merge-rss

எமக்­கு­ரிய பணி­க­ளி­லி­ருந்து விலகி முரண்­பா­டா­கவே செயற்­ப­டு­கி­றோம் இந்­தியா சென்­று­ தி­ரும்­பிய உறுப்­பி­னர் கூறு­கிறார்

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 19:19
எமக்­கு­ரிய பணி­க­ளி­லி­ருந்து விலகி முரண்­பா­டா­கவே செயற்­ப­டு­கி­றோம் இந்­தியா சென்­று­ தி­ரும்­பிய உறுப்­பி­னர் கூறு­கிறார்
 

வடக்கு மாகாண சபைக்­கான பணி­யி­லி­ருந்து நாம் விலகி முரண்­பா­டான செயற்­ப­பா­டு­க­ளி­லேயே நாம் ஈடு­பட்டு வரு­கின்­றோம் என்­பதை உண­ரக்­கூ­டி­ய­தாக உள்­ளது என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஒருவர் தெரி­வித்தார்.

கருத்­த­மர்வு ஒன்­றுக்­காக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் 18 பேர் அண்­மை­யில் இந்­தி­யா­வுக்­குச் சென்று திரும்­பி­னர். அங்கு இடம்­பெற்ற பயிற்­சிப்­பட்­டறை தொடர்­பில் கருத்­துக் கேட்­ட­போது இவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைத்­தார்.

அவர்­கள் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகாண சபை­யின் ஊடாக நாம் செய்ய வேண்­டிய பணி­க­ளில் இருந்து விலகி பல முர­ணான செயற்­பா­டு­க­ளையே செய்து வரு­கின்­றோம் என்­பதை பயிற்­சி­யில் கலந்து கொண்ட பின்­னர் உணர முடிந்­தது.

அதி­லும் நாம் நிர்­வாக ரீதி­யி­லும் அர­சி­யல் ரீதி­யி­லும் பல முர­ணான செயற்­பா­டு­க­ளைச் செய்து வரு­கின்­றோம். வெளிப்­ப­டை­யாகக் கூறவேண்­டு ­மா­னால் நாம் நேர்­மா­றாக பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம். மாகாண சபையை விமர்­சிப்­ப­தற்­கான பணி­க­ளையே செய்து வந்­துள்­ளோம்.

எமக்­கான பயிற்­சிப்­பட்­ட­றை­யில் உள்­ளு­ராட்சி சார்ந்த விட­யம், உல­க­ளா­வி­ய­ரீ­தி­யான எமது அர­சி­யல் பய­ணம், வரவு செல­வுத் திட்­டம் தொடர்­பான விளக்­கங்­கள், கலந்­து­ரை­யா­டல்­கள் இடம்­பெற்­றன. இதில் உள்­ளு­ராட்சி விட­யத்­தில் இந்­தி­யா­வை­விட நாம் ஓர­ளவு முன்­னேற்­றத்­தைக் கண்­டுள்­ளோம் என்­பதை நாங்­கள் உணர்ந்து கொண்­டோம்.

இதனை அங்கு விளக்­க­ம­ளித்த பேரா­சி­ரி­யர்­க­ளும் ஏற்­றுக்­கொண்­ட­னர்.
உல­க­ளா­விய ரீதி­யில் எமது அர­சி­யல் பய­ணம் மற்­றும் எமது போராட்­டங்­கள் தொடர்­பில் பன்­னாட்டு அனு­ப­வங்­களை மைய­மாக வைத்து எமக்கு விளக்­கங்­கள் வழங்­கப்­பட்­டன.

அதில் எமது போராட்­ட­மும் அங்­கோலா நாட்­டின் போராட்­ட­மும் ஒரே மாதி­ரி­யா­னவை என்­பதை எடுத்­துக் கூறி­னார்­கள்.

இந்த இரண்டு நாட்­டின் போராட்­டங்­க­ளும் தோற்­ற­மைக்­கான கார­ணங்­கள் நாம் இனி எவ்­வா­றான அர­சி­யல் பய­ணத்தை மேற்­கொள்ளவேண்­டும் என்ற கருத்­துக்­க­ளை­யும் அவர்­கள் வழங்­கி­னார்­கள்.

எமக்­கான இந்தப் பயிற்­சிப்­பட்­ட­றை­யில் இருந்து எமது மாகா­ணத்­தின் உள்­ளு­ராட்­சி­யின் செயற்­பாடு ஓர­ளவு திருப்­தி­யாக இருந்­தா­லும் நாம் எமக்­கான செயற்­பா­டு­க­ளில் இருந்து வழி­மாறி முர­ணான பாதை­யி­லேயே பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம் என்­பதை உண­ர­மு­டி­கி­றது -– என்­ற­ார்.

http://newuthayan.com/story/37882.html

Categories: merge-rss, yarl-category

மக்களிடம் செல்வாக்கை இழந்து வருவதாக சம்பந்தன் கவலை-சபையில் மனம் திறந்து பேசினார்

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 19:06
மக்களிடம் செல்வாக்கை இழந்து வருவதாக சம்பந்தன் கவலை-சபையில் மனம் திறந்து பேசினார்
 

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் அடிப்படை உரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றை எடுத்து விடுதலை, செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் குறித்து சர்வதேச பிரமானங்களுக்கு அமைவாக பல்வேறு காரணங்களை உதாரணம் காண்பித்து உரையாற்றிய சம்பந்தன் அரசாங்கத்தின் மீது காரசாரமான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

மூன்று அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரம் இருக்கின்றமை தொடர்பாக பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றும் போது சம்பந்தன் இவ்வாறு கூறினார். இனப்பிரச்சினை தீர்வில் அரசாங்கம் தீவிரமான அக்கறை செலுத்த தவறுகின்றமையினால் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருவதாகவும் சம்பந்தன் கவலை வெளியிட்டதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லையென அரசாங்கம் கூறமுடியாது என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையில், பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்படும் என 2015ஆம் ஆண்டு அரசாங்கம்  உறுதியளித்திருந்தது.

ஆகவே அந்த வாக்குறுதிக்கு அமைவாக அச்சட்டம் நீக்கப்பட்டு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையிலான புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என சம்பந்தன் அறிவுறுத்தியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்ட காலத்தில் தன்டனை வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் இன்று விடுதலை பெற்றிருப்பர். 

ஆனால் அவ்வாறு உரிய காலத்தில் தன்டனை வழங்கப்படாததால், அவர்கள் இன்று தன்டனைக்காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் அரசியல் காரணங்களுக்காக சில செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் தேசிய இனப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்கியிருந்தால், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/politics/TNA-lost-influence-among-the-people

Categories: merge-rss, yarl-category

கும்ப்ளே இந்திய அணியின் பௌலர் மட்டும்தானா?: பி.சி.சி.ஐ-க்கு எதிராகக் கொந்தளித்த நெட்டிசன்கள்

கும்ப்ளே இந்திய அணியின் பௌலர் மட்டும்தானா?: பி.சி.சி.ஐ-க்கு எதிராகக் கொந்தளித்த நெட்டிசன்கள்
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே இன்று, தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 

kumble_16270.jpg

 

Photo: BCCI

இதையடுத்து சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் போனிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், அரசியல், திரையுலகப் பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கும்ப்ளேவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கும்ப்ளே, இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தவர். ஓய்வுக்குப் பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றினார். ஜம்போ என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் அனில் கும்ப்ளேவின் பயிற்சிக் காலத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக 5 டெஸ்ட் தொடர்களை வென்றதுடன், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. 

