மட்டக்களப்பு சவுக்கடி படுகொலை

1990-09-20 - 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்

Aggregator

அர­சி­யல் உயர் மட்­டத்­தின் உற­வுக்­கா­கவே -தலைமை அதி­காரி கையூட்­டுப் பெற்­றார்!!

3 months 2 weeks ago
அர­சி­யல் உயர் மட்­டத்­தின் உற­வுக்­கா­கவே -தலைமை அதி­காரி கையூட்­டுப் பெற்­றார்!! இந்­திய வணி­க­ரி­டம் கையூட்­டுப் பெற்­ற­போது கைது செய்­யப்­பட்ட அரச தலை­வர் செய­ல­கத்­தின் தலைமை அதி­காரி மகா­நாம, அர­சி­யல் உயர்­மட்­டத்­தின் நெருங்­கிய உற­வி­ன­ருக்­கா­கவே கையூட்­டைப் பெற்­றுக் கொண்­ட­தாக விசா­ர­ணை­க­ளின்­போது தெரி­வித்­துள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கி­றது. கொழும்­பில் கடந்த சில தினங்­க­ளாக ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் கொதி­நி­லைக்­கும், விசா­ர­ணை­க­ளில் வெளிப்­பட்­டுள்ள தக­வல்­க­ளுக்­கும் தொடர்பு இருப்­ப­தாக கொழும்பு அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பேசப்­ப­டு­கின்­றது. சீனித் தொழிற்­சா­லையை இந்­திய நிறு­வ­னத்­துக்­குப் பெற்­றுக் கொடுப்­ப­தற்கு இந்­திய வணி­க­ரி­டம் 540 மில்­லி­யன் ரூபா கையூட்­டுக் கோரப்­பட்­டது. பேரம் பேசல் ஊடாக 100 மில்­லி­யன் ரூபா­வா­கக் குறைக்­கப்­பட்­டது. முதல் கட்­ட­மாக 20 மில்­லி­யன் ரூபா, கடந்த மே மாதம் 3ஆம் திகதி, அரச தலை­வர் செய­ல­கத்­தின் தலைமை அதி­காரி மகா­நாம, அரச மரக் கூட்­டுத்­தா­ப­னத்­தின் தலை­வர் திச­நா­யக்க ஆகி­யோ­ருக்கு வழங்­கப்­ப­டும்­போது, இலஞ்ச ஊழல் தடுப்­புப் பிரி­வி­னால் அவர்­கள் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர். இவர்­க­ளி­டம் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அரச தலை­வர் செய­ல­கத்­தின் தலைமை அதி­காரி, அர­சி­யல் உயர் மட்­டத்­தின் நெருங்­கிய உற­வி­ன­ரின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­வா­கவே கையூட்­டுப் பெற்­ற­தாக விசா­ர­ணை­க­ளின் போது குறிப்­பிட்­டுள்­ளார். இந்­தத் தக­வல் வெகு­வி­ரை­வில் வெளி­யா­க­வுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கின்­றது. கொழும்­பில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் அர­சி­யல் கொதி­நி­லைக்­கும், இந்­தத் தக­வல் வெளி­யா­க­வுள்­ள­மைக்­கும் தொடர்பு உள்­ள­தாக அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. http://newuthayan.com/story/10/அர­சி­யல்-உயர்-மட்­டத்­தின்-உற­வுக்­கா­கவே-தலைமை-அதி­காரி-கையூட்­டுப்-பெற்­றார்.html

அர­சி­யல் உயர் மட்­டத்­தின் உற­வுக்­கா­கவே -தலைமை அதி­காரி கையூட்­டுப் பெற்­றார்!!

3 months 2 weeks ago
அர­சி­யல் உயர் மட்­டத்­தின் உற­வுக்­கா­கவே -தலைமை அதி­காரி கையூட்­டுப் பெற்­றார்!!

 

Capture-27.jpg

 
 
 
 

இந்­திய வணி­க­ரி­டம் கையூட்­டுப் பெற்­ற­போது கைது செய்­யப்­பட்ட அரச தலை­வர் செய­ல­கத்­தின் தலைமை அதி­காரி மகா­நாம, அர­சி­யல் உயர்­மட்­டத்­தின் நெருங்­கிய உற­வி­ன­ருக்­கா­கவே கையூட்­டைப் பெற்­றுக் கொண்­ட­தாக விசா­ர­ணை­க­ளின்­போது தெரி­வித்­துள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கி­றது.

கொழும்­பில் கடந்த சில தினங்­க­ளாக ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் கொதி­நி­லைக்­கும், விசா­ர­ணை­க­ளில் வெளிப்­பட்­டுள்ள தக­வல்­க­ளுக்­கும் தொடர்பு இருப்­ப­தாக கொழும்பு அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பேசப்­ப­டு­கின்­றது.

சீனித் தொழிற்­சா­லையை இந்­திய நிறு­வ­னத்­துக்­குப் பெற்­றுக் கொடுப்­ப­தற்கு இந்­திய வணி­க­ரி­டம் 540 மில்­லி­யன் ரூபா கையூட்­டுக் கோரப்­பட்­டது. பேரம் பேசல் ஊடாக 100 மில்­லி­யன் ரூபா­வா­கக் குறைக்­கப்­பட்­டது. முதல் கட்­ட­மாக 20 மில்­லி­யன் ரூபா, கடந்த மே மாதம் 3ஆம் திகதி, அரச தலை­வர் செய­ல­கத்­தின் தலைமை அதி­காரி மகா­நாம, அரச மரக் கூட்­டுத்­தா­ப­னத்­தின் தலை­வர் திச­நா­யக்க ஆகி­யோ­ருக்கு வழங்­கப்­ப­டும்­போது, இலஞ்ச ஊழல் தடுப்­புப் பிரி­வி­னால் அவர்­கள் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

 
 

இவர்­க­ளி­டம் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அரச தலை­வர் செய­ல­கத்­தின் தலைமை அதி­காரி, அர­சி­யல் உயர் மட்­டத்­தின் நெருங்­கிய உற­வி­ன­ரின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­வா­கவே கையூட்­டுப் பெற்­ற­தாக விசா­ர­ணை­க­ளின் போது குறிப்­பிட்­டுள்­ளார். இந்­தத் தக­வல் வெகு­வி­ரை­வில் வெளி­யா­க­வுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கின்­றது.

கொழும்­பில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் அர­சி­யல் கொதி­நி­லைக்­கும், இந்­தத் தக­வல் வெளி­யா­க­வுள்­ள­மைக்­கும் தொடர்பு உள்­ள­தாக அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

http://newuthayan.com/story/10/அர­சி­யல்-உயர்-மட்­டத்­தின்-உற­வுக்­கா­கவே-தலைமை-அதி­காரி-கையூட்­டுப்-பெற்­றார்.html

அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும்,நினைவுப் பேருரையும்…

3 months 2 weeks ago
ஆனந்தசங்கரியின் பேரனே எம்.ஏ. சுமந்திரன்; அரசியல் ரீதியாக இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லையாம்! தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் பேரனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் என சிரேஸ்ர ஊடகவியிலாளர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்., தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் பேரனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எனத் தெரிவித்துள்ள சிரேஸ்ர ஊடகவியிலாளர் என்.வித்தியாதரன் சங்கரி சுமந்திரன் இருவருக்கும் இடையில் உறவு முறையில் தான் பிரச்சனை இருக்கின்றது. அதனால் தான் இருவரும் கதைப்பதில்லை, அரசியல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என உண்மையை போட்டுடைத்துள்ளார். கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நேற்றைய தினம் (01.06.2018) சாவகச்சேரியில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://www.ibctamil.com/relationship/80/101456

சபாஷ் நாயுடு முதல் களவாணி-2 வரை: சுவாரசிய திரைத் துளிகள்

3 months 2 weeks ago
சபாஷ் நாயுடு முதல் களவாணி-2 வரை: சுவாரசிய திரைத் துளிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். வேதிகா நடிக்கும் பாலிவுட் படம் தமிழில் வெளியான முனி, சக்கரக்கட்டி, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா. தமிழை தவிர தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் தற்போது தென்னிந்திய சினிமாக்களில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் வேதிகா, பாலிவுட் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். த்ரிஷ்யம் படம் மூலம் பிரபலமான மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப், தன் முதல் இந்தி படத்தில் வேதிகாவை ஹீரோயினாக்கியுள்ளார். 2012ல் ஸ்பேனிஷ் மொழியில் வெளியான தி பாடி படத்தின் ரீமேக்காக உருவாகவிருக்கும் அந்த படத்தில் இம்ரான் ஹஷ்மி ஹீரோவாக நடிக்கிறார். 55 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கார்த்திக் கடைக்குட்டி, சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகும் படம் தேவ். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். ஆக்‌ஷன், காமெடி, அட்வெஞ்சர் கலந்து உருவாகும் இந்த படத்திற்கு பட்ஜெட் 55 கோடி ரூபாய். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. படத்தின் காப்புரிமைTWITTER/KARTHI_OFFL ஆக்‌ஷன் படம் என்பதால் விறுவிறுப்பானக் கார் சேசிங்க் காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கி வருகின்றனர். அதேபோல் பாடல்காட்சிகளையும் படமாக்குகின்றனர். இதை முடித்த கையோடு அடுத்தடுத்தக் கட்ட சூட்டிங்கை சென்னை, இமயமலை, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் படமாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான இடங்கள் தேர்வும் நடந்துமுடிந்துள்ளது. படத்தின் காப்புரிமைTWITTER/RAKULPREET தேவ் படத்தில் கார்த்தியை தவிர ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யாக் கிருஷ்ணன், ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்தியும் நடிக்கிறார். ஓவியா - விமல் - சற்குணம் விமல் - இயக்குநர் சற்குணம் கூட்டணியில் 2010ம் ஆண்டு வெளியான படம் களவாணி. கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ஓவியா ஹீரோயினாக அறிமுகமானார். கமர்ஷியல் விஷயங்களோடு 1 அரை கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட களவாணி படம் 8 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதற்குபின் சற்குணம் இயக்கிய வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் ஆகிய படங்கள் வியாபார ரீதியில் வெற்றியடையவில்லை. ஆனால் வாகை சூடவா படம் சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான தேசிய விருதை வென்றது. இந்த நிலையில் சற்குணம் தன்னுடைய முதல் படமான களவாணி படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். விமல் நடிக்கும் இந்த படத்தில் மீண்டும் ஓவியாவையே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தனர். படத்தின் காப்புரிமைTWITTER/OVIYAASWEETZ முதலில் விமல் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய சற்குணம் தற்போது ஓவியா காட்சிகளை படமாக்கிவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மீண்டும் தனுஷ் அனிருத் தனுஷ் - அனிருத் கூட்டணியில் வெளியான 3, மாரி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. அதேபோல் பின்னணி இசையையும் சிறாப்பாக உருவாக்கியிருந்தனர். இதனால் தனுஷ் அனிருத் கூட்டணி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். படத்தின் காப்புரிமைTWITTER.COM/DHANUSHKRAJA இதற்கு பின்பு தனுஷ், சந்தோஷ் நாரயாணன் மற்றும் ஷேன் ரோல்டனோடும் (Sean Roldan), அனிருத் மற்ற இயக்குனர்களோடும் பயணித்தனர். இருந்தாலும் தனுஷ் அனிருத் கூட்டணி போல் எதுவும் அமையவில்லை. இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூன்றாவது பாகத்திற்கு தனுஷ் அனிருத் ஆகியோர் மீண்டும் இணையவுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதை உறுதிபடுத்தும் வகையில் அனிருத் சமீபத்தில் அடுத்த ஆண்டு தனுஷோடு இணையவுள்ளேன் என்று கூறியுள்ளார். இதனால் தனுஷ் - அனிருத் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கவுதம் கார்த்திக் - மஞ்சிமா: இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தொடர்ந்து தேவராட்டம் படத்தில் நடிக்கிறார் கவுதம் கார்த்திக். கொம்பன் மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்குகிறார். இதற்கான பூஜை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் தற்போது படத்துக்கான ஹீரோயினை அறிவித்துள்ளனர். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகனை தேவராட்டம் படத்திற்கு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தின் காப்புரிமைTWITTER/MOHAN_MANJIMA அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மஞ்சிமா மோகன் நடித்த சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதனால் அவருக்கான வாய்ப்பு குறைந்து படங்கள் இல்லாமல் உள்ளார். இந்த நிலையில் தேவராட்டம் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சபாஷ் நாயுடு கமல்ஹாசன் நடித்து இயக்கும் படம் சபாஷ் நாயுடு. இந்த படத்தின் வேலைகள் 2016ல் தொடங்கியது. அமெரிக்காவில் முதல்கட்ட சூட்டிங்கை முடித்து சென்னை திரும்பிய கமல்ஹாசன், ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் தவறிவிழுந்தார். இதில் அவருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. படத்தின் காப்புரிமைTWITTER/IKAMALHAASAN இதனால் ஓய்வில் இருந்த கமல்ஹாசன், தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார். இதனால் சபாஷ் நாயுடு படத்தின் வேலைகள் தொடங்காது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சபாஷ் நாயுடு வேலைகளை தொடங்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுக்கிறாது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சபாஷ் நாயுடு படத்தை கமல்ஹாசன் உருவாக்குகிறார். https://www.bbc.com/tamil/arts-and-culture-44344578

