merge-rss

சோமாலியாவில் லொறி குண்டுத் தாக்குதல்; முப்பது பேர் பலி!

சோமாலியாவில் லொறி குண்டுத் தாக்குதல்; முப்பது பேர் பலி!

 

 

சோமாலியா தலைநகர் மொகாதிஷுவில் சற்று முன் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் சுமார் முப்பது பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14_Mogashishu1.jpg

ஹோட்டல் ஒன்றின் முற்புறம், முழுவதும் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட லொறியொன்று வெடிக்கச் செய்யப்பட்டே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டது முதல் சிறிது நேரத்துக்கு அப்பகுதியில் இருந்த வாகனங்கள், கட்டடங்கள் என்பனவற்றில் தீ பரவியதாகவும், கடும் முயற்சியின் பின் அவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, மதீனாவில் நடத்தப்பட்ட மற்றொரு குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.

இத்தாக்குதல்கள் யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. எனினும், இங்கு அல் கைதா மற்றும் அல் ஷாபாப் ஆகிய இரண்டு இயக்கங்களின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதால், இவ்விரு இயக்கங்களில் ஒன்று இத்தாக்குதல்களை அரங்கேற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

http://www.virakesari.lk/article/25820

Categories: merge-rss, yarl-world-news

தன் குழந்தைகளின் தாயை மணந்தார் பென் ஸ்டோக்ஸ்!

தன் குழந்தைகளின் தாயை மணந்தார் பென் ஸ்டோக்ஸ்!

 

 

இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் நேற்று (14) தனது நெடுநாள் காதலியும் தனது இரண்டு குழந்தைகளுக்குத் தாயுமான க்ளேர் ரெட்க்ளிஃப்பை நேற்று திருமணம் முடித்தார்.

15_Ben_Stokes.jpg

இங்கிலாந்தின் சம்மர்செட் நகரில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் ஜோ ரூட், ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் அலிஸ்டேர் குக், இயொன் மோர்கன், க்ரஹெம் ஒனியன்ஸ் உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.

திருமண நிகழ்வின்போது ஸ்டோக்ஸின் வலது கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருபத்தாறு வயதான ஸ்டோக்ஸ், கடந்த மாதம் பிஸ்டலில் உள்ள இரவு விடுதி ஒன்றின் வெளிப்புறம் மற்றொருவரைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். அன்றைய தினம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

கைது செய்யப்பட்ட ஸ்டோக்ஸ், மறுநாள் (27) எந்தவித குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டார். எனினும், சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சம்பவம் குறித்த முழுமையான விளக்கத்தை நேரம் வரும்போது ஸ்டோக்ஸ் வெளிப்படையாக அறிவிப்பார் என்று அவரது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘ஆஷஸ்’ தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா செல்லவுள்ள குழுவுடன் புது மாப்பிள்ளை பென் ஸ்டோக்ஸ் பயணிக்கப்போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரது பெயர் இன்னும் ஆஷஸ் தொடருக்கான வீரர்களின் பட்டியலில் இருந்து விலக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

http://www.virakesari.lk/article/25822

Categories: merge-rss

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஸிம்பாப்வேயில்!

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஸிம்பாப்வேயில்!

 

 

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளை ஸிம்பாப்வேயில் நடத்துவது என சர்வதேச கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது. மேலும், இந்தப் போட்டிகள், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அது அறிவித்துள்ளது.

11_World_Cup.jpg

இத்தகுதிகாண் போட்டிகளை பங்களாதேஷில் நடத்துவது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் நேரடியாகத் தகுதிபெற்றதால், அதற்கு அடுத்தபடியாக இருந்த ஸிம்பாப்வேயில் தகுதிகாண் போட்டிகளை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்குள்ள மைதானங்கள் குறித்து ஆய்வு நடத்த சர்வதேச கிரிக்கெட் சபையின் குழுவினர் ஸிம்பாப்வே சென்றனர். சர்வதேசப் போட்டிகளை நடத்தும் தரத்தில் அமைந்துள்ள நான்கு மைதானங்களைத் தெரிவுசெய்து ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, தகுதிகாண் போட்டிகளை ஸிம்பாப்வேயில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேரடித் தகுதி வாய்ப்பை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஸிம்பாப்வேயில் நடைபெறவுள்ள தகுதிகாண் போட்டிகளில் ஸிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் விளையாடவுள்ளது.

http://www.virakesari.lk/article/25815

Categories: merge-rss

துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்தமையும் தோல்விக்குக் காரணம் சங்கக்கார வெளிப்படை

துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்தமையும் தோல்விக்குக் காரணம் சங்கக்கார வெளிப்படை
 
துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்தமையும் தோல்விக்குக் காரணம்
0
SHARES
 

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி அடைந்த தோல்விக்கு துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்தமையும் முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சங்கக்கார.

இலங்கை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து இலக்குகளை இழந்ததை அடுத்து ஐந்தாவது வீரராக களமிறங்கும் சந்திமல் மூன்றாவது வீரராகக் களமிறக்கப்பட்டார். மூன்றாவது வீரராகக் களமிறங்கும் குசல் மென்டிஸ் ஐந்தாவது வீரராகக் களமிறக்கப்பட்டார். ஆனால் இவர்கள் இருவருமே பெரியளவில் ஓட்டங்களைக் குவிக்கவில்லை. இதையடுத்து தனது ருவிற்றர் பதிவொன்றில் துடுப்பாட்ட வரிசையில் செய்யப்பட்ட மாற்றம் தேவையற்றது என்றவாறாக குறிப்பிட்டார் சங்கக்கார.

http://newuthayan.com/story/37239.html

Categories: merge-rss

நாமலின் நிலையப் பார்த்து கண்கலங்கினார் மகிந்த

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 09:44
நாமலின் நிலையப் பார்த்து கண்கலங்கினார் மகிந்த
 
 
நாமலின் நிலையப் பார்த்து  கண்கலங்கினார் மகிந்த
 
 

தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று நேரில் சந்திக்கச் சென்ற முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, நாமலின் நிலையை நேரில் கண்டு கண்கலங்கினார் என்று தெரியவருகிறது.

இது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

மகிந்தவுடன் அவரது மனைவி மற்றும் மகன் யோசித ஆகியோரும், ஆதரவாளர்கள் சிலரும் சென்றனர் எனத் தெரியவருகிறது.

http://newuthayan.com/story/37273.html

Categories: merge-rss, yarl-category

கலா­சா­ரத்தை அழிக்­கும் சிங்­கள பௌத்த இன­வா­தம்

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 09:42
கலா­சா­ரத்தை அழிக்­கும் சிங்­கள பௌத்த இன­வா­தம்
 
கலா­சா­ரத்தை அழிக்­கும்  சிங்­கள பௌத்த இன­வா­தம்
2
SHARES
 

 

கலாசா­ரத்தை அழிக்­கும் நோக்­கில் சிங்­கள பௌத்த இன­வா­தம் வடக்­கில் அதி­க­மா­கக் குடி­கொண்­டி ருக்­கி­றது.

