merge-rss

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 25/05/17

 

இன்றைய (25/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

*மேன்செஸ்டர் தாக்குதல் புலனாய்வுத்தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்வதை நிறுத்தியது பிரிட்டன்!
தகவல் கசிவை அடுத்து தடாலடி முடிவு.

*அல் ஷபாப் தீவிரவாதிகளால் கடத்தி அடிமையாக்கப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள்!
தாம் சந்தித்த கொடுமைகளை முதல் தடவையாக பிபிசியிடம் மனம் திறந்தனர்!

*நூற்று இருபது மைல் தூரத்தில் இருந்து ஓடுபாதையை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்!
லண்டன் சிட்டி விமானநிலையத்தில் அறிமுகமாகின்றது!

Categories: merge-rss, yarl-world-news

2 வயதுக் குழந்தை தான் பயங்கரவாதியா ?

அரசியல்-அலசல் - Thu, 25/05/2017 - 16:38
2 வயதுக் குழந்தை தான் பயங்கரவாதியா ?
 

இலங்கையில், சுமார் 3 தசாப்தங்களாக இடம்பெற்றுவந்த போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மே 18, 19ஆம் திகதிகளை, இலங்கை அனுஷ்டித்திருக்கிறது. 

வடக்கிலும் தெற்கிலும், மாறுபட்ட உணர்வுகளை, அந்தத் திகதிகள் ஏற்படுத்தியிருக்கின்றன. இவை, எதிர்காலத்தில் எடுக்கப்படக்கூடிய நல்லிணக்க முயற்சிகளுக்கும் இன ஒற்றுமை குறித்த நடவடிக்கைகளுக்கும், எந்தப் பெரியளவு சவால்கள் காத்திருக்கின்றன என்பதைக் காட்டிச் சென்றிருக்கின்றன.  

image_28a020b3e8.jpg

போர் முடிவடைந்து 8 ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்ற போதிலும், இம்முறை தான், பாரியளவிலான நினைவேந்தல் நடவடிக்கைகள், வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டன.

மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் வீழ்த்தப்பட்டு இடம்பெறுகின்ற 3ஆவது நினைவேந்தல் நிகழ்வு இது. எனவே, இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நடவடிக்கைகள், அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கின்ற போராட்ட உணர்வுகளால் தூண்டப்பட்டவையாக அமைந்தன என்றே கருதிக்கொள்ள வேண்டியிருக்கிறது.  

அடிக்கடி நினைவுபடுத்தப்படுவது போல, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தோடு ஒப்பிடும் போது, நினைவேந்தல் நடவடிக்கைகளுக்கு இந்த அரசாங்கம், ஓரளவு ஆதரவை அல்லது குறைந்தளவிலான தடங்கல்களை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. எனவே, நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற இரா. சம்பந்தன் கூட, இம்முறை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அவர், என்னதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாலும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவரது பங்குபற்றுகை, இதில் முக்கியமானதாக அமைந்தது.  

ஆனால், நினைவேந்தல் நடவடிக்கைகள், முழுமையாகத் தடைகளின்றி இடம்பெற்றனவா என்ற கேள்வியையெழுப்பினால், அதற்கான பதில், இல்லையென்றே கூற வேண்டியிருக்கிறது. இதனால்தான், நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்து ஒரு வாரத்தின் பின்னர், இவை பற்றி ஆராய வேண்டியிருக்கிறது.  

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட, அரசியல்வாதிகள் கலந்துகொண்ட நினைவேந்தல் நிகழ்வுக்கு, அரச, அரசாங்கத் தரப்புகளிலிருந்து, ஆதரவு காணப்பட்டது. அந்நிகழ்வுக்கான தடங்கல் எவையும் ஏற்படுத்தப்படவில்லை.

ஆனால், மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, நினைவுக்கல் வைக்கும் நிகழ்வுக்கு, அரச, அரசாங்கத் தரப்புகளிலிருந்து தடங்கல்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதில், 17ஆம் திகதி மாலை, நீதிமன்றத்துக்குச் சென்று, அந்நிகழ்வுக்குத் தடை பெற்றுக் கொண்டமை, பின்னர் பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அந்நிகழ்வை நடத்த அனுமதியளித்தமை என்று, அந்தத் தடங்கல்கள் நீண்டன.  

இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அரசியல்வாதிகள் கலந்துகொண்டு, விளக்கேற்றிவிட்டு, 5 நிமிடங்கள் உரையாற்றும் மேல்தட்டு நினைவேந்தல் நிகழ்வுகளை எதிர்ப்பதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறான நிகழ்வுகளை, அரசாங்கம் கண்டும் காணாமல் விடுவதற்குத் தயாராக இருக்கிறது.

இல்லையெனில் அவ்வாறான நிகழ்வுகளை, ஊக்குவிக்கவும் அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஏனெனில், இவ்வாறான நிகழ்வுகள்தான், சர்வதேசத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு, “போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காக, வடக்கில் நினைவேந்தல்களை அனுமதித்தோம்” என்று கூறுவதற்கு இலகுவானவை; அவசியமானவை.  

ஆனால் மறுபக்கமாக, பொதுமக்களாக ஏற்பாடு செய்யும், உணர்வுகள் முன்னுரிமை பெறும் நிகழ்வுகளை ஏற்றுக் கொள்வதற்கு, அரசாங்கம் தயாராக இல்லை. அதேபோல், நிரந்தரமான நினைவிடங்களையோ அல்லது நினைவுக்காகக் கட்டியெழுப்பப்படும் எந்தவொரு கட்டுமானத்தையோ ஏற்பதற்கும், அரசாங்கம் தயாராக இல்லை. அதனால் தான், சிவில் சமூகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளுக்குத் தடங்கல் மேற்கொள்ளப்பட்டது.  

இதில் முக்கியமாக, இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கான தடையைக் கோரிய விடயத்தில், நீதிமன்றத்தில் பொலிஸார், எதிர்க்கட்சித் தலைவரும் வடமாகாண முதலமைச்சரும் பங்குகொள்ளும் நிகழ்வுக்கு, தாங்கள் பாதுகாப்பு வழங்கியதாகப் பெருமையுடன் கூறிக் கொண்டனர் என்பது முக்கியமாகச் சுட்டிக்காட்டப்படக்கூடியது.  

ஏனென்றால், அரசியல்வாதிகள் பங்குகொள்ளும் “விளக்கேற்றும் நிகழ்வுகள்”, வெறுமனே காட்சிக்குரியன என்பதுவும் அங்கு ஆற்றும் உரைகள், வெறுமனே சில நாட்களுக்குரியன என்பதுவும், அரச இயந்திரத்துக்குத் தெரியும்.

ஆனால், காணிக்கென ஆரம்பித்த உணர்வுமிகு போராட்டங்கள், காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் என, பல வாரங்களாகத் தொடர்ந்து, அரசாங்கத்துக்கும் அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பாரியளவில் அழுத்தம் ஏற்பட்டிருப்பதை, அரசாங்கம் அனுபவித்திருக்கிறது.

image_d78d6b6006.jpg

எனவே, நினைவேந்தலுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற உணர்வுமிகு நிகழ்வுகள், இன்னோர் ஆரம்பத்தை வழங்கிவிடக்கூடாது என, அரசாங்கத்தின் தரப்பில் உறுதியாக இருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.  

இவை அனைத்துமே, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை வெளியிடப்பட்டு ஒரு வாரத்துக்குள் இடம்பெற்ற சம்பவங்களாகும். அந்தத் தேசியக் கொள்கையில், பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் உட்பட, முக்கியமான பல்வேறு பிரேரிப்புகள் காணப்பட்டன.

அதில், இடைநிலை நீதி என்ற உப தலைப்பின் கீழ், குணப்படுத்தல் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

(இதில் குறிப்பாக, ஆங்கில வடிவில், குணப்படுத்தல் என்பது காணப்பட, தமிழ் மொழிபெயர்ப்பில், குணப்படுத்தல் என்பது காணப்பட்டிருக்கவில்லை. வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதா அல்லது மொழிபெயர்ப்புத் தவறா என்பது, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்துக்கே வெளிச்சம்.)  

இறந்த தங்கள் உறவுகளை நினைவுகூர முடியாமல், அவர்களுக்கான நினைவை ஏற்படுத்தாமல், குணப்படுத்தல் என்பது சாத்தியப்படாது என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை, அரசாங்கத்துக்கு உள்ளது.

