merge-rss

மோசடிக் களமாக மாறியுள்ளதா வடக்கு மாகாண சபை?

ஊர்ப்புதினம் - Wed, 24/05/2017 - 20:20
மோசடிக் களமாக மாறியுள்ளதா வடக்கு மாகாண சபை?
 

வடக்கு மாகாண அமைச்­சர்­கள் சிலர் மீதான மோசடி விசா­ரணை அறிக்கை முத­ல­ மைச்­ச­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அறிக்கை மீது உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­வது முத­ல­மைச்­ச­ரின் பொறுப்­பா­கும்.

நீண்ட போர் கார­ண­மா­கப் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளில் பலர் இன்­ன­மும் தமது இயல்பு நிலைக்­குத் திரும்­பாத நிலை­யில் வாழ்ந்து வரு­கின்­ற­னர். ஏகப்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்ற அவர்­கள், அவற்­றுக்­குத் தீர்வு காண்­ப­தற்­கா­கப் போராட்­டங்­க­ளி­லும் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில்தான், தமது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­கும் என்ற நம்­பிக்­கை­யு­டன் அவர்­கள் வடக்கு மாகாண சபை­யைத் தெரிவு செய்­த­னர். அவர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு பெற்­றுத் தரு­வ­தில் மாகா­ண­சபை எந்த அள­வுக்­குப் பாடு­பட்­டது என்­பதை மக்­கள் தற்­போது நன்­றாக உணர்ந்­துள்­ள­னர்.

முத­ல­மைச்­சர் உட்­பட நான்கே நான்கு பேர் மட்­டுமே வடக்கு மாகாண சபை­யில் அமைச்­சுப் பொறுப்­புக்­களை வகிக்­கின்­ற­னர். மகா­ண­ச­பைத் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர் பட்­டி­ய­லைத் தெரிவு செய்த வேளையிலும், பின்­னர் அமைச்­சுப் பத­வி­களை வழங்­கிய வேளையிலும்கூட கூட்­ட­மைப்­புக்­குள் பெரும் இழு­பறி காணப்­பட்­டது.

மக்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பா­கச் சிந்­திப்­பதை விடுத்­துப் பத­வி­க­ளுக்­கா­கத் தமிழ் அர­சி­ யல்­வா­தி­கள் தமக்குள் மோதிக் கொண்டமை வெட்­கக்கேடா­னது. ஆனால் அது நடை­பெற்று முடிந்­தது. தற்­போது மோசடி செய்­த­தா­கக் கூறி அமைச்­சர்­க­ளி­டம் விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பிக்­கும் அள­வுக்கு நிலைமை மோச­மான கட்­டத்தை எட்டி நிற்­கின்­றது.

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்

ஏற்­க­னவே தமி­ழர்­கள் ஆளத் தெரி­யா­த­வர்­கள்; ஒற்­று­மை­யில்­லா­த­வர்­கள் என்ற பழிச் சொற்­கள் எம்மவர்கள் மீது சுமத்­த ப்­ப­டு­வ­துண்டு. தற்­போது ஊழல் வாதி­கள் என்­ற­தொரு புதிய பழி­யும் சேர்ந்து நிற்­கின்­றது. அமைச்­சர்­கள் மீதான மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் நிச்­ச­ய­மா­கப் பொறுப்­புக் கூற வேண்­டும். ஏனென்­றால் மாகா­ண­ச­பை­யின் தலை­மைப் பொறுப்பு அவர்­வ­சமே உள்­ள­தால் அவர் இதி­லி­ருந்து விலகி விட முடி­யாது. நெருப்­பில்­லா­மல் புகை­யாது என்று கூறு­வார்­கள். விசா­ர­ணை­க­ளில் ஏதோ உள்­ளமை தெளி­வா­கின்­றது.

தமி­ழர்­க­ளின் போராட்­டங்­கள் அடக்கி ஒடுக்­கப்­பட்ட நிலை­யில் அதன் .போராட்டக் களமாக மாகாண சபை காணப்­ப­டு­கின்­றது. அதி­கா­ரங்­கள் குறை­வா­கக் காணப்­பட்­டா­லும், தமி­ழர்­கள் தமது அபி­லா­சை­க­ளைத் தெரி விப்­ப­தற்கு மாகாண சபை­யைப் பயன்­ப­டுத்­திக் கொள்ள முடி­யும். ஆனால் அங்கு மோச­டி­கள் நிகழ்ந்­த­தா­கக் கூறப்­ப­டு­ கின்­றமை தமி­ழர்­க­ளுக்­குப் பெரும் இழுக்­கைத் தேடித் தந்து விடும்.

ஊழல் மோசடிகள் தமிழ்நாட்டு அரசியலைப் போன்று ஆகி விட்டுள்ளன

ஏற்­க­னவே தமிழ் நாட்­டில் ஊழல் மோசடி அர­சி­யல் வாதி­க­ளால் பெரிய பிரச்­சி­னை­கள் தோன்­றி­யுள்­ளன. அங்கு முத­ல­மைச்­ச­ரா­க­வி­ருந்த மறைந்த ஜெய­ல­லிதா ஊழல் வழக்­கொன்­றில் குற்­ற­வா­ளி­யா­கக் கரு­தப்­பட்­டுச் சிறை­யில் அடைக்­கப்­பட்­டமை தமிழ் இனத்­துக்கே இழுக்­கைத் தேடித் தந்து விட்­டது.

அவர் உயி­ரோடு இருந்­தி­ருந்­தால் சிறை­யி­லேயே காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ருப்­பார். தற்­போது அவ­ரது நெருங்­கிய தோழி­யாகி சசி­கலா அதே வழக்­கில் குற்­ற­வா­ளி­யா­கத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டுச் சிறைச்­சா­லைக் கம்­பி­களை எண்­ணிக் கொண்­டி­ருக்­கின்­றார். அவ­ரால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பிரச்­சி­னை­கள் தமிழ் நாட்­டின் அர­சி­ய­லையே தற்­போது ஆட்­டம் காண வைத்­துள்­ளன.

தற்­போது வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மோச­டி­யில் ஈடு­பட்­ட­தாக வெளி­வ­ரு­கின்ற செய்­தி­கள் தமி­ழர் தரப்­பைப் பொறுத்­த­வ­ரை­யில் தலைக்­கு­னிவை ஏற்­ப­டுத்­தக் கூடி­யவை.

ஆனா­லும் மோசடி செய்­த­வர்­கள் எவ­ராக இருந்­தா­லும் அதற்­கான தண்­ட­னையை அவர்­கள் அனு­ப­வித்தே தீர வேண்­டும். தற்­போது மாகா­ண­ச­பை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்சி, ரெலோ, புளட் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய நான்கு கட்­சி­க­ளைச் சேர்ந்த உறுப்­பி­னர்­கள் பதவி வகிக்­கின்­ற­னர். இவர்­கள் கூட்­ட­மைப்­பில் இணைந்­தி­ருந்­தா­லும் வெவ்­வேறு கொள்­கை­க­ளைக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

முத­ல­மைச்­சர் மோசடி தொடர்­பான விசா­ரணை அறிக்­கையை மாகாண சபை­யில் சமர்ப்­பிக்­கும்போது உறுப்­பி­ர்களி டையே மோதல்­கள் கூட வெடிக்­க­லாம். ஆனால் ஜன­நா­யக மர­பு­க­ளுக்கு அமை­வாக இவை அமை­வது தான் இன்­றைய தேவை­யா­கும். கூட்­ட­மைப்பு என்ற மிகப்­பெ­ரிய அர­சி­யல் சக்­தி­யா­கப் பரி­ண­மித்­தி­ருக்­கும் கூட்­ட­மைப்­பி­னர், தமது ஐக்­கி­யத்தை எந்த வகை­யி­லும் இழந்து விடக்­கூ­டாது. மோசடி செய்­த­வர்­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்கு அர­சி­யல் ரீதி­யில் எவ­ருமே முன்­வ­ரக் கூடாது. மோச­டி­யா­ளர்­கள் தண்­ட­னையை அனு­ப­வித்தே தீர வேண்­டும். இதில் பாகு­பாட்­டுக்கு இட­மே­யில்லை.

சுயநல அரசியல்வாதிகளது மோசடிகள் அனுமதிக்கப்படலாகாது

ஆகவே கூட்­ட­மைப்­பின் தலைமை இந்த விட­யத்­தில் உட­ன­டி­யா­கத் தலை­யிட்­டுத் தகுந்த முடி­வொன்றை எடுக்க வேண்­டும். முத­ல­மைச்­சர் கூட்­ட­ மைப்­பின் தலை­மைக்­குக் கட்­டுப்­பட்­ட­வர் என்­ப­தால் அவர் தலை­மை­யு­டன் கலந்து ஆலோ­சித்­துத் தகுந்த தீர்­வொன்­றைக் காண முற்­பட வேண்­டும்.

பாதிக்­கப்­பட்ட மக்­கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காணும் பொருட்­டுத் தொடர் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கும் இந்த வேளை­யில், சுய­நல அர­சி­யல்­வா­தி­கள் மோச­டி­க­ளில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருப்­பதை எவ­ரா­லும் பொறுத்­துக் கொள்ள முடி­யாது. கூட்­ட­மைப்­புக்கு நேர்ந்த களங்­க­மா­கவே இதைக் கருத வேண்­டும். மாற்று அணி­யி­னர் கூட்­ட­மைப்­பின் நட­வ­டிக்­கை­க­ளைக் கண்­கொத்­திப் பாம்பு போன்று அவ­தா­னித்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

மாகாண அமைச்­சர்­க­ளின் மோசடி விசா­ரணை அறிக்­கையை அவர்­கள் நிச்­ச­ய­மா­கக் கையில் தூக்கி வைத்­துக் கொண்டு பேயாட்­டம் ஆடவே செய்­வார்­கள். ஆகவே கூட்­ட­மைப்பு இதில் பக்­கச்­சார்­பற்ற விதத்­தில் நட­வ­டிக்கை எடுத்­துக் குற்­றம் புரிந்­த­வர்­க­ ளுக்கு உரிய தண்­டனை பெற்­றுக் கொடுக்க வேண்­டு்ம்.

http://uthayandaily.com/story/4005.html

Categories: merge-rss, yarl-category

லண்டனில் முக்கிய இடங்களின் பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பு

லண்டனில் முக்கிய இடங்களின் பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பு
 

மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து, லண்டன் மாநகரின் வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

பிபிசிபடத்தின் காப்புரிமைAFP Image captionமத்திய லண்டனில் குவிக்கப்படும் இராணுவத்தினர்.

