தியாக தீபம் திலீபன்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் 15-09-1987

Aggregator

சி(ரி)த்ராலயா

3 months 2 weeks ago
ஸ்ரீதர் கோபுவுடன் அவர்களோடு இணைந்திருந்த பலரையும் பல சம்பவங்களையும் சேர்த்து நகர்த்திக் கொண்டு போகிறது தொடர். தொடருங்கள் ஜி ....!

இது சிக்ஸர்களின் காலம்

3 months 2 weeks ago
3. ஊடகங்கள் சிலவற்றை மிகைப்படுத்தின என்றாலும், என் தவறுகளை ஒப்புகொள்கிறேன்! விராட் கோலி முதல் நாயகன் – விராட் கோலி - 3 ‘நான் விராட் கோலியின் ஆட்டத்தை மிகவும் ரசித்துப் பார்க்கிறேன். எனது அந்தரங்க பிரதிப்போல அவர் எனககு காட்சி அளிக்கிறார். சீறும் குணம், அணியை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்லும் விடாப்பிடியான ஆற்றல் என நான் கொண்டிருந்த இயல்புகளையே அவரும் பெற்றிருக்கிறார். கோலியை பார்க்கும்போது, நானே மீண்டும் விளையாடிக் கொண்டிருப்பதாக எனக்குள் எண்ணம் எழுகிறது’ - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் (முன்னாள் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்) 2008-ம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டிதான், இந்திய அணிக்காக கோலி விளையாடிய முதல் போட்டி. அப்போது கோலிக்கு வயது 19. துவக்க ஆட்டக்காரர்களான சச்சினும், சேவாக்கும் காயங்களின் காரணமாக அந்த தொடரில் பங்கேற்காததால், கோலிக்கு அந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. 12 ரன்களை தனது பங்களிப்பாக முதல் போட்டியில் கோலி சேர்ப்பித்தார். இந்த தொடரின் நான்காவது போட்டியில் தனது முதல் அரை சதத்தை அடித்து, இந்தியாவை வெற்றிப் பெற செய்த கோலி மற்ற போட்டிகளில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதன் பிறகு, மீண்டும் தனது வாய்ப்புக்காக கோலி சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. அவ்வப்போது ஷீகர் தவான், ரெய்னா போன்றவர்கள் விளையாட முடியாமல் போகும் தருணங்களில் மட்டுமே கோலிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் கோலி பங்கேற்றார். மிக அதிக பணமும், ஊடக கவர்ச்சியும் மிகுதியாக இருக்கும் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்றவுடன் கோலியின் ஆட்டத் திறன் புகழப்படுகிறது. புகழ் போதை கோலியை ஆட்டுவிக்கிறது. விளையாட்டுக்கு பின்பான இரவு பார்ட்டிகளில் அதிகளவில் பங்கெடுத்துக் கொள்கிறார். அணியினரிடத்தில் தனது அதிகாரத்தை செலுத்தியதால், கோலிக்கு எதிர்மறையான பிம்பம் உருவாகிறது. இதன் காரணமாகவே கிட்டதட்ட ஓராண்டு காலம் இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை புறக்கணித்திருந்தது. 'சிலவற்றை ஊடகங்கள் மிகைப் படுத்தி இருக்கின்றன என்றாலும், என் மீதுள்ள தவறுகளை நான் ஒப்புகொள்கிறேன்’ என கோலி தெரிவித்திருக்கிறார். 2009-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கான போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கோலிக்கு கிடைக்கிறது. தனது வாழ்க்கையின் திருப்புனை என இத்தொடரை வர்ணிக்கும் கோலி, இந்த தொடரில் மொத்தம் 398 ரன்களை எடுத்திருந்தார். அதில் ஒரு சதமும் அடக்கம். அவரது ஆட்டத்திறன் வெகுவாக கவனிக்கப்படுகிறது. கிரிக்கெட் வாரியத்திற்கு கோலியின் மீது நம்பிக்கை உண்டாகிறது. 2009 டிசம்பரில் இலங்கைக்கு எதிரான நான்காவது போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கபெற்றதும், அதனை கோலி மிக சரியாக பயன்படுத்திக்கொண்டார். இந்த போட்டியில் கம்பீருடன் இணைந்து 224 ரன்களை இருவருமாக இந்திய அணிக்கு சேர்த்தனர். இந்த போட்டியில்தான் கோலி தனது முதல் சதத்தை அடித்தார். காம்பீர் இந்த போட்டியில் 150 ரன்கள் குவித்ததால், அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படுகிறது. 'இந்த போட்டியில் கோலியின் பங்களிப்பு மகத்தானது, அதனால் ஆட்ட நாயகன் விருதினை கோலியுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்’ என கோலியை பாராட்டி தனது பரிசு தொகையினை கோலியுடன் பகிர்ந்துக் கொண்டார் கவுதம் காம்பீர். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லஷ்மண், விரேந்திர சேவாக் என பல முக்கிய இந்திய கிரிக்கெட் ஆளுமைகளுடன் இணைந்து விளையாடும் சந்தர்ப்பம் கோலிக்கு வாய்க்கிறது. தனது துவக்க காலத்தில் இத்தகைய அனுபவமிக்க ஆட்டக்காரர்களுடன் விளையாட நேர்ந்த அனுபவம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் என கோலி குறிப்பிடுகிறார். சச்சின் டெண்டுல்லர் கோலியிடம், 'எந்த வகையான பவுலிங்கையும் கண்டு பயம் கொள்ள வேண்டாம். ஸ்பின் பவுலிங்கையும், பாஸ்ட் பவுலிங்கையும் சரி நிகராக எடுத்துகொள்ள பழக வேண்டும். உன்னை நோக்கி எறியப்படுகின்ற பந்து மட்டுமே உன் கண்ணுக்கு தெரிய வேண்டும். அதனை நீ மிக துல்லியமாக நெருங்கிச் செல்ல வேண்டும். அப்போதுதான் பந்து உன்னை வெற்றிக் கொள்வதை உன்னால் தவிர்க்க முடியும்’ என சச்சின் தன்னிடம் கூறிய அறிவுரை தனக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாக கோலி தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு சீனியர் பிளேயர்களும் கோலிக்கு வழக்காட்டியாக இருந்திருக்கிறார்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையை எவ்விதம் எதிர்கொள்ள வேண்டுமென்று அவர்கள் தங்களது அனுபவத்தின் வாயிலாக கோலியிடம் விவரித்திருக்கிறார்கள். கோலி இந்த அனுபவங்களை தனக்குள் சேகரித்துக் கொண்டாலும், உண்மையில் நாம் களத்தில் அத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கையில் நாம் எவ்வாறு அதனை வெற்றிக் கொள்கிறோம் என்பதில்தான் நமக்கான சுய பாடம் இருக்கிறது என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். இந்திய அணியில் நெடுங்காலம் நிலைத்திருக்க போகிற அவரது ஆட்டத்திறனை இந்திய அணியின் மூத்த வீரர்கள் கணக்கிட்டிருந்தார்கள். 