தியாக தீபம் திலீபன்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் 15-09-1987

Aggregator

அடுத்த சில நாட்களில் கைதாகிறார் சிறிலங்காவின் உயர்மட்டப் படைத் தளபதி?

3 months 2 weeks ago
அடுத்த சில நாட்களில் கைதாகிறார் சிறிலங்காவின் உயர்மட்டப் படைத் தளபதி? கொழும்பில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய, குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் உயர்மட்டப் படை அதிகாரி ஒருவர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளார். சிறிலங்கா காவல்துறை தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபரான, லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியைக் கைது செய்வதற்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவருக்கு உதவிய சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு, கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு, முன்னாள் கடற்படைத் தளபதியும், தற்போதைய கூட்டுப் படைகளின் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவியாகவும், உடந்தையாகவும் இருந்தார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கைது செய்யப்படவுள்ள படை அதிகாரியின் பெயரை கொழும்பு ஊடகம் வெளியிடாத போதிலும், அட்மிரல் ரவீந்திர விஜேகுணத்னவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. http://www.puthinappalakai.net/2018/06/02/news/31163

அடுத்த சில நாட்களில் கைதாகிறார் சிறிலங்காவின் உயர்மட்டப் படைத் தளபதி?

3 months 2 weeks ago
அடுத்த சில நாட்களில் கைதாகிறார் சிறிலங்காவின் உயர்மட்டப் படைத் தளபதி?  

Vice-Admiral-Ravindra-Wijegunaratne-300xகொழும்பில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய, குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் உயர்மட்டப் படை அதிகாரி ஒருவர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளார்.

சிறிலங்கா காவல்துறை தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபரான, லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியைக் கைது செய்வதற்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு உதவிய சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு, கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு, முன்னாள் கடற்படைத் தளபதியும், தற்போதைய கூட்டுப் படைகளின் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவியாகவும், உடந்தையாகவும் இருந்தார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கைது செய்யப்படவுள்ள படை அதிகாரியின் பெயரை கொழும்பு ஊடகம் வெளியிடாத போதிலும், அட்மிரல் ரவீந்திர விஜேகுணத்னவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2018/06/02/news/31163

சீனப் படை அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

3 months 2 weeks ago
சீனப் படை அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சந்திப்பு தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் நிதியில் கட்டப்படவுள்ள அரங்க வளாகத்துக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு சீன படை அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது. சீன இராணுவத்தின் கேணல் சாங் லூஹூவா தலைமையிலான இந்தக் குழுவினர், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் கடந்த புதன்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது, சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் தொடர்பாகவும், ஏனைய தொழில்நுட்ப உதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.net/2018/06/02/news/31165

சீனப் படை அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

3 months 2 weeks ago
சீனப் படை அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சந்திப்பு  

chine-military-mahesh-300x200.jpgதியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் நிதியில் கட்டப்படவுள்ள அரங்க வளாகத்துக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு சீன படை அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

சீன இராணுவத்தின் கேணல் சாங் லூஹூவா தலைமையிலான இந்தக் குழுவினர், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் கடந்த புதன்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது, சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் தொடர்பாகவும், ஏனைய தொழில்நுட்ப உதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

chine-military-mahesh.jpg

http://www.puthinappalakai.net/2018/06/02/news/31165

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீட அதிகாரிகள் சிறிலங்காவில் கள ஆய்வு

3 months 2 weeks ago
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீட அதிகாரிகள் சிறிலங்காவில் கள ஆய்வு அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த கப்டன் ஜெப்ரி பென்டன் தலைமையிலான நான்கு படை அதிகாரிகளைக் கொண்ட குழு, சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது. சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் சிவில்- இராணுவ ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே அமெரிக்க படை அதிகாரிகள் குழு கொழும்பு வந்துள்ளது. தெற்காசியப் பிராந்திய சிவில் விவகார கருத்தரங்கிற்கு முன்னதாக இந்தக் குழு சிறிலங்கா வந்துள்ளது. அமெரிக்க படை அதிகாரிகளின் இந்தக் குழு, நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியது. இதன்போது, 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட சிவில்- இராணுவ ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி விளக்கிக் கூறியுள்ளார். http://www.puthinappalakai.net/2018/06/02/news/31169

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீட அதிகாரிகள் சிறிலங்காவில் கள ஆய்வு

3 months 2 weeks ago
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீட அதிகாரிகள் சிறிலங்காவில் கள ஆய்வு  

uspascom-met-mahesh-2-300x178.jpgஅமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த கப்டன் ஜெப்ரி பென்டன் தலைமையிலான நான்கு படை அதிகாரிகளைக் கொண்ட குழு, சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது.

சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் சிவில்- இராணுவ ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே அமெரிக்க படை அதிகாரிகள் குழு கொழும்பு வந்துள்ளது.

தெற்காசியப் பிராந்திய சிவில் விவகார கருத்தரங்கிற்கு முன்னதாக இந்தக் குழு சிறிலங்கா வந்துள்ளது.

அமெரிக்க படை அதிகாரிகளின் இந்தக் குழு,  நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியது.

இதன்போது, 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட சிவில்- இராணுவ ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி விளக்கிக் கூறியுள்ளார்.

uspascom-met-mahesh-2.jpg

http://www.puthinappalakai.net/2018/06/02/news/31169

முஸ்லிம் விரோதத்தை, உடனடியாக கைவிட வேண்டும், மாட்டிறைச்சி ஈழத் தமிழர்களின் உணவு - ஜெயபாலன்