 

kumble_BCCI_16582.jpg

கும்ப்ளேவின் பிறந்தநாளுக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய அணியின் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட அனில் கும்ப்ளேவுக்கு பிசிசிஐ ட்விட்டர் மூலம் விடுத்த வாழ்த்துச் செய்தியில், ‘இந்திய அணியின் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளேவுக்கு வாழ்த்துகள்’ என்று பதிவிடப்பட்டிருந்தது. பிசிசிஐ-யின் இந்தப் பதிவு ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு லெஜெண்டுக்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள், அவர் இந்திய அணியின் பந்துவீச்சாளர் மட்டுமல்ல என பிசிசிஐக்கு எதிராக ட்விட்டரில் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதையடுத்து அந்த ட்விட்டர் பதிவை டெலிட் செய்த பிசிசிஐ, ’இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளேவுக்கு வாழ்த்துகள் என்று புதிய பதிவை இட்டது. கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே கும்ப்ளே, பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் என்றும், ரவி சாஸ்திரியை அந்தப் பதவிக்குக் கொண்டுவரவே கோலி அவ்வாறு நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், கும்ப்ளேவுக்கு வாழ்த்துகூறி புதிய சர்ச்சையில் பிசிசிஐ நிர்வாகம் சிக்கியுள்ளது. 

http://www.vikatan.com/news/sports/105242-bcci-faces-backlash-over-tweet-on-anil-kumbles-birthday.html

Categories: merge-rss

சக்தி டிவி செய்திகள் 8PM (17-10-2017)

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 18:34

சக்தி டிவி செய்திகள்  8PM (17-10-2017)

Categories: merge-rss, yarl-category

யாழ்ப்­பா­ணத்­தில் 5,000, வடக்­கில் 7,000 பேர் டெங்­குத் தொற்­றி­னால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 18:17
யாழ்ப்­பா­ணத்­தில் 5,000, வடக்­கில் 7,000 பேர் டெங்­குத் தொற்­றி­னால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் இந்­த­ மா­தம் இது அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் எச்­ச­ரிக்கை
 
 
 

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்த வரு­டம் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் 4 ஆயி­ரத்து 999 பேர் டெங்கு நோய்த் தாக்­கத்­துக்கு ஆளா­கி­யுள்­ள­னர்.

4 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். என்று மாவட்ட சுகா­தா­ரத் திணைக்­க­ளம் தெரி­வித்­தது. வடக்கு மாகா­ணத்­தில் இந்த வரு­டம் இது­வரை 7 ஆயி­ரத்து 8 பேர் டெங்கு தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர் என்று மாகா­ணத் திணைக்­க­ளம் தெரி­வித்­தது.

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் இயங்­கும் 14 பிராந்­திய சுகா­தார வைத்­திய அதி­கா­ரி­கள் பணி­ம­னை­கள் பிரி­வின் கீழ் இந்த எண்­ணிக்கை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

டெங்­குத் தொற்று ஏற்­பட்­ட­வர்­கள் உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லையை நாட­வேண்­டும். அவ்­வாறு செல்­லத் தாம­தம் ஏற்­பட்­ட­தன் விளை­வா­கவே இந்த வரு­டம் 4 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

டெங்­குக் காய்ச்­ச­லைப் பரப்­பும் நுளம்பு இனங்­கள் கடந்த இரு மாதங்­க­ளா­கச் சற்­றுக் குறை­வ­டைந்­தி­ருந்­த­போ­தும் இந்­த ­மா­தத்­தில் மழை கார­ண­மாக மீண்­டும் டெங்கு பர­வும் வேகம் அதி­க­ரித்­துள்­ளது.

இதன் அடிப்­ப­டை­யில் இந்த மாதத்­தின் முதல் 15 நாள்­க­ளில் மட்­டும் 259 பேர் டெங்­குத் தொற்­றுக்கு இலக்­கா­கி­யுள்­ள­னர்.

வடக்­கில் ஏனைய மாவட்­டங்­க­ளை­விட யாழ்ப்­பா­ணத்­தில் டெங்கு பர­வல் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கிறது. கிளிநொச் சியில் 444 பேரும், மன்­னா­ரில் 508 பேரும், வவு­னி­யா­வில் 761 பேரும், முல்­லைத்­தீ­வில் 296 பேரும் டெங்­குத் தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர் என்று மாகாண சுகா­தார அமைச்­சின் புள்­ளி­ வி­வ­ரங்­கள் கூறு­கின்­றன.

இதே­வேளை, டெங்கு தொற்று தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளும் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

இதற்­கென மேல­தி­க­மாக ஆள­ணி­யி­னர் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னர் என்று திணைக்­க­ளத்­தி­னர் தெரி­வித்­த­னர்.

http://newuthayan.com/story/37890.html

Categories: merge-rss, yarl-category

முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை

அரசியல்-அலசல் - Tue, 17/10/2017 - 17:32
முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை
 

யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்பதற்காகத் தமது கருத்துகளை, ஒளித்து வைத்திருப்பது, புத்திசாதுரியமான செயற்பாடு அல்ல; அப்படிச் செய்வது சந்தர்ப்பவாதத்தின் உச்சமமாகும். 

image_933608c831.jpg

ஒரே நேரத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள், நம்மை நயவஞ்சகர்களாக மாற்றி விடக்கூடும். சொல்ல வேண்டிய விடயத்தைச் சொல்ல வேண்டிய தருணத்தில், சொல்லாமல் விடுவதென்பது, நமக்கு நஷ்டத்தையே கொண்டு வரும். 

புதிய அரசமைப்புக்கான செயற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழ் அரசியல் தரப்புகள், தமது சமூகம் சார்பில், தமக்கான தேவைகளை உச்சபட்சம் முன்வைத்துள்ளன. 

இலங்கையானது, மாகாணங்களின் அல்லது மாநிலங்களின் ஒன்றியமாக இருத்தல் வேண்டும். மத்தியும் மாகாணங்களும் தமது தகவுப் பிரதேசங்களில், பூரணமான அதிகாரத்தைப் பிரயோகித்தல் வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு ஒரு மாகாணமாக அல்லது மாநிலமாக அமைதல் வேண்டும் என்று, புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாடுகளை, ‘வெட்டொன்று துண்டு இரண்டாக’ முன்வைத்துள்ளது.  

மறுபுறம் சிங்களத்தரப்பினரும், புதிய அரசமைப்புக்கான தமது நிலைப்பாடுகளை வலியுறுத்தியுள்ளன.  

