தியாக தீபம் திலீபன்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் 15-09-1987

Aggregator

இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் சொந்தமான பூமி இது- மரபுகளை மதிக்காவிடின் நாட்டிலிருந்து வெளியேறுங்கள்…

3 months 2 weeks ago
எமது போராட்டம், எமது தேசியவாதம் மதச் சார்பற்றது: மதவாத சக்திகளை, ஊடுருவலை இனங் காணுவோம், நிராகரிப்போம் – தமிழ் சிவில் சமூக அமையம்: அண்மையில் சாவகச்சேரியில் பசு வதைக்கெதிரான போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனை எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் தலைவர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்கள் தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் பெரும் கரிசனை கொள்கின்றது. மேற்படி சிவசேனையின் தலைவர் இந்தப் பூமி ஒன்றில் இந்து அல்லது பௌத்த பூமி என்றும் இந்து மற்றும் பௌத்தர்களின் கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இங்கு இருக்க முடியாது வெளியேறி விட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அக்கருத்தை நாம் முற்றாக மறுப்பதோடு எமது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கின்றோம். அத்தகைய கருத்துக்களை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் கருத்துக்கள் போன்றோ ஏன் இந்து / சைவ மதத்தவரது கருத்து என்றோ பாவனை செய்து சிவசேனை அமைப்பினர் பேச விளைவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இத்தகைய கருத்துக்கள் பரவலாக, தமிழ் சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் கலந்து விடக் கூடாது என்ற விருப்பில் இவ்வறிக்கையை வெளியிடுகிறோம். பொது வெளிகளும் அவற்றை ஒழுங்கு படுத்தும் அரச அதிகாரமும் அனைவருக்கும் பொதுவானவை. குறிப்பிட்ட மதம் ஒன்று பொது வெளியில் எதனை செய்யலாம் எதனை செய்யக் கூடாது எனத் தீர்மானிக்க முடியாது. குறிப்பாக அப்பொது வெளியில் குறிப்பிட்ட மதம் பெரும்பான்மை மதமாக இருக்கும் பட்சத்தில் அப்பெரும்பான்மை மதத்தின் வழக்காறுகளையும் நம்பிக்கைகளையும் அப்பொது வெளிகள் மூலமாக எல்லோர் மீதும் திணிக்க முயற்சிப்பது வன்முறையாகும். அதன் காரணமாகவே பொது வெளிகளும் அவற்றை ஒழுங்கு படுத்தும் அரச அதிகாரமும் மதச் சார்பற்றவையாக இருக்க வேண்டும். பன்மைத்துவ சமூகங்களில் பொது வெளிகளின் மதச் சார்பின்மை மிகவும் முக்கியமானது. மதச் சார்பின்மையை வலியுறுத்துவது மதங்கள் வேண்டாம் என்று சொல்வதற்கு சமனாகாது. மதம் தனிப்பட்ட நம்பிக்கையின் பாற்பட்டது. அவ் நம்பிக்கையை உடையோர் அந்நம்பிக்கையை சார்ந்தோரோடு சேர்ந்து அவர்களின் தனிப்பட்ட உரிமைகளை மதித்து அந்நம்பிக்கையின் பாற்பட்ட வழக்காறுகளை பின்பற்றலாம். ஆனால் அதனை தம் மதத்தவர் மீதோ தம் மதத்தை சேர்ந்த பெண்கள் மீதோ பிற மதத்தவர் மீதோ அல்லது மத நம்பிக்கையற்றவர்கள் மீதோ திணிப்பது அறமாகாது. இந்த அறத்தை தமிழர்களின் சுயநிர்ணயத்திற்காக விடுதலைப் போராட்டம் மிகவும் ஆழமாக தன்னுள் உள்வாங்கியிருந்தது. தமிழ் தேசியவாதம் ஓர் மதத் தேசியவாதம் அல்ல. சிங்கள பௌத்த தேசியவாதம் ஓர் பேரினவாத மதம் சார் தேசியவாதம். இலங்கை பௌத்த நாடாக வரையறுக்கப்படுவதை நாம் மூர்க்கமாக எதிர்த்துக் கொண்டு எமது தாயகத்தை மதம் கொண்டு சாயமிடுவதையும் அம் மதத்தை சாராதோருக்கு இடமில்லை என்று கூறுவதையும் நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இந்த மதவாத ஊடுருவல் அண்டை நாட்டின் ஆளும் கட்சியின் அரசியலினால் ஆதரிக்கப்படுவதை நாம் வெளிப்படையாகக் காணுகின்றோம். இந்திய மேலாதிக்க சிந்தனை தமிழர்களை கூறு போடவும் எமது போராட்டத்தின் அறத்தை சிதைக்கவும் முயற்சிக்கின்றது. இது எமக்கு புதிதல்ல. தமிழ் சமூகம் இந்துத்துவாவை வரித்தால் எமக்கு இந்திய அரசின் துணையோடு விடுதலை கிடைக்கும் என எம்மில் சிலர் முட்டாள்தனமாக கனவு காணுகின்றனர். அது ஒரு போதும் நடக்கப் போவதில்லை. அப்படியான விடுதலை எமக்குத் தேவையும் இல்லை. விளிம்பு நிலையில் எம்மத்தியில் உள்ள இந்துத்துவ சக்திகளுக்கு ஊடகங்களிலோ தமது அமைப்புக்களிலோ இடம் கொடுக்க வேண்டாம் என நாம் சம்பந்தப்பட்ட அனைவரையும் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம். இறுதியாக, இந்த அறிக்கை சைவ / இந்து மக்களுக்கு எதிரானது என இந்துத்துவா சக்திகள் திரிபுபடுத்தக்கூடும். அல்லது இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவோர் பொது வெளியில் மதச் சார்பின்மையை ஏற்றுக் கொள்ளாத போது நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என இவ்வறிக்கைக்கு மறுப்பு விதண்டாவாதம் செய்யக் கூடும். எந்த மதத்தை, யார் மீதும், பொது வெளியின் மீதும் எவர் திணிக்க முனைந்தாலும் தமிழ் சிவில் சமூக அமையம் அதனை எதிர்க்கும். அது பௌத்தமாக இருந்தாலும் சரி கிறிஸ்தவமாக இருந்தாலும் சரி சைவமாக / இந்துவாக இருந்தாலும் சரி இஸ்லாமாக இருந்தாலும் சரி. எமக்கு தமிழ் அரசியல் சமூகத்தின் அறவியல் ஒழுக்கம் எல்லாவற்றிலும் முக்கியமானது. அதனாலேயே இவ் நிலைப்பாட்டை நாம் வெளிப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. பொ. ந. சிங்கம் பொதுச் செயலாளர் குமாரவடிவேல் குருபரன் பேச்சாளர். http://globaltamilnews.net/2018/81423/

ஊஞ்சல் தேநீர்

3 months 2 weeks ago
ஊஞ்சல் தேநீர் யுகபாரதி - 74 சபையறிந்து பேசக்கூடியவரே தமிழன்பன். எந்த சபையானாலும், பேச்சைத் தயாரிக்காமல் வரமாட்டார். ஆனால், அவருடைய பேச்சுமுறை தயாரித்தது போலிருக்காது. நினைவுகளின் அடுக்கிலிருந்து சொல்வது போல்தான் இருக்கும். வருடங்களைச் சொல்வதானாலும் விஷயங்களை அடுக்குவதிலும்கூட ஒருவித நேர்த்தியைக் கடைப்பிடிப்பார். ஒருசில ஆண்டுகளுக்குமுன் திருச்சி லோகநாதன் ஏற்பாடு செய்த விழாவில் பேசிய அவர், “கவிதைகளால் எதையோ செய்துவிட முடியும் என்று நம்புகிற அரசியல்வாதிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சி...” என்றிருக்கிறார். முன்னெப்போதோ அவருடைய கவிதை ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த வாழப்பாடி இராமமூர்த்தியை மேடையில் வைத்துக்கொண்டே, “கவிதைகளைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்..?” எனக் கேட்டிருக்கிறார். தன்னிடம் அபிப்ராய பேதமுடையவர்களைக் கூட, தன் பேச்சின் வழியே அரவணைத்துக்கொள்ளும் பண்பு அவருடையது. இஸ்லாமிய இலக்கியக் கழக விழாவொன்றில் விவேகானந்தரைப் பற்றிப் பேசி, கைதட்டு வாங்க அவரால் முடியும். 1892ல் விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் ஒருவார காலம் சொற்பொழிவாற்றியிருக்கிறார். அவ்விழாவில் நாள் தவறாமல் கலந்துகொண்ட மனோன்மணியம் சுந்தரனார், விவேகானந்தரின் பேச்சில் ஈர்க்கப்பட்டிருக்கிறார். விவேகானந்தரின் சொற்பொழிவில் கட்டுண்ட சுந்தரனார், விவேகானந்தரை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்திருக்கிறார். விருந்தில் கலந்துகொண்ட விவேகானந்தர் என்ன காரணத்தினாலோ சுந்தரனாரைப் பார்த்து ஒரு சர்ச்சைக்குரிய கேள்வியைக் கேட்டுவிடுகிறார். சர்ச்சைக்குரிய கேள்வி என்றால் அது, துறவியின் வாயிலிருந்து வரக்கூடாத கேள்வி. சுந்தரனாரைப் பார்த்து விவேகானந்தர், “நீங்கள் என்ன கோத்திரம்..?” என்றதுதான் அக்கேள்வி. சாதி, மத, கோத்திர வேறுபாடுகளைக் கடந்த ஒருவரே துறவி என்னும் நிலையை எய்த முடியும். அதிலும், எல்லாவற்றையும் கடந்த முற்போக்கு மனமுடைய விவேகானந்தரிடமிருந்து அப்படியொரு கேள்வியை சுந்தரனார் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்காத இடத்திலிருந்து கேட்கக்கூடாத கேள்வி வந்த பிறகும், நிதானமிழக்காத சுந்தரனார் “தன்மானம் காக்கும் தென்னாட்டு திராவிட கோத்திரம்...” என்று பதிலளித்திருக்கிறார். ஆன்மிக குருவாக அறியப்படும் விவேகானந்தர், “அப்படியெல்லாம் சுந்தரனாரைக் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை...” என்று சிலர் வாதிடலாம். உண்மையில், கோத்திரம் அறியும் புத்தியுடன் விவேகானந்தர் இக்கேள்வியைக் கேட்கவில்லை என்றே வைத்துக்கொண்டாலும், அப்போதிருந்த காலச்சூழல் எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை அக்கேள்வி ஏற்படுத்துகிறது. இரண்டுபேருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மேதைகள். ஒருவருக்கு இன்னொருவரைத் தாழ்த்தும் எண்ணம் அறவே இருந்திருக்க வாய்ப்பில்லை. கால தேச வர்த்தமான இயல்புகளின்படியே அவரும் கேட்டிருக்கிறார், இவரும் பதிலளித்திருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய சுந்தரனாரின் வாழ்க்கைக் குறிப்பில் இச்செய்தி இடம்பெற்றிருக்கிறது. இச்சம்பவத்தை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தில் குறிப்பிட்டுப் பேசிய தமிழன்பன், விவேகானந்தரையும் சுந்தரனாரையும் பேதமில்லாமல் பாராட்டி, ஒரு கருத்து எப்படியெல்லாம் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை விளக்கியிருக்கிறார். 1913ல் நோபல் பரிசு பெற்ற தாகூர், அப்பரிசைப் பெற்றுக்கொண்டு உரையாற்றியபோது, “இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள், திராவிடர்கள் வாழ்கிறார்கள்...” எனக் குறிப்பிட்டிருக்கிறார். மத அடிப்படையில் பலரும் வாழ்வதாகச் சொல்ல விரும்பிய தாகூர், தமிழர்களையும் திராவிடர்களையும் தனித்துக் கூறியதில் உள்ள புரிதலை தமிழன்பனின் வார்த்தையிலிருந்தே நான் தெரிந்துகொண்டேன். இத்தனைக்கும் “கவிதையே என்னுடைய சமயம்...” என்றவர்தான் தாகூர். தமிழர்களும் திராவிடர்களும் தனி சமயம் என்று தாகூர் சொல்லியிருப்பாரோ என்னவோ? தமிழன்பன், பாப்லோ நெருடாவை பாரதிதாசனுடன் ஒப்பிட்டு எழுதிய கட்டுரை ஒன்றுக்கு, கடும் எதிர்ப்பை ‘இந்தியா டுடே’ பத்திரிகை வெளியிட்டது. உலகக் கவிஞரை உள்ளூர் கவிஞருடன் ஒப்பிட்டுவிட்டதாகவும், பாப்லோ நெருடாவின் உயரத்தில் பாரதிதாசனா? என்பது போலவும் எழுதப்பட்ட அக்கட்டுரையின் இறுதியில், கவிதை குறித்து எதுவுமே தெரியாதவர் தமிழன்பன் என்று எழுதப்பட்டிருந்தது. தமிழன்பனுக்கு எதுவும் தெரியாது என்பதல்ல கட்டுரையாளரின் பிரச்னை. பாரதிதாசனை பாப்லோ நெருடா அளவுக்கு உயர்த்துகிறாரே என்பதுதான் சம்பந்தப்பட்ட கட்டுரையாளரின் நமைச்சல். பாரதியை ஏற்றுக்கொள்பவர்கள் பாரதிதாசனை மறுப்பதும், பாரதிதாசனைப் பின்பற்றுகிறவர்கள் பாரதியை விமர்சிப்பதும் தொடர்ந்து வருவதைப்போலத்தான் இதுவும். உலகக் கவிஞர்கள் யாரோடும் தமிழ்க் கவிஞர்கள் சமத்து இல்லையென்கிற எண்ணம் ஒருசில பத்திரிகைக்காரர்களிடம் இருந்து வருகிறது. இதுகுறித்து நேரடியாகவே ஒருமுறை தமிழன்பனிடம் கேட்டிருக்கிறேன். ‘‘பாரதியையும் பாரதிதாசனையும் ஒரே அளவுகோலால் அளப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்..?’’ என்றதற்கு, “ஒவ்வொரு கவிஞனுக்கும் மூன்று நிலைகள் உண்டு. முதல்நிலை, தனக்கு முன்னே இருப்பவரின் பாதிப்பில் எழுதுவது. இரண்டாவது நிலை, தனித்து எழுதுவது. அதாவது, தனித்தன்மையான எழுத்துமுறையை ஏற்படுத்துவது. மூன்றாவது நிலைதான் முக்கியமானது. அது, தனித்தன்மையுடன் எழுதும் தன்னைப்போல தனக்குப் பின்னால் வருபவர்களை எழுதத் தூண்டுவது. இந்த மூன்று நிலைகளையும் எவரெல்லாம் எட்டிப் பிடிக்கிறார்களோ, அவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்...” என்றார். “அளவுகோல்களை ஒரே மாதிரியாக வைத்துக்கொண்டால் எவரையும் சரியாக அளவிட முடியாது. காலமும் சூழலும் அரசியலும் என்ன அளவுகோல்களைத் தருகின்றனவோ அதை வைத்தே படைப்பாளிகள் அளக்கப்பட வேண்டும். அதைவிடுத்து, குழு வாதத்தை, குறுங்குழு வாதத்தை வைத்துக்கொண்டு அளந்தால், தமிழ்ப் படைப்பாளர்களில் ஒருவர்கூட தேறமாட்டார்கள்...” எனவும் தெளிவுபடுத்தினார். “முதல் நிலையில் பாரதிதாசன், பாரதியைப் போலவே எழுதிப் பழகினார். அடுத்தடுத்த நிலைகளில் கொள்கை சார்ந்தும் கோட்பாடு சார்ந்தும் அரசியல் சார்ந்தும் மாறுபடுகிறார். இந்த மாறுபாட்டை உள்வாங்கிக் கொள்ளாமல் பாரதியையும் பாரதிதாசனையும் ஒப்பிட்டு விமர்சிப்பது ஏற்புடையதல்ல...” என்பதே அவர் எப்போதும் சொல்வது. “ஒருவரை இன்னொருவருடன் பொருத்திப் பார்க்கலாம். ஆனால், அந்தப் பொருத்தப்பாட்டில் குறைகாண்பது முறையல்ல. ஒருவருக்கு ஒன்று வாய்த்திருக்கிறது என்றால் அது, அவருடைய ஆற்றலால் மட்டுமே விளைந்ததல்ல. காலத்தாலும் சூழலாலும் கிடைத்ததென்று எண்ணினால்தான் கணக்கு நேராகும்...” என்பதை பல மேடைகளில் வலியுறுத்தியிருக்கிறார். (பேசலாம்...) http://kungumam.co.in/

