தியாக தீபம் திலீபன்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் 15-09-1987

Aggregator

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

3 months 2 weeks ago
காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன் யுவகிருஷ்ணா-60 பாதுகாப்புத் துறையின் தலைமை அலுவலகத்தையே தூள் தூளாக்கி விட்டதால் பாப்லோ எஸ்கோபார், கார்டெல்களிடம், தான் இழந்த செல்வாக்கை மீண்டும் மீட்டுவிட்டார். எனினும் கொலம்பிய அரசு முன்பைவிட மூர்க்கமான தாக்குதல்களை கார்டெல்கள் மீது கட்டவிழ்த்து விட்டுக்கொண்டே இருந்தது. இரு தரப்பிலும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கு வழக்கே இல்லை. இவர்களது மோதலுக்கு இடையே சிக்கி சின்னாபின்னமாகி காரணமேயின்றி காலனுடைய பாசக்கயிறுக்கு ஆளான அப்பாவிகள் பல்லாயிரக் கணக்கானோர். கார்டெல்களின் துல்லியமான தாக்குதல்களில் நீதிபதிகள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் என்று கணிசமானோர் பலியானார்கள். 1990ம் ஆண்டு கொலம்பியாவின் அதிபர் தேர்தலுக்கு நின்ற ஐந்து வேட்பாளர்களில் மூவர், தேர்தலுக்கு முன்பாகவே கொல்லப்பட்டனர் என்றால் நிலைமை எவ்வளவு மோசமென்று புரிந்து கொள்ளலாம். அதுபோலவே கார்டெல்கள் தரப்பிலும் கணிசமான சேதாரம் இருந்தது. கார்டெல் தலைவர்களின் நண்பர்களும், குடும்பத்தினரும் போதைத் தொழிலுக்கே சம்பந்தமில்லாதவர்களாக இருந்தாலும் பழிவாங்கும் நோக்கத்தோடு போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். ஒரு பக்கம் குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கொலம்பியாவின் பணக்காரக் குடும்ப உறுப்பினர்கள் சொல்லிவைத்தாற்போல கடத்தப்பட்டனர். அவர்களை மீட்க லட்சங்களையும், கோடிகளையும் குவிக்க வேண்டியிருந்தது. “என்ன செய்வது? கார்டெல் என்பது சாம்ராஜ்யம். அதை நடத்த பெரும் பணம் தேவைப்படுகிறது. நாங்கள் பாட்டுக்கு நேர்மையாக(!) போதை மருந்து கடத்தி சம்பாதித்து, நாட்டுக்கு வருமானம் தேடிக் கொண்டிருந்தோம். இந்த மக்கள் விரோத அரசாங்கம், அமெரிக்காவுக்காக அதைக் கட்டுப்படுத்தி எங்களை பண நெருக்கடிக்கு ஆளாக்குகிறார்கள். வேறு வழியில்லாமல் கடத்த வேண்டியிருக்கிறது...” என்று உருக்கமாக கார்டெல் உரிமையாளர்கள் மக்களுக்கு விளக்கம் சொன்னார்கள். ஆனால், பணத்துக்காக மட்டுமே கடத்தல் நடைபெறவில்லை. சட்டம், ஒழுங்கு குறித்த அதிருப்தி மக்களுக்கு ஏற்பட வேண்டும். அது கோபமாகி அரசாங்கத்தை நோக்கித் திரும்ப வேண்டும். இதன்மூலமாக அமெரிக்காவுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வெளியேற்றச் சட்டத்தை கொலம்பிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே கார்டெல்களின் நோக்கமாக இருந்தது. அரசாங்கத்தில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த பணக்காரர்கள் எந்த நிமிடத்திலும் தங்கள் குடும்பத்தில் யாராவது கடத்தப்படலாம் என்கிற அச்சத்தோடே கொலம்பியாவில் வாழ்ந்தார்கள். சிலர், எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து செட்டில் ஆனார்கள். ஒருகட்டத்தில் அரசாங்கம் இறங்கிவந்து கார்டெல்காரர்களுடன் சமரசம் பேச முயற்சித்தது. கொலம்பியாவின் முன்னாள் அதிபர்கள் மூவர், அரசு சார்பாக பாப்லோவுக்கு தூது அனுப்பினார்கள். பாப்லோ எஸ்கோபார் எதிர்பார்த்தது இதைத்தான். ‘எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்’ என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார். கொலம்பிய மக்களின் அமைதியான வாழ்க்கைக்காக தன்னுடைய சொத்து, சாம்ராஜ்யம் அத்தனையையும் துறக்கவும்கூட தயாராகவேதான் இருந்தார். வாழ்ந்தால் நிம்மதியாக வாழவேண்டும். இல்லையேல் சாக வேண்டும். இப்படி தினமும் போராடிக்கொண்டே இருக்க முடியாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. எனினும் அரசியல்வாதிகளில் சிலர் பாப்லோ எஸ்கோபாரைக் கண்டு அச்சப்பட்டார்கள். ஒருவேளை அவர் அமைதிப் பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுவிட்டால் மக்கள் மத்தியில் ஹீரோவாகி விடுவார். அதிபர் பதவிக்கு போட்டியிட்டு கொலம்பியாவைக் கைப்பற்றி விடுவார். அதற்குப் பிறகு ஆண்டவனே நினைத்தாலும் பாப்லோவை அசைக்க முடியாது என்றெல்லாம் பயந்தார்கள். அவர்கள் அச்சப்பட்டதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. அதுநாள் வரையிலான பாப்லோவின் வரலாறு அப்படிப்பட்டது. கல்யாண வீட்டுக்குள் விருந்தினராக நுழைந்தாலும், அவர்தான் மாப்பிள்ளையாக ஆவார் என்பது மாதிரியான யோக ஜாதகம். பாப்லோ டம்மியாக நடத்திக் கொண்டிருந்த அரசியல் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவருடைய போதைத் தொழில் சாராமல் அவருக்குத் தொண்டர்களாக வந்தவர்கள் ஸ்கெட்ச் போட்டு, ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டுக் கொண்டே இருந்தது அதனால்தான். 1940களில் கொலம்பியாவில் ஜார்ஜ் கெய்தான் என்றொரு தலைவர் இருந்தார். மக்களின் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பது ஒன்றே தன்னுடைய லட்சியமென்று பாடுபட்டுக் கொண்டிருந்தார். தனக்கு அதிபராக வாய்ப்பு கிடைத்தால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொலம்பியாவை உலகின் நம்பர் ஒன் நாடாக ஆக்குவேன் என்று பிரச்சாரம் செய்தார். அவருடைய கூட்டங்களுக்கு அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வருவார்களாம். 1948ல் அவருடைய அரசியல் எதிரிகளால் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டார். கெய்தானைத்தான் தன்னுடைய ரோல் மாடல் என்று அடிக்கடி பாப்லோ சொல்லுவார். மக்களும் அவரை ஜார்ஜ் கெய்தானின் வாரிசாகவே கருதி, பாப்லோவின் கூட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டார்கள். எனவேதான் பாப்லோவை ஒரு வன்முறையாளனாக மட்டுமே அரசியல்வாதிகள் திரும்பத் திரும்ப முத்திரை குத்திக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை பாப்லோ அரசியலில் வென்றுவிட்டால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்கிற நிலைமையை மிகச் சுலபமாக அத்தனை வழிமுறைகளையும் கடைப்பிடித்து உருவாக்கி விடுவார் என்று கருதினார்கள். அதிபர் தேர்தல் பிரசாரத்தில் கொல்லப்பட்ட கேலனின்உதவி யாளரான சீசர் கேவிரியா, ஆகஸ்ட் 1990ல் புதிய அதிபராகப் பதவியேற்றார். “போதைத்தொழில் என்பது கொலம்பியாவுக்கு மட்டுமேயான பிரச்சினையல்ல. இன்று உலகளாவிய பிரச்சினையாக அது உருவெடுத்திருக்கிறது. கொலம்பியாவை போதைத் தயாரிப்பு நாடாக உலக அரங்கில் கேவலமாகப் பேசுகிறார்கள். நாம் அனைவரும் இணைந்து நம் தாய்நாட்டின் அவப்பெயரைத் துடைக்க வேண்டும்...” என்று பேசினார். ஒருவகையில் இது கார்டெல்களுக்கான க்ரீன் சிக்னலாக இருந்தது. இவரது பதவியேற்புக்குப் பிறகு அதிகாரிகளின் கொட்டம், குறிப்பிடத்தக்க அளவுக்கு அடங்கியது. ஆனால், அடிபட்ட புலி ஒன்று மட்டும் கர்ஜித்துக்கொண்டே இருந்தது. அது, பாதுகாப்புத் துறையின் ஜெனரலாக இருந்த மைகுவேல் மாஸா. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதிபரின் வாக்குறுதிகளையும் மீறி, கார்டெல்கள் மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் கெடுபிடி குறைந்தபிறகு மெதிலின் நகரில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துகொண்டிருந்த கார்டெல் முக்கியஸ்தர்கள் இதனால் கடுமையான அதிர்ச்சியை எதிர்கொண்டார்கள். அப்படித்தான் ஒருமுறை…மெதிலின் நகரில் இருந்த அந்த கச்சிதமான மாளிகையை கமாண்டோ படையினர் சுற்றி வளைத்தார்கள். போலீஸாரின் நடமாட்டத்தைக் கண்டதுமே உள்ளிருந்த ஆட்கள், மெஷின்கன்னோடு பாய்ந்து வந்து சண்டையிட்டார்கள். பதிலுக்குத் தாக்கிய கமாண்டோக்களின் குறி துல்லியமாக இருந்தது. ஐந்தே நிமிடங்களில் எதிர்த்தாக்குதல் நடத்தியவர்கள் மொத்தமாக பரலோகம் போய்ச் சேர்ந்தார்கள். அப்போது உள்ளே இருந்து தனிமனிதனாக ஆவேசத்தோடு வெளியே வந்தார் பாப்லோவின் பால்ய நண்பரான குஸ்டாவோ. இரு கைகளிலும் ஏந்திய துப்பாக்கிகளைக் கொண்டு சுழன்று சுழன்று சுட்டார். அந்தக் காட்சி, சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்டு 360 டிகிரி சுழன்று போரிட்ட அபிமன்யூவின் மகத்தான வீரத்துக்கு இணையானது. நல்ல ஆயுதப் பயிற்சி பெற்றவரும், வீரத்தில் எவருக்கும் குறைவில்லாதவருமான குஸ்டாவோவின் தாக்குதலில் கமாண்டோ படை நிலைகுலைந்தது. தனி மனிதரான இவரை அடக்க மேலும் படை வேண்டுமென ரேடியோ மூலமாக போலீஸ் தலைமையகத்துக்கு தகவல் அனுப்பினார்கள். படை படையாக வீரர்கள் வந்து இறங்க, குஸ்டாவோவின் மரணம் உறுதியானது. ஆனால், எந்நிலையிலும், தான் உயிரோடு பிடிபட்டு விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஒருவேளை தனக்கு ஏதேனும் மருந்து செலுத்தி பாதி மயக்க நிலைக்குக் கொண்டு சென்று பாப்லோ குறித்த உண்மைகளைப் பிடுங்கி விடுவார்களோ என்று அச்சம். எனவே, மரணத்தை மகிழ்வோடு எதிர்கொண்டார். கட்டடத்தை விட்டு வெளியே வந்து திறந்த இடத்தில் நின்றுகொண்டார். தொடர்ச்சியாகத் துப்பாக்கியை முழக்கிக்கொண்டே இருக்க, அவரை நெருங்கிப் பிடிக்க முடியாது என்ற நிலையில் நாலா பக்கமிருந்தும் கமாண்டோக்கள் சுட்டுக்கொண்டே இருந்தார்கள். ஒரு ஸ்நைப்பர் குறிபார்த்து அவரது தலையில் தோட்டாவைச் செலுத்த, புன்னகையோடு மண்ணில் சாய்ந்தார் அந்த மாவீரர். (மிரட்டுவோம்) ஓவியம் : அரஸ் http://www.kungumam.co.in/

