merge-rss

மறக்க முடியாத நினைவுகள்... 

மறக்க முடியாத நினைவுகள்... 

ஒரு காலத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடி முடிய பல மணிநேரம் இருந்து பல விடயங்களையும் கதைத்த இடம்.

 Baum, Pflanze, im Freien und Natur

இந்த மதில் ஓரத்தில் ஒரு சீமெந்திலான கட்டு இருந்தது (அது இப்ப அந்த இடத்தில இல்லை. அதையும் யாரோ தூக்கி கொண்டு போய் விட்டார்கள்) அதில்தான் நாங்கள் இருந்து கதைப்பது. இந்த மதிலுக்கு முன்பாக ஒரு 8 பரப்பு காணி. அதுக்குள் 2 புளியமரம், ஒரு வேம்பு, ஒரு மாமரம், ஒரு செரிபழ மரம்.. இதுக்கு நடுவில்தான் கிரிக்கெட். கண்னுக்கு பந்து தெரியும்வரை விளையாட்டுத்தான்.

யாழ் நகரில் உள்ள முன்னனி பாடசாலை மாணவர்கள் எல்லாம் பிற்பகலில் கூடும் இடம்.  கலகலப்புக்கும் நகைச்சுவை கதைகளுக்கும் பஞ்சம் இருக்காது. சிலவேளைகளில் ஒரு அணியில் 15 பேர் கூட இருப்பார்கள்.. அதைவிட முன்பு இதே இடத்தில் கிரிக்கெட் விளையாடியவர்கள் லண்டனில் இருந்து வரும்போது அவர்களும் எம்மோடு சேர்ந்து விளையாடுவது. அந்த வருடத்திற்கான செலவு எல்லாம் அவர்கள் கணக்கில் எழுதிவிடுவோம்.

நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க ஒரு சில ரசிகர் கூட்டம். விளையாடும் ஆட்களை பார்க்க என்று ஒரு சிலர் அந்த பாதையால் நாலுதரம் சைக்கிளில் சவாரி.... வந்து போவார்கள்.
அந்த நேரம் நாங்கள் சிக்ஸ் அடிக்க போய் விக்கெட் பறிபோவதும் நடக்கும்.

விளையாட்டு முடிய பலரும் கலைந்து போக நாங்கள் ஒரு சிலர் உந்த மதிலோடு இருந்து கதைக்க தொடங்கி.. இரவு 9 மணிவரை தொடரும்... இதுகளை மறக்கத்தான் முடியுமா?

 

பிற்குறிப்பு:

இந்த பதிவை எழுத தூண்டியது.. நேற்று இங்கு ஈழப்பிரியானால் ஆரம்பிக்கப்பட்ட கூகிள் படம் தொடர்பானபதிவு. அதை பார்த்தபின் இந்த பதிவை முகநூலில் பதிந்தேன்.அதை இங்கு உங்களோடும் பகிர்கிறேன்.

Categories: merge-rss

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை விளையாட்டுகள்

பொங்கு-தமிழ் - Wed, 14/12/2016 - 05:19

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை,
விளையாடப்பட்ட

251424_466282390068936_1457108857_n.jpg


விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர்
தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக
இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள்
அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர்
வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

சிறுவர் (பையன்கள்)
கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு

(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)

கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1. கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி

என்ன மூச்சு முட்டுகிறதா..?
போய் தண்ணீர் குடித்துவிட்டு,
உங்கள் கணிப்பொறியில்
cricket, car race விளையாடுங்கள்

நமது பாரம்பரிய விளையாட்டுகள் எப்படிப்போனால் நமக்கென்ன..

அழுகை வருகிறது அன்பர்களே.
http://dreamsway2sucess.blogspot.com.au/

Categories: merge-rss

பிரான்ஸ் அழகி போட்டியில் பட்டத்தை வென்ற ஈழத் தமிழ்ப் பெண்!

வாழும்-புலம் - Tue, 13/12/2016 - 14:26
பிரான்சில் நடந்த Miss Elegante France அழகி போட்டியில்  ஈழத்தமிழ் பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகளுடன் போட்டியிட்டு, சபறினா கணேசபவன் என்ற ஈழத் தமிழ் பெண், Miss Elegante France  அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சில் நடந்த Miss Elegante France அழகி போட்டியில் ஈழத்தமிழ் பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகளுடன் போட்டியிட்டு, சபறினா கணேசபவன் என்ற ஈழத் தமிழ் பெண், Miss Elegante France அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

   

 

miss-france-131216-seithy%20(1).jpg

 

 

miss-france-131216-seithy%20(2).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=171647&category=TamilNews&language=tamil

Categories: merge-rss

கக்கூஸ்

கக்கூஸ்

கதையல்ல கலாய் ...

ஜீவநதிக்காக..சாத்திரி .

 

வாஷிங்டன் சிட்டிசியில்  வானுயர்ந்து  நிற்கும்  உலக வங்கி தலமையக  கட்டிடத்தின்  அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம்   தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்..   பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள் நித்தியானந்தாவின் வருகைக்காக காத்திருக்கும் பக்தர்களைப் போலவே உலக வங்கியின் தலைவர் எப்போ வருவார் என ஆவலோடு வாசலைப் பார்த்தபடியே பர பரப்பாக காத்திருந்தனர்.கட்டிடத்தின் உள்ளே நுழைய முயன்ற சில நிருபர்களை காவலர்கள் இழுத்துக்கொண்டு  வந்து வெளியே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.

கையில் ஒரு பைலோடு செயலாளர் தலைவர் ஜிம் யோங் கிம்   அறைக்குள் நுழைத்ததும்.கதிரையை காலால் தள்ளியபடி எழுந்த தலைவர் கோபமாக  "யோவ் என்னதான்யா நடக்குது .வழிக்கு வருவாங்களா இல்லையா"..

 

"இல்லை சார் ..அவங்கள் வழிக்கு வர மாட்டாங்களாம்.மன்னிக்கோணும் " என்றார்  பவ்வியமாக .

15250734_1529532440395776_6524711095951959641_o.jpg

 

இதை சொல்லவா உனக்கு கோட்டு சூட்டு வாங்கி தந்து.டிக்கெட்டும் போட்டு ஸ்ரீலங்காவுக்கு அனுப்பி வைச்சனான்.இது ஒண்டும் கந்து வட்டிக்கு காசு குடுக்கிற ஏரியா ரவுடியோ.. பணத்தை வாங்கிட்டு ஏமாத்திர பைனான்ஸ் கம்பனியோ அல்ல.. உலக த்தில உள்ள வங்கிகளுக்கே கடன் குடுக்கிற உலக வங்கி .188 நாடுளிலை கிளையும் ..88 நாடுகளில்லை வேரும் வைச்சிருக்கிறோம் தெரியுமா?".. என்று கத்தியபடி . மௌனமாக தலை குனித்து நின்ற செயலாளரின் "டை". யில் பிடித்து  யன்னலோரம் இழுத்துப் போனவர்."பார்   நல்லாப் பார் ..ஒட்டு மொத்த மீடியாவும் இங்கைதான் நிக்கிறாங்கள்."உலக வங்கியால் போடப்பட்ட திட்டம் படு தோல்வி"  என்று கொட்டை எழுத்திலையும், பிரேக்கின் நியூசிலையும்   போட்டு கிழி ,கிழி ,கிழி எண்டு கலா மாஸ்டரை விட மோசமா கிழிக்கப் போறாங்கள்.வெளியிலை தலை காட்ட முடியாது.பதவியை விட்டு விலகி பன்னி மேக்கப் போகவேண்டியதுதான்.

 

"சார் நீங்களே ஒரு தடவை நேரிலை போய் பார்த்தால் தான் உங்களுக்கு நிலைமை புரியும்.வரும்போதே என்னோடை பதவி விலகல் கடிதத்தை கொண்டு வந்திட்டேன்.நான் தோத்துப் போயிட்டேன் சார்.கடைசியா எனக்கு கொஞ்சம் கடன் கொடுத்தால் நானே சொந்தமா நாலு பன்னியை வாங்கி பிளைச்சுக்குவேன்"..என்றபடி கடிதத்தை நீட்டவே..அதை வாங்கி கிழித்து குப்பைக் கூடையில் போட்டவர் .."நானே ஸ்ரீலங்கா போறேன்.நான் வாறேன் எண்டு போன் பண்ணி சொல்லு"..  வேகமாக அங்கிருந்து வெளியேறினார் ஜிம் யோங் கிம் ......

000000000000000000000000000000000000000000

 

அன்றைய  தினக்கறள் பத்திரிகையோடு கழிப்பறைக்குள் புகுந்து கதவை சாத்திவிட்டு குந்தியிருந்தபடி பேப்பரை விரித்த அருணனுக்கு பேரதிர்ச்சி.."உலக வங்கி திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப் பட்ட நவீன கழிப்பறைத் திட்டம் கை விடப் படுமா?..உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் ஸ்ரீலங்கா விரைகிறார் ..வடமாகாண சபை முதலமைச்சர் முக்கினேஸ்வரன் அவர்கள் கழிப்பறை சம்பந்தமான முக்கிய பிரச்சனைக்கு தீர்வுகாண  அனைத்து கட்சிகளையும் அழைத்துள்ளார்"..செய்தியை படித்த அருணனுக்கு லேசாய் தலை சுற்றியது. அருகிலிருந்த தண்ணி வாளியைப்  பிடித்தபடியே அவசராம இருந்து முடித்து கழுவியவன். "ச்சே  போச்சு..என்னுடைய கனவு; கற்பனை;ஆசை எல்லாமே போச்சு"..என்றபடி அங்கிருந்து வெளியேறி வேகமாக வந்து சத்தி டி.வி யைப் போட்டான்.  "நவீன கழிப்பறைத் திட்டத்தில் இழுபறி"  என்று பிரேக்கின் நியூஸ் போய்க்கொண்டிருந்தது..

 

அருணனின் பள்ளித்தோழன் பாலன் இலங்கையில் பிரச்சனைகள் தொடங்கியதுமே ஆஸ்திரேலியா போனவன்தான். இப்போ பிரச்சனைகள் முடிந்ததும் ஊருக்கு வந்து சண்டையிலை இடிந்து போயிருந்த வீட்டை முழுதுமாக இடித்து மாடி வீடாக கட்டி முடித்து குடி பூருதலுக்காக அருணனையும் அழைத்திருந்தான்.அதிசயத்தோடு ஒவ்வொரு அறையாக சுற்றிப்பார்த்துக்கொண்டு வந்தவனுக்கு "இது தான் கக்கூசு".. என்று பாலன் கதவை திறந்து காட்டியதுமே ஆச்சரியம்.வெள்ளை வெளேரென்ற பளிங்கு கற்கள்  பெரிய காண்டிகள் பதித்து வண்ண விளக்குகளோடு இருந்த கழிப்பறையில் கொமேட்டுக்கு உறை வேறு போட்டிருந்தது.தொட்டுப் பார்ப்பதற்காக கையை பக்கத்தில் கொண்டு போனதுமே சர் ...என்று தண்ணீர் பாய திடுக்கிட்டு நின்றவனை ... "பாத்தது போதும் வாடா".. என்று கையில் பிடித்து இழுத்து வெளியே கொண்டு போய் விட்டான் பாலன் .

 

ஒரு தடவையாவது அதிலை ஒண்ணுக்கு அடிக்க வேணும் என்று அருணனின் மனது தவியாய் தவித்தாலும் அடக்கிக்கொண்டு அவனுக்குப் பின்னால் போய் விட்டான்.விருந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது வயிற்றை தடவியபடி "டேய்  லேசா கலக்குது ஒருக்கா".. என்று கெஞ்சியவனிடம். "எல்லாமே புதிசாய் இருக்கு உனக்கு இந்த  வெஸ்டர்ன்  கக்கூஸ் எல்லாம் பழக்கமிருக்காது நாறடிச்சிடுவாய்  பின்னலை பெரிய பனங்காணி இருக்கு".. என்று அனுப்பி விட்டான்.அருணனுக்கு பெருத்த அவமானமாகிப் போய் விட்டது. ஒரு நாள் ..என்றைக்கவது ஒரு நாள் இதுக்காகவே கொழும்புக்கு போய் ஹோட்டேல் போட்டு ஆசையை தீர்த்துவிடுவது என்று சபதமெடுத்திருந்தவனுக்கு." உலக வங்கியின் நிதியுதவியோடு  முகமாலையில் நவீன கழிப்பறை திட்டம்".. என்கிற செய்தியைப் படித்த போது முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்த முழு சுதந்திரத்தை அனுபவிப்பது போன்றதொரு உணர்வு. "அடே நண்பா உன்னை வெல்வேன்"..  என்று சத்தமாக கத்தியபடியே பத்திரிகையை கிழித்தெறிந்து ஆனந்ததில் துள்ளிக் குதித்தவன்

இரண்டு தடவை முகமாலைக்குப் போய் கழிப்பறை கட்டுவதற்காக ஒதுக்கப் பட்ட இடத்தைக் கூட சுற்றிப் பார்த்து கைத் தொலைபேசியில் படமெடுத்து  பேஸ் புக்கிலும் போட்டு விட்டிருந்தான் .அத்திவாரம் வெட்டப்பட்டு அபிவிருத்தி அமைச்சரால் அடிக்கல்லும் நாட்டப் பட்ட நிலையில் .. "கழிப்பறையை முகமாலையில்  கட்டக் கூடாது இயக்கச்சியில் தான் கட்ட வேண்டும்"..என்று தமிழ் தோசைக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் பிரச்சனையை கிளப்பியுள்ளதால் நவீன கழிப்பறைத் திட்டத்தில் இழுபறி.என்பதுதான் இப்போதுள்ள பிறேக்கிங் நியூஸ் .

