புதிய பதிவுகள்2

விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.

3 months 1 week ago
கப்பலில் வந்த போராளி ஒருவரை உளவாளியை ((எம்மவர்) வைத்து அவரின் நண்பர்களின் உரையாடல், text, email போன்றவற்றின் மூலம் புலிகளுடன் தொடர்புடையவர் என நிறுவிய பின் அவரை திருப்பி அனுப்ப கனேடிய குடிவரவு தேடி திரிந்தது. அவர் சில காலம் தலை மறைவாகி பின்னர் வேறொரு நாட்டுக்கு சென்று வாழ்கிறார்.

ஊருலா

3 months 1 week ago
பிறகேன் அங்க போவான்......! 😴 நான் 2ம் பக்கத்தில் கந்தையரின் பதிவுக்கு பதில் போட்டேன் ......பின் 3ம் பக்கத்தைப் பார்க்க பிரியனும் அதே பதில் போட்டிருக்கிறார் ........சேம் பிளட் ........! 😂

ஊருலா

3 months 1 week ago
கவி அருணாச்சலம் போன்ற வயோதிபர்கள் இடங்களை பார்க்க தான் போவார்கள் கிருபனுக்கும் இடங்கள் பிடித்து கொண்டது போல. எனவேதான் போக ஆசைப்படுகிறாரோ?? ஆகவே மனைவியும் போனால் துணையாக இருக்கும்

பிரதமர் மோடியை விமர்சித்த மாலைதீவின் அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம்!

3 months 1 week ago
பிரதமர் மோடியை விமர்சித்த மாலைதீவின் அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம்! பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த மாலைதீவைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, SNORE KILLING எனப்படும் ஆழ்கடல் நீச்சலுக்கான உடையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு மாலைதீவுக்குப் பதிலாக லட்சத்தீவைப் பரிந்துரைக்கும் விதத்திலும் அமைந்தன. இதையடுத்து மாலைதீவைச் சேர்ந்த அமைச்சர்களான மரியம் ஷியுனா, மல்ஷா மற்றும் ஹசன் ஜிஹான் ஆகியோர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இக்கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,மாலைதீவு அரசு குறித்த அமைச்சர்கள் மூவரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்ததோடு இது குறித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது. குறித்த அறிக்கையில்” வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நபர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தரக்குறைவான கருத்துக்கள் பதிவேற்றப்பட்டு இருப்பது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இந்த கருத்துகள் தனிப்பட்டவை. அவை மாலைதீவு அரசாங்கத்தின் கருத்துகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. இதுபோன்ற தரக்குறைவான கருத்துகளை கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்க மாட்டார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தமது பயணத்தை இரத்து செய்துள்ளனர். அத்துடன் Boycott maldives என்ற ஹேஷ்டேக்கும் தற்போது டிரென்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1365269

ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?

3 months 1 week ago
இந்த திரியில் சாதி மத பேதங்களை இடைச் செருகியது தாங்கள்… காமாலை நோய் வந்து மாறியவனை தொடர்ந்தும் திட்டுவதில் பிரயோசனம் இல்லை. இங்கு தாழ்வுச் சிக்கல் யாருக்குள்ளது என்பது தெள்ளத் தெளிவு…..

முல்லை. புதுக்குடியிருப்பு, உடையார்க்கட்டு வீட்டுக் கிணற்று நீரில் மண்ணெண்ணெய்!

3 months 1 week ago
“புதைக்கப்பட்ட மண்ணெண்ணெய் லீக்காகி தற்போது நிலத்தடி நீரில் கசிந்துள்ளதோ என்ற சந்தேகமும்” விளங்கிடும்…..

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 1 week ago
லெபனானில் இஸ்ரேல் விமான தாக்குதல் - ஹெஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி பலி Published By: RAJEEBAN 09 JAN, 2024 | 10:49 AM லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். தென்லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு விசாம் டவில் என்பவரே கொல்லப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது. ஹெஸ்புல்லா அமைப்பின் விசேட படையணியான ரட்வான் படையணியின் முக்கிய உறுப்பினரான விசாம் டவில் என்பவரே இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேலிய இராணுவம் இது குறித்து கருத்து தெரிவிக்காத அதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பினர் தங்களை நோக்கி தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. கிர்பேர்ட் செலிமின் டப்சா பகுதியில் கார் ஒன்றை இலக்குவைத்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள மேற்கொண்ட விமானதாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமானதாக்குதல் காரணமாக கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.எரிந்த கார் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/173477

ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் கோரிக்கையை ஏற்று 17 பேரையும் விடுவித்த யாழ்ப்பாண நீதிமன்றம்

3 months 1 week ago
08 JAN, 2024 | 10:55 PM 2023 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினத்தின் போது ஜனாதிபதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வரும் போது அதற்கு எதிராக எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தமை, தெற்கில் இருந்து பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட இரு குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 17 நபர்களை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்தது. குறித்த வழக்கானது இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக் கொண்டபோதே இவ் வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த மன்றில் ஆயராகிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சாள்ஸ் நிர்மில நாதன், செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், சிவில் அமைப்பினர்கள், வேலன் சுவாமிகள், சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர்கள் நீதிவான் நீதிமன்றில் ஆயராகியிருந்தனர். குறித்த வழக்கில் சட்டத்தரணியாக மன்றில் ஆயராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.டி.தவராஜா உடன் இருந்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பொலிஸாரின் மேலதிக விசாரணைக்காக சட்டமா திணைக்களத்தின் ஆலோசனை பெறவுள்ளதாக மன்றில் பொஸிஸார் கூறியிருந்தனர். அதற்கான விண்ணப்பம் ஒன்றினை மன்றில் நான் சட்டத்தரணியாக சமர்ப்பித்திருந்தேன். இந்த வழக்கில் ஈட்டு அனைவரையும் விடுதலை செய்யுமாறு விண்ணப்பம் செய்து இருந்தேன். அதனை கேட்ட யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.ஆனந்தராஜா வழக்கினை கிடப்பில் போட்டு சகலரையும் விடுதலையாக்கினார் - என்றார். https://www.virakesari.lk/article/173459