ஒருபக்கமாக, முக்கியமான தேசியக் கொள்கைகளை வகுத்துக் கொண்டு, மறுபக்கமாக அவற்றை மீறும் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வது, ஆரோக்கியமானதாக அமையாது.  

தெற்கிலும் கூட, கடந்தாண்டை விட இந்தாண்டு, நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் ஆகியன அதிகரித்திருந்தன. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், நினைவேந்தலுக்குத் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

விடுதலைப் புலிகளை ஞாபகப்படுத்துகின்றனர் அல்லது படையினருக்கு எதிரானவையாக இருக்கின்றன என்பது, அவர்களது எதிர்ப்புக்கான நியாயப்படுத்தலாக இருந்தது.  
தெற்கின் கடும்போக்குவாதிகள் பலரும், வடக்கின் நினைவேந்தலை எதிர்த்ததோடு, தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று ஓலமிட்டனர். விடுதலைப் புலிகள் மீண்டும் வருகிறார்களென, பூச்சாண்டி காட்டினர். 

மறுபக்கத்தில், கடும்போக்காளராகக் கருதப்படுகின்ற, அமைச்சரும் போரை வென்றபோது இராணுவத் தளபதியாக இருந்தவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நினைவேந்தலுக்கான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். இறந்தவர்களை நினைவுகூரவும் அஞ்சலி செலுத்தவும் தீபம் ஏற்றவும், அனைவருக்கும் முடியும் என, அவர் தெரிவித்திருந்தார்.  

வடக்கின் நினைவேந்தல் நிகழ்வுகள், தெற்கில், இந்தளவுக்கு எதிர்ப்பைச் சந்திப்பது விநோதமானது. ஏனென்றால், இந்த நினைவேந்தல் நிகழ்வுகள், இறுதிப் போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் சார்பாக, அவர்களது உறவினர்கள், நினைவுபடுத்துவதும் அவர்களுக்கான நீதியைக் கோருவதுமாகும்.  

கடந்த ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுதினங்கள், தெற்கில் அனுஷ்டிக்கப்படும் போதும், இதே உணர்வுகள் தானே எழுப்பப்படுகின்றன? அதே மாதிரியான நினைவுகள் தானே, வடக்கிலும் காணப்படும்?   

மாவீரர் தினத்துக்கான எதிர்ப்பு என்பது, ஓரளவு நியாயப்படுத்த வேண்டியது. விடுதலைப் புலிகள் பற்றி, தமிழ் மக்களுக்கு எவ்வாறான பார்வை இருந்தாலும், இலங்கைச் சட்டத்தின்படி, அவ்வமைப்பு, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.

ஆகவே, அந்த அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூருவதைத் தடுப்பது, அரசாங்கத்தின் பார்வையில் சரியானது. ஆனால் மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள், போரில் உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பானவை தானே? எதற்காக இத்தனை தடைகள், தடங்கல்கள்?  

போரில் கொல்லப்பட்ட மக்களின் நினைவுகள் இருந்தால், அவர்களின் மரணங்களுக்கான நீதியைக் கோரும் குரல்கள் எழும், அதனால் அரசாங்கத்தின் இருப்புக்குப் பாதிப்பு ஏற்படுமென அஞ்சுகின்றனரா? அப்படியாயின், குற்றம் செய்தவன் மனது குறுகுறுக்கிறது என்ற அர்த்தத்தில் அதை எடுத்துக் கொள்ள முடியுமா?  

இறந்தோருக்கான நினைவுக்கல்களில் பெயர்களைப் பார்த்தால், 2 வயது, 4 வயது என, பச்சிளம் குழந்தைகளின் பெயர்கள் பதிக்கப்பட்டுக் காணப்படுகின்றன. இவர்களையெல்லாம் நினைவுகூருவது, விடுதலைப் புலிகளை நினைவுகூருவது என்று தெற்கிலும் அரசாங்கத்தில் ஒரு தரப்பினரும் கூறிக் கொள்வது, வெட்ககரமானது.

அத்தோடு, நினைவு நிகழ்வுகளை வேண்டுமானால் தடுக்க முடியும், நினைவுகளையல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.  

image_99c4918ae7.jpg

ஆனால், இறுதி யுத்தம் தொடர்பாக, வடக்கிலும் துக்கமும் நீதிக்கான கோரிக்கைகளும் எழும் நிலையில், தெற்கில், போர் வெற்றிக் கொண்டாட்டங்களும் இடம்பெறும் நிலையில், நல்லிணக்கமென்பது எவ்வளவு சவாலாக அமையப் போகிறது என்பதை, இவை தெளிவாகக் காட்டி நிற்கின்றன.

இப்படியான சூழ்நிலைக்கு மத்தியில் நாட்டை முன்கொண்டு செல்வதற்கு, வாக்குகளைப் பற்றிக் கவலைப்படாத அரசியல் தலைமைகள் தேவைப்படுகின்றன - இரு தரப்பிலும். யாராவது முன்வருவார்களா?    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/2-வயதுக்-குழந்தை-தான்-பயங்கரவாதியா--/91-197319

Categories: merge-rss

பூநகரியில் 6000 ஹெக்ரயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்!

ஊர்ப்புதினம் - Thu, 25/05/2017 - 15:28
பூநகரியில் 6000 ஹெக்ரயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்!
பூநகரியில் 6000 ஹெக்ரயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்!
 

பூநகரியில் 1040 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய சூரிய மின்சக்தி மற்றும் காற்றுவலு கலப்பு மின்திட்டத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டத்திற்குப் பொருத்தமான இடமாக பூநகரி தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 6000 ஹெக்டயர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 240 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்திட்டமும், 800 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் திட்டமும் அமைக்கப்படவுள்ளன.

இத்திட்டம் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இதற்கான கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

http://thuliyam.com/?p=68745

Categories: merge-rss, yarl-category

50 ஓவர் போட்டியில் 320 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர்: அணியின் ஸ்கோர் 556

50 ஓவர் போட்டியில் 320 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர்: அணியின் ஸ்கோர் 556
 

பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் 50 ஓவர் போட்டியில் 320 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார்.

 
 அணியின் ஸ்கோர் 556
 
பாகிஸ்தானில் பாஸல் மெஹ்மூத் இண்டர்-கிளப் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஷாஹீத் அலாம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றொரு அணியுடன் மோதியது. இதில் ஷாஹீத் அலாம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் பிலால் இர்ஷாத் தொடக்க வீரராக களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடி சிக்ஸ், பவுண்டரிகளாக விளாசினார். 175 பந்துகளை சந்தித்து கடைசி வரை அவுட்டாகாமல் 9 சிக்ஸ், 42 பவுண்டரிகளுடன் 320 ரன்கள் குவித்தார்.

பிலால்- ஜாகீர் உசைன் ஆகியோர் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 364 ரன்கள் குவித்தனர். பிலாலின் அதிரடியால் ஷாஹீத் அலாம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் 50 ஓவரில் 556 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய எதிரணி 145 ரன்னில் சுருண்டது. இதனால் ஷாஹீத் அலாம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் 411 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதற்கு முன் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லியின் மோகித் அலாவத் அவுட்டாகாமல் 300 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/25160054/1087135/Pakistan-Cricketer-Slams-320-in-50-Over-Match.vpf

Categories: merge-rss

சென்னைக்கு வியஜம் செய்பவர்கள் எந்தமாதிரியான குடிபான வகைகளை முயற்சி செய்து பார்க்கலாம்

இனிய-பொழுது - Thu, 25/05/2017 - 14:56
 
Chai-13-e1487146881699.jpg

 

 

தாகம் தீர்க்கும் சிங்காரச் சென்னை

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் தவறாமல் கால்பதிக்கும் இடங்களில் ஒன்றுதான் சென்னை. ஒட்டுமொத்த இந்தியாவின் அத்தனை கலை, கலாச்சாரங்கள் மட்டுமல்ல உணவுப் பழக்க வழக்கங்களையும் இங்கு காணக்கூடியதாக இருக்கும்.

கடந்தமுறை சிங்காரச் சென்னைக்கு செல்பவர்கள் உணவுவகைகளில் எதை எல்லாம் ருசிபார்க்க வேண்டும் என்பதனை முன்னொரு ஆக்கத்தில் பார்த்திருந்தோம்.

இம்முறை, சென்னைக்கு வியஜம் செய்பவர்கள் எந்தமாதிரியான குடிபான வகைகளை முயற்சி செய்து பார்க்கலாம் எனப் பார்ப்போம்.

