merge-rss

வித்தியா படுகொலையாளிகளுக்கு நேர்ந்த புதிய மாற்றம்!

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 12:10
வித்தியா படுகொலையாளிகளுக்கு நேர்ந்த புதிய மாற்றம்!

 

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மரணதண்டனைக் குற்றவாளிகளில் நான்கு பேரை வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு பிரித்துவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த நால்வரும் பல்லேகலை சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 2 கைதிகள் மஹர சிறைச்சாலைக்கும், 2 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஏனைய மூன்று கைதிகளும் பல்லேகலை சிறைச்சாலையிலேயே விசேட பாதுகாப்பின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வெலிக்கடை மற்றும் மஹர சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட கைதிகள் நான்கு பேரையும் அங்குள்ள கைதிகள் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டுவதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் குறித்த நான்கு கைதிகளும் அதற்கு இணங்க மறுத்துள்ளதோடு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வித்தியா கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு சிறைச்சாலையிலுள்ள ஏனைய கைதிகளால் நிலவும் பாதுகாப்பின்மையினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://news.ibctamil.com/ta/internal-affairs/vithya-case-Prisoners

Categories: merge-rss, yarl-category

19 வயது மாணவன் பிரித்தானியாவின் இளம் கோடீஸ்வரரானார்..

19 வயது மாணவன் பிரித்தானியாவின் இளம் கோடீஸ்வரரானார்..

Akshay-Ruparelia.jpg
ரியல் எஸ்டேட் வியாபாரம் மூலம் அதிக லாபம் ஈட்டியதால் 19 வயது இளைஞர்,   இங்கிலாந்தின் இளம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

லண்டனை சேர்ந்தவர் 19 வயதான இந்திய வம்சாவளியான அக்ஷய் ரூபரேலியா பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற நிலையில் தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள இளம் வயது கோடீசுவரர்களில் ஒருவர் ஆகியுள்ளார்.   பாடசாலையில் கல்வி கற்றுக் கோண்டே  இணையம் மூலம் இவர்  ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகின்றார். இதன்மூலம்  அவர் ஒரு வருடத்தில் 100 மில்லியன் பவுண்ட்ஸ்  பெறுமதியான வியாபாரம் செய்து  1.3  மில்லியன் பவுண்ட்ஸ்   லாபம் ஈட்டியுள்ளார்.

கடந்த 16 மாதங்களுக்கு முன்பு உறவினர்களிடம் 7 ஆயிரம் பவுண்ட்ஸ் கடன் பெற்று தனது    வியாபாரத்தை ஆரம்பத்திருந்த இவரிடம் தற்போது 12 பேர் வேலை செய்கின்றனர்.

காது கேளாத இவரது தாய் மற்றும் தந்தையும்    தங்களது மகன் குறித்து பெருமைப்படுகின்றனர். பொருளாதாரம் மற்றும் கணக்கு பாடம் பயில ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு இடம் வழங்க முடிவு செய்துள்ளது.  எனினும்  அதில் சேர்ந்து படிப்பது குறித்து அவர் முடிவு செய்யவில்லை எனவும்  தனது வியாபாரத்தை மேலும் வளர்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது இவரது ரியல் எஸ்டேட் நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள பெரிய கம்பெனிகளில் 18-வது இடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/45732

Categories: merge-rss, yarl-world-news

அருட்தந்தை இமானுவெல் சந்திரிக்காவுடன் சந்திப்பு

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 12:01
அருட்தந்தை இமானுவெல் சந்திரிக்காவுடன் சந்திப்பு

 

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் அடிகளார் இன்றைய தினம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான செயலகத்தின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்கவை சந்தித்துள்ளார். 

புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களில் ஒன்றாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேரில் தற்போது கொழும்புக்கு விஜயம் செய்து அங்கு தங்கியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குழந்தைகள் ஊடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி இன ஒற்றுமையை ஏற்படுத்தி நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருடனான இன்றைய சந்திப்பு பயனுள்ளதாக அமைந்திருந்ததாக அருட்தந்தை இமானுவெல் அடிகளார் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

அருட்தந்தை இமானுவெல்  சந்திரிக்காவுடன் சந்திப்பு

இதேவேளை கடந்தவாரம் கொழும்பில் வைத்து ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதும் மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/good-meeting-with-Madam-Chandrika

Categories: merge-rss, yarl-category

குற்றப்புலனாய்வு திணைக்களம் சிவாஜிக்கு அழைப்பு

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 11:57
குற்றப்புலனாய்வு திணைக்களம் சிவாஜிக்கு அழைப்பு
sivaji-lingam.jpg
 

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

கொழும்பு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் தன்னை விசாரணைக்கு அளித்துள்ளதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

 
கொழும்பு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவின் அழிவுகளை தடுக்கும் பிரிவை சேர்ந்தவர்கள் என தொலைபேசி ஊடாக தம்மை அறிமுகப்படுத்தியவர்கள் , பௌத்த மதகுரு ஒருவர் எனக்கு எதிராக முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாகவும் , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டி உள்ளதால் என்னை கொழும்பில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தனர்.
 
அதற்கு நான் எனது உடல் நிலை மோசமாக உள்ளமையினாலும் , கொழும்பு வருவதற்கான வசதிகள் இல்லாமல் இருப்பதாலும் கொழும்புக்கு விசாரணைக்கு வர முடியாது. நீங்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலையோ , வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலையோ அல்லது யாழ்ப்பணத்தில் வேறு எங்காவது விசாரணைக்கு அழைத்தால் வர முடியும் என கூறினேன்.
 
அது தொடர்பில் தாம் பின்னர் கூறுவதாக கூறி அழைப்பை துண்டித்துக்கொண்டார்கள் என தெரிவித்தார்.
 
 
அரசியல் கைதிகளின் உறவினர்கள் – ஜனாதிபதி சந்திப்புக்கு ஏற்பாடு. 
 
அதேவேளை  அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்திக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக ஏற்பாடு செய்து தருவதாக வடமாகாண ஆளுனர் உறுதி அளித்துள்ளதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
வடமாகாண ஆளுனரை சந்தித்து , ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு கோரி இருந்தோம். அவர் அதற்கு தான் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக ஏற்பாடு செய்து தருவதாக கூறி இருந்தார்.
 
அவ்வாறு ஏற்பாடு செய்து தரப்படின் அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் கொழும்பு சென்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கோரிக்கை விடுப்போம். என தெரிவித்தார்.
 
சுபீட்சமான எதிர்காலத்திற்கு பிரார்த்தியுங்கள். 
 
