தா­ரண நிலை­மை­களின் கார­ண­மாக எனது பெற்­றோர் டென்­மார்க்­கிற்கு இடம்­பெ­யர்ந்­தார்கள். நான் டென்மார்க் பிர­ஜை­யாவேன். எனக்கு சகோ­த­ரனும் ஒரு சகோ­த­ரியும் இருக்­கின்­றார்கள்.

 

 

 

கேள்வி:- உங்­க­ளுக்கு கலைத்­து­றையில் எவ்வாறு ஈர்ப்பு ஏற்­பட்­டது ?

பதில்:- எனது தந்­தை­யா­ரான செல்­லத்­துரை (1985களில் வீர­கே­சரி பத்­தி­ரி­கையின் பிராந்­திய செய்­தி­யா­ள­ராக செயற்­பட்­டவர்) கலைத்­து­றையில் அதிக ஈடு­பாட்­டினைக் கொண்­டி­ருந்தார். அதன் கார­ண­மாக எனக்கும் கலைத்­து­றையில் ஈடு­ப­டு­வ­தற்­கான ஈர்ப்பு ஏற்­பட்­டது. பாட­சாலைக் காலத்தில் பாடல் மற்றும் நடன நிகழ்­வு­களில் பங்­கு­பற்­றி­யி­ருந்தேன்.

பரத நாட்­டியக் கல்­வியைக் கற்று வந்த நான் எனது 13 ஆவது வயதில் அரங்­கேற்­றத்­தினை நிறை­வேற்­றினேன். எனது 9ஆவது வய­தி­லி­ருந்து மேடை­களில் பாடு­வ­தற்கு ஆரம்­பித்­தி­ருந்­தாலும் 18ஆவது வயதில் எனது சகோ­த­ரனின் இசைத் தொகுப்­பொன்றில் ஏ.ஆர்.ரஹு­மானின் தங்­கை­யான ஏ.ஆர்.ரஹேனா பாட­வி­ருந்தார். இதற்கு ஜி.வி.பிர­காஷ் இசை­ய­மைக்­க­வி­ருந்தார்.

இச்­சந்­தர்ப்­பத்தில் நான் அந்த இசை தொகுப்­பிற்­கான மாதிரி குரல் வடி­வத்­தினை அனுப்பி வைத்­தி­ருந்தேன். அதன்­போது என்­னு­டைய குர­லையே அத்­தொ­குப்­பிற்கு பயன்­ப­டுத்­த­லாமே என்று இசை பதிவு இடம்­பெறும் போது கேட்­டி­ருந்­தார்கள்.

அதன்பின் னர் தான் என்­னாலும் பாட முடியும் என்ற நம்­பிக்கை எனக்குள் ஏற்­பட்­டது. நம்­பிக்­கை­யி­னாலும் கடின உழைப்­பி­னா­லுமே தற்­போது மறத்தி என்ற இசைத் தொகுப்­பினை வெளியிட்­டி­ருக்­கின்றேன்.

கேள்வி:- யாழில் வெளியி­டப்­பட்ட மறத்தி இசைத் தொகுப்பை பற்றிக் கூறுங்கள்?

பதில்:- மறத்தி என்­பதன் பொருள் வீர மங்கை என்­ப­தாகும். இந்த இசைத் தொகுப்பில் காதல், ரப், உட்­பட பல­வகை பாடல்கள் காணப்­ப­டு­கின்­றன. அப் பாடல்களில் குறிப்­பாக பெண்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை பின்­னிற்­காது வெளிக்­கொண்டு வர­வேண்டும். துணிச்­ச­லாக அவற்­றுக்கு எதி­ராக போராட வேண்டும் என்ற செய்­தி­யையே கூறி­யி­ருக்­கின்றேன்.

கேள்வி:- கலைத்­து­றையில் ஆர்­வ­மா­க­வி ருந்த உங்­க­ளுக்கு ஒரு விமா­னி­யாக வேண்டும் என்ற சிந்­தனை எப்­போது வந்­தது?

பதில்:- எனது பாட­சாலைக் கற்­கை­களை பூர்த்தி செய்து கொண்ட பின்னர் நான்கு ஆண்­டுகள் காலத்­தினைக் கொண்ட கல்வி இளங்­கலை கற்­கையைத் தொடர ஆரம்­பித்­தி­ருந்தேன்.

இந்த கற்கை நெறி­யினை ஆரம்­பித்து இரு ஆண்­டுகள் நிறை­வுற்­றி­ருந்த நிலையில் (அப்­போது எனக்கு 22வயது) நான் ஆசி­­ரி­­யரா­கவும் செயற்­பட்டேன். அச்­ச­ம­யத்தில் தான் கற்­பித்தல் எவ்­வாறு? கற்றல் எவ்­வாறு? கற்­ற­லுக்கும் கற்­பித்­த­லுக்கும் இடை­யி­லான வேறு­பாடு என்ன போன்ற வினாக்­க­ளுக்­கான விடை­களை அறிய முடிந்­தது.

அச்­சந்­தர்ப்­பதில் தான் எனக்கு விமா­னத்­து­றையில் கற்­றல்­களை மேற்­கொள்ள வேண்டும் என்ற ஆசை உரு­வா­னது. சமு­தா­யத்தில் முன்­னோ­டி­யாக திகழ்ந்து ஏதா­வது சாதிக்க வேண்டும் என்ற எண்­ணமும் உரு­வா­னது.

 

 

 

கேள்வி:- விமா­னி­யா­கு­வ­தற்­காக கற்­கைகள் மற்றும் பயிற்­சிகள் பெற்ற அனு­ப­வங்­களை கூறுங்கள்?

பதில்:- அதன் பின்னர் நான் அமெ­ரிக்­கா­வுக்குச் சென்றேன். அங்கு பத்து மாதங்கள் தங்­கி­யி­ருந்து கற்­கை­களை பூர்த்தி செய்தேன். அமெ­ரிக்­காவின் எல்­லைக்குள் விமா­னத்­தினைச் செலுத்­து­வ­தற்­கான அனு­ம­திப்­பத்­தி­ரத்­தினை பெற்­றுக்­கொண்டேன். மீண்டும் டென்மார்க் திரும்­பினேன்.

பின்னர் ஐரோப்­பாவில் விமா­னத்­தினை செலுத்­து­வ­தற்­கான அனு­ம­திப்­பத்­தி­ரத்­தினைப் பெறு­வ­தற்­காக டென்மார்க், சுவீடன், ஒஸ்­ரியா, ஆம்ஸ்­ரடாங் ஆகிய இடங்­களில் கற்­கைக­ளையும் பயிற்­சி­க­ளையும் பூர்த்தி செய்து சர்­வ­தேச அனு­மதிப் பத்­தி­ரத்­தினைப் பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்றேன்.

தற்­போது பிரிட்டிஷ் எயார்­வெஸுக்குச் சொந்­த­மான சன் ஏயார் என்ற நிறு­வ­னத்தில் இணைந்து கடந்த பத்து மாதங்­க­ளாக பணி­யாற்றிக் கொண்­டி­ருக்­கின்றேன். குறிப்­பாக ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கி­டையில் விமா­னத்­தினை செலுத்தும் பணியில் நான் ஈடு­பட்­டுள்ளேன்.

கேள்வி:- முதல் தடவை விமா­னத்­தினை செலுத்­தி­ய­போது உங்­களின் மன­நிலை எவ்வா­றி­ருந்­தது?

பதில்:- எங்­க­ளுக்கு பல்­வேறு பயிற்­சிகள் வழங்­கப்­பட்ட பின்னர் தான் தனி­யாக விமா­னத்­தினைச் செலுத்­து­வ­தற்­கான அனு­மதி அளிக்­கப்­படும். அந்­த­வ­கையில் முதன் முத­லாக விமா­னத்­தினைச் செலுத்தி மீண்டும் தரை­யி­றக்­கி­ய­போது மிக­மிக மகிழ்ச்சி அடைந்தேன். அந்த உணர்வு என்­பது வார்த்­தை­களால் வர்­ணிக்க முடி­யா­தது. மிகவும் பொறுப்பு வாய்ந்­த­தொரு பணி என்­ப­தையும் என்னால் உண­ர­மு­டிந்­தது. அந்த பொறுப்­பினை மன­தார ஏற்று நிறை­வேற்ற வேண்டும் என்ற எண்­ணப்­பாடும் எனக்குள் வேரூன்­றி­யது.