சிஎஸ்கே வீரர்கள் சென்னை வருகை: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! (படங்கள்)

3 months 2 weeks ago
ஐபிஎல் போட்டியில் சாம்பியன்: சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் உற்சாகம் ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடைபெற்ற விருந்தில் சிஎஸ்கே அணி வீரர்கள் கலந்துகொண்டனர். கோயிலில் கோப்பையை வைத்து ஆசிர்வாதம் செய்த கோயில் குருக்கள். ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 11-வது ஐபிஎல் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த ஆண்டில் சென்னை அணி உற்சாகமாக களமிறங்கி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. சிஎஸ்கே அணி வீரர் ஷேன் வாட்சன் அபாரமாக ஆடி 117 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2 ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்கியபோதும் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது வீரர்களிடையேயும், அணி நிர்வாகிகளிடையும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சாம்பியன் கோப்பையுடன் அணி வீரர்கள் நேற்றுமுன்தினம் மாலை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். வீரர்கள் விமான நிலையம் வந்ததும் அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் அவர்களை வரவேற்று வாழ்த்தினர். இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு அணி நிர்வாகம் சார்பில் சிஎஸ்கே அணி வீரர்கள், பயிற்சியாளர், நிர்வாகிகளுக்கு தனியார் ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது. இதில் வீரர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அணி நிர்வாகிளுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் கோப்பையுடன் கோயிலுக்குச் சென்று அணி வீரர்கள் வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணி வீரர்கள், நிர்வாகிகளின் குடும்பத்தாரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்னதாக விமானத்தில் வந்தபோது சிஎஸ்கே வீரர்களுடன் விமான பணிப்பெண்கள், விமானிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். http://tamil.thehindu.com/sports/article24029950.ece

உலக மசாலா

3 months 2 weeks ago
உலக மசாலா: கரப்பான் பால் கரப்பான்பூச்சியின் உடலில் இருந்து சுரக்கும் ஒருவிதத் திரவத்தை ‘கரப்பான் பால்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். பூமியிலேயே மிகவும் சத்து நிறைந்த பால் என்றால் அது கரப்பான் பால்தான். பிற்காலத்தில் கரப்பான் பால் சூப்பர் உணவாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கரப்பான் பூச்சிகளில் ஒரு வகை, ‘பசிபிக் பீட்டில் கரப்பான்’. இதைச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆராய்ந்தபோது, முட்டைகளை வெளியே இடாமல், உடலுக்குள்ளேயே குஞ்சுகளை வளர்த்து, வெளியே விடுகிறது என்பதை அறிந்தனர். கரப்பானின் உடலுக்குள் சுரக்கும் வெளிர் மஞ்சள் நிறப் பாலை உண்டு வளர்ந்த பிறகே குஞ்சுகள் வெளியே வருகின்றன என்பதை விஞ்ஞானிகள் சமீபத்தில்தான் கண்டுபிடித்துள்ளனர். மாட்டின் பாலை விட 3 மடங்கு சத்து கரப்பான் பாலுக்கு இருக்கிறது என்கிறார்கள். “இந்தப் பாலில் புரோட்டீன், அவசியமான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், சர்க்கரை என்று ஏராளமான சத்துகள் இருக்கின்றன. அதனால்தான் இந்தக் கரப்பான்பூச்சியின் குஞ்சுகள், மற்ற கரப்பான் குஞ்சுகளைவிட மிக வேகமாக வளர்கின்றன. இதில் சத்து அதிகம் இருந்தாலும் மனிதர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்று சொல்ல முடியாது. 100 கிராம் கரப்பான் பாலைப் பெறுவதற்கு ஆயிரம் கரப்பான்பூச்சிகள் தேவைப்படும். பண்ணைகளில் கரப்பான்களை வளர்க்க முடியுமா என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதிக அளவில் கரப்பான் பால் கிடைத்தால் காபியில் கலக்கலாம், ஐஸ்க்ரீம் செய்யலாம். அதற்கு முன்பு கரப்பான் பால் மனிதர்களுக்கு எவ்வளவு நன்மையளிக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்” என்கிறார் விஞ்ஞானி லியோனார்ட் சாவாஸ். கரப்பான் பாலையும் விட்டுவைப்பதில்லை! சீனாவைச் சேர்ந்த வாங், ஜிங்ஸோங் நகரிலுள்ள ஒரு செல்லப் பிராணிகள் கடையில் அழகான ஜப்பான் ஸ்பிட்ஸ் நாய்க் குட்டியை வாங்கினார். மூன்று மாதங்கள் வரை வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் குட்டியைக் கவனித்துக்கொண்டார். நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது மற்ற நாய்கள், இதைக் கண்டு பயந்து ஒதுங்கின. அப்போதும் வாங்குக்குச் சந்தேகம் வரவில்லை. ஒரு மாதம் கழித்து இது நாய் போலவே இல்லை, வால் எல்லாம் நரி போல இருக்கிறது என்று சிலர் சந்தேகம் கிளப்பினார்கள். அப்போதுதான் நாய் ஒரு முறை கூடக் குரைத்தது இல்லை என்பதையும் நாய்களுக்கான உணவுகளை அது சரியாகச் சாப்பிடுவதில்லை என்பதையும் உணர்ந்தார். “டையுவான் விலங்குகள் பூங்காவுக்கு நாயை அழைத்துச் சென்றேன். அங்கே இருந்த ஆராய்ச்சியாளர்கள், இது நாயல்ல, நரி என்று உறுதியாகச் சொன்னார்கள். ஆனால் அது இதுவரை வித்தியாசமாக என்னிடம் நடந்துகொண்டதில்லை. என்னதான் வீட்டில் வளர்த்தாலும் நரி, நாயாக முடியாது. இன்னும் சில மாதங்களில் இது முழு வளர்ச்சியடைந்த நரியாக மாறிவிடும் என்றார்கள். அந்தப் பூங்காவிலேயே என்னுடைய செல்லப் பிராணியைக் கொடுத்துவிட்டேன். நான் எப்போது வேண்டுமானாலும் என் செல்ல நரியை வந்து பார்க்கலாம் என்று பூங்கா அனுமதி கொடுத்திருக்கிறது. நரிக்குச் செய்யப்படும் செலவுகளையும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் வாங். நாய் வாங்கப் போய், நரி வாங்கி வந்த கதை! http://tamil.thehindu.com/world/article24030193.ece

கோத்தபாயவிற்கு சவாலாக களமிறங்குவதற்கு தயார் - சரத் பொன்சேகா

3 months 2 weeks ago
கோத்தபாயவிற்கு சவாலாக களமிறங்குவதற்கு தயார் - சரத் பொன்சேகா (ஆர்.யசி) யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் இன்று முதுகெலும்புள்ள தலை மைத்துவம் குறித்து பேசுகின்றனர். கோத்தபாய ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டினை ஆட்சி செய்ய எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி இணங்கினால் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சவாலாக நான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டார். நல்லாட்சியின் நகர்வுகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதான இரண்டு கட்சிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் கூட்டாட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு எந்தவித மாற்றங்களும் இடம்பெறவில்லை. அதனை எம்மால் முழுமையாக மறுக்க முடியாது. எனினும் கடந்த மூன்று ஆண்டுகளில் பல நல்ல காரியங்களையும் இதற்கு முன்னர் ஆட்சிகளில் முன்னெடுக்கப்படாத வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம். யுத்தத்தின் பின்னர் முன்னெடுக்க வேண்டிய நல்லிணக்க செயற்பாடுகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள், நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என முக்கியமான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். ஆகவே வேலைத்திட்டங்கள் எதனையும் செய்யவில்லை என கூறிவிட முடியாது. ஆனால் இன்று தேசிய அரசாங்கம் என்ற கொள்கையை மறந்து மீண்டும் கட்சி சார்ந்த தனிப்பட்ட அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற காரணத்தினால் எதிர்கால வேலைத்திட்டங்கள் தடைப்படுகின்றன. இந்த அரசாங்கத்தில் உள்ள பாரிய பிரச்சினை இதுவேயாகும். ஜனாதிபதி பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றவர். அவரது வெற்றியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பங்களிப்பு மிகவும் குறைவானதாகும். மாறாக ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஏனைய கட்சிகளினதும் ஆதரவிலேயே அவர் ஜனாதிபதியானார். அவ்வாறு இருக்கையில் இன்று அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நலன்களை மாத்திரம் கவனத்தில் கொண்டு செயற்படுவது ஒருபோதும் ஏற்றுகொள்ளப்பட முடியாத விடயமாகும். அதேபோன்று அப்போதைய ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்ட நபர்களுக்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னுரிமை வழங்கி அவர்களுக்காக இன்று ஆட்சியை குழப்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆகவே இனியாவது ஜனாதிபதி சரியான தெரிவுகளை முன்னெடுக்க வேண்டும். முதுகெலும்புள்ள தலைவர்கள் உருவாக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அதனை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆட்சியை சரியாக முன்னெடுத்து செல்லக்கூடிய, தீர்மானங்களை சரியாக முன்னெடுக்கக்கூடிய முதுகெலும்புள்ள தலைவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். ஆனால் யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி 15 ஆண்டுகளாக ஒழிந்து மறைந்து யுத்தத்தின் பின்னர் தாம் தான் வீரர்கள் எனக் கூறிக்கொண்டுள்ள தலைவர்கள் இந்த நாட்டினை ஆளுவது பொருத்தமற்றதாகும். கோத்தபாய ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டினை ஆட்சி செய்ய எந்தத் தகுதியும் இல்லை. அவருக்கு ஆட்சி நிருவாகத்தை செய்யத் தெரியாது. இராணுவத்தையே ஒழுங்காக வழிநடத்த தெரியாத, தைரியம் இல்லாத நபர் நாட்டினை ஆட்சிசெய்யும் ஆசையில் உள்ளார். ஆனால் அது நடைபெறாது. அதேபோல் இன்று ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அதிகமாக பேசுகின்றனர். கோத்தபாய ராஜபக்ஷ அதற்காக தன்னை தயார்படுத்தி வருகின்றார் என்றே தெரிகின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் இப்போதே தமது அடுத்த தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும். மீண்டும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க முடியாது. தனி ஆட்சியையே அமைக்க வேண்டும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி அதற்கான தயார்ப்படுத்தலை முன்னெடுக்க வேண்டும். இதில் என்னை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானம் எடுத்தால் நான் களமிறங்கவும் தயார் என்றார். http://www.virakesari.lk/article/34105

கோத்தபாயவிற்கு சவாலாக களமிறங்குவதற்கு தயார் - சரத் பொன்சேகா

3 months 2 weeks ago
கோத்தபாயவிற்கு சவாலாக களமிறங்குவதற்கு தயார்  - சரத் பொன்சேகா

 

 
 

(ஆர்.யசி)

யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் இன்று முதுகெலும்புள்ள தலை மைத்துவம் குறித்து பேசுகின்றனர். கோத்தபாய ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டினை ஆட்சி செய்ய எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சி இணங்கினால் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சவாலாக நான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டார். 

நல்லாட்சியின் நகர்வுகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே

அவர் மேலும்  குறிப்பிடுகையில், 

பிரதான இரண்டு கட்சிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் கூட்டாட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு எந்தவித மாற்றங்களும் இடம்பெறவில்லை. அதனை எம்மால் முழுமையாக மறுக்க முடியாது.

எனினும் கடந்த மூன்று ஆண்டுகளில் பல நல்ல காரியங்களையும்  இதற்கு முன்னர் ஆட்சிகளில் முன்னெடுக்கப்படாத வேலைத்திட்டங்களையும்  முன்னெடுத்துள்ளோம்.

யுத்தத்தின் பின்னர் முன்னெடுக்க வேண்டிய நல்லிணக்க செயற்பாடுகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள், நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என முக்கியமான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். ஆகவே வேலைத்திட்டங்கள் எதனையும் செய்யவில்லை என கூறிவிட முடியாது.