ஆனால், முஸ்லிம் தரப்பினர், தமது நிலைப்பாடுகளைத் தெளிவாகவும், முறையாகவும் முன்வைப்பதற்குத் தயங்கி வருகின்றமையைக் காணக் கூடியதாக உள்ளது. 

குறிப்பாக, முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ‘சண்டையில், சட்டை கிழிந்து விடக் கூடாது’ என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது. 

சிங்களவர்களுக்கும் அதேவேளை தமிழர்களுக்கும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்பதில் மு.கா காட்டும் ஆர்வத்தை, இடைக்கால அறிக்கைக்கு நல்லதொரு முன்மொழிவைச் சமர்ப்பிப்பதில் காட்டவில்லை என்பது, வெளிப்படையாகவே தெரிகிறது.  

image_8af81018c5.jpg

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சில கட்சிகளுடன் இணைந்தும், தனியாகவும் தமது முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ், ஏனைய கட்சிகளுடன் கூட்டாக மட்டுமே, தனது முன்மொழிவைப் பகிர்ந்துள்ளது.  

இதில் வடக்கு, கிழக்கை தனியொரு மாகாணமாக அரசமைப்பு அங்கிகரித்தலாகாது என்று, தனது தனியான முன்மொழிவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில், எந்தவித அபிப்பிராயங்களையும் இடைக்கால அறிக்கையில், மு.கா வெளிப்படுத்தவில்லை. 

இருந்தபோதும், அரசியலரங்கில் மு.கா தலைவர் ஹக்கீம், இது தொடர்பில் கருத்துகள் தெரிவித்துப் பேசி வருகின்றமையைக் காண முடிகிறது.  

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15), காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், “வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பிலோ, பிரிப்பு தொடர்பிலோ, முஸ்லிம் காங்கிரஸ் எவ்விதத்திலும் அலட்டிக் கொள்ளாது” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, “வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமானால், தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்பட வேண்டுமென்கிற கொள்கையில் இருந்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது” என்றும் அவர் கூறியுள்ளார்.  

ஆயினும், தனி முஸ்லிம் மாகாணம் தொடர்பில், அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், முஸ்லிம் காங்கிரஸ் எந்தவித முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

இன்னொருபுறம், வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுகின்ற முஸ்லிம் காங்கிரஸ், தான் எதிர்பார்க்கும் தனி முஸ்லிம் மாகாணம் எப்படியிருக்க வேண்டும் என்பது தொடர்பாக, ஒரு வரைபடத்தையாயினும் இதுவரையில் வெளியிடவில்லை என்பதும் இங்கு கவனத்துக்குரியது.  

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில், அந்த இயக்கம் அவ்வப்போதிருந்த அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த காலகட்டங்களிலும் முஸ்லிம் அரசியல் தரப்புகள் இப்படித்தான் நடந்து கொண்டன. இனப்பிரச்சினைக்கான தீர்வின் போது, தமிழர்களுக்கு என்ன வழங்க வேண்டும் என்கிற முன்மொழிவை புலிகள் எழுத்தில் வழங்கினார்கள்.

ஆனால், அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளில், மூன்றாம் தரப்பாகத் தாமும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய முஸ்லிம் அரசியல் தரப்பினரிடம், எந்தவிதமான தீர்வுத்திட்ட யோசனைகளும் எழுத்தில் இருக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். 

‘புலிகளுக்குக் கொடுப்பது போல், எங்களுக்கும் தாருங்கள்’ என்கிற மொட்டையான கோரிக்கை மட்டுமே, முஸ்லிம் அரசியல் தரப்பினரிடம் இருந்தது. இது அவமானத்துக்குரிய விடயமாகும்.  

புதிய அரசியல் யாப்புக்கான முன்மொழிவுகள், சமர்ப்பிக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்திலும், முஸ்லிம் அரசியல் தரப்புகளின் நிலைவரம், அப்படித்தான் உள்ளது. 
தனி முஸ்லிம் மாகாணம் கோருகின்றவர்களுக்கே, அதன் ஆழம், அகலம் என்னவென்று தெரியாது என்பதுதான் இங்குள்ள மிகப்பெரும் வேடிக்கையாகும்.  

தனி முஸ்லிம் அலகு என்பதை, முஸ்லிம் காங்கிரஸின் கண்டு பிடிப்பைப் போல், அந்தக் கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால், அது தவறானதாகும். 

முஸ்லிம்களுக்கான தனி அலகு என்கிற சிந்தனைக்குச் சொந்தக்காரர், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஸ்தாபகரும், அரசியல் ஆய்வாளருமான அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.ஐ.எம். முகைதீன் ஆவார். அவரிடமிருந்து முஸ்லிம் காங்கிரஸ் இந்தச் சிந்தனையைப் பெற்றெடுத்தது. மு.காவின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீன், இது தொடர்பில் ஆழமாகப் பேசியும் எழுதியும் வந்துள்ளார். முஸ்லிம் தனி அலகு குறித்து மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பும் தனது முன்மொழிவுகள் குறித்துப் பல இடங்களில் விவரித்துள்ளார்.  

சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம், 1998ஆம் ஆண்டு, மு.கா ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பை நேர்கண்டபோது, முஸ்லிம் அலகு பற்றிய தனது எண்ணத்தை அஷ்ரப் வெளிப்படுத்தியிருந்தார். 

அந்த நேர்காணலின் ஓரிடத்தில், “1995ஆம் ஆண்டு வரை, நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் பற்றித்தான் முஸ்லிம் காங்கிரஸ் பேசி வந்திருந்தது. தீர்வுப்பொதி முன்வைக்கப்பட்ட பின்னர் (சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில்) முஸ்லிம் காங்கிரஸ் நிலத்தொடர்புடைய, ‘தென்கிழக்கு அலகை’ ஏற்றுக் கொண்டது” குறித்தும் அஷ்ரப் விவரித்துள்ளார். 

மேலும், நிலத்தொடர்பற்ற முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியங்களை ஒன்றிணைத்த அலகுக்கு, ‘அகண்ட தென்கிழக்கு’ என்று அவர் பெயர் சூட்டியிருந்தமையும் அந்த நேர்காணலினூடாக நாம் அறிந்து கொள்ள முடியும்.  

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், இறுதியாக ஏற்றுக் கொண்ட தென்கிழக்கு அலகு என்பது, அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில், சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். அதற்கு முன்னதாக தொண்டா - அஷ்ரப் ஒப்பந்தம் மூலம், இணைந்த வடக்கு, கிழக்கு பிராந்திய சபையில், முஸ்லிம்களுக்கென்று ஓர் உப சபையைப் பெற்றுக் கொள்வதற்கும் அஷ்ரப் தயாராக இருந்தார் என்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.  

அவ்வாறாயின், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர், ‘தனி முஸ்லிம் மாகாணம்’ என்ன என்பதை, முஸ்லிம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நூலும் வாலும் இல்லாத ஓர் அறுந்த பட்டத்தை, இதுதான் உங்களுக்கு விதிக்கப்பட்டது என்று கூறி, வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் தலையில் யாரும், எதையும் கட்டி விடலாம் என்று நினைப்பதைக் கூட, ஏற்றுக் கொள்ள முடியாது.  

