merge-rss

ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில் காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்

ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில் காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்

spain-portugal-wild-fire.jpg
ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளில் உள்ள காட்டுப் பகுதிகளில்  ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.   ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் எல்லையை அண்மித்துள்ள  காட்டுப்பகுதிகளில் நேற்றிலிருந்து சுமார் 520 இடங்களில் காடுகள் தீப்பற்றி எரிந்து வருவதாகவும் இந்த தீயை அணைக்கும் பணியில் சுமார் 4500 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று போர்த்துக்கல்லின்  எல்லையை அண்மித்துள்ள ஸ்பெயின் நாட்டின்  கலிசியா பகுதியிலும் சுமார் 17 காடுகள் தீப்பற்றி எரிந்து வருவதாகவும்  இங்கு மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றும் வீசுவதால் வேகமாக தீ பரவிவருவதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 லட்சம் மக்கள் வாழும் இந்த பகுதியில் தீக்கு பயந்து வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில்  தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spain-portugal-wild-fire-2.jpg

http://globaltamilnews.net/archives/45586

Categories: merge-rss, yarl-world-news

சக்தி டிவி செய்திகள் 16-10-2017

ஊர்ப்புதினம் - Mon, 16/10/2017 - 18:52

சக்தி டிவி செய்திகள் 16-10-2017

Categories: merge-rss, yarl-category

தெரேசா மே ஜீன் குளோட் ஜங்கருடன் முக்கிய பேச்சுவார்த்தை :

தெரேசா மே ஜீன் குளோட் ஜங்கருடன் முக்கிய பேச்சுவார்த்தை :

may.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரசல்ஸிற்கு  பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இன்றும் சில மணிநேரத்தில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜீன் குளோட் ஜங்கருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவருடனான பேச்சுவார்த்தைகளின்போது  பிரித்தானிய  பிரதமர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்தில் எந்த வித விட்டுக்கொடுப்புகளையும் மேற்கொள்ள மாட்டார் என பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் சில வாரங்களிற்கு முன்னர் தான் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட விடயங்களையே பிரதமர் மீண்டும் வலியுறுத்துவார் என அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நிதியை பிரித்தானியா எவ்வாறு வழங்கப்போகின்றது என்பதை தெரிவிக்கவேண்டும் என ஐரோப்பிய ஓன்றிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

பிரித்தானியா இதனை தெளிவுபடுத்தினாலே அடுத்த கட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் என ஐரோப்பிய ஓன்றியம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/45582

Categories: merge-rss, yarl-world-news

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முத்தமிழ் விழா

ஊர்ப்புதினம் - Mon, 16/10/2017 - 18:08
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முத்தமிழ் விழா

IMG_3559.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முத்தமிழ் விழா இன்று( 16-10-2017) கிளிநொச்சி கூட்டுறவாளர்  மண்டபத்தில இடம்பெற்றது. பிற்பகல் ஒரு மணிக்கு பாடசாலையின் முதல்வர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற  நிகழ்வில்  பாடசாலை மாணா்களின் நடனங்கள். இசை, நாடகம், பேச்சு உள்ளிட்ட பல நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

மாகாண மற்றும் தேசிய ரீதியில் பாடசாலை மட்டங்களில் வெற்றிப்பெற்ற சிறப்பாக பல கலை நிகழ்வுகளும் முத்தமிழ் விழாவில் அரங்கேறின. இந்த நிகழ்வில் கல்வி அதிகாரிகள் பாடசாலைகளின் அதிபா்கள், வைத்தியர்கள், ஆசியரியர்கள் பெற்றோர்கள்  மாணவா்கள் என பலா் கலந்துகொண்டனர்

IMG_3526.jpgIMG_3543.jpgIMG_3544.jpgIMG_3549.jpg

http://globaltamilnews.net/archives/45574

Categories: merge-rss, yarl-category

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 16/10/17

 

இராக்கில் பகையான நட்பு; குர்து - இராக்கிய படைகளுக்கு இடையில் அதிகரிக்கும் மோதல்; முப்பத்தி ஓரு வயதே ஆன உலகின் இளம் தலைவரை தேர்ந்தெடுத்த ஆஸ்டிரிய மக்கள்! ஆனால் ஆட்சியமைப்பதற்காக ஜெபாஸ்டியன் கூர்ட்ஸ், தீவிர வலதுசாரிகளோடு கைகோர்ப்பாரா? மற்றும் ஆப்ரிக்க கலைகளுக்கு அதிகரிக்கும் அங்கீகாரம்! வெனிஸில் நடக்கும் கலைக்கண்காட்சியிலிருந்து பிபிசி தரும் பிரத்யேக செய்திக்குறிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Categories: merge-rss, yarl-world-news

நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி FIFA தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில்

நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி FIFA தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில்
pic-cnn-696x392.jpg
 

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் இன்று (16) புதுப்பிக்கப்பட்ட FIFA உலக தரவரிசையில் நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.  

கடந்த ஒரு மாத காலமாக சர்வதேச அளவில் இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் மற்றும் நட்புறவு போட்டிகளின் முடிவுகள் அடிப்படையிலேயே தரவரிசையில் புதிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும் உலக தரவரிசையின் முதல் ஆறு இடங்களிலும் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. ஜெர்மனிக்கு அடுத்து பிரேசில், போர்த்துக்கல், ஆர்ஜன்டீனா, பெல்ஜியம் மற்றும் போலந்து அணிகள் முறையே 2 முதல் 6 ஆவது இடம் வரை நீடிக்கின்றன.

அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் அதிக பலம் கொண்ட அணியாக பார்க்கப்படும் பிரான்ஸ் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அண்டை நாடான ஸ்பெயின் மூன்று இடங்கள் முன்னேற்றம் கண்டதால் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் வந்து 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

கோபா  அமெரிக்கா கிண்ணத்தில் அடுத்தடுத்து நடப்பு சம்பியனாக வலம்வரும் சிலி 9 ஆவது இடத்தில் நீடிக்கிறது. உலகக் கிண்ண கால்பந்து தகுதிகாண் போட்டியில் தென் அமெரிக்க மண்டலத்தில் 6 ஆவது இடத்தை பெற்ற சிலி அடுத்த ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை FIFA உலக தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பேரு அணி செய்துள்ளது. தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறிய பேரு முதல் முறை முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. 10 ஆவது இடத்தை பிடித்திருக்கும் பேருவின் சிறந்த தரநிலை இதுவாகும்.’

 

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் தென் அமெரிக்க மண்டலத்தில் ஐந்தாவது இடத்தை பெற்ற பேரு அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற நியூசிலாந்துடன் பிளே ஓப் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் இங்கிலாந்து 3 இடங்கள் முன்னேறி 12 ஆவது இடத்திற்கும், டென்மார்க் 7 இடங்கள் முன்னேறி 19 ஆவது இடத்திற்கும் ஸ்கொட்லாந்து 14 இடங்கள் முன்னேறி 29 ஆவது இடத்திற்கும் ஏற்றம் கண்டுள்ளன. சுவிட்சர்லாந்து முதல் 10 இடங்களில் இருந்து 4 இடங்கள் சரிந்து தற்போது 11 ஆவது இடத்தில் உள்ளது.

தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் முன்னேறிய அணிகளில் ஆஸ்திரியாவும் இடம்பிடித்துள்ளது. 18 இடங்கள் முன்னேறிய அந்த அணி 39 ஆவது இடத்தில் இருப்பதோடு செக் குடியரசு (46), மொரோக்கோ (48) மற்றும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற பனாமா (49) அணிகளும் தர வரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளன.

பேரு தவிர மேலும் நான்கு அணிகள் தனது சிறந்த FIFA உலக தரநிலையை இம்முறை பெற்றுள்ளன. பலஸ்தீன் 7 இடங்கள் முன்னேறி தனது சிறந்த தரநிலையான 84 ஆவது இடத்தைப் பெற்றதோடு லக்சம்பேர்க் 8 இடங்கள் முன்னேறி 93 ஆவது இடத்திற்கும் கொமரோஸ் 127 ஆவது இடத்திற்கும், சைனீஸ் தாய்ப்பே 143 ஆவது இடத்திற்கும் ஏற்றம் கண்டு தனது சிறந்த தரநிலையை பெற்றுள்ளன.

எனினும் துர்க்மனிஸ்தான் அணியே இம்மாத தரநிலையில் அதிக இடங்கள் முன்னேறிய அணியாகும். அந்த அணி 22 இடங்கள் முன்னேற்றம் கண்டு 114 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

ஆபிரிக்காவின் சிறந்த தரவரிசை அணியாக இருந்த எகிப்தை பின்தள்ளி தியூனீசியா (Tunisia) முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த அணி மூன்று இடங்கள் முன்னேறி 28 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற எகிப்து தொடர்ந்தும் 30 ஆவது இடத்திலேயே உள்ளது.

தரவரிசையில் ஒன்பது இடங்கள் பின்தங்கியபோதும் ஆசியாவில் சிறந்த தர நிலையை பெற்ற அணியாக ஈரான் தொடர்ந்து நீடிக்கிறது. அந்த அணி தற்போது 34 ஆவது இடத்தில் காணப்படுகிறது.

இலங்கை கால்பந்து அணி எந்த ஒரு மாற்றமும் இன்றி FIFA உலக தரவரிசையில் தொடர்ந்து 198 ஆவது இடத்தில் நீடிக்கிறது.

http://www.thepapare.com

Categories: merge-rss

பிரச்சனைக்குரிய கிர்குக் நகருக்குள் நுழைந்தது இராக்கிய படை

பிரச்சனைக்குரிய கிர்குக் நகருக்குள் நுழைந்தது இராக்கிய படை
கிர்குக்படத்தின் காப்புரிமைAFP

இராக்கில் பிரச்சனைக்குரிய நகரமான கிர்குக்கிலுள்ள மத்திய பகுதிக்கு இராக்கிய அரசு படைகள் நுழைந்துள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். கிர்குக் நகரத்தின் வெளியே உள்ள முக்கிய மையங்களை குர்து படையினரிடம் இருந்து இராக் படைகள் கைப்பற்றியுள்ளது.

கே 1 ராணுவ தளத்தையும், பாபா குர்குர் எண்ணெய் மற்றும் எரிவாயு வயலையும், குர்திஸ்தான் பிராந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் அலுவலகங்களையும் இராக் படைகள் கைப்பற்றியுள்ளதாக இராக் ராணுவத்தின் அறிக்கை கூறியுள்ளது.

மாகாண அரசின் கட்டடத்திற்குள், மத்திய படைகள் நுழைந்ததை பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

கிர்குக்கின் தெற்கு பகுதியில் மோதல் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

கிர்குக்படத்தின் காப்புரிமைREUTERS

குர்திஸ்தான் பகுதியை சுதந்திர நாடாக ஆக்க, குர்திஸ்தான் பிராந்தியம் சர்ச்சைக்குறிய கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்திய மூன்று வாரத்திற்கு பிறகு இது நடந்துள்ளது.