 

காளி மார்க் குடிபான வகைகள்

உண்மைத் தமிழனாக இருந்தால் இதனை பகிருங்கள் என்பது தற்போது சமூக வலைத்தளங்களின் புதிய நடைமுறையாக (trend) உள்ளது. அதுபோல, காலாகாலமாக உண்மைத் தமிழனாக இருந்தால் பெப்சி, கோலா உற்பத்திகளை தவிர்த்து தமிழ்நாட்டு உற்பத்தியான காளிமார்க் குடிபான வகைகளுக்கு ஆதரவு தாருங்கள் என்பது ஒரு நடைமுறையாகவே தமிழ்நாட்டில் இருக்கிறது.

1916ம் ஆண்டு முதல் குளிர்பான உற்பத்தியில் உள்ள மிகப்பழமையான தமிழ்நாட்டு நிறுவனமே இது. சர்வதேச அளவில் பெப்சி, கோலா உற்பத்திகள் ஒட்டுமொத்த சந்தையையும் குத்தகைக்கு எடுத்துவிட்ட போதிலும், இந்தியாவில் இன்னமும் இதற்கான வரவேற்பும், சந்தையும் இருந்துகொண்டே இருக்கிறது. கடந்த வருட ஆய்வின்போது, இந்தியாவின் தரங்களுக்கான (Brand) மதிப்பீட்டில் சுமார் நூறுகோடிக்கு மேலாக இந்த நிறுவனத்தின் தரம் மதிப்பிடபட்டுள்ளது.

என்னதான் கோலா நிறுவனங்கள் தாமிரபணி ஆற்றையே உறுஞ்சுகிறது என சொல்லுபவர்கள், கூடவே, காளிமார்க் உற்பத்திகளும் அங்கிருந்துதான் உற்பத்திக்கு தேவையான நீரை பெறுகிறது என்பதனை சொல்ல மறந்துவிடுகிறார்கள் என்பதே சோகமான உண்மை.

இந்திய குளிர்பானங்களை ருசிபார்க்க விரும்புவர்கள் இதனை முயற்சித்துப் பார்க்கலாம். வெவ்வேறு விதமான சுவகைளில் உள்ள இந்த குளிர்பானத்தின் அதிகுறைவான விலையாக 500ml போவின்டோ குளிர்பானம் இந்திய ரூபாவில் 8/- ஆக இருக்கும்.

பழச்சாறு வகைகள்

இந்தியா விவசாயத்திற்கு பெயர்போன நாடு என்பது சொல்லி தெரிவதிற்கில்லை. அதிலும் தமிழ்நாடு வேளாண்மையில் முன்னிலை வகிக்கும் ஒரு மாநிலமாக உள்ளது. எனவே, இங்கே பழங்களுக்கும், பழம் சார்ந்த உற்பத்திகளுக்கும் குறைவே இல்லை என்று சொல்லலாம். சென்னையின் வீதிதோறும் பழச்சாறு விற்பனை நிலையங்களை காணக்கூடியதாக இருக்கும். இவற்றில், இலங்கையில் விலை அதிகமாக உள்ள அல்லது இலங்கை பழச்சாறு விற்பனை நிலையங்களில் இல்லாத சிலவகை பழச்சாறுகளை ருசிபார்க்க முடியும்.

குறிப்பாக, இலங்கையில் அரிதாக கிடைக்கப்பெறும் கரும்புச் சாறினை, சென்னையில் இந்திய மதிப்பில் 20/- ரூபாய்க்கு நிறைவாக ருசிபார்க்க முடியும். சென்னையில் வீதிக்கு வீதி பிரத்தியேக கரும்புச் சாறுக்கான கடைகளை காணக்கூடியதாக இருப்பதால், நினைத்தமாத்திரத்திலேயே ருசிபார்க்க முடியும்.

Top-23-Benefits-Of-Sugarcane-Juice-Ganne-Ka-Ras-For-Skin-And-Health-e1487143808296.jpg

கரும்புச் சாறு (stylecraze.com)

அதுபோல, இலங்கையில் விலைகூடியதாக உள்ள மாதுளை பழச்சாறு, ஸ்ரோபரி பழச்சாறு, திராட்சை பழச்சாறு என்பவற்றையும் இந்திய மதிப்பில் அதிகமாக 40/- ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும்.

இவற்றுக்கு சற்றே வித்தியாசமாக செயற்கையாக நிறமூட்டப்பட்ட பானங்களையும், எலுமிச்சம்பழச்சாற்றையும் இணைத்து உருவாக்கப்படுகின்ற LIME SODAக்களும் சென்னையில் பிரபலம். இவற்றை இந்திய மதிப்பில் 10/- தொடக்கம் 20/- ரூபாய்க்கு பெறக்கூடியதாக இருப்பதால், இதனையும் ஒருமுறை ருசிபார்க்கலாம்.

தேநீர்/கோப்பி வகைகள்

சென்னையில் பல்வேறு பகுதிகளின் கலாசாரங்களையும் பிரதிபலிப்பதன் விளைவாக, இந்தியாவின் வேறுபட்ட மாநிலங்களின் தேநீர் வகைகளையும் சென்னையிலேயே ருசிபார்க்க முடியும்.

பில்டர் காபி (Filter Coffee)
Untitled-design-25.jpg

பில்டர் காபி

இந்தியாவின் அடையாளங்களை வரிசைப்படுத்திகொண்டே வந்தால், இந்த Filter Coffeeக்கு தனியான இடமுண்டு என்பதனை மறுப்பதற்கில்லை. கோப்பியினை தயாரிப்பதற்கு என பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உபகரணத்தின் மூலமாக, கோப்பி சாற்றினையும், பசும்பாலையும், ஏனைய சுவைதரும் திரவியங்களையும் உள்ளடக்கியதாக இது தயாரிக்கபடுகிறது. இலங்கையின் சைவ உணவங்களில் இதனை பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளபோதிலும், இந்தியா சென்று இதனை அருந்தியபின், இங்கு கிடைப்பது எல்லாம் Filter Coffee தானா என்கிற மனநிலைக்கு நீங்கள் வந்துவிடக்கூடும். இந்திய மதிப்பில் குறைந்தது 15/-க்கு இதனை பெற்றுக்கொள்ள முடியும்.

 

மசாலா சாய் (Masaala Chai)
Masala-Chai-049-e1487144772644.jpg

மசாலா சாய்

நாங்கள் வீடுகளில் அருந்தும் சாதாரண பால் தேநீர் வகைதான் இது. ஆனால், இதனுடன் சரியான அளவில் வேறுபட்ட நறுமணப்பொருட்களை சேர்த்து தயாரிப்பதனால் இது சற்றே தனித்துவமான சுவையைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதிலும், இதற்கெனவே பிரத்தியேகமாக உள்ள கண்ணாடிக் குவளையில் இதனை அருந்துவது ஒரு தனியான அனுபவம்தான்.

இந்திய மதிப்பில் குறைந்தது 15/-க்கு இதனை பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், ஒருமுறை சுவை பார்த்து, நம் வீட்டு பால் தேநீருக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என அறிந்துகொள்ளுங்கள்.

சுலைமானி தேநீர்
Untitled-design-26.jpg

சுலைமானி தேநீர்

 

இதுவும் நாம் வீடுகளில் தயாரிக்கும் சாதாரண தேநீர் போல தயாரிக்கப்படுகின்ற ஒன்றாக உள்ளபோதிலும், அதில் சேர்க்கப்படுகின்ற பொருட்கள் மூலமாக வேறுபட்டு நிற்கிறது. இதில், சாதாரண தேநீருக்கு மேலதிகமாக ஏலக்காய், இலவங்கபட்டை, இஞ்சி, கருப்பட்டி மற்றும் பக்குவநிலையில் எலுமிச்சை சாறும் சேர்க்கப்படுகிறது.

கேரளா பகுதியில் மிகப்பிரபலமான தேநீராக இது உள்ளபோதிலும், சென்னையிலும் இதனை பெறக்கூடியதாக உள்ளது. இந்திய மதிப்பில் சராசரியாக 8/- ரூபாய்க்கு இதனை பெறலாம்.

