Tamilnadu-news

சசிகலாவை முதல்வராக்க அழைக்காதது ஏன்? - முன்னாள் ஆளுநர் விளக்கம்

சசிகலாவை முதல்வராக்க அழைக்காதது ஏன்? - முன்னாள் ஆளுநர் விளக்கம்

 

 
Sasikala1

சட்டப்பேரவை தலைவராக எம்எல்ஏக்களால் சசிகலா தேர்வு செய்யப்பட்டு கடிதம் கொடுத்தபோதும், சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாக இருந்ததால், முதல்வர் பதவியேற்க அவரை அழைக்கவில்லை என்று முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தன் நூலில் விளக்கியுள்ளார்.

தமிழக பொறுப்பு ஆளுநராக சி.எச்.வித்யாசாகர் ராவ் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல், ஓராண்டு பணியாற்றினார். ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்த பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மையை சமயோஜிதமாக கையாண்டார். அவர் இதுதொடர்பாக எழுதிய புத்தகத்தை நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில், தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 6-ம் அத்தியாயத்தில், சசிகலா தொடர்பாக சில விளக்கங்களை அளித்துள்ளார். ஓபிஎஸ், பிப்.5-ம் தேதி பதவி விலகினார். அன்றே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலா தலைவராக தேர்வானார். உடனடியாக, ஆளுநரை சந்தித்து ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், ஆளுநர் உடனடியாக அழைக்கவில்லை.

இது தொடர்பாக அவர் தன் புத்தகத்தில்,‘‘ சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரினார். மறுநாள் ஓபிஎஸ் ராஜினாமாவை ஏற்றேன். அன்று, உச்ச நீதிமன்றம், சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த நேரத்தில் சசிகலாவை பதவியேற்க அழைப்பதா அல்லது தீர்ப்புக்காக காத்திருப்பதா என்ற மிகப்பெரிய சவால் என் முன் இருந்தது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடிவு செய்தேன். சசிகலாவை பதவியேற்க அழைக்கவில்லை. இந்த விவகாரத்தை சாதுர்யமாக கையாண்டதால், சட்டச்சிக்கல் மற்றும் அரசியலில் கரும்புள்ளி விழுவதும் தவிர்க்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19877881.ece?homepage=true

Categories: Tamilnadu-news

மிரள வைத்த மெர்சல்

மிஸ்டர் கழுகு: மிரள வைத்த மெர்சல்

திங்கள்கிழமை காலை... தூறலில் நனைந்தபடி கழுகார் அலுவலகத்தில் பிரவேசித்தார். ‘‘இரட்டை இலை ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்போடு டெல்லி தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க பிரமுகர்கள் காத்திருக்கிறார்கள். ‘மெர்சல்’ தீபாவளிக்கு ரிலீஸாகுமா என்ற படபடப்போடு விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்’’ என்றார்.

‘‘விஜய் படத்துக்கு என்ன பிரச்னை?’’

‘‘கேளிக்கை வரியை எதிர்த்து, ‘புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாது’ எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததும் ‘மெர்சல்’ படத்துக்குப் பிரச்னை தொடங்கிவிட்டது. கேளிக்கை வரியைக் குறைத்தும், டிக்கெட் கட்டணங்களை உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டதும் இந்தச் சிக்கல் முடிவுக்கு வந்தது. ஆனால், விலங்குகள் நல வாரிய உருவத்தில் அடுத்த சிக்கல் ஆரம்பித்தது. ‘படத்தில் புறாவை விஜய் பறக்கவிடுவது போல வரும் காட்சியில் கிராஃபிக்ஸைப் பயன்படுத்தினோம்’ எனச் சொன்னதை விலங்குகள் நல வாரியம் ஏற்கவில்லையாம். ‘இது ஒரிஜினல் புறாதான்’ என்றதாம். ஏற்கெனவே ஜல்லிக்கட்டுப் போராட்ட நேரத்தில் விஜய் தெரிவித்த கருத்துகளும், இந்தப்படத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக வரும் காட்சிகளும் விலங்குகள் நல வாரியத்தில் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் பட ரிலீஸுக்குச் சிக்கல் ஏற்படுத்த அவர்கள் முயன்றார்கள். தேவையெனில் சில காட்சிகளை நீக்கிவிட்டும் படத்தை ரிலீஸ் செய்ய தயாரானது தயாரிப்பாளர் தரப்பு. ஆனால், தமிழக அரசு தரப்பிலிருந்தும் குடைச்சல் வரலாம் எனத் தெரிந்ததாம்...’’

p44.jpg

‘‘ஏன்?’’

‘‘சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ டிரெய்லரில் ‘ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் ஆகும்’ என்ற டயலாக் இருந்ததே காரணம். ஏற்கெனவே ரஜினி, கமல் என கோடம்பாக்க அரசியல் அதிரடிகளில் தடுமாறிப் போயிருக்கும் தமிழக அரசு, ‘மெர்சல்’ படத்தை விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான அஸ்திவாரமாகப் புரிந்துகொண்டது. இதுதொடர்பாக சில அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்ததைத் தெரிந்துகொண்ட விஜய், அவசரமாக ஞாயிற்றுக்கிழமை முதல்வரைச் சந்தித்துப் பேசினார். ‘கேளிக்கை வரியைக் குறைத்ததற்காக நன்றி தெரிவிக்கவே இந்தச் சந்திப்பு’ எனக் கூறப்பட்டாலும், ‘படத்தில் அரசியல் சர்ச்சைகள் எதுவுமில்லை’ என முதல்வரிடம் விஜய் விளக்கினாராம். இதைத் தொடர்ந்து ‘மெர்சல்’ ரிலீஸுக்கான வேலைகள் வேகம் பிடித்துள்ளன’’ என்ற கழுகார், எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் குறித்த  கட்டுரையைப் படித்தார்.
‘‘தினகரன் அணியைச் சேர்ந்த பூந்தமல்லி எம்.எல்.ஏ ஏழுமலைகூட இதை வழிமொழியும் விதமாகத்தான் பேசியிருக்கிறார், கவனித்தீரா?’’ என்றோம்.

‘‘ஆம். தனி அணியாக இயங்கியபோது, பி.ஜே.பி பக்கம் சாய ஓ.பி.எஸ். விரும்பினார். இப்போது அந்தப்பேச்சு மீண்டும் கிளம்பியுள்ளது. ஆனால், இப்போது அதற்கான வாய்ப்பில்லை என்றே டெல்லி பட்சிகள் சொல்கின்றன. இப்போது பி.ஜே.பி பக்கம் ஓ.பி.எஸ் போவதால் அவருக்கும் பலனில்லை; பி.ஜே.பி-க்கும் பலனில்லை.’’

‘‘விலை உயர்த்தப்பட்ட பிறகு தீபாவளி டாஸ்மாக் மதுபான விற்பனை எப்படி?’’

‘‘டாஸ்மாக்கைவிட முக்கியமான செய்தி ஒன்று சொல்கிறேன். பணமதிப்பிழப்பு நேரத்தில் டாஸ்மாக் சார்பில் 88 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்தப்பட்டதும், அதற்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதும் பழைய செய்தி. இப்போது அதில் புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2016 நவம்பர் 9 முதல் டிசம்பர் 31 வரை பல வங்கிகளில் டாஸ்மாக் அதிகாரிகள் பணம் செலுத்தினர். அதில்தான் சர்ச்சை. ‘டாஸ்மாக் நிறுவனத்தின் ஒரு நாள் வருமானம், அதிகபட்சமாக ரூ.70 கோடி. ஆனால், அந்த நேரத்தில் டாஸ்மாக் அதிகாரிகளால், தினமும் 115 கோடி ரூபாய் வரை வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் வருமானத்தைவிட அதிகமாகப் பணம் செலுத்தியிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்’ என்று கேட்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.’’

‘‘டாஸ்மாக் நிறுவனம் என்ன பதில் சொல்கிறது?’’

‘டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமாரோ, ‘ஒருசில டாஸ்மாக் பணியாளர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள். இந்த வகையில் செலுத்திய தொகையை மொத்தமாகப் பார்த்தால், டாஸ்மாக் ஒரு நாள் வருமானத்தைவிட குறைவுதான். அப்படிச் செயல்பட்ட ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்கிறார். இதுபற்றி விசாரணை நடத்தினால், ‘ஆளுங்கட்சி பிரமுகர்களின் கறுப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்பட்டது பற்றிய பல திடுக்கிடும் விவரங்கள் வெளிவரும்’ என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.’’

‘‘ஓஹோ! சசிகலா அமைதியாக பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றுவிட்டாரே?’’

p44ba.jpg

‘‘மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஆனால், முதலமைச்சராக இருந்திருந்தால் என்ன மரியாதை கொடுப்பார்களோ, அந்த அளவுக்கு அவருக்கு மரியாதை கொடுத்துள்ளது தமிழக போலீஸ். இதுதான் இப்போது போலீஸ் வட்டாரத்திலும் கோட்டை வட்டாரத்திலும் ‘ஹாட் டாபிக்’. பரோல் முடிந்து சசிகலா பெங்களூருக்குக் கிளம்பியதும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடந்த அரசு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி கிளம்பியதும் ஒரே நேரம். இருவரின் கார்களும் கிண்டியிலிருந்து கத்திபாரா ஜங்ஷன் வரை ஒரே நேரத்தில் வரும் சூழ்நிலை இருந்தது. கடைசி நேரத்தில் இதைக் கவனித்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், சக அதிகாரிகளை எச்சரித்தார். உஷாரான போலீஸார், சசிகலாவிடம் கொஞ்சம் முன்கூட்டியே கிளம்பும்படி கனிவாகக் கேட்டுக்கொண்டனர். சசிகலாவும் அதற்கு ஓகே சொன்னார். அதையடுத்து அவருடைய கார் கத்திபாரா ஜங்ஷனைத் தாண்டும்வரை, இடையில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் பச்சை நிறம் இருப்பதுபோல் செட் செய்யப்பட்டது. அதை தனி போலீஸ் டீம் கண்காணித்தது. இதுபோன்ற ஏற்பாடுகளை வி.வி.ஐ.பி-க்களுக்குத்தான் செய்வார்களாம். அந்த மரியாதையை இப்போது சசிகலாவுக்கு சென்னை போலீஸ் செய்திருக்கிறது. சசிகலாவுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். சசிகலா கார் பயணித்த சில நிமிடங்களில் எடப்பாடியின் கார் அந்த ரூட்டில் பயணித்தது.’’

‘‘தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க அணிகள் போட்ட வழக்கு எப்படிப் போகிறது?’’

‘‘இந்த வழக்கில் முக்கியமான ரோல், பன்னீர் ஆதரவாளரான அ.தி.மு.க முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு உண்டு. ‘அ.தி.மு.க அவசரப் பொதுக்குழுவில், சசிகலாவைக் கட்சியின் தற்காலிகப் பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது’ என்று ஜனவரி 6-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் அவர்தான் வழக்குப் போட்டார். பன்னீர் தர்ம யுத்தம் தொடங்கியது அதன்பிறகுதான். அப்போதுதான் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் பன்னீர் அணி, தேர்தல் ஆணையத்தில் வழக்குப் போட்டது. இப்போது பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்துவிட்டதால், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியும் ஓர் வாதியாக மாறிவிட்டார். அக்டோபர் 6-ம் தேதி நடந்த விசாரணையில் மதுசூதனன், சசிகலா தரப்பு வாதங்களைத் தேர்தல் ஆணையம் கேட்டது. மற்ற வாதங்கள் அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. சசிகலாவுக்கு எதிராக பன்னீர் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரின் ஆதரவாளராக மாறினார் கே.சி.பழனிசாமி. அதன்பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களில் எடப்பாடியும் பன்னீரும் ஒன்று சேர்ந்துவிட்டனர். இப்போது, அவர்கள் இருவருமே கே.சி.பழனிசாமியிடம், அவரின் மனுவை வாபஸ் வாங்கச் சொல்லிப் பேசினார்கள். ‘உங்கள் முட்டுக்கட்டையால் இரட்டை இலை முடங்கிவிடக்கூடாது’ என்றார்களாம். அவரும் தன்னுடைய வழக்கை வாபஸ் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.’’

‘‘இரட்டை இலை ரிலீஸ் ஆகுமா?’’

‘‘இப்போது இருக்கும் மெஜாரிட்டி பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவின் அடிப்படையில் எடப்பாடி, பன்னீர் அணிக்கு இரட்டை இலையும் கட்சிப்  பெயரும் கிடைத்தாலும் அ.தி.மு.க பிரச்னை முடிந்துவிடாது. எடப்பாடியும் பன்னீரும் கூட்டிய பொதுக்குழுவில், ‘இனி அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவியே இல்லை. ஒருங்கிணைப்பாளர்களைப் பொதுக்குழு உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள்’ என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். ‘கட்சியின்  எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் இல்லாமல் மொத்த பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 1,500. அவர்களில் இப்போது 300-க்கும் மேற்பட்டோர் சசிகலா அணியில் இருக்கிறார்கள்’ என்கிறார்கள். மீதி பேர் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்று எடப்பாடியும் பன்னீரும் சொல்கிறார்கள். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் இந்த ஆதரவு இருக்கலாம். ஆட்சி இல்லை என்றால் இவர்களில் பெரும்பாலானவர்களை வளைப்பது சசிகலாவுக்கு பெரிய காரியமில்லை. இப்போது கே.சி.பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருக்கும் மனுவிலும், ‘அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவி இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் கூடாது. அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். தேர்தல் ஆணையம் இப்படி ஒரு முடிவை எடுத்தால், பன்னீருக்கும் எடப்பாடிக்கும் சிக்கல்தான்!’’

‘‘தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எதற்காக நடக்கிறது?’’

‘‘தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவாலயத்தில், வரும் 20-ம் தேதி நடக்க உள்ளது. அதில், ‘வாக்காளர் பட்டியல் தயாரித்தல், பெயர் சேர்த்தல், கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்து விவாதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால், இந்தக் கூட்டத்துக்கு அதைவிட முக்கியமான வேறு நோக்கம் இருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘நமக்கு நாமே’ பயணம் என்று சுற்றுப்பயணம் சென்றது போல இந்த மாதக் கடைசியில் ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்திக்க திட்டம் வகுத்துள்ளார் ஸ்டாலின். தமிழகத்தின் தெற்குப் பகுதியிலிருந்து இந்தப் பயணத்தை அவர் தொடங்குகிறார். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த டெல்லி தலைவர்களையும் இதன் தொடக்க நிகழ்வுக்கு அழைக்க இருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு ரெடியாகிறது தி.மு.க. அதுதான் பிரதானம்’’ என்ற கழுகார், ‘‘இது ‘இந்திர’ லோக ரகசியம்’’ எனக் கிளம்பும்போது ஒரு தகவலைச் சொன்னார்.

‘‘சமீபத்தில் தென் தமிழகத்தில் நிகழ்ந்த கார் விபத்து ஒன்றில், முன்னாள் அ.தி.முக அமைச்சரின் உறவினர் பலியானார். அந்தக் காரிலிருந்து 3 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை போலீஸார் எடுத்தார்களாம். பிரபல நகைக்கடையில் அந்த அமைச்சர் பங்குதாரராம். அந்தக் கடைக்கு வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் தங்கக் கட்டிகளை வாங்கிக் கொடுக்கும் வேலையைச் செய்துவந்தாராம் இநக்ச் சகோதரர். அந்த டீலிங் தொடர்பான பணமாம் இது. போலீஸ் அதிகாரிகள் பணத்தைப் பாதுகாப்பாக அந்த முன்னாள் அமைச்சரிடம் ஒப்படைத்து விட்டார்களாம்.’’

படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு, ம.அரவிந்த்
அட்டை ஓவியம் : கார்த்திகேயன் மேடி

மோதிக்கொண்ட ஆதரவாளர்கள்!

p44a.jpg

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையிலான அணிகள் இணைந்தாலும், கீழ் மட்டத்தில் மோதல் வலுவாக இருப்பதைக் கடந்த 14-ம் தேதி புதுக்கோட்டையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வெளிப்படையாகவே காட்டியது. விழாவுக்காக லோக்கல் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவர்ின் ஆதரவாளர்கள், மாவட்ட எல்லையிலிருந்தே ஃப்ளக்ஸ்களை வைத்து அதகளப்படுத்தினார்கள். சில ஃப்ளக்ஸ்களில் ஓ.பி.எஸ் படம் மிஸ்ஸிங். இதில் கடுப்பான ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்ட பலரும், விஜயபாஸ்கர் படம் இல்லாமல், கட்அவுட்கள் வைக்கவே புகைச்சல் அதிகமானது. சில இடங்களில், விஜயபாஸ்கரை மறைமுகமாகச் சாடும்படியான எம்.ஜி.ஆர் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டன. அவற்றை விஜயபாஸ்கர் தரப்பு, போலீஸாரை வைத்து அகற்றியது. இதற்கு எதிராகக் கடந்த 12-ம் தேதி இரவு புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே திரண்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஊர்வலமாக வந்ததுடன், மீண்டும் விஜயபாஸ்கர் படம் இல்லாமல் பேனர் வைத்தனர். அதன்பிறகே விழா மைதானத்தில் ஓ.பி.எஸ் படத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டன.

விழா மேடையில் அருகருகே உட்கார்ந்திருந்தாலும், கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் எடப்பாடி பக்கம் பன்னீர் திரும்பவே இல்லை. ஒருகட்டத்தில், எடப்பாடிக்கு அடுத்தபடியாக உட்கார்ந்திருந்த விஜயபாஸ்கரிடம் பேசுவதற்காகத் திரும்பியபோது மட்டும், எடப்பாடியிடம் தவிர்க்க முடியாமல் சில வார்த்தைகள் பேசினார் பன்னீர்.

‘‘வேறு சாட்சி வேண்டுமா?’’

p44c.jpg

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் ராஜகோபால தொண்டைமானின் மணி விழா திருச்சியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் தம்பி திவாகரன் கலந்துகொண்டார். தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தார். இருவரும் தனி அறையில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்களாம். இந்தக் காட்சியைச் சிலர் செல்போனில் படமெடுக்க... இருவருமே சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர். ‘‘தி.மு.க-வும் தினகரன் அணியும் நெருக்கமாக இருக்கின்றன என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்’’ என்று அ.தி.மு.க-வினர் கேட்கிறார்கள்.  இந்தச் சந்திப்பு பற்றி யாரிடமும் திருச்சி சிவா மூச்சு விடவில்லையாம்.

http://www.vikatan.com

Categories: Tamilnadu-news

46-வது ஆண்டில் அ.தி.மு.கவில் ஜனநாயகத்தின் நிலை என்ன?!

46-வது ஆண்டில் அ.தி.மு.கவில் ஜனநாயகத்தின் நிலை என்ன?!
 
 

mgr_dmk_towel_4_10011.jpg

எம்.ஜி.ஆர் என்ற தனிநபர் தன் மக்கள் செல்வாக்கினால் உருவாக்கிய கட்சியின் 46 -வது ஆண்டு தொடக்க தினம் இன்று...!

 

தமிழக அரசியல் வரலாற்றில், எம்.ஜி.ஆர் என்ற பெயரும் அ.தி.மு.க என்ற கட்சியும் தவிர்க்கமுடியாதவை. தமிழகத்தில், அண்ணா தலைமையில் உருவான திராவிட இயக்கத்தின் ஆட்சியை அவருக்குப்பின் வலுவாகத் தொடரச்செய்த பெருமை அ.தி.மு.க-வுக்கு உண்டு.  பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கைக்கொண்ட திராவிட உத்திகளிலிருந்து சற்று விலகிப் பயணிப்பதாக அ.தி.மு.க மீது கடந்த காலக் குற்றச்சாட்டுகள் இருந்துவந்தன. ஆனால், தேசியக் கட்சிகளின் வேர் தமிழக மண்ணில் ஆழ ஊடுருவ முடியாதபடி அரண் அமைத்ததில், அ.தி.மு.க என்ற கட்சிக்குப் பெரும் பங்குண்டு என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. 

திராவிட இயக்க நீட்சியாக தமிழகத்தில் பூத்த கட்சி அ.தி.மு.க என்றாலும் அது முற்றாக திராவிட இயக்கத்தின் சிந்தனையில் உருவானதல்ல; ஒரு தனிநபருக்கு எதிராக மக்களிடம் எழுந்த கொந்தளிப்பின் விளைவால் உருவானது. 

அ.தி.மு.க போன்று ஒரு தனிநபரின் ஆதிக்கத்தில் உருவான, தனிமனித ஆளுமையினால் மிகக் கட்டுக்கோப்பாக கடந்த காலத்தில் வழிநடத்தப்பட்ட ஒரு கட்சி இருந்ததாக வேறோர் உதாரணத்தை உலக அளவிலும் காண முடியாது. எம்.ஜி.ஆர் என்ற மக்கள் கவர்ச்சி மிக்க மனிதரின் அந்தச் சாதனையை அவருக்குப்பின் ஜெயலலிதா என்ற ஆளுமை கச்சிதமாகக் கைக்கொண்டது எம்.ஜி.ஆரையும் விஞ்சிய சாதனை என்றே கூறலாம். ஜனநாயகத்துக்கு விரோதமான விஷயமாக இது தெரிந்தாலும் இதுதான் ஒரு கட்சி தன் ஆயுளை நீட்டிக்க முக்கியக் காரணம் என்பதை தற்போது அ.தி.மு.க-வில் நடந்துவரும் குழப்பங்கள் தெளிவாக அடையாளம் காட்டுகின்றன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தீர்க்கதரிசனத்தைப் பாராட்டியேஆகவேண்டும். 

