merge-rss

`முதல் குண்டு விழும்வரை` ராஜதந்திரம் தொடரும் : டில்லர்சன்

`முதல் குண்டு விழும்வரை` ராஜதந்திரம் தொடரும் : டில்லர்சன்
ரெக்ஸ் டில்லர்சன்படத்தின் காப்புரிமைREUTERS Image captionரெக்ஸ் டில்லர்சன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுடனான மோதலை, ராஜதந்திர முறைப்படியே தீர்க்க விரும்புவதாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

`வடகொரியா முதல் குண்டு போடும் வரை` இது தொடரும் என அவர் சி.என்.என்னிடம் தெரிவித்துள்ளார்.

தடைகளும், ராஜதந்திரமும், வடகொரியாவின் அணுஆயுத திட்டங்களுக்கு எதிராக, முன்னெப்போதும் இல்லாத அளவு, ஒற்றுமையை உருவாக்கியுள்ளது என்றார்.

கடந்த மாதம், டில்லர்சன், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, நேரத்தை வீணாக்க வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஞாயிறன்று நடந்த நேர்காணலிலும், டில்லர்சன், அதிபர் டிரம்ப்பை கயவன் என்று அழைத்தாரா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

`இது போன்ற சின்ன விஷயங்கள் குறித்து நான் பேசமாட்டேன்` என பதிலளித்த அவர், அத்தகைய கேள்விகளுக்கு மரியாதை அளிக்க மாட்டேன் என்றார்.

சமீப மாதங்களில், சர்வதேச நாடுகளின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வட கொரியா தனது ஆறாவது அணுஆயுத சோதனையை நடத்தியதோடு, இரண்டு ஏவுகணைகளை ஜப்பானுக்கு மேல் அனுப்பியது.

ஐ.நாவின் தடையுள்ள போதிலும், வடகொரியா, அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில், தனது அணுஆயுதங்களை மேம்படுத்தி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பேச்சுவார்த்தைக்கான வழி

கடந்த மாத இறுதியில், வடகொரியாவுடன் `நேரடி பேச்சுவார்த்தையில்` உள்ளோம் என்றும், பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை பார்ப்பதாக டில்லர்சன் தெரிவித்திருந்தார்.

பல மாத சொற்போருக்கு பிறகு, இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கான முயற்சிக்கு வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை தந்தது.

எனினும், அடுத்தநாளே, டிரம்ப், `உங்களின் உடல் திறனை வீணடிக்காதீர்கள் ரெக்ஸ். நாம் செய்ய வேண்டியதை செய்வோம்` என டுவிட்டரில் பதிவிட்டார்.

ஜூலை மாதம் பெண்டகனில் நடந்த கூட்டத்திற்கு பின்பு, டில்லர்சன், அதிபரை கயவன் என அழைத்ததாக கூறப்படுவதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

அதற்கு பதிலளிக்கும் வகையில், அதிபர், இருவரின் அறிவுத்திறனுக்கான போட்டி வைத்துகொள்வோம் என்று கூறினாலும், அது விளையாட்டாக சொல்லப்பட்டது என செய்தி தொடர்பாளர் பின்பு தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/global-41632064

Categories: merge-rss, yarl-world-news

குண்டுச் சட்டிக்குள் ஓடும் தமிழ் அரசியல் குதிரைகள்

அரசியல்-அலசல் - Mon, 16/10/2017 - 05:05
குண்டுச் சட்டிக்குள் ஓடும் தமிழ் அரசியல் குதிரைகள்
 

நீங்கள் ‘விஐபி’யாக வேண்டுமா? யோசிக்காமல் அரசியலில் ஈடுபடுங்கள். அதிலும் போராட்டம், புரட்சி, காந்தி, காந்தியம், சேகுவேரா, பிடல், பிரபாகரன், புலிகள், தமிழ்த்தேசியம், சுயாட்சி, தனிநாடு, தமிழீழம், மாவீரர்கள், எரித்திரியா, தீபெத், கொசோவா என்று சில பெயர்ச் சொற்களைச் சொல்லத் தெரிந்து விட்டால்போதும்; உங்களுடைய காட்டில் மழைதான்....” என்று சொல்லிச் சிரிக்கிறார் நண்பர் ஒருவர்.  

இந்த நண்பர், 28 ஆண்டுகள் போராளியாக இருந்தவர். அதிலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் 1980 களின் நடுப்பகுதியில் இணைந்து, 28 ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செயற்பட்டவர். போராட்டத்தின்போது, ஒரு காலை இழந்திருப்பவர். போரின் பிறகு, தடுப்புக்குச் சென்று, இரண்டு ஆண்டுகள் அங்கே கழித்து விட்டு வந்து, இப்பொழுது கோழி வளர்க்கிறார்.   

நண்பரைப்போல, போராளிகளாக இருந்தவர்களில் பலர், இப்போது கோழி அல்லது மாடு வளர்க்கிறார்கள். சிலர் முச்சக்கரவண்டி ஓட்டுகிறார்கள். கொஞ்சப்பேர் தேநீர்க்கடைகளிலும் அச்சகங்களிலும் கராஜ்களிலும் வயல்களிலும் வேலை செய்கிறார்கள். சிலர் படையினரின் பண்ணைகளில் பணியாற்றுகிறார்கள். வேறு சிலர் மேசன் வேலைக்குப் போகிறார்கள். சிலர் தச்சுவேலை பழகுகிறார்கள்.   

இந்தத் தொழில்கள் எல்லாம், அவர்களுக்குப் பழக்கமே இல்லை; என்றாலும் வேறு வழியில்லை. ஏனென்றால், இவர்களில் பலர் வேலைகளே இல்லாமல், நாளாந்த வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஏதோ கிடைத்த வேலைகளில் தொற்றிக் கொள்வதும் ஈடுபடுவதும் பெரும்கொடையன்றி வேறென்ன?   

இதைவிட, இவர்களில் அநேகமானவர்கள் படிப்பைப் பாதியில் விட்டு விட்டு, இயக்கத்தில் சேர்ந்தவர்கள். இதனால், போராட்டப் பணிகளைத் தவிர, இந்த மாதிரியான வேலைகளில் முன்னனுபவம் இல்லாதவர்கள்.   

ஆனால், போராட்டம் இந்தப் போராளிகளின் ஆற்றலைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டது. போராட்டத்தின் மூலம், இவர்கள் பல சாதனைகளைப் படைத்திருந்தார்கள்.

இப்போதுள்ள மாகாணசபை கூட, இவர்களைப்போன்றவர்களினால் கிடைத்த ஒன்றே. இதனால், ஒரு காலத்தில் இவர்கள் இலங்கை அரசியலில் தீர்மான சக்திகளாக இருந்தனர்.  ஆனால், இன்று இவர்களுக்கு அரசியலில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

எந்த மாதிரியான பாத்திரமும் கிடையாது. வேண்டுமானால் ஏதோ ஒரு தரப்பை ஆதரிக்கலாம்; அல்லது யாருக்காவது வாக்களிக்கலாம்; அல்லது யாருடையவோ அல்லக்கைகளாக இருக்கலாம். அவ்வளவுதான்!   

 அதற்கப்பால் சுய அடையாளத்தோடும், விடுதலை அரசியலோடும் மெய்யாகவே முயற்சித்தால், ‘இவர்கள் வேறு யாருடையவோ நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறார்கள்’, ‘அந்நிய சக்திகளிடம் விலைபோய் விட்டனர்’ என்ற அடையாள முத்திரை குத்தப்படும்; தேவையற்ற சந்தேகங்கள் கிளப்பி விடப்படும்; அவதூறுகள் பரப்பப்படும். அதன்வழியாக, இவர்களுக்கு எதிரான எதிர்ப்பு வளையம் உருவாக்கப்பட்டு, இவர்கள் சமூகத்திலிருந்தே ஒதுக்கப்படுவார்கள்.   

ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருப்பதையும் விடக் கொடுமையான நிலையாக அது ஆகி விடும். ஆகவே, ‘பிச்சை வேண்டாம்; நாயைப் பிடியுங்கள்’ என்ற கதையாக, அரசியல் பக்கமே பார்க்கக் கூடாது என்று பேசாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.   

இத்தகைய ஒரு தந்திரோபாய நிலையில்தான், கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகாலமும் படித்து, பதவிகளில் இருந்தவர்களும் ஓய்வு பெற்றவர்களும் தனிப்பட்ட ரீதியில் தொழில் அதிபர்களாக இருந்தவர்களும் நெளிவு சுழிவுகளுக்குள்ளால் தங்களுடைய காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் இப்போது அரசியலில் கோலோச்சத் தொடங்கியுள்ளனர். களப்பணியும் தியாகமும் என்ற சிரமங்களில்லாமலே தலைமைத்துவத்தைப் பிடித்துக் கொள்வதும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் வாய்ப்பானது என்றாகி விட்டது பலருக்கும்.   

ஆகவே, இப்பொழுது இதயத்திலே சுதந்திர தாகத்தையும் கையிலே விடுதலைக் கருவியையும் வைத்திருந்தவர்களின் காலம் முடிந்து விட்டது. இவ்வாறானவர்களின் காலம் முடிவடைந்தவுடன் அல்லது கைமாறியவுடன், அந்த இடத்தில் பழையபடி பழைய பெருச்சாளிகள் வந்து குந்தி விட்டன. அவையே, இன்று அரசியல் செய்கின்றன.

இந்த அரசியலானது ‘பொய்ப்பூ’வையே பூத்துக் கொண்டிருக்கிறது. இவையே மக்களுடைய இன்றைய சலிப்புக்கும் நம்பிக்கையீனத்துக்கும் காரணமாகின்றன. பகட்டு அரசியலுக்கு ஆயுள் நீடிப்பதில்லை. உடனடி மினுக்கம் மறையத் தொடங்க, அதனுடைய உண்மை முகம் பளிச்செனத் தெரிந்து விடும்.   

