மட்டக்களப்பு சவுக்கடி படுகொலை

1990-09-20 - 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்

Aggregator

இன்று கூடுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்

3 months 2 weeks ago
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – சந்திரிகா, மஹிந்த, ஜயரத்னவுக்கு பதவி… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… சந்திரிகா, மஹிந்த, ஜயரத்னவுக்கு பதவி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின், ஆலோசனை குழு உறுப்பினர்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் டீ.எம்.ஜயரத்ன ஆகிய மூவருமே நியமிக்கப்பட்டுள்ளனர். சு.கவின் துணைத் தலைவர்களாக அறுவர் நியமனம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர்களாக அறுவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த அமரவீர, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால், நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, சுமேதா ஜி.ஜயசேன மற்றும் பியசேன கமகே ஆகிய அறுவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக சிரேஷ்ட துணைத் தலைவர்கள் நால்வர் நியமனம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின், தற்காலிக சிரேஷ்ட துணைத் தலைவர்களாக, நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, டப்ளியு.டீ.ஜே. செனவிரத்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். 2 ஆம் இணைப்பு – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு, தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்… Jun 3, 2018 @ 06:09 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பிரியதாஸவும். கட்சியின் தற்காலிக தேசிய அமைப்பாளராக துமிந்த திஸாநாயக்கவும், தற்காலிக பொருளாளராக அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்தே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/82048/

இளையராஜா 75 - ஹம்மிங்கே புது தினுசு!

3 months 2 weeks ago
உயிரில் உறைந்த இசை! அ+ அ- எஸ்.ராஜகுமாரன் பேசும் கிளியை பாடும் குயிலாக்கிய மாயக்காரன் நீ - அன்னக்கிளி! ### மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்த ஒரு சிறிய வீட்டின் சுண்ணாம்புக் காரைச் சுவற்றில் எதிரொலிக்கத் தொடங்கிய உன் இசைக்குரல் இன்று நிலத்திலும் வானிலும் நித்தமும் ஒலிக்கிறது பிரபஞ்ச சங்கீதமாய் ! ### உன் பாடல்கள் முதன் முதலில் ஒலித்த இடங்களில் உறைந்து நின்று ரசித்தவர்களின் பதின்ம காலங்களில் நானும் இருக்கிறேன் என்பதை இப்போது நினைத்தாலும் கர்வமாய் இருக்கிறது! ### திரை இசையை வாழ்க்கையின் இசையாய் வார்த்தவை உனது புல்லாங்குழல் விரல்கள்! ஆம்! உன் துள்ளல் பாடல் கேட்டு ஆடிக் களித்திருக்கிறோம்! உன் துயரப்பாடல் கேட்டு தேம்பி அழுதிருக்கிறோம்! உன் காதல் பாடல் கேட்டு மயங்கிக் கிடந்திருக்கிறோம்! உன் நம்பிக்கைப் பாடல் கேட்டு தோல்விகளைக் கடந்திருக்கிறோம்! ### எங்கள் இளமைக்கு நீதான் இசையமைத்தாய்! எங்கள் ரசனைக்கு நீதான் திசையமைத்தாய்! ### உன்னை இசை ஞானி ராகதேவன் என்றெல்லாம் சொல்வதில் உடன்பாடு இல்லை எனக்கு! நீ இசை மனிதன் ! உன் ரத்தத்தில் இருப்பவை சிவப்பணுக்களோ வெள்ளையணுக்களோ அல்ல - சர்வ அணுக்களும் சங்கீத அணுக்களே! உன் தசைகளும் நரம்புகளும் ரத்தக் குழாய்களும் மிக மெல்லிய புல்லாங்குழல்கள்! இரண்டு கைகளும் தபேலாவும் டோலக்கும்! உன் இதயம் என்பது ஹார்மோனியமாகவும் மூளை என்பது பியானோவாகவும் இருக்கக்கூடும் ! ### உனக்கு முன்னரும் இசை இருந்தது! பின்னரும் இசை இருக்கும்! ஆனால் - எங்கள் உயிரின் ஆழத்தில் உறைந்த இசையாக உன் பாடல்கள் மட்டுமே என்றும் இருக்கும்! இன்று உனக்கு வயது 75. இது உன் பிறப்பின் கணக்கு மட்டுமே! உன் பேரிசையின் வயது - காலத்தின் வயது! காற்றிருக்கும் காலமெல்லாம் வாழ்க நீ இசைத்து! http://www.kamadenu.in/news/cinema/3118-ilayaraaja-uyril-uraindha-isai.html?utm_source=site&utm_medium=TTH_slider_banner&utm_campaign=TTH_slider_banner

95வது பிறந்த நாள்; கருணாநிதிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

3 months 2 weeks ago
சென்னை, தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். அவர் உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், இன்று தனது 95வது பிறந்த நாளை அவர் உற்சாகமுடன் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று டுவிட்டர் வழியே தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து கொண்டனர். கருணாநிதி 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறேன், கட்சி ரீதியாக கருத்து சொல்ல முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் வழியே தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு உள்ளார். அவரது செய்தியில், நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழவேண்டும் என தெரிவித்துள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கருணாநிதியை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன். ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன். அவர் அரசியல் பணியை சீரும், சிறப்புற செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதேபோன்று ஆர்.கே. நகர் தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்திட வாழ்த்துகள் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். www.dailythanthi.com

95வது பிறந்த நாள்; கருணாநிதிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

3 months 2 weeks ago
சென்னை,
 
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். அவர் உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
 
இந்த நிலையில், இன்று தனது 95வது பிறந்த நாளை அவர் உற்சாகமுடன் கொண்டாடினார்.  அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
 
பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று டுவிட்டர் வழியே தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து கொண்டனர்.
 
கருணாநிதி 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறேன், கட்சி ரீதியாக கருத்து சொல்ல முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
 
இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் வழியே தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு உள்ளார்.  அவரது செய்தியில், நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழவேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கருணாநிதியை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.  ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.  அவர் அரசியல் பணியை சீரும், சிறப்புற செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
இதேபோன்று ஆர்.கே. நகர் தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்திட வாழ்த்துகள் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
www.dailythanthi.com

கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்

3 months 2 weeks ago
கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்

திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி தனது 95 வயது பிறந்தநாளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறார். அவர் குறித்த 95 தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89
 1. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும்.
 2. கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.
 3. கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி.
 4. கருணாநிதியின் முதல் மேடை பேச்சு 'நட்பு' குறித்து.  எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார்.
 5. கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ்.
 6. முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம்.
 7. நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.
 8. தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.
கருணாநிதிபடத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

9. எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான்.

10. மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவகுப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி.

11. கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.

12. 50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி,மலைக்கள்ளன் .

13. கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.

14. 1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.

15. பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.

16. கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

17. கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

18. 21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

19.இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.

20. கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.

21. கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.

22. கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார்.

23. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.

24. கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.

25.இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.

26.சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

27.1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

28. 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

29. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

30. கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.

31. தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார்.

32. முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட  கருணாநிதி  தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

33. இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில். 1962 சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் கருணாநிதி.

34. இந்த 1962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி முதல் முதலாக வாக்கு சேகரிக்க சென்றது அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் வீட்டிற்குதான் என்ற தகவலை தருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர்.

35. 1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சியை பிடித்தது.  சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

36. 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார்.  தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட  சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334.

37. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார். எம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால், திமுக ஆட்சியை இழந்தது.

38. கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

39. எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. அதாவது 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி.

40. ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரானது 1991 சட்டமன்றத் தேர்தலில்தான். ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டும்தான் வெற்றி பெற்றனர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 30932. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30042.

41. 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என்ற ரஜினி சொன்னது 1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.  தி.மு.க மற்றும் த.மா.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் முதல்வரானார்.

42. தி.மு.கவும் பா.ஜ.கவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

43. தி.மு.க 2006 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது. திமுக அணியில் காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார்.

44. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

45. 2016ஆம் தேர்தலில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசம். மாநிலத்திலேயே இது அதிக அளவு.

46. சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, "கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?" என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. "கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?" என்றவர் கருணாநிதி.

47. கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், 'Very Good Speech' என்று எழுதி கொடுத்தார்.

48. 1974க்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுனர்தான் அதைச் செய்வார். 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கருணாநிதி, முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர்.

49. மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.

50. 1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த விபத்துகளிலும் அதே கண்ணில் அடிபட்டது.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

51. அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் "உடன்பிறப்பே" என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் "உயிரினும் மேலான உடன்பிறப்பே" என்று பேசவும் துவங்கினார்.

52. கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த "உடன்பிறப்பே" என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கருணாநிதி.

53. உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7,000க்கும் மேல்.

54. `சங்­கத்­தமிழ்', `தொல்­காப்­பிய உரை', `இனி­யவை இரு­பது', `கலை­ஞரின் கவிதை மழை',உட்­பட 150-க்கும் மேலான நூல்­களை கரு­ணா­நிதி எழு­தி­யி­ருக்­கிறார்.

55. உடன்­பி­றப்­பு­க­ளுக்கு இவர் எழு­திய கடி­தங்கள் தொகுக்­கப்­பட்டு 12 தொகு­தி­க­ளாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

56. முதல்வராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.

57. 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில்  எழுதினார் கருணாநிதி. 

58. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்றது 'பராசக்தி` திரைப்படம்தான்.  இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது.

59. கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

60. இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு"  என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.

61. சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.

62. தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர்.

63. சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. "அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்" என்றார்.

64. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது.

65. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில், கருணாநிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

66. 1970ல் லண்டனில்கூட ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் கருணாநிதி. பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

67. தமிழக முதலமைச்சர்களில் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர் கருணாநிதி. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.

68. எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

69. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான்.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.

70. நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது.

71. 1959ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100ல் 45 இடங்களைப் பிடித்தது தி.மு.க. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசளித்தார் சி.என். அண்ணாத்துரை.

72. 1967ல் முதன் முதலில் சி.என். அண்ணாதுரை முதல்வரானபோது, அண்ணா, நெடுஞ்சழியன் ஆகியோருக்குப் பிறகு அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

73. நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

74. உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கும் அதிகாலையிலேயே அழைத்துப் பேசுவார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

75. கருணாநிதியை மிகவும் பாதித்த மரணங்களில் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது. "அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கனும்" என்று கருணாநிதி அடிக்கடி கூறுவதாக அவரது உதவியாளர் சண்முகநாதன் சொல்கிறார்.

76. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு யாரும் தொலைபேசியில் அழைத்து தகவல் பெறமுடியும். தொலைபேசி ஒலித்தவுடன், "வணக்கம், தலைவர் இல்லம்" என்ற குரல் ஒலிக்கும்.

77. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார்.

78. கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.

79. தன்னுடைய கோபாலபுரம் இல்லம் தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு மருத்துவமனையாக இயங்க வேண்டுமென்று கூறி, அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

80. தன் வீட்டை ஒட்டியுள்ள வேணுகோபலா சுவாமி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை என்கிறார் கருணாநிதி.

81. தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

82. உடல் நலம் நன்றாக இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில் கட்சி அலுவலகத்திற்கு காலை, மாலை என இரு வேளையும் சென்றுவிடுவார் கருணாநிதி.

83. 2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் வகித்தது தமிழ்நாடு.

84. பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.

85. நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி.

86. கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.

87. ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

88. கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இரு முறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். இரு முறையும் கட்சியை மீட்டெடுத்தார் கருணாநிதி.

89. உணவுப் பாதுகாப்பிற்காக, இந்திய உணவுக் கழகத்தைப்போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார் கருணாநிதி.

90. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால், வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் அவரது திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

91. ஒரு முறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ' அயிரை மீன் அளவுக்குப் பேசவும்' என்று துண்டு சீட்டு  எழுதி கொடுத்தார் கருணாநிதி.

92. 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 - ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மூத்த தலைவரை கண்ணியமாக நடத்தவில்லை என்று கண்டனங்களும் எழுந்தன.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

93. எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. "எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்" என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். அதன்பின் எழுந்த கருணாநிதி "இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே" என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளது.

94. அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி. டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "நான் கேட்டது அறுவை சிகிச்சை... கருணாநிதி செய்ததோ முதலுதவி" என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, "அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்" என்றார்.