எம்.ஜி.ஆர்அது 1950-களின் முற்பகுதி. அண்ணா என்ற கதாசிரியர் நாடகம் மற்றும் சினிமா உலகில் தன் அபாரமான எழுத்தாற்றலினால் புகழடைந்துகொண்டிருந்த நேரம். 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில், சிவாஜியாக வேடம் ஏற்று நடிக்க சிறந்த ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார் அண்ணா. அப்போது அவரது நண்பர் நடிகமணி டி.வி. நாராயணசாமி, காஞ்சிபுரத்திலுள்ள அண்ணாவிடம் 'ராம்சந்தர்' என்ற நடிகரைக் கூட்டிவந்து அறிமுகப்படுத்தினார். சினிமாவில் கொஞ்சம் புகழடைந்துகொண்டிருந்த ராம்சந்தர், நெடிய உயரத்துடன் திரண்ட தோள்கள், நிமிர்ந்த நெஞ்சுடன் நாடகக்காரருக்கே உரிய பளபள முகம். எனவே, அவரைப் பார்த்ததுமே அண்ணாவுக்குப் பிடித்துவிட்டது. “வசனம் ஏதாவது பேசிக்காட்டட்டுமா” என்றார் நடிகர். “தேவையில்லை. வசன பாடத்தைத் தருகிறேன். பயிற்சி எடுத்துவாருங்கள். நேரடியாக ரிகர்சலில் சந்திப்போம்'' என்றார் அண்ணா. நடிகரை ஒரே பார்வையில் கணித்துவிட்டார் அண்ணா. அண்ணாவை ஒரே செயலில் புரிந்துகொண்டார் நடிகர். இருவரும் கைக்குலுக்கிக்கொண்டு விடைபெற்றனர். அண்ணாவின் அந்த நாடகத்தில், அந்த நடிகர் நடிக்கமுடியாமல் போனாலும் காலம் அந்த இருவருக்கும் சேர்த்து ஒரு பெரிய கணக்கைப் போட்டு வைத்திருந்தது. அண்ணாவின் 'பணத்தோட்டம்' நாவலில் சொக்கிப்போன அந்த நடிகர், பின்னாளில் சினிமாவில் புகழ் வெளிச்சத்துக்கு வந்தபோது அண்ணாவை நேசிக்க ஆரம்பித்திருந்தார். அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்ட அவர், பெரியாருடன் முரண்பட்டு அண்ணா தொடங்கிய தி.மு.க  என்ற கட்சியில் 1951-ல் தன்னை இணைத்துக்கொண்டார். தி.மு.க என்ற கட்சியை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச்செல்லும் பணியில் மனப்பூர்வமாகப் பங்காற்றினார். அண்ணாவின் வார்த்தைக்கு மதிப்பளித்து ராம்சந்தர் என்ற தன் பெயரை ஒரேநாளில், 'ராமச்சந்திரன்' என மாற்றிக்கொண்டார். எம்.ஜி.ராம்சந்தர், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆனார். பின்னாளில் எம்.ஜி.ஆர் எனக் கொண்டாடப்பட்டார்!

கழகமும் எம்.ஜி.ஆரின் வெற்றியும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு வளர்ந்தன.  ஒருமுறை அண்ணா தென்மாவட்டத்துக்குப் பயணம் செய்தபோது அவரது காரிலிருந்த கட்சிக்கொடியைக் கண்டு ஓடிவந்த மக்கள், ''டேய் நம்ம எம்.ஜி.ஆர் கட்சிக்கொடிடா...'' என காரை சூழ்ந்துகொண்டனர். கழகத்தின் வெற்றி அவர் கண்முன் தெரிந்தது. எம்.ஜி.ஆரைக் கட்சியில் இணைத்துக்கொண்டதற்காகப் பெருமைகொண்டார் அண்ணா!

எம்.ஜி.ஆரோ., கட்சியின் சின்னத்தையும், கட்சியின் தலைவர் அண்ணாவையும் தம் படங்களில் நூதனமாகப் புகுத்தி கட்சிக்குப் பிரசாரம் செய்தார். தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடையாளத்திலும் கட்சிக்கொடியையே வைத்தார். இப்படி பிரதிபலன் பார்க்காமல், கட்சிக்காக உழைத்தார் எம்.ஜி.ஆர். அதற்குப் பிரதி பலனாக எம்.ஜி.ஆருக்கு எம்.எல்.சி பதவியை வழங்கி கவுரவித்தார் அண்ணா.

ஒரு சட்டமன்றத்தேர்தலின்போது, ''கட்சி நிதியாக 1 லட்சம் ரூபாய் தருவதாக எம்.ஜி.ஆர் சொல்கிறார். அவர் ஒரு லட்சம் தரத்தேவையில்லை. ஒரு முறை மக்களிடம் அவர் முகத்தைக் காட்டி வாக்கு கேட்டாலே போதும்.... லட்சக்கணக்கான வாக்குகள் கட்சிக்கு விழும்” எனப் பெருமைப் படுத்தினார் அண்ணா. கட்சியின் வளர்ச்சிக்காக மேடைக்கு மேடை எம்.ஜி.ஆரை அண்ணா புகழ்ந்தது, கட்சியில் சிலரது கண்களை உறுத்தியது. அண்ணாவின் மனதில் இடம்பிடித்தவர்களை அப்புறப்படுத்துவதை அதிகாரபூர்வப் பணியாக செய்துவந்த அவர்கள் சிவாஜிகணேசன், சம்பத், கண்ணதாசன் என அந்நாளில் அடுத்தடுத்த விக்கெட்டுகளைக் கட்சியில் வீழ்த்திக்கொண்டிருந்தனர். அண்ணாவுக்கு இது கவலை தந்தாலும் தம்பிகளின் சொல்லை தட்டமுடியாதவராக இருந்தார். 1960-களின் மத்தியில், எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்பு வலுத்தது. நிலைமை எல்லை மீறிப்போனநிலையில், தன் எரிச்சலைப் பதிவு செய்ய தன் எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர். ராஜினாமா அறிவிப்பு மூலம் அண்ணாவை அவமதித்துவிட்டார் எனப் பந்தை எம்.ஜி.ஆருக்கே திருப்பினர் அந்த 'தம்பிகள்'. இந்தத் தம்பிகளில் 'தல'யாக இருந்தவர் கருணாநிதி. இறுதியாக காமராஜர் பிறந்தநாள் விழாவில், கலந்துகொண்டதற்காக கண்டம் எழுந்தது. 

எம்.ஜி.ஆர்

மற்ற தலைவர்களுக்குச் சிக்கல் வந்தபோது பொறுமை காத்த அண்ணா, எம்.ஜி.ஆர் விஷயத்தில் அமைதி காக்கவில்லை. பாமர மக்களுக்கு தி.மு.க-வின் முகம் எம்.ஜி.ஆர்-தான் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். “மரத்தில் பழுத்துத் தொங்கியது கனி. அதை என் இதயத்தில் பத்திரப்படுத்திக்கொண்டேன்” போன்ற வார்த்தைகள் மூலம் எம்.ஜி.ஆரின் முக்கியத்துவத்தை தம்பிகளுக்கு அவ்வப்போது உணர்த்தி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். அண்ணாவின் தீர்க்கதரிசனம் 1967-ல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் தெரிந்தது. தமிழகம் முழுக்க பம்பரமாகச் சுற்றி தேர்தல் பிரசாரம் செய்த எம்.ஜி.ஆர், பரங்கிமலை தொகுதியில், தானும் வேட்பாளராகக் களம் இறங்கினார். தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன் எதிர்பாராத அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆர் சுடப்பட்டார். தொண்டையில் மாவுக்கட்டு போடப்பட்ட நிலையில், எம்.ஜி.ஆரின் புகைப்படம் தமிழக மக்களின் கருணையை உரசிப்பார்த்தது. விளைவு, தி.மு.க அந்தத் தேர்தலில், வெற்றிபெற்று முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.

தி.மு.க-வில் இரு குழுக்கள் உருவாகிவிட்டதை இனம் கண்டு, கல்கண்டு தமிழ்வாணன் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் தொடர்ந்து எழுதினர். கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் மோதல் எனப் பத்திரிகைகள் எழுதின. அண்ணாவின் வார்த்தைகளுக்காக கருணாநிதியுடன் மோதல் போக்கை கைவிட்டதோடு போகிற இடங்களில் எல்லாம் 'தனக்கும் கருணாநிதிக்கும் பகை கிடையாது' எனக் கூறிவந்தார். இருவரும் திரைத்தொழிலில் முன்புபோல் இணைந்து பணியாற்றத் தொடங்கினர்.

இத்தனை பூசல்களுக்கிடையிலும் 1969-ல் அண்ணா மறைவுக்குப்பின் கட்சியின் தலைவராக கருணாநிதி வர உதவினார் எம்.ஜி.ஆர். மக்களிடம் சற்று விலகியே நிற்கும் நெடுஞ்செழியனை விட கருணாநிதி மேல் என இந்தப் போட்டியில், கருணாநிதியை ஆதரித்தார் எம்.ஜி.ஆர். பலரையும் ஆதரிக்கவைத்தார். கருணாநிதி கட்சியின் தலைவரானார். 1971 தேர்தலில் கழகத்தின் வெற்றிக்காக ஊர்தோறும் சென்ற எம்.ஜி.ஆர், 'கருணாநிதி சிறந்த நிர்வாகி' என பிரசாரம் செய்தார். மீண்டும் தி.மு.க வெற்றிபெற்றது. தேர்தல் வெற்றிக்குப்பின் எம்.ஜி.ஆர் - கருணாநிதி மோதல் உச்சகட்டம் அடைந்ததாகப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாய் எழுதின. எம்.ஜி.ஆரின் வளர்ச்சியை சகித்துக்கொள்ளமுடியாமல், கருணாநிதி பிரச்னை கிளப்புவதாக எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் எழுதினர். 'தானே கட்சி என்பதுபோல், எம்.ஜி.ஆர் தலைமைக்கு விரோதமாக நடந்துகொள்கிறார்' எனக் கருணாநிதி ஆதரவு பத்திரிகைகள் எழுதின. தி.மு.க-வில் பூசல் வெடிக்கப்போவதாக நடுநிலை பத்திரிகைகள் எழுதின. தன்னைப்போலவே நடை உடை பாவனையுடன் கருணாநிதியின் மகன் சினிமாவில் நடிப்பது எம்.ஜி.ஆருக்கு உறுத்தலை தந்தது. தன் சினிமா ராஜ்யத்தைச் சரித்துவிட கருணாநிதி கணக்குப்போடுவதாகக் கருதினார் எம்.ஜி.ஆர். தமிழகம் முழுவதும் மு.க முத்துவுக்கு ரசிகர் மன்றங்கள் ஒரேநாள் இரவில் உருவானதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியது.

எம்.ஜி.ஆர்

கருணாநிதி - எம்.ஜி.ஆர் பிளவினால், லாபம் அடைய நினைத்தவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டனர். 'உலகம் சுற்றும் வாலிபன்' படப்பிடிப்புக்காக வெளிநாடு கிளம்பிய எம்.ஜி.ஆரை வழியனுப்பிவைக்க விமான நிலையத்துக்கு நேரில் வந்தார் முதல்வர் கருணாநிதி. 'அண்ணாவே நேரில் வந்ததுபோல் இருந்தது' என நெகிழ்ந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், படப்பிடிப்பு முடிந்து படம் வெளியானபோது எல்லாமே தலைகீழாகிவிட்டிருந்தது. 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி திருக்கழுக்குன்றத்தில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில், தனக்கும் முதல்வர் கருணாநிதிக்குமான மோதலை முதல்முறையாகப் போட்டுடைத்தார் எம்.ஜி.ஆர்.!

“அண்ணாவின் மறைவுக்குப்பிறகு கட்சியின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரிய அளவு சொத்து சேர்த்துவிட்டனர். தி.மு.க மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். நடந்துபோய்க்கொண்டிருந்தவர்கள் சொகுசு கார்களில் செல்வதற்கான காரணத்தை மக்கள் கேட்கின்றனர். அமைச்சர்களின் மனைவி, மக்கள் மற்றும் உறவினர்களின் சொத்துவிவரங்களை மக்கள் அறிய விரும்புகின்றனர். இதுபற்றி நான் செயற்குழுவில் பேசுவேன். பொருளாளர் என்ற முறையில், என்னிடம் அவர்கள் கணக்குக் காட்டவேண்டும்" எனப் பொங்கி வெடித்தார்.

தி.மு.க-வில் பரபரப்பு பற்றிக்கொண்டது. கருணாநிதிக்கு தகவல்போனது. அன்றிரவு சென்னை லாயிட்ஸ் சாலையில் பாரத் பட்டம் பெற்றதற்காக தனக்கு நடந்த பாராட்டு விழாவிலும் இதே பிரச்னையைக் கிளப்பினார் எம்.ஜி.ஆர். கருணாநிதியின் பெயரைக் குறிப்பிடாமல் காரசாரமானதொரு உரையை நிகழ்த்தினார், இந்தக் கூட்டத்தில். ''எம்.ஜி.ஆர் என்றால் தி.மு.க.; தி.மு.க என்றால் எம்.ஜி.ஆர் என்றேன்.  உடனே ஒருவர், நாங்கள் எல்லாம் தி.மு.க இல்லையா என்கிறார். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்குத் துணிவிருந்தால் நீயும் சொல். உனக்குத் துணிவில்லாததால், என்னைக் கோழையாக்காதே'' என்று தொடர்ந்து 45 நிமிடங்கள் தி.மு.க-வையும் கருணாநிதியையும் வறுத்தெடுத்தார்.

எம்.ஜி.ஆர்மதுரையில் இருந்த கருணாநிதிக்கு உளவுத்துறை மூலம் இந்தத் தகவல் கொண்டு சேர்க்கப்பட, அவசர அவசரமாக செயற்குழு உறுப்பினர்களுக்கு தி.மு.க தலைமையிடமிருந்து அழைப்பு போனது. முதல்நாள் இரவே சென்னைக்குச் செயற்குழு உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டனர். 'கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக வெளியிடங்களில் பேசிவரும் எம்.ஜி.ஆர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி' மொத்தமுள்ள 31 உறுப்பினர்களில் எம்.ஜி.ஆர்., மதியழகன், நெடுஞ்செழியன் இன்னும் இருவர் தவிர்த்து 26 பேர், கையெழுத்திடப்பட்ட வேண்டுகோள் கடிதம் முதல்வர் கருணாநிதி கைக்கு வந்தது. விறுவிறுவென காரியங்கள் நடந்தன. 'கட்சிக்கு விரோதமாக பொது இடங்களில் பேசியதால், எம்.ஜி.ஆரைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைத்திருப்பதாக...' 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று பத்திரிகைகளுக்கு தி.மு.க  தரப்பிலிருந்து செய்தி சொல்லப்பட்டது.

அக்டோபர் 12 ஆம்தேதி கருணாநிதி, எம்.ஜி.ஆர் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி பேட்டிகள் அளித்து இன்னும் பரபரப்பைக் கூட்டினர். அதே தினத்தில், 'வருத்தம் தெரிவித்தால், நீக்கத்தை மறுபரிசீலனை செய்யும்' என தி.மு.க அறிவித்தது. 11 ஆம்தேதி மாறன் உள்ளிட்ட சிலர் மூலம் எம்.ஜி.ஆரிடம் பேசி சமரச முயற்சி எடுக்கப்பட்டது. 

இதனிடையே உடுமலைப்பேட்டையில், இசுலாமிய இளைஞர் ஒருவர், எம்.ஜி.ஆர் நீக்கத்தைக் கண்டித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்குப்பின் நிலைமை இன்னும் விபரீதமாகிப்போனது. எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களும் தி.மு.க-வினரும் மோதிக்கொள்ளும் நிலை உருவானது. தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்மீது வழக்குகளும் அதைத்தொடர்ந்து கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. தி.மு.க-வில், எம்.ஜி.ஆரின் பங்களிப்பை உணர்ந்த சில முக்கியத் தலைவர்கள் எம்.ஜி.ஆர் - கருணாநிதி இடையே எழுந்த பிளவை சரிசெய்ய முயன்றனர். ஆனால், தி.மு.க-வினருக்கும் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குமிடையே நடந்த மோதல்கள் இந்த சமரசப் பேச்சுகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டது. கோபமான எம்.ஜி.ஆர், தன்மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், வருத்தம் தெரிவிக்கும் பேச்சுக்கே இடமில்லை என அவர்களிடம் உறுதியாகத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.!

பெரியாரும் ராஜாஜியும் கூட இந்தப் பிரச்னையில், தலையிட்டனர். அதுவும் தோல்வியில் முடிந்தது.

அக்டோபர் 14 ஆம்தேதி திட்டமிட்டபடி தி.மு.க செயற்குழு கூடியது. 'கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்ட எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டும் அவர் பயன்படுத்திக்கொள்ளாததால், கழக சட்டவிதி 31-ன்படி பொதுச் செயலாளர் அவர்மீது எடுத்த நடவடிக்கையை செயற்குழு ஏற்றுக்கொண்டு பொதுக்குழுவின் முடிவுக்கு இதை பரிந்துரைப்பதாக' தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்குவது ஆயிரம் வோல்ட் மின்சாரத்தில் கை வைப்பதற்குச் சமம் எனக் கண்ணீர்விட்டபடி கூறினார் பெண் உறுப்பினர் ஒருவர். 

மறுதினம் 15 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், 277 பேர் எம்.ஜி.ஆர் நீக்கப்படுவதை ஆதரித்து வாக்களித்ததன் அடிப்படையில், எம்.ஜி.ஆர் நிரந்தரமாக தி.மு.க-விலிருந்து நீக்கப்படுகிறார் என அறிவித்தது தி.மு.க தலைமை.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தகவல் வந்தபோது எம்.ஜி.ஆர்., 'இதயவீணை' படப்பிடிப்பில் இருந்தார். கட்சியின் கொடியை தன்னுடைய 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்'க்கு வைத்த, திரைப்படங்களில் தி.மு.க-வையும் அதன் தலைவரையும் எப்படியாவது சென்சாரின் கழுகுக் கண்களை மறைத்து மக்களிடம் கொண்டுபோய் சேர்த்த எம்.ஜி.ஆர்., 'கறிவேப்பிலைபோல் தான் தூக்கியெறியப்பட்டதை'த் தாங்கிக்கொண்டார். ஆனால், அவரது ஆதரவாளர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. தி.மு.க-வினர் சகஜமாக நடமாட முடியாத நிலையை அவர்கள் உருவாக்கினார்கள். தி.மு.க தலைவர்களே கட்சிக்கொடிபோட்ட காரில் பயணிக்கப் பயந்தனர். எம்.ஜி.ஆரைக் கட்சியை விட்டு நீக்கியது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு,“கழகத்தை உடைக்க மத்திய அரசின் சதிக்கு உடந்தையாகிவிட்டார் எம்.ஜி.ஆர்” என்ற கருணாநிதி, அண்ணாவின் இதயக்கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதனால்தான் தூக்கித் தூர எறியவேண்டியதானது” எனத் தன் வார்த்தை ஜாலத்தோடு பதில்சொன்னார், கருணாநிதி.

எம்.ஜி.ஆர்

‘தான் இறந்தபின் தன் உடலில், தி.மு.க கட்சிக்கொடிதான் போர்த்தப்படவேண்டும்' என ஒருமுறை அண்ணாவும் கருணாநிதியும் இருந்த ஒரு மேடையில் உணர்ச்சிவயப்பட்டார் எம்.ஜி.ஆர். ஆனால், ஒரேநாள் இரவில், தி.மு.க உறுப்பினராகக் கூடத் தொடரமுடியாமல் போனது வரலாற்றின் துயரம்.

தன்னெழுச்சியாகத் தனக்குக் கிடைத்த மக்கள் வரவேற்பைக் கண்டு அக்டோபர் 17 ஆம்தேதி அண்ணாவின் பெயரில், 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' (அ.தி.மு.க) என்றக் கட்சியைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். 19ஆம்தேதி கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார்.

கொடியில் அண்ணா, கட்சியின் கொள்கை அண்ணாயிஸம்... இப்படி எங்கும் எதிலும் அண்ணாவை முன்னிறுத்தினார் எம்.ஜி.ஆர். கட்சி சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத்தேர்தலில், கட்சியின் வேட்பாளர் மாயத்தேவர் பெற்ற வாக்குகள், எம்.ஜி.ஆருக்கு கட்சியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அதிகப்படுத்தியது. ஆளும் தி.மு.க-வினரால் அ.தி.மு.க-வினர் பெரும் தொல்லைகளுக்கு ஆளாகினர். எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்மீது வழக்குகளும் கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. தன் பகுதியில், அ.தி.மு.க கட்சிக்கொடியை ஏற்ற முயன்ற சேலத்தைச் சேர்ந்த புலாவரி சுகுமாரன் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். கட்சியை வளர்த்தெடுக்க இன்னும் பலர் உயிரை இழந்தனர். கை, கால்களை இழந்து முடமானார்கள். எம்.ஜி.ஆர் தனியொருவராக தமிழகம் முழுவதும் சுழன்றுவந்து கட்சியை வளர்த்தார். 

