20ஆவது அகவையில் யாழிணையம்

உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

முற்றத்து மல்லிகை

மீண்டும் நாவல் முயற்ச்சியில் - வ.ஐ.ச.ஜெயபாலன்

21 hours 9 minutes ago

MY NOVEL "KALSSUVADU"
”காலச்சுவடு” நாவல்
.
பாதியில் கைவிடப்பட்ட எனது காலச்சுவடு நாவல் பிரதியை நீண்டகாலத்தின் பின்னர் 
மீண்டும் தூசி தட்டி எடுத்து திருத்தி எழுத ஆரம்பித்திருக்கிறேன். அந்த நாவலுக்கு முகவுரையாக நான் எழுதியவற்றை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
.
காலச்சுவடு
வ.ஐ.ச.ஜெயபாலன்
,

காட்டை வகிடு பிரிக்கும்
காலச் சுவடான 
ஒற்றையடிப் பாதை
- இளவேனிலும் உளவனும் 1970
.

நூற்றாண்டுகாலங்களாக நம் மூதாதையர்கள் வழி வழியாகச் சொல்லி வந்த போதைதரும் கதைகளால் என் மனசு நொதிக்கும் செந் திராட்சை மது ஜாடியாக நிரம்பி வழிகிறது. என் முன்னோர்களாலும் சகபாடிகளாலும் பல லட்சம் தடவைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட அந்தக்கதைகளை என் பங்கிற்கான கற்பனைகளுடன் பல்லாயிரம் தடவைகள் என் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பிள்ளைகளுக்கும் சொல்லி இருக்கிறேன். அவர்கள் அந்தக் கதைகளை புத்தகமாக எழுதிவை எனச் சொல்வார்கள். சிலர் எழுது நாங்களே பதிப்பிக்கிறோம் என்று முன்வந்தார்கள். அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது என் நிலமை. 
.
நான்தான் கதை சொல்கிறேன் என்கிற பெயரில் அன்றாடம் சந்திக்கிற ஆண் பெண்களைக் கூட்டி வைத்துக்கொண்டு கதைகள் பேசிக்களிப்பதே வாழ்வாகக் கொண்டவனாச்சே. நினைவுவாக மீந்த கதைகள் என்கிற என்கிற என் பரம்பரைகளின் மதுச்சாடியைத் திறந்து சுற்றி இருபோருக்கு வார்த்து வார்த்துக் கொடுத்து நானும் அருந்திக் களிக்கிற பேரின்பப் போதைக்கு அடிமையாகி விட்டேனே. அந்த வடிவம் வேறு அல்லவா?.. 
ஊர் ஊராக கதை சொல்கிற எங்களுக்கு தனித்திருந்து எங்கோ இருக்கிற வாசகர்களுக்காக கதை எழுழுதுகிற போதையும் மனோபாவமும் வடிவமும் இலகுவில் வசப்பட்டுவிடாது. நிகழ் காலத்தைவிடுங்கள். நாங்கள் முடிந்துபோனபின்னர் எதிர்காலத்தில் நம்பரம்பரைகளின் கதைகளைத் தேடும் சந்ததிகளுக்காக எனக்கு சொல்லப்பட்டதும் நான் கண்டதுமான கதைகளை எழுதிவைக்கும் வெறியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இருபது நாவல்களாவது பாதியில் கைவிடப்பட்டு குற்றுயிரும் குறை உயிருமாக கிடக்கிறது. காலச்சுவடும் அப்படிக் குற்றுயிராகக் கிடைக்கிற எங்கள் பரம்பரைகளின் கதைகள்தான். 
.
1820பதுகளில் யாழ்பாணத்தில் தீவிரப்பட்ட பெண்கல்விக்கான அமரிக்கன் மிசனறிகளின் போராட்டத்தைப் பற்றிய கதைகளை அக்கதைகள் ஆரம்பித்து சரியாக நூறு வருடங்களின் பின்னர் 
2020ல் என் தோழி ஒருத்தியிடம் சொன்னேன். 1820ல் உருவான படித்த யாழ்பாணத்துப் பெண்களின் கதைகளில்தான் ஆரம்பித்தேன். அந்த தோழியை ஈர்த்துவைத்திருந்த அந்தக் கதைகளை முடித்துவிட மனசு விரும்பவில்லை. அப்படியே முதலாம் உலகப்போர் இரண்டாம் உலகப்போர்காத்தில் யாழ்ப்பாணப் பெண்களின் கதைகள் அவர்களது மலேசியப் புலப்பெயர்வுக் கதைகள் என பல சந்திப்புகளை கதைகள் வளர்ந்தன. அதன் பின்னான சந்திப்புகளை தமிழர் எழுச்சிப் போராட்டத்தில் பங்காளிகளான பெண்களின் கதைகள் மேற்குலகிற்க்குப் புலபெயர்ந்த பெண்களின் கதைகள் நிறைவு செய்தன. 
,
பலநாட்க்கள் தொடர்ந்த எங்கள் சந்திப்புகளில் 1820பதுகளில் அமரிக்க மிசனைச் சேர்ந்த பெண்கள் போராடி மூட்டிய கல்வி வெளிச்சத்தில் உறைபனி உருகி ஆறாக பெருகியதுபோல மெல்ல மெல்ல அசைக்கபட்ட யாழ்ப்பாணத்துப் பெண்களின் வரலாற்றுக்கதைகள் மகத்தான போராட்டக் கதைகளாகும். அமரிக்க மிசன் பெண்களால் பற்றவைக்கபட்ட இந்த தீ பல சாதிய வர்க்க எல்லைகளைத்தாண்டி முஸ்லிம் பெண்களையும் எட்டிய சொல்லபடவேண்டிய கதைகளுக்கு கணக்கே இல்லை..

ஈழத் தமிழ் பெண்கள் பற்றிய கதைகளில் லியித்துப்போன அந்த தோழியியோ நான் அவற்றை ஒரு நாவலாக தொகுக்க வேண்டுமென வற்புறுத்தினார். கிடைத்த இரண்டு பென்பிள்ளைகளோடு 1824ல் திருமதி கர்ரியத் வின்ஸ்லோ உடுவில் முதலாவது பெண்கள் பாடசாலையை அமைத்தார். அந்த இரண்டு மாண விகளில் ஒருத்தியின் புனைவுக் கதையாக ஆரம்பித்து 2000 ஆண்டுவரைக்கும் ஏழு தலைமுறைகள் தொடரும் ஒரு நாவலை எழுதி முடிப்பதாக நான் வாக்களித்தேன். 
.
அந்த தோழியும் என்னை எப்படியும் எழுத வைத்து விடுகிறதாகக் கங்கணம் கட்டிக்கொண்டு விழுந்து விழுந்து உதவிகள் செய்தார். நிறைந்த தேடல்களோடு எழுத ஆரம்பித்த அந்தக்கதை 400 பக்கங்களோடு நின்று போயிற்று. சிலவருடங்கள் எழுது எழுது என்ற அந்த தோழி “நீ உருப்பட மாட்டாய். 
எதையும் முழுமையாய் எழுதி முடிக்கமாட்டாய்” என நொந்து உதறிவிட்டுப் போய்விட்டார். 
.
நான் எழுத முடியாமல் போனதற்கு மூன்று பெரும் விரக்திகள் காரணமாயிற்று என தோன்றுகிறது. சிறுவயசில் இருந்தே கதை கேட்பதிலும் ஊரைக்கூட்டிவைத்துக் கதை சொல்வதிலும் ஆற்றல் இருந்தது. அந்த வடிவமும் எனக்கு வாய்த்திருந்தது. தனிய ஒரிடத்தில் சிறிது உட்கார்ந்திருந்து முகம் தெரியாத வாசகர்களுக்காக கவிதைகளைக் காலத்தில் எழுத முடிந்தது. அதற்கான பொறுமையும் இருந்தது. . அது எனக்கு இனிப்பாகவும் இருந்தது. ஆனால் நெடுங்காலம் தொடர்ந்து உட்கார்ந்து நாவல் எழுதும் பொறுமை ஒருபோதும் என்னிடம் இருக்கவில்லை. கதைகளை எழுதுவதில் உள்ள போதையும் எனக்குப் பிடிபடவில்லை. இது ஒரு காரணமென்று நினைக்கிறேன். இரண்டாவது முக்கிய காரணம் போராட்டம் மெல்ல மெல்ல தோல்விப்பதையில் வழுக்கிச் சென்றமையாகும். மூன்றாவதாக என்னை முறித்துபோட்ட காரணம் 1970ல் இளவேனிலும் உளவனும் என்ற எனது கவிதைக்காக நான் உருவாக்கிய காலச்சுவடு என்ற படிமம் சிலை திருட்டுப் பாணியில் திருடப்பட்டதுதான். இதனால் காலச்சுவடு என நான் எழுதியபோதெல்லாம் நான் திருடனாக பார்க்கப்பட்டேன். அதுதான் கொடுமை. இதுபற்றி விரிவாக சொல்லவேண்டும்.
.
1983 இனக் கலவரத்துக்கு ஒரு மாதம் முன்னதாக என் ஜப்பானிய தோழியுடன் நாகர்கோவிலில் அந்த எழுத்துலக ஜாம்பவானை சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் இலங்கையில் பிரசுரிக்கப்பட்ட எனது சில கவிதைகளின் பிரதிகளை அவரிடம் கொடுத்தேன். முதல் வாசிப்பிலேயே எனது இளவேனிலும் உளவனும் கவிதை அவருக்கு பிடித்துப்போகிறது. காலச்சுவடு அற்புதமான படிமம் புதிய புனைவு என என்னை வெகுவாகப் பாராட்டிக் கொண்டாடினார். கால் நூற்றாண்டுகளின்பின்னர் எனது கவிதைகளையும் எழுத்துகளையும் காலச்சுவடு என்கிற தலைப்பில் தொகுக்க இருப்பதாக சொன்னேன். பின்னர் நான் இலங்கைக்கு சென்றுவிட்டேன். அதன்பின்னர் போராளி அமைப்புகளோடு சென்னைக்கு வந்தபோது அவரை மீண்டும் சந்தித்தேன். அப்போதும் காலசுவடு படிமம் பற்றி பேசினார். இலக்கிய சஞ்சிகைக்கு பொருத்தமான பெயர் என்று சொன்னார். அதற்க்கு நான் “கவிஞர்கள் சொற்களை புனைவது தமிழுக்காகவே. சிலர் தங்கள் பெயரில் பதிவு செய்து தனியுடமை ஆக்குவதற்கல்ல என சொன்னேன். அத்தோடு கால்நூற்றாண்டுகளின் பின்னர் என் கவிதைகளையும் கதைகலையும் கட்டுரைகளையும் காலச்சுவடு என்கிற பெயரில் தொகுக்கவுள்ளதாக சொல்லிவைத்தேன். 1987 அக்டோபரில் புலிகள் இந்திய இரானுவத்துடன் மோதலை ஆரம்பிக்கிற வரைக்கும் இந்தியாவில் இலங்கை தமிழர்களுக்குப் பாதுகாப்பான சூழல் இருந்தது. அதுவரை எனக்கும் சிக்கல் இருக்கவில்லை.

1987 - 1997 காலக்கட்டங்களில் மோதல் தீவிரபட்டு ஈழத் தமிழர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் அச்சுறுத்தப்பட்டிருந்த நான் நீதிகேட்க்க முடியாத காலத்தைப் பயன்படுத்தி அவர்கள் ”காலச்சுவடு” என்றபடிமத்தை திருடி தங்கள் பெயரில் தனி உடமையாகப் பதிவுசெய்து வியாபாரத்தையும் ஆரம்பித்துவிட்டனர். அச்சமான சூழலிலும் அவரது நண்பர்களூடாக என் எதிர்ப்பை தெரிவித்தேன். நீதிமன்றம் செல்லப்போவதாக நான் பேசத் தொடங்கிய காலங்களில் ” உன்னை இந்தியாவில் கால்வைக்க முடியாமல் பண்ணிவிடுவார்கள்.” என வாரிசின் ஆட்களால் எச்சரிக்கப்பட்டேன். 
இலஙகைத் தமிழர் இந்திய உறவு மோசமாக சீர்குலைந்திருந்த அந்த நாட்களில் எனக்கு போர்நிறுத்தத்துகான இராசதந்திரப் பணிகளே முக்கியமாக இருந்தது. அதனால் நான் மவுனமாக நேர்ந்தது. 
.
சில வருடங்களின் பின்னர் அந்த ஜாம்பவானுக்காக சாகித்திய அக்கடமி சென்னை புக் பொயிண்டில் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தது. முன்னரே சேதி சொல்லிவிட்டு அந்த விழாவில் நியாயம் கேட்க்க நான் சென்றேன். நுழையும் என்னைக் கண்டதுமே “காலச்சுவடு இவர் உருவாக்கிய படிமம்” எனக்கூறி சூழலின் நெருப்பை அவர் அணைத்தார். அன்று மாலை தோழி ஒருவர் வீட்டில்வைத்து தன் வாரிசின் தவறு என்று வருத்தம் தெரிவித்து சஞ்சிகையில் என் பேட்டியை வெளியிடுவதோடு நிகழ்ந்த தவறையும் செம்மைப் படுத்துவதாக வாக்குறுதி தந்தார். அந்த வாக்குறுதியும் காப்பாற்றப் படவில்லை. 
.
சோகம் இதுதான். பின்னர் வேறொரு கவிதையில் காலச்சுவடு என எழுதியபோது வாசித்த இளையவர்கள் “என்ன ஜெயபாலன் உங்களுக்குமா சொற்பஞ்சமா வேறொருவரின் படைப்பை ஏன் திருடுகிறீங்க” என கேட்டார்கள்”. இன்றுவரை கோலோச்சும் கயமையை நன்கு அறிந்திருந்தும் அறம் பற்றி உரத்துப்பேசும் தமிழக எழுத்துலக நண்பர்கள் யாரும் இதுவரை எனக்காக வாய்திறந்ததில்லை. 
.
சில வருடங்களின் முன்னம் எனது கவிதை தொகுப்பை ”காலச்சுவடு” என்கிற தலைப்பில் வெளியிட விரும்பினேன். பதிப்பக நண்பர் அது இன்னொருவரின் சொல் எனக்கூறி எனது விருப்பத்தை நிராகரித்தனர். இதனால் வேறு பெயரில் என் தொகுதியை போட நேர்ந்தது. எனக்கு இதுவரைக்கும் மாரடைப்பு வராத குறைதான். இந்த விரக்திதான் என் எழுத்தார்வத்தை முடக்கும் காலக் கொடுமையாய் இருக்கு. 
.
என்னை எழுது எழுது என்ற தோழ தோழியர்கள் எல்லோரும் சலித்து ஒதுங்கியபிறகு இப்ப முடிவுறாத என் நாவல்களில் ஒன்றான கலச் சுவட்டை மீண்டும் தூசிதட்டி எடுத்து எழுத ஆரம்பித்திருக்கிறேன். இப்ப எழுதீரரோ எழுதீரோ என்று உக்குவிப்பார் யாருமில்லை. ஆனாலும் 1820ல் யாழ்பாணத்து உடுவிலில் ஆரம்பித்து 2000ம் ஆண்டு கனடாவிம் குடியும் 180 வருடத்து மாறிவரும் பெண்களின் தலைமுறைகளை நான் கேட்ட வாழ்ந்த காலங்களின் சுவடாக மீண்டும் எழுத ஆரம்பிதிருக்கிறேன். எப்படியும் என் காலம் முடியுமுன் காலச்சுவடு எழுதி முடியும். எத்தனை அச்சுறுத்தல்கள் தடைகள் வந்தாலும் எனது நாவல் “காலச்சுவடு” என்னும் தலைப்பில் வெளியாகும்.

எங்கே அவன் தேடுதே சனம்

2 weeks 2 days ago

எங்கே அவன் தேடுதே சனம்

 அவரை எல்லோரும் நாட்டாமை என்றுதான் அழைப்பார்கள். மற்றவர்கள் அவரை நாட்டாமை என்று அழைப்பதில் அவருக்கு நிறைந்த மகிழ்ச்சி. கலியாண வீடா? சாமத்தியச் சடங்கா? பிறந்தநாள் விழாவா? இல்லை செத்த வீடா? எங்கள் நகரத்தில் தமிழர்களுடைய எந்த நிகழ்வானாலும் நாட்டாமையே பிரதம விருந்தினர்.

 புலம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்த காலத்தில் வேலை செய்வதற்கான அனுமதி எங்களுக்குக் கிடையாது. அப்படியான நிலையிலேயே நாட்டாமை, பூ விற்றுக் காசு சேர்த்தவர். பூ விற்பவர் என்பதால் அவரது பெயரோடு ‘பூ’ என்பது  அடைமொழியாயிற்று. அதாவது ‘பூ சபா’ என்றாயிற்று. சேர்த்த பணம், அதனால் வந்த அங்கீகாரம் அதோடு இணைந்த ஆணவம் எல்லாம் சேர்ந்ததால் காலம் செல்ல அவர் நாட்டாமை ஆகிப்போனார்.

 அதெப்படி பூ வித்து காசு சேர்க்கலாம் என்று நினைப்பீர்கள். சொல்லி விடுகிறேன். இந்தப் பூ விற்பனையை முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் புலம் பெயர்ந்து வந்த பாகிஸ்தானியர்கள். அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டவர்கள் நம்மவர்கள். மாலையில் ஆறு மணிக்குத் தொடங்கும் பூ விற்பனை நள்ளிரவில் முடிவடையும். ரோஜாப் பூக்களோடு ரெஸ்ரோறண்ட் உரிமையாளரிடம் போய் உள்ளே போக அனுமதி பெற வேண்டும். எல்லா ரெஸ்ரோறண்ட் உரிமையாளர்களும் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள் என்றில்லை. சில உரிமையாளர்கள் “இந்தப் பக்கம் வரக்கூடாது“ என்று துரத்தியும் விடுவார்கள். 

 ரெஸ்ரோறண்ட்டில்  சோடியாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருப்பவர்களை அணுகி, முகத்தைப்  பரிதாபமாக வைத்துக் கொண்டு அதே நேரம் சிறு புன்னகையை உதட்டில் தவள விட்டபடி அவர்களிடம் பூக்களை நீட்ட வேண்டும். அப்படி பூக்களை நீட்டும் போது  „Gruss  Gott“  (கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்) என்று அன்போடு சொல்லவும் வேண்டும். உதட்டின் சிரிப்பிலும், உதிரும் வார்த்தையிலும், நிற்கும் பரிதாப நிலை கண்டும் உணவருந்திக் கொண்டிருக்கும் ஆண் பூவை வாங்கிக் கொண்டால் காசு பார்க்கலாம். பிறகு அந்தப் பூ ஆண் இடம் இருந்து பூவைக்கு கைமாறும். ஆணின் மனது மகிழ்வாக இருந்தால் அல்லது பெண்ணுக்கு விலாசம் காட்டும்’ மூட்’டில் அவன்  இருந்தால் பூவுக்கு நோட்டாக பணம் வரும். அப்படியில்லாது அவன் மனது ஏனோதானோ என்றிருந்தால் அதிகபட்சம் இரண்டு மார்க்குகள்தான் ஒரு பூவுக்கான சில்லறையாகக்  கிடைக்கும்.

 பூக்களை மொத்தமாக கொள்வனவு செய்தால், ஒரு பூவின் விலை 25 பெனிக். அதையே பூந்தோட்டத்தில் போய் நேரடியாகப் பறித்துக் கொண்டால் 10 பெனிக். பாகிஸ்தானியர்கள் மொத்தமாக கொள்வனவு செய்தார்கள். நம்மவர்கள் ஒருபடி மேலே போய் தோட்டத்திலேயே பறித்துக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் நாட்டாமை, பூக்களுக்கு ஏஜென்ட் ஆகி, தனக்கு தொழில் கற்றுத்தந்த பாகிஸ்தானியர்களுக்கும் மற்றவர்களுக்கும்  விநியோகம் செய்ய ஆரம்பித்து விட்டார். பூ வியாபாரத்தில் அவர் பல வியாபார உத்திகளைக் கற்றுக் கொண்டார்.

 992_C278_F-5_E6_A-46_A3-81_EC-_B074_D2_B

அங்கும் இங்கும் அலையாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே காசு பார்க்க முடிந்ததால் பணத்தை மேலும் பெருக்க சீட்டுப் பிடிக்க ஆரம்பித்து பிறகு வட்டிக்கு பணம் கொடுத்து வருவாயைப் பெருக்கி தன் உடலையும் பெருப்பித்துக் கொண்டார்.

 நாங்களும் சாதாரணமானவர்கள் கிடையாது. புத்தக வெளியீட்டு விழா என்றால் முதலில் நாங்கள் போய்ப் பார்ப்பது நாட்டாமையைத்தான். மேடையில் அவரது பெயரை அறிவித்து, முதல் பிரதியை அவரிடம் நீட்டினால் 500யூரோவை தட்டில் வைத்து விட்டு புத்தகத்தை எடுத்து, வஞ்சகமில்லாமல் போட்டோவுக்கும் சிரித்து, வாழ்த்தி விட்டும் போவார். ஆனால் 200 பேருக்கு குறைவான பார்வையாளர்கள் வரும் மேடைகளுக்கு அவர் வர விரும்புவதில்லை.

 அந்த நாட்டாமையைத்தான் கொஞ்சக்காலமாக நகரத்தில் காணக் கிடைக்கவில்லை. விசாரித்ததில் கிடைத்தது இதுதான்,

 சமீபத்தில் நாட்டில் இருந்து  புலம் பெயர்ந்து வந்த புதியவர்களுக்கு நாட்டாமைதான் எல்லாமே. தனக்குத் தெரிந்வர்கள் மூலம் அவர்களுக்கு வேலை எடுத்துக் கொடுப்பபது “காசை வீணாக்காதீங்களடா” என்று  அறிவுரை சொல்லி அவர்களை தன்னிடம் சீட்டுப் போட வைப்பது என்று அவரது பொதுநலம் ஏராளம். வந்த, வாங்கிய கடன்களை திருப்பிக் கொடுக்க அவர்களில் யாராவது சீட்டு எடுக்க முற்பட்டால்,  “உனக்கென்ன விசரே? இப்ப கனக்க கழிவு போகுது. கடைசித் துண்டு வரக்கை பாக்கலாம். இப்ப உனக்கு எவ்வளவு வேணும் சொல்லு. நான் தாறன்” என்று பணத்தைக் கொடுத்து பிறகு அதற்கு வட்டியும்  வாங்கிக் கொள்வார். 

 ஒரு தடவை, புதிதாக வந்த ரவி என்ற நபரின் மனைவிக்கு அடி வயிற்றில் இடைவிடாத நோ இருந்தது. அவர்களின் குடும்ப மருத்துவர், அவர்களை gynecology ஐ போய் பார்க்கும் படியும், யேர்மனிய மொழி தெரிந்த ஒருவரை கூட்டிக் கொண்டு போவது நல்லது எனவும் சொல்லி இருக்கிறார். தம்பதிகள் நேராக ஆபத்தாண்டவர் நாட்டாமையைப் போய்ப் பார்த்தார்கள்.

