yarl-world-news

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 22/02/17

 

இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

ஆட்கடத்தல்காரர்களால் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்தை விபரிக்கும் ஒரு பெண். கடந்த வருடம் பெரும்பாலும் அல்பீனியாவில் இருந்து பிரிட்டனுக்கு கடத்தி வரப்பட்ட மூவாயிரம் பேரில் இவரும் ஒருவர்.

மொசூலில் தற்கொலை தாக்குதல் நடத்திய பிரிட்டிஷ்காரர். குவாண்டநாமோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டதற்காக நஸ்ட ஈடும் பெற்றவர் இவர்.

இங்கிலாந்து நகர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்க அரும்பொருட் பிரதிகள். ஆயிரக்கணக்கான டாலர்கள் பெறுமதியானவை.

Categories: merge-rss, yarl-world-news

திருவிழாவில் பயங்கரம்! 60 அடி தேர் கவிழ்ந்து கோர விபத்து: அதிர்ச்சி காணொளி

திருவிழாவில் பயங்கரம்! 60 அடி தேர் கவிழ்ந்து கோர விபத்து: அதிர்ச்சி காணொளி

 

இந்தியாவில் கோவில் திருவிழாவின் போது 60 அடி தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் திருவிழாவிலே இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

 

 

குறித்த தேர் திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர் பக்தியுடன் தேரை இழுத்துக்கொண்டிருந்த போது, திடீரென தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்துள்ளது. இதில் தேரின் சக்கரத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

தேர் கவிழும் நிகழ்வை சம்பவயிடத்திலிருந்த நபர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசி கெமரா மூலம் பதிவு செய்துள்ளார். தற்போது, குறித்த அதிர்ச்சி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

 

 
 

http://www.virakesari.lk/article/16938

Categories: merge-rss, yarl-world-news

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 21/02/17

இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள தெற்கு சூடான் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ நா அறிவிப்பு. நாட்டில் அரைவாசி மக்களுக்கான உணவு உதவி தேவைப்படுகிறது.

அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெஃப்டனெண்ட் ஜெனரல் மெக்மாஸ்டரை டிரம்ப் அறிவித்துள்ளார். பதவி நீக்கப்பட்ட மைக்கில் ஃபிலினுக்கு பதிலாக இவர் பொறுப்பேற்பார்.

கெச்சப்பை அதன் பாட்டிலில் இருந்து முழுமையாக காலி செய்வது எப்படி? அதற்கு ஒரு வழி கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

 

Categories: merge-rss, yarl-world-news

இலங்கை யுத்தத்தை திரையில் காட்ட முனைந்த மலேசிய பெண்ணிற்கு நேர்ந்த கதி

இலங்கை யுத்தத்தை திரையில் காட்ட முனைந்த மலேசிய பெண்ணிற்கு நேர்ந்த கதி 

 

 

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை மையமாக வைத்து எடுத்த ஆவணப்படத்திற்கு, முறையான அனுமதி பெறப்படாத குற்றத்திற்காக பெண் பட இயக்குனர் ஒருவரை மலேசிய நீதி மன்றம் குற்றவாளியாக இனம் கண்டுள்ளது. 

sri-lanka.jpg

மலேசியாவின் கோலாலம்பூர் நகரை சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான லீனா ஹென்றி என்பவர், இலங்கையில் இடம்பெற்ற 26 வருட கால யுத்தத்தை ஒரு ஆவணப்படமாக எடுத்து, பட தணிக்கை குழுவின் அனுமதி ஏதும் பெறாமல் படத்தை திரையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

lena__1_.jpg

மேலும் குறித்த ஆவணப்படத்தில், தணிக்கை கட்டுப்பாடுகளை மீறி, யுத்த நிறுத்த வலயங்கள் மற்றும் யுத்தகள கொலைகளை காண்பித்த குற்றத்தை உறுதி செய்து, பட தணிக்கை மோசடியில் கீழ் வழக்கு பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லீனா கடந்த 2013ஆம் ஆண்டு இதே நீதிமன்றத்தினால் குற்றமற்றவராக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார். குறித்த தீர்ப்பை அளித்த நீதிபதிதான் தற்போதய தீர்ப்பையும் அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

அத்தோடு குறித்த தணிக்கை மோசடியிற்காக லீனாவிற்கு மூன்று வருட சிறை அல்லது 17 இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்படவும், அல்லது இரண்டு தண்டனையும் ஒன்றாக வழங்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய நீதிமன்றின் தீர்ப்பினை பற்றி கருத்து தெரிவித்துள்ள லீனா, நீதி மன்றம்  தீர்ப்பு தன்னை ஏமாற்றியுள்ளதாகவும், வழக்கு குறித்த போதுமான ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை, தீர்ப்பு வெறுமனே வழக்கறிஞ்சரின் குற்றசாட்டுகளை மையப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து தான் மேன்முறையீடுகளை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது  .   

http://www.virakesari.lk/article/16913

Categories: merge-rss, yarl-world-news

ஐ.நா அலுவலகத்தில் உயிரிழந்த ரஷ்ய தூதுவர்..

ஐ.நா அலுவலகத்தில் உயிரிழந்த ரஷ்ய தூதுவர்.. 

 

 

ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் வதிவிட தூதுவர் விடாலி ஜுர்க்கின், அவரது அலுவலகத்தில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

churkin-3.jpg

நேற்று (20ஆம் திகதி) தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே, விடாலி ஜுர்க்கின் இறந்துள்ளதாக,  ரஷ்யாவின் நிரந்தர ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜுர்க்கின் சுமார் 40 வருடங்களை ரஷ்யாவின் தேசிய பணிக்காக அர்பணித்துள்ள நிலையில், 20 வருடங்கள் பெல்ஜியம் மற்றும் கனடாவிற்கான  உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின்  ஐ.நாவிற்கான வதிவிட தூதராக பணியாற்றி வந்துள்ளார்.