வாள்வெட்டு குழுக்களுக்காக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது

3 months 2 weeks ago
வாள்வெட்டு குழுக்களுக்காக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது வாள்வெட்டுக் குழுக்களுக்காக நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஆஜராகாது புறக்கணிக்க வேண்டுமென வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா சட்டத்தரணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து நேற்று (30) யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள்விடுத்தார். அவர் அங்கு உரையாற்றுகையில், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் போது, யாழ்.நீதிமன்ற கட்டிடத்தொகுதியின் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், அந்த குற்றவாளிகளுக்கு சார்பாக நீதிமன்றில் ஆஜராகமாட்டோம் என சட்டத்தரணிகள் முடிவெடுத்திருந்தார்கள். இதுவரையில் ஆஜராகவில்லை என்றும் நினைக்கின்றேன். உண்மையாகவே ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பவர்களாயின், இதய சுத்தியுள்ளவர்களாயின், வாள்வெட்டுக் குழுக்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகாது சட்டத்தரணிகள் புறக்கணிக்க வேண்டும். சட்டத்தரணிகள் அனைவரும் வாள்வெட்டுக் குழுக்களின் வழக்குகளில் ஆஜராகமாட்டோம் என தீர்மானித்தால், வாள்வெட்டுக் குழுக்கள் சிறைச்சாலைகளில் இருந்து வெளியே வர முடியாது. நாங்கள் அரசையும் மற்றவர்களையும் குறை சொல்லுவதை விடுத்து, எங்களை நாங்கள் திருத்திக்கொள்ள வேண்டும். வாள்வெட்டு குழுக்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். வாள்வெட்டுக்குழுக்களின் அடாவடித் தனங்களை நிறுத்துவதற்கு பொலிஸார் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. ஆனால் பொலிஸார் கடமையிலிருந்து தள்ளியிருக்கின்றார்கள் என்பது பொது மக்களின் குற்றச்சாட்டு. யாழ்.மாவட்டத்தில் மட்டுமன்றி இலங்கை முழுவதும் இந்த குற்றச்சாட்டு நிலவுகின்றது. http://www.thinakaran.lk/2018/05/31/உள்நாடு/24592/வாள்வெட்டு-குழுக்களுக்காக-சட்டத்தரணிகள்-ஆஜராகக்-கூடாது

வாள்வெட்டு குழுக்களுக்காக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது

3 months 2 weeks ago
வாள்வெட்டு குழுக்களுக்காக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது
 
 
 
1762thavarasa-_30052018_SSS_CMY.jpg

வாள்வெட்டுக் குழுக்களுக்காக நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஆஜராகாது புறக்கணிக்க வேண்டுமென வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா சட்டத்தரணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து நேற்று (30) யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள்விடுத்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில்,

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் போது, யாழ்.நீதிமன்ற கட்டிடத்தொகுதியின் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், அந்த குற்றவாளிகளுக்கு சார்பாக நீதிமன்றில் ஆஜராகமாட்டோம் என சட்டத்தரணிகள் முடிவெடுத்திருந்தார்கள். இதுவரையில் ஆஜராகவில்லை என்றும் நினைக்கின்றேன்.

உண்மையாகவே ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பவர்களாயின், இதய சுத்தியுள்ளவர்களாயின், வாள்வெட்டுக் குழுக்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகாது சட்டத்தரணிகள் புறக்கணிக்க வேண்டும். சட்டத்தரணிகள் அனைவரும் வாள்வெட்டுக் குழுக்களின் வழக்குகளில் ஆஜராகமாட்டோம் என தீர்மானித்தால், வாள்வெட்டுக் குழுக்கள் சிறைச்சாலைகளில் இருந்து வெளியே வர முடியாது.

நாங்கள் அரசையும் மற்றவர்களையும் குறை சொல்லுவதை விடுத்து, எங்களை நாங்கள் திருத்திக்கொள்ள வேண்டும். வாள்வெட்டு குழுக்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாள்வெட்டுக்குழுக்களின் அடாவடித் தனங்களை நிறுத்துவதற்கு பொலிஸார் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. ஆனால் பொலிஸார் கடமையிலிருந்து தள்ளியிருக்கின்றார்கள் என்பது பொது மக்களின் குற்றச்சாட்டு.

யாழ்.மாவட்டத்தில் மட்டுமன்றி இலங்கை முழுவதும் இந்த குற்றச்சாட்டு நிலவுகின்றது.

http://www.thinakaran.lk/2018/05/31/உள்நாடு/24592/வாள்வெட்டு-குழுக்களுக்காக-சட்டத்தரணிகள்-ஆஜராகக்-கூடாது

நலம் நல்லது!