 “இதென்ன பெரிய விசயமே? ரெலிபோனிலையே விசயத்தைச் சொல்லி இருக்கலாம்தானே. இதைக் கேக்கிறதுக்கு மினக்கெட்டு ‘ட்ராம்’ எடுத்து வந்தனீங்களே. எப்ப எண்டு சொல்லுங்கோ நான் வாறன்” நாட்டாமை உரிமை எடுத்துச் சொன்னார்.

 அந்த நாளும் வந்தது. ரவி தனது மனைவியுடன் மருத்துவரின் நிலையத்துக்கு நேரத்துக்குப் போய் காத்திருந்தான். சொன்ன நேரத்துக்கு நிமிடம் பிந்தாமல் நாட்டாமை வந்து சேர்ந்தார். 

 “மூன்று பேரும் ஒண்டா உள்ளை போறது நல்லா இருக்காது. நீங்கள் கூட்டிக் கொண்டு போங்கோ” ரவி ஒதுங்கிக் கொண்டான்.

 மருத்துவரிடம் உள்ளே போன நாட்டாமையும், அந்தப் பெண்ணும் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார்கள்.

 காத்திருந்த ரவியிடம் “பிரச்சினை ஒண்டும் இல்லையடாப்பா. மருந்து விட்டிருக்கினம். பிள்ளை விளக்கமாகச் சொல்லுவாள்”  சொல்லிய நாட்டாமை விடைபெற்றுக் கொண்டார். ரவி மனைவியின் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் பொலிவிழந்திருந்தது.

 வீட்டுக்குப் போன பிறகுதான் நடந்தது என்னவென்பதை  ரவி அறிந்து கொண்டான். அவளது அடிவயிற்றில் நோ இருந்ததால் அவளை முழுமையாகச் சோதனை செய்ய வேண்டி இருந்தது. அதற்காக அவளை ஒரு அறைக்குள்  அழைத்துச் சென்று உடைகளைக் களைந்து பரிசோதித்திருக்கிறார்கள். நாட்டாமை அந்த அறைக்குள் போக வேண்டிய அவசியமில்லை. அவளின் கணவன்தான் நாட்டாமை என்று நினைத்து அவர்களும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாட்டாமை கண்கொட்டாமல் எல்லாவற்றையும் கண்டு கொண்டிருந்தார்.

மனைவி சொல்லச் சொல்ல ரவிக்கு தலைக்கு ஏறி விட்டது. மனைவியின் சகோதரர்களுக்கும், தனது சகோதரர்களுக்கும் போன் எடுத்து “நாட்டாமை இப்பிடிச் செய்து போட்டான்” என அழுதான்.

 வீடு புகுந்து அடித்தார்கள் என்று செய்திகள் வாசித்திருப்போமே அதுதான் அன்று நாட்டாமைக்கும் நடந்தது. விழுந்த அடி உதைகளை விட அவரது மனைவி உச்சரித்த வார்த்தைகள் மிகப் பலமான தாக்குதலாக அவருக்கு இருந்தது. வெளிக்காயங்களை விட உள் காயங்கள் அவருக்கு அதிகம். வைத்தியசாலைக்குப் போனால் கேள்விகள் கேட்டு மாட்டி பொலீஸ்வரை போய்விடலாம் என்ற பயத்தில் குடும்ப வைத்தியரிடம் போனார்.

 படி ஏறும் போது தடுக்கி விழுந்து விட்டேன் என்று வைத்தியரிடம் நாட்டாமை பொய் சொன்னார்

 “என்ன ஒவ்வொரு படியிலும் துள்ளித் துள்ளி விழுந்திருக்கிறீங்கள் போலை”  என்று வைத்தியர் கேட்டது காயங்களுக்குப் போட்ட மருந்தின் எரிச்சலைவிட  நாட்டாமைக்கு அதிகமாக இருந்தது.

 பிரபலமானவர்கள் சிரித்தாலே பெரிய செய்தியாக்கும் நாங்கள் நாட்டாமை விடயத்தை சாதாரணமாக விட்டுவிடுவோமா என்ன? நாட்டாமையின் நடமாட்டம் வீட்டுக்குள்ளேயே மட்டுப்படுத்தப் பட்டுவிட்டது.

 வெள்ளிக்கிழமைகளில் தங்கம் மின்ன கோயிலில் நிற்கும் நாட்டாமையைக் காணாமல் ஐயருக்கு அர்ச்சனை உச்சரிக்க நாக்கு ஒத்து வரவில்லை. 

 சனிக்கிழமைகளில்  சாமத்திய சடங்குகளில், பிறந்த நாட்களில் கூட்டமாக நின்று கதைத்துக் கொண்டிருக்கும் எங்களவர்களின் மத்தியில் நடுநாயகமாக இருக்கும் நாட்டாமையைக் காணக் கிடைக்கவில்லை.

 Audi காரில் வலம் வரும் நாட்டாமை தம்பதிகளின் தரிசனத்தை நகர்வீதி இழந்திருந்தது.

 இந்தச் சோக நிலைகளுக்கு  நடுவே சீட்டுக்கு காசு கட்டுபவர்கள்தான் முதலில் அந்தச் செய்தியை அவிட்டு விட்டார்கள். அது “நாட்டாமையைக் காணவில்லை” என்ற செய்தி.

 மாதத்தில் கடைசி சனிக்கிழமைதான் சீட்டுக் கூறும் நாள்.  இந்தமுறை நாட்டாமை ஒருத்தருக்கும் முன்அறிவித்தல் தரவில்லை. சீட்டுக் கூறூம் நாள் போய்ப் பார்த்தால், நாட்டாமை வீட்டில் ஒருத்தரும் இல்லை.

 நாட்டாமை குடும்பமாக லண்டன் போனாரா?  பரிஸ் போனாரா? இல்லை யேர்மனியிலேயே வேறொரு நகரத்துக்கு இடம் மாறிவிட்டாரா? தெரியவில்லை. 

 சீட்டை ஏற்கனவே எடுத்தவர்களும், வட்டிக்குப் பணம் வாங்கியவர்களும் நிறைந்த மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். “கழிவு நல்லாப் போகோணும்” என்று  சீட்டின் கழிவை ஏற்றி, கட்டுக்காசை வெகுவாகக் குறைத்து கடைசிச் சீட்டெடுக்க காத்து நின்ற சிலர் மட்டும் “எங்கே அவன் தேடுதே சனம்” என்று கவலை கொண்டிருக்கிறார்கள்.

 

கவி அருணாசலம்

07.04.2018

 

யார் சொல்லுவார்?

2 weeks 6 days ago

யார் சொல்லுவார்?

சமீபத்தில்(25.03.2018) யாழின் கருத்துக்களத்தில் நவீனன் தரவிட்டிருந்த இணைப்பின் தலையங்கம் ஒன்று, பழைய நினைவொன்றை என்னுள் மீட்டிப்பார்க்க வைத்தது. “பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்” என்பதே அந்தத் தலையங்கம்.

 83, 84 ஆண்டு காலங்களே அதிகமான தமிழர்கள் யேர்மனிக்கு புலம் பெயர்ந்த காலங்களாக இருந்ததன. ஈழத் தமிழர்களுக்கு வடக்குத்தான் அதிகம் பிடிக்குமோ என்னவோ, பல ஈழத்தமிழர்கள் யேர்மனியின் வட திசை சார்ந்த மாநிலமான  Nordrhein-Westfalen இலேயே அப்பொழுது தங்கிக் கொண்டார்கள்.

 புலம் பெயர்ந்து வந்த போதும் தாங்கள் சார்ந்த போராட்டக்குழுக்களை யேர்மனியில் காலூன்ற வைப்பதற்கு அவற்றின் அபிமானிகள் அன்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்கள். இதில் தெற்கு யேர்மனியில் விடுதலைப்புலிகளின் அபிமானிகள் சிலர் அடிதடிகளில் இறங்க, அவர்கள் யேர்மனிய காவல்துறையினரால் கைதாகிப் போனார்கள். அதில் சிலர் சிறைக்கும் போய் வந்தார்கள். அதன் பின்னர் இயக்கங்களின் பெயரால் புலம் பெயர் தமிழர்களுக்கு மிரட்டல்கள், பிரச்சினைகள் ஏதாவது வந்தால் தங்களுக்குத் தகவல் தரும்படி யேர்மனிய காவல்துறை ஒரு மஞ்சள் துண்டுப்பிரசுரம் ஒன்றை தமிழில் அச்சடித்து புலம்பெயர் தமிழர்களின் வீடுகளுக்கு அனுப்பியும் வைத்திருந்தது. இந்த நிகழ்வு யேர்மனியில் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு அன்று பெரும் பின்னடைவாகிப் போயிருந்தது.

 இந்த நிலமையைச் சீர்செய்வதற்காக, பழ.நெடுமாறனும், தோழர் மணியரசனும் தொண்ணூறில் யேர்மனிக்கு வந்தார்கள்(அல்லது அனுப்பி வைக்கப்பட்டார்கள்). இவர்களது வருகையின் போது யேர்மனியில் தோற்றம் பெற்றதுதான் உலகத் தமிழர் இயக்கம். இந்த உலகத்தமிழர் இயக்கம், ஈழப்போராட்டத்தை சற்று ஓரமாக வைத்துவிட்டு புலம் பெயர்ந்தோருக்கான தமிழ்க்கல்வி, தாயகத் தமிழர்களுக்கான புனர்வாழ்வு இரண்டையும் முன்னிலைப் படுத்தியது. இந்த இரண்டில் உலகத் தமிழர் இயக்கத்தின் (தமிழாலயம்)  நிர்வாகியாக இரா.நாகலிங்கம் மாஸ்ரரும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு பொறுப்பாளராக உ.பிரபாகரனும் தெரிவாகியிருந்தார்கள். தமிழாலயமும், தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் புலம் பெயர் தமிழர் மத்தியில் தங்களை வெளிக்காட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கின. பொங்கல் விழா, வாணிவிழா என தமிழாலயங்களும், இன்னிசை இரவு என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் தங்களுக்குள் வரையறுத்துக் கொண்டு யேர்மனியின் முக்கிய நகரங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தன. 

 இவ்வாறான கலை நிகழ்ச்சிகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் அவர்களது உறவுகளுக்கும் மட்டுமே மேடைகள் தரப்பட்டன. அப்படியான ஆதரவாளர் ஒருவரின் மகள்தான் சுஜிதா. அப்பொழுது நடந்த அநேக கலை நிகழ்ச்சிகளில் சுஜிதாவின் நடனங்கள் மேடைகளை அழகுபடுத்தப்படுத்தின.

 

E74772_C8-7048-4_D6_A-91_FF-040_F0_F4341

Nordrhein-Westfalen மாநிலத்தின்  Linnich நகரில் உள்ள யேர்மனிய பாடசாலையில் சுஜிதா படித்துக் கொண்டிருந்தாள். 26.08.1993 அன்று மாலை சுஜிதாவின் பெற்றோர் அவளது பாடசாலைக்குச் சென்று தங்களது மகள் “சுஜிதா இன்னும் வீட்டுக்குத் திரும்ப வரவில்லை?” என்று அறிவித்திருக்கிறார்கள். “அவள் இன்று பாடசாலைக்கே வரவேல்லையே” என்ற பதில்தான் பெற்றோருக்கு கிடைத்தது. அவளது பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையிடம் சென்று தங்கள் மகளை காணவில்லை என முறைப்பாடு செய்தார்கள். சிறார்களை காணவில்லை என்று முறைப்பாடு வந்தால், முதலில் அயலவர்கள், நண்பர்கள்,  உறவினர்களிடம் போய் விசாரியுங்கள் என்று காவல்துறை ஆலோசனை தரும். அத்துடன் தங்கள் தரப்பு விசாரணைகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள்.

 சுஜிதா காணாமல் போன காலகட்டத்திலே மேலும் இரண்டு சிறுமிகள் காணாமல் போயிருக்கிறார்கள். ஒன்று, Hessen நகரில் லெபனான் நாட்டைச் சேர்ந்த 12 வயதான அபீர் என்ற சிறுமி மாலை ஐந்து மணிக்கு கடைக்குச் சென்றவள் வீடு திரும்பவில்லை. மற்றது அபீர் வீட்டின் அயலில் வசித்த மரியானா என்ற ஒன்பது வயது பொஸ்னியா நாட்டைச் சேர்ந்த சிறுமி. இந்த இரண்டு சம்பவங்களையும் சுஜிதா காணாமல் போனதையும் ஒன்றிணைத்து இது வெளிநாட்டவர்களின் மீதான நாசிகளின் செயற்பாடுகள் என பேச்சு வேகமாகக் கிளம்பியது.

 ஒரு கிழமை கடந்தும் காணாமல் போன சுஜிதா வீட்டுக்குத் திரும்ப வரவேயில்லையென்று செப்ரெம்பர் 2ந் திகதி, சுஜிதாவின் பெற்றோர்கள் ஒரு சட்டத்தரணியை அணுகினார்கள்.

 சுஜிதா காணாமல் போய் பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு, 07.09.1993 அன்று Nordrhein-Westfalen மாநிலத்தில் உள்ள  Mindergangelt என்ற காட்டுப் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர் ஒருவர் காட்டின் நடுவே தீ எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு காவல்துறைக்கு அறிவித்திருக்கிறார். அங்கு எரிந்து கொண்டிருந்தது சுஜிதாவின் உடல் என்பதை காவல்துறை பின்னர் உறுதிப்படுத்தியது.

 13 வயதான சுஜிதாவின் மரணம் புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவளது இறுதி நிகழ்வில் பங்கு கொள்வதற்காக, கிடைத்த வாகனங்களில் ஏறி தூர இடங்களில் இருந்தெல்லாம் பயணம் செய்து  பல தமிழர்கள் வந்து கலந்து கொண்டார்கள். அப்பொழுது விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த லோரன்ஸ் திலகர் முன்னிலையில் நடந்த அவளது இறுதி நிகழ்வில் தங்கள் சொந்த மகளையே பறிகொடுத்தது போன்ற துயரத்தோடு இயக்க வேறுபாடுகள் இன்றி பல தமிழர்கள் பங்கு பற்றியிருந்தார்கள்.

 அரைகுறையாக எரிந்த சுஜிதாவின் உடலை தடவியல் நிபுணர்கள் ஆராய்ந்து, எரிப்பதற்கு சற்று முன்னர்தான் அதாவது செப்டம்பர் 7 ம் திகதிதான் அவள் இறந்திருக்கிறாள் என அறிக்கை தந்தார்கள்.

 போதிய நாட்கள் இருந்தும் காவல்துறையின் அலட்சியப் போக்கினால்தான் தங்களது மகளை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது என அவளது பெற்றோர்கள் காவல்துறை மீது குறை சொன்னார்கள்.

 தங்கள் மீது எந்தத் தவறும் கிடையாது என்றும், தாங்கள் மேற்கொண்ட விசாரணைகளில் சுஜிதாவுக்கு ஒரு ஆண் நண்பன் இருக்கிறான் என்பதும், அந்த நட்பை அவளது பெற்றோர் ஏற்கவில்லை என்பதும் தெரிய வந்தது. அத்துடன் இந்து முறைப்படி சடங்குகள் செய்து மட்குடம் உடைத்து, தீ மூட்டியே அவளது உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கொலைக்குப் பின்னர் கொலையாளி, தடயங்களை அழித்து தான் தப்பிக்கப் பார்ப்பானே தவிர கொலையாளியே கொலையுண்டவரின் உடலை எடுத்துப் போய் இறுதிச் சடங்குகள் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. கூட்டிக் கழித்துப் பார்த்தால், அவளது கொலைக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் அவளின் பெற்றோரே என காவல்துறை தாங்கள் சேகரித்த ஆதாரங்களோடு சொன்னது.

 இந்த வருடத்துடன் சுஜிதாவின் மரணம் நிகழ்ந்து இருபத்தைந்து வருடங்களாகின்றன. கொலையாளி யார்? யார்தான் சொல்லப் போகிறார்கள்?

கவி அருணாசலம்

03.04.2018

 

தங்கக் கூண்டு

3 weeks ago

                                                                                                                           தங்கக் கூண்டு

 

     என் பெயர் எழில். பருவப் பெண்களுக்கே உரிய வாழ்க்கை பற்றிய கனவுகள் எனக்கும் உண்டு - பிரத்தியேகமாக எனக்கென்றே பிரம்மனால் படைத்து அனுப்பப்பட்ட தலைவன் வெண்புரவியில் வந்து சேருவான் போன்ற அதீதமான கற்பனைகள் தவிர. இந்த மாதிரியான கற்பனைகள் தோன்றாததற்குக் காரணம் பாழாய்ப் போன(!) வாசிப்புப் பழக்கமும், என் தந்தையாரால் நேர்முகமாகவும் நூல் முகமாகவும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவாளர்களின் சிந்தனைகளும் என்றே நினைக்கிறேன்.

 

     என் விருப்பம் போல் அறிவியலில் ஆய்வு மாணவியானேன். என் விருப்பம் போல் ஏனைய பிறவும் வாசித்துத் தள்ளினேன். எழுத்து பற்றி என்னுள் எழுந்த வேட்கை என்னை சிறு பத்திரிக்கைகளில் எழுத வைத்தது. சான்றாண்மை மிக்க ஒரு சிலரின் கேண்மை இப்பூவுலகில் எனக்குக் கிடைத்த வரம். என் ஆரம்ப எழுத்துக்களை அவர்களிடம் வாசிக்க அளித்தேன். "அட ! உனக்கு எழுத்து நல்லாத்தான் வருது. உனக்கே உரிய அந்த அங்கத நடையுடன் நீ எழுத்துலகில் வீறு நடை போடலாம், வா !" என அவர்கள் பெரிய மனதுடன் வரவேற்புரை நல்கியது தேவர்கள் என் மீது சொரிந்த பூமாரி. அவர்கள் தூண்டுகோலாக நான் எழுதுகோல் ஆனேன். அவர்கள் ஆசியுடன் என் முதல் கட்டுரைத் தொகுப்பு புத்தகமாய் வெளிவந்த போது தரையிலிருந்து சிறிது எழுந்து காற்றில் மிதந்தது போன்ற உணர்வு. எழுத்துலகில் இன்னும் சரியாக காலே பதிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தடம் பதிக்க வேண்டும் என்ற கனவு உண்டு. இது நியாயமான கனவுதானே ! வெண்புரவிக் கனவு ஒன்றும் இல்லையே !

 

     வருடம் என்று ஒன்று உண்டு. வயது என்று ஒன்று உண்டு. காலாகாலத்தில் நடப்பவை நடக்க வேண்டும் என்று ஒன்று உண்டு. அம்மா, அப்பா, ஆச்சி, சித்தி, சித்தப்பா  எல்லோரும் எனக்கான அந்த வெண்புரவித் தலைவனைத் தேட ஆரம்பித்தார்கள். இக்காலத்தில் ஐவகை நிலங்களில் சென்றா தேட வேண்டும் ? இணையத்தில்தானே இணையைக் கண்டெடுக்க வேண்டும் ! கணினித் திரையில் குதிரைப் பந்தயத்தில் எத்தனையோ புரவிகள் ஓடின. நாங்கள் என்னதான் சுமாராயிருந்தாலும் எங்களுக்கும் கற்பனை வளங்களும் தெரிவுகளும் இருக்காதா என்ன !

 

     வீட்டுக்கே வந்து பெண்ணையோ பையனையோ பார்ப்பது இப்போதெல்லாம் கடைசிக் கட்டம்தான் என்றாலும், அருகாமையில் இருந்த காரணத்தால் ஒரு மாப்பிள்ளை வீட்டார் தயக்கத்துடன் அனுமதி கேட்டு நேரில் வந்தனர். இயற்கையின் விதியாக நானும் உயர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்திருந்தாலும், வந்தவர்கள் பெரும் வணிகச் சமூகத்தைச் சார்ந்த, பொருளாதாரத்தில் மிகவும் உயர் வகுப்பினர்; வேடிக்கையாக வியாபாரக் காந்தம் என்பார்களே, அக்காந்த சக்தி படைத்தவர்கள். ஆனால் அதற்கான பகட்டு எதுவுமின்றி எளிமையாகத்தான் பேசினார்கள், பழகினார்கள். இதையெல்லாம் பார்க்கும் போதுதான் மனித சமூகமும் நாகரிகமடைய முயல்கிறது என்ற ஐயம் ஏற்படுகிறது. அம்முயற்சி உண்மையானால் மகிழ்ச்சியே !

 

     பையனின் பெற்றோருக்கும் உற்றோருக்கும் பிடித்துப் போயிருக்க வேண்டும். அதனால்தான் அவர்களின் ஒரே நிபந்தனையான "பெண் வேலைக்குச் செல்லக் கூடாது" என்பதை வெளியிட்டனர். என் பக்கத்தில் யாரும் சரியென்று தலையை ஆட்டவில்லை. பார்த்துவிட்டுச் சென்றவர்கள் சுமார் பத்து நாட்கள் கழித்து, பையனும் பெண்ணும் பார்த்து பேசிக் கொள்ளலாமா எனக் கேட்டனர். "கண்டிப்பாக அவர்கள் பார்க்கத்தான் வேண்டும், பேசத்தான் வேண்டும். இருவரின் தலைக்கு மேலேயும் பல்பு எரிந்தால் மட்டுமே நாம் மேற்கொண்டு தொடர முடியும். நீங்கள் தாராளமாய் அழைத்து வரலாம்" என என் அப்பா - அம்மா பச்சைக் கொடி காட்டினார்கள். அந்த நாளும் வந்தது. முதன் முதலாக என்னைப் பார்க்க வந்த பையனுடன் பேசப் போகிறேன் என்ற திகிலோ, பரபரப்போ, பரவசமோ என்னிடம் இல்லை. என் வயதையொத்தவர்களை விட அறிவுலகில் வலம் வருகிறவர்களிடம் என் அப்பாவின் மூலமாக ஏற்பட்ட நட்பின் விளைவாக இருக்கலாம். ஆனாலும் பருவப் பெண்ணுக்கே உரிய அச்சம், மடம், நாணம் எதுவும் இல்லாமல் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். பையனின் நிழற்படத்தைப் பார்த்த போது என் தலைக்கு மேல் மங்கலாக எரிந்த பல்பு, நேரில் பார்த்த போது பிரகாசமாய் எரிந்தது.