மேலும் விடாலி  ஜுர்க்கின் உயிரிழந்த சம்பவம், ஐ.நா அலுவலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Categories: merge-rss, yarl-world-news

ஆஸ்திரேலியா: வணிக வளாகத்தில் விழுந்து நொறுங்கிய விமானம். அதிர்ச்சி தகவல்

ஆஸ்திரேலியா: வணிக வளாகத்தில் விழுந்து நொறுங்கிய விமானம். அதிர்ச்சி தகவல்
 

செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (07:42 IST)

 

ஆஸ்திரேலியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகிய மெல்போர்னில் சற்று முன்னர் வணிக வளாகம் ஒன்றின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது.

1487643382-8704.jpgplane crash" width="600" />
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் மீட்புப்படையினர் விரைந்து மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.

இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து சரியாக தெரியவில்லை என்றும் இதுகுறித்த தகவல் மிக விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை செய்ய ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.,

http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/plane-crashes-into-melbourne-shopping-centre-117022100008_1.html

Categories: merge-rss, yarl-world-news

மனிதர்களின் வேலைகளை திருடும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும் – பில்கேட்ஸ்

மனிதர்களின் வேலைகளை திருடும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும் – பில்கேட்ஸ்

மனிதர்களின் வேலைகளை திருடும் எந்திர மனிதன் எனப்படும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும் என மைக்ரோசொப்ட்  கணிணி நிறுவன அதிபரும், உலகின் முதலாவது பணக்காரருமான பில்கேட்ஸ்வலியுறுத்தியுள்ளார்.

ரோபோக்கள்  தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றதனால்  மனிதர்கள் செய்யும் வேலைகள் ரோபோக்களால் திருடப்படுகின்றன எனவும்  எனவே, பணியில் அமர்த்தப்படும் ரோபோக்களுக்கு வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனிதர்களுக்கு  அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலையினை  தவிர்ப்பதற்காகவே  நிறுவன உரிமையாளர்கள் ரோபோக்களை பயன்படுத்துகின்றனர் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகளில் மனிதர்கள் வேலை செய்யும் போது  வருமான வரி, சமூக பாதுகாப்பு வரி உள்ளிட்ட பலவகையான வரிகள் விதிக்கப்படுகின்றன எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதே போன்று தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படும் ரோபோக்களுக்கும் வரிகள் விதிக்கப்பட்டு அவை வசூலிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/18469

Categories: merge-rss, yarl-world-news

ஈரான் சக்திவாய்ந்த அதிநவீன ஏவுகணையை பரிசோதித்துள்ளது

ஈரான் சக்திவாய்ந்த அதிநவீன ஏவுகணையை பரிசோதித்துள்ளது

 

ஈரான்  மூன்றுநாள் ராணுவ போர் ஒத்திகை ஒன்றை  இன்று ஆரம்பித்துள்ளது.  ஈரானின் மத்திய பகுதியில் உள்ள பாலைவனத்தில்  இடம்பெற்ற இந்த  ஒத்திகையின்போது, சக்திவாய்ந்த அதிநவீன  ஏவுகணையை ஏவி பரிசோதித்ததாகவும்  இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை  பரிசோதனை செய்ததனைத் தொடர்ந்து  அதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருந்த அமெரிக்கா, ஈரானை கண்காணிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/18419

Categories: merge-rss, yarl-world-news

நேத்து ராத்திரி - சுவீடனில... ஹம்மா.. இது டொனால்ட் டிரம்ப் ஸ்டைல்.

நேத்து ராத்திரி - சுவீடனில... ஹம்மா.. இது டொனால்ட் டிரம்ப் ஸ்டைல்.

நேத்து ராத்திரி சுவீடனில நடந்த விசயத்தினை பாருங்கள்... நான் ஏன் பாதுகாப்பு தொடர்பில் அலெர்ட் ஆக இருக்கிறேன் என தெரிய வரும் என்று சொன்னாலும் சொன்னார் டிரம்ப்.

அவர் குறிப்பிடட நேத்து இரவு... அதாவது வெள்ளிக்கிழமை சுவீடனில் எந்த ஒரு தீவிரவாத நிகழ்வும் நடக்கவில்லை.

இது குறித்து, அமெரிக்க அதிகாரிகளிடம், சுவீடன் அரசு விளக்கம் கேட்க.... முழித்த வெள்ளை மாளிகை... டிரம்ப் இடம் கேட்க... அதுதான் FOX நியூஸ்ல அப்படி சொன்னாங்களேப்பா, அதைத்தான் சொன்னேன்.. என்று நம்ம கப்டன் ஸ்டைல சொல்லி இருக்கிறார்.

அந்த நியூஸ்ல... சுவீடனில் அதிகமாக வரும் அகதிகளினால்  உண்டாகும் பிரச்சனைகள். என்றே சொல்லப் பட்டது. தீவிரவாதம் குறித்து அல்ல என்று பின்னர் தெளிவானது.

முன்னாள் சுவீடன் பிரதமர், அவர் என்ன புகை விடுகிறார் என்று (கரடி விடுகிறார் என்பது போலவும், போதைப் பொருள் புகைப்பது போலவும் ... இரட்டை அர்த்தத்தில்) டீவ்வீட் பண்ணினார்.

இப்போது சமுக வலைத் தளங்களில் வறு படுகிறார்.... பொறுப்பு இல்லாமல் பேசும் டொனால்ட் டிரம்ப்.