கிர்குக் உள்ளிட்ட குர்து மக்கள் வசிக்கும் பகுதிகள், குர்திஸ்தான் பிரிவதற்கு அமோக ஆதரவு அளித்த நிலையில், இந்த வாக்கெடுப்பை அரசியலமைப்பிற்கு விரோதமானது என இராக் பிரதமர் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-41642365

Categories: merge-rss, yarl-world-news

யாழ். இளைஞர்கள் சோம்பேறிகள் என்ற புனைவு

அரசியல்-அலசல் - Mon, 16/10/2017 - 16:40
யாழ். இளைஞர்கள் சோம்பேறிகள் என்ற புனைவு
Ahilan Kadirgamar /

சிறிது காலத்துக்கு முன்பு, போர் முடிவடைந்ததன் பின்பு,  யாழ்ப்பாணச் சமூகம் பற்றித் திரும்பத் திரும்பக் கூறப்பட்ட ஒரு விடயமாக, அந்த மக்கள், எவ்வளவு கடின உழைப்பாளிகள் என்பதுவும் சிக்கனமாகச் செயற்படுவர்கள் என்பதுவும் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதுவும் காணப்பட்டது.

ஆனால் இன்று, யாழ்ப்பாணச் சமூகம், சோம்பேறித்தனமாக வந்துவிட்டது எனவும், ஊதாரித்தனமாகச் செலவுசெய்து, கடனில் மூழ்குகிறது எனவும் மக்கள் கதைப்பதைக் கேட்கக்கூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணச் சமூகம், கடனில் சிக்கியுள்ளமை உண்மைதான், ஆனால், அவ்வாறான கடன் நிலைமை ஏற்படக் காரணங்கள் என்ன? கடந்த சில ஆண்டுகளுக்குள், யாழ்ப்பாண இளைஞர்கள் பற்றிய கலந்துரையாடல், இவ்வளவு பெருமளவுக்கு எவ்வாறு மாறியது?

உள்நாட்டைச் சேர்ந்தோரும் வெளிநாட்டைச் சேர்ந்தோரும், மேலே குறிப்பிட்ட சோம்பேறித்தனத்துக்கு, புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டவரிடமிருந்து கிடைக்கும் பணத்தைக் காரணமாகக் குறிப்பிடுகின்றனர். சாய்வுக் கதிரையில் இருந்தவாறு மேற்கொண்ட ஆய்வுகளைக் கொண்டு, புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிக் கதைக்கின்றனர்.

ஏராளமான பணத்தைக் கொண்ட அவர்கள், தங்களுடைய சேமிப்புகளை யாழ்ப்பாணத்திலுள்ள மக்களுக்கு அனுப்புகின்றனர் எனவும், அதன் காரணமாக யாழ்ப்பாண மக்கள் சோம்பேறிகளாகவும் சுயதிருப்தியடைபவர்களாகவும் மாறிவிட்டனர் என்று கூறுகின்றனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளின் வெளிநாட்டுப் பணத்தின் பாய்ச்சல் பற்றிக் கவனமாகப் பார்க்கும் போது, பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, தமிழ்ச் சமூகத்தில் பெரும்பான்மையானோர் எவ்வாறு தடுமாறுகின்றனர் எனவும், குடும்பத் தேவைகளுக்காக, கிராமிய இளைஞர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் எனவும், இன்னொரு பக்கமான பார்வை கிடைக்கிறது.

அடக்குமுறையான கலந்துரையாடல்

கஷ்டமான காலங்களிலும் நெருக்கடிக் காலங்களிலும், மக்களை - குறிப்பாக, சமூகத்தில் ஒடுக்கப்படும் பிரிவினரை - சமூகக் கலந்துரையாடல்கள் குறைசொல்லும் என்பது வழக்கமானது. அப்பகுதியில் காணப்படும் உண்மையான தகவல்களை அவை திரிப்பதோடு மாத்திரமல்லாமல், விளிம்புநிலையில் காணப்படும் அவர்களை மேலும் ஒடுக்குவதற்கும் சுரண்டுவதற்கும் வழிவகுக்கிறது.

அலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கும் “அலைந்து திரிவதற்கும்” இளைஞர்கள் குற்றஞ்சாட்டப்படுகின்றனர் என்றால், யாழ்ப்பாணத்தில் அடிக்கடி கேட்கப்படும், சமூகத்தின் “கலாசாரச் சீரழிவுக்கு”, யுவதிகள் குற்றஞ்சாட்டப்படுகின்றனர். பெண்களைப் பொறுத்தவரை, இவ்வாறான கருத்துகள், அவர்களையும் அவர்களது உடல்களையும் கட்டுப்படுத்துவதற்கும், அவர்களது சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்குமே உண்மையில் காணப்படுகின்றனர்.

மேலதிகமாக, “கலாசார சீரழிவு” என்பது, இளைஞர்களைப் பொதுவாக விமர்சிப்பதற்கான பொதுவான ஒன்றாகவும் காணப்படுகிறது. அவர்கள் எவ்வாறு உடையணிகிறார்கள், இசையிலிருந்து திரைப்படங்கள் வரை பிரபலமான கலாசாரத்தைப் பின்பற்றுதல், அவர்களது “சோம்பேறித்தனம்” ஆகியவற்றைக் காட்டுவதற்கு, இவ்விமர்சனம் பயன்படுகிறது.

மேல்தட்டுவர்க்க விமர்சகர்கள் தான், மேம்போக்கான இந்த ஆய்வை முன்வைக்கிறார்கள் என்றில்லை; இது, ஊடகங்கள் மூலமாகப் பெருமளவில் பரப்பப்படுகிறது, இறுதியில் கிராமியச் சமூகத் தலைவர்களாலும், சில வேளைகளில் மக்களாலும், இவை பயன்படுத்தப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாகவும் அங்கு நிலவும் பொருளாதார வளர்ச்சியின் மந்தம் தொடர்பாகவும் கேள்விகளை எழுப்பிய பொருளாதார நிபுணர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கூட, இவ்வாறான கலாசார விளக்கமளிப்புகளில் ஈடுபடுகின்றனர்.

இந்தப் பின்னணியில், கட்டமைப்பு ரீதியான சவால்கள் தொடர்பான எந்தவிதமான அரசியல், பொருளாதார ஆய்வுகளும் புறக்கணிப்படுகின்றன. வேகமாக அதிகரித்துவரும் கடன்நிலைமைக்கு மத்தியில், நிதியியல் நிறுவனங்களின் பெருவளர்ச்சியூடாக, சொத்துகளைத் திரட்டுதல் என்பது, அரிதாகவே கருத்திற்கொள்ளப்படுகிறது. கடந்தகால கொள்கைத் தெரிவுகள் காரணமாக ஏற்பட்ட சமூக எதிர்வினைகளின் விளைவுகள் பற்றி, சிறிய அளவிலேயே பிரதிபலிப்புக் காணப்படுகிறது.

உதாரணமாக, நாட்கூலித் தொழிலாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை என்பது, கிராமிய இளைஞர்களின் சோம்பேறித்தனத்தில் வெளிப்படுகிறது என, யாழ்ப்பாண மத்தியதர வர்க்கங்கள் திட்டுவது வழக்கமானது. இளைஞன் அல்லது யுவதிக்கு, எப்போதிருந்துவிட்டு வழங்கப்படும் வேலைகளுக்கு, அவர்கள் வருவதில்லை என்ற நிலை காணப்படுகிறது.

இந்நிலை, இளைஞர்களைக் குற்றங்காணுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறான குற்றங்காணுதல், தங்களுக்குத் தெரிந்த ஒருவரைப் பற்றியிருந்தே ஆரம்பிக்கும்.

நாட்கூலித் தொழிலின் நிலையற்ற தன்மையை, அவர்கள் கருத்திற்கொள்வதில்லை. மழை பெய்தால், அத்தொழில் இருக்காது; இத்தொழில், மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர், கூலித் தொழிலுக்கு ஆட்களைத் தேடுவதில் தான் தங்கியுள்ளது.

ஆகவே, வீடுகளில் காணப்படும் நெருக்கடிகளுக்கான பதிலாக, யாழ்ப்பாண இளைஞர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? வேலைகளை, அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?

புலம்பெயர்தலும் பணம் அனுப்புதலும்

யாழ்ப்பாணத்தின் கிராமியப் பகுதிகளில் நான் மேற்கொண்ட ஆராய்ச்சியில், வெளிநாட்டிலிருந்து தொடர்ச்சியான பணம் கிடைத்தல் என்ற அடிப்படையில், மிகக்குறைவான அளவே காணப்படுகிறது. பணம் கிடைக்கும் வீடுகள் உண்மையில், திருமணங்கள், சமூக நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளுக்காகவே, ஒருதொகைப் பணத்தைப் பெறுகின்றன.

வெளிநாடுகளில் காணப்படும் கிராமியச் சமூகங்கள், சாதியோடு தொடர்புடைய நிறுவனங்களிலும்  குறிப்பாக கோவில்களில் பணத்தை இட்டுள்ளன. இந்த நிலையிலும், இவ்வாறான பணம் அனுப்புதல், வீழ்ச்சியிலேயே காணப்படுகிறது.

மறுபக்கமாக, வெளிநாட்டுத் தொழிலாளர்களால் பணம் அனுப்பப்படுதல், கணிசமானளவு அதிகரித்திருக்கிறது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, முக்கியமான இளைஞர்களே, மத்திய கிழக்குக்கும் மலேஷியா போன்ற இடங்களுக்கும் கடினமான பயணத்தை மேற்கொண்டு, கஷ்டமான சூழ்நிலைகளின் கீழ், மாதாந்தம் 20,000 ரூபாய் என்ற அளவில், மாதாந்தம் தொடர்ச்சியாகப் பணம் அனுப்புகின்றனர்.

ஆக, யாழ்ப்பாணத்திலுள்ள சோம்பேறிகள் எனச் சொல்லப்படும் இந்த இளைஞர்கள், நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடும் போது எவ்வாறு செயற்படுகின்றனர்? 

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் தகவல்களின்படி, 2016ஆம் ஆண்டின் தேசிய ஆண் சனத்தொகையில் 2.8 சதவீதமாக, யாழ்ப்பாணத்தின் ஆண் சனத்தொகை காணப்படுகிறது. 

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகள், வெளிநாடுகளுக்கு வேலைகளுக்காகச் செல்பவர்களை மாத்திரமே பதிவு செய்கிறது; வெளிநாட்டில் வேலை செய்பவர்களை அல்ல. நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடும் போது, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் யாழ்ப்பாண ஆண்களின் சதவீதம், 2.7 சதவீதமாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் பொருளாதார நெருக்கடி ஆழமடைய, 2012ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டுக்குள், வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் யாழ்ப்பாண ஆண்களின் சதவீதம், இரண்டு மடங்காகியது. இந்த எண்ணிக்கை, 3,621 ஆண்களிலிருந்து 7,817 ஆண்களாக அதிகரித்தது.

வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் ஆண்களின் சதவீதம் என்று வரும்போது, இலங்கையிலிருந்து சென்ற ஆண்களில் 4.1 சதவீதம், 3.3 சதவீதம், 3.7 சதவீதம் என, 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் காணப்பட்டது. இது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண்களில் அதிக சதவீதமாளேனார், வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வதற்குத் தயாராக இருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.

நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த ஆண்களோடு ஒப்பிடும் போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண்கள், விடாமுயற்சி கொண்டவர்கள் என்று கூறுவதற்காக, இத்தரவை நான் தரவில்லை.

மாறாக, “சோம்பேறித்தனம்”, “கடின உழைப்பு” ஆகியன தொடர்பான வாதங்கள், கலாசார பக்கச்சார்பால் உருவாக்கப்படுவன என்பதே, எனது கருத்து. பொருளாதாரம், தொழிலாளர்படை ஆகியன தொடர்பான உண்மையான நிலைவரம், சமூக, பொருளாதார இயங்கியல்களின் கட்டமைப்புரீதியான விளக்கங்களில் பெறப்படுவது தான் சிறந்தது.