ஆனால் இன்று தேசிய அரசாங்கம் என்ற கொள்கையை மறந்து மீண்டும் கட்சி சார்ந்த தனிப்பட்ட அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற காரணத்தினால் எதிர்கால வேலைத்திட்டங்கள் தடைப்படுகின்றன. இந்த அரசாங்கத்தில் உள்ள பாரிய பிரச்சினை இதுவேயாகும். 

ஜனாதிபதி பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றவர். அவரது வெற்றியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பங்களிப்பு மிகவும் குறைவானதாகும்.

மாறாக ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஏனைய கட்சிகளினதும் ஆதரவிலேயே அவர் ஜனாதிபதியானார். அவ்வாறு இருக்கையில் இன்று அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நலன்களை மாத்திரம் கவனத்தில் கொண்டு செயற்படுவது ஒருபோதும் ஏற்றுகொள்ளப்பட முடியாத விடயமாகும். 

அதேபோன்று   அப்போதைய ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்ட நபர்களுக்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னுரிமை வழங்கி அவர்களுக்காக இன்று ஆட்சியை குழப்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆகவே இனியாவது ஜனாதிபதி சரியான தெரிவுகளை முன்னெடுக்க வேண்டும். 

 முதுகெலும்புள்ள தலைவர்கள் உருவாக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அதனை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆட்சியை சரியாக முன்னெடுத்து செல்லக்கூடிய, தீர்மானங்களை சரியாக முன்னெடுக்கக்கூடிய முதுகெலும்புள்ள தலைவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.

ஆனால்  யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி 15 ஆண்டுகளாக ஒழிந்து மறைந்து யுத்தத்தின் பின்னர் தாம் தான் வீரர்கள் எனக் கூறிக்கொண்டுள்ள  தலைவர்கள் இந்த நாட்டினை ஆளுவது பொருத்தமற்றதாகும்.

 கோத்தபாய ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டினை ஆட்சி செய்ய எந்தத் தகுதியும் இல்லை. அவருக்கு  ஆட்சி நிருவாகத்தை செய்யத் தெரியாது.

இராணுவத்தையே ஒழுங்காக வழிநடத்த தெரியாத, தைரியம் இல்லாத நபர் நாட்டினை ஆட்சிசெய்யும் ஆசையில் உள்ளார். ஆனால் அது நடைபெறாது. அதேபோல் இன்று ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அதிகமாக பேசுகின்றனர். கோத்தபாய ராஜபக்ஷ அதற்காக தன்னை தயார்படுத்தி வருகின்றார் என்றே தெரிகின்றது. 

அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் இப்போதே தமது அடுத்த தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும். மீண்டும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க முடியாது.

தனி ஆட்சியையே அமைக்க வேண்டும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி அதற்கான தயார்ப்படுத்தலை முன்னெடுக்க வேண்டும். இதில் என்னை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானம் எடுத்தால் நான் களமிறங்கவும் தயார் என்றார்.

http://www.virakesari.lk/article/34105

முஸ்லிம் விரோதத்தை, உடனடியாக கைவிட வேண்டும், மாட்டிறைச்சி ஈழத் தமிழர்களின் உணவு - ஜெயபாலன்

3 months 2 weeks ago
உங்கள் கருத்தோடு ஒட்டிய சிந்தனைகளை எவ்வளவு தூரம் வளர்க்க முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் கர்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டைக் கடந்து இலங்கை புலம்பெயர்தேசங்களில் விரிவுபடுவதை இந்திய உளவுதுறை ஒருபோதும் விரும்பாது. அதற்காக அவர்கள் பல முயற்சிகளை நிச்சயம் செய்வார்கள். அன்றைய மனுதர்மத்தை வேதங்கள் கடவுள் ஊடாக நிலைநிறுத்தியது இன்று இந்திய ஆழும் வர்க்கத்தின் அரசியல் அதிகாரம் என்பது அதே மனுதர்மத்தை உளவுதுறை ஊடாகவே நிலைநிறுத்துகின்றது. அடிப்படையில் பெரும் சமூகங்ளை பிரித்து சிதைத்து ஒரு சிறு சமூகம் அதிகாரத்தை தக்கவைப்பது தான் இதன் சூட்சுமம். அன்று சாதி தீண்டாமை என்பதை முன்வைத்த்தார்கள் இன்றும் அதையேதான் வேறுவிதமாக தூத்துக்குடியில் செய்தார்கள். குழப்பங்ளை அவர்களே செய்தார்கள் வன்முறைகளை வலிந்து நுழைத்த்தார்கள் தமிழர்களைக் கொண்டே தமிழர்களை கொன்றார்கள். அன்றும் இயக்கங்களை பல பத்தாக வளர்த்தார்கள் மோதவிட்டார்கள் அழித்தார்கள். இன்று எஞ்சியிருக்கும் முரண்பாடுகளை பயன்படுத்துவார்கள்; நாடுபிடிப்பதில் நுழைந்து நாறடித்தார்கள் இன்று மாடுபிடிப்பதில் சச்சிதானந்தை இறக்கிவிட்டுள்ளார்கள்.. நாளை ஆவா குழு இஸ்லாமியர்களை வெட்டும் ஜிகாத் தமிழர்களை வெட்டும் அழிவுகள் வளரும். துரநோக்கு சிந்தனையற்றவர்கள் செத்துமடிவது இயற்கையின் விதிபோன்றது. விதி வலியது..

இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் சொந்தமான பூமி இது- மரபுகளை மதிக்காவிடின் நாட்டிலிருந்து வெளியேறுங்கள்…

3 months 2 weeks ago
இலங்கையில் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் - சிவசேனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனை இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் பேசிய பேச்சு இங்கு இலங்கையில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தென்மராட்சி இந்துக்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சில தினங்களுக்கு முன்னதாக பசுவதையை கண்டித்து போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். காவி உடையணிந்தவர்கள் உட்பட சிலர் அதில் பங்கேற்றிருந்தனர். அங்கு உரையாற்றிய போது சச்சிதானந்தம் வெளியிட்ட கருத்தே இங்கு தமிழ் மற்றும் ஏனைய சில சமூகங்களின் மத்தியில் கண்டனத்தை தோற்றுவித்துள்ளது. இலங்கையை ஒரு பௌத்த - இந்து நாடு என்று வர்ணித்த சச்சிதானந்தம், "இது வேறு சமூகத்தவர்களுக்கான நாடு அல்ல, இங்குள்ள பாரம்பரியத்தை ஏற்று நடக்காதவர்கள், நாட்டைவிட்டு வெளியேறி தமது பாரம்பரியங்களை பின்பற்றும் நாடுகளுக்கு போகலாம்" என்று கூறினார். சவுதி அரேபியாவில் பாதிப்பேர் இஸ்லாம் அல்லாதவர்கள் என்றும் ஆனால், அங்கு இஸ்லாத்துக்கு பொருந்தாத பன்றி இறைச்சியை யாரும் உண்ண முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இங்கு மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தமது ஊரில் மாட்டிறைச்சி கடைகள் எப்போதும் இருந்ததில்லை என்றும் சமீபத்தில்தான் அவை, வெளியில் இருந்து வந்தவர்களால் புகுத்தப்பட்டதாகவும் சச்சிதானந்தம் குறிப்பிட்டார். தேவையில்லாத சர்ச்சை இது தேவையில்லாத ஒரு சர்ச்சை என்று இதனைக் கண்டிக்கின்ற பெண்ணியவாதியும், ஆய்வாளருமான சித்ரலேகா மௌனகுரு, தான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில், எவ்வளவோ காலத்துக்கு முன்னரே அங்கு மாடு உண்ணும் பழக்கம் இந்துக்களின் மத்தியிலும் வந்துவிட்டது என்கிறார். அது மாத்திரமல்லாமல், இந்த விசயத்தில் இஸ்லாமியர்கள் இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். அண்மையில் இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வன்முறை நடந்து முடிந்திருக்கும் சூழலில், இப்படியான இன வீரோதப் பேச்சுக்கள் மீண்டும் அப்படியான நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றுவிடலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டார். காலமாற்றம் கவனிக்கப்பட வேண்டும் இலங்கையை பொறுத்தவரை, இஸ்லாமியர் மாத்திரமல்லாமல், கிறிஸ்தவ தமிழர்களும் மாட்டிறைச்சி சாப்பிடுவது உண்டு. அவ்வளவு ஏன் பல பத்து ஆண்டுகளாக சைவ சமயத்தவர்களில் ஒரு பகுதியினரும் அதனைச் சாப்பிடுவது உண்டு. வீடுகளில் மாட்டிறைச்சியை சமைப்பதை தவிர்த்தாலும், வெளியில், அதுவும் குறிப்பாக "கொத்துரொட்டி" என்ற உணவில் மாட்டிறைச்சியை சேர்த்து சாப்பிடும் வழக்கம் இந்து இளைஞர்கள் மத்தியில் உண்டு. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆகவே காலமாற்றத்தை, உணவு பழக்க மாற்றத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறுகின்ற கிளிநொச்சியை சேர்ந்த பத்திரிகையாளரான சிவராசா கருணாகரன், இது காலம் கடந்த பேச்சு என்று கூறுகிறார். அதுமாத்திரமன்றி, வெளிநாட்டு தொடர் உணவுக் கடைகள் இலங்கையில் உள் நுழைந்துள்ள நிலையில், அவற்றை எதிர்க்காமல், பொதுமக்களின் பழக்கமாகிவிட்ட உணவுப் பழக்கத்தை இலக்கு வைப்பது மோசமானது என்றும் அவர் கூறுகிறார். விவசாய நடவடிக்கைகளுக்காக வளர்க்கப்படும் மாடுகள் இப்போது இயந்திரங்களின் வருகையால் பெரும்பாலும் இறைச்சிக்காக பயன்படுத்தப்படுவது ஒரு கால மாற்றமே என்றும் அவர் கூறுகிறார். இலங்கையில் இந்துக்களாக, தமிழர்களாக இருந்தாலும் இங்குள்ள சிறுபான்மை தமிழர்கள் (தலித்துகள்) மாட்டிறைச்சி சாப்பிடுவது உண்டு. அது அவர்களுக்கு வசதியான, மலிவான உணவும் கூட. அவர்களின் உணவு உரிமையில் கைவைக்கும் ஒரு கூற்றாகவும் இது பார்க்கப்படுகின்றது. சிவசேனையின் தொடர்ச்சி இலங்கையை ஒரு இந்து பௌத்த நாடாக சச்சிதானந்தம் வர்ணித்ததும் ஏனைய சிறுபான்மை இனங்களை இலக்கு வைக்கும் ஒரு நடவடிக்கை என்றும், இது இந்திய சிவசேனையின் நடவடிக்கைகளின் தொடர்ச்சி என்றும் கூறுகிறார் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியரான ஆர். பாரதி. எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க இந்தப் பிரச்சினையை வேண்டுமென்றே சச்சிதானந்தம் தூக்கிப் பிடிப்பதாக அவர் கண்டிக்கிறார். மாட்டிறைச்சி உண்ணுதல் என்பது இலங்கை இந்துக்கள் மத்தியில் பரவி எவ்வளவோ ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் அவர் கூறுகின்றார். பொதுமக்களின் உணவுப் பழக்க சுதந்திரம் ஒரு பக்கமும், பாரம்பரிய பண்பாடு ஒரு புறமும் முரண்படும் சூழ்நிலையில் மாற்றங்கள் படிப்படியாக, யதார்த்தமாக வரவேண்டுமே ஒழிய அவற்றை திணிக்க முயல்வது ஒரு அதிகார துஸ்பிரயோக போக்கையே காண்பிக்கும் என்று கூறுகிறார் இஸ்லாமிய கற்கைகளுக்கான விரிவுரையாளரான ஏ. பி. எம். இத்ரீஸ். பசுவதை, மாட்டிறைச்சி உணவுத் தடை, மாட்டிறைச்சிக் கடைக்கான தடை போன்ற பிரச்சினைகள் இந்தியாவுக்கு பழைய விவகாரங்களாக இருந்தாலும், இலங்கைக்கு இது கொஞ்சம் புதிய பிரச்சினைகள்தான். வடபகுதி தமிழர்கள் தமது மதம், பண்பாடு போன்ற விசயங்களை கொஞ்சம் கண்டிப்பாக பின்பற்றுபவர்கள்தான். ஆனால், மாட்டிறைச்சி என்பது ஓரளவு அவர்கள் மத்தியிலும் பழக்கப்பட்ட உணவாக வந்துவிட்ட நிலையில், சச்சிதானந்தத்தின் இந்தக் கருத்துக்கள் அவர்களின் மாட்டிறைச்சியை உண்ணும் பழக்கத்தை குறைத்துவிடுமா என்பது தெரியவில்லை. ஆனால், இங்கு எல்லோர் மனதிலும் உள்ள ஒரே கவலை, இது இன்னும் ஒரு வன்முறையை தூண்டிவிட்டுவிடக்கூடாது என்பதுதான். https://www.bbc.com/tamil/sri-lanka-44299124

அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராக மாறிவிட்டேன்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் பேட்டி