0000000000000000000000000000000000000000000000000000

 

யாழ் நாவலர் கலாச்சார மண்டபம்  அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாலர்களாலும் நிரம்பியிருந்தது.மத்தியில் மேசைமீது நவீன கழிப்பறைக் கட்டிடத்தின் வரைபடமும் அதன் மினியேச்சர் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.கழுத்தில் மாலையோடு கையில் இருந்த செவ்விளநீரை ஸ்ட்ரா போட்டு உறுஞ்சியபடி நின்றிருந்த தலைவர் ஜிம் யோங் கிம் மிற்கு  .உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி விளக்கத்  தொடங்குகிறார். "சார் இதுதான் நாங்கள் கட்டப் போகும் கழிப்பறைகள்  .இதற்கான நீர் வழங்கலை இரணைமடுக் குளத்திலிருந்து கொண்டு வரப் போகிறோம் .இதன் கழிவுகளை குழாய் வழியாக பரந்தன் வரை கொண்டு சென்று அங்குள்ள இரசாயனத் தொழிற்சாலையில் சேமித்து எரி வாயுவாக மாற்றும் திட்டம் உள்ளது அதனை யேர்மனிய  பயர் நிறுவனம் பொறுப்பெடுத்துள்ளது.எரிவாயு எடுத்து முடிந்த மீதிக் கழிவுகள் கிளிநொச்சிவரை கொண்டு சென்று அங்கு வயல்களுக்கு பசளையாக பயன்படுத்தப்படும்" ..என்று சொல்லி விட்டு நிமிர்ந்தார் .

 

ஜிம் யோங் கிம் குடித்து முடித்த இளனிக் கோம்பையை  ஓடோடிப் போய் வாங்கிய கிரிதரன். "..ஐயா திட்டமெல்லாம் நல்லது ஆனால் முகமாலையில் வேண்டாம்.யாழ்ப்பாணத்தாரின்  கழிவுகளை வன்னியிலை கொட்ட அனுமதிக்க முடியாது.அதே நேரம் அவங்கள் கழுவுறதுக்கு இரணைமடுவிலையிருந்து தண்ணியும் குடுக்க முடியாது இயக்கச்சியிலை தான் கட்ட வேணும் என்று முடிக்க முன்னரே ." இது கழுவிற மேட்டர் இல்லை.துடைக்கிற மேட்டர்  இது கூடத் தெரியாமல் எம்.பி யாம்.தமிழனுக்கு குடிக்கிற தண்ணியால தான் பிரச்னை என்றால் கழுவுற தண்ணியாலும் பிரச்சனை "..என்று தாடியை தடவியபடி சிரித்தார்  தயானந்தா.

அதுவரை மினியேச்சரை உத்துபார்த்துக்கொண்டிருந்த சிவாஜிசிங்கம்   உரத்த  குரலில்.. "இது தமிழரின் கட்டிடக்கலை இல்லை,ஆரியக் கட்டிடக்கலை.கழிப்பறைக் கட்டிடம் என்கிற பெயரில்  இது திட்டமிட்ட கலாசார அழிப்பு இதற்கு அனுமதிக்க முடியாது .கக்கூஸ் என்பதே அடிமைச் சின்னம்.அதனால் தான்  1985 ம் ஆண்டே நாங்கள் சாவகச்சேரி போலிஸ் நிலையத்தை தாக்கும்போதே முதலாவதாக அங்கிருந்தத .கக்கூசை குண்டுவைத்து தகர்த்தோம்.எங்கேயும் எபோதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே எமது கொள்கை.கடந்த தேர்தலில் மகிந்த்தாவையே எதிர்த்துப் போட்டியிட்டவன் .இந்த அமெரிக்க தேர்தலில் கூட ஒபாமா பெண்டாட்டி கிலாரி வெற்றிபெற நல்லூரில் ஆயிரம் தேங்காயை அசராமல் அடித்துடைத்தவன்".. என்றார்.

 

சிவாஜி சிங்கம் சொன்னதை அப்படியே ஜிம் யோங் கிம்  மிற்கு உதவியாளர் மொழிபெயர்த்து கூறி முடித்ததும் அவருக்கு வியர்த்து வழியத் தொடங்க கோட்டை கழற்றி கதிரையில் போட்டுவிட்டு"உண்மையிலேயே  இந்தாள் லூசா..இல்லை லூசு மாதிரி நடிக்கிறாரா. கக்கூஸ் கட்டிடத்திலை என்ன கலை வேண்டிக் கிடக்கு இனி என்னவெல்லாம் நடக்கப் போகுதோ ".என்று நினைத்தபடி முகத்தில் வழிந்த வியர்வையை  துடைத்துக் கொண்டார்.

அதற்கிடையில் கிம்  மிற்கு முன்னால் நின்றவர்கள் இரண்டாகப் பிரிந்து நின்று  "முகமாலையில் தான் கட்டவேணும் ..இலையில்லை இயக்கச்சியில் கட்ட வேணும்" என்று வாய் தர்க்கத்தில் இறங்கத் தொடங்கவே.அப்போதுதான் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த கனகேந்திரன் "வருகிற வழியிலை சைக்கிளுக்கு காத்து போயிட்டுது அதான் பிந்திட்டுது"..என்றவர் சைக்கிளை நிறுத்திவிட்டு.  "வெள்ளையனே வெளியேறு ..வெள்ளையனே வெளியேறு" ..என்று கத்திக்கொண்டிருக்க.அங்கு வந்த சமந்திரன் ."டேய்  வெள்ளைக்காரன் நாடைவிட்டுப் போய் 67 வருசமாச்சு"..

 

 நான் சொன்னது இந்த வெள்ளைக்காரனை ..

 

இவர் வெள்ளைக்காரன் இல்லை.ஜப்பான்காரன் ..

 

பார்க்க வெள்ளையாய் தானே இருக்கிறார் .."வெள்ளையனே வெளியேறு ..வெள்ளையனே வெளியேறு"..தொடர்ந்து கத்தினார் ..

 

"சைக்கிள் காத்துப் போனாலும் இவங்கள் திருந்த மாடான்கள்".. என்றபடியே சமந்திரன் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.இத்தனை களோபரங்களுக்கு மத்தியிலும் ஒருவர் மட்டும் ஒரு கதிரையில் சாய்ந்து அமைதியாக கொர் ...கொர் ..விட்டுக்கொண்டிருக்க அத்தனையையும் பார்த்த ஜிம் யோங் கிம்  கடுப்பாகி உதவியாளரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறவே  "சார் உங்கடை கோட்டை மறந்துவிட்டு போறிங்கள் "..என்று சத்தம் கேட்டது.திரும்பி பார்க்காமலேயே  "அதை நீங்களே போட்டு கிழியுங்கடா".. என்று விட்டு கிழம்பிவிட்டார் .

00000000000000000000000000000000000

 

மீண்டும் வாஷிங்டன் சிட்டியில்  வானுயர்ந்து  நிற்கும்  உலக வங்கி தலமையக  கட்டிடத்தின்  அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம்   தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்..   பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள்.கையில் எந்த பைலும் இல்லாமல் செயலாளர் தலைவர் ஜிம் யோங் கிம்   அறைக்குள் நுழைத்ததும்."சார் ஸ்ரீலங்கா போனிங்களே என்னாச்சு?வெளியே மீடியா எல்லாம் காவல் நிக்கிறார்கள் என்ன சொல்ல"...

 

சொல்லு ..போய் சொல்லு ..திட்டத்தை அமேசன் காட்டுக்கு மாத்தியாச்சு எண்டு போய் சொல்லு ...

 

அமேசன் காட்டுக்கா ?...அங்கைதான் மனிசரே இல்லையே ....

 

பரவாயில்லை அனகொண்டா இருந்திட்டுப் போகட்டும் ...

செயலாளர் அங்கிருந்து வெளியேறினார் ...

.......................................................................................................................................................

குமணன் வீட்டிலிருந்த பழைய கதிரை ஒன்றை எடுத்து அதன் நடுவில் ஓட்டை போட்டுக்கொண்டிருந்தான் ...

 

 

 

Categories: merge-rss

சா(ஜா)தகம்

கதை கதையாம் - Fri, 02/12/2016 - 18:27

என்னடா யோசிக்கிற இந்த வெயிலுக்க நிண்டு கொண்டு ஒன்றும் இல்லடா எல்லா வீட்டிலையும் கணக்கெடுத்தாச்சு இந்த வீடு மட்டும் தான் கடைசி அதுகென்ன  வா உள்ள போவோம் .போவோம் சரி ஆனால் நீ கனக்க கதைக்கப்படாது ஏண்டா  அந்த Ms; என்ன மோசமான ஆளடா பெயர் கந்தசாமி ஊர் கூப்பிடுவது வெடியன் கந்தசாமி மோசம்மான ஆள்  வாயை துறந்தால் வஞ்சகம் இல்லாமல் பொய் சொல்லுவார்டா மனுசன் ஓ அப்படியா வா உள்ள போவோம் ஐயா ஐயா  ... என்டா சத்தத்தை காணல பொறுடா அந்தாள் தூங்கிட்டு இருப்பாரு சரி சரி செருப்பைகழட்டி விடு ஏண்டா அதால அடிப்பாரோ நண்பன் முறைக்கிறான் சரி சரி யாருப்பா அது நான் தான் ஐயா ஜி.எஸ் வந்திருக்கிறன் வணக்கம் வணக்கம் ஓ ஜி. எஸ்சா வா தம்பி என்ன ஏதாவது நிவாரணம் கொடுக்க போறியளா அல்லது நிவாரணம் தந்து விட்டோம் என்று சொல்லிகையெழுத்து வேண்டி சுருட்ட போறியளா ( மனதுகுள்ள ம்கும்) ஆரம்பமே நல்லா தொடங்கிட்டுது சரி சரி உள்ள வாங்க வெயில் வேற மண்டைய புளக்குது ஓம் ஐயா சரியான வெயில் இருங்கள் நன்றி ஐயா இது யாரு புது பொடியன் இவரோ இப்ப ஐயா யுத்தம்முடிஞ்ச கையோட அரசாங்கம் ஆட்களைகணக்கெடுக்குது எனக்கு உதவியாளாக இவரை போட்டு இருக்கிறது அரசாங்கம் என்னை மேலையும் கீழேயும் பார்க்கிறார் மனுசன் ஏதோ பிகரைப்பார்ப்பது போல கணக்கெடுத்து என்ன செய்ய போறாங்களாம் அது தெரியாது ஐயா கிராமங்களை அபிவிருத்தி செய்வாங்க மொத்த சனத்தொகையும் அறிந்து கொள்ளவதற்க்காகவும் ஓ அப்படியா இவர்ட பெயர் என்ன தீரன் என்று ஜி.எஸ் அறிமுகப்படுத்தினான்  என்னை.

இந்தாங்கோ ஐயா போம் இதை நிரப்பி நாளைக்கு தாங்கோ நீங்கள் நிரப்புவீங்கள்தானே நான் நிரப்புவன் இல்லாட்டா மகளை நிரப்ப சொல்லுங்கோ என்று அந்த படிவங்களை அவரிடம் கொடுத்தேன்.

 

சரி சரி ஊர் சுற்றி களைச்சு போனியள் தேத்தண்ணி ஏதாவது குடிங்களன் ம் புள்ள மது  ... மது ஓம் அப்பா இஞ்சி போட்டு மூன்று  பிளேன்டீ ஊத்து மகள் இஞ்சியில்லப்பா சும்மா ஊத்தவா என்று  ஒரு மதுக்குரல் கேட்டது உள்ளே ஒரு மயில் இருப்பது உள்மனது சொல்லியது ஆனாலும் என்ன ஒளிந்து இருப்பதை பார்க்க துடிக்கும் அடிமனது சரி என்ன நம் கண்கள் காணாம‌லா போய்விடும் என்ற எண்ணத்துடன் திரும்பி பார்க்கையில் நண்பன் போவோம் என்றான் பொறுங்க தம்பி பிளேன்டி இல்லையென்றால் என்ன தோட்டத்தில் இளநீர் குடிப்போம் என்றார் பக்கத்தில் இருந்த நானோ ஓம் இந்த வெக்கைக்கு இளநீர்தான் சரி அப்ப சரி வாங்கோ என்றார் கொக்குதுரட்டியுடன் தோட்டத்திற்கு நுழைகிறோம்  அப்போது பிள்ள மது கொஞ்சம் சீனியும் தேசிக்காயும் தா பிள்ள என்றார் என் மனதில் உள்ளே இருக்கும் மது வர போகிறாள் அவளைப்பார்க்கலாம் என்று தோன்றினாலும் தேசிக்காயும் சீனியும்  எதற்கு என்ற யோசனை ஓடியது வந்தாள் மது ம் (சொல்ல வேலையில்லை கந்தசாமி பெத்துத்தான் வச்சியிருக்கான் என்ற உள் மனதுகுள்ள ஒரு படம் ஓடியது) . இந்தாங்கோ அப்பா பிடியுங்க நான் பள்ளிக்கு போய் பிள்ளையை கூட்டிக்கொண்டு வருகிறேன் என்றாள் ஓடிய படம் எல்லாம் திரை கிழிஞ்சு போனதுபோல நின்றது .

