நாகர்கோவில் படுகொலை

1995-09-22 அன்று 39 பள்ளிச்சிறார்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்

Aggregator

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!

3 months 2 weeks ago
48. லக்ஷ்மி கடாட்சம் எனக்கு அரசியல் தெரியாது. எனக்கு எதுதான் தெரியும்? தெரியாதவற்றின் பூரணத்தில் திளைப்பவன் நான். முப்பது வயது வரை எனக்கு அந்தப் பதற்றம் இருந்தது. ஒன்றும் அறியாதிருப்பது பற்றிய தவிப்பு. அல்லது அனைத்திலும் மிதமானவற்றுக்கு மேலே தெரியாதிருப்பது குறித்த கவலை. குருநாதரோடு இருந்த காலத்தில் இதைப் பற்றி ஓரிரு முறை அவருடன் விவாதித்தும் இருக்கிறேன். அவர் புன்னகை செய்வார். ‘மனத்தை ஏன் ஒரு குப்பை லாரி ஆக்கிக்கொள்ள விரும்புகிறாய்?’ என்று கேட்பார். ‘முற்றிலும் பெருக்கித் துடைத்து காலியாக வைக்க வழியில்லாதபோது, குப்பை லாரியாக இருப்பதுதான் சௌகரியம்’ என்று பதில் சொல்வேன். ‘யாரும் கிட்டே நெருங்க அஞ்சுவார்கள் பாருங்கள்? கழிவு நீர் ஊர்தியாக இருப்பது இன்னும் வசதி.’ அந்த வருடம் குடகில் வரலாறு காணாத மழை பெய்தது. ஒன்பது நாள்களுக்கு இருப்பிடத்தைவிட்டு வெளியே வரக்கூட முடியாத அளவுக்கு மழை. பல இடங்களில் மலைச்சரிவு உண்டாகி பாதை தடைபட்டுப் போயிருந்தது. காவிரி ஊழிப் பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்துப் பாய்வதாகச் சொன்னார்கள். தொலைத் தொடர்புகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, வழக்கமாக ஆசிரமத்துக்கு வருகிறவர்கள்கூட வராத சூழலில் நாங்கள் கட்டாயமாகச் சிறை வைக்கப்பட்டதுபோல உணர்ந்தோம். ஆசிரமத்தில் இன்னொரு நாலைந்து தினங்களுக்கு உணவுப் பொருள்கள் இருந்தன. ஆனால் குளித்து, துணி மாற்றத்தான் வழியில்லாதிருந்தது. மாணவர்களிடம் மூன்று ஜோடி உடைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்று குரு சொல்லியிருந்தார். அவரிடம் இரண்டு உடுப்புகள் மட்டுமே இருந்தன. அனைத்துமே நனைந்து ஈரமாகிவிட்டிருந்தன. ஒன்பது நாள்களும் அவை கொடியில் தொங்கிக்கொண்டுதான் இருந்தன. ஆனால் உலரவேயில்லை. இதனாலேயே மழை விட்ட நிமிடங்களில் வெளியே போக நினைத்தாலும் முடியாமல் இருந்தது. நாங்கள் நாளெல்லாம் கம்பளியைச் சுற்றிக்கொண்டு அறைகளில் சுருண்டு கிடக்கும்படியாகிப்போனது. அன்றைக்கு நான் மதியம் தூங்கிவிடுவது என்று முடிவெடுத்து, இரண்டு குவளைகள் வெந்நீர் மட்டும் குடித்துவிட்டுப் படுத்திருந்தேன். உறக்கத்தின் விளிம்புக்குச் சென்றடைந்த நேரம், குரு என் அறைக்குள் நுழைந்தார். ‘விமல், நாம் வெளியே போகலாம்’ என்று சொன்னார். நான் சற்றுத் தயங்கினேன். ‘இதுவும் நனைந்துவிடும் என்று அஞ்சாதே. வேறு வாங்கித் தருகிறேன் வா’ என்று சொன்னார். ‘அதுசரி, கடைகள் ஏது இப்போது?’ ‘பார்த்துக்கொள்ளலாம் வா’ என்று சொன்னார். நாங்கள் இருவரும் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து நடக்கத் தொடங்கினோம். நகரம் முற்றிலும் நனைந்து விரைத்துப் போயிருந்தது. வீடுகளின் சுவர்களெல்லாம் நிறம் அழிந்து பழுப்பாகத் தெரிந்தன. வழியெங்கும் அத்தனை மரங்களில் இருந்தும் ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது. தரையெல்லாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மரக்கிளைகள் விழுந்திருந்தன. மண் சரிவால் பாதை முழுதும் சேறாகி, சோற்றுருண்டைகள் போலச் சரளைக் கற்கள் செம்மை பூசிப் பரவிக் கிடந்தன. சாலையில் நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. பல கடைகள் மூடியிருந்தன. மூடிய கடைகளின் வெளியே நாய்கள் படுத்திருந்தன. ஒன்றிரண்டு சைக்கிள்கள் தவிர போக்குவரத்து அறவே இல்லாது போயிருந்தது. ‘ஊரின் இந்த முகம் நன்றாக இருக்கிறது இல்லையா?’ என்று குரு கேட்டார். ‘ஆம். ஆனால் இது போரடித்துவிடும். நகரின் அழகு மனிதர்களால் வருவது’ என்று சொன்னேன். ‘அப்படியா நினைக்கிறாய்? இயற்கைக்கு இரண்டாவது இடம்தானா?’ ‘இரண்டாவது இடம் சத்தத்துக்கு. அடுத்த இடம் குப்பைகளுக்கும் புழுதிக்கும்.’ ‘அப்படியானால், ஆசிரமத்தை நாம் பெங்களூருக்கோ மைசூருக்கோ மாற்றினால் நீ வருத்தப்படமாட்டாய் என்று நினைக்கிறேன்.’ ஒரு கணம் யோசித்தேன். எனக்கு மடிகேரியை மிகவும் பிடித்துப் போயிருந்தது. அது நகரமில்லை. கிராமாந்திரம் என்றும் சொல்லிவிட முடியாது. கூப்பிடு தொலைவில் காவிரி ஊற்றெடுத்துப் பொங்கிக்கொண்டிருக்கும் இடம். மாலை ஐந்து மணியானால் எங்கும் யாரும் தென்படமாட்டார்கள். இருட்டத் தொடங்கும் நேரம் மலைப்பாதையில் மேலே ஏறிப்போவது ஓர் அனுபவம். திரும்ப முடியுமா என்று சந்தேகம் வரும் எல்லைவரை நடந்துகொண்டே இருந்துவிட்டுத் திரும்பி வருவது இன்னொரு பேரனுபவம். ஆனாலும் அந்த அமைதியும் சாந்நித்தியமும் அல்ல; பகலின் சந்தடியும் இணைவதாலேயே எனக்கு அந்த ஊரைப் பிடித்தது. மைசூரிலோ பெங்களூரிலோ சத்தத்துக்குக் குறைவிருக்காது என்பது உண்மைதான். ஆனால் சத்தம் சௌந்தர்யத்துடன் சேரும்போதல்லவா ரசனைக்குரியதாகிறது? ‘ஆம். ஓசைக்கும் இசைக்குமான இடைவெளி அதில் உள்ளது’ என்று குரு சொன்னார். எனக்குப் புரிந்துவிட்டது. அவர் அந்தப் பேச்சை எடுக்கக் காரணமே, பாதி தெரிந்தவனாக இருப்பது பற்றிய குற்ற உணர்ச்சியை நான் வெளிப்படுத்தியதுதான். நான் புன்னகை செய்தேன். ‘புரிந்தது குருஜி’ என்று சொன்னேன். ‘விமல், பாதி அறிந்திருப்பது ஓர் அழகு. உலகில் பாதிக்கு உள்ள மதிப்பு முழுமைக்கு இல்லை.’ ‘அப்படியா நினைக்கிறீர்கள்?’ ‘பாதிக்கு உள்ள சௌகரியத்தில் பாதிகூட முழுமைக்குக் கிடையாது. மூச்சு முட்டத் தின்றுவிட்டு உன்னால் என்ன செய்ய முடியும்? உன்னை நான் அரை வயிற்று உணவுக்குப் பழக்கியிருக்கிறேன் என்பதை எண்ணிப் பார். உன் உற்சாகம் அதனால் வருவது.’ ‘அட ஆமாம். ஆனால் நிறைகுடம்தான் தளும்பாது என்பார்கள்.’ ‘தளும்பாதிருப்பதில் என்ன அழகு? ஒரு பெண் குடத்தில் தண்ணீர் எடுத்து வரும்போது உற்றுப் பார். குடம் தளும்பி நீர் வெளியே தெறித்தால், அந்தப் பெண் இன்னும் அழகாகத் தெரிவாள்.’ நான் பேச்சற்றுப் போனேன். முக்கால் மணி நேரம் நடந்து காவிரி பாயும் வெளிக்கு வந்து சேர்ந்தோம். விரிந்த பெரும் படுக்கையில் ஆடை அவிழ்வது தெரியாமல் புரளும் ஒரு பெண்ணைப்போல் புரண்டோடிக்கொண்டிருந்தது நதி. ஓட்டத்தின் சத்தம் உற்சாகமளித்தது. நின்றிருந்த மழை மீண்டும் தூறலாகத் தொடங்கியிருந்தது. ‘குருஜி, நாம் முற்றிலும் நனைந்தபடிதான் திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று சொன்னேன். ‘ஆம். ஈரத்துடன் போய்ச் சேருவோம்.’ ‘குளிர் கொல்லப் போகிறது. படுத்தால் தூக்கம் வரப் போவதில்லை.’ ‘ஆனால் களைப்பில் உனக்குப் பாதி உறக்கம் நிச்சயம் வந்துவிடும். உறக்கத்திலும் பாதிதான் அழகு’ என்று அவர் சொன்னார். மிருதுளாவின் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு ஏனோ இந்தச் சம்பவம்தான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. உண்மையில் அவர்தான் பேசிக்கொண்டிருந்தார். நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பதை மட்டுமே முக்கியமாக நினைத்தேன். பேசாத சொற்கள் உருவாக்கும் பிம்பம் மிகப் பெரிது. அறியாமையும் பூரண ஞானமும் ஒரு நூல் கண்டின் இருவேறு முனைகளல்லவா? ஆனாலும் கண்டாக உள்ளபோது இரண்டும் அருகருகேதான் குடியிருக்கும். நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் உள்ள நெருக்கம் போல. ஒரு நாத்திகனைக் காட்டிலும் கடவுளை அதிகம் நினைப்பவன் யார்? இழுத்து இழுத்து மனத்தில் நிறுத்தி அவனை இல்லை என்று நிறுவுவதற்கு எத்தனைப் பிரயத்தனம் செய்யவேண்டி இருக்கிறது. மனம் குவியாத ஒரு நாம ஜபத்துக்கு நிகரானது அது. ‘உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இந்தத் தேர்தல் என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?’ என்று அவர் கேட்டார். நான் சிறிது நேரம் யோசித்துவிட்டுச் சொன்னேன். ‘முயற்சி பெரிதுதான். ஒருவேளை உங்கள் பெருங்கூட்டணி வெல்லலாம். ஆனால் ஆட்சி நீடிக்காது.’ ‘அப்படியா?’ ‘அப்படித்தான் தோன்றுகிறது. எதற்கும் அளந்து செலவு செய்யுங்கள்.’ அவர் சற்றுப் பதற்றமானது போலத் தோன்றியது. எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து மீண்டும் அமர்ந்தார். ‘என் பங்குக்கு நான் எழுபது கோடி செலவு செய்தாக வேண்டும். இதில் என் சொந்தப் பணம் மட்டும் நாற்பது கோடி. மிச்சம் உள்ளவை வசூலானவை’ என்று சொல்லி, ஒரு பெரிய பெட்டியைக் காட்டினார். ‘திறந்து காட்டுவீர்களா?’ என்று சிரித்தபடி கேட்டேன். உண்மையில் நிறையப் பணம் என்பதை நான் அதுநாள் வரை கண்டதேயில்லை. அதன் அடர்த்தியையும் வாசனையையும் நுகர்ந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு சன்னியாசி இதைக் கேட்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. இத்தனைப் பணத்தில் எனக்கு ஒரு கட்டு கொடுங்கள் என்று நான் நிச்சயம் கேட்கப்போவதில்லை. அப்படிக் கேட்கக்கூடியவனாக என் தோற்றம் ஒருபோதும் என்னை முன்னிறுத்தாது என்பதை நானறிவேன். அவர் யோசிக்கவில்லை. அறைக்கதவை மட்டும் எழுந்து சென்று தாழிட்டுவிட்டு வந்து பெட்டியைத் திறந்தார். பெட்டி என்றால் பெரிய கள்ளிப் பெட்டி. கனமானது. அதை நகர்த்துவதற்குச் சிறிதாக நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. பெரிய பூட்டுப் போட்டு பூட்டியிருந்தார். பீரோவைத் திறந்து ஒரு சாவியை எடுத்து வந்து அந்தப் பூட்டைத் திறந்தார். முப்பது கோடி ரூபாய். பெரும்பாலும் நூறு ரூபாய்க் கட்டுகளாகவே இருந்தன. ஒரு சில ஐம்பது ரூபாய்க் கட்டுகளும் இருக்கலாம். சுருணைத் துணி சொருகி வைத்தாற்போலப் பெட்டிக்குள் ஓர் ஒழுங்கில்லாமல் மொத்தமாகத் திணித்திருந்தார்கள். நான் பெட்டியை மூடினேன். அவரைப் பார்த்துப் புன்னகை செய்தேன். ‘என்ன?’ என்று கேட்டார். ‘செலவுக்கு இந்தப் பணம் போதும். உங்கள் சொந்தப் பணத்தை வெளியே எடுக்காதீர்கள்’ என்று சொன்னேன். ‘அது எப்படி முடியும்? இதெல்லாம் செய்தே தீர வேண்டிய செலவுகள். சேர்த்து அப்புறம் எடுத்துவிடலாம் என்று வையுங்கள். ஆனாலும்...’ ‘அப்படியானால் ஒன்று செய்யுங்கள். இந்தப் பணத்தை நான் எடுத்துப் போகிறேன். இது உங்கள் கைக்கு வரவேயில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பணத்தைச் செலவு செய்து முடித்துவிட்டு, அதற்குமேல் தேவைப்பட்டால் என்னிடம் வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னேன். ‘நீங்களா?’ ‘ஆம். எனக்குச் செலவு கிடையாது. இந்தத் தாள்களால் எனக்குப் எந்தப் பயனும் இல்லை. தேர்தலில் வென்று நீங்கள் நினைத்தபடி ஒரு கூட்டாட்சி அமைத்து ஒரு மாதத்தில் அது கலைந்தபின் ஒரு வெறுமை வரும் பாருங்கள், அப்போது என்னிடம் வந்தால் இதைக் கொடுத்து அந்த வெறுமையைப் போக்குவேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். அந்தச் சந்திப்பு அவருக்குப் பெரிய உற்சாகத்தை அளித்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மிருதுளாவின் விருப்பத்தின் பேரில்தான் நான் அவள் வீட்டுக்குப் போனேன். வாசனையான பெண். வசதியானவளும்கூட. அன்பாக அழைக்கும்போது எனக்கு மறுக்கத் தோன்றாததால்தான் போனேன். ஆனால் நானே எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. அது அந்தத் தேர்தலும் அதன் முடிவுகளும். நான் நினைத்தபடிதான் அந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்தன. மிருதுளாவின் தந்தை ஆதரித்த கர்நாடக அரசியல்வாதி ஒருவர்தான் அந்தமுறை பிரதமரானார். ஆனால் ஆட்சி நீடிக்கவில்லை. மிகச் சில தினங்களில் அந்த ஆட்சி கவிழ்ந்துபோனது. அதற்குச் சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு மிருதுளா என்னை மீண்டும் அவள் வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்தாள். ‘அப்பா மிகவும் மனம் உடைந்து போயிருக்கிறார். அவரை எப்படி மீட்பது என்றே தெரியவில்லை.’ ‘நான் வரவில்லை. அவரை அழைத்து வா’ என்று சொன்னேன். பத்து நாள் இடைவெளியில் மிருதுளா அவளது தந்தையை என் ஆசிரமத்துக்கு அழைத்து வந்தாள். அவர் என்னிடம் அளித்து, மறந்தே போயிருந்த அந்தப் பணப்பெட்டியை எடுத்து அவர் முன்னால் வைத்தேன். ‘நிறைய செலவு செய்திருப்பீர்கள். எல்லாமே இழப்புத்தான். ஆனால் மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு இழப்பின் சதவீதம் குறைவு’ என்று சொன்னேன். அவர் நம்பவில்லை. பெட்டியைத் திறந்து பார்த்து சிறிது நேரம் பேச்சற்றிருந்தார். பிறகு சொன்னார், ‘நீங்கள் ஒரு அபூர்வம். உங்கள் ரேகைகூட இதில் பட்டிருக்காது என்று தோன்றுகிறது.’ நான் புன்னகை செய்தேன். மறுவாரமே நான் அவரோடு டெல்லிக்குப் போகவேண்டி இருந்தது. அது எனக்கு முதல் விமானப் பயணம். அசோகா ஓட்டலில் எனக்கு அவர் அறை ஏற்பாடு செய்திருந்தார். அது எனக்கு முதல் நட்சத்திர விடுதி வாசம். அடுத்த மூன்று தினங்களில் எனக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து அறிமுகமானார்கள். எனக்குத் தெரியாத அரசியலை நான் அவர்களிடம் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். ஊர் திரும்பியபோது, என்னையறியாமல் நான் ஏழெட்டுப் பேரின் நிதி ஆலோசகராகியிருந்தேன். (தொடரும்) http://www.dinamani.com

இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் செய்திகள்.

3 months 2 weeks ago
லீட்ஸ் டெஸ்ட் - இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 363 ரன்னுக்கு ஆல் அவுட் அ-அ+ பாகிஸ்தானுக்கு எதிராக லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களை எடுத்துள்ளது. #ENGvPAK லண்டன்: இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். இதையடுத்து, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய குக் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரூட் 45 ரன்னிலும், டேவிட் மலன் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து டோமினிக் பெஸ் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் 21 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 34 ரன்களுடனும், சாம் குர்ரன் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜோஸ் பட்லர் அரை சதமடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம் குர்ரன் 20 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்னிலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 ரன்னில் அவுட்டாகினர். ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமிர், மொகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. #ENGvPAK https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/03182046/1167601/england-all-out-for-363-in-first-innings-for-second.vpf

இளமை புதுமை பல்சுவை

3 months 2 weeks ago
”இது எங்க ஊர் கோழி!” - 2 மாநிலங்கள் சண்டை போடுமளவுக்கு என்ன இருக்கு கருங்கோழியில்? கோழிக்கறி என்றாலே யாருக்குத்தான் ஆர்வம் இருக்காது. என் உடன் வேலை செய்யும் நெல்லை நண்பர் ஒருவர் "அண்ணே கருங்கோழி எங்கண்ணே கிடைக்கும்" என்று கேட்டார். இங்க கிடைக்கும் என்ற முகவரி கொடுத்துவிட்டு "ஏன்பா கேட்கிற" என்றேன். அந்தக் கோழி உடம்புக்கு நல்லதாம்னே... சொந்தக்காரங்க வளர்க்கக் கேட்டாங்க" என்றார், அந்த நண்பர். கருங்கோழிகள் இன்று தமிழ்நாட்டில் பிரபலமாகிவிட்டன. . பொதுவாகக் கோழிகளில் பல வகைகளைப் பார்த்திருப்போம். கோழியின் கால், தலைப்பகுதி, இறக்கை என ஒவ்வொரு பகுதியும் ஒருவிதமான வண்ணத்தில் அமைந்திருக்கும். இதுபோக அவற்றின் தோல், இறைச்சி ஆகியவையும் பல வண்ணங்களில் இருக்கும். ஆனால் தலை முதல் கால்வரை கோழி ஒரே நிறத்தில் இருக்குமா என்றால் இருக்கும் என்பதுதான் பதில். அந்தக் கோழி முழுமையாகவே கறுப்பு நிறத்தில் இருக்கும். இது பெரும்பாலும் கருங்கோழி, நாட்டுக் கறுப்புக் கோழி, கடக்நாத் கோழிகள் என்ற பெயர்களில் அழைக்கப்படுவது உண்டு. ஷாஜகான் திரைப்படப் பாடலில் "கறுத்தக்கோழி போட்டு வறுத்து வச்சிருக்கேன்" என்று ஒரு வரி இடம்பெறும். அதுவும் இந்தக் கறுங்கோழியைத்தான் குறிக்கும். இதன் பூர்வீகம் மத்திய பிரதேசம். இது காளி மாசி எனவும் அழைக்கப்படுகிறது. இதற்குக் காளியின் தங்கை என்று பொருள். இதன் வெளிப்புற நிறம் மட்டும் கறுப்பு கிடையாது. கருங்கோழியின் உட்புற சதைப்பகுதி, எலும்புகள் என அனைத்துமே கறுப்பு நிறம்தான். இக்கோழியின் உடலில் மெலனின் நிறமி நிறைந்து காணப்படுவதால், கறுப்பு நிறமாகத் தோற்றமளிக்கிறது. கறுப்புத் நிறத் தோகையில் பசுமை நிறம் கலந்து வானவில் நிறம்போலக் காட்சியளிக்கும். இதன் தோல், அலகு, கால் விரல்கள் கருஞ்சாம்பல் நிறமாகவும், கொண்டை, நாக்கு போன்றவை கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். கோழிச் சந்தையில் இதற்கான தேவை அதிகமாக இருக்கிறது. யுனானி மருத்துவத்தில் கருங்கோழிகள் மருத்துவ குணம் வாய்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மகாராஷ்டிரா அரசு இக்கோழிகளை அழிவில் இருந்து பாதுகாக்க வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் சிலருக்கு இக்கோழியை வளர்க்க நிதியுதவி அளித்து வருகிறது. இன்றைய நிலையில் கருங்கோழிகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பண்ணை முறையிலும், மேய்ச்சல் முறையிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. சிரங்கு, வாதம் போன்ற நோய்கள் கருங்கோழிக் கறியால் குணமாகும் என்று சொல்கிறது, சித்த மருத்துவம். இக்கோழிகள் ஆண்டுக்கு 80 முதல் 90 முட்டைகள் வரை இடும். முட்டையும் முழுமையான கறுப்பு நிறத்தில் இருக்கும். கருங்கோழிக் குஞ்சுகள் பிறந்து 20 நாட்கள் வரை செயற்கையான வெப்பம் கொடுத்து வளர்க்க வேண்டும். 100 கருங்கோழிக் குஞ்சுகளுக்கு 100 வாட்ஸ் பல்பு ஒன்று அமைத்து வெப்பம் இருக்குமாறு வளர்க்கப்படும். அதிகமான குளிரை இக்கோழிகள் தாங்காது. கோழி வகைகளில் இவை அதிகமான தண்ணீர் அருந்தும். இந்த கோழிக் குஞ்சுகள் 2 மாதங்களில் இருந்து விற்பனை செய்யப்படும். இதன் கறியின் நிறம் கறுப்பாக இருப்பதால், இதை வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், இதில் தயக்கம் கொள்ள எதுவும் இல்லை. கருங்கோழிகள் உண்பதற்கு மிகவும் ஏற்றவை. சந்தையில் கருங்கோழியின் தேவை அதிகமாக இருப்பதால் சில பண்ணையாளர்கள் அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றாச்சாட்டுகள் எழுந்தன. மைசூர், உணவு ஆராய்ச்சிக் கழகம் கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு நன்மை தரக் கூடியது என்ற சான்று கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சீன நாட்டு மருத்துவத்தில் இந்தக் கருங்கோழிகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இக்கோழியின் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருக்கும். இயற்கையாகவே நோய் எதிர்ப்புத் திறன்கள் கொண்டிருப்பதால் இவற்றிற்கு ரசாயன மருந்துகள் பெரும்பாலும் கொடுப்பது இல்லை. சில நாட்களுக்கு முன்னர் கடக்நாத் கோழிகளின் விற்பனைக்காக 'MP Kadaknath' என்ற செயலி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சத்தீஸ்கர் மாநிலமும் கடக்நாத் கோழி எங்களுக்குத்தான் சொந்தம் என உரிமை கொண்டாடியதுதான் காரணம். மத்தியப் பிரதேச மாநிலமும், சத்தீஷ்கர் மாநிலமும் தங்களுடைய மாநிலத்துக்குத்தான் என்று உரிமை கொண்டாடும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, இந்தக் கறுப்புக் கோழி. இறுதியில் மத்தியப் பிரதேசத்துக்கு கருங்கோழிக்கான புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. https://www.vikatan.com