எமது மக்­க­ளின் பொரு­ளா­தார வளங்­க­ளைக் கைய­கப்­ப­டுத்­து­வ­தன் ஊடாக இன்­னொரு பக்கம் இனப்­ப­டு­கொ­லை­யும் நடை­பெற்று வரு­கி­றது.

இவ்வாறு வடக்கு மாகாண கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம், நாவற்­குழி அர­சி­னர் தமிழ்க் க­ல­வன் பாட­சா­லை­யில் கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற வரு­டாந்­தப் பரி­ச­ளிப்பு நாள் நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா ­கக் கலந்துகொண்டு உரை நிகழ்த்­தும்போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

நாங்­கள் தனி நாட்­டுக்­கா­கப் போரா­டிய இனம். எங்­க­ளுக்­கென்­றொரு நாடு வேண்­டும். அந்த நாட்­டில் கல்வி எப்­படி இருக்க வேண்­டும், விளை­யாட்டு எப்­படி இருக்க வேண்­டும், எங்­க­ளு­டைய மக்­க­ளின் கலா­சா­ரம் எப்­படி இருக்க வேண்­டும் எனப் பல கன­வு­க­ளைக் கண்ட சமூ­கம் நாங்­கள்.

எங்­க­ளு­டைய மக்­க­ளுக்­காக,எங்­க­ளு­டைய எதிர்­கா­லச் சமூ­கத்துக் காகத் தங்­க­ளு­டைய உயிரை துச்­ச­மென மதித்­துப் போரா­டிய பல்­லா­யி­ரம் போரா­ளி­க­ளின் உயிர்­களை விலை­யா­கக் கொடுத்தவர்­கள் நாங்­கள்.

எதிர் காலத்தில் சமூ­கம் நன்­றாக வர­வேண்­டும் என்­ப­தற்­கா­கவே அவர்­கள் தங்­கள் இன்­னு­யிர்­களைத் தியா­கம் செய்­தார்­கள். ஆனால் அந்­தச் சூடு ஆறு­வ­தற்கு முன்­னரே நாம் அவர்­களை மறந்து விட்­டோம்.

உண்­மை­யி­லேயே நாங்­கள் ஒரு விடு­த­லைக்­குப் போரா­டிய இனமா? என்ற கேள்வி எழு­கி­றது. இப்­போது எல்­லோ­ரி­டத்­தி­லும் சுய­ந­லங்­கள் அதி­க­ரித்து விட்­டன.

பரந்த சிந்­தனை இப்­போது இல்­லா­மையே எங்­க­ளு­டைய தோல்­விக்­குக் கார­ணம் என்று நான் நினைக்கின்­றேன். எனவே எங்­க­ளு­டைய சிந்­த­னை­யில் மாற்­றம் தேவை.

கலா­சா­ரத்தை அழிக்­கும் நோக்­கில் சிங்­கள பௌத்த இன­வா­தம் வடக்­கில் அதி­க­மா­கக் குடி­கொண்­டி­ருக்கி­றது.

எமது மக்­க­ளின் பொரு­ளா­தார வளங்­க­ளைக் கைய­கப்­ப­டுத்­து­வ­தன் ஊடாக இன்­னொரு பக்கம் இனப்­ப­டு­கொலையும் நடை­பெற்று வரு­கி­றது.

இவற்­றி­லி­ருந்து நாங்­கள் மீண்­டெ­ழுந்து எங்­க­ளு­டைய மண்­ணைப் பாது­காத்து நாங்­கள் இந்த மண்­ணின் ஆதிக்­கு­டி­கள் என்­ப­தை­யும் இங்கே நாங்­கள் எங்­க­ளு­டைய சுய கௌர­வத்­து­டன் வாழ்­வ­தற்கு எங்­க­ளு­டைய மாண­வர்­களை நாங்­கள் தயார் செய்ய வேண்­டும்.

ஒவ்­வொரு மாண­வர்­க­ளும் ஒவ்வொரு துறை­க­ளில் சிறந்த வல்­லு­நர்­க­ளாக வர­வேண்­டும்– என்­றார்.

 

http://newuthayan.com/story/37265.html

Categories: merge-rss, yarl-category

அப்துல் கலாமின் பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 09:41
அப்துல் கலாமின் பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்
 
 
அப்துல் கலாமின் பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்
0
SHARES
 

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 86ஆவது பிறந்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் அப்துல் காலாமின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும், இந்தியச் சொற்பொழிவாளர் சுகி சிவத்தின் சொற்பொழிவு என்பன நடைபெற்றன.

 

யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக கொன்சியூலர் ஆ.நடராஜன், அவரது பாரியார், யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனார்.

http://newuthayan.com/story/37279.html

Categories: merge-rss, yarl-category

கிளிநொச்சியில் ஜனாதிபதி உரையாற்றும் போது உறங்கிய காவல்துறை மா அதிபா்

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 09:21
கிளிநொச்சியில் ஜனாதிபதி உரையாற்றும் போது உறங்கிய காவல்துறை மா அதிபா்

IMG_3422.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு சென்ற ஜனாதிபதி அம்பாள்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தை  திறந்து வைத்து  அங்கு கலந்துகொண்ட மக்கள் மத்தயில் உரையாற்றினார்.

இதன் போது அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, பீ. ஹரிசன்,  பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன்  இராமநாதன், காதர் மஸ்தான் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் மாவட்ட அரச அதிபா்  ஆகியோருடன் பொலீஸ்மா அதிபா் பூஜித ஜயசுந்தரவும் மேடையின் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன   உரையாற்றிக்கொண்டிருந்த போது  காவல்துறை மா அதிபா் பூஜித ஜயசுந்தர  அவ்வவ் போது  உறங்கிக்கொண்டிருந்தார். இது சபையில இருந்த அனைவரினதும் பார்வையை காவல்துறைமா அதிபா் மீது திருப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1-1.jpg2-1.jpg3-1.jpg22547923_1254559784649078_1638823236_n.j

http://globaltamilnews.net/archives/45441

Categories: merge-rss, yarl-category

நாளை திறக்கப்படுகிறது 'சுப்பர் சிறைச்சாலை'

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 09:19
நாளை திறக்கப்படுகிறது 'சுப்பர் சிறைச்சாலை'

 

 

சர்­வ­தேச தர நிய­மங்­க­ளுக்கு அமை­வாக இலங்­கையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள  முத­லா­வது சிறைச்­சாலை நாளை திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

Super_prison_in_Sri_Lanka.jpg

ஹம்­பாந்­தோட்டை அங்­கு­னு­கொ­ல­ப­லெஸ்­ஸ­யி­லுள்ள  மேற்­படி புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சிறைச்­சா­லையே தற்­போது 'சுப்பர் சிறைச்­சாலை ' என்று அழைக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது.  ஏனென்றால்  சிறைக்­கை­தி­க­ளுக்கும்  பார்­வை­யிட வரு­ப­வர்­க­ளுக்கும்  உயர் சொகுசு வச­திகள் வழங்கும் வகையில் இந்த சிறைச்­சாலை நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. 