 

எனக்கோ மனக்குழப்பம் வாக்கு பதிவு (வோட்லிஸ்டில்) திருமணமாகவில்லை என்று எழுதியிருக்கிறது ஆனால் பிள்ளையை கூட்டிக்கொண்டு  tu இவள் பள்ளிக்கு போகிறாள் சரி ஐயாட்ட கேட்டு தெரிந்து கொள்வோம் ஐயா என்ன ஐயா நிலத்துல இந்தம் பெரிய குழி அதுவா தம்பி ஆமிக்காரன் இந்த இடங்களை பிடிக்க வரக்குள்ள செல் அடிச்சவன் அந்த செல்களை பிடிச்சு இந்த குழிக்குள்ளதான் போட்ட நான் அது எல்லாம் சேர்ந்து  வெடிச்சதுதான் இந்த குழி என்றார் அந்த குழியோ பயிருக்கு நீர் எடுக்க தோண்டப்பட்டது என நினைக்கிறேன் ஜி எஸ் நண்பன் இதை கேட்டும் கேட்காததுமாக நின்றான் எப்படி பிடிச்ச நீங்கள் அதுவா வீட்ட கிடந்த நெல்லுச்சாக்கை தண்ணில நனைத்து அடிச்ச செல்லை ஒவ்வொன்றாக பிடிச்ச நான் ஆனாலும் ஒவ்வொரு ஷெல்லாக அடிச்சதால பிடிச்சன். ஆனால் பிறகு மல்டி என்ற ஒரு சாமான் இருக்கிரது அதை அடிச்சான் பாரு அது சும்மா மழை பொழியுறாப்போல பொழிஞ்சுது அதை கூரைக்கு மேல ஏறி தாவித்தாவி பிடிக்கைகுள்ள ஓட்டுல  கால் பாடு ஓடு முழுவதும் உடைஞ்சு போச்சுதென்றால் பாருங்கோவன் என்றார் அப்போதுதான் இந்த ஆள்ட பெயர் எனக்கு ஞாபகம் வந்தது அடப்பாவி பொய் கேள்விப்பட்டிருக்கிறேன் அஹா இது அல்லவா உலகமகா பொய் அப்போ நீங்கள் பயங்கரமான ஆள்தான் 

 

ம் அந்த காலத்தில் வேட்டைக்கு ஊர்ல் நான் தான் பேமஸ் ஒரு தோட்டாவுல ரெண்டு மான்களை வேட்டையாடிது நான் தான் ஓ அப்படியே இந்த கருமாந்திர பொய்களை கேட்க வேண்டிய நிலையில் நான் எப்படி ஐயா ஒரு தோட்டாவுல அதுவா தம்பி ஒரு நாள் நான் வேட்டைக்கு போனநான் கனநேரம் பத்தைக்குள்ள ஒளிஞ்சு இருந்த நான் ஒரு மானோ மரையோ வரல்ல சரி வீட்ட போவோம் என்று வெளிக்கிடக்குள்ள மலையோரத்துல‌ ரெண்டு மானை கண்ட நான் என்னடா ஒன்றை சுடுவமா என்று பார்த்தேன் பிறகு ரெண்டையும் சுடுவோம் என்று சரியாக மலையில் இருந்த விளிம்பை பார்த்து சுட்டநான் தோட்டா போய் விளிம்புல பட்டு இரண்டா பிரிஞ்சு ரெண்டு மானும் சுடு பட்டு கிடந்தது அதை எடுத்து ஊருக்கு கொன்டு வரகுள்ள சனம் எல்லாம் பார்த்திட்டுது அதற்கு பிறகு நான் தான் ஊர் வேட்டைக்காரன் என்றார் . சரி ஐயா போதும் போதும் நம்புறன் ஐயா நம்புறன் ஐயா சரி இந்த சீனியையும் தேசிக்காயயையும் பிடி  என்று சொல்லி விட்டு இளநீர் பருவத்தை விட முத்தின பருவத்தை உடைய இளநீரை பறித்து தந்தார் பின்னர் அதை வெட்டி அதனுள் தேசிப்புளியை புளிந்து விட்டும் சீனியும் விட்டு கலந்து தந்தார் புதுவகையான  இளநீர் அஹா என்ன ருசி  எத்தனை பேர் இப்படி குடித்து இருப்பார்களோ  தாகம் தணிந்தது .

இளநீரில் புது வகையான ஒரு ருசியைக்கண்டேன்

சரி ஐயா உங்கள்ட ஒன்று கேட்கவா என்ன தம்பி கேழு ஐயா உங்கட ம‌கள் கல்யாணம் கட்டிட்டாவோ . இல்லை பிறகு எந்த‌ குழந்தையை கூட்டி வர போகிறா பள்ளிக்கு ஓ அதுவா தம்பி அவளுக்கு சாதகம் சரியில்லை கல்யாணம்கட்டுறவன் இருக்க மாட்டானாம் அல்லது இற‌ந்து போய்விடுவானாம் ஓ அப்படியா ஓம் இங்க சண்டை நடக்ககுள்ள   வவுனியால இருந்த அவள் வரக்குள்ள அந்த பிள்ளைய கூட்டிக்கொண்டு வந்தா நானும் என்ன சொல்லுற ஒன்றும் சொல்லல யாரோ அநாதை பிள்ளையாம் என்று சொன்னா கேட்டதற்கு . வரும் கல்யாணம் எல்லாம் அந்த சாதகத்தால நின்று போகுது என்றார் மனவருத்தமாக ஐயோ பாவமே என்றேன் நானும் மனுசியும் இவளை நினைச்சு நினைச்சு ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள்ள அழுறம் தம்பி கவலைப்படாதீங்கோ ஐயா அவக்கு கல்யாணம் நடக்கும் என்று சொல்லி விட்டு சரி ஐயா நாங்கள் வருகிறோம் நாளை உங்கள் மகளிடம் சொல்லி வையுங்கள் அந்த போமை நிரப்பி வைக்க சொல்லி என்று சொல்லி விட்டு  அவர் வீட்டை விட்டு வெளியில் வருகிறோம்

வரும் வழியில் அவளும் அந்த குழந்தையும் வருகிறார்கள் நானும் நண்பனும் இறங்கி கொஞ்சம் கதைக்க வேண்டும் என்றேன் அவளும் மனப்பதட்டத்துடன் என்ன சொல்லுங்க என்றாள் இந்தகுழந்தை பற்றிய விபரங்கள் இவளை எந்த ஆஸ்பத்திரியில் அநாதையாக‌ பெற்ற நீங்கள்  அதற்க்கான சான்று அல்லது எந்த காப்பகத்தில் இருந்து எடுத்த நீங்கள் என்ற எல்லா சான்றுகளும் வேண்டும் அப்பதான் உங்களை இங்கே உள்ள வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும் என்றேன் . அவளோ எதுவும் பேசாமல் மொனமாக நின்றாள் நானோ இப்படி பேசாமல் இருப்பதால் பல்ன் இல்லை நாளைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போகும் போது  உன்மையில் உங்களுக்கு ஜாதக பிரச்சினையா என்று நான் கேட்க அவள்  பதிலோ அப்படியானால் இவள் அப்பன் இந்நேரம் இறந்து இருக்கணுமே என்றாள்.

 

அந்த வார்த்தைக்குள் இருந்த  அர்த்தம் கண்டு கொண்டேன்

 

யாரோ ஒருவன் இவளை ஏமாற்றி சென்று இருக்கிறான் அவன் நினைவாக இவள் அவன் குழந்தையை வளர்க்கிறாள் இன்னொரு கல்யாணம் தேவையில்லாமல் அவள் குடும்பத்தையும் ஏமாற்றியும் ஜாதகத்தை மாற்றி எழுதியும் அந்த குழந்தைக்காக வாழ்கிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன் இது தெரியாமல் கந்தசாமி தன் சொந்த பேரக்குழந்தையை யாரோ பெற்ற அநாதை போலவே பார்க்கிறார் எப்போ தெரியபோகிறது அவருக்கு இந்த உன்மை

Categories: merge-rss

ஆபிரகாம் பண்டிதர்

பொங்கு-தமிழ் - Fri, 02/12/2016 - 04:43

யார் இந்த ஆபிரகாம் பண்டிதர்?

siragu-abraham-pandidhar2

தமிழிசை சாகித்தியங்களின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்ற முத்துத் தாண்டவர் முதலிய மூவரைப் போல, தமிழிசை இலக்கணத்தைத் தெளிவுபடுத்துவதற்கென வாய்த்த வல்லுநர்கள் மூவர். கருணாமிர்த சாகரம் எழுதிய ஆபிரகாம் பண்டிதர், யாழ் நூல் எழுதிய விபுலாநந்தர், சிலப்பதிகார இசை நுணுக்கம் எழுதிய டாக்டர் எஸ். ராமநாதன் ஆகியோர்தான் அந்த மூவர்.

“தமிழக முழுமைக்கும் உதவிய நற்பெரும் மருத்துவர்; கடல் போன்ற கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூல் எழுதியவர்; வீணை வித்தகர்; அறிஞர் போற்றிய இசை ஆராய்ச்சி அன்பர்; பெரும்புலவர்களைப் புரிந்து பேணிய வள்ளல்; இசை மாநாடுகள் இனிது நடத்தியவர்; பரோடா இந்திய இசை மாநாட்டில் 24 சுருதி பற்றிச் சொற் பெருக்கு ஆற்றிய ஆய்வாளர்; சுருளிமலைத் துறவியார் கருணானந்தர்பால் அரிய மருந்து முறைகளைக் கற்றுக்கொண்ட அறிஞர்; சிலப்பதிகார இசை நுணுக்கங்களையும் சங்க இலக்கிய இசையியலையும் முதன் முதலில் ஆராய்ந்து பிற ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாய் நின்றவர்; மேற்கு நாட்டினர்க்குத் தென்னக இசையியல் பற்றிக் கட்டுரைகள் எழுதியும், கருணாமிர்த சாகரத்தை ஆங்கிலத்தில் எழுதியும் ஐரோப்பிய இசையியலையும் தமிழ் இசையியலையும் ஒப்பீடு செய்து பணியாற்றியவர்; பழம் இசை நூல்களைத் திரட்டி அச்சிட்டு அளித்து, மறைந்துபோகாமல் காத்த இசைப்புரவலர்.”

தமிழிசை வளம்:

தமிழிசைக் களஞ்சியத்தை உருவாக்கிய முனைவர் வீ. ப. கா. சுந்தரம், ஆபிரகாம் பண்டிதரை அறிமுகப்படுத்தும் முறை இது. வரலாற்று வல்லுநர், பறவையியல் வல்லுநர் (ஆர்னிதாலஜிஸ்ட்), புகைப்படக் கலைஞர், ஓவியர், சோதிடர், இசைத்தமிழ் வல்லுநர், இசைப்பாடல் ஆசிரியர் எனப் பல்வேறு ஆற்றல்கள் பெற்றுத் தமிழுக்குத் தொண்டாற்றிய ஆபிரகாம் பண்டிதரை இதைவிடச் சிறப்பான முறையில் அறிமுகப்படுத்த முடியாது. எல்லாக் கலைகளும் ஒன்றுக்கொன்று தமக்குள் கொண்டிருக்கும் தொடர்பினை நன்றாக உணர்ந்தவர். இவை யாவினுக்கும் மேலாக, இசைத் தமிழ் ஆய்வின் முன்னோடி ஆபிரகாம் பண்டிதர்.

வாழ்க்கை வரலாறு

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே சாம்பவர் வடகரை என்னும் சிற்றூரில், 1859ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் நாள், முத்துச்சாமி நாடார், அன்னம்மாள் தம்பதியர்க்கு மகனாகத் தோன்றியவர். மிக எளிய குடும்பம். முத்துச்சாமி நாடார், சாம்பவர் வடகரையை விட்டு பங்களாச் சுரண்டை என்னும் ஊருக்கு வந்து அங்கிருந்த ஆங்கிலப் பாதிரியாரிடம் தோட்டக்காரனாகப் பணியாற்றினார். அன்னம்மாள் ஆலயப் பணிகளைச் செய்துவந்தார். பண்டிதர், தமது ஆரம்பக் கல்வியைப் பன்றிகுளம் என்னும் ஊரில் முடித்தார். 14 வயதிலேயே திருமலாபுரம் என்னும் சிற்றூரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1874இல் திண்டுக்கல் சென்று நார்மல் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டார். அவரது திறமையாலும் அறிவாற்றலாலும் அப்பள்ளியை நடத்திவந்த யார்க் துரையின் நன்மதிப்பைப் பெற்றார். அவரிடமிருந்தே புகைப்படக் கலையையும் கற்றார்.

திண்டுக்கல் கந்தசாமிப் பிள்ளை என்பாரிடம் அச்சுத் தொழிலைக் கற்றார். சோதிடக் கலையையும் பயின்றார். வயலின் வித்துவான் சடையாண்டிப்பத்தர் என்பாரிடம் வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்டார். திண்டுக்கல் வழியாகப் பழநி செல்லும் சித்தர்கள், சாதுக்கள், பரதேசிகளிடம் சித்த மருத்துவக் கூறுகளைப் பயின்றார். திண்டுக்கல்லுக்கு அருகே ஆனைமலைப் பட்டியில் வசித்துவந்த பொன்னம்பல நாடார்க்கும் இவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. பொன்னம்பல நாடார் ஒரு மருத்துவர். 1887இல் அவர் சுருளிமலைக்குப் பண்டிதரை அழைத்துச் சென்றார். அங்கு கருணானந்த மகரிஷியைக் கண்டு அவருடைய சீடர் ஆனார். தமது மருந்துகளுக்கெல்லாம் கருணானந்த சஞ்சீவி என்றே பெயரிட்டிருந்தார். (அக்காலத்தில் மருத்துவர்களைப் பண்டிதர் என்று அழைப்பது வழக்கம். மருத்துவத்தையும் பண்டுவம் என்பார்கள். பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகளையும் பண்டுவச்சி என்பது மரபு.)

1882இல் பொன்னம்மாள் என்பாரை மணந்தார். கணவன் மனைவி இருவரும் ஆசிரியப் பணி புரிந்தனர். 1890இல் மருத்துவ அலுவல்கள் மிகுந்ததால், ஆசிரியப் பணியைத் துறந்து இருவரும் சொந்த மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

மருந்துகளை விற்கக் கும்பகோணம் செல்வது இவரது வழக்கம். தஞ்சை நகருக்கு மேற்கிலிருந்த நிலத்தை வாங்கிக் கருணானந்தபுரம் என்ற பண்ணையை அமைத்தார். 1894இல் ஒரு வீட்டையும் வாங்கினார். இங்கிலாந்து லிவர்பூல் நகரிலிருந்து நீர் இறைக்கும் குழாயையும் காற்றாலையையும் வாங்கிப் பெரிய கிணறுகளை வெட்டி நிலத்தைப் பண்படுத்தினார். பிறகு தமக்குத் தேவையான மூலிகைகளை அங்கேயே பயிரிட்டார். வேளாண்மை ஆய்வுகளிலும் ஈடுபட்டார். (1899இல் ஆவானிக் என்னும் தொற்றுநோய் பரவியபோது, பண்டிதரின் மருந்துகள் தான் சமயசஞ்சீவியாகப் பயன்பட்டன என்பர்.) தஞ்சையில் ஆசிரியராகப் பணிபுரிந்துவந்த கோயில் பாக்கியம் அம்மையார் என்பாரின் இசைத்திறமையில் ஈடுபட்டு அவரை இரண்டாம் திருமணம் புரிந்துகொண்டார்.

siragu-abraham-pandidhar1

கரும்பில் இவர் கண்டுபிடித்த ஒரு புதிய வகைக்கு ராஜாக் கரும்பு எனப் பெயரிட்டார். அது அக்கால அரசுக் கண்காட்சிகள் அனைத்திலும் பரிசு பெற்றது. அரசு ஆய்வுப் பண்ணைகளில் பயிரிடப்பட்டது. புதுவிதமான பட்டுப்பூச்சிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். வேளாண்துறையிலும் சித்தமருத்துவத் துறையிலும் பண்டிதர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி அக்கால பிரிட்டிஷ் அரசு ராவ் சாகிப்பட்டத்தை 1909இல் வழங்கி கௌரவித்தது.

தஞ்சையில் முதன்முதலில் மின்சாரம் இவர் வீட்டில் தான் பயன்படுத்தப்பட்டது. 1911இல் அவரது மனைவி பொன்னம்மாள் மறைந்தார். பின்னர் பாக்கியம் என்பவரைப் பண்டிதர் திருமணம் செய்துகொண்டார்.