 

 

 

கேள்வி:- உங்­க­ளு­டைய வெற்­றிக்கு மிக முக்­கி­ய­மான காரணம் என்­ன­வென நினைக்­கின்­றீர்கள்?

பதில்:- எனக்கு எனது பெற்றோர் சிறு­வ­யது முதலே நம்­பிக்­கை­யு­ட­னான சுதந்­தி­ரத்­தினை அளித்­தி­ருந்­தார்கள். சில நேரங்­களில் எனது பெற்றோர் அருகில் இல்லாமையினை இட்டு கவ­லை­ய­டைந்­தி­ருக்­கின்றேன். அவை அனைத்தும் வாழ்க்­கையில் சொந்த காலில் நிற்­ப­தற்­கான பாடங்­க­ளாக அமைந்­தி­ருந்­தன என்­பது பின்னர் தான் எனக்கு புரிந்­தது. அவர்­களின் வழிகாட்­டல்­களினாலும் விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளினாலுமே என்னால் இத்­தனை தூரத்­திற்கு வர முடிந்­தது.

 

 

 

கேள்வி:- கடி­ன­மான துறை­களில் முழு­மை­யாக ஈடு­பட்­டுள்ள நீங்கள் எதிர்­நோக்கும் சவால்கள் என்ன என்று நினைக்­கின்­றீர்கள்?

பதில்:- முதலில் நான் விமா­னி­யா­கு­வ­தற்­கான கற்கை நெறியைத் தேர்ந்­தெ­டுக்கும் போது நண்­பர்கள்,உற­வி­னர்கள் என பலர் கடு­மை­யாக விமர்­சித்­தார்கள். வெளிநாட்டில் உள்ளோம் என்­ப­தற்­காக வசதி படைத்­த­வர்கள் என்று பலர் கரு­து­கின்­றார்கள்.

ஆனால் அவ்­வாறு அல்ல. நான் எனது கற்கை நெறியை தொடர்ந்த சம காலத்­தி­லேயே அதற்­கான செல­வீ­னங்­களை பூர்த்தி செய்­வ­தற்­காக மூன்று வெவ்­வேறு தொழில்­களை புரிய வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருந்தது. அவ்­வாறு இயந்­தி­ர­மாக செயற்­பட்டு கடி­ன­மான நிலை­மை­களைக் கடந்தே கற்­கை­களை பூர்த்தி செய்த பின்னர் விமர்­சித்­த­வர்கள் பாராட்­டி­னார்கள்.

அதே­போன்று தான் கலைத்­து­றையில் பாடல்கள், நடன நிகழ்­வு­களின் போதும் சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக திட்­டித்­தீர்த்து விமர்­சித்­தார்கள். அவற்றை நான் ஒரு பொருட்­டாக கரு­தா­மை­யினால் தான் இத்­தனை தூரம் என்னால் வர முடிந்­துள்­ளது என்று கரு­து­கின்றேன்.

தற்­போது கூட திரு­மணம் செய்­வீர்­களா? இப்­படி இருந்தால் இல்­ல­ற­வாழ்க்கை பாதிப்­ப­டையும் என்­றெல்லாம் அச்­ச­மூட்­டு­கின்­றார்கள். அனைத்­தையும் சம­நி­லை­யாக கையாண்டால் எவ்­வி­த­மான பிரச்­சி­னை­களும் ஏற்­ப­டாது.

கேள்வி:- நீங்கள் கொண்­டி­ருக்கும் எதிர்­கால இலக்கு என்ன?

பதில்:- நான் இது­வ­ரையில் 152, 172, டைமன் 4டி, டைமன் 4டி2, எ.ரி.ஆர்.72 டச் 500, டோனியர் ஜெட், ஆகி­ய­வற்றை இது­வ­ரையில் செலுத்­தி­யி­ருக்­கின்றேன். அதற்­கான அனு­ம­திப் ­பத்­திரம் மட்­டுமே உள்­ளது. அதே­நேரம் எதிர்­கா­லத்தில் உல­கத்தில் காணப்­படும் மிகப்­பெ­ரிய பய­ணிகள் விமா­னத்­தினை (ஏயர் பஸ்) செலுத்­து­வ­தற்கு விரும்­பு­கின்றேன். அத்­தோடு விமா­னத்தில் கப்டன் என்ற பத­வி­நி­லையை அடைய வேண்டும் என்றும் கரு­து­கின்றேன். அதே­நேரம் கலைத்­து­றையைப் பொறுத்­த­வ­ரையில் ஆரம்­பத்தில் சினி­மாவில் பாட­கி­யாக வர­வேண்டும் என்ற எண்­ணப்­பாடு இருந்­தாலும் தற்­போது ஒரு சுயா­தீன பாட­கி­யாக இருக்க வேண்டும் என்­பதே நிலைப்­பா­டாக இருக்­கின்­றது. அதுவே எனக்­கான உண்­மை­யான அடை­யா­ளத்­தினை பெற்­றுக்­கொ­டுக்கும்.

கேள்வி:- உங்கள் வாழ்க்­கையில் மறக்க முடி­யாத சம்­பவம் என்ன?

பதில்:- நான் அமெ­ரிக்­காவில் கற்­கை­களை நிறைவு செய்­து­கொண்டு டென்­மார்க்கில் எனது அனு­மதிப் பத்­தி­ரத்­தினை மாற்­று­வற்­கான பயிற்­சியில் ஈடு­பட்­ட­போது எனக்­காக வழங்­கப்­பட்­டி­ருந்த வய­தான பயிற்­றுநர் மிகக் கடு­மை­யாக என்னை திட்­டினார்.

இந்த நிலை­மைகள் ஒரு சில நாட்கள் தொடர்ந்­தன. விமா­னத்­த­ிலி­ருந்து இறங்கும் போது நீ ஏன் இந்த துறைக்கு வந்தாய் என்று கடும் தொனியில் கேள்வி கேட்டார். எனது கண்­க­ளி­லி­ருந்து கண்ணீர் வந்­தது. என்னால் முடி­யாதா என்று மனதில் கேள்வி கூட எழுந்­தது. பின்னர் எனது ஆசி­ரியர் ஆலோ­சனை வழங்­கினார்.

அதன் பின்னர் நான் என்னை சமா­தா­னப்­ப­டுத்திக் கொண்டேன். அதன் மூலம் எந்த துறையும் யாருக்கும் தனித்­த­தொன்று அல்ல. எத­னையும் அச்­ச­மின்றி துணிச்­ச­லுடன் எதிர்­கொள்ளும் சக்தி பெண்­க­ளுக்கும் இருக்­கின்­றது என்­பதை உணர்ந்து கொண்டேன்.

கேள்வி:- 2005ஆண்­டுக்குப் பின்னர் தற்போது இலங்கை வந்­தி­ருக்கும் நீங்கள் இங்­குள்ள பெண்­களின் நிலை­மை­களை எப்­படி பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- தற்­போது பல மாற்­றங்கள் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன. நான் சில பெண்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினேன். அத­ன­டிப்­ப­டையில் என்ன தான் மாற்­றங்கள் நிகழ்ந்­தாலும் எமது பெண்­களின் சிந்­த­னை­களில் மாற்றம் அவ­சியம். அவர்கள் ஏதோ­வொரு வகையில் கட்­டுப்­பாட்­டிற்­குள்­ளேயே தான் இருக்­கின்­றார்கள்.

எனது துறை­யினை வைத்து அவர்கள் நான் மிகப்­பெரும் சாத­னை­யொன்றைச் செய்­த­தாக கரு­து­கின்­றார்கள். உண்மையில் அவ்வாறு இல்லை. என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை உருவாக வேண்டும். அதற்கான அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் எத்தனை பெரிய விடயத்தினையும் இலகுவாக கையாள முடியும்.