சுமார் 9.5 பில்­லியன் ரூபா செலவில் 658 ஹெக்­டேயர் பரப்பில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள  இச்­சி­றைச்­சா­லை­யா­னது  இவ்­வ­ருடம் மார்ச்­மாதம் ஜனா­தி­ப­தியின் பங்­கு­பற்­று­த­லுடன்  திறக்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில் இது பிற்­போ­டப்­பட்­டது.  இச்­சி­றைச்­சா­லை­யா­னது தங்­காலை சிறைச்­சா­லையின் போதிய வச­திகள் இன்­மையால் அங்கு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­து­வரும் சிறைக்­கை­தி­க­ளுக்­கென நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.    சுமார் 1500 சிறைக்­கை­தி­களை  இப்­பு­திய சிறைச்­சா­லையில் தங்­க­வைக்க முடியும்.

இத்­தி­றப்பு விழாவில் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் சிறைச்­சா­லைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ,   நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 

http://www.virakesari.lk/article/25810

Categories: merge-rss, yarl-category

ஜிஹாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட விமானம் கடலில் விழுந்து விபத்து

ஜிஹாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட விமானம் கடலில் விழுந்து விபத்து

 

 

பிரான்ஸ் இராணுவத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த சரக்கு விமானம் ஒன்று சற்றுமுன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்தனர். ஏனைய ஆறு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

13_Plane.jpg

உக்ரேனியத் தயாரிப்பான இந்த ‘அண்டனோவ்’ ரக விமானம், ஐவரி கோஸ்ட் நகரின் கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடும் மழை மற்றும் இடி-மின்னல் நிறைந்த சூழலில் தரையிறங்க முயற்சித்தபோதே விமானம் விபத்துக்குள்ளானதாக ஐவரி கோஸ்ட் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

13_Plane1.jpg

விபத்துக்குள்ளான சில மணி நேரங்களில் விமானத்தின் சிதைவுகள் கரையொதுங்கியதாகவும், விமானத்தினுள் இருந்த ஆறு பேருக்கு கடற்கரையில் வைத்து முதலுதவிகள் அளித்த பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13_Plane2.jpg

ஜிஹாதிகளுக்கு எதிரான ‘ஒபரேஷன் பார்க்கானே’ என்ற இராணுவ நடவடிக்கைக்காகவே இந்த விமானம் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்ததாக பிரான்ஸ் இராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/25819

Categories: merge-rss, yarl-world-news

தங்கல்லையில் முகாமிட்டுள்ள மஹிந்த அணி : இன்று சந்திப்பு ; நாளை ஆர்ப்பாட்டம்

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 09:17
தங்கல்லையில் முகாமிட்டுள்ள மஹிந்த அணி : இன்று சந்திப்பு ; நாளை ஆர்ப்பாட்டம்

 

 

கூட்டு எதிர்க் கட்­சியின்  தலை­வர்கள் மற்றும் உறுப்­பி­னர்கள் தங்­கல்­லையில் முகா­மிட்­டுள்­ளனர். இன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதிர்க்­கட்­சியின் தலை­வர்­க­ளுக்கும் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடையில் முக்­கிய சந்­திப்பு ஒன்றும் இடம்­பெ­ற­வுள்­ளது. 

கூட்டு எதிர்க்கட்­சியில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்­காளி கட்­சி­களின் தலை­வர்­களும்   இதில் கலந்து  கொள்ள உள்­ளனர். இந்த சந்­திப்பில் முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ, தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச ,  ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மாஜன எக்சத் பெர­மு­னவின் தலைவர் தினேஷ் குண­வர்­தன உள்­ளிட்ட முக்­கிய தலை­வர்கள்  கலந்­து­கொள்ள உள்­ளனர்.

ஜப்பான் விஜ­யத்தை நிறைவு செய்து  கொண்டு நாடு திரும்­பி­யுள்ள  மஹிந்த ராஜ­பக் ஷ கூட்டு எதிர்க் கட்­சியின் தலை­வர்­களை சந்­தித்து முக்­கிய விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யாட உள்ளார். எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மற்றும் தற்­போ­தைய அர­சியல் சூழலில் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு கடி­ன­மாக நெருக்­க­டி­களை கொடுப்­ப­தற்­கான எதிர்­கால அர­சியல் செயற்­பா­டுகள் குறித்து இன்­றைய கலந்­து­ரை­யா­டலில் அவ­தானம் செலுத்­தப்­பட உள்­ளது. 

 

கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் மீதான தொடர் அடக்­கு­மு­றைகள் மற்றும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் உள்­ளிட்ட அனைத்து இனங்­க­ளையும் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகை­யி­லான வலு­வான கூட்­டணி அமைத்தல் என்­பன இச் சந்­திப்பில் பேசப்­படும் என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது 

அதே போன்று தங்­கல்லை சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றி­யலில் உள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ உள்­ளிட்­ட­வர்கள் நாளை திங்கட் கிழமை ஹம்­பாந்­தோட்டை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட உள்­ளனர். . 

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் விடுதலையை வலியுறுத்து நாளை திங்கட் கிழமை ஹம்பாந்தோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/25813

Categories: merge-rss, yarl-category

சு.கவின் முக்கிய பிரதிநிதிகள் நால்வரின் பதவிகள் பறிப்பு?

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 06:10
சு.கவின் முக்கிய பிரதிநிதிகள் நால்வரின் பதவிகள் பறிப்பு?
 
 
 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கிய பிரதிநிதிகள் நால்வரின் பதவிகள் பறிபோகும் சாத்தியம் நிலவுகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் சபாநாயகர் சமல் ராபக்ச , விதுர விக்ரமநாயக்க, ரஞ்சித் சொய்சா, அருத்திக்க பெர்ணான்டோ ஆகியோரின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் பறிபோகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கட்சி மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் இவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளனர் என்றும் தெரியவருகிறது.

http://newuthayan.com/story/37196.html

Categories: merge-rss, yarl-category

ஒரு நிமிடக் கதை தங்கக் கோடாலி!

கதை கதையாம் - Sun, 15/10/2017 - 06:07
ஒரு நிமிடக் கதை தங்கக் கோடாலி!

 

 

p61.jpg தங்கக் கோடாலி!

ஏ ழை விறகுவெட்டி ஒருவன் காட்டுக்குச் சென்று, ஒரு மரத்தை வெட்டிக்கொண்டு இருந்தபோது, அவன் கையிலிருந்த கோடாலி கை நழுவிப் பக்கத்தில் இருந்த கிணற்றில் விழுந்தது.

