merge-rss

கிளிநொச்சி படையினரின் புதிய கண்டுபிடிப்பு கண்சாட்சி 2017

ஊர்ப்புதினம் - Fri, 26/05/2017 - 10:19
கிளிநொச்சி படையினரின் புதிய கண்டுபிடிப்பு கண்சாட்சி 2017
 
IMG_8377.jpg
 கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினரால் புதிதாக  கண்டுப்பிடிக்கப்பட்ட உபகரணங்களின் மற்றும் கருவிகளின் கண்காட்சி 2017  இடம்பெற்றுள்ளது.
 
இரணைமடு தாமரைத் தடாகம் மண்டபத்தில்   கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 2017 ஆம் ஆண்டு படையினரால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட  பல்வேறு சாதனங்கள், மற்றும் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு அவை தொடர்பில் விளக்கங்களும் அளிக்கப்பட்டது.
 
புதிய தொழிநுட்பத்துடன் பெருமளவுக்கு  கழிவுப்பொருட்களை மூலப்பொருட்களாக கொண்டு இலகுவாக வேலைகளை செய்யக் கூடிய  பல  புதிய கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.இதனை பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் படையினர் உள்ளிட்ட பலர் பார்வையிட்;டு வருகின்றனர்.
IMG_8346.jpgIMG_8347.jpgIMG_8352.jpgIMG_8353.jpgIMG_8359.jpgIMG_8363.jpgIMG_8382.jpgIMG_8387.jpgIMG_8392.jpgIMG_8394.jpgIMG_8397.jpg
 
 

http://globaltamilnews.net/archives/28044

Categories: merge-rss, yarl-category

யாழ்.மாவட்ட செயலகத்தில் தமிழ் கொலை.

ஊர்ப்புதினம் - Fri, 26/05/2017 - 10:18
யாழ்.மாவட்ட செயலகத்தில் தமிழ் கொலை.

 

jaffna-district-off-2.jpg

 

யாழ்.மாவட்ட செயலகத்தில் சிங்கள சொல் ஒன்றினை மூன்று மொழிகளிலும் எழுதி ஒட்டப்பட்டு உள்ளது. மாவட்ட செயலக பிரதான வாயிலுக்கு அருகில் கண்ணாடிகளால் சுற்றி அறிக்கைப்படுத்தப்பட்ட அறை ஒன்றில் “ஆரச்சி” எனும் சொல் தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதி ஒட்டப்பட்டு உள்ளது

jaffna-district-off.jpg

http://globaltamilnews.net/archives/28058

Categories: merge-rss, yarl-category

உயிர் சோறு - சிறுகதை

கதை கதையாம் - Fri, 26/05/2017 - 09:35
உயிர் சோறு - சிறுகதை
 
 

சிறுகதை: கணேசகுமாரன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

ரவணனிடம் தலையசைத்து விடைபெற்று வீதியில் இறங்கினேன். நல்ல வெயில். இப்படிப் பெரு வெளிச்சமாய் மட்டும் வந்து நம் உடல் முழுவதும் தழுவும் வெயிலை நல்ல வெயில் என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால் சுள்ளென்று தோல் சுட்டு எரிக்கும் வெயிலுக்கும் நாம் நல்ல வெயில் என்றுதான் சொல்கிறோம். நல்ல என்ற சொல்லுக்குத் தரும் அழுத்தத்தில் அர்த்தமே மாறிப்போய்விடுகிறதுதானே.
வெயிலில் ஏது கெட்ட வெயில். கையில் விஜி கொடுத்தனுப்பிய நகைகள் அடங்கிய பை அப்படியே எந்த மாற்றமும் இன்றி இருந்தது. நான் வாழ்ந்த வாழ்க்கை பற்றி சரவணனுக்குத் தெரியும். நகைகளை என்னிடமே வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டான். பணம் தருகிறேன்; பின்பு உனக்கு வசதிப்பட்ட நாளில் திருப்பிக்கொடு என்று பேசிக்கொண்டிருக்கும் போதுதான் போன் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

வீதி திரும்பியதும் எதிரில் ஒரு பெண்மணி வந்துகொண்டிருந்தார். பார்க்க இந்திராணி போலத்தான் இருந்தது. இந்திராணியைக் கடைசியாய் பார்க்கையில் இதே போன்று பச்சைப் புடவைதான் அணிந்திருந்ததாய் ஞாபகம். ஆனால் அது கிளிப்பச்சை நிறம். பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும். பத்து வருடங்களுக்கு முந்தைய இந்திராணியின் முகம்தான் இப்போது ஞாபகத்திலிருக்கிறது. பத்து வருடம் என்றதும்தான் கீர்த்தனா பிறந்ததற்குக்கூட இந்திராணி வரவில்லை என்ற ஞாபகம் வந்தது. இப்படித்தான் தரையில் தவறிவிழும் வாளிநீர் தன் போக்குக்குப் பல கோடுகளின் வழி வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுப்பது போல ஒவ்வொன்றாய் ஞாபகம் வந்துவிடுகிறது. ஒருவரின் மரணம் அவரைப் பற்றிய ஞாபகங்களை மட்டும்தானே கிளறிவிட முடியும். இனிமேல் இறந்துபோன நபருடன் நமக்குப் பேச என்ன இருக்கிறது என்பதுபோல் பழைய நினைவுகளை அசைபோட ஆரம்பித்து விடுகிறோம். பேருந்தில் ஏறினேன்.

p92a.jpg

விஜியிடம் இப்போதே போன் செய்து சொன்னால்தான் அவளும் ஸ்கூலுக்கு லீவ் சொல்லிக் கிளம்ப சரியாயிருக்கும். பஸ் பாம்பன் பாலத்தைத் தாண்டியது. நிறைய மீன்பிடிப் படகுகள் கடல் நீரில் தள்ளாடியபடி இருந்தன. பாலத்தின் ஓரத்தில் நின்றபடி பலரும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள். எதையும் ரசிக்கும் மனநிலை இப்போது இல்லை. இப்போது என்றில்லை. அதெல்லாம் வளரும் காலத்திலேயே இல்லாமல் போய்விட்டது. பேருந்தின் ஜன்னலோர இருக்கைக்கு ஆசைப்படாத மனம் வாய்த்தது சாபமின்றி வரமில்லை. ரிங் போய்க்கொண்டே இருந்தது. காலையில் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்கையில் விஜியின் முகம் வாடித்தான் இருந்தது. என்னதான் சமாதானமாய் பேசினாலும் பெண்களுக்கு நகைகள் மீது உள்ள மோகம் எப்போதுமே மாறாது. அதை மோகம் என்றெல்லாம் குறைவாய்ச் சொல்லிவிட முடியாது. அதுதானே அவர்களுக்குப் பெரிய பாதுகாப்பாய் இருக்க முடியும். அது என்னமோ எனக்கு ஆரம்பத்திலிருந்து எதன் மீதும் பெரிதாய் விருப்பமற்றுப் போயிற்று. பிள்ளைகளுக்கும் விஜிக்கும் உயர்ந்த விலையில் ட்ரெஸ் எடுத்தாலும் எனக்கு மட்டும் சாதாரண விலையில் சாதாரணமான டிசைனில் ஒரு சட்டை. அவ்வளவுதான். விஜியிடமிருந்து போன் வந்தது. கட் செய்தேன். சில நொடிகள் நிதானித்து என்ன பேச வேண்டுமென மனதுக்குள் சின்னதாய் ஓர் ஒத்திகை. விஜிக்கு போன் செய்ய, இரண்டாவது ரிங்கிலேயே போன் எடுக்கப்பட்டது.

``என்னங்க... சரவணனைப் பார்த்தீங்களா?''

``ம். பார்த்தேன்.''

``ஏன்... சொணக்கமா பேசுறீங்க'' என்றாள். போன காரியம் நல்லபடியாய் முடிந்திருக்காதோ என்ற கவலையில்தான் அவள் கேட்டாள். முகம் மட்டுமல்ல, குரலும் பல சமயங்களில் எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

``மதுரையில இந்திராணி எறந்துடுச்சாம். நல்லதம்பி போன் பண்ணிச் சொன்னாரு.''

``என்னங்க சொல்றீங்க. எப்போ?''

``நான் நேர்ல வந்து சொல்றேன். நீ ஸ்கூலுக்கு லீவ் சொல்லிட்டு பிள்ளைகளையும் அழைச்சிட்டு வந்திடு. நாளைக்குதான் எடுக்கிறாங்களாம்.'' போனை வைத்த பிறகு உள்ளுக்குள் புதிதாய் கேள்வி சுழன்று வந்தது. இந்திராணியை எப்போதும் அக்கா என்றுதானே அழைத்திருக்கிறேன். பஞ்சாயத்தில் நிறுத்தி பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் ஆயிற்று என்று ஆங்காரமாய் கத்தியபோதுகூட அக்கா என்ற உறவின் வாசனை கொஞ்சமாய் ஒட்டிக்கொண்டு இருந்ததே. நான்கு பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்தவன் என்பதில் என்மீது அம்மாவுக்கு அதிக பாசம். ஒருவேளை கொள்ளி போட ஒரு வாரிசு வந்துவிட்டது என்ற சந்தோசம்கூட இருக்கலாம். எனக்கு அடுத்து இரண்டுவருடம் கழித்துதான் முருகன் பிறந்தான். எங்கள் வழக்கத்தில் கொள்ளி வைப்பதில் தாய்க்குத் தலைமகன், தகப்பனுக்குக் கடைசி என்பார்கள். ஒருவேளை முருகன் பிறந்ததற்கு அப்பா வேண்டுமானால் அதிகமாய் சந்தோசப்பட்டிருக்கலாம்.