கடினமான வேலைகளுக்காக வெளிநாட்டுக்குச் செல்வதற்கு ஆண்கள் தயாராக இருக்கின்றனர் என்றால், அந்த ஆண்கள், தங்களுடைய சொந்தப் பகுதிகளில் ஏன் பணியாற்ற முடியவில்லை என்பது தொடர்பாக, உள்ளூர்ப் பொருளாதாரம் தொடர்பான, கவனமான ஆய்வு மேற்கொள்ளப்படுவது அவசியமானது.

இதைப் போன்ற, யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் மேற்கொண்ட கள ஆய்வின்போது, அதிகரித்துவரும் அளவில் இளம் பெண்கள், சுரண்டல்மிகுந்த ஆடைத் தொழிற்றுறையில் பணியாற்றத் தயாராக இருக்கின்றனர் என்பதை நான் கண்டுகொண்டேன். உள்ளூர் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், தெற்கிலுள்ள சுதந்திர வர்த்தக வலயங்களுக்கும் அவர்கள் செல்கின்றனர்.

இந்த யதார்த்தத்திலிருந்து பெறப்படக்கூடிய முக்கியமான பாடம் என்னவெனில், கிராமிய சமூக வாழ்வு பற்றிய புரிதலுக்கு, பழைமைவாத சமூகக் கலந்துரையாடல்களை விடுத்து, கரிசனையான ஆரம்பப் புள்ளியுடன் கூடிய அரசியல், பொருளாதார ஆய்வு என்பது, அதிக பலன்களைத் தரும் என்பதாகும்.

வேலைவாய்ப்பும் ஒருமைப்பாடும்

யாழ்ப்பாணத்திலுள்ள அநேக கிராமங்களில், ஸ்திரமான குடும்பமொன்றைக் கொண்டுசெல்வதற்கான, ஒழுங்கான மாதாந்த வருமானத்தையே, மக்கள் எதிர்பார்க்கின்றனர். சுரண்டலும் வெளியேற்றமும்  கொண்ட, கடினமான சூழ்நிலைகளைக் கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பிலும் ஆடைத் தொழிற்றுறையிலும் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, இதைக் காட்டுகிறது.

சுயதொழில் வாய்ப்பிலும் சுயமாக உருவாக்கப்படக்கூடிய வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்களிலும் கவனஞ்செலுத்திய, அரசின் மீள்கட்டுமானக் கொள்கைகளும் கொடையாளர்களினதும் அரசசார்பற்ற நிறுவனங்களினதும் முன்னெடுப்புகளும், போருக்குப் பின்னரான யாழ்ப்பாணத்தில், அவலமான வகையில் தோல்வியடைந்துள்ளன.

போரின் பேரழிவுக்குப் பின்னர், வருமானத்தை உருவாக்க வேண்டிய சுமையை, தனிநபர்களிடம் விடுவதென்பது, ஒழுங்கற்ற வருமானம் வருவதை ஏற்படுத்தியது. இறுதியில் அது, சொத்து இழப்புக்கு வழிவகுத்தது. அவ்வாறான சிந்தனையின் தோல்வியை ஏற்றுக் கொள்வதை விடுத்து, இளைஞர்கள் மீது குற்றஞ்சுமத்தப்படுகிறது.

யாழ்ப்பாணத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் இளைஞர்களின் எண்ணங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய வகையில், பயன்தரக்கூடிய செயற்பாடாக, தொடர்ச்சியான வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய உள்ளூர்ப் பணிகளை உருவாக்குதலே காணப்படுகிறது. உள்ளூர் வளங்களையும் சிறிய தொழிற்றுறைகளையும் விருத்தி செய்வதற்காக, முதலீடாக இது அமையும்.

கிராமிய சமூகங்களின் சமூக, பொருளாதார அமைப்புகளை அரிதாகவே கருத்திற்கொள்ளும் பொருளாதார நிபுணர்களக், கொள்கை வகுப்பாளர்கள், ஏனைய அறிஞர்கள் ஆகியோரின் தரப்பின், விமர்சனரீதியான பிரதிபலிப்பும் இதற்குத் தேவைப்படும்.

இளைஞர்களின் கலாசார வாழ்க்கையைப் பொறுத்தவரை, மேல்தட்டு வர்க்கங்களும் கோபமான வயதான ஆண்களும், சமூகத்தில் ஏற்கெனவே காணப்படும் விடயங்களைத் தொடரவே விரும்புவார்களே தவிர, சமூக மாற்றத்தை விரும்பமாட்டார்கள்.

அந்த வகையில், சமூகத்தில் அவர்களது ஆதிக்கமான நிலை, தொடர்ந்தும் பேணப்படும். போரின் பேரழிவுக்குப் பின்னர், அவர்கள், ஒடுக்குமுறைக் கலந்துரையாடல்களுக்கோ அல்லது கடந்த காலங்களில் மூழ்குவதற்கோ சென்றுவிடுகின்றனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று யாழ்ப்பாணத்தில் ஏற்படக்கூடிய பாரியளவு மாற்றங்கள் இளைஞர்களிடமிருந்து வருவதற்கே வாய்ப்புகளுள்ளன. ஆகவே, அவர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க முன்னர், அவர்களைச் செவிமடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு உண்டு.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யாழ்-இளைஞர்கள்-சோம்பேறிகள்-என்ற-புனைவு/91-205667

Categories: merge-rss

யாழ் பல்கலை மாணவர்கள் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்!

ஊர்ப்புதினம் - Mon, 16/10/2017 - 16:30
யாழ் பல்கலை மாணவர்கள் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்!

 

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து,; தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், உடனடி தீர்வினைகோரியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

யாழ் பல்கலை மாணவர்கள்  நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்!

அனுராதபுரம் சிறைச்சாலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40) கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30) நாவலப்பிட்டியை சேர்ந்த கனேசன் தர்சன் (வயது 26) ஆகியோர் கடந்த 25 ஆம் திகதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றக்கோரி யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் 6 பேர் நாளை உண்ணாவிர போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Jaffna-university-students-fasting-hunger-strike

Categories: merge-rss, yarl-category

நவீன சிறைச்சாலை திறப்பு

ஊர்ப்புதினம் - Mon, 16/10/2017 - 16:28
நவீன சிறைச்சாலை திறப்பு
 

image_e26a046b06.jpg

ஹம்பாந்தோட்டை,  அங்குனகொலபெலெஸ்ஸவில் புதிய சிறைச்சாலை கட்டடத் தொகுதி, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றுமு; இந்துமத கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் இன்று (16) திறந்து வைக்கப்பட்டது.

நவீன சிறைச்சாலை வசதிகள்

01.    சிறைக் கைதிகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அமைக்கப்பட்ட முதலாவது சிறைச்சாலை
02.    ஆண்கள், பெண்கள் உள்ளடங்கலாக 1500 கைதிகள் சிறைப்படுத்தி வைத்திருக்க முடியும்
03.    65 ஏக்கர் வளாகம்
04.    நவீன தொழில்நுட்பம், பூரண பாதுகாப்பு
05.    வைத்தியசாலை, தொழிற்பயிற்சி நிலையம், கைத்தொழில் கட்டம்
06.    சிறைச்சாலை அதிகாரிகளுக்கான தங்குமிடம்
07.    மைதானம், 400 மீற்றர் தடகளம், நீச்சல் தடாகம், உள்ளக விளையாட்டரங்கு (அதிகாரிகள் மற்றும் அருகில் உள்ள பாடசாலை மாணவர்களின் உபயோகத்துக்கானது)
08.    சிற்றுண்டிச்சாலை, உணவு உண்பதற்கான இடம், பார்வையாளர் அறை
09.    விரிவுரை மண்டபம்
10.    செலவீனம் - 4996 மில்லியன் ரூபாய்

image_ee7b0c7454.jpgimage_eb50fe0009.jpgimage_6362d08851.jpg

http://www.tamilmirror.lk/தென்-மாகாணம்/நவீன-சிறைச்சாலை-திறப்பு/93-205666

Categories: merge-rss, yarl-category

ஜனாதிபதி வருவார் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் : திட்டமிட்டு நடைபெற்ற விடயம்

ஊர்ப்புதினம் - Mon, 16/10/2017 - 16:22
ஜனாதிபதி வருவார் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் : திட்டமிட்டு நடைபெற்ற விடயம்

 

 

"தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்குள் ஜனாதிபதி வருவார், அங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் என்பது திட்டமிட்டு நடைபெற்ற ஒரு விடயம், ஜனாதிபதி வருவதற்கு முன்னதாகவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த விடயம் கூறப்பட்டிருந்தது" என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

Local_News.jpg

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்...

"கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அந்த போராட்டத்தை குழப்பும் வகையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆளுநரை சந்தித்தார். தொடர்ந்து சனிக்கிழமை ஜனாதிபதி வருகையின்போது ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும்போது ஜனாதிபதி அந்த வழியால் வருவார், போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களுடன் பேசுவார் என்பது முன்னதாகவே தெரிந்திருந்தது.

அது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கூறப்பட்டும் இருந்தது. அப்போது நாங்கள் கூறியது, ஜனாதிபதியுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை, ஏற்கனவே அரசின் பங்காளி கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் மேற்படி அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல் மற்றொரு பங்காளியான அமைச்சர் மனோகணேசன் ஜனாதிபதியுடன் இந்த விடயம் தொடர்பாக பேசியிருக்கின்றார். எனவே ஜனாதிபதிக்கு இந்த அரசியல் கைதிகளின் வழக்கு மாற்றப்பட்ட விடயம் நன்றாகவே தெரியும். எனவே ஜனாதிபதிக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை என கூறினோம்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி வந்தார். முன்னர் கூறியதைபோல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சந்தித்தார். அப்போது முதலில் ஓடி சென்று பேசியவர் எம்.கே.சிவாஜிலிங்கம் மட்டுமே. இந்த சிவாஜிலிங்கம் அரசியல் கைதிகளின் குடும்பங்களை பயன்படுத்தி பொய் வாக்குறுதிகளை கொடுத்து அரசியல் கைதிகளுக்கான போராட்டங்களை மழுங்கடிக்கிறார். அதன் ஊடாக அரசாங்கத்துக்கு துணைபோகிறார். எனவே தன்னுடைய நலனுக்காக இவ்வாறு செயற்படும் சிவாஜிலிங்கத்தின் நோக்கம் நிறைவேற வேண்டும். இல்லையேல் அவர் செய்யும் பச்சை துரோகத்தை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்". 

http://www.virakesari.lk/article/25876

    சம்பந்தன் கூறிய கருத்தை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

 

"இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது, அவர் தமிழ் மக்களிடம் நான் என்ன சொன்னாலும்  அவர்கள் அதனை நம்புவார்கள் என நினைத்து இறுமாப்பில் கூறிய கருத்து, அதனை மக்கள் சரியாக விளக்கி கொள்ளவேண்டும், இல்லையேல் அதன் விளைவுகளை பெற தயாராகவேண்டும்" என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Local_News.jpg

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்...

"இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசும்போது அடுத்த தீபாவளி பண்டிகை மகிழ்வான சூழலில் நடக்கும் என கூறியுள்ளார், இது சம்பந்தனின் கோமாளிதனமான கருத்து என எவரும் நினைக்க கூடாது, அவர் கோமாளி அல்ல, தான் தமிழ் மக்களுக்க எதை சொன்னாலும் அவர்கள் அதனை நம்புவார்கள் என இறுமாப்பில் கூறும் கருத்து. இந்த கருத்தின் ஊடாக இரா.சம்பந்தன் தமிழ் மக்களை அவமதித்துள்ளார்.