இத்தகைய மாறுபட்ட அரசியல் செயற்பாட்டுக் களத்திலும், சிந்தனை முறையிலும் ஏராளம் குத்துக் கரணங்களும் தகிடு தத்தங்களும் நிகழத் தொடங்கி விட்டன. இதுவே, இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் நடக்கின்ற குத்து வெட்டுகளும் முரண்களும் குழிபறிப்புகளுமாகும். இதுவே, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கை தொடர்பிலும் அரசியல் தீர்வு முயற்சிகளிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற சறுக்கல்களாகும். மாகாணசபைக்குள் நடக்கின்ற அடிதடிகளும் ஒத்துழையாமை இயக்கங்களும் இதன் விளைவுகளே.   

இந்தளவுக்கு உள் முரண்பாடுகளில்லை என்றாலும், பகட்டு அரசியலைத் தவிர, அர்ப்பணிப்பு அரசியலையோ, செயற்பாட்டு அரசியலையோ கொண்டிருக்காத நிலையிலேயே, தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்றவையும் உள்ளன.   

இதேவேளை, ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்ட அரசியலிலும் ஏராளம் தவறுகளும் பலவீனங்களும் இருந்தன என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அவற்றின் பலவீனமே, இன்றைய நிலைக்குக் காரணமாகும். ஆனால், என்னதான் தவறுகளையும் பலவீனங்களையும் கொண்டிருந்தாலும் விடுதலைப் போராட்ட அரசியலில் ஈடுபட்ட போராளிகளிடம் தம்மை அர்ப்பணிக்கின்ற, மக்களுக்காகப் பாடுபடுகின்ற, தாம் கூறிக்கொண்ட கொள்கைக்காகவும் இலட்சியத்துக்காகவும் தியாகம் செய்கின்ற இயல்பும் உண்மைத் தன்மையும் இருந்தது. அது அவர்களுடைய நேர்மையாகும்.   

அது அந்த அரசியலுக்கு மதிப்பையும் பலத்தையும் கொடுத்தது. அதனால்தான் அந்த அரசியலுக்கு இன்னும் பெறுமானம் இருக்கிறது. இன்றைய அரசியல், எத்தகைய தெளிவும் உறுதியுமில்லாமல் தளம்பிக் கொண்டிருப்பதற்குக் காரணம், அகத்திலும் புறத்திலும் எத்தகைய தெளிவும் உறுதிப்பாடும் இல்லை என்பதுவே. இதனால்தான், 2009 க்குப் பின்னர், தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் தொடர்பாக முன்னேற்றங்களைக் காண முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்ப் பிரதேசங்களின் வளர்ச்சியும் சரி, தமிழ் மக்களுடைய வாழ்க்கையும் சரி, எத்தகைய வளர்ச்சியையும் பெற முடியாமல் தேங்கிப்போயுள்ளது. இந்தத் தேக்கத்துக்கான காரணத்தை, வீழ்ச்சியை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கும் இந்த அரசியலுக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டுமாக இருந்தால், இந்த இடத்தில் நாம் ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டும்.   

 நவீன இலங்கையின் அரசியல் வரலாற்றில், தமிழ் அரசியல் தலைமைகள், ஒடுக்குமுறை செய்யும் அரசையும் சிங்களப் பேரினவாதத்தையும் எதிர்த்து நிற்கின்ற ஒரு போக்கைப் பின்பற்றி வந்தன. இதனுடைய பிரதான நோக்கம், ஒடுக்கும் தரப்புக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதாகும். இதையே தமது அரசியல் வழிமுறையில், பிரதான உபாயமாகக் கொண்டிருந்தன. இதுவே, தமிழ் அரசியலின் அடையாளமாகவும் பலமாகவும் காணப்பட்டது; கருதப்பட்டது.   

ஆனால், இதற்குள்ளிருந்த எல்லைமீறிய எதிர்ப்பும் விட்டுக்கொடாத போக்கும், கிடைத்த வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் தவற விட்டதும் உண்டு. அது அரசியல் தந்திரோபாயங்களைக் கையாளத் தவறிய விளைவுகளாயின. ஆனாலும், தமிழ் அரசியலை முன்கொண்டு சென்றதில் இந்த எதிர்ப்பரசியலுக்கு ஒரு பெரும் பங்குண்டு.   

ஆனால், இன்றைய அரசியலின் போக்கோ, இதற்கு முற்றிலும் மாறானதாக மாறி விட்டது. இப்பொழுது தலைமைப் பொறுப்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, அரசையும் சிங்களக் காப்பாற்றுவதற்காகவே பாடுபடுகிறது. இதற்காக, அது தமிழ் மக்களை எதிர்க்கவும் துணிந்து விட்டது என்று கூறுமளவுக்கு தன்னுடைய செயற்பாடுகளை மாற்றியமைத்துள்ளது. இது தனிப்பட்ட ரீதியில், அந்தக் கட்சியின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டல்ல. 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, கடந்த தேர்தல்களின்போது, தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் செய்த பிரகடனங்களையும் அதன் தலைமைப்பீடம், இன்று சொல்லிக் கொண்டிருக்கும் வார்த்தைகளையும் மதிப்பீடு செய்வதன் மூலம் வெளிப்படும் உண்மை.

இந்த நிலை ஏன் வந்தது? இது ஒன்றும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளைக் கொண்ட ஆழ்ந்த இரகசியமல்ல. மேல்நிலைச் சிந்தனையாளர்களின் கூட்டின் வெளிப்பாடே இது; கொழும்பு மைய அரசியல் சிந்தனையின் விளைவு இது. இது தமிழ் அரசியல் வரலாற்றுக்குப் புதியதும் அல்ல. தமிழரசுக் கட்சியின் தந்தை என வர்ணிக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் காலத்திலேயே இந்தப் போக்குக் காணப்பட்டது.   

அன்றைய தமிழ் அரசியல் தலைமைகளும் கொழும்பு மைய அரசியலையே கொண்டிருந்தன. ஆகவே, கொழும்பு மையத்தில் இருந்து செயற்படுவதற்குத் தோதாக அவை சிந்திக்க முற்படுகின்றன. அவ்வளவுதான்!   

ஆனால், இவற்றுக்கான அரசியல் அங்கிகாரமும் ஆதரவும் தமிழ் மக்களிடத்திலிருந்து கிடைக்க வேண்டும் என்பதால், இவை வடக்குக் கிழக்கின் அரசியல் உணர்வைப் பேசு பொருளாக்கும். இது தேர்தலுக்கு மட்டுமே. ஆகவே வாக்களித்த மக்களுக்கு விசுவாசமா? வாரி வழங்கும் அரசாங்கத்துக்கு விசுவாசமா? என்ற விவாதங்கள் எல்லாம் பயனற்றவை.

இந்த அரசியல் வரலாற்றை விளங்கிக் கொண்டு செயற்படுவதே எதிர்கால அரசியலுக்கு அவசியமானது. இல்லையென்றால், குண்டுச் சட்டிக்குள்தான் தமிழ் அரசியல் குதிரைகள் ஓடிக் கொண்டிருக்கும்.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/குண்டுச்-சட்டிக்குள்-ஓடும்-தமிழ்-அரசியல்-குதிரைகள்/91-205580

Categories: merge-rss

பேசாமல் சென்ற ஜனாதிபதி

ஊர்ப்புதினம் - Mon, 16/10/2017 - 04:09
பேசாமல் சென்ற ஜனாதிபதி
 

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து, அலரி மாளிகையில் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்த தேசிய தீபாவளிப் பண்டிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை இடம்பெறுமென, பண்டிகையின் நிகழ்ச்சிநிரலில் இடம்பெற்றிருந்தது.  

நேற்றைய நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்த போதிலும், தனது பேச்சை, ஜனாதிபதி தவிர்த்துக்கொண்டார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பேசாமல்-சென்ற-ஜனாதிபதி/175-205593

Categories: merge-rss, yarl-category

‘வவுனியா என்பது தமிழீழமா?’

ஊர்ப்புதினம் - Mon, 16/10/2017 - 04:07
‘வவுனியா என்பது தமிழீழமா?’
 

image_5832349bbe.jpgவவுனியா நீதிமன்ற வழக்குகளை, அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றியமையானது, ஒரு மாபெரும் அனர்த்தத்துக்கும் அழிவுக்கும் சமமானதாகும் என, அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.  

கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

“வவுனியா என்பது தமிழீழமா, அநுராதபுரம் என்பது தென்பகுதியின் நிஜ பூமியா என்ற கேள்வியைக் கேட்க வைக்கிறது. காரணம், எவ்வித நீதி நியாயமின்றி, வவுனியா நீதிமன்ற வழக்குகளை, அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றியமையானது, ஆரோக்கியமான செயல் அல்ல.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வவுனியா-என்பது-தமிழீழமா/175-205606

Categories: merge-rss, yarl-category

1992ல் ஒலிப்பிக் போட்டியில் நடந்த இதயம் தொடும் நிகழ்வு இது!

1992ல் ஒலிப்பிக் போட்டியில் நடந்த இதயம் தொடும் நிகழ்வு இது! 

 

 

Categories: merge-rss

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் ஸ்ரீபவன்?

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 20:40
 வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் ஸ்ரீபவன்?

 

 

 

Unknown.jpg
 
வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
வடமாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நிலவி வரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக, அடுத்த தேர்தலில் ஸ்ரீபவனை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அண்மையில் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
 
தேர்தலில் போட்டியிடுமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு ஸ்ரீபவன் இதுவரையில் தமது உறுதியான பதில் எதனையும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
 
தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைத்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக குறித்த ஊடகத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
 
பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் ஸ்ரீபவன் தற்போது சில தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Categories: merge-rss, yarl-category

மட்டக்களப்பு புதிய அரச அதிபராக மா.உதயகுமார்?