‘‘கடவுளே! இனி நான் பிழைப்புக்கு என்ன செய்வேன்? என் கோடாலி எனக்குத் திரும்பக் கிடைக்கும்படி செய் யுங்கள்’’ என்று கண்ணீர் மல்க வேண்டினான்.

ஒரு தேவதை அவன் முன் தோன்றி, ‘‘கவலைப் படாதே! நான் எடுத்துத் தருகிறேன்’’ என்று அந்தக் கிணற்றில் மூழ்கி, ஒரு தங்கக் கோடாலியுடன் வெளியே வந்து, அவனிடம் நீட்டியது.

‘‘இல்லை. இது என் கோடாலி இல்லை. என்னுடையது இரும்புக் கோடாலி’’ என்றான் விறகுவெட்டி.

‘‘உன் நேர்மையை மெச்சினேன். பரவாயில்லை. இதை வைத்துக்கொள்! இந்தத் தங்கத்தைக் கொண்டு வேறு தொழில் செய்து பிழைத்துக்கொள். மழை தரும் மரங்களை இனி வெட்டாதே!’’ என்று புன்னகையோடு சொல்லிவிட்டு மறைந்தது தேவதை.

- எஸ்.ரவி

 

http://www.vikatan.com

Categories: merge-rss

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு : மக்களே அவதானம்

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 05:52
மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு : மக்களே அவதானம்

 

 

மலையகத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது.

DSC01333.jpg

இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளது.

DSC01322.jpg

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

DSC01320.jpg

மேலும் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதிகளில் மற்றும் தலவாக்கலை - நாவலப்பிட்டி பிரதான வீதிகளில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC01318.jpg

 

 

http://www.virakesari.lk/article/25805

    தொடர் மழை : மலையகத்தில் பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

 

 

DSC01322.jpg

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மலையகத்தில் பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கமைய, கெனியன் நீர்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

அத்தோடு விமலசுரேந்திர நீர்தேக்கத்திலிருந்து மேலதிக நீர் வெளியாகுவதுடன், மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் பிரதான வான்கதவு ஒன்றும் திறந்து விடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/25807

Categories: merge-rss, yarl-category

எட்டும் தூரத்தில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 05:51
எட்டும் தூரத்தில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு

 

 

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

11_Fishing_Fine.jpg

புதுடெல்லியில் நேற்று (14) ஆரம்பமான மீன்பிடித்துறையின் உயர்மட்டப் பிரநிதிகளின் கூட்டத்திலேயே இவ்விணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இலங்கை சார்பில் மீன்பிடித்துறை மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த அமரவீரவும், இந்தியா சார்பில் அந்நாட்டின் விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கும் கலந்துகொண்டனர்.

தீர்வு குறித்த முழு விவரமும் இன்னும் அறியத்தரப்படவில்லை.

http://www.virakesari.lk/article/25806

Categories: merge-rss, yarl-category

இவர்­க­ளும் மனி­தர்­களா?

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 05:49
இவர்­க­ளும் மனி­தர்­களா?
 

எம்­மில் சிலர் மற்­ற­வர்­க­ளுக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்ற செயல்­க­ளில் ஈடு­ப­டு­வதை நினைக்­கும்போது வேத­னை­யும்,ஆத்­தி­ர­மும் ஏற்­ப­டு­கின்­றன. காங்­கே­சன்­துறை வீதி­யி­லி­ருந்து சுன்­னா­கம் திரு­ஞான சம்­பந்­தர் மருத்துவமனைக்கு அரு­கில் சட்­டத்­த­ரணி செல்­லத்­துரை வீதி ஆரம்­பித்­துச் செல்­கின்­றது.

இந்த வீதி­யில்­தான் பிர­ப­ல­மான தொலை­பேசி நிலை­யத்­தின் களஞ்­சி­ய­ சா­லை­யு­டன் ௬டிய அலு­வ­ல­கம் அமைந்­துள்­ளது. இதன் தெற்­குப்­பக்­க­மாக அமைக்­கப்­பட்­டுள்ள மதி­லின் ஓரத்­தில் பற்­றை­கள் வளர்ந்து காணப்­ப­டு­கின்­றன.ஆனால் அதை எவ­ருமே கண்­டு­கொள்­வ­தில்லை.

பெரிய வாக­னங்­கள் அந்த வீதி­யூ­டா­கச் செல்­லும் போது ஒதுங்­கு­வ­தற்கு இடம் கிடைக்­காது தின­மும் சிலர் அந்­த­ரப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. ஓர் அரை­மணி நேரத்­தில் அந்­தப்­பற்­றை­களை அழித்­து­விட முடி­யும். ஆனால் எவ­ருமே அந்­தக்­கைங்­க­ரி­யத்தை மேற்­கொள்ள இது­வரை முன்­வ­ர­வில்லை.

இந்த நிலை­யில் சில தினங்­க­ளுக்கு முன்­னர் நான் அந்த வீதி­யூ­டா­கச் சென்­ற­போது மிக­ச் சீரான முறையில் பொதி­செய்­யப்­பட்ட உரப்­பை­யொன்று அந்த மதி­லு­டன் சாத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­த­தைக் கண்­ணுற்­றேன். அப்­போது அது தொடர்­பாக நான் அதிக கவ­னம் செலுத்­த­வில்லை.

மறு­நா­ளும் நான் அந்த வீதி­யூ­டா­கச் சென்றபோது உரப்­பை­யைச் சுற்­றி­வர குருதி போன்­ற­தொரு திர­வம் பர­விக் காணப்­பட்­டது.

இலை­யான்­க­ளும் மொய்த்­துக் கொண்டிருந்­தன.உரப் பையிலிருந்து கெட்ட வாடை வீசு­வதை நான் உணர்ந்து கொண்­டேன்.அடுத்த நாள் சென்ற போது சகிக்க முடி­யாத துர்­நாற்­றம் அங்கு வீசி­யது. மூக்­கைப் பொத்­திக் கொண்டு உட­ன­டி­யாக அந்த இடத்தை விட்டு அகன்­றேன். ஒரு லீற்­றர் மண்­ணெண்­ணெயை வாங்கி அந்த உரப்­பை­யின் மீது ஊற்றி எரித்து விடு­வ­தெ­னத் தீர்­மா­னித்­தேன்.

மாலை நேரம்­தான் அதற்கு உகந்­த­தென்­பது எனது முடி­வா­கும். அடுத்­த­நாள் மாலை நேரம் அந்த வீதி­யூ­டா­கச் சென்ற போது எவரோ ஒரு புண்­ணி­ய­வான் காய்ந்த தென்­னோ­லை­க­ளின் உத­வி­யு­டன் துர்­நாற்­றம் வீசிக்­கொண்­டி­ருந்த உரப்­பையை எரித்­துச் சாம்­ப­லாக்கி இருப்­ப­தைக் கண்­டேன். நான் செய்­வ­தற்கு உத்­தே­சி­ருந்த வேலையை அந்த முகம் தெரி­யா­த­வர் செய்து முடித்­து­விட்டிருந்தார்.