எனவே தமிழ் மக்கள் அவருடைய கருத்தில் உள்ள சரியான அர்தங்களை புரிந்து கொள்ளவேண்டும். கடந்த தீபாவளி, அடுத்த தீபாவளி அதாவது இந்த தீபாவளிக்கு தீர்வு வரும் என்றார். இப்போது இந்த தீபாவளிக்கும் இல்லை அடுத்த 2018ம் ஆண்டு தீபாவளிக்கு தீர்வு வருமாம், எனவே தமிழ் மக்கள் தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்பதை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் இந்த பொய்களை நம்பியதால் உண்டாகும் விளைவுகளை ஏற்பதற்கு  தயாராக இருக்கவேண்டும்" என்றார்.

http://www.virakesari.lk/article/25875

Categories: merge-rss, yarl-category

Rice & curry

இனிய-பொழுது - Mon, 16/10/2017 - 16:03

 

 

Categories: merge-rss

சலப்பையாற்றில் 650 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்

ஊர்ப்புதினம் - Mon, 16/10/2017 - 15:55
சலப்பையாற்றில் 650 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்

 

trincoதிருகோணமலை – சலப்பையாறு பகுதியில்,  அனுராதபுர மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட  650இற்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள், சிறிலங்கா அரசாங்கத்தினால் குடியேற்றப்பட்டுள்ளன.

சலப்பையாறு பிரதேசம், தமிழ்ப்பேசும் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பகுதியாகும். இங்கு யான் ஓயா திட்டம் என்ற போர்வையில், சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோமரங்கடவெல என்று சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ள, குமரேசன்கடவை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட, யான் ஓயாவுக்கு அருகே – கல்லப்பத்தை பிரதான வீதியை அண்டியே இந்த சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியுடனேயே இந்த சிங்களக் குடியேற்றத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

650இற்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள், அனுராதபுர மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்து இங்கு குடியேற்றப்பட்டுள்ளன.

சிறிலங்கா அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளின் துணையுடன் இடம்பெற்றுள்ள இந்தக் குடியேற்றத் திட்டத்தில், நிரந்தர வீடுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் இனவிகிதாசாரத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால், திருகோணமலை மாவட்டத்தின் இனவிகிதாசாரம் பெரிதும் மாற்றமடையும் ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2017/10/16/news/26636

Categories: merge-rss, yarl-category

ஜே.வி.பியினருக்கு கிடைத்த போது ஏன் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை

ஊர்ப்புதினம் - Mon, 16/10/2017 - 13:30
ஜே.வி.பியினருக்கு கிடைத்த போது ஏன் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை
 

நாட்டில்  வன்முறையில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட மக்கள் வஜடுதலை முன்னணியினர் மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டது போன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்  கீழ் கைதசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும்  ஏன் விடுதலை வழங்கப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி  தலைவருமான இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜே.வி.பியினருக்கு கிடைத்த போது ஏன்  அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை

தமிழ் அரசியல் கைதிகளது வழக்குகளில் அரசியல் அழுத்தங்களும்  காணப்படுவதால், அவை முழுமையாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில  இருப்பாக கருத முடியாது எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினால் கைதுசெய்யப்பட்டு ஸ்ரீலங்கா சிறைச்சாலைகளில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்  கைதிகள் தொடர்பில் இன்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நாளைய தினம் இடம்பெறவுள்ள அமர்வில் சபை ஒத்திவைப்பு வேளையில் இந்த அறிக்கையை அவர் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு  உரிய நேரத்தில் தீர்வு  வழங்கப்பட்டிருந்தால் கைதிகளாக உள்ளவர்களில் அனேகமானவர்களுக்கு தற்போதைய நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் எதிர்க்கட்சி  தலைவர் தனது அறிக்கையில்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக உள்நாட்டு மற்றும் சர்வதேச நியமங்களுக்கு  ஏற்புடைய வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்கப் போவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதே சமூகத்தில் வழங்கிய  வாக்குறுதியை இதுவரையில்  அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும் எதிர்க்கட்சி  தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் அநேகமானவர்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாக பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தால்  தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன், இதனால் வழக்குத் தொடுநர்களிடம் போதிய சாட்சியங்கள் இல்லாமையால் அநேக வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல்  கைதிகளாக சிறைச்சாலைகளில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள் வாழ்வாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர்.

அரசியல் கைதிகளில் சிலரது வழக்குகள் வவுனியா  நீதிமன்றில் இருந்து அனுராதபுர நீதிமன்றிற்கு இடமாற்றப்பட்டதன் மூலம் சில தேவையற்ற முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறாக வழக்கு இடம் மாற்றப்படுவதானது குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தனது விருப்பத்தின் அடிப்படையில் சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை மறுக்கப்படுகின்ற அதேவேளை, இது உள்ளடங்கலான ஏனைய அம்சங்களும் நீதியான ஒரு விசாரணை இடம்பெறுவதனை மறுதலிப்பதாக அமையும். 

குறித்த  இடமாற்றத்திற்கு எதிராக கைதிகள் தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.  இந்த நிலைமையானது அவசரமான அடிப்படையில் கையாளப்பட வேண்டியதாகும்.

இந்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எந்த வித தாமதமுமின்றி விடுதலை செய்யப்பட  வேணடும் என்பதை தான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/sambanthan-press-release-

Categories: merge-rss, yarl-category

சிறுபான்மையினரின் சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்தும் அரசியலமைப்பொன்றே தேவை – கிழக்கு முன்னாள் முதலமைச்சர்

ஊர்ப்புதினம் - Mon, 16/10/2017 - 13:24
சிறுபான்மையினரின் சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்தும் அரசியலமைப்பொன்றே தேவை – கிழக்கு முன்னாள் முதலமைச்சர்

ha.jpg

இந்த நாட்டில் உள்ள  சிறுபான்மையினரின் நிரந்தர நீடித்த  சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்தி உத்தரவாதமளிக்கும் அரசியலமைப்பொன்றே தற்போது  நாட்டிற்கு  தேவை என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

ஆகவே ஒருமித்த நாடா  அல்லது  ஒற்றையாட்சி நாடா என்ற விவாத்திற்கு அப்பால்சென்று  தற்போது  தமக்கான  அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா  எனவும் அனைத்து இனங்களுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கப்படும் வகையிலான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்ற விவாதங்களுக்கு சமூகம் முன்வரவேண்டும் என அவர்  குறிப்பிட்டார்.

தற்போது  உத்தேச அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்தாடல் குறித்து வினவியபோதே  அவர் இதனைக் கூறினார்,

தற்போது  சில  அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் உள்ள ஒருமித்த நாடு என்ற பத்த்தை  முன்வைத்து    பாரிய குழப்பங்களை  ஏற்படுத்த முனைந்து வருகின்றனர்,

இதனூடாக பெரும்பான்மை  மக்களை குழப்பி உத்தேச அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படுமாயின் அதனை தோற்கடித்து  நாட்டில்  தொடர்ச்சியாக சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்குமான பிரச்சினைகளை நீடிக்கச்செய்து  அதில் தமது  அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காக ஒரு சில  குழுக்கள் முயற்சித்துக்கொண்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  இவர்களுடன்   இணைந்து  சில  சிறுபான்மையின  அரசியல்வாதிகளும் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு  அப்பால் சென்று புதிய அரசியலமைப்பில்  கூறப்படாத  வடக்கு கிழக்கு  இணைப்பு   போன்ற விடயங்களை  கூறி  மக்களுக்கு இடையே  வீணாண பிரச்சினைகளை உருவாக்கி சிறுபான்மையினருக்கு தீர்வு கிடைப்பதை விரும்பாத பெரும்பான்மை  அரசியல்வாதிகளுக்கு துணைபுரிந்து  வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே சிறுபான்மை சமூகம் இந்த ஒருமித்த என்ற  பதத்திற்குள்  முஸ்லிம் சமூகத்தின் சுய கௌரவத்துடனான இருப்பு குறித்த கேள்விகள்  இருக்கின்றன, புதிய  அரசியல் யாப்பு வரையப்பட  முன்னர் அது குறித்த  விடயங்களை  நாம் தமிழ்  தலைமைகளுடன்   பேசி  ஒரு  இணக்கப்பாட்டிற்குள் வரவேண்டிய தேவையும்  இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதுடன்  ஆளுனர் தெரிவில் குறித்த மாகாண மக்களுடைய அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளும் உள்ளடக்கப்படவேண்டும்,

அத்துடன்  தேர்தல்  முறை  சீர்த்திருங்களிலும் முஸ்லிங்கள் மற்றும்  மலையகத் தமிழர்கள் குறித்து  கூடுதல் கரிசனைசெலுத்தப்படவேண்டியுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/45561

Categories: merge-rss, yarl-category

லக்ஷ்மி நாராயனண் கோவிலில் புகைப்படம் எடுக்க முயன்ற இங்கிலாந்து சுற்றுலாப் பயணி தவறி விழுந்து பலி

லக்ஷ்மி நாராயனண் கோவிலில் புகைப்படம் எடுக்க முயன்ற இங்கிலாந்து சுற்றுலாப் பயணி தவறி விழுந்து பலி:-

British-man-dies-while-taking-photos-at-

பிரித்தானியாவில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுப் பயணத்திற்கு சென்ற ரோஜர் என்ற சுற்றுலாப் பயணி மத்திய பிரதேசத்தில் கோவில் ஒன்றைப் படம் பிடிக்கும் போது கீழே தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.

பிரித்தானியாவின் 56 வயதுடைய ரோஜர் ஸ்டோஸ்பரி மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சர்வதேச சுற்றுலாவை ஆரம்பித்தனர். இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் சில ஆசிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள சுற்றுலா தளங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களது வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளனர்.

பயணத்தின் இறுதி கட்டமாக இந்தியாவின் பழமையை தெரிந்து கொள்ளவும், இந்தியாவின் கட்டிடக் கலையை ரசிக்கவும் இந்தியாவிற்கு சென்றனர். முதல் கட்டமாக வட மாநிலங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ஒரு வீடியோ எடுப்பதற்காக இந்திய மத்திய பிரதேசத்தின் ஆர்ச்சா என்ற நகரத்தில் இருக்கும் லக்ஷ்மி நாராயனண் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலின் கட்டிடங்களை தான் எடுக்கும் ஆவணம் படம் ஒன்றிற்காக வீடியோ எடுத்துள்ளார்.

இந்த நிலையில் அவர் கோவிலின் மேல் பகுதியில் இருந்து, அந்த நகரம் எப்படி இருக்கிறது என்பதை வீடியோ எடுப்பதற்காக மேலே ஏறியுள்ளார். அப்படி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது கீழே பார்க்காமல் அப்படியே நடந்த அவர் கால் தவறி மாடியில் இருந்து 30 மீட்டர் கீழே விழுந்திருக்கிறார்.

இதில் காயமடைந்த அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது மனைவி அந்த இடத்திலேயே மயங்கி இருக்கிறார். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

http://globaltamilnews.net/archives/45528

Categories: merge-rss, yarl-world-news

அஷ்வின், ஜடேஜாவின் ‘ஓய்வு’ தற்காலிகமா... நிரந்தரமா?