புகை( ப் )படம்

3 months 2 weeks ago
புகை(ப்) படம் சென்ற இதழ் தொடர்ச்சி வாசுதேவனின் இந்தப் பதில் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்கின்றனர் அனைவரும் . அடுப்படியிலிருந்து காப்பியுடன் வெளிவந்த ஜானகி ஒன்றும் புரியாமல் வாசுவை நோக்குகிறாள். "" மனசு பொங்கிய வருத்தம்தான்'' என்கிற வாசுதேவனின் பதிலைக் கேட்டுத் திடுக்கிட்ட டேனியல், ராமு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். வாசுவின் பதிலால் திகைத்து நின்ற ஜானகி, காபியை விருந்தினர்களுக்குக் கொடுத்த பின், வாசுவிடம் நீட்டுகிறாள். வாசுவிடம் , ஜானகியின் கவிபாடும் கண்கள், "" ஏன் வருத்தம் உங்களுக்கு ?'' எனும் கேள்வியில் நீந்துகின்றன. இந்த வினாவிற்குப் பதில், வாசுவிடமிருந்து ஒரு மாதத்திற்குப் பின், புதுதில்லியில் பரிசளிப்பு விழா முடிந்த அன்றிரவு , ஓர் ஆங்கில ஊடக நேர்காணலில் கிடைக்கிறது: "" இந்தப் பரிசு பற்றியும் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற உங்கள் புகைப் படங்கள் பற்றியும் உங்களது உண்மையான கருத்து என்ன ?'' "" ஒரு புகைப்படக் கலைஞனாக , ஒரு நிருபராக இந்தப் படம் என்னுள் ஒரு விழிப்பை ஏற்படுத்தியது. பரிசுக்குத் தேர்வு செய்யப் பெற்றுள்ள படம் எடுக்கப் பெற்ற சூழல் பற்றிச் சொல்கிறேன். முன்னர் நான் பணியாற்றிய "தமிழ்க் குரல்' நாளிதழ் ஆசிரியர் மணி சார் ஒரு வினோத நடைமுறையை மேற்கொள்வார். மாநிலத்தில் எங்களுக்கு எங்கெங்கு பதிப்புகள் உள்ளனவோ அந்தந்தப் பதிப்பு நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் இவர்களை ஆறு மாதத்திற்கோர் முறை ஒரு வாரம் மட்டும் வேறெந்தப் பகுதிக்கோ அனுப்பி அப்பகுதிச் செய்திகளைச் சேகரிக்கச் செய்வார். நிருபர்களுக்கு அப்போதுதான் பலவித அனுபவங்கள் கிடைக்கும்; வாசகர்களுக்கும் பல கோணங்களில் இருந்து விஷயங்கள் கிடைக்கும் என்பது அவரது அனுபவ பாடம். அப்படித்தான் நான் செல்வபுரம் சென்றேன். ஊரின் பெயரில்தான் செல்வமிருந்தது; வறண்ட பிரதேசம்; வளமில்லா மக்கள்; பச்சைப் பசும் விவசாய நிலம் . எனினும் மண்ணையும் விண்ணையும் நம்பி சிறு பகுதியினர் குழாய்க் கிணற்றுப் பாசனம் செய்தனர். திங்கள் காலை பதினோரு மணி. மக்கள் கூட்ட நெருக்கம் மிகுந்த அரசு அலுவலகம். உள்ளே மக்கள் குறை தீர்க் கூட்டம். பெரும்பாலானோர் கரங்களில் வெள்ளைத்தாளைக் கருப்பாக்கியிருந்த மனுக்கள். நடுவே மேசை. அதன் ஒரு பக்கம் நாற்காலிகளில் அதிகாரிகள். எதிர்ப்பக்கம் மர பெஞ்ச்சில் மனு நீட்டிய கரங்கள் கொண்ட ஊர் மக்கள். அதிகாரிகளைச் சுற்றிப் பாதுகாப்பு அரண்போல் ஊழியர்கள் , தரகர்கள், கரை வேட்டிக்காரர்கள். என் காமிராவைத் தலைக்குமேல் உயர்த்தி , கீழ் நோக்கி மேஜைப் பகுதியைப் ஃபோகஸ் செய்து ஏரியல் வ்யூவாகப் படங்கள் எடுத்தேன். பின்னர் , நேரெதிர்க் காட்சிகள் சிலவும் எடுத்தேன். மக்கள் சிலரிடம் அவர்கள் கோரிக்கைகள் பற்றியும் கேட்டுக் குறிப்புகள் எடுத்துக்கொண்டேன். அவர்களில் சிலர், விடிவு கிடைத்துவிடும் எனும் மிகு நம்பிக்கையுடன் என்னிடம் செய்தி பகிர்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னை. பெரும்பாலும் அரசுத் துறைகள் , பொதுத் துறைகள், வங்கிப் பிரச்னைகள், சட்டம் சார்ந்த தாவாக்கள், காவல் துறை, கடன், வட்டி, மிரட்டல், உருட்டல் எனப் பலப் பலப் பிரச்னைகள். குறிப்பெடுத்துக் கொண்டபின் வாசல் படியிறங்கித் தெருவோரம் வேப்பமர நிழல் நாடினேன். வழக்கம் போல் இரை தேடி காமிரா கண்கள் அலை பாய்ந்தன. அலுவலகத்தின் உள்ளிருந்து நசுங்கிக் கசங்கி சிறுவனின் கரம் பற்றி வெளியே வருகிறார் நாற்பது வயது மதிக்கத் தக்க விவசாயி . மறு கையில் ஒரு மஞ்சள் பை. உழைத்து உரமேறிய கறுத்த உடல்வாகு . ஆனால் , முகமெங்கும் சோகம் கப்பியிருந்தது . கண்களில் அயர்ச்சியும் விரக்தியும் அப்பியிருந்தன. "சரி, தேநீர் அருந்தி வந்தபின் இவரிடம் இவரது விஷயம் பற்றிக் கேட்போம்' எனக் கருதி கடை அடைந்தேன். முறுக்கு டப்பா மூடி மேல் பத்து ரூபாய்த் தாளை வைத்து "" இதோ பத்து ரூபா வச்சிருக்கேன், டீ குடுங்க'' நுரை பொங்கும் டீயை நீட்டியபடியே, "" டீயக் குடிங்க சார் மொதல்லே . காசெங்கே ஓடிடப் போகுது ?'' என்றவர் , மீதிச் சில்லறையைத் தந்தார். டீக்கடைக்காரரின் சொற்களும் சுவைத்தன. ரசித்துக் குடித்தேன். நடுத் தெருவில் அலுவலக வாசல் எதிரே திடீரென ""ஐயோ! ஐயோ! நெருப்பு!'' என்ற அலறல் கேட்டு அருகே ஓடினேன். இயல்பாகக் காமிராவின் லென்ஸில் எனது கை ஓடியது . சற்று முன் நான் கண்ட அந்த நாற்பது வயது நபரும் அந்தச் சிறுவனும் உடலெங்கும் தீ யுடன் அங்கும் இங்கும் ஓடுகின்றனர் ... "" வேண்டாம் அப்பா ! அப்பா வேண்டாம்ப்பா'' என அலறும் சிறுவனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது . நான் தரையில் படுத்து, மண்ணுக்கும் விண்ணுக்குமாய் அச்சிறுவன் ஓடுவதைப் படம் பிடிக்கிறேன். டில்ட் செய்கிறேன் , மேலும் சில கோணங்களில் படம் எடுக்கிறேன். அருகிருக்கும் மக்கள் சிலர் தெருவோர மணலை அள்ளி அவ்விருவர் மீதும் வீசுகின்றனர் . டீக்கடைக்காரர் , தம் கடையிலிருந்து நசுங்கிய அலுமினிய வாளித் தண்ணீரைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார் . சிறுவன் அங்குமிங்கும் ஓடி தரையில் சரிகிறான் . அருகே , அந்த நாற்பது வயது நபர் விழுகிறார் . நான் , எழுந்து ஓரமாகச் சென்று 108 க்குப் ஃபோன் செய்கிறேன்; விவரம் கூறுகிறேன். அதன் பின் எனது ஆசிரியருக்குப் போன் செய்து பதட்டத்துடன் தகவல் தருகிறேன். ஒருநாள் தங்கித் தகவல் சேகரித்து, மறுநாள் சென்னை வரச் சொல்கிறார் . பகல் ஒரு மணிக்குள் படமும் செய்தியும் உடனுக்குடன் அனுப்பச் சொல்கிறார். ஜீப்புகள், வேன்கள், ஆம்புலன்ஸ் வருகின்றன. சிறுவனும் அவனது தந்தையும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர். நானும் பின் தொடர்ந்து மருத்துவமனை செல்கிறேன் . ஊர்க்காரர்கள் தந்த தகவல்கள் , காவல்துறை தரும் தகவல்கள் எல்லாம் சேகரிக்கிறேன். வாங்கிய கடனில் பெரும்பகுதி வட்டியுடன் அடைக்கப் பட்டுவிட, மீதமுள்ள அசலும் வட்டியும் மூன்று மாதங்களாகத் தரப்படவில்லை. பொய்த்துப்போன விவசாயம் , கரும்பு விற்பனை நிலுவைத் தொகை என ஒரு பக்கம் சுமை அழுத்தம், மறுபக்கம் வட்டி, வட்டிமேல் வட்டி கேட்டு மிரட்டல், உருட்டல் அதிகரிக்க , அரசு அதிகாரிகளிடம் முறையீடு, காவல்துறையினரிடம் முறையீடு, எந்தவித ஆதரவான அரசு நடவடிக்கையுமில்லா நிலையில் மறு பக்க அழுத்தம் ... இதற்கெல்லாம் தீர்வாய் இந்தத் தீக்குளிப்பு விடை கொடுக்கும் என நைந்த மனசின் முடிவு .... ""அதெல்லாம் சரிங்க , அந்தப் பச்சைப் புள்ளை , அது என்ன பாவம் பண்ணுச்சுங்க ? அவனையுமில்ல தீக்கிரையாக்கிப்புட்டான் பாவிப் பய ...'' என்ற ஊர்க்காரர்கள் புலம்பலும் தொடர்ந்தது . பகலில் படமும் செய்தியும் சென்னைக்கு அனுப்பிவிட்டேன் . இரவில் உறக்கமின்றி எழுந்து நடந்தேன் ... மறுநாள் பகல் , ஈருயிரும் விண்ணில் பறக்கக் கரிக்கட்டைகளாய் அந்த உடல்கள் மட்டும் வீடு திரும்ப , அனைத்து நிகழ்வுகளையும் புகைப்படப் பதிவாக்கிக் கொண்டு கனத்த இதயத்துடன் சென்னை பயணப்பட்டேன் . வழக்கமாய் உற்சாகம் தரும் ஜன்னலோரப் பயணம் அன்று நேர்மாறானது. விட்டில் பூச்சிகளாய் கரும் இருளில் தோன்றி மறையும் ஒளிப் பூக்களைக் காண மறுத்து ஜன்னலை மூடிவிட்டேன் . மனசென்னவோ புயலில் தலை விரித்தாடும் பனைமரமானது ... அலுவலகத்தில் பெரும் பாராட்டு ! மிகச் சிறப்பாக இருந்தது நான் எடுத்திருந்த சிறுவனின் படம் என்பதாக ஒவ்வொருவரும் தனித் தனியே வந்து கை கொடுத்தனர் . ஆசிரியர் மணி சார் என்னைத் தனியாக அவர் அறைக்கு அழைத்தார். சென்றேன். என் தோளணைத்துத்துக் கூறினார் : "" விசு ! முதல்ல எல்லோரது பாராட்டுக்களையும் மனசுல வாங்கிக்குங்க . சொல்கிற வேலையைச் செய்யும் வெறும் யந்திரமல்ல மனுஷன். அப்படியும் பலபேர் எல்லாத் துறையிலும் இருக்காங்க. ஆனா, நீங்க ரொம்ப இந்த விசயத்தால பாதிக்கப் பட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன் . உண்மைதான். நிஜமான எந்தக் கலைஞனும் இப்படித்தான் இருப்பான்''. நான் அவரை இடைமறித்தேன்: "" அதில்லை சார் ! ஒரு நிமிஷம் நான் இந்தக் காமிராவைத் தூக்கிப்போட்டுட்டு ஓடிப்போய் அந்தப் பயலை மட்டுமாவது காப்பாத்தி இருக்கலாமோன்னு தோணுது . கண்ணு முன்னாடி ஓர் உயிர் பறிபோகுது. காப்பாத்த முயலாமே அதைப் படம் பிடிக்கிறது என்ன நியாயம்னு புரியலை சார் . மொதல்ல ஒரு புகைப்படக் கலைஞனாகத்தான் லோ ஆங்கிள் ஷாட்டா அந்தப் பையனை வானுக்கு உயர்ந்து காண்பிக்கிற வகையில் நான் தரையில் படுத்தெல்லாம் அந்தக் காட்சியைப் படமெடுத்தேன் . அந்த நெருப்பின் சூடு அந்தக் கணத்தில் எனக்கு உறைக்கலை. ஆனா, அந்தப் பையன் அங்கே இங்கே உயிருக்கு மன்றாடி ஓடினப்போ நான் ஓடிப்போய், முடிஞ்சா காப்பாத்தியிருக்கணுமேங்கிற கடமையுணர்வுதான் என்னைக் கொடையுது. சார், ராத்திரி படுத்தா தூக்கம் வரலை. கண்ணை மூடினா அந்தப் பையன் உயிருக்குப் போராடின அந்தத் தவிப்புத்தான் நிழலாடுது ...'' "" உண்மைதான் விசு ! கூடியிருந்த மத்தவங்க ஓடிவந்து காப்பாத்த முயன்றது எல்லாமும் அங்கே நடந்து தானே இருக்கு . மனுஷனா நீ உன் கடமையைச் செய்யலைங்கிற குற்ற உணர்வு உனக்கு இனியும் வேண்டாம் . நீயும் ஆம்புலன்சுக்குப் ஃபோன் செய்திருக்கே ...'' "" என்ன சொன்னாலும் எனக்கு மனசு ஆறலை சார் ...'' "" விசு , முதல்ல தண்ணியைக் குடி .... இந்தா! இத பாரு , இப்ப நான் சொல்றத நிதானமாக் கேளு . நீ எடுத்தனுப்பிய புகைப்படங்களும் , சேகரித்தனுப்பிய செய்தியும் எவ்வளவு முக்கியமான தகவலை இந்த க்கள்கிட்டே கொண்டுபோய்ச் சேர்த்திருக்கு தெரியுமா ? எந்த ஒரு படைப்பாளிக்கும் , எத்துறைக் கலைஞனுக்கும் , எந்த வழிச் செய்தியாளனுக்கும், ஊடகக் கலைஞனுக்கும் இந்த மாதிரி செய்திகளை விஷயங்களைப் பதிவு செய்து மக்கள்கிட்டே பகிர்ந்துக்கறதுதான் முதல் கடமை . சக மனுஷனா அங்கே நீ செயல்படலையேங்கிற குற்ற உணர்வை விட, அந்த விஷயங்களைப் பதிவு செய்ஞ்சு அதை ஊடகம் வழியா பொதுமக்களுக்கும் உரிய துறை அதிகார வர்க்கத்துக்கும் கொண்டு வந்து தந்திருக்கேங்கிற நிலையிலே உன் கடமையை நியாயமாகவே, முழுமையாகவே செய்திருக்கே நீ . இனியும் இந்த மாதிரி அவலப் போக்குகள் நடவாதிருக்க இச் செய்தியும் படமும் பயன்படும்ங்கிற நம்பிக்கை உனக்கு வேணும் . இது ஒரு வணிக நோக்கமல்ல; சமூக அக்கறைங்கிற புரிதல் உனக்கு வேண்டும். இந்த அவலங்களுக்குக் காரணகர்த்தாக்களையும் அடையாளங் காட்டும் உனது இந்தப் படங்கள் !'' ஊசலாடிய என் மனசை ஒரு நிலைக்குக் கொண்டுவர உதவியது மணி சாரின் பேச்சு. இயல்புக்கு வர முயன்ற நான் அவரைத் தலை நிமிர்ந்து பார்த்தேன். அவரே தொடர்ந்தார்: "" நீ தானே விசு , கொஞ்ச நாள் முன்னாடி வேற ஒரு படமும் செய்தியும் தந்தாய் . பிறந்து சில மணி நேரமேயான ஒரு பச்சிளங் குழந்தையை ஒரு துணியில் சுற்றி குப்பைத்தொட்டி அருகே யாரோ வைத்துச் சென்றுவிட , அந்தக் குழந்தைக்கு எந்தத் தீங்கும் வந்துவிடாதிருக்க , நான்கைந்து நாய்கள் அந்தக் குழந்தையருகே காவலிருந்து குரைத்து, மக்களின் கவனத்தைக் கவர்ந்து அக் குழந்தையைக் காப்பாற்ற முயன்றதை உன் புகைப்படங்கள் தானே வெளியுலகிற்குக் காண்பித்தன ? அப்போது நீயுந்தானே அருகிருக்கும் காவல் நிலையத்திற்குத் தகவல் தந்து அக் குழந்தையைப் பாதுகாப்பாக மருத்துவமனைக்கும், பின்னர் விடுதிக்கும் அனுப்ப உதவினே? நீ எடுத்த அந்தப் படமும் தந்த செய்தியும் எவ்வளவு கவனம் பெற்றன !'' ஆசிரியர் மணி சார் சொன்னதை ஆமெனத் தலையசைத்து ஆமோதித்துப் பெருமூச்சு விட்டேன். * * * ""ஹ ம் ... ஆக , பிறப்பிலும் இறப்பிலும் ஒரு கலைஞனாகவும் மனிதனாகவும் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை எனக்கு உணர்த்திய இந்த இரு நிகழ்வுகளின் படங்களையும் "தமிழ்க் குரல்' ஆசிரியர் மணி சார் தான் மும்பைக்கு அனுப்பிவைத்துள்ளார்! இப்போது இந்தப் பரிசின் அடிப்படையே அவர்தான்! என் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்ததும் என் மனதைப் பக்குவப் படுத்தியதும் ஆசிரியர் மணி சார் தான். தீயில் கருகிய சிறுவனின் புகைப்படமும் , நாய்கள் புடை சூழ புதரருகே கிடந்த பச்சிளங் குழந்தையின் புகைப்படமும் தான் பரிசுக்கு உரியவை எனத் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன. இவையிரண்டுமே இரு வேறு நிலையில் எனக்கு வருத்தம் தந்தவை தானே ! இந்தப் பரிசும் பாராட்டும் எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அதற்குரிய காரணிகளாக அமைந்த இந்தச் சமூக நிலையும் எனக்கு வருத்தம் தந்தவைதானே, சொல்லுங்கள் ?'' இந்தக் கேள்வி கேட்கும் விசுவநாதனின் முகத்தில் நேர்காணல் நிறைவு கண்டது ! கேள்விகள் மட்டும் கேள்விகளாகவே ! http://www.dinamani.com