தமிழ் மக்களுக்கு சபீட்சமான எதிர்காலம் அமைய வேண்டும் என இந்த தீபாவளி தினத்தில் இறைவனை வேண்டுமாறு வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
இந்து மக்களினால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அந்நாளில் அரசியல் கைதிகளின் விடுதலை செய்யப்பட வேண்டும் , மீள்குடியேற்றம் பூரணப்படுத்த வேண்டும், காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாக வேண்டும் , தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைத்து , அவர்கள் சுபீட்சமான வாழ்வை வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்குமாறு கேட்டுகொண்டார்.

http://globaltamilnews.net/archives/45736

Categories: merge-rss, yarl-category

தேசிய தமிழ் மொழித்தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வு

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 11:56
தேசிய தமிழ் மொழித்தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வு

02-1-1.jpg

தேசிய தமிழ் மொழித்தின விழாவை முன்னிட்டு நாடாத்தபட்ட போட்;டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வு இந்து கல்லூரி மைதானத்தில் அமைக்கபட்ட விஷேட கலையரங்கில் நடைபெற்றது.  கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வளாகத்;தில் 14.15 ஆகிய இரண்டு நாட்களாக  இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது இதில் இரண்டாம் (15) நாள் இரண்டாம் அமர்வில் இந்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

01-1-1-1024x597.jpg

01-2.jpg01-3.jpg01-4-1024x514.jpg02-1-1.jpg02-2.jpg03-1-1-1024x335.jpg03-2-2-1024x330.jpg

http://globaltamilnews.net/archives/45720

Categories: merge-rss, yarl-category

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது.!

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 11:45
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது.!

 

 

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 8 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனுஷ்கோடி - மன்னார் இடையே மீன்பிடியில் ஈடுபட்ட போது இவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர். 

இவர்களின் டோலர் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்துள்ள 8 மீனவர்களையும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/25908

Categories: merge-rss, yarl-category

காணி விடுவிப்பு காலாவதியான கால அவகாசம், சொந்தநிலம் கோரி மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள்.!

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 11:44
காணி விடுவிப்பு காலாவதியான கால அவகாசம், சொந்தநிலம் கோரி மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள்.!

 

 

IMG_1051.JPG

புதுக்குடியிருப்பில் இராணுவ வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி வீதிமறியல் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் இன்று காலை மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் வீதியில் பிரதேச செயலகம் முன்பாக உள்ள 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி 682ஆவது படைப்பிரிவின் முகாமை அமைத்திருந்த நிலையில், தமது சொந்த நிலங்களை தம்மிடம் கையளிக்குமாறுகோரி குறித்த காணிகளின் உரிமையாளர்கள் கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் தொடர்ந்து ஒரு மாதகால போராட்டத்தினை இராணுவ முகாம் முன்பாக முன்னெடுத்திருந்தனர். இதன் பலனாக ஒருதொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டதோடு மேலும் இரண்டு கட்டங்களாக மிகுதி காணிகள்  விடுவிக்கப்படும் என இராணுவத்தரப்பாலும் அரச அதிகாரிகளினாலும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டு கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. அந்த கால அவகாசம் தற்போது  முடிவடைந்த நிலையில் ஏமாற்றமடைந்த மக்கள் தமது காணி விடுவிப்புக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை குறித்த இராணுவ முகாம் முன்பாகவும் வீதியை மறித்தும் புதுக்குடியிருப்பு  பிரதேச செயலக வாயிலை மறித்தும் முன்னெடுத்திருந்தனர். 

IMG_1057.JPG

இந்த நிலையில் மக்களின்  போராட்ட இடத்திற்கு வருகைதந்த புதுக்குடியிருப்பு  பிரதேச செயலாளர் ம.பிரதீபன்  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி  சி.சிவமோகன் ஆகியோர் மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

IMG_1082.JPG

அதனையடுத்து, குறித்த காணிகளில் அமைந்துள்ள 682 ஆவது படை முகாமின் படைத் தளபதி பிரதேச செயலருடன் குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாட பிரதேச செயலகம் சென்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதேச செயலக வாயிலை மறித்து நின்றனர். இதன் காரணமாக தனது வாகனத்தை கொண்டு செல்ல முடியாததால் இறங்கி நடந்து  பிரதேச செயலகம் செல்ல முடியாது என தெரிவித்து. பேச்சு நடாத்த வந்த படைத்தளபதி திரும்பி சென்றார்.

IMG_1088.JPG

இதனை அடுத்து மக்கள் புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் வீதியை மறித்து போராட முற்பட்டதால் சிறிது நேரம் பதட்ட நிலைமை தோன்றியது. இதன்காரணமாக குறித்த வீதியில் சிறிது நேரம் போக்குவரத்தில் தடங்கலும் ஏற்பட்டது. 

தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட  மக்களை பிரதேச செயலகத்திற்குள் அழைத்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது காணி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜரை  பிரதேச செயலாளருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் கையளித்து காணி விடுவிப்பை விரைவு படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

IMG_1150.JPG

இந்த நிலையில், எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள முல்லைத்தீவு  மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இதுதொடர்பில் எடுத்துரைக்கப்படவுள்ளதாகவும் அதன்பின்னர் மக்கள் தமது முடிவினை தெரிவிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் மக்களிடம்  தெரிவித்தார். 

IMG_1144.JPG

இதனையடுத்து, போராட்டத்தை மக்கள் தற்காலிகமாக கைவிடுவதாக கூறினர்.

வழமைபோலவே இன்றும் மக்கள் போராட்டத்தை இராணுவம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததை அவதானிக்க முடிந்தது.

IMG_1158.JPG

 

 

http://www.virakesari.lk/article/25912

Categories: merge-rss, yarl-category

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு 9 புதிய அமைப்பாளர்கள் நியமனம்.!

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 11:44
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு 9 புதிய அமைப்பாளர்கள் நியமனம்.!

 

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அம்பாறை, கொழும்பு, மாத்தறை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான அமைப்பாளர்களே இன்றைய தினம் நியமனம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்திற்கு மாத்திரம் ஐந்து அமைப்பாளளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைப்பாளர்கள்

1. நலீன் குணசேக்கர - கொழும்பு மாவட்டம்

2 மீரா லெப்பை ரெபுபாசம் - அம்பாறை மாவட்டம்

3. நவநீதராஜா             - அம்பாறை மாவட்டம்

4. ஐ.எச். அப்துல் வஹாப் - அம்பாறை மாவட்டம்

5. டீ.ரபாய்தீன் - அம்பாறை மாவட்டம்

6. பிரநீத் பத்மதிலக - மாத்தறை மாவட்டம்

7. எம்.எச்.எம். சகரியா         - இரத்தினபுரி மாவட்டம்

8. ஆரியரத்ன விஜேவிக்ரம (மகா ஓய பிரதேசம்) அம்பாறை மாவட்டம்

9. சுஜீவ கொடலியத்த - மாத்தளை மாவட்டம்

http://www.virakesari.lk/article/25913

Categories: merge-rss, yarl-category

மிரப்பாகயா கோடி

நாவூற வாயூற - Tue, 17/10/2017 - 11:27

(ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன்)

தேவையானவை:

சிக்கன் – 250 கிராம் (துண்டுகளாக நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்)
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் சாஸ் – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

p120e.jpg

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து சிக்கனை வேகவிடவும். சிக்கன் மிருதுவாக வெந்த பிறகு பச்சை மிளகாய் சாஸ், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

FB

Categories: merge-rss

படையினரிடம் சரணடைந்த இவர்கள் எங்கே? - கேள்வி எழுப்புகிறார் பிரான்சிஸ் ஹரிசன்.