3 months 2 weeks ago
அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராக மாறிவிட்டேன்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் பேட்டி ரஷித் கான். - THE HINDU ரஷித் கான். - AFP ஆப்கானிஸ்தான் அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராகி விட்டேன் என்று அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கூறினார். ஐபிஎல் 2018 டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் ஏலத்தின்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ரஷித் கானை, ஹைதராபாத் அணி வாங்கியிருந்தது. இந்தத் தொடரின்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17 ஆட்டத்தில் 21 விக்கெட்களைக் கைப்பற்றி 2-வது இடம்பிடித்துள்ளார். தனது அபாரமான பந்துவீச்சால் பல ஆட்டங்களில் அவர் ஹைதராபாத்துக்கு வெற்றி தேடித் தந்தார். எலிமினேட்டர் 2-வது ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார் ரஷீத் கான். 10 பந்தில் 34 ரன்களை விளாசியதுடன், 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். மேலும் அபாரமான 2 கேட்சுகளையும் அவர் பிடித்தார். ஐபிஎல் தொடரில் ரஷித் கானின் சிறப்பான ஆட்டம், பவுலிங்கைப் பார்த்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆச்சர்யம் அடைந்தார். அவரது திறமையைப் பார்த்து சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் புகழாரம் சூட்டியிருந்தார். உலகில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்களில் சிறந்தவர் ரஷித் கான் என்று சச்சின் பாராட்டுத் தெரிவித்திருந்தார். இதற்கு ஒரு படி மேலே போன ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, ரஷித் கான் எங்கள் நாட்டின் சொத்து. அவரை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபருக்கு அடுத்தபடியாக தற்போது நான் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகவும் பிரபலமான நபராக மாறியுள்ளேன் என்று சியட்-கிரிக்கெட் வீரர் விருது வழங்கும் விழாவில் ரஷித் கான் கூறினார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஆப்கானிஸ்தான் அதிபரின் வாழ்த்து என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அவருக்கு அடுத்தபடியாக எங்கள் நாட்டின் மிகவும் பிரபலமான நபராக மாறிவிட்டேன். கொல்கத்தா அணியுடனான எலிமினேட்டர் 2-வது ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக ஆடி வெற்றி கண்டோம். அந்த ஆட்டம் முடிந்து நான் சக வீரர்களுடன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். அப்போது எனது நண்பர்கள் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் என்னைப் பற்றி புகழ்ந்து கூறியிருந்த ட்விட்டர் பக்கத்தை எனக்கு ஸ்கீரின்ஷாட் எடுத்து அனுப்பியிருந்தனர். அதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். நான் சச்சினுக்கு பதில் அனுப்புவதற்கு முன் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு என்ன எழுத வேண்டும் என்பதே தெரியவில்லை. இறுதியில் அவருக்கு பதில் அளித்தேன். ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானே அந்த ட்விட்டை பார்த்திருக்கும். ஆப்கானிஸ்தானில் சச்சின் டெண்டுல்கர் மிகவும் பிரபலமான ஆட்டக்காரர். என்னை அவர் வாழ்த்தியிருப்பது கண்டு ஒவ்வொருவரும் ஆச்சர்யம் அடைந்திருப்பார்கள். அவருடைய வாழ்த்து இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும். இந்தத ஐபிஎல் போட்டியில் நான் 21 விக்கெட்கள் வீழ்த்தினேன். அதில் 3 விக்கெட்கள் மிகவும் சிறப்புக்குரியவை. அவை விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், எம்.எஸ். தோனி ஆகியோரின் விக்கெட்களாகும். அந்த விக்கெட்களை எடுத்தபோது நான் மிகவும் திருப்தியடைந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் எடுத்த மிகச் சிறந்த விக்கெட்கள் அவை. அவர்கள் மிகவும் சிறந்த ஆட்டக்காரர்கள். அவர்களது விக்கெட்களை வீழ்த்தியது என்றென்றும் நினைவில் இருக்கும். எனக்கு எப்போதும் டி20 போட்டிகளில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். இந்தியாவுக்கு எதிராக முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடவுள்ளது. இது எங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாடுகளின் கனவாக இருக்கும். அந்தக் கனவு இப்போது நனவாகப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார். http://tamil.thehindu.com/sports/article24029955.ece

அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராக மாறிவிட்டேன்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் பேட்டி

3 months 2 weeks ago
அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராக மாறிவிட்டேன்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் பேட்டி

 

SAN-RASHID2

ரஷித் கான்.   -  THE HINDU

SAN-RAHSID1

ரஷித் கான்.   -  AFP

ஆப்கானிஸ்தான் அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராகி விட்டேன் என்று அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கூறினார்.

ஐபிஎல் 2018 டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் ஏலத்தின்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ரஷித் கானை, ஹைதராபாத் அணி வாங்கியிருந்தது.

 

இந்தத் தொடரின்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17 ஆட்டத்தில் 21 விக்கெட்களைக் கைப்பற்றி 2-வது இடம்பிடித்துள்ளார். தனது அபாரமான பந்துவீச்சால் பல ஆட்டங்களில் அவர் ஹைதராபாத்துக்கு வெற்றி தேடித் தந்தார். எலிமினேட்டர் 2-வது ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார் ரஷீத் கான். 10 பந்தில் 34 ரன்களை விளாசியதுடன், 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். மேலும் அபாரமான 2 கேட்சுகளையும் அவர் பிடித்தார்.

ஐபிஎல் தொடரில் ரஷித் கானின் சிறப்பான ஆட்டம், பவுலிங்கைப் பார்த்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆச்சர்யம் அடைந்தார். அவரது திறமையைப் பார்த்து சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் புகழாரம் சூட்டியிருந்தார். உலகில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்களில் சிறந்தவர் ரஷித் கான் என்று சச்சின் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஒரு படி மேலே போன ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, ரஷித் கான் எங்கள் நாட்டின் சொத்து. அவரை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபருக்கு அடுத்தபடியாக தற்போது நான் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகவும் பிரபலமான நபராக மாறியுள்ளேன் என்று சியட்-கிரிக்கெட் வீரர் விருது வழங்கும் விழாவில் ரஷித் கான் கூறினார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஆப்கானிஸ்தான் அதிபரின் வாழ்த்து என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அவருக்கு அடுத்தபடியாக எங்கள் நாட்டின் மிகவும் பிரபலமான நபராக மாறிவிட்டேன்.

கொல்கத்தா அணியுடனான எலிமினேட்டர் 2-வது ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக ஆடி வெற்றி கண்டோம். அந்த ஆட்டம் முடிந்து நான் சக வீரர்களுடன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். அப்போது எனது நண்பர்கள் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் என்னைப் பற்றி புகழ்ந்து கூறியிருந்த ட்விட்டர் பக்கத்தை எனக்கு ஸ்கீரின்ஷாட் எடுத்து அனுப்பியிருந்தனர். அதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். நான் சச்சினுக்கு பதில் அனுப்புவதற்கு முன் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு என்ன எழுத வேண்டும் என்பதே தெரியவில்லை. இறுதியில் அவருக்கு பதில் அளித்தேன்.

ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானே அந்த ட்விட்டை பார்த்திருக்கும். ஆப்கானிஸ்தானில் சச்சின் டெண்டுல்கர் மிகவும் பிரபலமான ஆட்டக்காரர். என்னை அவர் வாழ்த்தியிருப்பது கண்டு ஒவ்வொருவரும் ஆச்சர்யம் அடைந்திருப்பார்கள். அவருடைய வாழ்த்து இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும்.

இந்தத ஐபிஎல் போட்டியில் நான் 21 விக்கெட்கள் வீழ்த்தினேன். அதில் 3 விக்கெட்கள் மிகவும் சிறப்புக்குரியவை. அவை விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், எம்.எஸ். தோனி ஆகியோரின் விக்கெட்களாகும். அந்த விக்கெட்களை எடுத்தபோது நான் மிகவும் திருப்தியடைந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் எடுத்த மிகச் சிறந்த விக்கெட்கள் அவை. அவர்கள் மிகவும் சிறந்த ஆட்டக்காரர்கள். அவர்களது விக்கெட்களை வீழ்த்தியது என்றென்றும் நினைவில் இருக்கும்.

எனக்கு எப்போதும் டி20 போட்டிகளில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். இந்தியாவுக்கு எதிராக முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடவுள்ளது. இது எங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாடுகளின் கனவாக இருக்கும். அந்தக் கனவு இப்போது நனவாகப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

http://tamil.thehindu.com/sports/article24029955.ece

இளமை புதுமை பல்சுவை

3 months 2 weeks ago
பிறருக்கு ஏன் உதவ வேண்டும்? - உண்மை உணர்த்தும் மகாபாரதக் கதை #MotivationStory `வாழ்க்கையின் மிக முக்கியமான, அவசரமான கேள்வி என்ன தெரியுமா... `நீங்கள் மற்றவர்களுக்காக என்ன செய்தீர்கள்?’ என்பதுதான்.’ - அஹிம்சைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King Jr.) அழுத்தமாகச் சொல்லியிருக்கும் வாசகம் இது. `மத்தவங்களுக்கு உதவுறதா! மத்தவங்களைப் பத்தி நினைக்கக்கூட நேரம் எங்கே இருக்கு?’ என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத ஓர் ஓட்டப்பந்தயத்தில் நாம் எல்லோருமே ஓடிக்கொண்டேயிருக்கிறோம், அவரவருக்கான தேடல், தேவையின் பொருட்டு. அதிலேயே சுருண்டும் போகிறோம். இதில் பிறரைப் பற்றி அக்கறைகொள்ள நமக்கு நேரமே இல்லை என்பதே உண்மை. ஆனால், சக மனிதர்களின் தேவையை உணர்ந்து உதவி செய்யும்போதுதான் மனித வாழ்க்கை பூரணத்துவம் பெறுகிறது; வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கிறது. நம் சுயநலத்தை, சுய லாபத்தை நினைக்காமல், பிறருக்காக ஒரு காரியத்தைச் செய்தால் என்ன நடக்கும்... அதனால் யாருக்கு ஆதாயம்? விளக்குகிறது மகாபாரதத்தில் சொல்லப்படும் இந்தக் கதை. அது ஒரு காலை நேரம். அஸ்தினாபுரம். தன் மாளிகை உப்பரிகையில் கிருஷ்ணரோடு நின்று பேசிக்கொண்டிருந்தான் அர்ஜுனன். வீதியில் நடந்து வருபவர்களைப் பார்ப்பதும் பேசுவதுமாக இருந்தார்கள் இருவரும். திடீரென்று அர்ஜுனன், ``கிருஷ்ணா அங்கே பார்!’’ என்று ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினான். கிருஷ்ணர் பார்வையைத் திருப்பினார். அங்கே அந்தணர் ஒருவர், தன் மேல் துண்டை ஏந்தி யாரிடமோ யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார். ``பார்த்தால் வேதம் கற்றவர்போல் தெரிகிறது. இவருக்கு ஏன் இந்த நிலை கிருஷ்ணா?’’ ``அதுதான் விதி.’’ ``நம்மால் முடிந்த உதவியைச் செய்து அவர் நிலையை மாற்றப் பார்க்கலாமா?’’ ``முயற்சி செய்து பாரேன்...’’ அர்ஜுனன் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. ஒரு சேவகனைக் கூப்பிட்டான். அந்த அந்தணரை அழைத்துவரச் சொன்னான். அந்தணர் வந்தார். சோர்ந்து போயிருந்தார். வயிறு ஒட்டிப்போயிருந்தது; கண்களிலேயே பசி தெரிந்தது. அர்ஜுனன், ஒரு பை நிறைய பொற்காசுகளை நிரப்பி அவரிடம் கொடுத்தான். அந்தணர் மகிழ்ந்து போனார். கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நன்றி சொல்லிவிட்டு வெளியே போனார். அர்ஜுனன் நிறைந்த மனத்தோடு கிருஷ்ணரைப் பார்த்து சிரித்தான். அன்று கிருஷ்ண பரமாத்மா சொன்ன விதி அந்தணரை விரட்டியது. வீடு செல்லும் வழியில், ஒரு வனம் இருந்தது. தனியாகச் சென்ற அந்தணர் ஒரு திருடனிடம் மாட்டிக்கொண்டார். பொற்காசுப் பையைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டான் அந்தத் திருடன். அடுத்த நாள் காலை. முதல் நாளைப்போலவே கிருஷ்ணரும் அர்ஜுனனும் மாளிகை உப்பரிகையில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஓரிடத்தைப் பார்த்த அர்ஜுனன் அதிர்ந்துபோனான். அங்கே முதல் நாள் பார்த்த அதே அந்தணர், யாரிடமோ அன்றைக்கும் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார். சேவகனை அழைத்து அவரை அழைத்துவரச் சொன்னான் அர்ஜுனன். விசாரித்தான். ``என் தலையெழுத்து அப்படியிருக்கிறது. நான் ஒரு அதிர்ஷ்டக்கட்டை. அதுதான் உங்களிடம் வாங்கிய பொற்காசுகூட கொள்ளை போய்விட்டது...’’ கண்களில் நீர் துளிர்க்கச் சொன்னார் அந்தணர். அர்ஜுனனுக்கு அவர் பேசியதைக் கேட்டு இரக்கம் சுரந்தது. விலையுயர்ந்த வைரம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான். ``அந்தணரே... கவனம்! இந்த முறையாவது இந்த வைரத்தை வைத்து, புத்திசாலித்தனமாகப் பிழைத்துக்கொள்ளும் வழியைப் பாரும்...’’ அவர் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார். இந்த முறை இருட்டுவதற்கு முன்னரே வீடு திரும்ப முடிவு செய்தார். `இந்த வைரத்தை எப்படி விற்கலாம், யாரிடம் விற்கலாம், இதை வாங்கும் அளவுக்கு நம்மூரில் வியாபாரிகள் இருக்கிறார்களா, ஏனென்றால் அர்ஜுனன் கொடுத்த வைரமாயிற்றே..!’ என்றெல்லாம் யோசனை செய்தபடி நடந்து போனார். அவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் யாருமில்லை. அந்தணருக்கு இப்போது அந்த வைரத்தை எங்கே ஒளித்துவைப்பது என்கிற சங்கடம். அவர் வீட்டில் பாதுகாப்பான பெட்டிகளோ, அலமாரிகளோ இல்லை. அப்போதுதான் ரொம்ப நாள்களாகப் பயன்படுத்தாத ஒரு மண் பானை இருப்பது நினைவுக்கு வந்தது. அதில் வைரத்தை ஒளித்துவைப்பதுதான் பாதுகாப்பு என்று நினைத்தார் அந்தணர். அந்தப் பானைக்குள் வைரத்தைப் போட்டுவைத்தார். அன்று இரவு நன்றாக உறங்கியும் போனார். அடுத்த நாள் காலை, அந்தணருக்கு முன்னதாகவே எழுந்துகொண்டாள் அவரின் மனைவி. ஒரு பானையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு நீரெடுக்கச் சென்றாள். திரும்ப வரும் வழியில், ஓரிடத்தில் கால் தடுக்கி, பானையைக் கீழே போட்டுவிட்டாள். பானை உடைந்து போனது. அப்போது அவளுக்கு வீட்டிலிருக்கும் பழைய பானை நினைவுக்கு வந்தது. வீடு திரும்பியவள், கணவர் வைரத்தைப் போட்டு வைத்திருந்த பானையை எடுத்துக்கொண்டு திரும்பவும் ஆற்றை நோக்கிச் சென்றாள். பானையைக் கழுவுவதற்காக தண்ணீருக்குள் அவள் பானையை அழுத்த, அதற்குள்ளிருந்த வைரம் ஆற்றுத் தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. *** மூன்றாம் நாள். அதே அஸ்தினாபுரம். அன்றைக்கும் அந்தணர் யாசகம் கேட்பதைப் பார்த்து துடித்துப்போனான் அர்ஜுனன். அவரை அழைத்து விசாரித்தான். அவர் நடந்ததைச் சொன்னார். இந்த முறை அர்ஜுனனை முந்திக்கொண்டார் கிருஷ்ணர். இரண்டு செப்புக் காசுகளை எடுத்து அந்தணரிடம் கொடுத்தார். ``போய் வாருங்கள் ஐயா..!’’ என்று அனுப்பிவைத்தார். ``கிருஷ்ணா, பொற்காசுகளாலும் வைரத்தாலும் மாற்றியமைக்க முடியாத இவரின் வாழ்க்கையை, இந்தச் செப்பு காசுகளா மாற்றிவிடப் போகிறது? எனக்கு நம்பிக்கையில்லை’’ என்றான் அர்ஜுனன். ``பொறுத்திரு!’’ அந்தணர் மாளிகையிலிருந்து வெளியே வந்தார். அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவருக்கு மனம் ஒருபக்கம் உறுத்தியது. `ஒருவேளை கிருஷ்ணரும் அர்ஜுனனும் நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்திருப்பார்களோ..!’ என்றெல்லாம் எண்ணம் ஓடியது. கால்போன போக்கில் நடந்தார் அந்தணர். அது ஆற்றங்கரையோரம். ஆற்று நீரில் ஒருவன் தூண்டில் போட்டுக் காத்திருப்பதையும், அப்போதுதான் ஒரு அழகான மீன் அதில் மாட்டிக்கொண்டதையும் பார்த்தார். உடனே அவனிடம் ஓடினார். `ஏம்ப்பா... அந்த மீனை விட்டுடேன். பாவம் அழகா இருக்கு’’ என்றார். ``சரிங்கய்யா... இந்த மீனை விட்டுடுறேன். எனக்கு நீங்க என்ன தருவீங்க?’’ அந்தணர் தன்னிடமிருந்த இரண்டு செப்பு காசுகளைக் கொடுத்தார். அவன், மீனை அவரிடம் கொடுக்க வாங்கி ஆற்றுக்குள் எறிந்தார். அந்த வேகத்தில் அதுவரை மீனின் தொண்டையில் மாட்டிக்கொண்டிருந்த ஏதோ ஒன்று எகிறி கரையில் வந்து விழுந்தது. அந்தணர் அதை எடுத்துப் பார்த்தார். அவர் முதல் நாள் பானைக்குள் பத்திரப்படுத்திய அதே வைரம். அவர் மகிழ்ச்சியில் ``பிடிச்சிட்டேன்...பிடிச்சிட்டேன்... கண்டுபிடிச்சுட்டேன்!’’ என்று சத்தம் போட்டார். யதேச்சையாக அந்தப் பக்கமாக வந்த திருடன் (அவரிடம் கொள்ளையடித்தவன்) அவர் போட்ட சத்தத்தில் பதறிப் போனான். என்ன நினைத்தானோ... அவரிடம் திருடிய பொற்காசுப் பையை அவரிடமே கொடுத்துவிட்டு, தன் வழியே போனான். மறுநாள் காலை அந்தணர், அர்ஜுனனைத் தேடிப் போய் நடந்ததைச் சொன்னார். மறுபடியும் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார். அவர் போனதும் அர்ஜுனன் ஆச்சர்யத்தோடு கேட்டான்... ``கிருஷ்ணா... இதெல்லாம் என்ன?’’ ``அது ஒன்றுமில்லை. அந்தணருக்கு பொற்காசுகளும் வைரமும் கிடைத்தபோது, அவர் அவரைப் பற்றியும், அவருடைய தேவைகளைப் பற்றியுமே யோசித்துக்கொண்டிருந்தார். அவரிடம் இரண்டே இரண்டு செப்பு காசுகள் மட்டும் இருந்தபோது இன்னோர் உயிரைப் பற்றி நினைத்தார். அந்த எண்ணம்தான் அவருக்கு உதவியது. மற்றவர்களின் வேதனையை உணர்ந்து அவர்களின் தேவைகளுக்கு உதவ நினைத்து செயல்படும்போது, ஒருவர் கடவுளின் வேலையைச் செய்கிறார்; கடவுளே அந்த மனிதருக்கு உதவ முன்வருகிறார்.’’ https://www.vikatan.com