தமிழ்நதியின் 'மாயக்குதிரை'

3 months 2 weeks ago
போன வாரம்தான் பெளசரிடம் இருந்து ஒரு பிரதியை வாங்கியிருந்தேன்😎 பத்துக் கதைகளில் அநேகமானவை அவரது தளத்தில் இருப்பதால் முன்னரே வாசித்துவிட்டேன். எனினும் மீள்வாசிப்புக்கு என்று வாங்கியுள்ளேன். குணா கவியழகவினின் கர்ப்பநிலமும் கூடவே வாங்கியிருக்கின்றேன்.

கோத்தாவைக் காப்பாற்றும் நீதித்துறை உயர்மட்டம்?

3 months 2 weeks ago
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் நீதித்துறை சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளால் நிறைந்துள்ளது. இது எப்போதும் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளை காப்பாற்றும் முனைப்புடனே செயற்பட்டு வந்துள்ளது, இனியும் செயற்படும். இளஞ்செழியன் போன்ற ஓரிருவர்களால் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளால் நிறைந்துள்ள ஸ்ரீலங்காவின் நீதித்துறைக்கு வெளிப்பூச்சு அடிக்கும் முயற்சி பயனற்றது. எனவே, சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளால் நிறைந்துள்ள ஸ்ரீலங்காவின் நீதித்துறையை தமிழர்கள் எப்பவும் நம்பவே முடியாது!

இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு?

3 months 2 weeks ago
சிவமோகன் போன்ற எட்டப்பர்களுக்கு வால்பிடிக்கும் கும்பலிடம் இதைப் போன்ற கருத்துக்களையே எதிர்பார்க்க முடியும்! எப்போது சம்மந்தன், சுமந்திரன், மாவை கும்பல் தமிழின விரோத அரசியலில், தமிழின படுகொலைகாரர்களை பாதுகாக்கும் ஈனச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்ததோ அன்றிலிருந்தே புதிய கட்சி ஒன்றின் தேவையை தமிழ் மக்கள் சிந்திக்க தொடங்கியிருந்தனர். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முயற்சி மிகவும் தாமதமானது என்றாலும் தமிழர்களின் சுயகௌரவத்துக்கும் அரசியல் ஈடேற்றத்துக்கும் இதைவிட வேறுவழியில்லை! இதற்கான உறுப்பினர்களை தெரிவுசெய்யும் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் கவனமாக நல்லதொரு குழுவை அமைத்து செயற்பட வேண்டும். பட்டப்படிப்பு உள்ளவர்கள் என்ற போர்வையில் சத்தியமூர்த்தி, டெனிஸ்வரன் போன்ற கயவர்கள் உள்நுழையாமல் கவனமெடுக்கவேண்டும். பட்டபடிப்பில்லாத திறமையாளர்களும் உள்ளனர். இன்றும் கௌரவமாக வாழ்ந்துவரும் அனுபவமுடைய சில போராளிகளையும் உள்வாங்குவது சிறப்பானது. விலை போகமுடியாத, இணைந்து செயற்படும் பக்குவமுடைய பலவித அறிஞர்களை உள் வாங்குவதும் அவசியம். சொந்த, பந்தங்களுக்கு இடம்கொடுக்கும் பேர்வழிகளை தவிர்க்க வேண்டும். சுரேஷ் பிரேமச்சந்திரன்,நிமலன் கார்த்திகேயன், மனோகணேசன் ... போன்ற சுயநலவாதிகள் சொற்களை நம்பாமல் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் வித்தியாதரன், ஆனந்தசங்கரி, .... போன்ற கைக்கூலிகளை, அவர்களின் முகவர்களை, அருகில் நெருக்கவே விடக்கூடாது. கூல் கும்பல் போன்ற எட்டப்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பக்குவமான இளைஞர்கள் சிலரையும் உள்வாங்க வேண்டும்! பிச்சைக்கார பட்டதாரிகளை தூரவைப்பது நலம்.

முஸ்­லிம்­களை நெருங்கும் ராஜ­பக்‌­ஷாக்கள்!