சபாஷ் நாயுடு முதல் களவாணி-2 வரை: சுவாரசிய திரைத் துளிகள்

3 months 2 weeks ago
சபாஷ் நாயுடு முதல் களவாணி-2 வரை: சுவாரசிய திரைத் துளிகள்

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.

வேதிகா நடிக்கும் பாலிவுட் படம்

வேதிகா

தமிழில் வெளியான முனி, சக்கரக்கட்டி, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா. தமிழை தவிர தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் தற்போது தென்னிந்திய சினிமாக்களில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் வேதிகா, பாலிவுட் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வேதிகா

த்ரிஷ்யம் படம் மூலம் பிரபலமான மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப், தன் முதல் இந்தி படத்தில் வேதிகாவை ஹீரோயினாக்கியுள்ளார். 2012ல் ஸ்பேனிஷ் மொழியில் வெளியான தி பாடி படத்தின் ரீமேக்காக உருவாகவிருக்கும் அந்த படத்தில் இம்ரான் ஹஷ்மி ஹீரோவாக நடிக்கிறார்.

Presentational grey line

55 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கார்த்திக்

கடைக்குட்டி, சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகும் படம் தேவ். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். ஆக்‌ஷன், காமெடி, அட்வெஞ்சர் கலந்து உருவாகும் இந்த படத்திற்கு பட்ஜெட் 55 கோடி ரூபாய். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

ரகுல்படத்தின் காப்புரிமைTWITTER/KARTHI_OFFL

ஆக்‌ஷன் படம் என்பதால் விறுவிறுப்பானக் கார் சேசிங்க் காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கி வருகின்றனர். அதேபோல் பாடல்காட்சிகளையும் படமாக்குகின்றனர். இதை முடித்த கையோடு அடுத்தடுத்தக் கட்ட சூட்டிங்கை சென்னை, இமயமலை, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் படமாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான இடங்கள் தேர்வும் நடந்துமுடிந்துள்ளது.

ரகுல்படத்தின் காப்புரிமைTWITTER/RAKULPREET

தேவ் படத்தில் கார்த்தியை தவிர ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யாக் கிருஷ்ணன், ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்தியும் நடிக்கிறார்.

Presentational grey line

ஓவியா - விமல் - சற்குணம்

விமல் - இயக்குநர் சற்குணம் கூட்டணியில் 2010ம் ஆண்டு வெளியான படம் களவாணி. கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ஓவியா ஹீரோயினாக அறிமுகமானார். கமர்ஷியல் விஷயங்களோடு 1 அரை கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட களவாணி படம் 8 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதற்குபின் சற்குணம் இயக்கிய வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் ஆகிய படங்கள் வியாபார ரீதியில் வெற்றியடையவில்லை. ஆனால் வாகை சூடவா படம் சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான தேசிய விருதை வென்றது. இந்த நிலையில் சற்குணம் தன்னுடைய முதல் படமான களவாணி படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். விமல்  நடிக்கும் இந்த படத்தில் மீண்டும் ஓவியாவையே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தனர்.

ஓவியாபடத்தின் காப்புரிமைTWITTER/OVIYAASWEETZ

முதலில் விமல் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய சற்குணம் தற்போது ஓவியா காட்சிகளை படமாக்கிவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Presentational grey line

மீண்டும் தனுஷ் அனிருத்

தனுஷ் - அனிருத் கூட்டணியில் வெளியான 3, மாரி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. அதேபோல் பின்னணி இசையையும் சிறாப்பாக உருவாக்கியிருந்தனர். இதனால் தனுஷ் அனிருத் கூட்டணி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

தனுஷ்படத்தின் காப்புரிமைTWITTER.COM/DHANUSHKRAJA

இதற்கு பின்பு தனுஷ், சந்தோஷ் நாரயாணன் மற்றும் ஷேன் ரோல்டனோடும் (Sean Roldan), அனிருத் மற்ற இயக்குனர்களோடும் பயணித்தனர். இருந்தாலும் தனுஷ் அனிருத் கூட்டணி போல் எதுவும் அமையவில்லை. இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூன்றாவது பாகத்திற்கு தனுஷ் அனிருத் ஆகியோர் மீண்டும் இணையவுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதை உறுதிபடுத்தும் வகையில் அனிருத் சமீபத்தில் அடுத்த ஆண்டு தனுஷோடு இணையவுள்ளேன் என்று கூறியுள்ளார். இதனால் தனுஷ் - அனிருத் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Presentational grey line

கவுதம் கார்த்திக் - மஞ்சிமா:

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தொடர்ந்து தேவராட்டம் படத்தில் நடிக்கிறார் கவுதம் கார்த்திக். கொம்பன் மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்குகிறார். இதற்கான பூஜை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் தற்போது படத்துக்கான ஹீரோயினை அறிவித்துள்ளனர். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகனை தேவராட்டம் படத்திற்கு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மஞ்சிமாபடத்தின் காப்புரிமைTWITTER/MOHAN_MANJIMA

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மஞ்சிமா மோகன் நடித்த சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதனால் அவருக்கான வாய்ப்பு குறைந்து படங்கள் இல்லாமல் உள்ளார். இந்த நிலையில் தேவராட்டம் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Presentational grey line

சபாஷ் நாயுடு

கமல்ஹாசன் நடித்து இயக்கும் படம் சபாஷ் நாயுடு. இந்த படத்தின் வேலைகள் 2016ல் தொடங்கியது. அமெரிக்காவில் முதல்கட்ட சூட்டிங்கை முடித்து சென்னை திரும்பிய கமல்ஹாசன், ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் தவறிவிழுந்தார். இதில் அவருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது.

கமல்ஹாசன்படத்தின் காப்புரிமைTWITTER/IKAMALHAASAN

இதனால் ஓய்வில் இருந்த கமல்ஹாசன், தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார். இதனால் சபாஷ் நாயுடு படத்தின் வேலைகள் தொடங்காது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சபாஷ் நாயுடு வேலைகளை தொடங்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுக்கிறாது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சபாஷ் நாயுடு படத்தை கமல்ஹாசன் உருவாக்குகிறார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44344578

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!

