வாழும்-புலம்

CTC மாநாட்டில் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா ?

Sat, 14/01/2017 - 15:11
CTC மாநாட்டில் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா ?

 

Raj-Thavaratnasingham ரமணன் சந்திரசேகரமூர்த்தி

 

பிரித்தாளும் இராஜதந்திரத்தில் கைதேர்ந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தமிழர் தரப்பை பிளவுபடுத்தி சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் “ஒன்றுமில்லாத தீர்வினை தமிழர்கள் மீது திணிப்பதில்” பெரு வெற்றிகளை கண்டு வரும் நிலையில் நாங்கள் இன்னும் இன்னும் எங்களுக்குள்ளான மோதல்களை தீவிரப்படுத்தி பிளவுபட்டு எம்மினத்தின் அழிவிற்கு துணைபோகும் செயல்பாடுகளையே அதிக வீச்சுடன் செய்து கொண்டிருக்கப் போகின்றோமா என்ற கேள்விகள் இப்போது தவிர்க்க முடியாமல் எம்மத்தியில் எழுகின்றன.

யுத்தக் குற்றங்கள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேசத்தின் பார்வையில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சவும் அவரது சகாக்களும் சர்வதேச விசாரணைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் சோகம் குறித்து சிந்திப்பதற்கு எமக்கு நேரம் இல்லாமல் இருக்கின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தெடார்பில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தமிழர்களுக்கு எவ்வாறான பாதிப்புகளை தரப்போகின்றது  என்பது குறித்தோ அதனால் இலங்கை அரசாங்கம் பெறப்போகும் வரப்பிரசாதங்கள் குறித்தோ நாம் ஆராயப் போவதில்லை.

இதுவரை இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொள்ளப் போகின்றது. அது குறித்தும் எமக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை.

ஏனென்றால் நாம் இவற்றை எல்லாம் விட முக்கியமான விடயங்கள் எம்மைச் சுற்றி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தும் கேளாமல் வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர் அவர்கள் கனடாவிற்கு வருகை தந்திருக்கின்றார்.

ஒன்ராறியோ மாகாண முதல்வர் கத்தலின் வீன் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருடனும் தமிழ் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளோடும் முதல்வர் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்தி வருகின்றார்.

அதேபோல் அவரின் வருகையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக “அறிவிக்கப்பட்ட” முல்லைத்தீவை மார்க்கம் நகரத்தின் இணை நகரமாக்கும் ஒப்பந்தம் இந்த வார இறுதியில் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதன் மூலமாக யுத்தத்தால் தமது அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து நிற்கும் முல்லைத்தீவு மாவட்டம் நன்மை பெறும் என்று நம்பிக்கை வெளியிடப்படுகின்றது.

ஏற்கனவே இங்கிலாந்தின் கிங்ஸ்ரன் நகரமும் யாழ்ப்பாணமும் இணை நகரமாகியதில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வரும் முன்னாள் போராளிகளும் யுத்தத்தினால் தமது வாழ்க்கைத் துணையினை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் இப்போது சீரும் சிறப்புமாக வாழ்ந்து நாம் கண்ணாரக் கண்டு வருவதால் அதே போன்ற “ நன்மைகள்” முல்லைத் தீவிலும்” வவுனியாவிலும் விரைவில் கிடைக்கும் என்றும் நம்புவோம்.

வடமாகாண முதல்வர் கனடாவில் இரட்டை நகர உடன்படிக்கை செய்து கொள்ளும் அததே நேரம் அவருடைய மாகாண சபையில் அமைச்சர்களாக இருக்கும் சிலர் உட்பட பல்வேறு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கலந்து கொள்ளும் ‘இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு’  என்ற உயர் நிலை மாநாடும் இதே கனடாவில் தான் நடைபெறப் போகின்றது.

முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு ( கட்டணம் செலுத்தாத) நடைபெறும்  ஜனவரி 15ம் திகதி  இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண அரசு அமைச்சுக்களுடனான உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடும் நடைபெறப் போகின்றது.

ஆனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வடக்கின் முதலமைச்சருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

வடமாகாண முதலமைச்சர் கனடாவில்  இருக்கின்ற போது அவர் கலந்து கொள்ளமால் வடக்கு கிழக்கு மாகாண அரசு அமைச்சுக்களுடனான உயர் மட்ட பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்படுவது ஆரோக்கியமானதா என்ற கேள்வி பலரிடம் இருந்து இப்போது எழுந்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள விக்னேஸ்வரன் எதிர் சம்பந்தன் என்ற மோதல் நிலையின் தொடர்ச்சியும் கனடாவில் தமிழ் தேசியம் பேசும் அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகளின் பரிணாம வளர்ச்சியுமே இதற்கு காரணமாகும்

ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் செல்வாக்கு பெற்றிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் அவரின் ஆதரவாளர்களையும் அதில் இருந்து வெளியேற்றி அவர்களின் அரசியல் எதிர்காலத்தை இருளுக்குள் தள்ளிய தரப்பினர் தான் இப்போது விக்னேஸ்வரனின் கனேடிய வருகையின் போது அவரின் வலதும் இடதுமாக இருக்கின்றார்கள் என்பது கவனிப்பிற்குரியது.

இதனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற அரசியல் அந்திமத்தை வடமாகாண முதல்வருக்கும் ஏற்பட்டு விடமோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில் தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலுவாக விளங்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி பலவீனப்படுத்துவது ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நன்மையளிக்காது

தாயகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் தெளிவான தெரிவாக சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் இருக்கின்றது.அதன் மூலமாகத்தான் தான் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற யதாspesialர்த்தம் மறைக்கப்பட முடியாதது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தவறு என்று தாயக மக்கள் உணர்ந்தால் அடுத்த தேர்தலில் அவர்கள் மாற்று தலைமை குறித்து தீர்மானிப்பார்கள் முடிவு செய்வார்கள்.

அதற்கான கால அவகாசத்தையும் அதற்கான வெளியினையும் தாயக மக்களுக்கு நாம் வழங்க வேண்டும்.

அந்த மக்களின் அரசியல் தெரிவுகளை தவறென காண்பிக்க முயல்வதும் அந்த மக்கள் பிரதிநிதிகளை அவமரியாதை செய்வதும் அவர்களை பிரித்தாள முயல்வதும் அந்த மக்களின் உரிமைகள் மீதான அத்துமீறலாகவே கருதப்பட வேண்டும்.

இந்த பின்னணிகளோடு தான் வடமாகாண முதலமைச்சரின் கனேடிய விஜயத்தையும் நாம் நோக்க வேண்டும்.

அவரின் கனேடிய விஜயம் நம்பிக்கைகளுக்கு பதிலாக எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளை அதிகம் ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் நன்மைகள் குறித்தும் எதிர்காலம் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டிய முதல்வரும் அமைச்சர்களும் எதிர் எதிர் முகாம்களில் இருப்பதை அவதானிக்கும் துர்ப்பாக்கியம் கனடாவில் வாழும் எமக்கு ஏற்பட்டுள்ளது.

கட்டாவில் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகும் மாநாட்டில் தாயகத்தில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தை 21ம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தோடு இணைத்துச் செல்லவும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் ஒரு வலுவான அடித்தளத்தை மீளக்கட்டுவதற்கு வழிகோலும் செயல்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மக்களின் எதிர்காலம் குறித்து ஆராய்ப்படவுள்ள  இந்த மாநாட்டில் கனடாவில் தங்கியுள்ள வடமாகாண முதல்வர் கலந்து கொள்ளமாட்டார் என்ற கசப்பான செய்தி  பலரை கவலை கொள்ள வைத்துள்ளது

முதலமைச்சரை அழைத்த தரப்பினருக்கும் மாநாட்டை நடத்தும் தரப்பினருக்கும் இடையில் நிலவி வரும் பனிப்போரின் விளைவே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

வடக்கு கிழக்கு மக்களின் தேவைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மூன்று நாள் மாநாட்டில் ஏன் வடமாகண முதல்வர் கலந்து கொள்ளவில்லை என்று இங்குள்ள மாகாண அரசோ மத்திய அரசோ கேள்வி எழுப்பினால் யாரால் என்ன பதில் சொல்ல முடியும் என்று மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் குழப்பமடைந்துள்ளனராம்.

முதல்வரை அழைத்தவர்களுக்கும் எங்களுக்கும் எட்டாப் பொருத்தம் அதனால் “அவர்” எங்கள் நிகழ்விற்கு வரமாட்டார் என்று அவர்கள் சொல்வார்களா ? அல்லது மார்க்கம் நகரின் அழைப்பில் வந்த முதல்வரை நாம் எப்படி ஸ்காபுரோவில் நடைபெறும் மாநாட்டிற்கு அனுப்புவது அதனால் தான் அவர் மாநாட்டில் கலந்து கொள்வதை நாங்கள் விரும்பவில்லை என்று இவர்கள் தான் சொல்லப் போகின்றார்களா ? தெரியவில்லை. எது எவ்வாறயினும் முதல்வர் கலந்து கொள்ளாமல் இந்த மாநாடு நடைபெறுமானால் அது மிகப்பெரிய ஏமாற்றத்தையும் எமது மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளையுமே ஏற்படுத்தும்.

உண்மையில் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் நலன் தான் இவர்களின் பிரதான நோக்கம் என்றால் ஏன் இவ்வாறு பிரிந்து நின்று மக்களையும் செயற்பாட்டாளர்களையும் இந்த அமைப்புகள் குழப்ப வேண்டும்.

இந்த பிரிவுகளாலும் பிளவுகளாலும் யாருக்கு என்ன இலாபம் கிடைத்து விடப் போகின்றது.