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 20:36

 

மட்டக்களப்பு புதிய அரச அதிபராக மா.உதயகுமார்?
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபர் நியமனத்திற்கு இதுவரை இருந்துவந்த இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது மட்டுநகர் மாநகர ஆணையாளராக ஏற்கனவே கடமையாற்றி கொழும்புக்கு இடமாற்றம் பெற்ற மா.உதயகுமார் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக நியமனம் பெற்று விரைவில் கடமையை பொறுப்பேற்கவுள்ளதாக நம்பகமாக அறியமுடிகிறது. ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிய திருமதி சாள்ஷ் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகமாக இடமாற்றலாகி கடந்ந 01/10/2017,ம் திகதி சென்றபின் முல்லைத்தீவு அரச அதிபரான திருமதி ரூபாவதி கேதீஷ்வரனை மட்டக்களப்பு அரச அதிபராக நியமிக்க சில அரசியல் வாதிகள் முயற்சியில் இறங்கியபோதும் இது கைகூடவில்லை. இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பெயரை சிபார்சு செய்திருந்த்தாகவும் பிறிதொரு அரசியல்வாதி கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளராக கடமை புரியும் ஒருவரின் பெயரை சிபார்சு செய்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் இந்த நான்கு அதிகாரிகளுக்கும் கடந்தவாரம் நேர்முகப்பரீட்சை பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நடத்தியிருந்தார் இதேவேளை திருபோணமலை அரச அதிபர் புஷ்பகுமார பதில்கடமைக்காக மட்டக்களப்பு அரச அதிபராக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட நிலையில் சுமார் இரண்டு வாரங்களாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் எவருமே இல்லாத மாவட்டமாக மட்டக்களப்பு காணப்பட்டது.

தற்போது தமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் சிபார்சு செய்திருந்த மூன்று அதிகாரிகளில்ஒருவரான மா.உதயகுமார் நியமிக்கப்படவுள்ளதாகவும் பெரும்பாலும் எதிர்வரும் 16/10/2017ல் உத்தியோகபூர்வமாக மா.உதயகுமார் மட்டக்களப்பு அரச அதிகராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
10.jpg
 
Categories: merge-rss, yarl-category

வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற மென்சஸ்டர் யுனைடட், லிவர்பூல் போட்டி

வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற மென்சஸ்டர் யுனைடட், லிவர்பூல் போட்டி
Manchester-United-vs-Liverpool-696x464.jpg

லிவர்பூல் அரங்கில் நடைபெற்ற மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியை லீவர்பூல் அணி வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தது. இரு அணிகளதும் முக்கிய வீரர்கள் இப்போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லிவர்பூல் கால்பந்து கழகத்தின் அரங்கமான அன்பீய்ல்ட் (Anfield) அரங்கில் நடைபெற்ற மென்சஸ்டர் யுனைடட் மற்றும் லிவர்பூல் கழகங்களிற்கிடையிலான போட்டியானது இரு அணியினதும் பாரிய போராட்டத்தின் பின் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. மென்சஸ்டர் யுனைடட் அணியின் மருவானே பெய்லானீ (Maruane Felliani) பெவ்ல் போக்பா (Paul Pogba) மற்றும் லிவர்பூல் அணியின் ஸடீயோ மனேய் (Sadio Mane) ஆகியோர் போட்டித்தடை மற்றும் உபாதை காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை.

போட்டியை ஆரம்பித்த லிவர்பூல் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள பலம் மிக்க மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு இறுதி நிமிடம் வரை சவால்விடுத்தது. அதற்கேற்றாற்போல் லிவர்பூல் அணியின் சிறந்த பந்து பரிமாற்றங்களை தடுப்பதற்காக போட்டியின் அதிகமான நேரம் மென்சஸ்டர் யுனைடட் அணி பந்தை தடுத்தாடும் பணியில் ஈடுபட்டது.

போட்டி ஆரம்பமாகி ஆறு நிமிடங்கள் கடந்ததன் பின்னர் ஸ்மேலீங் மூலம் லிவர்பூல் அணி தனது முதல் முயற்சியை மேற்கொண்டது. எனினும் அம்முயற்சியானது மென்சஸ்டர் யுனைடட் அணியின் கோல்காப்பாளர் மூலம் இலகுவாக கைப்பற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போட்டியின் 13 ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் மூலம் மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு மீண்டும் சவால் விடுக்கப்பட்டது. எனினும் மென்சஸ்டர் யுனைடட் அணியால் தனது முதல் முயற்சியை 23 ஆவது நிமிடத்தில் மேற்கோள்ள முடிந்தது. என்றாலும் அதனை வெற்றிகரமான முயற்சியாக குறிப்பிட முடியாது.

 

அதனைத் தொடர்ந்து மீண்டும் போட்டியின் 30 ஆவது நிமிடத்தில் எதிரணியின் பெனால்டி எல்லைக்கு அருகாமையில் மத்தியகளத்திலிருந்து மெடிக் (Matic) மூலம் லிவர்பூல் அணியின் கோலை நோக்கி உதையப்பட்ட பந்தானது, கோல் கம்பங்களையும் தாண்டிச் சென்றது.

போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணி போட்டியில் முன்னிலை பெற எடுக்கப்பட்ட முயற்சியானது மென்சஸ்டர் யுனைடட் அணியின் கோல் காப்பாளரின் சிறப்பாட்டத்தால் தடுக்கப்பட்டது. பெனால்டி எல்லையின் இடது பக்கத்திலிருந்து பெர்மீனோ (Firmino) மூலம் பின்கள வீரர்களையும் தாண்டி தரை வழியாக உள்ளனுப்பப்பட்ட பந்தை லிவர்பூல் அணியின் பின்கள வீரர் மெடிப் (Matip) உள்ளனுப்ப முயன்றபோது மென்சஸ்டர் யுனைடட் அணியின் கோல் காப்பாளர் தனது காலால் தடுத்தார்.

எதிரணியின் தொடாரான சவால்களுக்கு பதிலாக போட்டியின் 42 ஆவது நிமிடத்தில் லுகாகு மற்றும் மெடிக்கிற்கு இடையிலான சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின்னர் லுகாகு மூலம் மேற்கோள்ளப்பட்ட முயற்சியே முதற்பாதியின் இறுதி முயற்சியாக அமைந்தது. சிறந்த பந்து பரிமாற்றத்தின் பெனால்டி எல்லையின் இடதுபக்கத்தின் மத்தியகளத்திலிருந்து வேகமாக லுகாகு மூலம் உதையப்பட்ட பந்தை லிவர்பூல் அணியின் கோல்காப்பாளர் சிறந்த முறையில் தடுத்தார். அத்துடன் முதற்பாதி நிறைவுற்றது.

போட்டியின் இரண்டாம் பாதியில் அதிகமான முயற்சிகள் லிவர்பூல் அணி மூலமே மேற்கொள்ளப்பட்டது. எனினும் மென்சஸ்டர் யுனைடட் அணி மூலம் இரண்டாம் பாதியில் வெற்றிகரமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாதியின் பல முயற்சிகள் லிவர்பூல் அணி மூலம் மேற்கொள்ளப்பட்ட போதும், வெற்றிகரமான முயற்சிகளாக போட்டியின் 55 மற்றும் 70 ஆவது நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைக் குறிப்பிடலாம்.

55 ஆவது நிமிடத்தில் கோமெஸ் (Gomez) மூலம் மத்தியகளத்தின் வலது பக்கத்திலிருந்து பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தை கேன் (Can) தனது காலால் தட்டி கோலாக்க முயன்றார் எனினும் பந்தானது கோல் கம்பங்களிற்கு மேலால் சென்றது.

77 ஆவது நிமிடத்தில் எடுக்கப்பட்ட முயற்சியின் போது கெடீய்னோ (Coutinho) மூலம் பெனால்டி பெட்டியின் இடது பக்கத்திலிருந்து ஸலாஹ்வை (Salah) நோக்கி உள்ளனுப்பட்ட பந்தை, ஸலாஹ் தனது தலையால் முட்டி கோலாக்க முயன்றார். எனினும் பந்தானது கோல் கம்பங்களிற்கு சற்று மேலால் சென்றது.

போட்டியின் இரு பாதியிலும் அதிகமான வாய்ப்பைப் பெற்ற லிவர்பூல் அணியால் மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு எதிராக ஓரு கோலையேனும் பெற முடியாமல் போனது சற்று ஏமாற்றமாகவே அமைந்தது. எனினும் போட்டியின் இறுதிவரை ரசிகர்களின் ஆதரவு லிவர்பூல் அணிக்கு கிடைத்த வண்ணமே இருந்தது.

http://www.thepapare.com

Categories: merge-rss

ஸ்லீப்பர் செல்' தீபாவளி!

கதை கதையாம் - Sun, 15/10/2017 - 20:06
ஸ்லீப்பர் செல்' தீபாவளி!
 
 
 
E_1507806278.jpeg
 

விடிந்தால் தீபாவளி; கையில், மொபைல் போனுடன், ஆழ்ந்த, 'ஸ்லீப்'பில் இருந்த தாண்டவராயனை, அதிரடியாக எழுப்பினாள், மனைவி அலமேலு...
''உங்களுக்கென்ன பெரிய, 'ஸ்லீப்பர் செல்'லுன்னு நெனைப்பா... கையில செல்லை பிடிச்சு, குறட்டை விட்டு தூங்கினுக்கிறீங்க... ராத்திரி, பிரேக்கிங் நியூஸ்ல, அந்த ரிசாட்காரங்களுக்கு ஒரு ஆளு குறையுதுன்னு சொன்னாங்கல்ல... பொழைக்கத் தெரிஞ்ச ஜன்மமாயிருந்தா, எப்படா விடியும்ன்னு தூங்காம காத்திருந்து, விடிஞ்சதும் ஓடிப் போய் ஆதரவு கொடுத்து, தலைவர் தர்றத வாங்கிக்கினு வரும்...'' என்று அர்ச்சித்தவள், ''சட்டுபுட்டுன்னு தலைக்கு ஊத்துகினு, தீபாவளி பலகாரம் சாப்பிட்டுட்டு, ரிசார்ட்டுக்கு ஓடப்பாருங்க. உங்களுக்கு முன் பக்கிரிசாமி போயிடப் போறாரு,'' ஊசி பட்டாசாக அலமேலு வெடிக்க, ராக்கெட் வேகத்தில் எழுந்தார், தாண்டவராயன்.


தனி ஒரு ஆசாமியாய் தானுண்டு, தன் கட்சி உண்டு என்று, தாண்டவராயன் சமூகத் தொண்டு புரிய வந்து, ஏழு ஆண்டுகளாகிறது. வேறு ஒரு பலமான கட்சி ஒதுக்கிய தொகுதியில், தனக்கென ஒரு சின்னம் வாங்கி வேஸ்ட் செய்யாமல், அந்த கட்சி சின்னத்திலேயே போட்டியிட்டதால், அரசியல் அந்தஸ்தை பெற்றிருந்தார்.
ஆனாலும், 'தொகுதி பக்கம் தலை வைத்து படுத்தாயா...' என்று யாரும் கேட்டுவிடாத வகையில், எந்நேரமும், எல்லார் பார்வையில் படும்படி சுற்றித் திரிந்தும், அவருடைய சுற்றங்களும், நட்புகளும், அவரை அரசியல்வாதியாக அங்கீகரிக்கவில்லை.