3 months 2 weeks ago
இடுப்பு நரம்புகளை வலுவாக்கும் சலபாசனம் அ-அ+ இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு நரம்புகள் வலுப்பெறும். பிறப்புறுப்புகள் ஆரோக்கியத்தோடு இருக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம். பெயர் விளக்கம்: “சலப” என்றால் வெட்டுக்கிளி என்று பொருள். இந்த ஆசன நிலை வெட்டுக்கிளி போன்று தோற்றம் அளிப்பதால் சலபாசனம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. செய்முறை: முதலில் அத்வாசனம் செய்ய வேண்டும். தலையை மேலே தூக்கி தாடையை தரைவிரிப்பின் மேல் வைக்கவும். கைகளை உடலுக்கு பக்கவாட்டில் நேராக நீட்டி வைத்து, பிறகு இடுப்பை தூக்கி இரண்டு கைகளையும் உடலுக்கு அடியில் வைக்கவும். உள்ளங்கைகள் மேல் நோக்கியபடி இருக்கட்டும். கைவிரல்களை மடக்கியோ, நீட்டியோ வைக்கவும். மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்தி, கைகளை அழுத்தி இரண்டு கால்களையும் இணைத்தவாறு மேலே 45 டிகிரி அளவு வரை உயர்த்தி நிறுத்த வேண்டும். தொப்புளுக்கு கீழே இருந்து பாதம் வரைக்கும் உள்ள உடல் பகுதி அந்தரத்தில் இருக்க வேண்டும். முழங்கால்களை மடக்கக் கூடாது. இந்த ஆசன நிலையில் 10 முதல் 30 வினாடி இருந்து பிறகு, நிதானமாக கால்களை கீழே இறக்கவும். மூச்சை வெளியே விடவும். கால்கள் தரையில் படியும் வரைக்கும் முழங்காலை மடக்கக் கூடாது. இந்த ஆசனத்தை மேற்கண்ட முறைப்படி 2 முதல் 3 முறை பயிற்சி செய்யலாம். கவனம் செலுத்த வேண்டிய இடம்: கீழ் முதுகு, அடிவயிறு, இடுப்பு, கைகள் மற்றும் தாடையின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும். பயிற்சிக் குறிப்பு: சிலருக்கு கால்களை மேலே உயர்த்தும் போது தலையும் சேர்ந்து மேலே தூக்கும். ஒரு சிலருக்கு இருகால்களையும் சேர்த்து மேலே தூக்க முடிவதில்லை. முயற்சி செய்யும்பொழுது முழங்கால்கள் மடங்கி கோணலாக அகன்று விடும். குதிகால்கள் ஒன்றாக சேராது. இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் சரியான ஆசன நிலை வந்து விடும். தடைக்குறிப்பு: இருதய பலஹீனம், உயர் ரத்த அழுத்தம், இருதய கோளாறு, குடல் புண், குடல் பிதுக்கம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. பயன்கள்: ஜீரண கருவிகள் நன்கு செயல்படும். இடுப்பு நரம்புகள் வலுப்பெறும். பிறப்புறுப்புகள் ஆரோக்கியத்தோடு இருக்கும். நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, மூத்திரம் கழிப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கிறது. https://www.maalaimalar.com/Health/Fitness/2018/06/01083738/1167026/hip-problem-control-salabhasana.vpf மைக்ரேன் தலைவலி வருவதற்கான காரணங்கள் அ-அ+ இப்போதைய கடும் வெயிலின் மைக்ரேன் தலைவலியினால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கையும் கூடியுள்ளது. மேலும் சில தகவல்களையும் அறிந்தால் மைக்ரேன் தலைவலியினை முடிந்தவரை தவிர்த்து விடலாம். இப்போதைய கடும் வெயிலின் மைக்ரேன் தலைவலியினால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கையும் கூடியுள்ளது. பொதுவில் அதிக பளீர் வெளிச்சம், தூக்கமின்மை, காபி, கேபின், சாக்லெட் இவையெல்லாம் மைக்ரேன் தலைவலியினை தூண்டிவிடும் என்பது பலரின் அனுபவம். ஆயினும் மேலும் சில தகவல்களையும் அறிந்தால் மைக்ரேன் தலைவலியினை முடிந்தவரை தவிர்த்து விடலாம். தூக்கமின்மை மைக்ரேன் தலைவலியினைத் தூண்டும் குறைந்தது அன்றாடம் 8 மணிநேர தூக்கம் என்பது அவசியம். முறையான குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்க சென்று குறைவான குறிப்பிட்ட நேரத்திற்கு எழுவதும் மைக்ரேன் தலைவலியினைத் தவிர்க்க மிக அவசியம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பகலில் தூங்குவது, இரவில் வெகுநேரம் விழித்து காலையில் வெகுநேரம் சென்று எழுவது போன்றவற்றினைச் சொல்வார்கள். மைக்ரேன் பாதிப்பு ஏற்கனவே உடையவர்கள் மேற்கூறியவாறு செய்யும் பொழுது மைக்ரேன் பாதிப்பு உடனடி அதிகமாக ஏற்படுகிறது. * பலரும் ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்ளெட் போன்றவை இல்லாது வாழ்வே இல்லை என்று நினைக்கின்றார்கள் தூங்கச் செல்வதற்கு முன்கூட அல்லது படுத்துக் கொண்டே தூங்கும் வரை நீல ஒளி உபயோகிப்பவருக்கு மைக்ரேன் பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். * சிலருக்கு சில வகை சோபாக்கள், உடைகள், போர்வைகள் அதிலுள்ள டிசைன்கள், வரிகள், வட்டங்கள் போன்றவை மூளையிலுள்ள கார்டெக்ஸ் பகுதியினைக் தூண்டி மைக்ரேன் வலியினை உருவாக்குகின்றன என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே எளிமையான டிசைன் கொண்ட உடைகள், சோபாக்கள், படுக்கை விரிப்புகளை உபயோகிப்பது நல்லது. * திடீரென தட்பவெட்ப நிலையில் ஏற்படும் மாற்றம் மைக்ரேன் பாதிப்பினை ஏற்படுத்தும். ஆக மேற்கூறிய குறிப்புகளை அறிந்து மைக்ரேன் தலைவலி தாக்குதலை தவிர்ப்போம். அதிக வியர்வை: வெய்யில் கொளுத்தும் நேரத்தில் மிக அதிக வியர்வை என்பது சாதாரணமாக ஏற்படும் நிகழ்வுதான். அடிக்கடி சிறிதளவு தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள். என்பதுதான் அறிவுரையாக இருக்கும். இதனால் உடலின் நீர் சத்து சீராய் இருக்கும். பல பாதிப்புகள் இதனால் தவிர்க்கலாம். வியர்வை இயற்கையான ஒன்று. தேவையான ஒன்று. உங்கள் உடலை குளுமை செல்கிறது. உடலில் அதிக உஷ்ணம் ஏற்படும் பொழுது நரம்பு மண்டலம் வியர்வை சுரப்பிகளை தூண்டி வியர்வை மூலம் உடல் உஷ்ணத்தினை வெளியேற்றுகிறது. 99 சதவீதம் வியர்வை நீர் தான் சிரிதளவு உப்பும். தாது உப்புகளும் வெளியேறுகின்றன. அதிக நச்சு (அ) கழிவுகள் கல்லீரல், நுரையீரல், சிறு நீரகம் மூலமாகவே வெளியேறுகின்றன. இது சாதாரண சூழ்நிலையில் நிகழும் ஒன்று. ஆனால் மிக அதிக அளவில் வியர்வை வெளியேறும் பொழுது உடலில் உள்ள சத்து குறைந்து தாது உப்புகள், உள்ள இவற்றிலும் குறைபாடு ஏற்படுகிறது. உஷ்ணம், கோடை, ஸ்ட்ரெஸ் போன்ற நேரங்களில் அதிக வியர்வை ஏற்படும். கை மடிப்பு, கால்கள், கைகள், முகம் இந்த இடங்களில் வியர்வை அதிகம் ஏற்படும். * பரம்பரை * உடல் அளவு * தொடர் உடற்பயிற்சி இவையும் அதிக வியர்வைக்கு காரணம் ஆகின்றன. * காபி, ஆல்கஹால் இவை உடலின் உஷ்ணத்தினை உயர்த்தி வியர்வையினை உருவாக்கும். * காரசாரமான உணவுகளில் வியர்வை கொட்டும் ஆயினும் அதிக வியர்வை கொட்டுவதனை நீங்கள் உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறவும். * சிறிது நேரம் ஷவரில் இருப்பது. * டீ, காபி, மது இவற்றினைத் தவிர்ப்பது. * கார, சார மசாலா உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவை சங்கடமான அதிக வியர்வையினைத் தவிர்க்கும். * அதிக எடையினைக் குறைத்தல் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல். * கொழுப்பு உணவுகளைத் தவிர்த்தல். * மருத்துவ உதவியோடு மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவை பல விதங்களில் உடல் நலனை பாதுகாக்கும். https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/06/01083223/1167025/Micron-headache.vpf பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகள் அ-அ+ திருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் கரு உருவாவதைத் தள்ளிப் போடலாம். அதற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம். மாதவிலக்கு முடிந்த 10-வது நாளில் இருந்து 20 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கரு முட்டை வெளியாகும். மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த இடைவெளி சரியாக இருக்கும். மாதவிலக்கு சுழற்சி நாட்கள் மாறும்போது கருமுட்டை வெளியாகும் நாள் கணக்கு மாறும். மாதவிலக்கு முடிந்ததும் முதல் ஐந்து நாட்கள், மாதவிலக்கு நாளுக்கு முன் ஐந்து நாட்களிலும் உடலுறவு கொள்வதால் குழந்தை உருவாக வாய்ப்பில்லை. மாதவிலக்கு நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதுகாப்பான நாட்கள் எவை என்பதை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தெரிந்து கொள்ளலாம். இந்த நாட்களில் எந்தத் தயக்கமும் இன்றி தாம்பத்தியம் வைத்துக் கொள்ளலாம். உடலுறவின்போது குழந்தை உருவாவதைத் தடுக்க காண்டம் பயன்படுத்துவதே பெரும்பாலானவர்களின் தேர்வாக உள்ளது. இது பாதுகாப்பானதும் பக்க விளைவுகள் இல்லாததும் ஆகும். உடலுறவின்போது காண்டம் கிழிந்து விடாமல் இருக்க ஆணுறுப்பில் சரியாகப் பொருத்த வேண்டும். காண்டம் போட்ட பிறகு காற்றுப் புகுவதற்கான வாய்ப்பிருந்தால்தான் உடலுறவின்போது கிழியும் வாய்ப்பு ஏற்படும். எனவே, ஆணுறையை சரியாக, இறுக்கமாகப் போட்டுக் கொண்டால் பயமின்றி உறவை அனுபவிக்கலாம். உடலுறவின்போது பாதுகாப்பு இன்றி இருந்தாலோ, காண்டம் கிழிந்து விட்டாலோ கூடக் கவலைப்படத் தேவையில்லை. இந்த நேரங்களில் மருத்துவரின் ஆலோசனையுடன் எமர்ஜென்சி கான்ட்ராசெப்ஷன் மாத்திரை எடுத்து கருஉருவாகாமல் தடுத்திட முடியும். உடலுறவுக்குப் பின் 48 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். கரு உருவாவதைத் தடுக்க பெண்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். உடலுறவின் போது பெண்ணின் பிறப்புறுப்பில் மாத்திரை வைத்தும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். ஆனால், கரு உருவாவதைத் தடுக்க ஹார்மோன் மாத்திரைகள் பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் இதுபோன்ற மாத்திரைகளைத் தொடர்ந்து பெண்கள் பயன்படுத்தக் கூடாது. பெண்ணுக்கான கருத்தடை சாதனமாக டயாப்ரம்(Diaphragm) பயன்படுத்தலாம். இந்த சாதனம் 2 முதல் 4 இன்ச் வரை வட்ட வடிவில் ரிங் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கருத்தடை சாதனத்தை துவக்கத்தில் மருத்துவரின் ஆலோசனையுடன் பொருத்திக் கொள்ளலாம். பின்னர் பெண் சுயமாக தனது பிறப்புறுப்பில் பொருத்திக் கொள்ளலாம். இதை அணிந்து கொள்வதால் விந்தணு கரு முட்டையுடன் இணைவதைத் தடுக்கலாம். IUD என்கிற Intrauterine device என்ற சிறிய பிளாஸ்டிக் சாதன வடிவிலான கருத்தடை சாதனமும் உண்டு. இதனைப் பொருத்திக் கொள்வதன் மூலமும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். காப்பர் டி கருத்தடை சாதனமும் கருத்தடைக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பொருத்திக் கொள்வதால் வலி, அதிக ரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இதேபோல கரு உருவாவதைத் தடுக்க எடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளின் பக்க விளைவுகளும் மோசமானவை. திருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் கரு உருவாவதைத் தள்ளிப் போடலாம். அதற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம். ஆண்டுக்கணக்கில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுவது நல்லதல்ல. இதனால் பின்னாளில் குழந்தைப் பேற்றில் பிரச்னை வரலாம். எனவே, தாம்பத்யம் இனிக்க பாதுகாப்பான உடலுறவில் கவனம் செலுத்துவதைப் போலவே நீண்ட நாட்கள் தள்ளிப் போடாமலும் இருங்கள். தாம்பத்யம் இனிப்பதோடு இணையின் உடல்நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஒவ்வாத கருத்தடை முறைகளாக இருந்தால் அவற்றால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகி கண்டிப்பாக தாம்பத்ய இன்பத்தைக் குறைத்திடும். https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/05/31130440/1166862/Simple-methods-of-contraception-without-side-effects.vpf