நாட்டின் பாதுகாப்பு அதியுயர் உஷார் நிலைக்கு உயர்த்தப்படுவதாக பிரதமர் அறிவித்ததை அடுத்து, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

மத்திய லண்டனின் சாலைகளில் இராணுவத்தினர் ரோந்துவர ஆரம்பித்துள்ளது, மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்பது தெளிவாகத் தெரிகிறது என்று எமது செயதியாளர் கூறகிறார்

நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், பிரதமரின் இல்லமான 10 டவுணிங் வீதி மற்றும் இதர முக்கிய அரச கட்டடங்களில் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பிபிசிபடத்தின் காப்புரிமைAFP Image captionபிரதமரின் இல்லத்தின் முன்புறம் காவலில் இராணுவத்தினர்

இதுவரை அந்தப் பணிகளில் இருந்த ஆயுதப்படை காவல்துறையினர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, பிரிட்டனின் பாதுகாப்பு எச்சரிக்கை நிலை-கடுமை என்பதிலிருந்து மிகவும் தீவிரம் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பிபிசிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரிட்டனின் பாதுகாப்பு அதியுயர் உஷார் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது

தற்போது லண்டனில் மட்டும் பாதுகாப்புப் பணிகளுக்கான 4000 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே மான்செஸ்டர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் மேலும் முற்றுகையிட்டு சோதனை செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://www.bbc.com/tamil/global-40037689

Categories: merge-rss, yarl-world-news

இந்திய எதிர்ப்பு பயங்கரமானது

அரசியல்-அலசல் - Wed, 24/05/2017 - 20:14
இந்திய எதிர்ப்பு பயங்கரமானது
 

தேசிய சுதந்தர முன்னணியின் தலைவரும் மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, அமைச்சராக இருக்கும்போது, வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டு இருந்த போது, ‘சாகும் வரை’ உண்ணாவிரதம் இருந்து மக்கள் மத்தியில் நகைப்புக்கு ஆளானார்.  image_bace835263.jpg 

அந்தப் ‘போராட்டம்’ முடிந்த கையோடு, ஐ.நாவின் சர்வதேச வெசாக் வைபவத்துக்காக இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, எதிர்ப்புத் தெரிவித்துக் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டு, மற்றொரு முறை நகைப்புக்கு ஆளானார்.  

வீரவன்சவின் துரதிர்ஷ்டம் எவ்வளவு என்றால், அவரது கோரிக்கையை ஏற்க, அவரது அரசியல் அணியான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான குழுவிலோ அல்லது அவரது அரசியல் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியிலோ எவருமே இருக்கவில்லை.  

 நாட்டில், எங்குமே மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, எவருமே கறுப்புக் கொடி காட்டவில்லை. குறைந்த பட்சம் வீரவன்சவின் வீட்டிலாவது கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு இருந்ததாகத் தெரியவில்லை.  

மறுபுறத்தில், அரசாங்கம் மிகச் சாதுரியமாக அவரது கோரிக்கைக்கு வேறு அர்த்தம் கற்பித்து, அவரைக் கஷ்டத்தில் தள்ளிவிட்டது. பௌத்தர்களின் புனித நாளான வெசாக் தினத்தில், கறுப்புக் கொடி ஏற்றுமாறு கூறி வீரவன்ச, வெசாக் தினத்தை அவமதித்ததாக அரசாங்கத்தின் தலைவர்கள் கூறினர். அதனை மறுக்க வீரவன்சவாவது முன்வரவில்லை.  
காலிமுகத் திடலில், மிகப் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்ட, பொது எதிரணி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே வீரவன்ச, இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது மஹிந்த ராஜபக்ஷவும் அந்த மேடையில் இருந்துள்ளார்.  

அவரது கோரிக்கையை ஆதரித்து, அவரது அணியில் எவரும் பேசாவிட்டாலும் அந்த அணியில் சிலர் இந்தியப் பிரதமர், இந்திய வம்சாவளி மக்களைச் சந்தித்ததை எதிர்த்து, பின்னர் கருத்து வெளியிட்டு இருந்தனர்.   

இனவாதக் கருத்துகளை வெளியிடுவதில் வீரவன்சவுடன் எப்போதும் போட்டியிடும், பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில அவர்களில் ஒருவர். இந்தியப் பிரதமர், நாட்டில் ஒரு சமூகத்தை மட்டும் விசேடமாகச் சந்தித்ததன் மூலம், அவர் இலங்கையை, இந்தியாவின் மற்றொரு மாநிலமாகக் கருதியிருப்பதாக அவர் கூறியிருந்தார்.  

ஐ.நா மனித உரிமைப் பேரவையில், புலம்பெயர் தமிழர்களின் வாதங்களை முறியடிக்கவென, கடந்த மார்ச் மாதம், ஜெனீவா சென்ற சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியும் முன்னாள் 
எம்.பியுமான சரத் வீரசேகர, வீரவன்சவின் கருத்தை ஆதரித்த மற்றொருவராவார். அவரும் மோடி, மலையகத் தமிழ் மக்களைச் சந்தித்ததை எதிர்த்துக் கருத்து வெளியிட்டு இருந்தார். 

ஆனால், அவர்களது கருத்துகள் அவர்களது தலைவரான மஹிந்த ராஜபக்ஷவின் செயலொன்றால் மூடி மறைக்கப்பட்டது. அதாவது, அவர்கள் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டு இருக்கும் போது, அவர்களது தலைவர், மோடியைச் சந்தித்து, 45 நிமிடங்கள் கலந்துரையாடியிருந்தார். அவரோடு அவரது சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவும் மோடியைச் சந்தித்திருந்தார்.  

மஹிந்த, மோடியைச் சந்திக்க முன்னர், மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் எனக் கூறி, நகைப்புக்குள்ளான வீரவன்சவை காப்பாற்ற முயற்சி செய்தார்.   

முன்னர், ஊடகவியலாளர்களைக் கடத்தியும் தாக்கியும் இம்சித்தும் வந்த ஆட்சியின் தலைவரான மஹிந்த, தமது தேர்தல் தோல்வியின் பின்னர், நாளாந்தம் ஊடகவியலாளர்களைச் சந்தித்து வருவது தெரிந்ததே. அவ்வாறானதோர் சந்திப்பின் போது, வீரவசன்சவின் கறுப்புக் கொடி கதையைப் பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட போது, “அவர் அவ்வாறு கூறவில்லை” என மஹிந்த கூறினார்.  

தமது சகாவைக் காப்பாற்ற, அவர் அவ்வாறு கூறினாலும், நாட்டில் இவ்வருடம் நடைபெற்ற மிகப் பெரும் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை பேரும் அதற்கு சாட்சியாளர்களாக இருக்கின்றனர். 

மஹிந்த, மோடி சந்திப்பில் உள்ள மிகவும் முக்கியமான அம்சம் என்னவென்றால், மஹிந்த ஆதரவாளர்கள், நோர்வூட் நகரில் வைத்து, மோடியின் வருகைக்கும் அவர் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் மத்தியில் ஆற்றிய உரைக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது, மஹிந்த தாமாகவே கேட்டு, அதே மோடியைச் சந்தித்து இருக்கிறார் என்பதாகும். இதைக் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் அறிக்கையொன்றின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறது.  

ஆயினும், இந்தியப் பிரதமரின் நோர்வூட் விஜயத்துக்கான எதிர்ப்பு, முற்றிலும் ஆதாரமற்ற, அடிப்படையற்ற எதிர்ப்பல்ல. இந்திய வம்சாவளி, வழி வந்தவர்களாக இருந்தாலும், மலையகத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் மக்கள், ஏற்கெனவே இந்நாட்டுப் பூரண பிரஜைகளாக மாறிவிட்டனர்.   

அவ்வாறிருக்க, இந்தியப் பிரதமர், இந்திய வம்சாவளியினர் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களைச் சந்திப்பதானது, பிரிவு மனப்பான்மையை ஊக்குவிப்பதாகும் என்பதே அவர்களது வாதமாகும்.  

1988 ஆம் ஆண்டுக்கு முன்னர், இந்த நாட்டில் நாடற்றவர்கள் என்று ஒரு சாரார் வாழ்ந்தனர். இந்திய வம்சாவளியில் வந்து, இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ பிரஜா உரிமை பெறாதவர்களே அக்காலத்தில் நாடற்றவர்கள் என்றழைக்கப்பட்டனர்.   

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பயனாக 1986 ஆம் ஆண்டிலும் 1988 ஆம் ஆண்டிலும் கொண்டு வரப்பட்ட இரண்டு அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம், அவர்களுக்கு பிரஜா உரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டன. அதன் மூலம் அவர்கள் பூரண இலங்கைப் பிரஜைகளாகி விட்டனர்.  

எனவே, மோடி எதிர்ப்பாளர்களின் வாதத்தை, மலையகத் தமிழ்த் தலைவர்களால் நிராகரிக்க முடியாது. ஏனெனில், அவர்களே இதற்கு முன்னர், மலையக மக்களைத் தொடர்ந்தும் இந்திய வம்சாவளியினராகக் கருத முடியாது எனக் கூறியுள்ளனர்.   

இந்த அடிப்படையிலேயே, தமது சமூகத்தைத் தொடர்ந்தும் இந்திய வம்சாவளியினராகக் குறிப்பிட வேண்டாம் என, தமிழர் முற்போக்கு முன்னணியின் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், கடந்த வருடம் சகலரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார்.  

