yarl-category

சக்தி டிவி செய்திகள் 27th May 2017, 8PM

சக்தி டிவி செய்திகள் 27th May 2017, 8PM

Categories: merge-rss, yarl-category

யுனிற்றறி, அகீயா என்ற சொற்களால் சம்பந்தன், நிமால் ஸ்ரீபாலடி சில்வாக்கிடையில் சூடான விவாதம்!

யுனிற்றறி, அகீயா என்ற சொற்களால் சம்பந்தன், நிமால் ஸ்ரீபாலடி சில்வாக்கிடையில் சூடான விவாதம்!
யுனிற்றறி, அகீயா என்ற சொற்களால் சம்பந்தன், நிமால் ஸ்ரீபாலடி சில்வாக்கிடையில் சூடான விவாதம்!
 

அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வாவுக்குமிடையில் சூடான விவாதம் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாக்குவாதம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பு வரைவில் unitary என்ற ஆங்கிலச் சொல்லுடன், அகீயா என்ற சிங்களப் பதமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு நிமல் சிறிபால டி சில்வா, அது யதார்த்தமானது அல்ல என்று பதிலளித்த போது இரா.சம்பந்தன் கோபமடைந்தார்.

சொற்களுக்காக சண்டையிட்டுக் கொள்ளாமல் அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வதே முக்கியமானது என்று நிமால் சிறிபால டி  சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, சம்பந்தன், அரசியலமைப்பு மாற்ற செயல்முறைகளை அனைத்துலக சமூகம் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

இதற்கு, நிமல் சிறிபால டி சில்வா, அனைத்துலக சமூகத்தின் விருப்பத்துக்கேற்றவாறு செயற்படுவதற்கு தாம் ஆணை பெற்றிருக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

இதனால் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் சூடான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

http://thuliyam.com/?p=68934

Categories: merge-rss, yarl-category

அரசுக்குள்ளிருந்து தலைதூக்கி வரும் பிரளயத்துக்கான தீப்பொறிகள்

அரசுக்குள்ளிருந்து தலைதூக்கி வரும் பிரளயத்துக்கான தீப்பொறிகள்
 
அரசுக்குள்ளிருந்து தலைதூக்கி வரும் பிரளயத்துக்கான தீப்பொறிகள்
 

இலங்­கை­யின் முத­லா­வது நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிய டி.எஸ். சேனா­நா­யக்­க­வின் அர­சில் நிதி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வர் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன ஆவார். டி.எஸ். சேனா­நா­ய­க­வின் திடீர்ச் சாவை­ய­டுத்து தலைமை அமைச்­ச­ராக ஆன டட்லி சேன­நா­ய­கா­வும் நிதி­ய­மைச்­ச­ராக ஜே.ஆரையே நிய­மித்­தார்.

1952 ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில் அதி­கா­ரத்தை மீண்­டும் கைப்­பற்­றிய டட்லி, ஜே. ஆரையே தமது அர­சின் நிதி அமைச்­ச­ராக்­கி­னார். அந்­த­வே­ளை­யில் டட்­லிக்­கும் ஜே.ஆருக்­கு­மான உற­வில் விரி­சல் ஏற்­பட்­டி­ருந்­த­போ­தி­லும், 1953 ஆம் ஆண்­டின் வரவு செல­வுத் திட்­டம் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து இரு­வ­ரி­டை­யே­யான உறவு பெரிய அள­வில் விரி­சல் கண்­டது. 1951 இல் இலங்கை 345 மில்­லி­யன் ரூபா அபி­ரி­மித நிதி வளத்­தைக் கொண்­டி­ருந்தபோதி­லும் 1953 இல் அது 200 மில்­லி­யன் ரூபா பற்­றாக்­கு­றை­யாக ஆகி­யி­ருந்­தது.

இத­னால் ஜே.ஆர் 1953 ஆம் ஆண்டு ஜுலை மாதத்­தில் நாடா­ளு­மன்­றில் முன்­வைத்த வரவு செல­வுத் திட்­டத்­தில் துண்டு விழும் தொகையை ஈடு­கட்ட புதிய வரி­களை நாட்டு மக்­கள் மீது சுமத்த வேண்டி ஏற்­பட்­டது. நாட்­டின் பொரு­ளா­தா­ரப் பின்­ன­டைவை ஈடு­கட்ட மேற்­கு­நா­டு­கள் உத­வு­மென ஜே.ஆர் நம்­பி­னார். அமெ­ரிக்­கா­வி­டம் 50 மில்­லி­யன் டொலர் உத­வி­பெற ஜே.ஆர் மேற்­கொண்ட முயற்சி வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

அந்த வேளை­யில் உலக வங்­கி­யின் ஆலோ­ச­னை­க­ளுக்கு எடு­பட்டு ஜே.ஆர் தயா­ரித்து முன்­வைத்த வரவு செல­வுத் திட்­டம் கடை­சி­யில் டட்­லி­யின் தலை­மை­யி­லான அர­சைப் பத­வி­யி­லி­ருந்து விலக வைக்­கக் கார­ண­மா­யிற்று.
அது­வரை நாட்டு மக்­க­ளுக்கு அரசு வழங்கி வந்த பல நிவா­ரணங் களை நிறுத்­திய ஜே.ஆர், அவற்­றுக்கு மேல­தி­க­மாக பல சேவைக்­கட்­ட­ணங்­களை உயர்த்­தி­ய­தன் மூலம் நாட்டு மக்­க­ளது அதி­ருப்­தி­யை­யும் எதிர்ப்­பை­யும் சம்­பா­தித்­துக் கொண்­டார்.

அரிசி விலையை அதிகரித்த ஐ.தே.கட்சி அரசு

ஐ.தே.கட்சி அரசு பத­வி­யி­லி­ருக்­கும் வரை ஒரு கொத்து அரி­சியை 25 சதத்­துக்கு வழங்­கு­மென வாக்­கு­றுதி வழங்­கிப் பொது மக்­க­ளது ஆத­ரவை ஈட்டித் தேர்­த­லில் வெற்றி பெற்ற ஐ.தே.கட்சி அரசு, குறித்த அந்த வரவு செல­வுத் திட்­டத்­தின் மூலம் ஒரு கொத்து அரி­சி­யின் விலையை 70 சத­மாக உயர்த்­தி­ய­தன் மூலம் நாட்டு மக்­க­ளது கடும் எதிர்ப்­பைச் சம்­பா­தித்­துக் கொண்­டது.

நிதி அமைச்­ச­ரான ஜே.ஆரின் அந்த முடிவுக்கு எதிராக அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முன்­னெ­ டுக்­கப்­பட்ட ஹர்த்­தால் கார­ண­மாக அர­சுக்கு எதி­ரான எதிர்ப்­பு­ணர்வு தீவி­ர­ம­டைய நேர்ந்­தது. அர­சுக்கு எதி­ரான அந்­தத் தீவிர எதிர்ப்­புக் கார­ண­மாக கடை­சி­யில் டட்லி சேன­நா­யக தனது தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து தாமாக வில­கிக் கொள்ள வேண்டி ஏற்­பட்­டது.

ஜே.ஆர். தனது திட்­ட­மொன்றை இதன் மூலம் நிறை­வேற்­றிக் கொண்­டுள்­ளார் என அந்த வேளை­யில் ஒரு சிலர் விமர்­சித்­த­துண்டு. பின்­னர் தலைமை அமைச்­ச­ரா­கப் பத­வி­யைக் கையேற்ற சேர்.ஜோன்.கொத்­த­லா­வலை, முதன்­மு­த­லில் மேற்­கொண்ட நட­வ­டிக்கை, ஜே.ஆரை, நிதி அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து அகற்றி அவருக்கு வேறு அமைச்­சுப் பத­வி­யொன்றை வழங்­கி­ய­யமை ஆகும். ஆனால் அந்த வேளை­யில் குதிரை லாயத்தை விட்டு வெளி­யே­றிச் சென்று விட்­டி­ருந்­தது.

1956 ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில் ஐ.தே.கட்சி படு­தோல்­வி­யைச் சந்­திக்க நேர்ந்­தது. ஜே.ஆர். கூட தேர்­த­லில் தோல்­வி­யைச் சந்­திக்க நேர்ந்­தி­ருந்­தது. ஆயி­னும் பின்­னா­ளில் ஜே.ஆர்.நாட்­டின் அரச தலை­வ­ராகி நாட்டை நிர்­வ­கித்த போதி­லும், 1956 ஆம் ஆண்­டில் டட்லி சேனா­நா­ய­க­வின் அர­சைப் பத­வி­யி­ழக்க வைத்­த­தில் அந்­த­வே­ளைய எதிர்க்­கட்­சி­யி­னரை விட ஜே.ஆரே பெரும் பங்­காற்­றி­ய­தாக விமர்­ச­னங்­கள் வெளி­வந்­த­துண்டு.

1956 ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில் வெற்­றி­யீட்­டிய எஸ்.டபிள்யூ ஆர்.டி. பண்­டா­ர­நா­யகா தலை­மை­யி­லான சுதந்­தி­ரக்­கட்சி களனி ராஜ­ம­கா­வி­கா­ரை­யில் மேற்­கொண்ட மத­வ­ழி­பா­டு­க­ளின் பின்­னர், பஞ்ச மகா சக்தி மூலம் நிறு­வப்­பட்ட புதிய அர­சைப் பொறுப்­பேற்­றுக் கொண்­டது. அந்த அர­சின் நிதி அமைச்­ச­ராக ஸ்ரான்லி டி.சொய்சா நிய­ மிக்­கப்­பட்­டார்.

பண்­டா­ர­நா­யகா படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்­தில் அதற்கு திட்­ட­மிட்­ட­தா­ கக் கூறப்­பட்ட பிர­திப் பொலிஸ் மா அதி­பர் சிட்னி டி சொய்­சா­வின் சகோ­த­ரரே இந்த ஸ்ரான்லி டி.சொய்சா ஆவார். தம் மீதான கடும் விமர்­ச­னங்­க­ளை­ய­டுத்து 1959 நவம்­பர் மாதம் 23 ஆம் திக­தி­யன்று ஸ்ரான்லி டி சொய்சா தமது பத­வி­யி­லி­ருந்து தாமாக வில­கிக் கொண்­டார். அதன் தொடர்ச்­சி­யாக அர­சும் பத­வி­யி­ழந்­தது.

மீண்டும் மீண்டும் ஐ.தே.கட்சி அரசின் நிதி அமைச்சர் ஜே.ஆரே

1960 மார்ச் மாதம் இடம்­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் டட்லி சேனா­நா­ய­க­வின் தலை­மை­யி­லான ஐ.தே.க அரசு ஆட்சி அமைத்த வேளை அதன் நிதி அமைச்­ச­ராக ஜே.ஆர் நிய­மிக்­கப்­பட்­டார். சிம்­மா­ச­னப் பிர­சங்க வாக்­கெ­டுப்­பில் தோல்­வி­யுற்ற அரசு, 30 நாள்­க­ளில் பத­வி­இ­ழந்­தது.

தொடர்ந்து அதே ஆண்­டின் ஜுலை மாதத் தேர்­த­லில் சிறி­மா­வோ­வின் தலை­மை­யி­லான அரசு பத­வி­யேற்­ற­வேளை பீலிக்ஸ்­ட­யஸ் பண்­டா­ர­நா­யகா அந்த அர­சின் நிதி அமைச்­ச­ராக நிய­ம­ன­மா­னார். அர­சுக்­குள் தமக்­கெ­தி­ராக உரு­வான எதிர்ப்­புக்­க­ளை­ய­டுத்து 1962 ஆம் ஆண்­டில் பீலிக்ஸ் டயஸ் தமது நிதி­ய­மைச்­சர் பத­வி­யைக் கைவிட்­டார். 1960 ஜுலை முதல் 1964 ஆம் ஆண்டுவரை நாட்­டின் நிதி அமைச்­ச­ர்களாக ஐவர் பணி­யாற்­றி­யி­ருந்­த­னர் என்­பது சுவா­ரஸ்­ய­மான ஒன்­றா­கும்.

அந்த வகை­யில் இலங்கை அர­சி­யல் வர­லாற்­றில் பத­வி­யி­லி­ருந்த அர­சுக்­கள் கவிழ்க்­கப்­ப­டப் பெரும்­பா­லும் கார­ண­மாக அமைந்­தது அந்­தந்த அர­சுக்­க­ளது நிதி அமைச்­சர் பத­வி­களே. ஒரு அர­சின் அர­சுத்­த­லை­வர், தலைமை அமைச்­சர் என்ற பத­வி­நி­லை­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது நிதி அமைச்­சின் செயற்­பா­டு­க­ளி­லேயே நல்­ல­தும் கெட்­ட­தும் அமைந்து, அதுவே அந்த அர­சின் செயற்­பா­டுக்கு பாதிப்­பா­க­வும், பாராட்டாகவும் அமை­கி­றது. அந்த வகை­யில் மிக அண்­மை­யில் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை மாற்­றம் அர­சின் வீழ்ச்­சி­யின் ஆரம்­ப­மாக அர­சி­யல் அவ­தா­னி­க­ளால் விமர்­சிக்கப்படுகிறது.