நீதித்துறையினர் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் நிலை ஏற்படக் கூடாது – ஜனாதிபதி

3 months 2 weeks ago
நீதித்துறையினர் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் நிலை ஏற்படக் கூடாது – ஜனாதிபதி சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் கொள்கையில் நீதித்துறையில் செயலாற்றுவார்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் நாட்டில் உருவாகுதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். வத்தளையில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். நீதித்துறையினர் மட்டுமன்றி சகல துறையினரும் திருப்தியாகவும் சுதந்திரமான சூழலிலும் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதித்துறையிலும் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் ஊழியர்கள் முகங்கொடுத்திருக்கும் சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார். நீதிபதிகளின் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் குறித்து முன்வைக்கப்படும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி நீதித்துறையினர்களது நியாயமான மனக்குறைகளை முன்வைப்பதற்கு விசேட பிரிவொன்றை தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிபதிகளைக்கொண்ட குழுவொன்றை இதற்காக நியமித்து அந்தப் பிரிவை நடத்திச்செல்ல வேண்டும் என முன்மொழிந்தார். சட்ட ஆட்சியை பலப்படுத்துவது ஒரு நாட்டில் சிறந்த பண்பாடான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு முதன்மையான அடிப்படையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டில் சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துதல், சுதந்திரமான ஜனநாயக சமூகத்தையும் ஊழல் மோசடிகளற்ற சமூகத்தையும் கட்டியெழுப்புதல் என்பனவே 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்வதற்கான நோக்கங்களுள் முக்கியமாக இருந்ததாக ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார். நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் சிலர் எல்லை தாண்டிச் சென்று அனுபவிக்க முயற்சிக்கின்ற காரணத்தினால் பண்பாடான சமூகமொன்றிற்கு பொருத்தமில்லாத பல்வேறு நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேர்வதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, கணனி மற்றும் கையடக்கத் தொலைபேசி குற்றங்கள் குறித்து முன்வைக்கப்படுகின்ற விடயங்கள் மிகவும் கவலையளிப்பதாகவும் இந்த பாரதூரமான நிலைமை குறித்து அனைத்து துறைகளும் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார். பாதாளஉலகத்தினர் தலைதூக்கியிருப்பதாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான முதன்மையான பொறுப்பு சட்டமும் ஒழுங்கும் அமைச்சுக்கும் பொலிஸ் திணைக்களத்திற்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பில் அத்துறையிலுள்ளவர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், அவ்வாறல்லாதபோது அது குறித்து தீர்மானங்களை மேற்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். நீதியமைச்சினால் நீதிமன்றக் கட்டடத் தொகுதிகளை அமைக்கும், திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வத்தளை புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு 275 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இரண்டு மாடிகளைக்கொண்ட இந்த புதிய கட்டடத் தொகுதி மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்றங்களை கொண்டுள்ளதுடன், நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ அறை, பதிவறை, சட்டத்தரணிகளுக்கான கடமை மற்றும் ஓய்வு அறைகள் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து நீதிமன்ற கட்டடத் தொகுதியை திறந்துவைத்த ஜனாதிபதி, நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டதுடன், பணிக்குழாமினருடன் சுமுக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். அமைச்சர்களான தலதா அதுகோரள, ஜோன் அமரதுங்க, பிரதம நீதியமைச்சர் பிரியசாந் டெப், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். http://www.virakesari.lk/article/34242

நீதித்துறையினர் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் நிலை ஏற்படக் கூடாது – ஜனாதிபதி

3 months 2 weeks ago
நீதித்துறையினர் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் நிலை ஏற்படக் கூடாது – ஜனாதிபதி

 

 
 

சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் கொள்கையில் நீதித்துறையில் செயலாற்றுவார்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் நாட்டில் உருவாகுதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  பொருத்தமற்றதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

வத்தளையில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில்  நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

wattla_2.jpg

நீதித்துறையினர் மட்டுமன்றி சகல துறையினரும் திருப்தியாகவும் சுதந்திரமான சூழலிலும் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதித்துறையிலும் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் ஊழியர்கள் முகங்கொடுத்திருக்கும் சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார். 

நீதிபதிகளின் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் குறித்து முன்வைக்கப்படும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி நீதித்துறையினர்களது நியாயமான மனக்குறைகளை முன்வைப்பதற்கு விசேட பிரிவொன்றை தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிபதிகளைக்கொண்ட குழுவொன்றை இதற்காக நியமித்து அந்தப் பிரிவை நடத்திச்செல்ல வேண்டும் என முன்மொழிந்தார்.

wattla_3.jpg

சட்ட ஆட்சியை பலப்படுத்துவது ஒரு நாட்டில் சிறந்த பண்பாடான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு முதன்மையான அடிப்படையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டில் சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துதல், சுதந்திரமான ஜனநாயக சமூகத்தையும் ஊழல் மோசடிகளற்ற சமூகத்தையும் கட்டியெழுப்புதல் என்பனவே 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்வதற்கான நோக்கங்களுள் முக்கியமாக இருந்ததாக ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.

நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் சிலர் எல்லை தாண்டிச் சென்று அனுபவிக்க முயற்சிக்கின்ற காரணத்தினால் பண்பாடான சமூகமொன்றிற்கு பொருத்தமில்லாத பல்வேறு நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேர்வதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, கணனி மற்றும் கையடக்கத் தொலைபேசி குற்றங்கள் குறித்து முன்வைக்கப்படுகின்ற விடயங்கள் மிகவும் கவலையளிப்பதாகவும் இந்த பாரதூரமான நிலைமை குறித்து அனைத்து துறைகளும் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார். 

பாதாளஉலகத்தினர் தலைதூக்கியிருப்பதாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான முதன்மையான பொறுப்பு சட்டமும் ஒழுங்கும் அமைச்சுக்கும் பொலிஸ் திணைக்களத்திற்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பில் அத்துறையிலுள்ளவர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், அவ்வாறல்லாதபோது அது குறித்து தீர்மானங்களை மேற்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நீதியமைச்சினால் நீதிமன்றக் கட்டடத் தொகுதிகளை அமைக்கும், திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வத்தளை புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு 275 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இரண்டு மாடிகளைக்கொண்ட இந்த புதிய கட்டடத் தொகுதி மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்றங்களை கொண்டுள்ளதுடன், நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ அறை, பதிவறை, சட்டத்தரணிகளுக்கான கடமை மற்றும் ஓய்வு அறைகள் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. 

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து நீதிமன்ற கட்டடத் தொகுதியை திறந்துவைத்த ஜனாதிபதி, நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டதுடன், பணிக்குழாமினருடன் சுமுக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அமைச்சர்களான தலதா அதுகோரள, ஜோன் அமரதுங்க, பிரதம நீதியமைச்சர் பிரியசாந் டெப், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk/article/34242