ஆனால், மலையக மக்கள், இந்திய வம்சாவளியினர் என்ற ஒரே காரணத்தைக் காட்டி, அம்மக்கள் மத்தியில் உரையாற்ற நோர்வூட் நகருக்குச் சென்று, அவர்களுக்கு அவர்களது இந்தியத்தொடர்பை இந்தியப் பிரதமர் நினைவூட்டிய போது, அவரை வரவேற்பவர்களில் கணேசன் முன்னணியில் இருந்தார்.  

ஆனால், அந்த நிலையில் கம்மன்பில போன்ற இனவாதிகள், மலையக மக்கள் பூரண இலங்கைப் பிரஜைகள் என்ற நிலைப்பாட்டில் கருத்து வெளியிட்டு இருந்தனர். இது ஒரு விசித்திரமான நிலைமையாகும்.  

மோடியின் மலையக விஜயத்தை, கம்மன்பில போன்றோர்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டு அதைப் பாவித்து, இந்திய எதிர்ப்பை தூண்ட முயற்சித்த போதிலும், அவர் இலங்கையில், மலையகத்துக்கு மட்டும் செல்லவில்லை. 2015 ஆம் ஆண்டு, வட பகுதிக்கு விஜயம் செய்தார். அப்போது அதற்கு கம்மன்பிலயோ, சரத் வீரசேகரவோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  image_7dfe49fb6a.jpg

இம்முறை மோடிக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பு, அரசியல் நோக்கம் கொண்டதாகும். சர்வதேச ரீதியில் மஹிந்தவுக்கு மட்டுமே வரவேற்பும் மதிப்பும் கிடைக்க வேண்டும் என மஹிந்தவின் ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள்.   

ஐ.நாவின் சர்வதேச வெசாக் வைபவம் மஹிந்தவின் காலத்திலன்றி, மைத்திரியின் காலத்தில் இலங்கையில் நடைபெறுவது, மஹிந்த ஆதரவாளர்கள் மத்தியில் ஒருவித பொறாமையை ஏற்படுத்தியிருக்கிறது போலும். எனவேதான், அவர்கள் கடந்தமுறை மோடியின் இலங்கை விஜயத்துக்கு இல்லாத எதிர்ப்பை இம் முறை தெரிவித்து இருந்தார்கள்.  

மோடி, கடந்த முறை வட பகுதிக்கு விஜயம் செய்தமையையும் இம்முறை மலையகத்துக்கு விஜயம் செய்தமையையும் சரியாகப் புரிந்து கொண்டால், மஹிந்த ஆதரவாளர்கள், இவ்வாறு இம்முறை கறுப்புக் கொடி காட்ட முற்பட்டு இருக்க மாட்டார்கள்.   

வட பகுதித் தமிழர்களையும் மலையகத் தமிழர்களையும் சந்திப்பதன் மூலம், மோடி, அம்மக்கள் மீது பரிவு கொண்டவர் என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. இது அவரது அரசியலாகும். வடபகுதி மக்கள் மீதும் மலையக மக்கள் மீதும் பரிவைக் காட்டி, தமிழக மக்களின் மனதை வெல்லவே மோடி முயற்சிக்கிறார்.   

நாட்டுக்குப் பாதகமான சில ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடவே மோடி இம்முறை வருகிறார் என மஹிந்தவும் அவரது அணியினரும் கூறிய போது, மோடியின் இம்முறை இலங்கை விஜயத்தில், எவ்வித அரசியலும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.  

 ஆயினும், மோடி தமது விஜயத்தின் நோக்கங்களில் அரசியல் நோக்கமும் இருக்கிறது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முயற்சிக்கவில்லை. அவர் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச வெசாக் தின பிரதான நிகழ்ச்சியில் உரையாற்றும் போதும் அரசியல் பேசினார். நோர்வூட் நகருக்குச் சென்று மலையக மக்கள் முன் பேசும் போதும் அரசியல் பேசினார். நோர்வூட் விஜயமே அரசியல் தான்.  

இவை எல்லாம் மோடி எதிர்ப்பாளர்களுக்குச் சாதகமான விடயங்களாக இருந்த போதிலும் அவர்கள் அவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டு இருக்கும்போது, மோடியை மஹிந்த, சந்தித்தமையானது அந்த எதிர்ப்பாளர்களின் முகத்தில் அறைந்ததற்குச் சமமாகும்.   

குறிப்பாக, அது மோடிக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்ட முற்பட்ட மஹிந்தவின், மிக நெருங்கிய சகாவான வீரவன்சவைப் பெரும் நெருக்கடியில் தள்ளிவிட்ட சம்பவமொன்றாகும்.  

மஹிந்த அணியின் மற்றொரு தலைவரும் மஹிந்த, மோடி சந்திப்பை வைத்து, மோடி எதிர்ப்பாளர்களை மேலும் அசௌகரியத்துக்கு உள்ளாக்கியுள்ளார். பொது எதிரணியின் முன்னணி உறுப்பினரும் அவர்களது உத்தியோகபூர்வ அரசியல் கட்சியான பொதுஜன சுதந்திர முன்னணியின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், மஹிந்த - மோடி சந்திப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அதன் விவரங்களை வெளியிட முடியாது” என்றார்.   
தமது ஆதரவாளர்கள் இலங்கையை, இந்தியாவின் மற்றொரு மாநிலமாகக் கருதிச் செயற்படுவதாகக் கூறி, மோடியின் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்போது, மஹிந்த அதே மோடியோடு நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முடியாத விடயங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.   

இலங்கைக்கு வந்த மோடி, அரசாங்கத்தின் தலைவர்களோடு இது போன்ற, வெளியில் கூற முடியாத விடயங்களைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், மஹிந்த அணியினர் அதனை எவ்வாறு வர்ணித்து இருப்பார்கள் என்று ஊகித்துப் பார்க்க வேண்டும்.  

 அரசாங்கத்தின் தலைவர்கள், நாட்டை இந்தியாவுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவே, அப்போது அவர்கள் கூறியிருப்பார்கள்.  

இந்தச் சந்திப்பின் போது,இந்தியாவுக்கு வருமாறு மஹிந்தவுக்கு, மோடி அழைப்பு விடுத்தும் இருக்கிறார். மஹிந்த, அதனை ஏற்றுக் கொண்டும் இருக்கிறார். அவ்வாறாயின், மஹிந்த அணியில் சிலர் காட்டும் இந்த, இந்திய எதிர்ப்பின் அர்த்தம் என்ன?  

மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் இந்திய எதிர்ப்பைத் தூண்டி, அரசியல் இலாபம் தேட முற்பட்ட போதிலும், இலங்கை, இந்திய உறவில் பிராந்திய, பூகோள அரசியல் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நன்றாகத் தெரியும்.   

அதனை 2010 ஆம் ஆண்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரபல இந்திய ஊடகவியலாளர்  வி.கே. சஷிகுமாருக்கு வழங்கிய பேட்டியொன்றின் மூலம் நன்றாக விளங்கிக் கொள்ள முடியும்.  

“இந்தியாவுக்கு மட்டுமே எம்மீது இராணுவ ரீதியாகச் செல்வாக்குச் செலுத்த முடியும். இந்தியா என்பது, எமக்கு அருகில் உள்ள மிகப் பெரும் சக்தியொன்றாகும். அத்தோடு, இலங்கையில் நடப்பவற்றைப் பற்றி அக்கறையுடன் இருக்கும் தமிழகத்தின் ஆறு கோடி மக்களுக்கு அருகில் நாம் வாழ்கிறோம் என்ற காரணத்தையும் எடுத்துக் கொண்டால், எமது நிலைமை மிகவும் சிக்கலானதாகும்.

ஏனைய நாடுகள் எம் மீது பொருளாதார தடைகளைத் தான் விதிக்கலாம். ஆனால், இந்தியா எம் மீது இராணுவ ரீதியில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நாடாகும் என்பதை நாம் அறிந்து தான் இருக்கிறோம்’ எனக் கோட்டாபய அந்தப் பேட்டியின் போது கூறியிருக்கிறார்.   

தமது வாதத்தை நிரூபிப்பதற்காக 1987 ஆம் ஆண்டு பிரிகேடியர் கொப்பேகடுவவின் தலைமையில், இராணுவத்தினர் யாழ்ப்பாணக் குடாநாட்டை, புலிகளிடம் இருந்து கைப்பற்றிக் கொள்ள முயற்சித்த போது, இந்தியா ‘பூமாலை நடவடிக்கை’ என்ற பெயரில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு, அதனை முறியடித்ததாகவும் கோட்டாபய அந்தப் பேட்டியின் போது கூறினார்.

எனினும், இலங்கை அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் இலங்கை மக்கள் மத்தியில், குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் இந்திய எதிர்ப்பை அடிக்கடி பாவித்து வருகிறார்கள்.  

இந்தியா பல நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்திய ஆக்கிரமிப்புகளால் ஆரம்பத்தில் அநுராதபுரத்தில் இருந்த இலங்கையில் தலைநகரம் யாப்பஹூவ, தம்பதெனிய, குருநாகல், கம்பளை மற்றும் கண்டி எனப் படிப்படியாகத் தென்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.   

இவற்றை விவரிக்கும் சிங்களப் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் வரலாறானது இந்திய எதிர்ப்பை, சிறுவர்கள் மனதில் ஊட்டும் வரலாறாகவே இருக்கிறது.  எனவேதான், அரசியல்வாதிகள் அடிக்கடி மக்கள் மனதில் உள்ள அந்த இந்திய எதிர்ப்பைத் தமக்குச் சாதகமாகப் பாவிக்க முனைகின்றனர். மக்கள் விடுதலை முன்னணி, தமது இரண்டு கிளர்ச்சிகளின் போதும் இந்திய எதிர்ப்பை அரசியலாக்கியிருந்தது.   

சிலவேளைகளில், இந்த இந்திய எதிர்ப்பு, தமிழர் எதிர்ப்பாக மாறிய சந்தர்ப்பங்களும் உண்டு. 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்துக்கு முன்னர், சில சிங்களப் பத்திரிகைகள், இந்தியா, இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி, கடும் இந்திய எதிர்ப்பை வளர்த்து வந்தன.