இது, அவரை விட, அவர் மனைவி அலுமேலுவை தான், பெரிதும் கவலைக்குள்ளாக்கியிருந்தது. அவளின் இந்த விசாரத்தைப் போக்கும் மருந்தாக, 'ரிசார்ட் அரசியல்' கலாசாரம் உருவெடுத்திருந்தது.
எதிர் கட்சிகளும், எதிர் அணியும் சமாதானம் ஆகிவிடுவரோ என்ற நிலையில், தங்களுக்கு பிடித்த சில தொகுதி தொண்டர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மாதக்கணக்கில் ஓய்வும், உற்சாகமும் அளிக்கும், பொதுநல தொண்டாக, 'ரிசார்ட் அரசியலை' செய்து கொண்டிருந்தனர், சில தலைவர்கள்.


இப்படி ஒரு ஓய்வும், உற்சாகமும், தங்களுக்கு கிட்டவில்லையே என்று ஏங்கியவர்களில் தாண்டவராயனும் ஒருவர். ஆனால், இயல்பாகவே அவரிடமிருந்த அடக்க குணமும், அரசியலுக்கு தேவையான ஆர்பாட்டம், அலட்டலும் இல்லாததால், 'ஸ்லீப்பர் செல்' என்ற குறைந்தபட்ச அந்தஸ்து கூட, அவருக்கு கிட்டவில்லை.
இந்நிலையில், 'ரிசார்ட்' அரசியல் செய்யும் கட்சித் தலைவர், நேற்று இரவு, 'டிவி'யில் தோன்றி, பேட்டி அளித்தார்...
'அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்; ஆட்சியை காப்பாற்றவும், எங்களோடு ரிசார்ட்டில் தீபாவளி கொண்டாடவும், ஒரே ஒருவர் தேவைப்படுகிறார். நாளை, எங்களோடு கை கோர்க்க வரும் அந்த நபருக்கு, தீபாவளி சிறப்பு பரிசாக, பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. யார் முதலில் வருகிறாரோ, அவருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை நழுவ விட வேண்டாம்...' என்று அறிவித்தார்.
அதைப் பார்த்த சம்பந்தப்பட்ட அனைவரின் வாயிலும், தீபாவளி அல்வா ஊறியது. அலமேலுவுக்கு, தன் கணவரை, 'ஸ்லீப்பர் செல்' ஆக்கிவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.அலமேலுவுக்கு பயந்து, 'மடமட'வென்று கங்கா ஸ்நானம், இத்யாதி சமாசாரங்களை முடித்தாலும், ரிசார்ட்டுக்கு போவதில் தாண்டவராயனுக்கு கொஞ்சம் பயமாய் இருந்தது. அதனால், சட்டென்று கிளம்பாமல், தயங்கி நின்றார்.
''ஏன் மிரண்டு போய் நிக்குறீங்க... உங்களுக்கு முன் பக்கிரிசாமி போயிடப்போறாரு... நம்ப நல்ல நேரம், இப்போ, அவங்க, நம்ம ஊர் ரிசார்ட்டுல இருக்காங்க. சீக்கிரம் கிளம்புங்க,'' என்று அவசரப்படுத்தினாள், அலமேலு.
''அலமேலு... நான் கொஞ்சம் மதிப்பா அரசியல்ல காலம் தள்ளிட்டிருக்கேன்; இப்போ, நான் ரிசார்ட் போறத யாராவது பாத்தா, கேவலமா நினைக்க மாட்டாங்களா...'' என்று கெஞ்சும் குரலில் கேட்டார்.


''யோவ்... என்ன பெரிசா மானம், அவமானம்ன்னு பேசுறே... பக்கிரிசாமி பொண்டாட்டி, என் கண் முன், ஆடி கார்ல வந்து இறங்கி, நகையும், நட்டுமா அள்ளிட்டு போறத பாத்தா, எனக்கும் தான் உன் பொண்டாட்டின்னு சொல்ல, மானம் போவுது. நேத்து அரசியலுக்கு வந்தவன் கூட, நாலு தலைமுறைக்கு சொத்து சேத்து வச்சுருக்கான். உனக்கு ஒரு துப்பு இல்ல; இப்போ, ஒரு, 'சான்ஸ்' வந்திருக்கு; அதையும் வுட்டுட்டு நிக்கப்போறயா...'' என்று அணுகுண்டு பட்டாசாக வெடித்தாள், அலமேலு.
''இல்ல... விடிஞ்சு போச்சு; யாராவது என்னை பாத்துடப் போறாங்களேன்னு தான்...'' என்று, பம்மினார்.
சில நொடிகள் யோசித்தவள், ''இந்த முகரக்கட்டைய யாரும் பாக்கக்கூடாதுன்னு தானே பயப்படுறே... இரு வர்றேன்...'' என்று சொல்லி, வேகமாக உள்ளே சென்றாள்.


பின், அதே வேகத்தில் திரும்பியவளின் கையில், கிண்ணத்தில், தீபாவளி லேகியம் இருந்தது.
''அலமேலு... நான், ஏற்கனவே லேகியம் சாப்பிட்டாச்சு...''என்றார், பரிதாபமாக!
அதை, காதில் வாங்காமல், லேகியத்தை கையில் வழித்தெடுத்தாள், அலமேலு.
''லேகியம் சாப்பிட்டா, தைரியம் வரும்ன்னு நேத்து,'டிவி'யில், 'தீபாவளி தின்பண்டம்' நிகழ்ச்சியில், சமையல் மாமி சொன்னத கேட்டு, இத்தனை லேகியத்தை எடுத்து உருட்டறயே... இவ்வளவையும் தின்னா, போற வழியில வயிறு கடமுடான்னு பேஜாராயிடும்...'' என்று, கூறி, ஒரு அடி பின்னால் நகர்ந்தார், தாண்டவராயன்.
''அடச்சீ... இது, நீ துண்றதுக்கு இல்ல... உன் மூஞ்சிய காட்டு,'' என்று கூறி, சுவற்றில் பசையை அப்புவது போல், தாண்டவராயனின் முகத்தில், லேகியத்தை அப்பினாள்.


இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராததால், ''எரியுதே... எரியுதே...'' என்று கத்தினார்.
''சும்மா கத்தாத... உன்னை மாதிரி அரசியல்ல நுழைஞ்சவ னெல்லாம், ஊர் பூரா சொத்து சேர்த்து வைச்சிருக்கிறதைப் பாத்தா, எனக்குக் கூடத் தான் வயிறு எரியுது; கொஞ்ச நேரமானா எரிச்சல் நின்னுடும். இப்ப, உன்னை எவனாலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே, ரிசார்ட் போய், தலைவரை பாக்கறதுக்கு முன், மறக்காம கழுவிடு...''
போருக்கு செல்லும் கணவருக்கு, புறநானுாற்று வீரமங்கை, வீர திலகம் இட்டு அனுப்புவது போல், தாண்டவராயனுக்கு லேகிய பூச்சு பூசி அனுப்பினாள்,
அலமேலு.

நமுத்துப்போன பட்டாசு திரி மாதிரி, மெதுவாக ரிசார்ட்டை நோக்கி காரில் பயணித்தவரின் மனதில், அதுவரை, அவருக்கே தெரியாமல் பதுங்கியிருந்த அல்ப ஆசைகள், 'ஸ்லீப்பர் செல்'லாகத் தலைக்காட்ட துவங்கின. 'வருங்கால அரசியலில், அந்தஸ்தான இடம் கிடைப்பது, ஒரு பக்கமிருந்தாலும், அலமேலுவின் டார்ச்சரிலிருந்து தப்பிக்க, தலைவர் தரப்போகும் தீபாவளி சிறப்பு பரிசு தான், இப்போதைக்கு தேவை. ஊரெல்லாம் வதந்தி பேசுவது போல், அது, ஒரு அரை கிலோ தங்கமாக இருந்தால் கூட போதும்; அலமேலுவின் நச்சு இருக்காது...' என்று எண்ணியதும், அவருக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது.

லேகியம் பூசிய முகத்துடன், ரிசார்ட்டில் நுழைந்தவர், ஆர்வக் கோளாறால், அலமேலு சொன்னதை மறந்து, முகத்தை கழுவாமல் தலைவரின் அறைக்கு ஓடினார்.
முதலில் வரப்போகும், 'ஸ்லீப்பர் செல்' யாராக இருக்கும் என்ற ஆவலுடன் உட்கார்ந்திருந்த தலைவரை நெருங்கி, தான் கொண்டு போன சால்வையை போர்த்த முற்பட்டார்.
''இதெல்லாம் எதுக்கு தம்பி... நாமதான், இத்தனை நாளா, ஒண்ணுக்குள்ள ஒண்ணா இங்கேயே கிடக்கோமே... ஏதோ புதுசா வந்தவர் போல, சால்வையெல்லாம் போத்த வர்றீங்க... நான் ஒரே ஒரு ஆசாமிக்காக காத்துட்டு இருக்கேன்; தயவு செஞ்சி, 'டிஸ்டர்ப்' செய்யாம, போய் அந்த பியூட்டி பார்லர்ல உட்காருங்க...'' என்று தலைவர் சொன்னதும், ''தலைவர் தான் சொல்றாரு இல்ல... வாங்க,'' என்று அடியாட்கள் இரண்டு பேர், அவரை அலேக்காக தூக்கி, அங்கிருந்த பெரிய பார்லரில் உள்ளே தள்ளி, கதவை சாத்தினர்.