அக்காக்களுடன் வளர்ந்தவன் என்பதாலே அவர்கள் குடித்த மிச்சப்பால்தானே நாம் குடித்தது என்று வளரும்போதே எனக்கொரு எண்ணமிருந்தது. ஆனாலும் வளர வளர அந்த உறுத்தல் வேறு மாதிரி மாறிப்போயிற்று. எல்லாம் தாத்தா பண்ணிய வேலை. உயில் எழுதிவைத்து செத்துப்போன தாத்தாவை நான் பார்த்ததுகூட கிடையாது. `என் மகன் ஜெகந்நாதனுக்குப் பிறக்கும் மூத்த ஆண் வாரிசுக்கே இந்தச் சொத்து அனைத்தும் சொந்தமாகும். அவன் விரும்பினால் மட்டுமே பிறர் அந்தச் சொத்துகளை அனுபவிக்கலாம்.' எப்போதும் எனக்கொரு யோசனை வரும். தாத்தா யார் மீது பாசம்கொண்டு இப்படி ஓர் உயிலை எழுதி வைத்தார். தன் மகன் மீது என்றால் அப்பா பெயருக்கே எழுதியிருக்கலாம். இல்லை மருமகள்  மீது எழுதியிருக்கலாம். அது என்ன... இன்னும் பிறக்காத, பிறப்பானா என்று தெரியாத ஒரு பேரப்பிள்ளைக்கு சொத்தெல்லாம் எழுதி வைப்பது? அவர் இறந்தபோது அவர்கூட வராத அந்தச் சொத்து அவரின் மூத்த பேரனை என்னவெல்லாம் செய்தது, எங்கெல்லாம் கொண்டுசென்று நிறுத்தியது என்று அவருக்குத் தெரியுமா? பேருந்திலிருந்து இறங்கி ஸ்கூட்டர் நிறுத்தி வைத்திருந்த இடத்துக்குச் சென்றேன்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே ஆரம்பித்து விட்டாள் விஜி. எப்போ, எப்படி, ஏன்... எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. நிஜமும் அதுதானே. மாமா போனில் பேசியது மனதுக்குள் கிடந்தது. ``உங்க அக்கா போயிட்டா மச்சான். கடைசிவரைக்கும் தம்பி வரும்னு வாசலையே பாத்துக்கிட்டிருந்தா... வைராக்கியமா இருந்துட்டீங்க. கூடப் பொறந்ததுக்கு செய்ற கடைசிக் கடமையை செஞ்சிட்டுப் போய்டுங்க. காலையில எடுக்குறோம்.'' வருத்தமோ, கவலையோ குரலில் இல்லை. கோபம் இருந்தது போல்தான் தெரிந்தது. இருக்கத்தான் செய்யும். ஆனால் எனக்கு இருந்ததன் பெயர் வைராக்கியமா... ஆறாத வடுதானே அப்படி ஒரு சொந்தம் இருப்பதையே மறக்கச் செய்தது.

கூடப் பிறந்திருந்தாலும் முருகனும் கல்யாணம் முடிக்கும்வரைக்கும் எந்தக் கேள்வியும் எழுப்பாமல்தான் இருந்தான். திருமணம் ஆகி தனிக்குடித்தனம் வைத்தபின்புகூட அப்பாவிடம் மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தானே தவிர ஒன்றுகூடி எனக்கு எதிராய் திரும்பியதெல்லாம் முருகனுக்குக் குழந்தைகள் பிறந்தபின்புதான். சொத்தினை வாரிசுகள் அனைவருக்கும் சமமாய் பிரிக்க வேண்டும் என்று எல்லோரும் ஒற்றைக்காலில் நின்றபோது அப்பாவும் அவர்களுடன் நின்றதுதான் என் எல்லாச் செயல்பாடுகளையும் முறித்துப் போட்டது. மன உளைச்சல் அதிகமாகி இரவெல்லாம் தூக்கம் தொலைத்து எழுந்து உட்கார்ந்து இருட்டையே வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்த தெல்லாம் அப்புறம்தான். எல்லோரையும் விட்டுத் தனித்துவந்து வாடகை வீட்டில் குடியேறிய பின்பும் மனத்தளர்வு குறையவில்லை. அம்மாவின் மடி மட்டும் வயது தாண்டியும் ஆறுதல் தந்துகொண்டிருந்தது.

p92b.jpg

கையில் காசு இருப்பதால் மட்டுமில்லை. மனதில் ஈரமும் இருந்ததால்தான் உதவி என்று வந்த சொந்தங்களுக்கெல்லாம் அள்ளி அள்ளித் தந்தது. ``மாரி இருக்கிறப்போ என்ன கவலை. என் பொண்ணு பொறந்ததிலேர்ந்து தலைக்குத் தண்ணி ஊத்துன வரைக்கும் எல்லாச் செலவையும் மாரிதானே பார்த்தது. அவளுக்குக் கல்யாணம்னா, அவன் எதுவும் செய்ய மாட்டானா என்ன?'' தூரத்துப் பெரியம்மா வகை வழி வந்த அக்கா அப்படிச் சொல்லியபோதெல்லாம் பெருமிதமாகத்தான் இருந்தது. மனிதர்கள் அப்படியில்லை என்பதெல்லாம் கையில் காசில்லாமல் கடனாளியாக நின்றபோதுதான் புரிந்தது. இருந்த வீடு, நிலமெல்லாம் நான்கு அக்காக்களுக்கும் தம்பிக்கும் பிரித்தது போக மிஞ்சியதே எனக்கு ஒதுங்கியது. பிறகு பல மனிதர்களுக்கும் நான் சந்தேகப் பொருளாகிப் போனேன். எப்போதும் எல்லோருக்கும் நல்லவராகவே இருப்பதென்பதெல்லாம் ஒரு கொடுப்பினை. அனைவருக்கும் வாய்க்காது. அவசர அவசரமாகத் தங்கள் பணத்தினை திருப்பிக் கேட்டபோதுதான் நானும் என் தகுதிக்கு மீறி நிறையக் கடன் வாங்கியிருக்கிறேன் என்பது உறைத்தது. எதற்குக் கடன் வாங்கினேன் என்று யோசித்தால், அது மேலும் மனச்சிக்கலையே உண்டாக்கியது. கடன் வாங்கித் தந்து இந்த உலகத்தில் நல்லவனாக வாழ வேண்டிய அவசியமென்ன இருக்கப் போகிறது? அவசரத்துக்குப் பணம் கேட்டவர்களுக்கு அதே அவசரத்தில் நான் வாங்கித் தந்த பணம்தான் வட்டிமேல் வட்டிபோட்டு என்னை எல்லாவிதத்திலும் தனிமைப்படுத்தியது. அப்பாவுக்கு முருகன்தான் இஷ்டம். நானும் வேலைக்குப் போய் சம்பாரித்தாலும் விஜியும் ஸ்கூலுக்குப் போய் வந்தாலும் இருவரின் சம்பளமும் வீட்டு வாடகைக்கும் கடனுக்கு வட்டிகட்டவுமே போதவில்லை. நான் வாழ்ந்து கெட்டவனில்லை. கெட்டு வாழ்பவனுமில்லை. தூக்கம் வராத இரவை மாத்திரைகளின் வழி மாற்றத் தொடங்கியபோதுதான் விஜி அந்த மாற்று யோசனையைச் சொன்னாள்.

நான் சுயமாக சம்பாரித்துதான் விஜிக்கு நகை செய்துபோட்டது. அதில் எனக்கு கூடுதல் திமிர்கூட உண்டு. ஏதாவது விசேஷ வீடுகளுக்கு கழுத்து கொள்ளாத நகையுடன் விஜி செல்லும்போதெல்லாம் அவளை பொறாமையுடன் பார்த்த கண்களைவிட என்னை எரிச்சலுடன் பார்த்த கண்கள்தான் அதிகம். இவ்வளவு கஷ்டத்திலும் குடும்பத்தைக் காப்பாத்துகிறானடா இவன் என்ற வெறுப்பு, மனித இயல்பின் ஒன்றுதானே. மூத்தவள் நிவேதா பிறந்தபோதுகூட இவ்வளவு கஷ்டமில்லை. இளையவள் கீர்த்தனா பிறந்தபின்புதான் எல்லாம் ஆரம்பம். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் பிள்ளைகளின் ஜாதகத்தினைக் கொண்டுசென்று காட்டிப் பரிகாரம் தேடினோம். தேடிய இடத்தில் வேறொன்று கிடைத்தது. எப்போதும் அப்படித்தானே. எல்லாவற்றையும் தேடிய இடத்திலே கிடைத்துவிட்டால் வாழ்க்கை சுவாரஸ்யமற்றுப் போய்விடும். என் ஜாதகம் பார்த்த ஜோஸியர் சொன்னதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள் விஜி. `` மாரிமுத்துவாகிய உங்கள் ஜாதகத்தில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது''. எல்லா நகையும் கழட்டிக் கொடுத்து விற்றுவிட்டு வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யுமாறு சொன்னாள். அவளைப் பொறுத்தவரை நான் வெளிநாடு செல்வது என்பது பணம் சம்பாரிக்க என்பதில்லை. ஏதாவது ஒரு வழியில் என்னை நான் மீட்டெடுக்கும் வழியாய் அவள் தேர்ந்தெடுத்ததுதான் காலையில் சரவணனைப் பார்க்கச் சொன்னது.

விரைந்துகொண்டிருந்த பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் கீர்த்தனா அமர்ந்திருந்தாள். விஜியும் நிவேதாவும் அருகில் இருக்க, நான் அதே வரிசையில் எதிரே இரண்டு பேர் அமரும் சீட்டில் உட்கார்ந்திருந்தேன். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது விஜி கேட்ட கேள்வியை ஜன்னலோர காற்று கேட்டுக்கொண்டிருந்தது. `` வளர்ந்த காலத்துல உங்க அக்கா வீட்டு உப்பையும் சாப்பிட்டுதானே வளந்துருப்பீங்க. சொத்தைப் பிரிச்சி நம்மளை இப்படி ஆக்கினதுல உங்ககூடப் பொறந்த எல்லாருக்கும் பங்கிருக்கில்லியா... மத்தவங்ககூட பேசிக்கிட்டுதான இருக்கீங்க. அதென்ன அந்த அக்கா மேல மட்டும் அப்படி ஒரு வெறுப்பு?'' அத்தனை எளிதில் சொல்லித்தீர்ந்துவிட  முடிகிறதா அந்த வெறுப்பு? எல்லாம் அந்த உப்பைத் தின்றதால் வந்த வெறுப்புதானே. நான் அந்த உப்பைத் தின்றிருக்கக் கூடாது.