3 months 2 weeks ago
முஸ்­லிம்­களை நெருங்கும் ராஜ­பக்‌­ஷாக்கள்! முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌ஷ, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ உட்­பட ராஜ­பக்‌ஷ குடும்­பத்­தினர் அண்மைக் கால­மாக முஸ்லிம் சமூ­கத்­து­ட­னான தமது உறவை மீள்­பு­துப்­பிக்க ஆரம்­பித்­தி­ருப்­பதை பகி­ரங்­க­மா­கவே அவ­தா­னிக்க முடி­கி­றது. முஸ்லிம் அமைப்­பு­களைச் சந்­தித்தல், முஸ்­லிம்­களின் பொது நிகழ்­வு­களில் பங்­கேற்றல், இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்­வு­களை நடத்­துதல் என பல வகை­களில் இந்த உறவு புதுப்­பித்தல் நிகழ்­வுகள் நடந்­தேறி வரு­கின்­றன. கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ 'எளிய' அமைப்பை ஆரம்­பித்து 2020 ஆம் ஆண்டை நோக்­கிய தனது அர­சியல் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலை­யி­லேயே, அவர் முன்­னெப்­போ­து­மில்­லா­த­வாறு முஸ்­லிம்­க­ளுடன் அதிக நெருக்­கத்தைப் பேண ஆரம்­பித்­துள்ளார். இரு வாரங்­க­ளுக்கு முன்னர் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு தானா­கவே கோரிக்­கை­ வி­டுத்து விஜயம் செய்த அவர், அதன் நிர்­வா­கி­க­ளுடன் முஸ்லிம் சமூக, சமய விவ­கா­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். இதன்­போது "பௌத்த தேரர்­களில் சிலர் முஸ்­லிம்கள் மீது குரோத மனப்­பான்­மையைக் கொண்­டுள்­ளனர். அவர்கள் எப்­போதும் இன­வா­தத்­தையே பேசு­கி­றார்கள். முஸ்­லிம்கள் எப்­போதும் பெரும்­பான்மை மக்­க­ளுடன் சகோ­தர உற­வினை விரும்­பு­ப­வர்கள். உங்­க­ளுக்கு பௌத்த தேரர்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­புகள் உள்­ளன. எனவே, நீங்கள் பௌத்த தேரர்கள் சிலர் முஸ்­லிம்கள் மீது கொண்­டுள்ள குரோத மனப்­பான்­மையை களை­வ­தற்கு உதவ வேண்டும்" என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி கோத்­தபாய ராஜபக் ஷவிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார். இதற்கு பதி­ல­ளித்த அவர், “முஸ்­லிம்கள், பொது­ப­ல­சே­னாவை இயக்­கி­யவன் நான் என்றும் அந்த அமைப்பின் ஆத­ர­வாளன் நான் என்றும் தவ­றான கருத்­தைக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அந்த அமைப்­புக்கும் எனக்கும் தொடர்­புகள் இருக்­க­வில்லை. பொது­ப­ல­சேனா அமைப்பு காலியில் தனது அலு­வ­ல­க­மொன்றின் திறப்பு விழா­வுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தது. அத­னாலே நான் அந்­நிகழ்வில் கலந்து கொண்டேன். முஸ்லிம் சமூ­கத்­திடம் என்னைப் பற்றி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தப்பபிப்­பி­ரா­யங்கள் நீக்­கப்­பட வேண்டும் என நான் விரும்­பு­கிறேன்” என தெரி­வித்­தி­ருந்தார். இப் பின்­ன­ணி­யி­லேயே கடந்த வாரம் பேரு­வ­ளையில் நடை­பெற்ற இப்தார் நிகழ்­விலும் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்­டி­ருந்தார். இந்­நி­கழ்வில் அவர் முஸ்­லிம்கள் தொடர்பில் தெரி­வித்த கருத்­துக்கள் இன்­றைய நாட்­களில் கவ­னக்­கு­விப்பைப் பெற்­றுள்­ளன. “மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு அப்­போது முஸ்லிம் மக்­களின் முழு­மை­யான ஆத­ரவு இருந்­தது. எனினும் தேசிய மற்றும் சர்­வ­தேச சக்தி­களின் மூல­மாக பொய்­யான கருத்­துக்­களை உரு­வாக்கி எம்­மிடம் இருந்து முஸ்லிம் மக்­களை வேறு­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் முஸ்லிம் மக்­களை பாது­காக்க நாம் விரை­வான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம். இரா­ணு­வத்தை பயன்­ப­டுத்தி குழப்­ப­கர சூழலை கட்­டுப்­ப­டுத்தி முஸ்லிம் மக்­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம்” எனக் குறிப்­பிட்ட அவர், “இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் ராஜ­பக் ஷ ஆட்­சியில் அச்­சத்தில் வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்க நான் இட­ம­ளிக்­க­மாட்டேன். இந்த வாக்­கு­று­தியை நான் வழங்­கு­கின்றேன். முஸ்லிம் தலை­மைகள், மத தலை­வர்கள் ஆகிய பல­ருடன் இன்றும் நாம் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். முஸ்லிம் மக்­களின் மனங்­களில் உள்ள அச்சம் என்ன என்­பதை அறிந்து அவற்றை நீக்கும் வேலைத்­திட்டம் ஒன்­றினை முன்­னெ­டுப்­பது குறித்து கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம்” என்றும் தெரி­வித்­தி­ருந்தார். இதே­போன்று, சில வாரங்­க­ளுக்கு முன்னர் கோத்­த­பாய ராஜ­பக்‌­ஷ­வுக்கு மிக­நெ­ருக்­க­மான முஸ்­லிம்கள் சில­ரது ஏற்­பாட்டில் கொழும்பில் கலந்­து­ரை­யாடல் ஒன்றும் நடத்­தப்­பட்­டது. இதில் முஸ்லிம் சமூ­கத்தின் சம­காலப் பிரச்­சி­னைகள், புதிய தலை­மைத்­துவ சபை ஒன்றை உரு­வாக்­குதல் தொடர்­பான பல விட­யங்கள் ஆரா­யப்­பட்­டுள்­ளன. இதே குழு­வினர் அடுத்த வாரம் கொழும்பில் இப்தார் நிகழ்­வொன்றை ஏற்­பாடு செய்­துள்­ள­தா­கவும் இதில் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ பிர­தம அதி­தியாகக் கலந்து கொள்­ள­வுள்­ள­தா­கவும் பிந்திக் கிடைத்த தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. கோத்­த­பா­யவின் முஸ்லிம் சமூ­கத்தை இலக்கு வைத்த நகர்­வுகள் இவ்­வா­றி­ருக்க முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌­ஷவும் முஸ்லிம் விவ­கா­ரங்­களில் அக்­கறை காட்டத் தொடங்­கி­யுள்ளார். சில மாதங்­க­ளுக்கு முன்னர் தனது முஸ்லிம் விவ­கார இணைப்புச் செய­லாளர் ஒரு­வரை நிய­மித்­துள்ள மஹிந்த, முஸ்­லிம்­களில் தன்­னுடன் இணைந்து செயற்­ப­டக்­கூ­டி­ய­வர்­களை அடை­யாளம் கண்டு அவர்­க­ளு­ட­னான உற­வு­க­ளையும் பலப்­ப­டுத்தி வரு­கிறார். குறிப்­பாக மஹிந்த ராஜ­பக்‌­ஷ­வு­ட­னான முஸ்லிம் வர்த்­த­கர்கள் பலர் தொடர்ந்தும் நல்ல உறவைப் பேணி வரு­கின்­றனர். இந்­நி­லையில், மஹிந்த ஏற்­பாடு செய்­தி­ருந்த இப்தார் நிகழ்வு நேற்று முன்­தினம் கொழும்பு விஜே­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றது. இதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான ஏ.எச்.எம்.பௌஸி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தமை கவ­னிக்­கத்­தக்­க­தாகும். அத்­துடன் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ், பஷீர் சேகு­தாவுத், எம்.ரி.ஹச­னலி ஆகி­யோரும் இதில் கலந்து கொண்­டி­ருந்­தனர். இவர்­க­ளி­டையே மஹிந்­தவின் இல்­லத்தில் மு.கா. தலைவர் ஹக்­கீமின் பிர­சன்­னமே அதிக கவ­ன­யீர்ப்பை பெற்­றி­ருந்­தது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ரவூப் ஹக்கீம், மஹிந்த ராஜ­பக்‌­ஷவை சந்­தித்த முதல் சந்­தர்ப்­ப­மாக இது கரு­தப்­ப­டு­கி­றது. மஹிந்த அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சித்நு வந்த ஹஸன் அலியும் குறித்த இப்தார் நிகழ்வில் பங்­கு­பற்­றி­யி­ருந்தார். மேற்­படி நிகழ்­வுகள் எல்லாம் முஸ்­லிம்கள் தொடர்பில் ராஜ­பக்‌­ஷாக்­க­ளி­டமும் ராஜ­பக்‌­ஷாக்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் ஒரு மன­மாற்றம் வந்­துள்­ள­தையே சுட்­டி­நிற்­கின்­றன. கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் பெறு­பே­றுகள் மஹிந்த தரப்­புக்கு சாத­க­மாக அமைந்­த­மையும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களில் ஏற்­பட்­டுள்ள குழப்ப நிலை­களும் முஸ்­லிம்­களை மஹிந்த தரப்பு தொடர்பில் சிந்­திக்­கத்­தூண்­டி­யுள்­ளது எனலாம். 2020 இல் ராஜ­பக்‌­ஷாக்­களில் ஒரு­வரே இந்த நாட்டின் தலை­வ­ராக வரு­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன என முஸ்­லிம்­களில் ஒரு­சாரார் நம்­பு­கின்­றனர். இந்த நம்­பிக்­கையை நாடி­பி­டித்­துப்­பார்த்­ததன் பல­னா­கவே தற்­போது மஹிந்த, கோத்­த­பாய ஆகியோர் முஸ்­லிம்­க­ளுடன் நெருங்கிச் செயற்­படத் தொடங்­கி­யுள்­ளனர். இந்த இடத்தில் கடந்த கால ஆட்­சியில் ராஜ­பக்‌ஷ தரப்­பி­ன­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவு தொடர்பில் மீட்­டு­வதும் பொருத்­த­மா­ன­தாகும். கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பௌத்த இன­வாத சக்­தி­களின் தாக்­கு­தல்கள் மேலெ­ழுந்த சமயம், நாட்டின் பாது­காப்பு தொடர்­பான முழு­மை­யான அதி­கா­ரத்­தையும் தன்­வசம் கொண்­டி­ருந்த கோத்­த­பாய ராஜ ­பக் ஷ அவற்றைத் தடுத்து நிறுத்த காத்­தி­ர­மான முயற்­சி­களை முன்­னெ­டுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு அவர் மீது முஸ்­லிம்கள் தரப்பில் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இது நியா­ய­மா­ன­து­மாகும். இதன் கார­ண­மா­கவே அவர் சார்ந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தை தோற்­க­டிப்­பதில் முஸ்­லிம்கள் பெரு­மெ­டுப்பில் முன்­னின்று வாக்­க­ளித்­தனர். மஹிந்த ராஜ­பக்‌ஷ நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யா­க­வி­ருந்த போதிலும் கூட தனது ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற சுமார் 350 க்கும் மேற்­பட்ட சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்த காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. இதுவே முஸ்­லிம்கள் கடந்த தேர்­தலில் மஹிந்­தவை எதிர்த்­த­மைக்கு பிர­தான கார­ண­மாகும். இருந்­த­போ­திலும் கோத்­த­பாய ராஜ­­பக்‌ஷ பேரு­வளை இப்தார் நிகழ்வில் தெரி­வித்த கருத்­தா­னது, தான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கும்­பட்­சத்தில் முஸ்­லிம்­களின் ஆத­ரவு அவ­சியம் என்­பதை உணர்ந்­ததன் வெளிப்­பா­டா­கவே பார்க்­கப்­பட முடியும். முஸ்­லிம்­களின் ஆத­ர­வின்றி தனித்து பௌத்த பெரும்­பான்மை மக்­களின் வாக்­கு­களால் ஆட்­சி­ய­மைக்க முடியும் என்ற நிலைப்­பாட்டில் இருந்­த­வர்கள், இன்று முஸ்­லிம்­க­ளையும் அர­வ­ணைத்துச் செல்­வதன் மூல­மா­கத்தான் இந்த நாட்டில் நிலை­யான ஆட்­சி­யொன்றை அமைக்க முடியும் என்­பதை உணர்ந்­தி­ருக்­கி­றார்கள் எனின் அதுவே கடந்த தேர்தல்களில் முஸ்லிம்கள் எடுத்த நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். ராஜபக்‌­ஷாக்கள் மோசமானவர்கள், நல்லாட்சியினர் நல்லவர்கள் என்று சொல்ல முடியாதளவுக்கு இரு சாராரினதும் ஆட்சிக்காலங்களில் முஸ்லிம்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் இலங்கையின் கட்சி அரசியல் கலாசாரம் மற்றும் தேர்தல் முறைமைகளுக்கிணங்க முஸ்லிம்கள் இதில் ஏதேனுமொரு சக்தியை ஆதரித்தேயாகவேண்டிய நிலையுள்ளது. எனினும் நாட்டுக்கு தலைமை வகிக்க இவர்களில் யார் பொருத்தமானவர்கள் என்ற தீர்மானத்தை முஸ்லிம் சமூகம் எடுப்பதற்கு இன்னமும் காலம் இருக்கின்றது. எனினும் முஸ்லிம்கள் கடந்த தேர்தலைப் போன்று ராஜபக்‌ஷ தரப்பு வேட்பாளரை முற்றாக எதிர்த்து நிற்கமாட்டார்கள் என்பதை மாத்திரம் இப்போதைக்கு குறிப்பிட்டுச் சொல்ல முடியும். http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-02#page-4

முஸ்­லிம்­களை நெருங்கும் ராஜ­பக்‌­ஷாக்கள்!

3 months 2 weeks ago
முஸ்­லிம்­களை நெருங்கும் ராஜ­பக்‌­ஷாக்கள்!

 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌ஷ, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ உட்­பட ராஜ­பக்‌ஷ குடும்­பத்­தினர் அண்மைக் கால­மாக முஸ்லிம் சமூ­கத்­து­ட­னான தமது உறவை மீள்­பு­துப்­பிக்க ஆரம்­பித்­தி­ருப்­பதை பகி­ரங்­க­மா­கவே அவ­தா­னிக்க முடி­கி­றது.

முஸ்லிம் அமைப்­பு­களைச் சந்­தித்தல், முஸ்­லிம்­களின் பொது நிகழ்­வு­களில் பங்­கேற்றல், இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்­வு­களை நடத்­துதல் என பல வகை­களில் இந்த உறவு புதுப்­பித்தல் நிகழ்­வுகள் நடந்­தேறி வரு­கின்­றன.

கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ 'எளிய' அமைப்பை ஆரம்­பித்து 2020 ஆம் ஆண்டை நோக்­கிய தனது அர­சியல் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலை­யி­லேயே, அவர் முன்­னெப்­போ­து­மில்­லா­த­வாறு முஸ்­லிம்­க­ளுடன் அதிக நெருக்­கத்தைப் பேண ஆரம்­பித்­துள்ளார்.

இரு வாரங்­க­ளுக்கு முன்னர் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு தானா­கவே கோரிக்­கை­ வி­டுத்து விஜயம் செய்த அவர், அதன் நிர்­வா­கி­க­ளுடன் முஸ்லிம் சமூக, சமய விவ­கா­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

இதன்­போது "பௌத்த தேரர்­களில் சிலர் முஸ்­லிம்கள் மீது குரோத மனப்­பான்­மையைக் கொண்­டுள்­ளனர். அவர்கள் எப்­போதும் இன­வா­தத்­தையே பேசு­கி­றார்கள். முஸ்­லிம்கள் எப்­போதும் பெரும்­பான்மை மக்­க­ளுடன் சகோ­தர உற­வினை விரும்­பு­ப­வர்கள். உங்­க­ளுக்கு பௌத்த தேரர்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­புகள் உள்­ளன. எனவே, நீங்கள் பௌத்த தேரர்கள் சிலர் முஸ்­லிம்கள் மீது கொண்­டுள்ள குரோத மனப்­பான்­மையை களை­வ­தற்கு உதவ வேண்டும்" என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி கோத்­தபாய ராஜபக் ஷவிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார். இதற்கு பதி­ல­ளித்த அவர், “முஸ்­லிம்கள், பொது­ப­ல­சே­னாவை இயக்­கி­யவன் நான் என்றும் அந்த அமைப்பின் ஆத­ர­வாளன் நான் என்றும் தவ­றான கருத்­தைக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அந்த அமைப்­புக்கும் எனக்கும் தொடர்­புகள் இருக்­க­வில்லை. பொது­ப­ல­சேனா அமைப்பு காலியில் தனது அலு­வ­ல­க­மொன்றின் திறப்பு விழா­வுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தது. அத­னாலே நான் அந்­நிகழ்வில் கலந்து கொண்டேன். முஸ்லிம் சமூ­கத்­திடம் என்னைப் பற்றி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தப்பபிப்­பி­ரா­யங்கள் நீக்­கப்­பட வேண்டும் என நான் விரும்­பு­கிறேன்” என தெரி­வித்­தி­ருந்தார்.

இப் பின்­ன­ணி­யி­லேயே கடந்த வாரம் பேரு­வ­ளையில் நடை­பெற்ற இப்தார் நிகழ்­விலும் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்­டி­ருந்தார். இந்­நி­கழ்வில் அவர் முஸ்­லிம்கள் தொடர்பில் தெரி­வித்த கருத்­துக்கள் இன்­றைய நாட்­களில் கவ­னக்­கு­விப்பைப் பெற்­றுள்­ளன.

“மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு அப்­போது முஸ்லிம் மக்­களின் முழு­மை­யான ஆத­ரவு இருந்­தது. எனினும் தேசிய மற்றும் சர்­வ­தேச சக்தி­களின் மூல­மாக பொய்­யான கருத்­துக்­களை உரு­வாக்கி எம்­மிடம் இருந்து முஸ்லிம் மக்­களை வேறு­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் முஸ்லிம் மக்­களை பாது­காக்க நாம் விரை­வான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம். இரா­ணு­வத்தை பயன்­ப­டுத்தி குழப்­ப­கர சூழலை கட்­டுப்­ப­டுத்தி முஸ்லிம் மக்­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம்” எனக் குறிப்­பிட்ட அவர், “இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் ராஜ­பக் ஷ ஆட்­சியில் அச்­சத்தில் வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்க நான் இட­ம­ளிக்­க­மாட்டேன். இந்த வாக்­கு­று­தியை நான் வழங்­கு­கின்றேன். முஸ்லிம் தலை­மைகள், மத தலை­வர்கள் ஆகிய பல­ருடன் இன்றும் நாம் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். முஸ்லிம் மக்­களின் மனங்­களில் உள்ள அச்சம் என்ன என்­பதை அறிந்து அவற்றை நீக்கும் வேலைத்­திட்டம் ஒன்­றினை முன்­னெ­டுப்­பது குறித்து கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம்” என்றும் தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­போன்று, சில வாரங்­க­ளுக்கு முன்னர் கோத்­த­பாய ராஜ­பக்‌­ஷ­வுக்கு மிக­நெ­ருக்­க­மான முஸ்­லிம்கள் சில­ரது ஏற்­பாட்டில் கொழும்பில் கலந்­து­ரை­யாடல் ஒன்றும் நடத்­தப்­பட்­டது. இதில் முஸ்லிம் சமூ­கத்தின் சம­காலப் பிரச்­சி­னைகள், புதிய தலை­மைத்­துவ சபை ஒன்றை உரு­வாக்­குதல் தொடர்­பான பல விட­யங்கள் ஆரா­யப்­பட்­டுள்­ளன. இதே குழு­வினர் அடுத்த வாரம் கொழும்பில் இப்தார் நிகழ்­வொன்றை ஏற்­பாடு செய்­துள்­ள­தா­கவும் இதில் கோத்­த­பாய ராஜ­பக்‌ஷ பிர­தம அதி­தியாகக் கலந்து கொள்­ள­வுள்­ள­தா­கவும் பிந்திக் கிடைத்த தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கோத்­த­பா­யவின் முஸ்லிம் சமூ­கத்தை இலக்கு வைத்த நகர்­வுகள் இவ்­வா­றி­ருக்க முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌­ஷவும் முஸ்லிம் விவ­கா­ரங்­களில் அக்­கறை காட்டத் தொடங்­கி­யுள்ளார். சில மாதங்­க­ளுக்கு முன்னர் தனது முஸ்லிம் விவ­கார இணைப்புச் செய­லாளர் ஒரு­வரை நிய­மித்­துள்ள மஹிந்த, முஸ்­லிம்­களில் தன்­னுடன் இணைந்து செயற்­ப­டக்­கூ­டி­ய­வர்­களை அடை­யாளம் கண்டு அவர்­க­ளு­ட­னான உற­வு­க­ளையும் பலப்­ப­டுத்தி வரு­கிறார். குறிப்­பாக மஹிந்த ராஜ­பக்‌­ஷ­வு­ட­னான முஸ்லிம் வர்த்­த­கர்கள் பலர் தொடர்ந்தும் நல்ல உறவைப் பேணி வரு­கின்­றனர். இந்­நி­லையில், மஹிந்த ஏற்­பாடு செய்­தி­ருந்த இப்தார் நிகழ்வு நேற்று முன்­தினம் கொழும்பு விஜே­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றது. இதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான ஏ.எச்.எம்.பௌஸி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தமை கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

அத்­துடன் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ், பஷீர் சேகு­தாவுத், எம்.ரி.ஹச­னலி ஆகி­யோரும் இதில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இவர்­க­ளி­டையே மஹிந்­தவின் இல்­லத்தில் மு.கா. தலைவர் ஹக்­கீமின் பிர­சன்­னமே அதிக கவ­ன­யீர்ப்பை பெற்­றி­ருந்­தது.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ரவூப் ஹக்கீம், மஹிந்த ராஜ­பக்‌­ஷவை சந்­தித்த முதல் சந்­தர்ப்­ப­மாக இது கரு­தப்­ப­டு­கி­றது. மஹிந்த அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சித்நு வந்த ஹஸன் அலியும் குறித்த இப்தார் நிகழ்வில் பங்­கு­பற்­றி­யி­ருந்தார்.

மேற்­படி நிகழ்­வுகள் எல்லாம் முஸ்­லிம்கள் தொடர்பில் ராஜ­பக்‌­ஷாக்­க­ளி­டமும் ராஜ­பக்‌­ஷாக்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் ஒரு மன­மாற்றம் வந்­துள்­ள­தையே சுட்­டி­நிற்­கின்­றன.

கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் பெறு­பே­றுகள் மஹிந்த தரப்­புக்கு சாத­க­மாக அமைந்­த­மையும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களில் ஏற்­பட்­டுள்ள குழப்ப நிலை­களும் முஸ்­லிம்­களை மஹிந்த தரப்பு தொடர்பில் சிந்­திக்­கத்­தூண்­டி­யுள்­ளது எனலாம். 2020 இல் ராஜ­பக்‌­ஷாக்­களில் ஒரு­வரே இந்த நாட்டின் தலை­வ­ராக வரு­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன என முஸ்­லிம்­களில் ஒரு­சாரார் நம்­பு­கின்­றனர். இந்த நம்­பிக்­கையை நாடி­பி­டித்­துப்­பார்த்­ததன் பல­னா­கவே தற்­போது மஹிந்த, கோத்­த­பாய ஆகியோர் முஸ்­லிம்­க­ளுடன் நெருங்கிச் செயற்­படத் தொடங்­கி­யுள்­ளனர்.

இந்த இடத்தில் கடந்த கால ஆட்­சியில் ராஜ­பக்‌ஷ தரப்­பி­ன­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவு தொடர்பில் மீட்­டு­வதும் பொருத்­த­மா­ன­தாகும்.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பௌத்த இன­வாத சக்­தி­களின் தாக்­கு­தல்கள் மேலெ­ழுந்த சமயம், நாட்டின் பாது­காப்பு தொடர்­பான முழு­மை­யான அதி­கா­ரத்­தையும் தன்­வசம் கொண்­டி­ருந்த கோத்­த­பாய ராஜ

­பக் ஷ அவற்றைத் தடுத்து நிறுத்த காத்­தி­ர­மான முயற்­சி­களை முன்­னெ­டுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு அவர் மீது முஸ்­லிம்கள் தரப்பில் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இது நியா­ய­மா­ன­து­மாகும். இதன் கார­ண­மா­கவே அவர் சார்ந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தை தோற்­க­டிப்­பதில் முஸ்­லிம்கள் பெரு­மெ­டுப்பில் முன்­னின்று வாக்­க­ளித்­தனர்.

மஹிந்த ராஜ­பக்‌ஷ நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யா­க­வி­ருந்த போதிலும் கூட தனது ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற சுமார் 350 க்கும் மேற்­பட்ட சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்த காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. இதுவே முஸ்­லிம்கள் கடந்த தேர்­தலில் மஹிந்­தவை எதிர்த்­த­மைக்கு பிர­தான கார­ண­மாகும்.

இருந்­த­போ­திலும் கோத்­த­பாய ராஜ­­பக்‌ஷ பேரு­வளை இப்தார் நிகழ்வில் தெரி­வித்த கருத்­தா­னது, தான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கும்­பட்­சத்தில் முஸ்­லிம்­களின் ஆத­ரவு அவ­சியம் என்­பதை உணர்ந்­ததன் வெளிப்­பா­டா­கவே பார்க்­கப்­பட முடியும்.

முஸ்­லிம்­களின் ஆத­ர­வின்றி தனித்து பௌத்த பெரும்­பான்மை மக்­களின் வாக்­கு­களால் ஆட்­சி­ய­மைக்க முடியும் என்ற நிலைப்­பாட்டில் இருந்­த­வர்கள், இன்று முஸ்­லிம்­க­ளையும் அர­வ­ணைத்துச் செல்­வதன் மூல­மா­கத்தான் இந்த நாட்டில் நிலை­யான ஆட்­சி­யொன்றை அமைக்க முடியும் என்­பதை உணர்ந்­தி­ருக்­கி­றார்கள் எனின் அதுவே கடந்த தேர்தல்களில் முஸ்லிம்கள் எடுத்த நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும்.

ராஜபக்‌­ஷாக்கள் மோசமானவர்கள், நல்லாட்சியினர் நல்லவர்கள் என்று சொல்ல முடியாதளவுக்கு இரு சாராரினதும் ஆட்சிக்காலங்களில் முஸ்லிம்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் இலங்கையின் கட்சி அரசியல் கலாசாரம் மற்றும் தேர்தல் முறைமைகளுக்கிணங்க முஸ்லிம்கள் இதில் ஏதேனுமொரு சக்தியை ஆதரித்தேயாகவேண்டிய நிலையுள்ளது. எனினும் நாட்டுக்கு தலைமை வகிக்க இவர்களில் யார் பொருத்தமானவர்கள் என்ற தீர்மானத்தை முஸ்லிம் சமூகம் எடுப்பதற்கு இன்னமும் காலம் இருக்கின்றது.

எனினும் முஸ்லிம்கள் கடந்த தேர்தலைப் போன்று ராஜபக்‌ஷ தரப்பு வேட்பாளரை முற்றாக எதிர்த்து நிற்கமாட்டார்கள் என்பதை மாத்திரம் இப்போதைக்கு குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-02#page-4

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்

3 months 2 weeks ago
"எங்கள் வேலை போனாலும், ஆலையை மூடியதில் மகிழ்ச்சி": ஸ்டெர்லைட் ஊழியர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஸ்டெர்லைட் ஊழியர் விஜயபாலன் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், அதன் ஊழியர்கள் தங்களுக்கு மாற்றுத் தொழில் அமைத்துத் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தூத்துக்குடி மக்களின் தொடர் போரட்டத்தையடுத்து கடந்த மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. ஆலையில் நிரந்திர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்த ஆலையை நம்பி வாழ்ந்து வருகின்றனர். தமிழக அரசின் திடீர் நடவடிக்கையால், அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனிடையே அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியர்களை கடந்த மே 22ஆம் தேதி முதலே வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாகவும், இனிமேல் பணிக்கு வர தேவை இல்லை என ஒப்பந்த ஊழியர்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. Image captionஊழியர் ரமேஷ் ஆனால் அதில் ஊதியம் குறித்த எந்தவித தகவலும் இல்லாததால் ஊழியர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்து ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்களிடம் பிபிசி பேசியது. "நான் பதினைந்து ஆண்டுகளாக ஸ்டைர்லைட் ஆலையில் வேலை செய்கிறேன். இந்த திடீர் மூடல் என்பது எங்களுக்கு குடும்ப ரீதியா கஷ்டம் தான். இன்று வரை எங்களுக்கு வேலை இருக்கிறதா இல்லையா என்று தெரியாத நிலையில்தான் 3000 பேரும் இருக்கிறோம்" என்று கூறுகிறார் ஊழியர் தங்கபாண்டி. கடந்த மாதத்திற்கான ஊதியம் வருமா என்று தெரியாமல் இருக்கும் அவர், தன் குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தை எவ்வாறு செலுத்த போகிறோம் என்ற கவலையில் உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாகக் கூறிய அவர், "ஸ்டைர்லைட் ஆலையை மூடியது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக" தெரிவித்தார். "புதிதாக ஆலையை விரிவாக்கம் செய்தால், எங்கள் ஊரே காணாமல் போயிடும். கம்பெனிக்குள்ள மாஸ்க் இல்லாம இருக்க முடியாது. ஒரு அடி தோண்னாலும் ஆசீட் தண்ணீ வருது. எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாற்று வேலைக்கு வழி செய்து கொடுக்க வேண்டும்" என்றும் தங்கபாண்டி கூறினார். இதுகுறித்து பேசிய ஒப்பந்த ஊழியர் ரமேஷ், "ஆலையில் பணிபுரிந்ததால் தோல் நோய், ஆஸ்தும்மா போன்ற நோய்கள் வருவதாகவும் வேறு வழி இல்லாமல் அங்கு வேலை செய்து வருவதாகவும்" குறிப்பிட்டார். ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தூத்துக்குடி மக்களுக்கு ரொம்ப சந்தோஷம் என்கிறார் லாரி எடை மேடை ஊழியர் மணிகண்டன். "ஆலைக்கு தினமும் எங்க அண்ணன்தான் குடிநீர் சப்பளை செஞ்சாங்க. இப்ப தொழில் இல்லாம் கஷ்டப்படுறான். நாங்க மாற்று வழியை தான் பாக்கனும். இருந்தாலும் மக்கள பாதிக்கிற ஸ்டைர்லைட் எங்களுக்கு வேண்டாம்" என்று கூறுகிறார் ஆனந்த். ஸ்டெர்லைட் ஆலையில் வேலைக்கு சேர்த்து விட்ட, காண்ட்ராக்ட் நிறுவனம் சார்பில் ஒரு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதில், "மே 22ஆம் தேதியில் இருந்து எங்கள் வேலை முடிந்தது எனவும், எங்களுக்கான செட்டில்மென்ட் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் எந்த விதமான தெளிவும் இல்லை. மேலும், வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்க்கு முன்பே அறிவிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளதாக" ஒப்பந்த ஊழியர் சோமசுந்தரம் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-44342498