சி(ரி)த்ராலயா

3 months 2 weeks ago
சி(ரி)த்ராலயா 20: மன்னிப்புக் கேட்ட மகா கலைஞன்! ‘போலீஸ்காரன்’ மகள் படத்தில் மனோரமா, பாலாஜி, சந்திரபாபு - THE HINDU ARCHIVES ‘போலீஸ்கரன் மகள்’ படத்தில் முத்துராமன், விஜயகுமாரி, சகஸ்ரநாமம் - THE HINDU கோபு - ஸ்ரீதர் இந்திப் படவுலகில், ‘தில் ஏக் மந்திர்’ படத்தின் வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்னைத் தேடி வந்த இந்திப் பட வாய்ப்புகளை ஸ்ரீதர் மறுத்தார். அத்தனைபெரிய வெற்றிக்குப் பின்னர் பரபரப்பு காட்டாமல் ஸ்ரீதரும் கோபுவும் நாடகங்களைப் பார்த்து அமைதியாகப் பொழுதைப் போக்கி வந்தார்கள். ஒருநாள் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக்குழு நடத்திவந்த நாடகம் ஒன்றைக் காணச் சென்றிருந்தனர். ‘மணிக்கொடி’ இதழ் எழுத்தாளர்களில் ஒருவரான பி.எஸ்.ராமையா எழுதியிருந்த அந்த நாடகத்தின் கதை ஸ்ரீதருக்கு மிகவும் பிடித்துப்போனது. நாடகம் முடிந்ததும் சகஸ்ரநாமத்தைச் சந்தித்த ஸ்ரீதர், அதைத் திரைப்படமாக்கும் உரிமையைக் கேட்டார். உடனே இசைவு தெரிவித்ததோடு, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தந்தார் சகஸ்ரநாமம். அந்தப் படம்தான் ‘போலீஸ்காரன் மகள்’. மதராஸ் பாஷைக்கு அப்ளாஸ்! சகஸ்ரநாமம், விஜயகுமாரி, முத்துராமன், பாலாஜி, சந்திரபாபு, மனோரமா, நாகேஷ் எனப் பெரிய நட்சத்திரக் கூட்டம். சொந்த மகனான முத்துராமனையே கைதுசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்துவரும் காவலராக சகஸ்ரநாமம் நடித்தார். விஜயகுமாரிதான் அந்த நேர்மையான போலீஸ்காரரின் மகள். ‘இந்த மன்றத்தில் ஓடிவரும், இளம் தென்றலை கேட்கின்றேன், உட்படப் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. கவிஞர் கண்ணதாசன், ‘கண்ணிலே நீர் எதற்கு...காலமெல்லாம் அழுவதற்கு’ என்றப் பாடலை பத்தே நிமிடங்களில் எழுதி முடிக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் அதற்கு மெட்டமைத்தார், ராமமூர்த்தி அந்தப் பாடலுக்கு இசைக்கோவை அமைத்தார். சந்திரபாபு சென்னைவாசிகளே வியக்கும் வண்ணம் சென்னை வட்டார வழக்கில் பேசி ரசிகர்களைக் கவர்ந்தார். அதற்காகவே சந்திரபாபுவுக்கு திரையரங்கில் ஸ்பெஷல் அப்ளாஸ்கள் கிடைத்தன. சந்திரபாபு – மனோரமா ஜோடிக்கான வசனங்கள் அனைத்தையும் சென்னை வட்டார வழக்கில் எழுதியிருந்தார் கோபு. சந்திரபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருந்த முதல்நாள், நகைச்சுவை காட்சிகளை கோபு படித்துக் காட்டியவுடன் அவரையே வெறித்துப் பார்த்த சந்திரபாபு, “கோபு, ஒங்க வூடு எந்த ஏரியாவாண்டே இருக்கு?'' என்று மெட்ராஸ் பாஷையில் கேட்டார். “திர்லகேணி வாத்தியாரே!'' கோபு மெட்ராஸ் பாஷையிலேயே பதிலடி கொடுக்க, சந்திரபாபு சிரித்துவிட்டார்.'' ஆங்ங்…அதான பார்த்தேன்… பேட்டை பாஷை அப்படியே நொம்பி ஊத்துது.! மதராஸ் பாஷை பிறந்ததே. ஜார்ஜ் டவுன், திர்லகேணி, மைலாப்பூர் ரிக்‌ஷா ஸ்டாண்டுலதான் அது தெரியுமா வாத்தியாரே உனக்கு?'' என்று கேட்டார் சந்திரபாபு. ஆமோதித்த கோபுவுக்கு மதராஸ் பாஷையில் நாட்டம் பிறந்ததே என்.எஸ்.கிருஷ்ணனால்தான். ”மதராஸ்ல ரிக்‌ஷாகாரங்களுக்குனு தனியா ஒரு பாஷை உண்டு. ஒருத்தன் கேட்பான். “இன்னா நைனா… நேத்து உன்னே காணும்.? என்று. அதற்கு ''உடம்பு பேஜார் பிடிச்சுப் போச்சு வாத்தியாரே! ஜல்பு புடிச்சுகிச்சு.!'' என்பார். அதாவது ஜலதோஷம் பிடித்திருப்பதை ஜல்பு என்று சொல்லுவார்கள்!'' என்று என்.எஸ்.கே தனது கிந்தனார் காலாட்சேபத்தில் நகைச்சுவையாகக் கூறுவார். உயரத்தை இழந்த உன்னதக் கலைஞன் கோபு எதிர்பார்த்தபடியே சந்திரபாபு அருமையாக சென்னை வட்டார வழக்கில் பேசி நடித்தார். ஆனால் நிஜவாழ்வில் பிரிட்டிஷ் உச்சரிப்புடன் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவதில் தேர்ந்தவர். மிகச்சிறந்த நடனக்கலைஞர். திரை உலகத்துக்கே உரித்தான ‘அண்ணே’ என்று உறவு கொண்டாடி அழைப்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. பெரிய நடிகர்கள் என்றாலும் பெயர் சொல்லித்தான் அழைப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன், சந்திரபாபு, கோபு ஆகிய மூவரிடையே நெருக்கமான நட்பை உருவாக்கியது அவர்களிடம் இருந்த இசை சார்ந்த திறமையும் ரசனையும். ‘போலீஸ்காரன் மகளில்’ இடம்பெற்ற ‘பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது’ பாட்டை மிகவும் அற்புதமாக அனுபவித்துப் பாடினார் சந்திரபாபு. நடிப்பின் நடுவே அங்க சேஷ்டைகளை செய்வது போல், பாட்டின் நடுவேயும் குரைப்பது, குழைவது என சந்திரபாபு தனது ‘எக்ஸ்ட்ரா’க்களைக் கொடுக்க எம்.எஸ்.வி அனுமதிப்பார். அவர்கள் இருவரிடையே அப்படி ஒரு நெருக்கம். அவர் நடித்திருந்த சில பாத்திரங்களை வேறு யாராலும் ஏற்று நடித்திருக்கவே முடியாது. அவ்வளவு உன்னதமானக் கலைஞன். இருப்பினும் தனிப்பட்ட வாழ்க்கை அடுத்த கட்ட உயரத்தைத் தொட அவரை அனுமதிக்கவில்லை. மன்னிப்புக் கேட்ட சகஸ்ரநாமம் ‘போலீஸ்காரன் மகள்’ படப்பிடிப்பில் சுவையான அனுபவங்கள் உண்டு. சகஸ்ரநாமத்திடம் நடிப்பு சார்ந்து ஒரு பழக்கம். நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். ஒரு குறிப்பிட்ட காட்சியில், மகள் விஜயகுமாரியை பெல்டினால் விளாசுவது போன்று காட்சி. விஜயகுமாரி அற்புதமாக முகபாவங்களைக் கொடுத்து நடித்திருந்தார். ஸ்ரீதர் மிகவும் உற்சாகமாகிவிட்டார். “கோபு! விஜயகுமாரி என்னமா ஆக்ட் பண்ணிட்டாங்க! சகஸ்ரநாமத்துகிட்ட பெல்டால் அடிவாங்கற காட்சியில் பிச்சு உதறிட்டாங்க!'' என்றார். “பிச்சு உதறினது விஜயகுமாரி இல்லே ஸ்ரீ… சகஸ்ரநாமம்தான்! அவர் நிஜமாவே விஜயகுமாரியை பெல்டால் அடிச்சுட்டாரு. பாவம், அவங்க பொறுத்துகிட்டு நடிச்சாங்க'' என்று கோபு சொன்னதும்தான் அருகில் நின்றிருந்த சகஸ்ரநாமத்துக்கே தாம் உணர்ச்சிவசப்பட்டு நிஜமாகவே அடித்துவிட்டதை உணர்ந்தார். அதற்காக விஜயகுமாரியிடம் மன்னிப்பு கேட்டார் அந்த மகா கலைஞர். ‘போலீஸ்காரன் மகள்’ படமும் ஸ்ரீதருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. அலறிய ஸ்ரீதர் ‘போலீஸ்காரன் மகள்’ வெற்றிக்குப் பிறகு ஸ்ரீதர் ஒருநாள் திருவல்லிக்கேணியில் இருந்த கோபுவின் வீட்டுக்கு வந்தார். அவரை அழைத்துக்கொண்டு கடற்கரை ஐ.ஜி அலுவலகம் எதிரில் காந்தி பீச்சுக்கு போனார். சிலகாலமாகவே கோபுவின் மனதில் ஒரு ஆசை. அதை ஸ்ரீதரிடம் சொல்வதற்கு அதுவே நல்ல தருணம் என்று ஸ்ரீதரிடம் அதைக் கேட்டார். “ஸ்ரீ… நாம் ஏன் ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை எடுக்கக்கூடாது.'' என்று கோபு கேட்டதும் ஸ்ரீதர் பதறிப் போனார். '' ஜோக் அடிக்காதே கோபு! ‘கல்யாண பரிசு’, ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ போல கனமான படங்களைக் கொடுத்துட்டு நான் போய் நகைச்சுவை படம் எடுக்கிறதாவது, நோ சான்ஸ்!'' என்றார். “நீதானே என்கிட்டே சொன்னே… வாழ்க்கைன்னா ரிஸ்க் எடுக்கணும்னு! அதை நம்பித்தானே நானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இந்த ரிஸ்க்கையும் எடுத்து பாரேன்!'' கோபு சொல்லச் சொல்ல, ஸ்ரீதர் பரிசீலிக்கும் தொனியில் சிந்தனையை ஓடவிட்டவர், “சரி.. முயன்று பாப்போம்” என்ற படி ஸ்ரீதரும் கோபுவும் நகைச்சுவை கதை ஒன்றை அங்கேயே அப்போதே அலைகளுக்கு அருகில் அமர்ந்து விவாதிக்கத் தொடங்கினார்கள். அவர்களின் விவாதத்தில் முழுநீள நகைச்சுவை திரைப்படம் என்ற வகையில் ஒரு பெரிய திருப்புமுனைக்கு அஸ்திவாரமாக அமைந்த திரைப்படத்துக்கான திரைக்கதை பிறந்தது. அந்தப் படம்தான், இன்றுவரை ரசிகர்களின் மனதை விட்டு அகலாமல் இருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’. சிரிப்பு தொடரும் http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24044321.ece