  அது, தமிழர் எதிர்ப்பாக மாறி இருந்த நிலையிலேயே, புலிகள் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் வைத்து, 13 இராணுவ வீரர்களைக் கொன்றனர்.

ஏற்கெனவே, தமிழர் எதிர்ப்பு பரவியிருந்த நிலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துக்கு எதிரான சிங்கள மக்களின் கொந்தளிப்புத் தான் பெரும் இனக் கலவரமாக வெடித்தது.  எனவே, வீரவன்ச போன்றோர்களின் இந்திய எதிர்ப்பானது சந்தர்ப்பவாதமாக இருந்த போதிலும் பயங்கரமானது.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திய-எதிர்ப்பு-பயங்கரமானது/91-197231

Categories: merge-rss

ஜோசப் எம்.பி கொலை: மற்றுமொருவர் கைது

ஊர்ப்புதினம் - Wed, 24/05/2017 - 20:13
ஜோசப் எம்.பி கொலை: மற்றுமொருவர் கைது
 

image_c38e31b676.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கந்தையைச் சேர்ந்த வினோத் என்றழைக்கப்படும் மதுசங்க (30) என்பவரே, குற்றப் புலனாய்வு பிரிவினரால், இன்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்,இன்றையதினமே அவரை ஆஜர்படுத்திய போது, ஜூன் மாதம் 7ஆம் திகதி வரையிலும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் இடம்பெற்ற  நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசன்துரை சந்திரகாந்தன், அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.

இந்த படுகொலை தொடர்பாக 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கு, எதிர்வரும் ஜுன் 7ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4 பேர், ஓன்றரை வருடங்களுக்கு மேலாக நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளனர். 3 பேர் தேடப்பட்டு வந்தனர். அவர்களில்,  இன்றைய தினம் கைது செய்யப்பட்டவர் 5ஆவது சந்தேக நபராவார் ஆவர்.

இதேவேளை, 5ஆவது சந்தேக நபரான குலத்துங்க,  இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா,  சிறைச்சாலை உத்தியோகத்தர் ஊடாக எதிர்வரும் ஜுன் 5ஆம் திகதி  தன்னுடைய வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்துமாறும்  அன்றைய தினம் வரையிலும்  விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/ஜோசப்-எம்-பி-கொலை--மற்றுமொருவர்-கைது/73-197295

Categories: merge-rss, yarl-category

சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி திடீர் மனு!

சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி திடீர் மனு!
 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார். "25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நளினி

1991ஆம் ஆண்டு தமிழகம் வந்த  ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இதையடுத்து கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனிடையே இவர்களது தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

 

இந்நிலையில் சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். 25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியல் காரணங்களுக்காகவே தான் இதுவரை விடுதலை செய்யப்படாமல் இருப்பதாகவும் நளினி குற்றம்சாட்டியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/90258-nalini-files-peition-in-international-human-rights-council.html

Categories: merge-rss, yarl-world-news

வரி ஏய்ப்பு: மெஸ்சியின் 21 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

வரி ஏய்ப்பு: மெஸ்சியின் 21 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் 21 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து கால்பந்து வீரர் மெஸ்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் நிராகரித்து, தண்டனையை உறுதி செய்துள்ளது.

 
 
 மெஸ்சியின் 21 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
 
பார்சிலோனா:

உலக புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி. இவர் அர்ஜென்டினா, பார்சிலோனா ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். இவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2007 முதல் 2009 - ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 4.1 மில்லியன் யூரோ அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து ஸ்பெயின் அரசாங்கத்தை ஏமாற்றியதாக அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸிக்கும் 21 மாதங்கள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து பார்சிலோனா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து லியோனல் மெஸ்ஸி தரப்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த மேல் முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் மெஸ்ஸிக்கு இந்த விவகாரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
201705242004586520_messi-one._L_styvpf.g
ஆனால் ஸ்பானிய சட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்குக் குறைவான சிறை தண்டனை விதிப்பு சோதனைக்கால விதிமுறைகளின் கீழ் வருவதால் மெஸ்ஸியும் அவரது தந்தையும் சிறை செல்ல வேண்டியதில்லை.

வன்முறையற்ற, 2 ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத் தண்டனைகளில் பெரும்பாலும் குற்றம்சாட்டப்பட்டோர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்காது என்று அந்நாட்டு சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/24200510/1086969/Messi-lose-Supreme-Court-appeal-over-21-month-prison.vpf

Categories: merge-rss

செல்சீ ரசிகனின் ரத்தத்தை நீலமாக மாற்றியவன்... மிஸ் யூ ஜான் டெர்ரி!

செல்சீ ரசிகனின் ரத்தத்தை நீலமாக மாற்றியவன்... மிஸ் யூ ஜான் டெர்ரி!
 
 

“அவருக்கு 32 வயது ஆகிறது. இது, இளம் வீரர்களுடன் போட்டியிடும் வயது அல்ல. வாரத்துக்கு இரண்டு போட்டிகளில் எல்லாம் அவரால் விளையாட முடியாது. வெளியே உட்கார அவர் பழகிக்கொள்ள வேண்டும்” இது, பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் பிரபல அணியின் கேப்டனைப் பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் சொன்னது. அணியின் கேப்டனை பிளேயிங் லெவனில் எடுக்காததற்கு, பயிற்சியாளர் சொன்ன இந்த கமென்ட் வைரல்.

பயிற்சியாளர் சொன்னதுபோல் 38 போட்டிகள்கொண்ட பிரீமியர் லீக் தொடரில் 14 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் அந்த வீரர். அவரது கால்பந்து வாழ்க்கை முடிந்தது என்றே நினைத்தனர். அதற்கடுத்த சீஸன்களில் நடந்தது சரித்திரத் திருப்பம்!

ஜான் டெர்ரி

அந்த அணியின் மேனேஜர் (பயிற்சியாளர்) மாற்றப்படுகிறார். முன்னாள் மேனேஜர் ஒருவரே மீண்டும் பதவியேற்கிறார். மீண்டும் அணியின் கருவாய் உருவெடுக்கிறார் அந்த கேப்டன். அடுத்த ஆண்டு பிரீமியர் லீக் தொடரின் 38 போட்டிகளிலும் 90 நிமிடங்களும் களத்தில் நின்று, அணிக்கு கோப்பையை வென்று தருகிறார் அந்த 34 வயது இளைஞர்! கோப்பையை முத்தமிட்டுக்கொண்டே, “என்னால் வாரம் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது என்றார் ஒருவர். இதோ இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன். இதற்காகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இங்கு பந்து பொறுக்கும் சிறுவனாக, அணியின் சின்னமாக இருந்துள்ளேன். இந்த மைதானத்துக்கு வண்ணம் சேர்த்தவன் நான். அணிக்காக அனைத்தும் செய்துள்ளேன்” என்று அவர் சொல்லி முடிக்கையில் அவர் ரத்தத்தினுள் இருந்த கால்பந்து வெறி, கண்களின் வழியே தெரிந்தது.

யார் அவர்?

ஜான் டெர்ரி! - கால்பந்து உலகம் மெச்சும் முக்கிய டிஃபண்டர். செல்சீ அணியின் ஈடுஇணையற்ற கேப்டன், லீடர், லெஜண்ட்.

பிரீமியர் லீக் ரசிகர்களுக்கு மட்டுமே இந்தப் பெயர் பரிச்சயம். 723 போட்டிகள், 67 கோல்கள், 16 கோப்பைகள் என செல்சீ அணியின் தன்னிகரற்றத் தலைவனாக விளங்கியவர் ஜான் டெர்ரி. வயது 36. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பம்பரமாகச் சுழன்ற கால்கள் அமைதியாக அமர மறுக்கின்றன.

ஓய்வுபெறும் ஐடியாவே இப்போது இந்த ‘இளைஞனி’டம் இல்லை! அப்புறம்..? அந்த மனுஷன் செல்சீ அணியைவிட்டுப் போகிறார். அதுதான் விஷயம்.

ஜான் டெர்ரி செல்சீயைவிட்டுப் பிரிவது, பேசுபொருளாக இருக்கக் காரணம் இல்லாமல் இல்லை. ஒரு வீரன் 22 ஆண்டுகள் விளையாடிவிட்டு அந்த அணியைவிட்டுப் போகிறார் என்றால், அது பெரிய விஷயம். கிரிக்கெட்டில் இன்று ஓர் அணிக்காக விளையாடும் வீரர், நாளை வேறோர் அணிக்காக விளையாடினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், கால்பந்தில் அப்படியில்லை. ஒருசில வீரர்கள் வேறு அணிக்கு மாறும்போது வில்லனாகத் தெரிவர். பத்து ஆண்டுகளில் பத்து அணிகளில் விளையாடியவர்கள்  இருக்கிறார்கள். ஆனால், ஒரே அணியில் 22 ஆண்டுகள் என்பது அசாதாரணம். ஜான் டெர்ரி அசாதாரணன். அதுவும் 12 ஆண்டுகளில் 580க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஓர் அணிக்குத் தலைமை என்பது பெரிய விஷயம். அப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க வீரர் டெர்ரி. 

ஜான் டெர்ரி

2008-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் ஃபைனல். எதிர் அணி மான்செஸ்டர் யுனைடெட். மழை வெளுத்துவாங்க, பெனால்டி கிக் வரை சென்றது போட்டி. யுனைடெட் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ வாய்ப்பை மிஸ்செய்துவிட்டார். கடைசி ஷாட். டெர்ரியின் வாய்ப்பு. அடித்தால் வெற்றி. இல்லையேல், சடன் டெத். மழையில் கால்கள் சறுக்க, டெர்ரியின் ஷாட் இலக்கின்றி சென்றது. சடன் டெத்தில் வென்று சாம்பியனானது யுனைடெட். இன்றும்கூட ஒருவர் பெனால்டியில் சறுக்கினால் ‘லைக் ஜான் டெர்ரி’ என்பதுதான் வர்ணனையாளர்கள் சொல்லும் உதாரணம். டெர்ரியின் மிஸ், அந்த அளவுக்குப் பேசப்பட்டது. தன்னால் ஒரு மாபெரும் கோப்பை நழுவுகிறது என்ற குற்ற உணர்ச்சியில் கலங்கினார் டெர்ரி. ஆறாத வடுவாக இருந்தது அந்த வலி. ஆனால், அந்த வடுவை அழிக்க, தன் அணியை 2012-ம் ஆண்டு மீண்டும் ஃபைனலுக்குள் அழைத்துச் சென்றார். கோப்பையை முத்தமிட்டார்!

