merge-rss

யாழில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் அனைத்திற்கும் காரணம் இவர்கள்தான்! ஆதாரத்தோடு நிரூபிக்க தயார்!

யாழில் அண்மைக்காலமாக நிலவும் வாள்வெட்டு, மோசடி சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுக்கு பின்னால் தொடர்புபட்ட அனைவரையும் தனக்கு தெரியும், இது தொடர்பிலான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், தொழிலதிபருமான தி.துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த இரண்டு வருட காலமாக எந்தக் காலத்திலுமில்லாத வகையில் இணையத் தள மோசடி குறித்ததொரு விமர்சனம் யாழில் காணப்படுகின்றது. அதனை இயக்கி வருகின்ற நபருடனான தொடர்பை இன்றிலிருந்து யாழ்.பலாலி படைத் தலைமையகம் கைவிட வேண்டும். இதனை நாங்கள் பலாலி இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்காவிடம் மிகவும் கெளரவமாகவும், விநயமாகவும் கேட்டுக் கொள்கின்றோம். யாழ்.பலாலி இராணுவத் தளபதியுடன் இணைந்து குறித்த நபர் தமிழ் மக்களுக்கெதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு உறுதுணையாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றின் ஆசிரியர் செயற்பட்டு வருகிறார். குறித்த நபருக்குப் பின்புலமாக இராணுவம் காணப்படுகின்றது என்பதை நாம் முற்று முழுதாகக் கண்டறிந்துள்ளோம். குறித்த நபர் வடமாராட்சி மற்றும் நெல்லியடிப் பகுதிகளில் கட்டடம் நிர்மாணிப்பதாகத் தெரிவித்துப் பலரிடம் மோசடி செய்துள்ளார். குடாநாட்டில் நிலவும் அசாதாரண சம்பவங்களான வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் கழிவோயில் அடிக்கின்ற சம்பவங்கள், கப்பம் பெறுதல் உட்படப் பல்வேறு சம்பவங்களிலும் பின்னணியாகவிருந்து செயற்படுகிறார்.

அவருக்குப் பின்னால் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட ஐவர் பின்னணியாகவிருந்து செயற்படுவதை நாங்கள் இனங்கண்டிருக்கிறோம். இது தொடர்பான பலமான ஆதாரங்களும், சாட்சிகளும் எம் மத்தியிலுள்ளது.

கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்கள் திட்டமிட்டு வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஆனால், பொலிஸ் தரப்போ, பாதுகாப்புத் தரப்போ இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்களின் பின்னணி குறித்து அறிய முடியாதவாறு இன்று பல்வேறு தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இன்று கண்ணியமான பிராந்தியப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஆகியோர் தொடர்பில் மிகவும் அகெளரவமான முறையில் சில இணையத்தளங்கள் செய்திகள் பிரசுரித்து அவர்களை மாசுபடுத்தியிருக்கின்றன. இதனால், அவர்கள் மெளனிக்கப்பட்டிருக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினைகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்கு முன்வர வேண்டும். குடாநாட்டு மக்களும், ஊடகவியலாளர்களும் இராணுவத்தைப் பார்த்து விரல் நீட்டிக் கதைப்பதற்குக் காரணமானவர்களாக எட்டு நபர்கள் காணப்படுகின்றனர்.

குடாநாட்டில் இயல்பு வாழ்க்கையைக் கொண்டு வருவதற்குத் தடையாகவிருக்கின்ற எத்தகைய நபர்களாயினும் சட்டத்துக்கு முன்னிறுத்த முன்வர வேண்டும்.

யாழ்.பண்ணை பேருந்து நிலையத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எவரும் சொகுசாக பயணிக்க முடியாத அசாதாரண நிலைமை ஏற்பட்டுள்ளது. வழித்தட அனுமதிப் பத்திரமில்லாமல் பயணிக்கின்ற சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட பேருந்துகள் தற்போது சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இவை தொடர்பான பின்னணிகளை நாம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதற்கும் மேலதிகமாக சட்ட விரோதமான ஆசனப் பதிவுகளை மேற்கொண்டு பிற்பகல் வேளையில் மதுபோதையில் பயணிகளுக்குப் பாலியல் தொந்தரவு, கப்பம் பெறுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற நிலைமைகள் நீடிக்கின்றன. இதனால் பயணிகளுக்கும், பயணிகள் போக்குவரத்துச் சேவை அனுமதிப் பத்திரமுள்ள பேருந்து உரிமையாளர்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றன.

இதற்குப் பின்னணியில் தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின் ஒரு சில அதிகாரிகளின் ஊழல்களும் காணப்படுவது எம்மால் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் வடமராட்சியிலிருந்து பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற பேருந்தில் மொரட்டுவ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி நெல்லியடி மாலுசந்தியிலிருந்து பெற்றோர்கள் ஆசனப் பதிவு செய்து வழியனுப்பி விட்ட வேளையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதும் பொலிஸார் அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாழாகிவிடக் கூடாது என்பதற்காக குறித்த பிரச்சினையைத் தட்டிக் கழித்திருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில் பேருந்துகளில் எவ்வாறு பயணிகள் பாதுகாப்பாகப் பயணிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் கூறும் கருத்துக்கள் அனைத்தையும் நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் என்னிடம் காணப்படுகின்றன.

குடாநாட்டில் பல இளைஞர்கள் தற்போது பிழையான வழி நோக்கித் திசை திருப்பப்பட்டு வருகின்றார்கள். பாடசாலைகளின் பரிசளிப்பு விழாக்களுக்கு ஐம்பதாயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் ரூபா வரையான பணத்தைச் செலுத்தி விட்டு எமது இளைஞர்கள் மத்தியில் சமூகச் சீர்கேடுகளை விதைத்து வருகிறார்கள்.

இதில் முன்னின்று செயற்படுவர் ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலைச் சூத்திரதாரியான தர்மலிங்கம் சித்தார்த்தனுடன் நெருங்கிச் செயற்படும் ஆர். ஆர் என்பவராவார்.இவர்கள் வவுனியாவில் மலர் மாளிகையில், கோவில் குளம் உமாமகேஸ்வரன் சமாதியிலும், அங்குள்ள முகாமொன்றிலும் பல கொடூரங்களை அரங்கேற்றியவர்கள்.

யாழ். வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகிலுள்ள புளொட் முகாம் 1995 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஜனாதிபதியாகவிருந்த காலப் பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதன் பின்னர் அந்த முகாமின் பின்பக்கத்திலுள்ள மலசலகூடக் குழியில் எத்தனை பேரை அடித்துப் புதைத்தார்கள்.

இவர்களெல்லாம் தமிழ்த் தேசியம் தொடர்பில் பேசி, சர்வதேச நீதி விசாரணைக்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவார்கள்? அவ்வாறெனில் இவர்கள் செய்த கொலைகளை யார் விசாரிப்பது?, இவர்கள் செய்த அட்டுழியங்களை யார் விசாரிப்பது?, இனியாவது தமிழ்மக்களை நீங்கள் நிம்மதியாக வாழ விடுங்கள்.

எமது மக்கள் முன்னாள் அமரர் தர்மலிங்கத்தின் பெயரைத் தமது மனங்களில் வைத்திருக்கிறார்கள். அவருக்காகத் தான் எமது மக்கள் சித்தார்த்தனுக்கு வாக்களித்தனர்.

22 வரையான தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் தான் தற்போதைய குடாநாட்டின் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மிகப் பெரும் சூத்திரதாரிகள்.

இவர்கள் தேர்தல்களின் போது எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மூடி மறைப்பதற்காக இவ்வாறான குற்றச் செயல்களுடாக மக்களைத் திசை திருப்பி வருகிறார்கள்.

மக்களைச் சிந்திக்க விடுவதுமில்லை. நல்லாட்சியில் இருக்கின்ற பலன்களை அனுபவிக்க விடுவதுமில்லை. ஆகவே, நல்லாட்சி அரசின் எஞ்சிய மூன்று வருட காலத்தில் நன்மையான விடயங்கள் நடப்பதற்கு இவ்வாறானவர்கள் தடையாகவே காணப்படுகின்றனர், என மேலும் தெரிவித்தார்.

 

 

http://www.tamilwin.com/politics/01/136307?ref=rightsidebar

Categories: merge-rss, yarl-category

ஸ்னோவ்டனுக்கு உதவிய நபர்கள் பற்றிய விபரங்களை இலங்கை அதிகாரிகள் திரட்டியுள்ளனர்

ஊர்ப்புதினம் - Wed, 22/02/2017 - 20:21
ஸ்னோவ்டனுக்கு உதவிய நபர்கள் பற்றிய விபரங்களை இலங்கை அதிகாரிகள் திரட்டியுள்ளனர்

edward-snowden.jpg
அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்டதாக  குற்றம்சுமத்தப்பட்ட  எட்வட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஸ்னோவ்டனுக்கு உதவியவர்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக அதிகாரிகள் ஹொங்கொங்கிற்கு சென்றிருந்தனர் என  தெரிவிக்கக்ப்படுகின்றது. சீன ஊடகமொன்று இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.

ஹொங்கொங் காவல்துறையினர் குறித்த இலங்கையர்களுக்கு போதியளவு பாதுகாப்பை வழங்கியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/archives/18724

Categories: merge-rss, yarl-category

கேப்பாப்புலவு நீதியும், யாழ்ப்பாணம் சோனகதெருவுக்கு அநீதியும்..

ஊர்ப்புதினம் - Wed, 22/02/2017 - 20:21

முஹம்மத்- கேப்பாபுலவில் வாழ்ந்த 84 குடும்பங்களின் காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப் படவில்லை என்று கேப்பாப் புலவு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களும் தமது ஆதர்வுகளை வழங்கியிருந்தனர்.

போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்காக உணவு ஏற்பாடுகளையும் அவர்கள் செய்திருந்தனர். அதேவேளை இந்த போராட்டத்துக்கு யாழ்ப்பாண முஸ்லிம்களும் தமது ஆதரவை தெரிவித்து மாணவர்களை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ஒஸ்மானியா கல்லூரி மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியிருந்தனர்.