*
ப்போது மாரிமுத்துவுக்கு பதினோரு வயது. இரண்டாவது அக்காளான இந்திராணிக்கு கல்யாணம் ஆகியிருந்தது. குடும்பத்திலேயே நல்ல நிறம் என்றால் அது இந்திராணியும் மாரிமுத்துவும்தான்.

மற்றவர்களெல்லாம் மாநிறம். வறுமைப்பட்ட குடும்பம் என்றாலும் இந்திராணியின் அழகு, நல்லதம்பியை யோசிக்கவிடாமல் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தாலி கட்ட வைத்தது. பக்கத்து பக்கத்து ஊர்கள்தான். மாரிமுத்துவுக்கும் சந்தோசம். தன் ஊரிலிருந்து சைக்கிளிலேயே அக்கா வீட்டுக்குச் சென்றுவிடலாம். மாரிமுத்துவுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் சாப்பிட்ட திருப்தியே இருக்காது. அடுத்த ஐந்தாவது நிமிடத்திலே பசிக்கத் தொடங்கிவிடும். ஒருநாள் பள்ளிக்கூடத்துக்குச் சென்றவன் மதியம் சைக்கிள் மிதித்துக்கொண்டு இந்திராணி வீட்டுக்குச் சென்றான்.

``வாடா... ஸ்கூலுக்குப் போகலையா?''

``பள்ளிக்கூடத்திலேர்ந்துதான் வரேன். மதியானம் லீவு. வாத்தியாரு அம்மா செத்துட்டாங்க. மீன் கொழம்பா வெச்சிருக்க. வாசம் வருது. சோறு போடுக்கா. பசிக்குது.''

``ஒரு வேலை பண்றியா. உங்க மாமா தெற்குவாடியில புதுசா ஒரு போட்டு வாங்கிக் கட்டிட்டு இருக்காருல்ல. அங்கே போய் உங்க மாமாவுக்கு சாப்பாடு குடுத்துட்டு வந்துடு. வந்ததும் இங்க சாப்பிடலாம். அதான் சைக்கிள் இருக்குல்ல. ஒரு மிதி மிதிச்சா கா மணி நேரத்துல போயிட்டு வந்திடலாம். குடுத்துட்டு வந்துடுடா... சாப்பாடு எடுக்க வர்றவன் இன்னிக்கி போட்டடிக்கு வல்லியாம்.''

``ரொம்ப பசிக்குதுக்கா. சாப்புட்டுப் போறேன்.'' வயிற்றில் கைவைத்தபடியே முகம் சுளித்துப் பேசினான் மாரிமுத்து.

``செத்த நேரம் பல்ல கடிச்சிக்கப்பா. காலையிலையும் உங்க மாமா சாப்புடல. பசி தாங்க மாட்டார் மனுசன். அவருதான் மீனு வாங்கி அனுப்புனாரு. எதிர்பார்த்துட்டு இருப்பாரு. இல்லாட்டி நான்தான் பஸ்ல போய் குடுத்துட்டு வரணும். கொஞ்சம் போயிட்டு வா மாரி'' அக்கா பஸ்ஸில் போய் சாப்பாடு கொடுத்துவிட்டு வருவதற்குள் தன் வயிறு பொறுமையாய் இருக்காது என்பதை உணர்ந்தவன் ``சரி குடு'' என்றான் தலையாட்டி.

கடல் சார்ந்த கிராமங்கள். மீனவர்கள் அங்கங்கே வலையினை விரித்து வெயிலில் காயவைத்துக் கொண்டிருந் தார்கள். சில இடங்களில் விரிந்த வெயிலில் மீன்கள் கருவாடாகிக் கொண்டிருந்தன. எதிர்காற்றில் சைக்கிள் மிதித்துக்கொண்டி ருந்தான் மாரிமுத்து. பசியில் வயிறு ஏங்கிக் கிடந்தது. அழுந்த சைக்கிள் மிதிக்கையில் குடல் இழுத்தது. அவனைக் கடந்து சென்ற பஸ் இன்னும் அவன் வேகத்தை மட்டுப்படுத்தியது. தெற்குவாடிக்கும் குந்துகாலுக்கும் இடையில் ஒரு பாலம் உண்டு. கடலிலிருந்து கொஞ்சமாய் நீர் பிரிந்து ஏதோ போக்குவரத்து விதியை மீறி நுழையும் நாகம் போல் சென்றுகொண்டிருக்கும். அதன் மீது ஒரு பஸ் போகும் அளவுக்குப் பாலம் கட்டப்பட்டு இரண்டு பக்கமும் சிமென்ட்டால் திட்டொன்றும் அமைத்திருப்பார்கள். சாயங்காலங்களில் சிலர் அத்திட்டில் அமர்ந்து கடலினைப் பார்த்தவாறு கதை பேசுவார்கள். சைக்கிளை அதன் அருகில் நிறுத்தினான் மாரிமுத்து. ஹேண்டில் பாரில் மாட்டப்பட்டிருந்த கூடையைக் கழற்றினான். அவனின் ஒல்லியான கைகளுக்கு மிக பாரமாக இருந்தது சாப்பாட்டுக் கூடை. திட்டில் அமர்ந்து கூடையிலிருந்த கேரியரை வெளியே எடுத்தான். பசியோ, பயமோ கை நடுங்கிற்று. கேரியரைத் திறந்து கொஞ்சமாய் சாதம் எடுத்து வாயில் போட்டான். மெல்லத் துவங்கினான். கேரியரின் அடுத்த அடுக்கைத் திறக்க நான்கு பொரித்த மீன் துண்டுகள் சூரியனில் பளபளத்தன. இப்போது மாரிமுத்துவுக்கு பயம் போயிற்று. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்னும்போது பத்தில் ஒன்று பயமாகவும் இருக்கலாம்தானே. மாமா சாப்பிடும் தட்டை எடுத்து சிமென்ட் திட்டில் வைத்து, கை நிறைய சோற்றை அள்ளி தட்டில் கொட்டிப் பரப்பினான். இரண்டு கை அள்ளியதும் சோறு வைக்கப்பட்டிருந்த அடுக்கில் இருந்த குழி தெரியாதவாறு சமமாக்கினான்.  மீன் துண்டுகளில் ஒன்றை எடுத்து தட்டில் வைத்தான். குழம்பு எதுவும் ஊற்றிக்கொள்ளாமல் வெறும் சோற்றைப் பிசைந்து உருண்டையாக்கி சாப்பிடத் துவங்கினான். வயிறு அடங்கியதும் பாலத்தின் கீழ் தேங்கியிருந்த நீரில் தட்டைக் கழுவிவிட்டு கேரியரைப் பழையபடி அடுக்கிக் கூடையில் வைத்தபின் சைக்கிளை எடுத்தான். இப்போது எதிர்காற்று மாறியிருந்தது.

ஒரு வாரம் கழிந்த ஞாயிறு. அக்கா வீட்டு மீன்வறுவல் வாசம் மாரிமுத்துவின் உள்ளங்கையை விட்டு விலக மறுத்திருந்தது. அக்கா வீடு நோக்கி சைக்கிள் மிதித்தான். மாமா வீட்டில் இருந்தார். வீட்டின் உள்ளே நுழைந்த மாரிமுத்துவின் மூக்கைத் தாக்கியது அக்காவின் கைமணத்தில் வீட்டில் எங்கும் பரவியிருந்த மீன் குழம்பின் வாசனை. ``அக்கா'' என்றபடி இந்திராணியைப் பார்த்த மாரிமுத்துவின் முகத்தில் சந்தேகம் தன்னை எழுதியது. அக்கா முகம் எப்போதும் இப்படி இருந்ததில்லையே... ஏன்? பசி வயிற்றைக் கிள்ளியது. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் வினோதமாய் ஒன்றைக் கவனித்தான். இந்திராணி ஒரே ஒரு சாப்பாட்டுத்தட்டை மட்டும் கழுவி எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்து வைத்தாள். தட்டின் முன்னால் மாமா அமர்வதைக் கவனித்துக்கொண்டி ருந்தவன் `` அக்கா எனக்கும் சோறு'' என்றான். குழம்புடன் அவனைக் கடந்தவள் நின்று திரும்பி அவனை முறைத்துப் பார்த்தாள். மாமா சாப்பிடத் தொடங்கினார். ``அக்கா'' என்றான் மறுபடியும். அவனை நோக்கி வந்தவள் ``எந்திரிடா'' என்றாள். மாரிமுத்து எழுந்து நின்றான். அவனின் கையை இறுகப் பிடித்தவள் வேகமாக சமையற்கட்டுக்கு அழைத்துப் போனாள்.  ``போனவாரம் மாமாவுக்கு சாப்பாடு குடுத்துவிட்டேனே. என்ன பண்ணினே நீ'' அவளிடமிருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு சொல்லிலும் ஆத்திரம் மிகுந்திருந்தது.

``ரொம்பப் பசிச்சிதுக்கா. அதான் கொஞ்சம் எடுத்துச் சாப்புட்டேன்'' மாரிமுத்துவுக்கு அழுகை திமிறி வந்தது. இந்திராணியின் கை இறுக்கம் கூடிக்கொண்டே போக வலியில் திணறினான்.