எவரோ நாயொன்றை அடித்­துக் கொன்று விட்டு அதனது உடலை உரப்­பை­யில் அழ­காகப் பொதி­செய்து கயிற்­றி­னால் வரிந்து கட்டி வைத்­துவிட்டிருந்த சங்­கதி பின்­னர்­தான் தெரி­ய­வந்­தது. இந்த உல­கில் இவ்­வா­றான கேவ­ல­மான மனி­தர்­க­ளும் இருக்­கத்­தான் செய்­கின்­ற­னர். இதற்கு யாரைத்­தான் நொந்து கொள்­வது?
–பா.தர்­ம­ரூ­பன்
சுன்­னா­கம் வடக்கு

http://newuthayan.com/story/36966.html

Categories: merge-rss, yarl-category

தொடர் அடைமழை; முடங்கியது நுவரெலியா

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 05:42
தொடர் அடைமழை; முடங்கியது நுவரெலியா

 

 

நுவரெலியாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழையால் மக்கள் வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் நேற்று முன்தினம் (13) ஆரம்பித்த மழை சிறு சிறு இடைவெளிகளுடன் தொடர்ச்சியாகப் பெய்துவருகிறது.

7_Nuwara_Eliya1.jpg

இந்நிலையில், நேற்று (14) மாலை வேளையில் பெய்த கடும் மழையினால் அக்கரப்பத்தனை, டொரிங்டன் தோட்டப் பகுதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்ததால் அப்பகுதி விவசாயக் காணிகள் நீரில்  மூழ்கின. இதனால், காணிகளில் பயிரிடப்பட்டியிருந்த மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்டன.

7_Nuwara_Eliya.jpg

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பிரதான பாதையில் உள்ள மண்மேடுகளில் இருந்து கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்துடனும், அவதானத்துடனுமே அப்பாதையின் ஊடாகப் போக்குவரத்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

7_Nuwara_Eliya2.jpg

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட இயற்கை அனர்த்த மத்திய நிலைய அதிகாரிகள்  அறிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/25803

Categories: merge-rss, yarl-category

பாத­ணி­க­ளைப் பாது­கா­வ­ல­ரி­டம் கொடுத்­துச் சுத்­த­மாக்­கிய பூஜித்

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 05:37
பாத­ணி­க­ளைப் பாது­கா­வ­ல­ரி­டம் கொடுத்­துச் சுத்­த­மாக்­கிய பூஜித்
 
பாத­ணி­க­ளைப் பாது­கா­வ­ல­ரி­டம் கொடுத்­துச் சுத்­த­மாக்­கிய பூஜித்
0
SHARES
 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று யாழ்ப்­பா­ணத்­தில் கலந்துகொண்ட நிகழ்­வுக்கு வந்­தி­ருந்த பொலிஸ் மா அதி­பர் பூஜித் ஜெய­சுந்­தர தனது பாத­ணியை மெய்ப் பா­து­கா­வ­லரான பொலிஸ் உத்­தி­யோத்­த­ரி­டம் சுத்­தம் செய்­யக் கொடுத்­தார்.

வீதி­யோ­ரத்­தில் பல­ரும் பார்த்­தி­ருக்க இந்­தச் சம்­ப­வம் நடந்­தது.

யாழ்ப்­பா­ணத்­துக்கு நேற்று வந்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ணத் இந்­துக் கல்­லூ­ரி­யில் நடை­பெற்ற தேசிய தமிழ் மொழித்தின விழா­வில் கலந்துகொண்­டார்.

அந்த நிகழ்­வுக்கு பொலிஸ் மா அதி­பர் பூஜித் ஜெய­சுந்­த­ர­வும் வந்­தார். அவர் காரில் இருந்து இறங்கி ஓர­மாக நின்று கொண்டு தனது ஒரு பாத­ணி­யைக் கழற்றி மெய்ப்­பா­து­கா­வ­ல­ரி­டம் சுத்­தம் செய்­யக் கொடுத்­தார். மற்­றைய பாத­ணி­யை­யை­யும் கழற்றி அங்­கி­ருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரி­டம் கொடுத்­தார்.

அதன் பின்­னர் கால­ணியை அணிந்து நிகழ்­வுக்குச் சென்­றார்.
மெய்ப்­பா­து­கா­வ­ல­ரும், பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரும் வீதி­யோ­ரத்­தில் பாத­ணி­யைக் கையில் எடுத்­துத் துணி­யால் துடைத்­துச் சுத்­தம் செய்­த­னர்.

அந்­தச் சந்­தர்ப்­பத்­தில் அந்த இடத்­தில் அரச தலை­வ­ரின் பாது­காப்­புப் பிரி­வி­னர், பொலி­ஸார், பொது­மக்­கள், ஆசி­ரி­யர்­கள், மாண­வர்­கள் எனப் பல­ரும் இருந்­த­னர்.

Snapshot_26.pngSnapshot_22.pngSnapshot_20.pngSnapshot_19.pngSnapshot_18.pngSnapshot_25.png

http://newuthayan.com/story/37170.html

Categories: merge-rss, yarl-category

அமைச்­சர் சிவ­நே­சன் மட்­டும் நிகழ்வில் பங்­கேற்பு

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 05:36
அமைச்­சர் சிவ­நே­சன் மட்­டும் நிகழ்வில் பங்­கேற்பு
 
அமைச்­சர் சிவ­நே­சன் மட்­டும்  நிகழ்வில் பங்­கேற்பு
 
 

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் என எல்­லோ­ரும் நேற்­றைய தினம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வின் வடக்கு மாகாண நிகழ்­வு­க­ளைப் புறக்­க­ணித்­த­போ­தும் வட மாகாண விவ­சாய அமைச்­ச­ரும் புளொட் அமைப்­பின் உறுப்­பி­ன­ரு­மான க.சிவ­நே­சன் (பவான்) மட்­டும் நிகழ்­வில் பங்­கேற்­றார்.

வெற்­றிலை கொடுத்து அரச தலை­வரை நேரில் வர­வேற்­றார்.

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் கோரிக்­கையை அரச தலை­வர் நிறை­வேற்ற வேண்­டும் போன்ற கோரிக்­கை­களை முன்­வைத்து வடக்­கில் மக்­கள் போராட்­டங்­களை நடத்­தி­வ­ரும் நிலை­யில், அரச தலை­வ­ரின் நேற்­றைய நிகழ்­வு­க­ளைப் புறக்­க­ணிப்­பது என்று நாடா­ளு­மன்ற மற்­றும் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் அறி­வித்­தி­ருந்­த­னர்.

அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் அரச தலை­வர் அக்­க­றை­யு­டன் செயற்­ப­டா­மைக்­குத் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தும் விதத்­தி­லேயே அவர்­கள் நிக­ழ­வு­க­ளைப் புறக்­க­ணித்த­னர்.