இவ்வாறு தமிழர் தரப்பு நியாயமான போராட்டங்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவு கொடுத்து வந்தாலும் முஸ்லிம்கள் விடயத்தில் தமிழ் அதிகாரிகள் அரசியல் வாதிகள் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பது கசப்பான உண்மையாகும். முல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்தில் நிலவும் இடப் பற்றாக் குறை காரணமாக முஸ்லிம்கள் புதிய காணிகளை பெற வேண்டியது காலத்தின் தேவையாக இருந்தது. அவ்வாறு காணியொன்று பெறப்பட்ட போது அதற்கெதிராக தமிழர்கள் சிலர் செயற்பட்டிருந்தார்கள். இதனால் அந்தத் திட்டம் பாதியிலே விடப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் உடைந்து போயுள்ள ஐநூறு வீடுகளைத் திருத்த கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. முஸ்லிம்கள் சமர்ப்பித்த 3200 மீள்குடியேற்ற விண்ணப்பங்களில் 150 குடும்பங்களுக்கே வீடமைப்பு உதவிகள் வழங்கப் பட்டுள்ளன. மிகுதி 3050 குடும்பங்களின் மீள்குடியேற்றம் நஷ்ட ஈடு என்பன இழுத்தடிக்கப் படுவதுடன் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் பரச்சேரி வயல் பிரதேசத்தில் 25 ஏக்கர் காணிகள் விவசாய செய்கைக்கு உட்படுத்தப் படாமல் கைவிடப்பட்டிருந்தன. பின்னர் இவை முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் விற்கப் பட்டிருந்தன.

இந்த காணிகளின் தரைகள் அருகிலுள்ள நாவாந்துறை கடலில் தாக்கத்தினால் உவர்ப்பு நிலங்களாக மாறி விவசாயம் செய்ய முடியாத பயனற்ற நிலங்களாக மாறியிருந்தது. இதனால் அவை குடியிருப்புத் தேவைகளுக்காக விற்கப் பட்டன. முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் வீடமைக்க அங்கீகாரம் கேட்ட வேளையில் அவை வயல் காணிகள் அவற்றில் நீங்கள் குடியிருப்புகளை அமைக்க முடியாது என பிரதேச செயலகமும் மாநகர சபையும் கூறிவிட்டன. கேப்பாப் புலைவை பொருத்தவரை அவர்களுக்கு குடியிருக்க காணிகளும் வீடுகளும் வேறு இடங்களில் உள்ளன. அந்த 20 ஏக்கர் காணி விவசாய காணிகளும் ஏணைய காணிகளையும் உள்ளடக்கிய தொகுதி ஆகும். அப்படியிருந்தும் கேப்பாப்புலவு மக்கள் தமது நிலத்துக்காக போராட்டம் நடத்துகின்றனர். அதற்கு யாழ் முல்லை முஸ்லிம்களும் ஆதரவு தெரிவித்து வருகின்ரனர். இந்த 84 குடும்பங்களில் கேப்பாப் பிலவுக்கு இவ்வளவு போராட்டங்களை நடத்தும் தமிழர்கள் முஸ்லிம்கள் விடயத்தில் அநீதியாக நடந்து கொள்வது முறையா? யாழ் பல்கலைக்கழக மாணவர்களே! தமிழ் அரசியல் வாதிகளே! இது உங்களின் கவனத்துக்கு.

AkuranaToday | Read more at http://www.akuranatoday.com/news/?p=112837 .

 

Categories: merge-rss, yarl-category

சர்வஜன வாக்கெடுப்பு தீர்வைத் தருமா?

அரசியல்-அலசல் - Wed, 22/02/2017 - 19:30
சர்வஜன வாக்கெடுப்பு தீர்வைத் தருமா?
 

article_1487746533-article_1479829797-auஉத்தேச புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட அக்கட்சியின் சில தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.   

மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தென் பகுதிளைத் தளமாகக் கொண்ட சில அரசியல் கட்சிகள் அதனை வரவேற்றிருக்கிறார்கள்.  

சர்வஜன வாக்கெடுப்பு என்பது ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கும் சிறந்ததோர் அம்சம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில், நாட்டில் வாக்களிக்கத் தகுதியுள்ள அனைவரும், தமது பிரதிநிதிகள் மூலமல்லாது தாமாகவே குறிப்பிட்டதோர் விடயத்துக்குத் தமது ஆதரவை அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்க அது வாய்ப்பளிக்கிறது.   

எனவே, நாட்டில் பெரும்பாலான மக்கள் தாமாகவே அங்கிகரித்த அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வதாயின், அது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.   

ஆனால், அரசியலமைப்பு மாற்றத்தோடு இனப்பிரச்சினைக்கும் தீர்வு தேடும் விடயத்தில், குறிப்பாகத் தமிழ்த் தலைவர்கள் நீண்டகாலமாகக் கோரி வரும் சமஷ்டி ஆட்சி முறையை அறிமுகப்படுத்துவதில் சர்வஜன வாக்கெடுப்பு, எந்த வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாகும்.  

தற்போதைய அரசியலமைப்பின்படி, இரண்டு வகையிலான விடயங்ளைப் பொது மக்கள் வாக்கெடுப்புக்கு விடலாம். ஒன்று, அரசியலமைப்பின் சில குறிப்பிட்ட வாசகங்களை மாற்றுவற்காக நடத்தப்பட வேண்டியவை. மற்றையது, அரசியலமைப்பின் வாசகங்களல்லாத விடயங்கள் தொடர்பானது.  

அரசியலமைப்பின் வாசகங்கள் அல்லாத விடயங்கள், சட்ட மூலங்களாகவும் இருக்கலாம். அல்லது சட்டமூலம் அல்லாத விடயங்களாகவும் இருக்கலாம்.   

அரசியலமைப்பிலுள்ள ‘இலங்கை சுதந்திர, இறைமையுள்ள, ஜனநாயக,சோஷலிஸ குடியரசாகும்’ என்ற வாசகத்தையோ, ‘இலங்கை ஒற்றையாட்சி நிலவும் நாடு’ என்ற வாசகத்தையோ, ‘இறைமையானது மக்களுடையதே’ என்ற வாசகத்தையோ, ‘தேசியக் கொடி, தேசிய கீதம்’ மற்றும் ‘தேசிய தினம்’ ஆகியவற்றைப் பற்றிய வாசகங்களையோ, ‘பௌத்த மதத்துக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும்’ என்ற வாசகத்தையோ, கருத்து மற்றும் மத சுதந்திரத்தைப் பற்றிய வாசகத்தையோ, ‘எவரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படக் கூடாது’ என்ற வாசகத்தையோ அல்லது ‘எல்லோரும் சட்டத்தின் முன் சமம்’ என்ற வாசகத்தையோ சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாமல் திருத்தவோ நீக்கவோ முடியாது.  

அதேவேளை, ஒரு சட்ட மூலம் அல்லது அதன் ஒரு பகுதி சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என அமைச்சரவை முடிவு செய்த போதும், ஒரு சட்டமூலம் அல்லது அதன் ஒரு பகுதி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு வாக்குப் பலத்தால் நிறைவேற்றப்படுவதற்கு மேலதிகமாக அது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் முடிவு செய்த போதும், அரசியலமைப்புத் திருத்தம் அல்லாத ஒரு சட்டமூலம் நாடாளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட போதும், ஜனாதிபதி அவற்றை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடலாம்.  

 அதேவேளை, தேசிய நலனுக்கு அவசியம் என ஜனாதிபதி கருதும் ஒரு விடயத்தையும் அவர் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடலாம்.  

இவற்றில், இறுதியாகக் கூறப்பட்ட நிலைமையைப் பாவித்து மட்டுமே, இதுவரை இலங்கையில் சர்வஜன வாக்கெடுப்புப் பரிட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.   

1982 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய பொதுத் தேர்தலை, மேலும் ஆறு வருடங்களுக்கு ஒத்திப் போட முடியுமா என்ற விடயத்தை, அதே ஆண்டு டிசெம்பர் மாதம் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன சர்வஜன வாக்கெடுப்புக்கு விட்டார்.   

உண்மையிலேயே அரசியலமைப்புக் கூறுவதைப்போல், இது தேசிய நலன் கருதி நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு அல்ல. ஆனால், அது தேசிய நலன் கருதி நடத்தப்படவில்லை எனச் சட்டப்படி நிரூபிக்கவும் முடியாது.   

article_1487746869-21759-new.jpg

ஏனெனில், ஒரு விடயம் தேசிய நலன் சார்ந்ததா இல்லையா என்பதை அறிவதற்கான அளவுகோலொன்று இல்லை.   

 

1977 ஆம் ஆண்டு, தொகுதி வாரியாக நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் பெற்றுப் பதவிக்கு வந்திருந்தது.   

1982 ஆம் ஆண்டு விகிதாசார முறையில் நடத்தப்படவிருந்த தேர்தலில் சாதாரண பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்வதும் அக்கட்சிக்குக் கடினமாக இருந்தது.  

எனவே, தொடர்ந்தும் ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்தை வைத்திருக்கும் நோக்கத்துடனேயே ஜே.ஆர் அந்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார். அதில் தேசிய நலன் அல்ல; ஐ.தே.கவின் நலனே இருந்தது.   

தேர்தலை ஒத்திப் போட விரும்புவோர், விளக்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அதனை விரும்பாதோர் குடம் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அந்த வாக்கெடுப்பின் போது கேட்கப்பட்டனர். எனவே, இதனைப் பல எதிர்க்கட்சியினர் விளக்கு, குடம் விளையாட்டு என ஏளனம் செய்தனர்.  

தோல்வியை தவிர்ப்பதுதான் ஜே.ஆரின் நோக்கம் என்பதைத் தெளிவாகக் காட்டும் வகையில் அந்த வாக்கெடுப்பு வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த வாக்கெடுப்பாகியது.   

நாட்டின் சகல பகுதிகளிலும் குண்டர்களின் அராஜகம் காணப்பட்டது. சில இடங்களில் வாக்குப் பெட்டிகளில் தனித்தனி வாக்கு அட்டைகளுக்குப் பதிலாக அட்டைக் கட்டுகள் காணப்பட்டன. ஆனால், அந்த வாக்கெடுப்பின் முடிவுகளும் சட்ட பூர்வமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.   

இந்தப் பின்னணியும் அரசியலமைப்புத் தொடர்பான உத்தேச வாக்கெடுப்பின் போது கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.  
மக்கள் கருத்தை அறிந்து, ஜனநாயக முறையில் ஆட்சி செய்வதை உறுதி செய்வதற்கே சர்வஜன வாக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும்.   

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது அந்த ஒன்றியத்திலிருந்து பிரிய வேண்டுமா என்பதைப் பற்றிய கருத்துக் கணிப்பொன்று, அண்மையில் பிரிட்டனில் நடைபெற்றது.  

 பெரும்பாலான மக்கள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றித்திலிருந்து பிரிய வேண்டும் என்று வாக்களித்தனர். அதன்படி தற்போது பிரிட்டன் பிரிந்து செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது.  

அதேவேளை, தத்தமது அரசியல் நோக்கங்களின்படி, பலர் சர்வஜன வாக்கெடுப்புகளை ஆதரிப்பதையும் நிராகரிப்பதையும் காண முடிகிறது.   