``ஏன்... ஒருவேளை திங்காம பட்டினி கெடந்தா செத்துப்போய்டுவியோ. எதுவுமில்லாத வீட்ல இருந்து நான் பட்ட கஷ்டமெல்லாம் போதும்னுதான் ஆண்டவனா பாத்து இப்படி ஒரு வாழ்க்கையைக் குடுத்துருக்கான். அதுக்கு நீ ஒல வைக்கிறியாடா...''

``இல்லக்கா... தெரியாம கொஞ்சமா...'' மாரிமுத்துவிடமிருந்து வெட்டுப்பட்டு வெளிவந்து விழுந்த வார்த்தைகளில் கண்ணீர் சொட்டியது.

``என்னது... கொஞ்சமா. ராத்திரி ஒங்க மாமா வந்து சொல்றப்ப எனக்கு நாக்க பிடுங்கிட்டு சாகலாம்போல இருந்துச்சி. நீ தின்ன பாதியைத்  தின்னுட்டு மீதியைத் திங்க அவரு என்ன உங்கப்பனாட்டம் வக்கத்துப் போயா இருக்காரு. சாப்பாடு கம்மியாயிருந்துச்சி. மீனும் வழக்கமா வைக்கிற மாதிரி இல்ல. என்னாச்சி ஒனக்குன்னு கேட்டப்போ என் ஈரக்கொலையே நடுங்கிடுச்சி. அப்பகூட சந்தேகம் வரல. கேரியரை நீட்டுன உன் தம்பி கைல மீன் வாசனை வந்துச்சே. சாப்புட்டு வந்தானான்னு கேட்டப்பதான்டா உன் திருட்டு புத்தி தெரிஞ்சிச்சி. ஏன்டா... கூடப்பொறந்த அக்கா சோத்தையே திருடித் திங்கத் தோணுதே. வளந்து வந்தா நீ என்னன்ன பண்ணுவே.'' மாரிமுத்துவுக்கு இந்திராணி பேசியதில் பாதிப் புரியவே இல்லை. பசிக்கு சாப்பிட்டது இவ்வளவு பெரிய குற்றமா என்றுதான் குழம்பியது அவன் மனம்.

``எல்லாருக்கும்தான் பசிக்குது. அதுக்காக பொறுத்துதான் இருக்கணும். நம்ம வீட்ல நமக்கு வேளாவேளைக்கு சோறு கெடைச்சுச்சா... இல்லீல்ல. மூணு வேளைக்கு ரெண்டு வேளையும் ஒரு வேளையுமா கொறச்சித்தான்டா சாப்புட்டோம். நம்ம அப்பன் பாடுக்குப் போனாதான் காசு. அம்மா கூடைய எடுத்துக்கிட்டு மீனு வித்துட்டு வந்தாதான் காசு. இல்லாட்டி பட்டினி. ஒனக்கு பசிச்சா நீ இங்க வந்து தின்னுருக்கணும். குடுத்துவிட்ட சாப்பாட்டையும் தின்னுட்டு இங்கையும் வந்து கமுக்கமா தின்னுட்டுப் போனவந்தானே நீ. இன்னிக்கி ஒனக்கு சோறு கெடையாது. போ'' இந்திராணி பிடித்திருந்த கை இறுக்கம் மாறாமல் மாரிமுத்துவை இழுத்துக்கொண்டு ஹாலினைக் கடந்தாள். நிமிர்ந்து பார்க்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாமாவைப் பார்த்தான் மாரிமுத்து. சிறுகுடலைப் பெருங்குடல் தின்றுகொண்டிருக்க, வீட்டை விட்டு வெளியேறி சைக்கிளை எடுத்தான்.

*

மாட்டுத்தாவணியில் இறங்கி நல்லதம்பிக்கு போன் செய்து அட்ரஸ் விசாரித்தபடியே ஆட்டோவில் போனோம். சொத்து பிரித்தபிறகு மதுரையில் இடம் வாங்கி வீடு கட்டி செட்டில் ஆனதெல்லாம் செவி வழிச் செய்திகள்தான் எனக்கு. எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று அந்தப் பஞ்சாயத்தின் முன்னால் மனதுக்குள் எல்லோருக்கும் சாபம் விட்டு விலகியவன்தான். எந்த நல்லது கெட்டதுக்கும் கலந்துகொள்ளாமல் எதையும் எவரிடமும் வெளிப்படுத்தாமலே வாழ்ந்தாயிற்று. எனக்காக விஜியும் தன் குடும்பத்தையும் என் குடும்பத்தையும் வெறுத்து விலகி வாழ்ந்தவள்தான். இப்போது சாவு என்றதும்தான் வந்து நிற்க வேண்டியிருக்கிறது. சாயங்கால வெயில் துக்கத்துடன் விடைபெற்றுக் கிளம்பியிருக்க, வீட்டின் வாசலில் ஷாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. நிறைய ப்ளாஸ்டிக் நாற்காலிகளில் நிறைய மனிதர்கள். நீல நிற நாற்காலிகள் என்றால்கூட துக்கம் தெரியாது. இவை சாம்பல் நிறத்தில் அடுக்கப்பட்டிருந்தன. யாராவது வந்து பிரித்துப்போட்டு அமர்ந்தால் அந்த துக்கம் சமாதானமாகிவிடும்போல.

வீட்டின் உள்ளே நுழைந்தேன். என்னைப் பார்த்ததும் யாரோ பெருங்குரலெடுத்து ``எலேய் மாரி... உன் அக்காளப் பாருடா'' என்று கதறத் தொடங்கினார்கள். யாரென்றுதான் தெரியவில்லை. யாரையுமே அடையாளம் தெரியவில்லை. குளிர் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்துக் கிடந்தது அக்காதானாவென்றே தெரியவில்லை. பிணமாய் முகம் பார்க்க முடியாமல் வெளியில் வந்து நாற்காலியில் அமர்ந்தேன். கீர்த்தனா ஓடிவந்து மடிமீது ஏறி உட்கார்ந்தாள். மாமா என்னை நோக்கி வந்தார். யாரோ இன்னொரு நாற்காலி எடுத்துப் போட மாமா அதில் அமர்ந்தார். நிறைய சதையுடன் அடர் தாடியில் இருந்தார். லேசாக பிராந்தி வாடை வந்தது. குடித்திருக்கிறார். ஆறுதலாய் அவரின் கையைப் பற்றினேன். தோளில் போட்டிருந்த துண்டை எடுத்தவர் வாய்பொத்தி உடல் குலுங்க அழத் தொடங்கினார். என் ஒரு கை அவரின் இடது கையைத் தொட்டபடியிருக்க வலதுகையால் துண்டை அழுத்தியபடி அழுதவர் அப்படியே துண்டால் கண்களைத் துடைத்துக்கொண்டார். தொண்டையைச் செருமினார்.

``ரொம்ப நல்லது மச்சான். பழசு எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிருந்து பொணத்து மூஞ்சிலகூட முழிக்காம இருந்துடுவீங்களோன்னு கலங்கிக் கெடந்தேன். வந்துட்டீங்க.'' சாராய வாடையுடன் வார்த்தைகள் வந்தாலும் தெளிவான உச்சரிப்பு. நீளமாய் பெருமூச்சு விட்டார்.

``பட்டுத்தான் மச்சான் உங்க அக்கா செத்துருக்கா. எத்தனையோ ஆஸ்பத்திரி, டாக்டருங்க. பணம் இருந்து என்ன புண்ணியம். காப்பாத்த முடியல.'' தொடர்ந்து பேச முடியாமல் நிறுத்தி நிறுத்திப் பேசினார்.
``ஆனா மூணு நாளா நல்ல தெளிவு. சாகப்போறோம்னு அவளுக்கே தெரிஞ்சிருக்கு போல. நேத்துதான் உங்க பேரைச் சொல்லி பொலம்ப ஆரம்பிச்சா. என் தம்பி வயித்துல அடிச்ச பாவம்தான் இப்பிடி வயித்துல கட்டியா வந்து கெடக்குன்னு அழுகை. நேத்து ராத்திரி என்னைக் கூப்பிட்டுச் சொன்னா. என் தம்பிக்கு வைராக்கியம் அதிகம். நான் சாகுறவரைக்கும் வர மாட்டான். செத்தது தெரிஞ்சி வந்தான்னா அவன் கொண்டு வர்ற வாய்க்கரிசியை எனக்குப் போட வேணாம். நம்ம வீட்ல சமைச்ச சோறு கொஞ்சம் என் வாயில போடச் சொல்லுங்க. அப்பதான் என் கட்ட வேகும்னா. அதுதான் மச்சான் அவ கடைசி ஆச. கொஞ்சம் இருங்க. வர்றேன்.'' எழுந்து போனார்.

அந்தப் பெரிய வீடெங்கும் அழுகையும் கதறலும் பெண்களின் ஒப்பாரிச் சத்தமுமாய் நிரம்பத் தொடங்கின. இரவு மேலும் இருளாய் அவ்வீட்டில் பெருகியது. நிவேதாவும் கீர்த்தனாவும் சாப்பிட்டுவிட்டு வீட்டின் ஏதோ ஓர் அறையில் படுத்து உறங்க விஜி என்னை வந்து அழைத்தாள். நான் மறுத்துவிட்டு அந்த நாற்காலியிலே அமர்ந்திருந்தேன். டீ மட்டும் குடித்திருந்தேன். பசிக்கவில்லை. நடு ராத்திரி போல் மாமா வந்தார். சில பத்திரத்தாள்களை என்னிடம் நீட்டினார்.