தாம் தமது நிதி அமைச்­சின் செயற்­பா­டு­களை நாட்­டின் பொரு­ளா­தார முன்­னேற்றத்தை நோக்கி இட்­டுச் சென்­ற­தா­லேயே தமக்கு உல­கின் சிறந்்த நிதி அமைச்­சர் என்ற கௌர­வம் கிடைத்­த­தா­கக் கூறி­வந்த ரவி கரு­ணா­நா­யக, தாம் அந்­தப் பத­வியை ஒரு­போ­தும் கைவி­டத் தயா­ரில்லை என­வும் கூறி வந்­தி­ருந்­தார். ஆயி­னும் நிதி அமைச்­சர் பத­விக்கு அவர் பொருத்­த­மா­ன­வ­ரல்ல என அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­கள் பலர் குற்­றம் சாட்டி வந்­த­னர்.

அமைச்­ச­ரவை மாற்­றம் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தன் நோக்­கம், ஊழல் பேர் வழி­களை வெளி­யேற்­று­வ­தா­கும் என­வும் அவர்­க­ளில் பலர் கூறி வந்­த­னர்.
அதே­வேளை அமைச்­சர்­க­ளான சஜித் பிரே­மதாச மற்­றும் ஹரீன் பெர்­னாண்டோ ஆகியோர் நிதி அமைச்­சர் என்ற வகை­யில் ரவி கரு­ணா­நா­யக தமது அமைச்­சுக்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீட்­டில் குறைப்­புச் செய்­வ­தா­கக் குற்­றம் சாட்­டி­யி­ருந்­த­னர். ஆயி­னும் அவர்­க­ளுக்­கும் ரவிக்­கும்­இ­டை­யில் கட்­சிக்­குள்­ளான பிர­ப­லத்­து­வம் குறித்த அதி­கா­ரப் போட்­டியே இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­கான பின்­னணி என­வும் ஒரு தரப்­பி­னர் சுட்­டிக் காட்­டி­யி­ருந்­த­னர்.

அதே­வேனை நல்­லாட்சி அரசு பதவி இழப்­ப­தற்கு ரவி கரு­ண­ாநா­யக்க பெரும் உதவி புரிந்து வரு­வ­தாக கூட்டு எதி­ர­ணித்­த­ரப்­பின் ஒரு­சி­லர் தெரி­வித்­துள்­ள­னர். ரவி­யி­ட­மி­ருந்து எடுக்­கப்­பட்ட நிதி அமைச்­சர் பதவி மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளமை, வெளி­யு­றவு அமைச்­ச­ராக தமது கைவ­ரி­சை­யைக் காட்டி வந்த மங்­க­ள­ச­ம­ர­வீ­ர­வுக்கு ஒரு தடுப்­புக்­கட்டை போடும் விதத்­தி­லேயே தற்­போது நிதி அமைச்­சின் பொறுப்­புக்­கள்­அ­வ­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக மற்­றொரு தரப்­பி­னர் கரு­து­கின்­ற­னர்.

வெளி­யு­ற­வுத் துறை­யைச் சிறப்­பாக முன்­னெ­டுத்த மங்­களவிட­மி­ருந்து அந்த அமைச்­சின் பொறுப்பை மீளப்பெற்று அதனை ரவி கரு­ணா­நா­ய­க­வுக்கு வழங்­கி­யி­ருப்­பது கேலிக்கு இட­மா­ன­தொன்­றெ­ன­வும் அந்­தத் தரப்­பி­னர் விமர்­சித்­துள்­ள­ னர். ஆயி­னும் அண்­மைய அமைச்­ச­ரவை மாற்­றத்­தின் பின்­னர் அர­சுக்­குள் நீறு பூத்த நெருப்­பாக இருந்த கருத்து வேறு­பா­டு­கள், வெளியே பகி­ரங்­க­மா­கத் தலை­காட்­டத் தொடங்­கி­யுள்­ளன என்­பது மட்­டும் மறுக்க இய­லாத உண்­மையே.

அதே­வேளை அண்­மைய அமைச்­ச­ரவை மாற்­றம், அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­கள் மத்­தி­யில் மட்­டு­மின்றி, அமைச்­சர் மற்­றும் ராஜாங்க அமைச்­சர் பத­வி­யொன்றை ஈட்­டும் முனைப்­பில் எதிர்ப்­பார்­பு­க்களுடன் காத்­தி­ருந்த அரச தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மத்­தி­யி­லும் ஒரு அதி­ருப்­தி­யை­யும் அர­சுக்கு எதி­ரான ஒரு மனப்­பொ­ரு­மல் நிலை­யை­யும் தோற்­று­வித்­துள்­ளது. மொத்­தத்­தில் இவர்­க­ளில் பலர் ஒரு குழப்ப நிலைக்கு உட்­பட்­டுள்­ள­தா­கக் கரு­த­மு­டி­கி­றது.

அமைச்­ச­ரவை மாற்­றம் கார­ண­மா­கச் சூடா­கிப் போயுள்ள அரச தரப்­புக்­குள், எதிர்­வ­ரும் நாள்­க­ளில் எத்­த­கைய சிக்­கல்­கள் தலை­தூக்­கப் போகின்­றன என்­பதை எவ­ரா­லும் நிச்­ச­யிக்க இய­லாது போயி­ருப்­பி­னும், அர­சுக்­கும் ஏதோ­வொரு பிர­ள­யம் தலை­தூக்­கவே வாய்­பி­ருப்­ப­தாக அர­சி­யல் நோக்­கர்­கள் கரு­து­கின்­ற­னர்.

அந்த வகை­யில் முன்­னைய மகிந்த அர­சைப் பத­வி­யி­லி­ருந்து அகற்றி, நல்­லாட்சி அர­சைப் பத­விக்­குக் கொண்டு வந்து பெரும் அர­சி­யல் மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்­திய தரப்­புக்­கள் இன்­றைய நல்­லாட்சி அர­சைப் பதவி கவிழ்க்க முய­ல­மாட்டா என எவ­ரா­லும் உறுதி கூற இய­லாது.

http://uthayandaily.com/story/4313.html

Categories: merge-rss, yarl-category

ரத்துப்பஸ்வெல சொல்லித்தரும் பாடம்

ரத்துப்பஸ்வெல சொல்லித்தரும் பாடம்
 
ரத்துப்பஸ்வெல சொல்லித்தரும் பாடம்
 

ரத்துப்­பஸ்­வெல என்ற இடத்­தில் 2013ஆம் ஆண்டு பொது­மக்­கள் மீது இரா­ணு­வத்­தி­னர் நடத்­திய துப்­பாக்­கிச் சூடு தொடர்­பில் இரா­ணுவ அதி­கா­ரி­யான பிரி­கே­டி­யர் தேசப்­பி­ரிய குண­வர்த்­தன கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்.

துப்­பாக்­கிச் சூட்­டோடு தொடர்­புபட்ட இரா­ணுவ அணி­யின் கட்­ட­ளை­யி­டும் அதி­கா­ரி­யாக அவர் இருந்த கார­ணத்­தால் கட்­ட­ளைப் பொறுப்­பா­ளி­யான அவர் குற்ற விசா­ர­ணைப் பிரி­வின் சிறப்பு அணி­யி­னால் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்.

இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் என்ற சந்­தே­கத்­தில் ஏற்­க­னவே 3 இரா­ணு­வத்­தி­னர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில் இந்­தக் கைதும் இடம்­பெற்­றுள்­ளது.

சுத்­த­மான குடி­தண்­ணீர் கேட்டுப் போராட்­டம் நடத்­திய மக்­களை அடக்­கு­வ­தற்கு 2013ஆம் ஆண்டு ஆவணி மாதம் முத­லாம் திகதி இரா­ணு­வத்­தி­னர் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­னர். இதில் 14 வய­துச் சிறு­வன் உட்­பட 3 பேர் உயி­ரி­ழந்­த­னர். 33 பேர் காய­ம­டைந்­த­னர். மகிந்த ஆட்­சிக் காலத்­தில் நடந்த இந்­தச் சம்­ப­வம் குறித்து தற்­போ­தைய அர­சின் காலத்­தில் விசா­ர­ணை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்டே இந்­தக் கைது­கள் எல்­லாம் இடம்­பெற்­றுள்­ளன.

பொது­மக்­கள் அநி­யா­ய­மா­கக் கொலை செய்­யப்­பட்­டமை தொடர்­பில் அதற்­குக் கார­ண­மா­ன­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுத்­தி­ருப்­ப­தற்­காக அர­சைப் பாராட்­ட­வேண்­டும். அதி­லும் சம்­ப­வத்துக்காக 3 சிப்­பாய்­களை மட்­டும் குற்­ற­வா­ளி­க­ளாக்கி மாட்­டி­வி­டா­மல் அதற்­கான கட்­ட­ளையை வழங்­கி­ய­வர்­க­ளை­யும் தேடிப் பிடிக்­கத் தொடங்­கி­யி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது.

கட்­ட­ளை­கள் இன்­னும் மேலி­டத்­தி­லி­ருந்தே பிரி­கே­டி­ய­ருக்­கும் கிடைத்­தி­ருக்­கும் என்­பது வெளிப்­ப­டை­யா­னது. அடுத்­த­டுத்த விசா­ர­ணை­க­ளில் அவ்­வாறு உத்­த­ர­விட்ட, கட்­டளை வழங்­கி­ய­வர்­க­ளும் கைது செய்­யப்­பட்டு சட்­டத்­தின் முன்­பாக நிறுத்­தப்­ப­ட­வேண்­டும்.

ரத்­துப்­பஸ்­வெல சம்­ப­வத்­தில் எடுக்­கப்­பட்­டி­ருக்­கும் நட­வ­டிக்­கை­க­ளைப் பார்க்­கின்­ற­போ­தும், அதில் காட்­டப்­ப­டும் அக்­க­றை­யைப் பார்க்­கின்­ற­போ­தும், விசா­ரணை முறை­யைப் பார்க்­கின்­ற­போ­தும் தவிர்க்­கவே முடி­யா­மல் ஒரு கேள்வி எழு­கி­றது.

வடக்கு கிழக்­கில் போரின் போது படை­யி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் வழக்­கு­க­ளி­லும், படை­யி­ன­ரால் சுற்­றி­வ­ளைப்­பு­க­ளின்­போது கைது செய்து கொண்டு செல்­லப்­பட்டு, பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் வழக்­கு­க­ளின்­போ­தும், இறு­திப் போரில் வைத்­தி­ய­சா­லை­கள், போர் தவிர்ப்பு வல­யம் ஆகி­ய­வற்­றின் மீது தாக்­கு­தல்­களை நடத்­திப் பொது­மக்­கள் உயிர்­க­ளைக் காவு வாங்­கிய வழக்­கு­க­ளின் போதும் ஏன் இத்­த­கைய அக்­க­றை­யும் விசா­ரணை முறை­மை­யும் காட்­டப்­ப­ட­வில்லை என்­பதே எழு­கின்ற அந்­தக் கேள்வி.

படை­யி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பி­லும், படை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்ட பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பி­லும் குற்ற விசா­ர­ணைப் பொலி­ஸார் இது­போன்ற விசா­ரணை முறை­யைப் பின்­பற்­ற­வு­மில்­லை­; ஆர்­வத்­தைக் காட்­ட­வு­மில்லை. அப்­ப­டிக் காட்­டி­யி­ருந்­தால், காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பில் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய படை­ய­ணி­யில் இருந்து விசா­ர­ணை­க­ளைத் தொடங்கி, அவர்­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­தற்­குப் பொறுப்­பாக இருந்­த­வர்­கள், அதற்­கான கட்­ட­ளைப் பொறுப்­பா­ளர்­கள் வரை­யில் அனை­வ­ரை­யும் கைது செய்து நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க முடி­யும். குறைந்­த­பட்­சம் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளில் சில­ருக்­கா­வது என்ன நடந்­தி­ருக்­கும் என்று கண்­ட­றிந்­தி­ருக்க முடி­யும்.

ஆனால், அப்­ப­டி­யெல்­லாம் எது­வும் செய்­யா­மல் இருப்­பது கொழும்பு அர­சு­க­ளின் ஒரு கண்­ணில் வெண்­ணெய்­யும், மறு கண்­ணில் சுண்­ணாம்­பு­மான அணு­கு­மு­றை­யையே வெளிப்­ப­டுத்­திக் காட்­டு­கி­றது. காணா­மற்­போ­னோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­குக்­கூட இன்­ன­மும் முன்­வ­ராத நிலையே இங்கு இருக்­கி­றது. தமிழ் மக்­கள் இலங்­கை­யில் இரண்­டாந்­த­ரக் குடி­மக்­க­ளா­கத்­தான் நடத்­தப்­ப­டு­கி­றார்­கள் என்­ப­தற்கு இதற்கு மேலும் உதா­ர­ணம் வேண்­டுமா என்ன?

http://uthayandaily.com/story/4311.html

Categories: merge-rss, yarl-category

வட மாகாண முதலமைச்சரால் வன்னேரியில் சுற்றுலா மையம் திறப்பு!

வட மாகாண முதலமைச்சரால் வன்னேரியில் சுற்றுலா மையம் திறப்பு!
 
 
வட மாகாண முதலமைச்சரால் வன்னேரியில் சுற்றுலா மையம் திறப்பு!
வட மாகாண முதலமைச்சரால் வன்னேரியில் சுற்றுலா மையம் திறப்பு!
 