3 months 2 weeks ago
இந்தியாவுக்கு எதிரான ஆதிக்க போட்டியில் அவர்கள் இணையும் சாத்தியம் உள்ளது. இன்றும் சவூதி, ஜோர்டான், ஐக்கிய அரபு நாடுகள் அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் நெருங்கிய நேச நாடுகளாக இருந்து இசுலாமிய தீவிர வாதத்துக்கு எதிராக செயற்படுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் சி.ஐ.எ. யை தலிபான் தற்கொலை குண்டுதாரி தாக்கி பலரை கொன்ற போது அவர்களில் முக்கிய சி.ஐ.எ. உயர் அதிகாரி ஜோர்டான் நாட்டின் முக்கியமான இளவரசர் என்று செய்திகளில் பிரபலமானது. அப்படி எங்கே ஆமா போட சொன்னேன்? என்றும் தூக்காத மாட்டு பிரச்சினையை இன்று தூக்கி மோட்டுத்தனமாக இன்னும் அழிய வேண்டாம் என்று தானே சொன்னேன்? வெற்றி பெறும் சாத்தியம் இருந்தால் மாடு என்ன, ஆடு, கோழி (சேவல் முருகப்பெருமானின் வாகனம் அல்லவா?) , பன்றி என்று எல்லாத்துக்கும் போராட்டம் நடத்தலாம். அழிந்த அழிவு போதாது என்றா இன்று இந்த மாட்டு போராட்டம்? ரதி, நூற்றுகணக்கில் மாடுகளை இழந்த மாட்டு உரிமையாளர்கள் ஏன் மவுனமாக இருக்கிறார்கள்? என்றுமே இந்த மாட்டு பிரச்சினையை இவர்கள் எடுத்தது இல்லையே? இன்று மறவன் புலவு சச்சிதானந்தமும், பிக்குகளும், எங்கள் நெடுக்கரும் தான் இந்த மாட்டு பிரச்சினை பற்றி பேசுகிறார்கள். இவர்களில் எவர் மாட்டு உரிமையாளர்? எனக்கு இந்த சேவலை கொன்று சாப்பிடுவதை தடுக்க போராட்டம் நடத்த வேண்டும் என்று தோன்றுகிறது. முருகப்பெருமானின் வாகனத்தை எப்படி இந்த (எந்த இனத்தை குறிப்பட?) கொல்ல முடியும்? நாங்கள் இதை தடுக்க வேண்டாமா? என்ன சொல்கிறீர்கள் நெடுக்கர்?

யாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா

3 months 2 weeks ago
பாலாவுக்கு வாழ்த்துக்கள். இப்போதுள்ள அதிகாரிகள் காப்பரேட் நிறுவனங்களின் மூளைச்சலவையிலேயே செயற்படுகிறார்கள்.

உதவி: 3 கிழமைகளுக்குள் தன் பெற்றோரை ஒவ்வொருவராக இழந்த என் நண்பனின் 6 வயது மகன்

3 months 2 weeks ago
ஆழ்ந்த அனுதாபங்கள் இவரைப்பற்றி ஒரு செய்தி வாசித்தபோது மிகவும் கவலையாக இருந்தது மிகவும் சிறந்த ஒரு பன்முக விளையாட்டுவீரன். கனடாவில் பல தமிழ் விளையாட்டுக்கழங்களின் வளர்ச்சியில் இவரது பங்கு மிகவும் அளப்பரியதாக இருந்திருக்கின்றது. இவரது குழந்தைக்கான எதிர்காலம் கடவுளின் கிருபையால் சிறப்பாக அமைய வேண்டுகின்றேன்.

பொரு­ளா­தா­ரக் கொள்கை இன்­றியே ஒரு ஆட்­சியா?