சுருளிமலைக் கருணானனந்த முனிவர்தான் இவருக்கும் தமிழிசையின் நுட்பங்களையும் சொல்லிக் கொடுத்தவர். எனவே இசைத்தமிழில் இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. இதற்கேற்ப கோயில்பாக்கியம் அம்மையாரும் இசைவல்லுநராக வாய்த்தார்.

சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோரின் கீர்த்தனைகளும் வர்ணங்களும் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே இருந்தன. சங்கீதம் கற்கும்போது பாடல்கள் தாய்மொழியில் எளிதில் புரியும் வண்ணம் இருக்கவேண்டும் என்பது ஆபிரகாம் பண்டிதரின் கருத்து. தெரியாத மொழியில் பாடும்போது அதன் முழுப்பயனும் கிட்டாமல் போய்விடுகிறது. பொருள் புரிந்து அர்த்த பாவத்தோடு பாடுவதே சிறப்பு என்பதும் அவர் கருத்து.

தமிழிசை ஆய்வில் ஈடுபடுவதற்காகப் பழைய இசை நூல்களைத் திரட்டி அச்சிட்டார். தஞ்சாவூரில் இசை ஆய்வுக்கென சங்கீத வித்யாமகாஜன சங்கம் என்ற அமைப்பை உண்டாக்கினார். 1912 முதல் 1914 வரை மூன்றாண்டுகள் சங்கீத வித்யாமகாஜன சங்கம் இசை மாநாடுகளைச் சிறப்பாக நடத்தியது. இம்மாநாடுகளில் பங்கேற்றவர்களின் நிழற்படங்கள், பெயர்கள், கட்டுரைகள், இவை பற்றிய செய்தித்தாள் விமரிசனங்கள் ஆகிய யாவற்றையும் முறையாகக் கருணாமிர்த சாகரத்தில் வெளியிட்டார். இதனால் பண்டிதருடைய வரலாற்றுக் கண்ணோட்டம் புலனாகிறது. தாமே ஒரு புகைப்பட வல்லுநர் என்பதால், தாமே சொந்தமாக நடத்திய இந்த மாநாடுகளில் பங்கேற்றவர்களின் நிழற்படங்களைப் பாதுகாத்ததன் வழி, அக்கால இசை வல்லுநர்களை அவர்களது பெயர்களுடன் நாம் இன்றும் கண்டு மகிழ முடிகிறது.

1909இல் லண்டன் அரசுக் கலைச் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சுத்தொழிலையும் கற்றவர் என்பதால், தஞ்சையில் லாலி அச்சகத்தை நிறுவினார். மின்விசையால் அங்கு இயங்கிய முதல் அச்சகம் இதுவே.

தஞ்சைக் கந்தசாமிப் பிள்ளை என்பவரிடம் சோதிடம் கற்றார். சோதிட விமரிசினி என்ற சபையை ஏற்படுத்தி அதற்குத் தலைமை வகித்துத் திறம்பட நடத்தினார். இசைக் கலைக்கும் சோதிடக் கலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது பண்டிதர் கருத்து.

siragu-abraham-pandidhar3

பரோடா மகாராஜாவைக் கொண்டு 1916ஆம் ஆண்டு பரோடாவிலும் ஓர் இசை மாநாட்டினை மார்ச் 20 முதல் 24 வரை நடத்தினார். கர்நாடக இசையிலும் இந்துஸ்தானி இசையிலும் வல்ல பேரறிஞர்கள் பலர் கலந்துகொண்ட நிகழ்ச்சி இது. இதில் ஐரோப்பிய இசையியலோடு தமிழ் இசையியலை ஒப்பிட்டுக் கட்டுரை வழங்கினார். இம்மாநாட்டில், இவரது புதல்வியர் கனகவல்லி, மரகதவல்லி இருவரும் 24 சுரங்களை வீணையில் வாசித்துக் காட்டிப் பண்டிதரின் கருத்தை உறுதிசெய்தார்கள். இந்த 24 சுர முறையை பரோடா திவான் மட்டுமின்றி, வீணை சேஷண்ணா, எல். முத்தையா பாகவதர் போன்றவர் ஏற்றுப் பெரிதும் பாராட்டினர். (கர்நாடக இசையில் 22 சுரவரிசை முறையே கையாளப்படுகிறது.)

வாழ்க்கையின் முதற்பகுதியை மருத்துவ ஆய்வுக்கும், இரண்டாம் பகுதியை இசை ஆய்வுக்கும் அர்ப்பணித்த பண்டிதர், தமது 59ஆம் வயதில் 1918 ஆகஸ்டு 31 அன்று இயற்கை எய்தினார்.

தாம் வாழ்ந்த காலத்தின் ஆட்சியாளர்கள், அறிஞர்கள், புலவர்கள், இசைவல்லுநர்கள் பலரோடும் நெருங்கிய தொடர்பும் கடிதப் போக்குவரத்தும் வைத்திருந்தார். சோழ வந்தான் அரசஞ் சண்முகனார், உ. வே. சாமிநாதையர், ஹரிஹர பாரதி, ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், வீணை வேங்கட ரமணதாசர், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர், தஞ்சை எல். உலகநாத பிள்ளை, மு. இராகவையங்கார், ஜே. எஸ். சாண்ட்லர், செல்வக் கேசவராயர், திரு. வி. க., போன்றோர் அவருடன் தொடர்பு கொண்டிருந்த சிலர்.

இசை ஆய்வு முன்னோடி

சமஸ்கிருதத்தையும் விஞ்சிய செம்மொழி என்று தலைமைபூண்டு உலாவரவேண்டிய இந்தியாவின் மிகப்பழைய மொழியாகிய தமிழ், தன்னிடம் எத்தனையோ வளமிருந்தும் அயலார் ஆட்சிக் காரணத்தாலும் ஆதரவின்மையாலும் மெலிந்து சூம்பிக் காணப்படுகிறது. இதற்கு நல்ல உதாரணம் தமிழிசை.

தமிழில் தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொட்டு இசையிலக்கணம் விரிவாகக் காணப்படுகிறது. சங்க இலக்கியத்திலும், சிலப்பதிகாரத்திலும், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களிலும் ஏராளமான பண்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் இன்றைக்குத் தமிழிலே பாடுவதென்பது இன்னும் அரசியல் சார்ந்த விவகாரமாகவும் ஒரு சாதிக்கு எதிரான விவகாரமாகவுமே பார்க்கப்படுகின்ற நிலை பரிதாபத்திற்குரியது. மிகக் குறைந்த அளவே இசையிலக்கணம் தெரிந்த ஒருவனுக்கும்கூட, சிலப்பதிகாரத்திலும் சங்க இலக்கியத்திலும் வரும் இசைக்குறிப்புகளைப் படித்தால் அக்காலத் தமிழிசைதான் இன்றைய கர்நாடக, இந்துஸ்தானி இசைகளுக்கு முன்னோடி என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆயினும் இந்த எளிய விஷயத்தைச் சொல்வதற்கும், தமிழ்நாட்டில் தமிழில் பாடுவதுதான் முறை என்பதை வலியுறுத்துவதற்கும் 1930கள் தொடங்கி ஒரு பெரிய இயக்கமே (தமிழிசை இயக்கம்) தேவைப்பட்டிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் இசைப்பகுதிகளைத் தமிழ்ப் புலவர்கள் பல நூற்றாண்டுகளாக ஆராயவில்லை. 14ஆம் நூற்றாண்டு முதல் தெலுங்கு, சமஸ்கிருதம் முதலிய மொழிகள் தமிழ் நாட்டில் வளர்ந்தனவே ஒழிய தமிழ் வளரவில்லை. தெலுங்கர் ஆட்சியில் வேறென்ன நடக்கும்? தமிழில் இசையே கிடையாது என்று சொல்லும் நிலை நானூறாண்டுகளில் ஏற்பட்டுவிட்டது. இதுபற்றி ஆபிரகாம் பண்டிதர் எழுதுகிறார்:

சங்கீதத்திற்கு சங்கீத ரத்னாகரர் எழுதிய நூலே முதல் நூல் என்றும், அது சிறந்த தென்றும், தமிழ் மக்களுக்குச் சங்கீதமே தெரியாதென்றும் சொல்லுகிறார்கள்.

(கருணாமிர்த சாகரம், ப.916)

14ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான காலம், தமிழிசை அறவே இல்லாத இருண்ட காலம் என்றால், இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் இன்றுவரை போராட்டக்காலமாகவே இருக்கிறது. வேறெந்த நாட்டிலாவது, வேறெந்த மொழியிலாவது அந்தந்த மொழியில் பாடக்கூடாது என்று சொல்ல முடியுமா? கேட்டாலே வயிறு வலிக்கச் சிரிப்பார்கள். நமக்கு உண்மையிலேயே இது வயிற்றுவலி.

பண்டைக்காலம் முதல் வழங்கிவந்த தமிழிசையை சாரங்கதேவர் என்னும் ஆசிரியர் படித்துப் பின்பற்றி, அதன் வாயிலாக இந்துஸ்தானி இசையை விளக்க, சங்கீத ரத்னாகரம் என்னும் நூலை எழுதினார். அவர் 14ஆம் நூற்றாண்டினர். காஷ்மீரிகளும், தென்னிந்தியரும் ஒன்றுபோல அவரைத் தங்களைச் சேர்ந்தவர் என்கிறார்கள். (க.சா.ப. 1088). பிறகு வந்த வேங்கடமகி என்பார் அந்நூல் கருத்துகளைக் கர்நாடக இசைக்குப் பொருந்துமாறு செய்தார். பிறகுவந்த புரந்தரதாசர்தான் தமிழிசையையே கர்நாடக இசை என்று சொல்லிப் பிரபலப்படுத்தினார். மேலும் மாயாமாளவ கௌள இராகத்தை அடிப்படையாக வைத்து ஸ்வராவளி, ஜண்டை, தாட்டு, அலங்கார வரிசைகளைக் கற்பிக்கும் இன்றைய முறையை உருவாக்கிய வரும் அவரே.

சிலப்பதிகார இசை நுணுக்கங்களை முதலில் ஆராய்ந்தவர் ஆபிரகாம் பண்டிதர். இசை நுணுக்கங்களை ஆழமாக அறியவேண்டுமானால் வீணை, புல்லாங்குழல் இவற்றுள் ஒன்றையேனும் திறம்பட இசைக்கும் அறிவு தேவை என்பதை அறிந்தார். தஞ்சை அரண்மனையில் வீணை பயின்றார். பின்னர் தம் மகள்களுக்கும் வீணை ஆசிரியர்களை அமர்த்தினார். பல நீண்ட ஆண்டுகள் இரவுபகலாக இசைநூல்களைக் கற்றும், கலந்துரையாடியும், பழைய இசைப்பனுவல்களைத் திரட்டியும் உருவாக்கிய ஆய்வு நூலுக்குத் தமது அருட்குருவாகிய கருணானந்தர் பெயரால், கருணாமிர்த சாகரம் என்றே பெயரிட்டார். 1917இல் அந்நூல் வெளியாயிற்று.

கருணாமிர்த சாகரம்

தமிழிசை இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த ஒரே நூல், கருணாமிர்த சாகரம்தான். 1940களில்தான் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது. அதற்குப் பிறகு குடந்தை ப. சுந்தரேசன், வெள்ளை வாரணன் ஆகியோர் யாழ்நூல் கருத்துகளைப் பரப்பிவந்தனர். எம். எம். தண்டபாணி தேசிகர் முதலியோர் தமிழில் மட்டுமே பாடும் உறுதிபூண்டு அதைச் செயல்படுத்தியதால், அவர்கள் பிற வித்வான்களால் ஏற்றுக்கொள்ளப்படவோ புகழப்படவோ இல்லை. ஒரு காலத்தில் தியாகராஜ பாகவதர், எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள் போன்றவர்களால் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வளர்ந்துவந்த தமிழிசை இப்போது அடியோடு இல்லாமல் போய்விட்டது. ஒரே லட்சிய வேகத்தோடு தமிழிசைப்பாடல்கள் எழுதிய இலக்குமணப் பிள்ளை, மதுரகவி பாஸ்கர தாஸ், பாபநாசம் சிவன் போன்றோர் இன்று இல்லை. இவ்வளவெல்லாம் இருந்தாலும் தமிழிசை உணர்வு ஓரளவு பரவுவதற்குக் காரணமாக, தமிழிசை இலக்கணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. எஸ். இராமநாதனுடைய Music in Cilappathikaram (அவரது முனைவர் பட்ட ஆய்வேடு) 1960களில் வெளிவந்தது. இவற்றின் காரணமாக தலித் மக்கள் தனி இசைவிழா நடத்துகின்ற நிலை வரை இன்று வளர்ந்துள்ளது. பிறகு வீ.ப.கா. சுந்தரம், சேலம் ஜெயலட்சுமி போன்றோர் தமிழிசையிலும் அதன் இலக்கணத்திலும ஆர்வம் காட்டி வந்தனர். இவை எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இருந்த நூல் கருணாமிர்த சாகரம்.

கருணாமிர்த சாகரம் என்பது ஆபிரகாம் பண்டிதரின் வாழ்க்கைப் பணிநூல் (magnum opus). இது ஏ4 அளவிலான தாள் அமைப்பில் 1346 பக்கங்கள் கொண்டது. நான்கு பாகங்களாக அமைந்தது இப்பெருநூல். இந்நூல் சுருதிகளைப் பற்றியது என்று குறிப்பிடுகிறார் பண்டிதர்.

கருணாமிர்த சாகரத்தின் அமைப்பு

இந்நூலின் முதல் பாகத்தில் இசைத்தமிழின் தொன்மையும், தோற்றமும், வளர்ச்சியும் விளக்கமாகச் சொல்லப்படுகின்றன. பண்டைத் தமிழகம் பற்றியும், அதில் நிலவிய முத்தமிழ் என்னும் கருத்தாக்கம் பற்றியும், இசையிலக்கணம் பற்றியும் முதற்பகுதி சொல்கின்றது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போன்றவற்றிலிருந்து இசைக்குறிப்புகளைத் தொகுத்துச் சொல்கிறது. குறிஞ்சி, விளரி, செம்பாலை, படுமலை முதலிய பண்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. ஏழிசை நரம்புப் பெயர்களாலும் பாட்டும் தொகையும் கூறும் பறை வகைகளாலும் யாழின் அமைப்புப் பற்றிய செய்திகளாலும் தமிழ் இசையிலக்கணத்தின் தொன்மையும் வளமும் அறியலாகும். இவற்றுக்குச் சான்றுகள் காட்டி நூலினுள் விளக்கியுள்ளார் ஆபிரகாம் பண்டிதர். இப்பாகம், இசைப் புலவர்களின் பெயர் அகராதியையும் கொண்டுள்ளது.