'' உங்க அக்கா சுய நினைவோடு கையெழுத்துப் போட்டுக் குடுத்த பத்திரம் மச்சான். அவளுக்குன்னு இருந்த நெலம், வீடு எல்லாம் உங்க பேருக்கு எழுதியிருக்கா. நீங்க வந்தா குடுக்கச்சொன்னா. குடுத்துட்டேன்.'' எழுந்தார். விறுவிறுவென்று அடர் இருள் நிரம்பியிருந்த பாதையை நோக்கி நடந்தார். கையில் வைத்திருந்த பத்திரத்தாள்களுடனே நான் நாற்காலியில் சரிந்து அமர்ந்து கண்களை மூடினேன். விடிந்தது. வர வேண்டியவர்களெல்லாம் வந்துவிட்டார்கள். எந்த உறவையும் எனக்குத் தெரியவில்லை. வந்தவர்களெல்லாம் உள்ளே சென்று ஒருமுறை அழுதுவிட்டு வெளியே வந்து என்னைக் கட்டிப்பிடித்து அழுது போனார்கள். முதல்நாள் இரவு சாப்பிடாததும் சரியாக உறங்காததும் மிகவும் தளர்வாக்கியிருந்தது என்னை. பத்து மணி போல் பெண்கள் நிறையப் பேர் வீட்டிற்குள்ளிருந்து முக்காடிட்டபடி வெளியே வந்தார்கள். விஜியும் வந்தாள். அவள் இடுப்பில் ஒரு சில்வர் பாத்திரம் இருந்தது. வாய்க்கரிசி எடுத்துவரக் கிளம்பிவிட்டார்கள்.

``வாய்க்கரிசி போடுறவங்கல்லாம் போடலாம்'' சுடுகாட்டில் யாரோ கத்த, நான் பாக்கெட்டுக்குள் கைவிட்டு சில்லறைக் காசுக்கு துழாவிக் கொண்டிருக்கையில் மாமா என் கையில் எதையோ திணித்தார். சிறியதாய் டிபன் பாக்ஸ். புரியாமல் அவரை ஏறிட்டேன்.

p92c.jpg

``சாவு வூட்டுல சமைக்கக் கூடாது மச்சான். இது நேத்து உங்க அக்கா கடைசியா சாப்பிட்ட ரசம் சோறு. கொஞ்சம் எடுத்து அவ வாயில வெச்சி விட்டுடுங்க. அவ நெஞ்சு வேகட்டும். செஞ்சிடுங்க மச்சான்.'' கரகரத்த குரலில் மாமா சொல்ல நிற்காமல் வழிந்துகொண்டிருந்தது கண்ணீர். எனக்கு உள்ளுக்குள் உடைந்தது. பாறை கனம் கனக்கத் தொடங்கியது கையில் வைத்திருந்த டிபன் பாக்ஸ். படுக்கவைக்கப்பட்டிருந்த அக்காவின் உடம்பைச் சுற்றிலும் வறட்டிகள் அடுக்கி வைக்கோல் திணிக்கப்பட்டிருந்தது. நான் அருகில் போய் நின்றேன். அக்காவின் முகத்தையே பார்த்தேன். கையில் வைத்திருந்த பாக்ஸைப் பிரிக்க உள்ளே ரசம் ஊற்றி சாதம் பிசைந்து வைத்திருந்தார்கள். மற்றவர்கள் அங்கே வைக்கப்பட்டிருந்த அரிசியிலிருந்து ஒரு பிடி அள்ளி அக்காவின் வாயில் போட்டு நெஞ்சில் காசைத் தூக்கிப்போட்டு விலக, நான் அந்தக் காரியம் செய்தேன்.

இந்திராணியின் கண்கள் திறந்து என்னையே பார்த்துக்கொண்டிருப்பதுபோல் தெரிந்தது.

நான் ரசம் சாதம் பிசைந்து சாப்பிடத் தொடங்கினேன். சுற்றியுள்ளவர்கள் வினோதமாய் என்னைப் பார்க்க கண்ணீர் வழிந்து, என் கையில் பட்டுத் தெறித்து சாதத்தில் விழுந்து சோற்றில் குறைந்த உப்பின் ருசியை சமன்படுத்தியது. யாரோ என் தோள் தொட்டார்கள். எதையும் கவனிக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருக்கும் இந்திராணியின் கண்களைப் பார்த்தவாறே முழுவதும் சாப்பிட்டு முடித்தேன். அந்த டிபன் பாக்ஸை வெகு கோபமாய் கை உயர்த்தி தூர எறிந்தேன். என் கண்ணீர் நின்றிருந்தது. மாமாவிடம் வந்து நின்று என் பேன்ட் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த பத்திரத்தை எடுத்து நீட்டினேன்.  அழுதுகொண்டே முடியாது என்று தலையசைத்து மறுத்தவரின் கைகளில் பத்திரத்தாளைத் திணித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன். நெஞ்சுக்கூடு வேக, திகுதிகுவென்று ஜோராய் எரிந்துகொண்டிருந்தது அக்காவின் பிணம்.

http://www.vikatan.com

Categories: merge-rss

பெண் உட்பட 15 பேர் ஊர்காவற்றுறையில் பொலிஸாரால் கைது

ஊர்ப்புதினம் - Fri, 26/05/2017 - 09:19
பெண் உட்பட 15 பேர் ஊர்காவற்றுறையில் பொலிஸாரால் கைது
 
பெண் உட்பட 15 பேர் ஊர்காவற்றுறையில் பொலிஸாரால் கைது
Share
  •  
  •  
  •  
  •  
  •  

யாழ்ப்­பா­ணம், ஊர்­கா­வற்று­றை­யில் ஒரே நாளில் பெண் உட்­பட 15 பேர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­ட­னர் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

ஊர்­கா­வற்­துறை பாலைக்­காட்­டுச் சந்­திப் பகு­தி­யில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் பேருந்தும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் மெலிஞ்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் அகிலன்(வயது-18) என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த விபத்தையடுத்து அந்தப் பகுதியில் கூடிய 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை அடித்து நொருக்கினர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் என்ற அடிப்படையில் சிலருக்கு எதிராகப் பொலிசார் நீதிமன்றில் கைது உத்தரவை பெற்றனர்.

அதன் அடிப்படையில் ஊர்காவற்துறையைச் சேர்ந்த பெண் உட்பட 15 பேர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகப் பொலிசார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை நேற்றுமுன்தினம் கைது செய்த பொலிசார், நீதிமன்றில் முற்படுத்தியபோது இருவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

http://uthayandaily.com/story/4168.html

Categories: merge-rss, yarl-category

அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன வெள்ளத்தில் சிக்கியுள்ளார்

ஊர்ப்புதினம் - Fri, 26/05/2017 - 09:05

laksman-yappa.jpg
அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாத்தறை பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் அமைச்சரின் வீடு பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் வீட்டுப் பகுதி 15 அடி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சரும், அவரது புதல்வரும் மாகாணசபை உறுப்பினருமான பசந்த யாபா  அபேவர்தனவும் வீட்டில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டின் மேல் பகுதிக்கு சென்று உதவி கோரியுள்ளதாகவும், ஹெலிகொப்டர் மூலம் அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சினால் ஹெலிகொப்டர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2000மாம் ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை விடவும் இம்முறை அதிகளவு மோசமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/archives/28036

Categories: merge-rss, yarl-category

இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன்

ஊர்ப்புதினம் - Fri, 26/05/2017 - 08:58

10254_1495733005_hyu.JPG

இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன்

இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன்.

 

2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த அரசின் ஆசீர்வாதத்துடன் சில அரச அதிகாரிகளும், அரசின் முகவர்களும் மண், காணி அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வியாபாரம் செய்து வந்ததை நாம் அறிவோம். அதற்கான ஆதாரங்களை வெருகல் தொடக்கம் துறைநீலாவணை வரையுள்ள மக்களிடம் கருத்து கேட்டறிந்தால் நன்கு தெரியும். 2009ற்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களும் இன்று இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களின் நிலையையும் இந்த மக்களிடம் கேட்கும்போது மக்களே கூறுவார்கள். இவர்களைப் போன்ற சில அதிகாரிகள் இன்றைய நல்லாட்சியிலும் தொடர்ந்தும் இது போன்ற வியாபாரங்களில் ஈடுபடுவது நாம் அறிந்த விடயமே! மஹிந்த ஆட்சியிலும் உழைப்புத்தான். மைத்திரி ஆட்சியிலும் உழைப்புத்தான். இந்த பச்சோந்திகள் தங்களுடைய கதிரைகளை தக்க வைத்துக்கொள்வதற்காக காலத்திற்கு ஏற்றாற்போன்று நாடகம் ஆடுகின்றனர்.

 

தங்களை இனப்பற்றாளர்கள் போன்று காட்டிக்கொள்ள சில இணையத்தள , முகப்புத்தக எழுத்தாளர்களை வைத்துக்கொண்டு அவ்வப்போது வெளியிடும் அறிக்ககைளை நாம் அறிவோம். இதை சில ஊடகங்கள் வெளியிடுவது கவலைக்குரிய விடயமாகும். எமது ஈழவிடுதலைப் போராட்டம் எதற்காக நடந்தது என்பதை இன்று பலர் மறந்து விட்டார்கள். மண் மீட்பிற்காக பலர் தமது இன்னுயீர்களை தியாகம் செய்தார்கள். இன்று அவ்வாறு தியாகம்  செய்தவர்களுடைய தியாகத்தைக் கூட மதிக்காமல் வெளி மாவட்டத்தவரை இங்கு கொண்டு வந்து, அபிவிருத்தி என்ற போர்வையிலும் ஏனைய விடயங்களாலும் இந்த மாவட்டத்தினுடைய நிலத்தை அபகரித்து இந்த நிலங்களை விற்கின்ற ஒரு சில நயவஞ்சகர்களை நாம் அறிவோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009ம் ஆண்டிற்குப் பின்னர் அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிமாவட்டத்தாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டிற்கு முன் ஒரு லோட் மண்கூட இம் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கு சென்றதில்லை. ஆனால் இன்று பல ஏக்கர் நிலங்களில் இருந்து மண்களை வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளை நாம் அறிவோம். இப்படியான அதிகாரிகளை ஆய்வு செய்து அது பற்றிய செய்திகளை வெளியிட முடியாத முதுகெலும்பில்லாத, தங்களை ஊடகவியலாளர்கள் என்று அடையாளப்படுத்துவோர் செய்யும் செயற்பாடானது எமக்கான துரோகம் அல்ல! மாறாக இந்த மண்ணிற்காக தங்களுடைய உயிரை தியாகம் செய்த எம் உறவுகளுக்கும், இம் மாவட்ட மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