2010-ம் ஆண்டில் டெர்ரியின் சொந்த வாழ்க்கையில் பிரச்னை. அடுத்தடுத்து  வழக்குகள். ஒருபுறம் மன உளைச்சல். மறுபுறம் தூற்றல்கள். டெர்ரியின் மதிப்பு செல்சீ ரசிகர்களிடையே குறையும் என்று கால்பந்து உலகம் கணித்தது. நடந்தது வேறு. அந்த வழக்குக்குப் பின்பு ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜில் நடந்த முதல் போட்டி. ‘வெல்கம் டெர்ரி ஆர்மி’ என மைதானம் முழுவதும் பதாகைகள். எங்கெங்கும் நிறைந்திருந்தது டெர்ரியின் முகம் (மாஸ்க்). அணியை டெர்ரி வழிநடத்தி வந்தபோது மைதானம் எங்கும் ஆதரவுக் குரல். உலகமே அதிசயத்தது. அணியின் மீது வீரன்கொண்ட காதலுக்கான மரியாதை அது!

சமீபமாகத்தான் மீம்ஸ்கள் பிரசித்தி. ஆறு ஆண்டுகளுக்கு முன்பே டெர்ரியைப் பற்றிய மீம்ஸ்கள் வைரல். 2012-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் விளையாட டெர்ரிக்குத் தடை. பேயர்ன் மூனிச் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது செல்சீ. கேலரியில் அமர்ந்திருந்த அவர், வெற்றிக் கொண்டாட்டத்தின்போது முழு ‘கிட்’டுடன் வந்து கலந்துகொண்டார். மீம்ஸ்கள் தெறித்தன. `ஆடாமலேயே கொண்டாட்டத்தில் ஜெர்சியுடன் கலந்துகொண்டார்' என உலகமே கேலி செய்தது. அவர் பதில் சொல்லவே இல்லை. 2013-ம் ஆண்டு யூரோபா லீக் ஃபைனல்.

அதே சூழ்நிலை. டெர்ரி இல்லை. லாம்பார்ட் தலைமையிலான அணி சாம்பியன். மீண்டும் அதேபோலத்தான் கொண்டாட வந்தார் டெர்ரி. ஆம், அந்த ஆயிரக்கணக்கான மீம்ஸ்களில் ஒன்றுகூட அவரை அசைக்கவில்லை. ‘என் அணி, என் வீரர்கள். என் அணியின் கோப்பை, நான் கொண்டாடுவேன்’ என்பது டெர்ரியின் வாதம். இந்த முறை மீம்ஸ்கள் பறக்கவில்லை. 

டெர்ரி அணியை வழிநடத்திய விதம் மாஸ்டர் க்ளாஸ். தடுப்பாட்டத்தில் மாபெரும் அரண். 2004-05 ஆண்டு சீஸனில் மேனேஜராகப் பொறுப்பேற்றதும் 24 வயது டெர்ரியை நிரந்தர கேப்டனாக்கினார் ஜோஸே மொரினியோ. 14 வீரர்கள் விலகல். ஒன்பது புதிய வீரர்கள் சேர்க்கை என அணியிலும் மாபெரும் மாற்றம். புதிய பயிற்சியாளர், புதிய அணி. இப்படியான சூழ்நிலையில் ஒரு கேப்டனாக அணியைப் பக்காவாக வழிநடத்தினார் டெர்ரி. அதனால்தான் 50 ஆண்டுகள் கழித்து செல்சீ அணி கோப்பை வென்றது. பிரீமியர் லீக்கில் இது வரலாற்றுச் சாதனை. அடுத்த ஆண்டும் செல்சீ சாம்பியன். ‘கேப்டன்’ டெர்ரி மாபெரும் தலைவன் ஆன தருணம் அது.

ஜான் டெர்ரி

களத்தில் அவர் காட்டும் கமிட்மென்ட் ஈடுஇணையற்றது. தான் பிரைம் ஃபார்மில் இருந்த காலங்களில் அனைத்து ஃபார்வேர்டுகளுக்கும் டெர்ரி சிம்மசொப்பனம். எந்த ஒரு தருணத்திலும் அவர் பின்தங்கியதே இல்லை. 2007-08ம் ஆண்டு சீஸன்களில் அடிக்கடி காயமடைந்தார். ஆனால், உடனடியாக மீண்டு வந்தார். 2008-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் ஃபைனல் சமயம் டெர்ரிக்கு முழங்கையில் காயம். விளையாடுவாரா என்ற கேள்வி. காயம் முழுமையாகக் குணமடையாத நிலையிலும் விளையாடினார். அந்தப் போட்டியில் அவர் பெனால்டியை மீம்ஸ் செய்தது மட்டும்தான் பலருக்கும் தெரியும். காயத்தோடு 120 நிமிடங்கள் அணியை வழிநடத்தியதை அறிந்தவர் சொற்பமே! 

நெகட்டிவ் மீம்ஸ் மட்டுமல்ல, டெர்ரியைப் புகழ்ந்தும் மீம்ஸ்கள் வரத்தான் செய்தன. 2010-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் கீழே விழுந்து பந்தை பிளாக் செய்திருப்பார் டெர்ரி. அந்த ரீ-பெளண்டை ஸ்லோவேனிய வீரர் மீண்டும் கோல் நோக்கி செலுத்த, உடனே எழுந்து தரையை நோக்கி ஹெடிங் செய்யப் பாய்வார் டெர்ரி. அது மிகவும் ஆபத்தான மூவ். அவ்வளவு வேகத்தில் முழங்கால் உயரத்தில் மட்டுமே வரும் பந்தைத் தடுக்க சற்றும் யோசிக்காமல் அவர் டைவ் அடித்ததெல்லாம் வேற லெவல். ‘ஜான் டெர்ரி டால்பின் டைவ்’ என மீம்ஸ் தட்டியிருந்தார்கள் நெட்டிசன்ஸ். 

2006-ம் ஆண்டு உலகக்கோப்பையில் டிரிடாட் அணிக்கு எதிரான போட்டியில் கோல் நோக்கிச் சென்ற பந்தை கோல் லைன் அருகே க்ளியர் செய்ததெல்லாம் ‘வேர்ல்டு க்ளாஸ்’.   டெர்ரி ஸ்பெஷல்களில் அதுவும் ஒன்று. இளம் வீரர்களாக இருந்தாலும் சரி, மூத்த ஸ்டார்களாக இருந்தாலும் சரி, அனைவரிடமும் ஒரே மாதிரி பழகக்கூடியவர். இந்த சீஸனில் பெரிதாக அவர் களம் காணவில்லை. ஆனால், அணியில் அவர் இருப்பது அனைவருக்கும் மாபெரும் பலம், நம்பிக்கை.  

`பிரீமியர் லீக் தொடரில் அதிக கோல்கள் அடித்த டிஃபண்டர்' என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2012-ம் ஆண்டு தேசிய அணி நிர்வாகத்துடனான கருத்துவேறுபாடு காரணமாக தேசிய அணியிலிருந்து ஓய்வுபெற்றார். ஆனால், 2016-ம் ஆண்டு யூரோ கோப்பை வரை டெர்ரியின் இங்கிலாந்து கம்-பேக்குக்காக வேண்டியவர்கள் ஏராளம். இந்த சீஸனோடு செல்சீ அணியைவிட்டுப் போகிறார் டெர்ரி. 

செல்சீயை ஐரோப்பாவின் ஒரு பெரிய அணியை மாற்றியதில் டெர்ரியின் பங்கு அதிகம். இதோ இந்த சீஸனின் பிரீமியர் லீக் தொடரில் செல்சீ அணி சாம்பியன் பட்டம் வென்று விட்டது.  FA கோப்பையின் இறுதிப்போட்டியிலும் காலடி எடுத்துவைத்துவிட்டது. டெர்ரியின் மகுடத்தை அழகாக்க இன்னும் ஒரு முத்து காத்திருக்கிறது. 

சண்டர்லேண்ட் அணிக்கு எதிரான கடைசி பிரீமியர் லீக் போட்டியில் டெர்ரி அணியைக் கடைசி முறையாக வழிநடத்தினார். அவரது ஜெர்சி எண் 26. தான் ஒவ்வொரு நாளும் ஓடிய மைதானத்திலிருந்து, தன்னைத் தலைவனாகப் பார்த்த ரசிகர்களிடமிருந்து, தான் மெருகேற்றிய வீரர்களிடமிருந்து, தன்னை உருவாக்கிய, தான் உருவாக்கிய அணியிடமிருந்து கடைசியாக ஒருமுறை விடைபெற்றார் டெர்ரி. கண்ணீர், அனைவரின் கண்களிலிருந்தும் அந்த வீரனைப் பார்க்க விரைந்தது. போட்டி முடிந்ததும் கோப்பையைக் கையில் ஏந்திவிட்டு கண்ணீர் மல்க ரசிகர்களிடம் தன் கடைசி உரையை அவர் ஆற்றும்போது, ஒவ்வொரு ரசிகனின் ரத்தமும் நீலமாய் வழிந்தது!

இந்த ஞாயிறு நடக்கும் FA கோப்பைக்கான போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமே. செல்சீ ரசிகர்கள் பெறப்போவது வேண்டுமானால் ஒரு கோப்பையாக இருக்கலாம்; ஆனால் இழக்கப்போவது ஒரு மாபெரும் சகாப்தத்தை!