கட்சி ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளில், ஆட்சியைப்பிடித்தது அ.தி.மு.க.! 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், மொத்தமுள்ள 234 இடங்களில் 144 இடங்களைப்பெற்று அ.தி.மு.க வென்றது. அருப்புக்கோட்டையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., கட்சியின் சட்டமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 

எம்.ஜி.ஆர்

“தணிக்கை செய்யப்படாமல் ஓரிரு படங்களை மட்டும் என்னை எடுக்க அனுமதித்தால் நான் திராவிடத்தை வென்று காட்டுவேன்” என்றார் அண்ணா. அண்ணாவின் ஆசையைத் தணிக்கை செய்யப்பட்ட படங்களைக் கொண்டே நிறைவேற்றிக்காட்டியவர் அண்ணாவால் இதயக்கனி என அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அடுத்த 11 ஆண்டுகள் அவரே தமிழகத்தின் அசைக்கமுடியாத முதல்வராக இருந்தார் என்பது உலகமறிந்த வரலாறு!

அ.தி.மு.க என்ற கட்சி உருவான 46 ஆவது ஆண்டு தொடக்க தினம் இன்று.  அ.தி.மு.க வரலாற்றில் கடந்த ஆண்டுகளை விட இந்த வருடத்தின் தொடக்க தினத்தை ஒருவகையில் சிறப்பானதாகச் சொல்லலாம். கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிலிருந்து எம்.ஜி.ஆர்., அவருக்குப்பின் ஜெயலலிதா என இருபெரும் தலைவர்களால் ஒற்றைத் தலைமையுடன் வழிநடத்தப்பட்டு வந்த இயக்கம் அ.தி.மு.க.! ஆனால், முதன்முறையாக இந்தக் கொண்டாட்டத் தினத்தில், ஒற்றை ஆளுமைத்தலைமை என்ற ஜனநாயகத்துக்கு விரோதமான செயலிலிருந்து விடுபட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என்ற இரு தலைவர்களால் அ.தி.மு.க வழிநடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க அம்மா அணியினரான தினகரன் தரப்பினர் ‘நாங்கள்தான் அ.தி.மு.க’ என்று கூறி வருகின்றனர். வாரிசு அரசியலை பெரும்பாலான கட்சிகள் பின்பற்றிவரும் நிலையில் மக்கள் ஆதரவு பெற்ற ஒரு கட்சியை வாரிசுகள் அல்லாதவர்கள் உரிமை கொண்டாடுவதும்கூட ஒருவிதத்தில் ஜனநாயகத்தின் ஓர் ஆரோக்யமான போக்காகவே கருதப்படுகின்றது.

 

ஜனநாயகம் என்பது ஒருவர் முடிவெடுத்து பலர் அதைப் பின்பற்றுவது அல்ல; தவறுகளை இடித்துரைப்பதும் அதற்கானத் தீர்வுகளைக் கலந்துபேசி முடிவெடுப்பதுமே ஆகும். ஒருவருடைய கருத்துக்கு, மாற்றுக்கருத்து என ஒன்று இல்லாதுபோனால், அது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அ.தி.மு.க-வில் கடந்த 45 ஆண்டுகளாக நடந்துவந்தது இந்த ஜனநாயக விரோதம்தான். அண்ணா போற்றி வளர்த்த ஜனநாயகம் அவரது பெயரைத் தாங்கிய கட்சியில் 45 ஆண்டுகளுக்குப் பின் மலர்ந்திருப்பது ஆரோக்கியமான விஷயமே!

http://www.vikatan.com/news/tamilnadu/105212-this-is-the-day-when-admk-founded-beore-45-years.html

Categories: Tamilnadu-news

தமிழக ஆட்சியாளர்களின் டெல்லி பயணங்கள்... அலுத்துக்கொள்ளும் மோடி!

தமிழக ஆட்சியாளர்களின் டெல்லி பயணங்கள்... அலுத்துக்கொள்ளும் மோடி!
 

பிரதமர் மோடி, ஓ.பி.எஸ். சந்திப்பு
 

மிழக ஆட்சியாளர்களின் அடுத்தடுத்த, டெல்லி பயணத்தால் பிரதமர் மோடி சலிப்படைந்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ''மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைக்  கொண்டுவரவே நாங்கள் பாடுபடுகிறோம். அதற்காகவே இந்த டெல்லி பயணங்கள்'' என்கின்றனர்,  தமிழக அமைச்சர்கள். ''நிலைமை இப்படி இருக்க, பிரதமர் ஏன் சலித்துக்கொள்கிறார்'' என்று பி.ஜே.பி வட்டாரங்களில் விசாரித்தோம்.

 

"ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவர் இறந்த பின்னர், தமிழ்நாட்டில் ஒரு வெறுமை நிலவியது. நாட்டை ஆளும் பி.ஜே.பி-க்கு அனைத்து மாநில நலனிலும் அக்கறை இருக்கிறது. அந்த அடிப்படையில்தான், தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்கு உதவிட  பி.ஜே.பி. முன்வந்தது; புதிய மந்திரிசபை அமையவும் உதவியது. பி.ஜே.பி., அப்போது தலையிடாமல் போயிருந்தால் அன்றே சசிகலா, முதல்வராக்கப்பட்டிருப்பார். ஓ.பன்னீர்செல்வம் அப்போதே சசிகலாவுக்கு எதிராகக் கொடி பிடித்திருப்பார். சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து ஆட்சியைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அப்படி நடக்காமல் காப்பாற்றியது பி.ஜே.பி-தான். கட்சியையும், ஆட்சியையும் உடையவிடாமல், இந்த உதவியைச் செய்து காப்பாற்றியது மட்டும்தான் பி.ஜே.பி. செய்த பெருந்தவறு. நாங்கள் (பி.ஜே.பி.)செய்த உதவிக்கு ஒட்டுமொத்த அ.தி.மு.க-வும் எங்களுக்கு விசுவாசமாக இருக்கும் என்று கணக்குப் போட்டோம். பி.ஜே.பி-யைத் தமிழகத்தில் வலுவாக்கிக்கொள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் துணை நிற்பார்கள் என்றும் நம்பினோம். கடைசியில் தமிழ்நாட்டு மக்களுக்கு பி.ஜே.பி-யை விரோதியாகக் காட்டியது மட்டும்தான் பலனாகக் கிடைத்தது.

ஏன், ஜல்லிக்கட்டு விவகாரத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்,  'ஜல்லிக்கட்டில் தீவிரவாத சக்திகள் பங்கேற்றன' என்று அன்றைய முதலமைச்சர் சட்டசபையில் சொன்னதற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? பி.ஜே.பி-யைத் திருப்திப்படுத்துவதாக நினைத்து, அவர்களே  இப்படிப் பல விவகாரங்களில் மூக்கை நுழைத்தார்கள். ஓ.பன்னீர்செல்வத்தையோ, எடப்பாடி பழனிசாமியையோ நாங்கள் இயக்கவில்லை. பி.ஜே.பி-யை மட்டுமே இயக்கிக்கொண்டிருக்கிறோம். 

ஆளும் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒற்றுமையாக இல்லையென்றால், அது கட்சிக்கும் ஆட்சிக்கும் பலவீனம் என்பதை அவர்கள் உணரவேண்டும். மாறிமாறி துணை முதல்வரும், முதல்வரும் டெல்லிக்கு வந்துபோவதற்குக் காரணம், பி.ஜே.பி. அல்ல. சொல்லப்போனால், பிரதமர் மோடிஜீ, இவர்கள் இருவருக்குமே உடனடி அப்பாய்ன்மென்ட் கொடுப்பதும் இல்லை. அவர்களாக அடிக்கடி டெல்லிக்கு வருகிறார்கள், போகிறார்கள். முன்கூட்டியே தகவலைச் சொல்லி காத்திருந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். சில விஷயங்களை எங்களால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை...." என்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் தம்முடைய டெல்லி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பியிருக்கிறார். அடுத்த சில நாள்களில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி பயணம் மேற்கொள்ளப்போவதாகக் கூறப்படுகிறது.


அ.தி.மு.க. வட்டாரங்களில் கேட்டோம், "ஓ.பி.எஸ். யார், யாரை டெல்லியில் சந்தித்தார், என்ன பேசினார் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் எடப்பாடி டெல்லிக்குப் போகப் போகிறார். டெல்லிக்குப்போன ஓ.பி.எஸ்., தன்னுடைய மொத்த மனக்குறையையும் அங்கே சொல்லிவிட்டு வந்திருக்கிறார். அந்தக் குமுறல் மிகவும் நியாயமான குமுறல்தான்" என்றனர். ஓ.பி.எஸ். குமுறலின் முக்கியப் பகுதிகள் கட்சித் தொண்டர்களிடம் வைரலாகப்  பரவியிருக்கிறது. அந்தக் குமுறலில், "மற்ற மந்திரிகளைப் போலத்தான் நானும் ஒரு மந்திரியாக இருக்கிறேன்.  மந்திரிகளாவது, நினைத்ததைச் செய்து முடித்துக்கொள்கின்றனர். நான் எதையும் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. உங்களை (பி.ஜே.பி.) நம்பித்தான் நான் ஒன்றாக இணையச் சம்மதித்தேன். அதிகாரம் இல்லாத பொம்மையாகத்தான் என் பதவி இருக்குமென்று தெரிந்திருந்தால் நீதி கேட்டுப்போன நெடும் பயணத்தை அப்படியே தொடர்ந்திருப்பேன். ஒரு துணை முதலமைச்சராக இருந்தும், பர்சனல் செகரட்டரியாக நான் 'டிக்' அடித்த யாரையும் எனக்கு நியமனம் செய்யவில்லை.

 

தமிழே தெரியாத ஒருவரைத்தான் எனக்கு செகரட்டரியாகப் போட்டுள்ளனர். செகரட்டரியைப் போஸ்ட் செய்யும் அதிகாரம் எடப்பாடி கையில்தான் இருக்கிறது. பொதுவிழாக்களில் எனக்கு ஒரு சால்வை என்றால், அவருக்கு (எடப்பாடி) ஒரு சால்வை போடுகிறார்கள். பணி நியமன ஆணை வழங்கும் விழாவிலும் இதே கதைதான். நான் ஒருவருக்கு  நியமன ஆணையை வழங்கினால், முதலமைச்சர் எடப்பாடி ஒருவருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார். பொதுவெளியில் மட்டுமே எனக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் இருப்பதுபோல் காட்டப்படுகிறது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்பதுதான் உண்மை"  இப்படிப் போகிறது ஓ.பன்னீர்செல்வத்தின் உள்ளக் குமுறல் என்கிறார்கள், அதைக் கேட்டவர்கள்.அடுத்த ரவுண்டு டெல்லிக்குப் போகப்போவது முதல்வர் எடப்பாடிதான். எடப்பாடி டெல்லி விசிட்டுக்குப் பின்னால் வெளியாகும் அந்தப் பக்கத்துத் தகவல், பல விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரக்கூடும்... 

http://www.vikatan.com/news/tamilnadu/105147-tamil-political-leaders-travelling-to-delhi-have-become-a-never-ending-saga.html

Categories: Tamilnadu-news

ஆஸ்திக்கு விவேக்... கட்சிக்கு தினகரன்..! சசிகலாவின் 5 கட்டளைகள் #VikatanExclusive

ஆஸ்திக்கு விவேக்... கட்சிக்கு தினகரன்..! சசிகலாவின் 5 கட்டளைகள் #VikatanExclusive
 
 

டி.டி.வி.தினகரன், சசிகலா, விவேக்

“சொத்துகளை மீட்டெடுப்பதும், மீட்டெடுத்தவற்றைப் பத்திரமாகப் பாதுகாப்பதும், இளவரசியின் மகன் விவேக்கின் கடமை! 

 

கட்சியைக் கைப்பற்றுவதும், கையில் இருக்கும் கட்சியைக் காப்பாற்றுவதும், இரண்டையும் இணைத்து வலுவாக வளர்தெடுப்பதும் தினகரனின் கடமை! 

தினகரனுக்கும் விவேக்குக்கும் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மன்னார்குடி குடும்பத்திலுள்ள மற்ற ரத்த உறவுகளின் கடமை!”

இந்த மூன்று கட்டளைகளைப் பிறப்பித்து, அதை மன்னார்குடி குடும்பத்துக்குச் சாசனமாக்கிச் சென்றுள்ளார் சசிகலா! சசிகலாவின் சாசனத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர இப்போதைக்கு அந்தக் குடும்பத்துக்கு வேறு வழியில்லை. அதனால், அதை அப்படியே ஒத்துக்கொண்டு, நிறைவேற்றித் தருவதாக சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றனர் மன்னார்குடி ரத்த உறவுகள். இதோடு வேறு இரண்டு கட்டளைகளைத் தினகரனுக்குத் தனியாகப் பிறப்பித்துள்ளார் சசிகலா. பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து 5 நாள்கள் பரோலில் வந்த சசிகலா சாதித்துவிட்டுப்போனது இதைத்தான். இந்த ஸ்கெட்ச்படி, தற்போது மன்னார்குடி குடும்பத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதோடு, மன்னார்குடி குடும்பத்திலிருந்து புதிய சக்தியாக விவேக் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். ‘அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக் கூடாது’ என்ற நிபந்தனைக்குட்பட்டு பரோலில் வந்த சசிகலா, மன்னார்குடி குடும்பத்தை ஒருங்கிணைத்து, அந்தக் குடும்பத்துக்கு இந்த ‘மாஸ்டர் பிளானை’ போட்டுக் கொடுத்துள்ளார். இதைச் சட்டப்படி அரசியல் நடவடிக்கை என்று சொல்ல முடியாது. ஆனால், எதிர்கால அரசியலில் மிகமுக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையாக இது இருக்கலாம்! இல்லாமலும் போகலாம்! ஆனால், மன்னார்குடி குடும்பத்தைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான நடவடிக்கை! 

சிக்கலும் தீர்வும்!

விவேக், வெங்கடேஷ்,தினகரன், திவாகரன்

30 ஆண்டுகளில் மன்னார்குடி குடும்பம் சந்திக்காத சோதனைக் காலகட்டத்தை இப்போது சந்தித்துள்ளது. இதற்கு முன்பு, 1995-களின் இறுதியில் தொடங்கி 1997 வரை இதேபோன்ற சோதனைகளை அந்தக் குடும்பம் சந்தித்தது. அந்த நேரத்தில், அந்தக் குடும்பத்துக்கு அப்போது எல்லாம் நம்பிக்கையாக இருந்தவர் நடராசன். மன்னார்குடி குடும்பத்துக்கு கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் எந்தப் பிரச்னை வந்தாலும் அதை நடராசன்தான் ‘டீல்’ செய்வார். அதுபோல, குடும்பத்துக்குள் ஏற்படும் சர்ச்சைகளையும் நடராசன்தான் தீர்த்து வைப்பார். தினகரன், திவாகரனோடு மோதுவார்; பாஸ்கரன், தினகரனைத் திட்டுவார்; விநோதகன், ஜெயராமன் சொல்வதைக் கேட்கமாட்டார்; மஹாதேவன் யாருக்கும் கட்டுப்படமாட்டார். ஆனால், இவர்கள் அனைவரும் நடராசனுக்குக் கட்டுப்படுவார்கள். நடராசன் பேச்சைத்தட்டமாட்டார்கள். ஏனென்றால், நடராசனால்தான் ஜெயலலிதாவிடம் சசிகலா நெருங்கினார். அதனால்தான், தங்கள் குடும்பத்துக்கு இந்த வாழ்வு வந்தது என்பது மன்னார்குடி குடும்பத்துக்கு நன்றாகத் தெரியும். அதை யாரும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு நடராசன் தனக்கான லாபியை உருவாக்கி வைத்திருந்தார். தமிழகத்திலோ... டெல்லியிலோ... தமிழர்கள் அதிகம் வாழும் உலக நாடுகளிலோ... அல்லது வேறு எங்கேயோபோய்... யாரையாவது பிடித்து நடராசன் மன்னார்குடி குடும்பத்தின் சிக்கல்களைத் தீர்த்துவிடுவார். ஜெயலலிதாவின் அரசியல் ஏற்றத்துக்கும் நடராசனின் இந்த ‘லாபி’ பலவகையில் உதவியது. ஒருகட்டத்தில், நடராசனின் இந்த ‘லாபி பவர்’ தான் அவர்மீது ஒருவித சந்தேகத்தையும் அச்சத்தையும் ஜெயலலிதாவுக்கே உருவாக்கியது. அதில்தான் இருவருக்கும் கருத்து முரண்பாடுகள் தோன்றின. அதையடுத்துத்தான் நடராசன், போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளியேறினார். ஜெயலலிதாவால் மன்னார்குடி குடும்பத்துக்குச் சிக்கல் வந்தால், அதைச் சசிகலா சமாளித்துவிடுவார். வெளியில் வரும் பிரச்னைகளை நடராசன் தீர்த்துவைப்பார். ஜெயலலிதா, சசிகலா, நடராசன் என்ற மூன்று சக்திகள் இருந்ததால், அந்தக் குடும்பம் தமிழகத்தில், அ.தி.மு.க என்ற கட்சியில், அதன் தலைமையில் நடந்த ஆட்சியில் ஆதிக்க சக்தியாக வலம் வந்தது. ஆனால், ஜெயலலிதா இறந்தபிறகு நிலைமை தலைகீழாக மாறியது. அதன்பிறகு சசிகலா சிறைக்குப் போய்விட்டார். நடராசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்துவிட்டார். ஆட்சியில் இருந்த அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமி பறித்துவிட்டார். கட்சியைப் பன்னீர் செல்வம் கபளீகரம் செய்துவிட்டார். இந்தநிலையில் மன்னார்குடி குடும்பம் திகைத்துப்போய் இருந்தது. அதற்கு உடனடித் தீர்வாக, கொஞ்சம் ஆறுதலாக இருந்தது சசிகலாவின் சமீபத்திய பரோல் வருகை! அந்த வருகையில் அவர் கட்சியை தினகரனே கவனிக்கட்டும் என்று மன்னார்குடி குடும்பத்திடம் கறாராகச் சொல்லிவிட்டார். அதைவிட முக்கியமாக, நம் குடும்பத்தின் சொத்துகள், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான நிர்வாகத்தை விவேக் கவனிக்கட்டும் என்றும் விவேக்கை முக்கியமான ஆளாக அடையாளம் காட்டிச் சென்றுள்ளார். தனது இந்த வார்த்தைகளுக்கு மன்னார்குடி குடும்பத்தைச் சம்மதிக்கவும் வைத்துள்ளார். தினகரனை எல்லோருக்கும் தெரியும். ஆனால், விவேக் யார்? என்பது பலருக்குத் தெரியாது.

விவேக் பராக்.. பராக்.. பராக்!

விவேக், சசிகலா

சசிகலாவின் இரண்டாவது அண்ணன் ஜெயராமன். அவரது மனைவி இளவரசி. இவர்களுக்கு கிருஷ்ணப் பிரியா, ஷகிலா, விவேக் என்று மூன்று பிள்ளைகள். 1991-96 காலகட்டத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றபோது, ஜெயலலிதா தனது ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் ஆடம்பர பங்களா ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்தார். அந்தக் கட்டுமான வேலைகளை மேற்பார்வை செய்தது சசிகலாவின் அண்ணன் ஜெயராமன்தான். அந்த நேரத்தில் பங்களாவுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து ஜெயராமன் இறந்துவிட்டார். இதையடுத்து, அவருடைய மனைவியும் மூன்று பிள்ளைகளையும் ஜெயலலிதா, தனது போயஸ் தோட்டத்து வீட்டிலேயே தங்க வைத்துக்கொண்டார். இப்போதும் அவர்களுடைய ஒரிஜினல் முகவரி போயஸ் தோட்டம் வீடுதான். அங்கிருந்து சென்னையில் படித்தவர்கள், அதன்பிறகு ஊட்டி கான்வென்ட்டில் சேர்ந்து படித்தனர். அதன்பிறகு இளவரசியின் மூன்றாவது பிள்ளை விவேக்கை ஜெயலலிதா பூனேவுக்கு அனுப்பி பி.பி.ஏ படிக்க வைத்தார். அதன்பிறகு எம்.பி.ஏ-வை ஆஸ்திரேலியாவில் சேர்த்துப் படிக்க வைத்தார். ஆஸ்திரேலியாவில் படிப்பை முடித்த விவேக், பெங்களூரில் ஐ.டி.சி-யின் டீலராக வேலை பார்த்தார். தற்போது அவரிடம்தான் சசிகலா, தங்கள் குடும்பச் சொத்துகள், வெளிநாட்டு முதலீடுகள் பற்றிய நிர்வாகத்தை ஒப்படைத்துள்ளார். இதன்மூலம் அந்தக் குடும்பத்தின் அடுத்த சக்தியாக விவேக் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். அதற்குச் சில காரணங்கள் இருந்தன. 

கோட்டை விட்ட தினகரன்... சாதித்துக்காட்டிய விவேக்... 