பால்வகை குடிபானங்கள்

இந்தியாவில் காலையில் பாலை அருந்தாதமல் நாளை தொடங்குகின்ற வீடுகளே இல்லையென சொல்லலாம். அப்படிபட்டவர்களிடம், பால்சார்ந்த வித்தியாசமான குடிபான வகைகள் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ரோஸ் மில்க் (Rose Milk)
rose-milk-e1487145275875.jpg

ரோஸ் மில்க்

இலங்கையின் பலூடா வகைகளைப்போல, இந்தியாவில் ரோஸ் சிரப்பினை (Rose Syrup) பயன்படுத்தி தயார் செய்யப்படுகின்ற ஒரு குடிபானமே இதுவாகும். அதிலும், ரோஸ் மில்க் தொடர்பில் சென்னைக்கு சுவாரசியமான கதையும் உண்டு.

சென்னையின் மைலாப்பூரில் இயங்கிவருகின்ற காளாத்தி பத்திரிகை கடையின் ரோஸ் மில்க்தான் சென்னையின் ஏனைய பாகங்களை விடவும் சுவைவாய்ந்ததும், தனித்துவத்தன்மை கொண்டதுமான குடிபானமாக உள்ளதாம். இந்திய மதிப்பில் சுமார் 20/- ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள கூடிய இந்த குடிபானத்தை, குறித்த கடையிலேயே அருந்துவதற்காக பல்வேறு திரை நட்சத்திரங்களும் இந்த கடைக்கு வருகைதருகின்ற வரலாறும் உள்ளதாம். 

A brand built around the humble rose milk

மசாலா மோர்
moru1-e1487145538599.jpg

மசாலா மோர்

இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி சாதாரணமாக கிடைக்கப்பெறுகின்ற குடிபானங்களில் இதுவும் ஒன்று. இலங்கையில் விற்பனை என்கிற நிலையில், மோர்வகை அரிதாக உள்ளபோதிலும், வீடுகளில் அதிகளவில் இன்றும் தயாரிக்கபடுகிறது.

மசாலா மோர் என்பது, சாதாரண மோருடன் புதினா இலை கொத்தமல்லி இலை, பூடு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றறை உள்ளடக்கியதாக தயாரிக்கபடும் விசேட மோர் ஆகும். இதனை, இந்திய மதிப்பில் குறைந்தது 15/- விற்கு பெற்றுக்கொள்ள முடியும்.

லஸ்ஸி (Lassi)
IMG_2257-e1487146252514.jpg

லஸ்ஸி

கடைந்து எடுத்த தயிர் அல்லது யோகர்ட் வகையை பயன்படுத்தி செய்யப்படுகின்ற இவ்வகை குடிபானமும் சென்னையில் பிரபலமான ஒன்று. இலங்கையிலும் நிறைவாக இதனை பல்வேறு உணவகங்களில் பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. இந்திய மதிப்பில் குறைந்தது 20/- தொடக்கம் 30/- ரூபாவிற்கு இதனை பெற்றுக்கொள்ள முடியும்.

இதனை விடவும், சித்தர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவமுறைகளில் குறிப்பிடுகின்ற பல்வேறு மூலிகைகளை கொண்ட குடிநீர் வகைகளையும் சென்னையின் புறநகர்பகுதிகளில் சுவைக்க முடியும். இலங்கையில் இல்லாத பல்வேறு வகையான மூலிகைகள் இந்தியாவில் உள்ளதால், இத்தகைய மூலிகை குடிநீர்கள் இங்கு சிறப்பம்சமாக உள்ளது.

அதுபோல, சென்னையின் கடற்கரைசாலையை அண்மித்ததாக பர்மாக்காரர்களினால் நடாத்தபடுகின்ற கடைகளில் வாழைத்தண்டு சூப் என்கிற வித்தியாசமான குடிபானத்தையும் அருந்த முடியும்.

இவ்வாறு வேறுபட்ட சுவைகளில், வேறுபட்ட வகைகளில் சென்னை முழுவதும் குடிபானவகைகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இந்த ஆக்கத்தில் உள்வாங்கபடாத ஏதேனும் குடிபான வகைகள் விடுபட்டு போயிருப்பின், சென்னைவாசிகளும் சரி, சென்னை போய்வந்த ஏனையவர்களும் சரி கருத்துரை பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள், இனி சென்னை போக இருப்பவர்களுக்கு ஒரே பயணத்தில் அனைத்தையும் சுவைபார்க்க அது வாய்ப்பாக இருக்கட்டும்.  

 

 

https://roar.media/tamil/travel/gl-chennai-special-beverages/

Categories: merge-rss

மான்செஸ்டர் தாக்குதல்: அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திய பிரிட்டன்

மான்செஸ்டர் தாக்குதல்: அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திய பிரிட்டன்
 
 
இந்த ஆதாரங்கள் சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டதாக நியு ஆர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளதுபடத்தின் காப்புரிமைNEW YORK TIMES Image captionஇந்த ஆதாரங்கள் சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டதாக நியு ஆர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது

மான்செஸ்டர் அரங்க தாக்குதல் குறித்து பிரிட்டன் காவல்துறை பகிர்ந்து கொண்ட புலன் விசாரணை தகவல்களை ஊடகங்களில் கசியவிட்ட அமெரிக்காவிடம் இனிமேல் தகவல்களை பகிர்வதை பிரிட்டன் காவல்துறை நிறுத்திவிட்டதாக பிபிசிக்கு தெரியவருகிறது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் குண்டுவெடிப்பு இடிபாடுகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியானதால் பிரிட்டன் அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.

குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டு, 64 பேர் காயமடைந்த மான்ச்செஸ்டர் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணம் சல்மான் அபேடி என்று அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியானது.

நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்தில், இதுகுறித்த கவலைகளை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பகிர்ந்து கொள்வார்.

கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினர் சாதாரண இருதரப்பு புலனாய்வு உறவுகளை தொடரலாம் என்று நம்பிக்கை வெளியிட்டாலும், தற்போது அமெரிக்கா மீது அதிருப்தியில் இருப்பதாக பிபிசி புரிந்து கொண்டுள்ளது.

களத்தில் விசாரணையை முன்னெடுத்து செல்லும் புலனாய்வு அமைப்பு, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அமைப்புக்கு அந்தத் தகவல்களை அளிக்கிறது. அது பின்னர் அரசின் அனைத்து துறைகளுக்கும் பகிரப்படுகிறது. அத்துடன், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து இடையிலான ஐந்து நாடுகள் புலனாய்வு ஒப்பந்தத்தின்படி, (Five Eyes intelligence sharing agreement ) மீதமுள்ள நான்கு நாடுகளுக்கும் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்.

 அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திய பிரிட்டன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

லிபிய வம்சாவளியைச் சேர்ந்த 22 வயது அபேடி என்பவரால் நடத்தப்பட்ட மான்செஸ்டர் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரியில் அபேடியை அறிந்த இரண்டு பேர், அவரது தீவிரவாத கருத்துகள் குறித்து அவசரத் தொலைத் தொடர்பு எண்ணுக்கு அழைத்து காவல்துறையினரிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

சிதறிக்கிடந்த பொருட்களின் (இடிபாடுகளின்) புகைப்படங்கள் இங்கிலாந்தின் விருப்பத்திற்கு எதிராக அபிடியின் அடையாளத்தை, அமெரிக்கா வெளிப்படுத்தியதால் உள்துறை செயலாளர் அம்பர் ரூட் "எரிச்சலடைந்தார்" என்றும், இதுபோன்ற செயல்கள் "மீண்டும் நடக்கக்கூடாது" என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

 

எனினும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து சிதறியுள்ள பொருட்கள் கொண்ட புகைப்படங்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டதற்கு, பிரிட்டன் சிவில் நிர்வாக அதிகாரிகள் (வொயிட் ஹால்) மற்றும் பிரிட்டன் காவல்துறை உயரதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.

புகைப்படங்கள் கசிந்ததற்கு வெள்ளை மாளிகை காரணம் அல்ல, அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்பே காரணம் என இங்கிலாந்து அதிகாரிகள் நம்புவதாக பிபிசி பாதுகாப்பு நிருபர் கோர்டன் கோரேரா தெரிவித்தார்.

அமெரிக்கா இரண்டாவது முறையாக இதுபோன்ற தகவலை கசியவிட்டிருப்பதாகவும், இந்த நடவடிக்கை அமெரிக்காவின் மீது "அவநம்பிக்கையையும், அதிர்ச்சியையும்" ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டன் அரசுத்தரப்பு தெரிவிக்கிறது.

 அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திய பிரிட்டன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இது நம்பிக்கையை மீறி "அங்கீகாரமற்ற வெளிப்படுத்தல்" என்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான புலன் விசாரணையை" சிதைத்துவிட்டதாகவும் பிரிட்டனின் தேசிய காவல்துறை தலைவர்கள் சபை கூறுகிறது.

சந்தேக நபர் பற்றிய தகவல்கள் வெளியானதால், அவருடன் தொடர்புடையவர்களை கைது செய்ய 36 மணி நேரமானது என்றும், எந்தவித துப்பும் இன்றி, பயங்கரவாத எதிர்ப்புத் துறை புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

புகைப்பட கசிவு தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள கிரேட்டர் மான்சசெஸ்டர் மேயர், இது குறித்து அமெரிக்க தூதரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

2005, ஜூலை ஏழாம் தேதியன்று நடைபெற்ற லண்டன் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்த புலனாய்வு தகவல்களை ஏற்கனவே அமெரிக்கா வெளியிட்டிருப்பதை குறிப்பிட்டு, தகவல்களை கசியவிடுவது அமெரிக்காவுக்கு புதிதல்ல என்றும், அந்த சமயத்தில் லண்டன் காவல்துறைத் தலைவராக இருந்த லார்ட் பிளேர் கூறுகிறார்.

"அந்த சம்பவத்தின்போது குண்டுகள் தயாரிக்கப்பட்டிருந்ததைப் பற்றிய முழுமையான விவரங்களை அமெரிக்கா வெளியிட்டதற்கு பிறகான நிலையை தற்போதைய தகவல் கசிவு நினைவூட்டுகிறது" என்று அவர் கூறினார்.

"விஷயங்களை வெளியிடும் விதத்தில் அமெரிக்கா வித்தியாசமாகவே செயல்படுகிறது. இது மிகவும் கடுமையான விதிமீறல், எனவே நான் அச்சப்படுகிறேன்" என்று லார்ட் பிளேர் கூறுகிறார்.

தாக்குதல் குறித்த பிற முன்னேற்றங்கள்:

• கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் விதிங்டனில் உள்ள ஒரு முகவரியில் வியாழனன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டது உட்பட, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் எட்டு பேரை காவலில் எடுத்துள்ளனர்.

• இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பிரிட்டன் நேரப்படி காலை 11 மணிக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலியை இங்கிலாந்து அரசு அறிவித்தது.

• கன்சர்வேடிவ் மற்றும் லேபர் கட்சியினர் உள்ளூர் பொதுத் தேர்தல் பிரசாரத்தை வியாழனன்றும், தேசிய தேர்தல் பிரசாரத்தை வெள்ளியன்றும் மேற்கொள்ளவிருக்கின்றனர்.

• ஐரோப்பிய லீக் கால்பந்துப் போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ரசிகர்கள், திங்கட்கிழமையன்று நடைபெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

http://www.bbc.com/tamil/global-40048072

Categories: merge-rss, yarl-world-news

சாம்பார் தென்னிந்திய உணவு இல்லை? அதுக்கும் ஒரு வரலாறு இருக்கு!

நாவூற வாயூற - Thu, 25/05/2017 - 14:28
சாம்பார் தென்னிந்திய உணவு இல்லை? அதுக்கும் ஒரு வரலாறு இருக்கு!
 

தமிழர்களையும் சாம்பாரையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழகம் என்றாலே இட்லி, சாம்பார்,  சட்னிதான் நினைவுக்கு வரும். பிரிட்டன் மகாராணி முதல் ஆப்பிரிக்கர்கள் வரை தமிழகம் வந்தால், ஒரு முறையாவது சாம்பாரை டேஸ்ட் பார்க்காமல் போக மாட்டார்கள். பல ஹோட்டல்களில் சாம்பாரின் சுவைக்காகவே இட்லி சாப்பிடும் வட இந்தியர்களை, வெளிநாட்டவர்களைப் பார்க்க முடியும். முருங்கைக்காய் சாம்பார், பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சாம்பார், அவரை சாம்பார் என இப்போது விதவிதமாகச் சமைக்கிறோம்.

சாம்பார் மராட்டிய மன்னர்கள் தமிழகத்துக்கு அளித்த கொடை

சாம்பார் இல்லாத எந்த விஷேச நிகழ்வும் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே நடந்துவிடாது. விருந்திலிருந்து அன்றாட உணவு வரை ஏதாவது ஒரு வடிவத்தில் சாம்பார் இடம்பெற்றிருக்கும். தமிழரின் உணர்வுடன் உயிருடன் கலந்துவிட்ட விஷயம் சாம்பார். இத்தனை காலம் சாம்பார், தமிழர்களின் பாரம்பர்ய சமையல் என்று இறுமாப்புடன் இருந்தோம். இப்போது, அதற்கும் பங்கம் வந்து விட்டது. சாம்பார்கூட மராத்தியர்களின் கண்டுபிடிப்பாம். தமிழகத்துக்கு மராத்தியர்கள் வழங்கிய கொடை என்கிறார்கள். 

தமிழகத்தின் தன்னிகரில்லாத் தலைநகரமாக விளங்கிய நகரம் தஞ்சை, நாயக்கர்களின் பிடியில் இருந்தது. கி.பி.1674 ஆம் ஆண்டு மராத்திய மன்னர் சிவாஜியின் ஒன்று விட்ட சகோதரர் வெங்கோஜி தஞ்சையைக் கைப்பற்றினார். வீர சிவாஜியின் ஆதரவுடன் மராத்தியர்கள் தஞ்சை மண்ணில் நிலை கொண்டனர். வெங்கோஜியைத் தொடர்ந்து, சாஹூஜி -1. சரபோஜி -1 துக்காஜி, பிரதாப்சிங், துக்கோஜி, சரபோஜி-2 ஆகியோர் தஞ்சையை ஆண்டனர். 

இரண்டாம் சரபோஜி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலத்தில் (1798 ஆம் ஆண்டு) இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆங்கிலேயர்களை எதிர்க்க சரபோஜி விரும்பவில்லை. அவர்களுடன் நட்பு பாராட்டி அமைதியாக வாழவே விரும்பினார். இவரது காலத்தில், தஞ்சை மண்ணில் கலைகள் செழித்தன. கல்வி பெருகியது. சரபோஜி உணவுப் பிரியரும்கூட. 

தஞ்சை அரண்மனையில் பிராமண சைவ உணவுக்கு ஒரு சமையலறை, அசைவ உணவுக்குத் தனிச் சமையலறை, ஆங்கிலேய உணவுக்கு ஒரு சமையலறை எனத் தனித்தனிச் சமையலறைகள் இருந்துள்ளன. சமையலில் நிபுணத்துவம் பெற்றவர்களைப் பணிக்கு வைத்திருந்தார். தஞ்சை அரண்மனை  சமையற்காரர்கள் சிலர், சென்னை ஜார்ஜ் கோட்டையில் இங்கிலீஸ் சமையலையும் கற்று, அதிலும் மாஸ்டராகத் திகழ்ந்துள்ளனர். அதுபோல், மராத்திய உணவு வகைகளில் திறமை வாய்ந்த இரு சமையற்கலைஞர்களையும் சரபோஜி, ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அரண்மனையில் தயாரிக்கப்படும் விதவிதமான உணவுகளை சமையற்காரர்கள் சொல்லச்சொல்லக் குறிப்பெடுத்து வைக்கும் வழக்கமும் சரபோஜிக்கு இருந்துள்ளது. சரபோஜியின் அரண்மனையில் பணியாற்றிய நாராயண அய்யா, சிம்னு அப்பா, பட்லர் வெங்கட்ஸ்வாமி ஆகியோர் வாய்மொழியாகக் கூறிய விஷயங்கள் கையெழுத்தாகவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சமையற்காரர்கள் எந்த உணவைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், சமையல் முறை, அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், விழாக்காலங்களில் சமைக்கப்பட்ட உணவுகள் முதற்கொண்டு 500 குறிப்புகள்' சரபேந்திர பக்ஷாஸ்திரம் ' என்ற பெயரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 

சரி... சாம்பார் உருவானதாகச் சொல்லப்படும் கதைக்கு வருவோம். கடந்த ( 1684- 1712) காலகட்டத்தில் தஞ்சையை சாஹூஜி ஆண்டு கொண்டிருந்தார். தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னரான வெங்கோஜியின் மகன்  இவர். சாஹூஜிக்கு  'அமிதி ' என்ற புளிக்குழம்பு மிகவும் பிடிக்கும். மராட்டியர்கள் புளிக்குழம்பு வைப்பதற்குப் பெயர் பெற்றவர்கள். வழக்கமாக நாம் பயன்படுத்தும் புளியைப் பயன்படுத்தி புளிக்குழம்பை அவர்கள் சமைக்கவில்லை. கோகம் எனப்படும் ஒரு வகைப் புளியையே பயன்படுத்திவந்தனர். மகாராஷ்டிரம், குஜராத்தில்தான் இந்த வகைப் புளி அதிகம் விளைகிறது. ஒருநாள் அரண்மனை போஜன சாலையில், கோகம் இல்லாமல் போய்விட்டது.