இந்தியாவும் பாகிஸ்தானும் 1947 ஆம் ஆண்டு பிரிந்தபோது, பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்ட காஷ்மீர், பாகிஸ்தானுக்குச் சொந்தமாக வேண்டுமா அல்லது இந்தியாவுக்குச் சொந்தமாக வேண்டுமா என்ற பிரச்சினை எழுந்தது.   

அதனைப் பின்னர் அம்மாநிலத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பொன்றின் மூலம் தீர்த்துக் கொள்ள இடமளித்துவிட்டு, அம்மாநிலம் இந்தியாவுடன் தற்காலிகமாக சேர்க்கப்பட்டது.   

ஆனால், இந்தியா பல காரணங்களை முன்வைத்து, அந்த வாக்கெடுப்பை இன்று வரை நடத்தவில்லை. எனவே, அந்த மாநிலத்தில் இன்னமும் பிரிவினைவாதப் போராட்டம் நிலவி வருகிறது.  

1987 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட கால கட்டத்தில், தமிழ் கட்சிகளும் இயக்கங்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிர்வாக ரீதியாக இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.   

அதேவேளை, இலங்கை அரசாங்கம், கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் அதனை விரும்பவில்லை என்ற அடிப்படையில், அதனை எதிர்த்தது. எனவே, கிழக்கு மாகாணத்தின் மக்களின் கருத்தறிந்து அந்த இணைப்பை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.  

ஆனால், தமிழ் ஆயுதக் குழுக்களை ஒப்பந்தத்துக்கு இணங்கச் செய்வதற்காக, முதலில் மாகாணங்களை இணைத்துவிட்டு, பின்னர் மக்கள் விருப்பத்தை அறிய கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த இந்தியா, இலங்கை அரசாங்கத்தை இணங்கச் செய்தது.   

அதன்படி, அந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாகாண சபைச் சட்டத்தில், அதற்கான வாசகமொன்று சேர்க்கப்பட்டது. அதன் பிரகரம், ‘1987 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர், வட மாகாணத்தோடு இணைந்து இருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதைக் கிழக்கு மாகாண மக்கள் முடிவு செய்யும் வகையில் அம் மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்படும்’.  

ஆனால், இந்தியா அந்த வாக்கெடுப்பை நடத்தவிடாது, தொடர்ந்து இலங்கைக்கு நெருக்குதலை கொடுத்து வந்தது. தமிழ்க் கட்சிகள் மற்றும் இயக்கங்களும் அந்த வாக்கெடுப்பை விரும்பவில்லை.  

ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் போதே, தாம் அதனை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை வழங்கியதாக, அண்மையிலும் சில தமிழ்த் தலைவர்கள் கூறியிருந்தனர். 

அதேவேளை, அந்த வாக்கெடுப்பை நடத்தினால் கிழக்கில் இனக் கலவரம் ஏற்படும் என இலங்கை அரசாங்கமும் அஞ்சியது. எனவே, 1987 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, அந்த வாக்கெடுப்பு நடைபெறவில்லை.இறுதியில் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன.  

மாகாண சபைச் சட்டத்தின்படி, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முதலில் இணைக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு அந்த மாகாணங்களை இணைப்பதாயின், அதற்கு முன்னர் தமிழ் இயக்கங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும். அது நடைபெறவில்லை. எனவே சட்டத்தை மாற்றியாவது இரு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என இந்தியா, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவை வற்புறுத்தியது.  

ஆனால், அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணக்கத்தைப் பெறுவது கடினமான விடயம் என்பது ஜே.ஆருக்குத் தெரியும். எனவே, அவர் தமிழ் இயக்கங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் என்பதற்குப் பதிலாகத் தமிழ் இயக்கங்கள் ஆயுதங்களை கீழே வைக்க ஆரம்பித்தால், இரு மாகாணங்களை இணைக்க முடியும் என அவசர கால சட்டத்தைப் பாவித்து ஜனாதிபதி பணிப்புரையொன்றின் மூலம் மாகாண சபைச் சட்டத்தைத் திருத்தினார்.   

நாடாளுமன்றத்தினாலல்லாது ஜனாதிபதியின் கட்டளையின்படி சட்டமொன்று திருத்தப்பட்ட ஒரே சந்தர்ப்பம் அதுவே. இதன் காரணமாகவே 2005 ஆம் ஆண்டு ஹெல உருமயவின் மனுவொன்றை விசாரித்த உயர் நீதிமன்றம், வடக்கு கிழக்கு இணைப்பு சட்டவிரோதமானது எனத் தீர்ப்பு வழங்கியது. எனவே, சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமலே இரு மாகாணங்களும் பிரிந்துவிட்டன.  

முறையாக நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பானது, ஜனநாயகத்தை மிகவும் சிறந்த முறையில் பிரதிபலித்த போதிலும், அதனால் தாம் கொண்டுள்ள கருத்து வலியுறுத்தப்படுமேயானால் மட்டுமே மக்களும் அரசியல்வாதிகளும் அதனை விரும்புகிறார்கள்.   

இலங்கையில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்கெடுப்பு நடத்தி, அங்கு தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும் எனத் தமிழகத்தின் சில அரசியல்வாதிகள் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர்.  

அதனை இலங்கைத் தமிழர்கள் கோராவிட்டாலும், அவ்வாறானதோர் சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறுமானால் அவர்களும் அதனை விரும்புவார்கள்.  

ஆனால், ஜனநாயக முறைப்படி வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றி, கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடைபெறுவதை அவர்கள் விரும்புவதில்லை.

இதேபோல், வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றி கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடைபெறுவதை விரும்பும் சிங்கள மக்கள், வடக்கு, கிழக்கு இரு மாகாணங்களும் இலங்கையுடன் இணைந்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு அம்மாகாணங்களின் மக்களிடையே வாக்கெடுப்பை நடத்துவதை விரும்புவதில்லை.  

புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ள, சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதைப் பற்றி, இதற்கு முன்னர் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது அரசியலமைப்புத்துறை அமைச்சராகவிருந்த பேராசிரியர் 
ஜீ.எல் பீரிஸூம் கருத்து வெளியிட்டு இருந்தார்.   

பீரிஸூம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் எம்.பி காலஞ்சென்ற நீலன் திருச்செல்வமும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஒரு திட்டத்தை அக்காலத்தில் அதாவது, 1995 ஆம் ஆண்டு முன்வைத்திருந்தனர்.   

ஆனால், அதனை நிறைவேற்றிக் கொள்ள மூன்றில் இரண்டு வாக்குப் பலம் அவசியமாகியது. ஐ.தே.க அதற்கு ஆதரவு வழங்க மறுத்தது. அந்த நிலையிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாது சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மட்டும் அதனை நிறைவேற்றிக் கொண்டால், அது செல்லுபடியாகும் எனச் சட்டத்துறை பேராசிரியரான பீரிஸ் நாடாளுமன்றத்தில் வாதாடினார். 

மக்கள் ஒரு விடயத்தை ஏற்றுக் கொண்டால் மக்களின் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் ஏற்படாது என்றும் எனவே, மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டாலும் மக்களே நேரடியாக இனப் பிரச்சினைக்கான தீர்வை அங்கிகரித்தால் அது போதுமானது என்றும் அவர் வாதாடினார்.   

ஆனால், அவ்வாறு செய்வதற்கும் தற்போது அமுலில் உள்ள அரசியலமைப்பின் ஏதாவது ஒரு வாசகத்தின் மூலமாவது அனுமதி வழங்கப்பட்டு இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சம்பந்தப்பட்ட எந்தவொரு விடயமும் மூன்றில் இரண்டு வாக்குப் பலத்தால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியே ஆக வேண்டும்.   

எனவே, பீரிஸின் கருத்துக்கு அரசாங்கத்தின் அமைச்சர்களாவது ஒத்துழைப்பு வழங்கவில்லை.   
தற்போதைய நிலையில், அரசியலமைப்பு மாற்றத்துக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதை தாம் விரும்பவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூறியுள்ளது. 

ஸ்ரீ ல.சு.க தலைவரான ஜனாதிபதியும் அவ்வாறே கருதுகிறாரா என்பது தெளிவாகவில்லை.   
அவரும் அவ்வாறு கருதினால் சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறாது. ஏனெனில், சட்டப் படி அவர்தான் எந்தவொரு விடயத்தையும் வாக்கெடுப்புக்கு விட வேண்டும். 

வாக்கெடுப்புக்கு சகலரும் விரும்பினாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வின்போது, தமிழ்த் தலைவர்கள் எதிர்ப்பார்க்கும் சில விடயங்களை நாட்டில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டு வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே.   

அரசியலமைப்பின் இரண்டாவது வாசகத்தில் நாடு ஒற்றை ஆட்சி உள்ள நாடாகவே கூறப்பட்டுள்ளது. அது கட்டாயம், சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலமே மாற்றி அமைக்க முடியும்.   

அதேவேளை, நாட்டில் ஒன்பது மாகாணங்கள் இருப்பதாக அரசியலமைப்பின் இணைப்பொன்றில் கூறப்பட்டுள்ளது. அதாவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டுமானால், அதுவும் சாதாரண சட்டத்தினாலன்றி அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றின் மூலமாகவே மேற்கொள்ள முடியும்.  

பொதுவாக, அரசியலமைப்பு மாற்றத்துக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறுமானால் மாகாணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் சிங்கள மக்கள் விரும்புவார்களா என்ற பிரச்சினை எழுகிறது.   

மஹிந்த ராஜபக்ஷ அணி அவர்களைத் தூண்டிவிட மாட்டார்கள் என்று எதிர்ப்பார்க்கவும் முடியாது. எனவே, சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தற்போது தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தும் சில விடயங்களை அடைய முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியாகும்.    

- See more at: http://www.tamilmirror.lk/192025/சர-வஜன-வ-க-க-ட-ப-ப-த-ர-வ-த-தர-ம-#sthash.DHhFoLUd.dpuf
Categories: merge-rss

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

ஊர்ப்புதினம் - Wed, 22/02/2017 - 17:50

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 

 

Categories: merge-rss, yarl-category

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 22/02/17

 

இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

ஆட்கடத்தல்காரர்களால் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்தை விபரிக்கும் ஒரு பெண். கடந்த வருடம் பெரும்பாலும் அல்பீனியாவில் இருந்து பிரிட்டனுக்கு கடத்தி வரப்பட்ட மூவாயிரம் பேரில் இவரும் ஒருவர்.