இங்குள்ள அமைப்புகளின் தலைமைகளுக்கிடையிலான அதிகாரப் போட்டிக்கு ஒட்டுமொத்த இனத்தின் எதிர்காலத்தையும் தாயக மக்களின் வாழ்வையும் விலையாகக் கொடுக்கப் போகின்றோமா ?

தமக்கான குறைந்த பட்ச நன்மைகளையாவது ஏற்படுத்தி தருவார் என்ற பெரும் எதிர்பாரப்போடு வடக்கின் முதல்வராக அங்கு வாழும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்.

தன்னை தெரிவு செய்த தாயக மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி புலம்பெயர் தேசங்களில் வெவ்வேறான காரணங்களால் பிரிந்து நிற்கும் தமிழர் தரப்புகளை ஒன்றிணைக்கும் பணியினை அவர் மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாகும்.

அதன் மூலமாக தாயக மக்களின் துயர் துடைக்கும் பணியினை வினைத்திறனுடன் முன்னெடுக்க அவர் முன்வரவேண்டும்.

மாறாக இங்கு ஏற்கனவே பிளவு பட்டு நிற்கும் தரப்புகளிடையிலான விரிசல்களை பெரிதுபடுத்தும் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

அதேவேளை வடமாகாண முதல்வரை இது போன்ற சங்கட நிலைக்குள் தள்ளுவதன் மூலம் தமது எதிர்தரப்பை வென்றுவிட எண்ணும் செயற்பாட்டாளர்களால் எமது மக்களுக்கான விடிவினை ஒரு போதும் பெற்றத்தர முடியாது என்ற உண்மையும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்

எமது இனத்தின் மீது கொடும் இன அழிப்பினை புரிந்த சிங்கள தேசமே எமக்கெதிராக இன்றும் ஒன்று பட்டுத் தானே நிற்கின்றது.

அரசியலில் எதிரியாக இருந்தாலும் தன் இனம் என்பதால் மகிந்த தரப்பையும் தமிழ் மக்கள் மீது யுத்தக் குற்றங்களைப் புரிந்த படையினரையும் சர்வதேச போர்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்றுவதில் ரனில் விக்கிரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் காண்பித்து வரும் அக்கறை எங்கள் கண்களுக்கு ஏன் இன்னமும் புலப்படவில்லை.

சிங்கள தேசத்திடம் இருந்து ஒரு இனமாக சிந்த்திப்பதும் செயல்படுவதும் குறித்த பாடங்களை கற்றுக் கொள்ளாமல் விக்னேஸ்வரனையும் சம்பந்தனையும் மோத வைப்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மேலும் பிளவு படுத்துவதாலும் நாம் விரும்பும் தீர்வுகளை அடைந்து விட முடியுமா ?

எங்களுக்குள் இங்கிருக்கின்ற இந்த பிரிவுகளை  சரி செய்து ஒட்டுமொத்த சக்தியாக மாறி எமது மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை முன்வைக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும்.

இந்த  முரண் நிலைகளை மாற்றுவதற்கான எழுச்சி மக்களிடம் இருந்து பிறக்க வேண்டும்.

தமது அதிகாரங்களுக்காகவும் தமது சுயலாப இருப்புகளுக்காகவும் மக்களையும் மக்கள் பிரிநிதிகிகளையும் கூறுபோடும் சந்தரப்பவாத சக்திகளின் மாயவலைகள் அறுத்தெறியப்பட வேண்டும்.

எமது மக்களின் நல்வாழ்விற்கான முன்னெடுக்கப்படும் செயல்பாடுகளில் “அமைப்பு” அரசியல் இல்லாமல் பொது நலன் நோக்கிய செயல்பாடுகள் இருப்பது இனியாவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த நிலை இதுபோன்றே தொடர்வதை நாம் இனியும் அனுமதிக்கக் கூடாது.

கூறு பட்டு கூறுபட்டு நாம் கூர் உடைந்த பேனாவாய் ஆகி மௌனிப்பதற்கு முன் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.

வடக்கு கிழக்கு மக்களின் மருத்துவம் கல்வி உட்பட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கனடாவில் நடைபெறும் முதலாவது சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் இங்குள்ள அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்க்கும் நடவடிக்கையினை ஆரம்பித்து வைக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

இதன் மூலம் புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஒளியினை அவர் ஏற்றி வைக்க வேண்டும்.

அதை விடுத்து என்னை அழைத்தவர்களுக்கு எதிரான தரப்பின் நிகழ்வில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று அவர் அடம்பிடிப்பது ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தாது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கனடாவில் வடமாகாண முதல்வர் அவர்களை சந்தித்து வரும் பல்வேறு தமிழர் தரப்புகளும் இதனை அவருக்கு வலியுறுத்துவதன் மூலம் இதனை சாத்தியமாக்க முடியும்.