யாழுக்காக எனது மொழி பெயர்ப்பு.

http://www.bbc.co.uk/news/world-us-canada-39023978

Categories: merge-rss, yarl-world-news

2.5 லட்சம் டாலருக்கு சற்றே குறைவாக ஏலம் போன ஹிட்லரின் தொலைபேசி

 
2.5 லட்சம் டாலருக்கு சற்றே குறைவாக ஏலம் போன ஹிட்லரின் தொலைபேசி
 
 

அமெரிக்காவில் நடைபெற்றுள்ள ஒரு ஏலத்தில் இரண்டாம் உலகப்போரின்போது, அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று, 2 லட்சத்து 43 ஆயிரம் டாலருக்கு விலைக்கு ஏலம் போயிருக்கிறது.

ஹிட்லர்படத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES

இந்த தொலைபேசியை வாங்கியவரின் அடையாளம் எதுவும் வெளியிடப்படவில்லை.

 

நாஜிக்களின் தலைவரான அடோல்ஃப் ஹிட்லரின் பெயர், ஒரு ஸ்வஸ்திகை அடையாளம் மற்றும் நாஜிக்களின் அடையாளமான பருந்து ஆகியவை பொறிக்கப்பட்டுள்ள சிவப்பு நிற தொலைபேசி 1945 ஆம் ஆண்டு பெர்லினின் பதுங்கு குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

 

தொலைபேசிபடத்தின் காப்புரிமைPATRIK STOLLARZ/AFP/GETTY IMAGES

எல்லா காலத்திற்கு மிகவும் அழிவுக்குரிய ஆயுதமென இந்த தொலைபேசியை ஏலமிட்டுள்ள மேரிலேண்டிலுள்ள ஏல நிறுவனம் விவரித்துள்ளது.

http://www.bbc.com/tamil/global-39024483

Categories: merge-rss, yarl-world-news

இந்தியாவில் நான்கு கால்கள் இரண்டு ஆணுறுப்புடன் பிறந்த பையன்

 
Indian boy born with 4 legs, 2 penises recovering after surgery

Manveena Suri, for CNN

 

Updated 1:44 AM ET, Fri February 10, 2017 

 
 
 
 
 
 
 
Photos:
Show Caption
3 of 4
 
Photos:
Show Caption
4 of 4
10 graphic warning single
 
Photos:
Show Caption
1 of 4
 
Photos:
Show Caption
2 of 4
 
Photos:
Show Caption
3 of 4
 
Photos:
Show Caption
4 of 4
10 graphic warning single
 
Photos:
Show Caption
1 of 4
 
Photos:
Show Caption
2 of 4
 
 
 
 
 
 
Story highlights
  • The boy was born with polymelia, a rare birth defect resulting in extra limbs
  • After five hours in surgery he is expected to fully recover
 

New Delhi (CNN)An Indian boy born with four legs and two penises is set to return home after a successful surgery.

Doctors at Bangalore's Narayana Health City described the complexities of the case to local reporters at a news conference Thursday.
The boy, who has not yet been named, was born with polymelia -- a rare congenital birth defect that results in extra limbs or organs, which are usually deformed.
"These are problems that happen from time to time and (are) irrespective of socio-economic status," said Dr. Sanjay Rao, a senior consultant pediatric surgeon at Narayana Health City who performed the procedure. 
Rao told CNN the boy's parents gave him permission to discuss the case publicly.
Categories: merge-rss, yarl-world-news

நடுவானில் தகவல் தொடர்பை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்

நடுவானில் தகவல் தொடர்பை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்
 
 

கடந்த வியாழனன்றுமும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஜெட் ஏர்வேஸ் விமானம்ஜெர்மனி வான்வெளியில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென ஜெர்மனி நாட்டு விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின.

ஜெட் விமானம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பொதுவான நடைமுறையில், ஒரு விமானம், ஒவ்வொரு நாட்டின் வான்வெளி பகுதியை கடந்து செல்லும் போது, சம்பந்தப்பட்ட நாட்டின் விமான கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளிக்கவேண்டும்.

இந்த சம்பவத்தில், 330 பயணிகளை கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் பயணிகள் விமானம், சுமார் 30 நிமிடங்களுக்கு தகவல் தொடர்பற்று இருந்தது என்று செய்திகள் கூறுகின்றன.

சந்தேகம் நேர்ந்ததும், ஜெர்மனியின் விமானப்படையை சேர்ந்த இரண்டு விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை பின் தொடர்ந்து சென்றன என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பிபிசிக்கு விளக்கம் அளித்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் செய்தி தொடர்பாளர், ''முன்னெச்சரிக்கையாக ஜெர்மனி விமானப்படை விமானம், ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் பாதுகாப்பையும், அதில் உள்ள பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்தது,'' என்றார்.

அவர் மேலும், சில நிமிடங்களில் தகவல் தொடர்பு சரிசெய்யப்பட்டது என்றும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசின் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

விசாரணை நடக்கும் வரை, சம்பந்தப்பட்ட விமானிகள் குழு, வழக்கமான நடைமுறைகளின்படி, பணியிலிருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எந்த அசம்பாவிதம் ஏற்படாமல் பயணிகளை பாதுகாப்பாக லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-39021358

 

Categories: merge-rss, yarl-world-news

பிரித்தானிய ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் மாற்றம்

பிரித்தானிய ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் மாற்றம்

one-pound.jpg

பிாித்தானியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் மாற்றம் வரவுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள  ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில்  முப்பதில் ஒன்று போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ள நிலையில்  புதிய நாணயங்களை வெளியிட உள்ள தாக  பிரித்தானிய வங்கி அறிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக வெளியிடவுள்ள புதிய நாணயம் இருவேறு உலோகங்களால் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு பவுண்ட்ஸ் நாணயங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதியில் இருந்து செல்லுபடியாகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/18295

Categories: merge-rss, yarl-world-news

அமெரிக்காவில் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் வேறு நபரிடம் முகம் தானம் பெற்ற இளைஞர்!