இங்குள்ள பெண்களுக்கு நவீன தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கே கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. இந்த நிலைமைகள் எல்லாம் மாற்றம்பெறவேண்டும். நன்மை, தீமை ஆகியவற்றை இனங்கண்டு அதற்கமைவாக செயற்படும் மனோநிலை உருவாக்கப்படவேண்டும். வறுமை ஒரு பிரச்சினையாகவுள்ளது. எதிர்காலத்தில் என்னால் முடிந்த உதவிகளை வழங்குவதற்கும் எதிர்பார்த்திருக்கின்றேன். அத்தோடு வாழ்க்கையில் சாதிப்பதற்காக எதிர்பார்த்திருப்பவர்களுக்கும் என்னால் இயலுமானவரையில் ஒரு உந்துகோலாக இருக்க விரும்புகின்றேன்.

இங்குள்ள இளைஞர் சமுதாயத்தினர் வெளிநாட்டு உதவிகளால் சோம்பலாக இருக்கின்றார்கள் என்ற தொனியில் எனது இசை வெளியீட்டு விழாவில் கருத்துக்கள் கூறப்பட்டன. ஆகவே அந்த நிலைமைகளிலும் மாற்றம் அவசியம் எனக் கருதுகின்றேன் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-19#page-7

Categories: merge-rss

பாரீஸ் லாக்கூர்நெவ் சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா

Tue, 15/08/2017 - 12:55
பாரீஸ் லாக்கூர்நெவ் சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா

 

 

Categories: merge-rss

“இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா” சூரிச் நகரில்

Mon, 14/08/2017 - 06:09
‘எமது கலாசாரத்தை மறக்காமல் இருக்க வேண்டும்’
Editorial / 2017 ஓகஸ்ட் 13 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:03 Comments - 0 Views - 20

image_5674b8f62a.jpg

கடந்த வாரம், சுவிற்சர்லாந்து அரச வானொலியான கனல்கா வானொலியில், சுவிற்சர்லாந்தின் Stadhalle Bulach - சூரிச்  நகரில், 2017 செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும், “இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா” குறித்து, இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெரு விழாவின் ஒருங்கமைப்பாளரும் சூரிச் பகுதிக்கு பொறுப்பான இலங்கைக்கான தூதுவருமான விதர்சண முணசிங்க அளித்த நேர்காணலின் தொகுப்பு வருமாறு:

கேள்வி: கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இலங்கை வர்த்தக மற்றும் கலாசார விழாவை நடத்தினீர்கள். இந்த வருடமும் அதே போன்றதொரு விழாவை ஒழுங்கு செய்துள்ளீர்கள். இப்படியான ஒரு விழாவை ஒழுங்கு செய்ய வேண்டும் எனும் நோக்கம் ஏன் வந்தது?

பதில்: சுவிசில் வாழும் இலங்கை மற்றும் சுவிஸ் மக்கள் கலந்து சிறப்பிக்கும் ஒருங்கிணைப்பு நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் அந்த நிகழ்வை நடத்தினேன். கடந்த முறை விழாவில், இலங்கை மற்றும் சுவிசில் வாழும் மக்களில் அதிகமானோர் கலந்துகொண்டார்கள். இதுவே இலங்கை வர்த்தக மற்றும் கலாசார விழாவொன்று முதன் முதலாக சுவிசில் நடந்தது எனலாம். அதை இம்முறை மீண்டும் நடத்த வேண்டும் என எண்ணுகிறேன்.

கேள்வி: கடந்த வருடம் நடைபெற்ற காலத்தில்தானா இம்முறை விழாவையும் நடத்த தீர்மானித்துள்ளீர்கள்?

பதில்: இம்முறை செப்டெம்பர் 8ஆம், 9ஆம், 10ஆம் திகதிகளில் நடத்தவுள்ளோம்.

கேள்வி: கடந்த முறை நடைபெற்ற விழாவுக்கு எத்தனை பேர் அளவு வருகை தந்தார்கள்?

பதில்: 7,000 பேருக்கு மேல் வந்திருப்பார்கள். ஆனால், சுவிஸ் ஊடகங்கள் 10,000க்கும் மேற்பட்டோர் வந்ததாக  எழுதியிருந்தன.

கேள்வி: இந்த நிகழ்வுக்கு புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர் மட்டும்தானா வந்தார்கள்?

பதில்: 60 சதவீதமானோர் புலம் பெயர்ந்து சுவிசில் வாழும் இலங்கையரும், 40 சதவீதமானோர் சுவிஸ் நாட்டவர்களும் வந்தார்கள் என சொல்ல முடியும். இம்முறை 50க்கு 50 சதவீதம் போல வருவார்கள் என நம்புகிறேன்.

கேள்வி: புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் எனும் போது, அதிகமாக வருகை தந்தோர் சிங்களவரா? தமிழரா? இஸ்லாமியரா?

பதில்: என்னை பொறுத்தவரை, எந்த இனமாக, எந்த மதமாக இருந்தாலும், இலங்கை வாழ் அனைவரும் இலங்கையர்தான். அவர்கள் தமிழரா? சிங்களவரா? இஸ்லாமியரா? மலேயரா? பறங்கியரா? எனும் வேறுபாடு இல்லை. இலங்கையில் பிறந்து வளர்ந்த அனைவரும் இலங்கையர்தான். அந்த வகையில், பங்குபற்றிய அனைவரையும் இலங்கையர் என்றே பார்க்கிறேன். பொதுவாக அனைவரும் சமமாக கலந்து கொண்டார்கள். சுவிசில் தமிழரது பரம்பல் அதிகம் என்பதால், அதிகமானோர் தமிழராக இருந்தார்கள்.

கேள்வி: எத்தனை வியாபார தளங்கள் இருந்தன?

பதில்: உணவகங்கள் - 28, வர்த்தக தளங்கள் - 24

கேள்வி: இவற்றை எடுத்தவர்கள் சுவிசில் வாழும் இலங்கையர்களா? அல்லது இலங்கையில் இருந்து இதற்காக வந்த இலங்கையரா?

பதில்: இலங்கையிலிருந்து இரு குழுக்கள் மட்டுமே  வந்திருந்தன. அவர்கள் மாணிக்க கற்கள் மற்றும் அலங்கார பொருட்களை கொண்டு வந்து கடைகளில் வைத்திருந்தார்கள். அடுத்தவர்கள் அனைவரும் சுவிசில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கையரது கடைகளாகத்தான் இருந்தன. அத்தோடு, இலங்கையின் உல்லாச பிரயாண சபையினரும் வந்திருந்தார்கள். அவர்கள் இங்குள்ள பயண நிறுவனங்களை சந்தித்து உரையாடி, இலங்கைக்கான உல்லாச பயணிகளது வருகையை அதிகப்படுத்த சில பட்டறைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தினார்கள். அவர்களோடு 15 டுவர் ஒபரேட்டர்கள் இலங்கையிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களும் இங்கு உள்ள டுவர் ஒபரேட்டர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார்கள்.

கேள்வி: இப்படியான ஒரு விழாவை முதன் முதலில் ஐரோப்பா போன்ற நாடுகளில் செய்வது மிக கடினமான ஒன்று. அதற்காக விளம்பரங்கள் செய்ய வேண்டும். அவை உங்களால் சிறப்பாக நிறைவேற்றப்பட்டதாக கருதுகிறீர்களா?

பதில்: கடந்த முறை விளம்பரங்களை அதிகமாக செய்ய முடியவில்லை. முதல் முறையாக செய்யும் போது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தன. இம்முறை சுவிசிலுள்ள ஊடகங்கள் முடிந்தளவு விளம்பரம் செய்து தந்து உதவுவதாக சொல்லியுள்ளார்கள். அதற்கு காரணம் சென்ற முறை நடந்த விழாவை பார்த்தவர்கள்,   அந்த விழா குறித்து பின்னர் நல்ல விமர்சனங்களை தந்திருந்தார்கள். எனவே, இம்முறை நிச்சயம் அவர்கள் எமக்கு உதவுவார்கள் என நம்புகிறேன்.

கேள்வி: இம்முறை இலங்கை வர்த்தக மற்றும் கலாசார விழாவை தனியாக இலங்கையருக்காக மட்டும்  மட்டுப்படுத்தாது, ஆசிய நாடுகளோடும் இணைத்து  விழாவை நடத்த உள்ளதாக அறிகிறேன். உண்மையா?