கனடாவில் வாழும் தமிழ் புத்திஜீவிகளும் அமைப்பு சாரா பொது நிறுவனங்களும் இந்த “அமைப்பு” சார் அரசியலால் ஏற்படும் முரண்பாடுகளையும் முட்டுக்கட்டைகளையும்  முடிவிற்கு கொண்டு வருவதற்கான அர்த்தபூர்வமான செயல்பாடுகளை இனியாவது மேற்கொள்ளத் தொடங்க வேண்டும்.

ஒரு சிலரின் அடவாடித் தனங்களில் ஒட்டுமொத்த இனத்தின் எதிர்காலம் சிதைந்தளிந்து போவதை தடுக்கும் நடவடிக்கைகள் உடனடியாக  முன்னெடுக்கப்பட வேண்டும்.

முதல்வரின் கனேடிய வருகையானது தமிழர் வாழ்வில் புதிய மாற்றம் ஒன்றின் ஆரம்பமாக அமைய வேண்டும் என்பதே இங்குள்ள பலரின் எதிர்பார்ப்பாகும்

மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றம் இங்கிருந்து இனியாவது பிறக்கப்பட்டும். அது எமது மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் மாற்றமாக இருக்கட்டும்.

 

ரமணன் சந்திரசேகரமூர்த்தி

http://ekuruvi.com/devolopnorthandeast/

Categories: merge-rss

கனடாவில் ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதம் என அழைக்கப்படும் - கனடாவின் நாடாளுமன்றம்!

Fri, 13/01/2017 - 16:34

கனடாவில் ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதம் என அழைக்கப்படும் - கனடாவின் நாடாளுமன்றம்!

 

 

Categories: merge-rss

ஒன்ராறியோ மாகாணத்தின் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரை சந்தித்தார் சி..வி. விக்னேஸ்வரன்

Fri, 13/01/2017 - 06:25
ஒன்ராறியோ மாகாணத்தின் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரை சந்தித்தார் சி..வி. விக்னேஸ்வரன்
முதல்தடவையாக கனடாவுக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் சி..வி. விக்னேஸ்வரன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் பல அரசியல் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றார். அவ்வாறான சந்திப்புகளில் ஒன்றாக இந்தச் சந்திப்பும் அமைந்தது. இச் சந்திப்பின் போது, “வடமாகாணத்தில் நடைபெற்ற போரின் காரணமாகப் பெண்கள் தலைமை ஏற்றிருக்கும் குடும்பங்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் சமூக, உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.Tracy_MacCharles_cv_1இவை குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. அங்கவீனர்களாக்கப்பட்ட பெண்களில் வாழ்வாதாரமும் சிக்கல்களைக் கொண்டுள்ளது.Tracy_MacCharles_cv_2இந்தப் பெண்களின் வாழ்வை மேம்படுத்தவும் அவர்களின் வினைத்திறனை அதிகரித்து நம்பிக்கையூட்டவும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கியிருக்கும் சட்ட நியமங்கள் வாயிலாக, ஒன்ராறியோ அரசால் எமக்கு உதவ முடியுமா?” எனச் சி.வி.விக்னேஸ்வரன் அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.Tracy_MacCharles_cv_3முதலமைச்சரோடு வேறு பல விடயங்களையும் கலந்துரையாடிய Tracy MacCharles தமிழ் மக்களின் துயரத்தின் ஆழத்தைத் தான் புரிந்து கொள்வதாகவும் இப்பாதிப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் அடையாளம் காணப்பட்ட சிக்கல்களுக்குத் தாங்கள் எவ்வாறு உதவலாம் என்பதற்கான வழிகளைக் கண்டறிவதாகவும் குறிப்பிட்டார். வடமாகாணசபையுடன் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் இருப்பின் அவற்றை நிச்சயமாகப் பரிசீலிப்போம் என்றும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு நிறைவாக நடைபெற்றதாக இருதரப்பினரும் தெரிவித்தனர்.  
http://www.tamilglance.com/ஒன்ராறியோ-மாகாணத்தின்-பெ/
Categories: merge-rss

நெதர்லாந்தில் யாழ். சிறுவனுக்கு நேர்ந்த கதி..!

Thu, 12/01/2017 - 13:19
நெதர்லாந்தில் யாழ். சிறுவனுக்கு நேர்ந்த கதி..!

Published by MD.Lucias on 2017-01-12 18:19:50

நெத‌ர்லாந்தில் இயர்லன் எனும் இட‌த்தில் வசித்து வந்த த‌ருக்ச‌ன் செல்வ‌ம் என்ற‌ 15 வ‌ய‌துடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுவ‌ன், த‌ற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.commits-suicide-Heerlen-Tharukshan-Selva

பாட‌சாலையில் குறித்த மாணவனுடன் கல்வி கற்கும் ச‌க‌ மாண‌வ‌ர்க‌ளின் துன்புறுத்த‌ல் கார‌ண‌மாக‌ ம‌ன‌முடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ச‌க‌ மாண‌வ‌ர்க‌ள், சமூக வலைத்தளங்களில் குறித்த சிறுவனின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து தகாத வார்த்தைகளால் எழுதியுள்ளனர்.