2010-ல் வங்க தேசத்துக்கு எதிராக தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்ததன் பின்பாக, 22 வயதுக்குள் இரண்டு சதங்களை அடித்திருக்கும் மூன்றாவது இந்திய வீரர் (முதல் இரண்டு வீரர்கள்: சச்சின் மற்றும் ரெய்னா) என்ற சாதனையை கோலி செய்கிறார். இதன் பிறகே, தோனியின் முழு ஆதரவு கோலிக்கு கிடைக்கிறது. தோனி தொடர்ந்து கோலியை முன்னிலைப்படுத்த துவங்குகிறார். தோனியின் ஆட்ட சாதுர்யம் பல மன கணக்குகளை கொண்டது. அதிரடியாக விளையாடி தனது இருப்பை இந்திய அணியில் தக்க வைத்துக்கொண்ட தோனி, தன்னை மிக மிகக் கீழ்நிலையில் ஆட்ட வரிசையில் இறக்கிக் கொண்டார். இதன்மூலம், அவருக்கிருக்கும் அழுத்தங்கள் முன்னால் இருக்கும் வீரர்களிடம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. தோனிக்கு பல போட்டிகளில் விளையாடும் வாய்ப்பே கிடைக்காமல் போகிறது. இதனால், மிக முக்கியமான பொறுப்புகள் அனைத்தையும் கோலி சுமக்க வேண்டியிருந்தது. தோனி அணியில் இடம்பெறாத சூழல்களில் ரெய்னாவும், கோலியும் இந்திய அணியின் தலைமை பொறுப்புகள் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் துணை கேப்டனாக விளையாடிய கோலி, அந்த தொடரில்தான், மிக குறைந்த போட்டிகளில் விரைவாக 1000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீரர் எனும் சாதனையை படைக்கிறார். கோலியின் மீது மெல்ல புகழ் வெளிச்சம் படருகிறது. இந்திய இளைஞர்கள் அவரை நம்பிக்கை நாயகனாக நம்ப தலைபடுகின்றனர். இந்திய அணியில் கோலியின் இடம் நிரந்தமாக உறுத்திப்படுத்தப்படுகிறது. தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்தி வந்ததால், மிக விரைவிலேயே தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் தனக்கான இடத்தை பிடிக்கிறார். சர்வதேச ஊடகங்களின் வெளிச்சமும் அவருக்கு கிடைக்கிறது. இந்திய ஊடகங்கள் அவரது நுணுக்கமான ஆட்டத்திறனை விவாதங்களில் முக்கியத்துவம் அளிக்கிறது. கோலி மிக விரைவாகவே, வளரும் தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுதாரணமாக நிறுத்தப்படுகிறார். அவரது பேட்டிங் சாதுர்யங்கள் விரிவாக அலசப்படுகின்றன. ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த கோலி, 2011-ம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்து டெஸ்ட் போட்டிகளிலும் அழுத்தமாக காலூன்ற துவங்குகிறார். 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியா கைகளில் கோப்பை ஏந்திய 2011 உலககோப்பை தொடரிலும் கணிசமான பங்களிப்பை வழங்கினார். இந்த போட்டித் தொடரோடு சச்சின் உட்பட பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணி இளைஞர்களால் கோர்க்கப்பட்டு புத்துயிர்ப்பு பெறுகிறது. கோலி அதன் மைய நாயனாக முன்னிற்கிறார். அயல் நாடுகளில் வெளிப்பட்டுள்ள கோலியின் ஆட்டத்திறனும் போற்றதக்கதே. இந்தியாவை போலல்லாமல் பிற நாடுகளின் பிட்ச் பவுலிங்கிற்கு உதவி புரியும்படியாக அமையப் பெற்றிருக்கும். அதனால், பொதுவாகவே இந்திய கிரிக்கெட் அணியினர் வேறு தேசங்களில் சிறப்பாக விளையாடுவதில்லை, சொந்த தேசத்தில் மட்டுமே அவர்களது திறன் பளிக்கிறது என விமரிசனங்கள் முன்வைக்கப்படுகிறது. கோலிக்கும் இத்தகைய அழுத்தங்கள் சவாலாக நிறுத்துப்பட்டது. 2014 இங்கிலாந்து தொடரை எதிர்ப்பார்த்திருந்த கோலி, ஏன் எப்போதும் வெளிநாடுகளில் விளையாடும்போது இது மாதிரியான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன என கடுமையாக விமரிசகர்களை சாடியிருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் நடைப்பெற்ற டெஸ்ட் தொடரில் சதம் அடித்ததன் மூலமாக, 1998-க்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனைக்கும் கோலி சொந்தக்காரர் ஆகிறார். தொடர்ந்து சீற்றத்துடன் தனது ஆட்டத்தை வடிவமைத்துக் கொண்டுள்ள கோலி முதல் முதலாக, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள அபாயத்தை உணர்ந்து கொண்டது, ஆஸ்திரேலேய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹுக்ஸ் ஆடுகளத்திலேயே உயிரிழந்த போதுதான். வேகப்பந்து வீச்சால் தாக்கப்பட்டு ஹுக்ஸ் உயிரிழந்த சம்பவம் கோலியை வெகுவாக பாதிக்கிறது. ஹுக்ஸ் உயிரிழந்த சில தினங்களிலேயே மிட்சில் ஜான்சன் பந்து வீச்சை எதிர்கொண்டபோது, பந்து அவரது ஹெல்மட்டை தாக்கி சிதைத்தது. கோலி இந்த சம்பவத்தினால் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அவரிடமிருந்த கொந்தளிப்பான மனநிலை ஒருகணம் உறைந்துப் போயிருந்தது. ஆனால், விரைவாகவே கோலி அதிலிருந்து மீண்டுவிட்டார். இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறிப்பிடுவதைப்போல, “கோலியை எதுவொன்றும் அசைத்துவிட முடியாது. கண்களில் தீக் கொண்டிருக்கும் கோலி என்றென்றும் அதே எதிர்புணர்வோடு தனது விளையாட்டை தொடர்கிறார்’. சர்வதேச அளவில் மிக முக்கியமான வீரரென கொண்டாடப்பட்ட சூழலில் அவருக்கு அளிக்கப்படும் மிக முக்கியமான சவாலாக இந்திய அணியின் கேப்டன் பதவியும் அவருக்கு அளிக்கப்படுகிறது. சிக்ஸர் ப ற க் கு ம்…... http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/jun/01/life-and-success-of-virat-kohli-2930541--3.html