 

     சற்றுத் தூரத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். அவரே தொடங்கினார் (என்னது ! 'பையன்' என்பதிலிருந்து மாறி 'அவர்' என்று ஆனது பல்பின் மகிமையோ!), "நீ வேலைக்குச் செல்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்களைப் போன்ற பெருவணிகச் சமூகத்தில் வழக்கமில்லை. மேலும் அம்மா-அப்பா விரும்பாத போது அவ்வழக்கத்தை ஏன் மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். நீ யோசித்துக் கொள். தற்போது உன் ஆய்வுப் படிப்பு முடிவடையும் வரை நீ தொடர்வதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை. மற்றபடி பொதுவான விஷயங்களில் நம் ஆர்வம், விருப்பம் எனப் பேசலாமே" என்றார். பேசினோம். நன்றாகப் பேசினோம். அவரது தோற்றம் மட்டுமல்ல, எளிமையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்று உறுத்தியது. வணிகச் சமூகத்தில் உள்ள உறவினர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன், "நாம் யாரோ ஒருவருக்குத் தலைவணங்கி வேலை பார்ப்பதை விட சுயதொழிலில் 'நானே வேலைக்காரன், நானே முதலாளி' என்றிருக்கலாமே!" அந்த உறவினரை அடுத்த முறை பார்க்கும் போது கேட்க வேண்டும், "நம் பெற்றோர்க்குத் தலை வணங்குவதும் அவர்களின் பொற்பாதங்களை நம் தலையில் தாங்குவதும் நாம் பெற்ற பேறு. ஆனால் உங்கள் நிறுவனத்துக்கு முதலாளிகளாய்ப் போன ஒரே காரணத்திற்காக உங்கள் பெற்றோர் முன் உங்கள் ஆசைகளைக் காலில் போட்டு மிதிக்கவில்லையா?  அவர்களின் விருப்பு வெறுப்பிற்கு முன் நீங்கள் தலை வணங்கவில்லையா? இதைத்தானே நிலவுடைமைச் சமூகத்தில் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த பிள்ளைகளும் செய்தார்கள்?"

 

     அதே சமயம் மாமனார் - மாமியார் என அனைவரும் சேர்ந்து வாழ்வதை விடுத்து தனித்தனியாய் வாழும் வாழ்க்கையிலும் எனக்கு விருப்பமில்லை. அனைத்து வகையான வாழ்க்கை முறைகளிலும் சிறந்த விஷயங்கள் அத்தனைக்கும் ஆசைப்படும் பேராசைக்காரி நான். கூடி வாழ வேண்டும். நியாயமான என் சுதந்திரமும் ஆசைகளும் பறிபோகக் கூடாது. இந்தச் சமூகத்திற்கானவள் நான் என்று ஊட்டி வளர்க்கப்பட்ட நான் நான்கு சுவற்றுக்குள் (எவ்வளவு பெரிய பங்களாவானாலும் நான்கு சுவர்கள்தானே !) எப்படி என்னைச் சுருக்கிக் கொள்வது ? என்னிடமுள்ள இன்னும் முழுமையடையாத சில திறமைகளுக்கே என்னைக் கொண்டாடும் சமூகத்தை விடுத்து வேறு எங்கோ எப்படிக் காணாமல் போவது? வெளியிற் சென்று வேலை பார்க்கும் எண்ணத்தை நான் உதறினாலும் கூட, அருகிலுள்ள என் தாய் வீடு செல்வதற்குக் கூட இவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டுமோ? அந்தப் பள்ளி அரங்கில் நடக்கும் நிகழ்வு ஒன்றிற்கு அ.மார்க்ஸ், சுப.உதயகுமார் ஆகியோர் பேச வருகிறார்கள். அங்கு செல்வதற்கும் இவர்கள் தயவை நாட வேண்டுமோ? மண வாழ்க்கை என்று ஒரு சாதாரண விஷயத்திற்காக என் அடையாளத்தையே நான் தொலைக்க வேண்டுமோ? மனித குல நீட்சிக்கு நான் ஒருத்தி பங்களிக்கா விட்டால் குடியா முழுகிப் போகும்? இவர்கள் தேடும் பெண் நான் இல்லையோ? இது போன்ற இனம் புரியாத பயம் அனைத்தும் என் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

 

     இனிய சம்பிரதாயங்களுடன் பெண் (பெண்ணும் ஆணும்) பார்க்கும் படலம் நிறைவு பெற்றது. பெண்ணுக்கும் பையனுக்கும் ஒருவரையொருவர் மிகவும் பிடித்திருக்கிறது. பெண் வீட்டாருக்கும் பிள்ளை வீட்டாருக்கும் மகிழ்ச்சியே. ஆனாலும் இத்திருமணம் நிகழும் வாய்ப்பு மிகவும் குறைவு. என்ன ஒரு நகைமுரண் ! அவர்களின் மரபு சார்ந்து ஒரு நிபந்தனையில் உறுதியாய் இருப்பதைத் தவிர மற்றபடி மாப்பிள்ளை வீட்டார் நல்ல குணமுடையவர்கள்; அவர்களின் மூத்த மருமகளைப் போல என்னையும் மகாராணி போல் வைத்துக் கொள்வார்கள் என்று எனக்கு மட்டுமல்ல, என் பெற்றோர் உற்றோர்க்கும் தோன்றியது. நாங்கள் கண்டவையும் கேட்டவையும் இதனை உறுதிப்படுத்தின. எனக்கு அவர்கள் வீட்டில் ஒரு தங்கக் கூண்டு தயாராய் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். கூண்டு கூண்டுதானே ! அதில் தங்கமென்ன ? இரும்பென்ன ?

 

     வீட்டு மாடியில் எனது அறையைத் திறந்து மின்விசிறியைச் சுழலவிட்டேன். அப்போது செல்பேசி ஒலிக்க அதில் கவனமானேன். ஜன்னல் கதவுகளை என் ஆச்சி அடைத்திருந்ததை உணரவில்லை. சாளரத்தில் கூடு கட்டி வாழ்ந்திருந்த குருவி கூட்டை விட்டு வந்து, வெளியே போக வழி தெரியாமல் சுற்றியது. செல்பேசியின் கவனத்தில் குருவியின் மீது மனம் செல்லவில்லை. திடீரென்று மின்விசிறியில் அடிபட்ட குருவி தொப்பென்று விழுந்தது. பஞ்சைப் போல அதன் இறகுகள் உதிர்ந்து நாலாபுறமும் பறந்தன. அந்தக் கோரக் காட்சியில் அதிர்ச்சியில் உறைந்து செல்பேசியைத் துண்டித்தேன். ஐயோ ! அந்த அறையை என்னுடன் பகிர்ந்த அந்தக் குருவி இனியில்லை. அதன் சிவந்த வால் என் கண்ணில் ஆடியது. செல்பேசி டவரால்தான் சிட்டுக்குருவி காணாமல் போனது என்பார்கள். இன்று என் செல்பேசியால் இந்த சிகப்பு வால் குருவி இவ்வுலகை விட்டுப் போனது என்ன ஓர் அவலக் குறியீடு? உயிர்த்தோழி சுதாவை (அதே நாசமாய்ப் போகிற) செல்பேசியில் அழைத்து அழுது தீர்த்தேன். "அழாதேமா ! நீ வேண்டுமென்றா சாகடித்தாய்? அதன் விதி அவ்வளவுதான்" எனத் தேற்ற முயன்றாள். அப்புறம்தான் அந்த மாப்பிள்ளை வந்து போன விஷயத்தைச் சொன்னேன். அதற்கும் பதில் தயாராய் வைத்திருந்தாள். "அது ஒரு பெரிய விஷயமில்லை. அதற்காக மறுக்காதே. திருமணத்திற்குப் பின் உன் இயல்பைப் பார்த்து அவர்களே மகிழ்ந்து மனம் மாறிவிடுவார்கள்". "இல்லை, சுதா ! நானும் ஏமாற வேண்டாம். அவர்களும் ஏமாற வேண்டாம். நானோ அவர்களோ ஏன் மாற வேண்டும்?" கனத்த இதயத்தோடு இதை நான் சொல்லும் போது என் மனக்கண்ணிலும் வெண்புரவி தோன்றியது. ஆனால் பின்னோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் குருவிக்கே வந்தேன், "நாளைக் காலையில் நான் விழிக்கும் போது அந்தக் குருவி இருக்காதே !" துக்கத்தில் தொண்டை அடைக்க பேச்சு வராது என்பார்கள். எனக்கு என் மூச்சான தமிழே வரவில்லை. "The sparrow has vacated its room" முனங்கினேன். மீண்டும் சுதா, "விடு எழில் ! வேறு குருவி வரும்............ வேறு மாப்பிள்ளையும் வருவான்". 

 

 

                                                                                                                                                                                                                                                                      - சுப.சோமசுந்தரம் 

செய்தது நீ தானா

3 weeks 1 day ago
செய்தது நீ தானா …-சிறுகதை
%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%
 

விடுமுறை நாளென்றாலே கொஞ்சநேரம் அதிகமாக நித்திரை கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படுத்தாலும் வேலை நேரத்துக்கே வழமை போல எழும்பிவிடுவேன். ஆனால் அவசரப்படாமல் ஆடியசைந்து ஒரு தேநீரை போட்டு எடுத்துக்கொண்டு போனில் யூ ரியுப் அப்பில்  இளையராஜாவின் இனிய கானங்களை எடுத்து அப்படியே விரலால் சுண்டிவிட  அது தொலைகாட்சி திரைக்கு தாவி அகன்ற திரையில் ஓடத் தொடங்கியதும் சோபாவில் சாய்ந்தபடி  கண்ணை மூடி காட்சியை பார்க்காமல் கேட்பதே ஒரு இன்பம். தமிழ் சினிமாவுக்கு இளையராஜா வராமல் போயிருந்தால் எனது தலைமுறையினருக்கு தேனிசைத் தென்றல் தேவா தான் தெய்வமாகியிருப்பர். வித்தியாசாகரும்,மரகத மணியும் மனதில் நின்றிருப்பார்கள். வாத்தியார் பிள்ளை மக்கு என்பதைப்போல இளையராஜா  வாரிசுகளால் இசையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லையென்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே டிக் , டிக், டிக் படத்திலிருந்து “ஓ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே” பாடல் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. கண்ணைத் திறந்து பார்க்காமலேயே மனத்திரையில் சவுக்குத் தோப்பில் கமலும் அவர் பின்னல் மாதவி நீச்சலுடையில்  ஓடிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் திடீரென எனக்கு அவனின் நினைவு மீண்டும்  மூளை மடிப்புக்களிலிருந்து சிரமப்பட்டு வெளி  வந்தது.

அவன் உருவம் கூட சிகரெட்டின் புகையிலிருந்து கிளம்பும்  வடிவங்களைப்போல மங்கலாக  நினைவில் உள்ளது. எண்பதுகளின் இறுதி நான் தாய்லாந்தில் புக்கெட் நகருக்கு அருகில் தங்கியிருந்த காலம். தங்கியிருந்தது வீடா, குடிசையா என்று பட்டிமன்றமே நடத்தலாம். கீழ் பாதி சீமெந்து. மேல் பாதி மரப்பலகைகள் பொருத்தப்பட்டுக் கூரைக்குத் தகரம் போடப்பட்ட ஒரேயொரு சிறிய அறை. அதற்கு தகரத்தாலான கதவு. முன்னால்  மூன்று பக்கமும் மூங்கில் பாய்களால் மறைக்கப்பட்ட காற்றோட்டமான சிறிய கூடம். இந்தக் குடிசை வீட்டில் ஒரு மின்னடுப்பு சில அலுமினியப் பாத்திரங்களோடு ஆங்கிலம் மூலம் தாய் மொழி கற்றுக்கொள்ளும் புத்தகமும். பெறுமதியான பொருட்கள் என்றால் சிறிய கலர் தொலைக்காட்சியும் வி சி ஆரும் தான். அப்போ தமிழ் சேனல்கள் எல்லாம் இல்லை. எனவே சிங்கப்பூரிலிருந்து தமிழ்ப் பட கசெட்டுக்களை தபாலில் எடுத்து பார்ப்பதுதான் பொழுதுபோக்கு. அதைவிட என்னிடம் ஒரு வாக் மேனும் இருந்தது.

அன்று மதியம்  தனியொருவனுக்காக எப்படி விதம் விதமாக சமைக்க முடியும்? ஒரு வெறுப்போடு “வெந்ததை தின்று வேகின்ற உடல்” என்கிற பட்டினத்தார் பாடலைப்  பாடிய படியே மின் அடுப்பில் கொதிக்கத் தொடங்கிய உலையில் அரிசி, பருப்பு, கீரை, வட்டமாக வெட்டிய காரட் எல்லாவற்றையும் போட்டு அலுமினிய சட்டியின் வாயை மூடி விட்டு பொரிப்பதற்காக பொலிதீன் பையில்  கட்டி வாங்கி வந்த தவளைக் கால்களை, அதன்  பையைப் பிரித்து ஒரு தட்டில் போட்டு கொஞ்சம் உப்பும் மிளகாய் தூளும் பிரட்டி ஊற வைத்து விட்டு, வாங்கி வந்த கூலான பியர் போத்தல் ஒன்றை எடுத்து மூடியை பல்லால் கடித்து திறந்து சில மிடறு  விழுங்கிய போதுதான் அன்றைய கொடும் வெக்கையும் ,சந்தைக்கு  கெந்திக் கெந்தியே நடந்து போய் விட்டு வந்த காயம் பட்ட காலின் வலியும் கொஞ்சம் குறைந்தது போலவிருந்தது. இரண்டாவது சத்திர சிகிச்சையின் பின்னர் உடைந்த எலும்பை தகடுகள் வைத்து பொருத்தி விட்டிருந்தார்கள். வெளிக் காயம் தான் ஆற வேண்டியிருந்தது. அதுக்கு ஒவ்வொரு நாளும் எனக்கு நானே மருந்து கட்டிக் கொள்வதுதான் அன்றாட கடமை. அடுப்பில் குழையல் சோறு வெந்த பின்னர் இரவுக்கு கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு. ஊற வைத்த தவளைக் கால்களை பொரித்து  இன்னொரு பியரையும் குடித்து சாப்பிட்டு விட்டால், பாயை விரித்து சுவரோடு தலைகாணியை அணைத்து  சரிந்திருந்த படியே எப்போதுமே வழைமையாக கேட்கும் வீடியோ காசெட்டை போட்டு விடுவேன். ஊமை விழிகள் படத்தின் தோல்வி நிலையென நினைத்தால் பாடல் போய்க் கொண்டிருக்கும்போது உணர்ச்சி வசப்பட்டாலும், அடுத்து எங்கள் தமிழினம் தூங்குவதோ  என்கிற பாடலின் போது எப்படியும் நித்திரையாகிப் போய் விடுவேன்.

ஆனால் அன்று அடுத்த பாடல் போய் லேசாக கண்கள் செருகிக் கொண்டிருந்த போதே வாசலில் ரகு அண்ணையின் மோட்டர் சைக்கிள் வந்து நின்றது. அருகிலிருந்த பியர் போத்தலை அவசரமாக தலகணைக்கு கீழே மறைத்து விட்டு எழும்பி நின்றேன். கூடவே இன்னொருத்தன். அப்போதுதான் வளர்த்த மீசையை வளிதிருப்பான் என தோன்றியது. கையில் கொண்டு வந்த பையை மார்போடு கட்டியனைத்த படியே வயதுக்கு வந்த பெண்ணைப்போல  ரகு அண்ணனுக்கு பின்னல் நெளிந்த படி நின்றிருந்தான்.

“என்ன அண்ணை  திடீரெண்டு?” என்று கேட்டதும்,

 “ஒண்டுமில்லை இவனுக்கு இங்கை மசாஜ்  பழக்கி அனுப்ப வேணுமாம். இரண்டு நாளைக்கு உன்னோடை வைச்சிரு. பிறகு வந்து கூட்டி போயிடுவன்.” என்றார்.

ஆயுத பயிற்சிக்குதானே உலகம் முழுக்க ஆக்களை அனுப்புவினம். இதென்ன புதிசா மசாஜ் பழக அனுப்பியிருக்கு? தலைவருக்கு ஒரு வேளை நாரிப்பிடிப்பு ஏதும் வந்திருக்குகுமோ? அப்பிடியிருந்தாலும் கேரளா மூலிகை மசாஜ் தானே நல்லது. எதுக்கு தாய்லாந்து? என்று யோசித்தாலும் கேள்வி எதுவும் கேட்க முடியாதே…ரகு அண்ணா போய் விட்டார். ஆனாலும் பையை கட்டிப்பிடித்து நின்றவனிடம்,

 “உன்ரை   பையை ஒருத்தரும் களவெடுக்க மாட்டினம். எங்கையாவது வை”.  என்றுவிட்டு “சாப்பிட்டியா?” என்றேன் . “ம்.. ” என்று தலையை மட்டும் ஆட்டினான்.

நான் சமைத்ததை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்கிற என்னுடைய பழி வாங்கும் உணர்ச்சி அன்றும் தோல்வியடைத்து போனது. சரி இரண்டு நாளைக்கு இங்கை தானே இருக்கப் போறான் அப்ப பாக்கலாம் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு, எனக்காக அங்கு ஒரு பாய் தலைகாணி  மட்டுமேயிருந்ததால் அவனுக்கு என்னத்தை கொடுக்கலாமென யோசிக்கும் போதே தனது பையை திறந்து ஒரு சாறத்தை எடுத்து உதறி நிலத்தில் விரித்து விட்டு அமர்ந்துகொண்டு தொலைக்காட்சியை பார்க்கத் தொடங்கி விட்டிருந்தான்.

இரண்டு நாளில் வருவதாகச் சொன்ன ரகு அண்ணன் மறுநாள் மாலையே வந்து அவனைக்கூட்டிக் கொண்டு போய் விட்டார். அந்த ஒரு நாளில் நானும் அவனும் கதைத்த வார்த்தைகளை எண்ணி விடலாம். எனக்கும் அதிகம் கதைக்கும் பழக்கம் இல்லை. ரகு அண்ணா வரும்போது சில சினிமா பட கசெட்டுக்களையும் கொடுத்துவிட்டுப் போனதால் பொழுதுபோய் விட்டது. சுமார் இரண்டு மாதம் கழித்து மீண்டும் அவனை ரகு அண்ணன் என்னோடு கொண்டு வந்து விட்டு  இன்னொரு பாயும் தலைகாணியும் வாங்கிக் கொடுத்து விட்டே போனார். இந்தத்தடவை நானும் அவனும் சில வார்த்தைகள் அதிகமாகப் பேசியிருப்போம். ஒருநாள் இரவு சாப்பிட்டு விட்டு கமல் நடித்த டிக், டிக், டிக் படத்தை பல தடவை பார்த்து மனப்படமாகிப் போயிருந்தாலும் அதில் மாதவியைப் பார்ப்பதற்காகவே அன்றும் கசெட்டை போட்டு ஓட விட்டேன். அதில் கமல் மசாஜ் செய்துகொள்வதைப்போல ஒரு காட்சி வரும். அப்போ தான் அவனிடம்,

“நீயும் மசாஜ் பழகினனி தானே இப்படியெல்லாம் செய்ய வருமா?” என்று கேட்டதும் கொஞ்சம் யோசித்தவன்,

“உடுப்பு எல்லாத்தையும் கழட்டிப்போட்டு துவாயை கட்டிக்கொண்டு குப்புற படுங்கோ.” என்றவன், சமையலுக்கு வைத்திருந்த தேங்காய் எண்ணையை எடுத்துக் கொண்டு வந்து உள்ளங் கையில் எடுத்த எண்ணையை பாயில் குப்புறப்படுத்திருந்த என் பிடரியிலிருந்து சொட்டு சொட்டாக நடு முள்ளந்தண்டு வழியே வழிய விட்டுக்கொண்டு இடுப்புவரை சென்றவன், கட்டியிருந்த துவாயை சட்டென்று உருவி விட்டு தொடர்ந்தும் கால்களின் இறுதி வரை எண்ணையை பூசி முடித்தான். சட்டென்று துவாயை உருவியெடுத்ததை எதிர்பாக்காத நான் “டேய்”. என்றபடி எழும்ப முயன்றபோது .”அசையக் கூடாது”. என்று அவனது கட்டளை கடுமையாகவே வந்ததால் அப்படியே படுத்து விட்டேன். முள்ளந்தண்டின் ஒவ்வொரு மூட்டுகளிலும் அவனது விரல்கள் விளையாடியதில் என் முதுகிலும் டிக்,டிக், டிக் ..

கால் வரை சென்றவன் இப்போ திரும்பி படுக்கச்சொன்னான். தொடைகளுக்கு நடுவே துவாயால் மறைத்தபடி திரும்பி படுத்துக் கொண்டேன். இப்போ நெற்றியிலிருந்து தொடங்கினான். உடலில் புத்துணர்வு மட்டுமல்ல ஔவையார் சொன்ன பத்தாவது உணர்வும் சேர்ந்தே கிளர்ந்து நின்றது. கற்று வந்த மொத்த வித்தையையும் என்மேல் இறக்கி வைத்து விட்டு குளிக்கப் போய் விட்டான். இன்னொரு தடவை இவன் கையால் மசாஜ் செய்தால் நிச்சயம் நான் ஓரினச்சேர்க்கையாளனாக மாறிவிடுவேன் என்கிற பயம் எழுந்திருந்தது. சில நாட்களிலேயே ரகு அண்ணன் வந்து அவனை கூட்டிப் போய் விட்டார். கடைசி வரை அவன் பெயரை நான் கேட்கவேயில்லை. கேட்டிருந்தாலும் அவன் உண்மை பெயரை சொல்லாமல் வாயில் வந்த ஏதாவதொரு பெயரைத்தான் சொல்லியிருப்பான். அவனும் என் பெயரை கேட்கவேயில்லை. கேட்டிருந்தாலும் இங்கேயும் அதே நிலைமைதான். நானும் சில நாட்களின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு விட்டிருந்ததோடு அவனையும் மறந்து விட்டிருந்தேன் .

00000000000000000000000000000

அந்த நாட்டில் புதிதாக பதவிக்கு வந்திருந்த அரசுத் தலைவருக்கும் அதே நாட்டிலேயே தன் இனத்துக்காகப் புதிதாக அரசமைக்கப் போராடிக்கொண்டிருக்கும் தலைவருக்குமிடையில்  பொது எதிரியை விரட்ட  இரகசியப் பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளதாக அறிந்துகொண்டேன். அரசுத் தலைவருக்கும் அரசமைக்கப் போராடிக்கொண்டிருந்த தலைவருக்கும் பல ஒற்றுமைகள் இருந்தது. இருவருமே சாதியப் படி நிலைகளில் கீழிருந்து வந்தவர்கள். தன் சார்ந்தவர்களுக்கும் தன்னை நம்பியவர்களுக்கும் எது வேண்டுமானாலும் கொடுப்பார்கள். ஆனால் தங்கள் இருப்புக்கோ பதவிக்கோ ஆபத்து என்று நினைத்து விட்டாலே அது யாராக இருந்தாலும்  போட்டுத் தள்ளிவிட்டு போய்க் கொண்டிருக்கும் நபர்கள். இந்த இருவருக்கிடையிலும் தான் பேச்சுவார்த்தை. பேச்சுவார்த்தையைத் தொடங்கும்போதே பொதுப் பிரச்சனையான இனப்பிரச்சனையை தீர்ப்பது என்று பேசிக்கொண்டாலும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஒருவரை மற்றொருவர் தீர்த்து விடுவது என்பதுதான் அவர்களது திட்டம். ஆனாலும் இருவருக்குமான பொது எதிரிகளை முதலில் முடித்துவிடுவோம், பின்னர் எங்கள் பலத்தை பரிசீலிக்கலாம் என்கிற ரீதியில் பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தது .