அங்கே, நூற்றுக்கும் அதிகமானோர், முகத்தில் கருப்பு களிம்பை பூசியபடி, 'டிவி' பார்ப்பதும், பேசுவதுமாக உட்கார்ந்திருந்தனர். அவர்களை யார், எவர் என்று அடையாளம் காண முடியவில்லை. அதேபோன்று, அலமேலு இட்டு அனுப்பிய லேகியம், தாண்டவராயனையும், அவர்களுக்கு இனம் காட்ட முடியாதபடி செய்திருந்தது.
'திருதிரு'வென்று தாண்டவராயன் முழிப்பதை யாரும் கண்டுகொள்ளாமல், 'டிவி'யில் லைவ்வாக காட்டிய எதையோ ஆவலோடு பார்த்தபடி இருந்தனர்.
அடுத்த சில நொடிகளில், தடாலென்று, 'வெற்றி... நம் அணிக்கு மாபெரும் வெற்றி...' என்று கூவியபடியே, எல்லார் வாயிலும் லட்டை திணித்தனர், சிலர்.
சுதாரித்து, 'டிவி' யை பார்த்த தாண்டவராயன் திடுக்கிட்டார்.
பக்கிரிசாமி மிக பவ்யமாக, தலைவர் அறையில் நுழைவதையும், தலைவருக்கு, சால்வை போத்துவதையும், அவரை, தலைவர் ஆலிங்கனம் செய்வதையும், 'டிவி' திரை, பிரேக்கிங் நியூஸ் மியூசிக்குடன், திரும்பத் திரும்ப காட்டியது. அதைப் பார்த்த தாண்டவராயனுக்கு தலை சுற்றியது.


''ஆட்சியைக் காப்பாற்ற தேவையான ஒரே ஒருவரும், தீபாவளி பரிசாக வந்து விட்டார். இனி, யார் வந்தாலும், வராவிட்டாலும், கவலையில்லை. ஆட்சியை காப்பாற்ற வந்த தங்கமகனுக்கு, எத்தனை தங்கம் கொடுத்தாலும் தகும்,'' என்று, பூடகமாக தலைவரின் பாராட்டுகள் பாதாளம் வரை பாய்ந்தன.
எப்படியும், இந்த தீபாவளி திருநாளில், யாரோ ஒரு, 'ஸ்லீப்பர் செல்' தங்கள் அணிக்கு வந்து சேர்ந்து விடுவர் என்ற நம்பிக்கையோடு, அப்படி சேர்ந்தால், அன்றே வெற்றி விழா கொண்டாட திட்டம் போட்டிருந்தார், தலைவர்.


அதன் காரணமாக, மாதக்கணக்காக ரிசார்ட்டில் இருக்கும், 'ஸ்லீப்பர் செல்'களின் முகம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, எல்லாருக்கும் பேஷியல் செய்துவிட நினைத்தது தலைவரின் பிசகல்ல. அதேநேரம், பேசியல் களிம்புகளோடு அனைவரும் இருக்கும் போது, தாண்டவராயனும் லேகிய முகத்துடன், ரிசார்ட் வந்தது தான், விதியின் விளையாட்டு!


நூறோடு நூற்று ஒன்றாக, தாண்டவராயனை இந்தக்கூட்டத்தில் சேர்த்து விட்டு, பக்கிரிசாமி பரிசை தட்டிச் சென்றதும், விதியின் செயலே!
இந்நிகழ்ச்சியை, வீட்டில், 'லைவ்'வாக பார்த்துக் கொண்டிருந்த அலமேலு, ஒன்றும் புரியாமல், மயங்கி விழுந்ததும், விதி செய்த சதியே!

http://www.dinamalar.com

Categories: merge-rss

இறுதி நேரத்தில் பெறப்பட்ட கோலினால் போட்டியை சமநிலை செய்த பார்சிலோனா

இறுதி நேரத்தில் பெறப்பட்ட கோலினால் போட்டியை சமநிலை செய்த பார்சிலோனா
 
861328558-696x464.jpg

அத்லடிகோ மட்றிட் மற்றும் பார்சிலோனா கழகங்கள் மோதிய லாலிகா சுற்றுப்போட்டியின் போட்டியானது, பார்சிலோனா அணியினால் இறுதித் தருவாயில் பெறப்பட்ட கோலின் மூலம் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. முதல் பாதி அட்லடிகோ அணி சார்பாகவும், இரண்டாம் பாதி பார்சிலோனா அணி சார்பாகவும் அமைந்திருந்தது.

நேற்றைய தினம் (14) நடைபெற்ற போட்டிகளில் அட்லடிகோ மட்றிட் கால்பந்து கழகத்திற்கும் பிரபல பார்சிலோனா கால்பந்து கழகத்திற்கும் இடையிலான போட்டி பார்வையாளர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற போட்டியாக அமைந்தது. அத்துடன் பார்சிலோனா அணியானது அட்லடிகோ மட்றிட் அணியின் புதிய அரங்கமான மெட்ரோபோலீனோ (Metropolino) அரங்கில்  விளையாடிய முதல் போட்டி இதுவாகும்.

போட்டியை ஆரம்பித்த பார்சிலோனா அணி முதல் 30 செக்கன்களிலே அட்லடிகோ மட்றிட் அணியின் பெனால்டி எல்லையிலிருந்து மெஸ்ஸி மூலம் முதல் முயற்சியை மேற்கொண்டது. முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது மெஸ்ஸி மற்றும் லுயிஸ் ஸீவாரேஸ் (Luis Suarez) ஆகிய பார்சிலோனாவின் முன்கள வீரர்களுக்கு இடையில் சிறந்த பந்துப் பரிமாற்றம் நடைபெற்றதை அவதானிக்க முடிந்தது.

அட்லடிகோ மட்றிட் அணியின் முன்கள வீரரான ஏஞ்சல் குரேயா (Angel Correa), பார்சிலோனா அணியின் பின்கள வீரர்களால் விடப்பட்ட தவறினால் கிடைக்கப் பெற்ற பந்தின் மூலம் முதல் முயற்சியை போட்டியின் 4 ஆவது நிமிடத்தில் மேற்கொள்ள முயன்ற போதும், மீண்டும் விரைவாக செயற்பட்ட பின்கள வீரர்களால் பந்தானது  தடுக்கப்பட்டது.

எனினும் 7 ஆவது நிமிடத்தில் கிரிஸ்மன் மூலம் பெனால்டி எல்லையின் வலது பக்கத்திலிருந்து வெற்றிகரமான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் கிரிஸ்மன் மூலம் வேகமாக உதையப்பட்ட பந்தை பார்சிலோனா கோல்காப்பாளர் சிறப்பாக தடுத்தாடினார். அத்துடன் 9 ஆவது நிமிடத்திலும் கிரிஸ்மன் மூலம் பல பின்கள வீரர்களையும் தாண்டி கவர்ச்சிகரமான ஓரு முயற்சி மீண்டும்  மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரு அணிகளும் நீண்ட நேரமாக பந்து பரிமாற்றத்தில் ஈடுபட்டனர். என்றாலும் போட்டியின் 20 ஆவது நிமிடத்தில் சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின் மத்தியகளத்திலிருந்து கராஸ்கோ (Carassco) மூலம் இடது பக்க பெனால்டி எல்லைக்கு அருகில் வழங்கப்பட்ட பந்தை ஸோல் நீயெக் (Saul Niguel) சிறப்பாக பெற்று, பந்தை கோல் கம்பத்தின் வலது பக்க மூலையினால் வேகமாக உதைந்து கோலினுள் உட்செலுத்தினார். இதன் மூலம் அட்லடிகோ மட்றிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

முதல் கோல் பெறப்பட்டதன் பின்னர் 42 ஆவது நிமிடம் வரை எந்தவொரு வெற்றிகரமான முயற்சியும் இரு அணினளாலும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் 42 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி மூலம் அட்லடிகோ அணியின் 4 வீரர்களைத் தாண்டிச் சென்று கோலைப் பெறுவதற்கான சிறந்ததொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் இறுதித் தருவாயில் அம்முயற்சியும் தடுக்கப்பட்டது. இதுவே முதல் பாதியின் இறுதி முயற்சியாகவும் அமைந்தது.

முதல் பாதி: அட்லடிகோ மட்றிட் 1 – 0 பார்சிலோனா

இரண்டாம் பாதியை ஆரம்பித்த அட்லடிகோ மட்றிட் அணி 52 ஆவது நிமிடத்தில் கிரிஸ்மன் மூலம் இரண்டாவது கோலை பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கிரிஸ்மன் மூலம் இடதுபக்க பெனால்டி எல்லையிலிருந்து உதையப்பட்ட பந்தானது கோல் கம்பங்களிற்கு சற்று மேலால் சென்றது.

அதனைத் தொடர்ந்து 3 நிமிடங்களின் பின்னர் ஸுவாரேஸ் மூலம் மத்தியகளத்தின் வலதுபக்க மூலையிலிருந்து கோல்கம்பத்தின் இடதுபக்க மூலையை நோக்கி உதையப்பட்ட பந்தை கோல் காப்பாளர் பாய்ந்து தட்டி விட்டார். மீண்டும்  57 ஆவது நிமிடத்தில் மத்தியகளத்தில் இருந்து பெனால்டி  எல்லைக்கு அருகில் பெறப்பட்ட ப்ரீ கிக் வாயப்பை பெற்ற மெஸ்ஸி, கோலின் வலதுபக்க மூலையால் பந்தை உள்ளனுப்ப முயன்றார். எனினும் பந்தானது கம்பத்தில் பட்டு எல்லைக் கோட்டிற்கு வெளியால் சென்றது.

தொடராக மீண்டும் போட்டியின் 65 ஆவது நிமிடத்தில் சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின் ஸுவாரேஸ் மூலம் பெனால்டி எல்லையின் இடது பக்கத்திற்கு வழங்கப்பட்ட பந்தை மெஸ்ஸி பெற்று கோலை நோக்கி உதைந்த போதும், பந்தானது கோல் காப்பாளர் மூலம் தடுக்கப்பட்டது. 5 நிமடங்களின் பின்னர் மீண்டும் ஒரு முயற்சி மெஸ்ஸி மூலம் மேற்கொள்ளப்பட்டது.

அதிகமாக பார்சிலோனா மற்றும் மெஸ்ஸியின் ஆதிக்கம் தென்படுவதை உணர்ந்த அட்லடிகோ அணி,  சற்று தடுத்தாடும் பணியை மேற்கொண்டது. மெஸ்ஸி மூலமே போட்டியை சமநிலைப்படுத்துவதற்கான கோல் பெறப்படும் என்ற நிலைமை காணப்பட்ட போது, லுயிஸ் ஸுவாரேஸ் போட்டியை 81 ஆவது நிமிடத்தில் சமநிலைப்படுத்தினார்.