வடக்கு மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வன்னேரியில் சுற்றுலா மையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தினை இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் திறந்துவைத்துள்ளார்.

பறவைகள் சரணாலயமாகக் காணப்படுகின்ற வன்னேரிக்குளத்தை அண்மித்த பிரதேசத்திலே சுமார் 6 மில்லியன் ரூபா செலவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து பருவகாலப் பறவைகளும் அதிகம் வருகை தருகின்றமையால், இந்த பிரதேசத்தை எதிர் காலத்தில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக்கும் நோக்கோடு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நர்டாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபைச் செயலர் மற்றும் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 625.0.560.320.160.600.053.800.668.160.90 625.0.560.320.160.600.053.800.668.160.90

http://thuliyam.com/?p=68923

Categories: merge-rss, yarl-category

பிளாஸ்ரிக் பைகளைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழி

பிளாஸ்ரிக் பைகளைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழி
 

வடக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் எல்லா வகையான பிளாஸ்ரிக் பைகளையும் ஒருநாள் பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்ரிக் பொருட்களையும் தவிர்ப்பதற்கான உறுதிமொழி மே 29ஆம் திகதி எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக, சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஐக்கிய நாடுகளால் ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாகச் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல்பற்றி உலகின் கவனத்தை ஈர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்திச் சூழல் பாதுகாப்பில் அனைவரினதும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வேண்டுவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

இதையொட்டி, ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உலக சுற்றுச்சூழல் தினத்துக்கு முன்னரான, மே 29 தொடங்கி ஜூன் 4 வரையான ஒருவார காலப்பகுதி தேசிய சுற்றுச்சூழல் வாரமாகக் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தின் தொடக்க நாளான மே 29ஆம் திகதி காலை ஒன்றுகூடலின்போது சகல பாடசாலைகளிலும் எல்லா வகையான பிளாஸ்ரிக் பைகள் மற்றும் ஒருநாள் பாவித்துவிட்டு வீசும் பிளாஸ்ரிக் பொருட்களைப் பயன்பாட்டில் இருந்து விலக்குவது தொடர்பாக அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள வட மாகாண சுற்றாடல் அமைச்சு கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடுகள் செய்துள்ளது. அன்றைய தினம்,

'பிளாஸ்ரிக் கழிவுகளினால் இயற்கைச் சூழலுக்கும் மனித உடல் நலத்துக்கும் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்புகளைக் கருத்திற் கொண்டும், வருங்கால சந்ததிகளுக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலைக் கையளிக்கும் நோக்குடனும் எல்லாவகையான பிளாஸ்ரிக் பைகளையும், ஒருநாள் பாவனைக்குரிய பிளாஸ்ரிக்கினால் ஆன குவளைகள், போசன விரிப்புகள் (Lunch Sheets) உணவுத் தட்டுகள், உணவுப் பெட்டிகள் ஆகியவற்றையும் இன்றில் இருந்து பயன்படுத்தவும் கொள்வனவு செய்யவும் மாட்டோம்'. என்ற உறுதி மொழி சகல பாடசாலைகளிலும் எடுக்கப்படவுள்ளது.

அத்தோடு, பாடசாலை நிதியில் அல்லது பாடசாலையுடன் தொடர்புடைய சங்கங்களின் நிதியில் பிளாஸ்ரிக் பைகள் மற்றும் ஒருநாள் பாவனைக்குரிய பொருட்கள் கொள்வனவு செய்வதை முற்றாகத் தவிர்க்கவும் ஆவன செய்யப்பட்டுள்ளது என, அந்தச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பிளாஸ்ரிக்-பைகளைத்-தவிர்ப்பதற்கான-உறுதிமொழி/71-197386

Categories: merge-rss, yarl-category

‘நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுவது கவலைக்குரியது’

‘நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுவது கவலைக்குரியது’
 

image_b902a8b337.jpg

-எஸ்.நிதர்ஷன்

நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுவது கவலைக்குரியது என சுட்டிக்காட்டியுள்ள சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், நல்லாட்சி அரசாங்கமானது இன, மத பேதமின்றிச் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வல்வை ஆழிக்குமரன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகமொன்று அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்தம் காரணமாக எமது இளைஞர், யுவதிகள் தமது திறமைகளை வெளிக்காட்ட முடியாத நிலைமை நிலவியது. தற்போது நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் அந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் எமது இளைஞர், யுவதிகள் எதிர்காலத்தில் வீர சாதனைகளை ஆழிக்குமரன் ஆனந்தனைப்போன்று படைக்க வேண்டும்.

“வடக்கில் யுத்தம் காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, உப்பளம், உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. இவற்றைத் திறப்பதற்கு நிதி அமைச்சு புதிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கவேண்டும்.

 

“வலிகாமம் வடக்கு மக்கள் உட்பட பெருமளவான மக்கள் இன்னமும் முகாம்களில் வாழ்கின்றனர். கடந்த வருடம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தபொழுது அமைச்சர் மங்கள சமரவீர யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது முகாம்களில் உள்ள மக்களையும் அவர் சந்தித்திருந்தார்.

“எனவே, இந்த மக்களின் மீள் குடியேற்றத்துக்கும் அபிவிருத்திக்கும் உரிய நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

“நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அரசுக்கு எதிராக இனவாதம் தூண்டப்படுகின்றது. கடந்த அரசாங்க காலத்தில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. தவிர அவை மீளவும் வழங்கப்படவில்லை. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் மக்களின் காணிகளை மீள வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. மேலும் 3,000 ஏக்கர் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது” எனத் தெரிவித்தார்.

“பெரும் பாதிப்புகளை சந்தித்த ஊடகவியலாளர்களுக்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும். கடன் அடிப்படையில் அவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கவேண்டும். வடக்கில் உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவாக நினைவுத்தூபி அமைக்கப்படவேண்டும்.

வடக்கில் பாடசாலைகள், அடிப்படை வசதிகளின்றி இயங்கி வருகின்றன. பாடசாலைகளின் அபிவிருத்திக்கு உரிய நிதி வழங்கப்பட வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/‘நல்லாட்சியிலும்-இனவாதம்-தூண்டப்படுவது-கவலைக்குரியது’/71-197420

Categories: merge-rss, yarl-category

யாழ்ப்பாண பள்ளிவாசல்களை, பாதுகாக்க முன்வருமாறு வேண்டுகோள்

1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் உடமைகள் பணம் நகை எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டவர்களாக வெளியேற்றப்பட்டதை நாம் அறிவோம். 2009 இல் யுத்தம் முடிவமைந்த பின்னர் இவர்கள் யாழ் சென்று பார்த்த போது வீடுகள் எல்லாம் உடைக்கப்பட்டும் பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டும் காணப்பட்டது. சென்றவர்களில் பலர் திரும்பிவர சிலர் எதிர் நீச்சல் போட்டு யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறியுள்ளனர்.

யாழ் மாவட்டத்திலுள்ள 18 பள்ளிவாசல்களையும் பராமரிக்கவும், பாதுகாக்கவும் தற்போது குடியேறியுள்ள மக்களின் தொகை போதாது. ஆனால் புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் நூற்றக்கணக்கான குடுமபங்கள் மீளவும் சென்று யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்தக் காணிகள் இல்லை. ஆனால் காணி வாங்கி அதில் வீடுகள் கட்டித்தரப்படுமிடத்து அவர்கள் குடியேறத் தயாராகவுள்ளார்கள். ஓவ்வொரு பள்ளிவாசலைச் சூழவும் ஆகக்குறைந்தது பத்து குடும்பங்களையாவது குடியேற்ற வேண்டியது முஸ்லிம்களாகிய எமது கடமையாகும்.

சோனகர் பிரதேசத்தில் 6 பேர்சஸ் காணியின் விலை 10 இலட்சங்களாகும். அதில் சிறிய வீடொன்றை அமைக்க 8 இலட்சம் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். யாழ் முஸ்லிம் இணையத்தளம் இதற்கு அனுசரனையாளராக செயற்படும். எனவே இம்முறை ரமலானிலோ அதற்குப் பின்போ சகாத் கொடுக்க நிய்யத்து வைத்திருப்போர் அதில் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்குமாறு வேண்டுகின்றோம். இதுபற்றிய மேலதிக தகவல்கள் வெகுவிரைவில் தரப்படும்.

 http://www.akuranatoday.com/news/?p=139827 .

Categories: merge-rss, yarl-category

நாவற்குழியில் புகையிரதத்துக்கு கல்வீச்சு, இராணுவச் சிப்பாய் காயம்!

நாவற்குழியில் புகையிரதத்துக்கு கல்வீச்சு, இராணுவச் சிப்பாய் காயம்!
நாவற்குழியில் புகையிரதத்துக்கு கல்வீச்சு, இராணுவச் சிப்பாய் காயம்!
 

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் வைத்து புகையிரதத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதன்போது புகையிரதத்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று காலை பயணித்த புகையிரதத்தின் மீதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புகையிரதத்தின் மீது வீசப்பட்ட கல், புகையிரதத்தில் பயணித்த இராணுவ சிப்பாயின் தலை மீது பட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக சாவசக்சேரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://thuliyam.com/?p=68920

Categories: merge-rss, yarl-category

வடமாகாண முதலமைச்சரால் கிளிநொச்சியில் குடிநீர்த் திட்டம் திறந்து வைப்பு

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சியில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள சுமார் 150 குடும்பங்களின் பாவனைக்காகவே இந்த குடிநீர்த் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மக்கள் பாவனைக்காக இன்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி .சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/development/01/147076?ref=view-latest

Categories: merge-rss, yarl-category

சிறுமியை வன்புணர்ந்த சிவில் படைச் சிப்பாய்க்கு 60 ஆண்டுகள் சிறை

சிறுமியை வன்புணர்ந்த சிவில் படைச் சிப்பாய்க்கு 60 ஆண்டுகள் சிறை
 
சிறுமியை வன்புணர்ந்த சிவில் படைச் சிப்பாய்க்கு 60 ஆண்டுகள் சிறை
 

வவு­னி­யா­வில் பதின்ம வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்ந்த சிவில் பாது­காப்பு படைச் சிப்­பாய்க்கு அதி­யுச்ச தண்­ட­னை­யாக 60ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னையை விதித்து வவு­னியா மேல் நீதிமன்று நேற்றுத் தீர்ப்பளித்தது.

“எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்களும் வழக்குத் தொடுனரால் நிரூபிக்கப்பட்டதால் அவை ஓவ்வொன்றுக்கும் தலா 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனையைக் குற்றவாளி ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 லட்சம் ரூபாவை இழப்பீடாகக் குற்றவாளி வழங்க வேண்டும்” என்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்தார்.

2014ஆம் ஆண்டு வவுனியாவில் பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த பதின்மவயதுச் சிறுமி வன்புணரப்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. சிறுமியின் தாயார் பணிப் பெண்ணாக வெளிநாடு சென்றிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வவுனியா முதலியாகுளம் பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு படைச் சிப்பாயான காதர் முகைதீன் கமால் அல்லது அமரசிங்க ஆராய்ச்சிலாகே தர்மரட்ண என்பவரின் பொறுப்பிலேயே சிறுமியை அவரது தாயார் விட்டுச் சென்றார். அதனால் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. சிறுமியை வன்புணர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் சிறுமியின் பாதுகாவலரை பொலிஸார் கைது செய்யதனர்.

சந்தேகநபருக்கு எதிரான சுருமுறையற்ற விசாரணைகள் வவுனியா நீதிவான் மன்றில் இடம்பெற்று வந்தன. ஆரம்ப விசாரணைகள் நிறைவடைந்ததும் சந்தேகநபருக்குப் பிணை வழங்கப்பட்டது. வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வவுனியா நீதிவான் மன்றால் பாரப்படுத்தப்பட்டது.

சந்தேகநபருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 11ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைகள் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்றுவந்தன.

இந்த வழக்கு நேற்றுத் தீர்ப்புக்காக மன்றினால் நியமிக்கப்பட்டிருந்தது.

“சிறுமியை 3 தடவைகள் வன்புணர்ந்தார் என்று சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுனரால் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று மன்று அறிவித்தது.
“அண்மைக்காலமாக வவுனியா மேல் நீதிமன்றில் அதிகளவான சிறுவர் மீதான துர்நடத்தை வழக்குகள் இடம்பெற்று வருகின்றன.

பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகளும் அவரைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் எந்தவொரு அக்கறையும் எடுப்பதில்லை” என்று நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

“குற்றவாளிக்கு எதிரான முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் அவருக்கு அதிகபட்ச தண்டனையைாக 20 ஆண்டுகள் கடூழியச் சிறை விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு தண்டனையும் குற்றவாளி ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும்.

3 குற்றச்சாட்டுகளுக்கும் தலா 2 இலட்சம் ரூபா வீதம் 6 இலட்சம் ரூபா பணத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாகக் குற்றவாளி வழங்க வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 2 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை அவர் அனுபவிக்க நேரிடும். குற்றவாளி 10 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் ஒரு மாதகால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்று நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தண்டனைத் தீர்ப்பளித்தார்.

வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தியிருந்தார்.

http://uthayandaily.com/story/4256.html

Categories: merge-rss, yarl-category

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்காது பஷில் ராஐபக் ஷ கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வி

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்காது

 

பஷில் ராஐபக் ஷ கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வி

நேர்­காணல் - ரொபட் அன்­டனி

யுத்­தத்தின் இறுதி தரு­ணத்தில் கஜேந்­திர குமார் என்று கூறப்­ப­டு­கின்­றவர் என்­னுடன் தொலை­பே­சியில் பேசி­ய­தாக கூறு­வதை நான் நிரா­க­ரிக்­கின்றேன். புலித் தலை­வர்கள் சர­ண­டை­வது தொடர்பில் ஒரு ஏற்­பாடு இருந்­தி­ருக்­கு­மாயின் உத்­தி­யோ­க­பூர்­வ­மான அமைப்­புக்கள் ஊடாக வந்­தி­ருக்­கலாம். எனினும் இறுதி நேரத்­திலும் அனைத்து உயிர்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டோம் என்று முன்னாள் அமைச்­சரும் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் சகோ­த­ர­ரு­மான பஷில் ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

தற்­போ­தைய அர­சாங்கம் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு தீர்வை வழங்கும் என்று நம்ப முடி­யாது. மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் மட்­டுமே இந்த நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க முடியும். இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துக்கு வழங்­கு­கின்ற ஆத­ரவைப் போன்று அன்று எமக்கு ஆத­ரவை வழங்­கி­யி­ருந்தால் நாங்கள் இந்த தேசிய பிரச்­சி­னையை தீர்த்­தி­ருப்போம் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

கேசரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு­வி­பரம் வரு­மாறு

கேள்வி : ராஜ­பக் ஷ குடும்­பத்தார் அர­சாங் கத்­திற்கு பயந்து கொண்­டி­ருப்­ப­தாக தெரி­விக் கப்­ப­டு­கி­றதே? அர­சாங்கம் தங்­களை சிறையில் அடைத்து விடும் என அச்­சத்தில் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் உங்கள் பதில் என்ன?

பதில் : அர­சாங்கம் பத­விக்கு வந்து இரண்­டரை வரு­டங்கள் கடந்து விட்­டன. இந்த காலப் பகு­தியில் மக்­க­ளுக்கு எதுவும் நன்மை கிடைத்­த­தாக தெரி­ய­வில்லை. மாறாக அர­சியல் பழி­வாங்­கல்கள் மிகவும் சிறப்­பாக இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த அர­சியல் பழி­வாங்­கலில் ராஜ­பக் ஷ குடும்­பமே பிர­தான இலக்­காக அமைந்­தி­ருக்­கி­றது. அத்­துடன் ராஜ­பக் ஷ மாருடன் இருந்த அரச ஊழி­யர்­களும் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளனர். அர­சியல் ரீதியில் நாடு வீழ்ச்­சி­ய­டை­யும்­போது எதிர்த் தரப்­பினர் மக்கள் மத்­தியில் முன்­செல்வர். அந்த மாற்­றத்தை கண்­ட­துடன் இரண்டு விட­யங்­களை அர­சாங்கம் செய்­யலாம். அதா­வது மக்­களை தமது பக்கம் இழுத்துக் கொள்­வ­தற்கு வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­கலாம். அல்­லது அர­சியல் பழி­வாங்­கலை தொடர்ந்து அதி­க­ரிக்­கலாம். அந்­த­வ­கையில் மே தினத்தின் பின்னர் அர­சாங்கம் மேலும் பழி­வாங்கல் திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தா­கவே நாங்கள் காண்­கிறோம். இந் நிலையில் இந்த விட­யங்­க­ளுக்­காக நாங்கள் பயந்து விடுவோம் என யாரும் நினைக்­கக்­கூ­டாது. 1936 ஆம் ஆண்டு ராஜ­பக் ஷ அர­சி­ய­லுக்கு வரும்­போது சவால்கள் என்­பது சாதா­ர­ண­மா­கின. 1936 ஆம் ஆண்டு டி.ஏ.ராஜ­பக் ஷ வெலிக்­கடை சிறைச்­சா­லை­யி­லி­ருந்தே அரச மந்­திரி சபைக்கு வந்தார். அன்­றி­லி­ருந்து அனைத்து ராஜ­பக் ஷக்­களும் அர­சியல் பழி­வாங்­கல்களுக்கு உட்­பட்­டுள்­ளனர். மஹிந்த ராஜ­பக் ஷ ஆறு மாதங்கள் சிறை­யி­லி­ருந்­துள்ளார். நானும் இருந்­துள்ளேன். நாமல் ராஜ­பக் ஷ இருந்­துள்ளார். எனவே பயம் என்­பது ராஜ­பக் ஷக்­க­ளுக்கு இல்லை.

கேள்வி : அமைச்­ச­ரவை மாற்றம் எவ்­வாறு அமைந்­துள்­ளது.

பதில் : அமைச்­ச­ரவை மாற்றம் என்­பது ஒரு நாட்­டுக்கோ அர­சாங்­கத்­துக்கோ புதி­தா­ன­தல்ல. ஆனால் அர­சியல் ஸ்திரத்­தன்மை என்­பது மிக முக்­கி­ய­மா­ன­தாகும். அமைச்­சர்­க­ளுக்கு குறிப்­பிட்ட கால அட்­ட­வ­ணையின் கீழ் பொறுப்­பு­களை வழங்க வேண்­டி­யது அவ­சியம். சில நேரங்­களில் எந்­த­வி­த­மான விடயதானங்களும் தொடர்பான தெளிவற்­ற­வர்­க­ளுக்கு அமைச்சுப் பொறுப்­புக்கள் வழங்­கப்­ப­டு­வ­துண்டு. அது எந்த அர­சாங்­கத்­திலும் நடை­பெறும். ஆனாலும் அர­சாங்கம் சரி­யான நேரத்­தி­லேயே அமைச்­ச­ரவை மாற்­றத்தை செய்­துள்­ளது. ஆனால் இந்த மாற்­ற­மா­னது மக்­களின் பக்­கத்­தி­லி­ருந்து செய்­யப்­ப­ட­வில்லை. மாறாக அரச வளங்­களை விற்கும் செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது. அவற்றில் காணப்­படும் தடை­களை நீக்­கு­வ­தற்­கான முயற்­சி­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­றது. துறை­முக அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக இருந்த அர்­ஜுன ரண­துங்க மாற்­றப்­பட்­டுள்­ள­மையும் இந்தக் கார­ணத்தை நோக்­க­மாக கொண்­ட­தாக இருக்­கலாம்.மறு­புறம் நாட்டின் பொரு­ளா­தாரம் குழப்­பத்தில் உள்­ளதை அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டுள்­ள­தையும் உணர முடி­கின்­றது. தலை­வ­லிக்கு மருந்து கொடுப்­பதை விடுத்து தலை­ய­ணையை மாற்றும் செயற்­பாட்­டையே அர­சாங்கம் செய்­தி­ருக்­கி­றது. வருத்­தத்­திற்கு மருந்து எடுக்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி : நீங்கள் பிர­மாண்­ட­மான மே தினக் கூட்­ட­மொன்றை நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. எவ்­வாறு இதனை செய்­தீர்கள்?

பதில் : எமது புதிய கட்­சி­யான ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி கடந்த வருடம் நவம்பர் முதலாம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது. சரி­யாக ஆறு மாதங்­களில் பாரிய திட்­டங்­களை வகுத்தோம். அந்த திட்­டத்தின் ஒரு கட்­டமே மே தினக் கூட்­ட­மாகும். இலங்­கையில் இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட மே தினக் கூட்­டங்­களில் மிகப்­பெ­ரிய கூட்­ட­மாக இது அமைந்­தது. அதிக மக்­களை கொண்டு வரு­வதே எமது நோக்­க­மாக அமைந்­தது. 36 கிரா­மங்­க­ளிலும் 14 ஆயிரம் கிரா­ம­சேவைப் பிரி­வு­க­ளிலும் கிளை அமைப்­புக்­களை உரு­வாக்­கினோம். கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம் தவிர்ந்த அனைத்து பகு­தி­க­ளிலும் கிளை­களை ஆரம்­பித்து செயற்­பட்டோம்.

கேள்வி : ஏன் கிளி­நொச்சியிலும் யாழ்ப்­பா ணத்திலும் கிளை­களை அமைக்க முடி­ய­வில்லை.

பதில் : அங்கு நாங்கள் இன்னும் செல்­ல­வில்லை. அதற்கு பல கார­ணங்கள் உள்­ளன. வெறு­மனே ஏமா­று­வ­தற்கு நாங்கள் விரும்­ப­வில்லை. மக்­களின் கோரிக்­கை­க­ளுக்கு அமை­வா­கவே நாங்கள் கிளை­களை அமைத்து வரு­கிறோம். வவு­னியா, மன்னார், முல்­லைத்­தீவு ஆகிய பகு­தி­களில் இருந்து இந்தக் கோரிக்கைகள் வந்­ததன. அதனால் அங்கு கிளை­களை ஆரம்­பித்தோம். தற்­போது யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்­சி­யி­லி­ருந்து அழைப்­புக்கள் வந்து கொண்டிருக்­கின்­றன. இலங்­கையில் மிகப்­பெ­ரிய மைதா­ன­மாக காலி முகத்­தி­டலை குறிப்­பி­டலாம். அந்த மைதா­னமே நிறைந்து வழியும் அள­விற்கு நாங்கள் மக்­களை திரட்­டினோம். அதற்கு அரு­கி­லுள்ள வீதி­களில் கூட மக்கள் கூட்டம் நிரம்­பி­யது. இதன்­மூலம் மக்கள் தற்­பே­ாதைய அர­சாங்­கத்­திற்கு ஒரு செய்­தியை வழங்­கி­யி­ருக்­கின்­றனர். மஹிந்த ராஜ­பக் ஷவை மக்கள் ஒரு தலை­வ­ராக ஏற்றுக் கொண்­டுள்­ளனர். அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களில் மக்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை என்­ப­து தெளிவா­கின்­றது.

கேள்வி : 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2015 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் நாட்டின் தேசியப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு உங்கள் அர­சாங் கத்­திற்கு ஒரு சந்­தர்ப்பம் காணப்­பட்­டது என் பதை ஏற்றுக் கொள்­கி­றீர்­களா?

பதில் : அதனை ஏற்றுக் கொள்ள முடி­யாது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வ­டைந்­ததும் முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வேண்­டிய பல விட­யங்கள் காணப்­பட்­டன. ஒரு மனிதன் பிர­சங்கத்தை கேட்­ப­தற்­காக பசி­யுடன் வந்தால் முதலில் அவரின் பசியை தீர்த்து விட்டு பிர­சங்­கத்தை ஆரம்­பிக்க வேண்டும். நாங்கள் முதலில் பயங்­க­ர­வா­தத்தை அழித்தோம். மனி­தா­பி­மான நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்தோம். 2009 ஆம் ஆண்டு இலட்­சக்­க­ணக்­கான மக்கள் முகாம்­களில் இருந்­தனர். வீதி­களை அமைக்க வேண்­டி­யி­ருந்­தது. கண்ணி வெ­டி­களை அகற்ற வேண்­டி­யி­ருந்­தது. பாட­சா­லைகள், பாலங்கள் என்­ப­வற்றை நிர்­மா­ணிக்க வேண்­டி­யி­ருந்­தது. மக்­களை மீளக்­கு­டி­ய­மர்த்த வேண்­டிய தேவை இருந்­தது. எனவே 2009 ஆம் ஆண்டு இந்த விட­யங்­க­ளுக்கு நாங்கள் முக்­கி­யத்­துவம் அளித்தோம். யாழ்ப்­பா­ணத்­திற்கு ரயில் பாதை அமைக்க வேண்­டிய தேவை இருந்­தது. அவற்­றையும் நாங்கள் செய்தோம். மின்­சாரம் இருக்­க­வில்லை. ஏ–9 பாதை திறக்­கப்­ப­ட­வில்லை. அவற்றை நாங்கள் செய்தோம். முதலில் இந்தக் காயங்­களை ஆற்றி பின்னர் தீர்வு குறித்து சிந்­திப்­ப­தற்கு நாம் தீர்­மா­னித்தோம். அவற்றை செய்து முடித்தோம். அதன் பின்னர் அர­சியல் தீர்வுத் திட்­டத்­திற்கு பிர­வே­சிக்க திட்­ட­மிட்­டி­ருந்தோம். மாகாண சபை மற்றும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்களை நடத்­தினோம். அதி­காரப் பகிர்வு பற்றிப் பேசப்­படு­கி­றது. அதி­கா­ரத்தை பகிர்ந்து கொடுப்­ப­தற்கு மாகாண சபை உரு­வாக்­கப்­பட வேண்டும். அத­னையே நாங்கள் செய்தோம்.

 மேலும் இங்கு முக்­கி­ய­மான விடயம் ஒன்றை குறிப்­பி­ட­வேண்டும். அதா­வது இன்று அர­சாங்­கத்­துக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வழங்­கு­கின்ற ஆத­ரவைப் போன்று அன்று எமக்கு ஆத­ரவை வழங்­கி­யி­ருந்தால் நாங்கள் இந்த தேசிய பிரச்­சி­னையை தீர்த்­தி­ருப்போம். அன்று முகாம்­களில் இருந்த மக்­க­ளுக்கு தண்ணீர் போத்தல் ஒன்றை வழங்­கு­வ­தற்கும் கூட்டமைப்பு உத­வ­வில்லை. இந்த அர­சாங்­கத்­துக்கு வழங்கும் ஆத­ரவு எமது அர­சாங்­கத்­துக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. மக்­க­ளுக்கு தலை­வர்கள் இட­ம­ளிக்­க­வு­மில்லை.