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 months 1 week ago
சர்வகட்சி மாநாட்டினைக் கலைத்துப் போட்ட ஜெயவர்த்தன‌ மார்கழி 26 ஆம் திகதி அமைச்சரவையில் பேசிய ஜெயார், தான் முன்வைத்த பரிந்துரைகளை முற்றாகக் கைவிடுவதாகவும், சர்வகட்சி மாநாட்டினைக் கலைக்கப்போவதாகவும் அறிவித்தார். சர்வக‌ட்சி மாநாட்டின் பேச்சாளரான அதுலத் முதலி இதனை அமைச்சரவை முடிவென்று அனைவருக்கும் அறிவிக்குமாறு ஜெயாரினால் பணிக்கப்பட்டார். அன்று மாலை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த லலித்தும், ஜெயார் தன்னைப் பணித்தவாறே "இது அமைச்சரவையின் முடிவு" என்று கூறினார். மேலும், அரச அறிவிப்பொன்றையும் அன்றைய தினம் வெளியிட்டார், "சர்வகட்சி மாநாட்டின் பெரும்பான்மை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட சில பரிந்துரைகள், மார்கழி 19 ஆம் திகதி அமைச்சரவையின் முன்னால் கலந்துரையாடலுக்காக முன்வைக்கப்பட்டிருந்தன. மீண்டும் அவை மார்கழி 26 ஆம் திகதி கலந்துரையாடப்பட்டன. இதேவேளை, மார்கழி 21 வரை அரச பிரதிநிதிகள் முன்வைத்த அரசாளும் பொறிமுறை மற்றும் அதிகாரப் பரவாலாக்கம் குறித்து தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்துவிட்டு தற்போது அவைகுறித்துப் பேசுவதில் பயனேதும் இல்லையென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி திடீரென்று அறிவித்திருக்கிறது. ஆகவே, இக்கலந்துரையாடல்கள் மூலம் உருப்படியான தீர்வொன்றும் கிடைக்கப்பெறாது என்கிற முடிவிற்கு அமைச்சரவையும் வந்திருக்கிறது. மேலும், இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றினைத் தொடர்ந்தும் தேடும் அதேவேளை, பயங்கரவாதத்தினை இந்நாட்டிலிருந்து முற்றாக அழிக்க தேவையான அனைத்தையும் செய்யும்படி அமைச்சரவை ஜனாதிபதியைக் கேட்டிருக்கிறது" என்று லலித் வெளியிட்ட அறிக்கை கூறியது. இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வில் முற்றாக இறங்கிய ஜெயார் தனது இராணுவத்தைக் கட்டியெழுப்ப ஜெயாருக்குத் தேவைப்பட்ட ஒருவருட காலத்தினை எதுவித பயனுமற்ற சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டி, அதனை ஒருவருட காலத்திற்கு அலைக்கழித்து, ஈற்றில் முடிவுகள் எதுவும் எட்டப்படாது முடித்துவைத்ததன் மூலம் ஜெயார் பெற்றுக்கொண்டார். இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பின்னர், இந்தியாவால் தன்மீது பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தம் ஏறக்குறைய முற்றாகத் தளர்ந்துவிட்டிருந்த நிலையில், முழுமூச்சூடன் பயங்கரவாதத்தினை அழிக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார் ஜெயார். அன்றிரவே ஜெயாரின் இராணுவ ரீதியிலான தீர்வுக்கான முதற்படி எடுத்துவைக்கப்பட்டது. கொழும்பில் வசித்துவந்த சுமார் நான்காயிரம் தமிழ் இளைஞர்கள் அன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டார்கள். நான்கு நாட்களுக்குப் பின்னர், மார்கழி 30 ஆம் திகதி தேசியப் பாதுகாப்பு அமைச்சரான லலித் அதுலத் முதலி வடக்கில் கடுமையான இராணுவக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், சில பகுதிகளில் மக்கள் நடமாட்டம் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். வன்முறையற்ற வழியில் மீண்டும் போராடப்போவதாக தமிழ்நாட்டில் அறிவித்த அமிர் மனமுடைந்த மனிதராக அமிர்தலிங்கம் சென்னை திரும்பினார். ஆனாலும், தமிழ் மக்களால் கைவிடப்பட்ட அகிம்சை வழிப் போராட்டத்தை அவர் அப்போதுகூடக் கைவிட விரும்பவில்லை. தமிழ்நாடு, கரூரில் ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய அமிர்தலிங்கம் தனது கட்சி வெகுவிரைவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்கவிருப்பதாகக் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பத்திரிக்கையான சுதந்திரனின் முன்னாள் ஆசிரியர், அமிர்தலிங்கத்தின் பேச்சினை கேலி செய்தார். மாதாந்தப் பத்திரிக்கையான "வீர வேங்கையில்" அவர் பின்வருமாறு எழுதினார், "அமிர்தலிங்கத்தின் செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். இவ்வளவு காலமும் ஜெயவர்த்தனவுடன் பேசிய அமிர்தலிங்கம் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பினை ஏற்றுக்கொண்டிருக்கிறார். தற்போது சர்வகட்சி மாநாடு தோல்வியடைந்ததையடுத்து சத்தியாக்கிரகப் போராட்டம் பற்றிப் பேசுகிறார்". "இவ்வகையான சத்தியாக்கிரக போராட்டங்களை நம் பலமுறை பார்த்தாயிற்று. அவர்கள் ஒரு ஆலய முன்றலில் அமர்ந்துகொள்ள, மங்கையட்கரசி அமிர்தலிங்கம் பாடல்களைப் பாடுவார். மாலையில் பழச்சாற்றினை அருந்துவிட்டு தமது சத்தியாக்கிரகத்தை அவர்கள் முடித்துக்கொள்வார்கள். இது ஜெயவர்த்தனவின் செயற்பாட்டில் எந்தவித தாக்கத்தினையும் ஏற்படுத்தப்போவதில்லை" "ஆனால், தமிழ்ப் போராளி அமைப்புக்கள் கடந்த ஆவணியில் இருந்து ஜெயாரின் அரசின் மீது அழுத்தத்தினை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டனர். ஜெயவர்த்தன, வன்முறையற்ற அகிம்சா வழிப் போராட்டங்கள் கேலிக்கூத்தானவை என்பதை அமிர்தலிங்கத்திற்கு நன்கு விளக்கியிருக்கிறார்" என்று எழுதினார். ஜெயார் படைக்க விரும்பிய சரித்திரம் 1977 ஆம் ஆண்டு ஆட்சியில் ஏறியபோது ஜெயவர்த்தனவுக்கு இருந்த ஒற்றை நோக்கம் தான் சரித்திரம் படைக்கவேண்டும் என்பதுதான். ஆகையால், டெயிலிநியூஸ் பத்திரிகைக்கு அவர் கொடுத்த ஆணையின்படி அவரது பேச்சுக்கள் அனைத்தும் முழுவதுமாக, அவர் பேசிய விதத்தில் பிரசுரமாகியிருந்தன. அவை வரலாற்று ஆவணங்கள் என்று அவர் கூறிக்கொண்டார். ஆனால், இலங்கைக்கு அவர் வழங்கிய ஒற்றைச் சரித்திரம் : ஒரு சமூகம் தனது உரிமைகளுக்காக வன்முறையற்ற வழியில் போராட முடியாது என்பதுதான் !