பதில்: நான் இம்முறை நடத்தும் இலங்கை காலாசார மற்றும் வர்த்தக விழாவுக்கு ஆசியாவின் உணவு வகைகளையும் அறிமுகம் செய்ய நினைத்தேன். இங்கு வாழும் இலங்கையர்கள் அதிகமாக வீடுகளில் இலங்கை உணவு வகைகளைத்தான் தினசரி சாப்பிடுகிறார்கள். அதனால் அவர்கள் ஒரு மாறுதலுக்காக ஏனைய நாட்டு உணவு வகைகளையும் ருசி பார்க்க விரும்பலாம். அதே போல ஏனைய நாட்டவர்களுக்கு எம் உணவு வகைகளை ருசி பார்க்க ஒரு சந்தர்ப்பமும் உருவாகும். அதனால் எனது தூதரகம் மூலம், சுவிசில் உள்ள ஆசிய நாட்டு தூதரங்களோடு தொடர்பு கொண்டு, ஏனைய ஆசிய நாட்டு உணவு பந்தல்களில் சமையல் செய்து வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்ய நினைக்கிறேன். இதன் போது அவர்களால் எமது கலாசார விழுமியங்களை அறியும் வாய்ப்பும் உருவாகும். அத்தோடு, அவர்களது சில கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி மகிழ அவர்களுக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க நினைக்கிறேன்.

கேள்வி: அதாவது பல்லின கலாசார விழாவாக கொண்டு வர முனைகிறீர்கள்?

பதில்: ஆம். ஆனால், பெரும் பகுதியானவை, இலங்கை கலாசார நிகழ்வாகத்தான் இருக்கும். அவர்களுக்கும் கலந்து கொள்ள சிறியதொரு வாய்ப்பு வழங்கப்படும்.

கேள்வி:  இப்படியான ஒரு நிகழ்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம், எப்படி உங்கள் மனதில் உருவானது?

பதில்: என்னைப் பொறுத்த வரை, இது ஒரு பெசன். இலங்கைக்காக எதையாவது செய்ய ஆசைப்படுகிறேன். நான் இங்கு வந்த காலம் தொட்டு இலங்கை மக்களுக்காக எதையாவது தொடர்ந்து செய்து வந்துள்ளேன். நான் இங்கு வந்த 1991களில் இலங்கையில் என்ன நடக்கிறது என தெரியாமல் இருந்த காலத்தில், அதாவது இன்று போல இணையத்தளம் வழியாக, தகவல்களை அறிய முடியாதிருந்த  அந்த காலத்தில், இலங்கை பத்திரிகைகளை இறக்குமதி செய்து சுவிசில் விநியோகிக்கத் தொடங்கினேன். அதாவது ஞாயிறு பத்திரிகைகளைத்தான் அக்காலத்தில் கொண்டு வந்து விநியோகித்தேன். இங்கு இலங்கையர்களுக்கான விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு  சல கடைகள் மட்டுமே இருந்தன. அது அரசியல் தஞ்சம் பெற்று வந்தோரால் இலங்கைக்கு போகவோ, தொடர்புகளை ஏற்படுத்தவோ முடியாத காலம். இலங்கையில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் இருந்தது. எனவே, அவர்களுக்கு தேவையான பத்திரிகைகளை கொண்டு வந்து கொடுத்தேன். அதன் பின் கார்கோ சேவை ஒன்றை தொடங்கினேன். அதாவது, சுவிசில் வாழ்வோருக்கு இங்கிருந்து இலங்கைக்கு குறைந்த செலவில் பொருட்களை அனுப்ப வேண்டிய ஒரு தேவை இருப்பதை உணர்ந்தேன். அதனடிப்படையில், மாதாந்தம் கண்டேனர்களில் கப்பல் வழியாக இங்கு உள்ளவர்கள் தரும் பொருட்களை, இலங்கையில் உள்ள அவர்களது குடும்பத்தாருக்கு அனுப்பும் கார்கோ சேவையை தொடங்கினேன். அது இதுவரை நடைபெற்று வருகிறது. இவை வியாபாரமாக இருந்தாலும், சேவை வழங்கும் ஒரு வியாபாரமாகவே அதை செய்தேன். அதுபோலவேதான் இந்த நிகழ்விலும் இலங்கை மக்கள் பயன் பெற வேண்டும் என்பதே என் அவா.

கேள்வி: நீங்கள் சுவிற்சர்லாந்துக்கு வந்த பின்னணியை சொல்வீர்களா?

பதில்: நான் 1980களில் சுவிசுக்கு வந்தேன். பேர்ண் நகரில் உள்ள ஹோட்டல் பெரய்ன் ஒன்று ஆசியர்களை ஹோட்டல் குறித்து கற்பதற்கு அழைப்பு விடுத்திருந்தது. அப்படி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, சுவிசுக்கு வந்து  ஹோட்டல் மெனேஜ்மென்ட் குறித்து கற்றேன். அதை முடித்த காலத்தில் எனக்கு கென்யா நாட்டு தூதரகத்தில் பணிபுரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அங்கு 20 வருடங்கள் பணியாற்றினேன். அந்நேரத்தில்தான் பகுதி நேரமாக இப்படியான சில வியாபார விடயங்களை பொழுது போக்காக செய்யத் தொடங்கினேன்.

கேள்வி: கென்யா தூதரகத்தில் பணியாற்றிய நீங்கள்,  பின்னர் சூரிச் நகரில் உள்ள இலங்கைக்கான தூதரகத்தில் கௌரவ தூதராக (கொண்சுலேட்டாக), ஜெர்மன் மொழி பேசும் பகுதியில் பணியாற்றத் தொடங்குகிறீர்கள். அப்படியான வாய்ப்பு எப்படி கிடைத்தது?

பதில்: நாமிருக்கும் பகுதியில் உள்ளோர் இலங்கை தூதரக தேவைகளுக்காக ஜெனிவாவுக்கு போக வேண்டியிருந்தது. அது உண்மையிலேயே இங்குள்ளோருக்கு வெகு தூரமாக இருந்தது. சாதாரணமாக  குறைந்தது 300 கிலோ மீட்டர்  தூரம். இங்குள்ளோரது தேவைகளுக்காக அதிகாலையிலேயே அவர்கள் போக வேண்டி இருந்தது. அது உண்மையிலேயே அவர்களது ஒருநாள் விரயம். இது குறித்து கவலைப்பட்ட சிலர், சூரிச் போன்ற ஒரு பகுதியில்  ஒரு தூதரகம் இருந்தால் நல்லது என சொன்னார்கள். அதை நான் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்தேன். அதேவேளை, சூரிச்சிலுள்ள வியாபார நிறுவன நாதன் அவர்களும், இது குறித்து என்னோடு கலந்துரையாடினார். இவற்றை இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்த பின்தான் இலங்கை அரசாங்கமும் சுவிசின் அரசாங்கம் இணைந்து இப்பதவியை வகிக்கும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். அதனால்தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

கேள்வி: இங்குள்ள மக்களுக்கு என்ன முக்கிய சேவை உங்களால் ஆற்றப்படுகிறது என சொல்வீர்களா?

பதில்: நான் ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை பேசுவேன். எமது பிராந்தியத்தில் உள்ள தமிழர்களில் அநேகர் ஜெர்மன் மொழி ஆற்றல் உள்ளவர்கள். எனக்கு தமிழ் சற்று விளங்கும். ஆனால் பெரிதாக தெரியாது.   இங்கு வாழும் சில இலங்கையர்களுக்கு பெரியோருக்கு ஜெர்மன் மொழி அறிவு குறைந்திருந்தாலும், அவர்களது குழந்தைகளுக்கு ஜெர்மன் மொழி அறிவு அதிகம். பல இலங்கையர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவு, இந்நாட்டு மொழியை பேசுகிறார்கள். அதனால், அவர்களால் தங்களது பிரச்சினையை என்னோடு கலந்துரையாடுவது பெரிய பிரச்சினையே இல்லை. அடுத்து பெரும்பாலான இலங்கையருக்கு என்னை நன்கு தெரியும். சூரிச் என்பது  ஜெர்மன் பகுதியில் முக்கியமான ஒரு நகரம். எனவே, அவர்களுக்கு இந்த வசதி, பெரியதொரு வாய்ப்புதான். எமது சூரிச் தூதரகம், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை திறந்திருக்கிறது.

கேள்வி: சூரிச் தூதரகத்தில் நடைபேறும் சேவைகள் என்ன?