இளமை புதுமை பல்சுவை

3 months 2 weeks ago
நேபாள மன்னர் பிரேந்திரா படுகொலை செய்யப்பட்ட நாள்: ஜுன் 1- 2001 பிரேந்திரா பீர் விக்ரம் சா தேவ் (டிசம்பர் 28, 1945 – ஜூன் 1, 2001) என்பவர் 1972 முதல் 2001-ல் இறக்கும் வரை நேபாளத்தின் மன்னராக இருந்தவர். இவருக்கு முதல் இவரது தந்தையார் மகேந்திரா மன்னராக இருந்தார். உலக நாடுகள் அனைத்திலும் பெயர் பெற்றிருந்த நேபாள மன்னராக பிரேந்திரா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 1, 2001-ல் மன்னர் மாளிகையில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் மன்னர் பிரேந்திரா, அவரது மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேரை இளவரசர் தீபேந்திரா சுட்டுக் கொன்றார். இளவரசர் (1955-ல் இருந்து மன்னர்) மகேந்திரா, இளவரசி இந்திரா ராஜ்யலக்ஷ்மி ஆகியோரின் புதல்வர். இந்தியாவில் டார்ஜீலிங், புனித ஜோசப் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் ஈட்டன் கல்லூரி (1959-64), டோக்கியோ பல்கலைக்கழகம் (1967), மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1967-68) ஆகியவற்றில் உயர்கல்வியையும் கற்றார். *பிரேந்திரா ராணா குடும்பத்தைச் சேர்ந்த ஐஷ்வர்யா என்பவரை பெப்ரவரி 27 1970-ல் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். இளவரசர் தீபேந்திரா (ஜூன் 27, 1971 – ஜூன் 4, 2001) இளவரசி சுருதி (அக்டோபர் 15, 1976 - ஜூன் 1, 2001) இளவரசர் நிரஞ்சன் (நவம்பர் 6 1977–ஜூன் 1 2001) தந்தை மகேந்திரா 1960-ல் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்து நாடாளுமன்றத்தையும் கலைத்திருந்தார். பிரேந்திராவும் தனது தந்தையின் அடிச்சுவட்டிலேயே நாட்டை அரசாண்டார். சோவியத் ஒன்றியம், சீனா ஆகியவற்றின் தலையீடுகளை முறியடித்து நேபாளத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்டார். பின்னர், பிரேந்திரா நாடாளுமன்ற மக்காளாட்சி முறைக்கு ஆதாராவாளரானார். 1990-ல் நாட்டில் கிளர்ந்த மக்கள் எழுச்சியை அடுத்து ஏப்ரல் 8-ல் அரசியல் கட்சிகளின் மீதான தடைகளை நீக்கினார். நவம்பர் 9-ல் அரசியல் அமைப்புக்கு திருத்தங்களை அறிவித்தார். அதன்படி, மன்னராட்சியின் கீழ் பலகட்சி அரசியலுக்கு இடமளித்தார். மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனாலும், பல கட்சிகளுக்கும் இடையில் எழுந்த கருத்து வேறுபாடுகள், மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நாட்டில் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தன. 1996 முதல் 2006 வரையில் மாவோயிஸ்டுகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் இப்போர் இடம்பெற்றது. ஜூன் 1, 2001-ல் அரச விருந்து ஒன்றின் போது பிரேந்திராவும் அவரது முழுக்குடும்ப உறுப்பினர்களும் பிரேந்திராவின் மகன் இளவரசர் தீபேந்திராவினால் சுட்டுக் கொல்லப்பட்டபோது நேபாளத்தின் உறுதிநிலை கேள்விக்குள்ளானது. இளவரசர் தீபேந்திரா தன்னைத் தானே சுட்டுப் படுகாயமுற்றார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1792 - கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15-வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. * 1796 - டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16-வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. * 1812 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். * 1831 - ஜேம்ஸ் ரொஸ் வட முனையைக் கண்டுபிடித்தார். * 1855 - அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிகராகுவாவைக் கைப்பற்றினார். * 1869 - மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தாமஸ் எடிசன் பெற்றார். * 1879 - பிரெஞ்சு இளவரசன் நெப்போலியன் யூஜின் ஆங்கிலோ-சூளு போரில் தென்னாபிரிக்காவில் கொல்லப்பட்டான். * 1910 - ரொபேர்ட் ஸ்கொட் தலைமையிலான ஆய்வுக்குழு தென்முனையை நோக்கிய பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தது. * 1941 - ஈராக், பாக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர். * 1946 - ருமேனியாவின் பிரதமர் இயன் அண்டனேஸ்கு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். * 1947 - சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது. * 1959 - நிகராகுவாவில் புரட்சி ஆரம்பமானது. * 1962 - நாசி வதைமுகாம்களை உருவாக்கிய அடொல்ப் ஐக்குமன் இஸ்ரேலில் தூக்கிலிடப்பட்டார். * 1964 - சிறேதொகோ தேசிய வனம் ஜப்பானில் அமைக்கப்பட்டது. * 1971 - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. * 1978 - டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. * 1979 - 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது. * 1980 - சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது. * 1981 - யாழ் பொது நூலகம் மே 31 நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது. https://www.maalaimalar.com

டிரம்ப் விதித்த புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: வலுக்கும் விமர்சனங்கள்

3 months 2 weeks ago
டிரம்ப் விதித்த புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: வலுக்கும் விமர்சனங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த அதிக அளவிலான இறக்குமதி வரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மட்டுமல்லாது, அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் குடியரசு கட்சி உறுப்பினர்களும் ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை விமர்சித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள், எதிர் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் எஃகு பொருட்கள் முதல் பால்-பாயிண்ட் பேனா வரை பல பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்துள்ளனர். அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு "உறுதியான மற்றும் சரிவிகித அளவிலான" நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுக்கப்படும் என்று டிரம்பிடம் தொலைபேசி மூலம் பேசிய பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் கூறியதாக அவரது அலுவகலகமான எலிசீ மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஸ்டீல் மற்றும் அலுமினியம் உற்பத்தியாளர்கள் மிகவும் முக்கியம் என்றும், சர்வதேச அளவில் அவற்றில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வரிவிதிப்பை டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளது தங்களை அவமானப்படுத்தும் செயல் என்பர் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். "அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கனடா அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது," என்று அவர் கூறியுள்ளார். எஃகு மீது 25% இறக்குமதி வரி விதிப்பது மிகவும் அப்பட்டமானது என்று கூறியுள்ள பிரிட்டன் சர்வதேச வர்த்தகத்துக்கான செயலர் லயாம் ஃபாக்ஸ், "தங்கள் நெருக்கமான கூட்டாளி நாட்டுடன் பழிக்குப் பழி வாங்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது மோசமான பின்விளைவுகளையே உண்டாக்கும்," என்று கூறியுள்ளார். மார்ச் மாதம் இந்த வரிவிதிப்பை அறிவித்த டிரம்ப், பேச்சுவார்த்தை நடத்திய சில நாடுகளுக்கு விலக்கு அளித்தார். எஃகு பொருட்கள் மீது 25% மற்றும் அலுமினிய பொருட்கள் மீது 10% இறக்குமதி வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜூலை 1 முதல் 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று கனடா கூறியுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் எஃகு, பன்றி இறைச்சி, பழங்கள் ஆகியவை மீது வரிவிதிக்க மெக்சிகோ திட்டமிட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் உலக வர்த்தக அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் இரும்புத் தாது முதல் மூக்குப்பொடி வரை பல பொருட்களை உள்ளடக்கிய 10 பக்க பட்டியலை வரிவிதிப்புக்காக அறிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/global-44326166

டிரம்ப் விதித்த புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: வலுக்கும் விமர்சனங்கள்

3 months 2 weeks ago
டிரம்ப் விதித்த புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: வலுக்கும் விமர்சனங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த அதிக அளவிலான இறக்குமதி வரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மட்டுமல்லாது, அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் குடியரசு கட்சி உறுப்பினர்களும் ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை விமர்சித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள், எதிர் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் எஃகு பொருட்கள் முதல் பால்-பாயிண்ட் பேனா வரை பல பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்துள்ளனர்.

அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு "உறுதியான மற்றும் சரிவிகித அளவிலான" நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுக்கப்படும் என்று டிரம்பிடம் தொலைபேசி மூலம் பேசிய பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் கூறியதாக அவரது அலுவகலகமான எலிசீ மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஸ்டீல் மற்றும் அலுமினியம் உற்பத்தியாளர்கள் மிகவும் முக்கியம் என்றும், சர்வதேச அளவில் அவற்றில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வரிவிதிப்பை டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.

Trade tariffபடத்தின் காப்புரிமைREUTERS

டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளது தங்களை அவமானப்படுத்தும் செயல் என்பர் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். "அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கனடா அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது," என்று அவர் கூறியுள்ளார்.

எஃகு மீது 25% இறக்குமதி வரி விதிப்பது மிகவும் அப்பட்டமானது என்று கூறியுள்ள பிரிட்டன் சர்வதேச வர்த்தகத்துக்கான செயலர் லயாம் ஃபாக்ஸ், "தங்கள் நெருக்கமான கூட்டாளி நாட்டுடன் பழிக்குப் பழி வாங்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது மோசமான பின்விளைவுகளையே உண்டாக்கும்," என்று கூறியுள்ளார்.

மார்ச் மாதம் இந்த வரிவிதிப்பை அறிவித்த டிரம்ப், பேச்சுவார்த்தை நடத்திய சில நாடுகளுக்கு விலக்கு அளித்தார்.

எஃகு பொருட்கள் மீது 25% மற்றும் அலுமினிய பொருட்கள் மீது 10% இறக்குமதி வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

US tariffபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜூலை 1 முதல் 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று கனடா கூறியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் எஃகு, பன்றி இறைச்சி, பழங்கள் ஆகியவை மீது வரிவிதிக்க மெக்சிகோ திட்டமிட்டு வருகிறது.