 

நான் அரசியலுக்கு புதிதாக வந்தவன.ஒரு சிறிய அளவிலான காணியைக்கூட அபகரித்தவனும் அல்ல! மற்றவர்களுக்கு விற்றவனும் அல்ல !எந்தவெரு மதுபானசாலையும்,மண் அனுமதிப்பத்திரமும் எனது பெயரில் இல்லை! நான் இந்த மண்ணையும் நிலத்தையும் பாதுகாப்பதில் மிகக் கவனமாக இருக்கின்றேன். இப்பொழுது நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்த பின் இம் மாவட்டத்தில் நடைபெறுகின்ற அனைத்து மக்களுடைய போராட்டங்களிலும் தெரு நாய் போல கலந்து கொண்டு, மக்களோடு மக்களாக நின்று அவர்களது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக ஜனநாயக ரீதியாக நானும் ஈடுபட்டு வருகின்றேன். இந்த மண்ணையும், நிலத்தையும் பாதுகாப்பதற்காக அகிம்சை ரீதியாகப் போரடினோம். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். தற்போது அகிம்சை ரீதியாக  அறவழிப் போராட்டங்களில் ஈடுபடுகின்றோம். ஆகவே மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்வது மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் கலந்து கொள்வது எமது கடமையாகும். மட்டக்களப்பில் எழுகதமிழ் நடைபெற்றது அதில் நான் கலந்து கொண்டேன்! அது பிழையா? மக்களுடைய பிரச்சனைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக நடந்தது .அதன் பின்பு இன்று கல்குடாவில்  அமைக்கப்படுகின்ற எரிசாராய மதுபான உற்பத்திச்சாலைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றது. அந்த ஆர்ப்பாட்டங்களிலும் நான் கலந்து கொண்டு வருகின்றேன். அது பிழையா? அத்துடன் சட்டவிரோதமான மண் அகழ்விற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றிலும் நான் கலந்து கொள்கின்றேன். இது பிழையா? காணி அபகரிப்பு தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன அவற்றிலும் நான் கலந்து கொள்கின்றேன். இது பிழையா?  ஒன்றுமே செய்யாமல் இருப்பவர்கள் தான் இவர்கள் பார்வையில் உத்தம புருசர்கள். சில அடிவருடிகள், சில பச்சோந்திகள், சில நயவஞ்சகர்கள் இவ்வாறான போராட்டங்கள் எங்களுடைய தூண்டுதலின் பெயரில் நடைபெறுவதாகவும் கூறிக்கொண்டு , தங்களை உத்தம புத்திரராகக் காட்டிக்கொண்டும் தங்களுக்கு சார்பான சில இணையத்தள ஊடகவியலாளர்களை வைத்துக்கொண்டு அறிக்கை விடுகின்ற கேவலமான நடவடிக்கைகளை நான் இனிமேலும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். இனிவரும் காலங்களில் இவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் . அவ்வாறு தங்களை இவர்கள் திருத்திக் கொள்ளாதவிடத்து இவர்களின் பெயர்களை நான் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கூறி இவர்களுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நான் தயங்க மாட்டேன்

 

http://www.battinaatham.com/description.php?art=10254

Categories: merge-rss, yarl-category

தூதுவருக்குத் தவறான தகவல் வழங்கினார் வடக்கு முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் சாடல்

ஊர்ப்புதினம் - Fri, 26/05/2017 - 08:53
தூதுவருக்குத் தவறான தகவல் வழங்கினார் வடக்கு முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் சாடல்
 
தூதுவருக்குத் தவறான தகவல் வழங்கினார் வடக்கு முதல்வர்
 

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்தமை குறித்து முறையாக ஆய்வு செய்யாதவர்களின் பொய்யான கதையைக் கேட்டு பிரிட்டன் தூதுவருக்கு, ஒயிலின் அளவு குறைவாகவே உள்ளதால் அபாயம் இல்லை எனத் தவறான கருத்தைச் சொல்லியுள்ளீர்கள் என்று வடக்கு முதலமைச்சரைச் சபையில் சாடினார் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா.

சுன்னாகம் நீரில் ஒயில் கலந்தமை தொடர்பில் பிரிட்டன் தூதுவரிடம் முதலமைச்சர் கூறிய விடயங்கள் தொடர்பாக நேற்றைய அமர்வில் முதலமைச்சரிடம் வாய்மூலமான வினாக்களைக் கோரினார் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா.

கடந்த வருடம் ஜூன் மாதம் பிரிட்டன் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தபோது தங்களைச் சந்தித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நீர் மாசடைந்துள்ளமை தொடர்பான கரிசனையை வெளிப்படுத்தினாரா?, அவ்வாறு வெளிப்படுத்தியிருந்தால் வெளிநாடுகளில் நீர்ப் பரிசோதனைகளை செய்தவர்கள் யார்?, அவ்வாறு நீர் பரிசோதனைக்குப் பணிப்புரை வழங்கியது யார்? அவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்திய நீர் மாதிரிகள் எத்தனை?, அந்தப் பரிசோதனை அறிக்கையைச் சபையில் சமர்ப்பிக்க முடியுமா?அதற்கான செலவு எவ்வளவு? வழங்கியவர்கள் யார்? என முதலமைச்சரிடம் அடுக்கடுக்காக வினாக்களை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், பிரிட்டன் தூதுவர் யாழ்ப்பாணத்தில் நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் அவர் தனது கரிசனையை வெளியிட்டிருந்தார்.அதன்போது நான் சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்துள்ள ஒயிலின் அளவு அபாய நிலையிலும் குறைவாகவே இருக்கின்றது எனக் கூறினேன். வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சின் நிபுணர் குழுவின் அறிக்கையில் விவரம் உள்ளது. பரிசோதனை நிறுவனத்துக்கு பணிப்புரை வழங்கவில்லை. முழு விவரங்களும் நிபுணர்குழு அறிக்கையில் உள்ளது-என்றார்.

இதன்போது கருத்துரைத்த தவராசா,எவ்வித முறையான அனுமதியும் இல்லாமல் யாரோ 5 பேர் கொண்ட குழு சொன்னதை வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் தூதுவருக்கு நீர் மாசு தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் கூறலாமா? யாரும் அனுமதிக்காத நிபுணர் குழு அங்குள்ள 12 கிணறுகளை மட்டும் ஆய்வு செய்துவிட்டு முடிவுக்கு வரமுடியாது-என்றார்.

http://uthayandaily.com/story/4163.html

Categories: merge-rss, yarl-category

உப்புவெளியில் சிவன்கோவில் கட்டத் தடை!

ஊர்ப்புதினம் - Fri, 26/05/2017 - 08:41
உப்புவெளியில் சிவன்கோவில் கட்டத் தடை!
உப்புவெளியில் சிவன்கோவில் கட்டத் தடை!
 

திருகோணமலை மாவட்டம், உப்புவெளிப் பிரதேசத்தில் செம்பீஸ்வரர் ஆலய வளாகத்தில் கோவில் கட்டுவதை தொல்பொருள் திணைக்களம் தடுத்து நிறுத்தியுள்ளது.

கடந்த 7ஆம் நாள் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவால் கேட்கப்பட்ட கேள்விக்கு நேற்றையதினம் நடைபெற்ற அமர்வில் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், உப்புவெளி செம்பீஸ்வரர் ஆலய வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டெக்கப்பட்டது எனவும் அங்கு புராதனமான சிவன் கோவில் இருந்ததற்கான ஆதாரம் உண்டு என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை.

அங்கு புராதன விகாரை அமைந்திருந்ததற்கான ஆதாரம் உண்டு. எனவேதான் அங்கு கோவில் கட்டுவதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதியளிக்கவில்லையெனவும் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்குக் கிழக்கில் வாழும் மக்களால் பௌத்த மதத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் இடங்கள் சிதைக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

http://thuliyam.com/?p=68810

Categories: merge-rss, yarl-category

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை அதிரவைத்த ட்ரம்ப்பின் பேச்சு!

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை அதிரவைத்த ட்ரம்ப்பின் பேச்சு!
 
 

ட்ரம்ப் அதிபரான பிறகு ஜெர்மனியுடன், தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். குறிப்பாக கடந்த மார்ச் மாதம் ட்ரம்ப், ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கலன் இருவரும் சந்தித்தனர். அப்போது, ஏஞ்சலா, ட்ரம்புடன் கைக்குலுக்க வர, ட்ரம்ப் அதை கண்டுகொள்ளவில்லை. ஏஞ்சலாவின் முகத்தைக் கூட ட்ரம்ப் பார்க்கவில்லை. இதனால், பயங்கர நோஸ் கட்டுடன் ஏஞ்சலா திரும்பினார். 

Trump


இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் ட்ரம்ப் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ட்ரம்பின் பேச்சால் ஜெர்மனி மேலும் சூடாகியுள்ளது. முக்கியமாக, "ஜெர்மனியர்கள் கெட்டவர்கள். மிகவும் கெட்டவர்கள். அமெரிக்காவில் அவர்கள், மில்லியன் கணக்கில் கார்களை விற்பனை செய்துள்ளனர். ஆனால், அவற்றை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்" என்று கூறியுள்ளார்.