மொசூலில் தற்கொலை தாக்குதல் நடத்திய பிரிட்டிஷ்காரர். குவாண்டநாமோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டதற்காக நஸ்ட ஈடும் பெற்றவர் இவர்.

இங்கிலாந்து நகர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்க அரும்பொருட் பிரதிகள். ஆயிரக்கணக்கான டாலர்கள் பெறுமதியானவை.

Categories: merge-rss, yarl-world-news

மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது துப்பாக்கிப்பிரயோகம் – வைத்தியசாலையில் அனுமதி

ஊர்ப்புதினம் - Wed, 22/02/2017 - 17:29
மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது துப்பாக்கிப்பிரயோகம் – வைத்தியசாலையில் அனுமதி

gun.jpg
மட்டக்களப்பு களுதாவளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று  இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த  மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான 31 வயதான  நேசகுமார் விமல்ராஜ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

உடனடியாக  களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

களுதாவளை கடற்கரை  வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்கள்  அவரை வெளியே அழைத்து அவர்மீது  துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடிப்  பொலிஸார் விசாணைகளில் ஈடுபட்டுள்ளனர்

http://globaltamilnews.net/archives/18718

Categories: merge-rss, yarl-category

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை. சந்தேக நபர்களை தெளிவாக அடையாளம் காட்டிய சிறுவன்.

ஊர்ப்புதினம் - Wed, 22/02/2017 - 17:28
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை. சந்தேக நபர்களை தெளிவாக அடையாளம் காட்டிய சிறுவன்.

jaff3.jpg

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேகநபர்களை 14 பேர்களுக்கு மத்தியில் கண்கண்ட சாட்சியமான சிறுவன் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளார்.

 
ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

 
முன்னதாக  அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. அதன் போது சந்தேக நபர்கள் இருவர் உள்ளிட்ட 14 பேர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
 
அதன் பின்னர் குறித்த படுகொலையை கண்ணால் கண்ட சாட்சியமான சிறுவன் அழைத்து வரப்பட்டு சந்தேக நபர்ககள் இருவரையும் அடையாளம் காட்டுமாறு கோரப்பட்டது. அதன் போது சந்தேக நபர்கள் இருவரையும் 14 பேருக்குள் சிறுவன் தெளிவாக அடையாளம் காட்டினான்.
 
அதன் பின்னர் குறித்த வழக்கு திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  அதன் போது படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி ஷாலினி ஜெயபாலசந்திரன் முன்னிலையானார்.
 
அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது,  சந்தேக நபர்களிடம் நீதிவான் மரபணு பரிசோதனைக்காக உங்களுடைய இரத்த மாதிரிகளை எடுப்பதற்கு சம்மதமா ? என சந்தேக நபர்கள் இருவரிடமும் கேட்டார். அதற்கு இருவரும் தமது சம்மதங்களை தெரிவித்தனர்.
 
அதனை அடுத்து முதலாவது சந்தேக நபரினை வியாழக்கிழமை (23) யாழ்.போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து செல்லுமாறும் நீதிவான் உத்தரவு இட்டார். அத்துடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரையில் இருவரையும் விளக்க மறியிலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.

 

http://globaltamilnews.net/archives/18721

Categories: merge-rss, yarl-category

சீகிரியாவில் இருப்பது சிங்க பாதமல்ல 'புலி பாதம்' : தேரரின் புதுதகவல்

ஊர்ப்புதினம் - Wed, 22/02/2017 - 15:14
சீகிரியாவில் இருப்பது சிங்க பாதமல்ல 'புலி பாதம்' : தேரரின் புதுதகவல்

 

 

சீகிரியா மலைக்குன்றிலுள்ள ராஜமாளிகைக்கு செல்வதற்கான குன்றின் அடிவாரத்திலுள்ள வாயிலில் இருக்கும் இரு பாத அடையாளங்களும் சிங்கத்தின் பாதங்கள் அல்ல எனவும், அவை புலியின் பாதங்கள் என்றும், தம்புளை - ரங்கிரி விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.  

1Sigiriya-1.jpg

இலங்கை வாழ் மக்களை மட்டுமன்றி,  வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் ஏமாற்றி, குன்றின் அடிவாரத்திலிருப்பது சிங்கத்தின் பாதமென்று நம்பவைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை உரிய திணைக்களம் சரிசெய்ய வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

சீகிரியவில் இருப்பது சிங்கத்தின் பாதங்கள் அல்ல என்ற தலைப்பின் கீழ், பேராசிரியர்  இத்தாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரரினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 download__6_.jpg

மேலும் குன்றின் உச்சியிலுள்ள ராஜமாளிகைக்குச் செல்வதற்கான வாயிலிலுள்ள மிருகத்தின் கால்களில், தலா மூன்று நகங்களை குறிக்கும் பாதங்களே காணப்படுவதாகவும், ஆனால் சிங்கத்தின் பாதத்தில் நான்கு விரல்கள் இருக்கின்றன என அவரின் கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.  

அத்தோடு சிங்கத்தின் பாத அமைப்புக்கும், புலியின் பாத அமைப்புக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16961

Categories: merge-rss, yarl-category

ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கை மீளவும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ஊர்ப்புதினம் - Wed, 22/02/2017 - 15:13
ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கை மீளவும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

raviraj.jpg
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை  தொடர்பான  வழக்கை மீளவும்  விசாரிக்க உத்தரவிடுமாறு ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ்  தாக்கல்  செய்த  மேன்முறையீடு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.

நீண்ட காலமாக நடத்தப்பட்டு வந்த விசாரணைகளின் முடிவில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களும் குற்றமற்றவர்கள் என் விசேட ஜுரிகள் சபை தீர்ப்பளித்திருந்தது.

எனினும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை விசேட ஜுரிகள்  சபை முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது சட்டத்துக்கு முரணானது  எனவும் எனவே இந்த வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்து  வழக்கை மீள விசாரணை செய்யுமாறும் உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் குறித்த மனு மார்ச் 28 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அன்றையதினம் நீதிமன்றத்தில் தகவலளிக்கும் படி, சட்டமா அதிபர் மற்றும் விடுவிக்கப்பட்ட ஐவருக்கும்  கடிதம்  அனுப்புமாறும் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/18710

Categories: merge-rss, yarl-category

காத்தான்குடியில் தமிழ் ஆசிரியர் ஒருவர் முஸ்லிம் காடையர் ஒருவரால் தாக்கப்பட்டார்.

ஊர்ப்புதினம் - Wed, 22/02/2017 - 14:28

காத்தான்குடியில் தமிழ் ஆசிரியர் ஒருவர் முஸ்லிம் காடையர் ஒருவரால்  தாக்கப்பட்டார்.

மட்டக்களப்பு  மட் /மம /காத்தான்குடி மத்திய கல்லூரியில் கற்பிக்கும் எஸ்.ராகுலன் எனும் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த (16/02/2017) வியாழக்கிழமை 7:45 மணியளவில்  முறையிடப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல்  வேளையில்  இல்ல விளையாட்டுப்போட்டிக்கான இல்ல அலங்கார வேலைகளில்  ஈடுபட்டுக்கொண்டிருந்த போது  அதனை இரசிக்கத்தெரியாத காடையர் அவ் அலங்கார வேலைப்பாட்டையும், விளையாட்டு இறுதிநாள் நிகழ்வையும் குழப்பும் வகையிலும்  காத்தான்குடி தாருஸ்ஸலாம் வீதியில் வசித்துவருபவரும் நீர்பாசன திணைக்களத்தில் கடமைபுரியும்   க.ஆ.நியாஸ் என்பவரால்   குறித்த தமிழ் ஆசிரியர்  தாக்குதலுக்கு  உள்ளாக்கப்பட்டார்.

இது தொடர்பில் குறித்த ஆசிரியர் மற்றும் அதிபரினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியர் சிகிச்சைக்காக ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்காக இரண்டாம் இலக்க  விடுதியில் 29 இலக்க கட்டிலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்திக்குரிய க.ஆ. நியாஸ் என்பவரை இதுவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்து விசாரனை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.அத்தோடு சிறு குற்றம் செய்வோரை உடனடியாக கைது செய்யும் பொலிஸார் ஏன் இந்த க.ஆ.நியாஸ் என்பவரை கைது செய்யாது மௌனமாக இருப்பது ஒட்டு மொத்த ஆசிரியர் மற்றும் மாணவர் சமூகத்திக்கிடையே பொலிஸார் இலஞ்சம் பெற்று அல்லது அரசியல்வாதிகளின் அழுத்தத்தினால் குறித்த குற்றவாளியை கைது செய்யாமல் இருக்க காரணமாக இருக்கலாம் என்பதை சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்தனர்.

உடனடியாக குறித்த குற்றவாளியை பொலிஸார் கைது செய்து பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு நியாமான நீதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு குற்றவாளியை கைது செய்ய பொலிஸார் காலத்தை இழுத்தடித்து இவ்வாறான குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முயற்சித்தால் ஆசிரியர்கள் குற்றவாளி கைது செய்யப்படும் வரையும் பணிப்புறகணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடதக்கதாகும்.

அதிபர்கள்,ஆசிரியர்கள்,பாடசாலை சமூகம் வன்மையாக குறித்த காட்டுமிரான்டித்தனமான தாக்குதலை கண்டித்துள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் விரைவாக  நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

7865_1487520274_image-0-02-06-a2d25a276cab657c16d935dbc49d23739b0d7b6480b320f89282a4922c0e3098-V.jpg   

7865_1487520274_image-0-02-06-fc0ecd3b3a280bac6d2f0d4bb02584c5052a074df55f8a80c3b8631ee1373f77-V.jpg

http://battinaatham.com

Categories: merge-rss, yarl-category

தேநீர் கவிதை: பகையொன்றுமில்லை பறவைகளே!

தேநீர் கவிதை: பகையொன்றுமில்லை பறவைகளே!

 

 
pain_3136327f.jpg
 
 
 

எனக்கும்

என் குடியிருப்புப் பகுதியின்

பறவைகளுக்கும்

பல ஆண்டுகளாகவே

பகை நிலவுகிறது!

மின் தடையால்

ஊர் இருண்ட

ஒரு முன் இரவு நேரத்தில்

நெருப்பு விளக்கேந்தி - நான்

தெருப் பக்கம் வந்தபோது

குபீரெனப் பறந்த - என்

வாசல் மரத்துப் பறவைகள்,

அந்த சம்பவத்திற்குப் பிறகு

ஏனைய பறவைகளையும்

எனக்கெதிராகத்

தூண்டி வருகின்றன!

அலைபேசியைத்

தூக்கிக் கொண்டு

வீட்டுக்கு வெளியே - நான்

ஓடிவரும் நேரங்களில்

வேண்டுமென்றே அவை

கூடுதல் ஒலியோடு

கூச்சலிடுவதால்,

உற்ற நண்பர்களோடு

உரையாட முடிவதில்லை!