பிரதி நிதிகளுடனான பல சுற்று பேச்சுக்கள் முடிந்த பின்னர்  நட்சத்திர விடுதியொன்றில் தலைமைச் சிங்கத்தை, தலைமை தாங்கிய சிங்கம் சந்தித்துக் கொண்டது. பேசி முடித்த இறுதியில்,

“நீங்கள் களைத்தது போல உள்ளது. இவன் நல்லதொரு மசாஜ் நிபுணன். நீங்கள் விரும்பினால் இவன் உடல் பிடித்து விடுவான் கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ளுங்கள்.” என்றது தலைமை தாங்கிய சிங்கம். சிறிது யோசித்த தலைமைச் சிங்கம் தனது மெய்ப்பாதுகாவலர்களைப் பார்த்து தலையசைத்து விட்டு அறை ஒன்றில் புகுந்து கொள்ள, அவனைத்  தனியாக அழத்துச் சென்ற பாதுகாவலர்கள் உடல் முழுதும் பரிசோதனை செய்துவிட்டு அந்த அறைக்குள் அனுப்பிக்  கதவைச்  சாத்திவிட்டார்கள். அவர் அதுவாம், சைக்கிள் ஓடுவதில் வல்லுனராம் என ஏற்கனவே அவரைப்பற்றிய கிசு கிசுக்கள் பரவியிருந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே உள்ளூர் அழகியை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் கிசு கிசுப்புகளுக்கு பஞ்சமிருக்கவில்லை. பக்கத்து அறையிலேயே ஐஸ்கட்டியை கரைத்துக் கொண்டிருந்த விஸ்கியை அருந்தியபடி அணைந்து போகும் சிகரெட்டில் அடுத்த சிகரெட்டை பற்றவைத்த படியே கைக்கடிகாரத்தை பார்த்து பெருமிதத்தோடு புன்னகைத்துக் கொண்டது தலைமை தாங்கிய சிங்கம். அடிக்கடி நட்சத்திர விடுதியில் பேச்சுவார்தைகள் நடந்து கொண்டிருந்தாலும் சுவி மட்டும் தலைவரின் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் போகும் அளவுக்கு நெருக்கம் இறுக்கமாகியிருந்தது.

முன்னைநாள் பாதுகாப்பு அமைச்சர் ,முன்னைநாள் முப்படைத்தளபதி, கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் என ஒரு தரப்பிலும், தனிநாட்டுக்கு வாக்கு கேட்டு பாராளுமன்றம் போன தலைவர், மாற்று அமைப்பு உறுப்பினர்கள் என இந்து சமூத்திரத்தில் மிதக்கும் தீவின் ஆறுகளிலும் குளங்களிலும் பிணம் மிதக்கும் தீவாகிப் போனது. அப்போதுதான் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் டெனிஸ் விளையாடும் நெட்டையான உள்ளூர் அழகியின்  குட்டைப் பாவாடையில் பிட்டம்   தெரியும் படமொன்று வெளியாகியிருந்தது. அதனை அப்படியே வெட்டி நான் வசித்த வீட்டின்  தட்டையான தகர கதவில் ஒட்டியிருந்தேன். சில நாட்களிலேயே அந்த படத்தை எடுத்த பத்திரிகையாளரை காணவில்லை என்கிற செய்தியும் வந்திருந்தது.

௦௦௦௦0000000000000000000000000

நகருக்கு வெளியே இருந்த ரம்புட்டான் காட்டுக்கு நடுவே அமைந்திருந்த ஆடம்பரமான சிறிய பங்களாவுக்குள் அவனை ஏற்றி வந்த கார் நுழைந்தது. சாதாரணமாக வெளியேயிருந்து பார்த்தால் அப்படியொரு பங்களா இருப்பதே தெரியாது. மெய்ப்பாதுகாவலர்களின் உடல் சோதனையை முடித்துக் கொண்டு அரசுத் தலைவரின் அறைக்குள் அவன் நுழைந்திருந்தான். வழக்கத்தை விட அன்று அந்த அறை முழுதும் வெள்ளை மலர்களாலும் தென்னோலை குருத்தினாலான வண்ண வண்ண வடிவங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருக்க நடுவே வெள்ளை வெளேரென்ற கட்டிலில் ஒற்றைத் துணியில்லாமல் உருண்டு திரண்ட கறுத்த உருவம் அவனை,

“வா நண்பா. நண்பா வா. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் யாருமே இல்லை. அனைவரையும் ஒழித்து விட்டேன். என் உள்ளம் உற்சாகமாக உள்ளது. அதைப்போலவே என் உடலையும் உற்சாகப்படுத்து”. என்று  அழைத்தார். அங்கிருந்த குளியலறைக்குள் புகுந்து  ஆடைகள் அனைத்தையும் களைந்து குளித்துவிட்டு வெளியே வந்தவன், அங்கிருந்த குடுவையை கையிலெடுத்தபடி கட்டிலுக்கு அருகே மசாஜ் செய்வதற்காகவே பிரத்தியேகமாக செய்யப் பட்டிருந்த  சிறிய வாங்கில் குப்புறப்படுத்திருந்தவரின் பின்பக்கமாக குடுவையிலிருந்த மூலிகை எண்ணையை வழியவிட்டு தொடங்கிய மசாஜ் ஒரு மணி நேரத்தின் பின்னர் அங்கிருந்த கட்டிலில் முடிவடைந்திருந்தது.

இருவருமே லேசாகக் களைத்துப்போயிருந்தனர். கட்டிலில் இருந்து எழும்பியவன் குளியலறைக்குள் சென்று ஆடைகளை அணிந்துகொண்டு வெளிய வந்தபோது, இடுப்பில் ஒரு துண்டை  மட்டும் கட்டிக்கொண்டு நின்றிருந்தவர் திடீரென அவன் முன்னால் வந்து நின்று கையில் இரண்டாக மடிக்கப் பட்ட வெற்றிலையில் இருந்த  மோதிரத்தை எடுத்து அவன் இடதுகை விரலில் மாட்டிவிட்டு, “இனிமேல் நீ என்னை முதலாளி என்று அழைக்கக் கூடாது. நண்பன் என்றே அழைக்கலாம்.” என்றதும், அவரின் செய்கை எவ்வித உணர்வுகளையும் கொடுத்ததாக அவன் முகத்தில் தெரியவில்லை. லேசாகச் சிரித்தவன், விரலில் இருந்த மோதிரத்தை தடவிப் பார்த்தபடியே “உங்களை நண்பன் என்று அழைக்க மனம் வரவில்லை முதலாளி என்றே அழைக்கிறேன். அது மட்டுமல்ல விரைவில் நானும் உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கவிருக்கிறேன்”. என்றபடியே அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டான்.

௦௦௦௦௦00000000000000000000000

இப்போதெல்லாம் முதலாளிகளும் அரசியல் கட்சி தலைவர்களும் கொண்டாடும் நாளாகிவிட்ட மேதினக் கொண்டாட்டத்தை நடத்த அரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தது  மட்டுமல்லாமல் ஊர்வலத்துக்கு  அவரே தலைமையும் தாங்கினார். வழியெங்கும் காவல்துறையின் பாதுகாப்போடு தலைவர் முன்னால் நடந்துவர, தொண்டர்களில் “தலைவன் வாழ்க” கோசம் நகரையே அதிர வைத்தபடி அந்த ஊர்வலம் பிரதான சந்தியை அண்மித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த காவல் நிலையத்துக்கு முன்னாலேயே அவரின் தொண்டர்கள் சிலர் சுருட்டியிருந்த கோர்வை பட்டாசுகளை வீதியில் பரப்பத் தொடங்கினார்கள். அப்போதான் எதிர்த்திசையில் சைக்கிளில் வந்துகொண்டிருந்தவனைப் பாதுகாப்பு கடமையிலிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தவே அதனைக் கவனித்த தலைவரோ, “அவன் எனது நண்பன். அவனை விடுங்கள்.” என்றதும், சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு அவரை நோக்கி சென்றவன், “முதலாளி நான் சொன்ன பரிசை உங்களுக்கு இப்போ தரப் போகிறேன்” என்றபடியே இறுக்கி அணைத்தபோது வீதியில் பரப்பி முடித்த பட்டாசுகளில் ஒருவன் நெருப்பை வைத்தான். பட பட வென்ற பட்டாசு சத்தங்களோடு டமாரென்ற பெரும் சத்தம்…. அவன் உடலில் கட்டியிருந்த குண்டு வெடிக்க தசைத் துண்டுகள் எங்கும் சிதறியது.

அதுவரை அனைவரும் வாழ்த்திய தலைவனும் வாழ்த்திய தொண்டர்கள் பலரும் உடல் சிதறி இறந்துபோய்க் கிடந்தார்கள். மிகுதிப்பேர்  ஒரு தடவை வெடித்த குண்டு மறுபடி வெடிக்காது என்பதைக்கூட யோசிக்காமல் பயத்தில் எங்கு ஓடுவது என்று தெரியாமலே ஓடிக்கொண்டிருந்தார்கள் .

௦௦௦௦௦0000000000000000000000000

இப்போதெல்லாம்  breaking news க்கு நடுவே பிரதான செய்திகள் சொல்லிப் பழகிவிட்ட தமிழ் ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் ஹாங் ஹாங் விமான நிலையத்தில் ஒரு விமானத்துக்காக காத்திருக்கும் மண்டபத்தில் சி என் என் தொலைக் காட்சி செய்திகளை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது திடிரென போடப்பட்ட  “breaking news”அந்த நாட்டின் அரசுத் தலைவர் தற்கொலை குண்டு தாரியால் கொல்லப்பட்டுள்ளார். தற்கொலை குண்டுதாரியின் பெயர் சுவி  என அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்” .என்று ஒரு புகைப் படத்தையும் காட்டினார்கள் . “அட செய்தது நீ தானா” என்று மனதில் நினைத்தபடியே அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டேன் ..

சாத்திரி -பிரான்ஸ்

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0% 

http://www.naduweb.net/?p=6909

அதிசய நகரம் பெற்றா முதல் எம்மாவுஸ் வரை.......

3 weeks 4 days ago

அதிசய நகரம் பெற்றா முதல் எம்மாவுஸ் வரை.......


எமது ஆன்மீகத்தின் வேர்களைத் தேடி புனித பூமிக்கான திருப்பயணம் -2017
(ஜோர்தான்-- இஸ்ரவேல் -- பலஸ்தீனம்)

 

என் தெய்வம் வாழ்ந்த தெய்வீக பூமி இது.  இயற்கை அழகும் செயற்கை நிர்மாணிப்பும் கலந்த அற்புதமான உலகம். மலைப்பாங்கான பிரதேசம். ஜோர்தான் நதிப்பள்ளத்தாக்கு வரட்சியில் வாட அதைத்தாண்டி வனாந்தரம் கண்ணுக்கெட்டிய தூரம் புல் பூண்டுகளற்று பசுமைகளற்று பரந்து விரிந்து பாலைவனமாகக் காட்சியளித்தது.

                 என் நீண்டநாள் கனவு நிறைவேறிய மகிழ்வு மனதுக்குள் மத்தாப்பூவாய் மலர்ந்தது. கார்த்திகை மாதம் 23ம் திகதி. இந்த நாளுக்காய் எத்தனை காலம் ஏங்கித் தவித்திருந்தோம். மாலை 9.40க்கு பியசன் விமானநிலையத்தில் இருந்து எயார்கனடா விமானம் எம்மைச் சுமந்தபடி மேலெழும்பியது. எம் பிரயாணத்தை வழிநடத்தும் பொறுப்பாளர் திரு. அன்ரன் பிலிப் அவர்கள் வழி நடத்துதலுடன் 48 யாத்திரிகர்கள் பயணமானோம். நாம் சென்ற விமானம் பிராங்பேட் விமான நிலையத்தில் 2 மணிநேரம் தரித்து லூத்தான்சா விமானமூலம் மாலை 7 மணியளவில் அம்மான் விமான நிலையத்தை வந்தடைந்தோம்.
                          

479459ee3dab676e4aca989dd639ab4b?AccessK

   புனித பூமியில் கால் பதிக்கும் பொழுதே எமக்குள் கிளர்ந்த சிலிர்ப்பை வார்த்தைகளில் வடிக்க முடியாது. எமக்கென ஆயத்த நிலையிலிருந்த வாகனம் மூலம் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டு தயார் நிலையிலிருந்த உணவை உண்டு ஏற்கெனவே எமக்கென பதிவு செய்யப்பட்டிருந்த அறைகளில் இருவர் இருவராக உறங்கி ஓய்வெடுத்தோம்.

 


          மறுநாள் 25ம் திகதி காலை 5 மணிக்கே தொலைபேசி அலாரம் எம்மை துயிலெழுப்பியது. 6 மணிக்கு காலை உணவை முடித்துக்கொண்டு சரியாக 7.30க்கு அனைவரும் வாகனத்துள் இருந்தோம். ஒவ்வொரு முறையும் வாகனத்துள் ஏறும்பொழுதும் இறங்கும் பொழுதும் எமைக் கணக்கெடுத்து எமக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் இருந்து மதிய உணவு, திருப்பலிகள், செபமாலை, மன்றாட்டு என்று அனைத்தையும் தன் 11 வருட அனபவத்தின் மூலம் எவ்வித குறையுமின்றி திரு. அன்ரன் பிலிப் அவர்கள் பார்த்துப் பார்த்து செய்திருந்தார். எம்முடன் பயணித்த ஒவ்வொரு சகோதரர்களும் அன்புடனும் புரிந்துணர்வுடனும் நடந்து கொண்டனர்.

 

26114294_1744232325647364_76664879886131


         வாகனம் ஓடிக்கொண்டிருந்தது. பார்க்குமிடமெங்கும் மலைக் குன்றுகளும் பள்ளத்தாக்குகளுமாக உயிரினங்களற்ற பாறைத் தொடர்களே காட்சியளித்தன. உலகத்தின் அதிசயங்களுள் ஒன்றான அதிசய நகரம் பெற்றா. இதைச் சிவப்பு நகரம் என்றும் அழைப்பர். பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான இந் நகரம் காலத்துக்குக் காலம் பல அரசுகளால் சுவீகரிக்கப்பட்டு வரலாற்றின் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் அரசுகளின் வீழ்ச்சியினாலும் இயற்கையின் சீற்றத்தாலும் கைவிடப்பட்டு இன்று உலகின் அதிசயங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இரு புறமும் பிரமாண்டமான பாறைப் பிளவுகளுக்கூடாக ஊடறுத்துச் செல்லும் பாதையில் நீண்டதூரம் நடந்து செல்ல வேண்டும். அந்த பாதையின் இருமருங்கும் பல சிற்பங்கள், கல்லறைகள், சிதைந்த மண்டபங்கள் என பல அடையாளச் சின்னங்கள் பற்றியும் புராதன கல்வெட்டுக்கள் பற்றியும் எம்முடன் வந்த ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த வழிகாட்டி விளக்கமாக எமக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து தமிழில் திரு. அன்ரன் பிலிப் அவர்களும் அதற்கான விவிலிய குறிப்புப்களையும் விளக்கங்களையும் கூறியது எமக்கு அவ்வப்போது ஆன்மிகத்தின் பக்கங்களையும் விளங்க வைத்தது. ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் பார்க்க வேண்டிய 28 முக்கிய இடங்களில் ஒன்றான இந்த அதிசய நகரை நாம் பார்க்கக் கிடைத்தது பெரும்பேறு.

26195557_1744232505647346_55209319844628

 

Petra-Treasury-Entrance2-1024x683.jpg

                    அங்கிருந்து யோவான் அருளப்பரின் தலையை ஏரோது மன்னனிடம் நடனமாடி பரிசாகக் கேட்டுப் பெற்ற அந்த புனித இடம். மன்னனின் அரண்மனை தூர்ந்து போனாலும் சிதிலமான மண்குன்றான அந்த புனித இடத்தில் இறைவார்த்தை தியானித்து செபித்தோம். ஜோர்தான் பள்ளத்தாக்கின் அழகை அங்கிருந்து பார்த்து ரசிக்கக்கூடியதாக கண்முன்னே மலைச்சரிவுகள் பரந்து கிடந்தன.  மதிய உணவை பயண ஒழுங்கு செய்தவர்களே ஒழுங்கு படுத்தி இருந்ததால் எமது நேரத்தை சரியான முறையில் மேற்கொள்ளவும் திட்டமிட்டபடி இடங்களைச் சென்றடையவும் மிக உதவியாக இருந்தது. இரவு தங்குமிடம் திரும்பியதும் சுவையான போசாக்கான உணவு, வசதியான படுக்கை, உடல் அலுப்புத் தீர குளித்து சுகமான நித்திரை. அதிகாலை தொலைபேசி அழைப்புமணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததால் பதட்டமின்றி நித்திரை செய்தோம்.
                  

    26ம் திகதி காலை புறப்பட்டு நெபோ மலை என அழைக்கப்படும் மலைக்குச் சென்றோம்.  இறைவனால் வாக்களிக்கப்பட்ட கானான்; தேசத்துக்குள் நுழைய முடியாமல் இம் மலையிலுருந்தே மோயீசன் இஸ்ரவேல்  நாட்டைப் பார்த்ததாக விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்குதான் மோசே அடக்கம் பண்ணப்பட்டதாக நம்பப்படுகிறது. அம் மலையில் வெண்கலப் பாம்பு என அழைக்கப்படும் ஓர் இரும்பினால் ஆன கோலில் பாம்பு சுற்றி இருப்பதுபோல் செய்யப்பட்ட அடையாளச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுத்து செபித்தோம். ஒவ்வொரு இடத்திலும் அந்த இடம் தொடர்பான நற்செய்தி வாசகங்களும் வாசித்து தியானித்தோம்.

mtnebo2.jpg

 

25995074_1744232422314021_71914321393002


             அங்கிருந்து யேறாஸ் நகரம் சென்றோம். கிரேக்க ரோம சாம்ராச்சியங்கள் அங்கு அமைக்கப் பட்டிருந்ததன் அடையாளமாக கிரேக்க ரோம மன்னர்கள் நிர்மாணித்த விசாலமான மண்டபங்கள், மாபெரும் தூண்கள், கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்ற அரங்குகள், அங்காடிகள், வீதி வளைவுகள் என்று இன்னும் பல சிதைந்த சீரழிந்த சின்னங்கள் உச்ச நிலையிலிருந்த சாம்ராச்சியங்களின் எச்சங்களாகக் காட்சியளித்தன.
 அன்றிரவே இஸ்ரவேல் நாட்டுக்குள் ஜோர்தான் எல்லையைக் கடந்து செல்ல வேண்டி இருந்ததால் அங்கிருந்து புறப்பட்டு இஸ்ரவேல் எல்லையை அடைந்தோம். அங்கு நாம் எம் பயணப் பொதிகளுடன் நாம் பயணித்து வந்த வாகனத்தையும் சாரதியையும் வழிகாட்டியையும் பிரிந்து எல்லைக் கடவை ஊடாக பலவித பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்குச் சொந்தமான வாகனம், சாரதி, வழிகாட்டியுடன் எமக்கென ஆயத்தம் செய்யப்பட்டிருந்த தங்குமிடம் சென்றடைந்தோம். வழியெங்கும் மலைச்சரிவுகளில் தீப்பெட்டிகளை அடுக்கியதுபோல அமைக்கப்பட்ட கட்டிடங்கள் மின்ஒளியில் பளபளத்தன. இஸ்ரவேல் என்னும் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அழகிய நாடு செழிப்புடனும் வளமுடனும் காட்சியளித்தது. எங்கும் வளமையும் செழுமையும் மிக்க ஆற்றுப் பள்ளத் தாக்குகளும் ஒவிவத் தோட்டங்களும் கூடாரங்களில் மூடி அமைக்கப்பட் வாழைத்தோட்டங்களும் தோடை முந்திரி என பலவகை பழத்தோட்டங்களும் வீதியின் இருமருங்கும் அழகூட்டின.

                  

26166108_1744233342313929_54647762256020
                      

    உலகின் பல பாகங்களிலுமிருந்தும் அலை அலையாக இன மத மொழி வேறுபாடின்றி இறைமகன் இயேசு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, புதுமைகள் பல புரிந்து, மரித்து, உயிர்த்த அந்த புனித பூமியை தரிசித்து இறை உணர்வில் பெலனடைய வந்துகொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கட்டிடங்களையும் ஆலயங்களையும் சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்களையும் வீடுகளையும் காணும்போது எம் மண்ணின் ஞாபகம் அடிக்கடி மனதில் நிழலாடியது. இன்னும் சில நூற்றாண்டுகளின் பின் எமது எதிர்காலச் சந்ததியினரும் எமது வாழ்விடங்களையும் இப்படித்தான் வழ்காட்டிகளின் உதவியுடன் வந்து பார்த்து எமது வரலாற்றை அறிந்து கொள்வார்கள் என மனத்திரையில் வந்து போனது. என்றோ ஒருநாள் எம் வேர்களைத் தேடி எம் விதைகள் புறப்படும்போது அவர்களின் தேடல் இன்றைய நிகழ்வுகளாக இருக்கலாம். இன்றைய திருப்பலி ஒப்புக்கொடுத்த குருவானவரின் அருளுரையும் இத் தேடல் பற்றிய சிந்தனையாகவே இருந்தது.