ட்ரம்பின் இந்தக் கருத்தால், உலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல, ட்ரம்புக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

ஒபாமா இருந்தவரை ஜெர்மனியுடன் அவர் நல்லுறவைக்  கடைபிடித்துவந்தார். இதற்கிடையே ட்ரம்பின் இந்த நடவடிக்கை, இரு நாட்டின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

http://www.vikatan.com/news/world/90440-trump-promises-to-stop-car-imports-from-germany.html

Categories: merge-rss, yarl-world-news

மாலை 6 மணிக்குப் பின்னர் தனியார் வகுப்புகளுக்கு தடை வடக்கு மாகாண சபையில் கோரிக்கை

ஊர்ப்புதினம் - Fri, 26/05/2017 - 08:20
மாலை 6 மணிக்குப் பின்னர் தனியார் வகுப்புகளுக்கு தடை வடக்கு மாகாண சபையில் கோரிக்கை
 
மாலை 6 மணிக்குப் பின்னர் தனியார் வகுப்புகளுக்கு தடை
 

வடக்கு மாகா­ணத்­தில் இயங்­கும் தனி­யார் கல்வி நிலை­யங்­கள் மாலை 6 மணிக்­குப் பின்­ன­ரும் காலை 6 மணிக்கு முன்­ன­ரும் செயற்­ப­டு­வதை நிறுத்­த­வேண்­டும். வெள்ளி மற்­றும் ஞாயிறு தினங்­க­ளில் விடு­முறை வழங்­க­வேண்­டும் என­வும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் சர்­வேஸ்­வ­ரன் கோரிக்கை முன்­வைத்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் 93 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தனியார் கல்வி நிலையங்களில் மாலை 6 மணிக்குப் பின்னர் கற்றல் நடவடிக்கைகள் நடைபெறுவதால் பல முறையற்ற சம்பவங்கள் நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டிய மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன், காலை 6 மணிக்கு முன்னர் தனியார் கல்வி நிலையங்கள் இயங்குவதையும் நிறுத்தவேண்டும். இதற்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரினார்.

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தனியார் கல்வி நிலையங்களை நடத்தக் கூடாது எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இவை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

http://uthayandaily.com/story/4158.html

Categories: merge-rss, yarl-category

வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகத்துக்கு மங்கள குழுவினர் இன்று அடிக்கல் நட்டனர்

ஊர்ப்புதினம் - Fri, 26/05/2017 - 08:19
வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகத்துக்கு மங்கள குழுவினர் இன்று அடிக்கல் நட்டனர்
 
வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகத்துக்கு மங்கள குழுவினர் இன்று அடிக்கல் நட்டனர்
 

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் அமைக்கப்படவுள்ள குமார் ஆனந்தன் நீச்சல் தடாகத்துக்கான அடிக்கல் இன்று முற்பகல் நடப்பட்டது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  எம்.எம்.ஹரிஸ், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,  வடக்கு கல்வி அமைச்சர் த.குரகுலராசா உள்ளிட்ட விருந்தினர்கள் அடிக்கல் நட்டனர்.

20170530_100349-1024x768.jpg20170530_100753-1024x768.jpg

http://uthayandaily.com/story/4152.html

Categories: merge-rss, yarl-category

மைதானத்துக்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களும் பாதுகாக்கப்படுவீர்கள் : ஐ.சி.சி!

மைதானத்துக்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களும் பாதுகாக்கப்படுவீர்கள் : ஐ.சி.சி!

 

 

சம்பியன்ஸ் கிண்ணத்தை மைதானத்தில் பார்வையிட வரும் ஒவ்வொரு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுவீர்கள் என சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரோனி பிளானகன் தெரிவித்துள்ளார்.

263446.jpg

இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் இடம்பெற் தீவிரவாத தாக்குதல் காரணமாக சம்பியன்ஸ் கிண்ண தொடரின் பாதுகாப்பில் உறுதியற்ற தன்மை காணப்பட்டது.

எனினும் தற்போது பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ரோனி பிளானகன், “ சம்பியன் கிண்ண தொடரை முழு பாதுகாப்புடன் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். போட்டிகளை பார்வையிட வரும் ரசிகர்கள் மற்றும் விளையாடும வீரர்களுக்கான முழு பாதுகாப்பை நாம் வழங்க தயாராகவுள்ளோம்”.

“மென்செஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளுககும் ஆயுதம் தாங்கிய இராணுவ அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் இன்னுமொரு தீவிரவாத தாக்குதல் இடம்பெறாது அதுமாத்திரமின்றி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான உயர்தர பாதுகாப்பு வழங்கப்படும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.virakesari.lk/article/20385

Categories: merge-rss

கிணற்றுடன் ஆயுதங்களை வெடிக்க வைக்கத் தீர்மானம் தையிட்டிப் பகுதி மக்களை இன்று அங்கு செல்லவேண்டாமெனக் கோரிக்கை

ஊர்ப்புதினம் - Fri, 26/05/2017 - 07:57
கிணற்றுடன் ஆயுதங்களை வெடிக்க வைக்கத் தீர்மானம் தையிட்டிப் பகுதி மக்களை இன்று அங்கு செல்லவேண்டாமெனக் கோரிக்கை

மக்­கள் மீள்­கு­டி­ய­மர்­வுக்கு அண்­மை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட தையிட்­டிப் பிர­தே­சக் கிணற்­றி­லி­ருந்து தொடர்ச்­சி­யா­கப் பெரு­ம­ளவு ஆயு­தங்­கள் மீட்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், எஞ்­சிய ஆயு­தங்­களை மீட்க முடி­யா­மை­யால் அவற்றை இன்று வெடிக்க வைத்து அழிப்­ப­தற்­குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பிரதேசத்தைச் சூழச் சுமார் 100 மீற்றர் தூரத்தினுள் மக்கள் எவரையும், வெடிவைத்து அழிக்கும் வரை பிரவேசிக்க வேண்டாம் என்று பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டில் 27 வருடங்களாக இருந்த தையிட்டிப் பிரதேசம் கடந்த மாதம் மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்டது. மக்கள் தமது காணிகளைத் துப்பரவு செய்து வருகின்றனர். கிணற்றை இறைத்துத் துப்புரவு செய்ய முற்பட்டபோது, வெடிபொருள்கள் இருந்தமை அவதானிக்கப்பட்டது.

கடந்த 10 தினங்களுக்கு முன்னர் மேற்படி கிணற்றிலிருந்து 300 கைக்குண்டுகள் மீட்கப்பட்டிருந்தன. மறுநாள் 400 கைக்குண்டுகள் மற்றும் ஏனைய ஆயுதங்கள் அந்தக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் 250 கைக்குண்டுகள் மீட்கப்பட்டிருந்தன. நேற்றைய தினமும் ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன.

கிணற்றில் இன்னமும் ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், அவற்றை மீட்க முடியாத நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக எஞ்சியுள்ள ஆயுதங்களை கிணற்றினுள்ளே வெடிக்க வைத்து அழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியத்திற்குள் இவை வெடிக்க வைக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

http://uthayandaily.com/story/4149.html

Categories: merge-rss, yarl-category

வழிநடத்தல் குழு உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு! ஊடகங்களுக்கு தகவல் வழங்கத் தடா

ஊர்ப்புதினம் - Fri, 26/05/2017 - 07:53
வழிநடத்தல் குழு உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு! ஊடகங்களுக்கு தகவல் வழங்கத் தடா
 
வழிநடத்தல் குழு உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு!
 

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­ந­டத்­தல் குழு­வில் நேற்­றுக் கார­சா­ர­மான விவா­தங்­கள் நடை­பெற்­றன என்று தெரிய வரு­கின்­றது. அத்­து­டன் கூட்­டத்­தில் பேசப்­ப­டும் விட­யங்­கள் தொடர்­பில் ஊட­கங்­க­ளி­டம் மூச்­சும் காட்­டக் கூடாது என்று கண்­டிப்­பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

வழிநடத்தல் குழுவின் மரதன் அமர்வு நேற்று மூன்றாவது நாளாகவும், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

வழிநடத்தல் குழுவின் ஒவ்வொரு அமர்விலும் பேசப்படும் விடயங்கள் தமிழ் – சிங்கள பத்திரிகைகளில் வெளிவருவது தொடர்பில் நேற்றைய அமர்வில் பேசப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஊடகங்களில் இந்தச் சந்திப்புக்கள் தொடர்பில் வெளிவருவது உசிதனமானது அல்ல என்றும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனால் வழிநடத்தல் குழுவில் பேசப்படும் விடயங்கள் தொடர்பில் எவருமே ஊடகங்களிடம் வாய் திறக்கக் கூடாது என்றும், வழிநடத்தல் குழுவின் தொடர் அமர்வு முடிந்ததும், பத்திரிகை அறிக்கை வெளியிடவும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

http://uthayandaily.com/story/4145.html

Categories: merge-rss, yarl-category

'என்னை மன்னித்துவிடுங்கள்' மான்செஸ்டர் தாக்குதல் தீவிரவாதியின் இறுதி தொலைபேசி உரையாடல்

'என்னை மன்னித்துவிடுங்கள்' மான்செஸ்டர் தாக்குதல் தீவிரவாதியின் இறுதி தொலைபேசி உரையாடல்

 

 
 
மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் காட்சி (இடது), தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய சல்மான் அமேதி
மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் காட்சி (இடது), தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய சல்மான் அமேதி
 
 

மான்செஸ்டர் நகரில் இசை நிகழ்ச்சியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி குண்டு வெடிப்பை நடத்தும் முன் 'என்னை மன்னித்துவிடுங்கள்' என்று தொலைபேசியில் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிறு (21-ம் தேதி) இரவன்று லண்டன் மான்செஸ்டர் நகரில் அரியானா கிராண்டே அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 59 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 22 வயதான சல்மான் அமேதி என்ற இளைஞர்தான் இந்தத் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியவர் என்று அவரது புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டு அதனை உறுதியும் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சல்மான் அமேதி பற்றிய தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளி வந்தவண்ணம் உள்ளன.