ஆன்மா என்னும் புத்தகம்

3 months 2 weeks ago
ஆன்மா என்னும் புத்தகம் 03: யாரோ ஒருவராக மாற வேண்டியதில்லை வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்பதை ஒரு பெரிய போராட்டமாக நம்மில் பலரும் நினைக்கிறோம். சாமானியர்களாக இருப்பதற்குப் பயப்படுகிறோம். இந்தப் போராட்டத்தையும் பயத்தையும் எப்படிக் கையாள்வது என தத்துவ அறிஞர் ஜே. கிருஷ்ணமூர்த்தி ‘Think on These Things’ புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். பள்ளி மாணவர்களிடம் ஜே. கிருஷ்ணமூர்த்தி நடத்திய கேள்வி-பதில் உரையாடலாக இந்தப் புத்தகம் விரிகிறது. இந்தப் புத்தகத்தில் அவர் கல்வி என்பது ஒரு வேலையைப் பெறுவதற்குத் தயார்படுத்தும் கருவி மட்டும் அல்ல; “அது ஒட்டுமொத்த வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ள உதவும் அம்சம்” என்று சொல்கிறார். பிரபலம், அந்தஸ்து, பணம், வெற்றி போன்ற அம்சங்களின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை இந்தப் புத்தகம் உடைக்கிறது. அடைய விரும்புவதற்கான ஆசை எப்படித் துன்பத்துக்கு வழிவகுக்கிறது என்பதும் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. நாம் அனைவருமே ‘யாரோ ஒருவராக’ மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்வதாகக் கூறும் கிருஷ்ணமூர்த்தி, இந்த முயற்சியில் நாம் சராசரி மனிதர்களாக மாறிவிடும் முரணையும் சுட்டிக்காட்டுகிறார். வெற்றியும் லட்சியமும் ‘Think on These Things’ புத்தகம், லௌகீக வெற்றியைப் பற்றி விரிவாக அலசுகிறது. லட்சியங்களையும் சாதனைகளையும் நமது பண்பாடு தொடர்ந்து புனிதப்படுத்தியும் கொண்டாடியும் வருகிறது. அதனால், நாம் அனைவரும் ஏதோவொரு லட்சியத்தின் பின்னால் ஓட வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், ஏதோவொன்றை அடைய வேண்டுமென்ற ஆசை எப்போதும் ஏமாற்றத்திலும் வெறுமையிலும் முடிவதாக விளக்குகிறார் அவர். இப்படி ஓடிக்கொண்டேயிருப்பது வாழ்க்கையை வாழ்வதற்கான அறிவார்த்த வழி இல்லை. ஏனென்றால், அது தற்காலத்தில் முடிவற்ற, நிறைவேறாத ஆசைகளால் மகிழ்ச்சியற்றவர்களாக நீங்கள் இருப்பதாகக் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார் அவர். “நாம் அனைவரும் பிரபலங்களாக இருக்க விரும்புகிறோம். நாம் வேறு யாரோ ஒருவராக மாற நினைக்கும் அந்த நொடியிலேயே நம் சுதந்திரத்தை இழந்துவிடுகிறோம்” என்று சொல்கிறார் கிருஷ்ணமூர்த்தி. மாற்றுவழி குறைவானவற்றை விரும்புவதால் மன நிறைவைப் பெற முடியும். ஆனால், யாரும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தாமல் இருப்பதை விரும்ப மாட்டார்கள். இந்தப் புத்தகத்தில் மன அழுத்தத்துடன் வாழ்க்கையில் எதன் பின்னாலும் ஓடாமல் அதேவேளையில் படைப்பூக்கத்துடன் திகழ்வதற்கான மாற்றுவழியை விளக்குகிறார் இவர். மனிதர்கள் எதைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதை அடையாளம் கண்டுபிடிக்க உதவுவதுதான் கல்வியின் கடமை. மனம் விரும்பும் பணியைச் செய்வதால் அன்றாட வாழ்க்கையில் திருப்தியும் செய்யும் பணியின் மீதான உற்சாகமும் இயல்பாக வெற்றியை வசப்படவைக்கும் என்று விளக்குகிறார் அவர். படைப்பாற்றல் நிறைந்தவர்கள் பிரச்சினைகளால் மனம் சூழப்பட்டிருக்கும்போது, அதற்கான தீர்வையும் அதுவே வழங்காது. “ஆக்கிரமிக்கப்படாத மனதால் மட்டுமே ஒரு பிரச்சினையைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும்” என்கிறார் அவர். உங்கள் எண்ணங்களுக்கிடையில் போதுமான இடைவெளியை உருவாக்கும்போது, உங்களால் துல்லியமான, படைப்பாற்றல் நிறைந்த மனதை அடைய முடியும் என்று விளக்குகிறார். நம்மில் பெரும்பாலானவர்கள் வெறும் இயந்திரத்திறனாளர்களாகவே வாழ்கிறோம் என்று சுட்டிக்காட்டும் அவர், “நாம் இயந்திரத்தனமாகத் தேர்வுகளில் வெற்றிபெறுகிறோம். பணிக்குச் செல்கிறோம். சமூகத்தில் வெற்றிபெறுவதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்கிறோம். ஆனால், வாழ்க்கைக்கு அவசியமான அழகு, நேசம், அமைதி ஆகிய அம்சங்களின் மீது நாம் கவனம் செலுத்தாவிட்டால், கடினமானதும் சிதறுண்டதாகவும் தோன்றக்கூடிய உலகத்தில் வாழ வேண்டியிருக்கும்” என்கிறார். “விட்டுவிடும் மனப்பான்மை இருக்கும்போதுதான் படைப்பாற்றலுடன் விளங்க முடியும். எங்கே நிர்பந்த உணர்வு இல்லையோ, எங்கே இல்லாமல் போவதைப் பற்றிய அச்சம் இல்லையோ, இலக்கு பற்றிய உணர்வு இல்லையோ அங்கு மட்டுமே நீங்கள் படைப்பாற்றலுடன் திகழ முடியும்” என்கிறார் அவர். மகிழ்ச்சியும் அன்பும் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியை அடையக்கூடிய ஒரு பொருளாகவே பார்க்கிறோம். ஆனால், மகிழ்ச்சி அடையக்கூடிய பொருளல்ல என்று மறுக்கும் கிருஷ்ணமூர்த்தி, “மகிழ்ச்சியைக் கண்டடைய முடியாது. அது அச்சமில்லாத இடத்தில், வாழ்க்கை அர்த்தப்படுத்தும் உடன்விளைவாக இருக்கிறது” என்கிறார். அது சாதனைகளாலும் லட்சியங்களாலும் உருவாகவில்லை. மகிழ்ச்சியைப் பற்றிச் சிந்திப்பதும் பேசுவதும் நாம் மகிழ்ச்சியாக இல்லை என்பதையே குறிப்பதாகச் சொல்கிறார் அவர். அதேபோல், மகிழ்ச்சியின்மை என்பது அன்பில்லாதபோதும், நமக்கும் மற்றவருக்கும் இடைவெளி உருவாகும்போதும் ஏற்படுகிறது. இந்த இடைவெளி நமது விமர்சனங்களாலும் முன்தீர்மானங்களாலும் ஏற்படுவதாக இந்தப் புத்தகத்தில் அவர் விளக்குகிறார். மனிதர்கள் தங்களது மனம் விரும்பும் வேலையைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் போக்கு உலகில் பிரபலம் அடையாத காலகட்டத்திலேயே ‘Think on These Things’ என்ற இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. இந்தப் புத்தகம், உங்களை ‘நான் என் வாழ்க்கையில் இயந்திரத்திறனாளனாக மட்டும் இருக்கிறேனா, அல்லது படைப்பாளியாகவும் இருக்கிறேனா’ என்ற கேள்வியைக் கேட்கவைக்கும். ஜித்து கிருஷ்ணமூர்த்தி ஜே. கிருஷ்ணமூர்த்தி சென்னையில் 1895-ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை சென்னை பிரம்மஞான சபையில் பணியாற்றினார். அவருக்குப் பதினைந்து வயதாகும்போது, மிரம்மஞான சபை நிறுவனர் அன்னி பெசண்ட் மற்றும் சி.டபிஸ்யூ. லெட்பீட்டர் ஆகியோர் அவரிடம் தெரிந்த பிரபையைக் கண்டு உலகத் தலைவராகப் பயிற்சிக் கொடுக்கத் தேர்ந்தெடுத்தனர். 1979-ம் ஆண்டு, தான் யாருக்கும் குருவோ, ரட்சகரோ அல்ல என்று கூறித் தனது பெரும்பதவியையும் அதற்குப் பின்னாலிருந்த சகல அதிகாரங்களையும் துறந்தார். அவர் 1985-ம் ஆண்டு மறைந்தார். http://tamil.thehindu.com/society/spirituality/article23826578.ece