3 months 2 weeks ago
பொரு­ளா­தா­ரக் கொள்கை இன்­றியே ஒரு ஆட்­சியா? வடக்கு மாகாண சபை­யின் ஆட்­சிக் காலம் எதிர்­வ­ரும் ஐப்­பசி மாதத்­து­டன் முடி­வ­டை­கின்­றது. சரி­யாக இன்­னும் 5 மாதங்­களே இருக்­கின்­றன. இதற்­கி­டை­யில் 300க்கும் மேற்­பட்ட தீர்­மா­னங்­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. எனி­னும் நேற்­றைய தினம் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­ன­மும் அதன்­போ­தான விவா­தத்­தில் முன்­வைக்­கப்­பட்ட பரிந்­து­ரை­யும் ஆச்­ச­ரி­யத்­தை­யும் விச­னத்­தை­யும் ஒருங்கே ஏற்­ப­டுத்­து­கின்­றன. யாழ்ப்­பா­ணத்­தில் தொழில்­நுட்­பப் பூங்கா ஒன்று அமைக்­கப்­ப­ட­வேண்­டும் என்­கிற தீர்­மான வரைவு ஒன்றை சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் முன்­வைத்­தார். விவா­தத்­தின் பின்­னர் சபை அதனை ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொண்­டது. இதன் போது சபை உறுப்­பி­ன­ரும், முன்­னாள் சுகா­தார அமைச்­ச­ரு­மான ப.சத்­தி­ய­லிங்­கம் முன்­வைத்த யோசனை ஒன்­றை­யும் சபை­யி­னர் மறுப்­பின்றி, எதிர்ப்­பின்றி ஏற்­றுக்­கொண்­ட­னர். வடக்கு மாகா­ணத்­திற்­கான பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்றை உரு­வாக்க வேண்­டும், அதன் பின்­னர் அந்­தக் கொள்­கைக்கு அமை­வா­கவே வடக்­கில் தொழில்­நுட்­பப் பூங்­காவை அமைக்­க­வேண்­டும் என்று சத்­தி­ய­லிங்­கம் வலி­யு­றுத்­தி­னார். அவ­ரது யோசனை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. யாழ்ப்­பா­ணத்­தில் காங்­கே­சன்­துறை சிமெந்து ஆலையை முற்­றாக அகற்­றி­விட்டு அந்த இடத்­தில் தொழில்­நுட்­பப் பூங்கா ஒன்றை அமைப்­ப­தற்­கான யோசனை ஒன்று கொழும்பு அர­சி­டம் உண்டு. அதனை முன்­னு­ணர்ந்து இந்­தத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்­டதா என்­கிற அர­சி­யலை ஒரு­பு­றம் விட்­டு­வி­டு­வோம். அது அர­சி­யல். அர­சி­யல் செய்­வ­து­தான் அர­சி­யல்­வா­தி­க­ளின் வேலை. ஆனால் கவ­னத்துக்கும் கவ­லைக்­கும் உரிய விட­யம், முன்­னாள் அமைச்­சர் கூறி­ய­படி கடந்த நான்­கரை ஆண்­டு­க­ளாக வடக்கு மாகாண சபை தனக்­கென ஒரு பொரு­ளா­தா­ரக் கொள்­கையே இல்­லா­மல் இயங்­கி­யது என்­ப­து­தான். இது ஒரு அதிர்ச்­சி­க­ர­மான உண்மை. போரால் நலி­வுற்ற மக்­களை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பும் பணி­யைச் செவ்­வனே நிறை­வேற்­றும் பொறுப்­பைக் கொண்ட ஒரு மாகாண சபை­யின் முத­லா­வது ஆட்சி, தனது ஆயுள் காலம் முழு­வ­தும் தனக்­கென ஒரு பொரு­ளா­தா­ரக் கொள்கை இன்­றியே செயற்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது எவ்­வ­ளவு பெரிய நாச­வேலை. ஏனைய மாகா­ணங்­கள் தமது அபி­வி­ருத்­திக்கு நிதி வேண்­டும், நிதி வேண்­டும் என்று கொழும்பு அரசை நச்­ச­ரித்­துக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், வடக்கு மாகா­ணம் மட்­டும்­தான் ஒதுக்­கப்­ப­டும் நிதி­யை­யும் பயன்­ப­டுத்­தா­மல் திருப்பி அனுப்­பிக்­கொண்­டி­ருக்­கி­றது என்று இலங்­கை­யின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பா­ணத்­தில் வைத்­துக் குற்­றஞ்­சாட்­டிய சில நாள்­க­ளி­லேயே, பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்று இல்­லா­மல்­தான் தனது ஆட்­சிக் காலத்தை வடக்கு மாகாண சபை கடத்­தி­யி­ருக்­கி­றது என்ற உண்­மையை சபையே ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் அபி­வி­ருத்­திக்­காக வருடா வரு­டம் அதிக நிதியைக் கொழும்பு ஒதுக்க வேண்­டும் என்று கேட்­கும் வடக்கு மாகாண அர­சி­யல்­வா­தி­கள், பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்று இல்­லா­ம­லேயே அதிக நிதி­யைக் கேட்­டார்­கள் என்­பது வேடிக்­கை­யா­னது. அது­போன்று, கொழும்பு அர­சின் பொரு­ளா­தா­ரத் திட்­டங்­க­ளை­யும் தனி­யார் மற்­றும் புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளின் முத­லீட்­டுத் திட்­டங்­க­ளை­யும்­கூட இது­போன்றே தமக்­கென ஒரு பொரு­ளா­தா­ரக் கொள்­கை­யும் இன்­றியே எதிர்த்­தார்­கள் என்­ப­தும் விச­னத்துக்கு­ரி­யது. சில நாள்­க­ளுக்கு முன்­னர் தனது உரை­யொன்­றில் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் மாகா­ணத்­து­டன் கலந்­து­ரை­யாடி, அதன் தேவை­களை அறிந்து அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். வடக்கு மாகாண சபை­யி­டம் பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்று இல்­லாத பட்­சத்­தில் தேவை மதிப்­பீட்­டை­யும் கலந்­து­ரை­யா­ட­லை­யும் எதன் அடிப்­ப­டை­யில் நடத்­து­வார்­கள்? தனி­ந­பர்­க­ளின் விருப்பு வெறுப்பு மற்­றும் அர­சி­ய­லின் அடிப்­ப­டை­யிலா? வடக்­கில் உள்ள மாவட்­டங்­கள்­தான் இலங்­கை­யி­லேயே வறு­மை­யின் உச்­சத்­தில் உள்­ளவை என்­கிற புள்­ளி­வி­வ­ரங்­கள் குறித்து மேடை மேடை­யா­கப் பேசி­ய­போ­தும், வடக்கு மாகாண மக்­க­ளின் வரு­மா­னத்தை உயர்த்­து­வ­தற்­கும், பொரு­ளா­தா­ரத்தை விருத்தி செய்­வ­தற்­கும் குறைந்­த­பட்­சம் கொள்­கைத் திட்­டத்­தை­யா­வது மாகாண சபை கொண்­டி­ருக்­க­வில்லை என்­பது மாகாண சபை மக்­க­ளுக்­குச் செய்த பெரும் துரோ­கம் அன்றி வேறென்ன? ஆட்சி முடி­யும் தறு­வா­யில் பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று சொல்­வது மக்­களை ஏமாற்­று­வ­தன்றி வேறென்ன? http://newuthayan.com/story/10/பொரு­ளா­தா­ரக்-கொள்கை-இன்­றியே-ஒரு-ஆட்­சியா.html

பொரு­ளா­தா­ரக் கொள்கை இன்­றியே ஒரு ஆட்­சியா?

3 months 2 weeks ago
பொரு­ளா­தா­ரக் கொள்கை இன்­றியே ஒரு ஆட்­சியா?  
 

வடக்கு மாகாண சபை­யின் ஆட்­சிக் காலம் எதிர்­வ­ரும் ஐப்­பசி மாதத்­து­டன் முடி­வ­டை­கின்­றது. சரி­யாக இன்­னும் 5 மாதங்­களே இருக்­கின்­றன.

இதற்­கி­டை­யில் 300க்கும் மேற்­பட்ட தீர்­மா­னங்­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

எனி­னும் நேற்­றைய தினம் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­ன­மும் அதன்­போ­தான விவா­தத்­தில் முன்­வைக்­கப்­பட்ட பரிந்­து­ரை­யும் ஆச்­ச­ரி­யத்­தை­யும் விச­னத்­தை­யும் ஒருங்கே ஏற்­ப­டுத்­து­கின்­றன.

 

யாழ்ப்­பா­ணத்­தில் தொழில்­நுட்­பப் பூங்கா ஒன்று அமைக்­கப்­ப­ட­வேண்­டும் என்­கிற தீர்­மான வரைவு ஒன்றை சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் முன்­வைத்­தார்.

விவா­தத்­தின் பின்­னர் சபை அதனை ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொண்­டது. இதன் போது சபை உறுப்­பி­ன­ரும், முன்­னாள் சுகா­தார அமைச்­ச­ரு­மான ப.சத்­தி­ய­லிங்­கம் முன்­வைத்த யோசனை ஒன்­றை­யும் சபை­யி­னர் மறுப்­பின்றி, எதிர்ப்­பின்றி ஏற்­றுக்­கொண்­ட­னர்.

வடக்கு மாகா­ணத்­திற்­கான பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்றை உரு­வாக்க வேண்­டும், அதன் பின்­னர் அந்­தக் கொள்­கைக்கு அமை­வா­கவே வடக்­கில் தொழில்­நுட்­பப் பூங்­காவை அமைக்­க­வேண்­டும் என்று சத்­தி­ய­லிங்­கம் வலி­யு­றுத்­தி­னார்.