ஸர்ஜீயோ ரோபெர்டோ (Sergio Roberto) மூலம் மத்தியகளத்தின் வலது பக்கத்திலிருந்து, பெனால்டி எல்லையின் இடது பக்கத்திற்கு வழங்கப்பட்ட பந்தை ஸுவாரேஸ் சிறந்த முறையில் தனது தலையால் முட்டி கோலாக்கினார்.

இறுதித் தருவாயில் போட்டி சமநிலை பெற்றபோதும், அதன் பின்னரும் போட்டியை வெற்றிபெற இரு அணிகளாலும் எடுக்கப்பட்ட முயற்சிகள் தடுக்கப்பட்டதால், போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. முதல் பாதியில் அட்லடிகோ அணியின் ஆதிக்கமும், இரண்டாம் பாதியில் பார்சிலோனா அணியின் ஆதிக்கமுமே போட்டியில் காணப்பட்டது.

முழு நேரம்: அட்லடிகோ மட்றிட் 1 – 1 பார்சிலோனா

மேலும் சில போட்டி முடிவுகள்

ஸ்பான்யல் (Espanyol) 0 – லெவன்டே 0

கேடாவேய் 1 (Getafe CF– றியல் மட்றிட் 2

அத்லடிகோ பில்பாகு (Ath. Bilbao) 1 – செவில்லா 0

றியல் சொசிடட் 2 – அலவெஸ் 0

http://www.thepapare.com

Categories: merge-rss

பிணைமுறி ஆணைக்குழுவின் முன் ஆஜராக பிரதமர் தயார்

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 19:00
பிணைமுறி ஆணைக்குழுவின் முன் ஆஜராக பிரதமர் தயார்
 

image_5be16d6ece.jpgபிணைமுறி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எப்போதும் தயாராக இருக்கிறாரென, பிரதமர் அலுவலகம், நேற்று (15) தெரிவித்தது.

ஆணைக்குழுவின் அண்மைய அமர்வுகளில், பிரதமரின் பெயர் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஊடகக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.இது தொடர்பான ஊடகக் குறிப்பில், “பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிணைமுறி ஏலங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு, அண்மைய நாட்களில் அவரைப் பற்றிய சுட்டிக்காட்டல்கள் இடம்பெற்ற நிலையில், அது தொடர்பான விளக்கங்களை அளிப்பதற்குத் தயாராக உள்ளார்.

“ஜனவரி 8, 2015இல் கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணையின் அடிப்படையில், தனக்கு எதிராகவும் தனது ஊழியர்களுக்கு எதிராகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை, அரசாங்கம் விசாரணை செய்யும். ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்கான அதனது ஆணையை, அரசாங்கம் முன்னெடுக்கும் என, பொதுமக்களுக்கு, பிரதமர் அலுவலகம் உறுதியளிக்கிறது” என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற விசாரணைகளின் போது, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் கேள்விகளை முன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் டப்புல டி லிவேரா, சர்ச்சைக்குரிய பிணைமுறி வழங்கல் தொடர்பாக, அர்ஜுன மகேந்திரனுக்கு ஆதரவாக, நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றியமை குறித்துக் கேள்வியெழுப்பியிருந்தார்.

பிரதமரின் உரைக்கான காரணங்கள் குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டபோது பதிலளித்த அர்ஜுன மகேந்திரன், அதற்கான காரணம், தனக்குத் தெரியவில்லை எனவும், ஆணைக்குழு, பிரதமரிடம் அதைக் கேட்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

அதேபோன்று, ஆணைக்குழுவின் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்த, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராகும் நாளை, மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/பிணைமுறி-ஆணைக்குழுவின்-முன்-ஆஜராக-பிரதமர்-தயார்/175-205594

Categories: merge-rss, yarl-category

மொழியால் மக்களை வேறுபடுத்தியோர் யார்?

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 18:58
மொழியால் மக்களை வேறுபடுத்தியோர் யார்?
 
 

போராட்டங்கள், கறுப்புக்கொடி காட்டல்கள் என்ற பதற்றத்துக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி யாழ்ப்பா ணத்திற்கு நேற்று வந்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. இந்தப் பதற்றமான, அரசியல் சூடான கள நிலவரத்தில் இந்தப் பயணத்தைக் கூடுமான வரையில் தவிர்ப்பதே நல்லது என்று அவரது பாதுகாவலர்கள் அவருக்கு அறிவுறுத்தியிருப் பார்கள் என்பது நிச்சயம். திட்டமிட்டபடி தேசிய தமிழ் மொழித் தின விழா யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறாமல் உள்ளரங்கத்திற்கு இறுதிநேரத்தில் மாற்றப்பட்டதில் இருந்தே அதனை நிச்சயம் புரிந்துகொள்ளமுடியும்.

அந்தத் தடைகளை எல்லாம் மீறி தமிழ் மக்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தலாக மாட்டார்கள் என்று அவர் நம்பி வந்ததற்காக அவரைப் பாராட்டியே ஆகவேண்டும்.
என்னதான் வாக்குறுதிகளை அவர் தமிழ் மக்களுக்கு வழங்கி அவற்றை நிறைவேற்றாமல் விட்டாலும், தமிழ் மக்கள் மீது அவர் கொண்ட அந்த நம்பிக்கை இதுவரை இருந்த பௌத்த சிங்களத் தலைவர்களில் இருந்து அவரை வேறுபடுத்துகின்றது.

அந்த உரிமையுடன்தான் தமிழ் மக்கள் அவரிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், அவற்றை அவர் நிறைவேற்றாதபோது கோபமும் விசனமும் கொள்கிறார்கள் என்பதையும் அவர் புரிந்துகொள்ளவேண்டும்.
எப்படியிருந்தா லும் அவர் வைத்த நம்பிக்கையைத் தமிழர்களும் காப்பாற்றியே இருக்கிறார்கள்.

இத்தனை பதற்றம், ஆர்ப்பாட்டம், சூடான அரசியல் களச் சூழலிலும் அவர் மீது தூசு துரும்பு விழாத வகையில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி மைத்திரி வைத்த நம்பிக்கையை தமிழர்களும் காப்­பாற்றி இருக்­கி­றார்­கள்.

இத்­த­கைய கண்­ணி­ய­மான அர­சி­யல் போக்கு இலங்­கை­யில் கடந்த பல தசாப்­தங்­க­ளா­கக் காணக்­கி­டைக்­கா­தது. தனக்­குக் கறுப்­புக் கொடி காட்­டிப் போராட்­டம் நடத்­தி­ய­வர்­களை நோக்­கிச் சென்று அவர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார் மைத்­திரி. “பேசித் தீர்க்­க­லாம் வாருங்­கள்“ என்ற அவ­ரு­டைய அழைப்பை நிரா­க­ரித்­த­போ­தும், பெருங் குரல் எடுத்து எதிர்ப்பு முழக்­க­மிட்­ட­போ­தும், அசம்­பா­வி­தங்­களோ வன்­மு­றை­களோ அங்கு இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

இதுவே இரு தரப்­பி­ன­ருக்­கும் இடை­யி­லான சிறந்த மாற்­றம்­தான். ஜன­நா­யக வழி­யி­லான போராட்­டத்­திற்கு மதிப்­ப­ளித்து அரச தலை­வர் ஒரு­வர் இறங்கி போராட்­டக்­கா­ரர்­க­ளு­டன் பேசி­ய­தும், அவ­ரது கோரிக்கை தமக்கு ஏற்­பு­டை­யது இல்லை என்­ற­ போ­தும் அதற்­கான தமது எதிர்ப்பை நிதா­ன­மா­கத் தமி­ழர்­கள் வெளிப்­ப­டுத்­தி­ய­தும் நம்­பிக்­கைக்­கு­ரிய முன்­னேற்­றம் என்றே சொல்­ல­லாம்.

இந்­தக் கண்­ணி­யத்­து­டன் இரு தரப்­பி­ன­ரும் தொடர்ந்து நடந்­தால், பேசி­னால், விட­யங்­களை ஆராய்ந்­தால் பிரச்­சி­னைக்கு இல­கு­வா­கத் தீர்­வைக் கண்­டு­கொள்­வ­தும் சாத்­தி­ய­மா­கக்­கூ­டும்.

இந்த நம்­பிக்கை இரு தரப்­பி­ன­ருக்­கும் இடை­யில் வளர்த்­தெ­டுத்­துச் செல்­லப்­ப­டு­வதே இனப் பிரச்­சி­னை­யின் தீர்­வுக்­குச் சாத­க­மா­ன­தா­க­வும் இருக்­கும்.
அதே­வேளை, தேசிய தமிழ் மொழித் தின விழா­வில் பேசிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு விட­யத்தை ஆழ­மா­கக் குறிப்­பிட்­டார்.

மொழி­யால் மக்­களை வேறு­ப­டுத்­து­ப­வர்­கள் மனி­தா­பி­மா­னம் அற்­ற­வர்­கள் என்­றார் அவர். யாழ்ப்­பா­ணத்­தில் நின்­று­கொண்டு அவர் இத­னைத் தெரி­வித்­தார். உண்­மை­யில் அவர் இந்­தக் கருத்தை தெற்­கில் பௌத்த சிங்­க­ள­வர்­க­ளுக்கு சொல்­லி­யி­ருக்­க­வேண்­டும்.

இலங்கை என்­கிற நாாட்­டில் மொழி­யால் மக்­களை வேறு­ப­டுத்­தி­ய­வர்­கள் சிறு­பான்மை மக்­கள் அல்­லர். இன்­றும் மொழி­யா­லும் மதத்­தா­லும் மக்­களை வேறு­ப­டுத்­து­ப­வர்­கள் சிறு­பான்­மை­ யி­னர் அல்­லர்.

தனிச் சிங்­க­ளச் சட்­டத்தை 1956ஆம் ஆண்டு கொண்டு வந்­தது முதல் மொழி­யால் மக்­களை வேறு­ப­டுத்­தி­ய­வர்­கள் பௌத்த சிங்­க­ளத் தலை­வர்­க­ளே­யன்றி வேறு­யா­ரு­மல்­லர்.