பதில்: கடவுச் சீட்டுகளை பெறுவதற்கு ஜெனீவா தூதரகத்துக்கு போகவே வேண்டும். அதற்கு மாற்றீடாக, அவர்களது விண்ணப்ப படிவத்தைப் பார்த்து அதை உறுதிப்படுத்தி கொடுப்பேன். அதை, அவர்கள் ஜெனீவா தூதரகத்துக்கு தபாலில் அனுப்ப முடியும். அவர்களால் முடியாத போது நாம் அனுப்பிக் கொடுப்போம். அதேநேரம், இங்குள்ள சிறைகளில் எம்மவர்கள் இருந்தால் போய் பார்ப்பேன். அவர்களுக்கு உள்ள பிரச்சினைகளைக் கேட்டு அறிந்து வருவேன். தேவையான போது உதவுவேன். என்னால் செய்ய முடியாத விடயங்களை பேர்லின் தூதரகத்துக்கு அல்லது ஜெனீவா தூதரகத்துக்கு அறிவிப்பேன். உண்மையிலேயே ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள தூதரகம்தான், சுவிற்சர்லாந்துக்குமான தூதரகம். ஜெனீவாவில் இருப்பது கூட ஒரு கொண்சுலேட் மற்றும் இலங்கைக்கான ஐநா மிசன் எனலாம். எமது தூதரகமும் ஒரு கொண்சுலேட்தான். எனது பதவியூடாக இலங்கைக்கான பொருளாதார முதலீட்டு திட்டங்களை இலங்கைக்கு  கொண்டு செல்ல உழைக்கிறேன். ஆனால், எனக்கு அரசியல் செய்ய அனுமதியில்லை. எமது மக்களின் தேவைகள் ஏதாவது இருந்தால் என்னால் முடிந்த அறிவுரை அல்லது உதவிகளை செய்வேன். சுவிசிலிருந்து சுற்றுலா செல்லும் இந்த நாட்டவருக்கான உதவிகளை செய்வேன். அத்தோடு இங்கிருந்து யாராவது இலங்கையில் பெரும் முதலீடுகளை செய்ய விரும்பினால், அவர்கள் செய்ய வேண்டியவை அனைத்தையும் விளக்கி அறிவுரை வழங்குவேன். இலங்கை போய் சந்திக்க வேண்டியோரது தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பேன். எனது பணியான கௌரவ தூதர் என்ற வகையில், இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதுவித ஊதியத்தையும் பெறுவதில்லை. இந்த பதவியை சேவை மனப்பான்மையோடு செய்து வருகிறேன்.

கேள்வி: இதைத் தவிர வேறேதாவது செய்கிறீர்களா?

பதில்: எனது MCS கம்பனி மூலம் கார்கோ சேவையொன்றை சுவிசில் நடத்துகிறேன். அதை நான்தான் நிர்வகிக்கிறேன். இங்கு வாழும் இலங்கையரது பொருட்களை இலங்கைக்கு அனுப்பிக் கொடுக்கும் சேவையை அது செய்கிறது. அத்தோடு இந்தியா - பாகிஸ்தான் - பங்களாதேஷ் ஆகிய நாடுகளோடு, சில வியாபாரங்களை செய்கிறேன். இலங்கையிலும் சில வியாபாரங்களையும் பல காலமாக செய்து வருகிறேன்.

கேள்வி: நீங்கள் சுவிசில் நடத்தப் போகும் அடுத்த விழாவில், புதிய உத்திகள் எதையாவது செய்ய உள்ளீர்களா?

பதில்: இது மாதிரியான விழாக்கள் புலம் பெயர்ந்து வாழும் இலங்கையரின் முதலாவது பரம்பரைக்கான விழாவாக நான் கருதவில்லை. இது, அடுத்து வரும் பரம்பரைக்கான விழாவாகவே நான் கருதுகிறேன். இரண்டாவது பரம்பரையில் உள்ளோர், எமது நாட்டு கலாசாரத்தால் முழுமையாக உள்வாங்கப்பட்டோராக இருக்க மாட்டார்கள். சில வேளையில், ஒரு பக்க கலாசாரத்தை மட்டுமே கண்டிருப்பார்கள். இலங்கை நாடு, தமிழ் - சிங்கள - முஸ்லிம் - பறங்கியர் - மலே போன்ற பல்லின கலாசாரம் கொண்ட நாடாகும். அந்த பல்லின தன்மையை இங்கு ஒரே இடத்துக்குள் கொண்டு வருவதன் மூலம் அனைத்து மக்களுக்குள்ளும், இன நல்லிணக்கம் ஒன்றைக் கொண்டு வரலாம். இவற்றை சுவிஸ் மக்களும் அறிந்து கொள்வார்கள். அதோடு கண்டிய நடனம் - பரதநாட்டியம் - இசை நிகழ்ச்சிகள் - பாசன் சோ ஆகியவற்றை, விழாவில்
இடம்பெற வைத்துள்ளோம். அத்தோடு, கடைகளும், உணவங்களும் கடந்த ஆண்டு போலவே இருக்கும்.

கேள்வி: இந்த விழாவுக்காக கட்டணம் அறவிடப்படுகிறதா?

பதில்: இல்லை. பிரவேசக் கட்டணம் கிடையாது. ஆனால், அவர்கள் எதையாவது வாங்கினால் அல்லது உணவு மற்றும் குடிபான வகைகளை பணம் செலுத்தியே பெற வேண்டும். அது எமக்கு செலுத்துவதாகாது. அது, கடைகளை போட்டுள்ளவர்களுக்கு செலுத்துவதாகும்.

கேள்வி: இந்த விழா, எத்தனை நாட்கள் நடைபெறவிருக்கிறது?

பதில்: 3 நாட்கள். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ஆம், 9ஆம், 10ஆம் திகதிகளில் காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை நடைபெறும்.

கேள்வி: இறுதியாக புலம் பெயர்ந்து சுவிசில் வாழும் இலங்கையருக்கு கூற விரும்புவது என்ன?

பதில்: நாங்கள் இலங்கையில் பல்வேறு இனங்களாக கருதப்படலாம். அதாவது, அங்கு தமிழ் - சிங்கள - முஸ்லிம் - பறங்கியர் - மலே என பிரிந்து இருப்பினும், வெளிநாடுகளுக்கு வந்த பின், நாங்கள் அனைவரும் இலங்கையர் எனத்தான் கூறுகிறோம். இந்நாடுகளில் உள்ள சட்டங்கள் மற்றும் கலாசாரத்தை மதித்து, நாம் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். அத்தோடு, 2,000 வருடங்களுக்கு மேலான எமது கலாசாரத்தை மறக்காமல் இருக்க வேண்டும். அத்தோடு, இங்கு நாமெல்லோரும்  ஒற்றுமையாக வாழ பழக வேண்டும்.

image_117747009c.jpgimage_0f2e5f5297.jpgimage_a5b33f72e4.jpgimage_c933818fe6.jpg

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எமது-கலாசாரத்தை-மறக்காமல்-இருக்க-வேண்டும்/91-202300

Categories: merge-rss

இலங்கை இளைஞன் சுவிட்சர்லாந்தில் உயிரை மாய்த்துள்ளார்

Sat, 12/08/2017 - 07:14
இலங்கை இளைஞன் சுவிட்சர்லாந்தில் உயிரை மாய்த்துள்ளார்
 
 
இலங்கை இளைஞன் சுவிட்சர்லாந்தில் உயிரை மாய்த்துள்ளார்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் தவறான முடிவினால் தனது உயிரை மாய்த்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

27 வயதான தயாகரன் கந்தசாமி என்பவரே தொடருந்தில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த தயாகரன், சுவிட்சர்லாந்தின் லுசர்ண் நகரில் வசித்து வந்துள்ளார்.