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 11:02

இலங்கையில்இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம்,  சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சில புகைப்படங்களை பிரித்தானிய ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன்  வெளியிட்டு, அவர்களுக்கு என்ன ஆனது என கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கையில்இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம், சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சில புகைப்படங்களை பிரித்தானிய ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் வெளியிட்டு, அவர்களுக்கு என்ன ஆனது என கேள்வியெழுப்பியுள்ளார்.

   
அத்துடன், இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதாக குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வரும் நிலையில், இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள், வான் பரப்பில் வெடித்துச் சிதறும் புகைப்படம் ஒன்றையும் பிரான்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார்.
 

surrenders-171017-seithy%20(2).jpg

surrenders-171017-seithy%20(3).jpg

 

surrenders-171017-seithy%20(4).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=192160&category=TamilNews&language=tamil

Categories: merge-rss, yarl-category

வாய்ச்­சொல்­லில் வீர­ரடி!

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 10:07
வாய்ச்­சொல்­லில் வீர­ரடி!
 

நெஞ்­சில் உர­மு­மின்றி, நேர்­மைத் திற­னு­மின்றி வஞ்­சனை சொல்­வா­ரடி, கிளியே, வாய்ச்­சொல்­லில் வீர­ரடி. இது புரட்­சிக் கவி பார­தி­யின் வரி­கள்.

இலங்­கை­யின் 70ஆவது சுதந்­திர தினம் அடுத்த ஆண்டு கொண்­டா­டப்­ப­டும்­போது புதிய அர­ச­மைப்­பின் ஊடாக இனங்­க­ளுக்கு இடை­யில் முழு­மை­யான நல்­லி­ணக்­கத்­தைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யும் என்று நம்­பு­கின்­றோம் எனத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சொல்­லி­யி­ருப்­ப­தைப் பார்க்­கின்­ற­போது பார­தி­யின் இந்த வரி­கள்­தான் ஏனோ ஞாப­கத்­திற்கு வரு­கின்­றன.

தலைமை அமைச்­ச­ரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­ல­மான அலரி மாளி­கை­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற தீபா­வ­ளிப் பண்­டி­கைக் கொண்­டாட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யில் தலைமை அமைச்­சர் இத­னைத் தெரி­வித்­தார்.

அதே நிகழ்­வில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், ‘‘இந்­தத் தீபா­வ­ளிப் பண்­டி­கை­யை­விட அடுத்த ஆண்டு தீபா­வ­ளிப் பண்­டிகை மிக­வும் சிறப்­பான, மகிழ்ச்­சி­யான சூழ­லில் நடை­பெ­றும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே இன்­றைய தேசிய தீபா­வ­ளிப் பண்­டி­கை­யில் கலந்­து­கொள்­கிறேன்’’ என்றார்.

கடந்த ஆண்­டும், இதே­போன்று அலரி மாளி­கை­யில் இடம்­பெற்ற தீபா­வ­ளிப் பண்­டி­கை­யில் உரை­யாற்­றிய சம்­பந்­தர், நல்­லாட்­சி­யில் தமிழ் மக்­க­ளுக்­கான வெளிச்­சம் தென்­ப­டத் தொடங்­கி­யுள்­ளது, அடுத்த ஆண்டு தீபா­வ­ளித் திரு­நா­ளுக்கு முன்­னர் இந்த வெளிச்­சம் நிரந்­த­ர­மா­கி­வி­டும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

கடந்த ஆண்டு நம்­பிக்­கை­யோடு தெரி­விக்­கப்­பட்ட அவ­ரது அந்தக் கருத்து இந்த ஆண்­டில் மேலும் வலுப்­பெற்­றி­ருக்­க­வேண்­டும். ஆனால், யாழ்ப்­பா­ணத்­தில் நடந்த, அரச தலை­வ­ரும் கலந்­து­கொண்ட நிகழ்­வில் கலந்­து­கொள்­ளா­மல் விடு­வ­தன் மூலம் நாட்­டின் தலை­மைக்­குத் தமது அதி­ருப்­தி­யையும் கண்­ட­னத்­தை­யும் தெரி­விக்­க­வேண்­டிய நில­மையே அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

கடந்த ஆண்­டை­விட முன்­னேற்­றம் கண்­டிருக்­க­வேண்­டிய நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­கள், உண்­மை­யில் பின்னடை­வை­யையே சந்­தித்­துள்­ளன.

வடக்­கில் மக்­கள் போராட்­டங்­கள் பல கடந்த 7 மாதங்­க­ளாக நடை­பெற்று வரு­கின்­றன. அரசு மீது தமிழ் மக்­கள் மட்­டு­மல்­லர், சிறு­பான்மை மக்­கள் அனை­வ­ருமே அதி­ருப்­தி­ய­டைந்­தி­ருக்­கின்­ற­னர்.

அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­றுதி­கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அத­னால் நில­மை­கள் இன்­னும் இன்­னும் மோச­ம­டைந்து வரு­கின்­ற­னவே தவிர, மேம்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

முழு அடைப்­பு­க­ளும் போராட்­டங்­க­ளு­மாக வடக்கு அர­சி­யல் களம் இன்­ன­மும் சூடே­றிக்­கொண்டே இருக்­கின்­றது. தீர்­வுக்­கான அடிப்­படை என்று முன்­வைக்­கப்­பட்டுள்ள புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யும்­கூட சிங்­க­ள­வர்­கள் மத்­தி­யி­லும் தமி­ழர்­கள் மத்­தி­யி­லும் ஒரு சாரா­ரி­டத்­தில் கடும் விச­னத்­தையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அத­னைக் கிழித்­தெ­றி­வ­தற்­கும் அவர்­கள் தயா­ராக இருக்­கின்­ற­னர். இன­வா­தத்­தைக் கிளப்­பி­யா­வது புதிய அர­ச­மைப்­பைத் தோற்­க­டிப்­ப­தற்­கும் சில தரப்­பு­கள் தயா­ராக இரு­கக்­கின்­றன.