இரண்டாம் பாகத்தில் ஒரு ஸ்தாயியில் (இயக்கில்) இடம்பெறும் சுருதிகளைப் பற்றிய வடமொழி நூல்களின் கருத்துகளைக் கணித முறையில் அட்டவணைப்படுத்தி விளக்குகிறார். சாரங்கதேவர் உள்ளிட்டோர் கொண்ட 22 சுருதி முறை வழக்கிற்கு ஒவ்வாதது என்பதும் விளக்கப்படுகிறது.

மூன்றாம் பாகத்தில் சிலப்பதிகார அடிப்படையில் பழந்தமிழரது இசைமுறை விளக்கப்படுகிறது. இப்பாகம் நூலின் மிகச் சிறந்த பகுதி. பெரும்பண்கள், திறப்பண்கள், பண்ணுப் பெயர்த்தல், ஆலாபனம், முற்காலப் பிற்கால நூல்களில் கூறியுள்ள இராகங்களின் தொகை, இணை, கிளை, பகை, நட்பு என்னும் பொருந்திசைச் சுரங்களைக் கண்டுகொள்ளும் முறைகள் இதில் விளக்கப்பட்டுள்ளன.

நான்காம் பாகம், ஆயம், சதுரம், திரிகோணம், வட்டமாகிய பாயப் பாலைகள் நான்கு, யாழ் வகைகள், மாந்தனுடலும் யாழ்வடிவமும் முதலியவற்றை விளக்குகிறது. பண்டைத் தமிழ் மக்களின் இசைக் குறிப்புகள், பல்வேறு பாலைகள், அம்மக்கள் உபோயகித்த யாழ் வகைகள், அவர்களுடைய இராகங்கள் பண்கள் முதலியன பற்றி விளக்குகிறார். சரிகமபதநி என வரும் ஏழு சுரங்களின் பெயர்கள் தமிழ் மூலங்களையே கொண்டவை என்பதையும் விளக்கியுள்ளார். சிலப்பதிகார உரை முதலிய பல்வேறு ஆதாரங்கள் வழி, 24 சுருதிகளே பழந்தமிழர் இசைமுறைக்கு உகந்தது என்பது நிலைநாட்டப்படுகிறது. பாலைகளைப் பற்றிக் கூறுவதோடு சுருதிகளைப் பற்றியும் நுட்பச் சுருதிகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். செங்கோட்டி யாழே தற்கால வீணை என்பது இவர் கருத்து.

இரண்டாம் புத்தகம்

இதுவரை கூறியவை கருணாமிர்த சாகரம் முதற் புத்தகத்தில் உள்ளவை. கருணாமிர்த சாகரம் இரண்டாம் புத்தகம், 1946ஆம் ஆண்டு அவருடைய மூத்தமகன் சுந்தர பாண்டியனால் வெளியிடப்பட்டது. தென்னிந்திய சங்கீதத்தின் இராகங்களைப் பற்றிய முக்கியக் குறிப்புகளையே முதற்புத்தகமாக எழுதி வெளியிட நினைத்ததாகவும், ஆனால் சுருதிகளைப் பற்றிய விஷயம் அதனினும் முக்கியம் என்று கருதியதால் அதை முதற் புத்தகமாக வெளியிட்டதாகவும் குறிப்பிடுகிறார் (க.சா.1208).

இரண்டாவது புத்தகத்தில் ஓர் ஆரோகண அவரோகணத்தில் கீதங்கள் உண்டாக்கும் முறை, ஜீவசுரத்தைக் கண்டுபிடிக்கும் வழி, இராக சஞ்சாரம் செய்யும் வழிமுறை ஆகியவற்றை விளக்கியுள்ளார். இது ஸ்புடம் என்று அழைக்கப்படுகிறது. இம்முறை புதிதாக இராகங்களை உருவாக்க உதவுவதுடன், பழைய இராகங்களில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொள்ளவும் உதவியாக இருக்கும் என்ற பண்டிதர் கருதினார். ஆனால் இந்நூல் வெளிவரும் முன்பே அவர் மறைந்துவிட்டார். அவருடைய மனைவி கோயில் பாக்கியம், மகள் மரகதவல்லி ஆகியோர் எஞ்சிய பகுதிகளை எழுதி முடித்தனர். இந்நூல், மரகதவல்லியின் புதல்வி ஞானச் செல்வம் தவப்பாண்டியனின் உதவியோடு வெளியாயிற்று.

கருணாமிர்த சாகரம் காட்டும் இசைச்செய்திகள் சில

சிலப்பதிகாரத்தில் நிறைய இசைக்குறிப்புகள் ஆங்காங்குக் கிடக்கின்றன. அவற்றைச் சேர்த்துக் கண்டால் தமிழின் முழு இசையிலக்கணமும் கிடைக்கிறது. பன்னிரு சுரங்களை நிறுத்திக் குரல் குரலாக மாறுமுதல் (கிரகபேதம்) பண்ணுங்கால் 12 பண்கள் கிடைக்கின்றன. இதனை வட்டத்தில் 12 திசைகள் வரைந்து முதன் முதலில் விளக்கியுள்ளார். கிரகபேதம் செய்வதற்கு 12 சுரங்களுக்குரிய 12 இராசிகளை ஒரு வட்டத்திலும், 12 சுரங்களை மற்றொரு வட்டத்திலும் வரைந்து, வட்டகமாக நிற்கச் செய்து, சுற்றுவட்டகம் சுற்றிவரும்போது பாலைப் பிறப்புகளைக் காட்டுமாறு அமைத்துள்ளார். ஏழ்பெரும் பாலைகள் (இராகங்கள்) தமிழிசையில் மிகமிகத் தொன்மையானவை. இவற்றுள் ஆறு பாலைகள் அடிப்படைப் பாலையாகிய செம்பாலையிலிருந்து தோன்றியவை.

siragu-image4

இவ்வாறு இராகம் நிறுத்திய ஏழு பாலைகளும் சிலப்பதிகாரம் முழுவதிலுமுள்ள இசைநெறிகளுக்கும் பண்ணுப் பெயர்த்தல் முதலிய முறைகளுக்கும் பொருந்துகின்றன. குரல் குரலாகப் பண்ணுப் பெயர்க்கும் முறையை ஆபிரகாம் பண்டிதர் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார். இவர் காட்டிய பண்ணுப் பெயர்ப்பு முறை போன்றதையே விபுலாநந்த அடிகளும் பி. சாம்பமூர்த்தியும் தமது பல நூல்களில் பின்பற்றியுள்ளனர்.

இணை, கிளை, பகை, நட்பு ஆகிய இசைபுணர் குறிநிலைகளைப் பொருந்து இசைக்கோவைகளைத் திறம்பட முதன்முதலில் விளக்கியுள்ளார். இவரது விளக்கமே சிலப்பதிகார உரையாசிரியர்களின் கருத்துகளுடன் பொருந்துகிறது. மேற்கு நாட்டு ஒத்திசை முறையோடும் ஒப்பிட்டுக் காட்டுகிறார். வலமுறைத் திரிபு, இடமுறைத் திரிபு இவற்றிற்கு வேறுபாடு காண முயற்சி செய்துள்ளார். ஆனால் முழுவெற்றி காணவில்லை. சுருங்கக் கூறின், சிலப்பதிகாரத்திலும் பாட்டிலும் தொகையிலும் காணப்படும் ஒவ்வொரு இசைக்குறிப்புக்கும் விளக்கம் கூற முயன்றுள்ளமை பெரிதும் பாராட்டுக்குரியது.

வழிகாட்டி நூல்

கருணாமிர்த சாகரம் முதன் முதல் வெளிவந்த இசை ஆய்வுப் பெருநூல் ஆதலின் பிற்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டி ஒளியூட்டி மேலும் ஆய்வுசெய்யத் தூண்டியது.

யாழ்நூல் எழுதிய விபுலாநந்த அடிகளுக்கும், பாணர் வழி என்னும் ஆய்வுநூல் எழுதிய ஆ. அ. வரகுண பாண்டியனுக்கும், சிலப்பதிகார இசை நுணுக்கம் எழுதிய எஸ். இராமநாதனுக்கும், பழந்தமிழ் இசைநூலினை எழுதிய கு. கோதண்டபாணிக்கும், யாழும் இசையும் எழுதிய மு. இராகவனுக்கும், பண்டைத் தமிழிலக்கியத்தில் இசையியல் என்னும் நூலை எழுதியவர்க்கும் வழிகாட்டியவர் மு. ஆபிரகாம் பண்டிதரே. இசை பற்றி இந்நூலில் கூறாதது இல்லை. எனவே சாகரம் அல்லது கடல் என்ற பெயர் இந்நூலுக்கு மிகவும் பொருத்தமானது.

பழங்காலத்தில் தமிழ் இசை இன்று போல் மாயமாளவ கௌளை அடிப்படையில் சொல்லித் தரப்படவில்லை. எந்த இராக (அடிப்படைப் பாலை) அடிப்படையில் சொல்லித் தரப்பட்டது என்பது பற்றிக் கருத்துவேறுபாடு நிலவுகிறது. மேற்கு நாட்டு இசையிலும் சங்கராபரண முறையே அமைந்துள்ளதால், ஆபிரகாம் பண்டிதர் அடிப்படைப் பாலை சங்கராபரணம் என்று நினைத்தார். அடிப்படைப் பாலையாக சங்கராபரணத்தைக் கொண்டதால், எழு பெரும் பாலைகளுக்குரிய இன்றைய இராகங்களைக் காணமுடியாமல் போயிற்று. ஆனால் விபுலாநந்தரும் பி. சாம்பமூர்த்தியும் அடிப்படைப் பாலை ஹரிகாம்போதி என்று கொண்டு பண்டைய ஏழ்பெரும் பாலைகளுக்கும் உரிய இன்றைய ஏழு பண்களைத் தெளிவாய்க் கண்டு பிடித்துக் காட்டியுள்ளனர்.

இவை ஒருபுறம் இருப்பினும், தமிழிசைதான் இன்றைய இந்திய இசைக்கு அடிப்படை என்பதையும் தமிழ் மக்கள் பூர்வகாலத்திலேயே 24 சுருதி முறையைத் தான் கையாண்டனர் என்பதையும் கண்டறிந்து பண்டிதர் தமிழ் உலகிற்கு அறிவித்தது அவர் தமிழ்மொழிக்கு ஆற்றிய பெரும் தொண்டு.

கருணாமிர்த சாகரத்தில் சில அடிப்படைக் கருத்துகள்

பண்களை ஆக்கும் பல்வேறு முறைகள், தாரத் தாக்கம், இடமுறைத் திரிபு முதலிய முறைகள், வலமுறை இடமுறை மெலிதல், நேர் பாலை காணல் முதலியவை உலகில் பறி நாடுகளில் முற்காலத்தில் கிடையாது. இதுபோன்ற இசைச்செய்திகள் பல சிலப்பதிகாரத்தில் உள்ளன. சிலப்பதிகாரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்றாலும் அதற்கும் முந்திய ஆயிரம் ஆண்டு இந்திய இசையமைப்பையும் வளர்ச்சியையும் வரலாற்றையும் சுட்டிக் காட்டுவது. ஆதலால் தொன்மையான, புதுமையான இந்திய இசையிலக்கியக் கருவூலங்களுள் தலையாயது சிலப்பதிகாரமே ஆகும்.

siragu-abraham-pandidhar6

அது தரும் இசைச் செய்திகள் உலையது வழிவழி வளர்ந்து வருவன. இறந்துவிட்ட செய்திகள் அல்ல. சிலப்பதிகார நூலில் கோவை (ஸ்வர) இலக்கணம், பண் (இராக) இலக்கணம், ஆளத்தி (ஆலாபனை) இலக்கணம், தாள அடிப்படை இலக்கணம், கொட்டு முழக்குமுறை இலக்கணம், இசைக்கருவி வகை இலக்கணம் முதலிய பல்வேறு இலக்கணங்கள் அடங்கி ஈடு இணையில்லாத மிகப் பழைய இசைச் சுரங்கமாக விளங்குகிறது என்றார் ஆபிரகாம் பண்டிதர்.

சிலப்பதிகாரத்திற்கு இரண்டு உரைகள் (10, 11ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியவை) உள்ளன. எனவே பத்து நூற்றாண்டுக்கும் மேலாக இவ்விசை மரபு தொடர்ந்து வருவது புலனாகிறது. சங்கீத ரத்னாகரம், சிலப்பதிகார அரும்பதவுரைக்கு 200 ஆண்டுகள் பிற்பட்டது. (ப.675)

அரும்பதவுரையாசிரியர், கவிச் சக்ரவர்த்தி ஜெயங்கொண்டாரே ஆவர் என ஒரு முடிவைச் சொல்கிறார் ஆபிரகாம் பண்டிதர். (ப.612, 685). இம்முடிவுக்கு வருவதற்கான சான்றுகளை அவர் அளிக்கவில்லை.

நரம்பு என்பது ஸ்வரம். இரு நரம்புகள் தம்முள் ஒன்றுபட்டு இசைப்பதை இசைபுணர் குறிநிலை என்கிறார் இளங்கோவடிகள். தென்னக இசையிலக்கணத்தில், ஒத்திசை நரம்புகளை, இணை, கிளை, நட்பு என்று மூவகைப்படுத்திக் கூறுகிறார். இணை என்பதற்குச் சிலப்பதிகார உரையாசிரியர் கூறிய விளக்கத்தைப் பல ஆய்வாளர்கள் தவறாக விளங்கிக்கொண்டனர். ஆபிரகாம் பண்டிதர், நின்ற நரம்பிற்கு மேல் ஏழாம் நரம்பு இணை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ச    ரி    ரி    க    க    ம    ம    ப

0    1    2    3    4    5    6    7

எனவே ஷட்ஜமத்திற்குப் பஞ்சமம் ஏழாம் இணை நரம்பு. அதுதான் நின்ற நரம்புக்கு மேல் ஏழாம் நரம்பு. இதனை நிலைநாட்டக் கல்லாடத்தில் காணப்படும் ஏழாம் நரம்பு இணை என்ற மேற்கோளையும் எடுத்துக் காட்டியிருக்கிறார். (ப.587, 651, 898 முதலியன). நின்ற நரம்பை விடுத்து அதற்கு மேல் எண்ணிக்காட்டும் முறை இளங்கோவடிகள் தந்த முறை. அதைப் பின்பற்றியே கல்லாடர், இணை, கிளை, நட்பு, பகை நரம்புகளைத் தெளிவுபடுத்தியுள்ளார். இம்முறையையே நாமும் பின்பற்றினால் பழைய மரபினை விடாமல் பின்பற்றலாம்.