சசிகலா, தினகரன், வெங்கடேஷ்

சசிகலாவின் கணவர் நடராசன், கல்லீரல், கிட்னி பாதிக்கப்பட்டு குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி சசிகலாவுக்குப் பரோல் கேட்கப்பட்டது. முதலில் இந்த விவகாரத்தை டீல் செய்தது டி.டி.வி.தினகரன்தான். ஆனால், தினகரன் தலையிட்டதாலோ என்னவோ... தமிழகக் காவல்துறையிலிருந்து ஏகப்பட்ட கண்டிஷன் சொல்லி பரோல் தள்ளிப்போனது. அந்த நேரத்தில் நடராசன் உடல்நிலை மிக மோசமடைந்தது. இந்தநிலையில், சசிகலாவின் பரோல் விவகாரத்தைக் கையில் எடுத்தவர் அவருடைய அண்ணன் ஜெயராமன்-இளவரசி தம்பதியினரின் மகன் விவேக். விவேக் சீனுக்கு வந்ததும் வேலைகள் வேகமாக நடந்தன. அவர் சார்பில், தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், “சசிகலாவின் பரோல் நாள்களில் எந்த அரசியல் நடவடிக்கைகளும் இருக்காது” என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதன்பிறகு தமிழகக் காவல்துறை முதலமைச்சர் எடப்பாடியோடு பேசிவிட்டு பச்சைக்கொடி காண்பித்தது. சசிகலாவுக்குப் பரோல் கிடைத்தது. வெளியில் வந்தவர் எங்கு தங்க வேண்டும், எத்தனை மணிக்கு நடராசனைப் பார்க்க மருத்துவமனைக்குப் போக வேண்டும், வீட்டில் யாரைச் சந்திக்கலாம்; யாரைச் சந்திக்கக் கூடாது என எல்லாவற்றையும் விவேக்தான் முடிவு செய்தார். மீண்டும் சசிகலாவைப் பத்திரமாக பரப்பன அக்ரஹாராவுக்குக் கொண்டுபோய் சேர்க்கும்வரை விவேக் கண்ணசைவில்தான் காரியங்கள் நடைபெற்றன. ஆனால், சசிகலா வந்த காரில் கூட விவேக் ஏறவில்லை. எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்துவிட்டு அவர் கேமராக்களில் தலைகாட்டாமல் மறைந்து கொண்டார். விவேக்கின் இந்த நடவடிக்கைகள் சசிகலாவின் கவனத்தை ஈர்த்தது. 

சந்திப்புகளும்... நிராகரிப்புகளும்... 

பரோலில் வந்த சசிகலாவால் போயஸ் கார்டனுக்குப் போக முடியவில்லை. அதனால், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்கினார். போயஸ் கார்டனுக்குப் பிறகு, சசிகலாவுக்குப் பரிட்சயமான வீடு இதுதான். 2011-ம் ஆண்டு, ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டிலிருந்து சசிகலாவை வெளியேற்றியபோதும் அவர் இந்த வீட்டில்தான் தங்கியிருந்தார். அங்கு சசிகலாவின் உறவினர்கள் தினகரன், தினகரன் மனைவி அனுராதா, திவாகரன், திவாகரனின் மகன் ஜெயானந்த், மகள் ராஜ மாதங்கி, நடராசனின் தம்பி பழனிவேல், ராமச்சந்திரன், அவர்களுடைய வாரிசுகள் உள்ளிட்டவர்கள் வந்து சந்தித்தனர். இவர்களைத்தவிர சசிகலாவை மிக முக்கியமான சிலர் சந்தித்தனர். அவர்கள் இப்போது மட்டுமில்லை; எப்போதும், சசிகலா மற்றும் ஜெயலலிதாவை எந்தவித அப்பாயின்ட்மென்ட்டும் இல்லாமல் சந்திக்கும் வழக்கம் உடையவர்கள். கட்சிக்கும், ஆட்சிக்கும் அப்பாற்பட்ட ரத்த சொந்தங்களும் இல்லாத மனிதர்கள். போயஸ்கார்டன் மாளிகையை நன்றாக அறிந்தவர்களுக்கு மட்டும்தான் அந்த ரகசியம் புரியும்; அந்த மனிதர்களையும் புரியும். அவர்களுக்கு ஜெயலலிதாவையோ... சசிகலாவையோ சந்திப்பதற்கு நாள், தேதி கிடையாது. திடீரென்று வருவார்கள். அதன்பிறகு மாதக்கணக்கில் மறைந்துபோய் விடுவார்கள். அப்படிப்பட்ட சில குறிப்பிட்ட மனிதர்களில் மிக முக்கியமானவர்கள், ராஜம்மாள், தாம்பரம் நாராயணன், தேவாதி, ஜமால் போன்றவர்கள். அவர்களும் விவேக்கின் அனுமதி பெற்றுத்தான் இந்தமுறை சசிகலாவைச் சந்திக்க முடிந்தது. அவர்களில், இந்தமுறை ராஜம்மாள் சசிகலாவைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். தாம்பரம் நாராயணனும் சசிகலாவைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சசிகலா, பழைய கதைகளை மனம்விட்டுப் பேசியுள்ளார். அப்போது அவர், “1998 தேர்தல் சமயத்திலயும் இப்போது இருப்பதுபோல இக்கட்டான நிலைதான். மத்தியில் சிதம்பரம் நிதி அமைச்சர். இங்கே, தி.மு.க ஆட்சி. இருவரும் சேர்ந்து என்னையும், அக்காவையும்(ஜெயலலிதா), எங்க குடும்பத்தையும் பாடாய்ப்படுத்தினார்கள். அந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல்(1998) வந்துச்சு, அப்போது 40 தொகுதிகளுக்கும் நேரடியாகப் போய், ஒவ்வொரு தொகுதிக்கும் 40 லட்ச ரூபாய் செலவுக்குக் கொடுத்துவிட்டு வந்தேன். நான் போன இடமும் தெரியாது; திரும்பிய தடமும் தெரியாது. ஆனா, இப்போ ஒரே ஒரு தொகுதியில(ஆர்.கே.நகர்) இடைத்தேர்தல். இதுக்குப் பணம் கொடுத்தேன். அத எழுதி வெச்சேன்னு இவனுங்க மாட்டிக்கிட்டு, என்னையும் வருத்தப்பட வெச்சுட்டானுங்க. கட்சியையும் பறிகொடுத்துட்டு நிக்கிறாங்க” என்று புலம்பியது ஹை-லைட். இதுபோன்ற பழைய கதைகளைத்தான் பெரும்பாலான நேரங்களில், சசிகலா தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தார். ஆனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சிக்காரர்கள் என யாரையும் சந்திக்கவில்லை. குறிப்பாக கடந்த 11-ம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஏழுபேர் சசிகலாவைச் சந்திக்க வந்துள்ளனர். அவர்களிடம் பேசிய விவேக், “நான் எவ்வளவு சிரமப்பட்டு அத்தைக்கு இந்தப் பரோலை வாங்கியிருக்கிறேன் என்பது உங்களுக்கும் தெரியும். ஆனால், நீங்களே நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் அத்தையைச் சந்திக்க வந்தால் எப்படி?” என்று கேட்டுள்ளார். அதைப்புரிந்து கொண்டு அவர்களும் அமைதியாகத் திரும்பிவிட்டனர். 

3 கட்டளைகள்!

விவேக், டாக்டர் வெங்கடேஷ், தினகரன், திவாகரன், சசிகலா

சசிகலா வந்த சமயத்தில் குடும்பத்தில் முக்கிமாகப் பேசித் தீர்க்கப்பட்ட  பஞ்சாயத்துதான் நாம் முதல் பாராவிலேயே குறிப்பிட்டிருந்தது. காரணம் அப்போது சசிகலாவிடம் தினகரன் சார்பில் புகார் வாசிக்கப்பட்டது. அவர், “நாம் வளர்த்துவிட்ட பன்னீரும் பழனிசாமியும் துரோகிகளாகிவிட்டனர். அவர்களிடமிருந்து கட்சியைக் காப்பாற்ற நான் தனியாளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் குடும்பத்தில் இருப்பவர்களே எனக்குக் குடைச்சல் கொடுக்கும் வேலைகளைச் செய்கின்றனர். குறிப்பாக திவாகரன் தரப்பு எந்த உதவியும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதைப்போல, விவேக், திவாகரனின் மகன் ஜெயானந்த் என்று ஆளுக்கு ஆள் ஒப்பாரி வைத்துள்ளனர். அதைக் கேட்ட சசிகலா, “பணம் இருந்தால்தான் கட்சியை நடத்த முடியும். ஆனால், கட்சியின் பணத்தை 80 சதவிகிதம் நானும் அக்காவும் எடப்பாடி பழனிசாமி பொறுப்பில்தான் விட்டிருந்தோம். அதை இப்போது திரும்ப மீட்டுவது எளிதான காரியம் அல்ல. அதுபோல, நம் குடும்பதை வைத்து இதுவரை கோடி கோடியாக சம்பாதித்த அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் இப்போது எடப்பாடி-பன்னீர் பக்கம்தான் இருக்கின்றனர். அதனால், அவர்களாலும் நமக்கு ஒரு ரூபாய்கூட உதவி கிடைக்காது. அதனால், நம்முடைய வெளிநாட்டு முதலீடுகள், இங்கிருக்கும் சொத்துகளைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அதைச் சரியாக நிர்வாகம் செய்தால்தான், எதிர்காலத்தில் கட்சியைக் காப்பாற்ற பணம் தேவைப்படும்போது நம்மால் செலவழிக்க முடியும். அதனால், அந்தப் பொறுப்பை விவேக் பார்த்துக்கொள்ளட்டும். அதனால், சொத்து விவகாரங்களில் விவேக் எடுக்கும் முடிவுக்கு மற்றவர்கள் கட்டுப்படுங்கள். அதுபோல, தினகரன் இப்போது கட்சியை வழிநடத்தும் வேலைகளையும், எடப்பாடி-பன்னீர் மற்றும் தி.மு.க-வைச் சமாளிக்கும்விதமும் சரியாக இருக்கிறது. எந்தநேரத்தில் தேர்தல் வந்தாலும், தி.மு.கதான் ஆட்சியைப் பிடிக்கும். அதன்பிறகு எடப்பாடியும், பன்னீரும் காணாமல் போய்விடுவார்கள். அந்த நேரத்திலும் இப்போது தினகரன் சமாளித்து கட்சி நடத்துவதுபோல், நாம் கட்சியை நடத்த வேண்டும். அதற்கு தினகரன்தான் சரியான ஆள். அதனால், கட்சி விவகாரங்களில் தினகரன் எடுக்கும் முடிவுக்கு மற்றவர்கள் கட்டுப்படுங்கள். சொத்துகளை விவேக் பராமரிக்கட்டும். கட்சியை தினகரன் வழிநடத்தட்டும். மற்றவர்கள் இருவருக்கும் கட்டுப்பட்டிருங்கள்” என்று விவேக்குக்கு முதல்முறையும், தினகரனுக்கு இரண்டாவது முறையும் பட்டம் கட்டியிருக்கிறார் சசிகலா! அதை மன்னார்குடி குடும்பமும் ஏகமனதாக ஒப்புக்கொண்டிருக்கிறது. 

கட்சியைப் புதிதாகக் கட்டு... ஆட்சியைக் கலைக்காதே!

சசிகலா, தினகரன்

சசிகலாவை இரண்டு நாள்கள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் வைத்துச் சந்தித்தார் தினகரன். அவரிடம் பேசிய சசிகலா, “ஆட்சியைக் கலைப்பேன் என்று பேசாதே. இது நாம் ஏற்படுத்திய ஆட்சி. அது இன்று துரோகிகளின் கைகளில் போனாலும், அந்த ஆட்சியில் இருக்கும் மற்றவர்கள் நமக்கு விசுவாசமானவர்கள்தாம். அவர்கள் எப்போதும் நம்மோடுதாம் இருப்பார்கள். நீ ஆட்சியைக் கலைப்பேன் என்று பேசுவதும், அதற்கு முயற்சி செய்வதும் அவர்களையும் வெறுப்படைய வைப்பதாக எனக்குத் தகவல்கள் வந்தன. அதனால், நீ உன் வசம் இருக்கும் கட்சியைப் பார்த்துக்கொள். இரட்டை இலைச் சின்னம் நமக்கும் கிடைக்காது; எடப்பாடி-பன்னீருக்கும் கிடைக்காது. அதனால், கட்சியை நாம் முதலிலிருந்து கட்ட வேண்டியதாகத்தான் இருக்கும். அதைத் தயார்படுத்தி வை. அப்போதுதான், நாளை அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு(எடப்பாடி மற்றும் பன்னீர்) ஆட்சி கலைந்தாலும், அல்லது தி.மு.க-வினால் ஆட்சி கலைந்தாலும், அங்கிருப்பவர்கள் நம்மைத் தேடி வரும் அளவில் கட்சியைத் தயார்படுத்தி வை. அப்போதுதான், நாம் தேர்தலைச் சந்திக்க முடியும்” என்று அறிவுரை செய்துள்ளார். அதனால்தான், கடந்த இரண்டு நாள்களாக தினகரனின் பேச்சில் மாற்றம் தெரிகிறது. சசிகலா வந்த அன்று, “அண்ணன் பழனிசாமி மற்றும் இந்தப் புலிகேசிகளின் ஆட்சியைக் கலைப்பேன்” என்று பேசியவர், இப்போது முதலமைச்சர் மற்றும் ஊழல் செய்த அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்று பேசத் தொடங்கியுள்ளார். 

புதிதாக எம்.எல்.ஏ-க்களை இழுக்க வேண்டாம்!

சசிகலா தினகரனுக்குக் கொடுத்த முக்கியமான மற்றொரு அட்வைஸ், “புதிதாக எந்த எம்.எல்.ஏ-க்களையும் இழுக்க வேண்டாம். இவ்வளவு சோதனையான காலத்தில் நம்முடன் இருப்பவர்கள் மட்டுமே நமக்கானவர்கள். மற்றவர்களை இழுக்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும். இப்போது பணம் எல்லாம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் பணத்துக்காக வருபவர்கள், நாளையே பணத்துக்காக வேறு இடத்துக்கும் தாவி விடுவார்கள். அதனால், இப்போது நம்முடன் இருப்பவர்களை மட்டும் வைத்து கட்சியை நடத்து” என்றார். 

சசிகலாவின் ஒரு நாள்!

காலையில் எழுந்து அந்த வீட்டுக்குள்ளே 10 நிமிடங்கள் வாக்கிங் போய் இருக்கிறார். அதன்பிறகு, தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள் என ஒன்றுவிடாமல் அத்தனையும் படித்துள்ளார். அதில் 2 மணிநேரம் ஓடிப்போய்விடும். காலை உணவு இரண்டு இட்லியும், ஒரு சப்பாத்தியும் மட்டும்தான். அதை முடித்துவிட்டு கணவர் நடராசனைப் பார்க்க காலை 11 மணி  குளோபல் மருத்துவமனைக்குக் கிளம்பிவிடுவார். அங்கு நடராசனைப் பார்ப்பதற்கு டாக்டர்கள் நேரம் கொடுக்கும்வரை, சசிகலாவுக்காக புக் செய்யப்பட்டு 2005-ம் எண் அறையில் காத்திருப்பார். அங்கு அவருடன் இளவரசியின் வாரிசுகள் கிருஷ்ணப்பிரியா, விவேக், ஷகிலா ஆகியோர் மட்டும் உடனிருப்பார்கள். சில சமயம், தினகரனும், அவரது மனைவி அனுராதா, திவாகரன் மகன் ஜெயானந்த் ஆகியோரும் இருப்பார்கள்.  அவர்களைத் தவிர கட்சிக்காரர்கள் யாருக்கும் அனுமதியில்லை. நடராசனைப் பார்த்துவிட்டு, டாக்டர்களுடன் நடராசன் உடல்நிலை பற்றிப் பேசிவிட்டு திரும்புவதற்கு மதியம் 2 மணிக்கு மேல் ஆகிவிடும். முதல்நாள் மருத்துவமனைக்குச் சென்ற சசிகலாவிடம், நடராசனின் மருத்துவ விவரங்களை தெரிவித்த டாக்டர் டீம், பதப்படுத்தி வைத்திருந்த நடராசனின் கல்லீரலைக் காண்பித்துள்ளது. அப்போது அதுபற்றி விளக்கிய டாக்டர் டீம், “இது ரோசப்பூ கலரில் இருக்க வேண்டும். ஆனால், சாருக்குக் கருகிவிட்டது” என்று சொல்லியிருக்கின்றனர். அதைக் கவனமுடன் கேட்ட சசிகலா, நடராசனின் உடல்நிலை பற்றிய மற்ற விவரங்களையும் கேட்டுள்ளார். இப்படி மருத்துவமனை விசிட் முடிய மதியம் காலை 11 மணி முதல் மதியம் 2.30 மணி வரை ஆகிவிடும். அதன்பிறகு வீட்டுக்கு வந்தால் வெறும் தயிர் சாதம் மட்டும்தான் உணவு. பிறகு, உறவினர்களுடன் சந்திப்பு. அதன்பிறகு செய்திகளைப் பார்ப்பதும், மாலை நாளிதழ்களைப் படிப்பதும், மீண்டும் உறவினர்களைச் சந்திப்பதும்தான் வாடிக்கை. இரவு உணவு இரண்டு சப்பாத்திகள் மட்டும். 

பரப்பான தி.நகர்... காலியான கோட்டை...

சசிகலா

சசிகலா வந்த 5 நாள்களும் அவர் தங்கியிருந்த தி.நகர் ஹபிபுல்லா சாலை பரபரப்பானது. ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் முதல்நாளே ஆஜராகிவிட்டார். சசிகலாவின் உதவியாளராக இருந்த கார்த்திக்கேயனும் ஆஜராகிவிட்டார். அதுபோல, பல அ.தி.மு.க-வினர், தினகரன் ஆதரவாளர்கள் என அந்தத் தெரு பரபரப்பானது. ஆனால், அதே நேரத்தில் ஆட்சி நடக்கும் தலைமைச் செயலகம் வெறிச்சோடியது. எடப்பாடி பழனிசாமி அணியும், பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் கொஞ்சம் ஆடிப்போய்த்தான் இருந்தனர். முதல்வர் முதல் அமைச்சர்கள்வரை சென்னையைக் காலி செய்துவிட்டு, சொந்த ஊர்களுக்கு ஓடிப்போய்விட்டனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, டெங்கு விழிப்புஉணர்வு முகாம் என்று காரணம் சொல்லிவிட்டு தங்களின் ஜாகையை மாற்றிக்கொண்டனர். அதுபோல, அமைச்சர்கள் அனைவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டது. ஆனால், சசிகலா தரப்பிலிருந்து யாரும் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யக்கூட இல்லை. அதுபற்றி பேச்சு வந்தபோது, “நமக்கு விசுவாசமானவர்கள் யார் என்று நமக்குத் தெரியும். அவர்களிடம் நாம் இப்போது பேசி என்ன ஆகப்போகிறது. அதுபோல, நமக்குத் துரோகம் செய்பவர்கள் யார் என்பதும் நமக்குத் தெரியும்! அவர்களிடம் சின்னம்மா பேசுவதற்கு என்ன இருக்கிறது?” என விளக்கம் சொன்னார்கள். சென்னை தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டை உளவுத்துறை போலீஸ் நெருப்பு வளையம் போட்டுக் கண்காணித்தது. குளோபல் மருத்துவமனையும் உளவுத்துறையின் கண்காணிப்புக்குக் கொண்டு வரப்பட்டது. அதோடு இந்த இரண்டு இடங்களிலும் உளவுத்துறை ரகசிய கேமராக்களையும் பொருத்தியிருந்தது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தமாதிரி அல்லது எடப்பாடி பழனிசாமி சந்தேகப்பட்டதுமாதிரி யாரும் சசிகலாவைச் சந்திக்கவில்லை; தேவையற்ற சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை. அதனால், போலீஸுக்கும் நிம்மதி. எந்தச் சர்ச்சையும் இல்லாமல், பரோல் நாள்களை அமைதியாகக் கழித்துவிட்டு சசிகலா சிறைக்குச் சென்றதில் நிம்மதியடைந்த போலீஸ், சசிகலா குடும்பத்துக்கு அனுப்பிய வாட்ஸ்-அப் மெசேஜ், ‘நன்றி!’ என்பது.

http://www.vikatan.com/news/coverstory/105155-vivek-and-dinakaran-sasikalas-five-commandments.html

Categories: Tamilnadu-news

பாரதிராஜாவின் அரசியல் பார்வை

பாரதிராஜாவின் அரசியல் பார்வை

 

 

Categories: Tamilnadu-news

விஷால் யார்?'

அபிராமி ராமநாதன்,கேள்வி, விஷால்,சினிமா, தயாரிப்பாளர்கள்

 

 

'தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிட, விஷால் யார்?' என, தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர், அபிராமி ராமநாதன் கேள்வி எழுப்பி உள்ளார். 'விஷாலின் உத்தரவுகளை செயல்படுத்தப் போவதில்லை' எனக் கூறியுள்ள அவர், 'உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தியேட்டர்களில், 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்படும்' என்றும் தெரிவித்து உள்ளார். இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் - நடிகர் சங்க மோதல், உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

 

அபிராமி ராமநாதன்,கேள்வி, விஷால்,சினிமா, தயாரிப்பாளர்கள்

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பொறுப்புக்கு, நடிகர் விஷால் வந்த பின், திரைத் துறை சார்ந்த பிரச்னைகளில், தன்னிச்சையாக முடிவு எடுப்பதை, வழக்கமாக கொண்டுள்ளார். 'பெப்சி' தொழிலாளர்கள் பிரச்னை, தயாரிப்பாளர் சங்க பிரச்னை மற்றும் தியேட்டர் கட்டண விவகாரங்களில், அவர் அடுத்தடுத்து வெளியிடும் அறிவிப்புகள், கடும் 
விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றன.