இவர் தொடருந்தில் பாய்ந்து நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://newuthayan.com/story/18630.html

Categories: merge-rss

எயிட்ஸ் நோயை குணப்படுத்த மருந்து கண்டுப்பிடித்த இலங்கையருக்கு இங்கிலாந்தில் அங்கீகாரம்

Thu, 10/08/2017 - 16:46
எயிட்ஸ் நோயை குணப்படுத்த மருந்து கண்டுப்பிடித்த இலங்கையருக்கு இங்கிலாந்தில் அங்கீகாரம்
thumb_large_Local_News.jpg

இது வரை எச்.ஐ.வி தொற்றுடையவர்களை குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறை ஒன்றை எவரும் கண்டுப்பிடித்திராத நிலையில் தடுப்பு மருந்தை கண்டு பிடித்த இலங்கை இளைஞருக்கு இங்கிலாந்து ராணியின் அதியுயர் விருது பகிங்ஹாம் மாளிகையில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 

ads45__1_.jpg

குறித்த சாதனையாளரான ரகித மாலேவத கொழும்பு வைத்திய பரிசோதனை நிலையம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பரிசோதனையாளராக கடமையாற்றுகிறார்.

உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் எச்.ஐ.வி யை குணப்படுத்தும் மருந்தை ரகித நாலந்த பாடசாலையில் கல்விப்பயிலும் காலத்திலேயே கண்டுப்பிடித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/23000

Categories: merge-rss

சுவிஸில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை..!!

Wed, 09/08/2017 - 12:04
சுவிஸில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை..!!
 
 
598ae0ea20176-IBCTAMIL.jpg
598ae609aac30-IBCTAMIL.jpg
 
 
 
 
598ae0ea20176-IBCTAMIL.jpg
598ae609aac30-IBCTAMIL.jpg

கடந்த வெள்ளிக்கிழமை சுவிஸ்லாந்தில் 22 வயது தமிழ் இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸ் சென்ட் கோல் (St-Gall) மாநிலத்தில் வசித்துவரும் 22 வயது சுவிஸ் பிரஜையான தமிழ் இளைஞனே இவ்வாறு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கழுத்துப் பகுதியில் ஆழமான கத்திக்குத்துக்கு இலக்கான குதித்த இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் 42 வயது சுவிஸ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் அங்கு வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/22-years-youth-murder-in-swiss

Categories: merge-rss

ரொரன்ரோவில் நாடக கலைஞர் பாபு காலமானார்

Wed, 09/08/2017 - 07:28
ரொரன்ரோவில் நாடக கலைஞர் பாபு காலமானார்.

 

Image

கனடாவில் கலையுலகில் நன்கு அறியப்பட்டவரும், ரொரன்ரோ நகரில் உள்ள “தேடகம்” நூலக வளர்ச்சியில் பங்கெடுத்து கொண்டவரும் “அரங்காடல்” நாடக பட்டறையின் ஸ்தாபகர்களில் ஒருவருமான பாபு என செல்லமாக அழைக்கப்பட்ட ஸ்ரீதரன் பரதராஜா ரொரன்ரோவில் காலமானார்.

அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave., Markham) த்தில் 11-08-2017 மாலை 5 மணி தொடக்கம் 9 மணி வரை வைக்கப்படும் என அறியப்படுகிறது. 

Babu.JPG

http://tamilsguide.com/blog/canada-news/11516

 

Categories: merge-rss

கோலாலம்பூரில் இலங்கையர்கள் கைது

Tue, 08/08/2017 - 09:53
கோலாலம்பூரில் இலங்கையர்கள் கைது
கோலாலம்பூரில் இலங்கையர்கள் கைது
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்டு இலங்கையர்கள் சிலர் கைதாகியுள்ளனர் என்று மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேடுதல் நடவடிக்கைகளின்போது, 400க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் பல இலங்கையர்களும் அடங்குவதாக மலேசியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலோனோர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதும், இன்னும் சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/17481.html

Categories: merge-rss

திருடியவருக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்

Tue, 08/08/2017 - 04:43
Toronto officer buys shirt, tie for shoplifter who needed outfit for job interview

திருடியவருக்கு  இரண்டாவது வாய்ப்பை வழங்கிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்

நிரன் ஜெயனேசனுக்கு  வோல்மாட்டில் 18 வயது இளைஞர் ஒருவர் சேட்டும் ரையும் சொக்சும் திருடியதாக தகவல் கொடுக்கப்பட்டு அங்கு செல்கிறார். அங்கு சென்று  திருடியவரை விசாரித்த போது அவ்விளைஞர் வேலை நேர்முக தேர்வுக்கு உடை தேவை எனவும் தன்னிடம் இல்லாததால் திருடியதாகவும் சொல்கிறார். அவருக்கு எந்த தண்டனையும் வழங்காமல் தானே அவரது உடைகளை வாங்கி கொடுத்து அவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்  நிரன்.

 

Officer, Niran Jeyanesan

A Toronto police officer who purchased a shirt and tie for a shoplifter who needed an outfit for a job interview said he wanted to give the young man a second chance to get his life on track.

Const. Niran Jeyanesan told CP24 Monday that he and his partner were called to a Walmart on Jane Street for a reported theft on Sunday night.

When they arrived, he said the loss prevention officer at the store had apprehended an 18-year-old man for stealing a dress shirt, tie and socks.

After speaking to the shoplifter, Jeyanesan said he discovered that the young man needed the outfit for an upcoming job interview.

“This young person has been facing his own difficulties in life and he was looking to straighten out all that by providing for his family and trying to get a job,” Jeyanesan said.

After releasing the shoplifter without charge, Jeyanesan purchased the shirt and tie and gave the clothing to the man.

“This individual didn’t have any resources,” Jeyanesan said.

“He wanted to go get that job. That was in his mind. I think he truly made a mistake.”

By purchasing the clothing, the 31 Division officer said he saw an opportunity to help the man.

“Police officers do this every day and they don’t get recognized for it. We don’t look for any recognition,” he said.

“A core part of policing is helping people and I think we do that every day.”

Speaking to CP24 Monday, 31 Division Staff Sgt. Paul Bois commended the officer for his decision.

“I think the officer did a fantastic job. He exercised his discretion, definitely showed some humanity in dealing with this particular individual. Every circumstance is different and in this particular case the individual had undergone some personal difficulties and the officer wanted to help him out with that and I think collectively that’s why we are all here doing this job,” Bois said.

“We need to make a positive difference in people’s lives. I think he did.”

http://www.cp24.com/mobile/news/toronto-officer-buys-shirt-tie-for-shoplifter-who-needed-outfit-for-job-interview-1.3535864

Categories: merge-rss

பெரிய இடத்தில் £33,000 ஆட்டைய போட்ட நம்ம கணக்குப்பிள்ளை

Mon, 07/08/2017 - 19:10

bbc யின் புகழ் மிக்க டிராகன் டென் (Dragon Den) நிகழ்ச்சி.

இதில் பங்குகொண்ட ஒருவரின் வியாபாரத்தில், பீட்டர் ஜோன்ஸ், தியோ பாப்டிஸ் ஆகிய இரு டிராகன்கள் முதலீடு செய்திருந்தனர்.

Red Letter Days எனும் நிறுவனத்தில் கணக்குப்பிள்ளையாக நம்ம அகிலன் செல்வரத்தினம்.

சூதாட்ட பழக்கம் கொண்ட அகிலன், தனது பணத்தேவைகளுக்காக, காசோலைகளை, பொய்யான கையெழுத்துகளுடன், காசாக்கி உள்ளார். 

லண்டன்  வூட்கிறீன் மேல் நீதிமன்றில் நிறுத்தப் பட்ட  அகிலன்,  வியாபார நிறுவங்களுக்கான பண மீள் செலுத்துகைக்காக (refund) என்று சொல்லியே வங்கியிடம் இருந்து, சூதாட  பணத்தினைப் எடுத்துள்ளார் என அரச வழக்குத் தொடுனர் லிண்டா சாமல் தெரிவித்தார்.

மிக நீண்ட நாட்களாக, நடந்துள்ள ஒரு கடுமையான நம்பிக்கை மோசடி இது. தடுத்து வைக்கப்படுவதே சரியான, எதிர்பார்க்கக் கூடிய தண்டனையாக இருக்கும் என தெரிவித்தார் நீதிபதி ஜோனா க்ரீன்பெர்க்.

காசு, காசோலைகளை பொறுப்பானவராக இருந்த அகிலன், ஆகஸ்ட் 23 வரை பிணையில் விடிவிக்கப் பட்டுள்ளார். சிறை செல்லக்கூடும். அவரது இதுவரையான நன்னடத்தையை குறித்த அறிக்கை வந்தபின்னர் எவ்வளவு காலம் என நீதிமன்று தீர்மானிக்கும்.