‘சீதை’ டெஸ்ட் டியூப் பேபி: ‘நாரதர்- கூகுள்’: வைரலாகும் உ.பி. துணை முதல்வரின் சர்ச்சை பேச்சு

3 months 2 weeks ago
‘சீதை’ டெஸ்ட் டியூப் பேபி: ‘நாரதர்- கூகுள்’: வைரலாகும் உ.பி. துணை முதல்வரின் சர்ச்சை பேச்சு உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா : கோப்புப்படம் - படம்: பிடிஐ ராமாயணத்தில் வரும் சீதா தேவி, பூமியில் இருந்து பிறந்தவர் என்ற கூறப்பட்டாலும், இன்றைய தொழில்நுட்பத்தில் அவர் டெஸ்ட் டியூப் குழந்தை போன்றவர் என்று உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். . மதுரா நகரில் இந்தி இதழியல் குறித்து நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை முதல்வர் தினேஷ் சர்மா பேசினார். அவர் பேசிய வீடியோ அதன்பின் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தினேஷ் சர்மா பேசியதாவது: இதழியல்துறை(பத்திரிக்கைதுறை) என்பது நவீன காலத்தில் தொடங்கியது அல்ல. மஹாபாராதம் நடந்த காலத்திலேயே இதழியல் இருந்திருக்கிறது. பாரதப்போர் நடந்தபோதிலும், அதற்கு முன்பும், ஹஸ்தினாபுரத்தில் இருந்து கொண்டே திருதிராஷ்ட்ர மகாராஜாவுக்கு அனைத்துச் சம்பவங்களையும் நேரடியாகப் பார்த்ததுபோன்று அவரின் அமைச்சர் சஞ்ஜயன் கூறுவார். இவை அனைத்தையும் நேரலையாக அவர் எடுத்துரைப்பார். இது நேரலை இல்லாமல் எதுவென்று கூறுவது?. அதுமட்டுமல்லாமல், இன்று அனைத்து விஷயங்களுக்கும் கூகுள் தளத்தைத்தான் நாம் தேடுகிறோம். ஆனால், புராணகாலத்திலேயே நடமாடும் கூகுள் இருந்தது. அது வேறுயாருமல்ல நாரத முனிவர்தான் நடமாடும் கூகுள் ஆவார். இவர் எந்த இடத்துக்கும் எளிதாகச் சென்று ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தகவலை வேகமாக பரப்பிவந்தார். ஏராளமான தகவல்களையும் கையில் வைத்திருந்தார். எப்போதும் நாராயணா என்று மூன்று முறை உச்சரித்துக்கொண்டே இருப்பார். இவர்தான் முன்பு இருந்த கூகுள். ராமாயணத்தை எடுத்துக்கொண்டால், ராமனின் மனைவி சீதா தேவி பூமியில் இருந்து தோன்றியவர் என்கின்றனர். ஜனகர் நிலத்தில் கலப்பையில் உழும்போது சீதா தேவி குழந்தையாகக் கிடைத்தார். என்னைப்பொறுத்தவரை இப்போது இருக்கும் டெஸ்ட் டியூப் பேபி போன்றுதான் அந்த காலத்தில் சீதா தேவி பூமியில் இருந்து பிறந்தார். இலங்கையில் இருந்து சீதாதேவியை மீட்டு ராமர் புஷ்பக விமானத்தில் வந்தார். இன்றுள்ள விமானம் போன்றதுதான் அந்தப் புஷ்பக விமானமாகும். ராமர் வாழ்ந்த காலத்திலேயே விமானம் இருந்தற்கான சான்றாகும் இவ்வாறு தினேஷ் சர்மா பேசினார். மாநிலத்தின் துணை முதல்வரின் இத்தகைய மவுட்டிகமான பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவ பெரும் சர்ச்சையானது, பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், துணை முதல்வர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று பாஜக செய்தித்தொடர்பாளர் திரிபாதி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், துணை முதல்வர் சர்ச்சைக்குரிய பேச்சு எதையும் பேசவில்லையே. நான் அவரின் பேச்சை ஆதரிக்கிறேன். அவர் இந்திய கலாச்சாரத்தை பெருமையாகவே பேசியுள்ளார். இப்போது இருக்கும் ஒரு சில ஊடகங்கள்தான் கலாச்சாரத்தை சீரழிக்கின்றன எனத் தெரிவித்தார். பாஜக தலைவர்கள், முதல்வர் இதுபோல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையிலும், புராணத்தையும், அறிவியலையும் தொடர்பு படுத்தி பேசி, நகைப்புக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகின்றனர். அறுவை சிகிச்சையும், பிளாஸ்டிக் சர்ஜரியும் புராணகாலத்திலேயே இருந்தது, இன்றைய விமானம்தான் அன்றைய புஷ்பக விமானம், புவியீர்ப்பு ஆய்வு, அணு குண்டு ஆய்வு, இன்டர்நெட் ஆகிய புராணகாலத்திலேயே இருந்தது என்று இதற்கு முன் பேசி சர்ச்சையில் சிக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.thehindu.com/india/article24059489.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

லார்ட்ஸ் மைதானத்தில் உலக லெவனை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி!