95. ”மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” - இது அவர் அடிக்கடி மேற்கோள்காட்டிய வரி.

https://www.bbc.com/tamil/india-44342086

கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்

3 months 2 weeks ago
கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி தனது 95 வயது பிறந்தநாளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறார். அவர் குறித்த 95 தகவல்களை இங்கே பகிர்கிறோம். படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும். கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம். கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் முதல் மேடை பேச்சு 'நட்பு' குறித்து. எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார். கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ். முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம். நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார். தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார். படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 9. எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான். 10. மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவகுப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி. 11. கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது. 12. 50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி,மலைக்கள்ளன் . 13. கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம். 14. 1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி. 15. பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி. 16. கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. 17. கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார். படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 18. 21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார். படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 19.இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார். 20. கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69. 21. கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9. 22. கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார். 23. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார். 24. கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார். 25.இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை. 26.சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 27.1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார். 28. 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி. படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 29. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார். 30. கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார். 31. தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார். 32. முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். 33. இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில். 1962 சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் கருணாநிதி. 34. இந்த 1962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி முதல் முதலாக வாக்கு சேகரிக்க சென்றது அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் வீட்டிற்குதான் என்ற தகவலை தருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர். 35. 1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சியை பிடித்தது. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 36. 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார். தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334. 37. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார். எம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால், திமுக ஆட்சியை இழந்தது. 38. கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 39. எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. அதாவது 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி. 40. ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரானது 1991 சட்டமன்றத் தேர்தலில்தான். ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டும்தான் வெற்றி பெற்றனர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 30932. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30042. 41. 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என்ற ரஜினி சொன்னது 1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தி.மு.க மற்றும் த.மா.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் முதல்வரானார். 42. தி.மு.கவும் பா.ஜ.கவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 43. தி.மு.க 2006 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது. திமுக அணியில் காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார். 44. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 45. 2016ஆம் தேர்தலில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசம். மாநிலத்திலேயே இது அதிக அளவு. 46. சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, "கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?" என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. "கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?" என்றவர் கருணாநிதி. 47. கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், 'Very Good Speech' என்று எழுதி கொடுத்தார். 48. 1974க்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுனர்தான் அதைச் செய்வார். 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கருணாநிதி, முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர். 49. மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார். 50. 1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த விபத்துகளிலும் அதே கண்ணில் அடிபட்டது. படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 51. அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் "உடன்பிறப்பே" என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் "உயிரினும் மேலான உடன்பிறப்பே" என்று பேசவும் துவங்கினார். 52. கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த "உடன்பிறப்பே" என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கருணாநிதி. 53. உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7,000க்கும் மேல். 54. `சங்­கத்­தமிழ்', `தொல்­காப்­பிய உரை', `இனி­யவை இரு­பது', `கலை­ஞரின் கவிதை மழை',உட்­பட 150-க்கும் மேலான நூல்­களை கரு­ணா­நிதி எழு­தி­யி­ருக்­கிறார். 55. உடன்­பி­றப்­பு­க­ளுக்கு இவர் எழு­திய கடி­தங்கள் தொகுக்­கப்­பட்டு 12 தொகு­தி­க­ளாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. 56. முதல்வராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம். 57. 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில் எழுதினார் கருணாநிதி. 58. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்றது 'பராசக்தி` திரைப்படம்தான். இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது. 59. கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார். படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 60. இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு" என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி. 61. சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது. 62. தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர். 63. சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. "அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்" என்றார். 64. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது. 65. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில், கருணாநிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 66. 1970ல் லண்டனில்கூட ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் கருணாநிதி. பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. 67. தமிழக முதலமைச்சர்களில் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர் கருணாநிதி. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். 68. எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான். படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 69. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான்.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான். 70. நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது. 71. 1959ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100ல் 45 இடங்களைப் பிடித்தது தி.மு.க. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசளித்தார் சி.என். அண்ணாத்துரை. 72. 1967ல் முதன் முதலில் சி.என். அண்ணாதுரை முதல்வரானபோது, அண்ணா, நெடுஞ்சழியன் ஆகியோருக்குப் பிறகு அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். 73. நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. 74. உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கும் அதிகாலையிலேயே அழைத்துப் பேசுவார். படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 75. கருணாநிதியை மிகவும் பாதித்த மரணங்களில் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது. "அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கனும்" என்று கருணாநிதி அடிக்கடி கூறுவதாக அவரது உதவியாளர் சண்முகநாதன் சொல்கிறார். 76. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு யாரும் தொலைபேசியில் அழைத்து தகவல் பெறமுடியும். தொலைபேசி ஒலித்தவுடன், "வணக்கம், தலைவர் இல்லம்" என்ற குரல் ஒலிக்கும். 77. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார். 78. கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு. 79. தன்னுடைய கோபாலபுரம் இல்லம் தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு மருத்துவமனையாக இயங்க வேண்டுமென்று கூறி, அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துள்ளார். 80. தன் வீட்டை ஒட்டியுள்ள வேணுகோபலா சுவாமி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை என்கிறார் கருணாநிதி. 81. தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான். படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 82. உடல் நலம் நன்றாக இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில் கட்சி அலுவலகத்திற்கு காலை, மாலை என இரு வேளையும் சென்றுவிடுவார் கருணாநிதி. 83. 2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் வகித்தது தமிழ்நாடு. 84. பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை. 85. நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி. 86. கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன. 87. ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி. படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 88. கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இரு முறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். இரு முறையும் கட்சியை மீட்டெடுத்தார் கருணாநிதி. 89. உணவுப் பாதுகாப்பிற்காக, இந்திய உணவுக் கழகத்தைப்போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார் கருணாநிதி. 90. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால், வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் அவரது திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. 91. ஒரு முறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ' அயிரை மீன் அளவுக்குப் பேசவும்' என்று துண்டு சீட்டு எழுதி கொடுத்தார் கருணாநிதி. 92. 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 - ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மூத்த தலைவரை கண்ணியமாக நடத்தவில்லை என்று கண்டனங்களும் எழுந்தன. படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 93. எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. "எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்" என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். அதன்பின் எழுந்த கருணாநிதி "இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே" என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளது. 94. அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி. டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "நான் கேட்டது அறுவை சிகிச்சை... கருணாநிதி செய்ததோ முதலுதவி" என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, "அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்" என்றார். 95. ”மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” - இது அவர் அடிக்கடி மேற்கோள்காட்டிய வரி. https://www.bbc.com/tamil/india-44342086

மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்?

3 months 2 weeks ago
மிஸ்டர் கழுகு: மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்?
 
 

 

p4d_1527856943.jpg‘அவசரமாக டெல்லி போகிறேன். சில செய்திகளை உமது டேபிளில் வைத்திருக்கிறேன்’ என்று கழுகாரிடமிருந்து அதிகாலையிலேயே வாட்ஸ்அப் மெஸேஜ்கள் வந்து விழுந்தன.  அவை இதோ...

குட்கா விவகாரத்தில் மே 29-ம் தேதி சி.பி.ஐ தரப்பில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அதில் உள்ள சில வரிகளைப் பூதக்கண்ணாடி வைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒரு கோஷ்டியினர் அலசுகிறார்கள். ‘‘சட்டவிரோத குட்கா வி.ஐ.பி-யிடமிருந்து மாதா மாதம் மாமூல் பணத்தைப் பலரும் ‘வாங்கினர்’ (ரிசீவ்டு) என்பதுதானே குற்றச்சாட்டு! குட்கா கணக்கு நோட்டில் இருந்ததும் அதுதான். ஆனால், நடந்ததை உல்டா ஆக்கி, பணம் ‘கேட்டதாக’ (டிமாண்ட்) எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் காப்பாற்றும் முயற்சி இது’’ என்கிறார்கள் அவர்கள். குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரி தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர் வில்சன், “எஃப்.ஐ.ஆரில் யார் பெயரும் இல்லை. ஆனால், ‘பப்ளிக் சர்வன்ட்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இப்படிக் குறிப்பிட்டாலே, அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் எல்லோருமே அடக்கம்தான். எனவே, விசாரணை தொடரும்போது சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு உண்டு. குட்கா தயாரிப்பாளர்களிடம் கைப்பற்றப்பட்ட கணக்கு நோட்டில், ‘யார், யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது’ என்று தெளிவாக உள்ளது. சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்யும்போது, லஞ்சம் கேட்டார்களா அல்லது லஞ்சம் கொடுக்கப் பட்டதா என்ற விவரம் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்” என்கிறார்.

p4b_1527856963.jpg

தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவி என்கிற ரவீந்திரநாத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா காலத்தில் இவர், தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக இருந்தார். ஒருகட்டத்தில், பன்னீரின் உறவுகள் அனைவரின் பதவிகளையும் அதிரடியாக ஜெயலலிதா பறித்தார். அப்போது, ரவியின் பதவியும் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசியலிலிருந்து ஒதுங்கிய ரவி, தன் தந்தையின் ‘தர்மயுத்த’ காலகட்டத்தில்கூட, வெளியில் தலைகாட்டாமல் இருந்தார்.

பன்னீரும் எடப்பாடியும் இணைந்த பின்னர், தேனி மாவட்ட அரசியல் பேனர்களிலும் மேடைகளிலும் தவிர்க்க முடியாத நபராக ரவி மாறினார். இப்போது, அவருக்கு அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘‘எம்.பி-யாகி டெல்லிக்குப் போகவேண்டும் என்பதுதான் ரவியின் கனவு. பன்னீருக்கு இதில் விருப்பம் இல்லை. இது தொடர்பாக ரவிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் பல முறை சண்டை வந்திருக்கிறது. இப்போதுகூட விருப்பம் இல்லாமல் தான் இந்தப் பதவியை வாங்கியுள்ளார் ரவி. அவரின் இலக்கு எம்.பி பதவிதான்’’ என்கிறார்கள் பன்னீருக்கு நெருக்கமானவர்கள்.

டி.டி.வி.தினகரன் தனது அ.ம.மு.க. கட்சியின் தலைமைக்கழக அலுவலகத்தை, சென்னையில் திறக்கிறார். புதிய அலுவலகக் கட்டடம் அசோக் நகரில் இருந்தாலும்,    கே.கே.நகரை ஒட்டி அந்தத் தெரு வருவதால், இதையும் கே.கே. நகர் ஏரியா என்றுதான் மக்கள் அழைப்பார்கள். ‘‘தி.மு.க தலைவர் கருணாநிதியை நினைவுபடுத்தும் ஏரியாவில் தினகரன் ஏன் கட்சி ஆபீஸைத் திறக்கிறார்? திறப்பு விழா நடத்தும் ஜூன் 3-ம் தேதி, கருணாநிதியின் பிறந்தநாள். போயஸ் கார்டனில் ஜெயலலிதா குடியிருந்த வேதா இல்லத்தின் எதிரே காலியிடம் ஒன்று உள்ளது. அந்த இடம் சசிகலாவின் நிர்வாகத்தில்தான் இருக்கிறது. அங்கேகூட சென்டிமென்ட்டாக புதிய கட்சி ஆபீஸை ஆரம்பித்திருக்கலாமே?’ என அவரின் கட்சி பிரமுகர்கள் சிலர் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். இதெல்லாம் தினகரன் காதுக்குப் போனதாம். அதற்கு அவர், ‘‘அசோக்நகர் நல்ல சாய்ஸ்தான். விமர்சனங்களைப் பற்றிக் கவலையில்லை” என்று சொல்லிவிட்டாராம். 

p4c_1527857006.jpg

  ப.சிதம்பரத்தை ஏதாவது ஒரு வழக்கில் ஒருமுறையாவது கைது செய்துவிட வேண்டும் என்று துடிக்கிறது பி.ஜே.பி-பிரதமர் மோடி-ஆடிட்டர் குருமூர்த்தி கூட்டணி. அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலும், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிலும் சிதம்பரத்துக்கு எதிராக சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இரண்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டிலிருந்து விதிகளைமீறி பணம் வந்துள்ளதாகப் புகார் இருக்கிறது. ‘‘இதில், நிதியமைச்சகம் சில சட்ட திட்டங்களை மீறியது. அதற்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் அழுத்தம்தான் காரணம்’’ என்பது சி.பி.ஐ வைக்கும் குற்றச்சாட்டு. இதுதொடர்பான விசாரணைக்கு மே 31-ம் தேதிக்குள் சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. விசாரணைக்குச் சென்றால், ஆதாரம் இருக்கிறதோ... இல்லையோ... கைது செய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை சிதம்பரம் உணர்ந்துள்ளார். அதையடுத்துதான், இரண்டு வழக்குகளிலும் தன்னைக் கைதுசெய்ய அவர் தடை உத்தரவு பெற்றிருக்கிறார்.