 மேலும் ப‌ல‌ர் போலிப் பெய‌ரில் குறித்தப் புகைப்படங்களுக்கு தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவேற்றம் செய்துள்ளனர்.

 கிறிஸ்ம‌ஸ் விடுமுறை முடிந்த‌ பின்ன‌ரும் பாட‌சாலைக்கு திரும்ப‌ ம‌ன‌மில்லாம‌ல் இருந்துள்ள குறித்த சிறுவன்  கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.commits-suicide-Heerlen-Tharukshan-Selva

ஏழு கிழ‌மைக்கு முன்ன‌ரும், த‌ருக்ச‌ன் ஏற்க‌ன‌வே ஒரு த‌ட‌வை த‌ற்கொலைக்கு முய‌ன்ற‌தாக‌ குடும்ப‌த்தின‌ர் தெரிவித்துள்ளனர்.

இது தொட‌ர்பாக‌ பொலிஸில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் தகுந்த நடவடிக்கை அக்க‌றை எடுக்க‌வில்லை எனவும் தமக்கு எவ்வித‌ உத‌வியும் கிடைக்க‌வில்லை என்றும் குற்ற‌ம் சுமத்தியுள்ளனர்.

சிறுவனின் பாட‌சாலை நிர்வாக‌த்துட‌ன் க‌தைத்தும், அவ‌ர்க‌ளும் க‌வ‌ன‌ம் எடுக்க‌வில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

த‌ருக்ச‌ன் பாட‌சாலை சென்ற‌ கால‌ங்க‌ளில் அங்கு த‌ன்னோடு யாரும் பேசுவ‌தில்லை என்று க‌வ‌லைப்ப‌ட்டதாகவும் ஆனால்  வீட்டில் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாம‌ல் இருந்த‌தாக‌ ச‌கோத‌ரி ச‌ர‌ண்யா தெரிவித்தார்.

த‌ருக்ச‌ன் த‌ற்கொலை செய்வ‌த‌ற்கு முன்ன‌ர் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

http://www.virakesari.lk

Categories: merge-rss

492 இலங்கையர்களுடன் கனடா சென்ற சன்.சீ.கப்பல் : எதிர்பாராமல் கப்பலின் தலைவனாகும் வாய்ப்பு கிடைத்ததாக அகதி சாட்சியம்

Thu, 12/01/2017 - 06:03
492 இலங்கையர்களுடன் கனடா சென்ற சன்.சீ.கப்பல் : எதிர்பாராமல் கப்பலின் தலைவனாகும் வாய்ப்பு கிடைத்ததாக அகதி சாட்சியம் 

 

 

எம்.வி.சன்.சீ.கப்பலில் கனடாவிற்கு இலங்கைத்தமிழ் அகதிகளை சட்டவிரோதமான முறையில் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு பேரில் ஒருவர், எதிர்பாராமல் கப்பலின் தலைவராக செயற்பட்டதாக அகதியான  லெஸ்லி இமேனுவேல் சாட்சியமளித்துள்ளார்.MV-Sun-Sea.jpg

2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 492 பேர் அடங்கிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் குழுவொன்று கனடாவிற்கு எம்.வீ. சன் சீ என்ற கப்பல் சென்றமை தொடர்பான வழக்கு விசாரணை தற்போது கனடாவில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் 492 பேரை கனடாவுக்கு அழைத்துச்செல்ல உதவியதாக லெஸ்லி இமேனுவேல் என்பவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் கனேடிய பிரிட்டிஸ் கொலம்பியா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள லெஸ்லி இமானுவேல் என்பவர், சன்.சீ.கப்பலின் உண்மையான தலைவர் கப்பலை கைவிட்டதன் பின்னர், தான் தலைமைப் பொறுப்பை கையேற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் தாம் 15 ஆயிரம் டொலர்களை கட்டணமாக செலுத்தியே குறித்த கப்பலில் அகதியாக சேர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

 

எவ்வாறாயினும், அவர் 2001ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இருக்கவில்லை, அதற்கு முன்னதாகவே மலேசியாவுக்கு சென்ற அவர், கனடா செல்வதற்கு முன்னதாக தாய்லாந்தில் தங்கி இருந்துள்ளார்.

 

இலங்கையில் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தே கனடாவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ளார்.

 

மேலும் அவர் உள்ளிட்ட நான்கு பேர் குறித்த வழக்கு தொடர்ச்சியாக விசாரிக்கப்படுகின்ற நிலையில் நேற்றும் விசாரணைகள் இடம்பெற்றன.

http://www.virakesari.lk/

Categories: merge-rss

வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸவரன்! இன்று கனடா வந்து இறங்கிய போது!!

Sat, 07/01/2017 - 19:00

வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸவரன்! இன்று கனடா வந்து இறங்கிய போது!!