3 months 2 weeks ago
உடல் எனும் இயந்திரம் 25: உடலில் பாயும் நதி உ டலில் ஓடும் ரத்தக்குழாய்களை நிலத்தில் பாயும் நதிக்கு ஒப்பிடலாம். எப்படி நதியானது ஏரியாக, குளமாக, சிறு ஓடையாகப் பிரிந்து, தான் ஓடும் இடங்களில் எல்லாம் நீரைப் பாய்ச்சி, நிலத்தை வளப்படுத்துகிறது. அதுபோல நம் உடலில் ஓடும் ரத்தக்குழாய்களும் தாம் செல்லும் உறுப்புகளுக்கு எல்லாம் ரத்தம் கொடுத்து, அவற்றின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. ரத்தம் பாயும் பாதைகள்தான் ரத்தக்குழாய்கள். மனிதருக்கு ரத்தக்குழாய்களின் மொத்த நீளம் சுமார் 1,60,000 கி.மீ. ரத்தக்குழாயால் தனித்து இயங்க முடியாது. இதயம், நுரையீரல்கள், ரத்தம் ஆகியவற்றுடன் இணைந்து ரத்தச் சுற்றோட்டத்தை (Circulatory System) உருவாக்கி, அதன் மூலமே இயங்குகிறது. மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கு நுரையீரல் சுற்றோட்டம் (Pulmonary circulation), மண்டலச் சுற்றோட்டம் (Systemic circulation) என இரட்டைச் சுற்றோட்டங்கள் உள்ளன. மீன் போன்ற நீர் வாழினங்களுக்கு ஒற்றைச் சுற்றோட்டம் மட்டுமே உள்ளது. சில வகைப் புழுக்களுக்கு ரத்தக்குழாய்களே இல்லை. நுரையீரல் சுற்றோட்டத்தில் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. வலது இதயத்திலிருந்து அசுத்த ரத்தம் இரண்டு நுரையீரல் தமனிகள் (Pulmonary arteries) வழியாக நுரையீரல்களுக்குச் சென்று, சுத்திகரிக்கப்பட்டு, சுத்த ரத்தமாக மாறி, நான்கு நுரையீரல் சிரைகள் (Pulmonary veins) வழியாக மீண்டும் இடது இதயத்துக்கு வந்து சேர்கிறது. மண்டலச் சுற்றோட்டத்தில் உணவுப் பகிர்தலும் கழிவு அகற்றலும் நிகழ்கின்றன. இடது இதயத்தில் தொடங்கும் ரத்தக்குழாய் சுத்த ரத்தத்தைச் சுமந்து கொண்டு, நுரையீரல் நீங்கலாக, உடல் முழுவதும் கொடுத்துவிட்டு, அங்கிருந்து அசுத்தத்தைக் கொண்டுவந்து, வலது இதயத்துக்குத் தருகிறது. இந்தப் பயணத்தின்போது தன்னிடமுள்ள சில கழிவுகளை, நுரையீரல், சிறுநீரகம், தோல் வழியாகவும் வெளியேற்றுகிறது. இதனால்தான் உடல் எப்போதும் சீராக இயங்க முடிகிறது. ரத்தக்குழாயானது தமனி (Artery), சிரை (Vein), தந்துகிகள் (Capillaries) என மூன்று பிரிவுகளில் அமைந்துள்ளது. ‘ஆக்ஸிஜன் மிகுந்த சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்வது தமனிகள். விதிவிலக்காக, நுரையீரல் தமனிகள் மட்டும் கார்பன் - டை – ஆக்ஸைடு மிகுந்த அசுத்த ரத்தத்தைச் சுமக்கின்றன. தமனிக் குழாய் உள்ளிருந்து வெளிப் பக்கமாக உள்பாளம் (Tunica intima), நடுப்பாளம் (Tunica media), வெளிப்பாளம் (Tunica adventitia) என மூன்றடுக்குச் சுவர்களால் ஆனது. நடுப்பாளத்தில் மீள்திசுக்கள் (Elastic tissues) அதிகம். இதன் பலனாக, தமனிகளுக்கு மீள்தன்மை (Elasticity) கிடைக்கிறது. தமனிகளின் சிறப்பு இந்த மீள்தன்மையில்தான் உள்ளது. இதயத்திலிருந்து வெளிவரும் அழுத்தம் மிகுந்த ரத்தம் தமனிகளைப் பாதிக்காமலிருக்க, இந்த மீள்தன்மை தேவைப்படுகிறது. தமனிகளில் வால்வுகள் இல்லை. எனவே, இதயம் தரும் விசையில் தமனியில் பாய்கிற ரத்தம் எவ்விதத் தடையுமின்றி, உறுப்புகளுக்குள் சென்றடைகிறது. தமனிகளில் ரத்தம் பாய்வதைப் பரிசோதிப்பதுதான் ‘நாடி’ (Pulse) பார்ப்பது. சராசரியாக ஒரு தமனியின் தடிமன் 1 மி.மீ., உள்விட்டம் 4 மி.மீ.. இடது இதயத்தில் கிளம்பும் மகாதமனிதான் (Aorta) உடலிலேயே மிகப் பெரிய ரத்தக் குழாய். இதன் தடிமன் 2 மி.மீ., உள்விட்டம் 2.5 செ.மீ. இது உடலுக்குள் செல்லும்போது, கழுத்து, மூளை, கைகள், நெஞ்சு, வயிறு, கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், இடுப்பு, கால்களுக்கு என்று தனித்தனி குறுந்தமனிகளாகப் பிரிகிறது. இப்படி ஒவ்வோர் உறுப்பிலும் நுழையும் குறுந்தமனிகள் நூலிழைபோல் மெலிந்து நுண்தமனிகளாகிப் (Arterioles) பின்னர் தந்துகி வலைப்பின்னல்களாகக் கிளைவிட்டு, திசுக்களுக்கு இடையில் ஊடுருவுகின்றன. ரத்தத்தில் வரும் உணவுச் சத்துகள், ஆக்ஸிஜன், ஹார்மோன்கள் முதலியவை தந்துகிகளின் மெல்லியச் சுவர்கள் வழியாகக் கசிந்து உடல் செல்களுக்குச் செல்கின்றன; அப்போது அங்கு சேர்ந்திருக்கும் கார்பன் - டை – ஆக்ஸைடு, உப்பு போன்ற கழிவுகளைத் தந்துகிகள் பெற்றுக்கொள்கின்றன. சுத்த ரத்தம் அசுத்த ரத்தமாவது இப்படித்தான். சிரை என்பது அசுத்த ரத்தத்தை இதயத்துக்கு எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய். விதிவிலக்காக, நுரையீரல் சிரைகள் (Pulmonary veins) மட்டும் சுத்த ரத்தத்தை இதயத்துக்குக் கொண்டு வருகின்றன. சிரைகளுக்கும் மூன்றடுக்குச் சுவர் உண்டு. ஆனால், நடுப்பாளத்தில் திசுக்களின் கனம் குறைவு என்பதால், தமனியைவிட சிரைக்குழாய் மிக மெல்லியது. ஒரு சிரையின் தடிமன் 0.5 மி.மீ., உள்விட்டம் 5 மி.மீ. தமனிச் சுற்றும் சிரைச் சுற்றும் சந்திக்கிற இடம்தான் தந்துகிகள். பல தந்துகிகள் இணைந்து, நூலிழைகள் போன்ற நுண்சிரைகளைத் (Venules) தோற்றுவிக்கின்றன. நுண்சிரைகள் ஒன்றிணைந்து சிரைகளை உருவாக்குகின்றன. தந்துகிகளின் அசுத்த ரத்தம், நுண்சிரை, சிரை எனும் பாதையில் பயணித்து, இறுதியில் பெருஞ்சிரைகளை (Vena cava) அடைகிறது. தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றில் உள்ள சிரைக்குழாய்கள் இணைந்து மேற்பெருஞ்சிரையாகவும் (Superior vena cava), இதயத்துக்குக் கீழே உள்ள சிரைகள் இணைந்து கீழ்ப்பெருஞ்சிரையாகவும் (Inferior vena cava) உருவெடுத்து, வலது இதயத்துக்கு வருகின்றன. உடலில் உள்ள சிரைக்குழாய்களில் மிகப் பெரியவை இவை இரண்டும்தான். சிரைகளின் சிறப்புத் தன்மை வால்வுகளைக் கொண்டிருப்பது. இவை இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்வதால், புவிஈர்ப்பு விசை காரணமாக, ரத்தம் பின்னோக்கிப் பாய்வதைத் தடுக்கவும், இதயத்தை நோக்கி ஒரே திசையில் செல்லவும் வால்வுகள் பயன்படுகின்றன. விதிவிலக்காக மூளை, நெஞ்சு, வயிறு ஆகிய இடங்களில் சிரைகளுக்கு வால்வுகள் இல்லை. இவற்றில் மீள்திசுக்களும் இல்லை என்பதால் மீள்தன்மையும் இல்லை. இவை சுயமாகவும் இயங்க முடியாது; சுற்றியுள்ள தசைகளின் இயக்கத்தால்தான் சிரைகளின் வழியே ரத்தம் செல்கிறது. உடலிலுள்ள தமனிகளில் மிக முக்கியமானவை இதயத் தமனிகள் (Coronary arteries). இவை மகாதமனியின் கிளைகள். இவை இதயத் தசைகளுக்கு ரத்தம் கொடுக்கின்றன. கொழுப்புப் பொருளாலோ, ரத்தக்கட்டியாலோ இவை அடைத்துக்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதுபோல் மூளைக்கு ரத்தம் கொடுப்பது பெருமூளைத் தமனிகள் (Cerebral arteries). இவை பாதிக்கப்படும்போது, பக்கவாதம் (Stroke) உண்டாகிறது. (இன்னும் அறிவோம்) கட்டுரையாளர், பொதுநல மருத்துவர். http://tamil.thehindu.com

ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் – சிவா­ஜி­லிங்­கத்­துக்குப் பகி­ரங்க மிரட்­டல்!!

3 months 2 weeks ago
ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் – சிவா­ஜி­லிங்­கத்­துக்குப் பகி­ரங்க மிரட்­டல்!! ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் என்று, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­துக்கு, வட­ம­ராட்சி கிழக்­கில் வாடி அமைத்து கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும் ஒரு­வர் பகி­ரங்க மிரட்­டல் விடுத்­துள்­ளார். வட­ம­ராட்சி கிழக்கு கடற்­ப­ரப்­பில் கட­லட்டை பிடிப்­பது தொடர்­பில் மரு­தங்­கேணி பிர­தேச செய­ல­கத்­தில் நேற்­றுக் காலை கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. அதன் பின்­னர் வாடி அமைத்­தி­ருந்த இடங்­க­ளுக்கு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், கடற்­தொ­ழி­லா­ளர் சங்­கத்­தி­னர், பொது­மக்­கள் நேர­டி­யா­கச் சென்­ற­னர். மாமு­னைப் பகு­தி­யில் வாடி அமைத்­துள்ள ஒரு­வரே, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்தை மிரட்­டி­யுள்­ளார். இதே­வேளை நாகர்­கோ­வில் பகு­தி­யில் வாடி அமைத்து கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும், முஸ்­லிம் ஒரு­வ­ரி­டம் சிவா­ஜி­லிங்­கம் பேச்சு நடத்­தி­ய­போது, வாடி அமைப்­ப­தற்­காக காணி உரி­மை­யா­ள­ருக்கு 11 லட்­சம் ரூபா கொடுத்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார். இதன்­போது அங்கு நின்ற நாகர்­கோ­வி­லைச் சேர்ந்த காணி உரி­மை­யா­ளர், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் சிவா­ஜி­லிங்­கத்தை நோக்கி, நீங்­கள் என்ன சட்­ட­ந­ட­வ­டிக்கை வேண்­டு­மா­னா­லும் எடுங்­கள். அதைப் பற்­றிக் கவ­லை­யில்லை. உங்­க­ளால் செய்ய முடிந்­த­தைச் செய்­யுங்­கள் என்று சத்­தம்­போட்­டார். http://newuthayan.com/story/10/ஆவாக்-குழுவை-வைத்­துச்-செய்­வோம்-சிவா­ஜி­லிங்­கத்­துக்குப்-பகி­ரங்க-மிரட்­டல்.html

ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் – சிவா­ஜி­லிங்­கத்­துக்குப் பகி­ரங்க மிரட்­டல்!!

3 months 2 weeks ago
ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் – சிவா­ஜி­லிங்­கத்­துக்குப் பகி­ரங்க மிரட்­டல்!!

 

 

Capture-26-750x430.jpg

 
 

ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் என்று, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­துக்கு, வட­ம­ராட்சி கிழக்­கில் வாடி அமைத்து கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும் ஒரு­வர் பகி­ரங்க மிரட்­டல் விடுத்­துள்­ளார்.

வட­ம­ராட்சி கிழக்கு கடற்­ப­ரப்­பில் கட­லட்டை பிடிப்­பது தொடர்­பில் மரு­தங்­கேணி பிர­தேச செய­ல­கத்­தில் நேற்­றுக் காலை கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. அதன் பின்­னர் வாடி அமைத்­தி­ருந்த இடங்­க­ளுக்கு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், கடற்­தொ­ழி­லா­ளர் சங்­கத்­தி­னர், பொது­மக்­கள் நேர­டி­யா­கச் சென்­ற­னர்.

மாமு­னைப் பகு­தி­யில் வாடி அமைத்­துள்ள ஒரு­வரே, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்தை மிரட்­டி­யுள்­ளார்.