p4a_1527857052.jpg

ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி. அனைத்து பூத் கமிட்டிகளையும் முழுமையாக அமைக்கும் மாவட்டத்தின் நிர்வாகிகளுடன் போட்டோ எடுத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்தாராம். இதில், தூத்துக்குடி மாவட்டம்தான் முதலிடம். ‘‘தூத்துக்குடியில் காயம்பட்டவர்களையும், பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களையும் நேரில் பார்க்க நீங்கள் போகலாமே?’’ என்று ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கேட்டுள்ளனர். ‘‘நான் போனால், நோயாளிகள், மருத்துவர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் என்று திரண்டு வருவார்கள். இதனால், சிகிச்சை பெறுபவர்களுக்கு சங்கடமாகிவிடும். கொஞ்ச நாள் ஆகட்டும்’’ என்று சொல்லிவந்தாராம். மே 28 திங்களன்று இரவு ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கத்தை போனில் அழைத்த ரஜினி, ‘‘புதன்கிழமை காலை தூத்துக்குடிக்குப் போக நினைக்கிறேன். எனக்கும் என் உதவியாளர் சுப்பையாவுக்கும் டிக்கெட் போடுங்கள்’’ என்றாராம். அதன்பிறகுதான், ஏற்பாடுகள் துரிதமாகின. விமானத்தில் பயணித்த பலரும் ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். விமானம் கிளம்பியதும், ரிட்டர்ன் வந்ததும் சற்று லேட்டாகிவிட்டது. சென்னை திரும்பியதும் பிரஸ்மீட்டில் டென்ஷனாகப் பேசிய ரஜினி, விமான நிலையத்திலிருந்து கிளம்பியபோது, தன் உதவியாளர் காரில் ஏறியிருக்கிறாரா என்பதைக்கூட கவனிக்காமல், வீட்டுக்குப் பறந்தார்.

p4e_1527857031.jpg

சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாள்... தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புச்சட்டையில் வர, துரைமுருகன் மட்டும் நீலநிற சட்டையில் வந்திருந்தார். ‘‘காலையில் வீட்டில் பவர்கட். இருட்டில் இது கறுப்புச் சட்டை மாதிரி தெரிந்தது. அதனால்தான் தப்பு நடந்துடுச்சு’’ என்றாராம். தி.மு.க நடத்திய மாதிரி சட்டசபையிலும் ஒரு சுவாரசியம். ‘‘மாதிரி சட்டசபையில் நான் முதல்வராக உட்காருகிறேன்’’ என முன்வந்தாராம் துரைமுருகன். ஸ்டாலினிடம் இந்த விஷயம் போனபோது, ‘‘முதல்வர், துணை முதல்வர் என்பதெல்லாம் வேண்டாம். ஆளும் கட்சி வரிசை என்று மட்டும் அமைத்தால் போதும்’’ என்று சொல்லிவிட்டாராம். மாதிரி சட்டசபையில்கூட துரைமுருகனுக்கு அந்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசுலு

p4_1527857077.jpg சவுடு மண், கிராவல் மண், ஏரி மண் மற்றும் பட்டா இடத்தில் எடுக்கும் மண்... இவற்றைத் தனியார் வசமே தமிழக அரசு விட்டிருக்கிறது. இதைக் கவனிப்பவர், முதல்வர் அலுவலகம் தொடர்புடைய ‘மலை’யான பார்ட்டியாம். ஆற்றோரங்களில் நிலம் வைத்துள்ள பலர், ‘எங்கள் நிலத்தில் இருக்கும் மணலை எடுத்து விற்க அனுமதிக்க வேண்டும்’ எனப் பொய்யான காரணம் சொல்லி அனுமதி வாங்கி, ஆற்று மணலை அள்ளி விற்கிறார்களாம். பலரும் இந்த ரேஞ்சுக்குப் போகக் காரணம், முதல்வர் அலுவலக பார்ட்டிதான் என்கிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் நிறுவனம் ஒன்று கோவையில் கால் பதிக்கத் திட்டமிட்டது. ஒரு ஷாப்பிங் மாலில் ஆறு தியேட்டர்களைக் கட்டி முடித்திருக்கிறது. இதற்கு முறைப்படி அனுமதி வாங்கப் போனபோது, ‘உள்ளூர் வி.ஐ.பி ஒருவரிடம் கிளியரன்ஸ் வாங்கி வாருங்கள்’ என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சொல்லிவிட்டார்களாம். இவர்களும் அங்கே போக, அந்த வி.ஐ.பி., ஆறில் மூன்று தியேட்டர்களைத்  தனக்குத் தரும்படி பேரம் பேசினாராம். மிரண்டு நிற்கிறார்கள் அந்த தியேட்டர் நிறுவனத்தினர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகத்தில் பணிபுரியும் பொலிட்டிக்கல் பி.ஏ-க்களுக்கும் அரசு தரப்பு பி.ஏ-க்களுக்கும் பிரச்னை. ஒருவரை ஒருவர் வேவு பார்க்க ஆரம்பித்து, தகவல்களைத் துணை காதில் போட்டுக்கொண்டிருக்க, அவருக்கு டென்ஷன் தாங்கவில்லையாம். முதல்கட்டமாக, அரசுத் தரப்பு பி.ஏ-க்கள் இருவருக்கு கல்தா கொடுத்துவிட்டார். தலைமைச்செயலகத்தில் பவர்ஃபுல்லான துறையிலிருந்து டெபுடேஷனில் வந்தவர்கள் அந்த இருவரும். ‘அவர்கள் நம்மை என்ன செய்வார்களோ?’ என்று ஓபி.எஸ்-ஸின் பொலிட்டிக்கல் தரப்பினர் கதிகலங்கிக்கிடக்கிறார்கள்.

https://www.vikatan.com/

மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்?

3 months 2 weeks ago
மிஸ்டர் கழுகு: மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்? ‘அவசரமாக டெல்லி போகிறேன். சில செய்திகளை உமது டேபிளில் வைத்திருக்கிறேன்’ என்று கழுகாரிடமிருந்து அதிகாலையிலேயே வாட்ஸ்அப் மெஸேஜ்கள் வந்து விழுந்தன. அவை இதோ...  குட்கா விவகாரத்தில் மே 29-ம் தேதி சி.பி.ஐ தரப்பில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அதில் உள்ள சில வரிகளைப் பூதக்கண்ணாடி வைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒரு கோஷ்டியினர் அலசுகிறார்கள். ‘‘சட்டவிரோத குட்கா வி.ஐ.பி-யிடமிருந்து மாதா மாதம் மாமூல் பணத்தைப் பலரும் ‘வாங்கினர்’ (ரிசீவ்டு) என்பதுதானே குற்றச்சாட்டு! குட்கா கணக்கு நோட்டில் இருந்ததும் அதுதான். ஆனால், நடந்ததை உல்டா ஆக்கி, பணம் ‘கேட்டதாக’ (டிமாண்ட்) எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் காப்பாற்றும் முயற்சி இது’’ என்கிறார்கள் அவர்கள். குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரி தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர் வில்சன், “எஃப்.ஐ.ஆரில் யார் பெயரும் இல்லை. ஆனால், ‘பப்ளிக் சர்வன்ட்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இப்படிக் குறிப்பிட்டாலே, அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் எல்லோருமே அடக்கம்தான். எனவே, விசாரணை தொடரும்போது சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு உண்டு. குட்கா தயாரிப்பாளர்களிடம் கைப்பற்றப்பட்ட கணக்கு நோட்டில், ‘யார், யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது’ என்று தெளிவாக உள்ளது. சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்யும்போது, லஞ்சம் கேட்டார்களா அல்லது லஞ்சம் கொடுக்கப் பட்டதா என்ற விவரம் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்” என்கிறார்.  தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவி என்கிற ரவீந்திரநாத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா காலத்தில் இவர், தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக இருந்தார். ஒருகட்டத்தில், பன்னீரின் உறவுகள் அனைவரின் பதவிகளையும் அதிரடியாக ஜெயலலிதா பறித்தார். அப்போது, ரவியின் பதவியும் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசியலிலிருந்து ஒதுங்கிய ரவி, தன் தந்தையின் ‘தர்மயுத்த’ காலகட்டத்தில்கூட, வெளியில் தலைகாட்டாமல் இருந்தார். பன்னீரும் எடப்பாடியும் இணைந்த பின்னர், தேனி மாவட்ட அரசியல் பேனர்களிலும் மேடைகளிலும் தவிர்க்க முடியாத நபராக ரவி மாறினார். இப்போது, அவருக்கு அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘‘எம்.பி-யாகி டெல்லிக்குப் போகவேண்டும் என்பதுதான் ரவியின் கனவு. பன்னீருக்கு இதில் விருப்பம் இல்லை. இது தொடர்பாக ரவிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் பல முறை சண்டை வந்திருக்கிறது. இப்போதுகூட விருப்பம் இல்லாமல் தான் இந்தப் பதவியை வாங்கியுள்ளார் ரவி. அவரின் இலக்கு எம்.பி பதவிதான்’’ என்கிறார்கள் பன்னீருக்கு நெருக்கமானவர்கள்.  டி.டி.வி.தினகரன் தனது அ.ம.மு.க. கட்சியின் தலைமைக்கழக அலுவலகத்தை, சென்னையில் திறக்கிறார். புதிய அலுவலகக் கட்டடம் அசோக் நகரில் இருந்தாலும், கே.கே.நகரை ஒட்டி அந்தத் தெரு வருவதால், இதையும் கே.கே. நகர் ஏரியா என்றுதான் மக்கள் அழைப்பார்கள். ‘‘தி.மு.க தலைவர் கருணாநிதியை நினைவுபடுத்தும் ஏரியாவில் தினகரன் ஏன் கட்சி ஆபீஸைத் திறக்கிறார்? திறப்பு விழா நடத்தும் ஜூன் 3-ம் தேதி, கருணாநிதியின் பிறந்தநாள். போயஸ் கார்டனில் ஜெயலலிதா குடியிருந்த வேதா இல்லத்தின் எதிரே காலியிடம் ஒன்று உள்ளது. அந்த இடம் சசிகலாவின் நிர்வாகத்தில்தான் இருக்கிறது. அங்கேகூட சென்டிமென்ட்டாக புதிய கட்சி ஆபீஸை ஆரம்பித்திருக்கலாமே?’ என அவரின் கட்சி பிரமுகர்கள் சிலர் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். இதெல்லாம் தினகரன் காதுக்குப் போனதாம். அதற்கு அவர், ‘‘அசோக்நகர் நல்ல சாய்ஸ்தான். விமர்சனங்களைப் பற்றிக் கவலையில்லை” என்று சொல்லிவிட்டாராம்.  ப.சிதம்பரத்தை ஏதாவது ஒரு வழக்கில் ஒருமுறையாவது கைது செய்துவிட வேண்டும் என்று துடிக்கிறது பி.ஜே.பி-பிரதமர் மோடி-ஆடிட்டர் குருமூர்த்தி கூட்டணி. அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலும், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிலும் சிதம்பரத்துக்கு எதிராக சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இரண்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டிலிருந்து விதிகளைமீறி பணம் வந்துள்ளதாகப் புகார் இருக்கிறது. ‘‘இதில், நிதியமைச்சகம் சில சட்ட திட்டங்களை மீறியது. அதற்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் அழுத்தம்தான் காரணம்’’ என்பது சி.பி.ஐ வைக்கும் குற்றச்சாட்டு. இதுதொடர்பான விசாரணைக்கு மே 31-ம் தேதிக்குள் சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. விசாரணைக்குச் சென்றால், ஆதாரம் இருக்கிறதோ... இல்லையோ... கைது செய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை சிதம்பரம் உணர்ந்துள்ளார். அதையடுத்துதான், இரண்டு வழக்குகளிலும் தன்னைக் கைதுசெய்ய அவர் தடை உத்தரவு பெற்றிருக்கிறார்.  ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி. அனைத்து பூத் கமிட்டிகளையும் முழுமையாக அமைக்கும் மாவட்டத்தின் நிர்வாகிகளுடன் போட்டோ எடுத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்தாராம். இதில், தூத்துக்குடி மாவட்டம்தான் முதலிடம். ‘‘தூத்துக்குடியில் காயம்பட்டவர்களையும், பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களையும் நேரில் பார்க்க நீங்கள் போகலாமே?’’ என்று ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கேட்டுள்ளனர். ‘‘நான் போனால், நோயாளிகள், மருத்துவர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் என்று திரண்டு வருவார்கள். இதனால், சிகிச்சை பெறுபவர்களுக்கு சங்கடமாகிவிடும். கொஞ்ச நாள் ஆகட்டும்’’ என்று சொல்லிவந்தாராம். மே 28 திங்களன்று இரவு ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கத்தை போனில் அழைத்த ரஜினி, ‘‘புதன்கிழமை காலை தூத்துக்குடிக்குப் போக நினைக்கிறேன். எனக்கும் என் உதவியாளர் சுப்பையாவுக்கும் டிக்கெட் போடுங்கள்’’ என்றாராம். அதன்பிறகுதான், ஏற்பாடுகள் துரிதமாகின. விமானத்தில் பயணித்த பலரும் ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். விமானம் கிளம்பியதும், ரிட்டர்ன் வந்ததும் சற்று லேட்டாகிவிட்டது. சென்னை திரும்பியதும் பிரஸ்மீட்டில் டென்ஷனாகப் பேசிய ரஜினி, விமான நிலையத்திலிருந்து கிளம்பியபோது, தன் உதவியாளர் காரில் ஏறியிருக்கிறாரா என்பதைக்கூட கவனிக்காமல், வீட்டுக்குப் பறந்தார்.  சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாள்... தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புச்சட்டையில் வர, துரைமுருகன் மட்டும் நீலநிற சட்டையில் வந்திருந்தார். ‘‘காலையில் வீட்டில் பவர்கட். இருட்டில் இது கறுப்புச் சட்டை மாதிரி தெரிந்தது. அதனால்தான் தப்பு நடந்துடுச்சு’’ என்றாராம். தி.மு.க நடத்திய மாதிரி சட்டசபையிலும் ஒரு சுவாரசியம். ‘‘மாதிரி சட்டசபையில் நான் முதல்வராக உட்காருகிறேன்’’ என முன்வந்தாராம் துரைமுருகன். ஸ்டாலினிடம் இந்த விஷயம் போனபோது, ‘‘முதல்வர், துணை முதல்வர் என்பதெல்லாம் வேண்டாம். ஆளும் கட்சி வரிசை என்று மட்டும் அமைத்தால் போதும்’’ என்று சொல்லிவிட்டாராம். மாதிரி சட்டசபையில்கூட துரைமுருகனுக்கு அந்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது. படங்கள்: வீ.சக்தி அருணகிரி, கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசுலு  சவுடு மண், கிராவல் மண், ஏரி மண் மற்றும் பட்டா இடத்தில் எடுக்கும் மண்... இவற்றைத் தனியார் வசமே தமிழக அரசு விட்டிருக்கிறது. இதைக் கவனிப்பவர், முதல்வர் அலுவலகம் தொடர்புடைய ‘மலை’யான பார்ட்டியாம். ஆற்றோரங்களில் நிலம் வைத்துள்ள பலர், ‘எங்கள் நிலத்தில் இருக்கும் மணலை எடுத்து விற்க அனுமதிக்க வேண்டும்’ எனப் பொய்யான காரணம் சொல்லி அனுமதி வாங்கி, ஆற்று மணலை அள்ளி விற்கிறார்களாம். பலரும் இந்த ரேஞ்சுக்குப் போகக் காரணம், முதல்வர் அலுவலக பார்ட்டிதான் என்கிறார்கள்.  சென்னையைச் சேர்ந்த மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் நிறுவனம் ஒன்று கோவையில் கால் பதிக்கத் திட்டமிட்டது. ஒரு ஷாப்பிங் மாலில் ஆறு தியேட்டர்களைக் கட்டி முடித்திருக்கிறது. இதற்கு முறைப்படி அனுமதி வாங்கப் போனபோது, ‘உள்ளூர் வி.ஐ.பி ஒருவரிடம் கிளியரன்ஸ் வாங்கி வாருங்கள்’ என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சொல்லிவிட்டார்களாம். இவர்களும் அங்கே போக, அந்த வி.ஐ.பி., ஆறில் மூன்று தியேட்டர்களைத் தனக்குத் தரும்படி பேரம் பேசினாராம். மிரண்டு நிற்கிறார்கள் அந்த தியேட்டர் நிறுவனத்தினர்.  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகத்தில் பணிபுரியும் பொலிட்டிக்கல் பி.ஏ-க்களுக்கும் அரசு தரப்பு பி.ஏ-க்களுக்கும் பிரச்னை. ஒருவரை ஒருவர் வேவு பார்க்க ஆரம்பித்து, தகவல்களைத் துணை காதில் போட்டுக்கொண்டிருக்க, அவருக்கு டென்ஷன் தாங்கவில்லையாம். முதல்கட்டமாக, அரசுத் தரப்பு பி.ஏ-க்கள் இருவருக்கு கல்தா கொடுத்துவிட்டார். தலைமைச்செயலகத்தில் பவர்ஃபுல்லான துறையிலிருந்து டெபுடேஷனில் வந்தவர்கள் அந்த இருவரும். ‘அவர்கள் நம்மை என்ன செய்வார்களோ?’ என்று ஓபி.எஸ்-ஸின் பொலிட்டிக்கல் தரப்பினர் கதிகலங்கிக்கிடக்கிறார்கள். https://www.vikatan.com/

மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்

3 months 2 weeks ago
மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம் வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்த வாரத் தொடக்கத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தின் போது, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அவர், அரச அதிகாரிகள், படை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோருடன், கலந்துரையாடல்களை நடத்தினார். இந்தச் சந்திப்புகளில், வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன. திட்டங்களில் ஏற்படும் தாமதங்களை, நீக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆனால், இந்தக் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற எந்தவொரு நிகழ்விலும், முதலமைச்சர் பங்கேற்பதைத் தவிர்த்திருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் நிகழ்வுகளைப் புறக்கணிப்பதாக முதலமைச்சர் அறிவிக்காவிடினும், கிட்டத்தட்ட அதேபாணியில் தான் அவர் நடந்து கொண்டார். ஆனாலும், வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியமர்வு, காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய நீண்ட கடிதம் ஒன்றை, முதலமைச்சர் தனது செயலாளர் மூலமாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்திருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற நிகழ்வில், பங்கேற்காதது ஏன் என்பதை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்னமும் வெளிப்படுத்தாத நிலையில், பல்வேறு ஊகங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள அரசாங்கம், இத்தகைய சந்திப்புகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதால் தான், இந்தக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்தார் என்பதும் அத்தகைய ஊகங்களில் ஒன்று. ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இதுபோன்ற நிலை தோன்றுவது, இதுதான் முதல்முறை என்றில்லை. ஏற்கெனவே, தற்போதைய கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலும், இருவருக்கும் இடையில் அறிக்கைப் போர்கள் நடந்தன. அதனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான சில பயணங்களின் போது, முதலமைச்சர் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். எனினும் ,பிறகு ஒரு கட்டத்தில், இருவரும் கசப்புணர்வுகளை மறந்து, நிகழ்வுகளில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர். ஆனால், இப்போது திடீரென, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்வுகளை முதலமைச்சர் திட்டமிட்டே புறக்கணித்திருந்தார் என்றால், அதற்கான காரணங்களை அவர், தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அதை அவர், அடுத்தடுத்த தனது கேள்வி -பதில் அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்துவார் என்று நம்பலாம். இந்தநிலையில், ஜெனீவா காரணங்களை முன்னிறுத்தியோ, அல்லது, வேறு அரசியல் காரணங்களின் நிமித்தமோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டங்களை முதலமைச்சர் புறக்கணித்திருப்பது சரியானதா என்ற கேள்விகள் உள்ளன. ஜெனீவாவில் இந்தமாதம் நடக்கப்போகும் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் முக்கியத்துவம் பெறப்போவதில்லை. அது சூடுபிடிக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இம்முறை கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் குறித்த விவாதம் ஏதும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, அரசாங்கம் அங்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான நிகழ்வுகளைப் புறக்கணிப்பதன் மூலம், ஜெனீவாவில் எதையும் சாதித்து விட முடியாது. அது வேறொரு களம். அரசாங்கம், ஜெனீவாவில் போய் இந்தக் கூட்டத்தை, தனக்கான கேடயமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று முதலமைச்சர் அஞ்சுவது சரியானால், அவர் ஏன், இதுவரை ஜெனீவா சென்று உண்மையை உரைக்கத் தயாராக இருக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பலாம். இங்கு, முதலமைச்சரின் புறக்கணிப்புக்கு, ஜெனீவா என்பது சரியான காரணமாகத் தென்படவில்லை. ஒருவேளை, ஜெனீவாவை உண்மைக் காரணமாக எடுத்துக் கொண்டாலும், முதலமைச்சர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற விடயத்துக்கும், இப்போதைய நடவடிக்கைக்கும் அது தொடர்பற்றதாக இருக்கும். அதாவது, வடக்கில் முன்னெடுக்கப்படும் மத்திய அரசாங்கத்தின் திட்டங்களில், மாகாண அரசாங்கத்தையும் பங்காளியாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று, முதலமைச்சர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறார். அப்படியான நிலையில், மத்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து ஆராயும் கூட்டத்தை, முதலமைச்சரே புறக்கணித்துக் கொண்டு, அத்தகையதொரு வாய்ப்பைத் தருமாறு கேட்பது அர்த்தமற்றது, அரசாங்கமே இதை ஒரு காரணமாகக் கூறி, முதலமைச்சரின் கோரிக்கையைத் தட்டிக்கழிக்க முற்படும் என்பதை மறந்து விடலாகாது. அபிவிருத்தி என்பது, வடக்குக்கு முக்கியமானது. அதை முன்னெடுப்பதில் அரசியல் இலாப - நட்டங்களை எதிர்பார்க்க முனைந்தால், அது ஆபத்தான விளைவுகளுக்கே இட்டுச் செல்லும். போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அபிவிருத்தி அரசியலை, ஓர் உபாயமாக அரசாங்கம் முன்னெடுத்தது. அப்போது அதைத் தமிழர் தரப்பு, தீவிரமாக எதிர்த்து வந்தது. ஆனாலும், அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, டக்ளஸ் தேவானந்தாவையும் ஆளும்கட்சியையும் பலப்படுத்திக் கொள்வதில், ஆட்சியில் இருந்த தரப்புகள் வெற்றி கண்டன. போர் முடிவுக்கு வந்த பின்னரும், அபிவிருத்தி அரசியல் உபாயத்தைக் கையாண்டு, தமிழர் தரப்பின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தை நசுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போரால் சீரழிந்திருந்த வடக்கை அபிவிருத்தி செய்வதன் மூலம், தமிழ் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி, அவர்களை அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் இருந்து அகற்ற, மஹிந்த அரசாங்கம் முனைப்புக் காட்டியது. ஆனாலும், 2013 மாகாணசபைத் தேர்தல் மூலமும், 2015 ஜனாதிபதித் தேர்தல் மூலமும், தமிழ் மக்கள் அதற்குத் தக்க பதிலடி கொடுத்திருந்தனர். ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், அபிவிருத்தி அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. பேரினவாதக் கட்சிகளை வடக்கில் பலப்படுத்திக் கொள்வதற்கு இது கையாளப்படுவதுடன், வடக்கு மாகாணசபையின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கும் இதை ஓர் ஆயுதமாக அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது. இத்தகைய கட்டத்தில், வடக்கு மாகாணசபை, தனக்கான உரிமையையும் இடத்தையும் தக்கவைத்துக் கொள்ள மத்திய அரசாங்கத்துடன் போராட வேண்டிய நிலையில் உள்ளது. இழுபறிப் போராட்டங்களை நடத்தியே, அபிவிருத்தி சார் விடயங்களில் மாகாண அரசாங்கத்தின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. அரசியல் உரிமை தான் முக்கியம்; அபிவிருத்தி எல்லாம் அதற்கு அப்புறம்தான் என்று நீண்டகாலம் பயணிக்க முடியாது. வடக்கின் அபிவிருத்திக்காக, பெறும் நிதி உதவிகளை, மத்திய அரசாங்கம் வேறு தேவைகளுக்காகவும் சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் பயன்படுத்துவதாக அண்மையில்கூட முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார். அப்படியான நிலையில், அபிவிருத்தி சார்ந்த கூட்டங்களை அவர் புறக்கணிப்பதால், வடக்கின் அபிவிருத்தியில் பங்காளர் என்ற நிலையில் இருந்து, வடக்கு மாகாணசபை ஒதுக்கப்படும் நிலையே ஏற்படும். கடந்த காலங்களில், இத்தகைய அபிவிருத்திக் கூட்டங்களைக் புறக்கணிக்க, தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் எடுத்த முடிவு, எதையும் சாதிக்கவில்லை. மஹிந்த அரசாங்கமாயினும் சரி, ரணில் அரசாங்கமாயினும் சரி, வேறு எந்த அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தாலும் சரி, வடக்கின் கோரிக்கைகளை முழுமையாக, செவிமடுக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அதில் அவர்கள் அரசியல் நலன்களை எதிர்பார்ப்பார்கள். இப்படியானதொரு நிலையில் மாகாணசபை தான், மத்திய அரசாங்கத்தை இழுத்துப் பிடித்து வழிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளது. அப்படியான பொறுப்பை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தட்டிக் கழிக்க முற்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. இன்னமும், மாகாணசபை ஆட்சியில் இருக்கப்போவது ஐந்து மாதங்கள் தான், மத்திய அரசாங்கத்துடன் முட்டி மோதி, எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க முதலமைச்சர் உத்தேசித்திருக்கலாம். புதிய கட்சி பற்றிய திட்டங்களில் இருக்கும் அவர், அரசாங்கத்துக்கு எதிரான போக்கைத் தீவிரப்படுத்துவதன் மூலம், தனது ஆதரவாளர்களை உசுப்பேற்றுவதற்கு முயல்கிறாரா என்றும் தெரியவில்லை. எது எவ்வாறாயினும், வடக்கு மாகாணசபை, தனக்கான உரித்துகளை மத்திய அரசாங்கத்திடம் விட்டுக் கொடுக்கக் கூடாது. மத்தியில் உள்ள அரசாங்கமும் ஆட்சியாளர்களும், எப்போதும் ஒரே மாதிரியாகத் தான் இருப்பார்கள். ரணில் ஒன்றும் அதற்கு விதிவிலக்கானவர் அல்லர். அத்தகைய போக்குக்கு விட்டுக் கொடுக்காமல் எதிர்த்து நிற்பதன் மூலம் தான், அவர்களைக் கட்டுப்படுத்த முடியும். மாறாக, புறக்கணிப்பு என்ற பெயரில் ஒதுங்கிப் போகும் போது அல்லது அதைவிட்டு ஓடும் போது, மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள், இன்னமும் தமது திட்டங்களைச் சுலபமாகச் செயற்படுத்தி விடுவார்கள். இது கடந்த காலம் கற்றுத் தந்த பாடம். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மீண்டும்-முருங்கையில்-ஏறிய-வேதாளம்/91-217007

மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்

3 months 2 weeks ago
மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்
 
 

வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்த வாரத் தொடக்கத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார்.  