அஷ்வின், ஜடேஜாவின் ‘ஓய்வு’ தற்காலிகமா... நிரந்தரமா?
 
Chennai: 

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அஷ்வின், ஜடேஜா இல்லை. “இலங்கை தொடருக்கு ஓய்வுன்னு சொன்னாங்க.. இன்னுமா ரெஸ்ட் எடுக்குறாங்க...?” என்று ரசிகர்களுக்கு டவுட்! இந்தச் சந்தேகம் நியாயமானதே. டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த பெளலர்களில் இருவருக்கு, ஒருநாள் போட்டி அணியில் இடமில்லை எனும்போது, அதுவும் தொடர்ந்து 3 தொடர்களில் எனும்போது சந்தேகம் எழுவது சகஜமே. உண்மையில் இது ஓய்வுதானா? இல்லை, இளம் இந்திய அணியை உருவாக்கும் முயற்சியில்  கழட்டிவிடப்பட்டார்களா? 2016-ம் ஆண்டு நடந்த இந்தியா – நியூசிலாந்து தொடருக்குப் பிறகான பெர்ஃபாமன்ஸ்களை வைத்து, ஒரு பார்வை…..

ஒருநாள்

 

சாம்பியன்ஸ் டிராஃபிக்குப் பின், இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் M.S.K.பிரசாத், இந்திய அணியின் தேர்வுமுறைகள் குறித்துப் பேசியிருந்தார். 2019 உலகக்கோப்பையைக் குறிவைத்தே ஒவ்வொரு தொடருக்கான அணியும் தேர்வு செய்யப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். பயிற்சியாளர் கும்ப்ளேவின் இடத்தை ரவி சாஸ்திரி நிரப்பியதும், ‘மிஷன் 2019’-ஐ ஸ்டார்ட் செய்தது கோலி – சாஸ்திரி கூட்டணி. “எப்பேர்ப்பட்ட ஆளா வேணாலும் இருக்கட்டும். ஃபிட்னெஸ் இருந்தாதான் டீம்ல இருக்க முடியும்” என்பதுதான் கோலியின் மிகப்பெரிய கண்டிஷன். இந்தக் கண்டிஷன் அவருக்கும் பொருந்தும். அதனால்தான் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால், அது பெரிய அளவில் கேள்வி எழுப்பப்படவில்லை. அஷ்வினும், ஜட்டுவும் தேர்வாகாதது கிரிக்கெட் ரசிகர்களைப் புருவம் உயர்த்தவைத்துள்ளது.

கோலியின் ஸ்பெஷல் பிளான்

இந்திய அணி வெறும் உலகக்கோப்பையை மட்டும் டார்கெட்டாக வைத்துச் செயல்படவில்லை. எப்படி 1990-களின் பிற்பகுதியிலிருந்து ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியதோ, அதுபோன்று ஒரு அசைக்க முடியாத இமேஜை இந்திய அணிக்கு ஏற்படுத்தியாக வேண்டும் என்று செயல்பட்டுவருகின்றனர். அதற்கு கோலி வகுத்த திட்டம், Unique teams. ஒவ்வொரு வகையான போட்டிகளுக்கும், ஒவ்வொரு கேப்டன் வைத்து சில அணிகள் செயல்படும். ஆனால், கோலி ஒவ்வொரு ஃபார்மட்டுக்கும் தனி அணி அமைப்பதில் தீர்க்கமாக இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளுக்கு என்று ஸ்பெஷலிஸ்டுகள் உள்ளடக்கிய ஒரு அணி. ஷார்டர் ஃபார்மட்டில் அதற்கேற்ப  விளையாடும் அணி. கோலியின் இந்தப் பிளான்தான் அஷ்வினையும், ஜடேஜாவையும் வெளியே அமர்த்தியிருக்கிறது.

அஷ்வின்

விராட் சில விஷயங்களில் மிகத் தெளிவு. “எந்த வீரராக இருந்தாலும், அந்த ஃபார்மட்டுக்கு ஏற்ப விளையாட வேண்டும். சில வீரர்கள் ஃபார்மட் மாறும்போது அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் தொடங்கும் முன் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியிருந்தார். ஒவ்வொரு ஃபார்மட்டுக்கும் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் இருக்கும்பட்சத்தில், ஆட்டத்தின் போக்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பது அவரது கருத்து. அதுதான் ஃபார்மில் இல்லாத காலங்களிலும், ரஹானேவைக் காட்டிலும் தவானுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்புகள் கிடைக்கக் காரணம். ‘டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டா’ன ரஹானே, ஒருநாள் போட்டியிலும் தன் ஸ்லோ கேமை ஆடுவது கோலிக்குப் பிடிக்கவில்லை. ஸோ... அவரது டீஃபால்ட் சாய்ஸ் எல்லாத் தொடர்களிலும் தவானாகவே இருந்தது.

இப்படி பிளான் செய்துதான் இரு வேறு அணிகளை ‘டிசைன்’ செய்தார் விராட். டெஸ்டுக்கு ஓப்பனர்களாக, விஜய் – ராகுல். ஒருநாள் போட்டிகளுக்கு தவான் – ரோஹித். மிடில் ஆர்டருக்கு புஜாரா, ரஹானே. அங்கு ஜாதவ், மனீஷ். கீப்பிங்குக்கு சஹாவும், தோனியும். ஸ்பின் ஆப்ஷன்களாக, அஷ்வின் ஜடேஜா. ஒருநாள் போட்டிகளுக்கு அக்சர், சாஹல், குல்தீப் கூட்டணி. உமேஷும், இசாந்தும் டெஸ்ட் பவுலர்கள், புவியும், பூம்ராவும் ODI ஸ்பெஷலிஸ்ட் என வகுத்துவிட்டார் கோலி. பாண்டியா மட்டும் அவருக்கு அனைத்து ஃபார்மட்டிலும் தேவை. அவரைப் பொறுத்தமட்டில் 3 ஃபார்மட்டிலும், அந்த போட்டியின் தன்மையைப் பொறுத்து ஆடக்கூடிய ஒரே ஆள் அவர் மட்டுமே. அதனால், அவரையும் பாண்டியாவையும் தவிர்த்து மற்ற 9 வீரர்களும் வேறுபடுவார்கள்.

ஜடேஜா

சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலை வென்று, தன் முதல் கோப்பையைத் தூக்க முடியாததால், அடுத்தகட்ட பாய்ச்சலை புலிப்பாய்ச்சலாக  மாற்ற  விரும்புகிறார் கோலி. ஒருநாள் போட்டிகளில் டெஸ்ட் போல் ஆடும் வீரரோ, டெஸ்ட் போட்டிகளில், ‘கன்சிஸ்டன்சி’ இல்லாத வீரரோ அவருக்கு வேண்டியதில்லை. பெர்ஃபார்ம் பண்ணலையா உடனே தூக்கிடு. கோலியின் இந்த அணுகுமுறைதான் அஷ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் தரப்பட்ட ஓய்வின் பின்னனி.

அஷ்வின், ஜடேஜா ODI பெர்ஃபாமன்ஸ் எப்படி?

அஷ்வினும், ஜடேஜாவும் டெஸ்ட் போட்டிகளில் ரவுண்டு கட்டி அடித்தாலும், ஒருநாள் போட்டிகளில் அவர்களது பந்துவீச்சு எடுபடவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தைத் தாண்டி, அவர்களது செயல்பாடு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ரன் குவிப்பைத் தடுக்கத் தவறியது மட்டுமின்றி, விக்கெட் வீழ்த்தவும் இருவரும் தவறிவிட்டனர். சமீப காலங்களில், அவர்களின் செயல்பாடுகளே அவர்களுக்கான இடத்தைப் பறித்தது.

ஸ்பின்

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் அவர்கள் இருவரும் இணைந்து வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 5. 5 போட்டிகளில் ஆடிய ஜடேஜா 4 விக்கெட்டுகளும், 3 போட்டிகளில் ஆடிய அஷ்வின் 1 விக்கெட் மட்டுமே எடுத்தனர். அவர்களின் எகானமியும் 5.75-க்கு மேல். ஆட்டத்தின் முக்கியமான மிடில் ஓவர்களில், இவர்கள் விக்கெட் வீழ்த்தத் தவறியதே லீகில் இலங்கையுடனும், ஃபைனலில் பாகிஸ்தானுடனும் இந்தியா தோற்கக் காரணம். ‘இங்கிலாந்து மைதானங்களில் சுழற்பந்து வீச்சாளர்களிடம் அதிகம் எதிர்பார்க்கக்கூடாது’ என்ற பேச்சு எழும். ஆனால், அனுபவம் கொண்ட இரு முன்னனி பவுலர்களால் 10 ஓவர்களுக்கு 1 விக்கெட் வீதம் கூடவா எடுத்திட முடியாது? அத்தொடரில் இருவரும் இணைந்து 71 ஓவர்கள் பந்துவீசி, ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர். ‘பார்ட் டைம்’ பவுலரான கேதார் ஜாதவ் கூட, சாம்பியன்ஸ் டிராஃபியில் 12 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கோலிக்குப் பிரச்சனையே இதுதான். அவரைப் பொறுத்தவரையில் விக்கெட் எடுக்க வேண்டும். ரன் கட்டுப்படுத்துவது குறித்தெல்லாம் அவருக்குக் கவலை இல்லை. “எவ்வளவு வேண்டுமானாலும் ரன் கொடு. ஆனால் விக்கெட் எடு” – இதுதான் கோலியின் தேவை. இந்த விஷயத்தில் அஷ்வின், ஜடேஜா இருவருமே ஃப்ளாப். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பான இங்கிலாந்து தொடரிலும்கூட அவர்களின் செயல்பாடு சுமார்தான். இருவரும் இணைந்து 57 ஓவர்களில் 345 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தனர். சமீப காலங்களில் பும்ரா, புவி இருவரின் அசாத்திய எழுச்சியால் இருவரின் மோசமான ODI ஃபார்மும் அவ்வளவாகப் பேசப்படாமல் இருந்தது. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி கோப்பையைக் கைவிட்டது, கோலியை அவர்களைத் தாண்டி யோசிக்க வைத்துவிட்டது.

அஷ்வின்

ஐ.பி.எல் தொடரின் ‘விக்கெட் டேக்கிங்’ பவுலர்களான சாஹலுக்கும், குல்தீப்புக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அக்சரும், ஜடேஜாவின் இடத்துக்கான மாற்றாகத் தெரிய, அஷ்வின், ஜடேஜா இருவருக்குமே ‘ஓய்வு’ என்ற பெயரில் கல்தா கொடுத்தது நிர்வாகம். அக்ஷர், குல்தீப், சாஹல் ஆகியோரின் செயல்பாடு திருப்தியளிக்கவும், ஆஸி தொடரிலும்  அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வளித்தனர். இப்போது தொடர்ந்து மூன்றாவது தொடரிலும் இருவரும் அவுட்.