இத­னால் யாழ்ப்­பா­ணத்­தில் இரண்டு நிகழ்­வு­க­ளி­லும், கிளி­நொச்­சி­யில் நடை­பெற்ற நிகழ்வு ஒன்­றி­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைச் சார்ந்­த­வர்­கள் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.

யாழ்ப்­பா­ணம் புத்­தூ­ரில் நடந்த விவ­சாய நிகழ்­வில் வட மாகாண விவ­சாய அமைச்­சர் க.சிவ­நே­சன் மட்­டும் பங்­கேற்று அரச தலை­வ­ரு­டன் அள­வ­ளா­வி­னார்.

http://newuthayan.com/story/37158.html

Categories: merge-rss, yarl-category

அரசியற் கைதிகளின் விடுதலை – திறப்பு யாருடைய கையில்?

அரசியல்-அலசல் - Sun, 15/10/2017 - 05:28
அரசியற் கைதிகளின் விடுதலை – திறப்பு யாருடைய கையில்? நிலாந்தன்

question.png
அரசியல்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையக் காரியாலயத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அரசியல்க் கைதிகள் தொடர்பாக அதிகம் போராடி வருகின்ற, அதிகம் பேசி வருகின்ற, அதிகளவு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்ற ஒரு செயற்பாட்டாளரும், அங்கிலிக்கன் மதகுருவுமாகிய பாஃதர் சக்திவேல் மேற்படிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தற்பொழுது தமிழ் அரங்கிலுள்ள பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளை விடவும் மிகவும் தெளிவாகவும், செறிவாகவும், அறிவு பூர்வமாகவும் அவர் உரையாற்றினார்.

அரசியற் கைதிகளுக்கு பொது மன்னிப்போ புனர்வாழ்வோ வேண்டாம் என்று அவர் சொன்னார். ‘பொது மன்னிப்பைக் கேட்டால் அரசியற்கைதிகள் மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு குற்றமிழைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளப்படும். தமிழ் மக்களின் அரசியலை பயங்கரவாதமாகப் பார்க்கும் ஒரு சட்டத்தின் கீழ் கைதிகளாக்கப்பட்டிருக்கும் நபர்களின்;; விடயத்தில் மன்னிப்பைக் கேட்டால் அந்த அரசியலை நாங்களே பயங்கரவாதம் என்று ஏற்றுக்கொண்டதாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மற்றது புனர்வாழ்வு. அது ஒரு தண்டனையா இல்லையா? என்பதே கேள்விக்குறியாய் உள்ளது. தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பலரும் மீளவும் கைது செய்யப்படுகிறார்கள். அப்படியென்றால் புனர்வாழ்வு ஒரு தண்டனையில்லை என்று தானே பொருள்? வவுனியாவில் ஏற்கெனவே புனர்வாழ்வு வழங்கப்பட்ட ஒரு முன்னாள் இயக்கத்தவருக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பை வழங்கிய நீதிபதி அத்தீர்ப்பை வழங்குவதற்காக தான் கவலைப்படுவதாகத் தெரிவித்தார். இப்பொழுது உண்ணாவிரதமிருக்கும் கைதிகளில் ஒருவரும் புனர்வாழ்வின் பின் கைது செய்யப்பட்டவர்தான்’. என்ற தொனிப்பட பாஃதர் சக்திவேல் உரையாற்றினார்.

அக் கூட்டத்திற்கு அனைத்து அரசியற் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழரசுக் கட்சியின் முடிவெடுக்கும் பிரதானிகள் யாரும் அங்கே வந்திருக்கவில்லை. அக்கூட்டத்தில் எந்தவொரு கட்சியையோ அல்லது தலைவரையோ விமர்சிக்க வேண்டாம் என்றும் கைதிகளின் விடுதலையின் மீதே கவனத்தை குவிக்குமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டிருந்தார்கள்.அழைப்பிதழிலும் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் அங்கு பேசிய பலரும் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தார்கள். அரச தரப்பு அலுவலகங்களை முடக்குவதற்கு முன் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளின் வீடுகளை முடக்க வேண்டும் என்றும் அவர்கள் தமது தேர்தல் தொகுதிகளில் நடமாடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் சிலர் ஆவேசமாகக் கதைத்தார்கள். கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கடந்த கிழமை முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடாத்தி அதன் உச்சக்கட்டமாக வெள்ளிக்கிழமை ஒரு கடையடைப்பை ஏற்பாடு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

 

அதன்படி திங்கள் கவனயீர்ப்பு, புதன் கிழமை ஆலயங்களில் வழிபாடு, வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி, வெள்ளிக்கிழமை கடையடைப்பு, சனிக்கிழமை அரசுத்தலைவரின் வருகையை எதிர்ப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு சந்திப்பில் மாணவர்கள் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குபடுத்துவதற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிய வருகிறது. ஆனால் புதன்கிழமையளவில் அவர்கள் தமது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் தெரியவருகிறது. மாணவர்கள் களத்தில் இறங்கினால் அது உச்சக்கட்டப் போராட்டமாக இருக்க வேண்டும்.ஆனால் அடுத்த நாள் கடையடைப்பு என்பதால் எங்களுடைய போராட்டம் உச்சக்கட்டமாக இருக்காது என்ற தொனிப்படக் பதில் கூறப்பட்டதாம்.அப்படியென்றால் நீங்கள் உச்சக்கட்டப் பொறுப்பை ஏற்கத் தயாரா? என்று கேட்கப்பட்டபோது அவர்களிடம் பதில் இருக்கவில்லையாம். முடிவில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி நடக்கவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை கடையடைப்பு வெற்றிகரமாக அனுஷ;டிக்கப்பட்டது.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கூட்டம், அதில் பேசப்பட்ட விபரங்கள் அதன் பின் கடந்த கிழமை முழுவதும் நடந்த போராட்டங்கள் நடக்காத போராட்டங்கள் போன்ற எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது பின்வரும் முடிவுகளுக்கு வரக்கூடியதாகவுள்ளது. முதலாவது 2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் ஒரு புதிய வடிவத்தை அடையவேண்டியிருக்கிறது. இரண்டாவது கைதிகளின் விடயமும் உட்பட தற்பொழுது பாதிக்கப்பட்ட மக்கள் போராடிக்கொண்டிருக்கும் எல்லா விடயங்களுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஓர் ஒட்டுமொத்த பிரச்சினையின் வௌ;வேறு கூர் முனைகளே அவை. எனவே அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஓர் ஒட்டுமொத்த அரசியற் தரிசனம் வேண்டும். அப்படியொரு தரிசனம் யாரிடம் உண்டோ அந்தத் தலைமை அல்லது கட்சி அல்லது அமைப்பானது அரசாங்கத்தோடு ஓர் அரசியல் உடன்படிக்கையைச் செய்ய வேண்டும். அவ்வாறான ஓர் உடன்படிக்கையின் மூலம்தான் கைதிகளை விடுதலை செய்யலாம்.