 

இதே­வேளை நாகர்­கோ­வில் பகு­தி­யில் வாடி அமைத்து கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும், முஸ்­லிம் ஒரு­வ­ரி­டம் சிவா­ஜி­லிங்­கம் பேச்சு நடத்­தி­ய­போது, வாடி அமைப்­ப­தற்­காக காணி உரி­மை­யா­ள­ருக்கு 11 லட்­சம் ரூபா கொடுத்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

இதன்­போது அங்கு நின்ற நாகர்­கோ­வி­லைச் சேர்ந்த காணி உரி­மை­யா­ளர், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் சிவா­ஜி­லிங்­கத்தை நோக்கி, நீங்­கள் என்ன சட்­ட­ந­ட­வ­டிக்கை வேண்­டு­மா­னா­லும் எடுங்­கள். அதைப் பற்­றிக் கவ­லை­யில்லை. உங்­க­ளால் செய்ய முடிந்­த­தைச் செய்­யுங்­கள் என்று சத்­தம்­போட்­டார்.

http://newuthayan.com/story/10/ஆவாக்-குழுவை-வைத்­துச்-செய்­வோம்-சிவா­ஜி­லிங்­கத்­துக்குப்-பகி­ரங்க-மிரட்­டல்.html

அப்பவே அப்படி கதை!

3 months 2 weeks ago
எதிர்நீச்சல் - அப்பவே அப்படி கதை அ+ அ- ஒண்டுக்குடித்தனம் என்றால் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. அபார்ட்மெண்ட்ஸ் என்றால்தான் தெரியும். அதாவது தனிவீடு என்றில்லாமல், நான்கைந்து வீடுகளோ, நாற்பது வீடுகளோ இன்றைக்கு இருப்பது போல, அன்றைக்கு ஆறேழு வீடுகள் இருந்தால், அவை ஒண்டுக்குடித்தனம் என்று சொல்லப்பட்டன. அப்படியொரு ஒண்டுக்குடித்தனத்தை அச்சு அசலாக செட் போட்டு, ஏழெட்டு கதாபாத்திரங்களைக் கொண்டு, எதிர்நீச்சலும் உள்நீச்சலும் போட்டு, முங்கி எழுந்து ஜெயித்திருப்பார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். அப்படியான வீட்டின் மாடிப் பகுதிக்குக் கொஞ்சமே கொஞ்சம் கீழே இடம் இருக்கும்தானே. ஒரு இடுக்கு போல் இருக்கும் அந்த இடத்தில் யாருமற்றவன், இங்கே எல்லோருக்குமானவனாக வசிக்கிறான். வாழ்கிறான். அவன் பெயர் மாது. மாடிப்படி மாது. எந்த உறவுமுறையுமே இல்லாமல் வாழும் மாதுவிடம் இருந்து எல்லா வேலைகளையும் வாங்கிக் கொண்டு, முறைவைத்து சாப்பாடு போடுகிறார்கள் அங்கே வாழ்பவர்கள். மேஜர் சுந்தர்ராஜன் குடும்பம், எம்.ஆர்.ஆர்.வாசு குடும்பம், செளகார் ஜானகி குடும்பம், ஜெயந்தி குடும்பம் என்று அந்தக் குடும்பங்களுக்குள் நடக்கிற ஏச்சும்பேச்சும், பூசலும் பாசமும், பொய்யும்புரட்டுமே எதிர்நீச்சல். அந்த மாடிப்படியின் இடுக்கில் இருந்துகொண்டு, படித்து உயரவேண்டும் என்று நினைக்கிற மாதுதான் நாயகன். ஒருபக்கம் எடுபிடி வேலை. இன்னொரு பக்கம் படிப்பு. எல்லா சமயமும் உண்மை என்று மாது கதாபாத்திரத்தை, தன் உடல்மொழியாலும் வெள்ளந்திச் சிரிப்பாலும் மெளன ஏக்க பாஷைகளாலும் தூக்கிப்பிடித்து, உச்சத்தில் ஏற்றிவைத்திருப்பார் நாகேஷ். ‘இவரைத் தவிர வேற யாருமே இந்தக் கேரக்டரைச் செய்யமுடியாதுப்பா’ என்று சொல்வோமே. இந்த மாதுவும் அப்படித்தான். நாகேஷூம் அப்படித்தான் அசத்தியிருப்பார். நாகேஷ் அளவற்ற நம்பிக்கையும் அதீத பாசமும் கொண்டிருக்கும் மேஜர் சுந்தர்ராஜனும் நடிப்பில் கம்பீரம் காட்டியிருப்பார். அசடாக ஸ்ரீகாந்தும் சினிமாப் பைத்தியமாக அவரின் மனைவி செளகார் ஜானகியும் அச்சு அசல், கிட்டு மாமா, பட்டு மாமியாக வெளுத்துவாங்கியிருப்பார்கள். கேரளத்து சேட்டனாக முத்துராமன், முறுக்கும் மிடுக்கும் கொண்டு தன் அதட்டுகிற குரலுக்குள்ளேயே பாசமும் நேசமும் காட்டுவது, அவரின் தனி ஸ்டைல் நடிப்பு. பைத்தியமாகி குணமாகி வந்திருக்கும் ஜெயந்திதான் நாயகி. எஸ்.என். லட்சுமிதான் அம்மா. மாதுவைக் கொஞ்சுவதுபோல் கொஞ்சுவார். கெஞ்சுவது போல் கெஞ்சுவார். மிரட்டுவது போல் மிரட்டுவார். சொல்லிக் காட்டுவதுபோல் இடித்துரைப்பார். ஆக மொத்தம் எப்படியாவது அவர் வேலையை நாகேஷிடம் வாங்கிவிடுவார். வயதானவர்களுக்கே உண்டான அந்த குணாதிசயங்களை, அற்புதமாகக் கொண்டு வந்திருப்பார் தன் நடிப்பின் மூலமாக! அங்கே சின்னதும்பெருசுமாகப் பொருட்கள் களவாடப்படும். நாகேஷ்தான் திருடியிருப்பார் என்று எல்லோரும் குற்றப்பத்திரிகை வாசிப்பார்கள். மேஜர் சுந்தர்ராஜன் வந்து என்ன கலாட்டா என்று கேட்பார். மாடத்தில் வைத்த பணம் காணோம், சட்டை காணோம், வெள்ளி டம்ளர் காணோம் என்றெல்லாம் சொல்லும்போது சட்டென்று நாகேஷ், ‘நாயரோட வாட்ச்சைக் காணோம்’ என்று எடுத்துக்கொடுப்பார். அப்போதே மேஜருக்கு, நாகேஷ் குற்றவாளியில்லை என்பது தெரிந்து நெகிழ்ந்துபோவார். அந்தக் காட்சியும் எல்லாரின் நடிப்பும் முக்கியமாக வசனமும் அமர்க்களப்படுத்திவிடும். இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும் பூக்கிற அந்தக் காதல், தனி எபிசோடு. அவர்கள் சந்திப்பதற்கு, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாடலை சிக்னலாக வைத்துக்கொள்வது, இன்னொரு நேர்த்தி. அழகியல் டச். மேஜருக்கும் நாகேஷூக்கும், நாகேஷூக்கும் முத்துராமனுக்கும், ஜெயந்திக்கும் நாகேஷூக்கும், நாகேஷூக்கும் செளகார் ஜானகிக்கும் என லிங்க் வைத்து, காமெடி பண்ணி, கதை நகர்த்தி, நெகிழ்த்தி மகிழ்ச்சிப் படுத்தியிருப்பதுதான் கே.பியின் உத்திகளில் ஒன்று. எதற்கெடுத்தாலும் சினிமா விஷயங்களை உதாரணமாகச் சொல்லும் அந்த செளகார்... நம் ஒவ்வொருவர் கூட்டத்திலும் உள்ள ஒருவர்தான். சீரியஸ் அழுமூஞ்சி நாயகி செளகாரை காமெடி பண்ணவைத்திருப்பதும் காமெடி அதகள மனோரமாவை, தப்பித்தவறியும் ஒரு சீனில் கூட காமெடி பண்ணாமல் வைத்திருப்பதும், கே.பாலசந்தருக்கு, கே.பாலசந்தர் மேல் உள்ள நம்பிக்கையின் உச்சபட்சம். ‘படவா ராஸ்கல்’ என்று அடிக்கொரு தரம் நாகேஷை அழைக்கும் மேஜர் கதாபாத்திரம் அவ்வளவு பாந்தம். இன்னொரு முறை திருட்டுச் சம்பவம். எஸ்.என்.பார்வதியின் தம்பி தேங்காய் சீனிவாசன், நாகேஷிடம் கையும்களவுமாக மாட்டிக்கொள்வார். விஷயம் தெரிந்து ஓடிவரும் லட்சுமியும், ‘காட்டிக்கொடுத்துடாதேடா’ என்று கெஞ்சுவார். ஆனால் விளக்குகள் போடப்படும். எல்லோரும் வந்துவிடுவார்கள். சட்டென்று ‘என்னடா மாது இப்படித் திருடுறியே. என் தம்பிகிட்ட வசமா மாட்டிக்கிட்டியே... என் கையால சோறு போட்டேனேடா...’ என்று நாகேஷை மாட்டிவிடுவார். ‘இப்பவாவது உண்மையைச் சொல்லு’ என்று மேஜர் சொல்ல, பரிதாபமாக, ‘ஆமாம் சார்.... நான்தான் திருடினேன்’ என்பார் நாகேஷ். ஒவ்வொரு பொருளாகச் சொல்லி, திருடினது நீதானா என்று கேட்டுக்கொண்டே வந்து முடிப்பார் மேஜர். உடனே நாகேஷ், ‘ஆங்... நாயர் வாட்ச்சை விட்டுட்டீங்களே...’ என்று சொல்லிவிட்டு, கண்ணால் ஒரு ஜாடை செய்வார். அற்புதமான காட்சி. அதையடுத்து தேங்காய் சீனிவாசன் தான் திருடியிருக்கிறார் எனும் குட்டு வெளிப்பட்டதும், அவரின் மாமா வெளுத்தெடுப்பார். சரிந்து விழுந்து கிடப்பார் தேங்காய் சீனிவாசன். ‘போலீஸ்ல பிடிச்சுக் கொடுங்க’ என்று சொல்லும்போது, ‘வேணாம் சார். தப்பு செஞ்சு மாட்டிக்கிட்டு, கீழே விழுந்து கிடக்குறாரு. எந்திருக்கும் போது நல்லவனா திருந்தி நிப்பார் சார்’ என்பார் நாகேஷ். இது எதிர்நீச்சல் எனும் சமுத்திரத்தின் ஓர் அலை மட்டுமே. இன்னும் இன்னும் மனதில் அலையடிக்கும் காட்சிகளும் வசனங்களும் ஏராளம். இத்தனையிலும் துணை நிற்கும் மேஜர், ‘படிக்கிற வயசுல காதல் தேவையா’ என்று பேசமறுக்கிறார். ‘படவா ராஸ்கல்’ என்று அழைக்க மறுக்கிறார். ‘இவங்க உன்னை மன்னிச்சு இங்கே இடம் தரலாம். ஆனா என் மனசுல உனக்கு இடமில்லடா’ என்பார் மேஜர். ‘பரீட்சைக்குப் போறேன். நீங்க ஆசீர்வாதம் பண்ணினா, நல்லா எழுதுவேன்’ என்று கெஞ்சுவார் நாகேஷ். அவரே மேஜராகவும் நடித்து, நாகேஷாகவும் இருந்து ஆசி வாங்குகிற சீன், அழவைத்துவிடும். இன்னொரு காட்சி. நாகேஷ் கால் உடைந்து அவஸ்தைப்படுவார். ‘சார்... இன்னிக்கிதான் சார் கடைசி பரீட்சை. என்ன செய்வேன் சார் நான்’ என்பார். எழுந்து நிற்கச் சொல்லுவார் மேஜர். அப்படி நிற்கும்போது, அப்படியே அலேக்காகத் தூக்கிக்கொள்வார். மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று, தேர்வு ஹாலில் அமரவைத்து, வீட்டுக்குக் தூக்கி வந்து, ‘நான் மாது வந்திருக்கேன்’ என்று நாகேஷூக்குப் பதிலாக மேஜர் சுந்தர்ராஜன் தட்டேந்தி வாசலில் நிற்பார். நமக்கு, நெஞ்சை அடைத்துக்கொண்டு, கண்ணில் இருந்து புறப்படும் கண்ணீர். ’சில விஷயங்களை நீங்க சொன்னாத்தான் நல்லாருக்கும். நான் சொல்றதை நீங்க சொல்லக்கூடாது, நீங்க சொல்றதை நான் சொல்லக்கூடாது’ என்று சொல்லிவிட்டு, பரவாயில்ல, சொல்லுடா என்று மேஜர் சொல்ல, ‘படவா ராஸ்கல்’ என்பார் நாகேஷ். அழுதுகொண்டிருந்த ஆடியன்ஸ் அப்படியே கைத்தட்டி சிரிப்பார்கள். ரசிப்பார்கள். ‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’, ‘தாமரைக் கன்னங்கள்’, ’அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா’, ‘சேதி கேட்டோ சேதி கேட்டோ’... என்று பாடல்கள் மொத்தமும் ஹிட்டு. கே.பாலசந்தரால் அறிமுகமான பாலசந்தர் ஸ்பெஷலான வி.குமாரின் இசையில் எல்லாப் பாடல்களும் இன்றைக்கும் மனசுக்குள் சப்பளங்கால் போட்டு உட்கார்ந்திருக்கின்றன. ஒரு காட்சியின் ஆரம்பமும் முடிவும் சிறப்பாக, நேர்த்தியாக இருக்கவேண்டும் என்பது சினிமா விதி. இலக்கணம். இந்தப் படத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய முத்திரைகளின் மூலம், பாலசந்தர் தெரிந்துகொண்டே இருப்பார். மாது என்கிற நாகேஷூம் உயர்ந்துகொண்டே இருப்பார். 1968ம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம், இன்றைக்கும் ரசிகர்களின் மனக்கடலில் நீச்சலடித்துக்கொண்டே இருக்கிறது. அப்புறம் ஒரு விஷயம்... முகத்தையே காட்டாமல், இருமலையே ஒரு கேரக்டராக்கியிருப்பது, பாலசந்தரால் மட்டுமே முடிகிற அசாத்தியம். அந்த இருமல் தாத்தாவின் முகத்தை யாரேனும் பார்த்திருக்கிறீர்களா? http://www.kamadenu.in/news/cinema/2862-ethir-neechal-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