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 months 1 week ago
மாகாணசபை முறைமையினை வைத்து அரசியல் சித்துவிளையாட்டில் இறங்கிய ஜெயவர்த்தன‌ ஜெயவர்த்தன முன்வைத்த பரிந்துரைகள், இப்பரிந்துரைகள் மூலம் அவர் அடைய எத்தனிக்கும் இலக்குகள், அவற்றிற்கான காரணங்கள் என்பவற்றை சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளரான அதுலத் முதலி உறுப்பினர்களுக்கு விளக்கினார். மேலும், ஜெயாரினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் சட்டமாக்கப்படுவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படுமுன்னர் மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் மறுநாள் பேசிய பிரேமதாச ஜெயாரின் பரிந்துரைகளை மக்களுக்கு விளங்கப்படுத்தினார். மேலும், இப்பரிந்துரைகள் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியனவா இல்லையே என்பதை பொதுமக்கள் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலம் அரசிற்கு அறியத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிரேமதாசவைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஜெயார், மாகாண சபைகள் முறையும், இரண்டாவது சபையும் சமஷ்ட்டி முறைமையினை அரசியல் அமைப்பிற்குள் கொண்டுவராது என்றும், இதனால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏதும் ஏற்படப்போவதில்லையென்றும் கூறினார். தன்னால் முன்வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைகள் முறைமையானது மாவட்ட சபைகளைக் காட்டிலும் சற்று அதிகமான அதிகாரங்களைக் கொண்டிருக்கிறதென்றும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது தனிநாட்டுக் கொள்கையினைக் கைவிடச் செய்ய மாகாணசபை முறைமையினை தான் முன்வைக்கவேண்டியதாயிற்று என்றும் பேசினார். தமிழர்களுக்கு சிறிதளவேனும் அதிகாரங்கள் பகிரப்படுவதை மீண்டும் ஒருமுறை எதிர்த்த பெளத்த மாகா சங்கம் தமிழர்களுக்கு, மாவட்ட சபைகளைத் தாண்டி சிறிதளவேனும் அதிகாரங்கள் பகிரப்படுவதை பெளத்த மகாசங்கம் முற்றாக எதிர்த்தது. பெளத்த அடிப்படைவாத மதகுருவும், சிங்கள அரசியலில் பெருமளவு செல்வாக்கைச் செலுத்திவந்தவருமான மதிகே பண்ணசீக தேரை எனும் பிக்கு, சிறி-ஜயவர்த்தனபுர‌ பகுதியில் அமைந்திருக்கும் நாகவிகாரையில் அனைத்து பெளத்த பீடங்களினதும் பிக்குகளை அழைத்து கூட்டம் ஒன்றினை நடத்தினார். அங்கு பேசிய பண்ணசீக தேரை, ஜெயாரினால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் மாகாணசபை முறைமை நாட்டின் அரசியலமைப்பிற்கும், பெளத்த மதத்திற்கும், சிங்கள இனத்திற்கும், மொத்த நாட்டிற்கும் கடுமையான ஆபத்தினை ஏற்படுத்தப் போவதாகக் கூறி, இதனைத் தடுத்து நிறுத்த பெளத்த பிக்குகள் அனைவரும் சத்தியாக்கிரக நிகழ்வொன்றில் பங்கெடுக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த ஜெயார் எதிர்ப்புத் தரப்பினரும் மாகாணசபை முறைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தத் தொடங்கினர். முன்னணியில் இருந்த மிதவாதிகளும், தீவிரவாதிகளும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசியல்க் குழு கொழும்பில் கூடி ஜெயவர்த்தன பரிந்துரை செய்திருக்கும் ஆலோசனைகள் பற்றி விவாதித்தது. சிவசிதம்பரமும், கட்சியில் இருந்த ஏனைய தீவிரவாத கருத்துக்கொண்டோரும் மாகாணசபை முறைமை தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானவை அல்ல என்று கூறி, இந்த பரிந்துரைகளை கட்சி நிராகரிக்க வேண்டும் என்று கோரினர். ஆனால், அமிர்தலிங்கம் உட்பட கட்சியில் இருந்த மிதவாதிகள், ஜெயார் முன்வைத்திருக்கும் பரிந்துரைகள் திருப்திகரமானவையாக இல்லாவிட்டாலும் கூட அவற்றினை நிராகரிக்கக் கூடாது என்று வாதிட்டனர். இப்பரிந்துரைகளை நிராகரிப்பதன்மூலம் எதிர்காலப் பேரம்பேசலுக்கான கதவுகளை முற்றாகவே அடைத்ததாகப் போய்விடும் என்றும் அவர்கள் தர்க்கித்தனர். மேலும், இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் அவற்றினை மெருகூட்ட ஜெயாருடன் தொடர்ந்து பேச்சுக்களில் ஈடுபடலாம் என்றும் அவர்கள் கூறினர். ஆனால், முன்னணியினரின் மிதவாதிகள் குழாம் கொண்டிருந்த நம்பிக்கைகள் எல்லாம் சர்வகட்சி மாநாடு மீண்டு மார்கழி 21 ஆம் திகதி கூடியபோது தவிடுபொடியாகியது. கட்சிகளின் பிரதிநிகளிடம் பேசிய ஜெயார், தான் முன்வைத்த பரிந்துரைகள் தொடர்பான தத்தமது கருத்துக்களை எழுத்து