அவ­ரது யோசனை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணத்­தில் காங்­கே­சன்­துறை சிமெந்து ஆலையை முற்­றாக அகற்­றி­விட்டு அந்த இடத்­தில் தொழில்­நுட்­பப் பூங்கா ஒன்றை அமைப்­ப­தற்­கான யோசனை ஒன்று கொழும்பு அர­சி­டம் உண்டு.

அதனை முன்­னு­ணர்ந்து இந்­தத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்­டதா என்­கிற அர­சி­யலை ஒரு­பு­றம் விட்­டு­வி­டு­வோம். அது அர­சி­யல். அர­சி­யல் செய்­வ­து­தான் அர­சி­யல்­வா­தி­க­ளின் வேலை.

ஆனால் கவ­னத்துக்கும் கவ­லைக்­கும் உரிய விட­யம், முன்­னாள் அமைச்­சர் கூறி­ய­படி கடந்த நான்­கரை ஆண்­டு­க­ளாக வடக்கு மாகாண சபை தனக்­கென ஒரு பொரு­ளா­தா­ரக் கொள்­கையே இல்­லா­மல் இயங்­கி­யது என்­ப­து­தான். இது ஒரு அதிர்ச்­சி­க­ர­மான உண்மை.

போரால் நலி­வுற்ற மக்­களை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பும் பணி­யைச் செவ்­வனே நிறை­வேற்­றும் பொறுப்­பைக் கொண்ட ஒரு மாகாண சபை­யின் முத­லா­வது ஆட்சி, தனது ஆயுள் காலம் முழு­வ­தும் தனக்­கென ஒரு பொரு­ளா­தா­ரக் கொள்கை இன்­றியே செயற்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது எவ்­வ­ளவு பெரிய நாச­வேலை.

ஏனைய மாகா­ணங்­கள் தமது அபி­வி­ருத்­திக்கு நிதி வேண்­டும், நிதி வேண்­டும் என்று கொழும்பு அரசை நச்­ச­ரித்­துக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், வடக்கு மாகா­ணம் மட்­டும்­தான் ஒதுக்­கப்­ப­டும் நிதி­யை­யும் பயன்­ப­டுத்­தா­மல் திருப்பி அனுப்­பிக்­கொண்­டி­ருக்­கி­றது என்று இலங்­கை­யின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பா­ணத்­தில் வைத்­துக் குற்­றஞ்­சாட்­டிய சில நாள்­க­ளி­லேயே, பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்று இல்­லா­மல்­தான் தனது ஆட்­சிக் காலத்தை வடக்கு மாகாண சபை கடத்­தி­யி­ருக்­கி­றது என்ற உண்­மையை சபையே ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது.

போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் அபி­வி­ருத்­திக்­காக வருடா வரு­டம் அதிக நிதியைக் கொழும்பு ஒதுக்க வேண்­டும் என்று கேட்­கும் வடக்கு மாகாண அர­சி­யல்­வா­தி­கள், பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்று இல்­லா­ம­லேயே அதிக நிதி­யைக் கேட்­டார்­கள் என்­பது வேடிக்­கை­யா­னது.

அது­போன்று, கொழும்பு அர­சின் பொரு­ளா­தா­ரத் திட்­டங்­க­ளை­யும் தனி­யார் மற்­றும் புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளின் முத­லீட்­டுத் திட்­டங்­க­ளை­யும்­கூட இது­போன்றே தமக்­கென ஒரு பொரு­ளா­தா­ரக் கொள்­கை­யும் இன்­றியே எதிர்த்­தார்­கள் என்­ப­தும் விச­னத்துக்கு­ரி­யது.

சில நாள்­க­ளுக்கு முன்­னர் தனது உரை­யொன்­றில் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் மாகா­ணத்­து­டன் கலந்­து­ரை­யாடி, அதன் தேவை­களை அறிந்து அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.

வடக்கு மாகாண சபை­யி­டம் பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்று இல்­லாத பட்­சத்­தில் தேவை மதிப்­பீட்­டை­யும் கலந்­து­ரை­யா­ட­லை­யும் எதன் அடிப்­ப­டை­யில் நடத்­து­வார்­கள்? தனி­ந­பர்­க­ளின் விருப்பு வெறுப்பு மற்­றும் அர­சி­ய­லின் அடிப்­ப­டை­யிலா?

வடக்­கில் உள்ள மாவட்­டங்­கள்­தான் இலங்­கை­யி­லேயே வறு­மை­யின் உச்­சத்­தில் உள்­ளவை என்­கிற புள்­ளி­வி­வ­ரங்­கள் குறித்து மேடை மேடை­யா­கப் பேசி­ய­போ­தும், வடக்கு மாகாண மக்­க­ளின் வரு­மா­னத்தை உயர்த்­து­வ­தற்­கும், பொரு­ளா­தா­ரத்தை விருத்தி செய்­வ­தற்­கும் குறைந்­த­பட்­சம் கொள்­கைத் திட்­டத்­தை­யா­வது மாகாண சபை கொண்­டி­ருக்­க­வில்லை என்­பது மாகாண சபை மக்­க­ளுக்­குச் செய்த பெரும் துரோ­கம் அன்றி வேறென்ன?

ஆட்சி முடி­யும் தறு­வா­யில் பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று சொல்­வது மக்­களை ஏமாற்­று­வ­தன்றி வேறென்ன?