இந்நிலையில், 'சினிமாவுக்கு கேளிக்கை 

வரியை ரத்து செய்ய வேண்டும்' என, திரை உலகைச் சேர்ந்த பல்வேறு சங்கங்கள், அமைச்சர்களுடன் பேச்சு நடத்தின.முடிவில், கேளிக்கை வரியை, 10 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாகக் குறைத்து, அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக, நேற்று முன்தினம், நடிகர் விஷால், அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், 'தியேட்டர்களில், 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கக் கூடாது; தின்பண்டங்களுக்கு கூடுதல் விலை வாங்கக் கூடாது; 'ஆன் - லைன்' கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்; 'அம்மா' குடிநீர் விற்க வேண்டும்' என, ஏராளமான உத்தரவுகள் பிறப்பித்தார்.

அவரது அறிக்கைக்கு, தியேட்டர் உரிமையாளர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையில் நேற்று, தியேட்டர் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின், சங்கத் தலைவர், அபிராமி ராமநாதன் கூறியதாவது:

தயாரிப்பாளர் சங்கத்திற்கு உத்தரவு போடுவது போல, விஷால், அனைத்து விஷயங்களிலும் தலையிடுகிறார். அவ்வாறு, அவர் பேசக் கூடாது. ஒவ்வொரு சங்கத்திற்கும், தனித்தனி விதிமுறைகள் உள்ளன. விஷால் அறிவித்தது, அவரது தன்னிச்சையான முடிவு;அந்த முடிவை ஏற்க மாட்டோம். இனி, எந்த முடிவை அறிவிப்ப தாக இருந்தாலும், சம்பந்தப் பட்டோரை கலந்தாலோசித்து, அறிவிக்க வேண்டும்.

தயாரிப்பாளர்கள் இல்லாமல், நாங்கள் இல்லை; 

 

நாங்கள் இன்றி, அவர்கள் இல்லை. வாகன நிறுத்த கட்டணம் குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் தீர்ப்புக்கு ஏற்பவே, நாங்கள் செயல்படுவோம். தின்பண்டங்களுக்கு, அரசு நிர்ணயித்துள்ள, எம்.ஆர்.பி., விலையை மட்டுமே பெற, நாங்கள் அறிவுறுத்துவோம். 

சில இடங்களுக்கு ஏற்ப, மக்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், விலையில் மாற்றம் இருக்கும். கேளிக்கை வரி தொடர்பான, அரசின் ஆணை, இன்னும் கைக்கு வரவில்லை. வந்த பின், டிக்கெட் மற்றும், 'கேன்டீன்' கட்டணம் குறித்து, முறையாக அறிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
 

அபிராமி ராமநாதன்


தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவராக உள்ளார். 'மல்டி பிளக்ஸ்' தியேட்டரை, சென்னையில் அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர். திரைப்பட வினியோக முறை யில், மாற்றம் கொண்டு வந்தவர். தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் உரிமையாளர் சங்கம் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் என, பன்முகம் உடையவர்.
 

நடிகர் விஷால்


தெலுங்கு தயாரிப்பாளர், ஜி.கே.ரெட்டியின் மகன். கல்லுாரி படிப்பை முடித்ததும், சினிமா ஆர்வத்தால், நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். செல்லமே, சண்டக் கோழி, திமிரு போன்ற படங்களால் பிரபல மானார். இதுவரை, 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சங்க நிலம் குறித்து பிரச்னையை கிளப்பி, நடிகர் சங்க தலைவரானார். திருட்டு விசிடி, இணைய தளத் தில் புதுப்படங்கள் ஒளிபரப்பு குறித்து பேசி, தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார். தற்போது, தியேட்டர் விதிமுறைகள் குறித்து பேச துவங்கி உள்ளார். ஆகஸ்டில், விஷாலின் பிறந்த நாளை, அவரது ரசிகர்கள், அடுத்த முதல்வர், 'ரேஞ்சுக்கு' கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. ச

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1875431

Categories: Tamilnadu-news

கருணாநிதி தற்போது என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் ?

கருணாநிதி தற்போது என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் ?

தமிழ் என்றாலே உயிர் நாம் கருணாநிதிக்கு, அவர் தொடாத தமிழ் பக்கமே கிடையாது. வழக்கையில் பிரச்னை இல்லை என்றால் நமக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்று சொன்னவர். பொதுக்கூட்டம், மேடைப்பேச்சு, மக்களை சந்திப்பது, அண்ணா அறிவாலயம் செல்வது என ரெக்கைக்கட்டி பறந்தவர் இப்போது வீட்டில் அமைதியாய் இருக்கிறார். உடல்நிலை குறைவால் யாரிடமும் அவ்வளவு பேசுவதில்லை, சிலரை பார்த்தால் சிரிக்கிறார், சிலரை பார்த்தால் அழுகிறார் கலைஞர்.

Categories: Tamilnadu-news

கமலின் அரசியல் எதிர்காலம்

கமலின் அரசியல் எதிர்காலம்
ஆர். அபிலாஷ்
 
சமீபத்தில் கமலஹாசனின் அரசியல் எதிர்காலம் பற்றி சாருஹாசன் சொன்ன கருத்துக்களை ஒட்டி ஒரு டிவி சேனலில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியில் இரண்டு பா.ஜ.க ஆதரவாளர்கள். ஒரு அதிமுக பிரதிநிதி. இன்னொருவர் கமல் ஆதரவாளர். அவர் டை கட்டி, சட்டையை இன் பண்ணி டிவி திரையே பிதுங்கும் வண்ணம் அமர்ந்திருந்தார். யார் என்ன சொன்னாலும் இடையிடையே வந்து “ஊழலை எதிர்க்கிறோம், எதிர்ப்போம், கமல் வந்தால் ஊழல் இல்லாத சமூகம் மலரும் பார்த்திக்குங்க…” என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.

வெளியே நல்ல மழை. 

நானும் நண்பருமாய் டீ அருந்தியபடி டீவி பார்க்கிறோம். நண்பர் வெளியே கடுமையான கமல் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர். ஆனால் உள்ளுக்குள் கமல் வெறியர். சுருக்கமாக அவர் ஒரு கமலஹாசன். 

டிவியை சற்று நேரம் கவனித்த எனக்கு எனக்கு அந்த கமல் ஆதரவு பேச்சாளரின் அப்பாவியான முகம் ரொம்ப பிடித்திருந்தது. அருகில் இருந்த என் நண்பருக்கோ அவரது இந்த “ஊழல்” பிரசங்கம் ரொம்ப எரிச்சலூட்டியது. “கமல் இதுவரை ஒரு சொல்லாவது மத்திய அரசை எதிர்த்து பேசி இருக்கிறாரா?” என அவர் பொரும ஆரம்பித்தார்.

 நண்பர் கொதித்தால் அது குக்கர் விசிலடிப்பது போல. முழுக்க நிற்பது வரை பொறுக்க வேண்டும். அவர் முடித்த பின் நான் கேட்டேன் “கமல் என்னென்ன பண்ண வில்லை என்பதை ஒரு பட்டியலிடுங்களேன்?” நண்பர் இட்டார். ஆனால் அது ரொம்ப நீளமாக இருந்ததால் “சுருக்கமா சொல்லுங்க” என்றேன். அதுவே ரொம்ப நீளமாக போனது. ரொம்ப பின்னால் சென்று “ஏங்க ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது கமல் ஏன் களமிறங்கி போராடவில்லை?”

“ஆமா”

நண்பர் தொடர்ந்தார்:

 ”‘எனக்கு அனுபவம் கிடையாது. அரசியலை வெளியே இருந்து பாமரனாக பார்த்தவன், ஆகையால் எனக்கு அந்த தகுதி கிடையாது..’ கமல் இப்படியெல்லாம் கருத்து தெரிவித்தாரே தவிர அவர் அன்று காத்திரமாக என்ன செய்தார்?” என்று கேட்டார்.

 அக்கேள்வி எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டதால் டி.வியை அணைத்து விட்டு அவர் கண்களை சில நொடிகள் உற்றுப் பார்த்தேன். “ஆமா ஏன் போராடவில்லை?”என கேட்டுக் கொண்டேன்.

கமலை அரசிலுக்கு லாஞ்ச் செய்ய ஜல்லிக்கட்டு, நீட் தேவு – அனிதாவின் தற்கொலை போன்று சில கொந்தளிப்பான அரசியல் சந்தர்ப்பங்கள் அமைந்தனவே? இருந்தும் ஏன் பா.ஜ.க செய்யவில்லை? இப்படி நான் கேட்டுக் கொண்ட போது நண்பர் கொதிப்பின் உச்சத்துக்கு போனார்.

ஜல்லிக்கட்டு போரட்டத்தின் போது கமலஹாசன் கட்சி ஆரம்பித்திருந்தால், பா.ஜ.க மற்றும் அதிமுக அரசுக்கு எதிராக அவர் கொடி தூக்கி மக்களையும் ஒன்று திரட்டி இருந்தால் அவர் மீது யாருக்கும் ஐயம் ஏற்பட்டிருக்காது என்பது மட்டுமல்ல, பலமான மக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆதரவும் இருந்திருக்கும். ஏன் செய்யவில்லை?

நண்பர் சொன்னார், “பா.ஜ.க சார்பில் இருந்து யோசித்துப் பாருங்கள்.”

“சரி பண்ணிட்டேன். ஆனாலும் புரியலையே?”

“கமல் ஒரு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்திருப்பார். அதை நிச்சயம் பா.ஜ.க விரும்பாது.”

“சரி பா.ஜ.கவுக்கு என்ன தான் வேண்டும்.”

“கமல் ஒரு வீட்டு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். கைக்கு அடக்கமான ஒரு கருவி போல் இருக்க வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் சட்டென கட்சியை ஆரம்பித்து வக்காளர்கள் இடையே ஒரு சிறிய கவனக் கலைப்பை செய்ய வேண்டும். குட்டையை குழப்ப வேண்டும். அதுவே பா.ஜ.கவின் விருப்பமாக இருக்கும். கமல் அப்போது அரசியலில் ஒரு பொன்சாய் மரம் போல் சரியான சைஸுக்கு வளர்வார். ஆனால் அடுத்தவர்களையும் வளர விட மாட்டார்.”

“சேச்சே கமல் அந்தளவுக்கு முட்டாளா என்ன?”

“கமல் புத்திசாலி தான். ஆனால் அவர் வசம் பணம் இல்லையே? எக்குத்தப்பாய் அவர் கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவை பெற்றாலும் யார் அவரை பைனான்ஸ் செய்வது? யார் அவருக்கு பின்னால் நின்று வளர்த்து விடுவது? மேலும் அரசியல் களத்தில் சறுக்கி அடிபட்டால் சம்பாதித்த பணமும் சினிமாவில் பெற்ற பெயரும் போய் விடுமே? அவ்வளவுக்கு ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்? கமல் ரிஸ்கே எடுக்காமல் விளையாட விரும்புகிறார். அதனால் தான் பா.ஜ.க பணிக்கும் போது அவர் கரெக்டாக லாஞ்ச் ஆவார்.”

“அதனால் அவருக்கு என்னங்க லாபம்?”

”தனக்கு ஒருவேளை மக்கள் ஆதரவு அமைந்தால் அதை அவர் ஓட்டுக்களாக மாற்ற முடியும். பா.ஜ.க கொடுக்கும் பணத்தை வாங்கி எதிர்கால சினிமா திட்டங்களுக்கு வைத்துக் கொள்ள முடியும். தோல்வி அடைந்தாலும் போனது தலைப்பாகையோடு போச்சு என்றாகி விடும். பெரிதாய் அடி விழாது.”

“வடிவேலுவுக்கு வந்த கதி இவருக்கு வராதா?”

“வராதுங்க. எப்படியும் அடுத்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சில ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க இருக்கும். அவர்களின் ஆதரவு கமலுக்கு இருப்பது வரை அவர் அதிகர உச்சாணிக் கொம்பில் இருப்பார். மேலும் ஸ்டாலின் ஒன்றும் ஜெயலலிதா அல்ல விரட்டி விரட்டி பழிவாங்க. அவர் கண்ணியமானவர். இன்னொரு விசயம் … அது ரொம்ப முக்கியம்.”

“என்ன?”

“ஒருவேளை தமிழகத்தில் அடுத்து அமையப் போகும் ஆட்சிக் கூட்டணியில் பா.ஜ.க பங்கு பெற்றால்?”

“திமுகவுடனா?”

“ஏதோ ஒரு திராவிட கட்சியுடன்”

“கேட்கவே பீதியாய் இருக்குதே”

“அப்போது கமல் ஒரு சூறாவளி போல அரசியலில் கலக்குவார்.”

“யாருக்கு எதிராக அப்போது பேசுவார்.”

“யாருக்கு எதிராகவும் பேச மாட்டார். சும்மா பேசிக் கொண்டிருப்பார்.”

“சரி கமல் கட்சியின் பெயர் என்னவாக?”

“Loading…”

 

http://thiruttusavi.blogspot.co.uk/2017/10/blog-post_11.html?m=1

Categories: Tamilnadu-news

“ஒதுங்கி டெல்லி வந்துவிடுகிறேன்!” - மோடியிடம் பதவி கேட்ட ஓ.பி.எஸ்

மிஸ்டர் கழுகு: “ஒதுங்கி டெல்லி வந்துவிடுகிறேன்!” - மோடியிடம் பதவி கேட்ட ஓ.பி.எஸ்
 

 

p42a.jpg‘விமான நிலையத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறேன்’ என கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் மெஸேஜ். சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார் கழுகார். ‘‘டெல்லிக்கும் பெங்களூருக்கும் அலைந்ததில் ஒரே களைப்பாக இருக்கிறது’’ என்றபடி அமர்ந்தார். ‘‘எதற்கும் டெங்கு இருக்கிறதா  எனப் பரிசோதனை செய்துகொள்ளும். ரணம்... மரணம் என மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசு அலட்சியம் காட்டுகிறது’’ என்றோம்.

‘‘தமிழகத்தை டெங்கு ஜுரம் வாட்டிக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு வேறொரு ஜுரம் வாட்டுகிறது.’’

‘‘ஓ.பி.எஸ் மனவருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்களே... டெல்லி பயணம் அதற்குத்தானா?’’

‘‘ஆமாம். துணை முதல்வராகப் பொறுப்பேற்றவுடனேயே பிரதமரைச் சந்தித்து நன்றி தெரிவிக்க ஓ.பி.எஸ் முயற்சி செய்தார். அப்போது பிரதமர் அலுவலகத்தில் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை. தீவிர முயற்சிக்குப் பிறகு, கடந்த 12-ம் தேதிதான் நேரம் ஒதுக்கினார்கள். நன்றி சொல்லப் போனவர், புலம்பல் புராணத்தைப் பாடிவிட்டு வந்தார்.’’

p42b.jpg

‘‘என்ன காரணம்?’’  

‘‘அவரை எல்லா விஷயங்களிலும் ஓரம்கட்டி வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு அணிகளும் இணைந்தபோது கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்கூட இப்போது துணை முதல்வருக்கு இல்லை. கரூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவும்போது முதல்வருக்கு அடுத்து துணை முதல்வரைத்தான் அழைத்திருக்கவேண்டும். ஆனால், பன்னீரைப் பத்தாவது நபராகவே மலர்தூவ அழைத்தனர். சம்பிரதாய மரியாதைகளில்தான் இப்படி என்றால், நிர்வாக விஷயங்களிலும் அதேதான் நடக்கிறது.

ஓ.பி.எஸ் துறை சார்ந்த அனைத்துக் கோப்புகளும் எடப்பாடியின் ஒப்புதலுக்குப்பின்தான் நகர வேண்டும் என முதல்வர் தரப்பிலிருந்தே உத்தரவு போடப்பட்டுள்ளது. பன்னீர்செல்வத்தால் ஒரு ஃபைலைக்கூட நகர்த்த முடியவில்லை.’’

‘‘ஓஹோ.’’

‘‘கட்சி மற்றும் அரசு தொடர்பாக நடக்கும் ஆலோசனைகளிலெல்லாம் பன்னீரைத் தவிர்த்து வருகிறார் முதல்வர். தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்ற விழாவின் மேடையிலும், பன்னீரை கட் செய்துள்ளார்கள். ஆனால், அந்த விழாவில் பன்னீர், கவர்னருக்குப் பக்கத்தில்கூட அழைக்கப்படவில்லை. மாறாக, அமைச்சர்கள் அமர்ந்திருந்த வரிசையில்தான் பன்னீருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதனால் மிகவும் நொந்துபோய் இருக்கிறார். இதையெல்லாம் பிரதமரிடம் சொல்வதற்காக, மைத்ரேயன் எம்.பி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகிய தனது ஆதரவாளர்களுடன் பன்னீர் டெல்லி புறப்பட்டபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விசுவாசியான அமைச்சர் தங்கமணியும் அவர் களோடு அனுப்பி வைக்கப்பட்டார். தமிழக அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய அனுமதி கேட்கும் மனு ஒன்று, அவசரமாக முதல்வர் அலுவலகத்திலிருந்து தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காகத்தான் பிரதமரை பன்னீர் சந்திப்பது போல காண்பிக்க வேண்டும் என எடப்பாடித் தரப்பு நினைத்தது.’’

‘‘டெல்லியில் என்ன நடந்தது?’’

‘‘புதன் இரவு டெல்லி வந்த ஓ.பி.எஸ், ‘மரியாதை நிமித்தமாக பிரதமரைச் சந்திக்க இருக்கிறேன்’ என்றார். பன்னீர், தங்கமணி உள்பட ஐந்து பேரும் பிரதமரைச் சந்திப்பதாகவே திட்டம். ஆனால், வியாழன் காலையில், ‘பிரதமரைச் சந்திக்க துணை முதல்வரோடு மைத்ரேயனுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. உங்களுக்கில்லை’ என்று அமைச்சர் தங்கமணியிடம் தகவல் சொல்லப்பட, அவர் வெகுண்டெழுந்தார். ‘ஏன் என் பெயர் சேர்க்கப்படவில்லை. இங்கிருந்து அனுப்பினீர்களா இல்லையா..?’ என்று தமிழ்நாடு ஹவுஸ்  அதிகாரிகளிடம் கோபத்தில் பொங்கினார். ஆனால், அன்று காலைதான் மைத்ரேயன் மட்டும் உடன் வருவதற்குப் பிரதமர் அலுவலகம் இசைவு வழங்கியிருக்கிறது. தமக்கு அனுமதியில்லை என்றான பிறகு என்ன செய்வது என்று யோசித்த தங்கமணி, ஆர்.கே.புரத்திலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று குமுறலோடு வழிபாடு செய்தார். பின்னர், அங்கிருந்து சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துவிட்டு வந்தார்.’’

‘‘பிரதமர் அலுவலகத்தில் என்ன நடந்ததாம்?’’

‘‘பிரதமருடனான 20 நிமிட சந்திப்பின்போது, துணை முதல்வர் ஆனதற்கு நன்றி தெரிவித்ததோடு சில கோரிக்கைகளையும், புகார்களையும் ஓ.பி.எஸ் முன்வைத்துள்ளார். ‘உங்கள் விருப்பப்படியே இணைப்புக்கு ஒத்துழைத்தோம். ஆனால், முதலமைச்சர் எங்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை. புறக்கணிக்கப்படுவதாகவே உணர்கிறோம்’ என்று தன் வேதனைகளைக் கொட்டியிருக்கிறார் பன்னீர். அனைத்தையும் பிரதமர் மோடி அமைதியாகக் கேட்டிருக்கிறார். எந்தப் பதிலும் சொல்லவில்லையாம். இறுதியாக, ‘ஒதுக்கப்பட்டவனாக சென்னையில் இருப்பதைவிட, அங்கிருந்து மொத்தமாக ஒதுங்கி டெல்லிக்கு வந்துவிடுகிறேன். மத்திய அரசில் அ.தி.மு.க-வுக்கு இடம்கொடுத்து எங்களுக்கு உதவுங்கள்’ என்று பன்னீர் சொன்னபோது பிரதமர் ஏறிட்டுப் பார்த்து, ‘பொறுத்திருங்கள். பார்க்கலாம்’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.’’

‘‘ம்’’

‘‘பின்னர் தமிழக இல்லம் வந்த பன்னீர், உடனே செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. அறைக்குச் சென்றுவிட்டு வந்து பேசுவதாகச் சொன்னார். 15 நிமிடங்கள் கழித்து, நான்கு பேருடனும் வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். ‘பிரதமரிடம் மின் உற்பத்திக்கான நிலக்கரி இறக்குமதி செய்ய கோரிக்கை வைத்ததாக அவர் சொன்னபோது, ‘மின்துறை அமைச்சரை ஏன் உடன் அழைத்துச் செல்லவில்லை’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். உடனே அமைச்சர் தங்கமணிக்கு முகத்தில் உற்சாகம் கரைபுரண்டது.