பின்னர் வந்த சில ஆய்வாளர்கள், தமது நூல்களில் இணை என்பது ச ரி போன்றவை, அல்லது மத்திம ச, உச்ச ச போன்றவை என்றும் பிழைபடக் காட்டியுள்ளனர். இது சிலப்பதிகார உரையாசிரியர் விளக்கத்திற்கு முரண்பட்டது.

பண்டைத் தமிழிசையில் காணப்படும் 22 அலகுகளின் கணக்கு, இணை, கிளை முதலிய ஒத்திசையால் மலர்ந்தவை. ஆனால் பண்டிதர் ஓர் இசை மண்டிலத்தில் 24 அலகுகள் உள்ளன என விரித்துரைத்த கணக்கு சமநிலைப் பகுப்பு எனப்படுகிறது. இது தென்னக இசையியலில் புதிய ஆய்வு.

22 அலகுக் கணக்கு முறையில் உள்ள பிழைகள்

ச-ப முறையில் நரம்புகள் 13 அலகுகள் கொள்ளவேண்டியுள்ளது.

ச-0, ரி-4, க-3, ம-2, ப-4 என 13 ஆகிறது.

ச-ப முறையில் இணை நரம்புகள் தொடுக்கப்பட்டுச் செம்பாலை நரம்புகள் ஆக்கப்பட்டதால் எல்லா இணை நரம்புகளும் 13 அலகுகள் கொள்ளவேண்டியதாகிறது.

நி-ம, ம-ச், ச-ப, ப-ரி, ரி-த, த-க என்னும் இணை நரம்புத் தொகுதி ஒவ்வொன்றும் முறையே 13 அலகுகள் கொள்ளவேண்டும். அவ்வாறு கொள்ளாமையால் 22 அலகு என்னும் பிழைபட்ட அமைப்புமுறை என்று ஆபிரகாம் பண்டிதர் விளக்குகிறார். அவர் விளக்கம் வருமாறு:

நி   ச    ரி    க    ம

0   4    4    3    2   =13

ம    ப    த    நி    ச

 0    4    3    2    4    =13

ச    ரி    க    ம    ப

0    3    2    4    4    =13

ப    த    நி    ச்    ரி

0    3    2    4    4    =13

ரி    க    ம    ப    த

0    3    2    4    3    =13

த    நி    ச    ரி    க

0    2    4    4    3    =13

இணை முறையில் தொடுக்கப்பட்ட ரி-த = 12 அலகு பெற்று வருவதால் 22 அலகுக் கணக்கு முறை பொருந்தாது என்று ஆபிரகாம் பண்டிதர் காட்டினார். இதனை மறுத்து இதுவரை எவரும் கருத்துரைக்கவில்லை.

ஆபிரகாம் பண்டிதர் தமிழிசை வளரக் காட்டும் வழிகள்

1. பண்களுக்குரிய சுரங்களை அவற்றின் வகையைக் குறிக்காமல் எழுதிவருவது கூடாது (ப.908) எனக்கூறி, சுவரம் எழுதும் புதிய முறையை விளக்கியுள்ளார்.

2. சுரக்குறிப்புகளை வசனம் போல் எழுதிவருகிறார்கள். இது நீக்கற்குரியது (ப.908) என்று கூறி, காலக்கணக்குடன் சுரம் எழுதும் முறை வளர வழிகாட்டியுள்ளார்.

3. தாளத்தின் பெயரை மட்டும் எழுதுகிறார்கள். அதோடு தாள அங்கங்களையும் எழுதுவது பெரிதும் உதவும் எனக்கூறித் தாளக்குறியீட்டு முறையைப் புகுத்தியுள்ளார்.

4. சங்கீதத்தைச் சுர எழுத்துகளால் குறிப்பது சுலபமாயிராது. பலவேறு நாட்டினரும் தெரிந்துகொள்ளும் வகையில் சித்திர எழுத்துகளால் (staff notation) எழுதவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

5. தமிழசையை எழுதுவதற்கு மேற்கு நாட்டு இசை எழுதுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். தாமே எழுதியும் காட்டினார் (ப.909).

இசை ஆய்வுக்குப் பண்டிதர் பயன்படுத்திய நூல்கள்

1.வேங்கடமகிக்கு முன்னர் இருந்த இசைக்குறிப்புகள், 2. சதுர்தண்டிப் பிரகாசிகை, 3. சங்கீத பாரிஜாதம், 4. சுரமேள கலாநிதி, 5. சங்கீத ரத்னாகரம், 6. ஷடராக சந்த்ரோதயம், 7. ராக விபோதம், 8. சின்னச்சாமி முதலியார் எழுதிய கீழைநாட்டு இசை, 9. வியாச கடகம், 10. திவாகரம், 11. பிங்கலம், 12. பரிபாடல், 13. தென்னிந்திய அலகுமுறை (கையெழுத்துப் பிரதி), 14. தேவாரம், 15. சீவக சிந்தாமணி, 16. கலித்தொகை, 17. கல்வெட்டுகள், 18. தண்டியலங்காரம் முதலியன.

இந்நூல்களின் அரிய செய்திகளை ஆங்காங்கு மேற்கோள்களாகக் காட்டிக் குறிப்பிடுகின்றார். இந்நூல்களில் சில இப்போது கிடைக்கவில்லை. தென்னக இசைக்கு மேற்கண்ட வடமொழி நூல்களை மூலநூல்களாக ஆபிரகாம் பண்டிதர் கொள்ளவில்லை. சிலப்பதிகாரம், அதன் இரு பெரும் உரைகள், பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முதலியவற்றில் காணப்படும் இசைச் செய்திகளையும், பத்துப்பாட்டு எட்டுத்தொகை தரும் இசைச் செய்திகளையும்தான் தென்னக இசைக்கு மூலமாகக் கொண்டு விளக்கியுள்ளார்.

கருணாமிர்த சாகரத் திரட்டு

siragu-abraham-pandidhar4

தமிழில் கீர்த்தனைகள் இல்லை என்னும் குறையைப் போக்குவதற்காக ஆபிரகாம் பண்டிதரே 96 பாடல்களை இயற்றித் தந்துள்ளார். இவற்றுள் கீதம், சுரஜதி, ஜதிஸ்வரம், வர்ணம், க்ருதி ஆகிய யாவும் அடங்கும். இப்பாடல்கள் 1907இல் கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற பெயரில் சுர தாளக் குறிப்புகளுடன் வெளிவந்துள்ளன. இதனுள் பல மேதைகளின் பாடல்களைத் தமிழ்ப்படுத்தியும் தந்துள்ளார். கிறித்துவராக இருந்தும் சமயக் காழ்ப்பின்றி இப்பாக்களை இயற்றியுள்ளார்.

மலம் ஆணவம் கன்மம் மாயை மலிகின்ற

உலகோர் வாதையால் நொந்துவந்தேன் ஆவலாய்…

போன்ற பாடல்களில் சைவசித்தாந்தக் கருத்துகள் இடம்பெற்றிருப்பது குறிக்கத்தக்கது.

பண்டிதரின் The Nativity of Christ என்னும் கதாகாலட்சேப நிகழ்ச்சி, சுரதாளக் குறிப்புடன் அவருடைய மகன் ஜோதிப் பாண்டியன் முயற்சியால் அச்சிட்டு வெளியிடப் பட்டுள்ளது. பண்டிதரின் பேரன் வரகுண பாண்டியன், பாணர் கைவழி எனப்படும் யாழ்நூல் வழி, தமது இசை ஆய்வுப் பணியைத் தொடர்ந்துள்ளார். பண்டிதரின் வாழ்க்கை வரலாற்றை ஆ. அ. தனபாண்டியன் எழுதியுள்ளார். இவரே நுண்ணலகுகளும் இராகங்களும் என்ற நூலையும் எழுதியிருக்கிறார்.

மேற்குநாட்டு இசையையும் தமிழ்நாட்டு இசையையும் இணைத்துப் பாடல் இசைக்கும் முறையையும் பண்டிதரே தொடங்கிவைத்தார். திருச்சபைக் கிறித்துவ இசை வளர்ச்சியில் இது ஒரு மைல்கல் ஆகும்.

முடிவுரை                    

தென்னக இசையை ஆராய்ந்து வளர்த்து வளப்படுத்தியவர் பலர். அவர்களுக்குள் காலத்தால் முந்தியவரும், உள்ளம் உடல் உயிர் அனைத்தையும் இசைக்கே என அர்ப்பணித்து வாழ்ந்தவரும், ஈடு இணையற்ற பெருநூலை ஆக்கித் தமிழிசை ஆய்வைக் காத்தவரும், பலப்பல சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்லிச் செந்தமிழிசை செப்பமுறச் செய்து வழிகாட்டியவரும், இல்லம் முழுவதையும் நல்லிசை மயமாக்கி விளங்கியவரும் ஆகிய ஆபிரகாம் பண்டிதர் தமிழர்தம் உள்ளத்தில் என்றும் மறையாது நிற்பார்.

கருணாமிர்த சாகரம் நூலுக்குப் பாராட்டு

உ.வே. சாமிநாதையர்

…பழைய தமிழ் நூல்களாகிய சிலப்பதிகாரம் முதலியவற்றைச் செவ்வனே ஆராய்ந்து விளக்கிய நூல்.

வ.மு. இராகவன்

கருணாமிர்த சாகரம் என்னும பெயருக்கேற்ப முற்காலத்தும் பிற்காலத்தும் உள்ள சங்கீத விஷயங்களை எல்லாம் இந்நூலிடையே பரந்துகிடத்தலால் இது தமிழ் மக்கட்கு ஒரு பெரிய நிதியே.

http://siragu.com/?p=24211

Categories: merge-rss

மாவீரர் யாரோ என்றால்....

 
%25255BUNSET%25255D.png 
 
"மச்சான், ஆமி கிட்ட வந்திட்டுது,
நான் முன்னுக்கு போகப் போறன்,
என்ட பிள்ளைகளை பார்த்துக் கொள்ளடா"
 
ஆனந்தபுரம் சமரின் இறுதி நாளொன்றில், லண்டனில் இருக்கும் நண்பனொருவனை தொடர்பு கொண்ட சிவகுமரன் (சேரலாதன்) கூறிய கடைசி வசனங்கள் அவை. இறுதி யுத்தம் தொடங்கிய பின்னர் நண்பர்களோடு பலமுறை விரிவாக கதைத்திருந்த சிவகுமரனின் இந்த கடைசி  அழைப்பு,  ஓரிரு நிமிடங்களே நீடித்தது. 
 
----------------------------------------------------------------------------------------------------------------------
 
1984ல், பரி யோவானில் இணைந்த சிவகுமரன் எல்லோரோடும் பம்பலாக பழகுவான். தேவதாசன் மாஸ்டர் வகுப்பாசிரியராக இருந்த Grade 5Aல் தான் சிவகுமரன் அறிமுகமானான். எங்களது வகுப்பறை பிரின்ஸிபல் ஒஃபிஸிற்கு முன்னால் இருந்த கொட்டகையில் இருந்தது. இப்பொழுது அந்த வகுப்பறைகள் இடிக்கப்பட்டு புதிய கல்லூரி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 
 
 
சிவகுமரனின் நட்பில் வாஞ்சை மிதமிஞ்சும், வஞ்சகம் எள்ளளவும் இருக்காது.  சிவகுமரன் விடும் குழப்படிகள்,  தானும் அடிவாங்கி மற்றவர்களுக்கும் அடிவாங்கிக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. சிவகுமரனின் சொந்த ஊர் நயினாதீவு என்பதால், அவனுக்கு நைனா என்ற பட்டபெயர் ஒட்டிக் கொண்டது. சிவகுமரனின் நகைச்சுவை கலந்த பம்பல்களால், இலங்கை வானொலியின் பிரபல நகைச்சுவை கதாபாத்திரமான நானா மரிக்காரை நினைவில் வைத்து, நைனா மரிக்கார் என்ற பட்டப் பெயரையும் பெற்றான். 
 
 
சிவகுமரனிடம் சிக்கி கந்தசாமி மாஸ்டர், காசிநாதன் மாஸ்டர் போன்ற அப்பிராணி வாத்திமார் பட்ட அவஸ்தை சொல்லிலடங்காதவை. நைனா ஒரு சிறந்த ராஜதந்திரி, "பயங்கரவாத" வாத்திமாரிடம் தன்னுடைய வாலை சுருட்டிக் கொள்வான். இந்த பயங்கரவாத வாத்திமார் லிஸ்டில், தேவதாசன், கதிர்காமத்தம்பி, பிரபாகரன், தனபாலன், சரா தாமோதரம், டோனி கணேஷன் மாஸ்டர்மார் அடங்குவினம். சந்திரமெளலீசன் மாஸ்டரின் வகுப்புகளில் நைனா விடும் சேட்டைகளை அவரும் சேர்ந்து ரசிப்பதால் வகுப்பு கலகலப்பாகும். 
 
 
எங்கட வகுப்பிற்கு duty பார்க்க வாற prefectsஐயும் நைனா வாட்டி வதைப்பான். பத்தாம் வகுப்பில் "ஐசே ஏன் நிற்கிறீஈஈஈர்" நிருபனும்,  Lower VIல் "எடுவை" ஐங்கரனும் சிவகுமரனின் குழப்படிகளை கட்டுப்படுத்த முடியாமல் திக்கு முக்காடினார்கள். 
 
 
-------------------------------------------------------------------------------------------------------------------
 
1988ம் ஆண்டு பரி யோவான் மைதானத்தில், ஒரு சனிக்கிழமை, பற்றிக்ஸ் அணிக்கெதிரான u17 ஆட்டம் நடைபெறுகிறது. பரி யோவான் அணியின் தலைவர் சதீசன், அரைச்சதம் தாண்டி நூறு ஓட்டங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். பழைய பூங்கா பக்கம் இருக்கும் பொன்னுத்துரை பவிலியனிலிருந்து சிவகுமரனோடு நானும் சில நண்பர்களும் மட்ச் பாரத்துக் கொண்டிருந்தோம். 
 