இழந்த பணத்தினை தமது பக்கமே தவறு என்ற காரணத்தால், பார்கிலேஸ் வங்கி திருப்பி செலுத்தி விட்டது. 

http://www.msn.com/en-gb/news/uknews/dragons-den-stars-peter-jones-and-theo-paphitis-conned-out-of-£33000-by-corrupt-employee/ar-AApBj0G?li=AAmiR2Z&ocid=spartanntp

Categories: merge-rss

இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது

Mon, 31/07/2017 - 07:26
இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது
 
இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது
 

பெருந் தொகைப் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அறுவரும் 11 இலட்சத்து 98 ஆயிரம் திர்ஹம் பணத்தை திருடியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெவ்வேறு நிறுவனங்களுக்கு உரிய பணத்தை வாகனத்தில் கொண்டு செல்லும் போது இவர்கள் பணத்தைத் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

http://uthayandaily.com/story/15270.html

Categories: merge-rss

கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தமிழர் கைது

Fri, 28/07/2017 - 10:10
கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தமிழர் கைது

 

கனடாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7 வருடத்தில் இரண்டு முறை தன்னை குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

2010 - 2016 ஆம் ஆண்டுடிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தான் இரண்டு முறை குறித்த நபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட அந்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

371 Neilson வீதியில் அமைந்துள்ள கல்வி சேவையினை வழங்கும் நிறுவனம் ஒன்றின் இயக்குநரே சந்தேக நபர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் தொழிலுக்கும், குற்றச்சாட்டிற்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாக பொலிஸார் குறிப்பிடவில்லை.

கடந்த ஜுலை மாதம் 19ஆம் திகதி டொரொண்டோவை சேர்ந்த 50 வயது பாலசுப்ரமணியன் கந்தசாமி என்பவர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் 20ஆம் திகதி 1911 Eglinton Avenue East நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/canada/01/153406

Categories: merge-rss

கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுதலை

Fri, 28/07/2017 - 07:38
கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுதலை
 
 
 
 
கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுதலை

கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எம்.வி.ஓசியன்லேடி என்ற கப்பல் மூலம் 2009 ஆம் ஆண்டு 76 இலங்கையர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்றமைக்காக இவர்கள் மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.  

ஃப்ரான்சிஸ் அந்தோனிமுத்து அப்புலோனப்பா, ஹமல்ராஜ் ஹந்தசாமி, ஜயசந்திரன் கனகராஜ் மற்றும் விக்னராஜா தேவராஜா ஆகிய நான்கு பேருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கனடாவின் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.  

எனினும் இவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசத் தரப்பு சட்டத்தரணி தவறி இருப்பதாக உயர் நீதிமன்ற நீதியரசர் தெரிவித்துள்ளார்.  

குறித்த நான்கு பேரும் ஆட்கடத்தல் காரர்கள் அன்றி அகதிகளே என்றும், ஏனையவர்களுக்கு உதவியளித்துள்ளமையை ஆட்கடத்தல் என்று கூறுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.  

இதனை அடுத்து குறித்த நான்கு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Canadian-court-clears-four-Sri-Lankans-smuggling

Categories: merge-rss

இன்று அதிகாலை இலங்கையர் படுகொலை; சைபிரஸில் நடந்த கொடூரம்!

Mon, 24/07/2017 - 19:40
இன்று அதிகாலை இலங்கையர் படுகொலை; சைபிரஸில் நடந்த கொடூரம்!
 
 
0:53volume_dow
 
இன்று அதிகாலை இலங்கையர் படுகொலை; சைபிரஸில் நடந்த கொடூரம்!

சைபிரஸ் நாட்டின் லிமாசோலில் 42 வயதுடைய இலங்கையர் ஒருவரைக் கொடூரமாக கொலை செய்த சந்தேக நபரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

கொல்லப்பட்டவரது சடலம் மிக்கோரிஸ் அவெனியூவின் மைக்கல் மைக்கலிட்ஸ் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடியில், அவரது உறவினரின் குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி Ioannis Soteriades என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொல்லப்பட்டவர் வீட்டுல் இருந்தபோது அழைப்பு மணி ஒலித்துள்ளது. அதற்கு பதிலளிப்பதற்காக அவர் கதவைத் திறந்தபோது வெளியே நின்ற கொலையாளி அவர்மீது திடீரென கத்திக் குத்தினை நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர் மரணமடைந்ததும் சந்தேக நபர் உடனடியாக அவ்விடத்தைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

சம்மந்தப்பட்ட சந்தேக நபரின் முதல் பெயரே தமக்குத் தெரியவந்துள்ளதாகவும், இவர் ஒரு ஆசிய நாட்டைச் சேர்ந்தவரென்றும்  அவரை விரைவில் கைதுசெய்துவிடுவோம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், உயிரிழந்த நபரும் சந்தேக நபர்களும் ஒருவரையொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்றும், எதற்காக இந்தக் கொலை நடந்துள்ளது என்று தமக்குத் தெரியவில்லை என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Sri-Lankan-massacre

Categories: merge-rss

கனடாவில் கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி

Wed, 19/07/2017 - 09:39
கனடாவில் கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி

கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஸ்காபுரோவில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார்.

ஸ்காபுரோவில் Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில் விபத்து நிகழ்ந்துள்ளது.

இலங்கை வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நேற்று ஆலயம் சென்று வீடு திரும்புகையில் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.

ரொரன்டோ போக்குவரத்துச் சபையின் (TTC) பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதில் கால் தவறி வீழ்ந்த நிலையில் பேருந்திற்குப் பின்னால் வந்த வாகனத்தால் மோதப்பட்டு இவர் மரணமடைந்துள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளையை அவரது சகோதரர் அடையாளம் காட்டியுள்ளார். தனது சகோதரியின் பிரம்பை வைத்தே அவரை அடையாளம் கண்டுள்ளார்.

அவர்கள் அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக வாழ்ந்து வருவதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

தினமும் அவர் அந்த பேருந்தின் ஊடாகவே பயணங்களை மேற்கொள்வதாகவும் நேற்றைய தினம் இந்த துயர சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ரொரன்டோ பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

http://www.tamilwin.com/canada/01/152475

Categories: merge-rss

ஆடிக்கூழ் ஒன்றுகூடல். லண்டவ், யேர்மனி

Mon, 17/07/2017 - 22:19
ஆடிக்கூழ் ஒன்றுகூடல். லண்டவ், யேர்மனி

K800_20170716_164712-e1500317750284.jpgதமிழினத்தின் மரபுவழித் திருநாளில் ஒன்றான ஆடிப்பிறப்பினை லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் தமிழுறவுகளோடிணைந்து ஆடிமாதத்தின் முதலாம் நாளான ஞாயிறன்று (16.07.2017) யான் விளையாட்டுத்திடலிலே கொண்டாடியது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில், ஆடிப்பிறப்புப்பாடல் கருத்துரைகள் எனத்தொடரந்து ஆடிக்கூழ் கொழுக்கட்டை சிற்றுண்டிகளைப் பகிர்ந்துகொண்டனர்.

கருத்துரைகளை லண்டவ் தமிழாலய நிர்வாகி திரு கந்தசாமி குலேந்திராசா அவர்களும் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்களும் வழங்கினர். தமிழரது பாரம்பரிய விளையாட்டுகளிலொன்றான கிளித்தட்டு, நிகழ்வுக்கு வருகைதந்திருந்த வளரிளம் தமிழர்களால் ஆர்வத்தோடு விளையாடப்பட்டது. தாயக நினைவுகளோடு உறவுகள் ஒன்றிணைந்த ஒன்றுகூடலாகவும் தமிழினம் திரள்நிலையடைவதற்க்கான களமாகவும் அமைந்தமை சிறப்பாகும்.
இனத்துவ அடையாளங்களைப் பேணவும் எமது பாரம்பரியங்களை அடுத்ததலைமுறை அறியவும் இதுபோன்ற ஒன்றுகூடல்கள் நடைபெறுவது சிறப்பிற்குரியதென்பதைப் பலரது உரையாடல்களில் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

மா.பாஸ்கரன்
செயலாளர்
தமிழர் கலாசார விளையாட்டுக்கழகம் – லண்டவ், யேர்மனி
நன்றி.