 

ffee2447b152494b43d9816faaea83c8_L.jpg

 

1200px-Bethlehem_skyline,_West_Bank.jpg


            நசரேத்தூரில் மரியாளுக்கு மங்களம் சொன்ன இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம், இயேசு மறுரூபமான தபோர் மலை, மரியாளின் கிணறு, இவற்றை தரிசித்து விட்டு கானாவூரில் இறைமகன் இயேசு முதல் புதுமை செய்த இடத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றினோம். அங்கு எம்முடன் தம்பதிகளாக வந்தவர்கள்திருமண வாக்குத்தத்தம் புதுப்பித்தார்கள். விவிலியத்தின் முக்கிய இடங்களில் வழிகாட்டி மிகத் தெளிவாக விளக்கங்களை அளித்தார். இறைவழிகாட்டலுடன் எமது பயணத்தைத் தொடர திரு.அன்ரன் பிலிப் அவர்கள் உதவியாக இருந்தார். திருக்குடும்பம் வாழ்ந்த வீடு, செசாரியா பிலிப் எனப்படும் ஜோர்தான் ஆறு ஆரம்பமாகும் இடம்.(இது சிரிய எல்லையில் அமைந்துள்ளது). பல நூற்றாண்டுகள் கடந்தும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்றிரவு நாம் தங்கிஇருந்த கொட்டலில் ஒரு ஒன்றுகூடல் வைத்தோம். அந்த ஒன்றுகூடலில் திருப்பலி ஒப்புக்கொடுத்த இரு குருவானவர்களும் பங்குபற்றினர். அன்று எம் மாவீரர் தினமென்பதால் அவர்களுக்கு மௌன அஞ்சலி செய்ய மறக்கவில்லை. அதன்பின் அனைவரும் தத்தமது பயண அனுபவங்களைப் பரிமாறி மகிழ்ந்தனர். திராட்சை ரசமும் பரிமாறப்பட்டது.
           Mont_Thabor_en_Galil%C3%A9e-Cassas-ski-1

 

   மறுநாள் இயேசு மலைப்பொழிவு செய்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்தோம். அப்பம் பலுகியஆலயம், கர்ப்பநாகூம் செபக்கூடம், பேதுருவின் வீடு, முதலான புராதன இடங்களைப் பார்த்து செபித்து நற்சிந்தனையுடன் கலிலேயாக் கடலில் படகுப் பிரயாணம் மேற்கொண்டோம். படகுப் பிரயாண ஆரம்பத்தில் படகு ஒட்டுனர்கள் கனடிய கொடி ஏற்ற நாம் அனைவரும் இசையுடன் கனடிய கீதமிசைத்து கை தட்டி எமது மகிழ்வைத் தெரிவித்தோம். தொடர்ந்து இறைமகன் இயேசு பயணம் செய்து புதுமைகள் செய்த அக் கடலில் பயணம் செய்வது மிகவும் ஆசீர்வாதமாக எண்ணி இறைவனைத் துதித்து பாடல்கள் பாடி இறை வார்த்தைகளை வாசித்து இறை உணர்வுடன் பயணம் செய்தோம்.
 படகுப் பிரயாணம் முடிந்ததும் கடலோரமாக உள்ள உணவு விடுதியில் பேதுருவின் மீன் உணவு பரிமாறப்பட்டது. அனைவரும் சுவையான அந்த உணவை உண்டு மகிழ்ந்தோம். தொடர்ந்து கலிலேயாக் கடலில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன ஓடம் வைக்கப்பட்டுள்ள காட்சிச் சாலைக்கு சென்று படகைப் பார்வையிட்டோம். அங்கிருந்து இராயப்பர் திருச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயம் சென்றோம். அனைத்து இடங்களையும் கைத்தொலை பேசிகளிலும் ஒளிப்படப் பெட்டிகளிலும் பதிவுசெய்தபடி எம் பயணம் தொடர்ந்தது.
                 

7ம் நாள் எமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிப்பதற்காக ஜோர்தான் நதிக்கரைக்கு செல்ல ஆயத்தமாக அனைவரும் வெண்ணிற ஆறை அணிந்து புறப்பட்Nhம். அங்கு பல இன மக்களும் வெண்ணிற ஆடைகளுடன் கூட்டம்கூட்டமாக பரிசுத்த ஆவியின் பாடல்களைப் பாடி துதித்தபடி தம் திருமுழுக்கினைப் புதுப்பித்தபடி இருந்தனர். நாம் அங்கு திருப்பலி நிறைவேற்றி எம் திருமுழுக்கை புதுப்பித்தோம். எமக்கு திருப்பலி நிறைவேற்ற குருக்களை ஆயத்தம் செய்திருந்தார்கள். அதிலும் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது மிகவும் சிறப்பான அம்சம்.

26000956_1744235255647071_90158070257639

 

26055650_1744235152313748_33157626814609


                 

Bethany_(5).JPG

 

 

  மசாடா மலை. விசாலமான இம் மலையின் மேற்பகுதி தட்டையாகவும் பக்கங்கள் செங்குத்தாகவும் உள்ளன. இம் மலையின் மேல் கோட்டை ஒன்று அமைக்கப்பட்டதற்கான எச்சங்களாக சிதைவடைந்த நிலையில் பல அறைகள், குளியலறைகள், மண்டபங்கள், என பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. இங்கு செல்வதற்கு கம்பி மூலம் கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. எமது வழிகாட்டி அதன் சரித்திரப்பின்னணியை விபரித்தார். எதிரிகள் சுற்றி வளைத்ததால் அவர்களிடம் மண்டியிடுவதைவிட மடிவதே மேல் என்று முடிவெத்த யூத இனத்து விடுதலைக்குழு போராளிகள ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக தம்மையே அழித்துக் கொண்டனர். அம் மாவீரர்களின் கதை கூறியபடி இம் மலை தலை நிமிர்ந்து நிற்கிறது.
                

25994774_1744240322313231_57492468361757

26165699_1744233012313962_11625908749863

  சாக்கடலில் குளியல். இது ஒரு இனிய அனுபவம். இக்கடலின் அதிக கனவளவு உப்பு கலந்த நீர் இருப்பதால் எந்த உயிரினமும் இதில் உயிர்வாழ முடியாது. இக் கடலில் ஒருவரும் தாள முடியாது. பலர் மிதந்தபடி குளிப்பதைக' காணக்கூடியதாய் இருந்தது. தொடர்ந்து எலிசபேத் அம்மாள் ஆலயம், திருமுழுக்கு யோவான் இல்லம், கிறீஸ்து பிறப்பு ஆலயம் சென்றோம். தினமும் வரிசை வரிசையாக மக்கள் கூட்டம் இப் புனித தலத்தைத் தரிசிக்க காத்திருப்பர். நாம் அங்ு போன நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக உள்ளே நுழைந்து இறைமகன் இயேசு பிறந்த புனிக இடத்தை தரிசிக்கக் கிடைத்தது இறைவனின் அரிய செயலன்றி வேறில்லை.  தொடர்ந்து தேவதூதன் இடையர்களுக்கு சேதி சொன்ன மலைக்குகை, மரியாளின் பால் துளியில் பரிசுத்தாகிய வெள்ளை குறோற்றா ஆலயம், ஆகிய புனித தலங்களைத் தரிசித்து அவ்விடத்தில் திருப்பலியும் நிறைவேற்றி இறை உணர்வுடன் எம் இருப்பிடம் திரும்பினோம். தினமும் காரம் மசாலா தவிர்ந்த அனைத்து உணவு வகைகளும் தரமான முறையில் பரிமாறப்பட்டன. சுவையான கலப்படற்ற பேரீச்சம் பழங்கள், திராட்சைரசம் என்பன குறைந்தவிலையில் பெறக்கூடியதாய் இருந்தது.
            

       மறுநாள் மார்கழி 1ம் திகதி இயேசு விண்ணம் சென்ற இடம், பரலோக மந்திர ஆலயம், மரியாள் அடக்க ஆலயம், முதலியவற்றுடன் ஒலிவத் தோப்பு என அழைக்கப்படும் ஜெத்சமெனிப் பூங்காவையும் தரிசித்தோம். பழமைவாய்ந்த அந்த ஒலிவ மரங்கள் இன்றும் பரிசுத்தமாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இறைமகன் தனது சீடருடன் இரவுணவு உண்ட ஆலயம், தாவீதின் கல்லறை, இராயப்பர் இயேசுவை மறுதலித்த இடம், மரியாள் உறங்கும் ஆலயம் என பல பரிசுத்த இடங்களையும் தரிசித்தோம். ஆங்காங்கு அந்த இடத்தின் சிறப்புக்களை அறிந்து கொண்டதுடன் அந்த இடத்திற்குரிய இறைவார்த்தைகளையும் செபமாலையையும் தியானிக்கத் தவறவில்லை. சில இடங்கள் ஓத்தடைஸ் எனப்படும் யூதஇன மதக்குழுவினராலும் இன்னும் சில கத்தோலிக்க பிரிவினராலும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதைக் காணக்கூடியாய் இருந்தது.


       96871_0dc5d89e.jpg

      25659840_1744234395647157_44253881719818

 

  யூத மக்களால் புனிதமாக மதிக்கப்படும் புலம்பல் மதில் முன் ஆண்கள் ஒரு பகுதியிலும் பெண்கள் ஒருபகுதியிலுமாக மதிலில் தலையை முட்டி செபித்துக்கொண்டிருந்தனர். மதிலுக்கு அப்பாலுள்ள தம் வணக்கத்தலம் முஸ்லிம் பிரிவினரின் பகுதிக்குள் இருப்பதால் இவர்களால் அங்கு சென்று வணக்கம் செய்ய முடியாது. நாமும் அம் மதிலுக்கு முன் சென்று அதற்கு மரியாதை செலுத்தி வி;ட்டு வந்தோம், அவ் இடத்தை மிகவும் புனிதமாகப் பேணி வருவதால் அங்கு செல்வதற்கு மிகவும் பாதுகாப்பு செய்துள்ளனர். மறுநாள் மரியாள் பிறந்த வீடு,  அதைத் தொடர்ந்து பெத்சாயிதாக் குளம் சென்றோம். அக் குளம் நீரின்றி சிதைவடைந்த நிலையில் இருந்தாலும் இறைமகன் புதுமைகள் செய்த புனித நினைவுடன் இறைவார்த்தை வாசித்து செபித்து தியானித்தோம். அதைத் தொடர்ந்து போஞ்சு பிலாத்துவின் அரண்மனை, இயேசுவுக்கு மரணத் தீர்ப்பிட்ட  இடம், சித்திரவதைக் கூடம், அங்குதான் அவரது சிலுவைப் பாதை ஆரம்பித்த அந்த துக்க நிகழ்வுகளின் ஆரம்பமாக இருந்தது. சித்திரவதைக் கூடங்கள் நிலக்கீழ் அறைகளாக மிக ஒடுங்கிய வாயில்களுடன் அமைந்திருந்தன. அவற்றைப் பார்த்தபொழுது அனைவரும் துக்கம் தாங்க முடியாமல் விழிகளில் நீர்வழிய விம்மி அழுதோம். எம் கண்முன் இறைகனின் பாடுகளுடன் எம் இன இளைஞர்களின் பாடுகளும் மனக்கண்ணில் நிழலாடி மனப்பாரத்துடன் அவ்விடத்தில் இறைவார்த்தை வாசித்து செபித்து இறைவனை மகிமைப்படுத்தினோம்.
 

26047222_1744234778980452_16160141730640

 

 

      சிலுவைப் பாதையின் ஒவ்வொரு நிலையிலும் சிறுசிறு ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவ் ஒவ்வொரு நிலையிலும் முழங்கால் படியிட்டு தியானித்து செபித்து பாடல்கள் பாடி ஒருங்கிணைந்து இறை உணர்வுடன் ஒன்றித்தோம். பதினான்கு நிலைகளையும் தாண்டி இயேசுவின் சிலுவை நிறுத்திய இடமான கல்வாரி மலையின் குன்றை அடைந்தோம். அப் பரிசுத்த தலத்தில் உட்புகுவதற்கு மிகுந்த நீளமான வரிசையில் நின்று போகவேண்டி இருந்தது. உலகின் பல நாட்டு மக்களும் குழுக்களாக அங்கு வந்திருப்பதைக் காணக்கூடியதாய் இருந்தது. இயேசுவின் சிலுவை நிறுத்திய அந்த பரிசுத்த இடம் ஒருவர் ஒருவராக வணக்கம் செலுத்தக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இயேசுவின் உடல் அடக்கம் பண்ணப்பட்ட கல்லறையையும் தரிசித்தோம். எம் பாவம் போக்க மனுவுருவாகி மரணத்தை ஏற்று உயிர்த்த கிறீஸ்துவின் அருள் பெற்றவர்களாய் திருப்பலி ஒப்புக்கொடுத்தோம். கல்வாரித் திருப்பலிக்கு ஆயத்தமாக முதல்நாள் இரவு குருவானவரை எம் தங்குமிடத்திற்கு அழைத்து நாம் பாவமன்னிப்புப் பெற ஒழுங்கு செய்த எம் ஒழுங்கமைப்பாளர் திரு.அன்ரன் பிலிப் அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
          

26047023_1744233035647293_71939765944921

 

26168113_1744240078979922_22288303605420

   இறுதி நாளான 3ம் திகதி காலை எமது பயணப் பொதிகளுடன் ஆயத்தமாக நின்ற வாகனத்தில் ஏறி எம்மாவுஸ் நகருக்குச் சென்றோம். அன்று ஞாயிற்றுக்கிழமை. எம்மாவுசில் உள்ள குருமத்தில் உள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டபின் இயேசு மரணத்தை வென்ற பின் எம்மாவுஸ் சீடருடன் உணவருந்திய அந்த இடத்தை தரிசித்தோம்.
       

அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறந்த நேரக் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்கமைப்புடனும் செப உணர்வுடனும் எம்மை வழி நடத்திய திரு.அன்ரன் பிலிப் அவர்களுக்கும் அவருடன் கூட இருந்து உதவி புரிந்த நெறிப்படுத்திய திருமதி.அன்ரன் பிலிப் அவர்களுக்கும் அனைவரும் மனம் நிறைந்த நன்றி சொன்னோம். இறைவனால் கூடாதது ஒன்றுமில்லை என்ற கூற்றுக்கிணங்க இவர்களைபப் பயன்படுத்தி எம்மை காத்து வழிநடத்திய இறைவனுக்கு நன்றி கூறி இஸ்ரவேலின் தெல்அவி விமான நிலையத்தில் புனித பூமிக்கு விடை கொடுத்து ரொறன்ரோவுக்கு புறப்பட்டோம்.
       எம் வாழ்நாளில் மறக்க முடியாத மகத்துவமான இப் புனித பயணத்திற்கு வழிவகுத்த இறைவனுக்கும் எம் பயண ஒழுங்கமைப்பினருக்கம் எம் இதயம் நிறைந்த நன்றிகள். அத்துடன் இத் திரு யாத்திரையில் பங்குபற்றிய அனைவரும் அன்புடனும் நட்புடனும் சகோதரத்துடனும் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொண்டனர். எமது குழுவில் சில வாலிபப் பிள்ளைகளும் கலந்து கொண்டது சிறப்பம்சம். எம்மோடு பயணித்து நட்புடன் பிரிந்து சென்ற அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். இறை வழியில் தொடர்ந்தும் பயணிப்போம்.

 

26055644_1744259815644615_86647744231472

 

காவலூர் கண்மணி

சீமானின் இன்னுமொரு பிதற்றல்

1 month 2 weeks ago

ஆமை ஓட்டை திருப்பிப்

போட்டு போராளிகள்

கடலில் பயணம் செய்தனர் 

என்றேல்லாம் கதை விடும்

சீமானின் இன்னொரு வீடியோ

இது

 

ஒருவர் சிரியாவில் உள்ள

அகதிகளை ஈழத்தமிழர்

ஒருவர் பிளேன் கொண்டு 

போய் காப்பாற்றி ஏற்றி வந்தார்

என்று sarcasm கலந்து 

பதிவை போட

 

அதை அறிவு கெட்ட 

தொம்பிகள் நம்பி

உலகம் பூரா பரப்ப

 

அத் தொம்பிகளின் தலைவனும்

நம்பி கூட்டத்தில் உரையாடுகின்றார்

 

சீமான் போன்ற வெற்று

வேத்துகள் எந்தளவுக்கு

அறிவு கெட்டவர்கள் என்பதற்கு

இதுவே ஒரு உதாரணம்

 

 

தென் இலங்கை பெண் மருத்துவர் தமிழ் படித்த கதை

1 month 2 weeks ago

தென் இலங்கை பெண் மருத்துவர் தமிழ் படித்த கதை

மருத்துவர் போதினி சமரதுங்க

'உங்களால் தமிழ் பேச முடியாவிடில், பொதிகளைக் கட்டிக்கொண்டு கிளம்பு வேண்டியதுதான். இங்கே தமிழ் பேசாவிடில், சேவை வழங்க முடியாது' என்று சொன்னார் எம்மை வரவேற்ற மருத்துவ நிபுணர் (Consultant).

யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான நாட்டின் வடக்கே சேவை செய்ய விரும்பினேன். குடும்பம், நண்பர்கள், உறவினர்களின் ஆலோசனைக்கு மாறாக நாட்டின் மறுமுனைக்கு கிளம்பிச் சென்றேன்.

ஆங்காங்கே முளைக்கும் சிறு கட்டிடங்கள்.... குண்டும் குழியுமான வீதி... பயணிக்கும் போதே, மேலெழுந்த தூசி, தோலின் மீது படிந்து, பிரவுன் நிற படிவம் ஒன்றை தந்திருந்தது.

படித்து, மருத்துவ வேலைக் செய்யும் பெரும் எதிர்பார்ப்பில் வந்த எமது கனவின் நிதர்சனத்தினை, நிபுணர் முதல் நாளன்றே சொன்ன மேலே குறிப்பிட்ட  வார்த்தைகள், உணர்த்தின.

98% எனக்கு பரீடசையமில்லாத மொழி ஒன்றை பேசும் மக்களுக்கு சேவை செய்ய வந்துளேன். நாட்டின் இன்னுமொரு மொழியினை அறிந்து கொள்ளாதது குறித்து கவலை கொண்டேன்.

உரையாடல் என்பது எமது வேலையின் மிக முக்கியமான அம்சம். நோயாளிகளின், வரலாறு, அறிகுறிகள் போன்றவைகளை சரியாக புரியாவிடில், சரியான மருத்துவ சேவைகளை வழங்க முடியாது. எனது அன்றாட வேலைகளை புரிந்து, அதற்கு உரிய வகையில் நடந்து கொள்வது ஒரு போராட்டமாக இருந்தது. 

வார்டு ரவுண்டு செல்லும் போது, மொழிபெயர்ப்புக்கு உதவ பலர் முன்வந்தாலும், அவர்களது வேலைச்சுமைகள், பொறுப்புகள் காரணமாக எப்போதும் உதவிகளை எதிர்பார்ப்பது சரியாக படவில்லை.

தமிழ் மொழியினை மிக, மிக விரைவாக கற்றுக் கொள்வது தான் ஒரே வழி என முடிவு செய்தேன். ஊரில் இருந்து, அம்மா அனுப்பி வைத்த, 'சிங்களமொழி  மூலம் தமிழ் மொழி' புத்தகம், ஒரு பெரிய வேடிக்கை. 24 மணி நேர கடும் வேலை, சாப்பிடவே நேரம் இல்லா நிலையில் அது பெரிதாக உதவவில்லை.

நாட்டின் பிரச்சனைகளுக்கு மிகப் பெரிய காரணமாக நான் கருதியது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாத மொழித்தடையே என புரிந்தது. 

ஆரம்பத்தில் எனக்கும், என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது. அவர்களுடன் நல்ல தொடர்பினைப் பேணி, அவர்களது குடும்ப பின்னணிகளை அறிந்து, தினந்தோறும், வார்டு ரவுண்டு முடிந்ததும், கிசு, கிசு கதைகள் மூலம் சில முக்கியமான சொற்களை அறிந்து, ஒரு டையரியில் குறிப்பு எடுத்துக் கொண்டேன். 

நூற்றுக் கணக்கான நோயாளிகளுடன் பேசும் போது.... அவர்கள் பேசும் விதத்தினை உன்னிப்பாக கவனித்தேன். பின்னர் இலக்கணம், முக்கியமான சொற்களை வசனக் கோர்வைகளாக்கும் விதத்தை அறிந்து கொண்டேன்.

அம்மா, தம்பி, தங்கச்சி, அண்ணா போன்ற உறவு முறை சொற்களை அதிகமாக பாவித்து, எனது தமிழ் மொழிப பேச்சினை அதிகரித்துக் கொண்டேன்.

கர்பிணிப் பெண் ஒருவரை, அம்மா இருமுகிறதா (காகின) என கேட்பதாக நினைத்து, அம்மா  கடிக்கிறதா (ககன) , என கேட்க, அவரை குழப்பி விட்டேன். எனது தமிங்கிலீஷ் மூலம் உண்டாக்கிய குழப்பத்தினை திருத்திய போது, பெரும் சிரிப்பைனை உண்டாக்கி இருந்தேன். 

ஒரு வாரத்தில் ஒரு தமிழ் பெண்ணாக தமிழ் மொழி பேச தொடங்கி விட்டேன். நோயாளிகளுடன் தமிழ் மொழியில் பேசி, மருந்துகளை எவ்வித உதவியும் இன்றி கொடுக்க தொடங்கி இருந்தேன்.

புதிதாக வந்திருந்த தமிழ் மருத்துவ நிபுணர், நான் எவ்வித உதவிகளும் இன்றி, சுயமாக தமிழ் பேசுவதை அறிந்து ஆச்சரியம் தெரிவித்தார். சக தமிழ் மருத்துவர்களுக்கு, எனது ஆர்வத்தினை குறிப்பிட்டு, அவர்களை சிங்கள மொழியினை  கற்று கொள்ள முயல வேண்டும் என ஆலோசனை சொன்னார். அது பிறிதொரு நேரத்தில் உதவும் என சொன்னார்.

நான் தமிழ்  கற்று கொள்ள  முயலுகையில், அங்கிருந்த சக மருத்துவர்களில் சிலர் என்னுடன் பேசி, சிங்களத்தினை கற்று கொள்ள முயன்றது வேடிக்கையாக இருந்தது.

ஒருமுறை ஒரு கடும் சுகவீனமான ஒரு கர்பிணிப் பெண்ணை ஆம்புலன்ஸ் வண்டியில் பெரிய வைத்திய சாலைக்கு அனுப்ப வேண்டி இருந்தது. ஆம்புலன்ஸ் பொறுப்பாளர்கள், அந்த நோயாளியின் நிலைமை தெரியாது, வேறு ஒரு வேலை முடித்த பின் தான், இந்த நோயாளியை கொண்டு சொல்ல முடியும் என சொன்னார்கள். மிகவும் சத்தமாக அவர்களுடன் வாதாடி, அந்த ஒரு கர்பிணிப் பெண்ணை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று கண்டிப்புடன் சொன்னேன். 

அவர்கள் அவ்வாறு செய்து பயணியை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏத்தும் போது, வண்டியின் ஓட்டுனரான தமிழர், பெரு விரலை காட்டி, 'மிக நன்றாக தமிழ் பேசுறீங்க, ஆனால், உங்கள் பெயர் நீங்கள் இந்த பகுதியை சேர்ந்தவராக சொல்லவில்லையே' என வியந்தார்.

மிக முக்கியமாக, எனது நோயாளிகள், வைத்தியசாலைக்கு பக்கத்தில் இருக்கும் ஊர்களை குறிப்பிட்டு, நான் அந்த ஊர் ஒன்றில் இருந்து வந்தவரா என வினவுவார்கள். காரணம் எனது வட்டார தமிழ் உச்சரிப்பாக இருக்கலாம்.

தென் இலங்கைக்கு சென்றபின்னர், எனது சிங்கள உச்சரிப்பில், தமிழ் வாடை அடிப்பதால், நான் தமிழ் பெண்ணோ என்றல்லவா கேட்க்கின்றனர்.