இவற்­றை­யெல்­லாம் தாண்டி, அர­சில் பங்­கா­ளி­யாக இருக்­கக்­கூ­டிய சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யே­கூட புதிய அர­ச­மைப்­புக்­குப் பல­மான எதிர்ப்­பைக் காட்­டி­யுள்­ளது. ஒற்­றை­யாட்­சியை மாற்­றக்­கூ­டாது, பௌத்த மதத்­துக்­கான முன்­னு­ரி­மையை மாற்ற இட­ம­ளிக்க முடி­யாது என்று போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளது.

மறு­பு­றத்­தில் வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்பு மற்­றும் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்பட்ட அதி­கா­ரங்­களை மீளப்­பெ­ற­மு­டி­யாத பொறி­முறை என்­பவை இல்­லாத புதிய அர­ச­மைப்பு ஒன்­றைத் தாம் ஏற்­கப்­போ­வ­தில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பும் பிடி­வா­த­மாக நிற்­கின்­றது.

இத்­த­கைய நிலை­யில் எதிர்­வ­ரும் பெப்­ர­வரி 4ஆம் திக­திக்கு முன்­பா­கத் தீர்வை அடைய முடி­யும் என்று தலைமை அமைச்­சர் கூறி­யி­ருப்­பது எப்­ப­டிச் சாத்­தி­ய­மா­னது என்­பதை அவர் தெரி­விக்­க­வில்லை.

இந்த மாதம் இடைக்­கால அறிக்கை மீதான விவா­தம் நாடா­ளு­மன்­றத்­தில் இடம்­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இடைக்­கால அறிக்கை மற்­றும் ஏற்­க­னவே வெளி­யான 7 உப குழுக்­க­ளின் அறிக்­கை­க­ளின் மீது விவா­தம் நடத்தி, இணக்­கப்­பாடு ஒன்­றைக் கண்­ட­டைந்த பின்­னர் அதன் அடிப்­ப­டை­யில் ஒரு புதிய அர­ச­மைப்பை வரைந்து அதற்கு நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை நிரூ­பிக்­க­வேண்­டும்.

அது நிறை­வே­றி­ய­தும் அந்­தப் புதிய அர­ச­மைப்பை மக்­க­ளி­டம் எடுத்­துச் சென்று அவர்­க­ளின் அங்­கீ­கா­ரத்­தைப் பெற­வேண்­டும்.

பெப்ரவரி மாதத்­திற்­குள் இவற்­றை­யெல்­லாம் எப்­படி முடிக்­கப்­போ­கி­றார்­கள் என்­கிற வழி­காட்­டல் வரை­ப­டம் ஒன்று வெளி­யி­டப்­ப­டாத நிலை­யில் அவர்­க­ளின் கதை­க­ளைக் கேட்­கும்­போது பார­தி­தான் நினை­வுக்கு வரு­கின்­றான்.

http://newuthayan.com/story/37591.html

Categories: merge-rss, yarl-category

சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த பெண் கைது

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 10:05
சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த பெண் கைது
 
 
சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த பெண் கைது
 
 

சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த இலங்கைப் பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டைத் தயாரித்து கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திலிருந்து ஜேர்மனி செல்வதற்காக கட்டாரில் இறங்கி (ட்ரான்சிட்) மாற்று வழிமூலம் செல்லத் தயாரான நிலையில், சோதனை நடவடிக்கையின் போது போலி கடவுச்சீட்டில் செல்ல முயன்றமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண் முதல் கட்ட விசாரணைகளின் போது உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போது தனக்கு வாய்பேச முடியாது என தெரிவித்துள்ளதாகவும் அவரை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தியதாகவும், சிகிச்சையின் பின்னர் அவருக்கு வாய்பேச முடியும் என மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு சர்ச்சைக்குட்பட்டுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/37847.html

Categories: merge-rss, yarl-category

சு.க.வின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் கடு­மை­யான விரக்தி நிலையில்

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 09:50
சு.க.வின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் கடு­மை­யான விரக்தி நிலையில்
sdsa-d6aa359b78cc7c2d3dab0df64c8c9fb5607cdd2f.jpg

 

(ரொபட் அன்­டனி)

சுதந்­தி­ரக்­கட்­சியில் இருக்­கின்ற பல சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் கடும் அதி­ருப்­தி­யு­டனும் விரக்­தி­யு­ட­னுமே காணப்­ப­டு­கின்­றனர். கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் அமைப்­பாளர் பத­வி­க­ளி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­கின்­றமை என்­னைப்­போன்ற சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு விரக்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது என்று சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உப­த­லை­வரும் இரத்­தி­ன­புரி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார்.  

இவ்­வாறு நிலைமை நீடித்தால் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினால் 2020 ஆம் ஆண்டு ஆட்­சியைப் பிடிக்க முடி­யாது. நாம் கட்­சியை பலப்­ப­டுத்த வேண்­டு­மென்று எண்­ணு­கின்றோம். ஆனால் அது சாத்­தி­ய­மா­காது போன்று தெரி­கின்­றது. விரைவில் இது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்சு நடத்­த­வுள்ளோம் என்றும் ஜோன் சென­வி­ரட்ன சுட்­டிக்­காட்­டினார்.

அண்­மையில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சில அமைப்­பா­ளர்கள் நீக்­கப்­பட்­டமை தொடர்பில் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன கடும் விரக்­தி­யுடன் இருப்­ப­தாக தக­வல்கள் வெளி­வந்­தி­ருந்த நிலையில் அது தொடர்பில் அவ­ரிடம் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உப­த­லை­வரும் இரத்­தி­ன­புரி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜோன் சென­வி­ரட்ன இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்:

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை பலப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­கா­கவே நாங்கள் பல்­வேறு முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை மிக வலு­வான ரீதியில் உரு­வாக்கி 2020 ஆம் ஆண்டு ஆட்­சியை தனித்து அமைக்­க­வேண்டும் என்­பதே எமது நோக்­க­மாக காணப்­ப­டு­கின்­றது.

அந்த நோக்­கத்­திற்­கா­கவே நாங்கள் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். ஆனால் 2020 ஆம் ஆண்டில் தனித்து ஆட்சி அமைக்­க­வேண்டும் என்ற எமது கனவு கன­வா­கவே இருந்து விடும்போல் தெரி­கின்­றது.

அதா­வது சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களும் அமைப்­பா­ளர்­களும் பத­வி­க­ளி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இது கட்­சியை பாரிய அளவில் பல­வீ­னப்­ப­டுத்­துமே தவிர எந்­த­வித்­தத்­திலும் பலப்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை.

அப்­ப­டிப்­பார்க்­கும்­போது 2020 ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கும் எமது நோக்கம் நிறை­வே­றாமல் போய்­விடும். இதன்­கா­ர­ண­மாக நான் கடும் விரக்­தி­யிலும் கவ­லை­யிலும் இருக்­கின்­றேன.