லெக் ஸ்பின்னர்களின் எழுச்சி

இன்றைய தேதிக்கு லெக் ஸ்பின்னர்கள்தான் ஒவ்வொரு அணிக்கும் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ட்ரம்ப் கார்ட். மைதானம் சுழலுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் ஆஃப் ஸ்பின்னர்களால் தங்களது முழு திறனையும் வெளிக்காட்ட முடியும். அதனால்தான் இந்திய துணைக்கண்டத்துக்கு வெளியே அஷ்வின், ஜடேஜா அகியோரால் விக்கெட் வேட்டை நடத்த முடியவில்லை. ஆனால், லெக் ஸ்பின்னர்களுக்கு அப்படியில்லை. பந்தை விரல்களால் அல்லாமல், மணிக்கட்டின் மூலம் சுழலச் செய்யும் அவர்களால், சுழலுக்கு ஒத்துழைப்புத் தராத ஆடுகளங்களிலும் எப்படியேனும் சிறப்பாகச் செயல்பட முடியும். ஆகவே, சுழலுக்குப் பெரிய அளவில் ஒத்துழைப்புத் தராத இங்கிலாந்து மைதானத்தில் நடக்கும் 2019 உலகக்கோப்பைக்கு லெக் ஸ்பின்னர்களோடு களமிறங்க முடிவெடுத்துவிட்டார் கேப்டன் விராட்.

அஷ்வின்

சாஹல், குல்தீப் இருவரும் கடந்த இரு தொடர்களிலும் கோலியின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துவிட்டனர். இந்த இரு தொடர்களில், சாஹல் 8 போட்டிகளில்  11 விக்கெட்டுகளும், குல்தீப் 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளும் அள்ளினர். இந்த இரு தொடரிலும் இணைந்து 6 போட்டிகளில் ஆடிய அக்ஷரும் தன் பங்குக்கு 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நியூசிலாந்து தொடரில் மட்டும் ஆடிய அமித் மிஷ்ரா 5 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் அள்ளி தொடர் நாயகனாக, அந்த அனுபவ வீரர்கள் இல்லாமலேயே சுழலில் அசத்தத் தொடங்கிவிட்டது இந்தியா.

“இந்தப் பசங்க இந்தியாலையும், இலங்கையிலும்தான நல்லா அடியிருக்காங்க. வெளியூர்ல ஆடணும்ல..?” என்று கேட்கலாம். உள்ளூர், வெளியூர் என அனைத்து ஏரியாக்களிலும் இந்த இளம் படையிடம் தோற்கிறது அஷ்வின், ஜடேஜா இணையின் டேட்டா. இங்கிலாந்து தொடரில் இருவரும் இணைந்து ஓவருக்கு 6.05 ரன் வீதம் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் இரு ஆஃப் ஸ்பின்னர்களும் சேர்ந்து 39 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தனர். அங்கு, அதே வெஸ்ட் இண்டீஸ் மண்னில், அதே 39 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் அள்ளினார் குல்தீப் யாதவ். ஸோ…லெக் ஸ்பின் வெளிநாட்டு மண்ணிலும் எடுபட்டிருக்கிறது.

அஷ்வின் – ஜடேஜா VS குல்தீப் – சாஹல்

2016 நியூசிலாந்து தொடரிலிருந்து, இதுவரை இந்தியா 6 ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ளது. இந்தத் தொடர்களில் அஷ்வின் 8 போட்டிகளிலும், ஜடேஜா 10 போட்டிகளிலும் விளையாடி தலா 8 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இவர்கள் இருவர் மூலம் 167 ஓவர்களில் இந்தியாவுக்கு 16 விக்கெட்டுகள் கிடைத்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 63 பந்துகளுக்கு 1 விக்கெட். சாஹல், குல்தீப் இருவரும் அவர்களைப் போலவே முறையே 8 மற்றும் 10 போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால், இவர்கள் இருவரும் இணைந்து 164.4 ஓவர்களில் 29 விக்கெட்டுகளை அள்ளியுள்ளனர். ஒரு விக்கெட் வீழ்த்த இந்த இணைக்கு சராசரியாகத் தேவைப்பட்டது 34 பந்துகளே.

அஷ்வின்

விக்கெட் வீழ்ச்சியில் மட்டுமல்ல, எகானமி ரேட்டிலும் லெக் ஸ்பின் இணையே பெஸ்ட். இவர்களின் எகானமி 4.85. அஷ்வின், ஜடேஜா இணையின் எகானமி 5.46. இந்த 6 தொடர்களில் இந்திய ஸ்பின்னர்கள் வீழ்த்திய மொத்த விக்கெட்டுகள் 89. அவற்றுள் இந்த அனுபவ இணையின் பங்களிப்பு 17.98 சதவிகிதம் மட்டுமே. குல்தீப், சாஹல் இணைந்து 32.58 சதவிகித விக்கெட் வீழ்சிக்குக் காரணமாக இருந்துள்ளனர். எந்த வகையில் பார்த்தாலும், அஷ்வின், ஜடேஜா இருவரின் பெர்ஃபாமன்ஸை விடவும் குல்தீப், சாஹலின் லெக் ஸ்பின் இணையின் செயல்பாடு இரட்டிப்பாகவே இருக்கிறது.

அதனால், இந்தத் தொடருக்கும் லெக் ஸ்பின்னர்களுடனேயே களம்காண கோலி முடிவெடுத்துவிட்டார். இது வெறுமனே இந்தத் தொடருக்கான முடிவு மட்டுமல்ல. M.S.K.பிரசாத் சொல்லியதுபோல இவை அனைத்துமே உலகக்கோப்பைக்கு தயாராவதற்காக எடுக்கப்படும் முடிவுகள். உலகக்கோப்பைக்கு எந்த அணி செல்ல வேண்டும் என்பதில் கோலி கிட்டத்தட்ட இப்போதே முடிவெடுத்துவிட்டார். கோலி, தவான், ரோஹித், தோனி, பாண்டியா, பூம்ரா, புவி ஆகிய ஏழு பேரும் இங்கிலாந்து உலகக்கோப்பையின் முதல் போட்டியில் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். ‘பார்ட் டைம்’ பவுலராக நம்பிக்கை தருவதால், ஜாதவுக்கு வாய்ப்புகள் அதிகம். இங்கிலாந்தில் 1 ஸ்பின்னரை மட்டுமே களமிறக்குவார்கள் என்பதால் ஷமிக்கு இடம் உறுதி. அந்த ஸ்பின்னருக்கான இடம், சாஹல், குல்தீப் இருவரில் ஒருவருக்குத்தான். எனவே அஷ்வின், ஜடேஜா ஆகியோரின் உலகக்கோப்பைக் கனவு கலைந்துவிட்டது என்பது அறிவிக்கப்படாத உண்மை.

 

கோலி தனது மிஷனில் ஷார்ப். அதனால் இந்த மூன்று இளம் ஸ்பின்னர்களில் இருவர்தான் இங்கிலாந்து பயணிக்கப் போகின்றனர். ஜடேஜாவும், அஷ்வினும் இப்போதிலிருந்து டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்கள். இனி இந்தியாவின் நீல வண்ண உடையில் அவர்களைப் பார்ப்பது மிகவும் கடினம். இனி ஐ.பி.எல் மட்டுமே அவர்கள் விளையாடும் ஷார்ட் ஃபார்மட் போட்டியாக இருக்கலாம்!

http://www.vikatan.com/news/sports/105129-is-ashwin-and-jadejas-chance-of-playing-2019-world-cup-coming-to-an-end.html

Categories: merge-rss

40 சிக்ஸர்கள், 307 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்: உள்ளூர் போட்டியில் சாதனை

40 சிக்ஸர்கள், 307 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்: உள்ளூர் போட்டியில் சாதனை

 

 
dunstonjpg

ஜோஷ் டன்ஸ்டன் | படம்: ட்விட்டர் பகிர்விலிருந்து

ஆஸ்திரேலியாவில் அகஸ்டா துறைமுக கிரிக்கெட் சங்கம் நடத்திய உள்ளூர் போட்டி ஒன்றில் ஜோஷ் டன்ஸ்டன் என்ற கிரிக்கெட் வீரர் 307 ரன்களைக் அதிரடியாக குவித்துள்ளார். இதில் அவர் மட்டுமே 40 சிக்ஸர்கள் விளாசியதுதான் ஆட்டத்தின் முக்கிய அம்சம்.

வெஸ்ட் அகஸ்டா அணிக்கும், செண்ட்ரல் ஸ்டெர்லிங் அணிக்கும் இடையே சனிக்கிழமை அன்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. அணிக்கு 35 ஓவர்கள் வீதம் நடந்த இந்தப் போட்டியில் வெஸ்ட் அகஸ்டா அணி முதலில் ஆடியது.

அணியின் முதல் விக்கெட் பத்து ரன்களுக்கு வீழ்ந்தபோது, இரண்டாவது ஓவரில் டன்ஸ்டன் களமிறங்கியுள்ளார். அவர் எத்தனை பந்துகளில் 307 ரன்களைக் குவித்தார் என்பது ஸ்கோர் அட்டையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், 35 ஓவர்கள் போட்டியில் இத்தனை ரன்கள் குவிக்க குறைந்த அளவு பந்துகளே அவர் சந்தித்திருப்பார் என யூகிக்கலாம். ஜோஷ் டன்ஸ்டன் 16 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் தந்து ஆட்டமிழந்திருப்பார். ஆனால் அதை எதிரணி கோட்டை விட்டது.

scorecardjpg

ஆட்டத்தின் ஸ்கோர்கார்ட் | படம்: பேஸ்புக் பதிவிலிருந்து

 

மேலும் 7வது விக்கெட்டுக்கு சக வீரர் பென் ரஸ்ஸலுடன் இணைந்து 203 ரன்களை டன்ஸ்டன் பார்ட்னர்ஷிப்பில் குவித்திருந்தார். இதில் ரஸ்ஸல் எடுத்தது வெறும் 5 ரன்கள் மட்டுமே. இன்னிங்ஸின் முடிவில் அகஸ்டா அணி 354 ரன்களை குவித்திருந்தது. அதாவது அணியின் ஸ்கோரில் கிட்டத்தட்ட 86.5 சதவித பங்களிப்பு டன்ஸ்டன் அடித்த 307 ரன்கள். இதுவும் ஒரு புது சாதனையாகும்.

இதற்கு முன், 1984ஆம் ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் மே.இ.தீவுகள் அணி மொத்தமாக 272 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் மட்டுமே 189 ரன்கள் எடுத்திருந்தார். இது அணியின் மொத்த ஸ்கோரில் 69 சதவிதம் ஆகும். இந்த சாதனையை டன்ஸ்டன் தற்போது முறியடித்துள்ளார். சர்வதேச போட்டி சாதனைக்கு ஒப்பான சாதனையாக கருதப்படாவிட்டாலும், டன்ஸ்டனின் இந்த விளாசல் ஆஸ்திரேலிய அணி தேர்வுக்கு அவரது பெயரை பரிந்துரைக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/article19870116.ece?homepage=true

Categories: merge-rss

கூட்டு அரசினை  வீட்டுக்கு அனுப்பல் கூட்டு எதிரணியின்  தலையாய எண்ணம்

அரசியல்-அலசல் - Mon, 16/10/2017 - 11:29
கூட்டு அரசினை  வீட்டுக்கு அனுப்பல் கூட்டு எதிரணியின்  தலையாய எண்ணம்
 
கூட்டு அரசினை  வீட்டுக்கு அனுப்பல் கூட்டு எதிரணியின்  தலையாய எண்ணம்
 
 

 ‘‘எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் இனங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளப்­ப­டும் சகல பிரிப்­புக்­க­ளை­யும் நான் கடு­மை­யாக எதிர்க்­கி­றேன். எனது வாழ்­நாள் பூரா­வும் நான் அதற்கு எதி­ரா­கப் போரா­டி­னேன்.