 

முதலில் போராட்ட வடிவத்தைப் பற்றிப் பார்க்கலாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சந்திப்பில் பேசிய பலரும் இதைச் சுட்டிக்காட்டினார்கள். வழமையான போராட்டங்களான கவனயீர்ப்பு, கடையடைப்புப் போன்றன தாக்கம் குறைந்தவைகளாகி விட்டன. அரசாங்கத்திற்கு நோகக் கூடிய அறவழிப்போராட்டங்கள் அல்லது அனைத்துலக சமூகத்தை அதிர்ச்சியோடு திரும்பிப்பார்க்க வைக்கும் அறவழிப் போராட்டங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தேவையை அச்சந்திப்பில் உணர முடிந்தது. கடந்த எட்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டங்களில் பெரும்பாலானவை வழமையானவை. அவை சிறுதிரள் போராட்ட வடிவங்கள். அடுத்த நாள் பத்திரிகைச் செய்திகளாக வருவதற்குமப்பால் அவை எவ்வளவு தூரத்திற்கு அரசாங்கத்தின் கவனத்தையும், அனைத்துலக சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன? என்பது தொடர்பில் ஒரு தொகுக்கப்பட்ட ஆய்வு அவசியம். இப்பொழுது முற்றிலும் புதிதான படைப்பாற்றல் மிக்க கவனயீர்ப்புப் போராட்ட வடிவங்களை கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

 

உதாரணமாக இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய பெண்கள் தமது ஆடைகளை ஒரு கொடியில் தொங்கவிட்டு காட்சிப்படுத்தும் ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தியதை இங்கு சுட்டிக்காட்டாலாம். இது பல ஆண்டுகளிற்கு முன் நடந்தது. இதைப் போலவே ஆளில்லா விமானங்களின் எல்லை கடந்த தாக்குதல்களை எதிர்க்கும் ஓர் அமெரிக்க அமைப்பு படைப்புத் திறன் மிக்க அறவழிப்போராட்ட அமைப்பு என்றே தனக்குப் பெயரிட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆளில்லா விமானங்களை இயக்கும் கட்டளைப் பீடங்களின் முட்கம்பி வேலிகளை அறுத்துக் கொண்டு உள்நுழைந்து போராடி வருகின்றது இந்த அமைப்பு.

 

இவை சில உதாரணங்கள். ஈழத்தமிழர்கள் தமது கள நிலவரங்களுக்கு ஏற்ப புதிய அதிக பட்ச கவனத்தை ஈர்க்கும் போராட்ட வடிவங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு முழுநேரச் செயற்பாட்டாளர்கள் வேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் கச்சேரியை முடக்குவது, ஆளுநர் அலுவலகத்தை முடக்குவது, கண்டி வீதியை முடக்குவது போன்ற போராட்ட வடிவங்கள் பற்றி பேசப்பட்டது. அப்படிப் போராடுமிடத்து சில வேளை கைது செய்யப்படவும், சிறையில் அடைக்கப்படவும் வாய்ப்புக்கள் உண்டு எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. கடந்த எட்டாண்டுகளாக அறவழியில் போராடியதற்காக சிறையை நிரப்பிய தலைவர்கள் அல்லது தொண்டர்களின் தொகை மிகவும் குறைவானது. ராஜபக்ஷ அரசாங்கம் போராடிய சில பல்கலைக்கழக மாணவர்களைப் புனர்வாழ்விற்கு அனுப்பியதை இங்கு சுட்டிக்காட்டலாம். கடந்த வெள்ளிக்கிழமை கடையடைப்பின் போது யாழ் நகரில் பவள் கவச வாகனங்கள் ரோந்து போனதை இங்கு சுட்டிக்காட்டலாம். ஓர் இனப்படுகொலையின் கூட்டுக் காயங்களும், கூட்டு மனவடுக்களும் ஆறாதிருக்கும் ஓர் உளவியற் சூழலுக்குள் சிறைகளை நிரப்பும் ஒரு போராட்ட மரபு இன்னமும் மேலெழவில்லை. இவ்வாறானதோர் வெற்றிடத்தில் தான் திரும்பத்திரும்ப அதே பழைய போராட்ட வடிவங்களைக் கையில் எடுக்க வேண்டியிருக்கிறது. இது முதலாவது.

 

இரண்டாவது ஓர் அரசியல் தீர்மானத்தை எடுக்குமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பது பற்றியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் பேசிய பலரும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார்கள். இப்பொழுது உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டால் மட்டும்தான் உடனடித்தீர்வு சாத்தியம் என்பதே அது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் அவ்வாறு செய்யவில்லை என்பதால் தான் அவர்களுடைய வீடுகளை முற்றுகையிட வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது. அக்கூட்டத்தில் உரையாற்றிய பாதஃர் சக்திவேல் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். சம்பந்தரிடம் ஓகஸ்ற் 18ஆம் திகதி அவர்; ஓர் ஆவணத்தை வழங்கியிருக்கிறார். அதில்; பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அரசியல்க் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றி இது வரையிலும் சேகரிக்கப்படாத பல புதிய தகவல்கள்; தொகுக்கப்பட்டுள்ளதாம். 39 கைதிகளைப் பற்றிய அந்த ஆவணத்திற்கு   இன்று வரையிலும் சம்பந்தரிடமிருந்து பதில் வரவில்லையாம். குறைந்த பட்சம் அப்படியொரு ஆவணம் கிடைத்தது என்பதற்குரிய பதில் கூட வரவில்லையாம்.

 

கடந்த கிழமை பாஃதரோடு பேசிய அமைச்சர் மனோகணேசன் கைதிகளின் விடயத்தில் பழியை சம்பந்தர், சுமந்திரன் மீதே சுமத்தினாராம். ஓர் அமைச்சராகவும், அரசாங்கத்தின் ஓர் உறுப்பினராகவும் இருந்து கொண்டு இது விடயத்தில் தான் போராடிய அளவிற்குக் கூட சம்பந்தரும், சுமந்திரனும் போராடவில்லை என்று மனோகணேசன் குறை கூறியுள்ளார். ஓர் எதிர்க்கட்சியாக பொருத்தமான எதிர்ப்பைக் காட்டி போதியளவு அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தால் இப்படியொரு நிலமை வந்திருக்காது என்ற தொனிப்படவும் மனோகணேசன் கதைத்திருக்கிறார்.