கேள்வி: நீங்கள் மட்டும் விரக்­தியில் இருக்­கின்­றீர்­களா? அல்­லது ?

பதில்: நான் மட்­டு­மல்ல. இன்னும் பலர் விரக்­தி­யு­டனும் அதி­ருப்­தி­யு­டனும் இருக்­கின்­றனர். அதா­வது பல சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் இந்த அமைப்­பா­ளர்கள் பதவி நீக்கம் குறித்து கவ­லை­யு­ட­னேயே இருக்­கின்­றனர்.

கேள்வி: அவ்­வாறு விரக்­தியில் இருக்கம் நீங்கள் அனை­வரும் இணைந்து சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வ­ராக இருக்கும் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தலாம் தானே?

பதில்: கடும் கவ­லையில் இருக்­கின்ற நான் உள்­ளிட்ட சில சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் இந்த விவ­காரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றோம். கட்சியை பலப்படுத்துவதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்த இருக்கின்றோம். இவ்வாறு தொடர்ச்சியாக சிரேஷ்ட அமைப்பாளர்களை கட்சியை விட்டு நீக்கினால் நாம் வெற்றிப்பாதையை நோக்கிப் பயணிக்க முடியாது என்பதை வலியுறுத்தவிருக்கின்றோம் என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-17#page-1

Categories: merge-rss, yarl-category

அரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன?

அரசியல்-அலசல் - Tue, 17/10/2017 - 09:20
அரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன?

 

 

அரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன?

யதீந்திரா
அரசியல் கைதிகளின் விவகாரம் இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதிக்கு வந்திருக்கிறது. அதே போன்று இம்முறையும் வந்திருக்கிறது. வழமைபோல் தமிழ் அரசியல் வாதிகளது உருக்கமான அறிக்கைகளும், நாடாளுமன்ற போச்சுக்களும் முன்ரைப் போன்றே அதன் காரம் குறையாமல் வெளிவந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பான செய்திகளை சக்தி தெலைக்காட்சி காட்சிப்படுத்தியிருந்தது. அதன் போது ஒரு விடுதலையான கைதி இவ்வாறு கூறுகின்றார். நாங்கள் முன்னர் போராடியபோது சம்பந்தன் ஜயா குறுக்கிட்டு எங்களுக்கான தீர்வை பெற்றுத் தருவதாக கூறியிருந்தார். ஒரு வேளை முடியாவிட்டால் நானும் உங்களோடு வந்து போராடுவேன் என்றும் கூறியிருந்தார். ஒன்றில் எங்களுக்கு தீர்வை பெற்றுத் தாருங்கள் அல்லது எங்களோடு வந்து போராடுங்கள் என்று அந்த விடுதலையான கைதி கூறுவ முற்றிலும் நியாயமானது. தமிழ் மக்களை முன்னிறுத்தி சிந்திக்கும் ஒவ்வொரு அரசியல் தலைவரும் அவர்களுடன்தான் வீதியில் நிற்க வேண்டும். உண்மையில் இது தீர்க்க முடியாதவொரு பிரச்சினையா அல்லது இதனை தீர்க்குமளவிற்கு அரசாங்கத்தை இறங்கிவரச் செய்ய முடியாதளவிற்கு சம்பந்தன் பலவீனமாக இருக்கின்றாரா?

அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்களை ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேன சந்தித்திருந்தார். இதன் போது அவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் எந்தளவிற்கு அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அசமந்தப் போக்கை கடைப்பிடித்துவருகிறது என்பதற்கு ஒரு சிறந்த சான்று. ஜனாதிபதி இவ்வாறு கூறியிருக்கின்றார். அதாவது, உங்கள் பிள்கைள், உறவினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்கள் தொடர்பில் உங்களுக்கும் தெரிந்திருந்தால் அதனை என்னிடம் சொல்லுங்கள், நீங்கள் அங்கு சென்று நிலைமைகளை பார்வையிடுவதற்கு நான் ஏற்பாடு செய்து தருகின்றேன். இது என்ன மாதிரியான பதில்? ஒரு நாட்டின் பொறுப்பு வாய்ந்த உயரிய இடத்திலிருக்கும் ஒருவர் எவ்வாறு இப்படிக் கூற முடியும்? ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கே தெரியாத விடயம் எவ்வாறு அந்த சாதாரண ஏழை தாய்மார்களுக்கும் தெரியப்போகிறது? காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை என்பதுதான் உண்மையெனின் அதனையாவது அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கலாம் ஆனால் அதனைச் செய்வதற்கும் அரசாங்கம் தயக்கம் காண்பித்து வருகிறது.

Protest-againgst-Maithri

இந்த இடத்தில் கேள்வி எழுப்ப வேண்டிய சம்பந்தனோ, எதற்காக பொறுமை காக்க வேண்டும் என்று மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாதவாறு, அமைதி காத்து வருகின்றார். அது ஒரு எல்லையற்ற அமைதி. நிதானமாகப் போக வேண்டும், அமைதி காக்க வேண்டும் என்று கூறுவதைத் தவிர சம்பந்தனிடம் கூறுவதற்கு எதுவுமில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தரப்புக்களும் தங்களின் பிரச்சினைக்காக தாங்களே போராட முயல்கின்றன. அதனைத் தவிர அவர்களுக்கு முன்னால் வேறு தெரிவுகள் எதுவுமில்லை. காணிகளை பறிகொடுத்த மக்கள் அதற்காக தெருவில் இறங்கிய பின்னர்தான் அவர்களின் பிரச்சினையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. அதே போன்று அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருந்த போதுதான் அவர்கள் பக்கமாக அனைவரும் திரும்பினர். எனவே இங்கு ஒரு விடயம் வெள்ளிடைமலை அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை நோக்கி மற்றவர்களை திருப்பாதவரையில் இங்கு எதுவுமே நடைபெறப் போவதில்லை. மீட்பர்கள் என்போர் அதுவரை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பர்.

அரசியல் கைதிகளின் விவகாரத்தை பொறுத்தவரையில் ஏன் இந்த அசமந்தப் போக்கு. அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவருகிறது. அவ்வாறாயின் நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைத்திருக்கும் அந்தத் தமிழர்கள் யார்? இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த 11400 போராளிகளுக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தது. அவ்வாறாயின் இந்த 200 – 300 வரையான அரசியல் கைதிகளை விடுவிப்பதில் அப்படியென்ன ஆபத்து வந்துவிடப் போகிறது? தமிழ் அரசியல் தலைவர்களும் மூச்சுப்பிடித்து நாடாளுமன்றத்தில் பேசுகின்றனர் ஆனால் அரசாங்கமோ தொடர்ந்தும் கண்டுகொள்ளாமலேயே இருக்கிறது. அவ்வாறாயின் தமிழர் தலைமை வேறு அணுகுமுறைகளைத்தானே பின்பற்ற வேண்டும்.