http://newuthayan.com/story/10/பொரு­ளா­தா­ரக்-கொள்கை-இன்­றியே-ஒரு-ஆட்­சியா.html

யாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா

3 months 2 weeks ago
யாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா "செய் அல்லது செத்து மடி." யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசகம் இது. இவ்வலுவலகம் வெற்றிகரமான தொழில் முனைவோராக இப்பண்ணையினை(VSP Farm) நடாத்தி வரும் பரமசிவம் பாலமுருகனுக்கு சொந்தமானது. விவசாயம், பண்ணை விலங்கு வளர்ப்பு, சந்தைப்படுத்தல் என்பவற்றை கடந்த எட்டு வருடங்களாக சிறந்த முறையில் இவர் செய்து வருகிறார். முக்கியமாக கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு ஆகியவற்றோடு முருங்கை, வாழை மற்றும் விவசாய பயிர்களையும் வெற்றிகரமாக இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார். பாலமுருகன் பலருக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கியுள்ளார். இந்த சமூகத்துக்கு தான் கற்றுக் கொண்ட விடயங்களை கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். தன்னைப் போல பல முயற்சியாளர்களையும் உருவாக்கி விடுவதிலும் அக்கறையுடன் இருக்கிறார். பாடசாலையில் உயர்தரப் படிப்பை முடித்துவிட்டு எலக்ரோனிக் எஞ்சினியரிங் படித்துள்ள இவர் இயந்திரங்களை வடிவமைக்கும் திறனையும் பெற்றிருக்கிறார். இவரது பண்ணை அலுவலக கதவில் தொங்குகின்ற அந்த வாசகத்துக்கு ஏற்ப செயலிலும், சொல்லிலும் வேகமும் விவேகமும் தெரிகிறது. எந்த விடயத்தை எடுத்தாலும் அதனை திறம்பட அர்ப்பணிப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் பாலமுருகன் என இவரது பணியாளர்களே புகழாரம் சூட்டுகின்றனர். நஞ்சில்லா உணவை நோக்கிய பயணத்தை தான் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மூலம் தொடங்கியிருப்பதாக கூறுகிறார் பாலா. அந்த இலக்கை அடைவதற்காக உறுதியூடன் பயணித்தும் வருகின்றார். முழுக்க முழுக்க அவரது சொந்தப் பணத்தில் முறையான அனுமதிகளை எல்லாம் பெற்று தொடங்கப்பட்ட பண்ணைக்கு இன்று நெருக்கடியாக வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினர் உள்ளனர் என்பது தான் வேதனையான செய்தி. இயற்கை வழி விவசாயத்துக்கு சில பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) தடைக்கல்லாக இருப்பதாக பாலா முறையிடுகிறார். சில பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் “உற்பத்திகளை முடக்க வந்த அரசின் கூலிப்படைகள்" என கடுமையான விமர்சனத்தினையும் முன்வைக்கிறார். பறவை, மிருகக் கழிவுகளை தோட்டத்தில் கொட்டி செய்யப்படும் இயற்கை முறையிலான விவாசாயத்தை சில பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குப்பை விவசாயம் என கேலி செய்வதாகவும், குறித்த விவசாய செய்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுவதாகவும் இவர்களின் இத்தகைய செயலால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டே செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். தான் இவர்களின் அநீதியை எதிர்த்து போராடி வருவதாகவும் குறிப்பிடுகிறார். பப்பாசி செய்கையை வெற்றிகரமாக இயற்கை விவசாயம் மூலம் செய்து சாதித்திருக்கிறார் பாலா. பன்றிக்கழிவுகளை மட்டும் இட்டு ஒரு மரத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பப்பாசிக் காய்களைப் பறித்திருக்கிறார்.அதே போல் பன்றிக்கழிவுகளை மாத்திரம் இட்டு நட்ட நாட்டு மிளகாய் நல்ல விளைச்சலை கொடுத்திருக்கின்றது. அதனை விவசாய திணைக்கள அதிகாரிகளே பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். கோழிப்பண்ணையையும் சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறார். வடமாகாணத்தின் சிறந்த கோழிப்பண்ணையாளர் விருதும் வடமாகாண சபை ஊடாக இவருக்கு கிடைத்துள்ளது. விவசாய ஆராய்ச்சிகளுக்கு என்றே வருடா வருடம் குறிப்பிட்ட தொகையை செலவழித்து வருகிறார். அதில் பல நல்ல முடிவுகளையும் பெற்றிருக்கிறார். அடுத்து வரும் வருடங்களில் பல பரீட்சார்த்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக கூறுகிறார். இதையெல்லாம் தாண்டி மாடு, ஆட்டுக்கு தேவையான தானியக் கலவை தீவனத்தை இயற்கை முறையில் பரீட்ச்சார்த்த முறையில் உற்பத்தி செய்து வருகிறார். அதற்கான இயந்திரங்களையும் இவரே வடிவமைத்துள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் இவரது மாட்டுத்தீவனத்தினை விரும்பி வாங்கி கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர். சோளம், கடலைக் கோதுகள், எள்ளுப் பிண்ணாக்கு உள்ளிட்ட பல தானியங்களை குறித்த தீவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு மணித்தியாலத்துக்கு 500 இலிருந்து 700 கிலோ தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும். 8 பரப்பு நிலத்தில் தூறல் நீர்ப்பாசன கட்டமைப்பை ஏற்படுத்தி co-3 வகை புல்லை வளர்த்து அதில் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டேன். மாடு வளர்ப்பதற்கு முதல் புல்லு வளர்க்க வேண்டும். என்னால் ஒரு கிலோ புல்லை 2 ரூபாவுக்கு உற்பத்தி பண்ண முடியும். அதனை 10 ஏக்கரில் மேற்கொண்டால் குறைந்தது 100 மாடுகளை வளர்க்க முடியும் . மண்ணெண்ணையில் நீர் இறைக்கும் இயந்திரம் இயங்குவதற்கு அண்ணளவாக மணித்தியாலத்துக்கு 100 ரூபாய்கள் செலவாகிறது. இதையே மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் மூலம் செய்தால் 20 ரூபாவிற்குள் தான் செலவாகும். இங்கு பெரிதாக எந்த விவசாயியும் மின்சார மோட்டரைப் பாவிப்பதில்லை. விவசாயிகள் ஆராய்ச்சியில் இறங்கவேண்டிய நேரம் இது. சுகாதாரப் பரிசோதகர்களுக்கு எது நல்லது? எது கூடாது? எது மக்களுக்கு அவசியமானது என்கிற விடயங்கள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இயற்கை விவசாயம் என்றால் மாட்டெரு இருக்கும், கோழி எரு இருக்கும், இலைதழைகள் இருக்கும். இவை எல்லாம் இருக்கும் எருவை மண்ணில் பரவி விட்டால் சூரிய ஒளிபட்டு மண்புழுக்கள் உருவாகி மண்ணை மிருதுவாக்கும். ஆனால் இந்த அதிகாரிகளோ குப்பைகளை வெளியில் போடாமல் மூடி விடச் சொல்கிறார்கள். அவர்களுக்கு முதலில் இயற்கை விவசாய முறைமையை சரியாக விளங்கப்படுத்த வேண்டிய தேவை சம்பந்தப்பட்ட துறைக்கு இருக்கிறது. நுளம்பை உண்ணும் பூச்சியினங்கள் அழிக்கப்பட்டமையும் தான் நுளம்புப்பெருக்கம் அதிகரித்தமைக்கு ஒரு காரணம். அதீத இரசாயனப் பாவனைகளால் தும்பி போன்ற பூச்சியினங்கள் அழிந்து போயுள்ளன. குளமும், குட்டையும் இருந்தால் அதற்குள் கப்பீஸ் ரக மீனை விட்டாலே போதும் அங்கு நுளம்புக் குடம்பிகளே உருவாகாது. நான் அதனை நடைமுறை அனுபவத்தில் கண்டுள்ளேன். இங்கு பண்ணையில் ஒரு சிறிய குட்டையை உருவாக்கி அதில் பெரிய மீன்கள் வளர்த்தேன். அப்போது நுளம்புப் பெருக்கம் குறைவாக இருந்தது. எப்போது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கட்டளையிட்ட படி அதனை மூடினேனோ அன்றிலிருந்து நுளம்புப் பெருக்கம் அதிகரித்து விட்டது. நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு விவாசாயிகளின் கைகளில் தான் உள்ளது. விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதனை அதிகாரிகளும் ஊக்குவிக்க வேண்டும். விவசாயி ஒருவர் பொருளை தான் நினைத்த மாதிரி சந்தைப்படுத்த முடியாது. அதற்கு பிரதேச சபைகள்> நகர சபைகள் தடையாக உள்ளன. விவசாயிகள் சில அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக குரலை உயர்த்தாவிட்டால் விவசாயம் எங்கள் பிரதேசத்தில் நிலைத்து நிற்காது. இவ்வாறாக கூறி முடித்தார் பாலா. இவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குள் குறித்து தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார் அவர்களிடம் வினாவினோம். ஒரு சில சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்கு இயற்கை விவசாயம், அசோலா வளர்ப்பு முறைகள் தொடர்பில் சரியான விளக்கங்களும் இல்லாமல் இருக்கலாம். இப்படியானவர்களுக்கு சரியான தெளிவூட்டல்களை செய்யும் கருத்தமர்வுகளை எதிர்காலத்தில் நிச்சயமாக சுகாதாரத் திணைக்களம் செய்யும். தோட்டங்களில் இயற்கை கழிவுகளை கொட்டிச் செய்யும் விவசாயத்துக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. சீமெந்து தொட்டி கட்டி அதற்குள் இயற்கை (கோழி, பன்றி) கழிவுகளை விட வேண்டும் என்கிற நிபந்தனையும் கிடையாது. இதையும் தவிர சுகாதாரப் பிரிவினர் குடிசைக் கைத்தொழில்களையும் நசுக்குகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இதனை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம். குடிசைக் கைத்தொழில்கள் இடம்பெறும் வீடுகளில் நிலத்தில் மாபிள் பதிக்க வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இல்லை. உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்தால் போதுமானது. எங்களுடைய உள்ளூர் உற்பத்திகளை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார். எமது சுயபொருளாதாரத்தை வளப்படுத்தும் முதுகெலும்புகளான இப்படியான இளைஞர்களை தட்டிக் கொடுத்து முன்னேற்ற வேண்டியது எம் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். இல்லாவிடின் நாளை அனைத்துக்கும் இன்னொருவரிடம் கையேந்தும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதனை தவிர்க்க முடியாது. தொடர்புக்கு: பாலமுருகன் - 0777 048 972 http://www.nimirvu.org/2018/04/blog-post_30.html

யாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா

3 months 2 weeks ago
யாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா
 
 
20180221_174806.jpg

"செய் அல்லது செத்து மடி." யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில்

 பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசகம் இது.  இவ்வலுவலகம் வெற்றிகரமான தொழில் முனைவோராக இப்பண்ணையினை(VSP Farm) நடாத்தி வரும் பரமசிவம் பாலமுருகனுக்கு சொந்தமானது. விவசாயம், பண்ணை விலங்கு வளர்ப்பு, சந்தைப்படுத்தல் என்பவற்றை கடந்த எட்டு வருடங்களாக சிறந்த முறையில் இவர் செய்து வருகிறார். முக்கியமாக கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு ஆகியவற்றோடு முருங்கை, வாழை மற்றும் விவசாய பயிர்களையும் வெற்றிகரமாக இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார்.

பாலமுருகன் பலருக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கியுள்ளார். இந்த சமூகத்துக்கு தான் கற்றுக் கொண்ட விடயங்களை கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். தன்னைப் போல பல முயற்சியாளர்களையும் உருவாக்கி விடுவதிலும் அக்கறையுடன் இருக்கிறார். பாடசாலையில் உயர்தரப் படிப்பை முடித்துவிட்டு எலக்ரோனிக் எஞ்சினியரிங் படித்துள்ள இவர் இயந்திரங்களை வடிவமைக்கும் திறனையும் பெற்றிருக்கிறார்.
 
IMG-16be161203e1bbb58e04b6c9e59db523-V.jpg

இவரது பண்ணை அலுவலக கதவில் தொங்குகின்ற அந்த வாசகத்துக்கு ஏற்ப செயலிலும், சொல்லிலும் வேகமும் விவேகமும் தெரிகிறது. எந்த விடயத்தை எடுத்தாலும் அதனை திறம்பட அர்ப்பணிப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் பாலமுருகன் என இவரது பணியாளர்களே புகழாரம் சூட்டுகின்றனர். நஞ்சில்லா உணவை நோக்கிய பயணத்தை தான் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மூலம் தொடங்கியிருப்பதாக கூறுகிறார் பாலா. அந்த இலக்கை அடைவதற்காக உறுதியூடன் பயணித்தும் வருகின்றார்.
 

முழுக்க முழுக்க அவரது சொந்தப் பணத்தில் முறையான அனுமதிகளை எல்லாம் பெற்று தொடங்கப்பட்ட பண்ணைக்கு இன்று நெருக்கடியாக வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினர் உள்ளனர் என்பது தான் வேதனையான செய்தி.    இயற்கை வழி விவசாயத்துக்கு சில பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) தடைக்கல்லாக இருப்பதாக பாலா முறையிடுகிறார். சில பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் “உற்பத்திகளை முடக்க வந்த அரசின் கூலிப்படைகள்" என கடுமையான விமர்சனத்தினையும் முன்வைக்கிறார்.
 