வடிவில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், தனது பரிந்துரைகளை கவனமாகச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்று பெளத்த மகாசங்கத்தினரை அவர் கோரினார். இப்பரிந்துரைகளுக்கு ஆதரவுகோரி சர்வஜன வாக்கெடுப்பையோ அல்லது தேர்தல் ஒன்றையோ நடத்த அரசு திட்டமிடுவதாகக் கூறியதோடு, இதுவரையில் நடைபெற்ற சர்வகட்சி அமர்வுகளூடாகக் கிடைக்கப்பெற்ற முடிவுகளைக் கொண்டு நாட்டிற்கு அமைதியையும், ஸ்திரத்தன்மையினையும், ஒற்றுமையினையும் கொண்டுவர முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறினார். பின்னர் பிறிதொரு நாளுக்கு மாநாட்டினை அவர் ஒத்திவைத்தார். மாநாடு பிறிதொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படுவதை அமிர்தலிங்கம் எதிர்த்தார். பரிந்துரைகள் குறித்து தான் அறிக்கையொன்றினை வெளியிட அனுமதி தருமாறு கோரினார். ஆனால், அவருக்கான அனுமதி மறுக்கப்பட்டது. தனது ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஜெயார் வெளியேறிச் சென்றார். இது முன்னணியினரைப் பாதித்தது. அன்றிரவு முன்னணியின் அரசியற்குழு மீண்டும் கூடியது. ஜெயார் மீது நம்பிக்கை வைத்ததற்காக அமிர்தலிஙம் மீது கடுமையான விமர்சனங்களை தீவிரவாத எண்ணங்கொண்ட குழாமினர் முன்வைத்தனர். மேலும், கொழும்பில் தமிழர்கள் மீது கடுமையான கெடுபிடிகளை நடத்த இராணுவம் தயாராகி வருவதாகவும் கூட்டத்தில் அறிவித்தனர். மார்கழி 22 ஆம் திகதி இரண்டு பக்கம் கொண்ட தனது அறிக்கையினை அமிர்தலிங்கம் வெளியிட்டார். அவரது அறிக்கையின் இறுதிப்பகுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது, ".........சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை மிகக் கவனமாகப் படித்தபின்பு, இணைப்பு "சி" இல் குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் எனும் ஆலோசனையினை விட மிகவும் குறுகிய அதிகாரங்களையே அது கொண்டிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். நாம் 1980 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் முறையினை ஏற்றுக்கொண்டோம். அது தனிநாட்டிற்கு நிகரான தீர்வு இல்லையென்று நன்கு தெரிந்தும் நாம் அதனை ஏற்றுக்கொள்ள முன்வந்திருந்தோம்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிமா தனது ஐந்து பக்க அறிக்கையில் இப்பரிந்துரைகளை நிராகரிக்குமாறு மக்களைக் கேட்டிருந்தார். "இந்நாட்டு மக்கள் ஜெயாரின் பரிந்துரைகளை முற்றாகவும், முழுமையாகவும் நிராகரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்" என்று கூறினார். சிறில் மத்தியூவை அமைச்சுப் பொறுப்பிலிருந்து நீக்கிய ஜெயவர்த்தன‌ கைத்தொழில் அமைச்சராகவிருந்த சிறில் மத்தியு, "வணக்கத்திற்குரிய மதகுருக்களே, மதிப்பிற்குரிய அமைச்சர்களே, மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களே, எனது நண்பர்களே..." என்று ஆரம்பித்து கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார். அக்கடிதத்தில் ஜெயார் முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும்படி எவரையும் தன்னால் கேட்டுக்கொள்ள முடியாது என்று கூறினார். மேலும், அரசாங்கம் இப்பரிந்துரைகளை முற்றாகக் கைவிட்டு விட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து தனது அமைச்சரவையிலிருந்து சிறில் மத்தியூவை ஜெயார் உடனடியாக நீக்கினார். அமைச்சரவை கடப்பாடுகளை மீறிவிட்டார் என்று சிறில் மத்தியூ மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவரை நீக்கியதற்காக எவருமே வாய்திறக்கவில்லை. சிறில் மத்தியூ அனைவரினதும் எண்ணங்களில் இருந்து மறைந்துபோனார். அவரது பதவிநீக்கமும், முற்றான அகற்றலும் கூறிய விடயம் யாதெனில், அன்று ஜெயாரே சர்வ வல்லமை பொறுந்திய தனி மனிதராக அரசாங்கத்தில் இருந்தார் என்பதுதான். மற்றையவர்கள் எல்லோரும், குறிப்பாக சிறில் மத்தியூ, காமிணி திசாநாயக்க, லலித் அதுலத் முதலி ஆகிய எல்லோருமே ஜெயாரினால் உருவாக்கப்பட்டவர்கள் தான். ஆனால், தானே உருவாக்கிய அமைச்சர்களால் தான் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக நாட்டையும், சர்வதேசத்தையும் நம்பவைப்பதில் அவர் வெற்றிகண்டார். ஆனால், அது உண்மை கிடையாது. அவர் அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தையான "சூழ்நிலையின் கைதி" கூடக் கிடையாது. ஏனென்றால் அவர் தனக்குத் தேவையான சூழ்நிலைகளை தானே உருவாக்கிக் கொண்டார்.