By Dr. Bodhini Samaratunga

http://dbsjeyaraj.com/dbsj/archives/58089#more-58089

மனமுண்டானால் இடம் உண்டு. 

$27 மில்லியன் கடனுக்காக கனடா தேடும் ஆடம்பர விமானம்.

1 month 2 weeks ago

a large passenger jet flying over a body of water: A photo of a Bombardier Canadian Global Express corporate jet.

கனேடிய நிறுவனம் பாம்பார்டியர் தயாரித்த, ZS-OAK வால் இலக்கம் கொண்ட, ஆடம்பர குளோபல் 6000 பிசினஸ் ரக ஜெட் விமானத்தினை எங்காவது பார்த்தால், உடனடியா கனடா அரசுக்கு தகவல் அனுப்பி வையுங்கோ.

$41 மில்லியன் பெறுமதி கொண்ட இந்த விமானம், தென் ஆப்பிரிக்காவின், இந்திய வம்சாவளி குப்தா குடும்பத்துக்கு சொந்தமானது.

கனடா அரசு இங்கே எதுக்கு மூக்கை நுழைத்தது என்கிறீர்களா, கொஞ்சம் பொறுங்கோ.

பெரும் ஊழல் மூலம் தென் ஆபிரிக்க அதிபர் சூமாவின் பதவிக்கு ஆப்படித்த குப்தா சகோதரர்கள் கனடா அரசுக்கும் ஆப்பு அடித்துள்ளனர்.

வேறு ஒன்றும் இல்லை. கஸ்டமருக்கு கடன் கொடுத்து பொருள் வாங்க வைக்கும் மேற்குலக வியாபார தந்திரம். 

Export Development Canada (EDC) என்னும் அரசு நிறுவனம், குப்தா குடும்பத்தின் விமான கொள்வனவுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து, பாம்பார்டியர் நிறுவனத்திடம் விமானத்தினை வாங்க வைத்துள்ளது. ஒழுங்காக வந்து கொண்டிருந்த பணம்....ஊழல் விடயங்கள் வெடித்துக் கிளம்ப, நின்று போக, இப்போது வட்டியும் முதலுமாக $21 மில்லியன் நிலுவை.

அஜய் குப்தா எனும், குடும்பத்தின் மூன்று சகோதரர்களில் ஒருவர் மீது, தென் ஆப்ரிக்க நீதிமன்று, பிடி ஆணை பிறப்பித்துள்ளது.

ஆயினும் முழுக் குடுப்பமுமே, இந்த விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து தப்பி ஓடி இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

விமானத்தினை தடுத்து வைக்கும் ஆணை, மார்ச் மாதம் 6ம் திகதி தென் ஆப்பிரிக்காவின் நீதிமன்றம் ஒன்றின் பரிசீலனைக்கு வருகிறது. எனினும் அதற்கு முன்னர் விமானத்தினை கண்டு பிடிக்க வேண்டும். விமானம் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறதா, (அதாவது நொறுங்காமல், முழுசாக) என்பதே முதலில் உள்ள தலையாய பிரச்னை.

எனினும் அண்மைய வாரங்களில், இந்த விமானமானது, இந்திய, துபாய், ருசியா விமான நிலையங்களில் காணப் பட்டுள்ளது.

தாம் கடன் கொடுப்பதற்கு முன்னர் மிக்வும் தீவிரமாக விசாரித்த கடன் கொடுப்போம்...இது கொஞ்சம் வித்தியாசமாக போய் விட்டது என்கிறது.. பெரும் தர்ம சங்கடத்துக்கு ஆளாகியுள்ள EDC.

'என்னத்தை விசாரித்தார்கள்... இவர்கள் கடன் கொடுக்கும் போதே, தென் ஆப்பிரிக்காவெங்கும் குப்தா குடும்பத்தின் மோசமான ஊழல் குறித்து செய்திகள் உலா வந்து கொடிருந்தனவே' என்கிறார் கரின் கீரன், ஒரு மனித உரிமை நிறுவன பேச்சாளர்.

இந்த கடன் வழங்கப் பட்டிருக்கவே கூடாது என்று அவர், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு சொல்கிறார். இவர்களது ஊழல் தென் ஆபிரிக்க அதிகாரிகளினால் விசாரிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களது (EDC) பெயருக்கு களங்கம் உண்டாக்கி உள்ள இந்த கடன் கொடுக்க வேண்டிய தேவை எப்படி வந்தது என்கிறார் அவர். ஊழல் விசாரணை தீவிரம், அதிபர் சுமாவை ராஜினாமா செய்ய வைக்கும் அளவுக்கு இருந்திருக்கின்றது.

முழுப் பூசணிக்காயை சோத்தில் மறைக்க முடியாதது போல, ஒரு விமானத்தினை, விமான நிலையங்களில், நீண்ட காலத்துக்கு ஒழித்து வைக்க முடியாது. $41மில்லியன் விமானத்தினை, மிகுதி $27 மில்லியனுக்காக தூக்கினால், இதுவரை கட்டிய $14மில்லியன் லாபம் தானே என்று கணக்கு போடுகிறது  EDC.

ஆகவே இந்த விமானத்தினை, அதுவும் வாலில் ZS-OAK இலக்கம் உள்ள விமானத்தினை கண்டால், தகவல் ரகசியமாக எனக்கு சொன்னீர்களானால், கிடைப்பதில் (சன்மானத்தில்) பவ்பாதி பிரித்துக் கொள்ளலாம். 

குப்தாக்கள் இந்தியாவில் ஒளிந்தாலும்.... விமானத்தினை.... கிராமப்பக்கமா கொண்டொடிப் போய் ஒழிக்க ஏலாது தானே. . :grin: 

https://www.msn.com/en-gb/news/world/canada-lent-a-family-dollar41-million-to-buy-a-luxury-jet-now-the-jet-is-missing/ar-BBJPh6i?li=BBoPWjQ&ocid=mailsignout

மிஸ்ட்டு காலு...... சிறப்பான பாடம்....

1 month 3 weeks ago

நம்ம ஆளு சும்மா ஜாலிக்கு அலைகிற ஆளு கிடையாது... ஆனாலும் சந்தர்ப்பம் வந்தால், ட்ரை பண்ணாம விட மாட்டாரு.

இப்படி தான்... அவருக்கு ஒரு மிஸ்ட்டு காலு...

பேசாம இருந்திருக்கலாம்.... திருப்பி கூப்பிட்டு.... யாரு என்று கேட்டிருக்கிறார்...

அடுத்த பக்கம்... ஆம்பிளை குரல் என்றால்... கதை இரண்டு நிமிசத்தில் முடிந்திருக்கும். ஆனால் இது பெண்.... சொக்க வைக்கும் குரல்...

கதை நீள்கிறது... மிஸ்ட்டு காலு... டெய்லி நொன் மிஸ்ட்டு காலு ஆகிறது....

வாங்களேன் நேர.... அவரு சரி என்கிறார்....

தன்னுடைய வீட்டுக்கு வருமாறு விலாசத்தை அனுப்பிவைத்துள்ளார் அந்த பெண். தன்னுடைய காதலி கூறியதன் பிரகாரமே, அவிசாவளையில் உள்ள காதலியின் வீட்டுக்கு கடந்த 9 ஆம் திகதியன்று முச்சக்கரவண்டியில், அவ்விளைஞன் இரவு வேளையில் பயணித்துள்ளார்.

இரவு.... ம்ம்... அல்வாவும்.... பூவும் வாங்கிப் கொண்டு போயிருப்பார்..

குறுக்கால போன புத்தி... குறுக்கு ரோட்டில் சென்றுகொண்டிருந்த போதே, இனந்தெரியாத நபர்கள் அவ்விளைஞனை கூரிய ஆயுதங்களால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர் இதனால், பாதிக்கப்பட்ட அவ்விளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

அது மட்டுமா... அவரது அலைபேசியும் பறிக்கப்பட்டுள்ளது. இதுல பிரச்னை என்ன வென்றால்... மிஸ்ட்டு காலு காதலி தந்த விலாசம்... அவரது போன் நம்பர்... எல்லாமே அந்த போனில் தானே இருக்குது... 

போலீஸ் காரர்கள் அதை கிளறி எடுக்க முடியும்.... ஆனாலும் அவருக்கு கிடைத்த வெகுமானம்... சமூக மிஸ்ட்டு காலு காதல் மன்னர்களுக்கு படிப்பினை என்பதால் நோண்டவில்லை போல உள்ளது..

எதுக்கும் மிஸ்ட்டு காலு வந்தால்... வந்துட்டுப் போகட்டும் என்று விட்டுவிடலாம்... போய்... அடி வாங்க ஏலாது..

(அட... நம்மாளு என்ன பெரிசா பண்ணீட்டாரு.... தங்கச்சி...என்ன... ஏதோ.... நல்லா இருக்கிறீயாம்மா என்று விசாரிக்கத்தான் கிளம்பி இருப்பாரு... அது புரியாம.... அயோக்கிய பயலுங்க இப்படியா பண்ணுறது...)

http://www.tamilmirror.lk/crime-news/காதலியை-தேடிச்சென்ற-காதலனுக்கு-வெட்டு/128-210237

போக்கிலித்தனமான மகிந்த லாஜிக்

1 month 3 weeks ago

இவரிண்ட லாஜிக்கே போக்கிலித்தனமானது. நடந்த உள்ளூர் ஆடசி தேர்தலில், மக்கள் பெருவாரியாக வாக்களித்த, இவரது தாமரை மொட்டு புதுக் கட்சிக்கு பாராளுமன்றில் ஒரு எம்பியும் இல்லை. இவரும் இவரது சகாக்களும் சுதந்திரக்கட்சி எம்பிக்கள், மொத்தம் 95 பேர். ரணில் ஐ தே கட்சிக்கோ 105.

நடந்த தேர்தலில் பயங்கர அடி வாங்கிய கட்சி சுதந்திர கட்சி, மூன்றாவது இடம். அரசாங்கமோ இரண்டும் சேர்ந்த கூட்டு.

இவர் கேட்பது என்னவென்றால், மக்களால் நிராகிரிக்கப்பட்ட, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட, சுதந்திர கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமாம்... அல்லது தனது தலைமையில் எதிர்க்கட்சி ஆக வேண்டுமாம்.

எப்படி தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்றால், எம்பிகளை விலைக்கு வாங்குவதை தவிர வேறு வழி இல்லை. எப்படி அரசிலும், எதிர்கட்சியிலும் இருக்க முடியும் என்றால், பதில் இல்லை.

ஒரு நியாயமான தலைவராயின், இரண்டு வருடங்கள் காத்திருந்து, பொது தேர்தலில் வென்று வர வேண்டும். பொறுமை இல்லை.

இவர் குடும்பம் மீதான வழக்குகளை இறுக்காமல் விட்டமைக்கான தவறுக்காக, பலத்த விலையை செலுத்தி விட்ட, ரணில், இம்முறை, இன்று, தானே சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துள்ளார்.

மேல் நாடுகள், இந்தியாவின் அழுத்தில், இந்த வழக்குகள் மேலும் இறுகி, அடுத்த பொது தேர்தலுக்கு முன் அவருக்கான ஆப்பு இறுகும். 

மகிந்த பதவிக்கு வருவது, ஈழம் ஆதரவாளர்களுக்கு நல்லது தான். ஆனாலும், இவரை சீனா, இந்திய, மேல் நாடுகள் எதுவுமே விரும்பவில்லை என்பதே நிதர்சனம்.

காதலர்தினப் பதிவு

2 months 1 week ago

மீன்கொத்திப் பறவை மீன் கொத்தும் லாவகம் அவள் தேனீர் தயாரிப்பதில் இருக்கும். சிப்பந்தி வேலையென அவள் தன் வேலையினைக் கருதியதாய்த் தோன்றவில்லை. வீடு தேடி வந்தவரை உபசரிக்கும் பாங்கில் அந்தத் தேனீர்ச்சாலையில் அவள் நடந்துகொண்டாள். 


நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் எங்கள் காணிகளை நானே சென்று பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு நாட்டாமைக் குணம் எனக்குள் விளித்துக் கொள்ள வீட்டில் சொன்னேன். கொடுப்பிற்குள் பெருமை சிரிப்பாக அம்மா ஒரு தொழிலாளியுடன் என்னை அனுப்பி வைத்தாள். தென்னங்காணிக்குள் ஒளிந்திருந்த ஒரு துரவோரம் நின்ற காட்டுமரம் என்னைக் கட்டிப்போட்டது. அது என்ன மரமென்று தொழிலாளியிடம் கேட்க அவர் 'ஓம் தம்பி அது வெட்டோணும், நெடுக நினைக்கிறது நேரம் கிடைக்கிறதில்லை' என்றார். பதறிப்போனேன். ஏனக்கிருந்த அதிகாரம் கொண்டு அந்த மரம் வெட்டலைத் தடுத்து விட்டு, வீடு சென்றோம். சாண்டில்யனின் ரசிகையான என் அம்மாவிற்கு அந்த மரம் பற்றி பித்துநிலை எட்டும்வரை வர்ணித்து, அம்மரம் எப்போதும் வெட்டப்படாதென்று உறுதி பெற்றுக்கொண்டேன். நாட்டாமைக் குணத்திருந்து மனிதத்தின் நுளைவாசலாய் அந்தக் காட்டுமரம் எனக்கமைந்தது.

தேனீர்சாலை சிப்பந்தி. அவளிலும் ஒரு காட்டுமரத்தின் தன்மை இருந்தது. மூங்கில் தோல், முள்முருக்குப் பட்டை நிறக் கண்கள். முசுட்டை இலைபோன்று இயற்கையாய்த் தோலில் சிறு கேசம். கிளிசறியாப் பூப்போல, பிரன்ச்சுக்காரர் அறிந்ததிராத நறுமணம். பனங்குருத்துப் போல் பற்கள். மழைபின் மலரென முகமெங்கும் குளிர்ச்சி. காட்டுமரம் தான். ஆனால் இயற்கை அதுதான்.


அலுவலக அரசியல், நிறுவன ஏணியேற்றம், பக்கத்துவீட்டுக்காரன் பற்றிய பொறாமைகள், குடும்பச்சுமைகள் என இறுகிப்போன மனிதர்கள், றோபோட்டுக்களாக, மனதின் பிடியில், விளிப்பில் தூங்கியபடி அவளிடம் தேனீர் பெற்றுச் சென்றார்கள். வாடிக்கைளாளர் வந்ததும், அவர்கள் தமக்கு என்னவேண்டும் என்று சொல்லுமுன்னரே அவள் அவர்க்கான ஓடரை செய்யத் தொடங்குவாள். அவர்களைத் தான் தெரிந்து வைத்திருப்பது அவர்களிற்கு மகிழ்வு தருகின்றதாக என நாய்க்குட்டிபோன்று அவர்களை அவள் நோக்குவாள். சிலர் கண்டுகொண்டனர். பலர் இறுக்கமாய்க் கடந்து சென்றனர். அவள் துள்ளல் சற்றும் குறையவில்லை.

ஒரு திங்கட்கிழமை காலை. அலுவலகம் வரப்பிடிக்கா அடிமைக்கூட்டம் விளிப்பில் தூங்கியபடி கோப்பி தூக்கம் முறிக்கும் என்ற நப்பாசையில் கோப்பி வாங்கக் காத்து நின்றனர். அந்த இடமே உழைச்சல் அதிர்வில் கரும்பாறையில் காக்கை எச்சம் போன்று முகஞ்சுழித்துக் கிடந்தது. அப்போது அது நடந்தது. ஒரு சிப்பந்தி இரு கண்ணாடிக்குவழைகள் நிறைந்த கோப்பியினை எப்படியோ நிலத்தில் கொட்டிவி;ட்டாள். கண்ணாடி உடையும் சத்தமும் தடுப்புடைத்த சிற்றருவி போன்று பரவிய கோப்பியும், கலவரத்துடன் பயந்து கிடந்த சிந்பத்தியும், சினந்து கொண்ட இறுகிய மனிதர்களுமான அந்தச் சூழ்நிலையில் காட்டுப்பூ கலகம் அடக்கியது. திடீரென அச்சூழல் சந்தணத் தென்றலில் சீமைக்கிழுவைப் பூ கலந்ததுபோல் கிறங்கச் செய்தது. அவள் இமயமலையில் யோகத்தில் இருக்க அவள் உடல் மட்டும் இங்கே பணியாற்றியது போன்ற லாவகம். சினந்தவர்களால் சினத்தைத் தொடரமுடியவில்லை. கலவரப்பட்ட சிப்பந்திகூட ஏதுமே நடக்காதது போல் ஓடர் எடுத்தாள். காட்டுப்பூவிற்குள் காட்டருவி ஒத்த பலத்தில் அமைதி இருக்கிறது. அவ்வமைதி முன்னால் கலவரங்கள் கரைந்துபோகின்றன.


காட்டுமரங்கள் காட்டிற்கே. அவற்றை வேரோடு பிடுங்கி வீட்டிற்குள் தொட்டிக்குள் சிறைப்படுத்த முடியாது. காட்டுப்பூவின் கிளர்ச்சிபெற காட்டிற்குள் கரையவேண்டும். கரைகிறேன்...
 

தோழர் சண்முகதாசன் 25ம் நினைவு. - வ.ஐ.ச.ஜெயபாலன்

2 months 2 weeks ago

தோழர் சண்முகதாசன் அவர்களின் 25 நினைவு
25th DEATH ANIVERSARY OF COMRADE SHANMUGATHASAN.
,
தமிழர்களின் முதல் விடுதலைப்போரான சாதி ஒடுக்குதலுக்கு எதிரான போரின் முக்கிய தலைவர்களுள் முன்னவரான தோழர் சண்முகதாசனின் 25தாவது நினைவுதின சிந்தனைகள்.

சண்முகதாசன் நினைவுகளை பணிகின்றேன். 1965 - 75 காலப்பகுதியில் சாதி ஒடுக்குதலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இளமையில் சண்முகதாசனின் கருத்துக்களும் செயல்பாடுகளும் முக்கிய வழிகாட்டியாக இருந்தது. தோழர் சண்முகதாசன், டானியல் அண்ணா போன்றவர்கள் ஒரு கரையாகவும் தோழர் எம்,சி,சுப்பிரமணியம் டோமினிக் ஜீவா அண்ணர் போன்றவர்கள் மறுகரையாகவும் செயல்பட்ட அந்த வீரமிகு சமூக விடுதலைப் போராட்ட நாட்க்களை போற்றுகிறேன். வீழ்ந்த தியாகிகளின் நினைவுகள் என்றும் அழியாது காப்போம். தோழர் சண்முகதாசன் நினைவு விழா வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

உலகை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்-ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேல்,இந்தியாவிலும் எச்சரிக்கை

2 months 3 weeks ago

உலகை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்-ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேல்,இந்தியாவிலும் எச்சரிக்கை

niru3b0d9b1e07d2d927.md.jpg

 

டெல்லி: தண்ணீர்... தண்ணீர்.. உலக நாடுகளை மிகப் பெரிய அளவில் அச்சுறுத்த தொடங்கிவிட்டது.. தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, சோமாலியா, சிரியாவைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான், இந்தியா என உலகின் பல நாடுகள் தண்ணீர் பஞ்சம் எனும் பேராபத்தில் சிக்கிக் கொண்டுள்ளன. தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் ரேசன் முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் தண்ணீரே இல்லாத வறண்ட பூமியாகப் போகிறது கேப்டவுன். உலகிலேயே தண்ணீரே இல்லாத மிகப் பெரிய நகரம் என்ற அவலத்தை சுமக்கப் போகிறது கேப்டவுன். இதனால் தண்ணீரை பயன்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலிலும் இதேபோன்ற நிலைமைதான் நைஜீரியா, சோமாலியா, சிரியாவிலும். இஸ்ரேலும் கூட தண்ணீர் பஞ்சத்தை எப்படி எதிர்கொள்வது என்பதில் தீவிரமாக இருக்கிறது.

குஜராத்திலும்தான் ஈரானிலும் தண்ணீர் பற்றாக்குறை தலைகாட்டத் தொடங்கிவிட்டது. இந்தியாவின் முன்னோடி மாநிலம், வளர்ச்சி மாநிலம் என பில்டப் செய்யப்பட்ட குஜராத்தை காவு வாங்கப் போகிறது தண்ணீர் பஞ்சம்.

நாசமாகும் குஜராத்
குஜராத்தின் உயிர்நாடியாக இருக்கும் நர்மதை அணைக்கான மழைப்பொழிவு என்பது வெகுவாக குறைந்துவிட்டது. 56 ஆண்டுகாலம் கட்டப்பட்டு உருவாக்கப்பட்ட நர்மதை அணையை கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

வேளாண்மை நாசமாகும்
niru1e405b30c87cbc799.md.jpg


ஆனால் நர்மதை அணையே வறண்டு போகும் நிலையில் இருக்கிறது. இதனால் குஜராத்தின் பல்லாயிரம் கிராமங்களில் குடிக்க கூட நீர் கிடைக்காது என எச்சரிக்கப்பட்டு வருகிறது. குடிக்கவே நீர் இல்லை எனில் வேளாண்துறையே நாசமாகிப் போகும் ஆபத்து இருக்கிறது.
ஆம் உலகம் தண்ணீருக்கான யுத்தத்தை நோக்கி நகருகிறது.

நன்றி: தட்ஸ்தமிழ்

 

‘நடக்காதென்பார் நடந்துவிடும்!’ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

2 months 4 weeks ago
‘நடக்காதென்பார் நடந்துவிடும்!’ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
kooddani.jpg
ங்களுக்கும் அலுத்துத்தான் போயிருக்கும்.
எதனால் என்று கேட்கிறீர்களா?
உண்மை நோக்கியும் இன நன்மை நோக்கியும்,
நம் தலைவர்களை நான் விமர்சிக்க, விமர்சிக்க,
தலைவர்கள் மீதான உங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் பொறுத்து,
நீங்களும் ‘டென்ஷ’னாகி, ‘டென்ஷ’னாகிக் களைத்துப் போனதைத்தான் சொல்கிறேன்.
எனது நியாயபூர்வமான கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல்,
சில (அப்)பிராணிகள் என்னையும் கம்பனையும் திட்டித்திட்டி,
தமது ‘தினவு’ அகற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
நான் தொட்டதால் கம்பனுக்கு வந்த வினை!
தர்க்கபூர்வமாக சான்றுகளோடு நான் முன் வைக்கும் விமர்சனத்தை,
எதுவித நியாயபூர்வமான பதில்களும் கூறாமல் மறுதளிக்கும்,
இவர்களை நினைக்கச் சிரிப்புத்தான் வருகிறது.
மனிதர்களுக்கு மட்டுமே உரிய,
ஆறாவது அறிவான சிந்திக்கும் திறனை இழந்த இவர்களும் பாவம்தான்!
எத்தனை நாட்களுக்குத்தான் இல்லாதவற்றைச் சொல்லி என்னைத் திட்டித்தீர்ப்பது.
அவர்களுக்கும் அலுத்துத்தான் போயிருக்கும்.
அதுமட்டுமா? கேட்பாரில்லாத சிந்திப்பாரில்லாத திருந்துவாரில்லாத,
இந்தச் சமுதாயத்தை எத்தனை நாட்களுக்குத்தான் இடித்துரைப்பது என்று,
எனக்கேகூட அலுத்துத்தான் போய்விட்டது.
தீர்க்கதரிசனமற்ற தலைவர்கள், சிந்தனையில்லா மக்கள், புத்திசாலிகளான எதிரிகள் என,
எம் இனத்தைச் சூழ்ந்து கிடக்கும் ஆபத்துக்களைப் பார்க்க,
என்னாகப் போகிறதோ எம் இனம்? என்று மனம் பதறுகிறது.
அந்த வருத்தத்தோடும் சிந்தனையோடும் படுக்கையில் கிடந்தேன்.