தற்­போது மட்­டு­மன்றி எனது உயிர் பிரி­யும் வரை அதற்­கா­கப் போரா­டு­வேன்’’ என நெல்­சன் மண்­டேலா பல சந்­தர்ப்­பங்­க­ளில் தெரிவித்துள்ளார். நூறு ஆண்­டு­கள் கால­மாக ஐரோப்­பா­வின் குடி­யேற்ற நாடா­க­இ­ருந்த தென்­னா­பி­ரிக்க நாட்­டில் நில­விய அடி­மைத்­தன நிற­பே­தத்­துக்கு எதி­ரான சுதந்­தி­ரப் போராட்­டத்­துக்­குத் தலைமை தாங்­கிய நெல்­சன் மண்­டேலா, இன­பே­தத்தை ஒழிப்­ப­தற்­காக மட்­டு­மன்றி உலக மேம்­பாடு குறித்­தும் கன­வு­கண்ட பெருந்­த­லைத்­த­லை­வ­ரா­வார்.

‘‘ஆரம்­பத்­தில் எம்­மி­டம் இனத்­துக்­காக இருக்க வேண்­டிய அடிப்­படை அம்­சங்­க­ளான சொந்த மக்­கள் தொகை, இனத் துக்­கே ­யு­ரிய மொழி, தனித்­து­வ­மான பண்­பாடு என்­றவை எது­வும் இருந்­தி­ருக்­க­வில்லை.

நாம் தென்­சீனா, தென்­னிந்­தியா, பாகிஸ்­தான், பங்­க­ளா­தேஷ் (தனி­நா­டா­வ­தற்கு முன்­னர்) இலங்கை, மற்­றும் தீவுக் கூட்­டங்­க­ளி­லி­ருந்து வந்து குடி­யே­றி­யோ­ரா­ வோம்.

எம்மிடம் இருக்கும் முக்கிய என்­ன­வெ­னில் வெவ்­வே­று­பட்ட  இந்த இனத்­த­வர்­களை ஒன்­றி­ணைத்து வாழ இய­லுமா என்­பதே?’’ என முன்­னர் பல சந்­தர்ப்­பங்­க­ளில் சிங்­கப்­பூரை உரு­வாக்­கிய அர­சி­யல் சிற்­பி­யான லீ குவான் யூ தெரி­வித்­தி­ருந்­தார்.

ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தன் மூல­மா­க­வன்றி பல்­வேறு பிரி­வு­க­ளா­கப் பிரிந்து இயங்­கு­ வ­தன் மூலம் ஒரு நாட்டை முன்­னேற்ற இய­லாது என்­பதை லீ குவான் யூ ஏற்­றுக் கொண்­டி­ருந்­தார்.

எல்­லோ­ருமே சிங்­கப் பூர் பிர­சை­கள் என்ற எண்­ணத்­தைச் சகல மக்­கள் மனங்­க­ளி­லும் உரு­வாக்கி, இனங்கள் மத்­தி­யில் ஐக்­கி­யத்தை  வளர்த்தெ­டுத்து உலக அரங்­க­ளில் சிங்­கப்­பூரை வெற்­றி­பெற்­ற­தொரு நாடாக ஆக்­கி­வைத்­தார்.

சிங்­கப்­பூ­ரின் சிற்பி  லீ குவான் யூ நாடு குறித்­துக் கண்­ட­க­னவு

1948ஆம் ஆண்­டில் ஆசி­யா­வில் வளர்ச்­சி­ய­டைந்த நாடாக ஜப்­பான் திகழ்ந்து வந்­தது. இரண்­டாம் இடத்தை இலங்கை வகித்து வந்­தது. சிங்­கப்­பூரை அபி­வி­ருத்தி கண்­ட­தொரு நாடாக ஆக்க பெரும் கஷ்­டங்­களை எதிர்­நோக்­கிய லீ குவான் யூ இலங்­கைக்கு பய­ணம் மேற்­கொண்­ட­வேளை ‘‘இலங்­கை­போன்று சிங்­கப்­பூ­ரை­யும் ஆக்­கி­விட வேண்­டு­மென்­பதே எனது கனவு’’ எனத் தெரிவித்திருந்­தார்.

அன்று அவ்­வி­தம் தெரி­வித்த அவர், பின்பொரு சம­யம்,  ‘‘எதிர்­கால எதிர்­பார்ப்­பு­க­ளு­டன் இருந்து வந்த இலங்கை, சுதந்­தி­ரத்­தின் பின்­னர் எவ்­வாறு பின்­ன­டை­வுக்கு உட்­பட்டு நலி­வு­கண்­டது என்­ப­தை­யும் நான் கண்­டேன்’’ எனத் தெரி­வித்­தி­ருந்­தார்.அது இன மத குல பேதங்­க­ளுக்கு ஆட்­பட்டு உடை­வ­டைந்து போன­தன் விளை­வே­யா­கும்.

1953ஆம் ஆண்­டில் நாட்­டின் வட­ப­கு­திக்­கு வந்த ஐ.தே. கட்­சி­யின் தலை­மை­யி­லான அர­சின் தலைமை அமைச்­சர் சேர்.ஜோன்.கொத்­த­லா­வல, இங்கு வைத்து சிங்­கள மற்­றும் தமிழ் மொழி­ கள் இரண்­டை­யும் இலங்­கை­யின் அரச கருமமொழி­யாக்­கு­வேன் என வாக்­கு­றுதி வழங்­கி­யமை நாட்­டின் தென்­ப­கு­திச் சிங்­கள மக்­க­ளைக் குழப்­பத்துக்கு உள்­ளாக்­கி­யது.

சேர்.ஜோன், சிங்­கள இனத்­தைக் காட்­டிக் கொடுத்­து­விட்­டார் என்று எதிர்க்­கட்­சி­யி­னர் குற்­றம் சாட்­டி­னர். பெளத்த பிக்­கு­மார் தலைமை அமைச்­சர் சேர்.ஜோனுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொண்­ட­து­டன், அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக அவ்­வே­ளை­யில் எதிர்க்­கட்சியாகச் செயற்­பட்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க மற்­றும் பிலிப் குண­வர்த்­தன ஆகி­யோ­ரும் இணைந்­து­கொண்­டமை எரி­கிற நெருப்­பில் எண்­ணெய் ஊற்­றி­யமை போன்­றா­கி­யது. ஆயி­னும் எவர்­தான் எதிர்த்­த­போ­தி­லும் தாம் தமது நிலைப்­பாட்டை மாற்­றிக்கொள்­ளப் போவ­தில்­லை­யென சேர்.ஜோன் உறு­தி­ப­டத் தெரி­வித்­து ­விட்­டி­ருந்­தார்.

மொழி­வெ­றியை வளர்த்­து  பத­வி­யைக் கைப்­பற்­றினார்    பண்­டா­ர­நா­யக்க

1956ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில் ‘‘சிங்­கள மொழியை அரச கரும மொழி ஆக்­கு­வோம்’’ என்ற உறு­தி­மொ­ழியை முன்­வைத்து பண்­டா­ர­நா­யக்க தேர்­தல் அறிவிப்பை வெளி­யிட்­டி­ருந்­தார். இத­னால் சிங்­கள மக்­க­ளது ஆத­ரவு அலை பண்­டா­ர­நா­யக்கவின் பக்­கம் திரும்­பி­யி­ருந்­தது.

ஐ.தே.கட்­சிக்கு எட்டு ஆச­னங்­க­ளி­லேயே வெற்­றி­வாய்ப்­புக் கிட்­டி­யது. சேர்.ஜோன் கொத்­த­லா­வ­ல­வின் இறுக்­க­மான பிடி­வா­த­மான போக்­குக் கார­ண­மா­கவே ஐ.தே.கட்­சிக்­குப் படு­தோல்வி ஏற்­பட்­ட­தாக ஐ.தே.கட்­சி­யின் தீவிர ஆத­ர­வா­ளர்­கள் விமர்­சிக்­கத்    தலைப்­பட்­ட­னர்.

எத்­த­கைய விமர்­ச­னங்­க­ளை­ யும் பொருட்­ப­டுத்­தாத சேர்.ஜோன். பண்­டா­ர­நா­யக்­க­வி­டம் ஆட்­சிப் பொறுப்பை ஒப்­ப­டைத்­து­விட்­டுத் தமது சொந்த வள­வில் கொத்­த­லா­வல சென்று ஓய்வு எடுத்­துக் கொண்­டார்

.
காலப்­போக்­கில் பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான சுதந்­தி­ரக் கட்சி அர­சும் பின்­ன­டைவு காண ஆரம்­பித்­தது. பொதுத்­தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தில் சுதந் திரக் கட்சி அர­சும் பின்­ன­டைவு காண ஆரம்­பித்­தது.

பொதுத்­தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­ வ­தில் சுதந்­தி­ரக் கட்சி அரசு அக்­கறை காட்­டா­தி­ருந்­த­மையே பிரச்  சி­னை­க­ளைத் தோற்­று­விக்­கக் கார­ண­மா­கி­யது. சிங்­கள மொழியை அரச கரு­ம­மொ­ழி­யாக்க பண்­டா­ர­நா­யக்க  அரசு  தாம­தித்­த­தால்  பெளத்த குரு­மார் பண்­டா­ர­நா­யக்­கா­வுக்கு எதி­ராக அணி­தி­ரள ஆரம்­பித்­த­னர். எது எப்­ப­டியோ கடை­சி­யில் பெளத்த துற­வி­யொ­ரு­வ­ரது துப்­பாக்­கிச் சூட் டில் பண்­டா­ர­ நா­யக்க  கொல்­லப்­பட்­டார்.

பண்­டார  நாயக்க குறித்த கொத்­த­லா­வ­ல­வின் விமர்­சிப்பு

தலைமை அமைச்­சர் பண்­டா­ர­நா­யக்­கவின் பூத­வு­ட­லுக்கு மரி­யாதை செலுத்­தச் சென்­றி­ருந்த சேர்.ஜோன்.கொத்­த­லா­வல, ‘‘இப்­ப­டி­யான அசம்­பா­வி­தம் நடக்­கக் கூடுமென நான் எதிர்­பார்த்­தேன்.

கடை­சி­யில் அவ்­வி­தம் ஆகி­விட்­டுள்­ளது. நான் கட்டி வைத்­தி­ருந்த நாய்­களை பண்­டா­ர­நா­யக்க கட்­டுக்­களை அவிழ்த்­த­விட்­டி­ருந்­தார். அவை கடை­சி­யில் அவ­ரையே கடித்து நாசம் விளைத்­துள் ளன’’ என கருத்து வெளி­யிட்­டி­ருந் தார்.

இன­வா­தி­க­ளைக் குறிப்­பிட்­டுக் கூறவே சேர்.ஜோன்.அத்­த­கைய உவ­மா­னத்­தைத் தெரி­வித்­தி­ருந்­தார்.  இன­வாத குழப்­பங்­கள் கடை­சி­யில் நாசத்­தையே ஏற்­ப­டுத்­தும் என்பதை சேர்.ஜோன் நன்கு­ உணர்ந்­தி­ருந்­தார்.

அத­னா­லேயே அவர் இன­வா­தக் கருத்து நிலைப்­பாட்டை நிரா­க­ரித்­தி­ரந்­தார். அந்த வகை­யில் இன்று இன­வா­தக் கோட்­பாட்­டில் நம்­பிக்கை வைத்­துச் செயற்­ப­டும் அர­சி­யல்­வா­தி­கள்  சிலர், இன்­றைய கூட்­ட­ரசு இடை­நிலைக்  கொள்கை நிலை­ப்­பாட்­டில் செயற்­ப­டு­வ­தாக விமர்­சிக்­கின்­ற ­னர். இன­வாத இறுக்­கப் போக்­கைக் கடைக்­கொள்­ளத் தவ­று­வ­தா­கக் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். தென்­ப­கு­திக்­குச் சம­மா­கவே வட­ப­கு­தி­யை­யும் கரு­து கிறோம் என்று   ஏசு­கின்­ற­னர்.