செலவு செய்து

சலவை செய்த

வெள்ளைச் சட்டையோடு

வெளியே கிளம்பி

வீதியைக் கடப்பதற்குள்

தலையிலும் தோளிலுமாக

என் வெண்மைகளின் மீது

எச்சங்கள் விழுகின்றன!

வானத்தைப் பார்த்தபடியே

வளைந்து வளைந்து

வீதியில் நடக்கும் என்னை,

கண்ணாடிக்குள்ளிருந்து

கண்டிக்கிறார்கள்

காரில் போகிறவர்கள்!

மேலும் மேலும் காரணங்கள்

கூடிக்கொண்டேயிருந்தால்

முற்பகை வலிமை பெற்று

மூர்க்கமாகும் என்பதைப்

புரிந்துகொள்ளவேயில்லை... அந்த

அப்பாவி பறவைகள்!

நான்

புரிந்துகொள்கிறேன்!

போயும் போயும்

பறவைகளோடு

பகை வேண்டாமென

கசப்புணர்வுகளை

கை விடுகிறேன்!

என் வாழ்விடத்தில்

எதைச் செய்யவும்

அவற்றுக்கு உரிமையளிக்கிறேன்!

போதாக்குறைக்கு

பொங்கலுக்கு எடுத்த

இரண்டு புதிய வெள்ளைச் சட்டைகள்

இப்போது என்னிடம் உள்ளன!

வரச்சொல்லுங்கள் - அந்த

வாயாடிக் கூட்டத்தை!

‘வார்தா’வுக்குப் பிறகு

வரவே இல்லை அவை!

http://tamil.thehindu.com/opinion/blogs/தேநீர்-கவிதை-பகையொன்றுமில்லை-பறவைகளே/article9554713.ece

Categories: merge-rss

ஒரு நிமிடக் கதை: வேண்டாம் இந்தப் பாதை

கதை கதையாம் - Wed, 22/02/2017 - 12:16
ஒரு நிமிடக் கதை: வேண்டாம் இந்தப் பாதை

 

 
 
paint3_3136331f.jpg
 
 
 

அந்தத் தெருவில் பாதி தூரம் வந்த பிறகு, “நாம வேற தெரு வழியா போகலாம்” என்று சொன்ன கணேசன் மீது எனக்குச் சற்று கோபம் வந்தது.

கடந்த ஒரு வாரமாக கணேசன் இப்படித்தான் நடந்து கொள்கிறான்! நேராக போகும் வழியை விட்டுவிட்டு சுற்றுப் பாதையில் அழைத்துப் போனான். அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இடத்துக்கு என்னையும் ரெண்டு கிலோ மீட்டர் நடக்க வைத்தான்.

“ஏன் கணேசா! நானும் ஒரு வாரமா பார்த்துட்டிருக்கேன். நேரா போகிற இடத்துக்கு சுத்து வழியாவே போறே. உனக்கு என்னதான் பிரச்சினை?” அவனிடம் கேட்டேன்.

“எல்லாம் கடன் பிரச்சினைதான்!” என் றான் கணேசன்.

“யார்கிட்டே எவ்வளவு கடன் வாங்கினே? யாரைக் கண்டு இப்படி ஒளிஞ்சு ஓடுறே?” என்று கேட்டேன்.

“நான் கடன் வாங்கல. கடன் கொடுத்தேன். பாவம் அடுத்த தெருவில இருக்கிற ஒரு பெரியவர் என்கிட்டே ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். அவருக்கு இருக்கிற கஷ்டத்துல இப்ப அவரால என் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். அவர் என்னைப் பார்த்தா ‘பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியலியே’ன்னு வருத்தப்படுவார். அவருக்கும் சங்கடம், எனக்கும் சங்கடம். அதான் தூரத்துல அவரைப் பார்த்தாலே அவர் கண்ணுல விழாதபடி நான் வேற பாதையில போய்டுறேன்!” என்று கணேசன் சொல்ல, ‘கணேசன் போவது சுற்றுப் பாதையாக இருந்தாலும் நல்ல பாதைதான்’ என்று தோன்றியது எனக்கு.

http://tamil.thehindu.com/opinion/blogs/ஒரு-நிமிடக்-கதை-வேண்டாம்-இந்தப்-பாதை/article9554726.ece

Categories: merge-rss

விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை லண்டனுக்கு அனுப்பியவர்களுக்கு விளக்கமறியல்

ஊர்ப்புதினம் - Wed, 22/02/2017 - 12:12
விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை லண்டனுக்கு அனுப்பியவர்களுக்கு விளக்கமறியல்

ltte.png
தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை விமானத் தபால் மூலம், லண்டனுக்கு அனுப்ப முற்பட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, சந்தேகநபர்களை மார்ச் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

இவர்களில் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாகவும் காவல்துறையினர் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபர்களுக்கெதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாதென அவர்கள் சார்பில் முன்னலையான  சட்டத்தரணிகள் வாதிட்ட போதும் அதனை நீதவான் நிராகரித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/18700

Categories: merge-rss, yarl-category

வித்தியா படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம்

ஊர்ப்புதினம் - Wed, 22/02/2017 - 11:35
வித்தியா படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம்

 

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

pungudutivu-viththiya-photos-suspects.jp

இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார்.

இதன்படி குறித்த 12 சந்தேகநபர்களில் 11ஆம் இலக்க சந்தேகநபரே அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று அறிவித்துள்ளார்.

அரச தரப்பு சாட்சியாளராக மாறும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமையவே குறித்த 11ஆவது இலக்க சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இழுபட்டுக்கொண்டிருக்கும் வித்தியா கொலை வழக்கிற்கு மேலும் ஒரு அனுகூலமான சாட்சி கிடைத்துள்ளது. இதனால் இந்த வழக்கில் சாதகமான ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/16951

Categories: merge-rss, yarl-category

இந்திய வெளியுறவுச் செயலரின் கருத்தால் கூட்டமைப்பிற்கு ஏமாற்றம்

ஊர்ப்புதினம் - Wed, 22/02/2017 - 08:28
இந்திய வெளியுறவுச் செயலரின் கருத்தால் கூட்டமைப்பிற்கு ஏமாற்றம்
 
 
இந்திய வெளியுறவுச் செயலரின் கருத்தால் கூட்டமைப்பிற்கு ஏமாற்றம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு, இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று, இந்திய வெளி விவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக, பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது-
 
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்க இந்திய அரசு வலியுறுத்தாது என இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் ஏமாற்றத்தை ஏற்ப டுத்தியுள்ளது.
 
திங்கட்கிழமை இலங்கை ஜனாதிபதியைச் சந்திக்கும் முன்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜெய்சங்கர் சந்தித்தார். அப்போது, வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பை இந்தியா இனிமேலும் வலியுறுத்தாது என்று தெரிவித்தார்.
 
இதுகுறித்து, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டபோது, “இது 30 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு விடயம். ராஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு விடயங்கள் நடந்து முடிந்து விட்டன. அதனால், தற்போது நடைமுறை சாத்தியமாக எது முடியுமோ அதைச் செய்ய வேண்டும்,” என்று ஜெய்சங்கர் கூறியதாக அவர் தெரிவித்தார்.
 
அதேநேரத்தில், வடக்கு – கிழக்கு இணைப்பைக் கைவிட வேண்டும் என்று தான் கூறவில்லை என்றும் வெளியுறவுச் செயலர் கூறிய தாக சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.
 
தற்போதைய சூழ்நிலையில், வடக்கு – கிழக்கு இணைப்புத்தான் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பானது என்று கூறிய சுரேஷ் பிரேம ச்சந்திரன், ஏற்கனவே இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் சீனாவுக்கு சாதகமானதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது தங்களுக்கு இணக்கமான ஓர் அரசாங்கம் ஏற்பட்டிருப்பதால் அதை சங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என இந்தியா கருதலாம் என்று கருத்துத் தெரிவித்தார்.
 
ஆனால், தங்களது கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தப் போவதாகவும், தமிழ் மக்கள் அதற்காகத்தான் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
 
இதுகுறித்து, தமிழக மக்களும், அரசியல் தலைவர்களும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேம ச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.
jaishankar-tna.jpg
இந்த விடயம் குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனிடம் கேட்டபோது, “ஏற்படுத்த முடியாது என்று வெளியுறவுச் செயலர் கூறவில்லை. 1987-ஆம் ஆண்டு உடன்படிக்கைக்குப் பிறகு, நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அதற்கு ஏற்றவாறு, மாற்று யோசனையைப் பரிசீலிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று வெளியுறவுச் செயலர் கூறினார்,” என்றார்.
 
அதேநேரத்தில், இலங்கை – இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு யாரும் சொல்ல வில்லை என்றும் சம்பந்தன் தெரிவித்தார்

http://www.onlineuthayan.com/news/24203

Categories: merge-rss, yarl-category

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 4 பேர் சமூகத்துடன் இணைவு.!

ஊர்ப்புதினம் - Wed, 22/02/2017 - 08:22
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 4 பேர் சமூகத்துடன் இணைவு.!

 

 

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்று காலை சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வில் அவர்களது குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.

1.jpg

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப்பணியகத்தில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர் கேணல் ஹமில்டோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக புனர்வாழ்வு நிலைய பயிற்சிப் பொறுப்பாளர் கேணல் சித்திரகுணதூங்க, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த குணசேகர, புனர்வாழ்வு நிலைய பின்னாய்வு அதிகாரி ஏகன் பெர்ணான்டோ, பூந்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமயத் தலைவர், முன்னாள் போரளிகளின் குடும்ப உறுப்பினர்கள், படையினர், பொலிஸார், விமானப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய புனர்வாழ் நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பெற்ற தேவராஜா ஜெகதீபன் மட்டக்களப்பு, றங்கசாமி நந்தகுமார் மட்டக்களப்பு, யோசப் டின்டாஸ் விவிலியன் மட்டக்களப்பு, கணேசன் துசாந்தன் மட்டக்களப்பு ஆகிய நான்கு பேரே தமது குடும்பத்துடன் இணைத்துவைக்கப்பட்டனர்.

http://www.virakesari.lk/article/16945

Categories: merge-rss, yarl-category

அரசியலமைப்பு திருத்தம் மட்டுமே கொண்டுவரப்படும்

ஊர்ப்புதினம் - Wed, 22/02/2017 - 08:17
அரசியலமைப்பு திருத்தம் மட்டுமே கொண்டுவரப்படும்
SBD-e1d311cb3b8538d78b5a220d147bba8d966d053f.jpg

 

சமஷ்டி, சர்வதேச நீதிபதிகள் இல்லை என்கிறார் எஸ்.பி.
 (க.கம­ல­நாதன்)

சமஷ்­டி முறைமையை மையப்­ப­டுத்­திய அர­சி­ய­ல­மைப்போ அல்­லது சர்­வ­தேச நீதி­ப­திகள் அடங்­கிய நீதி­மன்ற கட்­ட­மைப்போ ஒரு­போதும் வராது என சமூக வலு­வூட்டல் மற்றும் நலன்­புரி அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

 சமூக வலு­வூட்டல் மற்றும் நலன்­புரி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு  உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், 

 புதிய அர­சி­ய­லமைப்பு குறித்து பேசு­கின்ற பலர் அது தொடர்பில் உண்­மைக்கு புறம்­பான கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றார்கள். ஆனால் ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாட்டின் பிர­காரம் நாட்டின் ஒற்­றை­யாட்­சியில் கடு­க­ளவும் மாற்றம் செய்­யப்­ப­டாது.