இன்னொருபுறம், தனி முஸ்லிம் அலகு என்பது அஷ்ரப்பின் கனவு என்றும், அவருடைய தீர்வுத் திட்ட யோசனை எனவும் பேசி வருகின்றவர்கள் யோசிக்கத் தவறிய, வேறொரு பக்கமும் உள்ளது. 

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இணைந்திருந்ததொரு காலகட்டத்தில், வடக்கு, கிழக்கை இனிப் பிரிக்க முடியாது என்கிறதொரு எண்ணப்பாடு இருந்ததொரு சூழ்நிலையில்தான், இணைந்த வடக்கு, கிழக்கில் தனி முஸ்லிம் அலகு பற்றி, அஷ்ரப் பேசினார். 

ஆனால், தற்போது நிலைமை தலைகீழாகவுள்ளது. வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாகியுள்ளன. இந்த இரண்டு மாகாணங்களையும் இணைப்பதற்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றார்கள். 

இவ்வாறானதொரு நிலையில், இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தனி முஸ்லிம் அலகு பற்றிப் பேசுவது, பொருத்தமானதாகத் தெரியவில்லை.  

கர்ப்பத்தில் இருக்கும்போது, பெண் குழந்தையொன்றை எதிர்பார்த்து, அதற்காகப் பெண் குழந்தைகள் அணியும் ஆடைகளையும் நகைகளையும் வாங்கி வைத்திருந்த தாயொருவர், எதிர்பார்ப்புக்கு மாறாக, ஆண் குழந்தையொன்றைப் பிரசவித்து விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அதன் பிறகும், தான் பெண் பிள்ளையை எதிர்பார்த்து வாங்கி வைத்திருந்த ஆடைகளையும், அணிகலன்களையும், பிரசவித்துள்ள ஆண் பிள்ளைக்கு அணிந்துதான் பார்ப்பேன் என்று அடம்பிடிப்பது எப்படி வேடிக்கையானதொரு விடயமாக இருக்குமோ, அதுபோலதான், வடக்கும் கிழக்கும் இனிப் பிரியவே மாட்டாது என்கிறதோர் எண்ணப்பாட்டின்போது முன்வைக்கப்பட்டதொரு தீர்வுத் திட்டமொன்றை, வடக்கும் கிழக்கும் பிரிந்து விட்ட பின்னரும் கூட, முன்வைத்துப் பேசுவது அபத்தமானதாகவே இருக்கும்.  

இன்னொருபுறம், புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், கரையோர மாவட்ட யோசனையை முன்வைக்க முடியாமல் போனவர்கள், தனி முஸ்லிம் மாகாணம் பற்றிப் பேசுவது ஆச்சரியமாகவுள்ளது.    

எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்க்கின்றபோது, ஒவ்வொரு சமூகமும், தமக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காக முட்டி மோதிவரும் தற்போதைய காலகட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் மட்டும், கழுவிய நீரில் நழுவிய மீனாகக் காலம் கடத்தி வருகின்றமையை அனுமதிக்க முடியாது. 

யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், முஸ்லிம் சமூகத்தின் பிரதான அரசியல் கட்சி என்கிற அடையாளம் முஸ்லிம் காங்கிரஸுக்கு உள்ளது. எனவே, முஸ்லிம்களுக்கான தீர்வுத் திட்டங்களை முன்வைக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் நழுவவோ, காலம் கடத்தவோ முடியாது.  

தமிழர்கள் கோபித்து விடுவார்கள் என்பதற்காகவோ, சிங்களவர்களைப் பகைத்து விட நேர்ந்து விடும் என்பதற்காகவோ, தமது சமூகம் சார்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயங்கிவிடக் கூடாது. 

வடக்கையும் கிழக்கையும் இணைப்பதா, இல்லையா? என்பது குறித்து ஒரு தீரமானத்தை முஸ்லிம் காங்கிரஸ் கூற வேண்டும். அதை விடுத்து, வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பிலோ, பிரிப்புக் குறித்தோ நாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்று, முஸ்லிம் சமுதாயத்தின் பிரதான அரசியல் கட்சியொன்றின் தலைவர் கூறுவது ஏற்புடையதாக இல்லை.   

நாட்டில் புதிய அரசமைப்பு மூலம் இனங்களுக்கான தீர்வுத் திட்டங்களை முன்வைக்கும் முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழர்களும் சிங்களவர்களும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் தீவிர செயற்பாடுகளில் இறங்கியுள்ள நிலையில், முஸ்லிம் அரசியல் தரப்பினர், சொற்களை நடனமாட வைத்து, வார்த்தை ஜாலம் புரிந்து கொண்டிருப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது.   

ஆகக்குறைந்தது;  

* வடக்குடன் கிழக்கு இணைவதா? பிரித்தே வைப்பதா?  
* வடக்கு, கிழக்கு இணைவதற்கு நிபந்தனைகளுடன் ஆதரவு என்றால், நிபந்தனைகள் என்ன?  
* இணைந்த வடக்கு, கிழக்கில் தனி முஸ்லிம் மாகாணம் வேண்டுமென்றால், அந்த முஸ்லிம் மாகாணத்தின் ஆழ, அகலம் என்ன?  என்பது தொடர்பிலாவது, முஸ்லிம் காங்கிரஸ் வெளிப்படையான நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டும்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முஸ்லிம்-அரசியல்-சண்டையில்-கிழியாத-சட்டை/91-205663

Categories: merge-rss

‘மகிழ்ச்சியை பெற்றுக்கொடுக்க வேண்டும்’

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 17:29
‘மகிழ்ச்சியை பெற்றுக்கொடுக்க வேண்டும்’
 

image_a1c07afb6e.jpg“தீபத்திருநாளானது, அதனைக் கொண்டாடும் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் சுபீட்சத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதுடன், அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

“மனிதனின் ஆன்மீக வாழ்க்கைக்கும் லௌகீக வாழ்க்கைக்கும் ஒளியின் பங்கு மிக முக்கியமாக அமைகின்றது. அந்தவகையில், தீபாவளி தினத்தன்று இந்து பக்தர்களால் ஏற்றப்படும் தீப ஒளியானது, அவர்களது உள்ளங்களில் பிரகாசத்தை ஏற்படுத்துவதைப் போன்றே நம் நாட்டின் அனைத்து மக்களின் இதயங்களிலும் ஒளியேற்றி சகல இனங்களையும் ஒன்றிணைக்கும் ஒளிப்பாலமாக அது அமைய வேண்டுமென்பதே எனது பிரார்த்தனையாகும்.   