அந்­தத் தவ­றுக்கு பரி­கா­ரம் தேடி­யி­ருக்­க­வேண்­டிய இன்­றைய தலை­வர்­கள் அதைச் செய்ய மறுத்து இன்­றும் பிரச்­சி­னை­ யைத் தொடர அனு­ம­திப்­ப­தன் மூலம் அதே தவ­றையே இழைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­றால், மொழி­யால் மதத்­தால் மக்­களை வேறு­ப­டுத்­திக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் யார் என்­ப­தைச் சொல்­லித்­தான் தெரி­ய­வேண்­டும் என்­ப­தில்லை.

எனவே இந்­தத் தடவை தமிழ் மக்­கள் மீது நம்­பிக்கை வைத்து யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்து போற்­றத்­தக்க ஜன­நா­யக வழி­மு­றை­யின் ஊடாக தமி­ழர்­க­ளின் எதிர்ப்­புப் போராட்­டங்­க­ளை­யும் கையாண்ட அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தான் சுட்­டிக்­காட்­டி­ய­படி மொழி­யால் மக்­க­ளைப் பிரிக்­காத ஒரு தேசத்தை விரை­வில் கட்­டி­யெ­ழுப்ப உறு­தி­பூ­ண­வேண்­டும். அதற்­கா­கத் தன்னை அர்ப்­ப­ணிக்­க­வும்­வேண்­டும். அதா­வது அவ­ரா­வது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளவேண்டும்.

http://newuthayan.com/story/37207.html

Categories: merge-rss, yarl-category

சக்தி டிவி செய்திகள் 15-10-2017

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 18:42

சக்தி டிவி செய்திகள் 15-10-2017

Categories: merge-rss, yarl-category

இலங்கையில் மாஸ் காட்டும் மெர்சல் கட்- அவுட்: செலவு எத்தனை லட்சம் தெரியுமா?

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 18:28

 செலவு எத்தனை லட்சம் தெரியுமா?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் படம் மெர்சல். தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு கேளிக்கை வரி, சென்சார் பிரச்சனை, விலங்கு நல வாரியம் நோட்டீஸ் என ஒரு பக்கம் பல பிரச்சனைகள் இருந்தாலும், ரசிகர்களின் ஆரவாரம் மறுபக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மெர்சல் வெளியாகவுள்ள தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.

 செலவு எத்தனை லட்சம் தெரியுமா?

இந்நிலையில் மெர்சல் படத்தை வரவேற்பதில் தமிழகத்திற்கு இணையான அளவிற்கு இலங்கை ரசிகர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். அங்கு ஒரு லட்சம் மதிப்பில், 80 அடியில் விஜய்க்கு கட்- அவுட் வைத்துள்ளனர். மேலும் பல இடங்களில் சிறிய அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட் அவுட் வைக்க 2 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார்களாம் இலங்கை ரசிகர்கள்.

 செலவு எத்தனை லட்சம் தெரியுமா?

https://news.ibctamil.com/ta/internal-affairs/mersal-cut-out-of-vijay-film-at-srilanka

Categories: merge-rss, yarl-category

உருகிய கோஹ்லியின் வைரல் வீடியோ: கண்கலங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்!

உருகிய கோஹ்லியின் வைரல் வீடியோ: கண்கலங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்!

 

 கண்கலங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்!

ஆசிய கண்டத்தில் இருக்கும் கிரிக்கெட் அணிகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி தற்போது ஹாங்ஹாங்கில் நடைபெறும் கண்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதால் அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே பகுதிநேர வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போல ஆப்கானிஸ்தானிலும் ஸ்பகிஸா டி-20 என்று அந்த நாடு திட்டமிட்டிருந்தது. இந்நேரத்தில் போட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த மைதானத்திற்கு வெளியில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தால் கிரிக்கெட் நிர்வாகமே அதிர்ந்துள்ளது.

 கண்கலங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்!

இதனை பார்த்த இந்திய கேப்டன் கோஹ்லி ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு தெம்பூட்டும் விதமாக பேசி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, உங்கள் நாட்டில் நடக்க இருக்கும் ஸ்பகிஸா டி-20 போட்டிக்கு வாழ்த்துகள். நீங்கள் எந்த ஒன்றை செய்தாலும் உங்கள் முழு மனதோடு செய்யுங்கள். நீங்கள் விளையாடும் விளையாட்டுக்கு நேர்மையாக இருங்கள் , கண்டிப்பா விரைவில் நீங்கள் உலகின் பெரிய அணியாக மாறுவீர்கள். உங்களுக்கான இடத்தை நீங்கள் விரைவில் பெறுவீர்கள்' என்று கூறியிருந்தார்.

விராட் கோஹ்லியின் இந்த வீடியோவைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட அந்நாட்டினர், கோஹ்லிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 

https://news.ibctamil.com/ta/cricket/virat-kohli-wishes-afghanistan-cricket-team

Categories: merge-rss

The last halt படத்தில் இருந்து சுஜித். ஜி ; சோபியா

இனிய-பொழுது - Sun, 15/10/2017 - 17:31

The last halt  படத்தில் இருந்து  சுஜித். ஜி ;  சோபியா

 

 

Categories: merge-rss

டெங்கு நோய்த் தாக்கம்: யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி பலி

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 17:30
டெங்கு நோய்த் தாக்கம்: யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி பலி

 

டெங்கு நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை மாணவி ஒருவர் இன்று யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ் புனித ஜோன் போஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும்  9 வயதுடைய மாணவி  கே. சரா உயிரிழந்துள்ளார்.

 யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி பலி

கடந்த 11,12,13 ஆம் திகதிகளில் காய்ச்சல் காரணமாக சோர்வடைந்து காணப்பட்டதுடன் தனியார் வைத்திய சாலையில் மாத்திரை பெற்று வந்துள்ளார்.

நேற்று 14 ஆம் திகதி காய்ச்சல் தீவிரமடைந்து காணப்பட்டதால், தனியார் வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்கு அன்றைய தினமே உடனடியாக யாழ் போதனாவைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://news.ibctamil.com/ta/internal-affairs/denku-fever-death-school-student

Categories: merge-rss, yarl-category

புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து பல வருடத்தின் பின் தாய் நாடு செல்பவர் படும் பாடு......

இனிய-பொழுது - Sun, 15/10/2017 - 17:00

புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து பல வருடத்தின் பின் தாய் நாடு செல்பவர் படும் பாடு......

 

Categories: merge-rss

புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு : முல்லைத்தீவு அரசாங்க அதிபரே பொறுப்புக் கூற வேண்டும்;சிவமோகன் எம் பி.

ஊர்ப்புதினம் - Sun, 15/10/2017 - 16:32
புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு : முல்லைத்தீவு அரசாங்க அதிபரே பொறுப்புக் கூற வேண்டும்;சிவமோகன் எம் பி.

 

 

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகர மத்தியில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின்  காணி விடுவிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலருமே பொறுப்புக்கூறவேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

sivamohan.jpg

இராணுவ வசமுள்ள புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிப்பு  தொடர்பில் குறித்த காணி உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்,

இந்த காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியின் வழங்கிய  உத்தரவையும் உதாசீனம் செய்து இராணுவம் தொடர்ந்தும் இந்த காணியை விடுவிக்காமல் இருப்பது கவலையான விடயம் அத்தோடு இந்த விடயத்தில் அரச அதிகாரிகளுக்கும் மக்களுக்கு பொய் கூறி விட்டதாகவே உணருகின்றேன்.மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களோடு இணைந்து நானும் போராடுவேன்.

புதுக்குடியிருப்பு நகரை அண்டி பொதுமக்களுக்கு சொந்தமான காணியை  கையகப்படுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவிக்க வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்ததன் பயனாக ஒருதொகுதி காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டதோடு மிகுதி காணிகள் மூன்று மாதம் மற்றும் ஆறு மாத காலம் அடிப்படையில் இரு கட்டடங்களாக விடுவிக்கப்படும் என இராணுவத்தின் உறுதிமொழியை முல்லைத்தீவு அரச அதிபர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ஆகியோர் பொதுமக்களிடம் என் முன்னிலையில் வழங்கியிருந்தனர். 

ஆனால் அந்த கால அவகாசம் முடிந்து சில மாதங்களும் கடந்துள்ள நிலையில் இன்று என்னை இந்த காணி உரிமையாளர்கள் சந்தித்து முறையிட்டுள்ளதோடு மீண்டும் போராட போவதாக அறிவித்துள்ளனர்.

எனவே இந்த மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய அரச அதிகாரிகள் இதுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக இருக்கின்றனர்.ஆனால் அவர்களோ ஏதோ சாட்டு போக்குகளை சொல்லி விட்டு  இடமாற்றத்தை பெற்று சென்றுவிடலாம் என்று முயற்சிக்கின்றார்கள். 

மக்களுக்கு உறுதிமொழி வழங்கியவர்கள் அதனை நிறைவேற்ற வேண்டும் இல்லையேல்  இந்த மக்களுடன் சேர்ந்து நான் மட்டக்களப்பு வரை சென்று போராட வேண்டும் என குறித்த அதிகாரிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். 

http://www.virakesari.lk/article/25835

Categories: merge-rss, yarl-category

தடைகளை தகர்த்தெறிந்து தேர்தல்களில் போட்டியிடுவார்களா ?