அதேபோல் ஜனா­தி­பதி முறை­மையும் முழு­மை­யாக ஒழிக்­கப்­ப­ட­மாட்­டாது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தேர்தல் பிர­க­ட­னத்தில் இந்த விட­யத்தை தெளி­வாக குறிப்­பிட்­டுள்ளார். தனது ஆட்சி காலத்தில் மேற்­கொள்­ளப்­படும் அர­சி­ய­லை­மப்பு திருத்த செயற்­பா­டு­களின் போது சர்­வ­ஜன வாக்­கெடுப்புக்கு செல்லும் வகை­யி­லான எந்த ஒரு திருத்­த­னையும் செய்­யப்­போ­வ­தில்லை என உறு­தி­யாக கூறி­யுள்ளார்.

அர­சி­ய­லை­மப்பு திருத்தச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­க­ப­டு­வதால் நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கும் எந்­த­வித அச்­சு­றுத்­துலும் ஏற்­ப­டாது என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதனால் நாம் பாது­காப்பு கட்­ட­மைப்­பினை உரு­க்கு­லைக்கும் வகை­யி­லான அர­சி­ய­லை­மப்பு திருத்­தங்­க­ளுக்கும் செல்­ல­போ­வ­தில்லை.

அதனால் சமஷ்டி ஆட்சி ஒன்­றிணை ஒரு­வாக்கும் அர­சி­ய­லை­மப்பு திருத்­தமோ அல்­லது புதிய அர­சி்­ய­லை­மப்போ வரப்­போ­கின்­றது என்­பது உண்­மைக்கு புறம்­பான விட­ய­மாகும். ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சி­யாக நாம் புதிய அர­சி­ய­லை­மப்பு குறித்து ஆழ­மாக பேச­வில்லை.

ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சிய புதிய அர­சி­ய­லை­மப்பு குறித்து தொடர்ந்தும் பேசி வந்­தது. அவ்­வா­றி­ருந்த நிலையில் தான் நாட்டு மக்கள் எந்த ஒரு கட்­சிக்கும் பெரும்­பான்மை பலத்­தினை வழங்­காமல் இருந்தனர்.அதனால் இரு கட்சிகளும் சேர்ந்து முன்­னெ­டுக்­கின்ற அர­சாங்கம் என்று பார்­கின்ற போது அதன் கீழ் அர­சி­ய­ல­மைப்பில் மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய அவ­சியம் உள்­ளது.

சர்­வ­தேச நீதி­ப­திகள்

சர்­வ­தேச நீதி­ப­திகள் குறித்த விட­யங்கள் தொடர்பாகவும் போலி­யான விட­யங்கள் வெளி­வ­ரு­கின்­றன. சர்­வ­தேச நீதி­ப­தி­களை அழைத்து வந்து உள்­நாட்டில் இடம்­பெற்ற யுத்தம் தொடர்­பிலும் யுத்த குற்­றங்கள் தொடர்­பிலும் நாங்கள் ஒரு­போதும் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ள­போ­வ­தில்லை.

தேசிய நீதி­கட்­ட­மைப்பு மீது அர­சாங்கம் முழு­மை­யான நம்­பிக்கை கொண்­டுள்ள கார­ணத்­தினால் சர்­வ­தேச நீதி­ப­தி­களை அழைத்து வந்து நீதி­மன்ற செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க நாம் ஒரு­போதும் தீர்­மா­னிக்­க­வில்லை என்றார்.

கேள்வி - தற்­போது ஒரு அர­சிலை­மப்பு தேவை­தானா என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆவே­சப்­பட்டு பேசு­கின்றார் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குற்றம் சுமத்­தி­யுள்­ளாரே?

பதில்- ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தேர்தல் பிரச்­சா­ரத்தில் குறிப்­பிட்­டுள்­ளது போன்று அர­சி­ய­லை­மப்பு விவ­கா­ரத்தில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்பார்.

கேள்வி- வெளி­வி­வ­கார அமைச்சர் புதிய அர­சி­ய­லை­மப்பு ஒன்­றையே கொண்­டு­வ­ரப்­போ­வ­தாக கூறி­யுள்ளார் அதன் உண்­மை­தன்மை பற்றி கூறுங்கள்?

பதில்- அர­சி­ய­லை­மப்பு திருத்தம் குறித்­துதான் நாம் அறிவோம் மற்­றைய விட­யங்கள் தொடர்பில் அறி­வித்­தி­ருந்தால் அவரே கூற வேண்டும்.

கேள்வி- அவ்­வா­றாயின் அர­சாங்­கத்­தி­லி­ருந்து அர­சி­ய­லை­மப்பு குறித்து நீங்கள் அறி­யா­துள்­ளீர்­களா?

பதில்- நான் அறிந்­துள்ளேன். அர­சி­ய­லை­மப்பில் திருத்தம் செய்­வது குறித்து அறிவேன்.

கேள்வி- பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீ தரன் தமது பரிந்­து­ரை­களை ஏற்­கா­மையை காரணம் காட்டி அர­சி­ய­லை­மப்பு உரு­வாக்க உப குழுக்­க­ளி­லி­ருந்து கூட்டு எதி­ர­ணி­யினர் விலகிச் சென்­றுள்­ள­னரே?

பதில்- அவர்கள் விலகிச் செல்வதைவிடவும் அவர்களின் பரிந்துரைகளை உரிய விதத்தில் முன்வைப்பதே சிறந்ததாகும். குழுவின் தலைவரினால் பரிந்துரைகள் ஏற்கப்படாத பட்சத்தில் அவர்கள் அதனை பாராளுமன்றில் அறிவிக்க முடியும்.

கேள்வி- ஆளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என ஸ்ரீ தரன் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளதா?

பதில்- இல்லை அவ்வாறான பரிந்துரைகள் எவையும் அறிவிக்கப்படவில்லை அறிவித்த பின்னர் அதற்கான அவசியம் இருக்கும் பட்சத்தில் அதுகுறித்து ஆராய்வோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-22#page-1

Categories: merge-rss, yarl-category

கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்

அரசியல்-அலசல் - Wed, 22/02/2017 - 08:05
கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்
 

article_1487746000-article_1479829865-prதமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புகளும் நம்பியிருக்க, அதனைத் தவிடுபொடியாக்கிவிட்டு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையோடு தங்கிவிட்டார்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கவனம் பெறும் வகையிலான கலகக்குரல்களை எழுப்பியவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் முக்கியமானவர்கள்.   

அந்த வரிசையில், இறுதியாக இணைந்தவர் சி.வி.விக்னேஸ்வரன். 2015 ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலத்தில் அவரின் கலகக்குரல் சற்று பலமாகவே ஒலித்தது.   

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலகக்குரல் எழுப்பியதோடு நின்றுவிடாமல், கூட்டமைப்பிலிருந்து விலகிவந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அமைத்துக் கொண்டார்.   

ஆனால், மற்ற மூவரினாலும் கூட்டமைப்பிலிருந்து விலகிச் செல்லும் தீர்மானத்தினை இந்தக் கணம் வரையில் எடுக்க முடியவில்லை. அதுபோல, புதிய தலைமை தொடர்பிலான ஆசையையும் ஆர்வத்தினையும் விட்டுத் தரவும் முடியவில்லை.  

கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும், தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட பின்னரும், புதிய தலைமையை ஏற்க, வரவேண்டும் என்று சி.வி. விக்னேஸ்வரனை நோக்கி, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கோரிக்கை விடுத்தனர்.   

எனினும், அந்தக் கோரிக்கைகளுக்கு சி.வி.விக்னேஸ்வரன் சாதகமான பதில்களை வழங்கவில்லை. குறிப்பாக, பொதுத் தேர்தல் காலத்தில் தன்னுடைய கலகக்குரலினை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த பின்னணியில், சி.வி.விக்னேஸ்வரனின் நம்பிக்கை முற்றாகத் தளர்ந்தது. அவருக்கு ஏற்படுத்தப்பட்ட புதிய தலைமை பற்றிய கனவும் கலைந்தது.  

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதலாவது எழுக தமிழ் பேரணியின் போதும், சி.வி. விக்னேஸ்வரனை நோக்கிப் புதிய தலைமையை ஏற்க வருமாறு கோரப்பட்டது.   

அப்போதும் அதனை அவர் கருத்தில் எடுக்கவில்லை. கிட்டத்தட்ட நிராகரித்துவிட்டார். அதாவது, கூட்டமைப்பின் தலைமைக்குத் தான் என்றைக்கும் விசுவாசமாக இருப்பதாகவும் மாற்று அணியொன்றுக்கு தலைமையேற்கும் எண்ணம் தன்னிடத்தில் இல்லை என்றும் இரா.சம்பந்தன் முன்னிலையிலேயே அவர் வாக்குமூலமளித்தார்.   

அந்தத் தருணத்திலிருந்து சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிரான தங்களின் விமர்சனங்களை இரா.சம்பந்தனுக்கு நெருக்கமான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களும் நிறுத்திக் கொண்டார்கள்.   

இப்போது, சி.வி.விக்னேஸ்வரனை ஓர் அச்சுறுத்தலாக கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் தலைமைகள் (குறிப்பாக தமிழரசுக் கட்சி) கருதுவதில்லை. மாறாக, வடக்கு மாகாண சபையின் பதவிக் காலம் முடிந்து 
சி.வி.விக்னேஸ்வரன் தன்னுடைய பதவியிலிருந்து விலகிச் செல்லும் வரையிலான கால அவகாசத்தினை வழங்கியிருக்கின்றார்கள். ஆக, அவர் கௌரவமாக ஓய்வுபெற்றுச் செல்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ஒருவித விட்டுக்கொடுப்பினைச் செய்திருக்கின்றார்கள்.  