3 months 2 weeks ago
இதென்ன கேலிக்கூத்து? மே.இ.தீவுகள்-உலக லெவன் போட்டியில் நடந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் கடும் சாடல் மே.இ.தீவுகளுக்கும் ஐசிசி உலக லெவனுக்கும் இடையே நேற்று நடைபெற்ற டி20 போட்டிக்கு சர்வதேச போட்டி அந்தஸ்து வழங்கப்பட்டதை கேள்விக்குட்படுத்தும் விதமாக நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்களின் ஆத்திரத்தைக் கிளப்பியுள்ளது ஆட்டம் லைவ் ஆக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வர்ணனையாளர் நாசர் ஹுசைன் நடு மைதானத்தில் மைக்குடன் நின்று கொண்டிருந்தது அவ்வளவு நல்லதாகப் பார்க்கப்படவில்லை. சர்வதேச போட்டி என்றால் அதற்கான பொறுப்புடன் ஆடப்பட வேண்டும், ஆனால் வர்ணனையாளர் நடு ஆட்டத்தில் மைக்குடன் பீல்டர்களூக்கு அருகில் போய் நின்று கொண்டு வர்ணனை செய்கிறேன் பேர்வழி என்றால் அது சர்வதேச ஆட்டம்தானா என்று ரசிகர்கள் கோபாவேசமடைந்துள்ளனர். முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டு வர்ணை செய்தார் நாசர் ஹுசைன். இந்தப்புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக ரசிகர்கள் இதென்ன கேலிக்கூத்து, இப்படியெல்லாம் சர்வதேச போட்டிகளில் நடக்கலாமா என்று கடுமையாக ஆட்சேபித்துள்ளனர். லிஸ்ட் ஏ போட்டிகளில் கூட இப்படியெல்லாம் நடந்ததில்லை என்ற ரீதியில் ரசிகர்கள் ஐசிசிக்கு கேள்விக்கணை தொடுத்துள்ளனர். "ஆட்டம் நடக்கும் போது களத்தில் மைக்குடன் வர்ணனையாளரா? ஐசிசி இதென்ன கேலிக்கூத்து, இது சர்வதேச போட்டியா, லிஸ்ட் ஏ போட்டியா” என்று ட்விட்டர்வாசி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்னொருவர் ‘சர்வதேசப் போட்டியில் ரிப்போர்ட்டர் நாசர் ஹுசைன் மைதானத்தில், இது அனுமதிக்கப்பட முடியாதது’ என்று பதிவிட்டுள்ளார். “இந்தக் கேலிக்கூத்துக்குப் பெயர் சர்வதேச போட்டியா?” என்று சாடியுள்ளார். பலரும் ஸ்கை கிரிக்கெட், வர்ணனையாளர் நாசர் ஹுசைனின் ‘அடாவடி’ என்றெல்லாம் போட்டுச் சாத்தியுள்ளனர். ஏற்கெனவே இந்தப் போட்டியில் உலக லெவன் வீரர்கள் வேண்டா வெறுப்பாக ஆடியதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் வர்ணனையாளர் முதல் ஸ்லிப் அருகே நின்று கொண்டு ஆட்டம் நடக்கும் போது நேரலை வர்ணனை அளிப்பதன் பெயர் புதியன புகுத்தலா, பொறுப்பற்றத் தன்மையா, என்ன இது? என்று ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். http://tamil.thehindu.com/sports/article24058586.ece?utm_source=HP&utm_medium=hp-sports

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போராட்டம் நடத்தியவர்களை படம் எடுத்து மிரட்டல்

3 months 2 weeks ago
முற்று முழுதாக இந்திய புலனாய்வுப் பிரிவால் நடத்தப்படும் இந்த தூதராலயம் யாழை கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதில் வெற்றியடைந்து கொண்டிருக்கிறது.