பிரபாகரன் ஒரே தொலைபேசி அழைப்பில் வெற்றி பெற்றிருப்பார் – மஹிந்தவின் தகவல்

3 months 2 weeks ago
பிரபாகரன் ஒரே தொலைபேசி அழைப்பில் வெற்றி பெற்றிருப்பார் – மஹிந்தவின் தகவல் “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போன்ற ஜனாதிபதி இலங்கை யுத்த காலத்தில் பதவியில் இருந்திருந்தால், பிரபாகரன் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்பார்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு விஷேட நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், தற்போது உள்ளதைப் போன்ற அரசாங்கத்தை இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் கண்டதில்லை. ஊழல்களும், திருட்டுகளும் நிறைந்து வழியும் அரசாங்கமே தற்போது உள்ளது. தமிழ்மக்களின் ஆதரவினால் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. மைத்திரி ஜனாதிபதியாக வந்தவுடன் ரணிலை பிரதமராக்கினார். அதன் பின்னர் முழுக்கட்டுப்பாடுகளும் பிரதமர் கைகளுக்கு சென்று விட்டது. இப்போதுபிரதமரை மாற்ற முடியாத நிலையில் ஜனாதிபதி உள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்துகளின் மூலம் அவரின் எதிர்காலம் தெளிவாக தெரிகின்றது. ஜனாதிபதி தற்போது இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்துள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் என்ன நடக்கும் என்பதே அவருக்கு தெரியவில்லை. மைத்திரி தனிமைப்படுத்தப்படவுள்ளார். அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதை புரிந்து கொண்டுள்ள அவர், என்னால் எதுவும் முடியாது எனக்கூறிக்கொண்டு அழுது அழுது முழுநாட்டையும் சுற்றி வந்து கொண்டிருக்கின்றார். எவ்வாறாயினும் நாட்டுக்கு முறையான தலைமைத்துவம் அவசியம், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தீர்க்கமான முடிவுகள் அவசியம். இந்த நிலையில் கோட்டாபய அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்ற கருத்து அதிகமானோரிடம் காணப்படுகின்றது இந்த விடயம் குறித்தும் நாம் ஆலோசனைகளைச் செய்துவருகின்றோம் எனவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/?p=682024-பிரபாகரன்-ஒரே-தொலைபேசி-அழைப்பில்-வெற்றி-பெற்றிருப்பார்-–-மஹிந்தவின்-தகவல்

பிரபாகரன் ஒரே தொலைபேசி அழைப்பில் வெற்றி பெற்றிருப்பார் – மஹிந்தவின் தகவல்

3 months 2 weeks ago
பிரபாகரன் ஒரே தொலைபேசி அழைப்பில் வெற்றி பெற்றிருப்பார் – மஹிந்தவின் தகவல்

 

 

maithri_mahinda-720x450.jpg

 

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போன்ற ஜனாதிபதி இலங்கை யுத்த காலத்தில் பதவியில் இருந்திருந்தால், பிரபாகரன் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்பார்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு விஷேட நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

தற்போது உள்ளதைப் போன்ற அரசாங்கத்தை இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் கண்டதில்லை. ஊழல்களும், திருட்டுகளும் நிறைந்து வழியும் அரசாங்கமே தற்போது உள்ளது.

தமிழ்மக்களின் ஆதரவினால் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. மைத்திரி ஜனாதிபதியாக வந்தவுடன் ரணிலை பிரதமராக்கினார். அதன் பின்னர் முழுக்கட்டுப்பாடுகளும் பிரதமர் கைகளுக்கு சென்று விட்டது. இப்போதுபிரதமரை மாற்ற முடியாத நிலையில் ஜனாதிபதி உள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்துகளின் மூலம் அவரின் எதிர்காலம் தெளிவாக தெரிகின்றது. ஜனாதிபதி தற்போது இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்துள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் என்ன நடக்கும் என்பதே அவருக்கு தெரியவில்லை.

மைத்திரி தனிமைப்படுத்தப்படவுள்ளார். அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதை புரிந்து கொண்டுள்ள அவர், என்னால் எதுவும் முடியாது எனக்கூறிக்கொண்டு அழுது அழுது முழுநாட்டையும்  சுற்றி வந்து கொண்டிருக்கின்றார்.

எவ்வாறாயினும் நாட்டுக்கு முறையான தலைமைத்துவம் அவசியம், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தீர்க்கமான முடிவுகள் அவசியம். இந்த நிலையில் கோட்டாபய அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்ற கருத்து அதிகமானோரிடம் காணப்படுகின்றது இந்த விடயம் குறித்தும் நாம் ஆலோசனைகளைச் செய்துவருகின்றோம் எனவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/?p=682024-பிரபாகரன்-ஒரே-தொலைபேசி-அழைப்பில்-வெற்றி-பெற்றிருப்பார்-–-மஹிந்தவின்-தகவல்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சுவீடன் தமிழர்கள் போராட்டம்!

3 months 2 weeks ago
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சுவீடன் தமிழர்கள் போராட்டம்! சுவீடன் நாட்டின் கோத்தென்பர்க் நகரில், தூத்துக்குடி மக்களின் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களின் பாதிப்பிற்கான நீதிக்காகவும் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டம் நடந்தது. நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தின் பொழுது, ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத நடவடிக்கைகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலையால் பரப்பப்பட்டு வரும் நச்சுக் காற்று, நீர் மாசடைதல், 1998 முதல் 2013 நீதிமன்றங்களும் தமிழ்நாடு அரசாங்கங்களும் எடுத்த சட்ட நடவடிக்கைகள், வேதாந்தா நிறுவனத்தில் உலகளாவிய சட்ட விதிமுறை மீறல்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. போராட்டத்தின் முடிவில், கோத்தென்பர்க் வாழ் மக்களின் சார்பாக, சுவீடனுக்கான இந்திய தூதரகத்திற்கு எழுதப்பட்ட கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு, அனைவரும் ஏற்று கையெழுத்திட்டனர். இந்திய தூதரகத்திற்கு எழுதப்பட்ட மனுவின் பிரதியை, சுவீடனின் பிரதமர், துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர், சுவீடன்-இந்திய வணிக அவை, Amnesty International, Green Peace, ஐரோப்பிய, நோர்டிக் நாடுகளின் பசுமை-இடதுசாரி முன்னணி நாடாளுமன்றக் கூட்டமைப்பு, Volvo, ABB, SKF உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் தெரிவித்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை குறித்தும் மே 22ம் தேதி நடந்த கலவரம் குறித்தும் முக்கியமாக சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 1) மே 22 கலவரத்திற்கான நீதி விசாரணையை, பணியில் இயங்கும் மூன்று நீதிபதிகள் (தமிழகத்தவர் 1, பிற மாநிலத்தவர் 2) தலைமையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் 2 பிரதிநிதிகளின் மேற்பார்வையில் தொடங்க வேண்டும். 2) ஆணையத்தில் விசாரணைக்காக, தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள், இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அனைவரும் அழைக்கப்பட வேண்டும். 3) தமிழக அரசு, மே 28 ஆம் நாள் வெளியிட்ட அரசாணையை உறுதி செய்ய, அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவது தமிழக அரசின் கொள்கை முடிவென அறிவிக்க வேண்டும். 4) வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். வருங்காலத்தில் கடவுச்சீட்டு உள்ளிட்ட எவ்வித விசாரணைகளின் பொழுதும் அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது. 5) ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டப் பிறகு, அடுத்த 6 மாதங்களுக்கு உரிய சம்பளத்தை தொழிலாளர்கள் அனைவருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கிட வேண்டும், 6 மாதத்திற்குள் அவர்களுக்கான பணி வாய்ப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். 6) அரச வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு, தமிழக அரசு, இந்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் இணைந்து, நல்லிணக்கம், மீள் கட்டமைப்பு, நிவாரணம், உள்ளிட்டவைகளில் ஈடுபடல் வேண்டும். 7) ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட, கடல், நில, நீர், காற்று உள்ளிட்டவைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளின் மொத்த செலவுகளையும் ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமே ஏற்க வேண்டும். 😎 மே 22, அரச கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு மண்டபத்தையும் அதனை ஒட்டி, பெரிய அளவிலான பசுமைப் பூங்கா ஸ்டெர்லைட் ஆலையின் செலவில் அமைத்திடல் வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்து, அதில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது தங்களை மிக ஆழமாக பாதித்ததாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அந்த மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும், ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் இனியும் மக்களை பாதிக்கும் வகையில் இயங்கிடக் கூடாது என்பதே தங்களின் எண்ணம் என்பதையும் வெளிப்படுத்தினார்கள். https://www.vikatan.com/news/tamilnadu/126672-sweden-tamils-protest-against-sterlite.html

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சுவீடன் தமிழர்கள் போராட்டம்!

3 months 2 weeks ago
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சுவீடன் தமிழர்கள் போராட்டம்!
 
 

சுவீடன் நாட்டின் கோத்தென்பர்க் நகரில், தூத்துக்குடி மக்களின் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களின் பாதிப்பிற்கான நீதிக்காகவும் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டம் நடந்தது.

நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தின் பொழுது, ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத நடவடிக்கைகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலையால் பரப்பப்பட்டு வரும் நச்சுக் காற்று, நீர் மாசடைதல், 1998 முதல் 2013 நீதிமன்றங்களும் தமிழ்நாடு அரசாங்கங்களும் எடுத்த சட்ட நடவடிக்கைகள், வேதாந்தா நிறுவனத்தில் உலகளாவிய சட்ட விதிமுறை மீறல்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

 

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக ஸ்வீடன் தமிழர்கள்

போராட்டத்தின் முடிவில், கோத்தென்பர்க் வாழ் மக்களின் சார்பாக, சுவீடனுக்கான இந்திய தூதரகத்திற்கு எழுதப்பட்ட கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு, அனைவரும் ஏற்று கையெழுத்திட்டனர். இந்திய தூதரகத்திற்கு எழுதப்பட்ட மனுவின் பிரதியை, சுவீடனின் பிரதமர், துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர்,  சுவீடன்-இந்திய வணிக அவை, Amnesty International, Green Peace, ஐரோப்பிய, நோர்டிக் நாடுகளின் பசுமை-இடதுசாரி முன்னணி நாடாளுமன்றக்  கூட்டமைப்பு, Volvo, ABB, SKF உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக ஸ்வீடன் தமிழர்கள்

அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை குறித்தும் மே 22ம் தேதி நடந்த கலவரம் குறித்தும் முக்கியமாக சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.  

1) மே 22 கலவரத்திற்கான நீதி விசாரணையை, பணியில் இயங்கும் மூன்று நீதிபதிகள் (தமிழகத்தவர் 1, பிற மாநிலத்தவர் 2) தலைமையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் 2 பிரதிநிதிகளின் மேற்பார்வையில் தொடங்க வேண்டும்.

2) ஆணையத்தில் விசாரணைக்காக, தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள், இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அனைவரும் அழைக்கப்பட வேண்டும்.

3) தமிழக அரசு, மே 28 ஆம் நாள் வெளியிட்ட அரசாணையை உறுதி செய்ய, அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவது தமிழக அரசின் கொள்கை முடிவென அறிவிக்க வேண்டும்.

4) வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். வருங்காலத்தில் கடவுச்சீட்டு உள்ளிட்ட எவ்வித விசாரணைகளின் பொழுதும் அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது.

5) ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டப் பிறகு, அடுத்த 6 மாதங்களுக்கு உரிய சம்பளத்தை தொழிலாளர்கள் அனைவருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கிட வேண்டும், 6 மாதத்திற்குள் அவர்களுக்கான பணி வாய்ப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

6) அரச வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு, தமிழக அரசு, இந்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் இணைந்து, நல்லிணக்கம், மீள் கட்டமைப்பு, நிவாரணம், உள்ளிட்டவைகளில் ஈடுபடல் வேண்டும்.

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக சுவீடன் தமிழர்கள்

7) ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட, கடல், நில, நீர், காற்று உள்ளிட்டவைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளின் மொத்த செலவுகளையும் ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமே ஏற்க வேண்டும்.

😎 மே 22, அரச கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு மண்டபத்தையும் அதனை ஒட்டி, பெரிய அளவிலான பசுமைப் பூங்கா ஸ்டெர்லைட் ஆலையின் செலவில் அமைத்திடல் வேண்டும்.

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்து, அதில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது தங்களை மிக ஆழமாக பாதித்ததாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அந்த மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும், ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் இனியும் மக்களை பாதிக்கும் வகையில் இயங்கிடக் கூடாது என்பதே தங்களின் எண்ணம் என்பதையும் வெளிப்படுத்தினார்கள். 

https://www.vikatan.com/news/tamilnadu/126672-sweden-tamils-protest-against-sterlite.html

கருணாநிதி 95-ஆவது பிறந்தநாள்...