Operation-organ-transplant-face%20-youth

அமெரிக்காவில் மின்னெ கோட்டா மாகாணத்தில் உள்ள வுயோமிங் நகரை சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ் (31). கடந்த 2006-ம் ஆண்டு இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் மரணம் அடையவில்லை. முகம் சிதைந்தது. அதனுடன் மனம் வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் டாக்டரிடம் ஆலோசனை பெற்றார். அப்போது மற்ற உறுப்பு போன்று முகத்தையும் தானம் பெற்று மாற்று ஆபரேசன் மூலம் சீரமைக்கலாம் என தெரிவித்தனர். அதற்காக அவர் காத்திருந்தார். இந்த நிலையில் மின்னெ கோட்டாவைச் சேர்ந்த காலன் ரோஸ் என்பவர் தன்னை தானே துப்பாக் கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி லில்லியின் அனுமதி பெற்று அவரது முகம் தானமாக பெறப்பட்டது.

   

அதைத் தொடர்ந்து ரோஸ் என்பவரின் முகத்தில் இருந்து மூக்கு, தாடைகள், வாய், உதடுகள், நாடி, மற்றும் பற்கள் ஆபரேசன் மூலம் அகற்றி ஆன்டி சான்ட்னெசுக்கு பொருத்தப்பட்டது. இந்த ஆபரேசன் மின்னெ சாட்டாவில் ரோஸ்செய்டர் நகரில் உள்ள மாபேயி கிளினிக்கில் நடைபெற்றது. இந்த ஆபரேசனை முக சீரமைப்பு சிறப்பு நிபுணர் டாக்டர் சமீர் மார்தானி நடத்தினார். ஆபரேசன் முடிந்து 3 வாரங்கள் கழித்து கண்ணாடியில் சான்ட்னெஸ் தனது முகத்தை பார்த்தார். அப்போது தனது முகம் முழுவதும் அழகாக மாறி இருப்பதை பார்த்து அதிசயித்தார். முக மாற்று ஆபரேசனை 60 பேர் கொண்ட மருத்துவ குழு நடத்தியது. மொத்தம் 56 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்காக டாக்டர்களுக்கு சான்ட்னெஸ் பாராட்டு தெரிவித்தார். கணவர் ரோசின் முகத்தை தனக்கு தானமாக அளித்த அவரது மனைவி லில்லிக்கு நன்றி கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=176590&category=WorldNews&language=tamil

Categories: merge-rss, yarl-world-news

இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்காவுக்கு கார்ட்டூன் பதிலடி!

இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்காவுக்கு கார்ட்டூன் பதிலடி!


கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ‘இஸ்ரோ’ ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வரலாறு படைத்தது. பி.எஸ்.எல்.வி. சி - 37 ரக ராக்கெட் 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தபோது, இந்தியாவின் பாய்ச்சலைப் பார்த்து உலகமே வியந்தது. உலகிலேயே ஒரே ராக்கெட்டின் மூலம் அதிக செயற்கைக்கோள்களை செலுத்துவது இதுவே முதன்முறை. இந்த 104 செயற்கைக்கோள்களில் அமெரிக்காவைச் சேர்ந்த  எட்டு செயற்கைக்கோள்களும் அடங்கும். நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி - 37 சுமந்து சென்றது.

இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்காவுக்கு கார்ட்டூன் பதிலடி!

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா‛

இந்தியாவைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய வெற்றி. இந்த வெற்றிக்காக இந்தியா சந்தித்த அவமானங்களும் அதிகம். ஒவ்வொருமுறை இந்தியா விண்வெளிக்கு ராக்கெட்டுகளை ஏவும் போதும் அண்டை நாடான பாகிஸ்தான்  எரிச்சலடையும். பாகிஸ்தான் பத்திரிகைகள் இந்தியாவை ஏளனம் செய்து கார்ட்டூன்கள் வெளியிட்டு மகிழும். பாகிஸ்தான் மட்டுமல்ல, ராக்கெட் தொழில் நுட்பத்தின் முன்னோடியான அமெரிக்காவே, இந்தியாவைப் பார்த்து கைகொட்டி சிரித்திருக்கிறது. கடந்த 2014-ல் இந்தியா செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கல்யான்’ விண்கலனை அனுப்பியது. செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டியது. அமெரிக்காவின்  செவ்வாய் கிரக 'மேவன் மிஷன் ' திட்டத்தின் செலவு 671 மில்லியன் டாலர்கள் என்றால்,  இந்தியாவின் 'மங்கல்யான்' திட்டத்துக்கு வெறும் 70 மில்லியன் டாலர்கள்தான் செலவு.

பொதுவாகவே இந்தியா என்றால் உலக நாடுகளுக்கு மாடுகள்தான் நினைவுக்கு வரும். பல வெளிநாட்டுப் பத்திரிகைகள் இந்தியா பற்றி ஏதாவது ‘கார்ட்டூன்’ வெளியிட்டால், அதில் நிச்சயம் மாடு இடம்பெற்றிருக்கும். இந்தியா மங்கல்யானை ஏவிய போதும் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. பொதுவாக ராக்கெட் தொழில்நுட்பத்தில் ரஷ்யா, அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள்தான் முன்னோடிகள். இந்தியாவுக்கு முதன்முதலில் ராக்கெட் தொழில் நுட்பத்தைத் தந்ததும் ஃபிரான்ஸ்தான்.  
சரி... நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட கார்ட்டூனுக்கு வருவோம்... அதாவது ஒரு அறை இருக்கிறது. அறைக்குள் ராக்கெட் தொழில் நுட்பத்தில் வளர்ச்சிபெற்ற நாடுகள் இருக்கின்றன. அந்த அறையில்  ‘Elite Space Club’ என எழுதப்பட்டிருக்கிறது. கையில் மாடு ஒன்றை பிடித்துக்கும் நபர், அந்த அறையின் கதவைத் தட்டுவார். அவர் மீது ‘இந்தியா' என எழுதப்பட்டிருக்கும். அதாவது  ‘மாடு ஓட்டுபவர்கள் எல்லாம் ராக்கெட் ஏவ வந்து விட்டனர்’ என்பதே அந்த கார்ட்டூனின் அர்த்தம். கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ‛நியூயார்க் டைம்ஸ்’ மன்னிப்பு கேட்டது. 

இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்காவுக்கு கார்ட்டூன் பதிலடி!

சரியாக இரண்டே ஆண்டுகளில் அந்த கார்ட்டுனுக்கு ‘இஸ்ரோ’ பதிலடி கொடுத்துள்ளது. அதுவும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களே, தங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்த இஸ்ரோவை நாடி வரத் தொடங்கியுள்ளன. பி.எஸ்.எல்.வி. - சி ரக ராக்கெட்டுகள் வழியாக இன்னும் 80 அமெரிக்க செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளன. 

இப்போது இந்தியாவின் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ், 'நியூயார்க் டைம்ஸ்’-ன் கார்ட்டூனுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது. டைம்ஸ்-ன் கார்ட்டூன் சொல்வது இதுதான்... ஓர் அறை இருக்கிறது. ‘எலைட் கிளப்’ என எழுதப்படிருக்கிறது. உள்ளே விவசாயி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அருகில் மாடு இருக்கிறது. ஏற்கனவே ‘எலைட் கிளப்’ உறுப்பினர்களாக இருந்தவர்கள் கையில் ராக்கெட்டுடன் வந்து ‘எலைட் கிளப்’ வாயிலைத் தட்டுகிறார்கள். ‘எலைட் கிளப்‘ உறுப்பினர்களை இந்தியா வெளியேற்றி விட்டது என்கிறது இந்தக் கார்ட்டூன். 

சந்தீப் அத்வர்யூ-வின் இந்தக் கார்ட்டூன் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. உலகம் முழுக்கவுள்ள இந்தியர்கள் இந்த கார்ட்டூனை பரப்பி அமெரிக்காவை கிண்டல் செய்து வருகின்றனர். பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாங்கள்தான் முதலிடம் என மார் தட்டும் அமெரிக்காவுக்கு, மூன்று இந்தியப் பெண்கள்தான் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்டை ஏவி பதிலடி கொடுத்துள்ளனர். அதில் சீதா சோமசுந்தரம் என்ற தமிழரும் இருக்கிறார். அந்த வகையில் நாமும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மற்ற இருவர் மினால் ரோகித், நந்தினி ஹரிவாத். இதில் நந்தினி ஹரிவாத் மங்கல்யானுக்கும் திட்ட மேலாளராக இருந்தவர். 

ராக்கெட் தொழில்நுட்பத்தில் இஸ்ரோ முன்னோடி

ராக்கெட் தொழில்நுட்பத்தில் உலகத்துக்கே இந்தியாதான் முன்னோடி. முதன் முதலாக ராக்கெட் குண்டை ஏவியதும் ஒரு இந்தியர்தான். 1780-ல் திப்பு சுல்தானுக்கும் ஆங்கிலேயருக்கும் குண்டூர் அருகே பொல்லிலூர் என்ற இடத்தில் கடும் போர். அப்போது மூங்கிலினால் உருவாக்கிய ராக்கெட் குண்டுகளை திப்பு படையினர் பயன்படுத்தியுள்ளனர். மூங்கில் ராக்கெட்டுகளால் நிலை குலைந்த ஆங்கிலேயப் படை புறமுதுகிட்டு ஓடியது. போர் முடிந்ததும் அந்த இடத்துக்கு வந்த, பிரிட்டன் படையினர் சிதறிக் கிடந்த, மூங்கில் ராக்கெட்டுகளின் பாகங்களைப் பிரிட்டனுக்குக் கொண்டு சென்று ஆராய்ந்தது தனிக் கதை. லண்டன் அருகே உல்ரிச் என்ற இடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில், அந்த மூங்கில் ராக்கெட்டுகளின் பாகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் விர்ஜினியாவில் உள்ள நாசாவின் ராக்கெட் எரிபொருள் தயாரிப்பு மையத்தில், திப்பு சுல்தானின் படைகள் ஆங்கிலேயருடன் போரிடுவது போன்ற ஓவியம் இடம்பெற்றதும் இதன் காரணமாகவே. உலகத்துக்கே ராக்கெட் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்திய இந்தியர்களைத்தான் ‘நியூயார்க் டைம்ஸ்’ கிண்டல் செய்தது. 

விண்வெளியில் வெற்றிபெற இரு விஷயங்கள் முக்கியம். ஒன்று செயற்கை கோள். மற்றொன்று அதனை ஏவும் Launch Vehicle - என அழைக்கப்படும் ராக்கெட்டுகள். கடந்த 1970-ம் ஆண்டு இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தில் கால் வைத்தது.  PSLV ராக்கெட்டுகளுக்கு தேவையான ‘விகிங் இன்ஜின்’ தொழில்நுட்பத்தை ஃபிரான்ஸ் இந்தியாவுக்கு அளித்தது. அதனை இந்திய விஞ்ஞானிகள் மேம்படுத்தி உள்நாட்டிலேயே ராக்கெட்டுகளைத் தயாரிக்கத் தொடங்கினர். எஸ்.எல்.வி-3  (Satellite Launch Vehicle3-) அடுத்து ஏ. எஸ்.எல்.வி.  (ASLV- Augmented Satellite Launch Vehicle)  பி. எஸ்.எல்.வி.  (PSLV -Polar Satellite Launch Vehicle)  ரக ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டன. இதில் PSLV ராக்கெட்டுடன் அதிக சக்திகொண்ட பூஸ்டர்களையும், பெரிய பெரிய மோட்டார்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட PSLV-XL உதவியுடன்தான் ‘சந்திரயான் -1’ சந்திரனுக்குச் சென்றது. 