சம்­பந்தனை இன்று சந்திக்கிறது சுதந்திரக்கட்சி மாற்று அணி

3 months 2 weeks ago
சம்­பந்தனை இன்று சந்திக்கிறது சுதந்திரக்கட்சி மாற்று அணி (ரொபட் அன்­டனி) சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பேரைக்­கொண்ட மாற்று அணி­யினர் இன்று புதன்­கி­ழமை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­யக்­கூட்ட­மைப்பை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த­வுள்­ளனர். எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் காலை 11.30 மணி­ய­ளவில் நடை­பெ­ற­வுள்ள இந்த சந்­திப்பில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுடன் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் முக்­கிய கூட்­ட­மைப்பின் முக்­கிய பிர­தி­நி­திகள் சிலரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். இதன்­போது நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலைமை மக்கள் விடு­தலை முன்­னணி முன்­வைத்­துள்ள 20 ஆவது திருத்த சட்டம் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் மந்­த­க­தியை அடைந்­துள்­ளமை, தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு, நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்த விட­யங்கள் தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி­யினர் தமது நிலைப்­பாட்டை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னிடம் தெரி­விக்­க­வுள்­ளனர். குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் மிகவும் ஆர்­வ­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன. எனவே இது தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி­யி­னரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரும் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­துடன் அடுத்­த­கட்­டத்தை நோக்கி இதனை நகர்த்த முடி­யுமா என்­பது குறித்து ஆரா­ய­வுள்­ளனர். அது­மட்­டு­மன்றி மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள 20 ஆவது திருத்த சட்டம் தொடர்­பிலும் இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வி­ருக்­கி­றது. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்பு தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி முக்­கி­யஸ்தர் டிலான் பெரேரா கேச­ரிக்கு குறிப்­பி­டு­கையில், நாம் அனைத்து அர­சியல் கட்­சி­க­ளையும் தொடர்ச்­சி­யாக சந்­தித்து வரு­கின்றோம். அந்த அடிப்­ப­டையில் இன்று சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரை சந்­தித்து பேச்சு நடத்­த­வி­ருக்­கின்றோம். இதன்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் 13ஆவது திருத்த சட்டம் மற்றும் அர­சியல் தீர்வு தேர்தல் முறை மாற்றம், என்­பன தொடர்பில் எமது 16 பேரின் நிலைப்­பாட்டை தெளி­வாக சம்­பந்­த­னிடம் எடுத்­து­ரைப்போம். நாங்கள் 16 பேரும் தொடர்ந்து சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணைந்­துதான் செயற்­ப­டு­கின்றோம் என்­பதை அவ­ருக்கு விளக்­கிக்­கூ­றுவோம். அதே­போன்று எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னிடம் நாங்கள் கேட்­க­வேண்­டிய சில கேள்­விகள் இருக்­கின்­றன. அதா­வது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பது முக்­கி­யமா? அல்லது ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் வைத்திருப்பது முக்கியமா என்று நாங்கள் சம்பந்தனிடம் கேள்வி எழுப்ப இருக்கின்றோம். அந்தக்கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் என்றும் எதிர்பார்க்கின்றோம். ஒரு ஆக்கப்பூர்வமான சந்திப்பு இடம்பெறும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார். http://www.virakesari.lk/article/34106

சம்­பந்தனை இன்று சந்திக்கிறது சுதந்திரக்கட்சி மாற்று அணி

3 months 2 weeks ago
சம்­பந்தனை இன்று சந்திக்கிறது சுதந்திரக்கட்சி மாற்று அணி 

 

 
 

(ரொபட் அன்­டனி)

சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பேரைக்­கொண்ட மாற்று அணி­யினர் இன்று புதன்­கி­ழமை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தலை­மை­யி­லான  தமிழ்த் தேசி­யக்­கூட்ட­மைப்பை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த­வுள்­ளனர்.  

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் காலை 11.30 மணி­ய­ளவில் நடை­பெ­ற­வுள்ள இந்த சந்­திப்பில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுடன் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் முக்­கிய கூட்­ட­மைப்பின் முக்­கிய பிர­தி­நி­திகள் சிலரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். 

இதன்­போது நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலைமை மக்கள் விடு­தலை முன்­னணி முன்­வைத்­துள்ள 20 ஆவது திருத்த சட்டம் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் மந்­த­க­தியை அடைந்­துள்­ளமை, தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு,  நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

இந்த விட­யங்கள் தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி­யினர் தமது நிலைப்­பாட்டை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னிடம் தெரி­விக்­க­வுள்­ளனர். 

குறிப்­பாக  புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் மிகவும் ஆர்­வ­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன. 

எனவே இது தொடர்பில்   சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி­யி­னரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரும்  கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­துடன் அடுத்­த­கட்­டத்தை நோக்கி இதனை நகர்த்த முடி­யுமா என்­பது குறித்து ஆரா­ய­வுள்­ளனர். 

 அது­மட்­டு­மன்றி   மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள 20 ஆவது திருத்த சட்டம் தொடர்­பிலும்   இதன்­போது  கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வி­ருக்­கி­றது. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்பு தொடர்பில்  சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி முக்­கி­யஸ்தர் டிலான் பெரேரா கேச­ரிக்கு குறிப்­பி­டு­கையில்,

நாம்  அனைத்து அர­சியல் கட்­சி­க­ளையும் தொடர்ச்­சி­யாக சந்­தித்து வரு­கின்றோம். அந்த அடிப்­ப­டையில் இன்று சம்­பந்தன் தலை­மை­யி­லான  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரை சந்­தித்து பேச்சு நடத்­த­வி­ருக்­கின்றோம். இதன்­போது  புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம்   13ஆவது  திருத்த சட்டம்  மற்றும்   அர­சியல் தீர்வு  தேர்தல் முறை மாற்றம், என்­பன தொடர்பில் எமது 16 பேரின் நிலைப்­பாட்டை தெளி­வாக  சம்­பந்­த­னிடம் எடுத்­து­ரைப்போம். 

நாங்கள் 16 பேரும் தொடர்ந்து சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணைந்­துதான் செயற்­ப­டு­கின்றோம் என்­பதை அவ­ருக்கு   விளக்­கிக்­கூ­றுவோம்.  அதே­போன்று  எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னிடம் நாங்கள் கேட்­க­வேண்­டிய  சில கேள்­விகள் இருக்­கின்­றன. அதா­வது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு தமிழ் மக்­களின்  பிரச்­சி­னை­களைத்  தீர்ப்­பது முக்­கி­யமா?

 அல்லது    ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் வைத்திருப்பது முக்கியமா  என்று  நாங்கள் சம்பந்தனிடம்  கேள்வி எழுப்ப இருக்கின்றோம்.   அந்தக்கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் என்றும் எதிர்பார்க்கின்றோம். ஒரு ஆக்கப்பூர்வமான சந்திப்பு   இடம்பெறும் என்று  நாங்கள் நம்புகின்றோம் என்றார். 

http://www.virakesari.lk/article/34106

‘நிழல்கள்’ ரவி இப்போ ‘அனிபிக்ஸ்’ ரவி..! - ’அப்போ-இப்போ’ கதை சொல்கிறார் ‘நிழல்கள்’ ரவி