 

மிஸ் யூ JT!

http://www.vikatan.com/news/sports/90246-john-terry-leave-from-chelsea.html

Categories: merge-rss

சூப்பரான காரைக்குடி நண்டு மசாலா

நாவூற வாயூற - Wed, 24/05/2017 - 18:40
சூப்பரான காரைக்குடி நண்டு மசாலா

காரைக்குடி நண்டு மசாலா மற்ற நண்டு மசாலாக்களை விட சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

 
சூப்பரான காரைக்குடி நண்டு மசாலா
 
தேவையான பொருட்கள் :
 
நண்டு - 1 கிலோ
புளிக்கரைசல் - 1 கப்
பட்டை - 2
பிரியாணி இலை -2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 
மசாலாவிற்கு :
 
துருவிய தேங்காய் - அரை கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 3
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

201705241525415054_karaikudi-crab-masala
 
செய்முறை :

* நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
 
* கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
* பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
 
* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து நண்டு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
 
* பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நண்டுடன் பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, சில நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.
 
* நண்டு ஓரளவு வெந்த பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

* இப்போது சுவையான காரைக்குடி நண்டு மசாலா ரெடி.

http://www.maalaimalar.com

Categories: merge-rss

உடல் முழுதும் கிரீஸ் பூசிக்கொண்டு பத்தரமுல்லையில் நிர்வாணமாக நடமாடிய நபர் கைது

ஊர்ப்புதினம் - Wed, 24/05/2017 - 18:38
உடல் முழுதும் கிரீஸ் பூசிக்கொண்டு பத்தரமுல்லையில் நிர்வாணமாக நடமாடிய நபர் கைது

 

உடல் முழுதும் கிரீஸ் பூசிக்கொண்டு பத்தரமுல்லையில் நிர்வாணமாக நடமாடிய நபர் கைது
 

அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு சில தினங்களே கடந்துள்ள நிலையில், கிரீஸ் மனிதன் தொடர்பான செய்தியொன்று பதிவானது.

உடல் முழுதும் கிரீஸினைப் பூசிக்கொண்டு நிர்வாணமாக நடமாடும் குறித்த நபரை மக்கள் கிரீஸ் மனிதன் என அழைக்கின்றனர்.

இந்நபர் நிர்வாணமாக பத்தரமுல்லையில் பல வீடுகளை சுற்றிவரும் காட்சி வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.

CCTV காட்சிகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீடுகளில் பொருட்களைத் திருடியுள்ள இவர், பெண்களை துஷ்பிரயோகம் செய்ய பல தடவை முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

29 வயதான இவர் மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து தங்க ஆபரணங்களையும், சில பற்றுச்சீட்டுக்களையும், பெண்களின் உள்ளாடைகள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

http://newsfirst.lk/tamil/2017/05/உடல்-முழுதும்-கிரீஸ்-பூச/

Categories: merge-rss, yarl-category

சக்தி டிவி செய்திகள் 24th May 2017, 8PM

ஊர்ப்புதினம் - Wed, 24/05/2017 - 18:36

சக்தி டிவி செய்திகள் 24th May 2017, 8PM

Categories: merge-rss, yarl-category

"பைத்தியம் பிடித்தவரிடம் அணு ஆயுதங்கள்" : கிம் ஜோங்கை விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி..!

"பைத்தியம் பிடித்தவரிடம் அணு ஆயுதங்கள்" : கிம் ஜோங்கை விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி..!

 

 

"பைத்தியம் பிடித்தவரிடம் அணுஆயுதங்கள்" என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

Donald-Trump-Kim-Jong-un-North-Korea-war

மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டெர்ட்டேவுடனான தொலைபேசி உரையாடலின்போது கிம் ஜோங் உன்னை பைத்தியம் பிடித்தவர் என தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைக்களுக்கெதிராக உலக நாடுகள் மற்றும் ஐக்கியநாடுகள் சபை என்பன விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்த நிலையில், அமெரிக்கா தனது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக அந்நாட்டு போர்க்கப்பல்களை கொரிய தீபகர்பத்திற்குள் அனுப்பியது.

trumpdut.jpg

இந்நிலையில் பதற்ற நிலை சற்று தனியவே, கிம் ஜோங் உன்னை சந்திக்கத் தயாராகவுள்ளதாகவும், அவருடனான சந்திப்பை மேன்மையானதாக கருதுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். 

இச்சூழலில் வடகொரிய ஜனாதிபதியை பைத்தியம் பிடித்தார் என்றும்,  "அணுஆயுதங்களை வைத்திருக்கும் பைத்திய நிலையிலுள்ள ஒருவரால் தம் அசந்து போகாது அதைவிட பலமான ஆயுதங்களை தம் வைத்திருப்பதிகாக" பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியிடம், டிரம்ப் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/20320

Categories: merge-rss, yarl-world-news

ஞானசார தேரருக்கு கொலை மிரட்டல் ?

ஊர்ப்புதினம் - Wed, 24/05/2017 - 18:10
ஞானசார தேரருக்கு கொலை மிரட்டல் ?

ganasara-thero.jpg

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு, பொதுபல சேனா இயக்கம் கோரியுள்ளது. காவல்துறை மா அதிபருக்கு இது குறித்து கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இனவாத மதவாத முறுகல்களை ஏற்படுத்தி இதன் ஊடாக ஞானசார தேரருக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை பயன்படுத்தி ஞானசார தேரருக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேற்று மதமொன்றின் மீது தாக்குதல் நடத்தி அந்த இடத்தில் ஞானசாரருக்கு ஆபத்து ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் ஞானசார தேரருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பினை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.

http://globaltamilnews.net/archives/27884

Categories: merge-rss, yarl-category

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 24/05/17

 

இன்றைய (24/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

* அதிகபட்ச ஆபத்தை பிரிட்டன் எதிர்கொள்வதாக அறிவிப்பு; மேன்செஸ்டர் குண்டுதாரி குறித்து கூடுதல் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு.

* பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைக்கப்போராடும் ஆண்கள்; பெண்களை பாதுகாக்க ஆப்ரிக்காவில் வித்தியாசமான முன்னெடுப்பு.

* அமெரிக்க அதிபரின் கொள்கைகள் மெக்ஸிகோ கார் உற்பத்தியை பாதிக்குமா? உலகின் நான்காவது பெரிய கார் உற்பத்தி நாட்டிலிருந்து நேரடி தகவல்கள்.

Categories: merge-rss, yarl-world-news

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம்..!

ஊர்ப்புதினம் - Wed, 24/05/2017 - 15:55
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம்..!

 

 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பணிபுரியும் விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்குடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

dutyfree_complex1.jpg

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய த்தினூடாக பயணம் செய்யும் பயணி ஒருவர்  கைப் பையில் கொண்டுவரக்கூடிய  திரவங்கள், ஸ்பிரே வகைகள், ஜெல் போன்ற பொருட்களின் அளவு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த விதிகளுக்கு அமைவாக அணைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு அதிகமாகக் கூடாது எனவும், அனைத்து திரவ கொள்கலன்களும், 20x20 என்ற அளவிலான வௌிப்படையாக தெரியும், திறந்து மீள மூடக்கூடிய வகையிலான பொலித்தின் பைகளில் போடப்பட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

aprt.jpg

அத்தோடு பயணி ஒருவர் ஒரு பையை மாத்திரமே இவ்வாறு கொண்டு செல்லலாம் எனவும், மேலதிகமாக கொண்டு செல்லும் பைகளை விமான சீட்டுகளை பரிசோதனை செய்யும் இடத்திலிருந்து கொண்டு செல்ல முடியுமெனவும், குறித்த விதிகளுக்குள் நீர், குடி பாணங்கள், சூப், ஜேம், சோஸ் வகைகள், நீராவி திரவ வகைகள், ஜெல் வகைகள், அறை வெப்பங்களை பராமரிக்கும் திரவங்கள் உள்ளிட்ட பொருட்களும் அடங்குமென நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்ட விதிகள் யாவும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஜூன் முதலாம் திகதிமுதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20319

Categories: merge-rss, yarl-category

கோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம்

ஊர்ப்புதினம் - Wed, 24/05/2017 - 13:42
கோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம்
 

-ரொமேஸ் மதுசங்க

யாழ்ப்பாணம், கோப்பாய், திருநெல்வேலி காளி கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது, போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட “தனி ஈழம்” வரைபடத்துக்கு ஒப்பான வரைபடமொன்றை, நபரொருவர் காட்சிப்படுத்திச் சென்ற சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் கூறினர்.

மேற்படி உற்சவத்தின் போது, காளியம்மன் திருவுருவ வீதியுலா சென்ற போது, அதற்குப் பின்னால் குறித்த வரைபடத்தை மேற்படி நபர் காட்சிப்படுத்திச் சென்றுள்ளார் என்று தெரியவந்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் புலனாய்வுப் பொலிஸாரால் அழைத்துவரப்பட்ட மேற்படி நபர், பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக, பொலிஸார் மேலும் கூறினர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கோயில்-உற்சவத்தில்-’தனிஈழ’-வரைபடம்/71-197246

Categories: merge-rss, yarl-category

62500 ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்காவிற்கு..!

ஊர்ப்புதினம் - Wed, 24/05/2017 - 13:40
62500 ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்காவிற்கு..!

 

 

(எம்.சி.நஜிமுதீன்)

நல்லாட்சி அரசாங்கம் ஊவவெல்லசவிலுள்ள அறுபத்து இரண்டயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பை சீனி தொழில் துறைக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளது. அத்திட்டத்திற்கான அடிக்கல்லை எதிர்வரும் ஐந்தாம் திகதி நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் அத்திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். அல்லாதுபோனால் அதற்கெதிராக பரந்துபட்ட போராட்டங்களை நடத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் உதயஷாந்த தெரிவித்தார்.

corner.png

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததார்.

http://www.virakesari.lk/article/20314

Categories: merge-rss, yarl-category

காரைத்தீவில் பதற்றம் : சகோதரிகளை கடத்திய சிங்கள சாரதி : கைது செய்ய முயன்ற பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல்

ஊர்ப்புதினம் - Wed, 24/05/2017 - 13:38
காரைத்தீவில் பதற்றம் : சகோதரிகளை கடத்திய சிங்கள சாரதி : கைது செய்ய முயன்ற பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல்

 

 

இரு சகோதரிகளை கடத்தியதாகக் கூறப்படும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சந்தேகநபரை மீட்கவந்த பொலிஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காரைதீவில்  முறுகல் நிலை ஏற்பட்டதுடன் சிறிதுநேரம் பதற்றமும் நிலவியது.