அந்தச் சமயத்தில் தமிழகத்தில் விளையும் புளியம்பழத்தை வைத்து, துவரம்பருப்பு, காய்கறி, மசாலா ஆகியவற்றைச் சேர்த்து ஒரு குழம்பு வைத்திருக்கிறார்கள். அதுதான் சாம்பார். மன்னர் சாஹூஜிக்கு சாம்பார் மிகவும் பிடித்துப்போனது. மராட்டிய அரசின் இரண்டாவது மன்னரான ஷாம்பாஜி, (வீரசிவாஜியின் மூத்த மகன்) தஞ்சைக்கு ஒருமுறை விருந்துக்கு வந்துள்ளார். அன்றைய தினத்தில், இந்த வகைக் குழம்பைத் தயாரித்துப் பரிமாறியுள்ளார். விருந்துக்கு வந்த அவருக்கும் சாம்பாரின் சுவை பிடித்துப்போனது. அந்தக் குழம்புக்கு  'ஷாம்பாஜி' பெயரையே சூட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதான் சாம்பாருக்கு அடிப்படையாம். இப்படித்தான் சாம்பார் தமிழகத்துக்கு வந்துள்ளது. அதே வேளையில், தமிழகத்துக்கு முன்னரே ஆந்திரத்தில் சாம்பார் சமைக்கப்பட்டதாகவும் சொல்பவர்கள் உண்டு. 

 

பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட போஜன குதூகலம், சரபேந்திர பக்ஷாஸ்திரம் ஆகிய இரு புத்தகங்கள்  மராட்டிய உணவு செய்முறையை விளக்குபவை. இரண்டாம் சரபோஜி காலத்தில் புதுப்பிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தில் இந்த நூல்கள் பாதுகாத்துவைக்கப்பட்டுள்ளன.

http://www.vikatan.com/news/tamilnadu/90339-is-sambar-south-indian-dish.html

Categories: merge-rss

இலங்கை அவுஸ்திரேலியாவிடையே மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்து..!

ஊர்ப்புதினம் - Thu, 25/05/2017 - 14:23
இலங்கை அவுஸ்திரேலியாவிடையே மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்து..!

 

அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மூன்றுவிதமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

06-13-1024x577.jpg

08-7-1024x524.jpg

இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவுக்கிடையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறித்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் பகிர்ந்துள்ளது.   

aus2.jpg

09-7-1024x704.jpg

மேலும் கான்பெரா நகரில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய மத்திய பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தையில் பல்வேறு பிரிவுகளில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துதல் மற்றும் புரிந்துணர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கை பிரதி வௌிவிவகதார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மற்றும்  அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜூலி பிசோப்  ஆகியோர் இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டுப்பிரகடனம் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

aus.jpg

அத்தோடு அவுஸ்திரேலிய தொழில்நுட்ப நிறுவன பிரதிநிதிகளுடன் அணு விஞ்ஞானம் தொடர்பான உடன்படிக்கையும், ஜனாதிபதியின் சிறுநீரக நிவாரணம் தொடர்பான விஷேட செயலணி பிரதிநிதிகளுகிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும், மேலும் இருநாட்டு அபிப்பிராயம் தொடர்பில் பிரதிநிதிகளுக்கிடையிலான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Categories: merge-rss, yarl-category

ஞானசேர தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள்

ஊர்ப்புதினம் - Thu, 25/05/2017 - 14:22
ஞானசேர தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள்

 

 

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசேர தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

therooo.jpg

 

 
Tags

http://www.virakesari.lk/article/20368

Categories: merge-rss, yarl-category

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் கையில்

ஊர்ப்புதினம் - Thu, 25/05/2017 - 11:14
வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் கையில்

vikki.jpg

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட  குற்றச்சா ட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான விசாரணை குழுவின் இறுதி அறிக்கை தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

வடமாகாணசபையின் 93ம் அமர்வு இன்றைய தினம் மாகணசபையின் பேரவை கட்டடத்தில் நடைபெற்றது.  இதன் போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா ,

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சா ட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான விசாரணை குழு ஒன்றை முதலமைச்சர் உருவாக்கினார் எனவும்  அந்த குழுவின் இறுதி அறிக்கை வந்துவிட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு முதலமைச்சர் பதிலளிக்கையில், கடந்த 19.05.2017ம் திகதி இறுதி அறிக்கை கிடைத்துள்ளது எனவும்

 குறித்த விசாரணை குழுவின் இறுதி அறிக்கை தற்சமயம் ஆராயப்பட்டு வருவதாவும் அடுத்த அமர்வில் அந்த அறிக்கையை சபைக்கு சமர்பிப்பதா? இல்லையா? என்பது  அறிவிப்பேன் எனவும் பதிலளித்தார்

http://globaltamilnews.net/archives/27952

Categories: merge-rss, yarl-category

டாமினோஸ் பீட்சா தெரியும்...ஆனா, காசிமேடு அட்லாப்பம் தெரியுமா..? #New Snack

நாவூற வாயூற - Thu, 25/05/2017 - 10:51
டாமினோஸ் பீட்சா தெரியும்...ஆனா, காசிமேடு அட்லாப்பம் தெரியுமா..? #New Snack
 
 

foodkasimedu_14173.jpg

'ஒன் மீடியம் மார்கரிட்டா பீட்சா வித் டபுள் சீஸ்... அண்ட் மயொனைஸ் பெப்பர் மிட்...’ என ஸ்டைலிஷ் ஆக ஆர்டர் செய்து சாப்ட்டிருப்பீங்க. ஆனா, அந்த ஸ்டைலிஷ் பீட்சாவுல என்ன சத்து இருக்கும்னு எப்போதாவது யோசிச்சிருப்போமா? 

‘எதுக்கு சார், மைதா மாவு போட்டு வெந்தும் வேகாமலும் திண்ற. நம்ம ஏரியா பக்கம் வா சார்...சூடா கண்ணு முன்ன அட்லாப்பம் செஞ்சி தாரேன்..’ எனக் கூவி அழைத்த நாயகம் அக்காவின் ரெஸ்ட்டாரண்ட், காசிமேட்டுல ரோட்டோர செட்-அப்பில் அமைஞ்சிருக்கு. 

அதென்ன ’அட்லாப்பம்’னு கேட்குறீங்களா..? கொஞ்சம் பொறுங்க பாஸ். நாயகம் அக்காவே ரெஸிப்பி சொல்றாங்க. ’பச்சரிசி மாவு, ரவை, கடலைப்பருப்பு, தேங்காய், சர்க்கரை, முட்டை, ஏலக்காய்,  திராட்சை, முந்திரி கூட கொஞ்சம் நெய் சேர்த்து, தட்டுல கொட்டி மண் பானையில வெச்சு,  தம் போட்டு இறக்கினா, காசிமேட்டு ‘அட்லாப்பம்’ ரெடி.

சுவையில உருக நினைச்சா, அப்டியே காசிமேடு பக்கம் போங்க...அதுக்கு முன்ன ஒரு டெமோ வேணுமா, வீடியோ லிங்க் இருக்கவே இருக்கு பாத்துக்கோங்க..!

 

http://www.vikatan.com

Categories: merge-rss

''ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை. எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை'' ; மாணவியின் தற்கொலைக்கான காரணம் வெளியாகியது

ஊர்ப்புதினம் - Thu, 25/05/2017 - 10:43
''ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை. எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை'' ;  மாணவியின் தற்கொலைக்கான காரணம் வெளியாகியது

 

 

என்னைத் தேட வேண்டாம் என்னை சந்தோஷமாக வாழவிடவில்லை. இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றேன். எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை என மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலைசெய்து கொண்ட மாணவியினால் எழுதப்பட்ட  3 பக்கங்கள் கொண்ட கடிதமொன்று பொலிஸாரிடம் கிடைத்துள்ளது.

fsfa.jpg

மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் குறித்த மாணவி நேற்று மாலை  பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் இறுதியாக எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது.