தற்போது அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த ‘கிரயோஜினிக்’ தொழில்நுட்பத்தில் ஜி. எஸ்.எல்.வி.  (GSLV- Geosynchronous Satellite Launch Vehicle). அடுத்து ஜி. எஸ்.எல்.வி மார்க் -3  (Geosyronous  Satellite Launch Vehicle Mark III) தயாரிக்கப்படுகின்றன. இந்த ராக்கெட்டுகள் வழியாக நான்கு டன் எடை கொண்ட செயற்கை கோள்களை விண்ணுக்கு கொண்டு செல்ல முடியும். இந்த வகை ராக்கெட்டுகளில் இறுதிக் கட்டத்தில் பயன்படும் வகையில், 25 டன் எடை ‘கிரையோஜெனிக்’ எரிபொருள் இருக்கும். 

இந்தியாவில் இருந்து தங்கள் ராக்கெட்டுகளை ஏவுவதற்கு பல நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன. செலவும் குறைவு, தொடர்ச்சியாக கண்ட வெற்றிகள் ‘இஸ்ரோ’ மீது நம்பிக்கையையும் மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் கேலிக் கூத்தாக பார்க்கப்பட்ட ஒரு நாடு உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் விண்வெளியும் ஒரு வட்டம்தான்!

http://www.vikatan.com/news/india/81249-perfect-reply-to-america-who-made-comment-on-isro-through-cartoon.html

Categories: merge-rss, yarl-world-news

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 17/02/17

 

இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

* தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காக டிர்ம்பால் தெரிவானவர், அதனை நிராகரித்துவிட்டார். அதேவேளை பொய் சொல்வதாக ஊடகங்கள் மீது டிரம்ப் குற்றச்சாட்டு.

* சோமாலியாவில் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக ஐநா எச்சரிக்கை. மக்களும், கால்நடைகளும் உயிரிழக்க பயிர்களும் அழிகின்றன.

* கால்பந்து ஆடுவதற்கும் ஞாபக மறதி நோய்க்கும் ஆன தொடர்பு குறித்த ஆய்வுக்கு ஐரோப்பிய கால்பந்து அமைப்பு ஆதரவு.

Categories: merge-rss, yarl-world-news

உலகின் 8 ஆவது கண்டமாக புதிய கண்டம் கண்டுபிடிப்பு

உலகின் 8 ஆவது கண்டமாக புதிய கண்டம் கண்டுபிடிப்பு

 

 

நியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகின் 8 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் 7 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு சமுத்திரத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் புதிய நிலப் பகுதியொன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை 8 ஆவது புதிய கண்டமாகக் கருத முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

zealandia.jpg

ஸீலான்டியா என அழைக்கப்படும் அந்தக் கண்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் நியூஸிலாந்துக்கு அருகில் கடலுக்கு மேலாக வெளித் தோன்றிய நிலையில் காணப்படுகிறது. அதன் ஏனைய 94 சதவீதமான பகுதி கடலுக்குள் மூழ்கிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தக் கண்டப் பகுதி உயரமான மலைகளைக் கொண்டமைந்துள்ளது எனவும் அதன் பரப்பளவு 5 மில்லியன் சதுர கிலோமீற்றர் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவுஸ்திரேலிய கண்டத்துடன் அதன் பரப்பளவை ஒப்பிடுகையில் மூன்றில் இரண்டு மடங்கு அளவானதாகும். 

http://www.virakesari.lk/article/16764

Categories: merge-rss, yarl-world-news

54 ஆண்டுகளாக சீன வீரரை சீனாவுக்கு அனுப்பாத இந்திய அரசு!

54 ஆண்டுகளாக சீன வீரரை சீனாவுக்கு அனுப்பாத இந்திய அரசு!

வாங் க்யூ

'தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதால் சிறைப்பிடிப்பு' என்பது நமக்கு ரொம்பவே பழக்கப்பட்ட சர்வ சாதாரணமான செய்தியாகிவிட்டது. சில நேரங்களில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்ற விஷயத்தையும் சின்னப் பெட்டிச் செய்தியாக கடந்துசெல்கிறோம். ஆனால், எல்லை தாண்டிய குற்றத்துக்கு விடுதலை, அவ்வளவு எளிதாக அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த சீனாவைச் சேர்ந்த வாங் க்யூ என்பவர், கிட்டத்தட்ட 54 ஆண்டுகளை இங்கேயே கழித்துள்ளார். அதுபற்றிய சுவையான சம்பவம் இதோ...

சீனாவைச் சேர்ந்த இந்த ராணுவ வீரர், 1963-ம் ஆண்டு இந்தோ - சீனப் போரின் பணியில் இருந்த சமயத்தில்... வழிதவறி நம் எல்லைக்குள் நுழைந்ததால் நம் நாட்டு ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார். அந்தத் தண்டனை முடிந்ததும் தன் நாட்டுக்குச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தவரை ராணுவத்தினர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள டிரோடி என்னும் கிராமத்தில் கொண்டு போய்விட்டனர். பாஸ்போர்ட், விசா போன்ற எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் அவர் அங்கேயே வாழ ஆரம்பித்தார். அந்த ஊரைச் சேர்ந்த பெண்மணியையே திருமணம் செய்துகொண்டார். காலச்சக்கரம் சுழன்றோடியது, வாங் க்யூ 4 பிள்ளைகளுக்கு தந்தையானார். கொஞ்ச காலம் சென்றதும்... பேரப்பிள்ளைகளுக்குத் தாத்தாவும் ஆனார். தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர் உள்ளத்தின் ஓரத்தில் ஓர் ஆசை அவரைத் தூங்கவிடாமல் செய்தது. தான் பிறந்த மண்ணையும், தன் ரத்த சொந்தங்களையும் காண வேண்டும் என்று அவர் ஏங்க ஆரம்பித்தார். 1980-களில் சீனாவில் உள்ள தன் சொந்தங்களுடன் கடிதப் போக்குவரத்தை அமைத்துக்கொண்டார். இது, அவரது சொந்தங்களைக் காண வேண்டும் என்ற ஆசையை இன்னும் தூண்டியது. பல மனுக்கள் கொடுத்தும் இந்திய அரசுக்கு இந்தச் சீன வீரனின் கதறல் கேட்கவே இல்லை.