IMG-0a9e0a93f0dbd8cc2118d6324faf4856-V%2B%25281%2529.jpg

பறவை, மிருகக் கழிவுகளை தோட்டத்தில் கொட்டி செய்யப்படும் இயற்கை முறையிலான விவாசாயத்தை சில பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குப்பை விவசாயம் என கேலி செய்வதாகவும், குறித்த விவசாய செய்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுவதாகவும் இவர்களின் இத்தகைய செயலால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டே செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். தான் இவர்களின் அநீதியை எதிர்த்து போராடி வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

பப்பாசி செய்கையை வெற்றிகரமாக இயற்கை விவசாயம் மூலம் செய்து சாதித்திருக்கிறார் பாலா. பன்றிக்கழிவுகளை மட்டும் இட்டு ஒரு மரத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பப்பாசிக் காய்களைப் பறித்திருக்கிறார்.அதே போல் பன்றிக்கழிவுகளை மாத்திரம் இட்டு நட்ட நாட்டு மிளகாய் நல்ல விளைச்சலை கொடுத்திருக்கின்றது. அதனை விவசாய திணைக்கள அதிகாரிகளே பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

IMG-3d3d447acfee5137be5fce0604a0284b-V.jpg

கோழிப்பண்ணையையும் சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறார். வடமாகாணத்தின் சிறந்த கோழிப்பண்ணையாளர் விருதும் வடமாகாண சபை ஊடாக இவருக்கு கிடைத்துள்ளது.

விவசாய ஆராய்ச்சிகளுக்கு என்றே வருடா வருடம் குறிப்பிட்ட தொகையை செலவழித்து வருகிறார். அதில் பல நல்ல முடிவுகளையும் பெற்றிருக்கிறார். அடுத்து வரும் வருடங்களில் பல பரீட்சார்த்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக கூறுகிறார்.
 
இதையெல்லாம் தாண்டி மாடு, ஆட்டுக்கு தேவையான தானியக் கலவை தீவனத்தை இயற்கை முறையில் பரீட்ச்சார்த்த முறையில் உற்பத்தி செய்து வருகிறார். அதற்கான இயந்திரங்களையும் இவரே வடிவமைத்துள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் இவரது மாட்டுத்தீவனத்தினை விரும்பி வாங்கி கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர். சோளம், கடலைக் கோதுகள், எள்ளுப் பிண்ணாக்கு உள்ளிட்ட பல தானியங்களை குறித்த தீவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.   ஒரு மணித்தியாலத்துக்கு 500 இலிருந்து 700 கிலோ தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும்.

 8 பரப்பு நிலத்தில் தூறல் நீர்ப்பாசன கட்டமைப்பை ஏற்படுத்தி co-3 வகை புல்லை வளர்த்து அதில் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டேன். மாடு வளர்ப்பதற்கு முதல் புல்லு வளர்க்க வேண்டும். என்னால் ஒரு கிலோ புல்லை 2 ரூபாவுக்கு உற்பத்தி பண்ண முடியும். அதனை 10 ஏக்கரில் மேற்கொண்டால் குறைந்தது 100 மாடுகளை வளர்க்க முடியும் .

மண்ணெண்ணையில் நீர் இறைக்கும் இயந்திரம் இயங்குவதற்கு அண்ணளவாக மணித்தியாலத்துக்கு 100 ரூபாய்கள் செலவாகிறது. இதையே மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்  மூலம் செய்தால் 20 ரூபாவிற்குள் தான் செலவாகும். இங்கு பெரிதாக எந்த விவசாயியும் மின்சார மோட்டரைப் பாவிப்பதில்லை. விவசாயிகள் ஆராய்ச்சியில் இறங்கவேண்டிய நேரம் இது.

சுகாதாரப் பரிசோதகர்களுக்கு எது நல்லது? எது கூடாது? எது மக்களுக்கு அவசியமானது என்கிற விடயங்கள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இயற்கை விவசாயம் என்றால் மாட்டெரு இருக்கும், கோழி எரு இருக்கும், இலைதழைகள் இருக்கும். இவை எல்லாம் இருக்கும் எருவை மண்ணில் பரவி விட்டால் சூரிய ஒளிபட்டு மண்புழுக்கள் உருவாகி மண்ணை மிருதுவாக்கும். ஆனால் இந்த அதிகாரிகளோ குப்பைகளை வெளியில் போடாமல் மூடி விடச் சொல்கிறார்கள். அவர்களுக்கு முதலில் இயற்கை விவசாய முறைமையை சரியாக விளங்கப்படுத்த வேண்டிய தேவை சம்பந்தப்பட்ட துறைக்கு இருக்கிறது.
 
IMG-d5e39fdfc5c543464d838144ab3d8909-V.jpg

நுளம்பை உண்ணும் பூச்சியினங்கள் அழிக்கப்பட்டமையும் தான் நுளம்புப்பெருக்கம் அதிகரித்தமைக்கு ஒரு காரணம். அதீத இரசாயனப் பாவனைகளால் தும்பி போன்ற பூச்சியினங்கள் அழிந்து போயுள்ளன.     குளமும், குட்டையும் இருந்தால் அதற்குள் கப்பீஸ் ரக மீனை விட்டாலே போதும் அங்கு நுளம்புக் குடம்பிகளே உருவாகாது.   நான் அதனை நடைமுறை அனுபவத்தில் கண்டுள்ளேன். இங்கு பண்ணையில் ஒரு சிறிய குட்டையை உருவாக்கி அதில் பெரிய மீன்கள் வளர்த்தேன். அப்போது நுளம்புப் பெருக்கம் குறைவாக இருந்தது. எப்போது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கட்டளையிட்ட படி அதனை மூடினேனோ அன்றிலிருந்து நுளம்புப் பெருக்கம் அதிகரித்து விட்டது.

நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு விவாசாயிகளின் கைகளில் தான் உள்ளது.   விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதனை அதிகாரிகளும் ஊக்குவிக்க வேண்டும். விவசாயி ஒருவர் பொருளை தான் நினைத்த மாதிரி சந்தைப்படுத்த  முடியாது. அதற்கு பிரதேச சபைகள்> நகர சபைகள் தடையாக உள்ளன. விவசாயிகள் சில அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக குரலை உயர்த்தாவிட்டால் விவசாயம் எங்கள் பிரதேசத்தில் நிலைத்து நிற்காது.  இவ்வாறாக கூறி முடித்தார் பாலா.
 