 கேள்வி : தற்­போ­தைய அர­சாங்­கத்தில் தமிழ் மக்­களின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளதே?

பதில் : இந்த அர­சாங்­கத்தின் மூலம் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­காது. இந்தப் பிரச்­சி­னையை வைத்து அர­சியல் செய்­யவே முயற்­சிக்­கின்­றனர். அடுத்த தேர்­த­லுக்கும் இதனை பயன்­ப­டுத்­து­வார்கள். ஆனால் நாங்கள் பிரச்­சி­னை­களை நீடிக்­க­வில்லை. அத­னால்தான் முன்­னைய அர­சாங்­கங்கள் யுத்­தத்தை இழுத்­த­போது நாங்கள் அதனை நிறைவு செய்தோம். இன்று மாண­வர்கள் பாட­சாலைப் பைகளை தோளில் சுமந்து செல்­கின்­றனர். முன்னர் அந்த நிலைமை காணப்­ப­ட­வில்லை. எனவே வடக்கு அர­சியல் பிரச்­சி­னைக்கும் தீர்­வு­காண மஹிந்த ராஜ­பக் ஷவினால் மட்­டுமே முடியும் என்­ப­த­னையும் நான் கூறு­கின்றேன். மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு மட்­டுமே இதனை தீர்க்க முடியும். குப்பை பிரச்­சி­னையை தீர்க்­காத அர­சாங்கம் தேசிய பிரச்­சி­னையை தீர்க்­குமா?

கேள்வி : இந்­திய பிர­தமர் மோடி இலங்கை வரும்­போது உங்கள் முகாமின் ஒருவர் கறுப்பு கொடி காட்­ட­வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்­திய பிர­தமருடன் முன்னாள் ஜனா தி­பதி மஹிந்த 45 நிமி­டங்கள் பேச்சு நடத்­தி­ய தாக கூறப்­ப­டு­கின்­றது. என்­னதான் நடந்­தது?

பதில் : இந்­திய பிர­த­ம­ருக்கு எதி­ராக கறுப்பு கொடி காட்­ட­வேண்டும் என்று கூற­வில்லை. மாறாக அவர் செய்­ய­வி­ருந்த உடன்­ப­டிக்­கைக்கு எதி­ரா­கவே அவ்வாறு செய்­ய­வி­ருந்­தனர். சம்­பி­ர­தா­யப்­படி இந்­திய பிர­தமர் இலங்­கைக்கு வந்தால் எதிர்க்­கட்­சியை சந்­திப்­பது வழ­மை­யாகும். சேர் ஜோன் கொத்­த­லா­வல காலத்­திலும் இது நடை­பெற்­றது. அவ்­வா­றான ஒரு வழ­மை­யான சந்­திப்பே மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கும் இந்­திய பிர­த­ம­ருக்கும் இடையில் நடை­பெற்­றது.

கேள்வி : என்ன பேசப்­பட்­டது என்று கூற முடி­யுமா?

பதில் : வழ­மை­யான பொது­வான விட­யங்­களே பேசப்­பட்­டன.

கேள்வி : யுத்­தத்தை முடிக்க இந்­தியா உத­வி ய­தாக உங்கள் தரப்பு பல தட­வைகள் கூறி­யுள் ளது. யுத்­தத்­துக்கு பின்னர் இந்­தி­யா­வுடன் உங் க­ளது முன்­னைய அர­சாங்­கத்­துக்கு முரண் பாடு ஏற்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது. என்­னதான் நடந்­தது?

பதில் : அவ்­வாறு முரண்­பாடு இருந்­ததா என தெரி­ய­வில்லை. நாங்கள் இந்­தி­யா­வுடன் சிறப்­பா­கவே செயற்­பட்டோம். இன்னும் அர­சியல் ரீதி­யாக அல்­லது வேறு கார­ணங்­க­ளினால் சில வேறு­பா­டுகள் காணப்­பட்­டன. எனினும் தற்­போது இந்­தியா அன்று எம்மை தவ­றாக புரிந்­து­கொண்­டதை உணர்ந்­தி­ருக்கும்.

கேள்வி : உங்­க­ளு டைய புதிய கட்­சிக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான தற்­போ தைய உறவு என்ன?

பதில் : இரண்டு தரப்­பி­னரும் புரிந்­து­ணர்­வு­டனும் செயற்­ப­டு­கின்றோம். பிரச்­சினை இல்லை என்றும் உள்­ளது என்றும் கூற முடி­யாது.

கேள்வி : ஜன­வரி எட்டாம் திகதி மாற்­றத்­துக்கு இந்­தியா பங் க­ளிப்பு செய்­த­தாக குற்­றச் சாட்டு உள்­ளதா ?

பதில் : அது பேசப்­ப­ட­வேண்­டிய விட­ய­மல்ல. அது வர­லாற்­றுடன் இருக்­கின்­றது. ஒரு சந்­தேகம் இருக்­கின்­றது.

கேள்வி : உங்கள் அர­சாங்கம் சீனா­வுடன் நெருங்­கிய உறவை பேணி­யது. எனினும் தற் போது சீனாவை விமர்­சிப்­பது போன்று தெரி­கின் றதே?

பதில் : அவ்­வாறு ஒன்­று­மில்லை. நாங்கள் இந்­தியா, சீனா ஆகிய இரு நாடு­க­ளு­டனும் பொது­வான உறவை பேணு­கின்றோம். ஆனால் ஒரு விட­யத்தை கூறி­யா­க­வேண்டும். சீனா­வுக்கு வழங்­கிய சில அபி­வி­ருத்தி திட்­டங்­களை இந்­தி­யா­வுக்கு மீள் வழங்கி சீனா­வு­ட­னான ஒப்­பந்­தங்­களை ரத்து செய்­தி­ருக்­கின்றோம். கையொப்பம் இட்ட பின்னர் ரத்துச் செய்­துள்ளோம். வடக்கு ரயில் பாதையை அமைக்க சீனா முன்­வந்­தது. ஆனால் இறு­தியில் இந்­தி­யா­வுக்கே கொடுத்தோம். இவ்­வாறு இந்­தி­யா­வுக்கு முக்­கி­யத்­துவம் அளித்­துள்ளோம்.

கேள்வி : துறை­முக நகரை நீங்­கள்தான் ஆரம்­பித்­தீர்கள். எனினும் தற்­போது சீனா பங் கெ­டுக்கும் அபி­வி­ருத்தி திட்­டங்­களை விமர்­சிப் பது ஏன்?

பதில் : அவ்­வாறு எந்த குற்­றச்­சாட்டும் இல்லை. முத­லீடும் விற்­ப­னையும் இரண்டு விட­யங்­க­ளாகும். அம்­பாந்­தோட்­டையில் காணி விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தையே எதிர்க்­கின்றோம். தெற்கு கொழும்பு துறை­மு­கத்தில் சீனா முத­லீடு செய்­தது. தற்­போது நாம் பயன்­ப­டுத்­து­கின்றோம். துறை­முக நகரும் முத­லீ­டாகும். சீனா மற்­று­மொரு துறை­மு­கத்தை அமைத்­துக்­கொ­டுத்தால் நல்­லது. ஆனால் இருக்­கின்ற துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கு­வது நல்­ல­தல்ல.

கேள்வி : நாட்டில் மீண்டும் இன­வாத செயற் பா­டுகள் தலை­தூக்­கு­கின்­ற­னவே?

பதில் : ஆம். நாங்­களும் அதனை அவ­தா­னித்தோம். அது மிகவும் பயங்­க­ர­மான நிலை­மை­யாகும். நாட்டில் ஸ்திர­மற்ற நிலைமை வரும்­போது சர்­வ­தேச சக்­திகள் இவ்­வாறு செய்யும். எனவே அர­சா­ங்கம் இந்த விட­யத்தில் உட­ன­டி­யாக தலை­யி­ட­வேண்டும். மதத் தலை­வர்­களும் இந்த விட­யத்தில் தலை­யிட்டு செயற்­ப­ட­வேண்டும். இரண்டு தரப்­புக்கள் மத்­தி­யிலும் சந்­தே­கங்கள் இருப்பின் அதனை தீர்த்­துக்­கொள்­ள­வேண்டும். இனங்­க­ளுக்கும் மதங்­க­ளுக்கு இடையில் சந்­தே­கங்கள் ஏற்­படின் பாரிய அழிவை ஏற்­ப­டுத்­தி­விடும். ஆனால் அர­சாங்கம் இதில் தலை­யி­ட­வேண்டும். ஜனா­தி­பதி இந்த விட­யத்தில் தலை­யிட்டால் நாம் ஆத­ரவு வழங்­குவோம்.

கேள்வி : யுத்தம் தோற்­க­டிக்­கப்­பட்­டதால் 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­பக் ஷ தமிழ் மக்­க­ளினால் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தாக கரு­து கின்­றீர்­களா?

பதில் : முதலில் நாங்கள் யுத்த வெற்­றியை பெற்­ற­தாக கூறு­வ­தை­விட சமா­தா­னத்தை வெற்­றி­கொண்­ட­தா­கவே கூற­வேண்டும். நாங்கள் மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­யையே முன்­னெ­டுத்தோம். மக்­க­ளுக்கு சமா­தா­னத்தை பெற்­றுக்­கொ­டுத்தோம். தமிழ் மக்கள் தோல்­வி­ய­டை­ய­வில்லை. இன்று யாழ்ப்­பாண மக்கள் ரயிலில் செல்­கின்­றனர். எனவே தமிழ் மக்கள் எங்­களை தோற்­க­டித்­த­தாக கூற முடி­யாது. தமிழ் மக்­களை மீட்­கவே மனி­தா­பி­மான செயற்­பாட்டை முன்­னெ­டுத்தோம்.

கேள்வி : நீங்கள் சமா­தா­னத்­தையே வெற் றி­கொண்­ட­தாக கூறு­வ­தாயின் ஏன் 2015 ஆம் ஆண்டில் தோல்­வி­ய­டைந்­தீர்கள்?

பதில் : சமா­தா­னத்தை வெற்­றி­பெற்­றாலும் தேர்­தலை வெற்­றி­பெ­ற­வில்லை. இவை இரண்டும் வேறு­பட்­ட­வை­க­ளாகும். நாங்கள் 2010 ஆம் ஆண்டு தேர்­தலில் வெற்­றி­பெற்றோம். 2015 ஆம் ஆண்டு தோல்­விக்கு வேறு கார­ணங்கள் உள்­ளன.

கேள்வி : உங்கள் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி என்ற கட்சி தேர்­தல்­களில் போட்­டி யி­டுமா?

பதில் : இனி­வரும் காலங்­களில் இலங்­கையில் நடை­பெறும் எந்­த­வொரு தேர்­த­லிலும் ஸ்ரீ­லங்கா பொது­ஜன முன்­னணி தனித்து போட்­டி­யிடும்.

கேள்வி : சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­ட­மாட்­டீர்­களா?

பதில் : எம்­முடன் எந்தக் கட்­சியும் இணைந்­து­கொள்­ளலாம். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டாலும் நாங்கள் பிர­ப­ல­மாக போட்­டி­யி­டுவோம்.

கேள்வி : 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் என்ன செய்­வீர்கள்?

பதில் : தேர்தல் நடக்­கும்­போது பார்ப்போம். எந்­தத்­தேர்­த­லுக்கும் நாம் தயார்.

கேள்வி : 2020 இல் ஜனா­தி­பதி தேர்தல் நடக்­கு­மானால் உங்கள் வேட்­பாளர் தொடர்பில் தற் போது ஆயத்­தங்கள் நடக்­க­ வேண்­டுமே?

பதில் : அப்­ப­டி­யில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இறுதி நாளில்­தானே வெளி யில் வந்தார். அந்த நேரத்தில் தகு­தி­யா­னவர் முன்­வ­ருவார்.

கேள்வி : உங்கள் சகோ­த­ரரும் முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­த­பா­யவின் பெயரும் அடி­ப­டு­கின்­றதே?

பதில்: அனைத்து சகோ­த­ரர்­க­ளி­னதும் பெயர் களும் அடி­ப­டு­கின்­றன.

கேள்வி : யுத்­தத்தின் இறுதி தினங்­களில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கஜேந்­திரகுமார் பொன்­னம்­பலம் உங்­க­ளுடன் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தாரா?

பதில் : இவை தொடர்பில் சில விடயங்கள் சட்டரீதியாக அணுகப்படுவதால் நான் பதில ளிப்பது சரியல்ல.

கேள்வி : தான் உங்களுடன் தொடர்பு கொண்டு புலிகளின் சரணடைவு தொடர்பில் பேசியதாக கஜேந் திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் ஜெனிவாவில் தெரிவித்திருந்தார். அதற்கு உங்கள் பதில் என்ன?

பதில் : நாங்கள் யுத்தம் செய்யவில்லை. மனிதாபிமான நடவடிக்கையையே செய்தோம். எந்த நேரத்திலும் மக்களின் உயிர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையையும் செய் வதற்கு தயாராக இருந்தோம். நீங்கள் கூறு பவர் என்னுடன் தொடர்புகொண்டு எதனை யும் பேசினாரா என்று எனக்கு ஞாபகம் இல்லை. அவசரமாக தொடர்புகொண்டு பேசுவது நம்பகத்தன்மை தொடர்பான பிரச் சினையை தோற்றுவிக்கும். நாங்கள் அப் போது ஐக்கிய நாடுகள் சபை, நோர்வே மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி னோம். மக்களின் உயிர்களை பாதுகாப்பதே எமது நோக்கமாக இருந்தது. புலிகள் இது போன்ற ஒரு செயற்பாட்டுக்கு தயார் இல்லை என்ற விடயத்தை நோர்வே தூதர கத்திடம் இருந்து நாங்கள் எழுத்துமூலம் பெற்றுக்கொண்டோம். யாரோ ஒருவர் தொலை பேசியில் பேசியதாக கூறுவது என்னவென்று புரியவில்லை. அதுமட்டுமன்றி இவ்வாறு ஒரு ஏற்பாடு இருந்திருந்தால் அதனை உரிய நடைமுறைகளுக்கு ஏற்ப முன்னெடுத்தி ருக்க வேண்டும். இவ்வாறு புலிகள் சரண டைவதாயின் சர்வதேச செஞ்சிலுவை சங் க மும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்பாடுகளை செய்திருக்கும். எனினும் இறுதி நேரத்திலும் அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். கஜேந்திர குமார் என்னுடன் தொலைபேசியில் பேசி யதாக கூறுவதை நான் நிராகரிக்கின்றேன். அவ்வாறு ஒரு ஏற்பாடு இருந்திருக்குமாயின் உத்தியோகபூர்வமான அமைப்புக்கள் ஊடாக வந்திருக்கலாம்.

Categories: merge-rss, yarl-category

எமது கட்சியிலுள்ள பொறாமைகொண்ட ஒருவராலேயே நிதியமைச்சு பறிபோனது குமுறுகிறார் புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க

எமது கட்சியிலுள்ள பொறாமைகொண்ட ஒருவராலேயே நிதியமைச்சு பறிபோனது

 

குமுறுகிறார் புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க

நேர்­காணல் - ரொபட் அன்­டனி

ஐக்­கிய தேசிய கட்­சி­யிலும் இவ்­வாறு ஒரு பொறா­மை­க்காரர் இணணணணருக்­கின்றார். இவ்­வாறு பொறாமை குணம் கொண்­ட­வர்கள் நாட்டின் எதிர்­காலம் கட்­சியின் எதிர்­காலம் என்­ப­ன­வற்றை கருத்­திற்­கொள்­ளாமல் தமது தேவைக்­காக செயற்­ப­டு­கின்­ற­மையே இந்த மாற்­றத்­துக்கு கார­ண­மாகும் என்று புதிய வெளிவி­வ­கார அமைச்­சரும் முன்னாள் நிதி­ய­மைச்­ச­ரு­மான ரவி கருணா­நா­யக்க தெரி­வித்தார்.

நான் நிதி­ய­மைச்­ச­ராக இருந்­த­போது ஊழல் மோச­டி­க­ளுக்கு இட­ம­ளிக்­க­வில்லை. சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு எமது விட­யங்­களில் தலை­யீடு செய்­யவும் இட­ம­ளிக்­க­வில்லை. இவ்­வாறு நான் நேர்­மை­யாக செயற்­பட்­ட­மை­யினால் ஏற்­பட்ட விளைவு இது­வாக இருக்­கலாம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கேசரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு­வி­பரம் வரு­மாறு

Q கவ­லை­யுடன் இருக்­கின்­றீர்­களா?

*அப்­ப­டி­யில்லை. அமைச்­ச­ர­வையில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. பதவி மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. அதனை மட்­டுமே தற்­போது என்னால் கூற முடியும்.

Q ஆசி­யாவின் சிறந்த நிதி­ய­மைச்­ச­ராக ரவி கரு­ணா­நா­யக்க தெரிவு செய்­யப்­பட்டார். அவ்­வா­றான நிலையில் இந்த மாற்றம் குறித்து உங்கள் பார்வை எவ்­வாறு உள்­ளது?

* ஏன் இவ்­வா­றான மாற்றம் ஒன்றை செய்­தீர்கள் என்று மாற்­றத்தை செய்­த­வர்­க­ளி­டமே கேட்­க­வேண்டும். அமைச்­சர்­களை மாற்­று­வது என்­பது எங்­க­ளுக்கு அப்­பாற்­பட்ட விடயம். எனவே அதனை ஏன் செய்­தார்கள் என்று நான் பதி­ல­ளிக்க முடி­யாது. அதனை அவர்­க­ளி­டமே கேட்­க­வேண்டும்.

Q நிதி அமைச்சை உங்­க­ளிடம் இருந்து பெற்­றுக்­கொண்­டுள்­ளமை தொடர்பில் உங்­களின் பார்வை என்ன?

* இந்த விட­யத்தில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரை குறை­கூறி அர்த்­த­மில்லை. அனைத்து கட்­சி ­க­ளிலும் பொறா­மை­க்கா­ரர்கள் உள்­ளனர். எனது ஐக்­கிய தேசிய கட்­சி­யிலும் இவ்­வாறு ஒரு பொறா­மை­க்காரர் இருக்­கின்றார். இவ்­வாறு பொறாமை குணம் கொண்­ட­வர்கள் நாட்டின் எதிர்­காலம், கட்­சியின் எதிர்­காலம் என்­ப­ன­வற்றை கருத்­திற்­கொள்­ளாமல் தமது தேவைக்­காக செயற்­ப­டு­கின்­ற­மையே இந்த மாற்­றத்­துக்கு கார­ண­மாகும்.

நான் நிதி­ய­மைச்­ச­ராக இருந்­த­போது ஊழல் மோச­டி­க­ளுக்கு இட­ம­ளிக்­க­வில்லை. சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு எமது விட­யங்­களில் தலை­யீடு செய்­யவும் இட­ம­ளிக்­க­வில்லை. இவ்­வாறு நான் நேர்­மை­யாக செயற்­பட்­ட­மை­யினால் ஏற்­பட்ட விளைவு இது­வாக இருக்­கலாம்.

Qகடந்த 10 வரு­டங்­க­ளாக எதிர்க்­கட்­சியில் இருந்த நீங்கள் போராடி இந்த அர­சாங்­கத்தை அமைத்­தீர்கள். இவ்­வாறு பெற்­றுக்­கொண்ட அர­சாங்­கத்தில் நீங்கள் கவ­லைப்­படும் வகை­யி­லான அமைச்­ச­ரவை மாற்றம் வந்­துள்­ளமை தொடர்பில் ?

* ஆம், இது பிரச்­சி­னைக்­கு­ரிய விட­யம்தான். இவ்­வாறு கஷ்­டப்­ப­டாமல் தேசியப் பட்­டியல் ஊடாக வந்­த­வர்­களே இந்த விட­யங்­களை மேற்­கொள்­கின்­றனர்.

Qஉங்கள் கட்­சியில் உள்ள ஒருவர் தான் உங்­களின் இந்த பதவி மாற்­றத்­துக்கு காரணம் என்று கூறு­கின்­றீர்­களா?

* வேறு கட்­சியில் அல்ல. எமது கட்­சியில் இருக்கும் ஒரு­வரின் வேலையே இது­வாகும். தற்­போது அவர் அமைச்­ச­ரா­கவும் இருக்­கின்றார். அவர்கள் திறம்­பட வேலை செய்­ய­மாட்­டார்கள். நாட்­டுக்கு எந்த நன்­மை­யையும் ஏற்­ப­டுத்­த­மாட்­டார்கள். அவ்­வாறு எத­னையும் செய்­யா­த­வர்­களே எங்­களை வேலை­ செய்ய விடாமல் தடுத்­துள்­ளனர்.

Q நல்­லாட்சி அர­சாங்­கத்தின் எஞ்­சி­யுள்ள மூன்று வரு­டங்­க­ளிலும் நிதி­ய­மைச்­ச­ரா­கவே பதவி வகித்து நாட்­டுக்கு சேவை­யாற்ற விருப்­பத்­துடன் இருந்­தீர்­களா?

* ஆம் நிச்சயமாக.

Q அவ்­வாறு நீங்கள் பழைய அமைச்சுப் பத­வி­யி­லேயே இருக்­க­வேண்­டு­மாயின் நீங்கள் உங்கள் கட்­சியின் தலை­வ­ருடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­க­லாமே?

*அப்­படி கட்­டா­யப்­ப­டுத்தி கேட்க முடி­யா­தல்­லவா?

Q சரி, எதற்­காக அமைச்சை மாற்­று­வ­தற்கு இணங்­கி­னீர்கள்?

*என்­னிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. அதனை நான் எதிர்ப்­பது நாக­ரி­க­மாக இருக்­காது. இவை நிரந்­த­ர­மான பத­விகள் அல்ல என்­ப­தனை நாம் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

Qஅமைச்சுப் பத­வியை தொடர முடி­ய வில்லை என்று கடும் கவ­லை­யுடன் இருக்­கின்­றீர்­களா?

*நான் அவ்­வாறு கவ­லை­யுடன் இல்­லா­விடின் மனி­த­னல்ல.

Q நீங்கள் விரக்­தி­யுடன் இருக்­கின்­றீர்­களா என நான் கேட்டால் என்ன பதில் கூறு­வீர்கள்? 

* எதற்­காக ?  

Q அமைச்­ச­ரவை மாற்றம் கார­ண­மாக?

* நிதி­ய­மைச்சு எனக்கு தெரிந்த விட­ய­தா­னத்­துடன் கூடிய அமைச்சு. அதனால் இவ்­வாறு உணர்­கின்றேன். . எவ்­வா­றெ­னினும் ஒரு விட­யத்தைக் கூற­வேண்டும். ஊழலை முறி­ய­டிப்­பதே இந்த நாட்டின் மிகப்­பெ­ரிய சவால். அதனை செய்ய முயற்­சிப்­ப­வர்­க­ளுக்கே இவ்­வா­றான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன. ஆனால் என்ன தடைகள் வந்­தாலும் எனக்­கு­ரிய பணியை முன்­னெ­டுப்பேன்.

Qரவி கரு­ணா­நா­யக்க என்­பவர் ஐக்­கிய தேசிய கட்­சியில் முக்­கி­ய­மான பிர­ப ல­மான ஒருவர். நீங்­களே கவ­லைப்­படும் வகையில் மாற்றம் நடந்­துள்­ளது எப்­படி?

*எனக்கும் புரி­ய­வில்லை.

Qபுதி­தாக வழங்­கப்­பட்­டுள்ள வெளி வி­வ­கார அமைச்சுப் பத­வியை பற்றி என்ன கரு­து­கின்­றீர்கள்?

* எனக்கு கொடுக்கும் பொறுப்பை நான் நிறை­வேற்­றுவேன். வெளிவி­வ­கார அமைச்சு என்­பது பரந்­து­பட்ட பல பொறுப்­புக்­களை கொண்ட அமைச்சு. அத­னூ­டாக நாட்­டுக்கு நன்­மையை பெற்­றுக்­கொ­டுக்க அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவேன்.

Qவெளிவி­வ­கார அமைச்­ச­ராக என்ன செய்­யப்­போ­கின்­றீர்கள்?

* நாட்டின் அனைத்து இனங்­க­ளையும் பாது­காத்து நாட்­டுக்குள் உலகை கொண்­டு­வரும் பணியை முன்­னெ­டுப்பேன். தற்­போது எமக்கு கடன் தேவை­யில்லை. மாறாக முத­லீ­டு­களே அவ­சி­ய­மா­கின்­றன. எனவே வெளிவி­வ­கார அமைச்­ச­ராக நாட்­டுக்கு வெளிநாட்டு முத­லீ­டு­களை பெற நட­வ­டிக்கை எடுப்பேன்.

Q ஜெனிவா விவ­கா­ரத்­துக்கு வெளி­வி­வ­கார அமைச்சே பொறுப்­பா­னது. தற்­போது நாட்­டுக்கு இரண்­டு ­வ­ருட கால அவ­காசம் கிடைத்­துள்­ளது. நல்­லி­ணக்கம் பொறுப்­புக்­கூறல் தொடர்­பான சர்­வ­தேச கடமை உங்­க­ளிடம் உள்­ளது. எவ்­வாறு இதனை முன்னெடுத்து செல்­வீர்கள்?

*நான் இதனை தற்­போ­துதான் புரிந்­து­கொண்­டு­ வ­ரு­கின்றேன். இந்த விட­யங்கள் எனக்கு முழு­மை­யாக தெரி­யாது. வெ ளிவி­வ­கார அமைச்சு என்­பது எனக்குத் தெரி­யாத அமைச்சு. எனவே அவற்றை ஆராய்ந்து பார்த்த பின்­னரே பதி­ல­ளிக்க முடியும்.

Q இலங்­கைக்கும் சர்­வ­தே­சத்­துக்கும் இடை­யி­லான உறவை எவ்­வாறு கட்­டி­யெ­ழுப்­பலாம் என்று நினைக்­கின்­றீர்கள்?

* நான் அதனை உயர்ந்­த ­மட்­டத்தில் கொண்­டு­ வ­ருவேன். மங்­கள சம­ர­வீர இதனை சிறப்­பாக முன்­னெ­டுத்­தி­ருந்தார். இந்­தி­யா­வுடன் உறவை வலுப்­ப­டுத்தி மிகவும் நெருக்­க­மாக செயற்பட நட­வ­டிக்கை எடுப்பேன். மேலும் சீனா, ஜப்பான், கொரியா, ஐரோப்­பிய நாடு­க­ளு­டனும் நெருக்­க­மான உறவை கட்­டி­யெ­ழுப்ப செயற்­ப­டுவேன்.

Qசீனா­வுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் இலங்கை விட­யத்தில் பாரிய போட்­டியே நில­வு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. இதனை எவ்­வாறு சமா­ளிப்­பீர்கள்?

*அது சிறந்த நிலை­யாகும். அனைத்து நாடு­க­ளு­டனும் இணைந்து பணி­யாற்­றுவோம்.

 

Qஅமைச்சர் மங்­கள சம­ர­வீர புலம்­பெயர் மக்­க­ளுடன் சிறந்த உறவை பேணினார். உங்கள் அணு­கு­முறை எவ்­வாறு அமையும்?

*புலம்­பெயர் மக்கள் எனும்­போது சிங்­கள, தமிழ் என பல பிரி­வுகள் உள்­ளன. அந்த அனைத்து தரப்­புக்­க­ளு­டனும் நட­்பு­ற­வுடன் செயற்­ப­டுவேன்.

Q நீங்கள் எதிர்க்­கட்­சியில் இருக்­கும்­போதும் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு குறித்து பேசி­யுள்­ளீர்கள். தற்­போது வெளிவி­வ­கார அமைச்­ச­ராக அது தொடர்­பான உங்கள் பொறுப்பு அதி­க­ரித்­துள்­ளது. அர­சியல் தீர்வு விட­யத்தில் உங்கள் நகர்வு எவ்­வாறு அமையும்?

*நாட்டில் பல பிரச்­சி­னைகள் உள்­ளன. புதிய அர­சி­ய­ல­மைப்பு, அதி­காரப் பகிர்வு, நிர்­வாக விரி­வாக்கம் போன்ற விட­யங்கள் குறித்து பேசப்­ப­டு­கின்­றது. இத­னூ­டாக பிரச்­சி­னை­களை தீர்க்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

Qஅதி­காரப் பகிர்வு தொடர்பில் உங்­களின் தற்­போ­தைய நிலைப்­பாடு என்ன?

*அதி­காரப் பகிர்­வா­னது ஒற்­றை­யாட்­சிக்குள் 13 ஆவது திருத்­தத்­துக்கு அமை­வாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வேண்டும் என்­பதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம். அது செயற்­பாட்­டுத்­தன்மை ஊடாக இடம்­பெ­ற­வேண்டும். அனு­ரா­த­பு­ரத்தில் உள்ள பாதையை கொழும்­பி­லி­ருந்து கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. அதே­போன்று யாழ்ப்­பா­ணத்தில் உள்ள பாதையை கொழும்­பி­லி­ருந்து நிர்­வ­கிக்க முடி­யாது.

Qபாதிக்­கப்­பட்ட மக்கள் நல்­லி­ணக்­கத்தை எதிர்­பார்த்­துக்­காத்­தி­ருக்­கின்­றனர். அவர்­க­ளுக்கு உங்கள் செய்தி என்ன?

*நிச்சயமாக நாம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். நீதியை பெற்றுக்கொடுப்பேன்.

Qநீதிப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் என்ற விவகாரத்துக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்பது தெரியுமா?

* ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு நடத்தி அமைச்சரவை முடிவு எடுத்த பின்னரே இதற்கு என்னால் பதிலளிக்க முடியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பகரமான நீதியை பெற்றுக்கொடுப்பேன். என்னால் பொய் கூற முடியாது. அனைத்து தரப்புக்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுப்பேன்.

Qதற்போது மீண்டும் நாட்டில் இனவாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது. இது தொடர்பில்?

*நாடு சிறப்பாக போய்க்கொண்டிருக்கும்போது இவ்வாறான பிரச்சினைகளை தோற்றுவிப்பார்கள். இனவாதிகள் இந்த முயற்சியை எடுப்பார்கள். சில தரப்புகள் தற்போது இனவாதத்தை கையில் எடுத்துள்ளன. இந்த இனவாதத்தை தடுக்கவேண்டும். அனைத்து தரப்பிலும் இனவாதம் உள்ளது. அதனை தடுத்து முன்செல்ல வேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-27#page-2

Categories: merge-rss, yarl-category

கடுமையான மழை வீழ்ச்சி : வானிலை அவதான நிலையம் புது தகவல்

ஊர்ப்புதினம் - 11 hours 12 min ago
கடுமையான மழை வீழ்ச்சி  : வானிலை அவதான நிலையம் புது தகவல்

 

 

அதிகரித்த மழை வீழ்ச்சியின் அளவு தற்போது குறைவடைந்துள்ளதாகவும் தென்மேற்கு பகுதி மற்றும் நாட்டின் சிலப் பகுதிகளில் மாத்திரம் பருவ மழையுடன் காற்று வீசும் எனவும்  வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.WEATHER-FORECAST.jpg

குறிப்பாக கடந்த 21 மணித் தியாலங்களில் சப்ரகமுவ மாகாணத்திலேயே கடும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு இரத்தினப்புரியில் 68.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும் சப்ரகமுவ, மேல், தெற்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.WEATHER-FORECASTf.jpg

குறிப்பாக நாட்டின் சிலப்பகுதியில் 100 மில்லி மீற்றர் மழை பெய்யக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் காற்று மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும் மழை பெய்யும் நேரங்களில் காற்றின் வேகம் மேலும் அதிரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மின்னல் தாக்குதல்களிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரையோரங்களில் இடியுடன் மழை பெய்யும் என்பதோடு அதிகரித்த காற்றும் வீசும். எனவே மீனவர்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/20413

Categories: merge-rss, yarl-category

இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன்

ஊர்ப்புதினம் - 11 hours 13 min ago
இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன்

10254_1495733005_hyu.JPG

இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன்.

2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த அரசின் ஆசீர்வாதத்துடன் சில அரச அதிகாரிகளும், அரசின் முகவர்களும் மண், காணி அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வியாபாரம் செய்து வந்ததை நாம் அறிவோம். அதற்கான ஆதாரங்களை வெருகல் தொடக்கம் துறைநீலாவணை வரையுள்ள மக்களிடம் கருத்து கேட்டறிந்தால் நன்கு தெரியும். 2009ற்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களும் இன்று இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களின் நிலையையும் இந்த மக்களிடம் கேட்கும்போது மக்களே கூறுவார்கள். இவர்களைப் போன்ற சில அதிகாரிகள் இன்றைய நல்லாட்சியிலும் தொடர்ந்தும் இது போன்ற வியாபாரங்களில் ஈடுபடுவது நாம் அறிந்த விடயமே! மஹிந்த ஆட்சியிலும் உழைப்புத்தான். மைத்திரி ஆட்சியிலும் உழைப்புத்தான். இந்த பச்சோந்திகள் தங்களுடைய கதிரைகளை தக்க வைத்துக்கொள்வதற்காக காலத்திற்கு ஏற்றாற்போன்று நாடகம் ஆடுகின்றனர்.

 

தங்களை இனப்பற்றாளர்கள் போன்று காட்டிக்கொள்ள சில இணையத்தள , முகப்புத்தக எழுத்தாளர்களை வைத்துக்கொண்டு அவ்வப்போது வெளியிடும் அறிக்ககைளை நாம் அறிவோம். இதை சில ஊடகங்கள் வெளியிடுவது கவலைக்குரிய விடயமாகும். எமது ஈழவிடுதலைப் போராட்டம் எதற்காக நடந்தது என்பதை இன்று பலர் மறந்து விட்டார்கள். மண் மீட்பிற்காக பலர் தமது இன்னுயீர்களை தியாகம் செய்தார்கள். இன்று அவ்வாறு தியாகம்  செய்தவர்களுடைய தியாகத்தைக் கூட மதிக்காமல் வெளி மாவட்டத்தவரை இங்கு கொண்டு வந்து, அபிவிருத்தி என்ற போர்வையிலும் ஏனைய விடயங்களாலும் இந்த மாவட்டத்தினுடைய நிலத்தை அபகரித்து இந்த நிலங்களை விற்கின்ற ஒரு சில நயவஞ்சகர்களை நாம் அறிவோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009ம் ஆண்டிற்குப் பின்னர் அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிமாவட்டத்தாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டிற்கு முன் ஒரு லோட் மண்கூட இம் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கு சென்றதில்லை. ஆனால் இன்று பல ஏக்கர் நிலங்களில் இருந்து மண்களை வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளை நாம் அறிவோம். இப்படியான அதிகாரிகளை ஆய்வு செய்து அது பற்றிய செய்திகளை வெளியிட முடியாத முதுகெலும்பில்லாத, தங்களை ஊடகவியலாளர்கள் என்று அடையாளப்படுத்துவோர் செய்யும் செயற்பாடானது எமக்கான துரோகம் அல்ல! மாறாக இந்த மண்ணிற்காக தங்களுடைய உயிரை தியாகம் செய்த எம் உறவுகளுக்கும், இம் மாவட்ட மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

 

நான் அரசியலுக்கு புதிதாக வந்தவன.ஒரு சிறிய அளவிலான காணியைக்கூட அபகரித்தவனும் அல்ல! மற்றவர்களுக்கு விற்றவனும் அல்ல !எந்தவெரு மதுபானசாலையும்,மண் அனுமதிப்பத்திரமும் எனது பெயரில் இல்லை! நான் இந்த மண்ணையும் நிலத்தையும் பாதுகாப்பதில் மிகக் கவனமாக இருக்கின்றேன். இப்பொழுது நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்த பின் இம் மாவட்டத்தில் நடைபெறுகின்ற அனைத்து மக்களுடைய போராட்டங்களிலும் தெரு நாய் போல கலந்து கொண்டு, மக்களோடு மக்களாக நின்று அவர்களது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக ஜனநாயக ரீதியாக நானும் ஈடுபட்டு வருகின்றேன். இந்த மண்ணையும், நிலத்தையும் பாதுகாப்பதற்காக அகிம்சை ரீதியாகப் போரடினோம். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். தற்போது அகிம்சை ரீதியாக  அறவழிப் போராட்டங்களில் ஈடுபடுகின்றோம். ஆகவே மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்வது மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் கலந்து கொள்வது எமது கடமையாகும்.

மட்டக்களப்பில் எழுகதமிழ் நடைபெற்றது அதில் நான் கலந்து கொண்டேன்! அது பிழையா? மக்களுடைய பிரச்சனைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக நடந்தது .அதன் பின்பு இன்று கல்குடாவில்  அமைக்கப்படுகின்ற எரிசாராய மதுபான உற்பத்திச்சாலைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றது. அந்த ஆர்ப்பாட்டங்களிலும் நான் கலந்து கொண்டு வருகின்றேன். அது பிழையா? அத்துடன் சட்டவிரோதமான மண் அகழ்விற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றிலும் நான் கலந்து கொள்கின்றேன். இது பிழையா? காணி அபகரிப்பு தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன அவற்றிலும் நான் கலந்து கொள்கின்றேன். இது பிழையா?  ஒன்றுமே செய்யாமல் இருப்பவர்கள் தான் இவர்கள் பார்வையில் உத்தம புருசர்கள். சில அடிவருடிகள், சில பச்சோந்திகள், சில நயவஞ்சகர்கள் இவ்வாறான போராட்டங்கள் எங்களுடைய தூண்டுதலின் பெயரில் நடைபெறுவதாகவும் கூறிக்கொண்டு , தங்களை உத்தம புத்திரராகக் காட்டிக்கொண்டும் தங்களுக்கு சார்பான சில இணையத்தள ஊடகவியலாளர்களை வைத்துக்கொண்டு அறிக்கை விடுகின்ற கேவலமான நடவடிக்கைகளை நான் இனிமேலும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். இனிவரும் காலங்களில் இவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் . அவ்வாறு தங்களை இவர்கள் திருத்திக் கொள்ளாதவிடத்து இவர்களின் பெயர்களை நான் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கூறி இவர்களுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நான் தயங்க மாட்டேன்.

http://battinaatham.com/description.php?art=10254

Categories: merge-rss, yarl-category

அபாய அறிவிப்பு: நில்வளவை கங்கை பெருக்கெடுத்தது

ஊர்ப்புதினம் - 11 hours 28 min ago

நில்வளவை கங்கை, என்றும் இல்லாத வகையில்  பெருக்கெடுத்துள்ளது. ஆகையால் மாத்தறை மாவட்ட மக்களும், நில்வளவை கங்கையை அண்மித்த பகுதிகளை,   இரு புறங்களைச்   சேர்ந்தவர்களையும் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக இடம் பெயருமாறு  அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அபாய-அறிவிப்பு--நில்வளவை-கங்கை-பெருக்கெடுத்தது/175-197406

Categories: merge-rss, yarl-category

புலிகள் உயிர்ப்பு : பளைச் சூடு நல்ல உதாரணமாம்

ஊர்ப்புதினம் - 11 hours 41 min ago
புலிகள் உயிர்ப்பு : பளைச் சூடு நல்ல உதாரணமாம்
 
 பளைச் சூடு நல்ல உதாரணமாம்
 

புலி­கள் மீண்­டும் உயிர்­பெற்று வரு­கின்­றார்­கள் என்­ப­தற்­குக் கிளி­நொச்சி்த் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் ஒரு சிறந்த உதா­ ரண­மா­கும் என்று நாடா­ளு­மன்ற உறுப் பினர் விமல் வீர­வன்ச தெரி­வித்­துள் ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கிளி­சொச்­சி­யில் பொலிஸ் வாக­னம்

மீது மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிப் பிர­யோ­கத்­தைச் சாதா­ரண சம்­ப­வ­மாக எடுத்­துக்­கொள்ள முடி­யாது. மே 18ஆம் திக­திக்கு அடுத்த நாள் இரவு இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­ற­தால் அது ஆழ­மான அர்த்­தத்­தைக் கொண்­டுள்­ளது. மீண்­டும் புலி­ கள் உயிர் பெற்று வரு­கின்­ற­னர் என்­ப­தற்கு இந்­தச் சம்­ப­வம் சிறந்த உதா­ர­ண­மா­கும்.

எமது ஆட்­சி­யில் இவ்­வாறு இடம்பெறுவதற்கு நாம் அனுமதிக்கவில்லை. சிவாஜிலிங்கம் பிரிவினைவாதக் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால்,இந்த ஆட்சியில் தலைமை அமைச்சர், அரச தலைவர் மற்றும் பொலிசார் ஆகியோர் முன்னிலையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரிவினைவாதத்தை ஆதரித்துப் பேசுகின்றனர். அரச அனுசரணையுடன்தான் இவையெல்லாம் நடக்கின்றன.

மீண்டும் புலிகள் உயிர்பெற்றுவருவதற்கு நாம் இடங்கொடுக்கலாமா?தமது பிள்ளைகள் புத்தகங்களை வைத்துவிட்டுக் கழுத்தில் மீண்டும் சயனைட் குப்பிகளைத் தொங்கவிடுவதற்குத் தமிழ்த் தாய்மார்கள் விரும்புகிறீர்களா?அவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால்,இந்த அரசு அவர்களின் விருப்பத்துக்கு எதிராக-புலிகளின் விருப்பத்துக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது.

தெற்கில் ஒரு சட்டமும் வடக்கில் ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நாம் தெரியாமல் ஆர்ப்பாட்டம் செய்தால்கூட நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகின்றோம். ஆனால்,வடக்கில் நாட்டுக்கு விரோதமான-நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோது பொலிசார் பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்.

சரத் பொன்சேகாகூட அவரது அமைச்சுப் பதவியைக் காப்பாற்றுவதற்காக வீரனாக இருந்து துரோகியாக மாறிவிட்டார். கிளிநொச்சி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தெற்கில் நடக்கும் சாதாரண சம்பவத்துடன் ஒப்பிட்டுக் கருத்துக் கூறியுள்ளார்.இவர்கள் சேர்ந்து இந்த நாட்டுக்கே துரோகம் செய்கின்றனர்-என்றார்.

http://uthayandaily.com/story/4261.html

Categories: merge-rss, yarl-category

“அக்குபஞ்சர்” நம்பிக்கைகளும் நம்பிக்கையீனங்களும்… – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:-

ஊர்ப்புதினம் - 11 hours 52 min ago
“அக்குபஞ்சர்” நம்பிக்கைகளும் நம்பிக்கையீனங்களும்… – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:-

 

question-mark-stockimage_CI.jpg

யாழில். நவீன சிகிச்சை முறையான அக்குபஞ்சர் மருத்துவம் பற்றி பலர் பேசுகிறார்கள். இந்த சிகிச்சை முறை மூலம் நோயாளிக்கு நோயை குணப்படுத்துகிறார்களோ இல்லையோ தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறார்கள். பல வருடங்களாக சிகிச்சையை பெற்று வருபவர்களிடம் இது சம்பந்தமாக கேட்டால் குணப்படுகிறதோ இல்லையோ தொடர்ந்து சிகிச்சையை மேற்கொண்டு வருகிறோம் என்ற பதிலை மட்டும் சொல்லுகிறார்கள். சிகிச்சை பலனளிக்காத போது அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் 1949 இல் சீனாவில் பலனளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்த சிகிச்சை முறையானது 6 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது என்று சொல்லப்படுகிறது. அந்த காரணங்களை வைத்து இன்றும் இந்த சிகிச்சை முறை நாடாளாவிய ரீதியில் பரவலாக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது. ஆனால் எந்தளவுக்கு இந்த சிகிச்சை முறை பயனளிக்கிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

வலிகாமம் கிழக்குப் பகுதியில் ஒரு அக்குபஞ்சர் சிகிச்சை நிலையம் இருக்கிறது. இந்த சிகிச்சை நிலையத்தில் கால் நோவு காரணமாக ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த கோப்பாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவருக்கு சிகிச்சை பலனளிக்காது கால் செயலிழந்து போக கோப்பாய் அரச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இவரை சேர்ப்பதற்கு வைத்தியசாலை அனுமதி மறுத்துவிட. யாழ்.போதானா வைத்தியசாலையில் சேர்த்தனர். இங்கு ஒரு வாரம் இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கும் சிகிச்சையில் பாராமுகம் காரணமாக மருத்துவரின் அனுமதியைப் பெற்று தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பல இலட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை பெற்ற சம்பவம் ஒன்று கடந்த மாதம் இடம்பெற்றுள்ளது. இப்பொழுது அந்த குடும்பப் பெண்ணால் நடக்க முடிகிறது.

கோப்பாயைச் சேர்ந்த இன்னொரு குடும்பப் பெண் ஒருவர் தனது உடம்பு தோளில் வெள்ளை பரவுதலை கட்டுப்படுத்துவதற்கு பல வருடங்களாக இந்த அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சை முறை மூலம் அவர் தனது வெள்ளை பரவுதலை தடுக்க முடியவில்லை. சிகிச்சைக்கு முதல் இருந்ததைவிட உடம்பு தோள் முழுவதும் வெள்ளை பரவிவிட்டது. பிறகு எதற்கு தொடர்ந்தும் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்கிறீர்கள். என்று கேட்டால் உடம்பில் வலி இல்லாமல் இருப்பதால் தொடர்ந்து மேற்கொள்கிறேன் என்று சொல்கிறார். இவர் தனது நோயை குணப்படுத்த முடியாமல் இருந்து கொண்டு இந்த பெண்ணையும் இங்கு கூட்டிக் கொண்டு சென்றுள்ளார். நல்ல வேளை கால் செயலிழந்து போக ஆரம்பித்த பின்னும் இந்த சிகிச்சையை மேற்கொண்டிருந்தால் கால் செயலிழந்து போக நடக்க முடியாமல் போயிருப்பார். தனது புத்திசாலித்தனத்தால் இந்த சிகிச்சையை மேற்கொள்ளவில்லை.

இது. உடலின் ஒரு இடத்தில் குத்தினால் குறிப்பிட்ட வலி அகன்றுவிடும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்றும் விளைவைத் தருவதாக இருக்கின்றன. அக்குபஞ்சரைப் பொறுத்தவரை நோயைப் பரிசோதிப்பதற்கு 12 உறுப்புகளின் செயல்பாடுகள், இரண்டு கைகளின் நாடி வழியாகப் பார்க்கப்படுகிறது.  மெரிடியன் என்ற வகைக்குக் கீழ் வரும் இதயம், கல்லீரல், சிறுநீரகச் செயல்பாடுகளை இடதுகை நாடி வழியாகப் பரிசோதிப்பார்கள். இதயத்துக்கு ஜோடியாகச் சிறுகுடல், கல்லீரலுக்கு ஜோடியாகப் பித்தப்பை, சிறுநீரகத்தின் ஜோடியாகச் சிறுநீர்ப்பை என ஆறு உறுப்புகளின் செயல்பாடுகள் கணிக்கப்படுகின்றன. வலது கையைப் பொறுத்தவரை, நுரையீரல் (பெருங்குடல்), மண்ணீரல் (வயிறு), இதய உறை-சிரை ஆகிய மூன்று உறுப்புகளின் செயல்பாடுகளும் அவற்றின் ஜோடி உறுப்புகளாக முறையே பெருங்குடல், வயிறு மற்றும் இடுப்பு வளையம், நெஞ்சுக்கூட்டுப் பகுதி, அடிவயிறு ஆகியவற்றின் நிலைகள் பரிசோதிக்கப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில்தான் மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்குகின்றனர். உடலில் அதிகப்படியான உயிராற்றல் இருந்தால் நோயும் வலியும் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. குறைவான ஆற்றல் இருந்தாலும் நோய், வலி ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு.

‘அக்குபஞ்சர் என்பது லத்தீன் மொழியில் அகுஸ் (ஊசி), பஞ்சர் (குத்துதல்) என்ற இரு வார்த்தைகளைச் சேர்த்து உருவான சொல். ஊசியால் குத்துவதன் மூலமாக, உடலில் இருக்கக்கூடிய உயிர் ஆற்றல் பாதைகளில் நேரக்கூடிய அடைப்புகளைச் சரிசெய்வதுதான் அக்குபஞ்சரின் அடிப்படை.

என்னதான் 6 ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அன்றைய காலப் பகுதியில் சிகிச்சை முறை அரியதாக இருந்தது. அதனால் இந்த அக்குபஞ்சர் சிகிச்சை முறையை கையாண்டிருக்கலாம். ஆனால் இன்றைய காலப் பகுதி சிகிச்சை முறைகளில் பல கருவிகள் கூட வந்துவிட்டது. நோயை உடனடியாகக் கண்டுபிடித்து சத்திரசிகிச்சை மூலமாவது நோயைக் குணப்படுத்தும் காலப் பகுதியில் இருக்கின்றவர்களுக்கு இந்த சிகிச்சை முறை எந்தளவுக்கு பயன்பெறப் போகின்றது என்பது கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்து கனதியான ஆய்வுகளும், விளக்கங்களும் அவசியமாகிறது.

அந்த வகையில் அக்குபஞ்சர் வைத்திய முறையை கைக்கொள்ளும் வைத்தியர்கள் இந்த முறைமை குறித்து அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். இந்த முறைமையின் வெற்றிகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

http://globaltamilnews.net/archives/28095

Categories: merge-rss, yarl-category

தமிழ் தேசிய கூட்டமைப்பு  தமிழீழ விடுதலை புலிகளின் தலையீட்டுடன் தான் ஆரம்பிக்கப்பட்டதா??

ஊர்ப்புதினம் - 11 hours 58 min ago

தமிழ் தேசிய கூட்டமைப்பு  தமிழீழ விடுதலை புலிகளின் தலையீட்டுடன் தான் ஆரம்பிக்கப்பட்டதா??

 

 

Categories: merge-rss, yarl-category

நிவாரணப் பொருட்கள், மருத்துவக் குழுவுடன் இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

ஊர்ப்புதினம் - 12 hours 27 min ago
நிவாரணப் பொருட்கள், மருத்துவக் குழுவுடன் இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

 

 

இந்தியாவில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் இந்தியக் கப்பலொன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதேவேளை மற்றுமொரு கப்பலொன்று நாளை கொழும்பை வந்தடையுமென இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

DAzkvCRUMAAaAqX.jpg

வெள்ளம் மற்றும் மண் சரி­வினால் பாதிக்­கப்­பட்ட  இலங்கை  மக்­க­ளுக்கு உதவி வழங்க இந்­தியா முன் வந்­துள்­ள நிலையிலேயே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை மக்­க­ளுக்கு உதவி வழங்க முன்­வ­ரு­மாறு இலங்கை அர­சாங்கம் கேட்­டுக்­கொண்­டதை உட­ன­டி­யாக இந்­திய அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டுள்­ளது.

DAzkvCfUIAEVHv0.jpg

அதன் படி நிவா­ரணப் பொருட்­க­ளு­ட­னான இரு இந்­தியக் கப்­பல்கள் ஞாயிற்றுக்கிழமை இலங்­கையை வந்­த­டை­ய­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டிருந்தது. 

சீரற்ற கால­நி­லை­யி னால் நாட்டில் ஏற்­பட்ட  அனர்த்­தங்­க­ளை­ய­டுத்து உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 100 ஆக உயர்­வ­டைந்­தி­ருந்துள்ளது.

கடு­மை­யான மழை வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு உள்­ளிட்ட அனர்த்­தங்­க­ளினால் 99 பேர் காணாமல் போயுள்­ளனர். மேலும் இயற்கை அனர்த்தத்தால் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்­நி­லை­யி­லேயே இலங்கை மக்­க­ளுக்கு உதவி வழங்க இந்­தியா முன் வந்­துள்­ளது. அந்தவகையில் நிவாரணப் பொருட்களுடனான இரு இந்தியக் கப்பல்கள் ஞாயிற்றுக் கிழமை இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிலொரு கப்பல் நிவாரணப்பொருட்கள் மற்றும் மருத்துவ குழுவுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20406

Categories: merge-rss, yarl-category