லிபியாவை பூர்வீகமாகக் கொண்ட அமேதி லண்டனில் வளர்ந்தவர் என்றும் கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டு தற்கொலைப்படை தீவிரவாதியாக மாறியவர் என்று லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய அமேதி குண்டு வெடிப்பை நடத்தும் முன், தொலைபேசியில் 'என்னை மன்னித்து விடுங்கள்' என்று கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமேதியின் உறவினர் கூறும் போது, "சல்மான் அமேதி தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன்னர் தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு 'என்னை மன்னிவிடுங்கள்' என்று என்னிடம் கூறினார். கடந்த ஆண்டு லண்டனில் அமேதியின் முஸ்லிம் நண்பர் ஒருவர் கொலை செய்யப்பட்டத்தை பற்றி யாரும் கவனிக்கவில்லை என்று அமேதி வருத்தப்பட்டார். லண்டனில் அரேபியர்கள் கொலை செய்யப்படுவது குறித்து ஏன் இங்கு எந்த சீற்றமும் இல்லை. இதுதான் இந்தத் தாக்குதல் ஏற்பட காரணமாகியுள்ளது" என்றார்.

தற்கொலைப் படை தீவிரவாதி சல்மான் அமேதி, ரமதான் அமேதி, லிபியா தலைநகர் திரிபோலியில் வசித்து வருகிறார். அவரை அந்த நாட்டு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

சல்மான் அபேதியின் சகோதரர் இஸ்மாயில் தெற்கு மான்செஸ்டர் நகரில் வசித்து வருகிறார். அவரும் மான்செஸ்டர் போலீஸ் பிடியில் உள்ளார்.

இதனிடையே மான்செஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை விவரங்களை இங்கிலாந்து போலீஸார் அமெரிக்க உளவுத் துறையிடம் பகிர்ந்து வந்தனர். அந்த விவரங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதனால் விசாரணைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள இங்கிலாந்து போலீஸார் இனிமேல் விசாரணை விவரங்களை அமெரிக்காவிடம் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதுவரை மான்செஸ்டர் தற்கொலைப் படை தாக்குதல் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com/world/என்னை-மன்னித்துவிடுங்கள்-மான்செஸ்டர்-தாக்குதல்-தீவிரவாதியின்-இறுதி-தொலைபேசி-உரையாடல்/article9713141.ece?homepage=true

Categories: merge-rss, yarl-world-news

’தமிழர்களின் தங்கம் தொடர்பில் தகவல் இல்லை’

ஊர்ப்புதினம் - Fri, 26/05/2017 - 07:39
’தமிழர்களின் தங்கம் தொடர்பில் தகவல் இல்லை’
 

-ஜே.ஏ.ஜோர்ஜ்

"அகதி முகாமில் தஞ்சமடைந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள், தங்கம் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் எந்தத் தகவலும் எம்மிடம் இல்லை" என, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் நேற்று கூடிய நாடாளுமன்றத்தில், வாய்மூல விடைக்கான கேள்வி பதில் சுற்றின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எழுப்பியிருந்த கேள்வி 4ஆவது தடவையாகம் ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்தது.

“யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு தங்கம் எங்கேனும் நம்பிக்கைப் பொறுப்பில் வைப்பீடு செய்யப்பட்டதா?" என, என வாசுதேவ எம்.பி கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கான பதிலை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன், நேற்றைய தினம் வழங்குவதற்கு முன்வந்தார்.

சுவாமிநாதன் பதிலளிக்கையில்,  'யுத்தத்துக்கு பின்னர் அகதிகளாக்கப்பட்டவர்களுக்கான தங்குவதற்கான வசதிகள் வவுனியா மாவட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. இம்மக்களது சொத்துக்கள் மற்றும் ஆபரணங்கள் குறித்து எந்தவித தகவல்களும் வவுனியா பிரதேச செயலகத்திடம் இல்லை" என்றார்.

'தமது தங்கம் மற்றும் ஆபரணங்களை திருப்பிக்கொடுக்கவில்லை என முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெற்றுள்ளதா?" என, என வாசுதேவ எம்.பி மற்றுமொரு கேள்வியை கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், “தகவல்கள் எதுவும் இல்லையெனவும், நடவடிக்கை எடுப்பது எனது அமைச்சுக்கு சம்பந்தப்பட்ட கேள்வி இல்லை” என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/’தமிழர்களின்-தங்கம்-தொடர்பில்-தகவல்-இல்லை’/175-197365

Categories: merge-rss, yarl-category

கனேடிய பிரதமர் Justin Trudeau தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பத்தால் ஈர்க்கப்பட்டு சிலம்பம் சுற்றிய தருணங்கள்.

வாழும்-புலம் - Fri, 26/05/2017 - 07:25

கனேடிய பிரதமர் Justin Trudeau தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பத்தால் ஈர்க்கப்பட்டு சிலம்பம் சுற்றிய தருணங்கள்.

 

 

Categories: merge-rss

டென்மார்க்கில் அகதியாக தஞ்சமடைந்து தற்பொழுது விமானியாக பணிபுரியும் இலங்கை பெண்.

டென்மார்க்கில் அகதியாக தஞ்சமடைந்து தற்பொழுது விமானியாக பணிபுரியும் இலங்கை பெண்.

Categories: merge-rss, yarl-world-news

சிரியா மீது ஐக்கிய இராச்சியம் வீசிய ஏவுகணையில் எழுதப்பட்டிருந்த வசனம்...!

சிரியா மீது ஐக்கிய இராச்சியம் வீசிய ஏவுகணையில் எழுதப்பட்டிருந்த வசனம்...!

 

 

சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது எறிவதற்காக ரோயல் எயார் ஃபோர்சஸ் எடுத்துச் சென்ற ஒரு ஏவுகணையில், பழிக்குப் பழி என்பதைக் குறிப்பிடும் வகையில் ‘மென்ச்செஸ்டரில் இருந்து அன்புடன்...’ என்ற எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

1_V_Love.jpg

மென்ச்செஸ்டரில், பிரபல பொப் பாடகி அரியானா கிராண்டேயின் இசை நிகழ்ச்சியின்போது ஐ.எஸ். தற்கொலைப் படை இளைஞன் ஒருவன் நடத்திய தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் - குறிப்பாக இளைஞர், யுவதிகள் மற்றும் சிறுவர், சிறுமியர் - 22 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, சிரியாவில் நிலைகொண்டிருக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் முகாம்கள் மீது ஐக்கிய இராச்சியத்தின் ரோயல் எயார்ஃபோர்ஸ் படையினர் வான் தாக்குதல் நடத்தினர்.

இதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளுள் ஒன்றில், ‘மென்ச்செஸ்டரில் இருந்து அன்புடன்...’ என்று எழுதப்பட்டிருந்தது.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியானபோது, அது ‘ஃபோட்டோஷொப்’ மூலம் எழுதப்பட்டிருந்ததாகவே நம்பப்பட்டது.

என்றபோதும், அதைத் தமது படைவீரர் ஒருவரே எழுதியதாக ரோயல் எயார்ஃபோர்ஸ் படையின் தலைமை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

வீசப்படவிருக்கும் குண்டுகளில் தமது எதிரிகளை விமர்சித்தும், கேலி செய்தும் செய்திகளை எழுதியும் அனுப்புவது இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரால் ஆரம்பிக்கப்பட்டது. அது இன்றளவும் தொடர்கிறது.

2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் உலக வர்த்தக நிலையம் மீதான தாக்குதலையடுத்து ஈராக்கில் வீசப்பட்ட குண்டுகளில், ‘சதாம்... இது உங்களுக்கென விசேடமாக அனுப்பப்படுகிறது’ என்றும், ஒசாமா மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளில் ‘நரகத்தில் ஆறுதலடைவீராக’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

http://www.virakesari.lk/article/20382

Categories: merge-rss, yarl-world-news

நுவரெலியாவில் அடை மழை : நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு : குடியிருப்புகளுக்கு பாதிப்பு! (படங்கள்)

ஊர்ப்புதினம் - Fri, 26/05/2017 - 06:57
நுவரெலியாவில் அடை மழை : நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு : குடியிருப்புகளுக்கு பாதிப்பு! (படங்கள்)

 

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால்  பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான்கதவுகளும்  திறந்துவிடப்ட்டுள்ளது.

unnamed__1_.jpg

நேற்று மாலை முதல் பெய்துவரும் கடும் மழையில்  போக்குரவத்து தடைப்பட்டுள்ளதுடன் குடியிருப்புகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை ஹட்டன் ஸ்டெதண் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் குடியிருப்பின் ஒருபகுதி சேதமாகியுள்ள நிலையில் குடியிருப்பிலுள்ள 5 பேர் உறவினகளின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

unnamed__2_.jpg

அதேவேளை மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் அப்புகஸ்தனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவத்து தடைப்பட்டது.  லக்ஷபான நோட்டன் பிரதான வீதியில் 2ம் கட்டை பகுதியில் பாரிய மரமொன்று வீதியில் முறிந்து வீழ்ந்தமையினால் லக்சபான நோட்டன், ஹட்டன், கினிகத்தேனை பகுதிகளுக்கான போக்குவரத்து அதிகாலைமுதல் 7.30 மணிவரை தடைப்பட்டது.  மேலும் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் நோட்டன் பிரிட்ஜ் நீர்த்தேக்த்தில் நீர் நிறம்பியுள்ளது.  மேலும் லக்ஷபான, கெனியன் நீர்தேக்கங்களில் தலா இரண்டு வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளது. 

unnamed__3_.jpg

நீர்தேக்கங்களில் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளமையினால் களனி கங்ககையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.  சீரற்ற காலநிலையால்97 வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

unnamed__4_.jpg

unnamed__5_.jpg

unnamed__6_.jpg

unnamed.jpg

uuu_pu_p__.JPG

 
Tags

http://www.virakesari.lk/article/20380

Categories: merge-rss, yarl-category