சிங்கள மீனவர்களை வெளியேற்றுங்கள்- சுமந்திரன் கோரிக்கை

3 months 2 weeks ago
கட­லுக்­குள் இறங்க வேண்­டாம் – வாடி அமைத்­தோ­ருக்கு அறி­விப்பு!! வட­ம­ராட்சி கிழக்­கில் கட­லட்டை பிடிப்­ப­தற்­காக வாடி அமைத்­துள்­ளோர், இந்த விவ­கா­ரத்­துக்கு தீர்வு வரும் வரை­யில் கட­லுக்­குள் இறங்­க­வேண்­டாம். அத­னை­யும் மீறி இறங்­கி­னால், வாடி எரிக்­கப்­பட்­டாலோ அல்­லது ஏதா­வது அசம்­பா­வி­தங்­கள் நடந்­தாலோ நாம் பொறுப்­பா­க­மாட்­டோம். இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், வாடி அமைத்­தோரை நேரில் சந்­தித்து அறி­வு­றுத்­தி­யுள்­ளார். வட­ம­ராட்சி கிழக்கு கடற்­ப­ரப்­பில் கட­லட்டை பிடிப்­பது தொடர்­பில் மரு­தங்­கேணி பிர­தேச செய­ல­கத்­தில் நேற்­றுக் காலை கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. அதன் பின்­னர் வாடி அமைத்­தி­ருந்த இடங்­க­ளுக்கு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், கடற்­தொ­ழி­லா­ளர் சங்­கத்­தி­னர், பொது­மக்­கள் நேர­டி­யா­கச் சென்­ற­னர். தாளை­யடி, செம்­பி­யன்­பற்று, மாமுனை, நாகர்­கோ­வில், குடா­ரப்பு இந்­தப் பகு­தி­க­ளில் சுமார் 250 வாடி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அங்கு 400 பேர் வரை­யில் தங்­கி­யி­ருந்து கடல் அட்டை பிடிக்­கின்­ற­னர். இவர்­களை நேற்­றுக் காலை 10.30 மணி­ய­ள­வில் நேர­டி­யா­கச் சென்று சந்­தித்­துப் பேச்சு நடத்­தும்­பேதே, மேற்­கண்­ட­வாறு அறி­வு­றுத்­தலை வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர், கடற்­தொ­ழில் சங்­கப் பிர­தி­நி­தி­கள் மற்­றும் மக்­கள் வழங்­கி­னர். கட­லட்டை பிடிப்­பதை நிறுத்­தும் நட­வ­டிக்­கை­களை நாம் மேற்­கொண்­டுள்­ளோம். இது தொடர்­பில் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளோம். அதற்­கு­ரிய ஆயத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. சுமார் ஒரு வார காலத்­தில் முடிவு தெரி­யும். அது வரை­யில், தொழில் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக கட­லுக்­குள் இறங்­க­வேண்­டாம். அத­னை­யும் மீறி நீங்­கள் கட­லட்டை பிடிக்க கட­லுக்­குள் இறங்க, உங்­க­ளின் வாடி­கள் எரிக்­கப்­பட்டு, அத­னால் பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­டால் நாங்­கள் பொறுப்­பில்லை என்று, கட­லட்டை பிடிப்­போ­ரி­டம் தெரி­வித்­த­னர். http://newuthayan.com/story/09/கட­லுக்­குள்-இறங்க-வேண்­டாம்-வாடி-அமைத்­தோ­ருக்கு-அறி­விப்பு.html

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்

3 months 2 weeks ago
மொராக்கோவின் தற்காப்பு ஆட்டம் கைகொடுக்குமா? மெதி பெனட்டியா - AFP மொராக்கோ அணி 20 வருடங்களுக்குப் பிறகு தற்போது உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. அட்லஸ் லயன்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் மொராக்கோ அணி இதற்கு முன்னர் 4 முறை உலகக் கோப்பை தொடரில் விளையாடி உள்ளது. 1970, 1994, 1998 ஆகிய ஆண்டுகளில் முதல் சுற்றுடன் வெளியேறிய மொராக்கோ 1986 உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுவரை முன்னேறி ஆச்சர்யம் கொடுத்தது. மொராக்கோ அணி இம்முறை ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின், ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுக்கல், ஈரான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதனால் மொராக்கோ அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கு கடுமையாக போராட வேண்டியதிருக்கும். இதற்கு தகுந்தபடியே அந்த அணி சிறந்த முறையில் தயாராகியிருப்பதாக கருதப்படுகிறது. கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது அந்த அணி தற்காப்பு ஆட்டத்தை கையில் எடுக்கும் பாணியை சமீபகாலமாக கடைப்பிடித்து வருகிறது. தகுதி சுற்றில் கடைசி கட்டத்தில் மொராக்கோ அணி 6 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. இதில் அந்த அணி 3 ஆட்டங்களை கோல்களின்றி டிராவில் முடித்த நிலையில் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. இந்த 3 ஆட்டங்களில் 11 கோல்களை அடித்த மொராக்கோ அணி ஒரு கோல் கூட வாங்கவில்லை என்பதுதான் சிறப்பம்சம். தொழில்ரீதியான போட்டிகளில் ஜூவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வரும் 31 வயதான மெதி பெனட்டியா ‘சென்டர் பேக்’ பொசிஷனில் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டவர். களத்திலும், களத்துக்கு வெளியேயும் சிறந்த பண்புகளை கொண்ட அவரை அணி நிர்வாகம் பெரிதும் நம்பி உள்ளது. இதேபோல் பேக் லைனில் கரீம் எல் அஹ்மதி அசத்தக் கூடியவர். முன்களத்தில் அசத்தக்கூடிய வீரராக 25 வயதான ஹக்கிம் ஸியெக் உள்ளார். தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்ட அவர், நெதர்லாந்து கிளப் அணிக்காக இந்த சீசனில் 15 கோல்கள் அடிக்க உதவி செய்துள்ளார். மேலும் தகுதி சுற்று ஆட்டத்தில் மொராக்கோ அணி 6-0 என மாலி அணியை பந்தாடிய ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். இதேபோல் வளர்ந்து வரும் வீரரான அச்ராஃப் ஹக்கிமியும் அனைவரது கவனத்தையும் ஈர்க்க காத்திருக்கிறார். சமீபத்தில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியில் அச்ராஃப் ஹக்கிமியும் அங்கம் வகித்தார். தகுதி சுற்றில் கபான் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்த காலித் பியூட்டிப், இந்த சீசனில் துருக்கி லீக் கால்பந்து தொடரில் 12 கோல்கள் அடித்து சிறந்த பார்மில் உள்ளார். 1986 உலகக் கோப்பையில் மொராக்கோ அணி லீக் சுற்றில் இங்கிலாந்து, போலந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்த நிலையில் பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது பிரிவில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இம்முறை நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கம் வகிக்கும் போர்ச்சுக்கல் அணியை மொராக்கோ அணி வீழ்த்துவது அவ்வளவு எளிதானதாக இருக்காது. எனினும் கால்பந்தில் எதுவேண்டுமானாலும் நடைபெறலாம். காத்திருப்போம் கால்களின் திருவிழா தொடங்கும் வரை. http://tamil.thehindu.com/sports/article24071235.ece

முருங்கை மரம் ஏறப் போகும் சிங்கள வேதாளம்

3 months 2 weeks ago
தமிழருக்கு பிரச்சனையே இல்லை என யாழ்களத்திலேயே சிலர் (தமிழர்கள்) சொல்லக் கேட்டுள்ளேன். அப்படி இருக்கும் போது மகிந்த போன்றவர்கள் தமிழர்களின் எந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது??