3 months 2 weeks ago
"மார்பிள் பிசினஸ் பண்றேன், 18 வருடமா நடிக்க வெயிட்டிங்!" - 'கடலோரக் கவிதைகள்' ராஜா ''என் உண்மையான பெயர், வெங்கடேஷ். படத்துக்காக என் பெயரை மாத்துனது பாரதிராஜா சார். அதுவும் படத்துக்கான பிரஸ் மீட் நடந்துக்கிட்டு இருக்கும்போது, 'வெங்கடேஷ் தமிழ் பெயர் மாதிரி இல்லைடா... வேற பெயர் ஏதாவது சொல்லு, வெச்சிடுவோம்!'னு கேட்டார். 'பரத்'னு நான் சொல்ல, 'இல்லைடா பரத் நல்லாயில்லை. என் பெயர்ல பாதியை வெச்சிக்கோ. ராஜாதான் இனி உன் பெயர்'னு சொல்லி, எல்லோருக்கும் என்னை ராஜாவாக அறிமுகப்படுத்தினார், பாரதிராஜா'' - தன் பெயர்க் காரணத்தோடு உரையாடலைத் தொடங்குகிறார், 'கடலோரக் கவிதைகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ராஜா. ``நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். வசதியான குடும்பத்தில் பிறந்ததால சின்ன வயசுலே இருந்து கஷ்டத்தை அவ்வளவாகப் பார்த்தது இல்லை. அப்பா பிசினஸ் பண்னார். அம்மா ஹவுஸ் ஒஃயிப். சென்னை நியூ காலேஜ்ல படிச்சேன். சீனியர் நடிகர் சுரேஷ் என் காலேஜ் மேட். ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது சினிமாவுல நடிக்க வரணும்னு ஆசைப்பட்டதே இல்லை. சினிமாவும், நானும் எப்போதும் ரொம்ப தூரமாதான் இருந்தோம். என் சொந்தக்காரங்க பல பேர் சினிமாவுல இருந்தாங்க. தெலுங்கு நடிகர் வெங்கடேஷோட அப்பா ராமநாயுடு, என் சொந்த சித்தப்பா. தெலுங்கில் நிறைய படங்களைத் தயாரித்திருக்கிறார். அவர்தான் என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தார்னு சொல்லலாம். ஏன்னா, 'நீ பார்க்க அழகாக இருக்கடா... படத்துல நடி'னு சொன்னது அவர்தான். அப்போ நான் காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போவே என்னை ஸ்டண்ட், டான்ஸ் கிளாஸ்னு எல்லாத்துலேயும் சேர்த்து விட்டார், சித்தப்பா. நானும் படிச்சுக்கிட்டே இதையெல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தேன். சித்தாப்பா என்னை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தணும்னு ஆசைப்பட்டார். நானும் தெலுங்கு படம்தான், என் முதல் படமா இருக்கும்னு நினைச்சேன். அந்த நேரத்தில் என் உறவினர் வேணு தயாரிப்பில் பாரதிராஜா சார் படம் இயக்குவதாக இருந்தது. அந்தப் படத்துக்கான கதை விவாதம் போய்க்கிட்டு இருந்த சமயத்துலதான், பாரதிராஜா சார், 'என் படத்துக்குப் புதுமுக ஹீரோ வேணும்'னு கேட்டிக்கிட்டு இருந்தார். வேணு என்னை பாரதிராஜா சார்கிட்ட அறிமுகப்படுத்தினார். அப்போ, நான் காலேஜ் முடிச்சிருந்தேன். என்னைப் பார்த்தவுடனே பாரதிராஜா, 'இவ்வளவு நாள் எங்கேடா இருந்தான்'னு சொல்லிட்டு, 'என்னடா பண்ணப்போற'னு கேட்டார். 'மும்பை போகப் போறேன் சார். சித்தாப்பா அங்கே நடிக்கிறது எப்படினு கத்துக்கச் சொல்லியிருக்கார்'னு சொன்னேன். உடனே பாரதிராஜா சார், 'நடிப்பெல்லாம் சொல்லிக்கொடுத்து வர்றது இல்ல. அது இயல்பாவே வரும். நீ இதுக்காக மும்பை வரைக்கும் போகணும்னு அவசியம் இல்ல. நீ என்கூட வந்துடு. என் படத்துல நீ நடிக்கிற. நாளைக்கு ஷூட்டிங், கரெக்ட் டைமுக்கு வந்திடு!'னு சொல்லிட்டுப் போயிட்டார். எனக்கு இரவு முழுக்கத் தூக்கமே வரலை. அடுத்தநாளே ஆந்திராவுக்குப் போயிட்டோம். ஷூட்டிங் ஆரம்பமாச்சு. அந்தப் படம்தான், 'கடலோரக் கவிதைகள்'. படத்தோட முதல் ஷெட்யூல் ஆந்திராவிலும், இரண்டாவது ஷெட்யூல் நாகர்கோவிலிலும் நடந்துச்சு. ஒரு நடிகனிடம் எப்படி நடிப்பை வாங்கணும்னு அவருக்குத் தெரியும். 'கடலோரக் கவிதைகள்' படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே நான் நடிச்ச இரண்டாவது படம் ரிலீஸ் ஆயிடுச்சு. பிறகு ரொம்ப பிஸியா நடிக்க ஆரம்பிச்சேன். என் சினிமா பயணத்தில் நல்ல இயக்குநர்கள், நல்ல நடிகர்கள்கூட வொர்க் பண்ணிட்டேன். என் வாழ்க்கையில முக்கியமான இடம் பாரதிராஜா சாருக்கு இருக்கு. அவருடைய 'கருத்தம்மா' படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துச்சு. பெண்களை மையப்படுத்திய இந்தக் கதையிலும், எனக்கான கேரக்டரை ரொம்ப ஸ்ட்ராங்கா வடிவமைச்சிருப்பார், பாரதிராஜா சார். பாலுமகேந்திரா சார் இயக்கிய 'சதிலீலாவதி' படத்துல நடிச்சேன். கமல் சார் தயாரிச்சு நடிச்சார். முதலில் இந்தப் படத்தை ஹியூமர் ஜானர்ல இல்லாம, சீரியஸா எடுக்கலாம்னுதான் பிளான் பண்ணோம். கமல் சாருக்கு கெஸ்ட் ரோல், எனக்கு நெகட்டிவ் ரோல்னு முடிவு பண்ணியிருந்தாங்க. ஆனா, கதையைக் கொஞ்சம் மாத்திட்டாங்க. கமல் சாரும், 'இதை சீரியஸான படமா இல்லாம, காமெடி படமா எடுக்கலாம்'னு சொன்னார். அதனால, 'இந்தப் படத்துல நடிக்கலை, என் கேரக்டர் வலுவா இல்லை'னு சொன்னேன். பாலுமகேந்திரா சார்தான், 'முக்கியத்துவத்தைவிட, அனுபவம் ரொம்ப முக்கியம். நீ பண்ணு'னு சொல்லிட்டார். அவர் பேச்சை மீறினா, நல்லா இருக்குமா.. நடிக்க ஒப்புக்கிட்டேன். வைரமுத்து சார் சினிமாவுக்காக எழுதுன முதல் பாட்டு இடம்பெற்ற படமும், நான் நடிச்ச 'கேப்டன் மகள்' படம்தான். குஷ்பூக்காக 'எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று' பாட்டு எழுதியிருந்தார், வைரமுத்து. இந்தப் பாட்டு இப்போவரை ஃபேவரைட். ரஜினி சார்கூட 'மாப்பிள்ளை'யில சேர்ந்து நடிச்சேன். பிறகு, 'அருணாச்சலம்' படத்திலும் நடிச்சேன். விக்ரமன் சாருடைய முதல் படம் 'புது வசந்தம்'ல நாலு ஹீரோக்கள்ல ஒருத்தரா நடிச்சேன். பிஸியா நடிக்கும்போது கல்யாணம் நடந்தது. 1993-ம் வருடத்துல என் கல்யாணம் நடந்தது. எங்களுக்கு இப்போ ஒரு பையன், பொண்ணு இருக்காங்க. அழகான குடும்பம், வாழ்க்கை சந்தோஷமா போய்க்கிட்டு இருக்கு. வித்தியாசமான ரோலில் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அந்தமாதிரி கேரக்டர்ஸ் எதுவும் வராததுனாலதான் சினிமாவுக்கு கொஞ்சம் பிரேக் கொடுத்துட்டேன். சினிமாவுல நடிச்சு 18 வருடம் ஆச்சு. ஆனா, சினிமாவுல இருக்கிற நண்பர்கள்கூட பேசிக்கிட்டுதான் இருக்கேன். இப்போவும் நடிக்க வாய்ப்புகள் வருது. வித்தியாசமான கதைனும் சொல்றாங்க. என் மனசுக்கு அது வித்தியாசமான ரோலா படமாட்டேங்குது. வரும்போது வரட்டும்னு காத்திருக்கேன். ஏன்னா, மார்பிள் பிசினஸ்ல நான் பிஸி. எந்தக் குறையும் இல்லாத அந்த பிசினஸ் நல்லாப் போகுது!" என்கிறார், ராஜா. https://cinema.vikatan.com/tamil-cinema/news/125045-kadaloora-kavithaigal-raja-in-appo-ippo-series-10.html "அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்!" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11 'ஷேவ் பண்ணாத தாடியுடன் கையில் மாலையை வைத்துக்கொண்டு ஶ்ரீவித்யாவைப் பார்க்கக் காத்திருந்தபடி, தமிழ் சினிமாவுக்குள் ரஜினி அடியெடுத்து வைத்த 'அபூர்வ ராகங்கள்' க்ளைமாக்ஸை யாரும் மறக்கமுடியாது. ஶ்ரீவித்யாவின் கச்சேரி நடக்கும் அந்த அரங்கத்தின் வாசலில் வந்து நின்ற ரஜினி, ஒரு சிறுமியை அழைத்து, அந்தச் சிறுமி கையில் தன்னுடைய மன்னிப்புக் கடிதத்தைக் கொடுத்து, ஶ்ரீவித்யாவிடம் கொடுக்கச் சொல்வார். அந்தச் சிறுமிதான், இந்தவார 'அப்போ இப்போ' நாயகி. பின்னாளில் 'ஊர்க்காவலன்', 'சேரன் பாண்டியன்', 'என் தங்கச்சி படிச்சவ' போன்ற பல படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்திருந்த சித்ராதான் அவர். தமிழில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து 'நல்லெண்ணெய்' சித்ரா எனவும் அறியப்பட்ட இவருக்கும் 'அபூர்வ ராகங்கள்'தான் அறிமுகப்படம். 'ரஜினியுடன் அறிமுகமானவங்களா நீங்க?' என்றால், 'அட ஆமால்ல, நானே இதை நினைச்சுப் பார்த்ததில்லையே!' எனச் சிரித்துவிட்டு, பேசத் தொடங்குகிறார். `` `அபூர்வ ராகங்கள்' சான்ஸ் கிடைச்சதே ரொம்ப சுவாரஸ்யமான கதை. சென்னையில ஐ.சி.எஃப்-ல அப்பாவுக்கு வேலை. வீடும் கம்பெனியும் பக்கத்துலேயே இருந்துச்சு. என் அத்தை வீடு வடபழனி. கோடை விடுமுறைக்கு அங்கே போறது வழக்கம். பக்கத்துல ஏவி.எம்-ல ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கக் கூட்டிக்கிட்டு போவாங்க. நடிகர் நடிகைகள் பெரிய பெரிய கார்ல வந்து போறதைப் பார்த்தாலே பிரம்மிப்பா இருக்கும். ஆனா, சினிமாவுக்கும் எங்க குடும்பத்துக்கும் தொடர்பில்லை. ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துப் பழகி, எங்கே ஷூட்டிங் நடந்தாலும் பார்க்கணும்கிற ஆசை வந்திடுச்சு. எனக்கு மட்டுமில்ல, அப்பாவுக்கும். அதனால, ஷூட்டிங் நடக்குற இடங்களுக்கு நானும் அப்பாவும் போயிடுவோம். அப்படித்தான் ஒருநாள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போயிட்டுத் திரும்பிட்டிருந்தோம். வழியில 'நாரத கான சபா'வுல 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். கூட்டத்தை வேடிக்கை பார்க்க ஒதுங்கினதுல, அப்பா ஒரு பக்கமாகவும், நான் ஒரு பக்கமாவும் போயிட்டோம். அப்போ, எனக்கு ஆறு வயசுதான். பின்னாடி இருந்து கூட்டம் என்னை நெருக்கித் தள்ள, தடுமாறி கேமராவுக்கு முன்னாடி போய் விழுந்துட்டேன். உடனே, 'கட்... கட்'னு சத்தம். ஓடிவந்து சிலர் என்னைத் தூக்கி விட்டாங்க. சிலர் திட்டுனாங்க. திரும்பிப் பார்த்தா, அப்பாவையும் காணோமா... அழுதுட்டேன். படத்தோட டைரக்டர் கே.பாலச்சந்தர் சார் என் பக்கத்துல வந்து, 'சரி பாப்பா அழாத. யார்கூட வந்தே'னு கேட்டார். அதுக்குள்ள அப்பா என்கிட்ட வந்துட, அவருக்கும் வசவு. 'தெரியாம நடந்திடுச்சுங்க'னு ஸாரி கேட்டுட்டு, அப்பா என்னைக் கூட்டிட்டுக் கிளம்பிட்டார். கொஞ்சதூரம் போயிருப்போம். ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து ஒருத்தர் ஓடி வர்றார். 'டைரக்டர் உங்களைக் கூப்பிடுறார்'னு சொல்றார். பயந்துக்கிட்டே போனோம். 'எப்படியோ ஃபீல்டுக்குள்ள வந்து விழுந்துட்ட. பட்டுப் பாவாடையெல்லாம் கட்டியிருக்க. இந்தப் படத்துல நடிக்கிறியா'னு கேட்டார், கேபி சார். என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டிருக்க, 'ஒன்னுமில்ல, இந்த அங்கிள் தர்ற ஒரு பேப்பரை அந்த ஆன்ட்டிகிட்ட போய்க் கொடுக்கணும்... அவ்ளோதான்!'னு சொன்னார். ரஜினிகிட்ட இருந்து கடிதத்தை வாங்கிட்டுப்போய் மேடையில பாடிக்கிட்டு இருக்கிற ஶ்ரீவித்யாகிட்ட கொடுக்கணும். சந்தோஷமா வாங்கிக் கொடுத்துட்டுக் கிளம்பினேன். 'லன்ச் சாப்பிட்டுப் போங்க'னு சாப்பாடு போட்டு அனுப்பினாங்க. படத்துல அந்தக் காட்சி அப்படியே வர, தமிழ் சினிமாவுல நானும் என்ட்ரி ஆகிட்டேன். அப்பாகிட்ட தொடர்புலேயே இருக்கச் சொன்ன கே.பி சார் அடுத்து, 'மூன்று முடிச்சு' படத்துக்காகக் கூப்பிட்டார். ஆனா, ஸ்கூல்ல லீவு தராததுனால, அந்தப் படத்துல நடிக்க முடியலை. ஆனாலும் அடுத்த கொஞ்சநாள்ல 'கவிதாலயா' ரெகமன்டேஷன்லேயே 'அவள் அப்படித்தான்' வாய்ப்பு வந்தது. படிப்பையும் நடிப்பையும் பேலன்ஸ் பண்ணிப் போயிட்டிருந்தேன். அடுத்து 'ராஜ பார்வை' வாய்ப்பு. கண் தெரியாத குழந்தையா நடிச்சேன். படத்தோட 100-வது நாள் விழாவுல கலந்துக்கிட்ட எம்.ஜி.ஆர்., 'பார்வையற்றோர் பள்ளியில இருந்து வந்து நடிச்சிருந்த பாப்பா ரொம்ப நல்லா நடிச்சிருந்தது'னு பாராட்டினார். அதாவது, என்னைப் 'பார்வையற்ற குழந்தை'னே நினைச்சிருக்கார். பிறகு, எனக்குப் பார்வை தெரியும்னு சொன்னது, ஆச்சரியப்பட்டுப் போனார். தமிழ்ல சில படங்கள்ல தலைகாட்டத் தொடங்கினதும், மலையாள வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனா, அங்கே முதல் படமே ஹீரோயின் ரோல். 'அட்ட கலசம்'ங்கிற அந்தப் படத்தின் ஹீரோ மோகன்லால். அப்போ நான் பத்தாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன். சினிமாவுல நடிக்கணும்னா, ஃபோட்டோஷூட் பண்ணி வைக்கணும்னுகூட தெரியாத வயசு. நிறைய பேர்கிட்ட ஸ்டாம்ப் சைஸ் போட்டோவைக் கொடுத்துவிட்டிருக்கார் அப்பா. மோகன்லால் படத்துல கமிட் ஆனப்போ, ஒரு விஷயம் நடந்திச்சு. கமிட் ஆகுறதுக்கு முதல்நாள் திடீர்னு புரொடியூசர் வந்து, என்னோட ஜாதகத்தைக் கேட்டார். 'இது என்ன புதுசா இருக்கு'னு நினைச்சோம். 'இல்ல, எனக்கு ஜாதகம்மேல நம்பிக்கை, அதனால கொடுங்க'னு சொன்னார், கொடுத்தோம். வாங்கிப் பார்த்த அடுத்த நொடி, படத்துல கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க. ஏன்னா, ஹீரோ மோகன்லால் பிறந்தநாளும் என் பிறந்தநாளும் ஒரே தினம். மே 21. இந்த ஒரு விஷயம் போதும்னு சொல்லிட்டார். படம் கோல்டன் ஜூப்ளி. பிறகு, மம்முட்டிகூட ஒரு படம் பண்ணிட்டேன். பிறகு, மறுபடியும் தமிழுக்கு வந்தேன். கே.பி.சார் படம்தான். 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தை கன்னடத்துல எடுத்தார். எந்த ஶ்ரீவித்யாகிட்ட லெட்டரைக் கொண்டுபோய் கொடுத்து, நான் சினிமாவுக்கு அறிமுகமானேனோ, அதே ஶ்ரீவித்யா தமிழ்ல பண்ணின கேரக்டரை நான் கன்னடத்துல பண்னேன். பிளஸ் டூ பரீட்சை முடிஞ்சது. அதுல கொஞ்சம் வரிசையா படங்கள் அமைஞ்சது. 