Maithiri-jaffna-1

சம்பந்தன் பல்வேறு விடயங்களில் அரசாங்கத்திற்கு விட்டுக் கொடுப்புக்களை செய்து வருகின்றார் ஆனால் அரசாங்கமோ தமிழ் மக்கள் தொடர்பில் எந்தவொரு விட்டுக் கொடுப்பையும் செய்யவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களாக வீதிக்கு வருகின்ற போது மட்டும்தான் அவர்களின் கோரிக்கைகளில் சிலவற்றையாவது ஏற்றுக் கொள்கின்றது. காணி விடுவிப்பிலிருந்து அரசியல் கைதிகள் விவகாரம் வரையில் இதுதான் நிலைமை. இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகளை மீட்பதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்தபின்னர்தான், சம்பந்தன் அது தொடர்பில் அரசாங்கத்துடன் விசேட பேச்சுவார்த்தைகளுக்கு சென்றிருந்தார். உண்மையில் அதனை முன்னரே செய்திருக்கலாம்.

கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி ஒரு பிரத்தியேக குழுவை நியமிக்கலாம். வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் மேற்படி விசேட குழு குறிப்பிட்ட அமைச்சர்களோடு, அதிகாரிகளோடு உத்தியோக பூர்வ பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளலாம். அரசாங்கம் இந்த விடயத்தில் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குகின்றது என்பதைக் கொண்டு, நல்லிணக்கத்தின் மீதான அரசாங்கத்தின் அசமந்தப் போக்கை அம்பலப்படுத்தலாம். ஆனால் சம்பந்தனோ இந்த விடயங்களில் போதிய கவனத்தை செலுத்தவில்லை. சம்பந்தனைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு விடயத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருக்கிறார். சம்பந்தன் அவ்வாறு செயற்படுவது தவறான ஒன்றல்ல. ஆனால் அரசியல் தீர்வு முயற்சிகளில் ஈடுபடுகின்ற அதே வேளை மக்களின் அன்றாட பிரச்சினைகளை கவனிக்க வேண்டியதும் அரசியல் வாதிகளின் கடமைதான்.

அரசியல் தீர்வு விடயங்களில் ஈடுபடுகின்ற அதே வேளை மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாட பரச்சினைகள் தொடர்பில் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் ஒரு செயற்பாட்டையும் முன்னெடுக்கலாம். கூட்டமைப்பு ஒரு தேசிய இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பிரதான அரசியல் கூட்டு என்னும் வகையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மாதாந்த இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். இந்த பிரச்சினைகளின் தார்ப்பரியத்தை அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். இதன் மூலமும் அரசாங்கத்திற்கு உள்ளுக்குள்ளேயே ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அது தொடர்பிலும் எவரும் சிந்திக்கவில்லை. சம்பந்தன் இதனை செய்ய மறுக்கின்ற போது, அவருக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து இவ்வாறான ராஜதந்திர சந்திப்புக்களை ஏற்படுத்தலாம்.

my3-1-1

ஒரு விடயம் மட்டும் உண்மை. அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுக்காமல் எதனையுமே சாதிக்க முடியாது. இது பற்றி பேசினால் அரசாங்கம் சங்கடத்திற்குள்ளாகிவிடும், சிங்கள மக்கள் கோபித்துவிடுவார்கள் என்று நினைப்பவர்கள் தமிழ் மக்களின் அரசியலுக்கு தலைமை தாங்கினால், இ;ந்த நிலைமை இப்படியே தொடரும். இதில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அந்த வகையில் நோக்கினால் இன்று மேற்கொள்ளப்படும் அரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்னவென்றால், விட்டுக் கொடுத்துச் செல்லும் மனநிலையிலிருந்து சம்பந்தன் தரப்பினர் முதலில் வெளியில் வரவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைகளை உரிமையுடன் எதிர்கொள்ள முடியும். இன்று அரசியல்யாப்பு விவகாரத்தில் நடப்பதும் இதுவேதான். உண்மையில் இந்த வழிகாட்டல் குழுவில் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றியிருக்கக் கூடாது. முதலில் நீங்கள் பேசி ஒரு வரைபை வெளியிடுங்கள் பின்னர் அதனை முன்னிறுத்தி நாங்கள் பேசுவோம் என்னும் நிலைப்பாட்டை எடுத்திருந்தால் இன்று பத்தோடு பதினொன்றாhக இடம்பெற்றிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. ஒவ்வொரு விடயங்களும் அரசாங்கத்தின் விரும்பிலிருந்தே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகத்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை என்று ஒவ்வொன்றிலும் அரசாங்கத்துடன் மோத முடியாமல் இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே அரசாங்கத்தின் விருப்பிற்கு பின்னால் இழுபட்டுச் சென்றதால் தமிழ் மக்களுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சினைகளின் போதும் அரசாங்கத்தின் விருப்பமே முதன்மையாக இருக்கிறது. மோத வேண்டிய தமிழர் தலைமையோ இழுபட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்றில் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் அல்லது தீர்க்க முடியாத இடத்தில் பிரச்சினைகளோடு நிற்க வேண்டும். அரசியல் தலைவர்கள் என்போர் பிரச்சினைகளோடு நிற்றல் என்பதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்பான ஒரு வழிதான்.

http://www.samakalam.com

Categories: merge-rss

எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் மூளலாம்: ஐ.நா-வில் கறுவிய வடகொரியா

எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் மூளலாம்: ஐ.நா-வில் கறுவிய வடகொரியா
 

ஐக்கிய நாடுகள் சபைக்கான வடகொரியாவின் துணைத் தூதர் கிம் இன் யாங், 'எந்தக் கணத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம்' என்று எச்சரிக்கும் தொனியில் தெரிவித்துள்ளார்.

Kim In-ryong

 

 மேலும், '1970-களுக்குப் பிறகு அமெரிக்காவால் மிகத் தீவிரமான அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நாடு, வடகொரியா மட்டும்தான். ஆகையால், தற்காப்புக்காக அணு ஆயுதங்களை உருவாக்கிக்கொள்ள வடகொரியாவுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. கொரிய தீபகற்பத்தில் பிரச்னை மிகவும் தீவிரமாக இருக்கிறது. எந்தக் கணத்தில் வேண்டுமானாலும்  அணு ஆயுதப் போர் மூள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது' என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் தெரிவித்துள்ளார்.