இளமை புதுமை பல்சுவை

3 months 2 weeks ago
தண்ணீருக்குப் பயந்த குட்டி யானை இன்று நீச்சலடிக்கிறது...15 மாதங்களில் நடந்தது என்ன? "கொஞ்சம், கொஞ்சமாக...அந்தக் கொஞ்சம் ஒருநாள் அதிகமாகும். அந்தக் கொஞ்சம் ஒரு நாள் மிக அதிகமாகும்." - ஆப்பிரிக்க பழமொழி. ஜிம்பாப்வே நாட்டின் ஒரு காட்டுப் பகுதி. பட்டையான, பெரிய காதுகளைக் கொண்ட ஆப்பிரிக்க யானைகள் வாழும் காடு அது. வெப்பம் அதிகம். அது யானைகள் வலசைப் போகும் காலம். பல யானைக் கூட்டங்கள் அந்தப் பரந்த நிலப்பரப்பைக் கடந்துகொண்டிருந்தன. அந்தக் காட்சிகளும் அந்த வாழ்க்கையும் கற்பனைக்கே அத்தனை அழகாக இருந்தது. இரவும், பகலும் நடக்கும். சக கூட்டங்களை ஏதோ ஓர் இடத்தில் பார்க்கும்போது, நண்பர்களோடு அலவளாவும். தங்களுக்குத் தேவையான உணவைத் தேடும். இப்படியாக கொஞ்சம், கொஞ்சமாக தூரம் கடக்கும். அது ரொம்பவே அழகாக இருக்கும். அழகு மட்டுமல்ல. ஆபத்தும் நிறைந்திருக்கும். கிளம்பும் கூட்டம் அதே எண்ணிக்கையில் மீண்டும் திரும்புமா என்பது சந்தேகம்தான். ஆனால், அனைவரும் நலமாக திரும்புவோம் என்ற நம்பிக்கையில்தான் அந்த ஜீவராசிகள் கிளம்புகின்றன. அப்படித்தான் அந்தக் கூட்டமும் கிளம்பியது. அந்தக் கூட்டத்தில் அவளின் பெரிய வயிறு, மிகப் பெரிதாக வீங்கியிருந்தது. எந்த நேரமும் குழந்தையைப் பிரசவிக்கலாம் என்ற நிலை. அவளுக்காக அந்தக் கூட்டம் மெதுவாக...சில சமயம் மிக மெதுவாக நகர்ந்தது. அவளால் கிளைகளை உடைக்க முடியாத சூழலில் சக தோழர்கள் கிளை உடைத்து உணவளித்தனர். அவளுக்கு ஒரு பக்கம் பெரு மகிழ்ச்சி. ஒரு பக்கம் கொஞ்சம் பயமும் இருந்தது. வெயில் உக்கிரமாக இருந்தது. இந்த நேரத்தில் வலி வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. வலியில் பிளிறினாள். மொத்தக் கூட்டமும் நின்றது. சில நிமிடங்களில் அழகான அந்தக் குட்டியை அவள் பெற்றெடுத்தாள். கூட்டம் அதைக் கொண்டாடியது. பெற்றெடுத்த வலியோடு, தன் குழந்தையைக் கண்டு அவள் சிரித்தாள். அது ஓர் அழகான பெண் குழந்தை. ஓரிரு நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் கிளம்பியது அந்தக் கூட்டம். அங்கு ஒரு காட்டாறு ஓடிக்கொண்டிருந்தது. அதைக் கடக்க வேண்டும். எல்லோருமே அதற்கு பழக்கப்பட்டவர்கள்தான். ஆனால், கூட்டத்துக்குப் புதிதாக வந்துள்ள அந்தக் குட்டி எப்படி இதைக் கடப்பாள் என்ற சந்தேகம் இருந்தது பலருக்கும். ஆனால், அவள் அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. ``இளங்கன்று பயமறியாது" என்று சொல்வார்களே...அதுபோல். காட்டாற்றின் வேகம் வழக்கத்தைவிடவும் அதிகமாக இருந்தது. பெரியர்களின் ஒரு கூட்டம் முன்னால் கடந்தது. இடையே இந்தப் புதியவளை அனுப்பினார்கள். முதன்முறையாக தண்ணீரில் கால் வைக்கிறாள் அவள். அது அவளுக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. அதில் ஆபத்து இருப்பது குறித்து அவளுக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால், ஆபத்து என்றால் என்னவென்பதே அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த ஆற்றை அவள் கடக்க, கடக்க...நீர் வேகமெடுத்தது. அவளால், அதைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஓடும் ஆற்றில் கலந்தாள். அவள் தாயும், அந்தக் கூட்டமும் பெரும் குரலெடுத்து பிளிறின. ஆனால், அந்தப் பிளிறலால் ஆற்றின் வேகத்தை குறைத்திட முடியவில்லை. அவள் காணாமல் போனாள். கூட்டம் ஒரு வழியாக ஆற்றைக் கடந்தது. கூட்டம் தொடர்ந்து முன்னேறுவதா இல்லை, என்ன செய்வதென தெரியாமல் நின்றது, அந்தத் தாய் விடாமல் அழுதுகொண்டேயிருந்தாள். இந்தப் பக்கத்தின் கதை இவ்வளவுதான் நமக்கு தெரியும். இனி அந்தப் பக்க கதையைப் பார்க்கலாம். அந்தக் குட்டிக்கு மூச்சுத் திணறியது. தண்ணீர் குளிர்ந்தது. அது அதற்கு நன்றாக இருந்தது. அது கொடுத்த மகிழ்ச்சியில்தான் தைரியமாக தண்ணீரில் இறங்கியது. ஆனால், இப்போது ஆற்றில் அடித்துச் செல்லப்படும் இந்த நொடி, அதற்குப் பெரும் பயம் எடுத்தது. என்ன செய்வதென தெரியவில்லை. நீண்ட நேரம் அப்படியே பயணித்தது. ஒரு கட்டத்தில் ஆற்றின் வேகம் குறைந்தது. ஒரு வழியாக கரையை அடைந்தது அந்தக் குட்டி. அது அதிர்ச்சியில் இருந்தது. அதன் உடலில் இருந்து ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது. அந்தச் சத்தம் அதன் காலில் விழுந்தது. ஆனால், அதற்கு என்ன செய்வதென தெரியவில்லை. அங்கு இரண்டு ஜீப் வந்து நின்றன. அதிலிருந்து வனக்காவலர்கள் இறங்கினர். இந்தக் குட்டியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். பிறந்து சில நாள்களைக் கூட தாண்டியிராத அத்தனை சிறிய குட்டி. உடனடியாக சாட்டிலைட் போனில் தகவல் தெரிவித்தார்கள். அதைக் கொண்டு செல்ல வண்டி வந்தது. அதை "வைல்ட் இஸ் லைஃப்" (wild is life) சரணாலய பூங்காவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதன் நிறுவனர் ராக்ஸி டான்குவெர்ட்ஸ் (Roxy Danckwerts) வெளியில் வந்து அந்த யானைக் குட்டியைப் பார்க்கிறார். அள்ளியணைத்துக் கொஞ்சுகிறார். அதன் முழுக் கதையைக் கேட்கிறார். அதற்கு "மோயோ" (Moyo) என்று பெயரிடுகிறார். (மோயோ என்பது ஆண் பெயர். ராக்ஸி முதலில் அது ஆண் குட்டி என்று நினைத்து மோயோ என்று பெயரிட்டார். பின்னர், அதுவே இருக்கட்டும் என்று மாற்றவில்லை) மோயோ ராக்ஸியின் செல்லப் பிள்ளையாக வளர்கிறாள். எந்நேரமும் ராக்ஸியின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பாள். சமையலறைக்குப் போய் ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்து சாப்பிடுவாள். ஸ்டீல் ஸ்பூன்களின் சத்தம் அவளுக்குப் பிடிக்கும். அதை எடுத்துப் போட்டு விளையாடுவாள். "அவளுக்கு என் குரல், என் வாசம் என அத்தனையும் தெரியும். நான் எங்கு இருந்தாலும், என்னைத் தேடி வந்துவிடுவாள்." என்று சொல்கிறார் ராக்ஸி. வீட்டுக்கு வந்த சில நாள்களில் ராக்ஸிக்கு ஒரு விஷயம் தெரிந்தது. மோயோவுக்கு தண்ணீர் என்றால் பெரும் பயம் இருந்தது. தன் வாழ்வில் நடந்த அந்த சம்பவம் அவள் ஆழ் மனதில் பதிந்துவிட்டிருந்தது. ராக்ஸி அதிலிருந்து மோயோவை மீட்டெடுக்க விரும்பினார். 15 மாதங்கள் தொடர் முயற்சிகளை எடுத்தார் ராக்ஸி. நிறைய தெரபிகளின் மூலம் கொஞ்சம், கொஞ்மாக முயன்றார். இறுதியாக 15 மாதங்கள் கழித்து, முதன்முறையாக பெரிய நீர்நிலைக்கு மோயோவை அழைத்துச் சென்றார் ராக்ஸி. மோயோ நீரைப் பார்த்ததுமே கொஞ்சம் பின்வாங்கினாள். ராக்ஸியை இறுக்கிப் பற்றிக் கொண்டாள். ராக்ஸீ அவளை விட்டுத் தள்ளி நீரில் இறங்கினார். மோயோவை கூப்பிட்டார். ராக்ஸி தன்னுடைய செல்ல நாயையும் நீரில் இறக்கினார். நீண்ட நேரம் மோயோ பயத்தில் இறங்காமலேயே இருந்தாள். பின்னர் மெதுவாக நீரில் கால்களை வைத்தாள். ராக்ஸி நீரில் இருப்பது ஒருவித தைரியத்தை மோயோவுக்கு அளித்தது. ராக்ஸி மீதான் அன்பும், நம்பிக்கையும் மோயோவை நீரில் இறங்கி முன்னேற வைத்தது. ராக்ஸியின் அருகில் சென்றது. ராக்ஸி அவளின் தும்பிக்கையைப் பிடித்து இழுத்து விளையாடினார். மோயோ கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் மீதான பயத்தை மறந்து விளையாட ஆரம்பித்தாள். இப்பொழுதெல்லாம் தனியாகவே தண்ணீரில் இறங்குகிறாள் மோயோ. மோயோ இப்பொழுது நன்றாக வளரத் தொடங்கிவிட்டாள். இப்போது அவளால் ராக்ஸி போகும் எல்லா இடங்களுக்கும் போக முடிவதில்லை. வீட்டுக்குள் அவ்வளவு எளிதாக சுற்ற முடிவதில்லை. அவளுக்குப் பிடித்த அந்த சோபாவில் அவளால் படுக்க முடிவதில்லை. ஆனாலும், ராக்ஸியை விட்டு மட்டும் போவதில்லை. ஆனால், மோயோ பிரியத்தான் வேண்டும். பல மிருகங்களைத் தன் பூங்காவில் வளர்த்து வந்தாலும், ராக்ஸிக்கு மோயோ மீது தனிப் பெரும் காதல் உண்டு. ஆனால், இருவரும் இப்போது பிரியும் தருவாயில் இருக்கிறார்கள். "இங்கு எத்தனையோ உயிர்கள் இருந்தாலும், எனக்கு ஏனோ மோயோ மீது ஒரு பெரிய நட்பு, நம்பிக்கை, அன்பு உண்டு. அவளை விட்டுப் பிரிவது எனக்குப் பெரிய சோகமாகத் தான் இருக்கும். ஆனால், இந்தப் பாதையை நான் தேர்ந்தெடுக்கத் தான் வேண்டும். அவள் வாழ்க்கைக்கு எது சிறந்ததோ அதை நான் வழங்கிட விரும்புகிறேன். அவள் என்னோடு இருப்பது அல்ல அவள் வாழ்க்கை. அவள் சுதந்திரமாக இந்தக் காடுகளில் சுற்றித் திரிய வேண்டும். அவள் வாழ்க்கையை அவள் வாழ வேண்டும். அவள் மீது கொண்ட அன்பினால், அவள் இயல்பை அழித்து என்னோடே அவளை வைத்துக் கொள்வது பெரிய வன்முறை... ஆமாம்... வேறு வழியில்லை நான் மோயோவை பிரியப் போகிறேன்." -ராக்ஸி https://www.vikatan.com

முஸ்லிம் விரோதத்தை, உடனடியாக கைவிட வேண்டும், மாட்டிறைச்சி ஈழத் தமிழர்களின் உணவு - ஜெயபாலன்

3 months 2 weeks ago
மொத்தமா முஸ்லிம்களும் கிறீஸ்துவர்களும் என்ன செய்தாலும் ஆமாப்போட சொல்கிறீர்கள்.இப்பிடி எங்கள் முன்னவர் ஆமா போட்டதாலதானே ரெண்டு இனமும் இங்கே வந்ததே!