2009-ல் வாங் க்யூவின் மைத்துனர் இந்தியா வந்து அவரைச் சந்தித்துச் சென்றுள்ளார். 2013-ல் சீன அரசு, வாங் க்யூவுக்கு பாஸ்போர்ட் வழங்கி அனுமதித்தது. ஆனால், இந்திய தரப்பில் அவருக்கு விசா வழங்கப்படவில்லை. தன்னால் சீனா போய் தான் பிறந்த ஊரின் காற்றைச் சுவாசிக்க முடியவில்லையே என்ற பரிதவிப்புடன் இருந்த வாங் க்யூவை, பிரபல செய்தி நிறுவனம் ஒன்று அடையாளம் கண்டு அவரின் 54 ஆண்டுக் கால போராட்டத்தைச் செய்தியாக வெளியிட்டது. இந்தச் செய்தி, இரண்டு நாடுகளிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சீனாவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் வாங் க்யூவுக்கு ஆதரவுக் குரல்கள் கூடின. இதனையுணர்ந்த இந்திய வெளியுறவுத் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகி... வாங் க்யூவை, சீனாவுக்கு அனுப்புவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி  தன் மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் சீனாவுக்குப் பறந்தார் வாங் க்யூ. சீன விமான நிலையத்தில் அவரின் உறவினர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் காத்திருந்தனர். அன்றைய தினம் சீனர்களின் முக்கியப் பண்டிகையான lantern festival என்றழைக்கப்படும் விளக்குத் திருவிழா நடைபெற்றது. விமான நிலையம் சென்ற வாங் க்யூவை அவரின் உறவினர்கள், சகோதரர்கள் கட்டித் தழுவிக்கொண்டனர். 54 வருட ஏக்கங்கள், ஆசைகள் அங்கே சிறு கண்ணீர்த் துளிகளால் கரைக்கப்பட்டது. 

பத்திரிகைக்கு பேட்டி அளித்த வாங் க்யூ, "இந்த நாள் என் வாழ்வில் சந்தோஷமான நாள். என் பால்ய நண்பர்களை, என்னுடன் ராணுவத்தில் பணியாற்றிய சகவீரர்களை நான் தேடிப்போய்  சந்திக்கப் போகிறேன்" என்றார். அவருக்கு சீன அரசாங்கம் அவரின் சொந்த ஊரில் வாழ்வதற்கு இலவசமாக நிலம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

வாங் க்யூ சீனாவுக்குத் திரும்பியதை, சீன - இந்திய நல்லுறவை வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக இரு நாடுகளும் நினைக்கின்றன. ஆனால், பரவலாக எழுப்பப்படும் கேள்வி என்னவென்றால், 40 வருடங்களுக்கு மேலாக வாங் க்யூவின் போராட்டம் சமூக வலைதளங்களை எட்டியதும், அரசு நடவடிக்கை எடுத்து 10 நாட்களில் அவரின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. சாமான்ய மக்கள் போடும் மனுக்கள் அனைத்தும் சாமான்யமான ஒன்று என்ற எண்ணப்போக்கை அரசு அலுவலகங்கள் விட்டொழித்து இருந்தால் வாங் க்யூ, அரை நூற்றாண்டுகள் தன் தாய்மண்ணையும், தன் உறவினர்களையும் பிரிந்து இருக்க நேர்ந்திருக்காது. வாங் க்யூவின் தாயும் மரணப்படுக்கையின் கடைசி நிமிடம்வரை தன் செல்ல மகனின் வருகையை நோக்கிக் காத்திருந்து உயிர் விட்டிருக்க மாட்டார். ஆம், வாங் க்யூவின் தாய் தன் மகனை 43 ஆண்டுகளாகப் பார்க்காமலேயே இறந்துபோனார்.

மத்தியப் பிரதேச நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், 'டிரோடி கிராமத்தில் மேலும் ஒரு சீன ராணுவ அகதியான லியு ஸுரோங், சீனாவில் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் இங்கே திருமணம் செய்துகொண்டு பெரிய குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளது. இவரைப் பற்றி இன்றுவரை எந்த அரசு அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இன்னும் எத்தனை வாங் க்யூக்களும், லியு ஸுரோங்க்களும் தன் வாழ்நாள் முழுக்க அரசின் இரும்புக் கதவுகளுக்குள் அடைபட்டிருக்கிறார்களோ?

http://www.vikatan.com/news/india/81123-chinese-military-man-goes-home-after-50-years-trapped-in-india.html

Categories: merge-rss, yarl-world-news

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்! மூன்று அணிகளும் கடும் போட்டி

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்! மூன்று அணிகளும் கடும் போட்டி ..
 