அமெரிக்கா மற்றும் உலக வர்த்தக அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் இரும்புத் தாது முதல் மூக்குப்பொடி வரை பல பொருட்களை உள்ளடக்கிய 10 பக்க பட்டியலை வரிவிதிப்புக்காக அறிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-44326166

நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள் இன்று

3 months 2 weeks ago
நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள் இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தை இன வன்முறையாளர்கள் 1981 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி திட்டமிட்டு எரித்தனர். இதில் 97 ஆயிரம் அரிய புத்தகங்கள், பல நூற்றாண்டு பழமைவாய்ந்த ஈழ ஓலைச்சுவடிகள், ஈழத்தின் பண்டைய நூல்கள், பல அரிய பண்டைய தமிழ் நூல்கள், ஈழத் தமிழ் பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என்று பல்வேறு வகைப்பட்ட அரிய ஆவணங்கள் அழிக்கப்பட்டன. http://newuthayan.com/story/09/நூலகம்-எரிக்கப்பட்ட-கறுப்பு-நாள்-இன்று.html

நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள் இன்று

3 months 2 weeks ago
நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள் இன்று

 

 

Public_Library_Jaffna-750x430.jpg

 
 
 

யாழ்ப்பாணம் பொது நூலகத்தை இன வன்முறையாளர்கள் 1981 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி திட்டமிட்டு எரித்தனர்.

இதில் 97 ஆயிரம் அரிய புத்தகங்கள், பல நூற்றாண்டு பழமைவாய்ந்த ஈழ ஓலைச்சுவடிகள், ஈழத்தின் பண்டைய நூல்கள், பல அரிய பண்டைய தமிழ் நூல்கள், ஈழத் தமிழ் பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என்று பல்வேறு வகைப்பட்ட அரிய ஆவணங்கள் அழிக்கப்பட்டன.

dsf.pngsd.png

http://newuthayan.com/story/09/நூலகம்-எரிக்கப்பட்ட-கறுப்பு-நாள்-இன்று.html

அனைத்து செலவும் மாகாண சபையினுடையது திடீரென்று வந்த சிலர் மைக்கை பறித்து நிகழ்வை நடத்தினார்கள்..

3 months 2 weeks ago
உண்டியலில் போட்ட காசை திருப்பிக் கேட்பது நாகரிகம் ஆகாது… முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கொடுத்த பணத்தினை கோயில் உண்டியலில் போட்டதாக நினையுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் தவராசாவிடம் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கு என மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்ப தருமாறு கோரி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தெரிவிக்கையிலையே சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஒரு புனிதமான தினம். அது நடந்து முடிந்ததை பற்றி கதைத்து அதனை கொச்சைப்படுத்த கூடாது. எனவே அது தொடர்பில் சபையில் கதைப்பதை நிறுத்துவோம். எதிர்க்கட்சி தலைவர் அதற்கு கொடுத்த பணத்தினை கோயில் உண்டியலில் போட்ட பணமாக நினையுங்கள். உண்டியலில் போட்ட பணத்தினை திருப்பி தாருங்கள் என கேட்க கூடாது என தெரிவித்தார். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் தவராசா தனது கோரிக்கையை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/81733/

கிறிஸ்துவின் தானியங்கள்: இறை வார்த்தை என்னும் விதை

3 months 2 weeks ago
கிறிஸ்துவின் தானியங்கள்: ஒரே ஒரு வார்த்தை மட்டும் போதும் இயேசுவின் காலத்தில் ஜெருசலேமை ரோமானியர்கள் ஆண்டுவந்தனர். அதேநேரத்தில் யூதர்களின் மத நம்பிக்கைகளில் அவர்கள் தலையிடவில்லை. மேலும் ரோமானிய ஆளுநருக்கு அடுத்த நிலையில் யூத மதத்தின் அதிகார வர்க்கமாகிய யூத தலைமைச் சங்கத்தார் இருந்தனர். அவர்கள் யூத இனம் மட்டுமே புனிதமானது என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துவந்தார்கள். அவர்களின் பழமைவாதத்தைத் துணிச்சலாகக் கேள்விக்குள்ளாக்கியவர் இயேசு. இதை இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம் வழியாகவே நாம் தெரிந்துகொள்ளமுடியும். நூற்றுவர் தலைவனின் கோரிக்கை ஜெருசலேம், கப்பர்நாகூம், சமாரியா உள்ளிட்ட பெரிய நகரங்களின் சட்டம் ஒழுங்கைக் காத்துவந்த ரோமானியப் படையணியில், யூதர்கள் அல்லாத பிற இனத்தைச் சேர்ந்தவர்களும் உயர்ந்த பொறுப்புகளில் இருந்தனர். நூறு படை வீரர்களுக்குத் தலைவராக இருப்பவர்களை ‘நூற்றுவர் தலைவர்’ எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்படியான ‘நூற்றுவர் தலைவர்’ ஒருவர், இயேசுவைத் தேடி வந்தார். அதைக் குறித்து, மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து அதிகாரம் 8-ல் 5 முதல் 17வரையிலான, இறை வசனங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அந்தக் காலத்தில் இயேசு கப்பர்நாகூமுக்குச் சென்றபோது ‘நூற்றுவர் தலைவர்’ ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் மகன் முடக்கு வாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் உங்கள் வீட்டுக்கு வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்கள், என் மகன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரர்கள் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார். இதைக் கேட்ட இயேசு, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரவேல் மக்கள் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலும் இருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வார்கள். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். நூற்றுவர் தலைவர் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது அவரது மகன் குணமடைந்துவிட்ட அதிசயம் நிகழ்ந்திருந்தது. அதன்பின் இயேசு பேதுருவின் வீட்டுக்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடைசெய்தார். பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல தீய ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்’ என்று இயேசுவுக்கு முன்பு வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா உரைத்த தீர்க்க தரிசனம் நிறைவேறியது. கடவுளின் பந்தியில் அனைவருக்கும் இடம் உண்டு இயேசுவின் வார்த்தைகள், அதுவரையிலான யூதர்களின் நம்பிக்கை பற்றிய பார்வையை அடியோடு புரட்டிப்போட்டது. ‘நூற்றுவர் தலைவன்’, தனது மகனைக் குணப்படுத்த இயேசுவின் உதவியை நாடுகிறார். அதில் உள்ள பிரச்சினையும் அவருக்குத் தெரியும். யூதச் சட்டப்படி, ஒரு யூதர் புற இனத்தவரின் வீட்டுக்குச் செல்லக்கூடாது. புறவினத்தார் வாழக்கூடிய பகுதிகள், யூதர்களின் பார்வையில் தூய்மையற்றவை, பிரவேசிக்கத் தகுதி அற்றவை. இயேசு ஒரு யூதர். ‘நூற்றுவர் தலைவன்’ ஒரு புற இனத்தவர். இந்தச் சிக்கல் இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கிறது. அப்படியிருந்தும், இயேசு, “நான் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் மகனைக் குணப்படுத்துவேன்” என்கிறார். இயேசு நடைமுறையில் இருக்கும் தீண்டாமைப் பிரச்சினை அறியாமல் அதைச் சொல்லவில்லை. மாறாக, ‘நூற்றுவர் தலைவனின்’ பதில் என்னவாக இருக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்துச் சொல்கிறார். இந்த இடத்தில்தான் இயேசுவின் மீதான நூற்றுவர் தலைவனின் ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படுகிறது. அந்த நம்பிக்கையைப் பாராட்டும் இயேசு, அடுத்து கடவுளின் சித்தம் எதுவென்பதை அதிரடியாக அறிவிக்கிறார். அதாவது, “கிழக்கிலும், மேற்கிலுமிருந்து பலர் வந்து, கடவுள் தேர்ந்துகொண்ட இஸ்ரவேலின் வெவ்வேறு இனத்தில் பிறந்த மூதாதையர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்பதுதான் அந்தச் செய்தி. கடவுள் வாக்குறுதி அளித்த மீட்பர் இந்த மண்ணுலகுக்கு வருகிறபோது செய்யப்படுகிற விருந்தில் புற இனத்தவர்க்கு இடமே கிடையாது என்ற நம்பிக்கையில் இருந்த யூதர்களுக்கு, இந்தச் செய்தி காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப்போல இருந்தது. இயேசுவின் எண்ணம் பரந்துபட்ட எண்ணம். அது அடிமைத்தளைகளை உடைத்தெறிகிற எண்ணம். அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எண்ணம். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களையும் கடவுளின் பிள்ளைகளாகப் பார்க்கக்கூடிய எண்ணம். இயேசுவைப் பின்பற்றுகிற அனைவரும் வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் தங்கள் சொந்தச் சகோதரர்களாக ஏற்றுக்கொள்வார்கள் என்பதையே இயேசுவின் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. http://tamil.thehindu.com/society/spirituality/article24037041.ece

புதிய அர­சி­ய­ல­மைப்பு சகல மக்­க­ளி­னதும் அங்­கீ­கா­ரத்­துடன் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்