சினிமா விமர்சனம்: பரத் எனும் நான்

3 months 2 weeks ago
சினிமா விமர்சனம்: பரத் எனும் நான் பகிர்க நடிகர்கள் மகேஷ் பாபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், சித்தாரா, கியாரா அத்வானி, ராஹுல் ராமகிருஷ்ணா இசை தேவி ஸ்ரீ பிரசாத் ஒளிப்பதிவு ரவி கே சந்திரன் இயக்கம் கொரட்டல சிவா ’Bharat Ane Nenu’ என்ற தெலுங்குப் படத்தின் டப்பிங். தெலுங்கில் வெளியானபோது, விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். மாநில முதல்வரான ராகவனின் (சரத்குமார்) மகன் பரத் (மகேஷ் பாபு) ஜாலியாக லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். திடீரென ராகவன் இறந்துவிட நாடு திரும்புகிறான் பரத். ராகவனின் நெருங்கிய நண்பரும் அந்தக் கட்சியின் தலைவருமான வரதராஜன் (பிரகாஷ் ராஜ்), புதிய முதல்வராக பரத்தை பதவியேற்க வைக்கிறார். ஆனால், பதவியேற்ற பிறகு வரதராஜனின் பேச்சைக் கேட்காமல் செயல்பட ஆரம்பிக்கிறார். இதனால், கட்சியினரும் கோபமடைகின்றனர். ஆனால், பரத்தின் நடவடிக்கைகளால் மக்களின் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. ஒரு கட்டத்தில் அவர் காதலிக்கும் பெண்ணான வசுமதியை (கியாரா அத்வானி) வைத்து அவதூறு பரப்ப, முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறார் பரத். அதற்குப் பிறகு வரதராஜனே முதல்வராகி, பரத்தை ஒழித்துக்கட்ட முயல்கிறார். அப்போதுதான் தன் தந்தையைக் கொன்றதும் வரதராஜன் என்பது பரத்திற்கு புரிகிறது. வரதராஜனை என்ன செய்தார், மீண்டும் முதல்வரானாரா என்பது மீதிக் கதை. அர்ஜுனை வைத்து ஷங்கர் இயக்கிய முதல்வன் பாணியில் உருவாக்கப்பட்ட படம். அந்தப் படத்தில் ஒரு நாளில் பல காரியங்களைச் செய்து மக்கள் முதல்வராவார் கதாநாயகன். இந்தப் படத்தில் ஐந்து மாதங்களில் அதைச் செய்கிறார் பரத். ஆனால், முதல்வன் படத்தில் இருந்த சுவாரஸ்யம் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். நாட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் ரொம்பவுமே மேம்போக்காக, மேல்தட்டுப் பார்வையில் பார்க்கிறது படம். அதிலும் சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து தவறுசெய்பவர்களாகவும் சட்டத்தை மீறுபவர்களாகவும் இருக்கிறார்கள். கார் ஓட்டுபவர்கள் ஒழுங்காக நடந்துகொள்கிறார்கள்; ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகளும் ஆட்டோக்காரர்களும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. அதனால் சிக்னலை மீறுபவர்களுக்கு 20,000 ரூபாய் அபராதம் விதித்து, மாநிலத்தில் யாரும் விதிமீறலில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்கிறார். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதில்லை என்பதால் ஆங்கில வழி வகுப்புகளை ஆரம்பிக்கச் சொல்கிறார். விவசாயிகளுக்கு விவசாயம் செய்வது பற்றி அறிவுரை சொல்கிறார். பிறகு எல்லாப் பஞ்சாயத்துக்கும் வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய் அளிப்பதன் மூலம் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வுகாண்கிறார். இப்படி போய்க்கொண்டே இருக்கிறது படம். படத்தின் முக்கியமான பிரச்சனை, முதலமைச்சராக இருக்கும் பரத்திற்கும் கட்சித் தலைவராக இருக்கும் வரதராஜனுக்கும் இடையிலான முரண் முற்றுவதும் எதிர்ப்பாக மாறுவதும் திரைக்கதையில் சரியாக வெளிப்படவில்லையென்பதுதான். தவிர, கதை ஆரம்பித்ததிலிருந்தே, இதுபோல பல காட்சிகளை மேலோட்டமாக வைத்திருப்பதால் படத்தோடு ஒட்டவே முடியவில்லை. எம்எல்ஏவாக இல்லாமலேயே முதல்வராகிறார், பிறகு முதல்வர் பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண்ணைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறார், பிறகு அந்தப் பெண்ணுக்காக பதவியை ராஜினாமா செய்கிறார், பிறகு கடைசியில் மீண்டும் முதல்வராகிறார் என்று தலைசுற்ற வைக்கிறார்கள். முதல்வராக பதவியேற்று வாகன அணிவகுப்பில் அலுவலகத்திற்குச் செல்லும்போதே பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண்ணைப் பார்த்துக் காதலிக்கிறார். அந்தக் காதல் கடைசியில் என்ன ஆனது என்பது தெரியவில்லை. இதெல்லாம் போக படத்தின் நீளம் இன்னொரு பெரிய பிரச்சனை. சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகிறது. மகேஷ் பாபுவில் துவங்கி, எல்லோரும் வழக்கம்போல நடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் வழக்கம்போல தனித்துத் தெரிகிறார். அவர் மட்டும் இல்லையென்றால் ரொம்பவுமே படம் சோதித்திருக்கும். https://www.bbc.com/tamil/arts-and-culture-44331661

சினிமா விமர்சனம்: பரத் எனும் நான்

3 months 2 weeks ago
சினிமா விமர்சனம்: பரத் எனும் நான்
சினிமா விமர்சனம்: பரத் எனும் நான்
    நடிகர்கள் மகேஷ் பாபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், சித்தாரா, கியாரா அத்வானி, ராஹுல் ராமகிருஷ்ணா     இசை தேவி ஸ்ரீ பிரசாத்     ஒளிப்பதிவு ரவி கே சந்திரன்     இயக்கம் கொரட்டல சிவா

’Bharat Ane Nenu’ என்ற தெலுங்குப் படத்தின் டப்பிங். தெலுங்கில் வெளியானபோது, விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்.

மாநில முதல்வரான ராகவனின் (சரத்குமார்) மகன் பரத் (மகேஷ் பாபு) ஜாலியாக லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். திடீரென ராகவன் இறந்துவிட நாடு திரும்புகிறான் பரத். ராகவனின் நெருங்கிய நண்பரும் அந்தக் கட்சியின் தலைவருமான வரதராஜன் (பிரகாஷ் ராஜ்), புதிய முதல்வராக பரத்தை பதவியேற்க வைக்கிறார். ஆனால், பதவியேற்ற பிறகு வரதராஜனின் பேச்சைக் கேட்காமல் செயல்பட ஆரம்பிக்கிறார். இதனால், கட்சியினரும் கோபமடைகின்றனர்.