உ.பி., தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் ஓட்டு சதவீத மாற்றம் வெற்றியை பாதிக்குமா? லக்னோ:ஓட்டு சதவீதத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களும், கட்சிகளின் தேர்தல் வெற்றியை பெரிய அளவில் பாதிக்கும் நிலையில், உ.பி., தேர்தல் களம் அமைந்துள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமை யிலான ஆட்சி நடக்கும், உ.பி.,யில், 403 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து வருகிறது. ஏழு கட்டங்களாக நடக்க வுள்ள தேர்தலில், இரண்டு கட்டம் முடிந்துள்ளது. உ.பி., சட்டசபைக்கு, கடந்த இரு முறை நடந்த, தேர்தல் புள்ளி விபரங்களை ஆய்வு செய்யும் போது, ஓட்டு சதவீதத்தில் ஏற்படும் சிறிய மாற்றமும், கட்சிகளின் வெற்றி வாய்ப்பில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.தற்போது, ஆளும் சமாஜ்வாதி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதே நேரத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும், பா.ஜ.,வும் தனியாக தேர்தலை சந்திக்கின்றன.கடந்த, 2007 சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ், 30 சதவீத ஓட்டுகளை பெற்று ஆட்சி அமைத்தது. 


சமாஜ்வாதி, 26 சதவீதம், பா.ஜ., 17 சதவீதம் மற்றும் காங்., 8.5 சதவீத ஓட்டுகளை பெற்றன. அதே நேரத்தில், 2012ல், சமாஜ்வாதி யின் ஓட்டு சதவீதம், 3 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. ஆனால், முந்தைய தேர்தலில், 97 இடங்களை வென்ற அந்த கட்சி, 224 தொகுதிகளில் வென்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

அதே நேரத்தில், பகுஜன் சமாஜ் ஓட்டு, 4.5 சதவீதம் மட்டுமே குறைந்தது. ஆனால், அதன் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை, 
206ல் இருந்து, 80 ஆக குறைந்தது.கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், மொத்தம் உள்ள, 80 தொகுதிகளில், 27.42 சதவீத ஓட்டுகளுடன், பகுஜன் சமாஜ், 20 தொகுதிகளில் வென்றது. 

காங்., 18.25 சதவீத ஓட்டுகளுடன், 21 தொகுதிகளி லும்; பா.ஜ., 17.5 சதவீத ஓட்டுகளுடன், 10 தொகுதி களிலும் வென்றன. அந்த தேர்தலில், சமாஜ்வாதி, 23.26 சதவீத ஓட்டுகளுடன், 23 தொகுதிகளை கைப்பற்றியது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும் மோடி அலை வீசிய போது, உ.பி., யில்,பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம், 42.6 சதவீதமாக உயர்ந்து, 71 தொகுதிகளில் வென்றது. அதாவது, மொத்தமுள்ள லோக்சபா தொகுதிகளில், 90 சதவீத இடங்கள், பா.ஜ.,வுக்கு கிடைத்தன.
 
202 தொகுதிகளில்

லோக்சபா தேர்தலில், 403 சட்டசபை தொகுதி வாரி யாக, பா.ஜ.,வின் ஓட்டு சதவீதத்தை பார்கும் போது, 80 சதவீத தொகுதிகளில், மற்ற கட்சிகளை விட, அதிக ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு கிடைத்தன.
தற்போதைய நிலையில், கடந்த லோக்சபா தேர்த லில் பெற்றதை விட, சட்ட சபை தொகுதி வாரியாக, பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம், 10 சதவீதம் குறைந்தா லும், தனிப் பெரும்பான்மைக்கு தேவையான, 202 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற முடியும் என, தேர்தல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால், இந்த தேர்தலில் சிறிய கட்சிகளும், ஒவ்வொரு ஜாதி பிரிவினரின் ஓட்டுகளும், தேர்தல் முடிவை மாற்றக் கூடிய சக்திகளாக உள்ளன. அதே போல், நடுநிலையாளர்களின் ஓட்டுகளும், அடுத்தது ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை முடிவு செய்யும் நிலையில் உள்ளது.
 
பிரியங்கா பிரசாரம் செய்யாதது ஏன்?

உ.பி., மாநிலம், அமேதி லோக்சபா தொகுதிக்கு உட் பட்ட, சட்டசபை தொகுதிகளில், காங்., வேட்பாளர் களை ஆதரித்து, காங்., துணைத் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா,பிரசாரம் செய்யாததற்கான காரணம் குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளார். 

இது குறித்து, ஸ்மிருதி கூறியதாவது:
உ.பி., சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆளும் சமாஜ்வாதியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, மக்களை சந்திக்க பயம். எனவே தான், பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம், காங்., துணைத் தலைவர் ராகுலை அழைத்துச் செல்கிறார். ஆனால், லோக்சபா தேர்தலில், ராகுல் வெற்றி பெற்ற அமேதி தொகுதி மக்களை சந்திப்பதில், காங்கிரசினருக்கு பயம். ஏனென்றால், தேர்தல் பிரசாரத்தின் போது, அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற வில்லை. இதனால் தான், ராகுலின் சகோதரி பிரியங்கா, அமேதி தொகுதியில் பிரசாரம் செய்ய மறுக்கிறார். 

லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும், தொகுதி மக்களை தொடர்ந்து சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிவதால் தான், என்னால் இங்கு தைரியமாக பிரசாரம் செய்ய வர முடிகிறது.சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, உ.பி.,யில், பா.ஜ., தலைமையி லான ஆட்சி அமைய வேண்டும் என்பதே, ஒவ்வொரு தொண்டனின் விருப்பம். அதற்கா கவே, அனைவரும் பாடுபட்டு உழைக் கிறோம்; நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
 
பிரசாரம் இன்று ஓய்வு


உ.பி.,யில், ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல், 19ல் நடக்க உள்ளது. அதற்கான பிரசாரம், இன்று மாலையுடன் முடிகிறது. மாநிலத்தின், 12 மாவட்டங்களில் உள்ள, 69 தொகுதிகளுக்கு, மூன்றாம் கட்டத்தில் தேர்தல் நடக்க உள்ளது. 2012 சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி, 55 தொகுதிகளில் வென்றது.

http://namathu.blogspot.ca/2017/02/blog-post_830.html

Categories: merge-rss, yarl-world-news