ஓ.பி.எஸ், ‘மின்துறை அமைச்சர், பிற்பகலில் மத்திய மின்துறை அமைச்சரைச் சந்திக்க இருக்கிறார்’ என்று அமைதியாகச் சமாளித்தார். பிரதமருடனான இந்தச் சந்திப்பு பலன்தரும் என்று ஓ.பி.எஸ் முழு நம்பிக்கையில் இருக்கிறார். எடப்பாடி தரப்பில் பிரதமர் அலுவலகத்தோடு நெருக்கத்தில் இருக்கும் தங்கமணியை ஒதுக்கிவிட்டு தங்களுக்கு மோடி நேரம் ஒதுக்கியதால் எழுந்த நம்பிக்கை இது.’’

‘‘சசிகலா பரோல் முடித்துச் சிறைக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு அவருடைய குடும்ப உறவுகள் கொஞ்சம் தெம்பாக இருப்பதுபோல் தெரிகிறதே?’’ எனக் கழுகாரை சென்னைக்கு இழுத்து வந்தோம்.

‘‘ஆம். குறிப்பாக டி.டி.வி.தினகரன் தெளிவடைந்துள்ளார். அவருடைய செயல்பாடுகளில் ஒரு நிதானம் ஏற்பட்டுள்ளது. சசிகலா வந்த அன்று, ‘அண்ணன் பழனிசாமி, பிறகு அந்தப் புலிகேசிகளின் ஆட்சியைக் கலைப்பேன்’ என்று சொன்னவர், அதன்பின் அப்படிப் பேசுவதில்லை. ‘முதல்வரை மாற்ற வேண்டும், ஊழல் செய்த சில அமைச்சர்களை மாற்ற வேண்டும்’ என்ற பழைய பல்லவிக்கே மீண்டும் வந்துள்ளார். இதற்குக் காரணம், சசிகலாவின் ஆலோசனைதான். ‘ஆட்சியைக் கலைப்பேன் என்று பேசுவதை விடு. இந்த ஆட்சி அக்கா ஏற்படுத்தியது. இதைக் கலைப்பதாகப் பேசுவது சரியில்லை. பழனிசாமியும், இன்று அவரை ஆதரிக்கும் சிலரும் மட்டும்தான் நம் குடும்பத்துக்குத் துரோகம் செய்துள்ளனர். மற்றவர்கள் நாம் சொல்லும் வழியில்தான் போவார்கள். அவர்களில் யாரும் துரோகியில்லை. யாரும் மாற்றுக் கட்சியில் போய்ச் சேரவில்லை. அதனால், ஆட்சியைத் தொந்தரவு செய்யாதே. அதை நாம்தான் கலைத்தோம் என்ற அவப்பெயர் நமக்கு வேண்டாம். அவர்களே கலைந்து விடுவார்கள்’ என்று தினகரனிடம் சசிகலா சொன்னாராம்.’’

‘‘அவர்களே கலைந்துவிடுவார்கள் என்று எதை வைத்துச் சொல்கிறார் சசிகலா?’’

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீருக்கும் போய்க்கொண்டிருக்கும் முட்டல், மோதல்கள் பற்றிய தகவல்கள் அவருக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது. இதை வைத்துதான் சசிகலா அப்படிச் சொன்னாராம்.’’

‘‘தினகரனுக்கு வேறு முக்கிய ஆலோசனைகள் எதையும் சசிகலா கொடுத்தாரா?’’

p42.jpg

‘‘சிறையிலிருந்து வெளியே வந்த வேகத்தில் தினகரனைத் திட்டினாலும், அதன்பிறகு தட்டிக் கொடுத்தாராம். ‘கட்சியை வழிநடத்துவதை நீ சரியாகச் செய்கிறாய். ஆரம்பத்தில் நீ அவசரப்பட்டு எடுத்த முடிவுகள் தப்பாகப் போய்விட்டன. இப்போது நிதானம் தெரிகிறது. இப்படியே கட்சியை நடத்து. ஆட்சி கலைந்தபிறகோ, அல்லது நான்கு ஆண்டுகள் கழித்தோ வரும் தேர்தலில் நாம் ஜெயிப்பது கடினம். ஆனால், அதன்பிறகு கட்சியை ஒழுங்காக உயிரோடு வைத்திருந்தால்தான் இந்தச் சோதனையில் நாம் வெற்றி பெற முடியும். அதனால், கட்சி வேலைகளை நீ பார்த்துக்கொள். மற்ற சொத்து நிர்வாகம், நிதி விஷயங்களை விவேக் பார்த்துக்கொள்ளட்டும்’ என்றாராம்.’’

‘‘குடும்ப உறவுகளிடம் என்ன பேசினார்?’’

‘‘இளவரசியின் மகன் விவேக்கிடமும், தன் தம்பி திவாகரனிடமும் மனம்விட்டுப் பேசினார். சசிகலாவை பரோலில் அழைத்து வந்ததில், விவேக்கின் பங்கு முக்கியமானது. ‘கட்சி சார்ந்த எல்லா சொத்துகளும் எடப்பாடி பழனிசாமியிடம்தான் இருக்கிறது. இப்போது, அவரிடம் 80 சதவிகிதப் பணம் ‘லாக்’ ஆகிவிட்டது. கட்சி அலுவலகமும் கையைவிட்டுப் போய்விட்டது. இதிலிருந்து மீண்டு வருவது சாதாரண விஷயமில்லை. வெளிநாட்டு முதலீடுகள், சொத்துகளை நீ ஒழுங்காகப் பார்த்துக்கொள். இதையெல்லாம் வைத்தே எதிர்காலத்தில் கட்சியைக் காப்பாற்ற முடியும். தினகரனோடு ஒத்துப் போங்கள். அவருக்கு யாரும் இடையூறு தர வேண்டாம்’ என விவேக்கிடம் சசிகலா சொன்னாராம்.’’ 

‘‘திவாகரன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளதால் அவர் சசிகலாவைச் சந்திக்கவில்லை என்றார்களே?’’

‘‘டெங்கு காய்ச்சல் காரணமாக அவர் சசிகலாவை ஆரம்பத்தில் சந்திக்கவில்லை.இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டுக்கும் அவர் போகவில்லை. 11-ம் தேதி காலையில் அவர் நேராக, நடராசன் சிகிச்சை பெற்றுவரும் குளோபல் மருத்துவமனைக்கு வந்துவிட்டார். அங்கேதான் சசிகலாவை அவர் சந்தித்துப் பேசினார்.’’ 

‘‘உறவினர்கள் தவிர்த்து வேறு யாரும் சசிகலாவைச் சந்தித்தார்களா?’’

‘‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 7 பேர் சசிகலாவைச் சந்திக்க வந்துள்ளனர். ஆனால், அவர்களிடம் பேசிய விவேக், ‘பரோல் நிபந்தனைகள் மற்றவர்களைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்களே நிலைமையைப் புரிந்துகொள்ளுங்கள்’ எனச் சொல்லியிருக்கிறார். அதனால், அவர்களும் சந்திக்காமல் சென்றுவிட்டனர். மற்றபடி, வழக்கறிஞர்களை சசிகலா சந்தித்துப் பேசினார். ஆடிட்டர் சுவாமிநாதனைச் சந்தித்ததாகச் சொல்கிறார்கள். அவரோடு கட்சியின் சொத்துகள், குடும்பச் சொத்துகள் பற்றி ஆலோசனை நடத்தினாராம். பின்னர், மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறைக்குக் கிளம்பிவிட்டார். சசிகலா போட்டுக் கொடுத்த இந்தப் பாதையில்தான் இனி குடும்ப உறவுகளின் பயணம் இருக்கும்.’’

‘‘சசிகலா வருகையால் டென்ஷனாக இருந்த போலீஸார் இப்போது ரிலாக்ஸாகிவிட்டார்களா?’’

‘‘ஆம். சசிகலா சென்னையில் இருந்தபோது அவர்களுக்கு ஏகப்பட்ட டென்ஷன். கிருஷ்ணப்ரியாவின் வீடு மற்றும் குளோபல் மருத்துவமனையைச் சுற்றி ஐ.எஸ், எஸ்.பி. சி.ஐ.டி போலீஸைக் குவித்து வைத்திருந்தார்கள். சசிகலாவின் ஒவ்வொரு மூவ்மென்ட்டையும் ஃபாலோ செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட் அனுப்பும் வேலையில் மண்டை காய்ந்துகொண்டிருந்தனர். ஆனால், சசிகலாவின் பயணம் எந்தப் பிரச்னையும் சலசலப்பும் இல்லாமல் முடிந்ததால், அவர்கள் சசிகலா குடும்பத்துக்கு பெரிய கும்பிடாக வாட்ஸ்அப் மெஸேஜில் போட்டுள்ளனர்.’’

‘‘வாட்ஸ்அப் மெஸேஜிலா?’’

‘‘ஆமாம். எடப்பாடியின் ‘நம்பிக்கைக்குரிய’ சில உயர் போலீஸ் அதிகாரிகள்  சசிகலா குடும்ப உறவுகளோடு, ஒவ்வொரு நாளும் வாட்ஸ்அப் மெஸேஜில் தகவல் பரிமாறிக்கொண்டுதான் இருந்தனர்; இப்போதும் இருக்கிறார்கள்’’ என்ற கழுகார், சட்டென பறந்தார்.

http://www.vikatan.com

Categories: Tamilnadu-news

ஆதரவாளர்கள் வழியனுப்பிவைக்க... சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா!

ஆதரவாளர்கள் வழியனுப்பிவைக்க...  சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா!

ஐந்து நாள் பரோல் முடிவடைந்த நிலையில், சென்னை தி.நகரிலிருந்து கார் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா.

சசிகலா
 

 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. அதே நேரத்தில், ஜெயலலிதா இறந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடராசன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 4-ம் தேதி உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், நடராசனைப் பார்க்க 15 நாள் பரோல் கேட்டு கர்நாடக சிறைத்துறையிடம் சசிகலா விண்ணப்பித்திருந்தார். தீவிர பரிசீலனைக்குப் பின்னர், சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை  ஐந்து நாள் மட்டுமே பரோல் வழங்கியது. கடந்த 6-ம் தேதி,  பெங்களூரிலிருந்து சென்னை வந்த சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கினார். மருத்துவமனைக்குச் சென்று நடராசனைப் பார்த்துவந்தார்.

பரோல் முடிவடைந்த நிலையில், இன்று காலை சென்னை தி.நகரில் இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்டார். சசிகலாவைப் பார்க்க அவரது ஆதரவாளர்கள் தி.நகர் இல்லத்தில் குவிந்தனர்.  தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், கதிர்காமு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சசிகலாவை சந்தித்துப் பேசினர். பின்னர், கார் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் புறப்பட்டார்.

http://www.vikatan.com/news/tamilnadu/104778-sasikala-leaves-for-bengalurus-central-prison.html

Categories: Tamilnadu-news

தெலுங்கானாவில் உருவாகிறது ஒரு திருமலை

Tamil_News_large_1872716_318_219.jpg

ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாதுக்கு அருகில் உள்ள யாதாத்ரி கோவிலை, 1,800 கோடி ரூபாயில், திருமலை போல் மாற்றுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. தெலுங்கானாவில், முதல்வர், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது.
ஆந்திரா பிரிக்கப்பட்டு, தெலுங்கானா தனி மாநிலம் அமைத்த போது, உலகின் பணக்கார கோவில்களில் ஒன்றான திருமலை, ஆந்திராவுடன் இணைந்தது. பல்வேறு விஷயங்களில் இரு மாநிலங்களுக்கும் இடையே பலத்த போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் ஐதராபாதுக்கு அருகில் உள்ள, புராதன நரசிம்மர் கோவிலான, யாதாத்ரி கோவிலை மேம்படுத்த, 1,800 கோடி ரூபாய் செலவில், தெலுங்கானா மாநில அரசு, புதிய திட்டத்தை வகுத்துள்ளது. மொத்தம், 11 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கோவிலில், ஏழு கோபுரங்கள், 100 அடி உயர முக்கிய வாயிற் கதவு உள்ளிட்ட வசதிகளுடன் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. இதைத் தவிர, அருகில் உள்ள எட்டு மலைகள் மற்றும் வனப்பகுதிகளையும் சேர்த்து, யாதாத்ரி கோவிலுக்கு பக்தர்களை அதிகளவில் ஈர்க்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கோவில் வளாகத்துக்கு அருகில் உள்ள, 1,400 ஏக்கர் நிலப்பரப்பில் பக்தர்கள் தங்குமிடம், பல அடுக்கு வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
கோவிலை புனரமைக்கும் பணியில், 500க்கும் மேற்பட்ட சிற்பிகள் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டப் பணிகளை, 2018, மே மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அருகில் உள்ள மலை மற்றும் வனப்பகுதிகளில், நான்கு வழி சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.'ஆந்திராவுடன் போட்டி போடுவதற்காக, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கு கடன் வாங்கும் நிலையில் மாநில அரசு உள்ளபோது, இந்த திட்டம் தேவையில்லாதது' என, பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1872716

Categories: Tamilnadu-news

சசிகலாவிடம் பேசிய 8 அமைச்சர்கள்? - பயத்தில் எடப்பாடி!

மிஸ்டர் கழுகு: சசிகலாவிடம் பேசிய 8 அமைச்சர்கள்? - பயத்தில் எடப்பாடி!
 

 

p42b.jpg‘‘சி.சி.டி.வி கேமரா வந்த பிறகு யாரும் தப்ப முடியாது போலிருக்கிறது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.

‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டோம்.

‘‘சென்னை, தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில்தான் சசிகலா தங்கியுள்ளார். பரோலில் வந்துள்ள சசிகலாவை யார் யாரெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க மத்திய, மாநில உளவுத்துறை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இது போதாது என்று ஏழு இடங்களில் ரகசிய கேமராக்களையும் பொருத்தியுள்ளதாம் மாநில உளவுத்துறை.’’

‘‘சசிகலாவை யார் யாரெல்லாம் சந்தித்தார்கள்?’’ 

‘‘மன்னார்குடி உறவுகள், நெருங்கிய சொந்தங்கள், தூரத்துச் சொந்தங்கள் எனப் பலரும் சந்தித்துவிட்டனர். டாக்டர் சிவக்குமார், அனுராதா, திவாகரனின் மகள் ராஜமாதங்கி போன்றவர்கள் தினமும் வந்து சந்தித்துவிட்டுப் போகின்றனர். கட்சிக்காரர்கள் யாரும் நேரடியாகச் சந்திக்கவில்லை. ஆனால், ‘தங்களுடைய ஆதரவு சசிகலாவுக்குத்தான்’ என்று தெரிவிப்பதைப்போல, பெங்களூரிலிருந்து சென்னைக்கு சசிகலா வந்த வழியில், ஆங்காங்கே பலர் ஆஜர் போட்டனர். தங்களது பெயர்களை பூங்குன்றன் லிஸ்ட்டில் பதியவைத்துவிட்டனர்.’’

‘‘அது என்ன பூங்குன்றன் லிஸ்ட்?’’ 

‘‘ஜெயலலிதா இறந்தபிறகு மாயமாகிவிட்ட பூங்குன்றன், இப்போது போயஸ் கார்டன் வீட்டுக்கு வருவதைக்கூட நிறுத்திவிட்டார். நீண்ட நாள்கள் கழித்து, சசிகலா வந்தபோதுதான் அவரைப் பார்க்க முடிந்தது. ஜெயலலிதா இருந்தபோது, கூட்டத்துக்கு வருபவர்களை லிஸ்ட் எடுப்பதுபோல, அன்றும் லிஸ்ட் எடுத்தார். அந்த லிஸ்ட்டில் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்குக் கட்சியினர் மத்தியில் பலத்த போட்டி இருந்ததாம்.’’

‘‘வீட்டில் சசிகலாவுக்கு எப்படிப் பொழுதுபோகிறது?’’

p42d.jpg

‘‘சிறைக்குள் இருந்தபோது, இங்கு நடந்த செய்திகளை மற்றவர்கள் சொல்லித்தான் அவர் கேட்டிருந்தார். அந்தக் குறையைப் போக்க நினைத்த உறவுகள், ஒரு வீடியோவைத் தயார்செய்து வைத்திருந்தனர். அதைத்தான் சசிகலா இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறார். சசிகலா சிறைக்குச் சென்றபிறகு அவருக்கு எதிராகவும், அவரின் குடும்பத்துக்கு எதிராகவும் அமைச்சர்கள்,  எம்.எல்.ஏ-க்கள், கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் பொதுக்கூட்டங்களில் பேசியவை, பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்த பேட்டிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்  தொலைக்காட்சிகளுக்குக் கொடுத்த பேட்டி, தீபா கொடுத்த பேட்டிகள் போன்றவற்றின் தொகுப்புதான் அது. இதைப் பார்த்து சசிகலா கொதித்துப் போயிருக்கிறார். அந்தக் கொதிப்பைத் தாண்டி, சசிகலாவைச் சிரிக்கவைத்த காட்சிகளும் அதில் இருந்தன. குறிப்பாக, அதில் திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் மோடியின் தொகுதிப் பெயரைச் சொல்ல முடியாமல் திணறியதைப் பார்த்துச் சிரித்த சசிகலா, ‘இவர்களின் லட்சணம் தெரிந்துதான் அக்கா இவர்களை வாயைத் திறக்கவே விடவில்லை’ என்று வெறுப்பாகச் சொன்னாராம்.’’

‘‘எடப்பாடி பற்றி சசிகலா ஏதாவது சொன்னாரா?’’

‘‘கடும் விரக்தியான குரலில், ‘நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். ஆனால், நிலைமை மாறினால் அவரே நம்மிடம் வந்து, ‘டெல்லி பிரஷர். அதனால், அப்படிச் செய்ய வேண்டியதாயிற்று’ என்று புலம்பி சரண்டர் ஆவார். அந்தக் காலம் வெகுதொலைவில் இல்லை’ என்றாராம். சசிகலா சென்னை வந்ததும், அங்கிருந்த சசிகலாவின் உறவினர் ஒருவரின் போனுக்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவரின் அழைப்பு வந்தது. அமைச்சர் லைனில் இருக்கும் விஷயத்தை, சசிகலாவிடம் அந்த உறவினர் சொன்னதும், உடனே போனை வாங்கி ஆறு நிமிடங்கள் பேசியுள்ளார்.’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! கொங்கு மண்டல அமைச்சர் பாணியிலேயே, மேலும் ஏழு அமைச்சர்கள் சசிகலா உறவுகளின் செல்போன் மூலம் சசிகலாவிடம் பேசியுள்ளனர். அவர்களில் ஆறு பேர், சசிகலாவால் அமைச்சர் பதவியைப் பெற்றவர்கள். இவர்கள் இப்போதும் மறைமுகமாக சசிகலாவின் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்கள். அமைச்சர்கள் அனைவருமே தினகரன் செய்த தவறுகளை சசிகலாவிடம் சுட்டிக்காட்டினார்களாம். மேலும், எடப்பாடி தரப்புக்கு டெல்லியிலிருந்து கிடைக்கும் ஆதரவையும் பற்றிச் சொன்னார்களாம். சசிகலாவிடம் பேசிய இந்த அமைச்சர்கள் அனைவருக்கும் உடனேயே எடப்பாடி தரப்பிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. ‘நீங்கள் பேசியதெல்லாம் தெரியும். இப்படித் தடம் மாறினால், ஆட்சி பறிபோகும். நீங்களும் பதவியில்லாமல் வீதியில் நிற்பீர்கள்’ எனக் கண்டிப்பான தொனியில் சொல்லப்பட்டதாம். அவர்கள் ஆடிப்போய்விட்டார்கள். இதைத் தெரிந்துகொண்ட முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டவும் முடிவெடுத்தாராம். ‘அமைச்சர்கள் எல்லோரும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள்’ என்று காட்டவே இந்தக் கூட்டமாம்.’’

p42c.jpg‘‘அமைச்சர் செல்லூர் ராஜு வெளிப்படையாகவே, சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளாரே?’’

‘‘எல்லா அமைச்சர்களும் ஒன்றுசேர்ந்து சசிகலாவையும் தினகரனையும் கட்சியைவிட்டு நீக்குவதாக அறிவித்தபோதே, ‘இந்த முடிவும் அந்தக் குடும்பத்தின் சம்மதமில்லாமல் எடுக்கப்பட்டி ருக்காது’ என்று சொன்னவர்தான் செல்லூர் ராஜு. அவர் எப்போதும் சசிகலாவின் விசுவாசிதான். இப்படிப் பேசிய அன்று இரவே, செல்லூர் ராஜுவுக்கு பல இடங்களிலிருந்தும் அழுத்தம் வந்துள்ளது. அதனால்தான் மறுநாள் ‘சசிகலா குறித்து நான் மனசாட்சிப்படி பேசியது பெரிதுபடுத்தப்பட்டது. அம்மாவின் ஆட்சிக்கும் முதல்வர் பழனிசாமியின் தலைமைக்கும் என்னால் எந்தப் பிரச்னையும் வராது’ என்று சொல்லிச் சமாளித்தார். இந்த நிலையில், ‘செல்லூர் ராஜு மனசாட்சிப்படி பேசியிருக்கிறார். அவர் மதுரைக்காரர்’ என்று தினகரன் பேட்டியளித்தது எடப்பாடியைச் சூடாக்கியுள்ளது.’’

‘‘கிருஷ்ணப்ரியா வீட்டில் ஏன் சசிகலா தங்கினார்?’’