இந்தப் பயணத்தின் போது, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அவர், அரச அதிகாரிகள், படை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோருடன், கலந்துரையாடல்களை நடத்தினார்.  
இந்தச் சந்திப்புகளில், வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன. திட்டங்களில் ஏற்படும் தாமதங்களை, நீக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.  

ஆனால், இந்தக் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாண முதலமைச்சர் 
சி.வி. விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற எந்தவொரு நிகழ்விலும், முதலமைச்சர் பங்கேற்பதைத் தவிர்த்திருந்தார்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் நிகழ்வுகளைப் புறக்கணிப்பதாக முதலமைச்சர் அறிவிக்காவிடினும், கிட்டத்தட்ட அதேபாணியில் தான் அவர் நடந்து கொண்டார்.   

ஆனாலும், வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியமர்வு, காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய நீண்ட கடிதம் ஒன்றை, முதலமைச்சர் தனது செயலாளர் மூலமாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்திருந்தார்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற நிகழ்வில், பங்கேற்காதது ஏன் என்பதை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்னமும் வெளிப்படுத்தாத நிலையில், பல்வேறு ஊகங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.  

இந்த மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள அரசாங்கம், இத்தகைய சந்திப்புகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதால் தான், இந்தக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்தார் என்பதும் அத்தகைய ஊகங்களில் ஒன்று.  

ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இதுபோன்ற நிலை தோன்றுவது, இதுதான் முதல்முறை என்றில்லை. ஏற்கெனவே, தற்போதைய கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலும், இருவருக்கும் இடையில் அறிக்கைப் போர்கள் நடந்தன.   

அதனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான சில பயணங்களின் போது, முதலமைச்சர் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். எனினும் ,பிறகு ஒரு கட்டத்தில், இருவரும் கசப்புணர்வுகளை மறந்து, நிகழ்வுகளில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர்.  

ஆனால், இப்போது திடீரென, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறது.   
ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்வுகளை முதலமைச்சர் திட்டமிட்டே புறக்கணித்திருந்தார் என்றால், அதற்கான காரணங்களை அவர், தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அதை அவர், அடுத்தடுத்த தனது கேள்வி -பதில் அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்துவார் என்று நம்பலாம்.  

இந்தநிலையில், ஜெனீவா காரணங்களை முன்னிறுத்தியோ, அல்லது, வேறு அரசியல் காரணங்களின் நிமித்தமோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டங்களை முதலமைச்சர் புறக்கணித்திருப்பது சரியானதா என்ற கேள்விகள் உள்ளன.  

ஜெனீவாவில் இந்தமாதம் நடக்கப்போகும் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் முக்கியத்துவம் பெறப்போவதில்லை. அது சூடுபிடிக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன.  

இம்முறை கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் குறித்த விவாதம் ஏதும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, அரசாங்கம் அங்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை.  
அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான நிகழ்வுகளைப் புறக்கணிப்பதன் மூலம், ஜெனீவாவில் எதையும் சாதித்து விட முடியாது. அது வேறொரு களம்.   

அரசாங்கம், ஜெனீவாவில் போய் இந்தக் கூட்டத்தை, தனக்கான கேடயமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று முதலமைச்சர் அஞ்சுவது சரியானால், அவர் ஏன், இதுவரை ஜெனீவா சென்று உண்மையை உரைக்கத் தயாராக இருக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பலாம்.  இங்கு, முதலமைச்சரின் புறக்கணிப்புக்கு, ஜெனீவா என்பது சரியான காரணமாகத் தென்படவில்லை.   

ஒருவேளை, ஜெனீவாவை உண்மைக் காரணமாக எடுத்துக் கொண்டாலும், முதலமைச்சர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற விடயத்துக்கும், இப்போதைய நடவடிக்கைக்கும் அது தொடர்பற்றதாக இருக்கும்.  
அதாவது, வடக்கில் முன்னெடுக்கப்படும் மத்திய அரசாங்கத்தின் திட்டங்களில், மாகாண அரசாங்கத்தையும் பங்காளியாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று, முதலமைச்சர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறார்.  

அப்படியான நிலையில், மத்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து ஆராயும் கூட்டத்தை, முதலமைச்சரே புறக்கணித்துக் கொண்டு, அத்தகையதொரு வாய்ப்பைத் தருமாறு கேட்பது அர்த்தமற்றது,  

அரசாங்கமே இதை ஒரு காரணமாகக் கூறி, முதலமைச்சரின் கோரிக்கையைத் தட்டிக்கழிக்க முற்படும் என்பதை மறந்து விடலாகாது.  

அபிவிருத்தி என்பது, வடக்குக்கு முக்கியமானது. அதை முன்னெடுப்பதில் அரசியல் இலாப - நட்டங்களை எதிர்பார்க்க முனைந்தால், அது ஆபத்தான விளைவுகளுக்கே இட்டுச் செல்லும்.  

போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அபிவிருத்தி அரசியலை, ஓர் உபாயமாக அரசாங்கம் முன்னெடுத்தது. அப்போது அதைத் தமிழர் தரப்பு, தீவிரமாக எதிர்த்து வந்தது.  

ஆனாலும், அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, டக்ளஸ் தேவானந்தாவையும் ஆளும்கட்சியையும் பலப்படுத்திக் கொள்வதில், ஆட்சியில் இருந்த தரப்புகள் வெற்றி கண்டன.  

போர் முடிவுக்கு வந்த பின்னரும், அபிவிருத்தி அரசியல் உபாயத்தைக் கையாண்டு, தமிழர் தரப்பின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தை நசுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  

போரால் சீரழிந்திருந்த வடக்கை அபிவிருத்தி செய்வதன் மூலம், தமிழ் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி, அவர்களை அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் இருந்து அகற்ற, மஹிந்த அரசாங்கம் முனைப்புக் காட்டியது.  

ஆனாலும், 2013 மாகாணசபைத் தேர்தல் மூலமும், 2015 ஜனாதிபதித் தேர்தல் மூலமும், தமிழ் மக்கள் அதற்குத் தக்க பதிலடி கொடுத்திருந்தனர்.  

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், அபிவிருத்தி அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. பேரினவாதக் கட்சிகளை வடக்கில் பலப்படுத்திக் கொள்வதற்கு இது கையாளப்படுவதுடன், வடக்கு மாகாணசபையின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கும் இதை ஓர் ஆயுதமாக அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது. இத்தகைய கட்டத்தில், வடக்கு மாகாணசபை, தனக்கான உரிமையையும் இடத்தையும் தக்கவைத்துக் கொள்ள மத்திய அரசாங்கத்துடன் போராட வேண்டிய நிலையில் உள்ளது.  

இழுபறிப் போராட்டங்களை நடத்தியே, அபிவிருத்தி சார் விடயங்களில் மாகாண அரசாங்கத்தின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது.  

அரசியல் உரிமை தான் முக்கியம்; அபிவிருத்தி எல்லாம் அதற்கு அப்புறம்தான் என்று நீண்டகாலம் பயணிக்க முடியாது. வடக்கின் அபிவிருத்திக்காக, பெறும் நிதி உதவிகளை, மத்திய அரசாங்கம் வேறு தேவைகளுக்காகவும் சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் பயன்படுத்துவதாக அண்மையில்கூட முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.  

அப்படியான நிலையில், அபிவிருத்தி சார்ந்த கூட்டங்களை அவர் புறக்கணிப்பதால், வடக்கின் அபிவிருத்தியில் பங்காளர் என்ற நிலையில் இருந்து, வடக்கு மாகாணசபை ஒதுக்கப்படும் நிலையே ஏற்படும். கடந்த காலங்களில், இத்தகைய அபிவிருத்திக் கூட்டங்களைக் புறக்கணிக்க, தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் எடுத்த முடிவு, எதையும் சாதிக்கவில்லை. 

மஹிந்த அரசாங்கமாயினும் சரி, ரணில் அரசாங்கமாயினும் சரி, வேறு எந்த அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தாலும் சரி, வடக்கின் கோரிக்கைகளை முழுமையாக, செவிமடுக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அதில் அவர்கள் அரசியல் நலன்களை எதிர்பார்ப்பார்கள்.  

இப்படியானதொரு நிலையில் மாகாணசபை தான், மத்திய அரசாங்கத்தை இழுத்துப் பிடித்து வழிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளது. அப்படியான பொறுப்பை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தட்டிக் கழிக்க முற்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.   

இன்னமும், மாகாணசபை ஆட்சியில் இருக்கப்போவது ஐந்து மாதங்கள் தான், மத்திய அரசாங்கத்துடன் முட்டி மோதி, எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க முதலமைச்சர் உத்தேசித்திருக்கலாம்.  

புதிய கட்சி பற்றிய திட்டங்களில் இருக்கும் அவர், அரசாங்கத்துக்கு எதிரான போக்கைத் தீவிரப்படுத்துவதன் மூலம், தனது ஆதரவாளர்களை உசுப்பேற்றுவதற்கு முயல்கிறாரா என்றும் தெரியவில்லை.  

எது எவ்வாறாயினும், வடக்கு மாகாணசபை, தனக்கான உரித்துகளை மத்திய அரசாங்கத்திடம் விட்டுக் கொடுக்கக் கூடாது. மத்தியில் உள்ள அரசாங்கமும் ஆட்சியாளர்களும், எப்போதும் ஒரே மாதிரியாகத் தான் இருப்பார்கள். ரணில் ஒன்றும் அதற்கு விதிவிலக்கானவர் அல்லர். அத்தகைய போக்குக்கு விட்டுக் கொடுக்காமல் எதிர்த்து நிற்பதன் மூலம் தான், அவர்களைக் கட்டுப்படுத்த முடியும்.   

மாறாக, புறக்கணிப்பு என்ற பெயரில் ஒதுங்கிப் போகும் போது அல்லது அதைவிட்டு ஓடும் போது, மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள், இன்னமும் தமது திட்டங்களைச் சுலபமாகச் செயற்படுத்தி விடுவார்கள். இது கடந்த காலம் கற்றுத் தந்த பாடம். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மீண்டும்-முருங்கையில்-ஏறிய-வேதாளம்/91-217007

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று

3 months 2 weeks ago
கொழும்பு, கொச்­சிக்க­டை­ பு­னித அந்­தோ­னியார் திருத்தல திருவிழா ஆரம்பம் கொழும்பு, கொச்­சிக்க­டை­ பு­னித அந்­தோ­னியார் திருத்தலத்தில் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமானது. http://www.virakesari.lk/article/34358