3 months 2 weeks ago
புதிய அர­சி­ய­ல­மைப்பு சகல மக்­க­ளி­னதும் அங்­கீ­கா­ரத்­துடன் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் (ஆர்.யசி) சுதந்­திரக் கட்­சியின் மாற்று அணி­யி­ன­ரிடம் சம்­பந்தன் வலி­யு­றுத்­தினார் நாட்டின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைகள் மற்றும் எதிர்­கால இலக்­கு­களை அடை­வதில் சகல தரப்­புக்­களும் இணைந்து பய­ணிக்க வேண்டும். இதில் தமிழ் மக்­களின் பங்­க­ளிப்­புடன் ஐக்­கி­ய­மான பய­ணத்தை அனை­வ­ரு­மாக உரு­வாக்க வேண்டும் என எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ் தேசியக் கூட்­ ட­மைப்பின் தலை­வ­ரு­மான ஆர். சம்­பந்தன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சுயா­தீன அணி­யி­ன­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார். இந்த நாட்டின் ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வதில் சிறு­பான்மை மக்­களின் பங்­க­ளிப்பு அவ­சியம். அதேபோல் மக்­களின் தெரிவு இருந்தால் தான் அது ஜன­நா­யக பய­ண­மாக அமையும் என்­பதை தாம் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 16 பேர் கொண்ட மாற்று அணி­யினர் நேற்று எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனை எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இந்த சந்­திப்பில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மாற்று அணி­யி­ன­ராக உள்ள 16 பேரில் சுசில் பிரேம்­ஜெ­யந்த, டிலான் பெரேரா, சந்­திம வீரக்­கொடி, தயா­சிறி ஜெய­சே­கர, எஸ்.பி திசா­நா­யக, திலங்க சும­தி­பால, லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன, ஜோன் சென­வி­ரத்ன, தாரநாத் பஸ்­நா­யக ஆகியோர் கலந்­து­கொண்­டனர். எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் காலை 11.30 மணி­ய­ளவில் ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த பேச்­சு­வார்த்தை பிற்­பகல் 1 மணி வரையில் இடம்­பெற்­றது. சந்­திப்பில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அடுத்­த­கட்ட நகர்­வுகள், 16 பேர் கொண்ட குழு­வினர் முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் மற்றும் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் குறித்தும் இரு தரப்­பினர் இடையே ஆழ­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இதில் எதிர்க்­கட்சி தலைவர் தரப்பில் பல விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைகள், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்­வுகள் பெற்­று­கொள்­ளப்­ப­டு­வ­தற்­காக சிங்­கள மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வுடன் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்­பதை குறிப்­பிட்­டுள்ளார். நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண உரு­வாக்­கப்­படும் புதிய அர­சியல் அமைப்பு நாட்டு மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வுடன் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதே தமிழர் தரப்பின் நிலைப்­பாடு என்­பதில் தாம் உறு­தி­யாக உள்­ள­தா­கவும் , அதேபோல் இந்த நாட்டின் எதிர்­கால அர­சியல் பய­ணங்­களில் அனை­வரும் இணைந்து பய­ணிக்க வேண்டும் என்றும் சம்­பந்தன் குறிப்­பிட்­டுள்ளார். பிரி­வி­னை­வாத செயற்­பா­டு­களில் இரு தரப்­பிற்கும் இடம் கொடுக்­காது பிள­வு­ப­டாத நாட்­டுக்குள் இணைந்து பய­ணிக்க வேண்டும் என்­ப­தையும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 16 பேர் கொண்ட மாற்று அணி­யி­ன­ரிடம் எதிர்க்­கட்சி தலைவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார் . மேலும் இலங்­கை­ய­ராக நாம் அனை­வரும் இணைந்து செயற்­ப­டுவோம். அத்­துடன் நாட்­டினை துண்­டாட, குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த நாம் தயா­ரில்லை. இலங்­கையர் என்ற அடை­யா­ளத்தில் வாழவும் ஒரே நாட்­டுக்குள் அனை­வரும் சமத்­து­வ­மாக வாழவும், இலங்­கை­ய­ராக சர்­வ­தேச நாடு­களில் பங்­கு­கொள்­ளவும் தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும் என்றும் சம்­பந்தன் சுதந்­திரக் கட்­சியின் மாற்று அணி­யிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார். ஆகவே ஒரே நாட்­டுக்குள் தீர்­வு­களை பெற்­றுக்­கொண்டு வாழவே நாம் விரும்­பு­கின்றோம். அத்­தோடு எமது எதிர்­கால அர­சியல் பய­ணத்தில் எமது இலக்­கு­களை வெற்­றி­கொள்ள, தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள அனைத்து தரப்பும் இணைந்து பய­ணிப்போம், இதில் எதி­ர­ணியில் செயற்­படும் அணி­யி­னரின் ஒத்­து­ழைப்­பு­களும் அவ­சியம் என்­பதை சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். மேலும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் வகையில் மக்கள் விடு­தலை முன்னணி கொண்டுவந்துள்ள 20 ஆம் திருத்தம் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போதும் சிறுபான்மை மக்களின் பூரண ஆதரவுடன் அல்லது அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொண்ட தலைமைகள் நாட்டினை ஆளவேண்டும். மாறாக ஒரு சிலரது நிலைபாடுகளில் இருந்து தலைமைகளை தெரிவு செய்வது ஜனநாயகத்திற்கு பொருத்தமற்றது என்பதையும் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார். http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-31#page-1

புதிய அர­சி­ய­ல­மைப்பு சகல மக்­க­ளி­னதும் அங்­கீ­கா­ரத்­துடன் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்

3 months 2 weeks ago
புதிய அர­சி­ய­ல­மைப்பு சகல மக்­க­ளி­னதும் அங்­கீ­கா­ரத்­துடன் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்
city-1-blackGMGPage1Image0010-57a9a7bc37e4d01cc11554dc9c9f705123b884e3.jpg

 

(ஆர்.யசி)

சுதந்­திரக் கட்­சியின் மாற்று அணி­யி­ன­ரிடம் சம்­பந்தன் வலி­யு­றுத்­தினார்  

 

நாட்டின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைகள் மற்றும் எதிர்­கால இலக்­கு­களை அடை­வதில் சகல தரப்­புக்­களும் இணைந்து பய­ணிக்க வேண்டும். இதில் தமிழ் மக்­களின் பங்­க­ளிப்­புடன் ஐக்­கி­ய­மான பய­ணத்தை அனை­வ­ரு­மாக உரு­வாக்க வேண்டும் என எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ் தேசியக் கூட்­ ட­மைப்பின் தலை­வ­ரு­மான ஆர். சம்­பந்தன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சுயா­தீன அணி­யி­ன­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  

இந்த நாட்டின் ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வதில் சிறு­பான்மை மக்­களின் பங்­க­ளிப்பு அவ­சியம். அதேபோல் மக்­களின்

தெரிவு இருந்தால் தான் அது ஜன­நா­யக பய­ண­மாக அமையும் என்­பதை தாம் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.  

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 16 பேர் கொண்ட மாற்று அணி­யினர் நேற்று எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனை எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இந்த சந்­திப்பில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மாற்று அணி­யி­ன­ராக உள்ள 16 பேரில் சுசில் பிரேம்­ஜெ­யந்த, டிலான் பெரேரா, சந்­திம வீரக்­கொடி, தயா­சிறி ஜெய­சே­கர, எஸ்.பி திசா­நா­யக, திலங்க சும­தி­பால, லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன, ஜோன் சென­வி­ரத்ன, தாரநாத் பஸ்­நா­யக ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.  

எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் காலை 11.30 மணி­ய­ளவில் ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த பேச்­சு­வார்த்தை பிற்­பகல் 1 மணி வரையில் இடம்­பெற்­றது.

 சந்­திப்பில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அடுத்­த­கட்ட நகர்­வுகள், 16 பேர் கொண்ட குழு­வினர் முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் மற்றும் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் குறித்தும் இரு தரப்­பினர் இடையே ஆழ­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

இதில் எதிர்க்­கட்சி தலைவர் தரப்பில் பல விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைகள், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்­வுகள் பெற்­று­கொள்­ளப்­ப­டு­வ­தற்­காக சிங்­கள மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வுடன் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்­பதை குறிப்­பிட்­டுள்ளார்.

நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண உரு­வாக்­கப்­படும் புதிய அர­சியல் அமைப்பு நாட்டு மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வுடன் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதே தமிழர் தரப்பின் நிலைப்­பாடு என்­பதில் தாம் உறு­தி­யாக உள்­ள­தா­கவும் , அதேபோல் இந்த நாட்டின் எதிர்­கால அர­சியல் பய­ணங்­களில் அனை­வரும் இணைந்து பய­ணிக்க வேண்டும் என்றும் சம்­பந்தன் குறிப்­பிட்­டுள்ளார். பிரி­வி­னை­வாத செயற்­பா­டு­களில் இரு தரப்­பிற்கும் இடம் கொடுக்­காது பிள­வு­ப­டாத நாட்­டுக்குள் இணைந்து பய­ணிக்க வேண்டும் என்­ப­தையும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 16 பேர் கொண்ட மாற்று அணி­யி­ன­ரிடம் எதிர்க்­கட்சி தலைவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார் .

மேலும் இலங்­கை­ய­ராக நாம் அனை­வரும் இணைந்து செயற்­ப­டுவோம். அத்­துடன் நாட்­டினை துண்­டாட, குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த நாம் தயா­ரில்லை. இலங்­கையர் என்ற அடை­யா­ளத்தில் வாழவும் ஒரே நாட்­டுக்குள் அனை­வரும் சமத்­து­வ­மாக வாழவும், இலங்­கை­ய­ராக சர்­வ­தேச நாடு­களில் பங்­கு­கொள்­ளவும் தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும் என்றும் சம்­பந்தன் சுதந்­திரக் கட்­சியின் மாற்று அணி­யிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

ஆகவே ஒரே நாட்­டுக்குள் தீர்­வு­களை பெற்­றுக்­கொண்டு வாழவே நாம் விரும்­பு­கின்றோம். அத்­தோடு எமது எதிர்­கால அர­சியல் பய­ணத்தில் எமது இலக்­கு­களை வெற்­றி­கொள்ள, தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள அனைத்து தரப்பும் இணைந்து பய­ணிப்போம், இதில் எதி­ர­ணியில் செயற்­படும் அணி­யி­னரின் ஒத்­து­ழைப்­பு­களும் அவ­சியம் என்­பதை சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மேலும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் வகையில் மக்கள் விடு­தலை முன்னணி கொண்டுவந்துள்ள 20 ஆம் திருத்தம் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போதும் சிறுபான்மை மக்களின் பூரண ஆதரவுடன் அல்லது அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொண்ட தலைமைகள் நாட்டினை ஆளவேண்டும். மாறாக ஒரு சிலரது நிலைபாடுகளில் இருந்து தலைமைகளை தெரிவு செய்வது ஜனநாயகத்திற்கு பொருத்தமற்றது என்பதையும் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-31#page-1