அரசியல்-அலசல் - Sun, 15/10/2017 - 16:23
தடைகளை தகர்த்தெறிந்து தேர்தல்களில் போட்டியிடுவார்களா ?
image-01dde39fc8f0eca9dd0c786b9159e45eb6694560.jpg

 

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்­களில் போட்­டி­யிடும் கட்­சிகள் தமது வேட்­பாளர் பட்­டி­யல்­களில் 25 வீத­மா­ன­வற்றை பெண்­க­ளுக்கு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்ற திருத்தம் உள்­ளூ­ராட்சி திருத்தச் சட்­ட­மூ­லத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் மலை­யகப் பெண்­க­ளுக்கும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களில் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இவ்­வ­ளவு நாட்­க­ளாக ஒதுக்­கப்­பட்ட நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருந்த மலை­யகப் பெண்­க­ளுக்கு இது ஒரு வரப்­பி­ர­சா­த­மாகும். தோட்­டத்தில் கொழுந்து பறிப்­ப­தற்கும், அதன்பின் வீட்டு வேலை­களை செய்­வ­தற்கும், தேர்­தல்­களில் வாக்­க­ளிப்­ப­தற்கும் மட்டும் மலை­யகப் பெண்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். இந்த நிலை மாற்­றப்­பட்டு அவர்­களும் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளி­னூ­டாக அர­சி­யலில் பிர­வே­சிக்க வாய்ப்பு கிடைத்­தி­ருப்­பது வர­வேற்­கப்­பட வேண்­டி­ய­தொரு செயற்­பா­டாகும்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளான மாந­கர சபைகள், நக­ர­ச­பைகள் மற்றும் பிர­தேச சபைகள் தொடர்­பான திருத்தச் சட்­ட­மூ­லங்கள் திருத்­தங்­க­ளுடன் கடந்த திங்கள் கிழ­மை­யன்று பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

அன்­றைய தினம் இந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்­பான திருத்தச் சட்­ட­மூ­லங்கள் இரண்டாம் மதிப்­பீட்டு விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு சுமார் ஒரு மணி­நேரம் இடம்­பெற்ற விவா­தத்­துக்கு பின்னர் வாக்­கெ­டுப்­பின்றி திருத்­தங்­க­ளுடன் சபையில் நிறை­வே­றி­யது.

அங்கு உரை­யாற்­றிய விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் பைஸர் முஸ்­தபா மாந­கர, நகர, பிர­தேச திருத்­தச்­சட்டம் தொடர்­பான அறி­வித்தல் ஒரு­வார காலத்­துக்குள் வெளி­யி­டப்­படும் என தெரி­வித்­துள்ளார். அத்­துடன் எதிர்­வரும் ஜன­வரி மாதத்­திற்குள் உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் நடை­பெ­று­வது உறுதி எனவும் அமைச்சர் திட்­ட­வட்­ட­மாக சபையில் குறிப்­பிட்­டுள்ளார். இதன் மூலம் ஜன­வ­ரியில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்கள் நடை­பெ­று­வது உறு­தி­யென தெரி­ய­வ­ரு­கி­றது.

ஏற்­க­னவே அதா­வது 2012 ஆம் ஆண்டில் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான திருத்­தச்­சட்­ட­மூலம் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. அப்­போது அதற்கு பொறுப்­பாக இருந்த தினேஷ்­கு­ண­வர்­த­ன­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட அந்த திருத்தச் சட்­ட­மூ­லத்தில் 70 வீதம் தொகு­தி­வாரி முறையும், 30 வீதம் விகி­தா­சார முறை­யையும் கொண்ட கலப்புத் தேர்தல் முறை­யொன்றே முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தன.

இந்த முன்­மொ­ழி­வினால் சிறு­பான்மை இன மக்­க­ளுக்கும் சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கும் பாதிப்­புகள் ஏற்­ப­டு­மென்று சிறு­பான்மை மக்கள் தலை­வர்கள் மற்றும் கட்­சி­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது மட்­டு­மின்றி, அர­சாங்­கத்­துக்கும் இது தொடர்­பாக விளக்­கி­ய­துடன் இதில் மேலும் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்று அர­சாங்­கத்­திடம் சிறு­பான்மை கட்­சிகள் வலி­யு­றுத்தி வந்­தன.

இது தொடர்பில் பல்­வேறு கலந்­து­ரை­யாடல் நடத்­தப்­பட்­ட­துடன், சிறு­பான்மை தலை­வர்­களால் திருத்­தங்­களும் முன்­வைக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து 60 வீதம் தொகு­தி­வாரி பிர­தி­நி­தித்­து­வத்­தையும், 40 வீதம் விகி­தா­சார பிர­தி­நி­தித்­து­வத்­தையும் கொண்ட கலப்பு தேர்தல் முறை­மை­யினை அனைத்துத் தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொண்­டனர்.

இதற்­க­மைய தற்­போது மாந­கர, நகர மற்றும் பிர­தேச சபை சட்­டத்தில் 5 ஆம் விதியில் உள்ள உறுப்­பு­ரை­யி­லேயே திருத்தம் செய்­யப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை, நிர்­வாகம் தொடர்­பான தொழி­நுட்ப விட­யங்கள் ஆகி­ய­வற்­றி­லேயே சிறு மாற்­றங்கள் செய்­யப்­ப­ட­வுள்­ளன.

உள்­ளூராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் ஒவ்­வொரு கட்­சியும் தமது வேட்­பாளர் பட்­டி­யலில் 25 வீதத்தைப் பெண்­க­ளுக்­குக்­காக கட்­டா­ய­மாக ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த ஏற்­பாடு மலை­ய­கத்­துக்கு மிக­மிக அவ­சி­ய­மா­ன­தொன்­றாகும். மலை­ய­கத்தில் காலங்­கா­ல­மா­கவே பெண்கள் ஒதுக்­கப்­பட்டு வந்­துள்­ளனர். பாரா­ளு­மன்றம், மாகா­ண­ ச­பைகள், உள்­ளூராட்சி மன்­றங்கள் அனைத்­தி­லுமே பெண்கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு வந்­துள்­ளனர். ஓரிரு மலை­யக கட்­சிகள் பெய­ருக்­காக ஓரிரு பெண்­களை வேட்­பாளர் பட்­டி­யலில் சேர்த்துக் கொள்­கின்­றன.

இது­வரை மலை­ய­கத்தை சேர்ந்த எந்­த­வொரு பெண்­ம­ணியும் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்­யப்­ப­ட­வில்லை. மாகாண சபை பாரா­ளு­மன்றம் என்­ப­வற்­றுக்கு செல்ல உள்­ளூ­ராட்சி மன்­றங்­களே அடிப்­படை ஆதாரம் என்ற நிலையில் எதிர்­வரும் உள்­ளூராட்சி மன்றத் தேர்­தல்­களின் மூலம் பெண்­களை உறுப்­பி­னர்­க­ளாக தெரிவு செய்ய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இதே­வேளை உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு முன்னர் நுவ­ரெ­லியா மாவட்­டத்­தி­லுள்ள பிர­தேச சபை­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­ப­டுமா?

அதற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றதா? என்ற கேள்விகளும் நுவ­ரெ­லியா மாவட்ட மக்­க­ளி­டையே மட்­டு­மன்றி, முழு மலை­யக மக்­க­ளி­டை­யேயும் எழுந்­துள்­ளது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பிர­தேச சபை­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்டால், எதிர்­கா­லத்தில் மலை­யகத் தமிழ் மக்கள் அதி­க­மாக வாழும் ஏனைய மாவட்­டங்­க­ளிலும் இத்­திட்டம் விஸ்­த­ரிக்­கப்­ப­டலாம் என்ற எதிர்­பார்ப்பு நில­வு­வதே இதற்குக் கார­ண­மாகும்.

ஆனால், கடந்த வாரம் இது தொடர்பில் தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ­க­ணே­ச­னிடம் இது­பற்றி வின­வி­ய­போது; நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்ள ஐந்து பிர­தேச சபை­களை 12 பிர­தேச சபை­க­ளாக மாற்றும் நட­வ­டிக்கை துரி­த­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்தார்.

அமைச்­சரின் இந்த உறு­தி­மொழி நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்­பதே அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாக இருக்­கி­றது.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில், நுவ­ரெ­லியா, அம்­ப­க­முவ, ஹங்­கு­ராங்­கெத்த, கொத்­மலை மற்றும் வலப்­பனை ஆகிய ஐந்து பிர­தேச சபை­களே இயங்­கி­வ­ரு­கின்­றன. ஐந்து பிர­தேச செய­ல­கங்­களே உள்­ளன. சுமார் ஏழு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட மக்கள் வாழ்­கின்­றனர். நுவ­ரெ­லியா பிர­தேச செய­லாளர் பிரி­விலும், அம்­ப­க­முவ பிர­தேச செய­லாளர் பிரி­விலும் மட்டும் தலா இரண்டு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட மக்கள் வாழ்­கின்­றனர்.

இவர்கள் தங்­க­ளது தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தி­லுள்ள சிர­மங்­களை குறைக்கும் நோக்­கி­லேயே ஐந்து பிர­தேச சபை­களை குறைந்­த­பட்­ச­மாக 12 ஆக­வா­வது உயர்த்தித் தரு­மாறு கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

தமிழ் முற்­போக்­குக்­கூட்­டணித் தலை­வர்கள் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­த­லுக்கு முன்னர், நுவ­ரெ­லியா மாவட்டப் பிர­தேச சபை­களை 12 ஆக அதி­க­ரிக்க வேண்­டு­மென்றும், ஹட்டன் – டிக்­கோயா நக­ர­சபை மற்றும் தல­வாக்­கலை – லிந்­துலை நக­ர­ச­பை­களை மாந­க­ர­ச­பை­க­ளாக தரம் உயர்த்த வேண்­டு­மென்றும் கோரிக்­கை­களை முன்­வைத்து அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தினர். அர­சாங்­கமும் இந்த கோரிக்­கை­களை ஏற்­றுக்­கொண்­ட­தா­கவே தெரி­வித்து வந்­துள்­ளது.

இந்­நி­லையில், எதிர்­வரும் ஜன­வரி மாதத்­திற்குள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தலை நடத்தப்போவதாக மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 
 

ஜனவரிக்கு இன்னும் இரண்டரை மாதங்களே எஞ்சியுள்ளன. இந்த குறுகிய காலப்பகுதிக்குள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படுமா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இரண்டரை மாதகாலத்திற்குள் ஐந்து பிரதேச சபைகளை 12 ஆக பிரித்து அவை தனித்தனியாக செயற்படுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இது நியாயமானதொரு கேள்வி என்றே கூறவேண்டும்.

ஏனெனில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில், தற்போது வரை இதற்கான முதற்கட்ட பணிகள்கூட ஆரம்பிக்கப்படவில்லை என்றே அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் நுவரெலியா மாவட்டப் பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/kathir/2017-10-15#page-1

Categories: merge-rss