 

Categories: merge-rss

அகதிக் கோரிக்கை நிராகரிப்பு: இலங்கை பெண்ணின் பரிதாப நிலை

Wed, 04/01/2017 - 11:43
அகதிக் கோரிக்கை நிராகரிப்பு: இலங்கை பெண்ணின் பரிதாப நிலை

2008ஆம் ஆண்டுடன் இலங்கையை விட்டு அகதியாக கனடாவிற்கு சென்று அங்கேயே இல்லற வாழ்வில் இணைந்துவிட்ட பெண் ஒருவர் தற்போது கனேடிய அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவரின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று இங்கைக்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் எனவும் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர் எனவும் தெரியவந்துள்ளது. இத்தம்பதியினருக்கு என இரு குழந்தைகள். குழந்தைகளையும் கணவரையும் விட்டு குறித்த பெண் நாடுகடத்தப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குழந்தைகளுக்கும், பெண்ணின் கணவருக்கும் கனேடிய குடியுரிமை உள்ளது. கனடாவில் பல தசாப்தங்களுக்கும் மேல் வாழ்ந்து வரும் தமிழ் சமூக மக்களிடையே இது போன்ற விடயங்களில் போதிய விழிப்புணர்வு இன்னமும், இல்லாமல் இருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

தமிழர்களுக்காக குரல் கொடுக்க எத்தனையோ பொதுவான அமைப்புகளும், மனித உரிமை சட்டத்தரணிகளும் இருக்கின்ற போது முன் கூட்டியே இது தொடர்பான ஆலோசனைகளை யாரிடமும் கேட்காமல் இறுதி நேரத்தில் ஒட்டு மொத்த குடும்பமும் அவதிக்கு உள்ளாகியுள்ளது.

அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் நாட்டுக்குத் திரும்பி அனுப்பபபடுவதென்பது கனடாவில் அரிதான கடைப்பிடிக்கப்படும் ஒரு விடயமே. இருப்பினும் சம்பந்தப்பட்ட இந்தத் தம்பதியினர் இது தொடர்பிலான தகவல்களை ஊடகங்களுக்கும், பொது அமைப்புக்களுக்கும், தமிழ் அகதி மக்களின் விடயத்தில் உதவி புரியத் தயாராக இருக்கும் சட்டத்தரணிகளுக்கும் முன்னரே தெரியப்படுத்தியிருந்தால் நிச்சயமாக விடயம் பெரிதுபடுத்தப்பட்டிருப்பதுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும், பிரதமர் அலுவலகத்துடனும் பேச ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

http://athavannews.com/?p=399221

 

Categories: merge-rss

கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது!

Tue, 03/01/2017 - 00:34
கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது!

 

Image

இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன்

மனைவிக்கும் கணவரிற்குமிடையே பிரச்சினைகள் அதிகரித்து வந்த நிலையில் தன்னால் இனி மனைவியுடன் ஒத்துவாழ முடியாது என்ற நிலைக்கு வந்த இளைஞரொருவர் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார்.

இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் எனக் கூறி மனைவியை தனியே அனுப்பி வைத்தார்.

அப்படி அனுப்பி வைத்தவர் மூன்று வாரங்களின் பிறகு மனைவியிடம் சென்று தான் செய்தவைகள் அனைத்துமே தவறு. தயவு செய்து என்னுடன் இணைந்து வாழ். நான் இனிப் பிரிவு பற்றியே கதைக்க மாட்டேன் என மனைவியை அழைத்து வந்துவிட்டார்.

மனைவி அதிர்ச்சியடைந்தாலும் அவருடன் சென்று வாழ ஆரம்பித்து இனிதே இப்போது குடும்பம் நடாத்தி வருகின்றனர் அந்த இளைஞரின் மனமாறுதலிற்கான காரணத்தை மனைவியும் ஏற்றுக் கொண்டார்.

ஆமாம் விவகாரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்யச் சென்ற இளைஞருடன் கதைத்த வழக்கறிஞர் அவருடைய மாத வருமாணம், கையிருப்புப் பணம் போன்றவற்றையெல்லாம் விசாரித்து விட்டு அந்த இளைஞரிடம்,

“நீர் விவகாரத்துப் பெறும் வரை மாதந்தம் 3,400 டொலர்கள் மனைவிக்கும் குழந்தைகளிற்கும் வீட்டு வாடகைக்கு, உணவு உடைக்கு எனக் கொடுக்க வேண்டும். விவகாரத்துப் பெற ஒன்றரை வருடங்கள் எடுக்கலாம்.”

“விவகாரத்துப் பெற்ற பிறகு பிள்ளை பராமரிப்பு பணமாக மாதாந்தம் 1,800 டொலர்கள் கொடுக்க வேண்டும். உமது முன்னைய மனைவி விவாகரத்துப் பெற்ற பிறகும் வேலைக்குச் செல்லாவிட்டால் இந்தத் தொகை அதிகரிக்கும்.”