18762392_10207385698915407_169086883_n.j

உயிரிழந்த மாணவி மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என தெரியவந்தள்ளது.

18685381_10207385698835405_1351777039_n.

மாணவி தனது சொந்த இடமான முழங்காவில் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் மன்னார் உப்புக்களம் பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றபோதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

18741415_10207385699035410_1038878113_n.

இந்த அனர்த்தம் இடம்பெறும் முன்னர் மூன்று பக்கம் அடங்கிய கடிதம் ஒன்றை மாணவி எழுதி வைத்துள்ளார்.

சம்பவம் பற்றிமேலும்தெரியவருவதாவது,

முழங்காவில் பகுதிக்குச் சேர்ந்த தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என்ற மாணவி மன்னார் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

18679064_10207385699355418_519123820_n.j

குறித்த மாணவி முழங்காவிலில் உள்ள தனது கிராமத்தில் இருந்து உடைகள் அடங்கிய பொதியொன்றுடன் மன்னாரில் உள்ள தனது வாடகை வீட்டை நோக்கி வந்துள்ளார்.

 

இந்த நிலையில் குறித்த மாணவி மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றின் முன் நேற்று மாலை பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் போது மாணவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

மாணவியின் உடலம் அதே புகை1478-2-ffccbc93f50f40e0366d6728f380ee56.யிரதத்திலேயே ஏற்றப்பட்டு மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு, அவர் தன்னுடன் எடுத்துவந்த பொதியும் சோதனை செய்யப்பட்டது.

 

இதன் போது குறித்த மாணவி மனதை வேதனைக்கு உள்ளாக்குகின்ற வகையில் சுமார் 3 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்தது.

 

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

ஏன் அம்மா எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் சந்தோஷம் , அன்பு, பாசம் என்பவற்றை நான் இழந்து நிற்கிறேன். உங்களால் தான் அதை நான் இழந்து தனியாக தவிக்கின்றேன். அம்மா உங்களுக்குத் தெரியுமா நாள் அம்மா அம்மா என்று பாசமுடன் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை.

எனக்காக உள்ளவர்களுடன் சண்டையிட்டு என்னை அவர்களிடம் இருந்து பிரிக்க நினைக்கிறீர்கள். தொடர்ந்தும் எனக்கு துரோகம் செய்ய நினைக்கிறீர்கள் என 3 பக்கங்கள் கொண்ட குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

1478-6-25c5893d63f0c95a718d84463fca2b0d.

இதேவேளை, எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனது வாழ்க்கையில் சந்தோசம் இல்லை எனவும் இதன் காரணமாகவே குறித்த முடிவை எடுத்துள்ளதாகவும் நான் இறப்பதற்கு காரணம் என்று சொன்னால் எனது குடும்பமே காரணம் எனவும் அக்கடிதத்தில் மேலும் எழுதப்பட்டுள்ளது.

 

தற்போது மாணவியின் சடலம் மன்னார் பொதுவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20355

Categories: merge-rss, yarl-category

தென்னாப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டி: மார்கன் சதத்தால் இங்கிலாந்து வெற்றி

தென்னாப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டி: மார்கன் சதத்தால் இங்கிலாந்து வெற்றி

 

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இயன் மார்கன் சதத்தால் இங்கிலாந்து 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
 மார்கன் சதத்தால் இங்கிலாந்து வெற்றி
 
லீட்ஸ்:

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் குவித்தது. கேப்டன் இயன்மோர்கன் 93 பந்தில் 107 ரன் எடுத்தார்.

201705251220397286_enng._L_styvpf.gif

ஹால்ஸ் 61 ரன்னும், மொயின் அலி 77 ரன்னும் எடுத்தனர். 340 ரன் இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர் டி-காக் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்த அம்லா - பாப் டு பிளிஸ்சிஸ் ஜோடி சிறப்பாக விளையாடி இருவரும் ஆட்டமிழந்த பிறகு விக்கெட்டுகள் சரிந்தன. அம்லா 73 ரன்னும், டு பிளிஸ்சிஸ் 67 ரன்னும், கேப்டன் டிவில்லியர்ஸ் 45 ரன்னும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா 45 ஓவரில் 267 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 72 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் போட்டி வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/25122042/1087066/England-won-by-72-runs-against-South-Africa.vpf

Categories: merge-rss

3 நாடுகள் கிரிக்கெட்: வங்காளதேசத்திடம் நியூசிலாந்து தோல்வி

3 நாடுகள் கிரிக்கெட்: வங்காளதேசத்திடம் நியூசிலாந்து தோல்வி
 

3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதின. இதில் வங்காளதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

 
 
 வங்காளதேசத்திடம் நியூசிலாந்து தோல்வி
 

நியூசிலாந்து, அயர்லாந்து, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி தொடர் அயர்லாந்தில் நடந்தது. இதன் 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதின.

முதலில் விளையாடிய நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய வங்காளதேசம் 48.2 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 271 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

தமீம் இக்பால், சபீர் ரஹ்மான் தலா 65 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 45 ரன்னும், மகமத்துல்லா 46 ரன்னும் எடுத்தனர். அந்த போட்டி தொடரில் 12 புள்ளிகள் பெற்ற நியூசிலாந்து கோப்பையை வென்றது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/25140144/1087098/3-Countries-Cricket-New-Zealand-defeat-to-Bangladesh.vpf

Categories: merge-rss

ஆசியாவில் முதல்முறையாக ஓரினசேர்கைக்கு அனுமதி..!

ஆசியாவில் முதல்முறையாக ஓரினசேர்கைக்கு அனுமதி..!

 

 

ஆசியப்பிராந்திய நாடுகளிலேயே முதன்முறையாக ஓரினசேர்கைக்கு அனுமதியளிக்கும் தீர்ப்பொன்றை தாய்வான் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

same-sex-marriage.jpg

மேலும் ஓரின சேர்க்கைக்கு தடைவிதிக்குமாரசின் உத்தரவை எதிர்த்து தாய்வானில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஓரின திருமணத்தை அங்கீகரிக்கும் உத்தரவை கோரி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வலக்கை விசாரித்துள்ள அந்நாட்டு உச்ச நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையை தடுப்பது, பொதுமக்களின் அடிப்படை உரிமையை தடுப்பதற்கு ஈடாகுமெனவும், அதனால் ஓரினசேர்கைக்கு அனுமதி அளிக்கும்படி அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. 

taiwan-same-sex-marriage.jpg

அத்தோடு மனித பகுத்தறிவு வாதங்களை கருத்திற்கொண்டு, ஓரினசேர்கைக்கு ஏற்புடைய சட்டங்களை உருவாக்கும்படியும் பணித்துள்ளது. இதன் மூலம் ஆசிய நாடுகளில் முதலாவது ஓரினசேர்க்கையை அங்கீகரித்த நாடாக தாய்வான் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20354

Categories: merge-rss, yarl-world-news

முத்தமிட்டு மகிழ்ந்த மங்கள

ஊர்ப்புதினம் - Thu, 25/05/2017 - 09:39
முத்தமிட்டு மகிழ்ந்த மங்கள
 

image_33a181213f.jpgஅமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று (25), தனது புதிய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் தற்போதைய நிதியமைச்சருமான மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார்.

இந்நிலையில், இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட ரவிக்கு, மங்களவின் வாழ்த்துக்கள் முத்தமாகப் போய்ச் சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/முத்தமிட்டு-மகிழ்ந்த-மங்கள/175-197311

Categories: merge-rss, yarl-category

பந்து கழுத்தில் தாக்கியதில் நிலைகுலைந்த மெக்ஸ்வெல் (காணொளி இணைப்பு)

பந்து கழுத்தில் தாக்கியதில் நிலைகுலைந்த மெக்ஸ்வெல் (காணொளி இணைப்பு)

 

 

அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிலேன் மெக்ஸ்வெல் துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவரது கழுத்தில் பந்து தாக்கியுள்ளது.

 

இதில் சற்று நிலைத்தடுமாறிய மெக்ஸ்வெல் தரையில் விழுந்துள்ளார்.

மைதானத்தில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மெக்ஸ்வெலை ஓடிவந்து கவனிக்க, அதிஷ்டவசமாக அவருக்கு எவ்வித பாரிய உபாதைகளும் ஏற்படவில்லை.