‘‘பரோலில் வரும்போது போயஸ் கார்டன் வீட்டில் தங்கவே சசிகலா ஆசைப்பட்டார். அதில் சட்டச் சிக்கல்கள் ஏற்படும் என்று வக்கீல்கள் சொன்னார்கள். தினகரனும் அவரின் மனைவி அனுராதாவும் அவர்களுடைய அடையார் வீட்டில் வந்து தங்கச் சொன்னார்கள். ஆனால், சசிகலா, தினகரன் மீது இருந்த வருத்தத்தில் அதை மறுத்துவிட்டார். கிருஷ்ணப்ரியா வீடு சசிகலாவுக்கு ரொம்பப் பிடிக்கும். 2011-ல் சசிகலாவை போயஸ் கார்டன் வீட்டிலிருந்து ஜெயலலிதா வெளியேற்றிய போது, சசிகலா இந்த வீட்டில்தான் தஞ்சமடைந்தார். அப்போது இந்த வீட்டின் மாடியில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போதும் அந்த அறையில்தான் தங்கினார்.’’

‘‘மொத்தமாக, சசிகலாவின் மனநிலை எப்படி இருக்கிறது?’’

‘‘அவருக்குப் பிரதானமாக இரண்டு சோகங்கள் இருக்கின்றன. ஒன்று, கணவர் நடராசன் உடல்நிலை குறித்த சோகம். ஜெயலலிதாவின் சமாதிக்குப் போகமுடியவில்லையே என்பது இன்னொரு சோகம். சென்னைக்கு வந்த அன்று இரவு நெடுநேரம் தூங்காமல் தவித்தாராம். ‘என்னுடன் யாராவது ஒரே ஒருவர் மட்டும் வாருங்கள். அடையாளம் தெரியாத கார் ஒன்றில் கிளம்பிப் போய் அக்கா சமாதியைப் பார்த்துவிட்டு வரலாம். ஒரே ஒரு பூ வைத்து வணங்கி, அந்தச் சமாதி முன்பாக 2 நிமிடங்களாவது உட்கார்ந்துவிட்டு வந்தால்தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். அந்தக் காற்று என் மீது பட்டாலே போதும்’ என்றாராம். பரோல் நிபந்தனைகளைச் சொல்லி, அவரை எல்லோரும் கட்டுப்படுத்தினார்களாம். முதல்நாள் குளோபல் மருத்துவமனைக்குச் சென்றபோது, 15 வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன், கையில் ஒரு கைக்குட்டையுடன் சசிகலா காரை நெருங்க முயன்றான். கூட்ட நெரிசலில் அவனால் அருகில் வரமுடியவில்லை. அங்கிருந்து தி.நகர் வீட்டுக்குத் திரும்பியபோது, வாசலில் நின்ற கூட்டத்தில் அந்தப் பையனும் இருப்பதைக் கவனித்த சசிகலா, காரை நிறுத்தி அருகில் அழைத்தார். கைக்குட்டையைப் பிரித்த அந்தப் பையன், ‘அம்மா சமாதியில் வைத்து வழிபட்டு இந்தப் பூக்களை உங்களுக்காக எடுத்து வந்திருக்கிறேன்’ என்று அன்புடன் தந்திருக்கிறான். ‘என்னால போக முடியாவிட்டாலும், எனக்காக அக்கா அனுப்பி வெச்சிருக்காங்க’ என நெகிழ்ந்தபடி, நீண்டநேரம் அந்தப் பூக்களைக் கையிலேயே வைத்திருந்தார் சசிகலா. ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்குகள் செய்த தேவாதி, சசிகலாவைச் சந்தித்தார். ஜெயலலிதாவுக்காகச் செய்ய வேண்டிய சில சடங்குகள் பாக்கி இருந்ததாம். அதை, கிருஷ்ணப்ரியா வீட்டில் வைத்து சசிகலா இப்போது செய்து முடித்தாராம்.’’

p42a.jpg‘‘சசிகலாவின் வருகைக்குப் பிறகு எல்லாரும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கிறார்கள்போல?

‘‘ஆம்! சசிகலா பரோலில் வந்ததும் பல அமைச்சர்கள் சொந்த ஊர்களுக்குப் பறந்து விட்டனர். டெங்கு விழிப்பு உணர்வு பிரசாரம்,   எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எனக் காரணம் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பேச்சிலும் தொனி மாறிவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியே அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு கதையைச் சொல்லி, தினகரனையும் மு.க.ஸ்டாலினையும் கடுப்படிப்பது அவரின் வழக்கம். சசிகலா பரோலில் வெளிவந்த 7-ம் தேதி தர்மபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அப்படிக் கதை எதையும் சொல்லாமல் விழாவை முடித்துவிட்டார் எடப்பாடி. முதல்வர் கதை சொல்வதைத்தான் நிறுத்தியுள்ளார். ஆனால், பல அமைச்சர்கள் செல்போன் பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டனர். தங்களுக்கு அழைப்பு வருமோ என்ற அச்சம். எதற்கெடுத்தாலும் கருத்துச்சொல்லும் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள்கூட மௌனமாகிவிட்டனர். பன்னீர்செல்வமும் அரசியல் பேசுவதைத் தவிர்த்துவிட்டார்.’’

‘‘மருத்துவமனைக்குச் சென்ற சசிகலாவைப் பலர் சந்தித்ததாகச் சொல்கிறார்களே?’’

‘‘நடராசனைப் பார்க்க குளோபல் மருத்துவமனைக்குத் தினமும்  செல்கிறார் சசிகலா. குளோபல் மருத்துவமனையில், இரு அறைகள் சசிகலாவின் உறவினர்களுக்காகத் தயார்செய்து வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைக்குப் போனதும், அந்த அறையில்தான் சசிகலாவும் இருந்தார். மருத்துவமனை உடையணிந்து, முகத்தில் மாஸ்க் அணிந்து சென்ற சசிகலாவை அநேகமாக நடராசனுக்கு அடையாளமே தெரிந்திருக்காது. நடராசன் கையை மட்டும் அசைத்துள்ளார். நடராசன் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறார். அவர் சுயநினைவில் இருந்தாலும், தொண்டையில் ட்ரகியாஸ்டமி பொருத்தப்பட்டுள்ளது. இதேநிலைதான் அக்டோபர் 13 வரை நீடிக்கும். ஆனால், சசிகலாவின் பரோல் 12-ம் தேதியோடு முடிகிறது. அதனால், சசிகலாவும் நடராசனும் பேசிக்கொள்ளும் சூழல் இப்போதைக்கு இல்லை.’’

‘‘சசிகலாவிடம் டாக்டர்கள் என்ன சொன்னார்களாம்?’’

‘‘டாக்டர் முகமது ரீலா தலைமையிலான டீம், நடராசன் உடல்நிலைப்பற்றி எடுத்துச் சொன்னது. நடராசன் உடலில் அகற்றப்பட்ட கல்லீரலைப் பதப்படுத்தி வைத்திருந்தனர். அதையும் எடுத்துக் காட்டியுள்ளனர். ‘இந்தக் கல்லீரல், ரோஜாப்பூ நிறத்தில் இருக்க வேண்டும்; ஆனால், பாருங்கள். சாருடைய கல்லீரல் நிறம் மாறியிருக்கிறது’ என்று விளக்கினர். அதை ஆச்சர்யத்தோடு பார்த்த சசிகலா, ‘அவர் எப்போது முழுமையாக குணமடைவார்’ என்று  கேட்டுள்ளார். ‘புதிதாகப் பொருத்தப்பட்ட சிறுநீரகம், சரியாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. கல்லீரல் செயல்படும் விதம் தெரிய ஒரு வாரம் ஆகும். இன்னும் சில மாதங்களுக்கு மிகுந்த கவனத்துடன் தொற்று பரவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் அதன்பின் எங்கள் அட்வைஸை அவர் சரியாகக் கடைபிடித்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவருக்கு ஒன்றும் ஆகாது’ என டாக்டர்கள் நம்பிக்கை கொடுத்துள்ளனர். அதோடு, இங்கு சிகிச்சை பெறுவதற்கு அரசுத் தரப்பில் தரப்பட்ட நெருக்கடிகள் குறித்தும் சசிகலாவிடம் உறவினர்கள் சொன்னார்கள். அதில் அவர் ரொம்பவே கோபமடைந்தாராம்.’’

‘‘சசிகலாவின் தம்பி திவாகரன் அவரைச் சந்திக்க வந்ததாகத் தெரியவில்லையே?’’

‘‘ஆமாம்! நடராசன் குளோபல் மருத்துவமனையில் அட்மிட்டானபோது, திவாகரன் அடிக்கடி வந்துபோனார். ஆனால், சசிகலாவைச் சந்திக்க திவாகரன் வரவில்லை. காரணம், அவருக்குக் கடுமையான டெங்கு காய்ச்சலாம். சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருக்கிறார். சசிகலா பரோல் முடிந்து பெங்களூரு திரும்புவதற்குள் திவாகரன் வந்து அவரைச் சந்திப்பார்’’ என்ற கழுகார் பறந்தார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி
படங்கள்: கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசலு

மேடையில் படம் வேண்டாம்!

p42.jpg

காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்கட்சித் தேர்தலையும் பொதுக்குழுவையும் நடத்தி முடித்த மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திருநாவுக்கரசர், அப்செட்டில் இருக்கிறார். பொதுக்குழுவில் தன்னை மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், ‘பொதுக்குழு மேடையில் திருநாவுக்கரசர் படத்தை வைக்கக்கூடாது’ என்ற தேர்தல் பார்வையாளர் சஞ்சய் தத் உத்தரவால் அதிர்ச்சி யடைந்தார். அடுத்த அதிர்ச்சியாக, டெல்லியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தைப் படிக்கச் சொன்னார்களாம். ‘தலைவர், செயற்குழு உறுப்பினர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமனம் செய்யும்’ என்ற ஒற்றைத் தீர்மானத்தை நிறைவேற்றினால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். பொதுக்குழுவுக்கு முதல்நாள் இரவு வந்த இந்தத் தகவலால் நொந்துவிட்டார் திருநாவுக்கரசர். இனி தலைவர் பதவியைப் பிடிக்க பலரும் டெல்லிக்குப் படையெடுப்பார்கள் என்று அஞ்சுகிறார். 

http://www.vikatan.com

Categories: Tamilnadu-news

சசிகலாவின் பரோல் ஓவர்! இன்று என்ன திட்டம்?

சசிகலாவின் பரோல் ஓவர்! இன்று என்ன திட்டம்?
 

சசிகலா

சிகலா பரோலில் வந்து நான்கு நாள்கள் ஆகின்றன! அவரின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் சசிகலா தற்காலிகமாகத் தங்கியிருக்கிறார். "இந்த நான்கு நாள்களில், உறவினர்களின் செல்போனில் எடப்பாடி கோஷ்டி அமைச்சர்கள் ஆறு பேருடன் தொடர்புகொண்டு சசிகலா பேசினார். அதே பாணியில் 25 எம்.எல்.ஏ-க்களுடனும் தகவல் பரிமாற்றம் நடந்தது" என்றெல்லாம் டி.டி.வி. தினகரன் கோஷ்டியினர், மீடியாக்களிடம் தகவல்களைச் சொல்லி வருகிறார்கள். 

 

ன்று ஒருநாள்தான் பாக்கி... சசிகலா பரோல் முடிந்து பெங்களூரு சிறைச்சாலைக்குப் போகப்போகிறார்...! அவர் கிளம்பும்போது, அவரைச் சந்திக்க, சில அமைச்சர்கள் ரெடியாகிறார்கள் என்று உளவுத்துறையினர் எடப்பாடியை எச்சரிக்க... 'அன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும்' என்று அவர் அறிவித்துவிட்டார். சசிகலா கோஷ்டி பக்கம் சாய இருந்த சில அமைச்சர்களுடன் சமாதானமும் பேசிவிட்டாராம் எடப்பாடி. தற்போதைய சூழ்நிலையில், அந்த அமைச்சர்கள் மதில்மேல் பூனையாக ஒதுங்கி நிற்கிறார்கள். அரசியல் நீரோட்டத்தைப் பார்த்து, அதற்கேற்ப பயணிக்க அவர்கள் முடிவு செய்துவிட்டனர். இப்போதைக்கு எடப்பாடி கோஷ்டியை தொடர்ந்து  ஆதரிக்கிறார்கள். 

குளோபல் மருத்துவமனைக்கு சசிகலா வந்தபோது என்ன நடந்தது?

டாக்டர் முகமது ரீலா தலைமையிலான குழுவினர், சசிலாவிடம் நடராசன் உடல்நிலை பற்றி எடுத்துச் சொன்னார்கள். "இது எங்களுக்கு மருத்துவரீதியாக சவாலான ஆப்ரேஷன்" என்று சொன்னபோது, சசிகலா ஆச்சர்யத்தோடு உற்றுக் கவனித்தாராம். நடுவில், சசிகலாவும் நிறைய கேள்விகளைக் கேட்டாராம். நடராசன் உடலிலிருந்து அகற்றப்பட்ட கல்லீரலை பத்திரப்படுத்தி வைத்திருந்த டாக்டர்கள், அதை சசிகலாவிடம் காட்டியதுடன், நல்ல நிலையில் உள்ள கல்லீரலையும் காட்டியுள்ளனர். "உங்கள் கணவரின் கல்லீரல்... முழுவதுமாக 'ஃபெயிலியர்' ஆகிவிட்டது. 14 மணிநேரம் ஆபரேஷன் நடத்தி, அவருக்கு மாற்று கல்லீரலையும், சிறுநீரகத்தையும் பொருத்தினோம்" என்றார்களாம். டாக்டர்கள் சொன்னதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டாராம் சசிகலா.

மேலும், "புதிதாகப் பொருத்தப்பட்ட சிறுநீரகம், நடராசன் உடலுடன் இணைந்து சரியாக வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது. கல்லீரல் செயல்படும்விதம் தெரிய ஒரு வாரம் ஆகும்" என்றார்களாம். "எங்கள் அட்வைஸை நடராசனும், குடும்ப உறுப்பினர்களும் சரியாகப் பின்பற்றினால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவரின் உடல் நலத்திற்கு நாங்கள் கேரண்டி" என்று உறுதியாக டாக்டர்கள் சொன்னதாக சசிகலா குடும்பத்தினர் பேசிக் கொள்கிறார்கள். ஒருகட்டத்தில், சசிகலா, அவரது குடும்பத்தினர் பக்கம் திரும்பி, "ஏன் இந்த நிலை? ஆரம்பத்திலேயே மருத்துவமனையில் அவரைக் காட்டவில்லையா?" என்று கேட்டாராம்.

நடராஜன்"நான்கு மாதங்களுக்கு முன்பு, நடராசன்...கொஞ்சம் நல்ல நிலையில்தான் இருந்தார். அப்போதே 'கல்லீரலில் பிரச்னை' என்று எங்களுக்குத் தெரியும். அது வலுவிழக்கும்போது மாற்றிக்கொள்ளலாம் என்று டாக்டர்கள் தெரிவித்ததுடன், தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனால், ஒரே மாதத்தில் கல்லீரல் செயல்பாட்டை இழந்து விட்டது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்றார்களாம். மேலும், "மாற்றுக் கல்லீரல், சிறுநீரகம்... இரண்டும் நடராசனுக்குத் தேவைப்பட்டது. சட்ட விதிமுறைகளின்படி, அதற்காகப் பதிவு செய்துவிட்டு, சில மாதங்கள் காத்திருந்தோம்.

இந்த மருத்துவனைக்கு வந்தபிறகு, தினமும் நாலு முறை ரத்த வாந்தி எடுத்தார். மிகவும் பயந்து விட்டோம். 'மல்டி ஆர்கன் தேவை' என்று பதிவு செய்தவர்களுக்குச் சட்டப்படி முன்னுரிமை தரவேண்டும். ஆனால், எடப்பாடி அரசு. அதைக் கண்டு கொள்ளவேயில்லை. ஐந்துமுறை ஆர்கன் கிடைக்கும் சந்தர்ப்பம் வந்தது. ஆனால், தரவில்லை. ஆறாவது முறைதான் அனுமதித்தார்கள்" என்று விவரமாக எடுத்துச் சொன்னார்களாம் உறவினர்கள். 

"டிஸ்சார்ஜ் ஆகி நடராசன் வீட்டுக்கு வரும்போது, அங்கே ஐ.சி.யூ. போல மாறுதல் செய்திருக்க வேண்டும். இன்னும் சில மாதங்களுக்கு அவரின் உடல்நிலையை மிக கவனத்துடன் தொற்று பரவாமல் நாம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். டாக்டர்கள் தெரிவிக்கும் அட்வைஸை சரியாகப் பின்பற்ற வேண்டும்" என்றாராம் சசிகலா. அவரது  குடும்பத்தினர் அதற்கு தலையாட்டினார்களாம். 

கிருஷ்ணப்ரியா வீட்டில் யாருடனும் சசிகலா பேசவில்லை என்கிறார்கள். பெரும்பாலும் சசிகலாவின் பதில் மௌனம்தான். சிலர் பேசும்போது, கையால் சைகை காட்டி, அவரின் பதிலைப் புரியவைத்தாராம். உதாரணத்துக்கு, டெங்குக் காய்ச்சலில் நூற்றுக்கணக்கான மக்கள், இறந்து போகிற சம்பவங்களையும், அதுபற்றி எடப்பாடி அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதையும் டெல்டா பிரமுகர், கண்ணீருடன் எடுத்துச் சொன்னாராம். சீரியஸான முகத்துடன் கேட்டுக்கொண்டு, 'அம்மா நிச்சயம் சரிசெய்வார். அவரைப் பிரார்த்தனை செய்யுங்கள்' என்று சைகை மூலம் சொன்னாராம். "அமைச்சர்களின் செயல்பாடு, லட்சணம் தெரிந்து, முதல்வராக அம்மா இருந்தபோது, எல்லாத் துறைகளையும் அவர்தான் கவனித்து வந்தார். அமைச்சர்களுக்கு விவரம் தெரியாது. அம்மா, கோட்டைக்குப் போய்விட்டால் பணியில் மூழ்கிவிடுவார். பத்து, பதினைந்து முறை போன் மூலம் அழைப்பு விடுத்தவண்ணம் இருப்பேன். அப்புறம்தான்... வீடு ஞாபகமே அம்மாவுக்கு வரும்" என்று சொல்லியபோது, சசிகலா கண்ணில் நீர் துளிர்த்ததாம்.

சசிகலாவைச் சந்திக்க அவரது தம்பி திவாகரன் வரவில்லை. நடராஜன் குளோபல் மருத்துவமனையில் அட்மிட் ஆனதிலிருந்து சசிகலா வரும்வரை, அடிக்கடி திவாகரன் வந்து சென்றார். ஆனால், சசிகலா பரோலில் வந்த பிறகு, அவரை இன்னும் திவாகரன் சந்திக்கவில்லை. காரணம், திவாகரனுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாம். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் டெங்குக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாகச் சொன்னார்களாம். அதன்காரணமாகவே, அவர் சசிகலாவைச் சந்திக்க வரவில்லையாம். சசிகலா இன்று கிளம்பும்போது, அவரை திவாகரன் சந்திப்பாராம்.

திவாகரன்

சசிகலாவின் கேள்விகள்?

"நான் சிறைச்சாலைக்கு செல்லும்முன், போயஸ்கார்டன் முகவரிதான் நிரந்தரம் என்று சிறை ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளேன். பரோலில் போகும்போது, அதே முகவரிதானே என்னுடையது? அங்கேதானே என்னைத் தங்க அனுமதிக்க வேண்டும். ஏன் அங்கே தங்கக் கூடாது என்கிறார்கள்? நான் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கப்போகிறேன். எனக்குச் சிறைச்சாலை விதித்த கண்டிஷன்களை நான் நிச்சயமாக ஃபாலோ பண்ணுவேன்... ஆனால், அதெல்லாம் என் வீட்டில் இருந்தால்தானே முடியும்? நான் உறவினர் வீட்டில் இருக்கும்போது, அந்த உறவினரைப் பார்க்க விசிட்டர்கள் வருவார்கள். கட்சி நிர்வாகிகள் வருவார்கள. எத்தனையோ பேர் வரும்போது, சிறைச்சாலை கண்டிஷன்களை அவர்கள் ஏன் பின்பற்றவேண்டும்?" என்று கேட்டாராம். இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர்களில் ஒருவர், "இல்லம்மா... போயஸ்கார்டன் பங்களா யாருக்குச் சொந்தம் என்கிற சட்ட சர்ச்சை நிலவுகிறது. அதனால், அங்கே உங்களைத் தங்க அனுமதிக்கமாட்டார்கள்" என்றாராம். "சசிகலா ஏதும் பேசவில்லையாம்". 

கட்சி அமைப்பில் நிறைய மாறுதல்கள் செய்ய சசிகலா வரவை எதிர்நோக்கி காத்திருந்தாராம் தினகரன். ஏனென்றால், சசிகலா சிறைச்சாலையில் இருக்கும்போது, அவரின் ஒப்புதலோடு என்கிற வார்த்தையைப் போட்டுதான் கட்சி நிர்வாகிகள் நியமனம் மற்றும் நீக்கம் தொடர்பான அறிவிப்புகளைத் தினகரன் வெளியிட்டு வந்தார். சசிகலாவே பரோலில் வருகிறார் என்பதால், சசிகலா பெயரிலேயே அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டிருந்தாராம் தினகரன். ஆனால், 'சிறைக்கண்காணிப்பாளர் கண்டிஷன்களைப் பார்த்தபிறகு, அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதே?' என்கிற ஆதங்கம் அவருக்கு! 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம் முடிவுக்கு வந்தவுடன் பொதுக்குழுவை கூட்ட, தினகரனுக்கு சசிகலா பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். அதற்கான பூர்வாங்க வேலைகளை திவாகரன் தரப்பினர் செய்ய ஆரம்பித்துவிட்டனர். 'தேர்தல் கமிஷனுக்குச் சரியான பாடம் புகட்டுவதே அடுத்த இலக்கு' என்று தினகரன் தரப்பினர் சொல்லிவருகிறார்கள்.