சினிமா விமர்சனம்: பரத் எனும் நான்

ஆனால், பரத்தின் நடவடிக்கைகளால் மக்களின் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. ஒரு கட்டத்தில் அவர் காதலிக்கும் பெண்ணான வசுமதியை (கியாரா அத்வானி) வைத்து அவதூறு பரப்ப, முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறார் பரத். அதற்குப் பிறகு வரதராஜனே முதல்வராகி, பரத்தை ஒழித்துக்கட்ட முயல்கிறார். அப்போதுதான் தன் தந்தையைக் கொன்றதும் வரதராஜன் என்பது பரத்திற்கு புரிகிறது. வரதராஜனை என்ன செய்தார், மீண்டும் முதல்வரானாரா என்பது மீதிக் கதை.

அர்ஜுனை வைத்து ஷங்கர் இயக்கிய முதல்வன் பாணியில் உருவாக்கப்பட்ட படம். அந்தப் படத்தில் ஒரு நாளில் பல காரியங்களைச் செய்து மக்கள் முதல்வராவார் கதாநாயகன். இந்தப் படத்தில் ஐந்து மாதங்களில் அதைச் செய்கிறார் பரத். ஆனால், முதல்வன் படத்தில் இருந்த சுவாரஸ்யம் இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.

நாட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் ரொம்பவுமே மேம்போக்காக, மேல்தட்டுப் பார்வையில் பார்க்கிறது படம். அதிலும் சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து தவறுசெய்பவர்களாகவும் சட்டத்தை மீறுபவர்களாகவும் இருக்கிறார்கள். கார் ஓட்டுபவர்கள் ஒழுங்காக நடந்துகொள்கிறார்கள்; ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகளும் ஆட்டோக்காரர்களும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. அதனால் சிக்னலை மீறுபவர்களுக்கு 20,000 ரூபாய் அபராதம் விதித்து, மாநிலத்தில் யாரும் விதிமீறலில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்கிறார்.

சினிமா விமர்சனம்: பரத் எனும் நான்

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதில்லை என்பதால் ஆங்கில வழி வகுப்புகளை ஆரம்பிக்கச் சொல்கிறார். விவசாயிகளுக்கு விவசாயம் செய்வது பற்றி அறிவுரை சொல்கிறார். பிறகு எல்லாப் பஞ்சாயத்துக்கும் வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய் அளிப்பதன் மூலம் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வுகாண்கிறார். இப்படி போய்க்கொண்டே இருக்கிறது படம்.

படத்தின் முக்கியமான பிரச்சனை, முதலமைச்சராக இருக்கும் பரத்திற்கும் கட்சித் தலைவராக இருக்கும் வரதராஜனுக்கும் இடையிலான முரண் முற்றுவதும் எதிர்ப்பாக மாறுவதும் திரைக்கதையில் சரியாக வெளிப்படவில்லையென்பதுதான். தவிர, கதை ஆரம்பித்ததிலிருந்தே, இதுபோல பல காட்சிகளை மேலோட்டமாக வைத்திருப்பதால் படத்தோடு ஒட்டவே முடியவில்லை.

சினிமா விமர்சனம்: பரத் எனும் நான்

எம்எல்ஏவாக இல்லாமலேயே முதல்வராகிறார், பிறகு முதல்வர் பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண்ணைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறார், பிறகு அந்தப் பெண்ணுக்காக பதவியை ராஜினாமா செய்கிறார், பிறகு கடைசியில் மீண்டும் முதல்வராகிறார் என்று தலைசுற்ற வைக்கிறார்கள்.

முதல்வராக பதவியேற்று வாகன அணிவகுப்பில் அலுவலகத்திற்குச் செல்லும்போதே பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண்ணைப் பார்த்துக் காதலிக்கிறார். அந்தக் காதல் கடைசியில் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இதெல்லாம் போக படத்தின் நீளம் இன்னொரு பெரிய பிரச்சனை. சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகிறது.

மகேஷ் பாபுவில் துவங்கி, எல்லோரும் வழக்கம்போல நடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் வழக்கம்போல தனித்துத் தெரிகிறார். அவர் மட்டும் இல்லையென்றால் ரொம்பவுமே படம் சோதித்திருக்கும்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44331661

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போராட்டம் நடத்தியவர்களை படம் எடுத்து மிரட்டல்

3 months 2 weeks ago
தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போராட்டம் நடத்தியவர்களை படம் எடுத்து மிரட்டல்

IMG_5535.jpg?resize=653%2C490

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

யாழில்.உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை யாழ். காவல்துறையினர்; மற்றும் இந்திய துணைத்தூதரக பாதகாப்பு உத்தியோகஸ்தர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் அதிகாரிகள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்தனர். தூத்துக்குடி படுகொலையை கண்டித்தும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க கோரியும் யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது இந்திய துணைத்தூதரகத்திற்கு வெளியே யாழ். காவல்துறையினர்; பாதுகாப்பு வழங்கி இருந்தனர். போராட்டம் ஆரம்பமானதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த யாழ். காவல்துறையினர்;; தமது கையடக்க தொலைபேசிகளில் போராட்டக்காரர்களை புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்தனர்.

அதேவேளை துணைத்தூதரகத்தினுள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் துணைத்தூதரக அதிகாரிகளும் துணைத்தூதரக வாளாகத்தினுள் நின்று போராட்டக்காரர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தனர்.

IMG_5515.jpg?resize=653%2C490IMG_5516.jpg?resize=653%2C490IMG_5517.jpg?resize=653%2C490IMG_5525.jpg?resize=653%2C490IMG_5533.jpg?resize=653%2C490

http://globaltamilnews.net/2018/81854/

உதவி: 3 கிழமைகளுக்குள் தன் பெற்றோரை ஒவ்வொருவராக இழந்த என் நண்பனின் 6 வயது மகன்

3 months 2 weeks ago
எத்தனையோ சாவுகளை கண்டும், கடந்தும் வந்துள்ளேன். அப்பாவில் இருந்து, அப்பு, மாமா,மாமி, நண்பர்கள், தோழிகள் என்று. ஆனால் இவ் நண்பனின் மரணம் மட்டும் மிகவும் வலிக்கின்றது. இந்த வலி அவனது மகனை ஒட்டி வருகின்றது என நினைக்கின்றேன். 24 மணித்தியாலங்களுக்குள் எமக்கு கிடைக்கும் பேராதரவை காண வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கின்றது. எம் சமூக மக்கள் மட்டுமல்ல பெயர் ஊர் இனம் மொழி என்று எந்த பாகுபாடும் இல்லாமல் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் உதவிக்கொண்டு இருக்கின்றார்கள். இதுவரைக்கும் 48,000 டொலர்ஸ் வரை சேர்த்துள்ளோம். ஒரு இலட்சம் சேர்க்க வேண்டும் என்பது தான் எம் இலக்கு. சேர்த்த பின் ஒரு trusty அமைத்து அவன் மகனிற்கு படிப்படியாக உதவ திட்டமிட்டுள்ளோம்.