 

 'அணு ஆயுதப் போருக்கு வாய்ப்பு இருக்கிறது' என்று ஐ.நா சபையிலேயே இப்படி மிக நேரடியாக வடகொரியா பேசியிருப்பது  உலகம் முழுவதிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுநாள் வரை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையில் வார்த்தைப் போரும், இரு நாடுகளுக்கிடையில் பனிப்போரும் நிலவிவந்தது. அதற்கே உலகத் தலைவர்கள் மிகுந்த கவலைகொண்டிருந்தனர். இப்போது, வடகொரியா தரப்பிலிருந்து 'எந்தக் கணத்திலும் அணு ஆயுதப் போர்' தொடங்கலாம் என்று கூறியிருப்பது நல்ல செய்தியாக இல்லை. 

http://www.vikatan.com/news/world/105220-nuclear-war-may-break-out-at-any-moment-warns-north-korea.html

Categories: merge-rss, yarl-world-news

தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதவரளிக்கப் போவதில்லை – சுமந்திரன்

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 09:08
தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதவரளிக்கப் போவதில்லை – சுமந்திரன்

sumanthiran.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாகாணசபைகளுக்கு நிதி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தில் மாகாணசபைகளுக்கு நிதி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதவரளிக்கப் போவதில்லை என சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/45661

Categories: merge-rss, yarl-category

ஓமந்தை பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 20 பேர் கைது.!

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 09:02
ஓமந்தை பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 20 பேர் கைது.!

 

 

ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில் பாடசாலைக்கு அருகே காணப்படும் அபிராபி விலாஸ் உணவகத்திற்கு முன்பாக கடந்த (13.10.2017) அன்று நண்பகல் புதிய சின்னகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கும் நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி வாள் வெட்டுச் சம்பவத்தில் முடிவடைந்தது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சின்ன புதுக்குளம் பகுதியை சேர்ந்த 15 நபர்களையும் நொச்சிமோட்டையை சேர்ந்த 5 நபர்களையும் ஓமந்தை பொலிஸார் (15.10.2017) கைது செய்து நேற்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய சமயத்தில் குறித்த 20 நபர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ் இரு கிராமத்திற்கிடையில் ஜாதியின் காரணமாக தான் சண்டைகள் அதிகரித்து காணப்படுவதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/25902

Categories: merge-rss, yarl-category

வடமராட்சியின் சில பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள்

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 07:13
வடமராட்சியின் சில பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள்
 

அதிகரித்துள்ள குற்றச் செயல்களைத் தடுக்கும் பெருட்டு வடமராட்சியின் சில பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அச்சுவேலி மற்றும் வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பயணங்களின்போது சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://newuthayan.com/story/37723.html

Categories: merge-rss, yarl-category

ஜனா­தி­பதி, பிர­தமர் வவு­னி­யா­ விஜயம்

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 07:10
ஜனா­தி­பதி, பிர­தமர் வவு­னி­யா­ விஜயம்

 

 

ஜனா­தி­ப­தியின் தேசிய வேலைத்­திட்­டத்தின் கீழ் வவு­னியா சைவப்­பி­ர­காச மகளிர் கல்­லூ­ரியில்  நடை­பெறும் நட­மாடும் சேவையில் பங்­குபற்­று­வ­தற்­காக ஜனா­தி­பதி மற்­றும் பிர­தமர் எதிர்­வரும் 21 ஆம் திகதி வவு­னி­யா­வுக்கு விஜயம் செய்ய­வுள்­ளனர்.

தேசிய வேலைத்­திட்­டத்தின் கீழ் ஜனா­தி­பதி நட­மாடும் சேவை இவ் ஆண்டு மூன்று இடங்­களில் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன் அடிப்­ப­டையில் முத­லா­வது ஜனா­தி­பதி நட­மாடும் சேவை பொல­ன­று­வை­யிலும், இரண்­டா­வது நட­மாடும் சேவை காலி­யிலும் நடை­பெற்ற நிலையில் மூன்­றா­வதும் இவ்­வாண்டின் இறு­தி­யு­மான நட­மாடும் சேவை எதிர்­வரும் 21 ஆம் திகதி வவு­னி­யாவில் இடம்­பெ­ற­வுள்­ளது. 

இந் நட­மாடும் சேவையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர குண­வர்த்­தன உள்­ளிட்ட பல அமைச்­சர்­கள் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், வடக்கு மாகாண அமைச்­சர்கள் மற்றும் வட­மா­காண சபை உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட பலரும் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

இதன்­போது வன்னிப் பகு­தியில் வசிக்கும் 5,000 மக்­க­ளுக்கு காணி உறு­திப்­பத்­தி­ரங்கள்  வழங்­கப்­ப­ட­வுள்­ள­துடன், திவி­நெ­கும திட்­டத்தின் கீழ் ஆயிரம் பேருக்கு வாழ்­வா­தார உத­வியும், இளை­ஞர்­களின் தொழில் முயற்­சிக்­காக ஆயிரம் பேருக்­கான உதவித் திட்­டங்­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

அத்­துடன் இந் நட­மாடும் சேவையில் அடை­யாளஅட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனு­ம­திப்­பத்­திரம், காணி  உறு­திப்­பத்­திரம், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.            

http://www.virakesari.lk/article/25890

Categories: merge-rss, yarl-category

என்னை பகடைக்காயாக பயன்படுத்தி தேர்தலை பிற்போட அரசு முயற்சிக்கவில்லை

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 07:02
என்னை பகடைக்காயாக பயன்படுத்தி தேர்தலை பிற்போட அரசு முயற்சிக்கவில்லை
p21-ab2726b199eac81ae0812edbf700c67d7e8e5afb.jpg

 

நுவரெலியா,அம்பகமுவை எல்லை நிர்ணயம் குறித்து இன்று பேச்சு; அதன் பின் வர்த்தமானி அறிவித்தல் என்கிறார் அமைச்சர் மனோ
(ஆர்.யசி)

நுவ­ரெ­லியா, அம்­ப­க­முவை பிர­தே­ச­ச­பை­களின் எல்­லை­ நிர்­ணயம் தொடர்பில் இன்று மாகா­ண ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுடன் பேச்­சு­வா­ர்த்தை நடத்தவுள்ளோம். இதற்கு தீர்வு கண்­ட­பின்னர் மாந­கர, நகர மற்  

றும் பிர­தே­ச­சபை திருத்த சட்­ட­ம் தொடர்பான வர்த்­த­மானி அறி­வித்­தல் வெளியிடப்படும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

என்னை பக­டைக்­கா­யாக பயன்ப­டுத்தி தேர்­தலை பிற்­போட அர­சாங்கம் முயற்­சிக்­க­வில்லை, என்னை எவரும்

பக­டைக்­கா­யாக பயன்­ப­டுத்த முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

மலை­நாட்டு புதிய

 கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறி­ய­தா­னது.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பலர் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். ஆனால் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் நடக்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை. நான் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வரின் வேலை­யினை செய்­ய­வில்லை. எனது அறி­வுக்கு எட்­டி­யதை நான் கூறு­கின்றேன். ஆனால் பஸில் ராஜபக் ஷ என்­னையும் தொடர்பு படுத்து சில கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார். என்னை பக­டைக்­கா­யாக பயன்­ப­டுத்தி உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை தள்­ளிப்­போட அர­சாங்கம் முயற்­சித்து வரு­வ­தாக கூறி­யுள்ளார்.