3 months 2 weeks ago
கருணாநிதி சாதனைகளுக்கு அடித்தளமிட்ட குணங்கள்! #Karunanidhi95 பத்தாம் வகுப்பு தோல்வியடைந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், தமிழ் நாட்டின் முதலமைச்சராக வருதல் அத்தனை எளிமையான ஒன்றல்ல. அது அவருடைய தமிழுக்குக் கிடைத்த பரிசு. அவருடைய மொத்த சாதனைக்கும் பின்னால் அவரைத் தாங்கிப் பிடித்திருந்தது அவருடைய தமிழ் ஒன்றுதான். கருணாநிதியைப் புரிந்துகொள்ளுதல், அவருடைய தமிழாற்றலைப் புரிந்துகொள்வதாகவே இருக்கும். அவரிடம் இருந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் இவைதான் அவரை இரு கரம் பிடித்து முதல்வர் பதவி நோக்கி அழைத்துச் சென்றன. அவருடைய திரைப்பட வசனங்கள் அன்றைய ஐம்பதுகளில் அறுபதுகளில் அவரை புகழின் உச்சத்தில் நிறுத்தின. சிவாஜிக்கு ‘பராசக்தி’, ‘மனோகரா’ என்றால் எம்.ஜி.ஆருக்கு ‘மந்திரிகுமாரி’, ‘மலைக்கள்ளன்’. அன்றைய இரண்டு உச்ச நடத்திரங்களை அடையாளப்படுத்திய தமிழுக்குச் சொந்தக்காரர். ‘‘ஆகாரத்துக்காக அழுக்கை உண்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன்... அதுபோலத்தான் நானும்’’ என கால் மணிநேரம் கோர்ட் வசனம் எழுதி பிரமிக்க வைக்கத் தெரிந்தவர். அது சிவாஜி கணேசனுக்கு. காதலியை இரவு நேரத்தில் சந்திக்க வருவார் நாயகன். வெகுநேரம் பேசியாயிற்று. ‘‘வரட்டுமா?’’ என்பார். காதலி, எங்கே செல்லப்போகிறீர்கள் என்பதாக ‘‘எங்கே?’’ என்பார். ‘‘அருகே’’ என்பார் நாயகன். இது எம்.ஜி.ஆருக்கு. ‘‘ஓடினாள்... ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்...’’ சேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் வசனக் காட்சி போல தமிழர்களால் இன்றும் உச்சரிக்கப்படும் மறக்க முடியாத வசன வரிகள். குறளோவியம் என ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதை எழுதினார். குறளுக்கு உரை எழுதினார். தொல்காப்பியப் பூங்கா எழுதினார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது வள்ளுவன் மொழி. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கணியன் பூங்குன்றன் எழுதிய சங்க இலக்கிய வரி. இரண்டையும் இணைத்தார்... ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... பிறந்தபின்... யாதும் ஊரே யாவரும் கேளிர்.’’ என்றார் சுருக்கமாக. சமயோசிதமாக, சுருக்கமாக, வேகமாக பதில் சொல்வது அவருக்கே உரிய திறமை. வெளிநாட்டில் இருந்து வந்த நிருபர் ஒருவர், ‘‘நீங்கள் என்ன படித்தீர்கள்?’’ என்றார். ‘‘எம்.ஏ., பி.எஃப்.’’ என்றார். ‘‘அப்படி ஒரு படிப்பா?’’ ‘‘மார்ச் அட்டம்ப்ட்... பட்.. ஃபெயில்’’ என்றார். சட்டசபையில் அவருடைய விவாதங்கள் சுவாரஸ்யமானவை. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஒரு உறுப்பினர், ‘‘இப்படியே போனால் தமிழகத்தை ஆண்டவந்தான் காப்பாற்ற முடியும்’’ என்றார் ஓர் உறுப்பினர். ‘‘தமிழகத்தை ஏற்கெனவே ஆண்டவன் நான். உறுப்பினர் என்னைத்தான் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்’’ என்றார். நடிகர் ராதா ரவி, தன் தந்தை நடித்த ரத்தக்கண்ணீர் நாடகத்தை சில ஆண்டுகளுக்கு எடுத்து நடித்தார். நாடகத்தைத் தொடங்கிவைத்துப் பார்த்தார். முடிவிலே பேசினார். ‘‘ஒப்பனையைப் பார்த்தேன். அதில் உங்கப்பனையே பார்த்தேன்’’ என ராதா ரவியை நோக்கி ஆரம்பித்தபோது அரங்கம் அதிர்ந்தது. கவியரங்கம்... கண்ணதாசன், சுரதா, வாலி, அப்துல் ரகுமான்... என அவ்வப்போது களைகட்டும். ஒரு முறை கணக்கு என்றத் தலைப்பில் ஒரு கவியரங்கம். கழித்தல், பெருக்கல், வகுத்தல், பெருக்கல் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தலைப்பு. கண்ணதாசன் வெகுகாலம் தி.மு.க-வை விட்டுப் பிரிந்திருந்து மீண்டும் வந்து சேர்ந்தார். அவருக்குக் கொடுத்த தலைப்பு கூட்டல். ‘‘நாட்டை ஆண்டாலும் என்னை அமைச்சர் என்றுதான் சொல்கிறீர்... கண்ணதாசனை கவியரசர் என்கிறீர்’’ என ஆரம்பித்துத் திரும்பி வந்த கவியரசரை அரவணைத்தார். கவியரங்கத்தில் தமிழ் விளையாடும். ஒருமுறை கவிஞர் அப்துல் ரகுமான் தாமதமாக வருகிறார். கருணாநிதி தலைமையில் கவியரங்கம் தொடங்கிவிட்டது. தாமதமாக வந்த கவிஞரை ஜாடையாகக் கிண்டலடித்தார்கருணாநிதி. அப்துல் ரகுமான் கவிபாட வந்தார். ‘‘ஏன் காத்திருக்கக் கூடாதா?’’ என்றார் கருணாநிதியைப் பார்த்து. சபையே அதிர்ச்சியுடன் கவனித்தது. அடுத்தவரி... ‘‘காத்திருக்கக் கூடாதா?... எம்மையெல்லாம் காத்திருக்கக் கூடாதா?’’ என்றார் அப்துல் ரகுமான். கருணாநிதி மகிழ்ந்து சிரித்தார். ‘‘வெற்றி பல பெற்று விருது பெற நான் வரும்போது வெகுமானம் எதுவேண்டும் எனக்கேட்டால்... அப்துல் ரகுமானைத் தருக என்பேன்’’ என்றார் கருணாநிதி. தமிழ்ச் சபைகளில் புரவலரே புலவராக இருந்து தமிழ் வளர்த்த காலம் அது. எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா சாலையில் இருந்த கருணாநிதியின் சிலையை எம்.ஜி.ஆரின் தொண்டர் ஒருவர் இடித்தார். அந்தப் படம் முரசொலியில் வெளியானது. ‘‘பரவாயில்லை தம்பி... நீ என் முதுகிலே குத்தவில்லை.. நெஞ்சிலேதான் குத்துகிறாய்’’ எனப் பிரசுரித்திருந்தார். கதை- வசனம், மேடைப் பேச்சு, கவியரங்கம், சட்டசபை உரை என அனைத்திலுமே கருணாநிதியின் முத்திரை ஆழப் பதிந்திருந்தது. கடந்த 60 ஆண்டுகளில் அவருடைய படம் வெளிவராத செய்தித்தாள் இல்லை... அவரில்லாமல் செய்தியில்லை. போற்றலையும் தூற்றலையும் சமமாக பாவிக்கத் தெரிந்த ஆற்றலையும் அவர் பெற்றிருந்தார். ரோமாபுரி பாண்டியன், பாயும்புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம் போன்ற சரித்திரக் கதைகளையும் வெள்ளிக்கிழமை, ஒரே ரத்தம் போன்ற சமூக கதைகளையும் எழுதினார். சுமார் 80 ஆண்டு பொது வாழ்வில் அவர் எதிர்கொண்ட தலைவர்கள் ஏராளம்... இந்திரா காந்தி, காமராஜர், மொராஜி தேசாய், வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர்., போன்ற பலருடனும் அரசியல் நடத்தியவர். இத்தனை பெரிய பரப்பில் அரசியல் நிகழ்த்திய தலைவர் இந்தியாவிலேயே யாரும் இல்லை. அது ஒரு சாதனை என்றால் அதனுடன் இத்தனை இலக்கிய நூல்கள், கூட்டங்கள், பத்திரிகை ஆசிரியர் பணி எனச் சுழன்று சூறாவளியாக வந்தவர். இன்று அவருடைய அமைதி, எதிரிகளைக்கூட அசைத்துப் பார்த்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்நாளெல்லாம் ஓடிக்கொண்டே இருந்த ஒருவரின் அமைதி ஏற்படுத்திய ஆழமான உணர்வு அது. பிரதமர் மோடி அவர் வீடு தேடிவந்து பார்த்துவிட்டுச் சென்றது அதனுடைய அடையாளம்தான். எப்போதும் சந்திக்க மறுத்த ராகுல் காந்தி வந்து பார்த்துவிட்டுச் சென்றார். புதிதாகக் கட்சித் தொடங்கிய ரஜினியும் கமலும் வந்து ஆசி பெற்றுச் செல்கிறார்கள். நூற்றாண்டை நெருங்கும் அவர் நிகழ்த்திய சாதனையில் இந்த அமைதியும்கூட முக்கியமானதுதான். https://www.vikatan.com/news/tamilnadu/126647-what-is-the-secret-for-karunanidhis-success.html

தூற்றினாலும் பரவாயில்லை, இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள்: கேப்டன் சுனில் உருக்கம்

3 months 2 weeks ago
‘ரசிகர்களே, கால்பந்துக்கும் ஆதரவு தாருங்கள்’- சுனில் சேத்ரிக்கு விராட் கோலி ஆதரவு விராட் கோலி, சுனில் சேத்ரி : கோப்புப்படம் இந்திய கால்பந்து அணிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக ரசிகர்களிடம் பேசியதற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு மக்களும்,ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள் என்று இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விராட் கோலி இது தொடர்பாக விராட் கோலி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ''என்னுடைய நல்ல நண்பரும், கால்பந்து அணியின் கேப்டனுமான சுனில் சேத்ரியின் வேண்டுகோளையும், கோரிக்கையையும் ரசிகர்கள் அனைவரும் கவனியுங்கள். கால்பந்துப் போட்டிக்கு ஆதரவு கொடுங்கள். அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். நான் கால்பந்துப் போட்டிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துவிட்டேன். என் ரசிகர்கள் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். இந்தியாவை உலகத்தின் சிறந்த விளையாட்டு தேசமாக உருவாக்க நினைத்தால் கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டுக்கு மட்டும் ரசிகர்கள் முழுமையாக ஆதரவு அளிப்பது சரியன்று, அனைத்துப் போட்டிகளுக்கும் ரசிகர்கள் சமமான ஆதரவை அளிக்கவேண்டும். முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.'' இவ்வாறு விராட் கோலி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, மிகச்சிறந்த வீரர், ஐரோப்பிய வீரர்களுக்கு இணையாக விளையாடும் திறமை பெற்றவர். சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிகமான கோல் அடித்தவர்கள் வரிசையில் 59 கோல்கள் அடித்து சுனில் சேத்ரி 3-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் சுனித் சேத்ரிக்கு முன்பாக, முதல் இரு இடங்களிலும் அர்ஜென்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸியும், போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டுமே இருக்கின்றனர் என்பது எத்தனை இந்திய ரசிகர்களுக்குத் தெரியும் என்பது வியப்புதான். அமெரிக்க கால்பந்துவீரர் கிளிண்ட் டெம்ப்சே, ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா ஆகியோரின் கோல் சாதனைகளை எல்லாம் சுனில் சேத்ரி முறியடித்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இந்திய கால்பந்து அணி சர்வதேச தர வரிசையில் 97-வது இடத்தில் உள்ளது. http://tamil.thehindu.com/sports/article24072016.ece?homepage=true

இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு?

3 months 2 weeks ago
இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு? வடக்குமான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக செயற்பட்டு வரும் அவர் அடுத்த மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் புலம்பெயர் அரசியல் கட்சி ஒன்றினை எதிர்வரும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்தகாலங்களில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சி அல்லது முன்னணி ஒன்றை ஆரம்பித்தால், அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தெரிவித்து வந்தார். இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம் என விக்னேஸ்வரன் கூறியிருந்தார். ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன். என அவர் முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழ் மக்களை பிரித்து எமது இனத்தை அழிப்பதற்கும், எமது ஒற்றுமையைச் சீர் குலைக்கவும் பல சக்திகள் முயன்று கொண்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமனற உறுப்பினர் சிவமோகன் நேற்று தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி இவ்வாறு தமிழ் மக்களை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டால் பிரபாகரனை காட்டிக்கொடுத்த கருணாவை போல வடக்கை காட்டி கொடுத்தவர் விக்னேஸ்வரனாக இருப்பார் எனவும் கூறியிருந்தார். இவ்வாறு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர், விக்னேஸ்வரன் கட்சியை ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்காமல் இருப்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. எது எப்படியாயினும் விக்னேஸ்வரன் கட்சி ஆரம்பித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கும் மக்களின் செல்வாக்கு குறைவடையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர், அக்கட்சியை பாதிக்கின்ற வகையில் செயற்பட மாட்டேன் என கடந்த காலங்களில் தெரிவித்துவந்தாலும் கூட இரு தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றால் இந்த முடிவு மாற்றமடையக் கூடும் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/?p=682188-இரண்டு-வாரங்களில்-புதிய-கட்சி:-வடக்கு-முதல்வரின்-முக்கிய-முடிவு?