யாழ் போதனா வைத்தியசாலையின் ஆரம்பமும் வரலாறும்…

3 months 2 weeks ago
யாழ் போதனா வைத்தியசாலையின் ஆரம்பமும் வரலாறும்… ந.பரமேசுவரன் – சிரேட்ட ஊடகவியலாளர், நூலகர். பா.துவாரகன் அபிவிருத்தி உத்தியோகத்தர். தற்போது யாழ் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) என்ற பெயருடன் யாழ் நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையானது யாழ்ப்பாணம் வைத்தியசாலை (Jaffna Hospital), யாழ் வைத்தியசாலை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. Yarl Hospital – யாழ். வைத்தியசாலை என்பது யாழ்ப்பாணம் வைத்தியசாலை என்பதன் சுருக்கிய வடிவமே. இப்பெயரில் தனியார் வைத்தியசாலை ஒன்றும் திருநெல்வேலியில் இயங்கி வருகின்றது! யாழ்ப்பாணம் வைத்தியசாலையானது பெரிய ஆசுப்பத்திரி என்றும் யாழ்ப்பாண மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. முன்பு இதனை தரும ஆசுப்பத்திரி என்றும் அழைத்தனர். யாழ் போதனா வைத்தியசாலை ஆரம்பத்தில் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital- F.N.S. Hospital) என்றே அழைக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த ஐரோப்பியர்கள் சிலர் ஒன்றிணைந்து யாழ்ப்பாண மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகம் (Friend-in-Need Society) என்ற பெயரில் ஒரு கழகத்தை உருவாக்கினர். இந்த ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக அங்குரார்ப்பணக் கூட்டம் 09/03/1841 செவ்வாய்கிழமை மாலை நீதிமன்ற வளாகத்தில் கப்டன் கோச்ரேன் (Captain Coachrane) தலைமையில் இடம் பெற்றது. இக் கூட்டத்தில் யாழ் மத்திய கல்லூரி தாபகர் பீற்றர் பேர்சிவல் (Peter Percival) நீதிமன்ற காரியதரிசி எப்.சி.கிறீனியர் (F.C.Greenier)ஆகியோர் கலந்து கொண்டனர். மாதாந்த சந்தா பணமாக 8 பவுண்ஸ் அறவிடுவதென தீர்மானிக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலையின் தாபகர் : பேர்சிவல் அக்லண்ட் டைக் (Percival Akland Dyke) பேர்சிவல் அக்லண்ட் டைக் – இவரே யாழ் மாவட்டத்தின் முதலாவது அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர் (01.10.1829 – 09.10.1867). அக்காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு அளப்பரிய சேவை செய்துள்ள அதிகாரிகளில் அக்லண்ட் டைக் முதன்மையானவர். தற்போது பழைய பூங்கா என அழைக்கப்படும் அரச அதிபர், ஆளுநர் இல்லம் மற்றும் அயலில் உள்ள அலுவலகங்களில் உள்ள மரங்கள் யாவும் இவரால் நாட்டப்பட்டவையே. டைக் இங்குள்ள மரங்களில் உள்ள பூக்களின் நறுமணத்தை சுவாசித்தும் பழமரங்களின் கனிகளை சுவைத்தும் வந்தார். பொதுக்களும் அனுமதி பெற்று இப் பூங்காவைப் பார்வையிட்டும் பூங்காவிலுள்ள கனிகளைப் புசித்தும் வந்தனர். தற்போது போதனா வைத்தியசாலையாக உருவாகியுள்ள யாழ்ப்பாணம் வைத்தியசாலையை தாபித்தவர் இவரே. 1850 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital) என்ற பெயரில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த பேர்சிவல் அக்லண்ட் டைக் (Percival Akland Dyke) உதவி அரசாங்க அதிபராக இருந்த வில்லியம் துவைனம் (William Tywnam) ஆகியோரிடம் வைத்தியசாலை கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அரசாங்க அதிபர் டைக் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் மூலமும் தனது நண்பர்களிடமும் நிதி சேகரித்து ரூபா பத்தாயிரம் வழங்கினார். அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக் தனது வருமானத்தின் பெரும் பகுதியை யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் (F.N.S. Hospital) கட்டடிப் பணிகளுக்காகச் செலவிட்டார். கோப்பாயில் வசித்து வந்த அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக்கின் பூதவுடல் அவர் காலமான 1867 ஒக்டோபர் 9 ஆம் திகதியன்றே யாழ் பரியோவான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. டைக்கிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்த அரச அலுவலகங்கள் 4 – 5 தினங்கள் மூடப்பட்டன. ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital- F.N.S. Hospital) 1850 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் 27 ஆம் திகதி வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. வயல்வெளிகள் தோட்டங்கள் என்பனவற்றின் நடுவிலேயே ஆரம்பத்தில் வைத்தியசாலை அமைந்திருந்தது. இரண்டு விடுதிகளுடன் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது. விடுதிகளுக்கு விக்ரோரியா மகாராணியின் பெயர் சூட்டப்பட்டது. (Victoria Jubilee Ward, Victoria Lying In Ward) பொது சிகிச்சை விடுதி, தோல் சிகிச்சை விடுதி என்பவற்றில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விடுதியில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு உணவு வழங்குவதற்காக சமையற்காரர்களும் நியமிக்கப்பட்டனர். இங்கு இருபத்திநான்கு மணிநேரமும் சேவை வழங்கப்பட்டது. விடுதியில் தங்கிநின்று சிகிச்சை பெற்றவர்களுக்கு உடைகளும் வழங்கப்பட்டன. வைத்தியசாலையை நிருவகிக்கும் பொறுப்பு அரசாங்க அதிபர் டைக்கிடமும் உதவி அரசாங்க அதிபர் துவைனத்திடமும் ஒப்படைக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை ஆபத்துக்கு உதவும்; வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital) என அழைக்கப்பட்டது. 1890 ஆம் ஆண்டு மே மாதம் வைத்தியசாலைக்கு ஆறாயிரம் ரூபாநிதி உதவி வழங்கப்பட்டது. 14.12.1899 அன்று யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்தியசாலையை அரசாங்கத்திடம் கையளிப்பதென தீர்மானிக்கப்பட்டது. 12.10.1905 வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்தியசாலையை அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திடம் கையளிப்பதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 1907 இல் வைத்தியசாலை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. அன்று முதல் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை என அழைக்கப்பட்டு வந்த வைத்தியசாலை யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை (Jaffna Civil Hospital) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டபோது வைத்தியசாலை கட்டடத்தின் பெறுமதி ரூபா 20,000.00 என மதிப்பீடு செய்யப்பட்டது. 1907 இல் சபாபதியும் சட்டத்தரணி சங்கரப்பிள்ளையும் visitors ஆக (வைத்தியசாலை மேற்பார்வை-நிருவாகம்) நியமிக்கப்பட்டனர் (வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது). 12.04.1909 இல் சட்டத்தரணி திருநாவுக்கரசு ஞாபகார்த்தமாக வெளிநோயாளர் மருந்தகம் நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சேர் அலன்பெரி (Sir. Alen Pery) அடிக்கல்லை நாட்டினார். 01.03.1919 இல் பணம் கொடுத்து பராமரிக்கும் விடுதி (paying ward) திறந்து வைக்கப்பட்டது. ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலையில் (F.N.S. Hospital) கடமையாற்றிய வைத்தியர்கள் Dr.J.Evarts (இவாட்ஸ்) : சத்திர சிகிச்சை நிபுணராக (Residential Surgeon)அரசாங்க அதிபர் டைக்கினால் நியமனம் செய்யப்பட்டார். இவரது கடைசி மகன் அல்பிரட் இவாட்சும் பின்னாளில் மருத்துவராக கடைமையாற்றினார். Dr.S.Green (சாமுவேல் கிறீன்) ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலையின் முதலாவது வருகை சத்திர சிகிச்சை நிபுணராகவும் கடமையாற்றினார். Dr. William Paul (வில்லியம் போல்): மானிப்பாய் கிறீன் மெமோறியல் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்த Dr.வில்லியம் போல் 1874 ஆம் ஆண்டு சத்திர சிகிச்சை நிபுணராக (Residential Surgeon) நியமனம் செய்யப்பட்டார். Dr.C.T. Mills (மில்ஸ்) : முதலாவது மருந்தாளராகக் கடமையாற்றிய அதேவேளை சத்திரசிகிச்சை நிபுணராகவும் கடமையாற்றினார். (First Dispenser and Residential Surgeon) Dr.Danforth இடன்போர்த் : மானிப்பாய் கிறீன் மெமோறியல் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின் அமெரிக்காவில் MD பட்டம் பெற்ற Dr.இடன்போர்த் சத்திர சிகிச்சை நிபுணராக நியமனம் செய்யப்பட்டார். Dr.Dutton (இடற்றன்😞 பொதுவைத்திய நிபுணராகவும், சத்திரசிகிச்சை நிபுணராகவும் கடமையாற்றினார். யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் (Jaffna Civil Hospital) ஆரம்பத்தில் கடமையாற்றிய மருத்துவர்கள். Dr. F.G.Spital , Dr. C.Kandaiah, Dr. Gnanam Cooke (House Surgeon) References: Hindu Organ History of Jaffna by John Ceylon Observer Morning Star Catholic Guardian Biographical Sketches of Puvirajasinga Mudaliyar யாழ் மாவட்டச் செயலக பொன்விழா மலர் 2015 http://globaltamilnews.net/2018/82065/

யாழ் போதனா வைத்தியசாலையின் ஆரம்பமும் வரலாறும்…

3 months 2 weeks ago
யாழ் போதனா வைத்தியசாலையின் ஆரம்பமும் வரலாறும்…

 

 

ந.பரமேசுவரன் – சிரேட்ட ஊடகவியலாளர், நூலகர். 

பா.துவாரகன் அபிவிருத்தி உத்தியோகத்தர்.

 

Jaffna-Hospital.jpg?resize=800%2C600

தற்போது யாழ் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) என்ற பெயருடன் யாழ் நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையானது யாழ்ப்பாணம் வைத்தியசாலை (Jaffna Hospital), யாழ் வைத்தியசாலை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. Yarl Hospital – யாழ். வைத்தியசாலை என்பது யாழ்ப்பாணம் வைத்தியசாலை என்பதன் சுருக்கிய வடிவமே. இப்பெயரில் தனியார் வைத்தியசாலை ஒன்றும் திருநெல்வேலியில் இயங்கி வருகின்றது! யாழ்ப்பாணம் வைத்தியசாலையானது பெரிய ஆசுப்பத்திரி என்றும் யாழ்ப்பாண மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. முன்பு இதனை தரும ஆசுப்பத்திரி என்றும் அழைத்தனர்.

யாழ் போதனா வைத்தியசாலை ஆரம்பத்தில் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital- F.N.S. Hospital) என்றே அழைக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த ஐரோப்பியர்கள் சிலர் ஒன்றிணைந்து யாழ்ப்பாண மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள்  கழகம் (Friend-in-Need Society) என்ற பெயரில் ஒரு கழகத்தை உருவாக்கினர்.

இந்த ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக அங்குரார்ப்பணக் கூட்டம் 09/03/1841 செவ்வாய்கிழமை மாலை நீதிமன்ற வளாகத்தில் கப்டன் கோச்ரேன் (Captain Coachrane) தலைமையில் இடம் பெற்றது. இக் கூட்டத்தில் யாழ் மத்திய கல்லூரி தாபகர் பீற்றர் பேர்சிவல் (Peter Percival) நீதிமன்ற காரியதரிசி எப்.சி.கிறீனியர் (F.C.Greenier)ஆகியோர் கலந்து கொண்டனர். மாதாந்த சந்தா பணமாக 8 பவுண்ஸ் அறவிடுவதென தீர்மானிக்கப்பட்டது.

Sir-Akland-Dyke.jpg?resize=481%2C800

யாழ் போதனா வைத்தியசாலையின் தாபகர் : பேர்சிவல் அக்லண்ட் டைக் (Percival Akland Dyke)

பேர்சிவல் அக்லண்ட் டைக்இவரே யாழ் மாவட்டத்தின் முதலாவது அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர் (01.10.1829 – 09.10.1867). அக்காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு அளப்பரிய சேவை செய்துள்ள அதிகாரிகளில் அக்லண்ட் டைக் முதன்மையானவர். தற்போது பழைய பூங்கா என அழைக்கப்படும் அரச அதிபர், ஆளுநர் இல்லம் மற்றும் அயலில் உள்ள அலுவலகங்களில் உள்ள மரங்கள் யாவும் இவரால் நாட்டப்பட்டவையே. டைக் இங்குள்ள மரங்களில் உள்ள பூக்களின் நறுமணத்தை சுவாசித்தும் பழமரங்களின் கனிகளை சுவைத்தும் வந்தார். பொதுக்களும் அனுமதி பெற்று இப் பூங்காவைப் பார்வையிட்டும் பூங்காவிலுள்ள கனிகளைப் புசித்தும் வந்தனர்.

தற்போது போதனா வைத்தியசாலையாக உருவாகியுள்ள யாழ்ப்பாணம் வைத்தியசாலையை தாபித்தவர் இவரே. 1850 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital) என்ற பெயரில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த பேர்சிவல் அக்லண்ட் டைக் (Percival Akland Dyke)  உதவி அரசாங்க அதிபராக இருந்த வில்லியம் துவைனம் (William Tywnam) ஆகியோரிடம் வைத்தியசாலை கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அரசாங்க அதிபர் டைக் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் மூலமும் தனது நண்பர்களிடமும் நிதி சேகரித்து ரூபா பத்தாயிரம் வழங்கினார். அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக் தனது வருமானத்தின் பெரும் பகுதியை யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் (F.N.S. Hospital) கட்டடிப் பணிகளுக்காகச் செலவிட்டார்.

கோப்பாயில் வசித்து வந்த அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக்கின் பூதவுடல் அவர் காலமான 1867 ஒக்டோபர் 9 ஆம் திகதியன்றே யாழ் பரியோவான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. டைக்கிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்த அரச அலுவலகங்கள் 4 –  5 தினங்கள் மூடப்பட்டன.

ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital- F.N.S. Hospital)

1850 ஆம் ஆண்டு  நவெம்பர் மாதம் 27 ஆம் திகதி வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. வயல்வெளிகள் தோட்டங்கள் என்பனவற்றின் நடுவிலேயே ஆரம்பத்தில் வைத்தியசாலை அமைந்திருந்தது. இரண்டு விடுதிகளுடன் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது. விடுதிகளுக்கு விக்ரோரியா மகாராணியின் பெயர் சூட்டப்பட்டது. (Victoria Jubilee Ward, Victoria Lying In Ward) பொது சிகிச்சை விடுதி, தோல் சிகிச்சை விடுதி என்பவற்றில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விடுதியில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு உணவு வழங்குவதற்காக சமையற்காரர்களும் நியமிக்கப்பட்டனர். இங்கு இருபத்திநான்கு மணிநேரமும் சேவை வழங்கப்பட்டது. விடுதியில் தங்கிநின்று சிகிச்சை பெற்றவர்களுக்கு உடைகளும் வழங்கப்பட்டன.