இவையெல்லாம் முடிந்த பின்னரும், மட்டக்களப்பு, எழுக தமிழ் பேரணியின் போதும் புதிய தலைமையாக வர வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரனை நோக்கி கஜேந்திரகுமாரும் சுரேஷும் அழைத்திருக்கின்றார்கள்.   

உண்மையிலேயே பலமான புதிய அரசியல் தலைமையொன்றை உருவாக்கும் நோக்கிலான கோரிக்கைகளா சி.வி. விக்னேஸ்வரனை நோக்கி விடுக்கப்படுகின்றது என்கிற கேள்வி எழுகின்றது.   

அப்படியான நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் சி.வி. விக்னேஸ்வரை நோக்கி மீண்டும் மீண்டும் விடுக்கும் அழைப்புகள் எவ்வகையானவை.   

அவை, தாம் எதிர்காலத்தில் பெற நினைக்கும் சிறு தேர்தல் வெற்றிகளை இலக்காகக் கொண்டவையா என்கிற சந்தேகமும் பலமாக எழுகின்றது.  

“தமிழ் மக்கள் பேரவையின் கொள்கை, குறிக்கோள்களுக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சில பேரவையில் அங்கம் வகிக்கின்றன. இந்த நிலையில், அந்தக் கட்சிகள் கூட்டமைப்பில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லை? என்கிற முடிவுக்கு வர வேண்டும். இல்லையென்றால், அது மக்களைக் குழப்பும் செயலாகவே இருக்கும்” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.  

இதற்குப் பதிலளித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்று சரியான தருணத்தில் முடிவு எடுக்கப்படும்” என்றிருக்கின்றார்.   

அத்தோடு, “கூட்டமைப்பின் சிதைவுக்கு இரா.சம்பந்தனே காரணமாக இருப்பார்” என்றும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.  

தமிழ் மக்கள் பேரவை, தேர்தல் அரசியலுக்கு அப்பாலானது என்கிற நிலையில், பேரவையை முன்வைத்து நிகழ்த்தப்படுகின்ற புதிய தலைமை என்கிற உரையாடல்களைப் பேரவைக்குள் இருக்கும் கட்சிசாரா முக்கியஸ்தர்களே விரும்புவதில்லை. அது தொடர்பில் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டும் வந்திருக்கின்றார்கள்.   

ஆனால், பேரவையை தேர்தல் அரசியலின் தொடுப்பாக முன்னெடுத்துச் செல்வது அல்லது அதனை அத்திவாரமாகக் கொண்டு புதிய அணியொன்றை உருவாக்கிக் கொள்வது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களுக்கும், இன்னும் சில தரப்புகளுக்கும் பெரும் ஆர்வம் உண்டு. அதன்போக்கிலான எண்ணங்களை அவர்கள் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றார்கள்.   

அதன் ஒரு வடிவமே சி.வி. விக்னேஸ்வரனைத் தலைமையேற்கக் கோரும் அழைப்புகள் என்றும் கொள்ள வேண்டியிருக்கின்றது.  

இந்த இடத்தில், தமிழரசுக் கட்சிக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றவர்களை ஒன்றிணைக்கும் திட்டமொன்றை தெளிவாகவும் திடமாகவும் முன்னெடுப்பதில் மாற்று அணிக்குத் தலைமையேற்க முயலும் தரப்புகள் கடந்த ஏழு வருடங்களில் தவறியிருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.   

அவர்கள், திட்டங்களை முன்னெடுக்க முனைந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அது தட்டுத்தடுமாறி கவிழ்ந்து போயிருக்கின்றது. அப்படியான நிலையில், மக்களைப் புதிய தலைமையொன்றின் மீது நம்பிக்கை கொள்ள வைப்பதிலுள்ள சிக்கல் தொடர்ந்து வருகின்றது.   

மாறாக, கன்னை பிரித்துக் கொண்டு சண்டையிடுவதனூடு எல்லாமும் கடந்து போய்க் கொண்டிருக்கின்றன.   
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் எதிர்காலத்தில் தேர்தல் கூட்டணியொன்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் பலமாகவே இருக்கின்றன. 

அது, யாழ்ப்பாணத்திலிருந்து குறைந்தது இரண்டு நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கைகளின் போக்கிலானது. அதாவது, கூட்டமைப்பின் மீது மக்களுக்கு உள்ள பலமான அதிருப்தியை மடைமாற்றித் தங்களது வெற்றிகளாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற அடிப்படையிலானது.   

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் 15,000 வாக்குகளைப் பெற்றது. கூட்டமைப்பில் போட்டியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் சுமார் 30,000 விரும்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இந்த இரு வாக்குகளின் மொத்த எண்ணிக்கையையும் சேர்க்கும் போது 45,000 என்கிற கணிசமான தொகை கிடைக்கின்றது. இதனை ஒரு வகையில் நம்பிக்கையின் புள்ளியாகவும் அவர்கள் இருவரும் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.  

ஆனால், முன்னணிக்குக் கிடைத்த 15,000 வாக்குகள் தனிக்கட்சிக்கான வாக்குகள். ஆனால், சுரேஷ் பிரேமச்சந்திரனுக்குக் கிடைத்த விரும்பு வாக்குகள் என்பது கூட்டமைப்பு என்கிற கட்சி அடையாளத்தினூடு பெறப்பட்டது. அதில், சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கான ஆதரவு வாக்குகள் காணப்பட்டாலும், அதில் குறிப்பிட்டளவானவை கூட்டமைப்பு அபிமானம் சார்ந்தவை.   

ஆக, 45,000 என்கிற கணிசமான வாக்குகளின் நோக்கில் பிழையிருக்கின்றது. அதனை முன்வைத்து, புதிய நகர்தலுக்கான ஆரம்பங்களைக் கொண்டால் ஏமாற்றமாக முடியலாம். இந்த இடத்தில்தான் அவர்களுக்கு சி.வி. விக்னேஸ்வரனின் ஆதரவு அவசியமாகின்றது.   

அது, 10,000- 20,000 வாக்குகளையாவது கொண்டு வந்து சேர்க்கும் என்கிற நம்பிக்கையின் போக்கிலானது. அத்தோடு, கூட்டமைப்பு மீதான மக்களின் அதிருப்திகளை எவ்வாறு வாக்குகளாக மாற்றுவது என்கிற போக்கிலும் ஆனது. அடுத்த பொதுத் தேர்தலில் குறைந்தது 60,000 வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தால், புதிய அணியின் பக்கம் சுரேஷ் பிரேமச்சந்திரன் தைரியமாக நகருவார். அப்போது, அவர் கூட்டமைப்பினை விட்டுச் செல்வது தொடர்பில் எந்தவித யோசனையையும் கொள்ளமாட்டார்.  

இன்னொரு புறத்தில் கூட்டமைப்புக்குள் இருந்து சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்ஐ வெளியேற்றுவது தொடர்பில் தமிழசுக் கட்சி பெரும் முனைப்போடு இருக்கின்றது. ஏனெனில், தங்களுடைய முடிவுகளுக்கு எதிர்வினையாற்றும் தரப்பு கூட்டமைப்புக்குள் இருப்பதை தமிழரசுக் கட்சி விருப்புவதில்லை.

அத்தோடு, கூட்டமைப்பு என்கிற அடையாளத்தை ஒட்டுமொத்தமாகத் தன்னுடைய அடையாளமாக வைத்துக் கொள்வதற்கான பாதையை தமிழரசுக் கட்சி வகுத்துக் கொண்டு செயற்படுகின்றது. அதற்கு அச்சுறுத்தலான அனைவரையும் அகற்றுவதில் குறியாக இருக்கின்றது. 

இந்த இடத்தில் கூட்டமைப்புக்கு எதிரான மக்களின் அதிருப்தியைத் திரட்டிக் கொண்டு கஜேந்திரகுமாரும் சுரேஷும் ஓரணியில் செல்வதை தமிழரசுக் கட்சி விரும்பாது.  

மாறாக, அவர்கள் இருவர் மீதான எஞ்சிய நம்பிக்கைகளையும் கலைத்துவிட்டு, அகற்றம் செய்ய எத்தனிப்பார்கள். அது, தமிழரசுக் கட்சிக்கு (கூட்டமைப்புக்கு) எதிரான, ஒரு பலமற்ற வாக்கு அரசியலில் தேறாத ஒரு குழுவொன்றை, எதிர்த்தரப்பாக வைத்துக் கொள்ளும் நோக்கிலானது.   

அந்த நிலைகளைக் கடந்து வெற்றிகரமான தரப்பாக மாறுவதற்கான முனைப்புகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பெற வேண்டும் என்றால் அவர்கள் கடுமையான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  அது, இலகுவாகக் கணிக்கும் வெற்றிகளுக்கு அப்பாலானது.    

- See more at: http://www.tamilmirror.lk/192021/கஜன-ன-த-டர-அழ-ப-ப-வ-க-க-ய-ன-ந-ர-கர-ப-ப-ச-ர-ஷ-ன-தயக-கம-#sthash.dfCz9poL.dpuf
Categories: merge-rss

பந்தாடப்படும் கேப்பாப்புலவு

அரசியல்-அலசல் - Wed, 22/02/2017 - 08:05
பந்தாடப்படும் கேப்பாப்புலவு
 
 

article_1487748986-keppa-new.jpg

 

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு, சூரியபுரம், சீனியாமோட்டை மற்றும் பிரம்படி ஆகிய பகுதியில் வசித்த மக்கள், யுத்தம் காரணமாக அப்பகுதிகளில் இருந்து கடந்த 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெயர்ந்த நிலையில், 2009 ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதிகளில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.   

இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள், வவுனியா, செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், நலன்புரி நிலையங்களை மூட அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அம்மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். 

அதன்போது, கேப்பாபுலவு கிராம சேவையாளர் பிரிவின் கீழான மக்களை  அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றாது,  சீனியாமோட்டைப் பகுதிக்கு அருகில் இருந்த தனியாருக்குச் சொந்தமான காணிகள் மற்றும் அருகில் இருந்த காட்டுப் பகுதிகளைத் துப்பரவு செய்து, 2012 ஒக்டோபர் மாதக் காலப்பகுதியில் மீள்குடியேற்றப்பட்டனர். 

அதற்கு அந்த மக்கள் சம்மதிக்காத போது, “உங்களின் சொந்த காணிகளில் வெடிபொருட்கள் உள்ளன. அவற்றை அகற்ற வேண்டும். அதுவரையில் இந்த இடத்தில் குடியேறுங்கள்” என, எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காத நிலையில், தகரக் கொட்டைகைகளுக்குள் குடியேற்றப்பட்டனர்.  