எனினும் பந்து தாக்கியதற்கு பிறகு மெக்ஸ்வெல் அவரது அறைக்கு சென்றுவிட்டார்.

24maxi1.jpg

இதனால் அவர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ள நிலையில், “அவருக்கு பெரிதான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.  அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது” என ஆஸி. அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஊடகவியலாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

24maxi2.jpg

இதேவேளை அதே தினத்தில் வலைப்பயிற்சியின் போது ஆஸி. வீரர் மெத்தியுவ் வேடிற்கும் அபாயகரமான முறையில் பந்து ஹெல்மட்டில் தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

asff.jpg

 
 

http://www.virakesari.lk/article/20348

Categories: merge-rss

தரவரிசையில் முன்னணி நாடுகளைப் பின்தள்ளி அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ்!

தரவரிசையில் முன்னணி நாடுகளைப் பின்தள்ளி அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ்!

 

 

சர்வரேச கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பங்களாதேஷ் அணி 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

asfasfsf.jpg

உலக் கிண்ணத்தை வென்றுள்ள மூன்று அணிகளை பின்தள்ளி 6வது இடத்துக்கு பங்களாதேஷ் அணி முன்னேறியுள்ளமை இதுவே வரலாற்றின் முதல் தடவையாகும்.

பங்களாதேஷ் அணி 93 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளதுடன்,  இலங்கை 93 புள்ளிகளுடன் 7வது இடத்தையும், 88 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 8வது இடத்தையும் பிடித்துள்ள அதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணி 79 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளது.

Capture.JPG

பங்களாதேஷ் அணி முதன் முறையாக 6வது இடத்துடன் சம்பின்ஸ் கிண்ணத்தில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தரவரிசை பட்டியலில் தென்னாபிரிக்க அணி முதலிடத்தில் உள்ளதுடன், அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20352

Categories: merge-rss

ஞானசாரதேரருக்கு அரசு கடிவாளமிடுவது கடினம் இப்படிக் கூறுகிறார் மகிந்த

ஊர்ப்புதினம் - Thu, 25/05/2017 - 08:43
ஞான­சா­ர­தே­ர­ருக்கு அரசு கடி­வா­ள­மி­டு­வது கடி­னம் இப்­ப­டிக் கூறு­கி­றார் மகிந்த
 
ஞான­சா­ர­தே­ர­ருக்கு அரசு கடி­வா­ள­மி­டு­வது கடி­னம்
 

அன்று ஞான­சார தேர­ரைக் கைது செய்­தால் அரசை விட்டு வெளி­யே­று­வ­தா­கக் கூறிய சம்­பிக்க போன்­ற­வர்­கள் இந்த அர­சில் இருக்­கும்­வரை ஞான­சார தேர­ருக்கு எதி­ராக நீதியை நிலை­நாட்­டு­வது கடி­ன­மான ஒன்று என்றே தோன்­று­கின்­றது.

இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜபக்‌ச தெரி­வித்­தார்.

நாட்­டில் சகல மக்­க­ளி­ன­தும் அதி­ருப்­தி­யைப் பெற்­றுள்ள இந்த அரசு செப்­ரெம்­ப­ரில் காலா­வ­தி­யா­கும் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லைப் பிற்­போ­டு­வ­தற்கு அவ­சர காலச் சட்­டத்தை மீண்­டும் கொண்­டு­வ­ரு­வ­தைத் தவிர வேறு வழி இல்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

அவ­ரது இல்­லத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டல் ஒன்­றில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அங்கு அவர் மேலும் தெரி­விக்­கை­யில்,

நாளுக்கு நாள் புகழ் இழந்து வரும் இந்த அரசு உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­த­லைச் சாக்­குப்­போக்­குச் சொல்­லிப் பிற்­போட்டு வரு­கின்­றது. ஆனால், செப்­ரெம்­ப­ரில் காலா­வ­தி­யா­கும் மூன்று மாகாண சபை­க­ளை­யும் அரசு கலைத்து தேர்­தலை அறி­விக்­க­வேண்­டும்.

ஆனால், அரசு தேர்­தலை எதிர்­கொள்­ளும் ஸ்திர­மான நிலை­யில் இல்லை. நாம் மாகாண சபை அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­று­வோம் என அரச புல­னாய்­வுப் பிரிவு அர­சுக்­குத் தெரி­வித்­துள்­ளது எனத் தக­வல் கிடைத்­துள்­ளது.

தினம் தினம் அர­சுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்­க­ளும் போராட்­டங்­க­ளும் இடம்­பெ­று­கின்­றன. இவற்றை அடக்­க­வும், தேர்­த­லைப் பிற்­போ­ட­வேண்­டும் என்­றா­லும் நாட்­டில் அவ­ச­ர­கா­லச் சட்­டம் வர­வேண்­டும். நாட்­டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலை­மை­க­ளைப் பார்க்­கும்­போது அதற்­கான முயற்­சி­கள் நடை­பெ­று­கின்­றதோ என்ற சந்­தே­கம் எழு­கின்­றமை தவிர்க்க முடி­யா­மல் உள்­ளது.

இந்த நாட்­டில் போரை வெற்­றி­கொள்ள முஸ்­லிம்­கள் பெரும் பங்­க­ளிப்பு வழங்­கி­யுள்­ள­னர். இன்று நடப்­ப­வை­கள் சிங்­கள – முஸ்­லிம் மக்­க­ளி­டையே உள்ள நல்­லு­ற­வுக்­குக் குந்­த­கம் விளை­விக்­கும் வகை­யில் அமைந்­துள்­ளன – என்­றார்.

http://uthayandaily.com/story/4039.html

Categories: merge-rss, yarl-category

அரச வேலைகளில் வடக்கு- கிழக்குக்கு அரசு முன்னுரிமை நேற்றுச் சபையில் அறிவிப்பு

ஊர்ப்புதினம் - Thu, 25/05/2017 - 08:42
அரச வேலை­க­ளில் வடக்­கு-­ கி­ழக்­குக்கு அரசு முன்­னு­ரிமை நேற்­றுச் சபை­யில் அறி­விப்பு
 

அரச வேலைக்­கான ஆள்­சேர்ப்­பின்­போது வடக்­கு-கி­ழக்கு பட்­ட­தா­ரி­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டும். 35 வய­தைத் தாண்­டி­யுள்ள பட்­ட­தா­ரி­கள் தொடர்­பில் சிறப்­புக் கவ­னம் செலுத்­தப்­ப­டும். இவ்­வாறு அரச நிர்­வா­கத்­துறை அமைச்­சர் மத்­தும பண்­டாரா நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுத் தெரி­வித்­தார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், பட்­ட­தா­ரி­க­ளின் பிரச்­சினை தொடர்­பில் சபை ஒத்­தி­வைப்­புப் பிரே­ர­ணை­யைக் கொண்டு வந்­தி­ருந்­தார்.

‘வடக்கு மாகா­ணத்­தில் 4 ஆயி­ரத்து 429 வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளும், கிழக்கு மாகா­ணத்­தில் 4 ஆயி­ரத்து 500 இற்­கும் மேற்­பட்ட வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளும் உள்­ள­னர்.

இந்த நாட்­டில் காணப்­ப­டும் ஏனைய மாகா­ணங்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளின் எண்­ணிக்கை வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளில் அதி­க­ள­வில் காணப்­ப­டு­கின்­றது. வடக்­கு-­கி­ழக்கு பட்­ட­தா­ரி­க­ளுக்கு நிரந்­தர வேலை­கள் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வேண்­டும். அதன் மூல­மாக நாட்­டின் அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுக்­க­வேண்­டும்’ என்று இரா.சம்­பந்­தன் அர­சைக் கோரி­னார்.

இதற்­குப் பதி­ல­ளித்து இறு­தி­யில் உரை­யாற்­றிய அரச நிர்­வா­கத்­துறை அமைச்­சர் மத்­தும பண்­டாரா, அரச வேலைக்­கான ஆள்­சேர்ப்­பின்­போது வடக்கு – கிழக்கு மாகா­ணப் பட்­ட­தா­ரி­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­ப­டும். அத்­து­டன் அங்­குள்ள 35 வய­தைக் கடந்த பட்­ட­தா­ரி­கள் தொடர்­பில் சிறப்­புக் கவ­னம் செலுத்­தப்­ப­டும் – என்­றார்.

http://uthayandaily.com/story/4047.html

Categories: merge-rss, yarl-category