'ஊர்க்காவலன்', 'நினைவுச் சின்னம்'னு தமிழ்ல ஒரு பக்கம் நடிச்சுக்கிட்டே, தெலுங்கு பக்கமும் போனேன். மலையாளம் போலவே அங்கேயும் ஹீரோயின் கேரக்டர். 'மத்த மொழிகள்ல ஹீரோயினா நடிச்ச மாதிரி, தமிழ்ல ஏன் பண்ணலை?'னு கேட்கலாம். அதென்னவோ தெரியலை, இங்கே அந்தமாதிரி அமையலைங்கிறதுதான் உண்மை. ஆனா, கதையில எனக்கு முக்கியத்துவம் இருந்தது. அதுவும் ஒருவகையில நல்லதுனு நினைச்சுக்கிட்டேன். ஏன்னா, கட்டிப் பிடிக்கற காட்சிகளுக்கெல்லாம் தயங்கின குடும்பம்தான் எங்களோடது. ஏதோ ஒரு சின்ன சம்பவம் மூலமா சினிமாவுக்கு வந்து, தென்னிந்திய மொழிகள்ல 200 படங்கள் வரைக்கும் நடிச்ச பிறகு, என்னோட அப்பாவோட உடல்நலக் குறைவும் என்னோட கல்யாணமும் ஒருசேர வந்தது. வேற வழியில்லை. அப்பா பார்த்து கைபிடிச்சுக் கொடுத்தவர்தான் என்னோட கணவர் விஜயராகவன், மகள் ஸ்ருதி. அவளுக்கு ஒரு வயசு ஆனப்போ ஒரு மலையாளப் பட வாய்ப்பு வந்திச்சு. 'பண்ணலாமே'னு கோழிக்கோடு கிளம்பிப் போனேன். மறுநாளே குழந்தைக்கு உடம்பு சரியில்லாம போக, பெரிய கும்பிடு போட்டுட்டுக் கிளம்பி வந்துட்டேன். அந்தநாள்ல இருந்து சினிமா வாய்ப்புகளை ஏத்துக்கலை. நடிகை சரிதா ஒருமுறை எனக்கு அட்வைஸ் தந்தாங்க. 'பிள்ளைங்களுக்குப் பத்து வயசு ஆகுறவரையாவது பக்கத்துலயே இருக்கணும்'னு அவங்க சொன்னது, எனக்கும் சரினு பட்டுச்சு. என் மகள் இப்போ பத்தாவது படிக்கிறா. இதுநாள் வரை அவளோடேயே என் நேரத்தைச் செலவு செய்ய முடிஞ்சதைப் பெரிய வரமாகவே நினைக்கிறேன்'' என்றவரிடம், இன்றைய ஒருநாள் எப்படிக் கழிகிறது? என்றோம். ``மகளை ஸ்கூல் கொண்டுபோய் விடுறது, வீட்டுல சமையல்... இப்படிப் பாதிநேரம் போகும். கணவர் ஐஸ்க்ரீம் ஃபேக்டரி வெச்சிருக்கார். நேரம் கிடைச்சா அங்க போய் அவருக்கு உதவுவேன். மதிய நேரங்கள்ல நான் நடிச்ச பழைய படங்கள் டி.வியில் ஒளிபரப்பானா, பார்ப்பேன்" என்றவர், கொசுறாக இரண்டு விஷயங்களைச் சொன்னார். முதலாவது : மறுபடியும் நடிக்கப் போகிறாராம். 'மலையாளத்துல கமிட் ஆகிட்டேன். தமிழ்லேயும் வாய்ப்பு வந்தா, இனி பண்ணலாம்னு இருக்கேன்! இரண்டாவது : இவர் நடித்த நல்லெண்ணெய் விளம்பரத்துக்காகவே இன்றும் அந்த நல்லெண்ணெய் தயாரிப்பாளர்கள் தீபாவளிதோறும் நல்லெண்ணெய் பாக்கெட்டுகளை இவருக்கு அனுப்பி வருகிறார்களாம். https://cinema.vikatan.com/tamil-cinema/125616-cheran-pandian-chitra-in-appo-ippo-series-11.html "அப்போ ஆக்டிங், இப்போ ஆடிட்டிங், சீக்கிரமே ஒரு யூ-டியூப் சேனல்!" - 'அப்போ இப்போ' கதை சொல்லும் ரேகா : பகுதி 12 ``என் சொந்த ஊர் கேரளாவில் இருக்கிற ஆழப்புலா. அப்பாவுக்கு சென்ட்ரல் கவர்மென்ட் வேலை. நான் குட்டிப் பொண்ணா இருக்கும்போதே, அப்பாவை தமிழ்நாட்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்க. ஊட்டியில்தான் படிச்சு வளர்ந்தேன். அப்போ, அப்பா எங்களை சினிமா பார்க்க அனுமதிக்கவே மாட்டார். அப்படி இருந்த நான், சினிமாவுல கிட்டத்தட்ட 300 படங்களுக்கும் மேல நடிச்சுட்டேன். பிரைவஸி பாதிக்கும்ங்கிறதால நான் எப்பவுமே ஃபேமிலியைப் பற்றி மீடியாக்கள்கிட்ட அவ்வளவா பேசமாட்டேன். ஆனாலும், நான் சினிமாவுக்குள்ள வந்த அந்தச் சுவாரஸ்யமான கதையை உங்களுக்குச் சொல்றேன் வாங்க..." - உற்சாகமாகத் தனது `அப்போ இப்போ’ கதையைச் சொல்லத் தொடங்குகிறார், `கடலோரக் கவிதைகள்' ரேகா. இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்! `தெற்கத்திக் கள்ளன்' பட இயக்குநர் கலைமணி சார் ஒருமுறை என்னை ஊட்டியில் யதேச்சையா பார்த்துட்டு, `பார்க்க சாவித்திரி மாதிரி இருக்க...'னு சொல்லி, அவரோட படத்துல நடிக்கக் கூப்பிட்டார். `சினிமா பார்க்கிறதையே குற்றம்னு சொல்ற எங்க அப்பா சினிமாவுல நடிக்கிறதுக்கெல்லாம் அனுமதிக்கவே மாட்டார்’னு சொல்லிட்டுப் போயிட்டேன். பிறகு, சிலநாள் கழித்து கலைமணி சாரே என்னைத் தேடிவந்து, ``பாரதிராஜா சார் புதுப்படம் ஒண்ணு எடுக்கிறார். ஹீரோயினுக்கு டீச்சர் கேரக்டர். அதுவும் கிறிஸ்தவப் பெண்ணா இருக்கணும். அந்தக் கேரக்டருக்கு உங்கப்பா எதுவும் சொல்லமாட்டார்'னு சொல்லி, அவரே என் அப்பாகிட்ட பேசினார். எங்க அப்பாவும் ஆடிஷனுக்குப் போக சம்மதிச்சார் என்பதுதான், இதில் பெரிய ஆச்சர்யம். பிறகென்ன... நானும் அம்மாவும் ஆடிஷனுக்காக சென்னையில இருந்த பாரதிராஜா சார் ஆபீஸுக்குப் போனோம். அப்போ எனக்கு 15 வயதுதான். பத்தாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன். பேன்ட், ஷர்ட் போட்டுப் போயிருந்தேன். `இந்தக் காட்டன் சேலையைக் கட்டிக்கோ; பெரிய பொட்டு வெச்சுக்கோ; மேக்கப் எதுவும் போடாமா, இந்தக் கண்ணாடியைப் போட்டுகிட்டு வா’னு பாரதிராஜா சார் சொன்னார். அப்படியே வந்து நின்னேன். சினிமா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதனால, மனசுக்குள்ள பயம் எதுவும் இல்லை. ஆனால், அந்தப் பெரிய கண்ணாடிதான் கொஞ்சம் காமெடியா இருந்துச்சு. பிறகு அன்னைக்கே பாரதிராஜா சார், `கடலோரக் கவிதைகள்’ பட ஜெனிஃபர் கேரக்டருக்கு என்னைத் தேர்ந்தெடுத்துட்டார். அதுவரை நான் பாரதிராஜா சார் படங்கள் எதையும் பார்த்ததே இல்லை என்பதுதான் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விஷயம். `அட்வான்ஸை பிடிம்மா’னு உடனே 11 ரூபாய் பணத்தைக் கொடுத்த பாரதிராஜா சார், `இங்க பாரு, சினிமாவுல நடிக்கிறேன்னு யாருக்கிட்டேயும் சொல்லக் கூடாது'னு சொல்லி அனுப்பிவெச்சார். பிறகு, மூன்று நாள் கழிச்சு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிக்கிட்டு போனார். அங்கே போனா, சத்யராஜ் சாரை என் முன்னாடி நிற்க வெச்சாங்க. அவரைப் பார்த்ததுமே, `ஐய்யோ... இவ்வளவு பெரிய ஆள்கூடவா நடிக்கப்போறோம்’னு நினைச்சு பயந்துட்டேன். பிறகு சத்யராஜ் சாரின் ஹைட், வெயிட்டுக்கு ஓரளவுக்காவது பொருத்தமா தெரியணும்னு நிறைய முட்டையும் சத்தான சாப்பாடும் கொடுத்து சாப்பிட வெச்சாங்க. வெரைட்டியான காட்டன் புடவைகளைக் கொடுத்து கட்டச் சொன்னாங்க. இதுக்கிடையில் ஷூட்டிங் ஸ்பாட்ல சின்னப் பசங்ககூட சேர்ந்து கடல்ல நண்டு பிடிச்சுக்கிட்டு விளையாடிக்கிட்டு இருப்பேன். பாரதிராஜா சார் அதைப் பார்த்துட்டு, `என் படத்தில் எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்திருக்கேன். நீ என்னடான்னா சின்னப் பசங்ககூட சேர்ந்துகிட்டு நண்டு பிடிச்சுக்கிட்டு இருக்க, இங்க வந்து உட்காரு... டேய், போய் அந்தப் பொண்ணை இழுத்துக்கிட்டு வாங்கடா'னு திட்டுவார். சின்னப்பிள்ளை மாதிரி நான் நடந்துகிட்ட அந்த ஷூட்டிங் ஸ்பாட் நாள்களையெல்லாம் நினைச்சுப் பார்த்தா இப்போவும் சிரிப்புதான் வருது. ஷூட்டிங் முடிச்சுட்டு எங்க ஊரான ஊட்டிக்குப் போயிட்டேன். பிறகு சில நாள்கள்லேயே, `கவிதாலயா ஆபீஸ்ல இருந்து பேசுறோம். பாலசந்தர் சார் டைரக்‌ஷனில் நடிக்கணும்'னு சொல்லி ஒரு போன் வந்தது. உண்மையைச் சொன்னா, அப்போ எனக்குப் பாலசந்தர் சார் யாருன்னே தெரியாது. `கடலோரக் கவிதைகள்' படத்தோட போட்டோ ஆனந்த விகடனில் அட்டைப் படமா வந்திருந்துச்சு. அதைப் பார்த்துட்டுதான் பாலசந்தர் சார், `புன்னகை மன்னன்' படத்துல நடிக்கக் கூப்பிட்டிருக்கார்னு தெரிஞ்சது. `நான் கமல் சாருக்கு ஹீரோயினா?’னு உள்ளுக்குள்ள பயம். அந்தப் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடி, `எப்படி நடிக்கணும்’னு வொர்க்ஷாப் நடத்தினாங்க. அங்கே கமல் சார், பாலசந்தர் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்த சுரேஷ் கிருஷ்ணா, வஸந்த் சார்னு பலரும் இருந்தாங்க. எல்லோரும் என்னைத் தங்கத் தட்டில் வெச்சுத் தாலாட்டாத குறையா தாங்குவாங்க. பாலசந்தர் சார் அடிக்கடி, `நல்லா கண்ணைத் திறந்து நடி'னு சொல்லி, ஒவ்வொரு காட்சியையும் நடிச்சுக் காட்டுவார். அதில் வந்த `என்ன சத்தம் இந்த நேரம்’ பாட்டோட ஷூட்டிங் டைம்ல திடீர்னு கமல் சார் எனக்கு முத்தம் கொடுப்பார். அந்தக் காட்சி ஸ்கிரிப்ட்ல கிடையாது. அப்படியொரு காட்சி எடுக்கப்போறாங்கனு எனக்குத் தெரியாது. அது, கமல் சாரும் பாலசந்தர் சாரும் பேசி முடிவு பண்ண விஷயம். எனக்கே தெரியாமத்தான் அந்த ஷாட்டை திடீர்னு ஷூட் பண்ணாங்க. நான் உடனே பாலு சார்கிட்ட, `இப்படி ஒரு சீன்ல நடிக்க எங்க அப்பா ஒப்புக்கமாட்டார்'னு சொன்னேன். சுரேஷ் கிருஷ்ணா சாரும் வஸந்த் சாரும், `இதை சென்சாரே ஒப்புக்கமாட்டாங்கம்மா’னு சொன்னாங்க. உடனே நான், `சென்சார்னா என்ன சார்?’னு கேட்டது இப்போவும் ஞாபகம் இருக்கு. அப்படிக் கேட்டதும், எல்லோரும் சிரிச்சுட்டாங்க. என் மூணாவது படம் `நம்ம ஊரு நல்ல ஊரு’. நாயகன், ராமராஜன் சார். அந்தப் படத்துல நான் நடிக்கப்போறதைத் தெரிஞ்சுக்கிட்டு பாரதிராஜா சார், `உன்னை எவ்வளவு பெரிய ஹீரோயினா கொண்டு வந்திருக்கிறேன். நீ என்னடானா யாரோ புதுமுக ஹீரோகூட நடிக்கிறியாம்ல'னு திட்டினார். ஆனால், அந்தப் படம் ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட். பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. அதைத் தொடர்ந்து நிறைய படங்கள், நிறைய கேரக்டர்கள். `பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படம் பண்ணப்போ மலையாள சினிமாவுல இருந்து நடிக்கக் கூப்பிட்டாங்க. `ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’னு முதல் படமே இயக்குநர் ஃபாசில் சாரின் தயாரிப்பு. அப்போ எனக்காக இயக்குநர் பாசில் சாரே செட்டுக்கு வந்திருந்தார். அப்படி மலையாளத்தில் நடித்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. கடவுள் புண்ணியத்தில் நிறைய நல்ல படங்கள், நல்ல கதாபாத்திரங்கள், பெரிய இயக்குநர்கள், பெரிய ஹீரோக்களுடைய படங்களில் நடிச்சேன். மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, விஷ்ணுவர்தன்னு மற்ற மொழிகளின் டாப் ஹீரோ படங்களில் நடிச்சுட்டேன். ஆனா, ரஜினி சார்கூட மட்டும்தான் நடிக்க முடியலை. ஒருமுறை அந்த வாய்ப்பும் வந்தது, கால்ஷீட் பிரச்னை காரணமா நடிக்க முடியாம போச்சு. ஆனா, ரஜினி சார்கூட எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வு உண்டு. காவிரி பிரச்னைக்காக ரஜினி சார் உண்ணாவிரதம் இருந்தப்போ, ஒரு பொண்ணு அவருக்கு ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடிச்சு வெச்சா... அடுத்தநாள் காலையில அந்தப் புகைப்படம் எல்லா நாளிதழ்களிலும் வந்திருந்தது. அது என் பொண்ணுதான்! எனக்காக ஆஷா போஸ்லே பாடின, `செண்பகமே... செண்பகமே' பாட்டு. பிறகு டிவியில் `கனா காணும் காலங்கள்' தொடர். பல மொழிப் படங்கள், பாடல்கள், சீரியல்கள்னு எனக்கு எல்லாமே அமைந்தன. முக்கியமா, `கனா காணும் காலங்கள்’ சீரியல் பார்த்துட்டு, `இந்த மாதிரியான அம்மாதான் வேண்டும்’னு பலரும் பேசுவாங்க. அந்தத் தொடருக்கான ஸ்கிரிப்ட் எழுதும்போதே, நான், ரமணன் சார் எல்லாரும் `இப்படி இருக்கட்டும், அப்படி இருக்கட்டும், இப்படி இருந்தாதான் பசங்களுக்குப் பிடிக்கும்!'னு பார்த்துப் பார்த்து செதுக்குவோம். நான் ஹீரோயினா உச்சத்தில் இருந்த காலத்திலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சினிமாவுல நடிக்க வந்ததுக்குப் பிறகு படிப்பைத் தொடர முடியாம பேச்சு. ஆனா, என் கணவர் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தார். எங்களுக்கு ஒரே பொண்ணு. அவளும் எனக்கு நிறைய கத்துக்கொடுத்தா. இப்போ என் கணவரோட எல்லா ஆடிட்டிங் வேலைகளையும் நான்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு சில வருடங்கள் நடிக்காம இருந்தேன். ஒரு பொது நிகழ்ச்சியில் என்னையும் என் கணவரையும் பார்த்த ரஜினி சார், `அப்படியே இருக்காங்களே. திரும்பவும் நடிக்கச் சொல்லலாமே. யோசிங்க'னு என் கணவரிடம் சொன்னார். அப்புறம் நானும், கணவரும் பேசி, நான் மீண்டும் நடிக்கிற முடிவை எடுத்தோம். நான் திரும்ப நடிக்க வந்ததுக்கு ரஜினி சார் மாதிரி ராதிகா மேடமும் நிறைய நம்பிக்கை கொடுத்தாங்க. சினிமாவுல நடிச்சுக்கிட்டே இருந்தாலும், வீட்டையும் குடும்பத்தையும் நல்லா பார்த்துக்குவேன். படத்துக்கான அட்வான்ஸ் பணம் கைக்கு வந்ததுமே, நானும் பொண்ணும் ஷாப்பிங் கெளம்பிடுவோம். வாழ்க்கையை பாசிட்டிவ்வா, ரிலாக்ஸா அனுபவிக்கணும்னு நினைப்பேன். காலையில் எழுந்ததும் யோகா பண்ணுவேன். சத்தான உணவுகளைச் சாப்பிட்டு, ஹெல்த்தியா இருக்கணும்னு நினைப்பேன். அதேசமயம், நல்ல கேரக்டர்ஸ் கிடைச்சாதான் நடிப்பேன். ஆனா, பலரும் ஒரேமாதிரியான கேரக்டர்களுக்கே என்னைக் கூப்பிடுறாங்க. அப்படிப் பல வாய்ப்புகளைத் தவிர்த்திருக்கேன். ஒரு யூ-டியூப் சேனல் ஆரம்பிச்சு, பெண்களுக்கான பல விஷயங்களைப் பதிவு பண்ணனும்னு ஆசை இருக்கு, சீக்கிரமே அதைப் பண்ணப்போறேன்!" வாழ்த்துகள் ரேகா! https://cinema.vikatan.com/others/cinema-serials/126264-actress-rekha-in-appo-ippo-series-episode-12.html