என்னை யாரும் பக­டைக்­கா­யாக பயன்­ப­டுத்த முடி­யாது, அதற்­கான இடம் கொடுக்­கவும் மாட்டேன். இன்று எம்மை விமர்­சிக்கும் பஸில் ராஜபக் ஷவின் அன்­றைய மோச­மான செயற்­பா­டு­களே தேர்தல் இவ்­வ­ளவு குள­று­ப­டிக்குள் தள்­ளப்­பட கார­ண­மாகும். அன்று இவர்­களின் எல்லை நிர்­ணய திட்­டமே அனைத்துக் குழப்­பங்­க­ளுக்கும் கார­ண­மாகும். தமது கட்­சிக்கு தேவை­யான வகையில் எல்லை நிர்­ண­யத்தை செய்­த­வர்கள் இன்று எம்மை விமர்­சிக்­கின்­றனர். அவர்­க­ளுக்கு எவ்­வாறு அர­சியல் செய்ய வேண்­டுமோ அவ்­வாறு எல்லை நிர்­ண­யத்தை செய்­து­கொண்­டனர். அதன் விளைவே நாடு மோச­மான நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது.

மேலும் மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி சபை தேர்தல் குறித்து அமைச்சர் சில தினங்­க­ளுக்கு முன்னர் உரிய சட்­ட­மூ­லத்­தினை தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரிடம் கைய­ளித்­துள்ளார். விரைவில் வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு விடப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.அர­சாங்­க­மாக எடுக்கும் இந்த தீர்­மா­னங்­களை நாம் வர­வேற்­கின்றோம். ஆனால் மறு­புறம் அர­சாங்கம் எமக்கு கொடுத்த வாக்­கு­று­தி­க­ளையும் நாம் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றோம்.

இந்த நாட்டின் மிகப்­பெ­ரிய பிர­தேச சபைகள் இரண்டு உள்­ளன. நுவ­ரெ­லியா மற்றும் அம்­ப­க­முவ பிர­தேச சபைகள்­ அவையாகும். அம்­ப­க­முவ பிர­தேச சபையில் மக்கள் தொகை இரண்டு இலட்­சத்து இரு­பத்­தை­யா­யிரம் ஆகும். நுவ­ரெ­லியா பிர­தே­சச பையில் இரண்டு இலட்­சத்து ஐம்­ப­தா­யிரம் மக்கள் வாழ்­கின்­றனர். ஏனைய பிர­தேச சபை­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இவை இரண்டும் மிகவும் மோச­மான வகையில் கையா­ளப்­பட்­டுள்­ளது. இதனை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என நாம் தொடர்ச்­சி­யாக கூறி­வந்­துள்ளோம். எமது கோரிக்­கை­யினை ஏற்­றுக்­கொண்டு தீர்வை தரு­வ­தாக கூறி­யுள்­ளனர்.

இந்த விவ­காரம் தொடர்பில் நாம் உரிய அமைச்­ச­ருடன் பேசி­யி­ருந்தோம். நாளை (இன்று) எம்­முடன் கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை நடத்­த­வுள்ளார். நுவ­ரெ­லியா மற்றும் அம்­ப­க­முவ பிர­தேச சபைகள் குறித்து சரி­யாக எல்லை நிர்­ணயம் செய்­து­கொள்ள வேண்­டி­யுள்­ளது. அவை விரைவில் நடத்­தப்­படும். பிர­தேச சபைகள் குறித்து திட்டம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எவ்­வாறு பிரிக்­கப்­ப­டு­வது என்­பது தீர்­மா­னித்­துள்ளோம். நாளை(இன்று) இந்த விட­யங்கள் தொடர்பில் உறிய நபர்கள் அனை­வ­ரையும் வர­வ­ழைத்து கலந்­து­ரை­யா­டு­கின்றோம்.

தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் வேண்­டு­கோளின் பேரில் இந்த கலந்­து­ரை­யாடல் இடம்­பெ­று­கின்­றது. அதன் பின்னர் ஒரு தீர்வை பெற்­றுக்­கொண்டு வர்த்­த­மானி அறி­வித்­தல் வெளியிடப்படும். நாளை (இன்று) வெளியிடவிருந்த வர்த்­த­மானி அறி­வித்தல் மேலும் சில தினங்கள் காலதாமதமாகும். அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் 20 ஆம் திகதி நடத்­தப்படவுள்ள தேர்தல் சில தினங்கள் தள்­ளிப்போகும். அந்த மாற்றம் மட்­டுமே இடம்­பெறும் மாறாக தேர்தல் நடத்­த­ப­டாது ஏமாற்­றப்­போ­வ­தில்லை.

என்னை பக­டைக்­கா­யாக பயன்­ப­டுத்­து­வ­தாக பஸில் ராஜபக் ஷ கூறு­வதை ஒரு­போதும் நான் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. அவர்கள் எவ்­வாறு மாகா­ண­ச­பை­களை பயன்­ப­டுத்­தினர், சில அர­சி­யல்­வா­திகள் எவ்­வாறு இவர்­களால் பயன்­ப­டுத்­தப்­பட்­டனர் என்­பது எமக்குத் தெரியும். இது­வரை காலம் எவ­ரதும் கண்­களில் படாத தவ­றொன்று எமது கண்­களில் பட்­டுள்­ளது. எமது மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வு வேண்டும் என கேட்­டுக்­கொண்டு நாளை (இன்று) பேச்­சு­வார்த்­தைக்கு செல்­கின்றோம்.

இதில் இறுதி வடி­வத்தை கண்­ட­பின்னர் வர்த்­த­மானி அறி­வித்­த­லை வெளியிடுமாறு வலி­யு­றுத்­தி­யுள்ளோம். ஆகவே இதனை தவிர வேறு எந்த மாற்றங்களும் இடம்பெறப்போவதில்லை. சில தினங்கள் மாத்திரமே தேர்தல் தாமதமாகும் ஆனால் எமது மக்களுக்கு தீர்வு கிடைக்கும். நாம் மாகாணசபை அதிகாரங்களுக்காக பொலிஸ், இடம் அதிகாரங்கள் கேட்கவில்லை, நாம் எமது மக்கள் இலகுவாக வாழக்கூடிய வகையில் எல்லை நிர்ணய முறைமையினை சரியாக செய்துகொள்ளவேண்டிய தேவை உள்ளது. நுவரெலியாவில் இப்போது உள்ள ஐந்து பிரதேச சபைகளை பன்னிரண்டு பிரதேச சபைகளாக மாற்றியமைக்க வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-17#page-1

Categories: merge-rss, yarl-category