 

இன்று நண்பகல் சென்னையிலிருந்து சசிகலா கிளம்ப உள்ளார். குறுகிய காலமே பரோலில் வந்திருந்தாலும், தமக்கு அ.தி.மு.க வட்டாரத்தில் இருக்கும் செல்வாக்கை சசிகலா புரிந்து கொண்டார் என்கின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/104659-poes-garden-is-my-permenent-address--says-sasikala.html

Categories: Tamilnadu-news

சோகம்

gallerye_002641244_1872675.jpg

 

ஐந்து நாள், 'பரோல்' முடிந்து, இன்று மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்ல வேண்டி இருப்பதால், சசிகலா மிகுந்த சோகத்திற்கு ஆளாகியுள்ளார்; அத்துடன், கலக்கமும் அடைந்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வராத தாலும், எதிர்பார்த்த அரசியல் மாற்றங்கள் நிகழாததாலும், விரக்தியில் உள்ளார்.

 

ஐந்து நாள், பரோல், இன்றுடன், முடிவதால், சசி... ,சோகம்!

சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்ரவரி மாதம், பெங்களூரு, 
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவரை பார்ப்பதற்காக, 15 நாள், 'பரோல்' கோரி, சசிகலா விண்ணப்பித்தார். ஆனால், கர்நாடக 
சிறைத்துறை, ஐந்து நாள் மட்டுமே வழங்கியது. இதையடுத்து,6ம் தேதி மாலை, பெங்களூரில் 

இருந்து காரில் சென்னை வந்தார். அவருக்கு, அ.தி.மு.க.,வில் செல்வாக்கு உள்ளது என்பதை காட்ட, தினகரன் ஆதரவாளர்கள், ஆங்காங்கே வரவேற்பு அளிக்க, ஏற்பாடு செய்திருந்தனர்; அவர் வந்த கார் மீது, பூக்களை துாவினர்.
 

வரவேற்பு


மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் கணவரை பார்க்க, பரோலில் வந்தவருக்கு, ஆடம்பர வரவேற்பு அளிக்கப் பட்டது, பொதுமக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.'சசிகலாவை பார்க்க, 'ஸ்லீப்பர் செல்' அமைச்சர்கள்,10 பேரும், 21 எம்.எல்.ஏ.,க் களும் அணிவகுத்து வருவர்; தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்' என, தினகரன் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உளவுத்துறையினர் கண்காணிப்பு காரணமாக, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், சசிகலாவை சந்திக்க செல்லவில்லை. தினகரன் ஆதரவாளர்களாக உள்ள, இரண்டு எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ., கருணாஸ் மட்டுமே, சசிகலாவை சந்திக்க, அவரது வீட்டிற்கு சென்றனர்.மறுநாள் சசிகலா, மருத்துவ மனையில் சிகிச்சை பெறும், கணவரை சந்திக்க சென்றார். அப்போதும், அவரை சந்திக்க யாரும் வரவில்லை.

சசிகலாவும்,சில மணி நேரம் மட்டுமே, மருத்துவமனையில் இருந்தார். மீதி நேரம்,

 

சென்னை, தி.நகரில் உள்ளவீட்டிலேயே தங்கி இருந்தார். அவரது குடும்ப உறவினர்கள் தான், அவரை சந்தித்து பேசினர். அப்போது, சொத்து பிரச்னை எழுந்து உள்ளது; கடும் வாக்கு வாதமும் நடந்துள்ளது.கட்சியும், ஆட்சியும் கையை விட்டுபோன நிலையில், உறவினர்கள் இடையே,சொத்து பிரச்னை பெரிதாக வெடித்து உள்ளது,அவரை கவலை அடைய செய்துள்ளது.
 

சந்திக்க மறுப்பு


இதற்கிடையே, தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை, போனில் சசிகலா தொடர்பு கொண்டுள்ளார்; பலர் போனை எடுக்கவே இல்லை. ஓரிருவர் பேசி உள்ளனர்; ஆனால், சந்திக்க வர மறுத்து விட்டனர்.சிறைக்கு சென்ற போது, தனக்கு ஆதரவாக இருந்தோர், தற்போது எதிரிகளாக இருப்பது, அவரை சோகம் அடையச் செய்து உள்ளது.கணவரை பார்ப்பதற்காக, பரோலில் வந்தவர், மருத்துவமனையில் ஒரு சில மணி நேரம் மட்டுமே இருந்ததை, சமூக வலை தளத்தினர், 'கலாய்த்து' வருகின்றனர்.

அவர், பெரும்பாலான நேரம், குடும்ப பிரச்னை, அரசியல் பிரச்னை குறித்தே, உறவினர்களிடம் பேசி உள்ளார்.அவர் எதிர்பார்த்து வந்த எதுவும் நடைபெறாத நிலையில், இன்று மாலை மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி உள்ளதால், கடும் சோகத்தில் இருப்பதாக, அவரது ஆதரவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1872675

Categories: Tamilnadu-news

தமிழ்நாட்டை ஆள தகுதியானவர் யார் ?

 

தமிழ்நாட்டை ஆள தகுதியானவர் யார் ? | Socio Talk

அக்காலத்தில் இருந்தே தமிழ்மொழிக்கு ஒரு சிறப்புண்டு. தற்போது தமிழ்மொழி பேசினால் அதற்கு ஏற்ற மரியாதையே இல்லை. வடமொழியான ஹிந்தி திணிப்பு சரியா ? உண்மையில் யாருக்கு தான் தமிழ்நாட்டை ஆள தகுதி இருக்கு ? மேலும் பல கேள்விகளும், அதற்கான விடைகளும்.

Categories: Tamilnadu-news

லாக்கானது ஏடிஎம் கார்டு... பிச்சையெடுத்த ரஷ்ய வாலிபர்... உதவிக்கரம் நீட்டியது போலீஸ்!

லாக்கானது ஏடிஎம் கார்டு... பிச்சையெடுத்த ரஷ்ய வாலிபர்... உதவிக்கரம் நீட்டியது போலீஸ்!
 
 

காஞ்சிபுரம், பிச்சை

காஞ்சிபுரம் கோயில் ஒன்றில் ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் பிச்சை எடுத்தார்.  தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு, உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ரஷ்யன்ரஷ்யாவைச் சேர்ந்தவர் பெர்ன்கோவ். இவர் கோயில்களை காண்பதற்காக செப்டம்பர் 8-ம் தேதி ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றிப்பார்ப்பதற்காக ரயில் மூலம் நேற்று இரவு 8.15 மணிக்கு காஞ்சிபுரம் வந்தார். கையில் வைத்திருந்த பணம் செலவாகிவிட்டதால், தனது கையில் வைத்திருந்த டெபிட் கார்ட் மூலம் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயன்றார். ஏடிஎம் பாஸ்வேர்டை மாற்றிப் மாற்றி போட்டதால் ஏடிஎம் கார்டு லாக் ஆகிவிட்டது. இதனால் வெறுப்படைந்த அவர் அந்த ஏடிஎம் கார்டை உடைத்து போட்டுவிட்டார். கையில் செலவுக்குப் பணம் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியவில்லை. இரவு நேரம் என்பதால் எங்கே எப்படி போகவேண்டும் என அவருக்குப் புரியவில்லை. கையில் பணம் இல்லாததால் எங்கும் தங்க முடியவில்லை. இதனால் இரவு முழுவதும் காஞ்சிபுரம் நகரில் சுற்றித் திரிந்தார். இதில் களைப்படைந்த அவர் குமரகோட்டம் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் படுத்து உறங்கிவிட்டார். காலையில் எழுந்ததும் அங்கே கோயிலில் சிலர் பிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறார். செலவுக்கு பணம் இல்லாததால் அவரும் அங்கேயே உட்கார்ந்து பிச்சை எடுத்துள்ளார்.துளசி காஞ்சிபுரம்

இதை கேள்விப்பட்ட சிவகாஞ்சி காவல் உதவி ஆய்வாளர் துளசி அங்கு வந்தார். அவரை மீட்டுவந்து காவல் நிலையத்தில் விசாரணை செய்தபோது, ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்துள்ளதாகவும், ஏ.டி.எம் கார்டு லாக் ஆகிவிட்டதால் பிச்சை எடுத்ததாகவும் கூறி இருக்கிறார். பின்பு அந்த உதவி ஆய்வாளர் செலவுக்கு 500 கொடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள ரயிலில் சென்னைக்கு ஏற்றி அனுப்பி இருக்கிறார்.

அந்த காவலருக்கு நன்றி தெரிவித்த பெரன்கோவ், தூதரகம் மூலம் உதவியை நாடப்போவதாக கூறியிருக்கிறார்.

http://www.vikatan.com/news/tamilnadu/104592-russian-youth-begs-in-kancheepuram-temple-due-to-atm-card-issue.html

Categories: Tamilnadu-news

4-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வுக்கு வாய்ப்பு இல்லை? - கீழடியில் அகழாய்வு குழிகள் மூடப்பட்டன

1010majanKeezhadhi%20Final

கீழடியில் மூன்றாம் ஆண்டு அகழாய்வு பணி முடிவடைந்ததால் தனியார் நிலத்தில் தோண்டப்பட்ட அகழாய்வு குழிகள் மூடப்பட்டன.

இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் தமிழர்களின் தொன்மை, சங்க கால மக்களின் நகர நாகரிகம், வைகை நதி நாகரிகம் குறித்து கடந்த 2015-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி கண்காணிப்பாளர் நந்தா கிஷோர் ஸ்வைன், உதவி தொல்லியலாளர் ராஜேஷ், வீரராகவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

2015, 2016 ஆகிய 2 ஆண்டுகளில் 102 அகழாய்வுக் குழிகளில் இருந்து 5,300 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 2 பொருட்களை மட்டும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிசிஸ் நிறுவனத்துக்கு அனுப்பி கார்பன் பகுப்பாய்வு செய்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான பொருட்கள் என ஆய்வு முடிவு வந்தது.

கடந்த மே 28-ம் தேதி 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், துணைக் கண்காணிப்பாளர் நந்தா கிஷோர் ஸ்வைன், உதவி தொல்லியலாளர்கள் வீரராகவன், ராஜேஷ், சென்னை பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்கள் மேற்கொண்டனர்.

தாமதமாகத் தொடங்கியதால் 8 அகழாய்வுக் குழிகள் (400 சதுர மீட்டர்) மட்டுமே தோண்டப்பட்டன. இவற்றில் இருந்து 1,800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.

இந்நிலையில், கடந்த செப்.30-ம் தேதியோடு மூன்றாம் ஆண்டு அகழாய்வு பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து தனியார் நிலத்தில் தோண்டப்பட்ட அகழாய்வுக் குழிகளை மூடும் பணி நேற்று நடந்தது.இந்த ஆய்வுப் பணியில் ஈடுபடும் தொல்லியலாளர்கள் தங்குவதற்காக கீழடியில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதல் 2 கட்ட ஆய்வின்போதும், இக்கூடாரங்கள் அகற்றப்படவில்லை. இதையடுத்து அடுத்த கட்ட ஆய்வு நடைபெற வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 3-ம் கட்ட ஆய்வு நிறைவடைந்த நிலையில், கூடாரங்கள் அனைத்தும் நேற்று அகற்றப்பட்டன. இதனால், நான்காம் ஆண்டு அகழாய்வு பணிகள் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தமிழார்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, கீழடியில் இருந்த தொல்லியலாளர்களின் கருத்தை அறிய முயன்றபோது, அவர்கள் செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19832229.ece

Categories: Tamilnadu-news

சசிகலாவின் சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்திய‌ கைதிகள் சிறையில் தாக்கப்பட்டது உண்மை: மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல்

சசிகலாவின் சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்திய‌ கைதிகள் சிறையில் தாக்கப்பட்டது உண்மை: மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல்

 

 
Sasikala1

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, விதிகளை மீறி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்திருக்கிறார் என முன்னாள் டிஐஜி ரூபா கடந்த ஜூலை மாதம் புகார் தெரிவித்தார். அப்போது சிறையில் சசிகலா, தெல்கி உள்ளிட்ட விஐபி கைதிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு வசதிகள் தொடர்பாக கைதிகள் ரூபாவிடம் புகார் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார், அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் கைதிகளை சரமாரியாக தாக்கினர். சிறையில் உள்ள ரவுடிகளை வைத்தும் புகார் அளித்த கைதிகளை தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த விவகாரத்தை கர்நாடக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது. அதன்பின், ஐ.ஜி.பி. சவுமீன்ட் முகர்ஜி, 72 பக்க அறிக்கையை மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், “சிறையில் சசிகலா, இளவரசி, தெல்கி உள்ளிட்ட விஐபி கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சிறப்பு வசதிகளை பெற்றுள்ளனர். இதை டிஐஜி ரூபாவிடம் தெரிவித்த 32 கைதிகளை சிறை வார்டன்களும், கைதிகளும் தாக்கியுள்ளனர். காயமடைந்த கைதிகளை நாற்காலியில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சிறையின் முன்னாள் கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் வரும் 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

ரூபா வரவேற்பு

ஆணையத்தின் அறிக்கையை வரவேற்றுள்ள முன்னாள் டிஐஜி ரூபா, “இந்த விவகாரத்தை ஆழமாக விசாரித்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும். கைதிகளையும், என்னையும் அவசர அவசரமாக இடமாற்றம் செய்தது ஏன்? எங்களை பழிவாங்கிவிட்டு, குற்றவாளியான சசிகலாவுக்கு இப்போது பரோல் வழங்கி இருக்கிறார்கள். என்ன சொல்வதென்றே தெரிவியவில்லை” என்றார்.

http://tamil.thehindu.com/india/article19832241.ece?homepage=true

Categories: Tamilnadu-news

“நான் பார்க்காத சோதனையா?” உறவுகளிடம் உருகிய சசிகலா

“நான் பார்க்காத சோதனையா?” உறவுகளிடம் உருகிய சசிகலா
 

சசிகலா

ந்து நாள் அவசரப் பரோலில், சிறைவாசத்திலிருந்து விடுபட்டு வந்துள்ளார் சசிகலா. இது தற்காலிக விடுபடுதல் என்றாலும் 'இச்சுதந்திரக் காற்றை மகிழ்ச்சியோடே அனுபவிக்கிறார் சசிகலா' என்கின்றனர் அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள்.

 

“பெங்களூரிலிருந்து காரில் சென்னைப் பயணத்தை மேற்கண்ட அந்தக் கணத்திலேயே அவர் முகத்தில் ஏகப்பட்ட உற்சாகம். நடு சீட்டில் அமர்ந்திருந்தவர் ஜன்னலோர கண்ணாடியில் முகம் புதைத்து இயற்கை காட்சிகளை ரசித்தபடியே வந்துள்ளார். வழியெங்கும் ஆதரவாளர்கள் தேங்காய், பூசணி உடைத்தும், பூக்கள் தூவியும் வரவேற்பு கொடுத்தனர். வழியில் டீ கடையில் நிறுத்தியபோதும், 'ஹே சசிகலா' எனப் பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்த்துள்ளனர். சசிகலா கார் பயணம் முழுக்கவே ஆதரவாளர்கள் சாரை சாரையாக ஆதரவைத் தெரிவிக்க, "போன முறை இதே சாலை வழியாகத்தான் கைதாகி சிறைக்குச் சென்றேன். அப்போது என்னைப் பல இடங்களில் கடுமையாகத் திட்டினார்கள். ஆனால், தற்போது இந்தளவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்னை உருகச் செய்கிறது" என தினகரனிடம் தம் எண்ணங்களைப் பரிமாறியுள்ளார். அந்தளவுக்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பில் உத்வேகம் பெற்றுள்ளார்" என்கின்றனர் கார் பவனியில் உடன் வந்தவர்கள்.

நடரசனை சந்தித்த சசிகலா:

சென்னையிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டுக்கு இரவு 10.10-க்கு தான் வந்தார் சசிகலா. தூங்கும் நேரமானதால் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு உறங்கச் சென்றவர், அடுத்தநாள் கணவர் நடராசனைச் சந்திக்க ஆயத்தமானார். காலையிலேயே மிக நெருக்கமான உறவினர்கள், கிருஷ்ணபிரியா வீட்டில் குழுமத் தொடங்கினர். அவர்களின் நல விசாரிப்புகள் முடிந்தபின், 11 மணியளவில் குளோபல் மருத்துவமனைக்குச் சென்றார் சசிகலா. முதல் தளத்தில் உள்ள தமது கணவர் நடராசனை காலை 11.55-க்குச் சந்தித்தார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் அபாய கட்டத்திலிருந்து மீளவில்லை நடராசன். கணவரின் நிலை கண்ட அந்தக் கணம் உடைந்து போனார் சசிகலா. கண்கள் குளமாகின. பலகீனமாக இருந்தாலும் சுயநினைவோடு நடராசன் இருந்ததால், கைகள் உயர்த்தி சைகைகள் மூலம் இருவரும் பேசிக்கொண்டனர். 15 நிமிட சந்திப்புக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பினார் சசிகலா. 'ட்ரக்கியோடமி' கருவி பொறுத்தப்பட்டிருந்ததால் நடராசனால் பேச இயலாது. எனவே, தொடர்ந்து மூன்று நாளும்(அக் 7 - அக் 9 ம் தேதி ) கணவனைச் சந்தித்த சசிகலா, உணர்வுமொழியிலேயே கணவனிடம் பேசிக்கொண்டார். அவர் நலமோடு வீடு திரும்ப கோட்டூர்புரம் சித்தி விநாயகர் கோயிலில் வேண்டிக்கொண்டார் என மொத்தத்தையும் விளக்குகின்றனர் குளோபல் மருத்துவமனைக்குச்  சசிகலாவுடன் சென்ற உறவினர்கள்.

நடராசன்

அரசியல் கலந்துரையாடல் :

“அரசியல், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது, வீடு, மருத்துவமனையில் பார்வையாளரைச் சந்தித்து பேசக் கூடாது எனக் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளதால், அதை இதுவரை முறையாகவே கடைபிடித்து வருகிறார் சசிகலா" என்கின்றனர் அபிபுல்லா சாலையில் வட்டமிடும் உளவுப்பிரிவினர். அதேநேரம் சசிகலாவுக்கான உதவிகளை விவேக் செய்து வருகிறார். கிருஷ்ணபிரியா சிலவற்றை பகிர்ந்தாலும் அவரின்  தலையீட்டை, சசிகலா அதிகம் விரும்பவில்லை. திவாகரன் மகன் ஜெய்ஆனந்த், தினகரன் குடும்பத்தினர் சிறிது நேரம் அருகிலிருந்து அவருடன் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

கணவர் நடராசனுடன் பேசமுடியவில்லை என்ற கவலையை அவ்வப்போது சசிகலா வெளிப்படுத்தி வர, 11-ம் தேதி எப்படியும் பேசிவிடலாம் என உறவினர்கள் ஆறுதல் கொடுத்து வருகின்றனர். உரையாடல் அரசியல் பக்கமும் திரும்பியது. எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு, திவாகரன் ஆதரவு  எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் போன்ற சமகால அரசியல் அசைவுகளை, அவரவர் கோணத்தில் ஒவ்வொருவரும் விளக்கியபடியே இருந்தனர். 'நீங்கள் வளர்த்துவிட்டவர்களே இன்று உங்களுக்கு எதிராக வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார்கள்' என்றும் பகிர, அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட சசிகலா, ஒருகட்டத்தில், "நான் பார்க்காத சோதனையா? நான் அம்மாவிடம் (ஜெயலலிதா) அரசியல் கற்றவள். ஒருவர்  பதவியில் இருந்தால் எப்படி நடந்துகொள்வார்கள், இல்லாதபோது எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை நான் அறிவேன். யாரை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதையும்  நான் அறிவேன். இனி என் அரசியல் காய்நகர்த்தல்களைப் போகப் போக பாருங்க" என்று பதிலளித்துள்ளார். குரல் உடைந்திருந்தாலும் உறுதி குறையவில்லை" என விவரித்தார்கள்  மன்னார்குடியிலிருந்து வந்திருந்த சசிகலாவுக்கு மிக நெருக்கமான உறவினர்கள்.

இதே கருத்துகளை, தினகரன் ஆதரவு (தகுதி நீக்கம் செய்யப்பட்ட) எம்.எல்.ஏ-க்கள் சிலரும் உறுதிப்படுத்தினர், “அரசியல்ரீதியாக சில வியூகங்களை வகுத்து, எங்களுக்கு சசிகலா வழிகாட்டுவார்" என்கின்றனர்.

சசிகலாவின் அரசியல் எதிரிகளோ, "பரோல் முடிய இன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது" என இப்போதே பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சசிகலாவுக்கு வழிகாட்டத் தொடங்கிவிட்டனர்.

http://www.vikatan.com/

Categories: Tamilnadu-news