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 months 1 week ago
இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தம் நடைபெற்றபோது இதே உன்னிக்கிரிஷ்ணன் இந்திய தரப்பால் முன்னெடுக்கப்பட்ட இரகசிய காய்நகர்த்தல்கள் குறித்த விடயங்களை இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்ததாகவும், இதனாலேயே ஒப்பந்தத்தில் தான் எதிர்ப்பார்த்ததைக் காட்டிலும் இலங்கைக்கு அதிக விட்டுக்கொடுப்பினை இந்தியா செய்யவேண்டியதாயிற்று என்றும் ரோ அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் இந்திய உபகண்டத்தின் சரித்திரத்தையே மாற்றிப்போட்ட இந்த உளவுச் சதி வெறும் பெண்ணாசையினால் ஏற்பட்டதென்று அவர்கள் கூறுகிறார்கள். பான் அம் விமானச் சேவையின் விமானப் பணிப்பெண் ஒருவரை வைத்தே உன்னிகிருஷ்ணனை சி.ஐ.ஏ மடக்கியிருக்கிறது. அப்பெண்ணும், உன்னியும் சல்லாபிக்கும் புகைப்படங்களை வைத்தே அவர் மிரட்டப்பட்டு அவரிடமிருந்த தமிழ்ப் போராளிகளின் பயிற்சிமுகாம்கள், போராளிகளின் எண்ணிக்கை, முகாம்களின் வரைபடங்கள், பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளின் வகைகள் ஆகிய விடயங்களும், இலங்கை தொடர்பான இந்தியாவின் இரகசிய காய்நகர்த்தல்கள் தொடர்பான விடயங்களையும் அமெரிக்கா கண்டறிந்து இலங்கைக்குச் சொல்லியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ்நாட்டின் தமிழ்ப் போராளிகளின் அனைத்துப் பயிற்சிகளுக்கும் இந்த உன்னிகிருஷ்ணனே பொறுப்பாக இருந்திருக்கிறார் என்பது. ஆக, ஒரு இனத்தின் வாழ்தலுக்கான போராட்டத்தை ஒரு தனிமனிதனின் பாலியல் உணர்வு எவ்வளவு தூரத்திற்கு பாதித்திருக்கிறது என்பதற்கு உன்னியும் ஈழத்தமிழர்களும் சாட்சி. இதுகுறித்து இன்னொரு திரியே திறக்கலாம். நேரம் போதாமையினால் விட்டுவிடுகிறேன்.
Checked
Fri, 04/19/2024 - 20:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed