நாகர்கோவில் படுகொலை

1995-09-22 அன்று 39 பள்ளிச்சிறார்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்

Aggregator

இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு?

3 months 2 weeks ago
சிவமோகன் போன்ற எட்டப்பர்களுக்கு வால்பிடிக்கும் கும்பலிடம் இதைப் போன்ற கருத்துக்களையே எதிர்பார்க்க முடியும்! எப்போது சம்மந்தன், சுமந்திரன், மாவை கும்பல் தமிழின விரோத அரசியலில், தமிழின படுகொலைகாரர்களை பாதுகாக்கும் ஈனச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்ததோ அன்றிலிருந்தே புதிய கட்சி ஒன்றின் தேவையை தமிழ் மக்கள் சிந்திக்க தொடங்கியிருந்தனர். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முயற்சி மிகவும் தாமதமானது என்றாலும் தமிழர்களின் சுயகௌரவத்துக்கும் அரசியல் ஈடேற்றத்துக்கும் இதைவிட வேறுவழியில்லை! இதற்கான உறுப்பினர்களை தெரிவுசெய்யும் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் கவனமாக நல்லதொரு குழுவை அமைத்து செயற்பட வேண்டும். பட்டப்படிப்பு உள்ளவர்கள் என்ற போர்வையில் சத்தியமூர்த்தி, டெனிஸ்வரன் போன்ற கயவர்கள் உள்நுழையாமல் கவனமெடுக்கவேண்டும். பட்டபடிப்பில்லாத திறமையாளர்களும் உள்ளனர். இன்றும் கௌரவமாக வாழ்ந்துவரும் அனுபவமுடைய சில போராளிகளையும் உள்வாங்குவது சிறப்பானது. விலை போகமுடியாத, இணைந்து செயற்படும் பக்குவமுடைய பலவித அறிஞர்களை உள் வாங்குவதும் அவசியம். சொந்த, பந்தங்களுக்கு இடம்கொடுக்கும் பேர்வழிகளை தவிர்க்க வேண்டும். சுரேஷ் பிரேமச்சந்திரன்,நிமலன் கார்த்திகேயன், மனோகணேசன் ... போன்ற சுயநலவாதிகள் சொற்களை நம்பாமல் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் வித்தியாதரன், ஆனந்தசங்கரி, .... போன்ற கைக்கூலிகளை, அவர்களின் முகவர்களை, அருகில் நெருக்கவே விடக்கூடாது. கூல் கும்பல் போன்ற எட்டப்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பக்குவமான இளைஞர்கள் சிலரையும் உள்வாங்க வேண்டும்! பிச்சைக்கார பட்டதாரிகளை தூரவைப்பது நலம்.

முஸ்­லிம்­களை நெருங்கும் ராஜ­பக்‌­ஷாக்கள்!

3 months 2 weeks ago
முஸ்­லிம்­களை நெருங்கும் ராஜ­பக்‌­ஷாக்கள்! முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌ஷ, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ உட்­பட ராஜ­பக்‌ஷ குடும்­பத்­தினர் அண்மைக் கால­மாக முஸ்லிம் சமூ­கத்­து­ட­னான தமது உறவை மீள்­பு­துப்­பிக்க ஆரம்­பித்­தி­ருப்­பதை பகி­ரங்­க­மா­கவே அவ­தா­னிக்க முடி­கி­றது. முஸ்லிம் அமைப்­பு­களைச் சந்­தித்தல், முஸ்­லிம்­களின் பொது நிகழ்­வு­களில் பங்­கேற்றல், இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்­வு­களை நடத்­துதல் என பல வகை­களில் இந்த உறவு புதுப்­பித்தல் நிகழ்­வுகள் நடந்­தேறி வரு­கின்­றன. கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ 'எளிய' அமைப்பை ஆரம்­பித்து 2020 ஆம் ஆண்டை நோக்­கிய தனது அர­சியல் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலை­யி­லேயே, அவர் முன்­னெப்­போ­து­மில்­லா­த­வாறு முஸ்­லிம்­க­ளுடன் அதிக நெருக்­கத்தைப் பேண ஆரம்­பித்­துள்ளார். இரு வாரங்­க­ளுக்கு முன்னர் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு தானா­கவே கோரிக்­கை­ வி­டுத்து விஜயம் செய்த அவர், அதன் நிர்­வா­கி­க­ளுடன் முஸ்லிம் சமூக, சமய விவ­கா­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். இதன்­போது "பௌத்த தேரர்­களில் சிலர் முஸ்­லிம்கள் மீது குரோத மனப்­பான்­மையைக் கொண்­டுள்­ளனர். அவர்கள் எப்­போதும் இன­வா­தத்­தையே பேசு­கி­றார்கள். முஸ்­லிம்கள் எப்­போதும் பெரும்­பான்மை மக்­க­ளுடன் சகோ­தர உற­வினை விரும்­பு­ப­வர்கள். உங்­க­ளுக்கு பௌத்த தேரர்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­புகள் உள்­ளன. எனவே, நீங்கள் பௌத்த தேரர்கள் சிலர் முஸ்­லிம்கள் மீது கொண்­டுள்ள குரோத மனப்­பான்­மையை களை­வ­தற்கு உதவ வேண்டும்" என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி கோத்­தபாய ராஜபக் ஷவிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார். இதற்கு பதி­ல­ளித்த அவர், “முஸ்­லிம்கள், பொது­ப­ல­சே­னாவை இயக்­கி­யவன் நான் என்றும் அந்த அமைப்பின் ஆத­ர­வாளன் நான் என்றும் தவ­றான கருத்­தைக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அந்த அமைப்­புக்கும் எனக்கும் தொடர்­புகள் இருக்­க­வில்லை. பொது­ப­ல­சேனா அமைப்பு காலியில் தனது அலு­வ­ல­க­மொன்றின் திறப்பு விழா­வுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தது. அத­னாலே நான் அந்­நிகழ்வில் கலந்து கொண்டேன். முஸ்லிம் சமூ­கத்­திடம் என்னைப் பற்றி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தப்பபிப்­பி­ரா­யங்கள் நீக்­கப்­பட வேண்டும் என நான் விரும்­பு­கிறேன்” என தெரி­வித்­தி­ருந்தார். இப் பின்­ன­ணி­யி­லேயே கடந்த வாரம் பேரு­வ­ளையில் நடை­பெற்ற இப்தார் நிகழ்­விலும் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்­டி­ருந்தார். இந்­நி­கழ்வில் அவர் முஸ்­லிம்கள் தொடர்பில் தெரி­வித்த கருத்­துக்கள் இன்­றைய நாட்­களில் கவ­னக்­கு­விப்பைப் பெற்­றுள்­ளன. “மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு அப்­போது முஸ்லிம் மக்­களின் முழு­மை­யான ஆத­ரவு இருந்­தது. எனினும் தேசிய மற்றும் சர்­வ­தேச சக்தி­களின் மூல­மாக பொய்­யான கருத்­துக்­களை உரு­வாக்கி எம்­மிடம் இருந்து முஸ்லிம் மக்­களை வேறு­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் முஸ்லிம் மக்­களை பாது­காக்க நாம் விரை­வான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம். இரா­ணு­வத்தை பயன்­ப­டுத்தி குழப்­ப­கர சூழலை கட்­டுப்­ப­டுத்தி முஸ்லிம் மக்­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம்” எனக் குறிப்­பிட்ட அவர், “இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் ராஜ­பக் ஷ ஆட்­சியில் அச்­சத்தில் வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்க நான் இட­ம­ளிக்­க­மாட்டேன். இந்த வாக்­கு­று­தியை நான் வழங்­கு­கின்றேன். முஸ்லிம் தலை­மைகள், மத தலை­வர்கள் ஆகிய பல­ருடன் இன்றும் நாம் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். முஸ்லிம் மக்­களின் மனங்­களில் உள்ள அச்சம் என்ன என்­பதை அறிந்து அவற்றை நீக்கும் வேலைத்­திட்டம் ஒன்­றினை முன்­னெ­டுப்­பது குறித்து கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம்” என்றும் தெரி­வித்­தி­ருந்தார். இதே­போன்று, சில வாரங்­க­ளுக்கு முன்னர் கோத்­த­பாய ராஜ­பக்‌­ஷ­வுக்கு மிக­நெ­ருக்­க­மான முஸ்­லிம்கள் சில­ரது ஏற்­பாட்டில் கொழும்பில் கலந்­து­ரை­யாடல் ஒன்றும் நடத்­தப்­பட்­டது. இதில் முஸ்லிம் சமூ­கத்தின் சம­காலப் பிரச்­சி­னைகள், புதிய தலை­மைத்­துவ சபை ஒன்றை உரு­வாக்­குதல் தொடர்­பான பல விட­யங்கள் ஆரா­யப்­பட்­டுள்­ளன. இதே குழு­வினர் அடுத்த வாரம் கொழும்பில் இப்தார் நிகழ்­வொன்றை ஏற்­பாடு செய்­துள்­ள­தா­கவும் இதில் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ பிர­தம அதி­தியாகக் கலந்து கொள்­ள­வுள்­ள­தா­கவும் பிந்திக் கிடைத்த தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. கோத்­த­பா­யவின் முஸ்லிம் சமூ­கத்தை இலக்கு வைத்த நகர்­வுகள் இவ்­வா­றி­ருக்க முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌­ஷவும் முஸ்லிம் விவ­கா­ரங்­களில் அக்­கறை காட்டத் தொடங்­கி­யுள்ளார். சில மாதங்­க­ளுக்கு முன்னர் தனது முஸ்லிம் விவ­கார இணைப்புச் செய­லாளர் ஒரு­வரை நிய­மித்­துள்ள மஹிந்த, முஸ்­லிம்­களில் தன்­னுடன் இணைந்து செயற்­ப­டக்­கூ­டி­ய­வர்­களை அடை­யாளம் கண்டு அவர்­க­ளு­ட­னான உற­வு­க­ளையும் பலப்­ப­டுத்தி வரு­கிறார். குறிப்­பாக மஹிந்த ராஜ­பக்‌­ஷ­வு­ட­னான முஸ்லிம் வர்த்­த­கர்கள் பலர் தொடர்ந்தும் நல்ல உறவைப் பேணி வரு­கின்­றனர். இந்­நி­லையில், மஹிந்த ஏற்­பாடு செய்­தி­ருந்த இப்தார் நிகழ்வு நேற்று முன்­தினம் கொழும்பு விஜே­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றது. இதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான ஏ.எச்.எம்.பௌஸி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தமை கவ­னிக்­கத்­தக்­க­தாகும். அத்­துடன் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ், பஷீர் சேகு­தாவுத், எம்.ரி.ஹச­னலி ஆகி­யோரும் இதில் கலந்து கொண்­டி­ருந்­தனர். இவர்­க­ளி­டையே மஹிந்­தவின் இல்­லத்தில் மு.கா. தலைவர் ஹக்­கீமின் பிர­சன்­னமே அதிக கவ­ன­யீர்ப்பை பெற்­றி­ருந்­தது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ரவூப் ஹக்கீம், மஹிந்த ராஜ­பக்‌­ஷவை சந்­தித்த முதல் சந்­தர்ப்­ப­மாக இது கரு­தப்­ப­டு­கி­றது. மஹிந்த அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சித்நு வந்த ஹஸன் அலியும் குறித்த இப்தார் நிகழ்வில் பங்­கு­பற்­றி­யி­ருந்தார். மேற்­படி நிகழ்­வுகள் எல்லாம் முஸ்­லிம்கள் தொடர்பில் ராஜ­பக்‌­ஷாக்­க­ளி­டமும் ராஜ­பக்‌­ஷாக்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் ஒரு மன­மாற்றம் வந்­துள்­ள­தையே சுட்­டி­நிற்­கின்­றன. கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் பெறு­பே­றுகள் மஹிந்த தரப்­புக்கு சாத­க­மாக அமைந்­த­மையும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களில் ஏற்­பட்­டுள்ள குழப்ப நிலை­களும் முஸ்­லிம்­களை மஹிந்த தரப்பு தொடர்பில் சிந்­திக்­கத்­தூண்­டி­யுள்­ளது எனலாம். 2020 இல் ராஜ­பக்‌­ஷாக்­களில் ஒரு­வரே இந்த நாட்டின் தலை­வ­ராக வரு­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன என முஸ்­லிம்­களில் ஒரு­சாரார் நம்­பு­கின்­றனர். இந்த நம்­பிக்­கையை நாடி­பி­டித்­துப்­பார்த்­ததன் பல­னா­கவே தற்­போது மஹிந்த, கோத்­த­பாய ஆகியோர் முஸ்­லிம்­க­ளுடன் நெருங்கிச் செயற்­படத் தொடங்­கி­யுள்­ளனர். இந்த இடத்தில் கடந்த கால ஆட்­சியில் ராஜ­பக்‌ஷ தரப்­பி­ன­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவு தொடர்பில் மீட்­டு­வதும் பொருத்­த­மா­ன­தாகும். கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பௌத்த இன­வாத சக்­தி­களின் தாக்­கு­தல்கள் மேலெ­ழுந்த சமயம், நாட்டின் பாது­காப்பு தொடர்­பான முழு­மை­யான அதி­கா­ரத்­தையும் தன்­வசம் கொண்­டி­ருந்த கோத்­த­பாய ராஜ ­பக் ஷ அவற்றைத் தடுத்து நிறுத்த காத்­தி­ர­மான முயற்­சி­களை முன்­னெ­டுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு அவர் மீது முஸ்­லிம்கள் தரப்பில் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இது நியா­ய­மா­ன­து­மாகும். இதன் கார­ண­மா­கவே அவர் சார்ந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தை தோற்­க­டிப்­பதில் முஸ்­லிம்கள் பெரு­மெ­டுப்பில் முன்­னின்று வாக்­க­ளித்­தனர். மஹிந்த ராஜ­பக்‌ஷ நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யா­க­வி­ருந்த போதிலும் கூட தனது ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற சுமார் 350 க்கும் மேற்­பட்ட சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்த காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. இதுவே முஸ்­லிம்கள் கடந்த தேர்­தலில் மஹிந்­தவை எதிர்த்­த­மைக்கு பிர­தான கார­ண­மாகும். இருந்­த­போ­திலும் கோத்­த­பாய ராஜ­­பக்‌ஷ பேரு­வளை இப்தார் நிகழ்வில் தெரி­வித்த கருத்­தா­னது, தான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கும்­பட்­சத்தில் முஸ்­லிம்­களின் ஆத­ரவு அவ­சியம் என்­பதை உணர்ந்­ததன் வெளிப்­பா­டா­கவே பார்க்­கப்­பட முடியும். முஸ்­லிம்­களின் ஆத­ர­வின்றி தனித்து பௌத்த பெரும்­பான்மை மக்­களின் வாக்­கு­களால் ஆட்­சி­ய­மைக்க முடியும் என்ற நிலைப்­பாட்டில் இருந்­த­வர்கள், இன்று முஸ்­லிம்­க­ளையும் அர­வ­ணைத்துச் செல்­வதன் மூல­மா­கத்தான் இந்த நாட்டில் நிலை­யான ஆட்­சி­யொன்றை அமைக்க முடியும் என்­பதை உணர்ந்­தி­ருக்­கி­றார்கள் எனின் அதுவே கடந்த தேர்தல்களில் முஸ்லிம்கள் எடுத்த நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். ராஜபக்‌­ஷாக்கள் மோசமானவர்கள், நல்லாட்சியினர் நல்லவர்கள் என்று சொல்ல முடியாதளவுக்கு இரு சாராரினதும் ஆட்சிக்காலங்களில் முஸ்லிம்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் இலங்கையின் கட்சி அரசியல் கலாசாரம் மற்றும் தேர்தல் முறைமைகளுக்கிணங்க முஸ்லிம்கள் இதில் ஏதேனுமொரு சக்தியை ஆதரித்தேயாகவேண்டிய நிலையுள்ளது. எனினும் நாட்டுக்கு தலைமை வகிக்க இவர்களில் யார் பொருத்தமானவர்கள் என்ற தீர்மானத்தை முஸ்லிம் சமூகம் எடுப்பதற்கு இன்னமும் காலம் இருக்கின்றது. எனினும் முஸ்லிம்கள் கடந்த தேர்தலைப் போன்று ராஜபக்‌ஷ தரப்பு வேட்பாளரை முற்றாக எதிர்த்து நிற்கமாட்டார்கள் என்பதை மாத்திரம் இப்போதைக்கு குறிப்பிட்டுச் சொல்ல முடியும். http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-02#page-4

முஸ்­லிம்­களை நெருங்கும் ராஜ­பக்‌­ஷாக்கள்!

3 months 2 weeks ago
முஸ்­லிம்­களை நெருங்கும் ராஜ­பக்‌­ஷாக்கள்!

 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌ஷ, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ உட்­பட ராஜ­பக்‌ஷ குடும்­பத்­தினர் அண்மைக் கால­மாக முஸ்லிம் சமூ­கத்­து­ட­னான தமது உறவை மீள்­பு­துப்­பிக்க ஆரம்­பித்­தி­ருப்­பதை பகி­ரங்­க­மா­கவே அவ­தா­னிக்க முடி­கி­றது.

முஸ்லிம் அமைப்­பு­களைச் சந்­தித்தல், முஸ்­லிம்­களின் பொது நிகழ்­வு­களில் பங்­கேற்றல், இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்­வு­களை நடத்­துதல் என பல வகை­களில் இந்த உறவு புதுப்­பித்தல் நிகழ்­வுகள் நடந்­தேறி வரு­கின்­றன.

கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ 'எளிய' அமைப்பை ஆரம்­பித்து 2020 ஆம் ஆண்டை நோக்­கிய தனது அர­சியல் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலை­யி­லேயே, அவர் முன்­னெப்­போ­து­மில்­லா­த­வாறு முஸ்­லிம்­க­ளுடன் அதிக நெருக்­கத்தைப் பேண ஆரம்­பித்­துள்ளார்.

இரு வாரங்­க­ளுக்கு முன்னர் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு தானா­கவே கோரிக்­கை­ வி­டுத்து விஜயம் செய்த அவர், அதன் நிர்­வா­கி­க­ளுடன் முஸ்லிம் சமூக, சமய விவ­கா­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

இதன்­போது "பௌத்த தேரர்­களில் சிலர் முஸ்­லிம்கள் மீது குரோத மனப்­பான்­மையைக் கொண்­டுள்­ளனர். அவர்கள் எப்­போதும் இன­வா­தத்­தையே பேசு­கி­றார்கள். முஸ்­லிம்கள் எப்­போதும் பெரும்­பான்மை மக்­க­ளுடன் சகோ­தர உற­வினை விரும்­பு­ப­வர்கள். உங்­க­ளுக்கு பௌத்த தேரர்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­புகள் உள்­ளன. எனவே, நீங்கள் பௌத்த தேரர்கள் சிலர் முஸ்­லிம்கள் மீது கொண்­டுள்ள குரோத மனப்­பான்­மையை களை­வ­தற்கு உதவ வேண்டும்" என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி கோத்­தபாய ராஜபக் ஷவிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார். இதற்கு பதி­ல­ளித்த அவர், “முஸ்­லிம்கள், பொது­ப­ல­சே­னாவை இயக்­கி­யவன் நான் என்றும் அந்த அமைப்பின் ஆத­ர­வாளன் நான் என்றும் தவ­றான கருத்­தைக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அந்த அமைப்­புக்கும் எனக்கும் தொடர்­புகள் இருக்­க­வில்லை. பொது­ப­ல­சேனா அமைப்பு காலியில் தனது அலு­வ­ல­க­மொன்றின் திறப்பு விழா­வுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தது. அத­னாலே நான் அந்­நிகழ்வில் கலந்து கொண்டேன். முஸ்லிம் சமூ­கத்­திடம் என்னைப் பற்றி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தப்பபிப்­பி­ரா­யங்கள் நீக்­கப்­பட வேண்டும் என நான் விரும்­பு­கிறேன்” என தெரி­வித்­தி­ருந்தார்.

இப் பின்­ன­ணி­யி­லேயே கடந்த வாரம் பேரு­வ­ளையில் நடை­பெற்ற இப்தார் நிகழ்­விலும் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்­டி­ருந்தார். இந்­நி­கழ்வில் அவர் முஸ்­லிம்கள் தொடர்பில் தெரி­வித்த கருத்­துக்கள் இன்­றைய நாட்­களில் கவ­னக்­கு­விப்பைப் பெற்­றுள்­ளன.

“மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு அப்­போது முஸ்லிம் மக்­களின் முழு­மை­யான ஆத­ரவு இருந்­தது. எனினும் தேசிய மற்றும் சர்­வ­தேச சக்தி­களின் மூல­மாக பொய்­யான கருத்­துக்­களை உரு­வாக்கி எம்­மிடம் இருந்து முஸ்லிம் மக்­களை வேறு­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் முஸ்லிம் மக்­களை பாது­காக்க நாம் விரை­வான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம். இரா­ணு­வத்தை பயன்­ப­டுத்தி குழப்­ப­கர சூழலை கட்­டுப்­ப­டுத்தி முஸ்லிம் மக்­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம்” எனக் குறிப்­பிட்ட அவர், “இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் ராஜ­பக் ஷ ஆட்­சியில் அச்­சத்தில் வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்க நான் இட­ம­ளிக்­க­மாட்டேன். இந்த வாக்­கு­று­தியை நான் வழங்­கு­கின்றேன். முஸ்லிம் தலை­மைகள், மத தலை­வர்கள் ஆகிய பல­ருடன் இன்றும் நாம் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். முஸ்லிம் மக்­களின் மனங்­களில் உள்ள அச்சம் என்ன என்­பதை அறிந்து அவற்றை நீக்கும் வேலைத்­திட்டம் ஒன்­றினை முன்­னெ­டுப்­பது குறித்து கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம்” என்றும் தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­போன்று, சில வாரங்­க­ளுக்கு முன்னர் கோத்­த­பாய ராஜ­பக்‌­ஷ­வுக்கு மிக­நெ­ருக்­க­மான முஸ்­லிம்கள் சில­ரது ஏற்­பாட்டில் கொழும்பில் கலந்­து­ரை­யாடல் ஒன்றும் நடத்­தப்­பட்­டது. இதில் முஸ்லிம் சமூ­கத்தின் சம­காலப் பிரச்­சி­னைகள், புதிய தலை­மைத்­துவ சபை ஒன்றை உரு­வாக்­குதல் தொடர்­பான பல விட­யங்கள் ஆரா­யப்­பட்­டுள்­ளன. இதே குழு­வினர் அடுத்த வாரம் கொழும்பில் இப்தார் நிகழ்­வொன்றை ஏற்­பாடு செய்­துள்­ள­தா­கவும் இதில் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ பிர­தம அதி­தியாகக் கலந்து கொள்­ள­வுள்­ள­தா­கவும் பிந்திக் கிடைத்த தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கோத்­த­பா­யவின் முஸ்லிம் சமூ­கத்தை இலக்கு வைத்த நகர்­வுகள் இவ்­வா­றி­ருக்க முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌­ஷவும் முஸ்லிம் விவ­கா­ரங்­களில் அக்­கறை காட்டத் தொடங்­கி­யுள்ளார். சில மாதங்­க­ளுக்கு முன்னர் தனது முஸ்லிம் விவ­கார இணைப்புச் செய­லாளர் ஒரு­வரை நிய­மித்­துள்ள மஹிந்த, முஸ்­லிம்­களில் தன்­னுடன் இணைந்து செயற்­ப­டக்­கூ­டி­ய­வர்­களை அடை­யாளம் கண்டு அவர்­க­ளு­ட­னான உற­வு­க­ளையும் பலப்­ப­டுத்தி வரு­கிறார். குறிப்­பாக மஹிந்த ராஜ­பக்‌­ஷ­வு­ட­னான முஸ்லிம் வர்த்­த­கர்கள் பலர் தொடர்ந்தும் நல்ல உறவைப் பேணி வரு­கின்­றனர். இந்­நி­லையில், மஹிந்த ஏற்­பாடு செய்­தி­ருந்த இப்தார் நிகழ்வு நேற்று முன்­தினம் கொழும்பு விஜே­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றது. இதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான ஏ.எச்.எம்.பௌஸி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தமை கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

அத்­துடன் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ், பஷீர் சேகு­தாவுத், எம்.ரி.ஹச­னலி ஆகி­யோரும் இதில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இவர்­க­ளி­டையே மஹிந்­தவின் இல்­லத்தில் மு.கா. தலைவர் ஹக்­கீமின் பிர­சன்­னமே அதிக கவ­ன­யீர்ப்பை பெற்­றி­ருந்­தது.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ரவூப் ஹக்கீம், மஹிந்த ராஜ­பக்‌­ஷவை சந்­தித்த முதல் சந்­தர்ப்­ப­மாக இது கரு­தப்­ப­டு­கி­றது. மஹிந்த அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சித்நு வந்த ஹஸன் அலியும் குறித்த இப்தார் நிகழ்வில் பங்­கு­பற்­றி­யி­ருந்தார்.

மேற்­படி நிகழ்­வுகள் எல்லாம் முஸ்­லிம்கள் தொடர்பில் ராஜ­பக்‌­ஷாக்­க­ளி­டமும் ராஜ­பக்‌­ஷாக்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் ஒரு மன­மாற்றம் வந்­துள்­ள­தையே சுட்­டி­நிற்­கின்­றன.

கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் பெறு­பே­றுகள் மஹிந்த தரப்­புக்கு சாத­க­மாக அமைந்­த­மையும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களில் ஏற்­பட்­டுள்ள குழப்ப நிலை­களும் முஸ்­லிம்­களை மஹிந்த தரப்பு தொடர்பில் சிந்­திக்­கத்­தூண்­டி­யுள்­ளது எனலாம். 2020 இல் ராஜ­பக்‌­ஷாக்­களில் ஒரு­வரே இந்த நாட்டின் தலை­வ­ராக வரு­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன என முஸ்­லிம்­களில் ஒரு­சாரார் நம்­பு­கின்­றனர். இந்த நம்­பிக்­கையை நாடி­பி­டித்­துப்­பார்த்­ததன் பல­னா­கவே தற்­போது மஹிந்த, கோத்­த­பாய ஆகியோர் முஸ்­லிம்­க­ளுடன் நெருங்கிச் செயற்­படத் தொடங்­கி­யுள்­ளனர்.

இந்த இடத்தில் கடந்த கால ஆட்­சியில் ராஜ­பக்‌ஷ தரப்­பி­ன­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவு தொடர்பில் மீட்­டு­வதும் பொருத்­த­மா­ன­தாகும்.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பௌத்த இன­வாத சக்­தி­களின் தாக்­கு­தல்கள் மேலெ­ழுந்த சமயம், நாட்டின் பாது­காப்பு தொடர்­பான முழு­மை­யான அதி­கா­ரத்­தையும் தன்­வசம் கொண்­டி­ருந்த கோத்­த­பாய ராஜ

­பக் ஷ அவற்றைத் தடுத்து நிறுத்த காத்­தி­ர­மான முயற்­சி­களை முன்­னெ­டுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு அவர் மீது முஸ்­லிம்கள் தரப்பில் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இது நியா­ய­மா­ன­து­மாகும். இதன் கார­ண­மா­கவே அவர் சார்ந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தை தோற்­க­டிப்­பதில் முஸ்­லிம்கள் பெரு­மெ­டுப்பில் முன்­னின்று வாக்­க­ளித்­தனர்.

மஹிந்த ராஜ­பக்‌ஷ நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யா­க­வி­ருந்த போதிலும் கூட தனது ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற சுமார் 350 க்கும் மேற்­பட்ட சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்த காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. இதுவே முஸ்­லிம்கள் கடந்த தேர்­தலில் மஹிந்­தவை எதிர்த்­த­மைக்கு பிர­தான கார­ண­மாகும்.

இருந்­த­போ­திலும் கோத்­த­பாய ராஜ­­பக்‌ஷ பேரு­வளை இப்தார் நிகழ்வில் தெரி­வித்த கருத்­தா­னது, தான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கும்­பட்­சத்தில் முஸ்­லிம்­களின் ஆத­ரவு அவ­சியம் என்­பதை உணர்ந்­ததன் வெளிப்­பா­டா­கவே பார்க்­கப்­பட முடியும்.

முஸ்­லிம்­களின் ஆத­ர­வின்றி தனித்து பௌத்த பெரும்­பான்மை மக்­களின் வாக்­கு­களால் ஆட்­சி­ய­மைக்க முடியும் என்ற நிலைப்­பாட்டில் இருந்­த­வர்கள், இன்று முஸ்­லிம்­க­ளையும் அர­வ­ணைத்துச் செல்­வதன் மூல­மா­கத்தான் இந்த நாட்டில் நிலை­யான ஆட்­சி­யொன்றை அமைக்க முடியும் என்­பதை உணர்ந்­தி­ருக்­கி­றார்கள் எனின் அதுவே கடந்த தேர்தல்களில் முஸ்லிம்கள் எடுத்த நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும்.

ராஜபக்‌­ஷாக்கள் மோசமானவர்கள், நல்லாட்சியினர் நல்லவர்கள் என்று சொல்ல முடியாதளவுக்கு இரு சாராரினதும் ஆட்சிக்காலங்களில் முஸ்லிம்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் இலங்கையின் கட்சி அரசியல் கலாசாரம் மற்றும் தேர்தல் முறைமைகளுக்கிணங்க முஸ்லிம்கள் இதில் ஏதேனுமொரு சக்தியை ஆதரித்தேயாகவேண்டிய நிலையுள்ளது. எனினும் நாட்டுக்கு தலைமை வகிக்க இவர்களில் யார் பொருத்தமானவர்கள் என்ற தீர்மானத்தை முஸ்லிம் சமூகம் எடுப்பதற்கு இன்னமும் காலம் இருக்கின்றது.

எனினும் முஸ்லிம்கள் கடந்த தேர்தலைப் போன்று ராஜபக்‌ஷ தரப்பு வேட்பாளரை முற்றாக எதிர்த்து நிற்கமாட்டார்கள் என்பதை மாத்திரம் இப்போதைக்கு குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-02#page-4

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்

3 months 2 weeks ago
"எங்கள் வேலை போனாலும், ஆலையை மூடியதில் மகிழ்ச்சி": ஸ்டெர்லைட் ஊழியர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஸ்டெர்லைட் ஊழியர் விஜயபாலன் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், அதன் ஊழியர்கள் தங்களுக்கு மாற்றுத் தொழில் அமைத்துத் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தூத்துக்குடி மக்களின் தொடர் போரட்டத்தையடுத்து கடந்த மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. ஆலையில் நிரந்திர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்த ஆலையை நம்பி வாழ்ந்து வருகின்றனர். தமிழக அரசின் திடீர் நடவடிக்கையால், அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனிடையே அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியர்களை கடந்த மே 22ஆம் தேதி முதலே வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாகவும், இனிமேல் பணிக்கு வர தேவை இல்லை என ஒப்பந்த ஊழியர்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. Image captionஊழியர் ரமேஷ் ஆனால் அதில் ஊதியம் குறித்த எந்தவித தகவலும் இல்லாததால் ஊழியர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்து ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்களிடம் பிபிசி பேசியது. "நான் பதினைந்து ஆண்டுகளாக ஸ்டைர்லைட் ஆலையில் வேலை செய்கிறேன். இந்த திடீர் மூடல் என்பது எங்களுக்கு குடும்ப ரீதியா கஷ்டம் தான். இன்று வரை எங்களுக்கு வேலை இருக்கிறதா இல்லையா என்று தெரியாத நிலையில்தான் 3000 பேரும் இருக்கிறோம்" என்று கூறுகிறார் ஊழியர் தங்கபாண்டி. கடந்த மாதத்திற்கான ஊதியம் வருமா என்று தெரியாமல் இருக்கும் அவர், தன் குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தை எவ்வாறு செலுத்த போகிறோம் என்ற கவலையில் உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாகக் கூறிய அவர், "ஸ்டைர்லைட் ஆலையை மூடியது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக" தெரிவித்தார். "புதிதாக ஆலையை விரிவாக்கம் செய்தால், எங்கள் ஊரே காணாமல் போயிடும். கம்பெனிக்குள்ள மாஸ்க் இல்லாம இருக்க முடியாது. ஒரு அடி தோண்னாலும் ஆசீட் தண்ணீ வருது. எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாற்று வேலைக்கு வழி செய்து கொடுக்க வேண்டும்" என்றும் தங்கபாண்டி கூறினார். இதுகுறித்து பேசிய ஒப்பந்த ஊழியர் ரமேஷ், "ஆலையில் பணிபுரிந்ததால் தோல் நோய், ஆஸ்தும்மா போன்ற நோய்கள் வருவதாகவும் வேறு வழி இல்லாமல் அங்கு வேலை செய்து வருவதாகவும்" குறிப்பிட்டார். ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தூத்துக்குடி மக்களுக்கு ரொம்ப சந்தோஷம் என்கிறார் லாரி எடை மேடை ஊழியர் மணிகண்டன். "ஆலைக்கு தினமும் எங்க அண்ணன்தான் குடிநீர் சப்பளை செஞ்சாங்க. இப்ப தொழில் இல்லாம் கஷ்டப்படுறான். நாங்க மாற்று வழியை தான் பாக்கனும். இருந்தாலும் மக்கள பாதிக்கிற ஸ்டைர்லைட் எங்களுக்கு வேண்டாம்" என்று கூறுகிறார் ஆனந்த். ஸ்டெர்லைட் ஆலையில் வேலைக்கு சேர்த்து விட்ட, காண்ட்ராக்ட் நிறுவனம் சார்பில் ஒரு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதில், "மே 22ஆம் தேதியில் இருந்து எங்கள் வேலை முடிந்தது எனவும், எங்களுக்கான செட்டில்மென்ட் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் எந்த விதமான தெளிவும் இல்லை. மேலும், வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்க்கு முன்பே அறிவிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளதாக" ஒப்பந்த ஊழியர் சோமசுந்தரம் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-44342498

பிரபாகரன் ஒரே தொலைபேசி அழைப்பில் வெற்றி பெற்றிருப்பார் – மஹிந்தவின் தகவல்

3 months 2 weeks ago
பிரபாகரன் ஒரே தொலைபேசி அழைப்பில் வெற்றி பெற்றிருப்பார் – மஹிந்தவின் தகவல் “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போன்ற ஜனாதிபதி இலங்கை யுத்த காலத்தில் பதவியில் இருந்திருந்தால், பிரபாகரன் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்பார்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு விஷேட நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், தற்போது உள்ளதைப் போன்ற அரசாங்கத்தை இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் கண்டதில்லை. ஊழல்களும், திருட்டுகளும் நிறைந்து வழியும் அரசாங்கமே தற்போது உள்ளது. தமிழ்மக்களின் ஆதரவினால் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. மைத்திரி ஜனாதிபதியாக வந்தவுடன் ரணிலை பிரதமராக்கினார். அதன் பின்னர் முழுக்கட்டுப்பாடுகளும் பிரதமர் கைகளுக்கு சென்று விட்டது. இப்போதுபிரதமரை மாற்ற முடியாத நிலையில் ஜனாதிபதி உள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்துகளின் மூலம் அவரின் எதிர்காலம் தெளிவாக தெரிகின்றது. ஜனாதிபதி தற்போது இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்துள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் என்ன நடக்கும் என்பதே அவருக்கு தெரியவில்லை. மைத்திரி தனிமைப்படுத்தப்படவுள்ளார். அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதை புரிந்து கொண்டுள்ள அவர், என்னால் எதுவும் முடியாது எனக்கூறிக்கொண்டு அழுது அழுது முழுநாட்டையும் சுற்றி வந்து கொண்டிருக்கின்றார். எவ்வாறாயினும் நாட்டுக்கு முறையான தலைமைத்துவம் அவசியம், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தீர்க்கமான முடிவுகள் அவசியம். இந்த நிலையில் கோட்டாபய அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்ற கருத்து அதிகமானோரிடம் காணப்படுகின்றது இந்த விடயம் குறித்தும் நாம் ஆலோசனைகளைச் செய்துவருகின்றோம் எனவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/?p=682024-பிரபாகரன்-ஒரே-தொலைபேசி-அழைப்பில்-வெற்றி-பெற்றிருப்பார்-–-மஹிந்தவின்-தகவல்

பிரபாகரன் ஒரே தொலைபேசி அழைப்பில் வெற்றி பெற்றிருப்பார் – மஹிந்தவின் தகவல்

3 months 2 weeks ago
பிரபாகரன் ஒரே தொலைபேசி அழைப்பில் வெற்றி பெற்றிருப்பார் – மஹிந்தவின் தகவல்

 

 

maithri_mahinda-720x450.jpg

 

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போன்ற ஜனாதிபதி இலங்கை யுத்த காலத்தில் பதவியில் இருந்திருந்தால், பிரபாகரன் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்பார்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு விஷேட நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

தற்போது உள்ளதைப் போன்ற அரசாங்கத்தை இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் கண்டதில்லை. ஊழல்களும், திருட்டுகளும் நிறைந்து வழியும் அரசாங்கமே தற்போது உள்ளது.

தமிழ்மக்களின் ஆதரவினால் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. மைத்திரி ஜனாதிபதியாக வந்தவுடன் ரணிலை பிரதமராக்கினார். அதன் பின்னர் முழுக்கட்டுப்பாடுகளும் பிரதமர் கைகளுக்கு சென்று விட்டது. இப்போதுபிரதமரை மாற்ற முடியாத நிலையில் ஜனாதிபதி உள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்துகளின் மூலம் அவரின் எதிர்காலம் தெளிவாக தெரிகின்றது. ஜனாதிபதி தற்போது இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்துள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் என்ன நடக்கும் என்பதே அவருக்கு தெரியவில்லை.

மைத்திரி தனிமைப்படுத்தப்படவுள்ளார். அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதை புரிந்து கொண்டுள்ள அவர், என்னால் எதுவும் முடியாது எனக்கூறிக்கொண்டு அழுது அழுது முழுநாட்டையும்  சுற்றி வந்து கொண்டிருக்கின்றார்.

எவ்வாறாயினும் நாட்டுக்கு முறையான தலைமைத்துவம் அவசியம், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தீர்க்கமான முடிவுகள் அவசியம். இந்த நிலையில் கோட்டாபய அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்ற கருத்து அதிகமானோரிடம் காணப்படுகின்றது இந்த விடயம் குறித்தும் நாம் ஆலோசனைகளைச் செய்துவருகின்றோம் எனவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/?p=682024-பிரபாகரன்-ஒரே-தொலைபேசி-அழைப்பில்-வெற்றி-பெற்றிருப்பார்-–-மஹிந்தவின்-தகவல்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சுவீடன் தமிழர்கள் போராட்டம்!

3 months 2 weeks ago
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சுவீடன் தமிழர்கள் போராட்டம்! சுவீடன் நாட்டின் கோத்தென்பர்க் நகரில், தூத்துக்குடி மக்களின் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களின் பாதிப்பிற்கான நீதிக்காகவும் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டம் நடந்தது. நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தின் பொழுது, ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத நடவடிக்கைகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலையால் பரப்பப்பட்டு வரும் நச்சுக் காற்று, நீர் மாசடைதல், 1998 முதல் 2013 நீதிமன்றங்களும் தமிழ்நாடு அரசாங்கங்களும் எடுத்த சட்ட நடவடிக்கைகள், வேதாந்தா நிறுவனத்தில் உலகளாவிய சட்ட விதிமுறை மீறல்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. போராட்டத்தின் முடிவில், கோத்தென்பர்க் வாழ் மக்களின் சார்பாக, சுவீடனுக்கான இந்திய தூதரகத்திற்கு எழுதப்பட்ட கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு, அனைவரும் ஏற்று கையெழுத்திட்டனர். இந்திய தூதரகத்திற்கு எழுதப்பட்ட மனுவின் பிரதியை, சுவீடனின் பிரதமர், துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர், சுவீடன்-இந்திய வணிக அவை, Amnesty International, Green Peace, ஐரோப்பிய, நோர்டிக் நாடுகளின் பசுமை-இடதுசாரி முன்னணி நாடாளுமன்றக் கூட்டமைப்பு, Volvo, ABB, SKF உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் தெரிவித்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை குறித்தும் மே 22ம் தேதி நடந்த கலவரம் குறித்தும் முக்கியமாக சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 1) மே 22 கலவரத்திற்கான நீதி விசாரணையை, பணியில் இயங்கும் மூன்று நீதிபதிகள் (தமிழகத்தவர் 1, பிற மாநிலத்தவர் 2) தலைமையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் 2 பிரதிநிதிகளின் மேற்பார்வையில் தொடங்க வேண்டும். 2) ஆணையத்தில் விசாரணைக்காக, தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள், இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அனைவரும் அழைக்கப்பட வேண்டும். 3) தமிழக அரசு, மே 28 ஆம் நாள் வெளியிட்ட அரசாணையை உறுதி செய்ய, அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவது தமிழக அரசின் கொள்கை முடிவென அறிவிக்க வேண்டும். 4) வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். வருங்காலத்தில் கடவுச்சீட்டு உள்ளிட்ட எவ்வித விசாரணைகளின் பொழுதும் அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது. 5) ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டப் பிறகு, அடுத்த 6 மாதங்களுக்கு உரிய சம்பளத்தை தொழிலாளர்கள் அனைவருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கிட வேண்டும், 6 மாதத்திற்குள் அவர்களுக்கான பணி வாய்ப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். 6) அரச வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு, தமிழக அரசு, இந்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் இணைந்து, நல்லிணக்கம், மீள் கட்டமைப்பு, நிவாரணம், உள்ளிட்டவைகளில் ஈடுபடல் வேண்டும். 7) ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட, கடல், நில, நீர், காற்று உள்ளிட்டவைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளின் மொத்த செலவுகளையும் ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமே ஏற்க வேண்டும். 😎 மே 22, அரச கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு மண்டபத்தையும் அதனை ஒட்டி, பெரிய அளவிலான பசுமைப் பூங்கா ஸ்டெர்லைட் ஆலையின் செலவில் அமைத்திடல் வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்து, அதில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது தங்களை மிக ஆழமாக பாதித்ததாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அந்த மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும், ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் இனியும் மக்களை பாதிக்கும் வகையில் இயங்கிடக் கூடாது என்பதே தங்களின் எண்ணம் என்பதையும் வெளிப்படுத்தினார்கள். https://www.vikatan.com/news/tamilnadu/126672-sweden-tamils-protest-against-sterlite.html

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சுவீடன் தமிழர்கள் போராட்டம்!

3 months 2 weeks ago
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சுவீடன் தமிழர்கள் போராட்டம்!
 
 

சுவீடன் நாட்டின் கோத்தென்பர்க் நகரில், தூத்துக்குடி மக்களின் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களின் பாதிப்பிற்கான நீதிக்காகவும் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டம் நடந்தது.

நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தின் பொழுது, ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத நடவடிக்கைகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலையால் பரப்பப்பட்டு வரும் நச்சுக் காற்று, நீர் மாசடைதல், 1998 முதல் 2013 நீதிமன்றங்களும் தமிழ்நாடு அரசாங்கங்களும் எடுத்த சட்ட நடவடிக்கைகள், வேதாந்தா நிறுவனத்தில் உலகளாவிய சட்ட விதிமுறை மீறல்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

 

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக ஸ்வீடன் தமிழர்கள்

போராட்டத்தின் முடிவில், கோத்தென்பர்க் வாழ் மக்களின் சார்பாக, சுவீடனுக்கான இந்திய தூதரகத்திற்கு எழுதப்பட்ட கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு, அனைவரும் ஏற்று கையெழுத்திட்டனர். இந்திய தூதரகத்திற்கு எழுதப்பட்ட மனுவின் பிரதியை, சுவீடனின் பிரதமர், துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர்,  சுவீடன்-இந்திய வணிக அவை, Amnesty International, Green Peace, ஐரோப்பிய, நோர்டிக் நாடுகளின் பசுமை-இடதுசாரி முன்னணி நாடாளுமன்றக்  கூட்டமைப்பு, Volvo, ABB, SKF உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக ஸ்வீடன் தமிழர்கள்

அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை குறித்தும் மே 22ம் தேதி நடந்த கலவரம் குறித்தும் முக்கியமாக சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.  

1) மே 22 கலவரத்திற்கான நீதி விசாரணையை, பணியில் இயங்கும் மூன்று நீதிபதிகள் (தமிழகத்தவர் 1, பிற மாநிலத்தவர் 2) தலைமையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் 2 பிரதிநிதிகளின் மேற்பார்வையில் தொடங்க வேண்டும்.

2) ஆணையத்தில் விசாரணைக்காக, தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள், இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அனைவரும் அழைக்கப்பட வேண்டும்.

3) தமிழக அரசு, மே 28 ஆம் நாள் வெளியிட்ட அரசாணையை உறுதி செய்ய, அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவது தமிழக அரசின் கொள்கை முடிவென அறிவிக்க வேண்டும்.

4) வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். வருங்காலத்தில் கடவுச்சீட்டு உள்ளிட்ட எவ்வித விசாரணைகளின் பொழுதும் அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது.

5) ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டப் பிறகு, அடுத்த 6 மாதங்களுக்கு உரிய சம்பளத்தை தொழிலாளர்கள் அனைவருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கிட வேண்டும், 6 மாதத்திற்குள் அவர்களுக்கான பணி வாய்ப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

6) அரச வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு, தமிழக அரசு, இந்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் இணைந்து, நல்லிணக்கம், மீள் கட்டமைப்பு, நிவாரணம், உள்ளிட்டவைகளில் ஈடுபடல் வேண்டும்.

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக சுவீடன் தமிழர்கள்

7) ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட, கடல், நில, நீர், காற்று உள்ளிட்டவைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளின் மொத்த செலவுகளையும் ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமே ஏற்க வேண்டும்.

😎 மே 22, அரச கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு மண்டபத்தையும் அதனை ஒட்டி, பெரிய அளவிலான பசுமைப் பூங்கா ஸ்டெர்லைட் ஆலையின் செலவில் அமைத்திடல் வேண்டும்.

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்து, அதில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது தங்களை மிக ஆழமாக பாதித்ததாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அந்த மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும், ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் இனியும் மக்களை பாதிக்கும் வகையில் இயங்கிடக் கூடாது என்பதே தங்களின் எண்ணம் என்பதையும் வெளிப்படுத்தினார்கள். 

https://www.vikatan.com/news/tamilnadu/126672-sweden-tamils-protest-against-sterlite.html

கருணாநிதி 95-ஆவது பிறந்தநாள்...

3 months 2 weeks ago
கருணாநிதி சாதனைகளுக்கு அடித்தளமிட்ட குணங்கள்! #Karunanidhi95 பத்தாம் வகுப்பு தோல்வியடைந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், தமிழ் நாட்டின் முதலமைச்சராக வருதல் அத்தனை எளிமையான ஒன்றல்ல. அது அவருடைய தமிழுக்குக் கிடைத்த பரிசு. அவருடைய மொத்த சாதனைக்கும் பின்னால் அவரைத் தாங்கிப் பிடித்திருந்தது அவருடைய தமிழ் ஒன்றுதான். கருணாநிதியைப் புரிந்துகொள்ளுதல், அவருடைய தமிழாற்றலைப் புரிந்துகொள்வதாகவே இருக்கும். அவரிடம் இருந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் இவைதான் அவரை இரு கரம் பிடித்து முதல்வர் பதவி நோக்கி அழைத்துச் சென்றன. அவருடைய திரைப்பட வசனங்கள் அன்றைய ஐம்பதுகளில் அறுபதுகளில் அவரை புகழின் உச்சத்தில் நிறுத்தின. சிவாஜிக்கு ‘பராசக்தி’, ‘மனோகரா’ என்றால் எம்.ஜி.ஆருக்கு ‘மந்திரிகுமாரி’, ‘மலைக்கள்ளன்’. அன்றைய இரண்டு உச்ச நடத்திரங்களை அடையாளப்படுத்திய தமிழுக்குச் சொந்தக்காரர். ‘‘ஆகாரத்துக்காக அழுக்கை உண்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன்... அதுபோலத்தான் நானும்’’ என கால் மணிநேரம் கோர்ட் வசனம் எழுதி பிரமிக்க வைக்கத் தெரிந்தவர். அது சிவாஜி கணேசனுக்கு. காதலியை இரவு நேரத்தில் சந்திக்க வருவார் நாயகன். வெகுநேரம் பேசியாயிற்று. ‘‘வரட்டுமா?’’ என்பார். காதலி, எங்கே செல்லப்போகிறீர்கள் என்பதாக ‘‘எங்கே?’’ என்பார். ‘‘அருகே’’ என்பார் நாயகன். இது எம்.ஜி.ஆருக்கு. ‘‘ஓடினாள்... ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்...’’ சேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் வசனக் காட்சி போல தமிழர்களால் இன்றும் உச்சரிக்கப்படும் மறக்க முடியாத வசன வரிகள். குறளோவியம் என ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதை எழுதினார். குறளுக்கு உரை எழுதினார். தொல்காப்பியப் பூங்கா எழுதினார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது வள்ளுவன் மொழி. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கணியன் பூங்குன்றன் எழுதிய சங்க இலக்கிய வரி. இரண்டையும் இணைத்தார்... ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... பிறந்தபின்... யாதும் ஊரே யாவரும் கேளிர்.’’ என்றார் சுருக்கமாக. சமயோசிதமாக, சுருக்கமாக, வேகமாக பதில் சொல்வது அவருக்கே உரிய திறமை. வெளிநாட்டில் இருந்து வந்த நிருபர் ஒருவர், ‘‘நீங்கள் என்ன படித்தீர்கள்?’’ என்றார். ‘‘எம்.ஏ., பி.எஃப்.’’ என்றார். ‘‘அப்படி ஒரு படிப்பா?’’ ‘‘மார்ச் அட்டம்ப்ட்... பட்.. ஃபெயில்’’ என்றார். சட்டசபையில் அவருடைய விவாதங்கள் சுவாரஸ்யமானவை. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஒரு உறுப்பினர், ‘‘இப்படியே போனால் தமிழகத்தை ஆண்டவந்தான் காப்பாற்ற முடியும்’’ என்றார் ஓர் உறுப்பினர். ‘‘தமிழகத்தை ஏற்கெனவே ஆண்டவன் நான். உறுப்பினர் என்னைத்தான் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்’’ என்றார். நடிகர் ராதா ரவி, தன் தந்தை நடித்த ரத்தக்கண்ணீர் நாடகத்தை சில ஆண்டுகளுக்கு எடுத்து நடித்தார். நாடகத்தைத் தொடங்கிவைத்துப் பார்த்தார். முடிவிலே பேசினார். ‘‘ஒப்பனையைப் பார்த்தேன். அதில் உங்கப்பனையே பார்த்தேன்’’ என ராதா ரவியை நோக்கி ஆரம்பித்தபோது அரங்கம் அதிர்ந்தது. கவியரங்கம்... கண்ணதாசன், சுரதா, வாலி, அப்துல் ரகுமான்... என அவ்வப்போது களைகட்டும். ஒரு முறை கணக்கு என்றத் தலைப்பில் ஒரு கவியரங்கம். கழித்தல், பெருக்கல், வகுத்தல், பெருக்கல் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தலைப்பு. கண்ணதாசன் வெகுகாலம் தி.மு.க-வை விட்டுப் பிரிந்திருந்து மீண்டும் வந்து சேர்ந்தார். அவருக்குக் கொடுத்த தலைப்பு கூட்டல். ‘‘நாட்டை ஆண்டாலும் என்னை அமைச்சர் என்றுதான் சொல்கிறீர்... கண்ணதாசனை கவியரசர் என்கிறீர்’’ என ஆரம்பித்துத் திரும்பி வந்த கவியரசரை அரவணைத்தார். கவியரங்கத்தில் தமிழ் விளையாடும். ஒருமுறை கவிஞர் அப்துல் ரகுமான் தாமதமாக வருகிறார். கருணாநிதி தலைமையில் கவியரங்கம் தொடங்கிவிட்டது. தாமதமாக வந்த கவிஞரை ஜாடையாகக் கிண்டலடித்தார்கருணாநிதி. அப்துல் ரகுமான் கவிபாட வந்தார். ‘‘ஏன் காத்திருக்கக் கூடாதா?’’ என்றார் கருணாநிதியைப் பார்த்து. சபையே அதிர்ச்சியுடன் கவனித்தது. அடுத்தவரி... ‘‘காத்திருக்கக் கூடாதா?... எம்மையெல்லாம் காத்திருக்கக் கூடாதா?’’ என்றார் அப்துல் ரகுமான். கருணாநிதி மகிழ்ந்து சிரித்தார். ‘‘வெற்றி பல பெற்று விருது பெற நான் வரும்போது வெகுமானம் எதுவேண்டும் எனக்கேட்டால்... அப்துல் ரகுமானைத் தருக என்பேன்’’ என்றார் கருணாநிதி. தமிழ்ச் சபைகளில் புரவலரே புலவராக இருந்து தமிழ் வளர்த்த காலம் அது. எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா சாலையில் இருந்த கருணாநிதியின் சிலையை எம்.ஜி.ஆரின் தொண்டர் ஒருவர் இடித்தார். அந்தப் படம் முரசொலியில் வெளியானது. ‘‘பரவாயில்லை தம்பி... நீ என் முதுகிலே குத்தவில்லை.. நெஞ்சிலேதான் குத்துகிறாய்’’ எனப் பிரசுரித்திருந்தார். கதை- வசனம், மேடைப் பேச்சு, கவியரங்கம், சட்டசபை உரை என அனைத்திலுமே கருணாநிதியின் முத்திரை ஆழப் பதிந்திருந்தது. கடந்த 60 ஆண்டுகளில் அவருடைய படம் வெளிவராத செய்தித்தாள் இல்லை... அவரில்லாமல் செய்தியில்லை. போற்றலையும் தூற்றலையும் சமமாக பாவிக்கத் தெரிந்த ஆற்றலையும் அவர் பெற்றிருந்தார். ரோமாபுரி பாண்டியன், பாயும்புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம் போன்ற சரித்திரக் கதைகளையும் வெள்ளிக்கிழமை, ஒரே ரத்தம் போன்ற சமூக கதைகளையும் எழுதினார். சுமார் 80 ஆண்டு பொது வாழ்வில் அவர் எதிர்கொண்ட தலைவர்கள் ஏராளம்... இந்திரா காந்தி, காமராஜர், மொராஜி தேசாய், வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர்., போன்ற பலருடனும் அரசியல் நடத்தியவர். இத்தனை பெரிய பரப்பில் அரசியல் நிகழ்த்திய தலைவர் இந்தியாவிலேயே யாரும் இல்லை. அது ஒரு சாதனை என்றால் அதனுடன் இத்தனை இலக்கிய நூல்கள், கூட்டங்கள், பத்திரிகை ஆசிரியர் பணி எனச் சுழன்று சூறாவளியாக வந்தவர். இன்று அவருடைய அமைதி, எதிரிகளைக்கூட அசைத்துப் பார்த்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்நாளெல்லாம் ஓடிக்கொண்டே இருந்த ஒருவரின் அமைதி ஏற்படுத்திய ஆழமான உணர்வு அது. பிரதமர் மோடி அவர் வீடு தேடிவந்து பார்த்துவிட்டுச் சென்றது அதனுடைய அடையாளம்தான். எப்போதும் சந்திக்க மறுத்த ராகுல் காந்தி வந்து பார்த்துவிட்டுச் சென்றார். புதிதாகக் கட்சித் தொடங்கிய ரஜினியும் கமலும் வந்து ஆசி பெற்றுச் செல்கிறார்கள். நூற்றாண்டை நெருங்கும் அவர் நிகழ்த்திய சாதனையில் இந்த அமைதியும்கூட முக்கியமானதுதான். https://www.vikatan.com/news/tamilnadu/126647-what-is-the-secret-for-karunanidhis-success.html

தூற்றினாலும் பரவாயில்லை, இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள்: கேப்டன் சுனில் உருக்கம்

3 months 2 weeks ago
‘ரசிகர்களே, கால்பந்துக்கும் ஆதரவு தாருங்கள்’- சுனில் சேத்ரிக்கு விராட் கோலி ஆதரவு விராட் கோலி, சுனில் சேத்ரி : கோப்புப்படம் இந்திய கால்பந்து அணிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக ரசிகர்களிடம் பேசியதற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு மக்களும்,ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள் என்று இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விராட் கோலி இது தொடர்பாக விராட் கோலி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ''என்னுடைய நல்ல நண்பரும், கால்பந்து அணியின் கேப்டனுமான சுனில் சேத்ரியின் வேண்டுகோளையும், கோரிக்கையையும் ரசிகர்கள் அனைவரும் கவனியுங்கள். கால்பந்துப் போட்டிக்கு ஆதரவு கொடுங்கள். அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். நான் கால்பந்துப் போட்டிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துவிட்டேன். என் ரசிகர்கள் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். இந்தியாவை உலகத்தின் சிறந்த விளையாட்டு தேசமாக உருவாக்க நினைத்தால் கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டுக்கு மட்டும் ரசிகர்கள் முழுமையாக ஆதரவு அளிப்பது சரியன்று, அனைத்துப் போட்டிகளுக்கும் ரசிகர்கள் சமமான ஆதரவை அளிக்கவேண்டும். முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.'' இவ்வாறு விராட் கோலி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, மிகச்சிறந்த வீரர், ஐரோப்பிய வீரர்களுக்கு இணையாக விளையாடும் திறமை பெற்றவர். சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிகமான கோல் அடித்தவர்கள் வரிசையில் 59 கோல்கள் அடித்து சுனில் சேத்ரி 3-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் சுனித் சேத்ரிக்கு முன்பாக, முதல் இரு இடங்களிலும் அர்ஜென்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸியும், போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டுமே இருக்கின்றனர் என்பது எத்தனை இந்திய ரசிகர்களுக்குத் தெரியும் என்பது வியப்புதான். அமெரிக்க கால்பந்துவீரர் கிளிண்ட் டெம்ப்சே, ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா ஆகியோரின் கோல் சாதனைகளை எல்லாம் சுனில் சேத்ரி முறியடித்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இந்திய கால்பந்து அணி சர்வதேச தர வரிசையில் 97-வது இடத்தில் உள்ளது. http://tamil.thehindu.com/sports/article24072016.ece?homepage=true

இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு?

3 months 2 weeks ago
இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு? வடக்குமான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக செயற்பட்டு வரும் அவர் அடுத்த மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் புலம்பெயர் அரசியல் கட்சி ஒன்றினை எதிர்வரும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்தகாலங்களில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சி அல்லது முன்னணி ஒன்றை ஆரம்பித்தால், அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தெரிவித்து வந்தார். இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம் என விக்னேஸ்வரன் கூறியிருந்தார். ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன். என அவர் முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழ் மக்களை பிரித்து எமது இனத்தை அழிப்பதற்கும், எமது ஒற்றுமையைச் சீர் குலைக்கவும் பல சக்திகள் முயன்று கொண்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமனற உறுப்பினர் சிவமோகன் நேற்று தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி இவ்வாறு தமிழ் மக்களை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டால் பிரபாகரனை காட்டிக்கொடுத்த கருணாவை போல வடக்கை காட்டி கொடுத்தவர் விக்னேஸ்வரனாக இருப்பார் எனவும் கூறியிருந்தார். இவ்வாறு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர், விக்னேஸ்வரன் கட்சியை ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்காமல் இருப்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. எது எப்படியாயினும் விக்னேஸ்வரன் கட்சி ஆரம்பித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கும் மக்களின் செல்வாக்கு குறைவடையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர், அக்கட்சியை பாதிக்கின்ற வகையில் செயற்பட மாட்டேன் என கடந்த காலங்களில் தெரிவித்துவந்தாலும் கூட இரு தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றால் இந்த முடிவு மாற்றமடையக் கூடும் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/?p=682188-இரண்டு-வாரங்களில்-புதிய-கட்சி:-வடக்கு-முதல்வரின்-முக்கிய-முடிவு?

இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு?

3 months 2 weeks ago
இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு?

 

cv-vigneswaran_0.jpg

 

வடக்குமான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக செயற்பட்டு வரும் அவர் அடுத்த மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் புலம்பெயர் அரசியல் கட்சி ஒன்றினை எதிர்வரும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்தகாலங்களில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சி அல்லது முன்னணி ஒன்றை ஆரம்பித்தால், அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம் என விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும் புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன். என அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால் தமிழ் மக்களை பிரித்து எமது இனத்தை அழிப்பதற்கும், எமது ஒற்றுமையைச் சீர் குலைக்கவும் பல சக்திகள் முயன்று கொண்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமனற உறுப்பினர் சிவமோகன் நேற்று தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி இவ்வாறு தமிழ் மக்களை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டால் பிரபாகரனை காட்டிக்கொடுத்த கருணாவை போல வடக்கை காட்டி கொடுத்தவர் விக்னேஸ்வரனாக இருப்பார் எனவும் கூறியிருந்தார்.

இவ்வாறு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர், விக்னேஸ்வரன் கட்சியை ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்காமல் இருப்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

எது எப்படியாயினும் விக்னேஸ்வரன் கட்சி ஆரம்பித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கும் மக்களின் செல்வாக்கு குறைவடையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர், அக்கட்சியை பாதிக்கின்ற வகையில் செயற்பட மாட்டேன் என கடந்த காலங்களில் தெரிவித்துவந்தாலும் கூட இரு தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றால் இந்த முடிவு மாற்றமடையக் கூடும் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/?p=682188-இரண்டு-வாரங்களில்-புதிய-கட்சி:-வடக்கு-முதல்வரின்-முக்கிய-முடிவு?

இளமை புதுமை பல்சுவை

3 months 2 weeks ago
``ஃபேஷன் நகைகள்... வீட்டிலிருந்தே மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கிறேன்!" அனுபவக் கதை அதிகரித்துவிட்ட விலைவாசியைச் சமாளிக்க, ஒரு குடும்பத்தின் கணவன் மனனவி இருவருமே சம்பாதிக்கும் சூழல் இன்றைக்கு உருவாகிவிட்டது. அதேநேரம், வெளியில் வேலைக்குச் சென்றுதான் சம்பாதிக்க முடியும் என்ற நிலையும் இல்லை. பெண்கள் வீட்டிலிருந்தே சிறுதொழில்கள் மூலம் ஆயிரங்களில் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். அதற்கு கிராஃப்ட் பெரிதும் உதவுகிறது. சில்க் திரட், டெரகோட்டா, சோப் மேக்கிங், ஃபேஷன் நகைகள் மேக்கிங், டால் மேக்கிங் என கிராஃப்டில் இருக்கும் பல பிரிவுகளை, தங்களுக்கு வருமானம் தரும் தொழிலாக மாற்றிவிட்டனர் பெண்கள். ஜூவல்லரி மேக்கிங் உருவாக்கம், விற்கும் முறைகள் பற்றிச் சொல்கிறார், கரூரைச் சேர்ந்த வைதேகி. ``எனக்குச் சொந்த ஊர் கரூர், நான் எம்.சி.ஏ, படிச்சிருக்கேன். இப்போ, கரூரில் சொந்தமாக கிராஃப்ட் பிசினஸ் பண்றேன். முன்னாடியெல்லாம் வீட்டில் இருக்கும் ஆண்கள் சம்பாதித்தாலே குடும்பத்தை நடத்திவிடலாம். இப்போ நிலைமை மாறிடுச்சு. வேலைக்குப் போய் சம்பாதிக்க நினைக்கும் எல்லாப் பெண்களுக்குமே படிப்புக்கு ஏற்ற வேலையும் சம்பளமும் கிடைக்கிறதில்லை. அதையும் தாண்டி, குழந்தைகளைக் கவனிக்கிறதிலும் சிக்கல் உருவாகுது. அதனால், வீட்டிலிருந்தே சுயதொழில் தொடங்கலாம்னு நான் முடிவெடுத்தேன். எனக்குச் சின்ன வயசிலிருந்தே கிராஃப்ட் வொர்க் ரொம்பப் பிடிக்கும். வீட்டிலிருக்கும் பழைய, பயன்படுத்தப்படாத பொருள்களில் புதுசு புதுசா ஏதாவது செய்து வீட்டை அலங்கரிப்பேன். அப்படித்தான் ஃபேஷன் நகைகளும் செய்ய ஆரம்பிச்சேன். நானாக நிறைய மாடல்களை உருவாக்கினேன். அதை விஷேச வீடுகளுக்குப் போட்டுட்டுப் போவேன். அதைப் பார்த்து எல்லோரும் பாராட்டுவாங்க. அது எனக்கு ஜூவல்லரி மேக்கிங் மேலே ஆர்வத்தை அதிகமாக்கிடுச்சு. ஜீவல்லரியில் என்ன என்ன டிரண்ட்ஸ் வருதோ, எல்லாத்தையும் தேடித் தேடி கற்றுக்கொள்ள ஆரம்பிச்சேன்'' என்கிற வைதேகி, அதில் மேற்கொண்ட விஷயங்களைச் சொல்கிறார். ``ஜூவல்லரி மேக்கிங்கில் உள்ள நுணுக்கங்கள் தெரிஞ்சால்தான் நீட்டான நகைகளைச் செய்ய முடியும். அதற்காக, பயிற்சி வகுப்புகளுக்குப் போவேன். யூ-டியூப் பார்த்தும் தெரிஞ்சுக்குவேன். அப்படிக் கற்ற கலையை பிசினஸாக மாற்ற நினைச்சேன். நான் உருவாக்கின நகைகளை எங்கள் தெருவில் உள்ள கல்லூரிப் பெண்கள், உறவினர் வீட்டுப் பெண்களுக்குக் குறைந்த லாபத்தில் விற்பனை செஞ்சேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்புறம், என் நெருங்கிய தோழியின் மூலம் ஆன்லைன் பிசினஸ் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். ஆரம்பத்தில் ஃபேஸ்புக் மூலம் நகைகளை விற்றேன். நான் எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு கிடைச்சது. வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர் வந்துச்சு. என் பிசினஸுக்கான ஆன்லைன் பக்கத்தை உருவாக்கினேன். அமேசான், ஃப்ளிப்காட் போன்ற தளங்களில் விற்பனை செய்யும் வாய்ப்பு வந்துச்சு. அதிக முதலீடு இல்லாத என் தொழிலுக்கு நல்ல லாபமும் கிடைச்சது. நிறைய பெண்கள் பயிற்சிக்கு என்னை அணுகினாங்க. வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சேன். வீட்டைவிட்டு வெளியே போகாமலே மாசம் 30,000 ரூபாய் சம்பாதிக்கிறேன்'' என்கிறவர், மேற்கொண்டுள்ள புதுமைகளைச் சொல்கிறார். ``ஜூவல்லரி மேக்கிங்கில் இப்போ ஜெர்மன் சில்வர் ஜூவல்லரிதான் டிரண்ட். இது மேட் ஃபினிஷ் லுக்கில் இருக்கும். அணிந்துகொண்டால் டிரண்டி லுக் கொடுக்கும். அதனால், கல்லூரிப் பெண்களின் ஃபேவரைட்டா இருக்கு. இதை உருவாக்குவது கடினமான விஷயமில்லை. தனித்தனியாக விற்கும் செயின், டாலர், ஹூக் போன்றவற்றை வாங்கி, நம் கற்பனைத்திறனுக்கு ஏற்ப அசெம்பிள் செய்யணும். பயிற்சி வகுப்புகள், ரீ- சேல், கிராஃப்ட் மேக்கிங் என இப்போ நான் ரொம்ப பிஸி. ஆரம்பத்தில் என் தேவைகளுக்காகச் செய்யத் தொடங்கிய இந்தத் தொழில், இப்போது என் கணவருக்கு இணையாகக் குடும்பச் செலவில் பங்கெடுக்கவும் துணையா இருக்கு. பொருள்களை மொத்த விலைக்கு வாங்கி அசெம்பிள் செய்யும்போது அதிகமான லாபம் கிடைக்கும். ஜூவல்லரி உருவாக்க ஆர்வம் இல்லை. ஆனால், அதைத் தொழிலாகச் செய்யணும் என்கிற பெண்களும் நகைகளை வாங்கி, ரீ- சேல் செஞ்சாலும் லாபம் உண்டு. ஆர்வமும் உழைப்பும் இருந்தால் அழகா லாபம் அள்ளலாம்'' என நம்பிக்கையூட்டுகிறார் வைதேகி. https://www.vikatan.com/

தூற்றினாலும் பரவாயில்லை, இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள்: கேப்டன் சுனில் உருக்கம்

3 months 2 weeks ago
தூற்றினாலும் பரவாயில்லை, இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள்: கேப்டன் சுனில் உருக்கம்

 

 
Sunil_Chhetri

 

நீங்கள் தூற்றினாலும் பரவாயில்லை. தயவு செய்து களத்துக்கு வந்து இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள் என இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார்.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட விடியோவில் பேசியதாவது:

இதுவரை மைதானத்துக்கு வராமல் இருக்கும் ரசிகர்களாகிய உங்களுக்காக தான் இந்த விடியோ பதிவை வெளியிடுகிறேன். நீங்கள் கால்பந்து விளையாட்டை நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவு செய்து நேரில் வந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள். ஏனென்றால் உலகளவில் நாங்களும் சிறந்த அணிதான் மற்றும் தாய்நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பதே அதற்கு இரு முக்கிய காரணங்களாகும். நீங்கள் ஒருமுறை மைதானத்துக்கு வந்துவிட்டால், நிச்சயம் வீடு திரும்புபம்போது அதே மனநிலையில் இருக்க மாட்டீர்கள் என வாக்குறுதி அளிக்கிறேன். 

உங்களில் சிலர் ஐரோப்பிய காலபந்து லீக் அணிகளின் ஆதரவாளர்களாக இருக்கலாம். அதேநிலை இங்கு இல்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் உங்கள் நேரத்தை வீணடிக்கும் விதமாக நாங்கள் நிச்சயம் செயல்பட மாட்டோம். இங்கு இந்திய கால்பந்தின் மீது நம்பிக்கை இழந்த உங்கள் அனைவருக்கும் கூட இதே கோரிக்கையை முன்வைக்கிறேன். தயவு செய்து மைதானத்துக்கு வருகை தந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

மைதானத்தில் வந்து எங்களை தூற்றுங்கள், விமர்சியுங்கள், கடுஞ்சொற்களால் கூட வஞ்சியுங்கள், ஆனால் ஒருநாள் உங்கள் மனம் மாறும், எங்களுக்காக நிச்சயம் ஆதரவு அளிப்பீர்கள். நீங்கள் எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கே தெரியாது. உங்களின் ஆதரவு எங்களுக்கு எத்தனை முக்கியம் என்பதையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். 

ஆகையால், தயவு செய்து இந்திய கால்பந்து ஆட்டங்களுக்கு தயவு செய்து மைதானத்துக்கு நேரில் வந்து ஆதரவளியுங்கள். வீட்டிலும், அலுவலகத்திலும், பொது இடத்திலும் இந்திய கால்பந்து குறித்து விவாதியுங்கள். இந்திய கால்பந்துக்கு நீங்கள் அனைவரும் தேவை என்று உணர்வுப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். 

http://www.dinamani.com/sports/sports-news/2018/jun/03/abuse-us-criticise-us-but-please-come-watch-indian-team-play-sunil-chhetri-appeals-to-football-fans-2932448.html

‘டான்ஸிங் அங்கிளுக்கு’ புதிய பதவி: மத்தியப் பிரதேச அரசு வழங்கியது

3 months 2 weeks ago
‘டான்ஸிங் அங்கிளுக்கு’ புதிய பதவி: மத்தியப் பிரதேச அரசு வழங்கியது மேடையில் நடனமாடி அசத்திய பேராசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா : கோப்புப்படம் இணையதளங்களில் ‘டான்ஸிங் அங்கிள்’ என அழைக்கப்படும் மத்தியப் பிரதேச மாநில கல்லூரிப் பேராசிரியருக்கு அந்த மாநில அரசு புதிய பதவி வழங்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, கல்லூரி பேராசிரியரான ஸ்ரீவஸ்தவா இந்திய நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகர். எந்தத் திருமண வீட்டுக்குச் சென்றாலும், குறைந்தபட்சம் ஒரு கோவிந்தா பாடலுக்கு நடனமாடி விட்டுத்தான் வருவார். கோவிந்தா திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலுக்கான நடனத்தையும் அதேபோன்று ஸ்ரீவஸ்தவா ஆடுவார். கடந்த மே மாதம் 12-ம் தேதி ஸ்ரீவஸ்தவா தனது சகோதரர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக குவாலியர் நகருக்குச் சென்றார். அப்போது, கோவிந்தாவின் ‘குத்கர்ஸ்’ திரைப்படத்தில் வரும் ‘ஆப் கே ஆ ஜானே சே’ என்ற பாடலுக்கு நடனமாடியபோது இவரை வீடியோ எடுத்தனர்.. அந்தத் திரைப்படத்தில் நடிகர் கோவிந்தாவின் நடன அசைவுகளைப் பின்பற்றி ஸ்ரீவஸ்தவா நடனமாடினார். ஸ்ரீவஸ்தவா நடனமாடிய வீடியோ காட்சிகள் யூடியூப்பில் சிலர் பதிவேற்றம் செய்துவிட்டனர். அந்த வீடியோ வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என நாடுமுழுவதும் பரவி வைரலானது. சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா நடனமாடிய காட்சி இந்நிலையில், இந்த வீடியோ காட்சியைப் பார்த்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்சவுகானும் ஸ்ரீவஸ்தவாவின் நடனத்தைப் பார்த்து பாராட்டி இருந்தார். ஸ்ரீவஸ்தவாவின் நடனத்தைப் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் பார்த்தவர்கள் நாள்தோறும் அவருக்கு தொலைபேசியிலும், செல்போனிலும் அழைத்து பாராட்டியபடி இருக்கின்றனர். தன்னுடைய நடனத்துக்கு திடீரென இப்படி ஒருவரவேற்பா என்று ஸ்ரீவஸ்தவா ஆனந்த அதிர்ச்சியடைந்துவிட்டார். இந்நிலையில், ஸ்ரீவஸ்தவாவின் நடனம் மாநிலம் முழுவதும் பரவியுள்ள நிலையில், அவருக்கு புதிய பதவியை மத்தியப் பிரதேச அரசு வழங்கியுள்ளது. ஸ்ரீவஸ்தவா சார்ந்துள்ள விதிஷா நகராட்சியின் கவுரவத் தூதுவராக அவரை நியமித்து அந்தமாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நகராட்சியின் நற்பெயரை மக்களின் மத்தியில் கொண்டு செல்வதற்காக ஸ்ரீவஸ்தவாவுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீவஸ்தவாவின் நடனத்தை ஃபேஸ்புஸ்கில் பார்த்த பாலிவுட் நடிகைகள் ரவீணா டாண்டன், திவ்யா தத்தா, அர்ஜூன் கபூர், அனுஷ்கா சர்மா, தியா மிர்ஸா, திவ்யா தத்தா, சந்தியா மேனன் உள்ளிட்ட பல நடிகைகளும் ஸ்ரீவஸ்தவாவை தனிப்பட்ட முறையில் செல்போனில் அழைத்துப் பாராட்டியுள்ளனர். தனக்கு வழங்கப்பட்ட பதவி குறித்து ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ''எனக்கு இப்படிப்பட்ட பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. என் நடனத்தையும் இத்தனை லட்சம் பேர் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் இல்லை. என் வீடியோ வைரலாகி லட்சக்கணக்கான மக்கள் இதைப் பார்த்துள்ளனர். எனக்கு ஆதரவு அளித்து, என் வீடியோவைப் பார்த்த அனைவருக்கும் நன்றி. கடந்த 1982-ம் ஆண்டில் இருந்து கோவிந்தாவின் ரசிகன். அவரின் நடனத்தைப் பார்த்து நானும் நடனமாடி வருகிறேன். என் நடனத்துக்குப் பாராட்டு தெரிவித்து கடந்த 2 நாட்களாக தொடர்ந்து என் செல்போனுக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. நாடு முழுவதும் ஊடகங்களின் , பத்திரிகைகளின் கவனத்தையும் நான் ஈர்த்துவிட்டேன். எனக்கு ஒருமணி நேரத்துக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்து கொண்ட இருப்பதால், என்னால் பேசக்கூட முடியவில்லை'' எனத் தெரிவித்தார். http://tamil.thehindu.com/india/article24072117.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள்; இப்தார் நிகழ்வில் மாவை சேனாதிராஜா

3 months 2 weeks ago
யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள்; இப்தார் நிகழ்வில் மாவை சேனாதிராஜா யாழ் முஸ்லிம் மக்களின் விஷேட இப்தார் ஒன்றுகூடல் “சகவாழ்வே சக்தி தரும்” என்னும் மகுடத்தில் 02-06-2018 சனிக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஜனாப் அப்துல் கபூர் நௌபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது; இந்நிகழ்வில் விஷேட விருந்தினராக கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ மாவை சோ.சேனாதிராஜா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலே யாழ்ப்பாணத்திலே முஸ்லிம் மக்கள் மிகவும் கௌரவமான வாழ்வுமுறையைக் கொண்ட சமூகமாக வாழ்ந்தார்கள், இலங்கையின் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு முன்மாதரியான மக்களாகவும் அவர்கள் இருந்தார்கள், இப்போது இங்கே உரை நிகழ்த்திய மௌலவி அவர்கள் குறிப்பிட்ட இஸ்லாமிய விழுமியங்களைப் பின்பற்றுகின்ற மக்களாகவே அவர்கள் இருந்தார்கள். தந்தை செல்வா அவர்கள் முஸ்லிம் மக்களை ஒரு தனித்துவமான சமூகமாகவே அடையாளம் செய்தார்கள், அதற்காகவே அவர்களுக்கும் ஒரு தனியான சுயாட்சி அலகு ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கருத்தை சொல்லிலும் செயலிலும் செய்துகாட்டினார். இப்போது தமிழ் முஸ்லிம் உறவு நலிவுற்றிருக்கின்றது, இதனைக் குழப்புவதற்கு பல சக்திகள் முயற்சிக்கின்றன. ஆனால் இதற்கு நாம் இடமளிக்கக்கூடாது; தமிழ் மக்கள் ஒரு தீர்வை எதிர்பார்த்து முன்னோக்கி நகர்கின்றார்கள், இதனை முஸ்லிம் மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள், இன்னும் அதிகமான புரிந்துணர்வுகள் அவசியப்படுகின்றன. உலக நாடுகளிலே முஸ்லிம் மக்கள் பலவிதமான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கின்றார்கள், சிரியா, பர்மா போன்ற நாடுகளிலே இன்று நடப்பதை நாம் பார்க்கின்றோம், அன்று புத்தளத்தில் இனக்கலவரம் ஏற்பட்டது, அளுத்கம, கண்டி என அது தொடர்கின்றது; புத்தள முஸ்லிம்களுக்காக அன்று தந்தை செல்வா குரல் கொடுத்தார், இன்றும் முஸ்லிம் மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுக்கின்றது; அது எமது தார்மீகப் பொறுப்பாகும். இன்று உங்களை எல்லாம் இந்த இடத்திலே சந்திப்பது மிகுந்த மனமகிழ்வைத் தருகின்றது; தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இவ்வாறு ஒற்றுமையாக இருப்பது காலத்தின் கட்டாயமாகவும் அமைந்திருக்கின்றது என்றும் குறிப்பிட்டார், இந்நிகழ்விலே யாழ் மாநகர முதல்வர் கௌரவ.இமானுவேல் ஆனல்ட், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான கௌரவ அய்யூப் அஸ்மின், கௌரவ எம்.கே.சிவாஜிலிங்கம், கௌரவ.கஜதீபன், கௌரவ பரஞ்சோதி, கௌரவ ஜெயசேகரம் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள், உறுப்பினர்கள். வடக்கு மாகாண ஆளுனர் அவர்களின் செயலர் உயர்திரு இளங்கோவன், மாவட்ட செயலர் உயர்திரு என்.வேதநாயகன் உட்பட உயர் அதிகாரிகள், மற்றுமம் இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் அஷ்-ஷெய்க் பைஸல் (மதனி) அவர்களுடைய சிறப்புரையும் இடம்பெற்றது. http://www.newsuthanthiran.com/2018/06/03/யாழ்ப்பாண-முஸ்லிம்-மக்கள/

யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள்; இப்தார் நிகழ்வில் மாவை சேனாதிராஜா

3 months 2 weeks ago
யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள்; இப்தார் நிகழ்வில் மாவை சேனாதிராஜா
 

யாழ் முஸ்லிம் மக்களின் விஷேட இப்தார் ஒன்றுகூடல் “சகவாழ்வே சக்தி தரும்” என்னும் மகுடத்தில் 02-06-2018 சனிக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஜனாப் அப்துல் கபூர் நௌபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது; இந்நிகழ்வில் விஷேட விருந்தினராக கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ மாவை சோ.சேனாதிராஜா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்

நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலே யாழ்ப்பாணத்திலே முஸ்லிம் மக்கள் மிகவும் கௌரவமான வாழ்வுமுறையைக் கொண்ட சமூகமாக வாழ்ந்தார்கள், இலங்கையின் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு முன்மாதரியான மக்களாகவும் அவர்கள் இருந்தார்கள், இப்போது இங்கே உரை நிகழ்த்திய மௌலவி அவர்கள் குறிப்பிட்ட இஸ்லாமிய விழுமியங்களைப் பின்பற்றுகின்ற மக்களாகவே அவர்கள் இருந்தார்கள். தந்தை செல்வா அவர்கள் முஸ்லிம் மக்களை ஒரு தனித்துவமான சமூகமாகவே அடையாளம் செய்தார்கள், அதற்காகவே அவர்களுக்கும் ஒரு தனியான சுயாட்சி அலகு ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கருத்தை சொல்லிலும் செயலிலும் செய்துகாட்டினார்.

இப்போது தமிழ் முஸ்லிம் உறவு நலிவுற்றிருக்கின்றது, இதனைக் குழப்புவதற்கு பல சக்திகள் முயற்சிக்கின்றன. ஆனால் இதற்கு நாம் இடமளிக்கக்கூடாது; தமிழ் மக்கள் ஒரு தீர்வை எதிர்பார்த்து முன்னோக்கி நகர்கின்றார்கள், இதனை முஸ்லிம் மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள், இன்னும் அதிகமான புரிந்துணர்வுகள் அவசியப்படுகின்றன. உலக நாடுகளிலே முஸ்லிம் மக்கள் பலவிதமான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கின்றார்கள், சிரியா, பர்மா போன்ற நாடுகளிலே இன்று நடப்பதை நாம் பார்க்கின்றோம், அன்று புத்தளத்தில் இனக்கலவரம் ஏற்பட்டது, அளுத்கம, கண்டி என அது தொடர்கின்றது; புத்தள முஸ்லிம்களுக்காக அன்று தந்தை செல்வா குரல் கொடுத்தார், இன்றும் முஸ்லிம் மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுக்கின்றது; அது எமது தார்மீகப் பொறுப்பாகும்.

இன்று உங்களை எல்லாம் இந்த இடத்திலே சந்திப்பது மிகுந்த மனமகிழ்வைத் தருகின்றது; தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இவ்வாறு ஒற்றுமையாக இருப்பது காலத்தின் கட்டாயமாகவும் அமைந்திருக்கின்றது என்றும் குறிப்பிட்டார், இந்நிகழ்விலே யாழ் மாநகர முதல்வர் கௌரவ.இமானுவேல் ஆனல்ட், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான கௌரவ அய்யூப் அஸ்மின், கௌரவ எம்.கே.சிவாஜிலிங்கம், கௌரவ.கஜதீபன், கௌரவ பரஞ்சோதி, கௌரவ ஜெயசேகரம் மற்றும்  உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள், உறுப்பினர்கள். வடக்கு மாகாண ஆளுனர் அவர்களின் செயலர் உயர்திரு இளங்கோவன், மாவட்ட செயலர் உயர்திரு என்.வேதநாயகன் உட்பட உயர் அதிகாரிகள், மற்றுமம் இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் அஷ்-ஷெய்க் பைஸல் (மதனி) அவர்களுடைய சிறப்புரையும் இடம்பெற்றது.

4C0A0789.jpg4C0A0790.jpg4C0A0792.jpg4C0A0796.jpg4C0A0797.jpg4C0A0799.jpg4C0A0800.jpg4C0A0801.jpg4C0A0803.jpg4C0A0815.jpg4C0A0830.jpg4C0A0836.jpg

http://www.newsuthanthiran.com/2018/06/03/யாழ்ப்பாண-முஸ்லிம்-மக்கள/

அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும்,நினைவுப் பேருரையும்…

3 months 2 weeks ago
அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் நினைவுப் பேருரையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் சாவகச்சேரியில் அமைந்துள்ள கலாமன்ற கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் மாலை மூன்று மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் அஞ்சலி உரைகளை சிரேஷ்ட சட்டத்தரணியும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான ந.ஸ்ரீகாந்தா, பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை தமிழரசு்கட்சித் தலைவர் மாவை.சேனாதிராசா, வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன், தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் ஆற்றினர். “ஈழத்தமிழர் அரசியல் செல்நெறியும் ஊடகங்களும் ஓர் சுய பரிசோதனை” என்ற தலைப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் நினைவுப்பேருரை ஆற்றினார். இந்த நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர். http://www.newsuthanthiran.com/2018/06/03/அமரர்-அப்பாத்துரை-விநாயக/

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்

3 months 2 weeks ago
ஸ்டெர்லைட்: துப்பாக்கிச்சூட்டில் இறந்த 17 வயது ஸ்னோலின் உடல் அடக்கம் பகிர்க தூத்துக்குடியில் கடந்த மே 22 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்த 17 வயது மாணவி ஸ்னோலின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. படத்தின் காப்புரிமைNEWS MINUTE துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உடல்களில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முதல் கட்டமாக ஏழு பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தினர். இதனிடையே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உடலை பிரேத பரிசோதனை நடத்த தடை விதிக்க கோரியும் ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ குழு தலைமையில் பிரேதபரிசோதனை நடத்தபட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டதின் அடிப்படையில் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ஏழு பேரின் உடலை மட்டும் மறு பிரேத பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த ஆறு பேர் அடங்கிய மருத்துவ குழு ஏழு பேரின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்தி உயிர்யிழந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆனால் ஸ்டைர்லைட் ஆலையை முற்றிலும் அகற்றி அந்த இடத்தில் துப்பாக்கி சூட்டில் உயிர்யிழந்த 13 பேருக்கும் நினைவுத் தூண் அமைக்க வலியுறுத்தி தமிழரசன்,காளியப்பன் மற்றும் ஸ்னோலின் ஆகியோரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று காளியப்பன் மற்றும் தமிழரசனின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர். ஸ்னோலின் உடலை நேற்று இரவு வரை அரசு எங்களது கோரிக்கையை ஏற்றால் மட்டுமே உடலை பெற்று கொள்வோம் என உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வந்தனர். இன்று காலை மீண்டும் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் இனி ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இயங்க தமிழக அரசு அனுமதிக்காது,விரைவில் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் அரசு நிறைவேற்றும் என உத்தரவாதம் அளித்ததின் பெயரில் இன்று பகல் 11 மணியளவில் ஸ்னோலின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர். அரசு மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மினி சகாயபுரம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் முது நிலை காவல் கண்காணிப்பாளர் விபூல் பிரிட்டோ பிரசாந்த, ரஜ்வீர், நிதின்குமார், அருண் தியாகி, லால்பகர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழு நேற்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தது. இந்தக் குழு முதற்கட்டமாக நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தென்மண்டல ஐ.ஜி. சைலேஸ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார், தூத்துக்குடி எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோர் கலந்து கொண்டனர். மனித ஆணைய குழு இன்று தூத்துகுடி மாவட்டதில் கலவரம் நடைபெற்ற பகுதியை பார்வையிட்டனர். துப்பாக்கி சூட்டியில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களிடம் விசாரனை நடத்தியபின், தூத்துக்குடி மாநகராட்சியின் மேற்கு மண்டல அலுவலகத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கார்த்திக் குடும்பத்தினருடன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழு முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. https://www.bbc.com/tamil/india-44346518

SLFP – SLPP – இணைந்து பரந்துபட்ட கூட்டணி – TNA யுடனும் பேசுகிறோம்…2020 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர்..

3 months 2 weeks ago
SLFP – SLPP – இணைந்து பரந்துபட்ட கூட்டணி – TNA யுடனும் பேசுகிறோம்…2020 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர்.. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளன என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க இந்த கூட்டணியே 2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தெரிவு செய்யும் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அடுத்த மாகாணசபை தேர்தலில் கூட்டணியொன்றே போட்டியிடும் என தெரிவித்துள்ள எஸ்பி திசநாயக்க தற்போதைய தேசிய அரசாங்கம் அதன் எஞ்சிய காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகியது சரியான முடிவு எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தில் உள்ளமை தவறு எனவும் சிறிசேன கருதுகின்றார் என தான் உணர்வதாகவும் எஸ்பி திசநாயக்க குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சூழலில் தாம் தமிழ்தேசிய கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தத்தில் இது ஐக்கியதேசிய கட்சியை தோற்கடிப்பதற்கான தந்திரோபாயமே இவை எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/82081/