2013ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சானது,  இலங்கை இராணுவத்தின் 59ஆம் படைபிரிவினரைக் கொண்டு, 165 வீடுகளை நிர்மாணித்து, அப்பகுதிக்கு ‘கேப்பாப்புலவு மாதிரிக் கிராமம்’ எனப் பெயர்சூட்டி, பெயர் பலகையும் நாட்டப்பட்டது. பின்னர், கடந்த வருடம் அந்தப் பெயர்ப் பலகையில், ‘கேப்பாப்புலவு கிராமம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

இவ்வாறு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு வீடும், 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் கட்டிக்கொடுக்கப்பட்டது. ஆனால், அதன்பெறுமதி 2 இலட்சமும் இல்லை என, வீட்டைப் பெற்றுக்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். 

அத்துடன், அங்கு வசிக்கும் மக்கள், தங்களுக்கு மாதிரிக் கிராமம் தேவையில்லை என்றும் தங்களது சொந்த இடமே தேவை எனவும் கூறி, கடந்த 5 வருடகாலமாகப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் பயனாக, சீனியாமோட்டை மற்றும் பிரம்படி பகுதிகளில், மீள்குடியேற்றம் இடம்பெற்றதுடன், சூரியபுரத்தின் ஒரு பகுதியிலும் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டது. 

இருப்பினும், பிலக்குடியிருப்பில் 84 குடும்பங்களும் கேப்பாப்புலவில் 145 குடும்பங்களும், இன்னமும் மீளக்குடியேற்றப்படவில்லை. அவர்களுக்குச் சொந்தமான 525 ஏக்கர் காணியினை, விமானபடையினரும் இராணுவத்தினர் கையகப்படுத்தி, பாரிய படைமுகாமை அமைத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாபுலவு ஊடாக முல்லைத்தீவு செல்லும் வீதியில் தமது படைத்தளத்தின் முன்பாகச் செல்லும் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரமான வீதியினை பொதுமக்களின் பாவனைக்குத் தடைசெய்துள்ள படையினர், அதனை தமது பாவனைக்குப் பயன்படுத்துகின்றனர். இதனால், அந்தப் பகுதியால் செல்லும் மக்கள், ஒரு கிலோமீற்றர் தூரத்தைக் கடப்பதற்கு, சுமார் 4 கிலோமீற்றர் தூரம் காட்டுப் பாதையால் செல்ல வேண்டியுள்ளனர். 

இவ்வாறான நிலையில், தமது சொந்தக் காணிகளைக் கையளிக்குமாறு கோரி, கேப்பாபுலவு மற்றும் பிலக்குடியிருப்பு மக்கள், கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கிராமம் இருந்த இடத்தில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள புதிய மாதிரிக் கிராமத்துக்குள், 165 வீடுகள், பாடசாலை, கிராம சேவையாளர் அலுவலகம், பொதுநோக்கு மண்டபங்கள், வீதிகள், மதகுகள் என அனைத்தும் இடமாற்றப்பட்டுள்ளன.  

“இவை எவையுமே எமக்குத் தேவையில்லை. எமக்கு தேவை, எமது சொந்த நிலமே. அங்கே எமக்கு எந்த வசதியும் செய்து தரத் தேவையுமில்லை. எம்மை எமது சொந்த இடத்துக்குச் செல்ல அனுமதித்தால், எமக்குத் தேவையானவற்றை நாமே தேடிக்கொள்வோம். எமக்கு எமது நிலமே வேண்டும்” எனக் கோரியே, அப்பகுதி மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

article_1487747531-air.jpgவிமானப்படைப் பேச்சாளர்
- குரூப் கெப்டன் சந்திம அல்விஸ்

''ஆரம்பத்தில், இந்தக் காணி வனஇலாகா திணைக்களத்துக்குரியது என்றே தெரிவிக்கப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்குச் சொந்தமான காணியும் அதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து. அது குறித்துத் தேடிப் பார்த்ததில், மக்களுக்குச் சொந்தமான காணிகளும் அதில் அடங்குவதாக அறியக்கிடைத்தது. 

இது தொடர்பில், அரசாங்க அதிகாரிகளினால் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முகாம் அமைந்துள்ள பகுதியில், மக்களுக்குச் சொந்தமாக எவ்வளவு காணிகள் உள்ளன? அவை எத்தனை பேருக்குரியவை என்பது தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அந்த ஆய்வின் இறுதியில், அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமையவே, காணி விடுவிப்பு தொடர்பான முடிவு எட்டப்படும். முகாம் பகுதியிலிருந்து, மக்களுக்குச் சொந்தமான பகுதியை மாத்திரம் விடுவிப்பதாயின், முகாமின் பாதுகாப்பு தொடர்பிலும் அவதானம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

அல்லது, முழு முகாமும் அமைந்துள்ள மொத்தக் காணியையும் விடுவிப்பதாயின், ஜனாதிபதி, பாதுகாப்புத் தரப்பு, என மேலிடங்களே, அது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும். அங்கிருந்து முகாமை அகற்ற வேண்டுமென அவர்கள் உத்தரவிட்டால், விமானப்படை அதற்கான நடவடிக்கையை எடுக்கும்". 

 

article_1487747769-adai.jpgநாடாளுமன்ற உறுப்பினர் -
செல்வம் அடைக்கலநாதன்

“கேப்பாப்புலவு விவகாரம் தொடர்பில், உடன் நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இவ்வாரத்தில், நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை முன்வைக்கவும் எதிர்ப்பார்த்துள்ளோம். ஏற்கெனவே, கவனயீர்ப்பு முறையிலான ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை, நாடாளுமன்றத்தில் முன்வைத்தோம். 

இவ்விகாரம் தொடர்பில், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடமும் முறையிட்டுள்ளோம். மேலும், அனைத்து உயர்ஸ்தானிகர் அலுவலகங்களிலும் முறைப்பாடுகளைச் செய்து, இப்பிரச்சினை தொடர்பில், அவர்களின் அவதானத்தையும் ஈர்த்துள்ளோம். 

 இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கையை முன்வைக்கவுள்ளோம். இது சம்பந்தமான நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தை நாளை (இன்று) நடத்தத் தீர்மானித்துள்ளோம்.  
 இந்தக் காணி மீட்புப் போராட்டம், பாடசாலை ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் நடத்தப்பட்ட வேண்டும்.

நாங்கள் அனைவரும் சேர்ந்தே முடிவெடுத்தோம். இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை சொல்வதினால், எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. மேலும், இந்தக் காணி விடுவிப்பு சம்பந்தமாக, எல்லா விதத்திலும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம்“.   

 

article_1487747954-roshan.jpgஇராணுவப் பேச்சாளர் -
பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன

முல்லைத்தீவு மாவட்டத்தில், இராணுவத்தினர் வசமிருந்த 243 ஏக்கர் காணிகள், இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னமும், இராணுவத்தினர் வசம் எத்தனை ஏக்கர் பொதுமக்களின் காணிகள் உள்ளன என்பது தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக்கூடிய வசதிகள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்குமாறே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இராணுவத் தளபதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
தவிர, கேப்பாப்பிலவு காணி விவகாரம் தொடர்பில் மாத்திரம், இராணுவத் தளபதியுடன், ஜனாதிபதி பேசவில்லை. 

இப்பேச்சுவார்த்தையின் போது, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து, விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிப்பதாகவே, இராணுவத் தளபதி உறுதியளித்தார். 

வெகு விரைவில், விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பான விவரங்களும், இராணுவத்தினர் வசம், பொதுமக்களுக்குச் சொந்தமான எத்தனை காணிகள் உள்ளன என்பது தொடர்பான விவரங்களும் வெளியிடப்படும்”. 

 

article_1487748284-suresh.jpgமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 
- சுரேஸ் பிரேமசந்திரன்

“ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி என்ற அடிப்படையில், கேப்பாபிலவு- பிலக்குடியிருப்பு மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பிலான ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம். 

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிக்தி ஆனந்தன், ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு அடிக்கடி சென்று வருகிறார். அதேபோல், எமது கட்சிப் பிரதிநிதிகளான வரிகரன் உள்ளிட்டோரும் அங்கு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர். 

ஆகவே, எங்களைப் பொறுத்தமட்டில், அந்த மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென, ஊடகங்கள் வாயிலாக சம்பந்தப்பட்டோருரிடம், தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். இந்தப் போராட்டம், மக்கள் போராட்டமாக மாற்றமடைவதற்கு, எங்களாலான களப் பணிகளைச் செய்து வருகின்றோம்”. 

 

article_1487748420-swami.jpgமீள்குடியேற்ற அமைச்சர்
 - டீ.எம்.சுவாமிநாதன்

“பாதுகாப்புத் தரப்பினரால், குறித்த காணி விடுவிக்கப்படும் பட்சத்தில், அக்காணிகளுக்கு உரித்துடைய மக்களை, அங்கு மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை, மீள்குடியேற்ற அமைச்சு மேற்கொள்ளும். தவிர, காணியை விடுவிப்பது தொடர்பான முடிவை, அமைச்சினால் எடுக்க முடியாது. 

மனிதாபிமான அடிப்படையிலேயே, கேப்பாப்புலவு மக்களின் காணி விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியுடன் பேசினோம். முகாம் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரினோம். தவிர, இது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சினால் வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியாது.

காணியை விடுவிக்கும் பொறுப்பு, பாதுகாப்புத் தரப்பிடம் உள்ளது. அதற்கான உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்குரியது. இவை இடம்பெற்று, காணி விடுவிக்கப்பட்டால், மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள், அமைச்சினால் உடன் முன்னெடுக்கப்படும்”.

 

article_1487748603-ruba-new.jpgமுல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்
- ரூபவதி கேதீஸ்வரன்

“மக்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில், அரசாங்கத்தால் இதுவரை எவ்விதத் தகவல்களும் அறிவுறுத்தல்களும் மாவட்டச் செயலகத்துக்குக் கிடைக்கவில்லை.
குறித்த மக்களைச் சந்தித்துக் கால அவகாசம் கோரியிருந்தேன். அதற்கு அவர்களும் சம்மதிக்கவில்லை.   

இப்பிரச்சினை, தேசியப் பாதுகாப்புத் தொடர்பானது என்பதால், அரசாங்கத்தின் அறிவுறுத்தல் இன்றி என்னால் எதுவும் செய்ய முடியாது”.  

- See more at: http://www.tamilmirror.lk/192030/பந-த-டப-பட-ம-க-ப-ப-ப-ப-லவ-#sthash.SeEgmiMn.dpuf
Categories: merge-rss