“மேலும், ஒற்றுமை என்பது நமது நாட்டுகு மாத்திரமன்றி முழு உலகத்தினதும் இருப்புக்கு கட்டாயத் தேவையாக அமைந்துள்ள இன்றைய பொழுதில், இலங்கையர் என்ற வகையில் நாமும் இன, மத என பிரிவடைந்து காணப்படுவதற்கு பதிலாக சகவாழ்வு, நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆழமான பிணைப்பு மிக்க புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட, இவ்வாறான கலாசார விழாக்கள் பெரும் ஆதாரமாக அமையுமென்பதே எனது எண்ணமாகும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.    

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மகிழ்ச்சியை-பெற்றுக்கொடுக்க-வேண்டும்/71-205711

Categories: merge-rss, yarl-category

கட்டுநாயக்கவில் சுற்றித்திரிந்த 60 பேர் கைது

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 17:27
கட்டுநாயக்கவில் சுற்றித்திரிந்த 60 பேர் கைது
 

-ஐ. ஏ. காதிர் கான்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 60 பேரை, கட்டுநாயக்க குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்து, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.   

இவர்கள் ஒவ்வொருவருக்கும், தலா 1, 500 ரூபாய் வீதம், 90 ஆயிரம் ரூபாயை அபராதமாகத் தொகையாக செலுத்துமாறு, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   

நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் கட்டுநாயக்க வந்து சுற்றித்திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் ஆண்கள் என, நீதிமன்ற பதிவேட்டில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கட்டுநாயக்கவில்-சுற்றித்திரிந்த-60-பேர்-கைது/175-205721

Categories: merge-rss, yarl-category

களைகட்டியது தீபாவளி வியாபாரம்

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 17:25
களைகட்டியது தீபாவளி வியாபாரம்
 

image_cfdcb3faa7.jpg

இந்துக்கள் நாளைய தினம் தீபாவெளிப் பண்டிகையைக் கொண்டாடவுள்ள இந்நிலையில் இன்று (17) வியாபார ஸ்த்தலங்கள் வர்த்தக நிலையங்கள் என்பன களைகட்டியிருந்தமையை அவதானிக்க முடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்புரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதை காணமுடிந்தது.

(படப்பிடிப்பு: வடிவேல் சக்திவேல்)

image_2a98fdc55a.jpgimage_fc48501156.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/களைகட்டியது-தீபாவளி-வியாபாரம்/46-205710

Categories: merge-rss, yarl-category

குடும்பப் பாரத்தைக் குறைக்க பூநகரி சந்தியில் நாவற்பழம் விற்கும் சிறார்கள்...

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 16:24

குடும்பப் பாரத்தைக் குறைக்க பூநகரி சந்தியில் நாவற்பழம் விற்கும் சிறார்கள்...

Categories: merge-rss, yarl-category

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 17/10/17

 

மோசமாகும் இராக்கிய குர்திஸ்தான் மோதல்! கிர்குக்கை கைப்பற்றிய இராக் இராணுவம்! சிஞ்சரைக் கைப்பற்றிய அவர்கள் ஆதரவு ஆயுதக்குழு ; அண்டவெளி நட்சத்திர மோதலின் அதிசய அதிர்வலைகள்! நூற்றிமுப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய அலைகளைக் கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை!! மற்றும் தொலைதூர பனிப்பிரதேசத்தில் பணிபுரியும் பள்ளி ஆசிரியை! கனேடிய ஆர்க்டிக் பகுதியின் அதிசய பெண்மணி பற்றிய பிபிசி படப்பிடிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Categories: merge-rss, yarl-world-news

தென்மராட்சியின் அபிவிருத்திக்கு ரூபா 30 மில்லியன் நிதியுதவி

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 16:09
தென்மராட்சியின் அபிவிருத்திக்கு ரூபா 30 மில்லியன் நிதியுதவி தேசிய கொள்­கை­கள் மற்­றும் பொரு­ளா­தார விவ­கார அமைச்சு ஒதுக்­கீடு
 

தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் கிரா­மிய உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி சிறப்­புத் திட்­டத்­தில் 24 வேலைத் திட்­டங்­களை மேற்­கொள்ள தேசிய கொள்­கை­கள் மற்­றும் பொரு­ளா­தார விவ­கார அமைச்சு 30 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மீன்­பிடி, கல்வி, சமூ­கக் கட்­ட­மைப்பு, சாலை அபி­வி­ருத்தி போன்ற திட்­டங்­க­ளுக்­கெ­னவே இந்த நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

கைதடி நாவற்­குழி தெற்கு ஸ்ரீம­கா­ விஸ்ணு கடற்­றொ­ழி­லா­ளர் கூட்­டு­ற­வுச் சங்­கத்­துக்­கான கேட்­போர்கூடம் அமைத்­தல், சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூ­ரி­யில் மாண­வர் தங்­கும் கொட்­டகை, மீசாலை வீர­சிங்­கம் மத்­திய கல்­லூ­ரி­யில் சிற்­றுண்டி நிலை­யம் அமைத்­தல், நாவற்­குழி மகா வித்­தி­யா­ல­யத்­தில் கணிணி ஆய்­வு­கூ­டம் அமைத்­தல், கைதடி வடக்­குக் கிராம அபி­வி­ருத்­திச் சங்­கத்­துக்கு கட்­ட­டம் நிர்­மா­ணித்­தல், சாவ­கச்­சேரி கைத் தொழில் வணி­கர் மன்­றம், தென்­ம­ராட்­சிப் பிர­தேச செய­லக பிரி­வுக்­குட்­பட்ட பதிவு செய்­யப்­பட்ட விளை­யாட்­டுக் கழ­கங்­க­ளுக்கு விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் வழங்­கல், சாவ­கச்­சேரி பெரிய அர­சடி சன­ச­மூக நிலை­யம், கெற்­பேலி வீர­பத்­தி­ரர் சன­ச­மூக நிலை­யம், மிரு­சு­வில் தவ­சி­கு­ளம் இளங்கோ சன­ச­மூக நிலை­யம், பாலாவி வடக்கு கலை­வாணி சன­ச­மூக நிலை­யம், கச்­சாய் கலை­ம­கள் சன­ச­மூக நிலை­யம், கரம்­பைக்­கு­றிச்சி ஸ்ரீக­ணேசா சன­ச­மூக நிலை­யம், மிரு­சு­வில் வடக்கு பொது நூல­கம் வெள்­ளாம்­போக்­கட்டி சன­ச­மூ­கம் என்­ப­வற்­றின் சீர­மைப்பு வேலை­கள் மேற்­கொள்­ளல், சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­வ­ம­னை­யில் நீர் மீள்­பா­வ­னைத் திட்­டம், வரணி வடக்கு இர­வல்­கு­ளச் சாலை, கெற்­பேலி பாட­சா­லைச் சாலை, அல்­லாரை அறு­கம்­பு­லம் பிள்­ளை­யார் கோவில் சாலை, அல்­லாரை தும்பு ஆலைச் சாலை, அல்­லாரை – வெள்­ளாம்­போக்­கட்டி ஊரெல்லை சாலை, மந்­து­வில் வடக்கு நெல்­வ­யல் சாலை, போன்­ற­வற்­றின் சீர­மைப்பு வேலை­கள் உள்­ளிட்ட குறித்த அபி­வி­ருத்­தித் திட்­டங்­க­ளுக்கே இந்த நிதி ஒதுக்­கீடு செய்யப்பட்­டுள்­ளது எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/37853.html

Categories: merge-rss, yarl-category

வாள்­வெட்­டுக் குழு­வின் அடா­வ­டி­கள் பதி­வா­கி­யது

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 16:08
வாள்­வெட்­டுக் குழு­வின் அடா­வ­டி­கள் பதி­வா­கி­யது
 
வாள்­வெட்­டுக் குழு­வின் அடா­வ­டி­கள் பதி­வா­கி­யது
 
 

மானிப்­பாய் லோட்­டன் வீதிப் பகு­தி­யில் அமைந்­துள்ள வீடு ஒன்றினுள் புகுந்து வாள்­வெட்டு நடத்­திய சம்­ப­வம் தொடர்­பான காணொலி வெளி­யா­கி­யுள்­ளது.