 
"மச்சான், காசை எடுங்கடா, சதீசன் செஞ்சரி அடிக்க சோடா குடுப்பம்" நைனா வினையை விலைக்கு வாங்க திட்டம் போட்டான். மைதானத்தில் மட்ச் நடக்கும் போது, மைதானத்திற்குள் ஓடுவது என்பது பரி யோவானின் கடும் ஒழுக்க விதிகளிற்கு முரணாணது, பாரிய குற்றம்.
 
 
"மச்சான், பிடிபட்டோமென்றா பிரின்ஸிபலிடம் தான் கொண்டு போய் நிற்பாட்டுவாங்கள்" எவ்வளவோ எச்சரித்தும், விடாப்பிடியாக சதீசன் செஞ்சரி அடிக்க சோடா கொடுப்பதில், நைனா உறுதியாக நின்றான்.
 
 
"டேய், நீங்க சோடா வாங்க காசு போடுங்கோ, நான் கொண்டு ஓடுறன்" என்றான் சிவகுமரன். பின்னாட்களில் வெளிநாடுகளிலிருந்து நாங்கள் காசு அனுப்ப, அவன் தாயகத்தில் களமாடப் போகும் வரலாற்றை கட்டியம் கூறுவதாக அந்த சம்பவம் அமையப் போகிறது என்று  அன்று நாங்கள் உணரவில்லை.
 
 
நைனா அடம்பிடிக்க தொடங்கினால் யாராலும் சமாளிக்க ஏலாது. வேண்டா வெறுப்பாக எல்லோரும் சேர்ந்து காசு போட்டு, செரில்ஸிற்கு போய் நெக்டோ வாங்கி வந்து, மீண்டும் பழைய பூங்கா பக்கத்தில் போய் மட்ச் பார்க்கத் தொடங்கினோம். 
 
 
சதீசன் நூறடிக்க, சிவகுமரன் மைதானத்திற்குள் ஓடிப் போய், நடுப் பிட்சில் வைத்து சதீசனிற்கு சோடா கொடுத்தான்.  "ஐசே, இப்படி செய்யக் கூடாது" என்று நடு பிச்சிலும் சதீசன் அன்பாக கண்டித்துவிட்டு, ஒரு மிடாய் சோடா குடித்தார்.
 
 
திரும்பி பழைய பூங்கா பக்கம் வராமல், டைனிங் ஹோல் பக்கம் தப்ப ஓடிய சிவகுமரனை ஏற்றிக் கொண்டு பிரின்ஸிபல் பங்களாவிற்கு செல்ல புவனரட்ணம் மாஸ்டர் சைக்கிளோடு தயாராக நின்றார். 
 
-----------------------------------------------------------------------------------------------------------------
 
Big Match வென்ற 1990 பரி யோவான் கிரிக்கெட் அணியில் சிவகுமரன் 12th man. சிவகுமரன் மிகச்சிறந்த fielder. Big Matchல் அணியில் விளையாடிய பதினொரு பேரிடமும் தன்னை எப்படியாவது field பண்ண விடுமாறு வலியுறுத்திக் கேட்டிருந்தான். 
 
 
இரண்டாம் நாள் மத்தியானம், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய சென்ரலின்  எட்டாவது விக்கெட் விழுந்து, பரி யோவான் அணி வெற்றியின் விளிம்பில் நிற்க, மைதானத்திற்குள் நுழைந்த  பரி யோவான் பழைய மாணவர்கள், "கடைசி விக்கெட் விழுந்ததும் dressing roomற்கு ஓடுங்கடா, அடி விழும், கவனம்" என்று அணியை எச்சரித்தார்கள்.
 
 
இதைக் கேட்டு பயந்த விபீஷ்ணா, அடுத்த ஓவரே, கையை காட்டி, சிவகுமரனை கூப்பிட்டு field பண்ணவிட்டு விட்டு தான் மைதானத்திலிருந்து தப்பி வெளியேறினான். பின்னாட்களில் நண்பர்கள் நாட்டை விட்டுத் தப்பியோட, சிவகுமரன் தாய் மண்ணில் களமாடப் போகும் காலங்களை உணர்த்திய சம்பவமாக இதுவும் அமைந்தது.
 
-----------------------------------------------------------------------------------------------------------------
 
1990ம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரிக்கெதிராக பரி யோவான் மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் சிவகுமரன் பிடித்த கட்சை  கேர்ஷன் ஞாபகப்படுத்தினான். "மட்ச் முடியிற நேரம், யாரோ வெளியே வர,  சிவகுமரனை field பண்ண இறக்கினாங்கள். Water tank பக்கமிருந்த boundary லைனில் சிவகுமரன் ஓடிப் போய் ஒரு அந்த மாதிரி கட்ச் எடுத்தான்டா. இன்றைக்கும் என்ட கண்ணுக்குள் நிற்குது" என்றான் கேர்ஷன். 
 
 
அதே ஆண்டில் இடம்பெற்ற இரு வேறு ஆட்டங்களில் ஸ்லிப்ஸில் சிவகுமரன் எடுத்த கட்ச் பற்றி சிறிபிரகாஷும், சிவகுமரன் எடுத்த ரன் அவுட் ஒன்றைப் பற்றி அருள்மொழியும் நினைவுறுத்தினார்கள். 
 
 
இந்தாண்டு  நாங்கள் Big Match பார்க்கப் போகும் போது, Big Matchல்  Best Fielderற்கான விருதை சிவகுமரன் ஞாபகார்த்த விருதாக வழங்கப்பட SJC 92 லண்டன் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தது நெகிழ வைத்தது. 
 
---------------------------------------------------------------------------------------------------------------
 
1990ம் ஆண்டு நடுப்பகுதியில் யுத்தம் மீண்டும் தொடங்கியது, எங்களின் பரி யோவான் பாடசாலை வாழ்க்கையும் சிதைந்து போனது. இயக்கம் Open பாஸ் அறிவித்த நாட்களில் நாங்கள் கொம்படி வெளி கடந்து கொண்டிருக்க, சிவகுமரன் இயக்கத்தின் பாசறையொன்றில் போராளியாக மாறியிருந்தான். 
 
------------------------------------------------------------------------------------------------------------------
 
1994 டிசம்பரில், சந்திரிக்காவின் யுத்த நிறுத்த காலப்பகுதியில் மீண்டும் யாழ்ப்பாணம் சென்றிருக்கும் போது, நான் வந்திருப்பதை அறிந்து தேடி வந்து சந்தித்தான். பரி யோவான் மைதானத்தின் ஓரத்தில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, மைதானத்தின் புற்தரையில் அமர்ந்திருந்து  யசியோடும் என்னோடும் பழைய குழப்படிகளை இரை மீட்டான்.
 
 
இயக்கத்தில் சிவகுமரனின் வளர்ச்சி துரிதமாக நடந்தது. அந்தக் காலப்பகுதியில் கலை பண்பாட்டு கழகத்தின் துணை பொறுப்பாளராக செயற்பட்ட சேரலாதன், அடுத்த நாள் யசி வீட்டில் மத்தியான சாப்பாட்டிற்கும் எங்களோடு இணைந்து கொண்டான்.  தன்னுடைய கோப்பையிலிருந்து எடுத்து எங்களிற்கு சோறு ஊட்டிவிட்டு நட்பு பாராட்டிய அந்த கணங்களை மறக்கவே இயலாது.
 
--------------------------------------------------------------------------------------------------------------
 
2002 நவம்பரில், மாவீரர் நாளிற்கு சில நாட்களுக்கு முன்னர், சிவகுமரனை மீண்டும் கிளிநொச்சியில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பள்ளிக்கூட காலத்தில் மெல்லிய உருவமாக இருந்த சிவகுமரன், நல்லா கொழுத்து தடியனாக மாறியிருந்தான். இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவனாக, நிதர்சனம் தொலைக்காட்சி பொறுப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த நண்பனை கண்டு பெருமைப்பட்டேன்.
 
 
"டேய் மச்சான், உன்னை இயக்கத்தில் இவ்வளவு காலம் எப்படிடா வச்சிருந்தவங்கள்" என்று பம்பலாக ஒரு  மூத்த தளபதி முன்னிலையில் கேட்க, அந்த மூத்த தளபதி சேரலாதனிற்கு இயக்கம் "காத்து கழற்றிய" கதையை சொல்லி சிரித்தார். சிவகுமரனும் சளைக்காமல் தனக்கேயுரிய இயல்பான நக்கலுடன் திருப்பி தாக்கி அந்த பொழுதை இனிமையாக்கினான்.  
 
------------------------------------------------------------------------------
 
2005 நவம்பர் மாதம் 1ம் திகதி
 
யுத்த மேகங்கள் சூழத்தொடங்கியிருந்த காலம், இயக்கம் யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட தனது அரசியல்துறை உறுப்பினர்களை வன்னிக்கு மீள அழைத்திருந்தது. திருமண நிகழ்வொன்றிற்கு யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளை, சிவகுமரனை சந்திக்க கிளிநொச்சி நோக்கி பயணமானேன். 
 
 
"முகமாலைக்கு வாகனத்தோடு ஆளனுப்புறன், நீ பாஸ் எடுக்காமல் வா" என்று அவன் சொல்லியும் கேட்காமல், முறையாக பாஸ் எடுத்து கிளிநொச்சி போய் சேர, "சொன்னா கேட்கமாட்டாய், போ..போய் நந்தவனத்தில் மினக்கிடு" என்று கடிந்து கொண்டான். 
 
 
நந்தவனத்தில் அன்று கடமையிலிருந்த தம்பி நாங்கள் படித்த காலத்தில் கொழும்பு இந்துக் கல்லூரியில் படித்தவர், சுணங்காமல் பாஸ் தந்து அனுப்பினார். அன்று சிவகுமரனோடு பாண்டியன் சுவையகத்தில் நாட்டுக் கோழிக் குழம்போடும் கணவாய்க் கறியோடும் மத்தியான சாப்பாடு சாப்பிட்டேன். 
 
 
மத்தியானம் சிவகுமரனின் வீட்டில் பழைய கதைகள் கதைத்துக் கொண்டே, இந்திய இலங்கை அணிகளிற்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தோம். அன்றைய ஆட்டத்தில் ட்ராவிட்டும் தோனியும் இணைந்து கலக்கினார்கள். 
 
 
மட்சை பார்த்துக் கொண்டே "மச்சான் அவன் எங்க இருக்கிறானடா, மச்சான் இவன் எப்படி இருக்கிறான்டா, டேய், அந்த நாயை என்னை தொடர்பு கொள்ள சொல்லு" என்று எங்களோடு படித்த நண்பர்களை பற்றி சிவகுமரன் அக்கறையாக விசாரித்தான். 
 
 
தேத்தண்ணி குடித்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு, அவனது அலுவல் நிமித்தம் தர்மேந்திரா கலையகத்திற்கு கூட்டிக் கொண்டு போனான். அங்கிருந்த போராளிகளை அதட்டினான், பின்னர் அவர்கள் தோள் மேல் கை போட்டு "என்னடா வெருண்டிட்டயளோ" என்று மறுமுகம் காட்டினான்.
 
 
முகமாலை மூடும் நேரம் நெருங்க, நான் விடைபெற ஆயத்தமானேன். என்னை இறுக்கிக் கட்டிப்பிடித்து தழுவி விட்டு, "இனி எப்ப சந்திப்பமோ தெரியாது மச்சான், நீ தொடர்பில இரு" என்று சிவகுமரன் சொன்ன சொற்களில் சோகம் குடிகொண்டிருந்தது. 
 
%25255BUNSET%25255D.png 

-------------------------------------------------------------------------------------------------------------
 
2009 ஏப்ரல் மாதம் 6ம் நாள்
 
நடுச்சாமம் Skype அலற, பதறியடித்து எழும்பினேன்.
"அண்ணா, எல்லாம் முடிஞ்சுது, உங்கட friend சேரலாதன் அண்ணாவும்..." எந்த செய்தியை கேட்கக் கூடாது என்று கர்த்தரை தினமும் மன்றாடினோ, அந்த செய்தி செவிப்பறைகளில் ஓங்கி ஒலித்து, இதயத்தை பிளந்தது.
 
------------------------------------------------------------------------------------------------------------------
 
ஊர் வாழ வேண்டுமென்றே,
உன்னத ஆர்வம் கொண்டோர்,
ஏராளமான துயர்,
எண்ணங்கள் தாங்கி நின்றோர்
 
மாவீரர் யாரோ என்றால்.....
 
----------------------------------------------------
 
 
 
 
 
Categories: merge-rss

மாவீரர் தினம் 2016 சிறப்பு பதிவுகள்

பொங்கு-தமிழ் - Mon, 21/11/2016 - 11:52

நாம் அணிவகுத்துள்ளோம்...

 

நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க

எதிரி நமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை!

புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்
ஆனால்...
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!

எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமது
ஆத்ம பலமோ அதைவிட
வலிமை வாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!

நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!

நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடத்தில் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...

எமது படையணி விரைகிறது...
எம தேசத்தை மீட்க!

நாம் செல்லும் இடமெல்லாம்...
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்...!

உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.

 

 

(1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை)

 

 

Categories: merge-rss

ஜெயமோகனின் ‘நீர் நிலம் நெருப்பு’ ஆவணப்படம்

கதை கதையாம் - Tue, 15/11/2016 - 19:08

 

ஜெயமோகனின் ‘நீர் நிலம் நெருப்பு’ ஆவணப்படம்

எழுத்தாளர் ஜெயமோகனை தெரியாதவர்கள் நவீன இலக்கிய உலகில் இருக்க முடியாது. கணிசமான இலக்கிய வாசகர்கள் காலையில் எழுந்தவுடன் அவரது வலைதளம் சென்று படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஜெயமோகன் தனது முதல் நாவலான ‘ரப்பர்’ தொடங்கி விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமரி, காடு, ஏழாம் உலகம், கொற்றவை ஆகிய நாவல்களால் பரவலான வாசகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். அவரது ‘அறம்’, ‘வெண்கடல்’ சிறுகதை தொகுதிகளும் இலக்கிய உலகில் நன்றாகப் பேசப்பட்டன. தற்போது, ‘வெண்முரசு’ என்ற தலைப்பில் மகாபாரதம் குறித்த தொடர் நாவல்களை எழுதி வருகிறார். ஜெயமோகன் இலக்கிய உலகில் மட்டுமல்ல; திரைப்பட உலகிலும் பரிச்சயமானவர். இயக்குநர் லோகிததாஸின் ‘கஸ்தூரிமான்’ தொடங்கி வசந்தபாலனின் ‘அங்காடித் தெரு’, ‘காவியத் தலைவன்’, சீனு ராமசாமியின் 'நீர்ப் பறவை' பாலாவின் ‘நான் கடவுள்’ என வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ திரைப்படத்தில் கதை, வசனம் இரண்டும் எழுதியதோடு திரைக்கதையிலும் பங்குகொண்டு பணியாற்றியிருக்கிறார்.