பசிலின் தூண்டுதலால் களமிறங்கும் கோத்தபாய! மைத்திரியின் பாதுகாப்பு ரணிலிடம்! புதிதாக வகுக்கப்படும் திட்ட வியூகம்

3 months 2 weeks ago
பசிலின் தூண்டுதலால் களமிறங்கும் கோத்தபாய! மைத்திரியின் பாதுகாப்பு ரணிலிடம்! புதிதாக வகுக்கப்படும் திட்ட வியூகம் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் துண்டுதலினால் தான் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் தீவிரமாக களமிறங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை கொழும்பு அரசியலை பரபரப்பாக்கியது. பதவியேற்ற மறுநாளே தான் நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நூறுநாள் வேலைத்திட்டம் என்பது மடத்தனமானது என்றும் கடுமையாகப் பேசியிருந்தார். இந்நிலையில், இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதுமாத்திரமன்றி, ஜனாதிபதியின் கருத்துக்கு பதில் கருத்தினை எவரும் வழங்க வேண்டாம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சி உறுப்பினரிடம் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து நேற்றைய தினம் அலரிமாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கிய பிரதமர் ரணில், தங்களுடனான கூட்டணியைத் தொடர்வதே ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியில் பாதுகாப்பான அணுகுமுறையாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியலை முன்னெடுக்கும் யோசணையை கொண்டிருப்பதாக தெரிகின்றது. ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைத்துக் கொள்வதிலும் ஜனாதிபதி நாட்டம் காட்டுகின்றார் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இவ்வாறு அவர் செய்வாரேயானால், அது அவருக்கு பாதகமானதாகவே முடியும். கோத்தபாய ராஜபக்ஷ தீவிரமான பிரசாரங்களில் இறங்கியிருக்கின்றார். களத்தில் அவரது பிரவேசத்தை பருவம் முந்தியதாகவே நான் கருதுகின்றேன். அவர் இவ்வாறு செய்வதற்கு பிரதான காரணம் அவரது இளைய சகோதரர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் துண்டுதலாகும் என்று நம்புகின்றேன். ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை அது எமக்கு எவ்விதத்திலும் பிரச்சினையில்லை. நாட்டுமக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியே எம்மை தெரிவு செய்தார்கள். அந்த மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு எம்மை அர்ப்பணிப்பதே அவசியமானது. இதற்காகவே 18 மாதகால திட்டவியூகம் வகுத்திருக்கின்றோம். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரரின் நினைவுதின வைபத்தில் பேசியது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், ஜனாதிபதி தன்னைப்பற்றியே கூடுதலாக விமர்சித்திருந்தமை குறித்து தனது விசனத்தை வெளிப்படுத்தினார் என தெரிகிறது. எனினும் அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து காலத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் 2020 வெற்றி இலக்கை மையப்படுத்திய 18 மாதகால திட்டவியூகம் வகுக்கப்பட்டிருப்பதால் அதற்காக நாம் எல்லோரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதே இன்று முக்கியமானது என்றும் குறிப்பிட்டதாக பிரதமரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. http://www.tamilwin.com/politics/01/184340?ref=ls_d_tamilwin

பசிலின் தூண்டுதலால் களமிறங்கும் கோத்தபாய! மைத்திரியின் பாதுகாப்பு ரணிலிடம்! புதிதாக வகுக்கப்படும் திட்ட வியூகம்

3 months 2 weeks ago
பசிலின் தூண்டுதலால் களமிறங்கும் கோத்தபாய! மைத்திரியின் பாதுகாப்பு ரணிலிடம்! புதிதாக வகுக்கப்படும் திட்ட வியூகம்

 

 

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் துண்டுதலினால் தான் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் தீவிரமாக களமிறங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை கொழும்பு அரசியலை பரபரப்பாக்கியது. பதவியேற்ற மறுநாளே தான் நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நூறுநாள் வேலைத்திட்டம் என்பது மடத்தனமானது என்றும் கடுமையாகப் பேசியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதுமாத்திரமன்றி, ஜனாதிபதியின் கருத்துக்கு பதில் கருத்தினை எவரும் வழங்க வேண்டாம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சி உறுப்பினரிடம் வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து நேற்றைய தினம் அலரிமாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கிய பிரதமர் ரணில், தங்களுடனான கூட்டணியைத் தொடர்வதே ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியில் பாதுகாப்பான அணுகுமுறையாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியலை முன்னெடுக்கும் யோசணையை கொண்டிருப்பதாக தெரிகின்றது.

ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைத்துக் கொள்வதிலும் ஜனாதிபதி நாட்டம் காட்டுகின்றார் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இவ்வாறு அவர் செய்வாரேயானால், அது அவருக்கு பாதகமானதாகவே முடியும்.

கோத்தபாய ராஜபக்ஷ தீவிரமான பிரசாரங்களில் இறங்கியிருக்கின்றார். களத்தில் அவரது பிரவேசத்தை பருவம் முந்தியதாகவே நான் கருதுகின்றேன். அவர் இவ்வாறு செய்வதற்கு பிரதான காரணம் அவரது இளைய சகோதரர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் துண்டுதலாகும் என்று நம்புகின்றேன்.

ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை அது எமக்கு எவ்விதத்திலும் பிரச்சினையில்லை. நாட்டுமக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியே எம்மை தெரிவு செய்தார்கள். அந்த மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு எம்மை அர்ப்பணிப்பதே அவசியமானது. இதற்காகவே 18 மாதகால திட்டவியூகம் வகுத்திருக்கின்றோம்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரரின் நினைவுதின வைபத்தில் பேசியது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், ஜனாதிபதி தன்னைப்பற்றியே கூடுதலாக விமர்சித்திருந்தமை குறித்து தனது விசனத்தை வெளிப்படுத்தினார் என தெரிகிறது.

எனினும் அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து காலத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் 2020 வெற்றி இலக்கை மையப்படுத்திய 18 மாதகால திட்டவியூகம் வகுக்கப்பட்டிருப்பதால் அதற்காக நாம் எல்லோரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதே இன்று முக்கியமானது என்றும் குறிப்பிட்டதாக பிரதமரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

 

http://www.tamilwin.com/politics/01/184340?ref=ls_d_tamilwin

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தேசியம் என்ற கொள்கை எங்கே போனது.?

3 months 2 weeks ago
தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தேசியம் என்ற கொள்கை எங்கே போனது.? ஈ.பீ.டி.பியுடனே சேர்ந்து செயற்படும் கூட்டமைப்பினரின் தேசியம் என்ற கொள்கை, கெளரவம் எல்லாம் எங்கே சென்று விட்டது, என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினமும் நினைவு பேருரையும் தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது, இந் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது.. விநாயகமூர்த்தியும் நானும் நீண்ட காலமாக ஒன்றாக இணைந்து பயணித்திருக்கின்றோம். அவருக்கும் எனக்கும் இடையில் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. அதில் எங்களுக்குள் இடம்பெற்ற ஒரு சம்பவம் குறித்து நான் இந்த இடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது இலங்கை படைகள் கடந்த 1990 ஆம் ஆண்டு இருந்ததைப் போன்று மீண்டும் முகாம்களுக்கு செல்ல வேண்டுமென அரசாங்கத்தை கோருவதற்கு தமிழ் தரப்புக்கள் தீர்மானிக்கின்றன. இதனை அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எனக்கு அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்த போது என் மனதில் வஞ்சகம் ஏதுமில்லாமல் அவ்வாறு நாம் கோரினால் அரச தரப்பினர் ஆனையிறவை தம்மிடமே மீள தர வேண்டுமெனக் கேட்கலாம் என்று நான் கூறியிருந்தேன். அப்போது எனக்கருகில் இரா.சம்மந்தனும் ,விநாயகமூர்த்தியுமே இருந்தனர். அவ்வாறு நான் கூறிய கருத்து கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்காணம் என சுழன்று வந்து திரிவுபடுத்தப்பட்டு ஆணந்த சங்கரி ஆணையிறவை அரச படைகளிடம் புலிகள் ஒப்படைக்க வேண்டுமெனக் கோருவதாக செய்திகள் பரவியிருந்தது. ஆனால் அந்தக் கருத்தை நான் சொல்லவில்லை என்பதுடன் அப்போதைய அரச தரப்பினர்களிடம் ஆணையிறவை நீங்கள் இனி புலிகளிடமிருந்து பிடிப்பதென்பது பகல்க்கனவு என்றும் அதனை எந்தக் காலத்திலும. நீங்கள் பிடிக்க முடியாதென்றுமே குறிப்பிட்டிருந்தேன். அத்தோடு இனத்திற்காகவும் மண்ணுக்காகவும் எத்தனையோ இழப்புக்களையும், தியாகங்களையும் புலிகள் செய்திருந்ததையும் குறிப்பிட்டிருந்தேன். இவ்வாறான கருத்துக்களை தெரிவித்த நான் ஆணையிறவை கொடுக்க சொல்லி கேட்டிருப்பனா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். இருந்தும் நான் ஆணையிறவை கொடுக்க வேண்டுமெனக் கோரியதான செய்திகள் பரவி என்மீதான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் தன்னாலேயே இவ்வாறானதொரு நிலைமை வந்துவிட்டதாக கருதிய விநாயகமூர்த்தி என்னிடம் பேசுவதற்கு பலதடவைகள் முயற்சித்து ஒருக்கா என்னிடம் பேசியும் இருந்தார். அதன் போதுதான் இவ்வாறு எந்தக் கருத்தையும் எவருக்கும் சொல்லவில்லை என்று என்னிடம் கூறிய போது அதனை நானும் ஏற்றுக் கொண்டு அதனை நீங்கள் கூறவில்லை என்றும் எவ்வாறு அது திரிவுபடுத்தப்பட்டது என்று எனக்குத் தெரியும் என்றும் நான் விநாயகமூர்த்தியிடம் கூறியிருந்தேன். இவ்வாறானதொரு நிலையில் தம்பி பிரபாகரனுக்கும் இந்த விடயம் தெரிய வந்த போதும் அவரும் இதனை இலகுவில் நம்பவில்லை. அவ்வாறு அவர் எந்த சம்பவம் என்றாலும் அதனை ஆராய்ந்தே முடிவுகளை எடுக்கின்ற பண்பு அவரிடம் இருந்தது. அவ்வாறு அவருக்கு இருக்கின்ற பண்புகளோ, பெருந்தன்மைகளோ இன்றிருக்க கூடிய எந்தவொரு அரசியல் தலைமைகளுக்கும் கிடையாது. ஆனாலும் அன்று முதல் மலை உச்சியிலிருந்து உருட்டி விடப்பட்ட நான் இன்றுவரைக்கும் எழுந்திருக்கவே இல்லை. அதற்கு விநாயகமூர்த்தி தான் காரணமென பலரும் நினைத்தனர். ஆனால் உண்மையில் அவர் காரணமல்ல. எவர் அதனை இவ்வாறு சொன்னவர் யார் என்று எனக்கு தெரியும். அதன் விளைவு தான் இன்று நடக்கிறது என்றார். இதேவேளை தமிழ் கட்சிகள் பலவும் இன்றைக்கு தேசியம் பேசுகின்றன. அதில் தேசியம் பேசுகின்ற அல்லது அந்த கொள்கையுடன் பயணிக்கின்ற கட்சிகள் எவை என்பதையும் பார்க்க வேண்டும். இன்றைக்கு கூட்டமைப்பில் இருக்கின்ற ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் அரசுடன் இருந்த அரச கட்சிகளாகவே பார்க்கப்பட்டன. அவர்களுடன் இன்று பலரும் தேசியம் பேசுகின்றவர்களாக இருக்கின்றனர். இதற்கு மேலதிகமாக தற்போதும் தேசியம் பேசுகின்ற கூட்டமைப்பினர் ஈபிடிபியுடனேயே ஒன்றாக சேர்ர்ந்து செயற்படும் நிலைக்கு வந்துள்ளீர்கள். ஆக இப்ப என்றாலும் உங்களுக்கு கொஞ்சமாவது தேசியம் இருக்கிறதா என்று எண்ண வேண்டும். ஈ.பீ.டி.பியுடனே சேர்ந்து செயற்படும் கூட்டமைப்பினரின் தேசியம் என்ற கொள்கை, கெளரவம் எல்லாம் எங்கே சென்று விட்டது. தமிழ்த் தேசியத்திற்காக உயிரிழந்த பொன்னம்பலம், சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் கட்டிக்காத்து வளர்த்த கெளரவம் எங்கே? இதுவா இன்று நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் கெளரவம் என்றும் கேள்வி எழுப்பினார். ஆகவே தற்போது எல்லோரையும் ஏமாற்றி வருகின்ற நீங்கள் எல்லோரையும் மீண்டும் கண்ணீர் விட்டு அழும் நிலைக்கு கொண்டு செல்லாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நான் கூறுவது எல்லாம் என்னுடைய வேதனையல்ல. அவை ஒவ்வொன்றும் இந்த மக்களின் வேதனைகள் தான். மேலும் எமது இளைய தலைமுறையினர் வரலாறுகளையும், உண்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காக செயற்பட முன்வந்தவர்கள் பணம் சேர்ப்பதும் பட்டம் பதவிகளைப் பெறுவதையுமே நோக்கமாக கொண்டிருக்காது மக்களுக்காக நீதியாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும் என ஆணந்தசங்கரி மேலும் தெரிவித்தார். http://www.ibctamil.com/politics/80/101460