 

அண்மை மாதங்களாக சம்பந்தரையும், சுமந்திரனையும் மனோகணேசன் கடுமையாக குற்றஞ்சாட்டி வருவதை இங்கு கவனிக்க வேண்டும். அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்து கொண்டு தன்னால் முடியாத ஒன்றை எதிர்க்கட்சியாக இருக்கும் கூட்டமைப்பு ஏன் செய்யமுடியவில்லை என்று அவர் கேள்வி கேட்கிறார். ஆனால் இங்கு மனோகணேசனைப் பார்த்துக் கேட்க வேண்டிய ஒரு கேள்வி உண்டு. ராஜபக்ஷக்களின் காலத்தில் மனித உரிமைகளுக்காக வீதியில் இறங்கி வீரமாகப் போராடியவர் அவர். அதனாலேயே ஆபத்துக்குள்ளாகி சிறிது காலம் வெளிநாட்டில் வசித்துமிருக்கிறார். ஆனால் இப்பொழுது ஓர் அமைச்சராக மாறியபின் அவரும் முன்னாள் போராளியாகி விட்டார். தனக்கு சரியெனப்பட்ட ஒன்றிற்காக அவர் அரசாங்கத்தை பயன்பொருத்தமான விதத்தில் ஏன் எதிர்க்கவில்லை? என்ற கேள்வியை இங்கு கேட்க வேண்டும்.

 

மனோகணேசன் மட்டுமல்ல கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் பேசிய பலரும் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த போராட்டத்தில் குரல் எழுப்பிய ஒரு பகுதியினரும் சம்பந்தரை கடுமையாக விமர்சித்திருந்தார்கள். கைதிகளின் விடயத்தில் ஓர் அரசியல் உடன்படிக்கையை செய்யத் தவறியதற்கு  சம்பந்தர் தானே பொறுப்பு? பல மாதங்களுக்கு முன்பு சில விடுதலையான அரசியல்க் கைதிகள் சம்பந்தரை சந்திக்கச் சென்றிருந்தார்கள். அப்பொழுது சம்பந்தர் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார். பத்திரிகை மீதான தனது பார்வையை திருப்பாமலேயே அவர் தன்னைச் சந்திக்க வந்தவர்களோடு உரையாடினார். அதன் போது ‘திறப்பு என்னிடமில்லை’ என்று கூறினார்.

 

கைதிகளின் விவகாரம் ஒரு சட்ட விவகாரமல்ல. அது ஓர் அரசியல் விவகாரம். அதை சட்ட ரீதியாக மட்டும் அணுக முடியாது. அதிகாரம் பொருந்திய சட்டமா அதிபரும் பயங்கரவாதத் தடைச்சட்டமும், இனச்சாய்வுடைய நீதிபரிபாலனக் கட்டமைப்பும், திடசித்தமில்லாத அரசியல்த் தலைவர்களும் உள்ளவரை கைதிகளின் விவகாரத்தை ஒரு சட்ட விவகாரமாகக் கையாளவே முடியாது. சட்டத்தரணிகளைத் தலைவர்களாக தெரிந்தெடுக்கும் ஒரு சமூகம் இது போன்ற விடயங்களில் சட்டத்தரணிகள் தீர்வை வாங்கித்தருவார்கள் என்று காத்திருந்தால் எதுவும் நடக்கப்போவதில்லை. இவை மாட்டுத்தலையை பண்றித்தலையாக மாற்றியது போன்ற வழக்குகளல்ல. இவை முழுக்க முழுக்க அரசியல் தீர்மானங்களின் பாற்பட்டவை. அவ்வாறான தீர்மானங்களை எடுக்கவல்ல அரசியற்திடசித்தம் கொண்ட தலைவர்கள் எவரும் ரணில் – மைத்திரி அரசாங்கத்தில் கிடையாது.

 

அதே சமயம் இதை ஓர் அரசியல் விவகாரமாக விளங்கி அதற்கேயான அரசியல் பரிமாணத்தோடு அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு தமிழ்த் தலைவர்களாக இருக்கும் சட்டத்தரணிகளாலும் முடியாது. ஓர் அரசியல் விவகாரத்தைப் பொறுத்தவரை ஓர் அரசியல் தீர்மானம் எடுக்க வேண்டும். ஓர் அரசியல் தீர்மானத்தை எடுப்பதென்றால் இது போன்ற விடயங்களில் ஓர் அரசியல் உடன்படிக்கை செய்யப்பட வேண்டும். அவ்வாறு ஓர் உடன்படிக்கை செய்யப்படுவதென்றால் அரசியல் வலுச்சமநிலை மாற்றப்பட வேண்டும். மாற்றப்படும் ஒரு புதிய வலுச்சமநிலையின் மீதே ஓர் அரசியல் உடன்படிக்கையை எழுதலாம்.

 

அப்படியொரு வலுச்சமநிலை மாற்றம் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போது ஏற்பட்டது. ஆனால் சம்பந்தர் அதைத் தீர்க்கதரிசனத்தோடு கையாளத் தவறி விட்டார். திறப்பைக் கையிலெடுக்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் அது. ஆனால் அவர் பூட்டை வைத்திருந்த தரப்பிடமே திறப்பையும் கொடுத்து விட்டார். இப்பொழுது அரசுத்தலைவருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். சம்பந்தர் சில நாட்களுக்கு முன் கைதிகள் தொடர்பில்; அரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். கைதிகளின் விவகாரம் ஒரு சட்ட விவகாரமல்ல என்ற தொனி அதிலுண்டு எனினும், ஒடுக்கப்படும் ஒரு மக்கள்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் ஒருவர் எழுதும் கடிதத்தைப் போல அது இருக்கவில்லை.

 

எனவே கைதிகளின் விடயத்திலும், ஏனைய போராட்டங்கள் தொடர்பிலும் ஓர் ஒட்டுமொத்தத் தரிசனம் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறான ஓர் ஒட்டுமொத்தத் தரிசனம் இல்லையென்றால் அரசாங்கத்தோடு ஓர் உடன்படிக்கைக்குப் போக முடியாது. ஒரு சட்ட விவகாரமாக அணுகி அதைத் தீர்க்கவும் முடியாது. கைதிகளின் விவகாரம் எனப்படுவது ஓர் உதிரி விவகாரமல்ல. காணிப்பிரச்சினை போல காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை போல முன்னாள் இயக்கத்தவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைப் போல ஓர் ஒட்டுமொத்தப் பிரச்சினையின் வௌ;வேறு பகுதிகளில் அதுவும் ஒன்று. எனவே இது விடயத்தில் ஓர் ஒட்டுமொத்தத் தரிசனம் இருந்தால் தான் அதற்கமைய ஓர் அரசியல் உடன்படிக்கையை எழுத முடியும். ஆனால் அவ்வாறான ஓர் உடன்படிக்கை எழுதப்படாத ஒரு வெற்றிடத்தில்தான் காணிக்காக மக்கள் போராடுகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடுகிறார்கள். அரசியல் கைதிகளுக்காக போராடுகிறார்கள். புனர்வாழ்வு பெற்றவர்கள் மறுபடியும் தண்டிக்கப்படுகிறார்கள், ஒரு புதிய யாப்பும் எழுதப்பட்டு வருகிறது. பூட்டை வைத்திருப்பவரிடமே திறப்பையும் கொடுத்து விட்டு இப்பொழுது கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறோமா?

http://globaltamilnews.net/archives/45379

Categories: merge-rss