 

தமிழில் மட்டுமல்ல; மலையாளப் படங்களிலும் நான்கு திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். ஜெயமோகனின் மகன் அஜிதன், இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார். அஜிதன் தனது அப்பாவை வைத்து ‘ஜெயமோகன் - நீர் நிலம் நெருப்பு’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கி யூடியூபில் வெளியிட்டிருக்கிறார். ஆவணப்படம் வெளியாகி நான்கே நாட்கள் ஆகியுள்ளநிலையில், இந்தப் படத்துக்கு இலக்கிய உலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கவிஞர் ரவிசுப்பிரமணியன், கவிஞர் ராஜசுந்தர்ராஜன், எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் போன்றவர்கள் இந்தப் படத்தை எடுத்துள்ளவிதத்தைப் பாராட்டி முகநூலில் எழுதியுள்ளார்கள். இலக்கிய வாசகர்களும் சமூக வலைதளங்களில் இந்தப் படத்தை பாராட்டியும் இந்தப் படத்தின் லிங்க்-கை பகிர்ந்தும் வருகிறார்கள். அப்படி என்ன இருக்கிறது இந்த ஆவணப்படத்தில்...

கேமரா மெல்ல பயணித்து நகர ஆரம்பிக்கிறது. சாரதா நகர் போர்டை காட்டுகிறது. ஜெயமோகனின் வீடு காட்டப்படுகிறது. மெல்ல கேமரா படியேறுகிறது. அறையில் ஜெயமோகன் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறார். மகன் அஜிதனிடம் பேசத் தொடங்குகிறார். நினைவுதெரிந்த முதல் நாளிலிருந்து எழுதிக்கொண்டேதான் இருக்கிறேன் எனச் சொல்லும் ஜெயமோகன், திருவரம்பு என்னும் ஊரில் இருந்த அவரது பூர்வீக வீடு குறித்தும், காலப்போக்கில் அந்த வீடு அழிந்துபோனது குறித்தும் பேசுகிறார். அவரது அப்பா, அம்மா இருவரும் தற்கொலை செய்துகொண்டது எப்படி அவரிடம் கொந்தளிப்பான மனநிலையை ஏற்படுத்தியது. வீட்டைவிட்டு துறவறம் பூண்டு, ஊர் ஊராக அலைந்தது, திருவண்ணாமலையில் ஒரு சாமியார் இவரைப் பார்த்து ஆங்கிலத்தில் ‘உனக்கு இங்கென்ன வேலை? நீ மெய்ஞானம் தேடியெல்லாம் வரவில்லை. உன் கண்களில் பல கனவுகள் தெரிகிறது. போய் வேலையைப் பார்!’ எனத் துரத்தியது என, எந்தத் தடையும் இல்லாமல் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, துயரங்களை எந்தத் தடையும் இல்லாமல் கூறுகிறார். தனது படைப்பாக்க செயல்பாடுகள் எவ்விதம் நடந்தன? முதல் நாவலான ‘ரப்பர்’ வந்த பின்னர் இலக்கிய உலகில் நடைபெற்ற மாற்றங்கள் என நிறைய விஷயங்களை உரையாடியிருக்கிறார் ஜெயமோகன். அவர் எழுத்தில் யானைகளும், பாம்புகளும் ஏன் அதிகமாக வருகின்றன? என்பதற்கு என் நிலத்துக்கான உயிரினங்கள் அவை என்கிறார். ரப்பர் பணப்பயிராக உருவெடுத்தபின் காடுகளும் இயற்கையும் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாயின என்பதை விளக்குகிறார். மற்ற மரங்களுக்குப் போகும் நீரையும் ரப்பர் மரம் உறிஞ்சிவிடும். அதனால்தான் இந்தப் பகுதியில் தென்னை மரங்கள் இவ்வளவு சூம்பிப் போய் நிற்கின்றன என்கிறார். தனது மனைவி அருண்மொழியைக் கண்டது, கடிதம் கொடுத்தது, காதல் கொண்டது, திருமணம் என அவரது வாழ்வில் நடந்த முக்கிய விஷயங்களை ஒரு தந்தை மகனுக்கு விவரிப்பதுபோலவே படம் முழுவதும் உள்ள தொனி படத்தை ஒன்றிப் பார்க்கும்படி செய்துள்ளது. ஜெயமோகன் தான் வளர்ந்த, வாழ்ந்த இடங்களைக் காட்டும்போது சில இடங்களில் பேச்சு இல்லாமல் அமைதியாக விட்டிருப்பதும் நல்ல உத்தி. ஜெயமோகனின் தனிப்பட்ட பேச்சானது சுவாரஸ்யமாக இருக்கும். இந்த ஆவணப்படம் முழுவதும் எந்த இடத்திலும் டெம்போ கீழே போகாமல் இருப்பதற்கு ஜெயமோகனின் அனுபவ உரையாடலே காரணமாகும்.

இந்தப் படத்தை இயக்கி படத்தொகுப்பு செய்திருக்கிறார் அஜிதன். முதல் முயற்சி என்ற வகையில் பாராட்டலாம். பல இடங்களில் கேமராவை வித்தியாசமான கோணத்தில் பயன்படுத்தியிருக்கிறார். யாராவது இசையமைப்பாளரை வைத்து பின்னணி இசையை மற்றவர்கள் செய்து இருப்பார்கள். ஆனால் தட்டச்சு செய்யும் ஒலி, பறவைகள் எழுப்பும் ஒலிகள், காற்றில் மரங்கள் அசையும் சத்தம் என முழுக்க இயற்கையான பின்னணி சத்தங்களுக்கு நடுவே ஜெயமோகன் பேசுவது அவரது எழுத்தை பிரதிபலிப்பது போல இயல்பாக உள்ளது. படத்தின் படத்தொகுப்பும் சீராக உள்ளது. ஆவணப்படத்தில் சில விஷயங்களை காட்டுவதன் மூலமாக ஒரு எழுத்தாளனின் ஆளுமையை வெளிக்கொண்டு வர முடியும். அந்தவகையில், அஜிதனின் இந்த ஆவணப்படம் ஜெயமோகனின் அன்றாட வாழ்க்கையின் ஒரு நாளை பதிவு செய்வதுபோல இத்தனை வருடம் அவர் செய்துவந்த எழுத்தியக்கத்தின் தொடர்ச்சியை அருமையாக படம் பிடித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை சென்னை உள்ளிட்ட முக்கிய தமிழக நகரங்களில் வாசகர்களுக்கு திரையிடல் செய்து ஜெயமோகனுடன் கலந்துரையாடல் கூட்டங்களும் நடத்தப்பட இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆவணப்படத்தின் லிங்க். நீர் நிலம் நெருப்பு - ஆவணப்படம்

- விஜய் மகேந்திரன்

 

http://www.minnambalam.com/k/1478370631

Categories: merge-rss

இனிக்கும் இன்பகாதல் கவிதை

இரவில் ,,,,,
நீ தரும் இன்பமும் .....
நினைவுகளும்....
நான் காணும் கனவும்....
என் ஏக்கமுமே......
பகலில்........
வரிகளாக வந்து.....
வார்த்தைகளாய் உருவாகி....
கவிதையாய் படைக்கிறேன்.....!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

Categories: merge-rss

ஒரு பள்ளிக்கூடத்து ஆய்வாளர்

கதை கதையாம் - Thu, 03/11/2016 - 08:20

உன் பேர் சொல்லு
ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.
அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!.
சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி. .
"உன் பேர் சொல்லு"
"பழனி"
"உன் அப்பா பேரு"
"பழனியப்பா",
அடுத்தப் பையன எழுப்பி , 
"உன் பேர் சொல்லு"
"மாரி"
"உன் அப்பா பேரு"
"மாரியப்பா"
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது.
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி.
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு" 
"பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு,
சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு.
அடுத்தப் பையன எழுப்பினாரு.
"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு."
(மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)
"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு" 
"ஜான்சன்"
கொஞ்சமா டென்சன் ஆயிட்டு, அடுத்த பையன எழுப்பி,
உன் அப்பா பேர சொல்லு,
"ரிச்சர்டு"
உன் பேரு,
"ரிச்சர்டசன்"
கொலவெறி ஆயிட்டாரு,
கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,
உன் தாத்தா பேர சொல்லு,
"அப்பாவோட தாத்தாவா?,
அம்மாவோட தாத்தாவா?"
ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு,
அப்பாவோட தாத்தான்னாரு
"மணி",
"சரி அப்பா பேரு?",
"ரமணி",
"உன் பேரு?",
"வீரமணி"
அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.

Categories: merge-rss

தமிழர் வரலாறு, ஒரிசா பாலு அவர்களின் கடல் ஆராட்சி

பொங்கு-தமிழ் - Thu, 03/11/2016 - 05:41

தமிழர் வரலாறு, ஒரிசா பாலு அவர்களின் கடல் ஆராட்சி

 

 

Categories: merge-rss

அழகான சில படங்கள்

இனிய-பொழுது - Sat, 27/12/2014 - 13:16

10873493_351190495078192_553723745412270

 

 

10873336_351191285078113_591974994846194

 

10887201_351190751744833_833024905379137

 

10714195_351190718411503_128055521415861

 

10891780_351191098411465_335183820064784

 

10888761_351190721744836_809087625666721

 

10422375_351191105078131_602882041127998

Categories: merge-rss

முகநூலில் ரசித்தவை

இனிய-பொழுது - Wed, 09/04/2014 - 19:59
இழப்பதற்கு ஒன்றுமில்லை ஜெயிப்பதற்கு உலகமே இருக்கிறது ....

குடும்ப வறுமையால் சலூன் கடை நடத்தி கட்டிங், சேவிங் செய்வதில் பட்டதாரி இளம்பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம் முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி (30).

பிகாம் பட்டதாரியான இவர், அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் முடிவெட்டுகிறார். ஷேவிங் செய்கிறார். இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர் வாடிக்கையாளராகி உள்ளனர். பட்டதாரி பெண் தைரியமாக சலூன் தொடங்கி இருப்பது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேவி கூறியதாவது:

அரசு வேலைக்கு பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை வாட்டியது. தந்தை சர்க்கரை நோயாளி என்பதால், தந்தையின் தொழிலை கையில் எடுத்தேன். சிறுவயதில் இருந்தே அவரது பணியை பார்த்து வந்த எனக்கு தற்போது கை கொடுக்கிறது. தொடக்க நாட்களில் ஆண்கள் வரவே கூச்சப்பட்டனர். சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும் நான் மனம் தளரவில்லை. சீரான முடிவெட்டை பார்த்து, நாளாக நாளாகத்தான் வரத்துவங்கினர் என்றார். வாழ்த்துவோமே ......
 
10151844_752347514795754_774362563506401

வாழ்த்துக்கள் சகோதரி ..
 

 


ஷாஹித் அப்ரிடி ........!!

புயல் வேக மட்டை வீச்சில் பிரசித்தி பெற்றவர்.
ஒரு முறை ஜெயசூரியா வேகமாக நூறு ரன்களை அடித்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என்று நண்பர்களிடம் சொல்லி கொண்டு இருந்தேன். ஆனால் சில மாதங்களுகுள்ளகவே அந்த சாதனையை 16 வயதில் முறியடித்தவர். அதுவும் தன்னுடைய முதல் அறிமுக தொடரில்...

அன்றில் இருந்து இவருடைய அதிரடி ஆட்டதிற்கு நான் பலிகடா ஆகிவிட்டேன். நான் விளையாடி கொண்டு இருந்து கிரிக்கெட் அணியில் அன்றில் இருந்து அதிரடி ஆட்டம் மட்டுமே ஆடுவேன். வெறும் 15 ஓவர் மட்டும் விளையாடும் அந்த ஆட்டத்தில் நூறு ரன்களை அடித்தவன் என்கிற சாதனை எனக்கு சொந்தமானது. சரி.. இப்போ விசயத்திற்கு வருவோம்...
இவர் எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர். இந்தியாவில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாடி சம்பாரிதவர்கள் எல்லாம் ஹோட்டல் , கம்பனி என்று தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கி கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக்காதவர்கள். இன்று ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஷாஹித் அப்ரிடி தான் வாழ்நாளில் சம்பாரித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை , மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கு செலவு செய்து உள்ளார். இதுவரை அவர் 17 மில்லியன் டாலர்களை அவர் செலவு செய்து உள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல் ... ஆனால் இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் ஆட்டகாரரர்கள் என்ன செய்ய போகிறார்கள்... ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் அகடமி தொடங்குவார்கள். அதில் புதிய புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்ச கணக்கில் பீஸ் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத்தில் இருபது சதவீதம் வாழ்நாள் முழுவதும் கமிசன் பெறுவார்கள்.... இது தானே நடந்து கொண்டு இருக்கிறது.

அப்ரிடியின் மனிதநேய செயலை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து விலகி நின்று பாராட்டுவோம்...!!

1947365_753115151385657_3004747134908678

 

Categories: merge-rss

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி

இனிய-பொழுது - Tue, 30/10/2007 - 20:07

film : utharavinri ullE vA
singers : SB, PS
lyric : Kannadasan
music : MSV
actors : Ravichandran, Kanchana

 

 

http://www.youtube.com/watch?v=r4VNKAyL4DA

 

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
னாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
னாலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான்
னாயகன் பொன்மணி நாயகி பைன்க்கிளி

என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
இலை விட்டதென்ன கனி விட்டதென்ன
பிடிபட்டதென்ன..
தானன தானன Tஆனன தானன நா...
இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன...
ஏக்கம் தீர்ந்ததென்ன...

(மாதமோ)

மஞ்சள் நிறம்தான் மங்கை என் கன்னம்
சிவந்தது என்ன பிறந்தது என்ன
னடந்தது என்ன
தானன தானன Tஆனன தானன நா...
கொடை தந்த வள்ளல் குறை வைத்து மெல்ல
கூட வந்ததென்ன..
கூட வந்ததென்ன..

(மாதமோ)

http://music.cooltoad.com/music/download.php?id=129865


http://www.mediafire.com/?zjm53jgiyym

Categories: merge-rss