திருகோணமலை நீதிமன்றை சென்றடைந்தார் நீதிபதி மா.இளஞ்செழியன்.

3 months 2 weeks ago
திருகோணமலை நீதிமன்றை சென்றடைந்தார் நீதிபதி மா.இளஞ்செழியன். சற்றுமுன் திருகோணமலை நீதிமன்றத்தை சென்றடைந்தார் நீதிபதி மா.இளஞ்செழியன். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்றத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது “கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்து விட்டது” என்ற கோஷத்துடன் நீதிபதி வரவேற்கப்பட்டார். http://newuthayan.com/story/10/திருகோணமலை-நீதிமன்றை-சென்றடைந்தார்-நீதிபதி-மா-இளஞ்செழியன்.html

திருகோணமலை நீதிமன்றை சென்றடைந்தார் நீதிபதி மா.இளஞ்செழியன்.

3 months 2 weeks ago
திருகோணமலை நீதிமன்றை சென்றடைந்தார் நீதிபதி மா.இளஞ்செழியன்.

 

33939740_2177214305845038_60039075916404

 
 

சற்றுமுன் திருகோணமலை நீதிமன்றத்தை சென்றடைந்தார் நீதிபதி மா.இளஞ்செழியன்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்றத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது “கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்து விட்டது” என்ற கோஷத்துடன் நீதிபதி வரவேற்கப்பட்டார்.

http://newuthayan.com/story/10/திருகோணமலை-நீதிமன்றை-சென்றடைந்தார்-நீதிபதி-மா-இளஞ்செழியன்.html

ஒப்­ப­ரே­சன் லிப­ரே­ச­னில் – இறந்­தோ­ருக்கு அஞ்­சலி!!

3 months 2 weeks ago
ஒப்­ப­ரே­சன் லிப­ரே­ச­னில் – இறந்­தோ­ருக்கு அஞ்­சலி!! 1987 ஆம் ஆண்டு மே மாதம் 29,30,31 ஆம் திக­தி­க­ளில் வட­ம­ராட்சி பிர­தே­சத்­தில் நடை­பெற்ற ஒப்­ப­ரே­சன் லிப­ரே­சன் இரா­ணுவ நட­வ­டிக்­கை­யின் போது இரா­ணு­வத்­தால் சுட்­டுக் கொல்­லப்­பட்ட, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் 3 1 ஆம் ஆண்டு நினை­வேந்­தல் நேற்று வட­ம­ராட்சி, திக்­கம் கலா­சார மண்­ட­பத்­தில் கடைப்­பி­டிக்­கப்ட்­டது. 1987 ஆம் ஆண்டு மே மாதம் 29,30,31,ஆம் திக­தி­க­ளில் இரா­ணு­வம் வட­ம­ராட்­சியை மீட்க ஒபே­ரே­ஷன் லிபி­பே­ர­சன் என்ற பெய­ரில் படை நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டது. நெல்­லி­யடி மகா­வித்­தி­யா­ல­யத்­தில் பெரும் இரா­ணுவ முகாமை அமைத்து அங்­கி­ருந்து படை நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இந்த நட­வ­டிக்­கை­யால் 1987 ஆம் ஆண்டு மே மாதம் 29,30,31,ஆம் திக­தி­க­ளில் வட­ம­ராட்சி, அல்­வாய், மாலு சந்தி, திக்­கம் உள்­ளிட்ட பல பகு­தி­க­ளில் இரா­ணு­வம் மேற்­கொண்ட செல் வீச்­சுத் தாக்­கு­த­லில் பலர் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர். பலர் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர். இளை­ஞர்­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­டார்­கள். அந்­தச் சம்­ப­வம் நடந்­தேறி நேற்று 31 ஆண்­டு­கள் நிறை­வ­டைந்­தது. படு­கொலை செய்­யப்­பட்ட அப்­பா­விப் பொது­மக்­களை நினை கூர்ந்தே நேற்று அஞ்­சலி நிகழ்வு இடம்­பெற்­றது. 29.05.1987 ஆம் ஆண்டு அல்­வாய் முத்­து­மாரி அம்­மன் ஆல­யத்­தில் தஞ்­சம் புகுந்த வேளை இலங்கை இரா­ணு­வத்­தின் ஷெல் தாக்­கு­த­லில் கொல்­லப்­பட்ட அல்­வாய்க் கிராம மக்­கள் அந்­தக் கிரா­மத்­த­வர்­க­ளால் நினைவு கூறப்­பட்­ட­னர். திக்­கம் கிரா­மத்­தில் படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களை திக்­கம் கிராம மக்­கள் நேற்று அஞ்­ச­லித்­த­னர். http://newuthayan.com/story/09/ஒப்­ப­ரே­சன்-லிப­ரே­ச­னில்-இறந்­தோ­ருக்கு-அஞ்­சலி.html

ஒப்­ப­ரே­சன் லிப­ரே­ச­னில் – இறந்­தோ­ருக்கு அஞ்­சலி!!

3 months 2 weeks ago
ஒப்­ப­ரே­சன் லிப­ரே­ச­னில் – இறந்­தோ­ருக்கு அஞ்­சலி!! FB_IMG_1527609539806-750x430.jpg
 
 

1987 ஆம் ஆண்டு மே மாதம் 29,30,31 ஆம் திக­தி­க­ளில் வட­ம­ராட்சி பிர­தே­சத்­தில் நடை­பெற்ற ஒப்­ப­ரே­சன் லிப­ரே­சன் இரா­ணுவ நட­வ­டிக்­கை­யின் போது இரா­ணு­வத்­தால் சுட்­டுக் கொல்­லப்­பட்ட, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் 3 1 ஆம் ஆண்டு நினை­வேந்­தல் நேற்று வட­ம­ராட்சி, திக்­கம் கலா­சார மண்­ட­பத்­தில் கடைப்­பி­டிக்­கப்ட்­டது.

1987 ஆம் ஆண்டு மே மாதம் 29,30,31,ஆம் திக­தி­க­ளில் இரா­ணு­வம் வட­ம­ராட்­சியை மீட்க ஒபே­ரே­ஷன் லிபி­பே­ர­சன் என்ற பெய­ரில் படை நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டது. நெல்­லி­யடி மகா­வித்­தி­யா­ல­யத்­தில் பெரும் இரா­ணுவ முகாமை அமைத்து அங்­கி­ருந்து படை நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இந்த நட­வ­டிக்­கை­யால் 1987 ஆம் ஆண்டு மே மாதம் 29,30,31,ஆம் திக­தி­க­ளில் வட­ம­ராட்சி, அல்­வாய், மாலு சந்தி, திக்­கம் உள்­ளிட்ட பல பகு­தி­க­ளில் இரா­ணு­வம் மேற்­கொண்ட செல் வீச்­சுத் தாக்­கு­த­லில் பலர் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர். பலர் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர்.

 

இளை­ஞர்­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­டார்­கள். அந்­தச் சம்­ப­வம் நடந்­தேறி நேற்று 31 ஆண்­டு­கள் நிறை­வ­டைந்­தது.

படு­கொலை செய்­யப்­பட்ட அப்­பா­விப் பொது­மக்­களை நினை கூர்ந்தே நேற்று அஞ்­சலி நிகழ்வு இடம்­பெற்­றது.

29.05.1987 ஆம் ஆண்டு அல்­வாய் முத்­து­மாரி அம்­மன் ஆல­யத்­தில் தஞ்­சம் புகுந்த வேளை இலங்கை இரா­ணு­வத்­தின் ஷெல் தாக்­கு­த­லில் கொல்­லப்­பட்ட அல்­வாய்க் கிராம மக்­கள் அந்­தக் கிரா­மத்­த­வர்­க­ளால் நினைவு கூறப்­பட்­ட­னர். திக்­கம் கிரா­மத்­தில் படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களை திக்­கம் கிராம மக்­கள் நேற்று அஞ்­ச­லித்­த­னர்.

http://newuthayan.com/story/09/ஒப்­ப­ரே­சன்-லிப­ரே­ச­னில்-இறந்­தோ­ருக்கு-அஞ்­சலி.html