➤➤➤

‘ட்றிங்’ ‘ட்றிங்’ ‘ட்றிங்’…….
திடீரென தொலைபேசி அழைத்தது.
எதிர் முனையில் எனக்கு நெருக்கமான ஒரு ஊடக நண்பனின் குரல்.
‘ஜெயராஜ் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது.
மிகப்பெரிய மாற்றம் நிகழப்போகிறது.
உங்கள் கடிதத்தால் நம் தலைவர்கள்,
இன நன்மை நோக்கிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இனித் தமிழர்களுக்கு நல்லகாலம்தான்’ என்று பரபரத்தான் அவன்.
வழக்கமாக நிதானமாகப் பேசும் அவன் குரலில்,
புதிதாய்த் தெரிந்த பரபரப்பு ஆச்சரியப்படுத்த,
‘என்ன சுந்தர்? (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ன நடந்தது?’என்றேன்.
‘என்ன நடந்ததா? பெரிய ஆச்சரியம் நடந்திருக்கிறது.
நீங்கள் இன்னும் கேள்விப்படவில்லையா?’ என்று,
செய்தி சொல்லாமல் என்னையும் பதற்றப்படுத்தினான்.

➤➤➤

‘சரியப்பா விஷயத்தைச் சொல்லாமல் இதென்ன பரபரப்பு’ என்று சினந்தேன்.
அவன் நிதானமாகச் சிரித்தபடி தொடர்ந்தான்.
‘உண்மை அறிந்த உற்சாகத்தில் எதைச் சொல்வதென்று தெரியவில்லை,
நீங்கள் சொன்னாற்போல நம் தலைவர்களெல்லாம் ஒன்றுபட்டு,
இனப்பிரச்சினை பற்றி பேரினத்தாரோடு பேச முடிவுசெய்து விட்டார்கள்.
எதிர்காலத்தை மனதில் கொண்டு இனி செயல்படுவதென்று,
மிக ஆச்சரியமாக அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.’ என்றான்.
நானும் சற்று ஆச்சரியத்துடன், ‘அதென்ன எதிர்காலத்திட்டம்?’என்றேன்.

➤➤➤

அவன் விபரித்ததைக் கேட்க எனக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது.
‘நான் காண்பது என்ன கனவா? அல்லது நனவா?’ என்று,
பழைய படமொன்றில் சிவாஜிகணேசன் ஒரு வசனம் பேசுவார்.
நண்பன் சொன்னதைக் கேட்டதும் அந்த வசனம் தான் ஞாபகத்திற்கு வந்தது.
என் எழுத்திற்கு இவ்வளவு சக்தியா? என்று மனம் மமதைகொள்ள முயல,
‘சீச்சீ’ அது சத்தியத்திற்கான சக்தி என்று புத்தி சொல்லிற்று.
அப்படி என்ன அவன் சொன்னான் என்று கேட்கிறீர்களா?
அந்த அதிசயத்தை ஏன் கேட்கிறீர்கள் போங்கள்!
கடவுளின் பார்வை தமிழினத்தின்மேல் விழத் தொடங்கிவிட்டது போலும்,
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயாவின் அழைப்பின் பேரில்,
நம் தமிழ்த்தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடி நீண்ட நேரம் கலந்துரையாடி,
அற்புதமான சில முடிவுகளை எடுத்திருக்கிறார்களாம்.
அவர்கள் எடுத்த முடிவுகளை விபரமாய் நண்பன் சொன்னான்.
அவன் சொன்னவற்றை இங்கே எழுதுகிறேன்.
பொறுமையாகப் படியுங்கள்!

➤➤➤

அன்று கூட்டப்பட்ட கூட்டத்தில்,
➧ தமிழரசுக்கட்சி.
➧ தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சி
➧ தமிழ் காங்கிரஸ் கட்சி
➧ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
➧ தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
➧ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - சுரேஸ் அணி (ஈ.பி.ஆர்.எல்.எப்)
➧ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - வரதராஜப்பெருமாள் அணி (ஈ.பி.ஆர்.எல்.எப்)
➧ ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)
➧ ஜனநாயக போராளிகள் கட்சி
என்பவற்றின் தலைவர்கள் கலந்து கொண்டனராம்.
‘என்னது? தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரியும்,
ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும்,
வரதராஜப் பெருமாளும் கூடவா அழைக்கப்பட்டனர்?’ என்று,
ஆச்சரியத்துடன் நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது.
‘ஐயா பொதுமகனாரே! தயவு செய்து உங்கள் திருவாயைச் சற்று மூடுங்கள்.
என்னவோ ஏதோ! அவர்களும் தமிழ்மக்கள் பிரதிநிதிகளாய் அங்கீகரிக்கப்பட்டவர்கள்தானே.
குற்றம் என்று பார்த்தால் மேற் சொன்ன எல்லாரிடமும் ஏதோ ஒரு குற்றத்தைச் சொல்லலாம்தானே.
‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்று நம் பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்.
பிரிவுக்கான காரணம் தேடும் நேரமில்லை இது. உறவுக்கான காரணம் தேடும் நேரம்.
முதலில் எல்லோரும் ஒன்றுபடட்டும்.
தமிழ் மக்களுக்கான உரிமையைப் பெற்றபின்,
மக்கள் மன்றில் அவரவர் தம்மை நிரூபித்துக் கொள்ளட்டும்.
ஒற்றுமையின் உன்னதத்தை அவர்களே விளங்க முற்படும் போது,
பொதுமகனாராகிய நீர் தயவு செய்து அதைக் குழப்பாதேயும்’,
‘சரி சரி மேற்கொண்டு விடயத்தைச் சொல்லும் என்கிறீர்களா?’
இதோ உங்கள் உத்தரவுக்குப் பணிகிறேன்.

➤➤➤

அன்றைய கூட்டத்தில் மேற்படி கட்சியினர் ஒன்றிணைந்து,
ஏகமனதாக சில முடிவுகளை எடுத்துள்ளார்களாம்.
நண்பன் சொன்ன அவர்தம் முடிவுகளைக் கீழே செய்திகளாய்த் தருகிறேன்.
ஆச்சரியத்தில் நீங்கள் மயங்கி விழும் வாய்ப்புண்டு.
எதற்கும் ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு தொடர்ந்து படியுங்கள்.

➤➤➤

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி நண்பன் சொன்ன விடயங்களைச் சுருக்கித் தருகிறேன்.
 
➧➧ முதலில் மேற்படி கட்சிகள் பத்தாண்டுகால அடிப்படையில் தமது கட்சிகளை கலைத்து விடுவதாய் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் கட்சிப் பிரிவுகள் இருக்குமாயின் எப்படியும் தத்தமது கட்சியின் வளர்ச்சி நோக்கியே தலைவர்கள் இயங்க முயற்சிப்பர். எனவேதான் இக் கூட்டமைப்பில் இணையும் கட்சிகள் தத்தமது சொந்தக்கட்சிகளை கலைத்துவிடுவது எனும் முடிவு எடுக்கப்பட்டதாம். 
 
➧➧ அடுத்ததாய், இனி ஒருவரையொருவர் ‘துரோகிகள்’ என்று குற்றம் சாட்டுவதில்லை என தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனராம். முடிந்த வரலாற்றுப்பாதையில் எல்லாக் கட்சிகளிலும் அமைப்புக்களிலும் குற்றச்சாட்டுகள் பதிவாகி இருப்பது நிதர்சனமாகும். சந்தர்ப்பத்திற்கேற்ப தத்தம் குற்றங்களை மறைத்து மற்றவர்களது குற்றங்களை விரிவித்து சுயலாபம் காணும் எண்ணம் இருந்தால் கட்சிகளுக்கிடையிலான பகையுணர்வு நிலைத்தே நிற்கும். எனவேதான் மற்றவர் குற்றத்தில் தத்தமது தகுதியை நிரூபிக்க முயலாமல் பழைய வரலாறுகளை மறந்து, மன்னித்து ஒற்றுமையாய் இருப்பதற்காயும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
 
➧➧ தத்தமது கட்சியின் வளர்ச்சி அடிப்படையிலன்றி இனவளர்ச்சி அடிப்படையில் ஒருமித்துச் செயல்படுவதாகவும், நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தத்தம் கட்சிக்கு வாய்ப்பாகச் செயற்பட முனைவதில்லை எனவும் தமது கட்சி ஆதரவாளர்களையும் தொண்டர்களையும் கூட கட்சி மனப்பான்மையிலிருந்து வெளிவரச் செய்து இனநலன் நோக்கி ஒருமித்து இயங்கச் செய்வது எனவும் தலைவர்கள் உறுதி பூண்டனர். கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்புக்கள் பெயரளவில் கூட்டமைப்புக்களாய் இருந்தனவேயன்றி இனநலன் நோக்கிய ஒருமைப்பாட்டுணர்வோடு அவை இயங்கவில்லை. அந்த ஆபத்து தொடராமல் இருக்கவே தலைவர்கள் அனைவரும் மேற்படி உறுதியைப் பூண்டுள்ளனராம்.
 
➧➧ ‘தமிழ் இன உரிமை மீட்புக் கூட்டமைப்பு’ என இக்கூட்டமைப்புக்குப் பெயரிடுவது எனவும் தமிழர்தம் ஒற்றுமையை உணர்த்துமுகமாகவும், அவர்கள் தம் வாழ்வொளியைக் காக்க ஒன்றிணைந்து விட்டார்கள் என்பதைக் குறிக்குமுகமாகவும் பல கைகள் ஒன்றிணைந்து ஒரு ஜோதியை காப்பதான சின்னத்தை இக் கூட்டமைப்பின் சின்னமாக ஏற்றுக்கொள்வது என்றும் தலைவர்கள் ஏகமனதாய் முடிவு செய்துள்ளனராம்.
 
➧➧ இவ்வமைப்புக்கான தலைமையகக் கட்டிடத்தை வடக்கு, கிழக்கு எனும் பிரிவு ஏற்படாவண்ணம் இரு பிரதேசங்களுக்கும் பொதுவான ஒரு இடத்தில் தமிழர்தம் பாரம்பரியத்தையும் ஒற்றுமையின் பலத்தையும் மற்றவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் நம் கலாசார முறைப்படி பிரமாண்டமாக அமைப்பதென்றும் முடிவு செய்தனராம்.
 
➧➧ இவ்வமைப்புக்கான உறுப்பினர் படிவங்கள் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வது எனவும் மாதந்தோறும் இவ்வுறுப்பினர் எண்ணிக்கையில் வளர்ச்சியைக் கண்காணிப்பது எனவும்  வருடத்தில் ஒருதரம் அத்தனை உறுப்பினர்களையும் ஒரு பொது இடத்தில் திரட்டிப் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்துவது எனவும் அப் பொதுக்கூட்டத்திற்கு இலங்கையில் இருக்கும் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் விருந்தினர்களாய் அழைப்பதோடு ஒரு வெளிநாட்டுத் தலைவரை சிறப்பு விருந்தினராகவும் அழைப்பித்து நம் இனஒற்றுமைப்பலத்தை உலகறியச் செய்வதெனவும் தலைவர்கள் முடிவு செய்தார்களாம். நமது தாயகத்தில் இன்று இருபத்திரண்டு இலட்சத்து எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாகவும் அவர்களுள் பதினைந்து இலட்சம் பேர் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும்; புலம்பெயர் நாடுகளில் எட்டரை இலட்சம் ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. (2012 கணக்கெடுப்புப்படி) இப்புதிய கூட்டமைப்பை ஆரம்பித்து ஒரு வருட எல்லைக்குள் நம் தாயகத்தில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்களையும் புலம்பெயர் நாடுகளில் ஏழு இலட்சத்திற்கு மேற்பட்டவர்களையும் இக்கூட்டமைப்பின் உறுப்பினர்களாக்குவது என்றும் தலைவர்கள் ஏகமனதாய் முடிவு செய்தனராம்.
 
➧➧ அரசியல் சார்ந்து வரும் பதவிகளை வழங்குவதில் தகுதிக்கு முதலிடம் கொடுத்த பின்பு அத்தகுதி பெற்ற, இனவளர்ச்சிக்கு உண்மையாய்ப் பாடுபடும் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்குவது என்றும், அச்செயல் மூலம் இனநலன் நோக்கி இயங்குவோரை ஊக்குவிப்பது என்றும் மேற்படி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாம்.
 
➧➧ மேற்படி கூட்டமைப்புக்கென பெரிய அளவிளான நிதித்தளம் ஒன்றை உருவாக்குதல் அவசியம் என்பதால் மாதந்தோறும் தாயகத்திலும் வெளிநாடுகளிலும் உறுப்பினர்களால் திரட்டப்படும்  நிதியை, ‘ஈழத் தமிழர் நல்வாழ்வு நிதியம்’ என்னும் பெயரில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கி அந்நிதியத்தில் அதனைச் சேமித்து  தமிழ்ப் பிரதேசங்களின் அவசியமான மக்கள் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற அந்நிதியைப் பயன்படுத்துவது எனவும் தலைவர்கள் முடிவெடுத்தனராம்.
 
➧➧ மேற்படி அமைப்புக்காக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்பதான ஊடக அமைப்புக்களை உருவாக்குவது எனவும் அதன் மூலம் இயக்கக் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பி, எதிர்ப்பரப்புதல் செய்வோரை முறியடித்து வெற்றி கொள்வதெனவும் தமது ஊடக பலம் கொண்டு கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைவோரைப் புறந்தள்ளி செயல்படுவதெனவும் அவ் ஊடகங்களின் மூலம் மாற்றினத்தாரும் தமிழர்தம் நியாயபூர்வமான கோரிக்கைகளை அறியும் வண்ணம் பரப்புதல் செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டதாம்.

➤➤➤

‘என்னையா பொதுமகனாரே! இந்த விழி விழிக்கிறீர்கள்.
கவனம் விழி வெளியே விழுந்துவிடப்போகிறது!
நம் தலைவர்களின் இனநலன் நோக்கிய,
இத்திடீர் மாற்றங்களைக் கேட்டால் யாருக்குத்தான் வியப்பு வராது.
இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டால்,
இனி நாங்கள் யாரைத்திட்டி இணையங்களில் எழுதுவது என்று யோசிக்கிறீர்கள் போல,
யார் தப்புகிறார்களோ இல்லையோ நானும் கம்பனும் தப்பினோம்.
இவர்களை புலி கலைத்தது எலி கலைத்தது என்று,
இனி நீங்கள் கற்பனைக் கதைகளை எழுத முடியாதாக்கும்.
பகைமையை ஒழிப்பதென்று தலைவர்களே முடிவு செய்தபிறகு,
நீங்களும் பகையை ஒழித்துத்தானே ஆகவேண்டும்.
ஒற்றுமையை விடப் பகைதான் சுவையானது என்று நினைக்கிறீர்களோ?
உங்களது இந்த மனநிலையால்த்தானே தலைவர்களும் பிரிந்து கிடந்தார்கள்.
இனியாவது திருந்த முயலுங்கள்.
எதற்கும் ஒரு ‘பிளேன்ரீ’ குடித்து நிதானித்த பின் வாருங்கள்.
இவ்வளவத்தோடு விஷயம் முடிந்து விடவில்லை.
இன்னும் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
என்ன அதற்குள் ‘ரீ’ குடித்துவிட்டீர்களா?
அத்தனை ஆர்வமாக்கும்?
சரிசரி மேலும் படியுங்கள்

➤➤➤

இதுவரை தன்னாதிக்கப் போட்டி போட்டுக்கொண்டிருந்த நம் தலைவர்கள்,
இனி அதிகாரங்களைப் பரவலாக்குவது என்று முடிவு செய்து,
நிர்வாகத்தினுள் உண்மையான ஜனநாயக முறையைக் கொண்டு வரப்போகிறார்களாம்.
எத்துணை அதிசயமான செய்தி!
முன்பு போல் தனிமனிதர்களிடம் அதிகாரங்களைக் குவிக்காமல்,
நிர்வாகப் பரவலாக்குதலுக்காக சரியான ஜனநாயக முறைப்படி,
பதினைந்து சபைகளை அவர்கள் அமைக்கப்போகிறார்களாம்.
அந்த சபைகள் பற்றிய விபரங்களைக் கீழே தருகிறேன்.

➤➤➤

 
01. அரசியல் வழிகாட்டுனர் சபை
மேற்படி சபையில் அரசியல் அனுபவமிக்க மூத்த தலைவர்கள் அங்கத்தினர்களாய் நியமிக்கப்படுவார்களாம். இவர்கள் வேறேதும் பதவிகளை ஏற்காமல் தமது அரசியல் அனுபவங்களைக் கொண்டு மற்றைச் சபையினருக்கு வழிகாட்டுதல் செய்வதிலும் பிரச்சினைகள் உருவாகும் போது அவற்றை நிதானமாய்க் கையாள துணை புரிவதிலும் உதவி நிற்பராம். இச்சபையில்  தமிழினத்தின் உரிமைபற்றி அக்கறையுடைய பிற இனத்தலைவர்கள் ஓரிருவரும் இணைத்துக் கொள்ளப்படுவராம்.
 
02. பாராளுமன்ற உறுப்பினர் சபை
மேற்படி சபையில் பாராளுமன்ற உறுப்பினர்களாய் உள்ள அங்கத்தவர்கள் அனைவரும் இடம்பெறுவர். பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வில், தகுதியின் அடிப்படையில் தக்கவர்களை  ஒன்பது தலைவர்களும் ஒன்றுகூடி சிபாரிசு செய்வராம். இச்சிபாரிசு மக்கள்சபையில் (இச்சபை பற்றிய விபரம் பின்னே தரப்படுகிறது.) அங்கீகரிக்கப்பட்ட பின்பே மேற்படி உறுப்பினர்கள் தேர்தலில் நிறுத்தப்படுவார்களாம். இவ்  உறுப்பினர்கள் இன உரிமை பற்றிய விடயங்களைப் பாராளுமன்றத்தில் முன்னெடுப்பதிலும் இன நலன் பற்றிய விடயங்களை பாராளுமன்ற அதிகாரம் கொண்டு நடைமுறைப்படுத்துவதிலும் உரிமை பெற்றிருப்பராம்.
 
03. மாகாண, உள்ளூராட்சி உறுப்பினர் சபை
மாகாண, உள்ளூராட்சி சபைகளின் அங்கத்தவர்கள் அனைவரும் இச்சபையின் உறுப்பினர்களாய் இயங்குவராம். உறுப்பினர்களின் தேர்வும் முன் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்வைப் போலவே அமையுமாம். இவர்கள் பிரதேச முன்னேற்றம் பற்றிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதிகாரத்தை மட்டும் பெற்றிருப்பராம். இன உரிமை பற்றிய விடயங்களில் இவர்களுக்கு அதிகாரம் இருக்காதாம்.
 

04. சட்ட ஆலோசகர் சபை
இச்சபையில் தமிழினத்தைச் சேர்ந்த ஆற்றல் மிக்க சட்டத்துறைசார் அறிஞர்களும் புலம்பெயர்ந்து வாழும் சட்டத்துறை அறிஞர்களும் அங்கத்தவர்களாய் சேர்த்துக் கொள்ளப்படுவராம். மேற்படி கூட்டமைப்பினால் தீர்மானிக்கப்படும் புதிய விடயங்களை சட்டமயமாக்கும் பொறுப்பும், உலக அரங்குகளில் தமிழர் உரிமை பற்றி முன்வைக்கப்படும் விடயங்களை சட்ட நெறிப்படுத்தும் பொறுப்பும், மத்திய அரசாங்கத்தினால் தமிழர் நலன் நோக்கிய திட்டங்களுக்கு இடையூறு ஏற்படும் வேளைகளில் அவற்றை நீதிமன்றத்தில் சந்திக்கும் பொறுப்பும் மற்றும் இன்னபிற சட்டம் சார்ந்த விடயங்களைக் கையாளும் பொறுப்பும் இக்குழுவினருக்கு உரியதாகுமாம்.
 
05. பொருளாதார ஆலோசகர் சபை
இச்சபையில் தமிழினத்தைச் சார்ந்த பொருளாதார அறிஞர்களும், வெற்றி பெற்ற வர்த்தக  நிறுவனங்களின் தலைவர்களும், நிதி அமைச்சில் பணியாற்றிய, பணியாற்றும் தமிழ் அதிகாரிகளும் அங்கம் வகிப்பராம். வடகிழக்கில் அமைந்த பிராந்தியங்களின் தகுதிகளுக்கேற்ப பொருளாதார வளர்ச்சி பற்றி திட்டமிடும் பொறுப்பும் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் ‘தமிழர் நல்வாழ்வு நிதிய’ நிர்வாகத்தினை முன்னெடுக்கும் பொறுப்பும் இவர்களுக்கு வழங்கப்படுமாம்.
 
06. கல்வி ஆலோசகர் சபை
தமிழர் பாரம்பரிய கல்வி முறையை உட்படுத்தி, உலக கல்வி நிலையைச் சமப்படுத்தும் புதிய கல்வி நெறியை அறிமுகப்படுத்தும் பொறுப்பும் தொழில் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கல்விப் பாதையில் மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பும், மத்திய கல்வி அமைச்சின் ஆலோசனைகளுக்கப்பால் கல்லூரி, பாடசாலை முதலியவைகளை செம்மையுறச் செய்யும் திட்டங்களைத் தீட்டி அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் ஆராய்ச்சித் துறையில் மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பும் இவர்களுக்கு வழங்கப்படுமாம்.
 
07. கலை, பண்பாடு, கலாசார ஆலோசகர்கள் சபை
தமிழினத்தின் பாரம்பரியமான கலை, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை சீர்குலைக்காத வகையில், அவற்றை நவீனமயப்படுத்தி ஈழத்தவர்க்கான தனிப்பாணிகளை உருவாக்குதலும் இளையோர் மத்தியில் அவ்வாற்றல்களைப் புகுத்தலும் அவர்தம் ஆற்றல்களை உலகளாவி வெளிக்கொணர வழி செய்யதலும் ஒழுக்கயீனங்களால் சமுதாய சமநிலை தவறும் இடங்களில் அவற்றைச் சீர்செய்தலுமான பொறுப்புக்களும் இவர்களுக்கு வழங்கப்படுமாம். 
 