“உமது மூன்று குழந்தைகளும் 18 வயது வரும் வரை நீர் இந்தப் பராமரிப்பு பணத்தைக் கொடுக்க வேண்டும.; நீர் இப்போது 2000 டொலர்கூட மாத வருமாணமாகப் பெறவில்லையே? விவாகரத்து வேண்டுமா என்பதை ஆழமாக யோசித்துக் கூறும்” எனக் கூறியுள்ளார்.

இளைஞரும் வீட்டின் மேல் கடன்பெற்றுத் தன்னால் தற்காலிகமாக நிலைமையைச் சமாளிக்க முடியும் எனக் கூறியபோது வீட்டின் அரைப்பகுதிப் பெறுமானம் உமது மனைவிக்குரியது. அவரது அனுமதியில்லாமல் நீர் இரண்டாம் அடமாணமோ, கடனோ பெறமுடியாது என்று கூறியுள்ளார்.

ஒரு யோசனையுமில்லாமல் மனைவியின் வீட்டிற்குச் சென்று தான் செய்த தவறை மன்னிக்குமாறு அந்த இளைஞர் நேரடியாக மனைவியிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனைவியை அழைத்து வந்து அமைதியாகக் குடும்பம் நடாத்துகின்றார்.

அந்த இளைஞர் இப்போது குடும்பம் மாத்திரம் நடாத்தவில்லை, தனது நண்பர்களிற்கு இதனைத் தனது அறிவுரையாகவும் கூறி வருகின்றார்.

DIVERS%201.jpg

http://tamilsguide.com/blog/canada-news/4495

Categories: merge-rss

யாழ் கள நினவுகள்

Fri, 30/12/2016 - 21:07

கிருபன், சுகன், ரதி, ஜீவா, சுபேஸ், ஜஸ்ரின், நிழலி, தப்பிலி, நந்தன், தும்பளையான், சாத்திரி, நுணாவிலான், காவலுர்கண்மணி, பகலவன், ஷாந்தி, சஹாரா, ஈசன், அர்யுன், கோமகன், சுவைப்பிரியன், ஈழத்திருமகன், குளக்காட்டான், மீராபாரதி, தயா, வினித், சபேசன், இளங்கோ, நாரதர், விசுகு, சுவி, புத்தன், புங்iயூரான், மாப்பிள்ளை, சினேகிதி, தமிழிச்சி, சாணக்கியன், பண்டிதர், இணையவன், மோகன், இசைக்கலைஞன், வல்க்கேனோ, அபராஜிதன், வசிசுதா, தூயவன், எழுஞாயிறு, காவடி, அறிவிலி, குறுக்காலபோவான், ஐ.வி.சசி. ப்பிறியசகி, வசம்பு, ஜோக்கர், கரு, துல்பன், ஸ்மோல்பொயின்ற், ஓல்ற்றனேற்றிவ், பரணி, ஆதித்தியஇளம்பிறையன், ஜமுனா, சுண்டல், புலவர், கோஷன், உடையார், வாத்தியார், கறுப்பி, மருதன்கேணி, மாதரசி, யாயினி, நொச்சி, குட்டி, குமாரசாமி, சின்னக்குட்டி, குக்கூ, வசீ, துளசி, சோளியன், பொயெட், சுமேரியர், விசசாயிவிக், அஞ்சரன்....

பத்து வருடங்களாகின்றன யாழில் அங்கத்தவனாகி. இணையவெளி இந்தப் பத்துவருடங்களில் பெரிதும் மாறிவிட்டது. யாழிலும் அந்த மாற்றம் வெட்டவெளிச்சமாக வெளித்தெரிகிறது. எவரிற்கும் நீண்ட நெடிய விவாதங்களில் ஈடுபடுவதில் அவ்வளவு ஆர்வமில்லை. இரு வினாடிகளிற்குள் பார்த்துப் பச்சை குத்திவிட்டு நகரும் போக்கே உலகில் வியாபித்திருக்கிறது. வாசிப்பதற்குப் பதில் வீடியோக்களையே மக்கள் நாடுகிறார்கள். அந்தவகையில் யாழும் ஒரு முகநூல் போன்று மட்டும் தொழிற்படுவது தவிர்க்கமுடியாதது தான். இருப்பினும், பத்து வருடங்கள் என்பது நீண்ட காலம். அந்தவகையில் யாழ் சார்ந்தே பல ஞாபகங்கள் இருக்கவே செய்கின்றன. நான் மேலே பட்டியலிட்ட பெயர்களில் எத்தனை டுப்பிளிக்கேட் பெயர்கள் என்று தெரியவில்லை ஆனால் மூன்று ஐடிக்கள் தற்போது உயிருடன் இல்லை. 