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தேசியம் என்ற கொள்கை எங்கே போனது.?

3 months 2 weeks ago
தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தேசியம் என்ற கொள்கை எங்கே போனது.?

 

 
Image

ஈ.பீ.டி.பியுடனே சேர்ந்து செயற்படும் கூட்டமைப்பினரின் தேசியம் என்ற கொள்கை, கெளரவம் எல்லாம் எங்கே சென்று விட்டது, என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினமும் நினைவு பேருரையும் தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது, இந் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது..

விநாயகமூர்த்தியும் நானும் நீண்ட காலமாக ஒன்றாக இணைந்து பயணித்திருக்கின்றோம். அவருக்கும் எனக்கும் இடையில் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. அதில் எங்களுக்குள் இடம்பெற்ற ஒரு சம்பவம் குறித்து நான் இந்த இடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

அதாவது இலங்கை படைகள் கடந்த 1990 ஆம் ஆண்டு இருந்ததைப் போன்று மீண்டும் முகாம்களுக்கு செல்ல வேண்டுமென அரசாங்கத்தை கோருவதற்கு தமிழ் தரப்புக்கள் தீர்மானிக்கின்றன. இதனை அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எனக்கு அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்த போது என் மனதில் வஞ்சகம் ஏதுமில்லாமல் அவ்வாறு நாம் கோரினால் அரச தரப்பினர் ஆனையிறவை தம்மிடமே மீள தர வேண்டுமெனக் கேட்கலாம் என்று நான் கூறியிருந்தேன். அப்போது எனக்கருகில் இரா.சம்மந்தனும் ,விநாயகமூர்த்தியுமே இருந்தனர்.

அவ்வாறு நான் கூறிய கருத்து கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்காணம் என சுழன்று வந்து திரிவுபடுத்தப்பட்டு ஆணந்த சங்கரி ஆணையிறவை அரச படைகளிடம் புலிகள் ஒப்படைக்க வேண்டுமெனக் கோருவதாக செய்திகள் பரவியிருந்தது.

ஆனால் அந்தக் கருத்தை நான் சொல்லவில்லை என்பதுடன் அப்போதைய அரச தரப்பினர்களிடம் ஆணையிறவை நீங்கள் இனி புலிகளிடமிருந்து பிடிப்பதென்பது பகல்க்கனவு என்றும் அதனை எந்தக் காலத்திலும. நீங்கள் பிடிக்க முடியாதென்றுமே குறிப்பிட்டிருந்தேன். அத்தோடு இனத்திற்காகவும் மண்ணுக்காகவும் எத்தனையோ இழப்புக்களையும், தியாகங்களையும் புலிகள் செய்திருந்ததையும் குறிப்பிட்டிருந்தேன்.

இவ்வாறான கருத்துக்களை தெரிவித்த நான் ஆணையிறவை கொடுக்க சொல்லி கேட்டிருப்பனா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். இருந்தும் நான் ஆணையிறவை கொடுக்க வேண்டுமெனக் கோரியதான செய்திகள் பரவி என்மீதான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் தன்னாலேயே இவ்வாறானதொரு நிலைமை வந்துவிட்டதாக கருதிய விநாயகமூர்த்தி என்னிடம் பேசுவதற்கு பலதடவைகள் முயற்சித்து ஒருக்கா என்னிடம் பேசியும் இருந்தார். அதன் போதுதான் இவ்வாறு எந்தக் கருத்தையும் எவருக்கும் சொல்லவில்லை என்று என்னிடம் கூறிய போது அதனை நானும் ஏற்றுக் கொண்டு அதனை நீங்கள் கூறவில்லை என்றும் எவ்வாறு அது திரிவுபடுத்தப்பட்டது என்று எனக்குத் தெரியும் என்றும் நான் விநாயகமூர்த்தியிடம் கூறியிருந்தேன்.

இவ்வாறானதொரு நிலையில் தம்பி பிரபாகரனுக்கும் இந்த விடயம் தெரிய வந்த போதும் அவரும் இதனை இலகுவில் நம்பவில்லை. அவ்வாறு அவர் எந்த சம்பவம் என்றாலும் அதனை ஆராய்ந்தே முடிவுகளை எடுக்கின்ற பண்பு அவரிடம் இருந்தது. அவ்வாறு அவருக்கு இருக்கின்ற பண்புகளோ, பெருந்தன்மைகளோ இன்றிருக்க கூடிய எந்தவொரு அரசியல் தலைமைகளுக்கும் கிடையாது. ஆனாலும் அன்று முதல் மலை உச்சியிலிருந்து உருட்டி விடப்பட்ட நான் இன்றுவரைக்கும் எழுந்திருக்கவே இல்லை.

அதற்கு விநாயகமூர்த்தி தான் காரணமென பலரும் நினைத்தனர். ஆனால் உண்மையில் அவர் காரணமல்ல. எவர் அதனை இவ்வாறு சொன்னவர் யார் என்று எனக்கு தெரியும். அதன் விளைவு தான் இன்று நடக்கிறது என்றார். இதேவேளை தமிழ் கட்சிகள் பலவும் இன்றைக்கு தேசியம் பேசுகின்றன. அதில் தேசியம் பேசுகின்ற அல்லது அந்த கொள்கையுடன் பயணிக்கின்ற கட்சிகள் எவை என்பதையும் பார்க்க வேண்டும். இன்றைக்கு கூட்டமைப்பில் இருக்கின்ற ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் அரசுடன் இருந்த அரச கட்சிகளாகவே பார்க்கப்பட்டன. அவர்களுடன் இன்று பலரும் தேசியம் பேசுகின்றவர்களாக இருக்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக தற்போதும் தேசியம் பேசுகின்ற கூட்டமைப்பினர் ஈபிடிபியுடனேயே ஒன்றாக சேர்ர்ந்து செயற்படும் நிலைக்கு வந்துள்ளீர்கள். ஆக இப்ப என்றாலும் உங்களுக்கு கொஞ்சமாவது தேசியம் இருக்கிறதா என்று எண்ண வேண்டும்.

ஈ.பீ.டி.பியுடனே சேர்ந்து செயற்படும் கூட்டமைப்பினரின் தேசியம் என்ற கொள்கை, கெளரவம் எல்லாம் எங்கே சென்று விட்டது. தமிழ்த் தேசியத்திற்காக உயிரிழந்த பொன்னம்பலம், சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் கட்டிக்காத்து வளர்த்த கெளரவம் எங்கே? இதுவா இன்று நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் கெளரவம் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆகவே தற்போது எல்லோரையும் ஏமாற்றி வருகின்ற நீங்கள் எல்லோரையும் மீண்டும் கண்ணீர் விட்டு அழும் நிலைக்கு கொண்டு செல்லாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நான் கூறுவது எல்லாம் என்னுடைய வேதனையல்ல. அவை ஒவ்வொன்றும் இந்த மக்களின் வேதனைகள் தான்.

மேலும் எமது இளைய தலைமுறையினர் வரலாறுகளையும், உண்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காக செயற்பட முன்வந்தவர்கள் பணம் சேர்ப்பதும் பட்டம் பதவிகளைப் பெறுவதையுமே நோக்கமாக கொண்டிருக்காது மக்களுக்காக நீதியாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும் என ஆணந்தசங்கரி மேலும் தெரிவித்தார்.

http://www.ibctamil.com/politics/80/101460

வரலாற்றின் கருப்பு பக்கங்கள்: உகாண்டாவில் ஓர் அருங்காட்சியகம்

3 months 2 weeks ago
வரலாற்றின் கருப்பு பக்கங்கள்: உகாண்டாவில் ஓர் அருங்காட்சியகம் பகிர்க சுற்றுலா பயணிகளை கவர தனது நாட்டின் வரலாற்றின் கருப்பு பக்கங்களாக கருதப்படும் சில தருணங்களை ஒரு போர் அருங்காட்சியகம் மூலம் காட்சிப்படுத்த உகாண்டா முடிவெடுத்துள்ளது. படத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES உகாண்டாவின் முன்னாள் அதிபரான இடி அமினின் 8 ஆண்டு கொடுங்கோல் ஆட்சியிலும், எல்ஆர்ஏ எனப்படும் லார்ட்ஸ் தடுப்பு படையாலும் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்து இந்த அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்த உள்ளனர். இது குறித்து உகாண்டா சுற்றுலா கழகத்தின் தலைமை அதிகாரியான ஸ்டீஃபன் அசிம்வீ பிபிசியிடம் தெரிவிக்கையில், ''கடந்த காலங்களில் நடந்த தவறுகளை நாங்கள் நேர் செய்ய விரும்புகிறோம்'' என்று தெரிவித்தார். இன்னமும் கட்டி முடிக்கப்படாத உகாண்டா போர் அருங்காட்சியகம் காலனித்துவ மற்றும் காலனித்துவத்துக்கு முந்தைய காலங்களின் வரலாற்றை காட்சிப்படுத்தும் முனைப்பில் உள்ளது. ''இது போன்ற முயற்சிகளால் வரலாறு செழுமைப்படும்; சிவப்பு ஒயின் போல, காலம் செல்லச் செல்லப் பழைய நினைவுகளின் பெருமையும் சிறப்பாக அமையும்'' என்று அசிம்வீ மேலும் தெரிவித்தார். ''இடி அமினின் ஆட்சிக்காலத்தில் ஒரு சிறுவனாக இருந்த நான், ராணுவத்தின் அடக்குமுறையால் பல நண்பர்கள் மற்றும் மாணவர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் பெற்றோரை இழந்ததை கண்டு வருந்தியுள்ளேன்,'' என்று குறிப்பிட்டார். ''ஆனால், வரலாறு கூறும் விஷயங்களில் இருந்து ஒருவர் தப்பிக்க முடியாது. இவை தவிர்க்க முடியாத உண்மைகள்'' என்று அவர் மேலும் கூறினார். படத்தின் காப்புரிமைBETTMANN/GETTY IMAGES ஒவ்வொரு இடத்திற்கும், நாட்டிற்கும் வருங்கால சமூகத்துக்கு எடுத்துக்கூறும் விதமாக தனித்துவமான கலாச்சார மதிப்புண்டு என்று அசிம்வீ கூறினார். ''உகாண்டாவில் மலைவாழ் கொரில்லாக்கள் என வனவிலங்குகள் குறித்து பல வியத்தகு அம்சங்கள் இருந்தாலும், நாட்டின் பழைய காலத்தை மற்றும் நினைவுகளை வெளிக்கொணர்வது இந்த அருங்காட்சியகத்தின் நோக்கம்'' என்று அவர் தெரிவித்தார். கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றை காட்சிப்படுத்துவதன் நோக்கம், உகாண்டாவுக்கு வருகைபுரியும் சுற்றுலா பயணிகளை கவர்வதும், சுற்றுலாத்துறைக்கு ஏற்ற இடமாக நாட்டை மாற்றுவதும்தான் என் அவர் மேலும் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/global-44344264