08. வெளிநாட்டுத்தொடர்பாளர்கள் சபை
இனப்பிரச்சினையில் அக்கறை கொண்டுள்ள வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணலும் தமிழர் சார்பான நிலைப்பாட்டால் அந்நாடுகள் பெறக்கூடிய ஆதாயங்களை அவர் தமக்கு இனங்காட்டுதலும் தமிழ்ப் பிரதேசங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் ஆதரவினையும் அந்நாடுகளிடம் பெறுவதற்கான வழிகள் சமைத்தலும் சமத்துவ வாழ்வுக்கான அந்நாடுகளின் அரசியல் நெறிகளை அறிந்து கொள்ளுதலும். நமது அரசோடு அந்நாடுகளைப் பேசச்செய்து அந்நெறிகளை புதிதாய் ஆக்கப்படும் அரசியல் அமைப்பில் இணைத்துக்கொள்ளச் செய்தலும் இவர்தம் கடமைகளாய் இருக்குமாம்.
 
09. பிராந்தியத் தொடர்பாளர்கள் சபை
வடக்கு, கிழக்கிற்கு உள்ளேயும் இலங்கை முழுவதினுள்ளும் இருக்கும் தமிழர்தம் பிராந்திய வேறுபாடுகளைக் களைதலும் அவற்றிற்கான ஒருமைப்பாட்டை உருவாக்குதலும் இப்பிராந்தியங்களில் கல்வி, பொருளாதாரம் முதலியவற்றால் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைதலும் மக்கள் நலன் நோக்கிய பொதுத்திட்டங்களில் பிராந்திய வேறுபாட்டுப் பாதிப்புக்கள் நுழையாமல் பார்த்துக் கொள்வதும் இவர்தம் கடமைகளாய் இருக்குமாம்.
 
10. இன நல்லுறவுத் தொடர்பாளர்கள் சபை
நாடு முழுவதும் பிரிவுற்றிருக்கும் இனங்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் களைதலும் ஏற்கனவே விழைந்த இனப்பகை பற்றிய விடயங்களை நீக்க முயலுதலும் எல்லா இனத்திலும் உள்ள நல்லவர்களை ஒன்றிணைத்து அவர்தம் குரலை ஓங்கச் செய்தலும் இளையோர் மத்தியில் இன ஒற்றுமையை உருவாக்க முயல்தலும் இவர்தம் கடமைகளாகுமாம்.
 
11. சமய நல்லுறவுத் தொடர்பாளர்கள் சபை
பிராந்தியங்களில் பலம் பெற்றிருக்கும் சமயங்கள் மற்றைய சமயங்களில் நலன்களைப் பாதிக்காவண்ணம் பார்த்துக்கொள்ளுதலும் மக்கள் தத்தம் சமயத்தைப் பேணுவதோடு மாற்றுச்சமயத்தை மதிக்கும் பண்பாட்டை உருவாக்குதலும் சமயச் சண்டைகளை நீக்க முயல்தலும் இவர்தம் கடமைகளாகுமாம்.
 
12. புலம்பெயர் இன அக்கறையாளர்கள் சபை
புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் தொகை இன்று எட்டரை இலட்சத்தையும் தாண்டி விரிந்திருப்பதாய் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இப்புலம்பெயர் தமிழர்கள் தத்தம் புகழ் நோக்கி தாய்மண்ணில் சில நற்காரியங்களை ஆற்றுகின்றனரேயன்றி ஒருமித்த அவர்களது ஆதரவுப்பலத்தை இன்னும் நம் இனம் பெறவும் பயன்படுத்தவுமில்லை. அதற்கான ஓர் புதுத்திட்டம் அமைக்கப்படல் வேண்டும் என்றும் முன் சொன்னாற்போல ஈழத்தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மேற்படி கூட்டமைப்பின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு நேர்மையான நிர்வாகிகள் அங்கு நியமிக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் மூலம் வாரத்திற்கு ஒருதரம் புலம்பெயர் தமிழர் ஒருவர் தாயகத்திற்காக ஒரு பிரித்தானியப்பவுண் வழங்கும் முறைமையை கொணரவேண்டும் என்றும் தலைவர்கள் தீர்மானித்துள்ளனராம். ஒரு பவுண் என்பது புலம்பெயர் தமிழர்களுக்கு மிகச் சிறிய தொகையேயாகும். (அவர்கள் ஒரு ‘பேகர்’ சாப்பிடுவதை விட குறைந்த தொகை) புலம் பெயர்ந்து வாழும் எட்டரை  இலட்சம் பேரில் குறைந்தது ஏழு இலட்சம் பேரையாவது இத்திட்டத்தில் இணைத்தால் மாதம் ஒருதரம் 7 இலட்சம் பவுண் நிதியாகக் கிடைக்கும். அது கிட்டத்தட்ட இலங்கைப் பணத்தில் பதினைந்து கோடி ரூபாவாகும். இப்பணத்தை நம் மண்ணுக்கு முறைப்படி கொண்டுவருவது பற்றி அரசுடன் பேசி வழி செய்யவேண்டும். இப்பணத்தைக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலுமாக ஒவ்வொரு மாதமும் சில பொருளாதாரக் கல்வித்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் அரசைச் சாராமலே நம் தாய்மண்ணை நாம் வளப்படுத்தலாம் என முடிவு செய்துள்ள தலைவர்கள் மேற்படி திட்டங்களை வகுத்து செயற்படுத்தும் அதிகாரத்தை இச்சபைக்கு வழங்கவுள்ளனராம்.
 
13. தாயகக் கட்டமைப்புத் திட்ட ஆலோசகர் சபை
இச்சபையில் நம் தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் பொறியியளாலர்களும் வரைபடக்கலைஞர்களும் அங்கம் வகிப்பராம். கடந்த பல ஆண்டுகளாக நமது தாயகப் பிரதேசம் கட்டமைப்புத் திட்டங்களுக்கு உட்படுத்தப்படாமல் பல்லாண்டுகளுக்கு முன் இருந்த நிலையிலேயே மீண்டும் மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றது. நவீன வளர்ச்சிக்கேற்பவும் உலக நாடுகளை சமப்படுத்தும் வகையிலும் நம் தாயகக்கட்டமைப்புத் திட்டம் நவீனமயப்படுத்தப்படுதல் வேண்டும். இத்தகு பொறுப்புக்களை நிறைவேற்றும் அதிகாரத்தை இச்சபை பெறுமாம்.
 
14. விவசாய முன்னேற்ற ஆலோசகர் சபை
நவீன விவசாய முறைகளை அறிமுகஞ் செய்தல், பிராந்திய நீர்வளங்களைப் பெருக்குதல், கால்நடை வளர்ப்பிலும் அவற்றின் பயன்களை சேமித்து விநியோகத்திலும் நவீன முறைகளைப் புகுத்துதல், விவசாயப் பயன்பாடுகளை சேகரித்துப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளை அமைத்தல், வடக்கு கிழக்கில் வெறுமையாய் உள்ள நிலப்பரப்புக்களைக் கையகப்படுத்தி விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துதல், வீட்டு விவசாயத்தை ஊக்கப்படுத்துதல் முதலிய விடயங்களை நிறைவேற்றும் அதிகாரத்தை இச்சபை பெற்றிருக்குமாம்.
 
15. போர் பாதிப்பாளர் நல்வாழ்வுத் திட்ட ஆலோசகர் சபை
நடந்து முடிந்த போரினால் பாதிப்புற்ற அங்கயீனர்கள், விதவைகள், அனாதைகள், சொத்திழந்தோர் போன்றோரின் நல்வாழ்வு மீட்புத்திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரத்தினை கொண்டிருக்கும் இச்சபை, புலம்பெயர் இன அக்கறையாளர் சபையினூடு பெறப்படும் நிதியத்தின் ஒரு பங்கை இப்பணிகளுக்கு பயன்படுத்துதல் பற்றி ஆராய்ந்து இச்சபை செயல்படுமாம்.
அரசியற்சபையின் பெரும்பான்மை அபிப்பிராயம் பெறப்பட்டே,
இச்சபைகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

➤➤➤

இதையெல்லாம் ஊடக நண்பன் சொல்லச்சொல்ல,
என் உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது போங்கள்.
உங்கள் நிலையும் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இவ்வளவும்தானா? என்றேன் நண்பனிடம்.
என்ன அவசரப்படுகிறாய் கொஞ்சம் பொறு என்றவன்,
மேலும் சில செய்திகளைச் சொன்னான்.
அவன் சொன்னவற்றைக் கேட்டு,
இத்தனை ஆற்றல்களையும் வைத்துக் கொண்டா,
நம் தலைவர்கள் இதுவரை சும்மா இருந்தார்கள் என ஆச்சரியப்பட்டேன்.
அவன் சொன்னவற்றையும் சொல்லி முடித்துவிடுகிறேன்.

➤➤➤

மேற்படி சபைகளைத் தவிர,
தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மொத்த சபை அங்கத்தவர்களை உள்ளடக்கி,
அரசியற்சபை, மக்கள்சபை என இருவகையான சபைகளை,
இக்கூட்டமைப்பினுள் உருவாக்குவார்களாம்.
இவற்றுள் அரசியற்சபை, இன முன்னேற்றம் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்குமாம்.
மக்கள் சபை அரசியற்சபையை சரியாக வழிநடத்தும் பொறுப்பினைக் கொண்டிருக்குமாம்.
அரசியற்சபையால் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்,
மக்கள் சபையால் ஏகமானதாகவோ பெரும்பான்மையாகவோ அங்கீகரிக்கப்பட்ட பின்பே,
நடைமுறைப்படுத்தப்படுமாம்.
மேற்படி அரசியற்சபையில் 9 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும்,
பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சிசபை உறுப்பினர்களும் அங்கம் வகிப்பார்களாம்.
முரண்பாடுகள் ஏற்படின் வாக்களிப்பில்,
பாராளுமன்றத் தலைவர்களுக்கு ஐந்து வாக்குகளும்,
மாகாணசபை உறுப்பினர்களுக்கு மூன்று வாக்குகளும்,
உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு ஒரு வாக்கும் வழங்கப்படுமாம்.
அவர்கள் அனைவரும் ஒன்று கூடி,
ஏகமனதாக அல்லது பெரும்பான்மையாக எடுக்கும் முடிவுகள்,
மக்கள்சபையில் சமர்ப்பிக்கப்பட்டு,
பெரும்பான்மை பற்றி அங்கீகரிக்கப்பட்ட பின்பே,
அவை நடைமுறைப்படுத்தப்படுமாம்.

➤➤➤

மக்கள்சபையில் மேற்படி பதினைந்து குழுக்களிலும் உள்ள ஒவ்வொருவர் அங்கம் வகிப்பார்களாம்.
அங்கம் வகிக்கும் உறுப்பினரை அந்தத்தச் சபையினரே தேர்ந்தெடுத்து,
மக்கள்சபைக்கு அனுப்பி வைப்பார்களாம்.
அரசியல்சபை, மக்கள்சபை ஆகியவற்றின் கூட்டங்களும்,
அவ்விரண்டு சபைகளும் இணைந்து நடத்தும் கூட்டமும் மாதம் ஒருதரம் நடாத்தப்படுமாம்.
மக்கள்சபையில் அமைந்துள்ள பதினைந்து குழுக்களும்,
வாரந்தோறும் தனித்தனி சந்தித்து,
தத்தம் துறை சார்ந்த மக்கள் நலம் பற்றிய திட்டங்களை வடிவமைக்குமாம்.
அங்ஙனம் அவர்களால் வடிவமைக்கப்படும் திட்டங்கள்,
அரசியல்சபை, மக்கள்சபை ஆகியவை இணைந்து நடாத்தும் கூட்டங்களில்,
பெரும்பான்மை பற்றி அங்கீகரிக்கப்பட்ட பின்,
அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை,
அரசியல்சபை ஏற்றுக்கொள்ளுமாம்.
மாகாணசபை, உள்ளூராட்சிசபை ஆகியவற்றில்,
எதிரணிகள் இருக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இல்லாமல் போவதால்,
மேற்படி கூட்டமைப்பின் உறுப்பினர்களே,
கொண்டு வரப்படும் திட்டங்களை திறந்த மனதோடு விவாதித்து,
மக்கள் நலம் நோக்கி அத்திட்டங்களை நெறிப்படுத்தவேண்டும் என்றும்,
தலைவர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.

➤➤➤

உங்கள் மனநிலை எப்படியோ தெரியவில்லை.
மேற்சொன்ன செய்திகளை ஊடக நண்பன் விபரித்ததும்,
என் கால்கள் தரையிலிருந்து மேலே கிளம்பிப் பறப்பதாய் உணர்ந்தேன்.
இனி என்ன? ஈழத்தமிழினத்தை எவராலும் அசைக்க முடியாது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று தலைவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
தலைவர்கள் உணர்ந்தால் இனி மக்களும் உணர்வார்கள்.
‘அவன் கெட்டவன்’, ‘இவன் நல்லவன்’ என்று பிரிவுகள் பேசி,
நம்மை நாமே பலயீனப்படுத்தும் துன்பம் இனி தொலைந்து போகும்.
ஆளுக்கொருவராய் அறிக்கைகள் விட்டு சீர்குலைந்த நம் இனம்,
இனி எதிரிகள் உள் நுழையாவண்ணம் இறுக்கமுறும்.
ஒற்றுமைப் பலத்தை எவர்தான் மதிக்காமல் இருக்கமுடியும்?
தமிழர்கள் தலைநிமிரப் போவதை எவராலும் இனி தடுக்க முடியாது,
என்றெல்லாம் எண்ணி என் மனம் துள்ளியது.
‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்று,
உரக்கக் கூவியபடி உற்சாகத்தில் ஒரு துள்ளுத்துள்ளினேன்.

➤➤➤

‘தொப்படீடீடீடீர்’ என்று ஒரு சத்தம்.
முதுகு கையெல்லாம் ஒரே வலி.
என்ன நடந்தது என்று நிதானிப்பதற்கு முன்?
வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் அறைக்குள் ஓடி வந்தார்கள்.
தரையில் இழுத்துப் போடப்பட்ட திமிங்கலம் போல,
கட்டிலால் நிலத்தில் விழுந்து கிடக்கும் என்னைப் பார்த்து,
‘என்ன?’, ‘என்ன?’ என்று எல்லோரும் பதறினார்கள்.
அரைத்தூக்கத்தில் இருந்த நான்,
‘ஆர் விழுந்தால் என்ன? தமிழினம் இனித் தலைநிமிர்ந்து விடும்,
நம் தலைவர்கள் ஒன்றுபட்டு விட்டார்கள்,
வாழ்க! தமிழ் இன உரிமை மீட்புக் கூட்டமைப்பு’ என்று உரத்துக் கூவ,
எல்லோரும் என்னைக் கவலையாய்ப் பார்த்தார்கள்.
‘தலையில் அடிபட்டிருக்கும் போல,
ஆளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவம்’ என்று டாக்டர் நண்பர் சொல்ல,
ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொருவராய்ப் பிடித்து என்னைத் தூக்க முனைகிறார்கள்.
முழுமையாய்த் துயில் கலைய, அப்போதுதான் நான் கண்டது கனவு என்பதும்,
கனவில் துள்ளிய துள்ளலில் கட்டிலால் விழுந்திருக்கிறேன் என்பதும் தெரிகிறது.
கண்ணோரத்தில் கண்ணீர்.
விழுந்த வலியால் அல்ல. இனிய கனவு முடிந்த வலியால்.
கனவிலாவது நல்லதைக் கண்டேனே!
கனவுதான் வெற்றியின் முதல்படி என்றார் அப்துல்கலாம்.
யார் கண்டது? தமிழர்க்கு நல்ல காலம் வரும் போது,
என் கனவும் நனவாகும் போல!.

http://www.uharam.com/2018/01/blog-post_17.html

கவிஞர் வைரமுத்துவின் " ஆண்டாள் கட்டுரை " குறித்த எழுத்தாளர் ஞானி அவர்களின் வாழ்வின் இறுதி விமர்சன உரை...

3 months 1 week ago

கவிஞர் வைரமுத்துவின் " ஆண்டாள் கட்டுரை " குறித்த எழுத்தாளர் ஞானி அவர்களின் வாழ்வின் இறுதி விமர்சன உரை...

 

 

உலக தமிழ் மாநாடு குறித்து விரைவில் அறிவிப்பு

3 months 1 week ago

உலக தமிழ் மாநாடு குறித்து விரைவில் அறிவிப்பு

sam3883f83f5026489a.md.jpg

அடிமைகள் மாநாடு நடத்தினால் அது முதலாளிகள் மாநாடாத்தானே இருக்க முடியும்? ரெல் மீ கிளியர்லி :rolleyes:

டிஸ்கி :

போகட்டும் தலையில் இடியே விழுந்தாலும் யாரும் வர வேண்டாம் என அன்போடு கேட்டு கொள்ளபடுகிறார்கள் !! :cool:

அழைத்தார் பிரபாகரன்

3 months 1 week ago

prabhakaran.jpg

 

ஏப்ரல் 7. 2002. ஞாயிறு பிற்பகல். மதிய உணவுக்குப் பின்னான சோம்பலான வேளை. லேசான உறக்கத்தில் இருக்கிறார் வாப்பா அப்துல் ஜப்பார். தொலைபேசி ட்ரிங்குகிறது. எடுத்துப் பேசுகிறார். விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அழைக்கப்படுகிறார். தமிழீழத் தேசியத்தலைவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.


நூலின் முதல் வரியிலேயே துவங்கிவிடும் வேகம் நாற்பத்தி எட்டாவது பக்கத்தில் முடியும் வரை சற்றும் குறையவேயில்லை. பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ‘ஸ்கூப்’ தகவல்களுக்கே உரிய பரபரப்பான ரிப்போர்ட்டிங் பாணியில் மிக எளிய மொழி கட்டமைப்பில் எழுதப்பட்டிருக்கிறது ‘அழைத்தார் பிரபாகரன்’. வாசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் நிச்சயம் ‘ஜிவ்’வென்று இருக்கும்.

பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அன்றைய நாட்களை எப்படி இவ்வளவு துல்லியமாக நினைவுக்கு கொண்டுவந்து ஜப்பார் எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சென்ற நாளிலிருந்து அவர் சந்திக்க நேர்ந்த மனிதர்கள், இடங்கள், உண்ட உணவு, அடைந்த உணர்வு என்று அனைத்தையுமே அங்குல அங்குலமாக நாமே நேரில் சென்று வந்ததைப் போன்ற உணர்வை தரும் விவரிப்பு. இன மேலாதிக்க மனோபாவ நாடுகளின் சதியால் முற்றிலுமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்டுவிட்ட ‘தமிழ் ஈழம்’ என்கிற தமிழர்களின் நாடு எப்படியிருந்தது என்பதற்கு வரலாற்று சாட்சியாக, ஆவணமாக இந்நூலை கொடுத்திருக்கிறார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தவற்றையெல்லாம் எழுதி பக்கத்தை கூட்டவில்லை. அதையெல்லாம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிகைகளில் நாம் வாசித்துவிட்டோம். தொலைக்காட்சியில் பார்த்துவிட்டோம். எனவே அதை மிகக்கவனமாக தவிர்த்திருக்கிறார். இந்நூலின் நாற்பத்தியெட்டு பக்கங்களுமே இதுவரை நாமறியாத சம்பவங்களை எக்ஸ்க்ளூஸிவ் தன்மையோடு கொடுக்கிறது.

அய்யாவுக்கு விருந்தோம்பல் செய்ய பணிக்கப்பட்ட பெண்புலி, ஊன்றுகோல் கொண்டு சிரமப்பட்டு நடந்தாலும் முகத்தில் நிரந்தரப் புன்னகையோடு வலம் வந்த தமிழ்ச்செல்வன், அய்யாவை ஆரத்தழுவி வரவேற்ற தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், அய்யாவை வழியனுப்பி வைக்க பணிக்கப்பட்ட இளைஞர் பவநந்தன் என்று அப்பயணத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அழுத்தமான சித்திரங்களை நம் மனதில் உருவாக்குகிறார்.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த பத்திரிகையாளர்களில் அய்யா ஜபாரை மட்டும் தனியாக அழைத்து பிரத்யேகமாக சந்தித்தார் பிரபாகரன். “உங்களுடைய ரசிகன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரோடு பிரபாகரன் நிகழ்த்திய உரையாடல்தான் நூலின் மையச்சரடு.

அந்த அற்புத நேரத்தை இவ்வாறாக விவரிக்கிறார்.

குழந்தையைப் போல ஓடிச்சென்று கடிப்பிடிக்க ஆசை. ஆனால் ஆயுதமேந்திய அந்த இளைஞர்கள் ஒரு கணம் என் எண்ணத்தில் மின்னி மறைந்தனர். என்னையும் எண்ணத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு சிலையாக நின்றேன். என்னை நெருங்க, நெருங்க அவருடைய நடையின் வேகம் கூடுகிறது. நெருங்கி வந்து அப்படியே கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்கிறார். அவரது தாடை என் தோளில். இன்னும் பிடி இறுகுகிறது. “நான் உங்கள் பரம ரசிகன் அய்யா” என்கிறார்.

உறவுகளிடம் விடை பெற்று நாடு திரும்பும்போது ஓர் இராணுவ அதிகாரியோடு அய்யாவின் உரையாடல்.

“பிரபாகரன் எப்படி இருக்கிறார்?”

“நன்றாக இருக்கிறார்”

“ஓ. நாங்கள் இலங்கையர். அதனால் சகோதரர்கள். ஆனால் விதியின் குரூரம் நாங்கள் எதிரெதிர் முகாம்களில் இருக்கிறோம்”

“ஆம். அப்படிதான்”

“உங்களுக்கு ஒன்று தெரியுமா, இஸ்ரேலின் மோஷே தயானுக்கு பிறகு ராணுவ திட்டமிடலில் பிரபா வல்லவர். அவரைப்பற்றி நான் பெருமைப்பட வேண்டும்”

அனேகமாக ராஜபக்‌ஷேவும்கூட இந்த அதிகாரியை போலதான் பிரபாகரனை மதிப்பிட்டிருப்பார். இதைவிட வேறென்ன பெருமை வேண்டும் நமக்கு?

நூல் : அழைத்தார் பிரபாகரன்
எழுதியவர் : சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
பக்கங்கள் : 48
விலை : ரூ.50
வெளியீடு : தமிழ் அலை, 80/24-B, பார்த்தசாரதி பேட்டை தெரு,
தேனாம்பேட்டை, சென்னை-600 086.
போன் : 044-24340200 மின்னஞ்சல் : tamilalai@gmail.com

யுவகிருஷ்ணா

http://www.luckylookonline.com

Checked
Tue, 04/24/2018 - 03:46
முற்றத்து மல்லிகை Latest Topics
Subscribe to முற்றத்து மல்லிகை feed