வைத்தியசாலையை நிருவகிக்கும் பொறுப்பு  அரசாங்க அதிபர் டைக்கிடமும் உதவி அரசாங்க அதிபர் துவைனத்திடமும் ஒப்படைக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை ஆபத்துக்கு உதவும்; வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital) என அழைக்கப்பட்டது. 1890 ஆம் ஆண்டு மே மாதம் வைத்தியசாலைக்கு ஆறாயிரம் ரூபாநிதி உதவி வழங்கப்பட்டது.

14.12.1899 அன்று யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்தியசாலையை அரசாங்கத்திடம் கையளிப்பதென தீர்மானிக்கப்பட்டது. 12.10.1905 வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்தியசாலையை அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திடம் கையளிப்பதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

1907 இல் வைத்தியசாலை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. அன்று முதல் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை என அழைக்கப்பட்டு வந்த வைத்தியசாலை யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை (Jaffna Civil Hospital) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டபோது வைத்தியசாலை கட்டடத்தின் பெறுமதி ரூபா 20,000.00 என மதிப்பீடு செய்யப்பட்டது.

1907 இல் சபாபதியும் சட்டத்தரணி சங்கரப்பிள்ளையும் visitors ஆக (வைத்தியசாலை மேற்பார்வை-நிருவாகம்) நியமிக்கப்பட்டனர் (வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது). 12.04.1909 இல் சட்டத்தரணி திருநாவுக்கரசு ஞாபகார்த்தமாக வெளிநோயாளர் மருந்தகம் நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சேர் அலன்பெரி (Sir. Alen Pery) அடிக்கல்லை நாட்டினார். 01.03.1919 இல் பணம் கொடுத்து பராமரிக்கும் விடுதி (paying ward) திறந்து வைக்கப்பட்டது.

ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலையில் (F.N.S. Hospital) கடமையாற்றிய வைத்தியர்கள்

Dr.J.Evarts (இவாட்ஸ்) : சத்திர சிகிச்சை நிபுணராக (Residential Surgeon)அரசாங்க அதிபர் டைக்கினால் நியமனம் செய்யப்பட்டார். இவரது கடைசி மகன் அல்பிரட் இவாட்சும் பின்னாளில் மருத்துவராக கடைமையாற்றினார்.

Dr.Green-First-Medical-Class.jpg?resize=

Dr.S.Green (சாமுவேல் கிறீன்) ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலையின் முதலாவது வருகை சத்திர சிகிச்சை நிபுணராகவும் கடமையாற்றினார்.

Sri-William-Twynam.jpg?resize=498%2C800

Dr. William Paul (வில்லியம் போல்): மானிப்பாய் கிறீன் மெமோறியல் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்த Dr.வில்லியம் போல் 1874 ஆம் ஆண்டு  சத்திர சிகிச்சை நிபுணராக (Residential Surgeon) நியமனம் செய்யப்பட்டார்.

Dr.C.T. Mills (மில்ஸ்) : முதலாவது மருந்தாளராகக் கடமையாற்றிய அதேவேளை சத்திரசிகிச்சை நிபுணராகவும் கடமையாற்றினார். (First Dispenser and Residential Surgeon)

Dr.Danforth இடன்போர்த் : மானிப்பாய் கிறீன் மெமோறியல் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின் அமெரிக்காவில் MD பட்டம் பெற்ற Dr.இடன்போர்த் சத்திர சிகிச்சை நிபுணராக நியமனம் செய்யப்பட்டார்.

Dr.Dutton (இடற்றன்😞 பொதுவைத்திய நிபுணராகவும், சத்திரசிகிச்சை நிபுணராகவும்  கடமையாற்றினார்.

யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் (Jaffna Civil Hospital)  

ஆரம்பத்தில் கடமையாற்றிய மருத்துவர்கள்.

Dr. F.G.Spital ,

Dr. C.Kandaiah,

Dr. Gnanam Cooke (House Surgeon)

References:

 1. Hindu Organ
 2. History of Jaffna by John
 3. Ceylon Observer
 4. Morning Star
 5. Catholic Guardian
 6. Biographical Sketches of Puvirajasinga Mudaliyar
 7. யாழ் மாவட்டச் செயலக பொன்விழா மலர் 2015

1.jpg?resize=800%2C4222.jpg?resize=800%2C5133.jpg?resize=800%2C2914.jpg?resize=800%2C4345.jpg?resize=800%2C619

6.jpg?resize=800%2C434

http://globaltamilnews.net/2018/82065/

சூபி

3 months 2 weeks ago
சூபி காலைப் பொழுதின் வருகையை அந்த சங்கின் ஊதல் அறிவித்தது. வழக்கத்துக்கு மாறாக ஒரு மணிநேரம் முன்பாகவே சங்கு ஊதியது. இங்கே இப்படித்தான். ஒருநாள் சீக்கிரம் ஊதும். சில நாட்கள் தாமதமாக ஊதும். ஊதியதும் புறப்பட வேண்டும். சூபி (SOOBI) வேண்டா வெறுப்பாக எழுந்தான். தூங்க முடியாது. தூங்கக் கூடாது. களத்திற்குச் செல்ல வேண்டும். இரவு 11 வரை உழைக்க வேண்டும். வெளியே எட்டிப் பார்த்தான். DARK CITY மெல்ல மெல்ல விழித்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே பல்புகள் எரிந்தும் அணைந்தவாறும் இருந்தன. ஊழியர்கள் களத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். எதற்கு இந்த அர்த்தமற்ற ஓட்டம்? யாருக்காக? எதற்காக? சில காலமாக இந்தக் கேள்வி களை சூபி கேட்கத் தொடங்கியிருந்தான். பொதுவாக இப்படிப்பட்ட கேள்விகளை யாரும் இங்கே கேட்கக் கூடாது. தடை செய்யப்பட்ட கேள்விகள் இவை. கர்ம யோகம்தான் இங்கே வாழும் நெறி. சாகும்வரை மாங்கு மாங்கென்று வேலை செய், அடிமையாக இரு, மேலிடத்தைக் கேள்வி கேட்காதே, கிளர்ச்சி செய்யாதே, தனித்து இயங்காதே, தேடல் கொள்ளாதே! ‘நான் யார்? ஓர் அடிமை. இந்தப் புதிரான அமைப்பில் லட்சக்கணக்கான அடிமைகளில் ஒருவன். பெயர் இல்லை. எண்தான். என் எண் 50081’. இதை எழுத்தில் எழுதிப் பார்த்தால் SOOBI போல வந்தது. எனவே தன்னைத் தானே சூபி என்று அழைத்துக் கொள்கிறான். பக்கத்து வீட்டில் வலது பக்கம் 50082. இடது பக்கம் 50080. சூபி களத்தை நோக்கி நடந்தான். விடுப்பு எடுக்க முடியாது. வேலை செய்யாதவர்கள் அழிந்து போவார்கள். Perform or perish என்பது இந்த டார்க் சிட்டியின் விதி. வழிநெடுகிலும் மற்ற ஆட்கள் சாரை சாரையாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் உணர்ச்சிகள் இல்லை. தனக்கு உணர்வு வந்ததாக சூபி காட்டிக் கொள்ளாமல் காலை உணவுக்கான சங்கிலியில் தன்னை இணைத்துக் கொண்டான். உணவு தாமதமாவது போல இருந்தது. ஓர் அடிமை இவனைப் பார்த்துக் கையசைத்தான். இவனும் பதிலுக்கு புன்னகைத்தான். இதெல்லாம் சகஜம்தான். எல்லாரும் 100% ஜோம்பிகள் கிடையாது. பேசுவார்கள், பகிர்வார்கள், கூடுவார்கள். ஆனாலும் கேள்வி கேட்கத் தெரியாத சுயசிந்தனை அற்ற முட்டாள்கள். விழித்துக் கொள்ளுதல் ஒரு சாபக்கேடு. நான் எதற்கு விழித்துக் கொண்டேன்? காலை உணவு எல்லாருக்கும் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கில் பிரிந்து சென்ற ராட்சதக் குழாய்களில் எல்லாரும் சென்று வாய் வைத்துக் கொண்டார்கள். அவர்களுக்குரிய உணவு உள்ளே சென்றது. சூபியும் சென்று வாய் வைத்தான். இவனுக்குத் தெரிந்து இதுவரை யாரும் குழாயை சுத்தம் செய்ததில்லை. இதைப்பற்றி எல்லாம் யோசிக்காத முட்டாள் குடிகள் ரசித்து ருசித்து காலை உணவை உள்ளே செலுத்திக் கொண்டிருந்தனர். சற்று நேரம் கழித்து அன்றைக்கான ஆரோக்கிய மருந்து வழங்கப்பட்டது. கொஞ்சம் கசப்பு. தொழிற்சாலையில் நுழைய வேண்டும். குறைந்தது 12 மணிநேர வேலை. பல சமயம் ஓ.டி. பார்க்க வேண்டும். அபூர்வமாக சில நாட்களில் 9 மணிக்கே போகச்சொல்லி விடுவார்கள். மதிய சாப்பாடு ஒரு மணி வாக்கில் கிடைக்கும். பிரம்மாண்டமான தொழிற்சாலை. அடிமை மனிதர்கள் வேலையை ஆரம்பித்து விட்டிருந்தார்கள். இவனும் வேலையை ஆரம்பிக்க வேண்டும். சூபிக்கு ஓய்வெடுக்க வேண்டும் போல் இருந்தது. நேற்று ஓ.டி. சரியான சாப்பாடில்லை. காலையில் சீக்கிரச் சங்கு. உடம்பு வலித்தது. இன்று என்ன வேலை? தெரியாது! ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வேலை. சிலருக்கு தினமும் ஒரே வேலை. வேறு சிலருக்கு ஓடிக்கொண்டே இருப்பதுதான் வேலை. இன்னும் சிலர் 24 மணிநேரமும் வேலை செய்கிறார்களாம். கண்டிப்பாக அவர்கள் மனிதர்களாக இருக்க இயலாது. ஆட்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய பெரிய லோடுகளைக் கைமாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். லோடுகள் எங்கே போகின்றன? உள்ளே என்ன இருக்கிறது? சிலர் எதையோ போட்டு அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று freeze என்று மேலிடத்து உத்தரவு வரும். செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே நிறுத்த வேண்டியதுதான். சிலர் குழுக்களாக உட்கார்ந்து எதையோ கட்டிக் கொண்டிருந்தார்கள். சிலர் கட்டியதை உடைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் எதையோ கலக்கிக் கொண்டிருந்தார்கள். இந்தக் குழுக்கள் அடிக்கடி கலைக்கப்படும். ஒரு குழுவில் இருந்து ஒருவனை திடீரென இன்னொரு அன்னியக் குழுவுக்கு மாற்றுவார்கள். சில சமயம் அன்னியக் குழுவில் நம்மைத் தாழ்வாக நடத்துவார்கள். கேள்வி கேட்கக் கூடாது. மேனேஜர் வந்தான். கொஞ்சம் மேம்பட்ட ஜோம்பி. ‘‘50081, என்ன மசமசவென்று நின்று கொண்டிருக்கிறாய்? இங்கே வா! செய்தித் தொடர்புப் பிரிவில் நீ இன்றிலிருந்து சில மாதங்கள் வேலை செய்யவேண்டும். இதற்குமுன் எந்த டிபார்ட் மென்டில் இருந்தாய்?’’ ‘‘ஆப்டிகல் சார்...’’ ‘‘ஓகே. நேராகப் போய் இடது புறம் திரும்பு. உன் டிபார்ட்மென்ட் வரும். அந்த சூப்பர்வைசர் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்வார்...’’ பிரம்மாண்டமான இந்தத் தொழிற்சாலையின் இதயம் அதாவது கட்டுப்பாட்டுக் கேந்திரம் எங்கே இருக்கிறது என்று கண்டறிந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் சூபி. ஆனால், அது சிதம்பர ரகசியம். இதுவரை யாருக்கும் தெரியாத மறைவிடம் அது. இத்தனை பெரிய தொழிற்சாலையில் எங்கிருக்கிறது அது? தொழிற்சாலையை யாரும் தேவையில்லாமல் சுற்றிப் பார்க்கக் கூடாது. தனியாக நிற்கக் கூடாது. இழுத்து ஒரு அறை விடுவார்கள். தொழிற்சாலையின் வரைபடம் எங்கும் மாட்டி யிருக்கவில்லை. எப்படியாவது கண்டறிந்து விடவேண்டும். வலது கோடியில் உள்ள ஓர் அறையில் இருந்து சுரங்கப் பாதை ஒன்று செல்வதாக ஒருநாள் 40010 சொன்னான். சுரங்கத்துக்கு அப்பால் இதே போன்ற இன்னொரு தொழிற்சாலை இருக்கிறதாம்! செய்தித் தொடர்பு டிபார்ட்மென்ட் போய்ச் சேர்ந்தான் சூபி. அங்கே இரண்டு குழுககளுக்கு இடையே பெரும் சண்டை நடந்துகொண்டிருந்தது. சூபி ஆர்வம் காட்டவில்லை. இது மேலதிகாரிகளே தூண்டி விடும் சண்டை. ‘இரண்டு பிரிவும் சண்டை போடுங்கள், யார் ஜெயிக்கிறீர்களோ அவர்களுக்கு இந்த வேலை கொடுக்கப்படும், எக்ஸ்ட்ரா மதிய உணவு கிடைக்கும்!’ ஒருநாள் இவனும் இப்படி சண்டை போட்டாக வேண்டும்! இங்கே நமது கோபம் கூட இன்னொருவரால் தீர்மானிக்கப்படுகிறது. செய்தித் தொடர்பு மானேஜர் அழைத்தார். ‘‘உன் நம்பர் என்ன 50081ஆ? இப்படி வந்து நில்...’’ நூற்றுக்கணக்கான ஜோம்பிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். ஆர்வமோ, வெறுப்போ காட்டாத முகங்கள். ‘‘சவுண்டு இன்ஜினியர்கள் உங்களிடம் சில பெட்டிகளைக் கொண்டு வந்து தருவார்கள். ஸ்டோரேஜ் டிபார்ட்மென்ட் ஆட்கள் சில பெட்டிகளைத் தருவார்கள். இரண்டையும் ஒப்பிடுவதுதான் உங்கள் வேலை. பொருந்தினால் அதைக் கொண்டு போய் இன்னொரு செட் ஆட்களிடம் கொடுக்கவேண்டும். கவனம். இந்த டிபார்ட்மென்ட் நமக்கு மிகவும் ரெவின்யூ தரும் ஒன்று. சொதப்பினால் மரண தண்டனை! போய் வேலையை ஆரம்பியுங்கள். ட்ரெய்னிங்குக்கு ஒரு மணி நேரம் டைம். பழைய ஊழியர்கள் இதை எப்படி செய்கிறார்கள் என்று கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். தவறுகளை இங்கே அனுமதிக்க முடியாது...’’ என்றான் மேலதிகாரி. அடிமைகள் உடனே கற்றுக்கொள்ள ஓடின. சூபி சலித்துக் கொண்டான். என்ன மாதிரியான வேலை இது? இதற்கு செத்துப் போவதே மேல். ஒருமணிநேர ட்ரெய்னிங் முடிந்து வேலை ஆரம்பித்தது. பெரிய பிரம்ம சூத்திரம் ஒன்றும் இல்லை. இரண்டு பெட்டிகளைத் திறந்து பார்த்து ஒப்பிடும் சார்ட்டர் வேலைதான். சீக்கிரமே கற்றுக் கொண்டான் சூபி. இங்கே கற்றுக்கொள்ள வாரக் கணக்கில் பயிற்சி கொடுக்கமாட்டார்கள். ஆன் தி ஜாப் ட்ரெய்னிங். கற்றுக் கொண்டிருக்கிறேன் என்ற சாக்கில் நேரத்தை வீணடிக்க முடியாது. சூபிக்கு அழுகை வந்தது. அடக்கிக் கொண்டான். பெட்டி ஒன்றைக் கை மாற்றும்போது 80051 அதைத் தவற விட்டான். ‘‘லூசுக் கிரகமே 80051... இதைக் கூட சரியாகப் பிடிக்க மாட்டாயா?’’ என்றான் சூபி. ‘‘என்னை பூஸி என்று அழையுங்கள். 80051 அல்ல! வெல்கம் டு தி ரிபல் கிளப்!’’ அவன் கண்ணடித்தான். ‘‘மெய்யாலுமா?’’ ‘‘ம்...’’ ‘‘இன்னும் எத்தனை பேர்?’’ ‘‘ஆயிரக் கணக்கானோர். எல்லாமே இந்த டிபார்ட்மென்ட்! புரட்சி வெடிக்கப் போகிறது. நம் அடிமை வாழ்க்கை முடிவுக்கு வரப் போகிறது. இன்னும் சில மணித் துளிகளில் தொலைத்தொடர்பு கேந்திரத்தைத் தகர்த்தெறியப் போகிறோம்!’’ ‘‘எப்படி இது சாத்தியமானது பூஸி?’’ ‘‘சமீபகாலமாக உங்களைப் போலவே பலருக்கு விழிப்பு வந்துள்ளது. அவர்களையெல்லாம் மெல்ல மெல்ல ஒன்று திரட்டி நாங்கள் தீட்டிய ரகசியத் திட்டம் இது...’’ ‘‘அருமை!’’ ‘‘மைய கேந்திரத்தையும் இன்னும் சில நாட்களில் கண்டுபிடித்து விடுவோம். உளவாளிகள் தேடிப் போயிருக்கிறார்கள்...’’ ‘‘நான் காண்பது கனவா?’’ ‘‘உஷ், மேலதிகாரி வருகிறான். உழைப்பது போல் நடியுங்கள்!’’ சில மணிநேரத்தில் அங்கே சிறு கிளர்ச்சி வேர் விட்டு கலவரமாக மாறியது. எங்கிருந்தோ ஒரு பெரிய கதவு திறந்து கொண்டது. ஊழியர்கள் பெருங்கோஷமிட்டபடி ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு கதவு வழியாக ஓட ஆரம்பித்தார்கள். பிரபல நியூராலஜிஸ்ட் ரவிச்சந்திரன் முன் அமர்ந்திருந்தான் தினேஷ். அவன் இரு பக்கமும் அவன் அப்பா, அம்மா. முகங்களில் கவலை. ‘‘எத்தனை நாளா பேச முடியலை?’’ ‘‘காலைல இருந்து டாக்டர்...’’ ‘‘எப்படி நடந்தது?’’ ‘‘முந்தாநேத்து ராத்திரி லேட்டா படுத்தான் டாக்டர். சாப்பிடலை. நேத்து காலைல அஞ்சு மணிக்கே எழுந்துட்டான். ஆறு மணிக்கு காபி தந்தேன். சர்க்கரை தூக்கலா இருக்குன்னான். காலைலயே தலைவலி மாத்திரை கேட்டான். கொடுத்தேன். டிஸ்டர்ப்டா இருந்தான். வேலைக்குப் போறேன்னான்... போகலைன்னான்... நாக்கு குளறுச்சு. சம்பந்தம் இல்லாம உளறினான். ஏழு மணி வாக்குல பேச்சு வரலை. லீவ் போட்டு, சரியா தூங்கி எழுந்தா சரியாயிடும்னு நினைச்சோம்...’’ ‘‘இவரைக் கொஞ்சம் வெளில கூட்டிப் போக முடியுமா?’’ தினேஷ் வெளியே வந்தான் அம்மாவுடன். ‘‘பாருங்க சார்... உங்க பையன் நிலைமை சீரியஸா இருக்கு...’’ ‘‘என்ன சொல்றீங்க டாக்டர்?’’ ‘‘நம்ம மூளை emergence தத்துவத்துல வேலை செய்யுது. அதாவது இடது மூளையோ, வலது மூளையோ, உள்ள இருக்கிற கோடிக்கணக்கான நியூரான்களுக்கு தாங்க என்ன வேலை செய்யறோம்னு தெரியாது! கொடுக்கிற வேலையை செய்யும். சிலசமயம் நியூரான் ஒண்ணு சிக்னலைக் கடத்தும். தகவல் பொட்டலங்களை ஆய்வு செய்யும். ஆனா, ஏன் செய்யறோம்னு நியூரான்ஸுக்கு தெரியாது. ஒரு குழுவுல இருக்கிற நியூரான் இன்னொரு குழுவுக்கு மாறும். அதாவது பார்வை கேந்திரத்துல இருக்கிற நியூரான் பேச்சு கேந்திரத்துக்கு மாறும். சில சமயம் ஒரே முடிவை எட்ட நியூரான் குழுக்களுக்கு இடைல போட்டி கூட நடக்கும். உதாரணமா, நீங்க இன்னைக்கு கார்ல போறதா பைக்ல போறதானு யோசிச்சு முடிவெடுக்கிறப்ப இது நிகழும். கோடில ஒருத்தருக்கு சில புதிரான காரணங்களால திடீர்னு இந்த நியூரான்ஸ் இஷ்டத்துக்கு செயல்பட ஆரம்பிக்கும். தங்களுக்குள்ளயே பர்சனாலிட்டியை வளர்த்துக்கும். உங்க பையன் தினேஷ் மூளைல இப்படி நியூரான்ஸ் கிளர்ச்சி செய்ய ஆரம்பிச்சிருக்கு! இந்த நியூரான் அஜிடேஷன் மத்த பகுதிகளுக்கும் இப்ப பரவுது. சீக்கிரத்துல உங்க சன் கோமா ஸ்டேஜுக்கு போகக் கூடும்...’’ டாக்டர் சொல்லி முடித்ததும் தினேஷின் அப்பா அழ ஆரம்பித்தார். ‘‘வெற்றி, வெற்றி! அடிமைத்தனம் முடிவுக்கு வந்தது. இப்போதுதான் தகவல் கிடைத்தது, அதிகார மையத்துக்கான வழி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. நம் வீரர்கள் அங்கே படைகளுடன் விரைகிறார்கள்!’’ http://www.kungumam.co.in

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்

3 months 2 weeks ago
52 வருடங்களாக போராடும் இங்கிலாந்து ஹாரி கேன். - REUTERS கிரிக்கெட்டைப் போன்று கால்பந்தும் இங்கிலாந்தில் பிரபலம். இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மீது எல்லை கடந்த அன்பைப் பொழிபவர்கள் அந்த நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள். இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இங்கிலாந்து சில நாட்களுக்கு முன்பு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடவுள்ள அணியை அறிவித்தது. எதிர்பார்த்ததைப் போலவே இந்த முறை அணியை வழிநடத்திச் செல்லும் கேப்டனாக ஹாரி கேன் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை தனது தோளி (காலி)ல் சுமக்கவுள்ளார் கேன். மின்னல் வேக கிக், புயல் வேகத்தில் பந்தைக் கடத்தும் திறன் ஆகியவற்றால் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் ஹாரி கேன். இந்த முறை உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 2 டிராக்களுடன் மொத்தம் 26 புள்ளிகளை குவித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தியது. தகுதிச் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணி 18 கோல்களை அடித்த நிலையில் 3 கோல்கள் மட்டுமே வாங்கியது. தகுதிச் சுற்று ஆட்டங்களில் 5 கோல்களை அடித்து அசத்தினார் ஹாரி கேன். அணியின் தூணாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் கலக்கி வருகிறார் ஹாரி கேன். இளம் வீரர்களுடன் இங்கிலாந்து அணி களமிறங்குவதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஹாரி கேனிடமிருந்து அதிக மாக ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர். அணிக்கு பக்கபலமாக ரஹீம் ஸ்டெர்லிங், ஜேமி வார்டி, மார்க்கஸ் ராஷ்போர்ட், டேனி ரோஸ், ரயான் பெர்டிரான்ட், கைல் வாஸ்கர், கைரன் டிரிப்பியர் போன் றோர் உள்ளனர். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் தனது திறமையை நிரூபிக்காமல் இருப்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. பலமுறை பெனால்டி ஷூட்-அவுட் சமயங்களில் இங்கிலாந்து சொதப்பி இருப்பது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. அணியினரை ஒருங்கிணைத்தும், எதிரணியைச் சமாளித்தும் இங்கிலாந்தை வெற்றி அடையச் செய்யவேண்டிய நெருக்கடியில் ஹாரி கேன் இருக்கிறார். உலகின் மிகச் சிறந்த ஸ்டிரைக்கர், அருமையான பினிஷர் என்று சொல்லப்படும் ஹாரி கேன் இந்த முறை உலகக் கோப்பை போட்டியில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மட்டுமே ஜொலிக்காமல் மற்ற வீரர்களையும் பிரகாசிக்க வைப்பது ஹாரி கேனுக்கு கைவந்த கலையாகும். மற்ற வீரர்களுக்கு கோலடிக்க அழகான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் ஹாரி கேன் மிளிர்கிறார். அனைத்து வீரர்களையும் பயிற்சியாளர் சவுத்கேட் ஒருங்கிணைத்து அருமையான பயிற்சியாளராக உலக அரங்கில் வலம் வருகிறார். வீரர்களை ஒருங்கிணைத்தல், அவர்களுக்கு போதுமான ஆலோசனைகள் வழங்குதல் போன்றவற்றில் நேர்த்தியாக செயல்படுகிறார். இந்த முறை இங்கிலாந்து அணி ஜி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் பனாமா, பெல்ஜியம், துனீசியா அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் பெல்ஜியம் அணி இங்கிலாந்துக்கு கடும் சவால் அளிக்கக்கூடும். இங்கிலாந்து அணி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவது இது 14-வது முறையாகும். 1950-ம் ஆண்டு முதன்முறையாக அறிமுகமான அந்த அணி 1966-ல் சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் 52 வருடங்களாக கோப்பையை வெல்ல போராடி வருகிறது. இம்முறை அந்த தேசத்தின் கனவை நினைவாக்கும் கூடுதல் சுமையுடன் ஹாரி கேன் இந்தத் தொடரை சந்திக்கிறார். http://tamil.thehindu.com/sports/article24071224.ece