முன்பெல்லாம் எதையாவது எழுதும் போது, இன்னார் இந்தக் கேள்வி கேட்பார்கள் எனத் தோன்றும். அவர்கள் கேள்விகளிற்கான பதிலை ஆரம்பப்பதிவிலேயே உள்ளடக்கிப் பதிவிடத் தோன்றும். விவாதங்கள் நாம் சிந்திக்காக கோணங்களில் சிந்திக்கத் தூண்டும். சில வாசகரின் கேழ்விகள் திணறடிக்கும்—எமது நிலை சார்ந்தும், நாம் முன்வைத்த கருத்துச் சார்ந்தும் ஆழ்ந்து சிந்திக்க நிர்ப்பந்திக்கும். இதனால் யாழிற்கு வருவது ஒரு போதை போன்று நாளாந்தம் நிகழும். தற்போது யாழில் விவாதங்கள் வெகுவாக அருகிவிட்டன. இன்னமும் சொல்வதானால், காத்திரமான பின்னூட்டங்கள் அருகிவிட்டன. எவரும் எவரையும் சவாலிற்கு அழைப்பதில்லை என்றே சொல்லலாம். 

யாழை விடுவோம், தமிழ் இணையவெளியில் எங்கேயாவது காத்திரமான விவாதங்களிற்கான முனை தெரிகிறதா என்று தேடினால் அப்படி எதுவும் கண்ணில் படுவதாக இல்லை. எனவே எழுத்து என்பதை விடுத்து எங்காவது எப்போதாவது அலைவரிசை ஒத்தவர்களைக்கண்டால் அவர்களுடன் விவாதிப்பது என்பதோடு தமிழ் மொழி விவாதம் நின்றுவிடுகிறது. இது தமிழ் இணையவெளிக்கு மட்டுமானதல்ல. சந்தை மீண்டும் தனது வெற்றியினை அறிவித்துக்கொள்கிறது. இணையவெளியினை முடக்கி மீண்டும் காத்திரமான விவாதங்களைப் பல்கலைக்களகங்களிற்குள்ளும் பிரத்தியேக விடுதிகளிற்குள்ளும் ஆனவையாகப் பூட்டிக்கொள்கிறது. இணையம் பரபரப்புடன் புரட்சி போல ஆரம்பித்துப் பிசுபிசுத்துப் போகிறது. "சிந்திப்பவர்கள்" என்பவர்கள் மீண்டும் எலீற்றுக்களாக மட்டும் சிறு குழுமங்களிற்குள் தங்கிவிட, சந்தை பெரும்பான்மையினரை நுகத்தில் பூட்டி உழுதபடி நகருகிறது...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவரிற்கும்.

Categories: merge-rss

இலங்கையை சேர்ந்த 3 தலைமுறையினரை காவுகொண்ட நியூசிலாந்து தீவிபத்து

Thu, 22/12/2016 - 12:49
இலங்கையை சேர்ந்த 3 தலைமுறையினரை காவுகொண்ட நியூசிலாந்து தீவிபத்து

newsziland-1.jpg

நியூசிலாந்தின் அகதிகள் பேரவை நிறைவேற்று அதிகாரி கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக வைத்தியசாலையில் போராடிக் கொண்டிருப்பதாக நியூசிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக  இவரது 5 வயது மகன், 39 வயதுடைய மனைவி, 66 வயதுடைய மனைவியின் தாயார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

11 வயதுடைய மகள், 69 வயதுடைய அவரின் தாத்தா ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எனினும் 47 வயதுடைய கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக போராடுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து கைலேஸ் தனபாலசிங்கத்தின் 3 தலைமுறையை காவுகொண்டுள்ளது என கைலேசின் குடும்ப நண்பர் சிவராம் ஆனந்தசிவம் தெரிவித்துள்ளார்.

தற்போது நியூசிலாந்தின் அகதிகள் பேரவையின் நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றும் கைலேஸ் தனபாலச்ங்கம், நியூசிலாந்தில் குடியேறும் மக்களுக்கு உயர்ந்த சேவையை வழங்குபவர். அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த அபத்தம் இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்கள், மற்றும் இனக்குழுமங்களுக்கு பேரதிர்ச்சி எனவும் கைலேசின் குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/11181

Categories: merge-rss

பிரான்ஸ் அழகி போட்டியில் பட்டத்தை வென்ற ஈழத் தமிழ்ப் பெண்!

Tue, 13/12/2016 - 14:26
பிரான்சில் நடந்த Miss Elegante France அழகி போட்டியில்  ஈழத்தமிழ் பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகளுடன் போட்டியிட்டு, சபறினா கணேசபவன் என்ற ஈழத் தமிழ் பெண், Miss Elegante France  அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சில் நடந்த Miss Elegante France அழகி போட்டியில் ஈழத்தமிழ் பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகளுடன் போட்டியிட்டு, சபறினா கணேசபவன் என்ற ஈழத் தமிழ் பெண், Miss Elegante France அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

   

 

miss-france-131216-seithy%20(1).jpg

 

 

miss-france-131216-seithy%20(2).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=171647&category=TamilNews&language=tamil

Categories: merge-rss