வரலாற்றின் கருப்பு பக்கங்கள்: உகாண்டாவில் ஓர் அருங்காட்சியகம்

3 months 2 weeks ago
வரலாற்றின் கருப்பு பக்கங்கள்: உகாண்டாவில் ஓர் அருங்காட்சியகம்

சுற்றுலா பயணிகளை கவர தனது நாட்டின் வரலாற்றின் கருப்பு பக்கங்களாக கருதப்படும் சில தருணங்களை ஒரு போர் அருங்காட்சியகம் மூலம் காட்சிப்படுத்த உகாண்டா முடிவெடுத்துள்ளது.

இடி அமின் காலத்தில் நடந்தது என்ன? காட்சிப்படுத்த உகாண்டா திட்டம்படத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES

உகாண்டாவின் முன்னாள் அதிபரான இடி அமினின் 8 ஆண்டு கொடுங்கோல் ஆட்சியிலும், எல்ஆர்ஏ எனப்படும் லார்ட்ஸ் தடுப்பு படையாலும் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்து இந்த அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்த உள்ளனர்.

இது குறித்து உகாண்டா சுற்றுலா கழகத்தின் தலைமை அதிகாரியான ஸ்டீஃபன் அசிம்வீ பிபிசியிடம் தெரிவிக்கையில், ''கடந்த காலங்களில் நடந்த தவறுகளை நாங்கள் நேர் செய்ய விரும்புகிறோம்'' என்று தெரிவித்தார்.

இன்னமும் கட்டி முடிக்கப்படாத உகாண்டா போர் அருங்காட்சியகம் காலனித்துவ மற்றும் காலனித்துவத்துக்கு முந்தைய காலங்களின் வரலாற்றை காட்சிப்படுத்தும் முனைப்பில் உள்ளது.

''இது போன்ற முயற்சிகளால் வரலாறு செழுமைப்படும்; சிவப்பு ஒயின் போல, காலம் செல்லச் செல்லப் பழைய நினைவுகளின் பெருமையும் சிறப்பாக அமையும்'' என்று அசிம்வீ மேலும் தெரிவித்தார்.

''இடி அமினின் ஆட்சிக்காலத்தில் ஒரு சிறுவனாக இருந்த நான், ராணுவத்தின் அடக்குமுறையால் பல நண்பர்கள் மற்றும் மாணவர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் பெற்றோரை இழந்ததை கண்டு வருந்தியுள்ளேன்,'' என்று குறிப்பிட்டார்.

''ஆனால், வரலாறு கூறும் விஷயங்களில் இருந்து ஒருவர் தப்பிக்க முடியாது. இவை தவிர்க்க முடியாத உண்மைகள்'' என்று அவர் மேலும் கூறினார்.

Idi Amin Ugandaபடத்தின் காப்புரிமைBETTMANN/GETTY IMAGES

ஒவ்வொரு இடத்திற்கும், நாட்டிற்கும் வருங்கால சமூகத்துக்கு எடுத்துக்கூறும் விதமாக தனித்துவமான கலாச்சார மதிப்புண்டு என்று அசிம்வீ கூறினார்.

''உகாண்டாவில் மலைவாழ் கொரில்லாக்கள் என வனவிலங்குகள் குறித்து பல வியத்தகு அம்சங்கள் இருந்தாலும், நாட்டின் பழைய காலத்தை மற்றும் நினைவுகளை வெளிக்கொணர்வது இந்த அருங்காட்சியகத்தின் நோக்கம்'' என்று அவர் தெரிவித்தார்.

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றை காட்சிப்படுத்துவதன் நோக்கம், உகாண்டாவுக்கு வருகைபுரியும் சுற்றுலா பயணிகளை கவர்வதும், சுற்றுலாத்துறைக்கு ஏற்ற இடமாக நாட்டை மாற்றுவதும்தான் என் அவர் மேலும் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/global-44344264

கியூபா: 16 ஆண்டுகளுக்கு பிறகு அரசமைப்பு சீர்திருத்தம்

3 months 2 weeks ago
கியூபா: 16 ஆண்டுகளுக்கு பிறகு அரசமைப்பு சீர்திருத்தம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அதிபர் பதவிக்கான காலத்தை நிர்ணயம் செய்தல் மற்றும் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்தல் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை கியூபாவின் அரசமைப்பு சட்டத்தில் மேற்கொள்வதற்கு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP "சோசலிசத்தின் மாற்றமுடியாத இயல்பை" தக்க வைத்துக்கொண்டு கியூபாவின் பொருளாதார மற்றும் வெளியுலகத்துடனான தொடர்பை அரசமைப்பு முறையில் செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும். அரசமைப்பு சட்டத்தில் சாத்தியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான பணியை கியூபாவின் முன்னாள் அதிபரான ரால் காஸ்ட்ரோ முன்னெடுப்பார் என்று அந்நாட்டின் தற்போதைய அதிபரான மிகேல் டியாஸ்-கேனல் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ரால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த அதிபராக டியாஸ்-கேனல் பதவியேற்று கொண்டார். காஸ்ட்ரோ சகோதரர்களான பிடல் காஸ்ட்ரோ மற்றும் ரால் காஸ்ட்ரோ ஆகியோர் 1959 முதல் 2018 வரை வெவ்வேறு காலக்கட்டங்களில் கியூபாவை ஆட்சி செய்தனர் சோசலிச கொள்கைகளை கொண்ட டியாஸ்-கேனல், கியூபாவின் அதிபராக பதவியேற்றுக்கொண்டு பேசியபோது, "கியூபாவில் முதலாளித்துவத்தை புகுத்த முயல்வோருக்கு இடம் கிடையாது" என்று தெரிவித்தார். படத்தின் காப்புரிமைAFP கடைசியாக கடந்த 2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம், கியூபாவில் உள்ள அரசியல் அமைப்பின் சோசலிச தன்மையை "மாற்றமுடியாதது" என்று உறுதிசெய்தது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த விடயத்தில் நாடாளுமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை எதிர்நோக்கி பெரும்பாலான கியூப மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். கலப்புப் பொருளாதாரத்தை நோக்கிய நகர்வை சிறுகுறு தொழில் நிறுவனங்களும், ஒருபாலின திருமணம் தொடர்பான ஒப்புதல் குறித்து செயற்பாட்டாளர்களும் எதிர்நோக்கி உள்ளதாக பிபிசியின் கியூபா செய்தியாளர் வில் கிராண்ட் தெரிவிக்கிறார். அரசமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கென்று குறிப்பிட்ட கால வரையறைகள் எதுவும் இல்லை என்றும், பெரும்பாலும் சீர்திருத்தமானது படிப்படியாக மேற்கொள்ளப்படுமென்றும் அவர் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/global-44345549

கியூபா: 16 ஆண்டுகளுக்கு பிறகு அரசமைப்பு சீர்திருத்தம்

3 months 2 weeks ago
கியூபா: 16 ஆண்டுகளுக்கு பிறகு அரசமைப்பு சீர்திருத்தம்

அதிபர் பதவிக்கான காலத்தை நிர்ணயம் செய்தல் மற்றும் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்தல் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை கியூபாவின் அரசமைப்பு சட்டத்தில் மேற்கொள்வதற்கு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

16 ஆண்டுகளுக்கு பிறகு அரசமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்கிறது கியூபாபடத்தின் காப்புரிமைAFP

"சோசலிசத்தின் மாற்றமுடியாத இயல்பை" தக்க வைத்துக்கொண்டு கியூபாவின் பொருளாதார மற்றும் வெளியுலகத்துடனான தொடர்பை அரசமைப்பு முறையில் செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

அரசமைப்பு சட்டத்தில் சாத்தியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான பணியை கியூபாவின் முன்னாள் அதிபரான ரால் காஸ்ட்ரோ முன்னெடுப்பார் என்று அந்நாட்டின் தற்போதைய அதிபரான மிகேல் டியாஸ்-கேனல் அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ரால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த அதிபராக டியாஸ்-கேனல் பதவியேற்று கொண்டார்.

காஸ்ட்ரோ சகோதரர்களான பிடல் காஸ்ட்ரோ மற்றும் ரால் காஸ்ட்ரோ ஆகியோர் 1959 முதல் 2018 வரை வெவ்வேறு காலக்கட்டங்களில் கியூபாவை ஆட்சி செய்தனர்

சோசலிச கொள்கைகளை கொண்ட டியாஸ்-கேனல், கியூபாவின் அதிபராக பதவியேற்றுக்கொண்டு பேசியபோது, "கியூபாவில் முதலாளித்துவத்தை புகுத்த முயல்வோருக்கு இடம் கிடையாது" என்று தெரிவித்தார்.

16 ஆண்டுகளுக்கு பிறகு அரசமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்கிறது கியூபாபடத்தின் காப்புரிமைAFP

கடைசியாக கடந்த 2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம், கியூபாவில் உள்ள அரசியல் அமைப்பின் சோசலிச தன்மையை "மாற்றமுடியாதது" என்று உறுதிசெய்தது.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த விடயத்தில் நாடாளுமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை எதிர்நோக்கி பெரும்பாலான கியூப மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

கலப்புப் பொருளாதாரத்தை நோக்கிய நகர்வை சிறுகுறு தொழில் நிறுவனங்களும், ஒருபாலின திருமணம் தொடர்பான ஒப்புதல் குறித்து செயற்பாட்டாளர்களும் எதிர்நோக்கி உள்ளதாக பிபிசியின் கியூபா செய்தியாளர் வில் கிராண்ட் தெரிவிக்கிறார்.

அரசமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கென்று குறிப்பிட்ட கால வரையறைகள் எதுவும் இல்லை என்றும், பெரும்பாலும் சீர்திருத்தமானது படிப்படியாக மேற்கொள்ளப்படுமென்றும் அவர் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44345549