இச்சம்பவம் இன்று சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவில்  இடம்பெற்றது.

 

சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் பியலால் தலைமையிலான குழுவினர் பலத்த பிரயத்தனத்திற்கு மத்தியில் கடத்தலுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சந்தேக நபரை பொதுமக்களிடமிருந்து  மீட்டு ஜீப்பில் ஏற்றி சம்மாந்துறைப்பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

சம்பவம்பற்றி தெரியவருவதாவது:

நேற்றுமாலை காரைதீவில் இரு சகோதரிகளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு கனரக வாகன சாரதி கடத்திச் சென்றுள்ளார் என்றும் மறுநாள் புதன்கிழமை காலை  கடத்தப்பட்ட  இரு சகோதரிகளில் ஒருவரை மீண்டும் கொண்டுவந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடும்பத்தினர் மற்றைய சகோதரியை மீட்கு முகமாக கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சகோதரியை ஏற்றிக்கொண்டு ஆட்டோவில் அக்கரைப்பற்றுப் பகுதியை நோக்கிச்சென்று கொண்டிருந்தவேளை குறித்த வாகனசாரதியைக் கண்டுள்ளனர்.

உடனே சாரதியை குறித்த பெண் இனங்காட்டியதும் அவரைப்பிடித்து காரைதீவுக்கு கொண்டுவந்து பிரதானவீதியிலுள்ள வீடொன்றில் அடைத்துவைத்தனர். 

இச்செய்தி சம்மாந்துறைப் பொலிஸாரை எட்டியதும் பொலிஸ் பொறுப்பதிகாரி உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்தார்.

அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை அழைத்துச் செல்ல முற்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தி கூக்குரல் எழுப்பினர்.

police10.jpg

முதலில் கடத்தப்பட்ட பிள்ளையைக் கொண்டுவந்து விட்டுவிட்டு சந்தேக நபரைக் கொண்டுச் செல்லுங்கள் எனப் பொதுமக்கள் உரத்துக் குரலெழுப்பினர்.

நாம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அவரை விடுவியுங்கள். நாம் விசாரணை நடத்த வேண்டும். இடையூறு செய்யவேண்டாம் எனப் பொலிஸ் பொறுப்பதிகாரி உரத்த சத்தத்தில் கத்தினார். 

police0.jpg

சிலநிமிடங்கள் இழுபறிநிலை காணப்பட்டது. வாக்குவாதமும் ஏற்பட்டது. சற்றுநேரம் பிரதானவீதி போக்குவரத்தும் ஸ்தம்பிதநிலையடைந்தது. 

பலத்த போராட்டத்திற்கு பின்னர் மக்களிடமிருந்து சந்தேகநபரை மீட்டு பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச்சென்றனர்.

police5.jpg

கடத்தப்பட்ட மற்றுமொரு சகோதரியை மீட்டெடுப்பதற்காக பொலிஸ் குழுவினர் குறித்த சகோதரியின் தந்தையுடன் குறித்த இடம் நோக்கிப் புறப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/20313

Categories: merge-rss, yarl-category

மினிசூறாவளியில் சிக்கிய வவுனியா : வாகனங்கள் பல சேதம் போக்குவரத்தும் பாதிப்பு

ஊர்ப்புதினம் - Wed, 24/05/2017 - 13:35
மினிசூறாவளியில் சிக்கிய வவுனியா : வாகனங்கள் பல சேதம் போக்குவரத்தும் பாதிப்பு

 

 

வவுனியாவில் இன்று மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய மினிசூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்தமையால் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் அமைந்திருந்த பொலிசார் விடுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது.

vavuniya.jpg

வவுனியா நகரில் இன்று மதியம் முதல் 3 மணிநேரம் மழையுடன் கூடிய மினிசூறாவளி வீசியதால், நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல்வேறு கட்டங்களும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன. 

vavunya_2.jpg

வவுனியா பொலிஸ் நிலையத்தில் நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் 5 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன், பொலிஸ் நிலையத்தில் இருந்த விடுதி கட்டிடம் ஒன்றின் பகுதியும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

அத்தோடு ஏனையப்பகுதிகளில் மரங்கள் சரிந்தமையினால் கட்டிடங்கள் இடிந்துள்ளதுடன், மின்சார தடைகள் ஏற்பட்டு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20317

Categories: merge-rss, yarl-category

தனிமைப்படுவதற்கான களமல்ல முள்ளிவாய்க்கால்

அரசியல்-அலசல் - Wed, 24/05/2017 - 11:44
தனிமைப்படுவதற்கான களமல்ல முள்ளிவாய்க்கால்
 

தமிழ்த் தேசிய அரசியலிலும், அதுசார் போராட்ட வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் என்றைக்குமே மறக்கவும் மறைக்கவும் முடியாத களம்; காலா காலத்துக்கும் உணர்வுபூர்வமான களம்.   image_f898e7af17.jpg

அதுபோல, முள்ளிவாய்க்கால் கோரி நிற்கின்ற கடப்பாடுகளும் அரசியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அதிகமானவை. ஆனால், கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்வைத்து, நிகழ்த்தப்பட்ட காட்சிகள், பெரும் ஏமாற்றத்தை தமிழ் மக்கள் மத்தியில் வழங்கியிருக்கின்றது.  

வடக்கு மாகாண சபை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் மற்றும் அருட்தந்தை எழில்ராஜன் தலைமை வகித்த குழு என நான்கு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள், கடந்த வியாழக்கிழமை (மே 18) முள்ளிவாய்க்காலில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன.   

இவற்றில், எந்த நிகழ்வுக்குச் செல்வது என்று பெரும்பாலான மக்கள் குழப்பி நின்றார்கள். இன்னும் சிலரோ எல்லா நிகழ்விலும் பங்கெடுப்பது பற்றிய தமது நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள்.   

ஆனால், இந்த நான்கு நிகழ்வுகளிலும் ஒன்றில்கூட குறைந்தது ஆயிரம் பேர் கூடியிருக்கவில்லை. ஒப்பீட்டளவில் வடக்கு மாகாண சபை, ஒழுங்கமைத்த நிகழ்வில் அதிகளவானோர் பங்குபற்றி இருந்தார்கள். மற்றைய நிகழ்வுகளில் சில நூறு பேர் மாத்திரமே கலந்து கொண்டிருந்தார்கள்.  

இறுதி மோதல் களமான முள்ளிவாய்க்காலில், மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகளில் ஆயிரம் பேரையாவது ஒருங்கிணைக்க முடியாத கையாலாகாத்தனமொன்று அரங்கேறியது.  image_87cb1b3ea1.jpg

எண்ணிக்கை மாத்திரம் எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என்பதல்ல; ஆனால், உறவுகளை இழந்து, பெரும் வலிகளோடு ஒன்றித்திருக்கின்ற மக்களை, ஒரு புள்ளியில் இணைத்து, அவர்களின் கூட்டுணர்வை வெளிப்படுத்தவும் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க முடியாத சூழல் என்பது தோல்விகரமானது.  

 ஆம்! அதை அப்படித்தான் அடையாளப்படுத்த வேண்டும். ஏனெனில், தமிழ்த் தேசியத் தலைமைகள், செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள் ஆகியோருக்கு இடையே காணப்படுகின்ற ‘ஈகோ’ (தன்முனைப்பு) மனநிலை மற்றும் பொறுப்பற்ற தன்மையே இந்த நிலையை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது. image_4c55fab798.jpg

ஊடகங்களிடம் பேசும் போது மட்டும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கட்சி, தேர்தல் அரசியல்களுக்கு அப்பாலானது என்று தொண்டை கிழியப் பேசுவதற்கு அரசியல்வாதிகள் எல்லோரும் தயாராக இருக்கின்றார்கள்.   

ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்தவிதமான முன்னோக்கிய பயணத்துக்கும் தயாராக இல்லை.  

முள்ளிவாய்க்காலில் நினைவில்லம் ஒன்றை அமைப்பது தொடர்பில், வடக்கு மாகாண சபையில், து.ரவிகரன் கொண்டு வந்த தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டு, மூன்று வருடங்களாகின்றன.   

வடக்கு மாகாண சபையில், இதுவரை 300க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல தீர்மானங்கள் உணர்வு ரீதியானவை; அரசியல் ரீதியானவை; அதிகார வலுவற்றவை.  

image_948958e92c.jpg 

ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பொதுக் கட்டமைப்புக்குள் ஒருங்கிணைப்பதற்கும், நினைவில்லம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை விட்டுக் கொடுப்பின்றி முன்னெடுப்பதற்குமான சாத்தியப்பாடுகள் நிறையவே காணப்படுகின்றன.  

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது கூட்டுணர்வினால் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய களம். அது, அஞ்சலி செலுத்துவதற்கும் அரசியலுக்கும் அவசியமானது. ஓர் இடத்தில் குவிக்கப்படுகின்ற உணர்வுகளை மெல்ல மெல்லப் பிரித்தாள முடியாத வகையில், பரவலடையச் செய்யும் போதுதான், அது வலுப்பெற்று வளரும். அப்போதுதான் அதைத் தலைமுறைகள் தாண்டி, தக்க வைக்கவும் முடியும்.  

மாறாக, தனித்துத் தனித்து நிற்பதால் அவற்றின் மீது ஆக்கிரமிப்பைச் செய்வதும் அலைக்கழிப்பதும் இலகுவானது. அதற்கு, அருட்தந்தை எழில்ராஜன் குழு முன்னெடுத்த நினைவேந்தல் நிகழ்வு மீது, இலங்கைப் படைத்துறைக் கட்டமைப்பு நிகழ்த்திய அச்சுறுத்தல் பெரும் உதாரணம்.  

 நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட தருணத்திலேயே, அருட்தந்தை எழில்ராஜன் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டார். நிகழ்வுக்கு முதல்நாள் நீதிமன்றத்தினால் தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தடையுத்தரவு கோரியவர்கள் குறித்த நிகழ்வு, தேசிய பாதுகாப்பு மற்றும் சமாதானத்துக்கு அச்சுறுத்தலானது என்று கூறிய காரணங்கள் தொடர்பில் எந்தவொரு அதிருப்தியையும் தமிழ்த் தரப்பு வெளிக்காட்டவில்லை.   

அதிகபட்சமாக சமூக ஊடகங்களில் ஒரு சிலர் திரும்பத் திரும்பப் பேசியதோடு முடிந்தது. நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட நிகழ்வுக்கான தடையுத்தரவு அடுத்தநாள் நீக்கப்பட்டாலும், அந்த நிகழ்வு எமக்கு முன்னால் பெரும் விடயமொன்றை வைக்கின்றது.  
அதாவது, இப்போதுள்ள சிறிய (ஜனநாயக) இடைவெளியைப் பயன்படுத்தி, காலத்துக்கும் அத்துமீறல்களைச் செய்ய முடியாத விடயங்களைத் தமிழ்த் தரப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.   

அதில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மீதான அச்சுறுத்தல்களுக்கு அப்பாலான நிலையை உருவாக்குவது முதன்மையானது. அதற்கு விரும்பியோ விரும்பாமலோ பொதுக்கட்டமைப்புக்குள் ஒருங்கிணைய வேண்டியது அவசியம்.   

image_cf7c5d7ed7.jpg

ஒரு நிகழ்வைத் தடை செய்வதைப் பார்த்துக் கொண்டு, உள்ளுக்குள் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தல் என்பது, அடுத்த தடவை, அந்தத் தடை தம் மீதே வர முடியும் என்பதை உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்ற சிறுமனநிலையாகும். 

 அருட்தந்தை எழில்ராஜன் குழுவினரின் நினைவேந்தல் நிகழ்வு மீதான அச்சுறுத்தல் குறித்தோ, அவரைத் தொடர் விசாரணைக்கு அழைத்தமை தொடர்பிலோ, தமிழ்த் தேசியப் பரப்பில் எந்தவிதமான கண்டனங்களையும் காண முடியவில்லை. தமிழ் மக்கள் பேரவை ஆற அமர ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டது.  

இந்த இடத்தில் அதிகம் எரிச்சலூட்டிய தரப்பாகத் தமிழ் மக்கள் பேரவையைக் குறிப்பிட முடியும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஓர் அறிக்கை; பிறகு அருட்தந்தை எழில்ராஜன் மீதான அச்சுறுத்தல்களுக்கான கண்டன அறிக்கை; ஆகியவற்றுக்கு அப்பால், அந்த அமைப்பு என்ன செய்தது என்பது தொடர்பிலானது.   

தம்மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய விடயங்களுக்காக முன்னோக்கி வருவது தொடர்பில் பெரும் அர்ப்பணிப்புக் கொண்டதாக காட்டிக் கொள்ளும் தமிழ் மக்கள் பேரவை, ஏன் தூங்கி வழியும் அமைப்பாக இருந்தது? 

இன்னொரு விடயம், வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்தியவர்கள் சார்ந்தது. உணர்வுபூர்வமாக நினைவேந்தப்படும் ஓர் இடத்தில், அதற்கான தன்மையொன்று பேணப்பட வேண்டும்; அங்கு, யாரும் சிறப்புரிமை பெற முடியாது. அது, அரசியல்வாதியாக இருந்தாலும் ஊடகவியலாளராக இருந்தாலும் அதற்கான ஒழுங்கொன்று உண்டு.   

அதை, எந்தவொரு தார்மீகமும் இன்றி குழப்பி தன்முனைப்புப் பெறுவதற்கும், இன்னொருவரை அவமானப்படுத்துவதாக நினைத்து நிகழ்வின் ஒட்டுமொத்தத் தன்மையையும் குழப்பியது எந்தக் காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது.  

வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்த நிகழ்வில், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மட்டுமே உரை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டிருந்த நிலையில், ஏற்பாட்டுக்குழு அவரையும் உரையாற்ற அழைத்திருந்தது. அது, உண்மையில் அவசியமற்ற ஒன்று. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது மாதிரியே நிகழ்வுகளை நடத்தி முடித்திருக்கலாம்.  

ஆனால், இரா.சம்பந்தன் வருகிறார், அவர் உரையாற்றப் போகின்றார் என்கிற விடயம் அறிந்ததும் அந்த இடத்தில்தான், ஊடகக் கடப்பாட்டை ஆற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு, அடிப்படைகளை மீறியது, குறித்த ஊடகவியலாளரின் நியாயப்படுத்தல்களை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்துவிட்டது.   

அதுவொரு திட்டமிட்ட குழப்பத்துக்கான ஏற்பாடு என்கிற குற்றச்சாட்டுகளை கருத்திலெடுக்க வைக்கின்றது. அன்றைக்கு நினைவேந்தல் நிகழ்வுகளைத் தாண்டி, குறித்த திட்டமிட்ட குழப்பவாதிகளின் அடாவடி ஊடகங்களில் கவனம்பெற்றது. மக்களை மாத்திரமல்ல, வெளிப் பார்வையாளர்களையும் அதிருப்தியுற வைத்தது.  

அடுத்தது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது கட்சி அரசியலுக்கு அப்பாலானது என்று சொல்லிக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, வடக்கு மாகாண சபையை முன்னிறுத்தியும், இரா.சம்பந்தன் நினைவேந்தலில் கலந்து கொண்டமை தொடர்பிலும் ஆற்றிய எதிர்வினைகள் அப்பட்டமாகக் கட்சி அரசியல் சார்ந்ததாக இருந்தது.   

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவையில் இயங்க முடியும் என்று சொல்லிக் கொள்ளும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவர் த.தே.கூவுக்கு தலைமை ஏற்றாலோ, அல்லது அவர் தனித்து வந்தாலோ தலைமையேற்கத் தயார் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வந்திருக்கின்றார்.

ஆனால், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுப்பது என்பது, மாகாண சபையை ஏற்றுக்கொள்வதாகிவிடும் என்று சொல்லி நிராகரிப்பது அபத்தமானது.  

அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபை முதலமைச்சராகவே தமிழ்த் தேசிய அரசியலுக்குள் வந்தார். அவரைத் தனித்து ஏற்றுக்கொள்வது என்பதற்கு அப்பால், அவரை மாகாண சபை ஊடாகவே மக்கள் அங்கிகரித்து, முன்னிறுத்தியிருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் பேரவையிலும், புதிய தலைமையாகவும் அவரைக் கொள்ள முடியும். ஆனால், நினைவேந்தலில் கலந்து கொள்ள முடியாது என்கின்ற வாதம் அடிபடுகின்றது.   

அடுத்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்துக்கு முன்னாவது, பொதுக்கட்டமைப்பொன்றை வடக்கு மாகாண சபையும் தமிழ்க் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும், அமைப்புகளும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான், வடக்கு, கிழக்கு பூராவும் குழப்பங்களின்றி நினைவேந்தல் நிகழ்வுகளைப் பரந்துபட்ட ரீதியில் ஒழுங்கமைக்கவும் மக்களை ஒருங்கிணைக்கவும் வழிவகுக்கும்.   

இல்லையென்றால், தனித்துத்தனித்து நின்று பலவீனப்பட்டு, ஒருநாள் காணாமற்போவோம். அப்போது, கட்சி அரசியல் செய்வதற்கும் எதுவும் மிஞ்சாது.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தனிமைப்படுவதற்கான-களமல்ல-முள்ளிவாய்க்கால்/91-197233

Categories: merge-rss

அறிமுகமில்லாதவர் அருகில் அமர்ந்து ஆஸி. பயணித்த ஜனாதிபதி : அமைச்சர் பதிவேற்றிய புகைப்படத்துக்கு மாறுப்பட்ட கருத்துக்கள்

ஊர்ப்புதினம் - Wed, 24/05/2017 - 11:00
அறிமுகமில்லாதவர் அருகில் அமர்ந்து ஆஸி. பயணித்த ஜனாதிபதி : அமைச்சர் பதிவேற்றிய புகைப்படத்துக்கு மாறுப்பட்ட கருத்துக்கள்

 

 

சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும்  போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவினால் எடுக்கப்பட்டு அவரது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 18582362_1024415114355133_20082964519429

குறித்த பதிவில், “நான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் வர்த்தக விமானத்தில் இந்த புகைப்படத்தை எடுத்தேன்.

இலங்கை நாட்டின் ஜனாதிபதி இதற்கு முன்னர் அறியாத பயணிக்கு அடுத்தபடியாக, வியாபார வகுப்பில் அமர்ந்துள்ளார். நான் உண்மையாக நல்ல விடயத்தை உணர்ந்தேன். நான் பிரதமருடன் பலமுறை பயணம் செய்துள்ளேன். அவரும் அவரது மனைவி மைத்திரியும் இதே போன்று எளிய முறையில் பயணித்துள்ளனர்.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போது, இலங்கை விமானப்படையின் கட்டளைத் தளபதிகள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை நினைவுபடுத்துகிறேன். பல முறையில் மஹிந்தவின் பயணங்களுக்கு அக்காலக்கட்டத்தில் விமானசேவையின் தலைவராக இருந்த அவரது மைத்துனரினால் தனிப்பட்ட விமானங்கள் வழங்கப்பட்டதனை காண முடிந்தன.

 

ராஜபக்ஷ ஆட்சியில் விசேட விமானத்தில் பல்வேறு நபர்கள் பயணங்களை மேற்கொண்டனர். இதற்காக பெருந்தொகை பணம் செலவிடப்பட்டது. இதனால் நாட்டுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டது என்று பதிவேற்றியுள்ளார்.

இந்த பதிவேற்றத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ள போதும் பல எதிர்ப்பான கருத்துக்களையும் பதிவேற்றியுள்ளனர்.

http://www.virakesari.lk/article/20307

Categories: merge-rss, yarl-category