ஔிப்­படக் கலை­ஞ­ரான பத்­ம­ ராசா என்­ப­வ­ரது வீட்­டில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம் பெற்ற வாள்­வெட்டு குழு­வி­ன­ ரின் அடா­வடியே அந்த இடத்­தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்­புக் கம­ரா­வில் பதி­வா­கி­யுள்­ளன.

மோட்­டார் சைக்­கி­ளில் வந்­தி­றங்­கி­ய­வர்­க­ளில் 4 பேர் வாள்­க­ளு­டன் வீட்­டுக்­குள் புகுந்து உள்­க­தவை காலால் உதைந்­தும் வாளால் வெட்­டி­யும் சேதம் விளை­விக் கின்ற காட்­சி­கள் பதி­வா­கி­யுள்­ளன. எனி­னும் சம்­ப­வம் தொடர்­பில் இது­வரை எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்று பொலி­ஸார் தெரி­விக்­கின்­ற­னர்

http://newuthayan.com/story/37835.html

Categories: merge-rss, yarl-category

இலங்கை டி 20 கேப்டன் தரங்க பாகிஸ்தான் செல்ல மறுப்பு: புதிய கேப்டன் பெரேரா?

இலங்கை டி 20 கேப்டன் தரங்க பாகிஸ்தான் செல்ல மறுப்பு: புதிய கேப்டன் பெரேரா?
இலங்கை டி 20படத்தின் காப்புரிமைICC

இலங்கை டி 20 அணியின் கேப்டன் உபுல் தரங்க மற்றும் தினேஷ் சந்திமால், மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இலங்கை அணியின் திட்டமிட்ட பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலகுவார்கள் என பிபிசி சிங்கள சேவைக்கு தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பேருந்து 2009-ல் லாகூரில் தாக்கப்பட்ட பிறகு அவர்கள் முதல்முறையாக பாகிஸ்தானில் விளையாடுவார்கள் என்றும், பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையாக திருப்தி அடைந்த பிறகே இம்முடிவை எடுத்ததாக திங்களன்று இலங்கை கூறியிருந்தது.

அக்டோபர் 29-ம் தேதி லாகூர் கடாபி மைதானத்தில் நடக்க உள்ள சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளது.

ஆனால் தரங்க ,சந்திமால், மலிங்கா, மேத்யூஸ் உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை காட்டி விளையாட மறுத்துள்ளனர்.

இலங்கை டி 20படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதன் விளைவாக, முழு டி20 தொடருக்கும் இவர்கள் இல்லாத ஒரு அணியை இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திசரா பெரேராவை இத்தொடருக்கான கேப்டனாக அறிவிக்க இலங்கை கிரிக்கெட் அணி பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானுக்கு பயணிக்கு முதல் சர்வதேச அணியாக தாங்கள் இருக்க விரும்பவில்லை எனவும், பிற அணிகள் முதலில் விளையாட வேண்டும் எனவும் சில மூத்த வீரர்கள் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டின் தலைவரான திலங்க சுமதிபாலவும் இலங்கை வீரர்களுடன் லாகூர் செல்ல உள்ளார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-41651041

Categories: merge-rss

வட கொரியா பற்றி நாடகம் தயாரித்த பிரிட்டன் தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல்

வட கொரியா பற்றி நாடகம் தயாரித்த பிரிட்டன் தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல்

வட கொரியா பற்றிய நாடகம் ஒன்றை உருவாக்கிய பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனத்தை குறிவைத்து வட கொரிய ஹேக்கர்கள் இணையத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைக்கதை ஆசிரியர் ஒருவர் எழுதவிருந்த இந்த நாடகத் தொடர் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

"மிகவும் தைரியமான மற்றும் ஆர்வத்தைத் தூண்டுகின்ற புதியதொரு நாடகத் தொடராக இந்த தொலைக்காட்சி தொடர் இருக்கும்" என்று 2014 ஆம் ஆண்டு, சேனல்4 அறிவித்தது.

"ஆப்போசிட் நம்பர்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் கதைக் கரு, ஒரு பிரிட்டன் அணு விஞ்ஞானி வட கொரியாவுக்கு கைதியாக கொண்டு செல்லப்படுவதாக அமைந்தது.

இதனைத் தயாரிப்பதில் 'மேமோத் ஸ்கிரீன்' நிறுவனம் ஈடுபடத் தொடங்கியதை, அடுத்து, அதனுடைய கணினிகள் தாக்குதலுக்கு உள்ளாயின.

இந்த நிகழ்ச்சியை தயாரிப்பதற்கான நிதி ஆதாரத்தை திரட்டுவது தோல்வியடைந்ததை அடுத்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்று இந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

மிகுந்த கவலையளித்த நடவடிக்கை

இந்த தொலைக்காட்சி தொடர் பற்றிய தகவல்கள் வெளியானதும் வட கொரிய அதிகாரிகள் மிகவும் கோபத்துடன் மறுமொழி கூறினர்.

இந்த தொலைக்காட்சித் தொடரின் கதைக்கருவை "அவதூறான நாடகம்" என்று விவரித்திருந்த பியோங்யாங், ராஜீய உறவுகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று பிரிட்டனைக் கோரியிருந்தது.

வட கொரியர்கள் எதிர்ப்பு மட்டுமே தெரிவிக்கவில்லை. நாடகம் தயாரிக்கவிருந்த நிறுவனத்தின் கணினி வலையமைப்புகளில் புகுந்து சேதம் விளைவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி முதன்முதலில் 'நியூ யார்க் டைம்ஸ்' வெளியிட்ட தகவலில், சேனல் 4 இந்த தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்தது என்று தெரிவித்திருந்தது.

கதாசிரியர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், உண்மையில் 'மாமோத் ஸ்கிரீன்' நிறுவனம்தான் உணைமையில் ஹேக்கர்களால் தாக்குக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பது பிபிசி-யின் புரிதல்.

இந்த இணையத் தாக்குதலால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், இந்த திட்டத்தில் வட கொரிய ஹேக்கர்கள் இருப்பது தெரிய வந்துள்ளதே, அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்ற எச்சரிக்கையைத் தந்தது.