அர­ச தலை­வர் என்ற வகை­யில் சிங்­கள மக்­க­ளு­டன் மைத்­தி­ரி­பால நெருக்­க­மா­கச் செயற்­ப­டும் போக்­கைக் கைக்­கொள்­வ­தில்லை என் பதும் அத்­த­கைய சார­ரது கருத்­தா­கும். ‘‘மகிந்த அப்­ப­டிப்­பட்ட போக்­கு­டை­ய­வ­ரல்ல.

விடு­த­லைப் புலி­கள் கெப்­பட்­டிக்­கொல்­லா­வ­வில் குண்­டுத் தாக்­கு­தல் மேற்­கொண்­ட­போது தமது உயி­ரை­யும் துச்­ச­மாக மதித்து மகிந்த அங்கு சென்று பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைச் சந்­தித்து உத­வி­கள் வழங்­கி­னா­ரல்­லவா? அது­வல்­லவா தலை­மைத்துவம்’’ என மகிந்­த­வைப் போற்­றிப் புக­ழ­வும் அந்­தத் தரப்­பி­னர் முன்னிற்கின்றனர்.

சேர்.ஜோனி­னது ஆட்­சிக் காலத்­தில் நாட்­டின் தேவை குறித்து எவ்­வித அக்­க­றை­யும் இல்­லாத மனி­த­ரென இத்­த­கை­ய­தொரு தரப்­பி­னர் சேர்.ஜோனை விமர்ச்­சித்­த­து­ முண்டு. ஆனால் தமது ஒன்­றரை ஆண்டு­கள் கால நிர்­வா­கத்­தில் சேர்.ஜோன் நாட்­டுக்­கா­கக் குறிப்­பிடத் தக்க சேவை ஆற்­றி­யி­ருந்­தார் என்ற விமர்­ச­ன­மும் அவர் குறித்து வெளி­வந்­த­தண்டு.

 ஜோன் கொத்­த­லா­வலவின்அளப்­ப­ரிய சேவை

1954ஆம் ஆண்­டில் சேர்.ஒலி­வர் குண­தி­ல­கவை இலங்­கை­யின் கவர்­ணர் ஜென­ர­லாக ஆக்­கி­வைத்து இலங்­கை­யர்­க­ளையே இந்த நாட்­டில் கவர்­ணர் ஜென­ரல் பத­விக்கு நிய­மிக்­கும் வழக்­கத்தை ஆரம்­பித்து வைத்­த­வர் சேர்.ஜோன்.கொத்­த­லா­வலவே.

சகல சுதந்­திர தினக் கொண்­டாட்­டங்­க­ளி­லும் நாட்­டின் தேசி­யக் கொடி­யு­டன் பிரிட்­டன் அர­சின் தேசி­யக் கொடி­யை­யும் ஏற்­றி­வைக்­கும் நடை­ மு­றையை நிறுத்தி இலங்­கை­யின் தேசி­யக் கொடியை மட்­டுமே ஏற்றி வைக்­கும் வழக்­கத்தை ஆரம்­பித்து வைத்­த­வ­ரும் சேர்.ஜோனே. இலங்­கைக்கு ஐ.நா. சபை­யின் உறுப்­பு­ரி­மை­யைப் பெற்­றுக்­கொள் வ­துக்­குக் கார­ண­மாய் அமைந்­த­ வ­ரும் சேர்.ஜோன். கொத்­த­லா­ வ­லவே.

பிரிட்­டன் அரசி எலி­ச­பெத் மகா­ராணி தமது கண­வ­ரு­டன் இலங்­கைக்கு முதன் முத­லாக பய­ணம் மேற்­கொள்ள வழி­ச­மைத்­த­வ­ரும் சேர்.ஜோனே. அந்த வகை­யில் சேர்.ஜோன் கொத்­த­லா­வல அதி­ச­யிக்­கத்­தக்­க­தொரு அர­சி­யல் தலை­வ­ராக கரு­தப்­ப­டத்­தக்­க வரே.

அதே­போன்­று­தான் இன்­றைய மைத்­திரி– ரணில் கூட்­ட­ர­சை­யும், சிங்­கள இனம் குறித்து அக்­கறை காட்­டாத அர­சென ஒரு சில தரப் பினர் விமர்­சித்து வரு­கின்­ற­னர். தலதா மாளி­கை­யின் முன்­னால் இர­வுக் கார் ஓட்­டப் பந்­த­யம் நடத்­தும்­வரை பார்த்­தி­ருந்த மகிந்த தரப்­பி­னர் இன்­றைய கூட்­ட­ர­சைக் குறை குற்­றம் கூறு­வது நகைப்­புக்கு இட­மா­னது.

அமெ­ரிக்­கக் குடி­யு­ரிமை பெற்­றி­ருந்த முன்­னைய ஆட்­சித் தரப்­பைச் சேர்ந்­தோர் இன்று எதி­ர­ணி­யில் இருந்­து­கொண்டு இன்­றைய அரசை விமர்­சிப்­பது வேடிக்­கைக்கு உரி­யது., என்­றல்ல வோ நாட்டு மக்­கள் மகிந்த தரப்­பி­னரை குறை­கூ­று ­கின்­ற­னர்.

நாட்டு மக்­கள் மத்­தி­யில் தேசிய நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கும் நோக்­கில் அதற்­கான அலு­வ­ல­க­மொன்றை  நிறுவி நாட்­டின் இனப் பிரச்­சி­னைக்கு உரிய  தீர்­வொன்றை எட்­டு­வ­தற்­கான முயற்­சி­யில் இன்­றைய கூட்­ட­ரசு ஈடு­பட்டு வரு­கி­ற­தல்­லவா?
1954ஆம் ஆண்­டில் சேர்.ஜோன் கொத்­த­லா­வல ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு மேற்­கொண்ட உத்­தி­யோ­க­பூர்வ பய­ணத்­தின் பின்­னர், கடந்த 58 ஆண்­டு­க­ளாக எந்­த­வொரு இலங்­கை­யின் அரச தலை­வர்­களோ, தலைமை அமைச்­சர்­களோ ஆஸ்­தி­ரே­லிய நாட்­டுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ளு­மாறு அழைக்­கப்­பட்­ட­தில்லை. இன்று உல­கின் பல­மிக்க சகல நாடு­க­ளும் இலங்­கை­யு­டன் நல்­லு­ற­வைப் பேணி வரு­கின்­ற­ன.

அன்­றைய கால­கட்­டத்­தில் சேர்.ஜோன்.கொத்­த­லா­வ­ல­வின் செயற்­பா­டு­க­ளின் பெறு­ம­தியை உண­ராத சிங்­க­ளத் தரப்­பி­னர்­கள் அவரை அர­சி­யல் ரீதி­யில் தோற்­க­டித்த அவ­ரது சொந்த இட­மான கந்­த­வளை வள­வுக்­குள் அவரை முடங்க வைத்­தி­ருந்­த­னர்.

அதற்­குப் பின்­னர் அரச அதி­கா­ரங்­க­ளைப் பெற்­ற­வர்­கள் எல்­லோ­ரும் வாயில்­போட்டு உமி­ழும் இனிப்­புக்­குள் மறைத்து வைத்த விசத்­தைப் போன்­ற­வர்­க­ளா­கவே அமைந்­த­னர்.

அந்த வகை­யில் இன்­றைய கூட்­ட­ர­சுக்கு எதி­ரா­கக் குழப்­பங்­களை உரு­வாக்­கும் கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­னர்­க­ளது நோக்­கம் அன்று  சேர்.ஜோன்.கொத்­த­லா­வ­லவை தலைமை அமைச்­சர் பத­வி­லி­ருந்து வெளி­யேற்­றி­யமை போன்று இன்­றைய அர­சை­யும் பத­வி­யி­லி­ருந்து அகற்­று­வ­து­தானா? என்­பது குறித்து சந்­தே­கம் கொள்ள வேண்­டி­யுள்­ளது.

http://newuthayan.com/story/37420.html

Categories: merge-rss

31 வயதிலேயே ஆஸ்திரிய நாட்டின் தலைவராகும் செபாஸ்டின் குர்ஸ் யார்?

31 வயதிலேயே ஆஸ்திரிய நாட்டின் தலைவராகும் செபாஸ்டின் குர்ஸ் யார்?
செபாஸ்டின் குர்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆஸ்திரிய நாட்டின் வேந்தராகவுள்ள செபாஸ்டின் குர்ஸ்

ஆஸ்திரியாவின் கன்சர்வேட்டிவ் மக்கள் கட்சி சமீபத்தில் நடந்து முடிந்த நாட்டின் பொதுத் தேர்தலில் அதிக சதவீத வாக்குகளையும், இடங்களையும் வென்றுள்ளது. இதையடுத்து அந்தக் கட்சியின் தலைவரான செபாஸ்டின் குர்ஸ் நாட்டின் வேந்தராகவுள்ளார். செபாஸ்டினுக்கு வயது 31.

மக்கள் கட்சியானது 31 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வென்று முன்னணியில் உள்ளது . இரண்டாவது இடத்தைப் பிடிக்கப்போவது சமூக ஜனநாயக கட்சியா அல்லது சுதந்திர கட்சியா என்பதில் இதுவரை தெளிவற்ற நிலை நிலவுகிறது

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்குக் குறைவான இடங்களே வென்றுள்ளதால் அகதிகளுக்கு எதிரான போக்கைக் கடைபிடிக்கும் சுதந்திர கட்சியின் கூட்டணியை செபாஸ்டின் குர்ஸ் நாடலாம்.

இந்த வெற்றி குறித்து ஆதரவாளர்களிடம் பேசிய செபாஸ்டின் '' இது நாட்டில் மாற்றத்துக்கான நேரம். இந்த நாட்டை மாற்றுவதற்கு இன்று நமக்கு ஒரு வலுவான கட்டளை இடப்பட்டுள்ளது. இதை சாத்தியதாக்கிய உங்கள் எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

யார் இந்த செபாஸ்டின் குர்ஸ் ?

  • இந்தத் தேர்தலுக்கு முன்னதாக ஐரோப்பாவின் மிக இளவயது வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார் குர்ஸ். கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 27.
  • கடந்த மே மாதம் மக்கள் கட்சியின் தலைவரானார் குர்ஸ். இவர் தனது அரசியல் வாழ்க்கையை கட்சியின் இளைஞர் பிரிவில் இருந்து தொடங்கினார். அவர் கட்சியின் இளைஞர் பிரிவுக்கு தலைமை வகித்தார். அதன் பின்னர் வியன்னாவின் நகர சபையில் பணியாற்றினார்.
  • செபாஸ்டினுக்கு 'வுண்டர்வுஜ்ஜி' என்றொரு செல்லப்பெயரும் இருந்தது. அந்தப் பெயரின் அர்த்தம் '' தண்ணீரிலும் நடக்கக்கூடியவன்''.
  • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ருடோ ஆகிய இளம் தலைவர்களுடன் இவர் ஒப்பிடப்படுகிறார்.
  • மேக்ரோனை போலவே குர்ஸும் தன்னைச் சுற்றி இரு இயக்கத்தைத் உருவாக்கினார். மக்கள் கட்சியை மறுசீரமைப்பு செய்தார்.

http://www.bbc.com/tamil/global-41633236

Categories: merge-rss, yarl-world-news