IMG_1082-1024x768.jpgIMG_1083-1024x768.jpgIMG_1084-1024x768.jpgIMG_1085-1024x768.jpgIMG_1087-1024x768.jpgIMG_1088-1024x768.jpgIMG_1090-1024x768.jpgIMG_1091-1024x768.jpgIMG_1096-1024x768.jpgIMG_1097-1024x768.jpgIMG_1098-1024x768.jpgIMG_1099-e1500317433101-768x1024.jpgIMG_1100-1024x768.jpgIMG_1101-1024x768.jpgIMG_1102-1024x768.jpgIMG_1103-1024x768.jpgIMG_1104-1024x768.jpgIMG_1107-1024x768.jpgIMG_1108-1024x768.jpg

https://www.kuriyeedu.com/?p=79829

Categories: merge-rss

லண்டனில் தமிழ் குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Mon, 17/07/2017 - 15:52
லண்டனில் தமிழ் குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

 

 

பிரித்தானியாவின் Stanmore பகுதியில் குடியிருக்கும் தமிழ் குடும்பம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Stanmore பகுதியில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தன்று குறித்த குடியிருப்பின் கதவை தட்டிய மர்ம நபர்கள் இருவர், அந்த குடியிருப்பின் கதவை திறந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி திறந்த வீட்டினுள் வலுக்கட்டாயமாக புகுந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

 

இந்த நிலையில் வாசல் பக்கம் என்ன களேபரம் என பார்க்கச் சென்ற பாதிக்கப்பட்டவரின் தாயார், நடப்பவற்றைக் கண்டு பயத்தில் அலறியுள்ளார்.

இதனையடுத்து அந்த கும்பல் இவரையும் தாக்கியுள்ளது. தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது.

மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பமானது தமிழர்கள் என தெரிய வந்துள்ளது. இதனிடையே காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

இச்சம்பவமானது கடந்த யூன் மாதம் 15 ஆம் திகதி நடந்துள்ளது. அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய இருவரும் கறுப்பினத்தவர்கள் எனவும் இளைஞர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

குறித்த தாக்குதலானது மிகவும் மோசமான திட்டமிட்ட தாக்குதல் சம்பவம் என, வழக்கை விசாரிக்கும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக Harrow பகுதி பொலிசாரை தொடர்புகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் 23 வயது நபர் ஒருவரை கைது செய்து விசாரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/uk/03/128938

Categories: merge-rss

தமிழ் பேசி, வாழும்... நோர்வே நாட்டு சகோதரர்கள்.

Mon, 17/07/2017 - 05:31

தமிழ் பேசி, தமிழ் கலாச்சாரத்தையே பின்பற்றி வாழும் நோர்வே நாட்டு சகோதரர்கள்...!!!

Categories: merge-rss

ebay யாபாரிகள் கவனத்துக்கு.

Sun, 16/07/2017 - 20:42

ஒரு பொருளை வித்த பின்னர், அதற்க கான பணம் வந்த பின்னர், பொருள் அனுப்ப வேண்டிய முகவரியினை ebay அனுப்பி வைக்கும்.

அந்த முகவரியை பயன்படுத்தாது, வேறு முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு, அதே ஈபே மெயில் சிஸ்டம் ஊடாக, வாங்கியவர்  கோரினால்...... அப்பாவித்தனமாக அனுப்பி விடாதீர்கள்.

அப்படி பொருளை பெற்றுக் கொண்ட பின்னர், தனது மெயில் சேவையை யாரோ ஹக் பண்ணி வேறு முகவரி கொடுத்து பொருளை திருடி விட்டனர், என்று சொல்லி தனக்கு பொருள் வந்து சேரவில்லை என்று பேபால் இடம் பணத்தினை திருப்பி பெறும் மோசடியால், பணமும் போய், பொருளும் போய்... சோகமாக பலர் உள்ளளனர்.

இது நூதன மோசடி. ஈபே சொல்லும் முகவரிக்கு மட்டுமே அனுப்புங்கள். இல்லையேல் கதை கந்தல்.

ஈபே இப்போது விற்பவர், வாங்குபவர் குறித்த கொமெண்டுகள் போட வசதிகள் செய்யவில்லை. இதனை மோசடிக்கு வசதியாக பயன்படுத்துகின்றனர்.

ஒரு பொருளை வாங்கியபின்னர்... அது நொள்ளை, இது நொள்ளை என்று சொல்லி refund கேட்க்கின்றனர். தனது ரெவியூ பாதிக்கப் படக் கூடாதென.... refund கொடுத்து விடுகின்றனர்.

போற போக்கில்... ஈபே சரி வராது போல கிடக்குது..... அமேசான் ஒகே.

http://www.telegraph.co.uk/money/jessica-investigates/ebay-fraudster-stole-1023-gold-coins-paypal-wont-refund/

Categories: merge-rss

மனைவியின் காதலனை பாலச்சந்திரன் எவ்வாறு கடத்திப் படுகொலை செய்தார்?

Thu, 13/07/2017 - 09:07

 

 

இங்கிலாந்தில் தனது முன்னாள் மனைவியை திருமணம் செய்யவிருந்த இளைஞர் ஒருவரை திட்டமிட்டு படுகொலை செய்த ஈழத் தமிழர் ஒருவரின் வழக்கு விசாரணை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் விவாகரத்துச் செய்த தனது முன்னாள் மனைவியை மறுமணம் முடிக்கவிருந்த இன்னொரு ஈழத்தமிழரை பொறாமையின் காரணமாக ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவர் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளார். இதற்கென அவர் பிரத்தியேகமாக ஆட்களை நியமித்து சிவானந்தன் சுரேன் என்னும் அவரைக் கடத்தி சித்திரவதையின் மூலம் படுகொலை செய்துள்ளார் என்று அறியப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இந்த வருடம் ஜனவரி மாதம் முதற்பகுதியில் சுரேன் என்பவரது சடலம் தலையில் பாரிய காயங்களோடு மீட்கப்பட்டது. இது குறித்த விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரானா ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

இதன்படி சிவானந்தன் சுரேன் என்பவர் தனது மனைவியைத் திருமணம் செய்து தனக்குப் போட்டியாக வரப்போகிறார் என்ற மனோநிலையில் அவரைக் கடத்திக் கொலை செய்ய ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கமைய மூவர் இணைந்து 12 மணி நேரமாக சுரேனைக் கடத்தி வைத்திருந்து தொடர்ச்சியாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல்களின் பின்னர் சுரேன் கொல்லப்படார்.

கொல்லபட்ட சுரேனின் தலை மற்றும் கழுத்து பகுதியில் கிட்டத்தட்ட 39 காயங்கள் காணப்பட்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது உச்சந்தலையில் மோசமான காயங்கள் காணப்பட்டுள்ளதுடன் அவர் கண்ணும் கடுமையாகச் சிதைக்கப்பட்டுள்ளது.

இதனால் சுரேன் நீண்ட கால வன்முறைக்கமையவே கொல்லப்பட்டார் எனவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாலச்சந்திரனின் மனைவியான ரகுபதியும் சுரேனும் ஏற்கனவே பல வருடங்களின் முன் இலங்கையில் அறிமுகமாகியுள்ளனர். பின்னர் முக நூல் வாயிலாக தம்மை மீண்டும் அறிமுகப்படுத்தியதோடு இருவருக்கும் இடையில் தொடர்பு இருந்துள்ளது. ரகுபதியின் கணவரான பாலச்சந்திரன் ரகுபதியை தவறான நடத்தையுள்ளவர் என்று விவகரத்துக்கு முடிவெடுத்தார். ரகுபதியும் தனது மகிழ்ச்சியற்ற வாழ்க்கைக்கு முடிவு கட்ட விவாகரத்துக்கு தயாரானார். பின்னர் அவர்களுக்கு விவாகரத்து உறுதியானது.

 

இதன் பின்னரே சுரேனுக்கும் ரகுபதிக்கும் உள்ள தொடர்பை வைத்து சுரேனை பழிவாங்க பாலச்சந்திரன் திட்டமிட்டார் என்று கூறப்படுகிறது.

http://www.canadamirror.com/uk/04/131355

Categories: merge-rss