"இந்த நடவடிக்கை மிக விரைவாக இந்நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்து திக்குமுக்காடவைத்தது" என்று அந்த நிறுவனத்தின் கவலையை பற்றி விவரிக்கும்போது, இன்னொரு நிறுவனத்தை சோந்த தொலைக்காட்சி செயலதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த இணைய தாக்குதல் பற்றி பிரிட்டன் உளவுத் துறையும் அறிந்திருந்தது.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 'சோனி பிச்சர்ஸ்' நிறுவனம் மிக மோசமான இணைய தாக்குதலுக்கு உள்ளானதால் இந்த கவலை மிக அதிகமாகவே இருக்கிறது.

'கார்டியன் ஆப் பீஸ்' என்கிற நிறுவனம் இதனை செய்ததாக தெரிவித்திருந்தாலும், வட கொரியாதான் இதற்கு பின்னர் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

சோனி நிறுவனம் தயாரித்திருந்த 'தி இண்டர்வியூ' என்ற திரைப்படம், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் படுகொலை செய்யப்பட்டதாக வர்ணிக்கும் அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், அந்த இணைய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சோனி நிறுவனத்தின் மின்னஞ்சல்கள் திருடப்பட்டு, பொதுவெளியில் வெளியிடப்பட்டன. கணினி வலையமைப்பின் முக்கியமானதொரு பகுதி ஹேக்கர்களால் அழிக்கப்பட்டது.

மிரட்டல்கள் வந்ததால், திரையரங்குகள் இதனை வெளியிடாது என்ற கவலைகளுக்கு மத்தியில் இந்தத் திரைப்படம் இணையத்தில் வெளியானது.

இதனால், ஒபாமா நிர்வாகத்திலிருந்த வெள்ளை மாளிகை மிக வலுவான பதிலடி வழங்கியது. வட கொரியா மீது தடைகள் விதிக்கப்பட்டன.

இன்டர்வீயூபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

'சோனி பிச்சர்ஸ்' போன்று பாதிக்கப்படாமல் இருந்தாலும், பிரிட்டனின் நிறுவனம் ஒன்றும் அப்போது இலக்கு வைக்கப்பட்டது என்று அதிகாரிகள் அறிந்திருந்தனர். ஆனால், அமெரிக்கா அளவுக்கு பிரிட்டன் அரசிடம் இருந்து தீவிர எதிர்வினை இல்லை. சோனி பிக்சர்ஸ் பாதிக்கப்பட்ட அளவுக்கு பிரிட்டன் நிறுவனத்துக்குப் பாதிப்பு இல்லை.

அதிகரித்த தீவிரம்

பிரிட்டனில் "ஆப்போசிட் நம்பர்" தொலைக்காட்சித் தொடர் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சேனல்4-ல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச நாடகப் பிரிவின் இரண்டாவது பணித்திட்டமாக இந்த தொலைக்காட்சி நாடகம் இருந்தது.

இந்நேரத்தில், "மாமோத் ஸ்கிரீன்" நிறுவனமும், அதன் விநியோக கூட்டளி நிறுவனமான "ஐடிவி ஸ்டுடியோஸ் குளோபல் எண்டர்டெயின்மன்ட்" டும் சர்வதேச கூட்டாளி நிறுவனம் ஒன்றை இதற்காக தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தன.

ஆனால், 2015 ஆம் ஆண்டு 'மம்மோத் ஸ்கிரீன்' நிறுவனத்தை 2015ல் வாங்கிவிட்ட 'ஐடிவி ஸ்டுடியோஸ்' செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் பிப்ரவரி மாதம் பேசியபோது, "மூன்றாவது நிறுவனத்தின் நிதி ஆதரவு கிடைக்காததால், கூட்டு தயாரிப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.

விக்டோரியா தொடர்படத்தின் காப்புரிமைMAMMOTH SCREEN

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரிக்க நிதி ஆதரவை பெறுவதிலும், தயாரிப்பை முன்னெடுப்பதிலும் ஏற்பட்ட தோல்வி, ஏதாவது விதத்தில் இந்த இணையத் தாக்குதலோடு தொடர்புடையதா என்று இதில் ஈடுபட்டுள்ள யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. .

வட கொரியாவில் இருந்து வரும் இணைய தாக்குதல் அச்சுறுத்ததல்கள் நின்றபாடில்லை. அந்நாட்டு ஹேக்கர்கள் தென் கொரிய வங்கிகள் மற்றும் ஊடகங்கள் மீது இணைய தாக்குதல் நடத்தி தங்கள் தீவிரத்தையும், கூர்மையையும் உறுதி செய்தனர்.

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட வான்னாக்ரை ரேன்சம்வேர் (இணையத் தாக்குதல் நடத்தி பணயப் பணம் கோரும் வைரஸ்) தாக்குதலுக்கு பின்னால் வட கொரியா இருப்பதாக பிரிட்டன் அதிகாரிகள் நம்பினர். பிரிட்டன் தேசிய சுகாதார சேவையின் முக்கிய பகுதிகள் இதனால் பாதிக்கப்பட்டது.

ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக, பிரிட்டன் அரசிடம் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ பதிலும் இல்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட இணைய தாக்குதல், வட கொரியா என்னவெல்லாம் செய்யவல்லது என்பது குறித்தும், இத்தகைய இணைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றபோது, பிரிட்டன் நிறுவனங்களும், அரசும் என்வாறு பதிலடி அளிக்கும் என்றும் கவலைகளைத் தந்துள்ளது.

http://www.bbc.com/tamil/global-41648891

Categories: merge-rss, yarl-world-news

சந்திரிகா, மைத்திரியின் கவனத்துக்கு கைதிகள் விடயத்தைக் கொண்டுசெல்வேன் பொது அமைப்புக்களிடம் விக்கி தெரிவிப்பு

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 15:27
சந்திரிகா, மைத்திரியின் கவனத்துக்கு கைதிகள் விடயத்தைக் கொண்டுசெல்வேன் பொது அமைப்புக்களிடம் விக்கி தெரிவிப்பு
சந்திரிகா, மைத்திரியின் கவனத்துக்கு  கைதிகள் விடயத்தைக் கொண்டுசெல்வேன்
 
 
 

உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் உடல் நிலை மோச­ம­டைந்து வரு­கின்­றது. அவர்­க­ளது கோரிக்­கைக்கு உடன் செவி­சாய்க்­கு­மாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா ஆகி­யோ­ரது கவ­னத்­துக் கொண்டு செல்­வேன்.

இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.
வடக்­கில் முழு அடைப்­புக்கு அழைப்­பு­ வி­டுத்த தரப்­பி­னர் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ ரனை, நேற்றுமுன்­தி­னம் ஞாயிற்­றுக்கிழமை நேரில் சந்­தித்­துப் பேசி­னர். இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

அரச தலை­வர் மைத்­தி­ரிக்குக் கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தேன். அவ­ரது செய­லர் ஒஸ்­ரி­னு­டன் அலை­பே­சி­யூ­டா­கத் தொடர்பு கொண்டு பேசி­னேன். பதில் கிடைக்­க­வில்லை.

கைதி­கள் விட­யத்­தில் மனி­தா­பிமா­ன­மற்ற நிலை­யில் இருப்­ப­தா­னது நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­களை மிக­வும் பாதிக்­கும்.

மீண்­டு­மொரு தடவை அரச தலை­வர் மைத்­த­ரி­பால சிறி­சே­ன­வுக்குக் கடி­தம் அனுப்­பு­வ­தோடு முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரி­கா­வும் கவ­னம் செலுத்தி உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு கோர­வுள்­ளேன் -– என்­றார்.

http://newuthayan.com/story/37829.html

Categories: merge-rss, yarl-category

திடீரெனக் கறுத்த வானத்தால் இலண்டன் வாசிகள் அதிர்ச்சி! (படங்கள்)

திடீரெனக் கறுத்த வானத்தால் இலண்டன் வாசிகள் அதிர்ச்சி! (படங்கள்)

 

 

இலண்டனின் சில பகுதிகளில் நேற்று வழக்கத்துக்கு மாறாக சிவப்பு நிறச் சூரியனையும், மழை மேகங்கள் எதுவும் இன்றித் திடீரென கறுத்த வானத்தையும் கண்ட மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

4_London.JPG

இதையடுத்து பரபரப்புத் தொற்றிக்கொள்ளவே, அந்தச் சூழலைப் பலரும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரிமாறத் தொடங்கினர்.

எவ்வாறெனினும், இலண்டன் வானிலை அவதான நிலையம் உடனடியாக இந்த விசித்திர சூழல் குறித்து ஆராய்ந்து கருத்து வெளியிட்டது.

அதில், தெற்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய ஒபீலியா புயலில் கிளம்பிய தூசுப் படலம் மற்றும் சிதைவுத் துணுக்குகள் என்பனவே இந்தத் திடீர் ‘காட்சி மாற்றத்’துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த ‘மர்மக்’ காட்சியின் படங்கள் சில கீழே...

4_London1.jpg

4_London2.jpg

4_London3.jpg

4_London4.jpg

4_London6.jpg

4_London5.jpg

4_London7.jpg

 

http://www.virakesari.lk/article/25921

Categories: merge-rss, yarl-world-news

பாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையே தாஜ்மஹால்

பாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையே தாஜ்மஹால்

 

பாரதத்தாயின்  புதல்வர்களின் ரத்தம், வியர்வையில் எழுப்பப்பட்ட தாஜ்மஹால் பாதுகாக்கப்படும் என இந்தியா உத்திரப்பிரதேச  முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார்.

Local_News.jpg

பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சங்கீத் சோம் தாஜ்மஹால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதையடுத்து எழுந்த சர்ச்சைகளினால் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பாரதமாதாவின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையால் எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை பாதுகாப்போம் என்று உறுதி அளித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் அக்டோபர் 26 ஆம் திகதி ஆக்ராவுக்குச் சென்று சுற்றுலாத்திட்டங்களை மேற்பார்வையிடப் போவதாகவும்,  தாஜ்மஹாலை யார் கட்டினார்கள் என்பது முக்கியமல்ல அது ஒரு வரலாற்றுச் சின்னம் என்றும் நகரத்துக்கு 370 கோடி ரூபா பணித்திட்டம் உள்ளது என்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பும் வசதியும் அளிப்பது அரசின் கடமை என்றும் கூறினார். 

சங்கீத் சோம் தாஜ்மஹாலைக் கட்டியவர்கள் இந்தியாவின் மீது படையெடுத்த முகலாய துரோகிகள் என்று கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது, அதற்கு செங்கோட்டையும் அவர்கள் கட்டியதுதான் சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சியை வேறு இடத்துக்கு மாற்றுவீர்களா என்று அஸாதுதின் ஓவைசி உட்பட பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில்தான் கோரக்பூரில், “தாஜ்மஹாலை யார்? எப்படி? கட்டினார்கள் என்பதல்ல விஷயம், அது பாரதமாதா புதல்வர்களின் இரத்தம், வியர்வையினால் எழுப்பப்பட்ட சின்னம் அதன் கட்டிடக்கலையினால் உலகம் முழுதும் புகழ்பெற்றுள்ளது. இது வரலாற்றுச் சின்னம் இதனைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்” என்றார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

http://www.virakesari.lk/

Categories: merge-rss, yarl-world-news

கார் குண்டுத் தாக்குதலில் பெண் ஊடகவிலாளர் படுகொலை!

கார் குண்டுத் தாக்குதலில் பெண் ஊடகவிலாளர் படுகொலை!

 

 

உலகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரையும் குலைநடுங்கச் செய்த ‘பனாமா பேப்பர்’ விவகாரத்தில் முன்னின்று உழைத்த புலனாய்வு ஊடகவியலாளரான டெப்னி கொரோனா காலிஸியா நேற்று (16) படுகொலை செய்யப்பட்டார்.

5_Panama.JPG

மால்ட்டாவின் கிராமங்களில் ஒன்றான மால்பினிஜா என்ற இடத்தில், இவர் தனது காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென கார் வெடித்துச் சிதறியதில் இவர் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து ஆராய்ந்த பொலிஸார், இது கார் குண்டுத் தாக்குதல் என்பதை உறுதிசெய்துள்ளனர்.

டெப்னியின் படுகொலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மால்ட்டா பிரதமர் ஜோசப் மஸ்கட், இது ஊடக சுதந்திரத்தின் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார். 

டெப்னியின் மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளவர்களில் பிரதமர் ஜோசப்பும் ஒருவர்.

மால்ட்டா தீவின் அரசியல்வாதிகள் பலரின் மோசடிகளை தனது ‘ப்ளொக்’ மூலம் அண்மைக்காலமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் டெப்னி. ஐம்பத்து மூன்று வயதாகும் இவர், மூன்று பிள்ளைகளுக்குத் தாயாவார்.

பனாமா பத்திர விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த இருபத்தெட்டு ஊடகவியலாளர்களுள் டெப்னி பிரதானமானவர்.

http://www.virakesari.lk/article/25923

Categories: merge-rss, yarl-world-news

‘உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை’

ஊர்ப்புதினம் - Tue, 17/10/2017 - 15:06
‘உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை’

image_b2b9ac5340.jpg“நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அனைவருக்கும் எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.  

மேலும், “வடக்குக்கு ஒரு நீதியும் தென் மாகாணத்துக்கு ஒரு நீதியும் என இரண்டு விசேட நீதிகள் எதுவும் இல்லை. இந்நாட்டில் ஒரு சட்டமே உள்ளது.  

“இந்தக் காரணத்தால் தெற்கு மக்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்ததைப் போன்று விரைவில் சிவாஜிலிங்கத்துக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.  
கொழும்பில், இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/உத்தரவை-மீறினால்-கடும்-நடவடிக்கை/175-205725

Categories: merge-rss, yarl-category