IMG-e794ac48fb9c8dc9b4f43a98f223c678-V.jpg

இவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குள் குறித்து தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார் அவர்களிடம் வினாவினோம். ஒரு சில சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்கு  இயற்கை விவசாயம், அசோலா வளர்ப்பு முறைகள் தொடர்பில் சரியான விளக்கங்களும் இல்லாமல் இருக்கலாம். இப்படியானவர்களுக்கு சரியான தெளிவூட்டல்களை செய்யும் கருத்தமர்வுகளை எதிர்காலத்தில் நிச்சயமாக சுகாதாரத் திணைக்களம் செய்யும். தோட்டங்களில் இயற்கை கழிவுகளை கொட்டிச் செய்யும் விவசாயத்துக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. சீமெந்து தொட்டி கட்டி அதற்குள் இயற்கை (கோழி, பன்றி) கழிவுகளை விட வேண்டும்  என்கிற நிபந்தனையும் கிடையாது.

இதையும் தவிர சுகாதாரப் பிரிவினர் குடிசைக் கைத்தொழில்களையும் நசுக்குகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இதனை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம். குடிசைக் கைத்தொழில்கள் இடம்பெறும் வீடுகளில் நிலத்தில் மாபிள் பதிக்க வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இல்லை. உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்தால் போதுமானது. எங்களுடைய உள்ளூர் உற்பத்திகளை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

எமது சுயபொருளாதாரத்தை வளப்படுத்தும் முதுகெலும்புகளான இப்படியான இளைஞர்களை தட்டிக் கொடுத்து முன்னேற்ற வேண்டியது எம் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். இல்லாவிடின் நாளை அனைத்துக்கும் இன்னொருவரிடம் கையேந்தும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதனை தவிர்க்க முடியாது.

                                    தொடர்புக்கு: பாலமுருகன் - 0777 048 972

http://www.nimirvu.org/2018/04/blog-post_30.html

உதவி: 3 கிழமைகளுக்குள் தன் பெற்றோரை ஒவ்வொருவராக இழந்த என் நண்பனின் 6 வயது மகன்

3 months 2 weeks ago
மிகவும் வேதனையாகவுள்ளது. வாழ்க்கையில் ஏன் சில விடயங்கள் இப்படி ந‌டக்கின்றது? நல்லதொரு வாழக்கையை சிறுவனுக்கு இறைவன் அமைத்துக்கொடுப்பார்.

விக்கினேஸ்வரனின் எதிர்காலம்

3 months 2 weeks ago
விக்கினேஸ்வரனின் எதிர்காலம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் காட்டியுள்ளார். மீண்டும் முதலமைச்சர் வேட்பாளாராக தன்னை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்துவதற்கான சாத்தியம் குறைவு என்று கூறியுள்ளார். அவ்வாறு அழைக்காத பட்சத்தில் ஒரு மாற்று அணியை உருவாக்கி மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேட்பாளராக தான் தயார் என்றும் கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கும் படி தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிக் கட்சிகள் விக்னேஸ்வரனை பல காலமாக வருந்தி அழைத்திருந்தனர். இப்பங்காளிக் கட்சிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் அடக்கம். மாற்று அணியொன்றை உருவாக்கி இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்ய வேண்டியது என்ன என்று கூட்டமைப்புக்கும் சர்வதேசத்துக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை நிறையவே இருந்தது. ஆனால் அதற்கு முதலமைச்சர் எந்தவொரு சாதகமான பதிலையும் வழங்கவில்லை. 2017 ஆம் ஆண்டு ஆனி மாதமளவில் வட மாகாண சபையில் அவர் மீது தமிழரசுக் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். அதனை எதிர்த்து வடமாகாணமெங்கும் மக்கள், முக்கியமாக இளைஞர்கள், கொதித்து எழுந்தனர். அவர்கள் நடத்திய பேரணியின் இறுதியில் தனது இல்லத்தில் அவர்களைச் சந்தித்த முதல்வர் “நான் உங்களுடன் இருப்பேன்” என வாக்குறுதி வழங்கினார். மாற்று அணிக்குத் தலைமை தாங்க வரும் படி அப்பொழுது இளைஞர்கள் விடுத்த கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை. மாற்று அணியை உருவாக்குவதற்காக கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை அவர் தவற விட்டார். அண்மையில் உள்ளூராட்சித் தேர்தல்களை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் இணைந்து தேர்தலில் போட்டியிட முன்வந்தன. அதற்கு தமிழ் மக்கள் பேரவையின் ஆசியை வேண்டி நின்றன. உண்மையிலேயே மறைமுகமாக அவர்கள் வேண்டியது தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரான முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையையே. அப்பொழுதும் மாற்று அணிக்குத் தலைமை தாங்க கிடைத்த பொன்னான வாய்ப்பைத் தவற விட்டார். அது மட்டுமல்லாமல் உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் பேரவையூடாக ஒரு கட்சி சார்பற்ற மக்களின் தலைமை உருவாகுவதற்கான சந்தர்ப்பத்தையும் தவற விட்டார். தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை செல்வாக்குச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டது. எமது தேசத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் இது போன்ற அரிய சந்தர்ப்பங்கள் அரசியல் கட்சிகளுக்கும் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுக்கும் அவ்வப்போது கிடைத்தன. அப்போதிருந்த தலைமைகள் அச்சந்தர்பங்களின் தார்ப்பரியத்தைப் புரியாமலும் ஒரு தொலைநோக்கப் பார்வை இல்லாமலும் அவற்றைத் தவற விட்டன. அதனால் எமது இனம் இழந்த இழப்புக்கள் சொல்ல முடியாதவை. முதல்வர் விக்னேஸ்வரனும் தனக்குக் கிடைத்த மூன்று அரிய சந்தர்ப்பங்களையும் இதே போன்று தவற விட்டுள்ளார். அவற்றை சரிவரப் புரிந்து கொண்டு பயன்படுத்தும் அரசியல் விற்பன்னம் அவரிடம் இருக்கவில்லை. அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு தனக்கு சந்தர்ப்பம் வழங்கப் போவதில்லை என்ற தொலைநோக்குப் புரிதலும் இருக்கவில்லை. துணிச்சலாக முடிவெடுக்கும் தன்மையும் அவரிடம் இல்லை. அதே வேளை இன்று வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் ஆட்சி மாற்றம் தொடர்பாக ஒரு நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலை எழுந்துள்ளது. இதில் விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் ஒரு அணி எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்த முடியும் என்பது கேள்விக் குறியே. இதுமுதல்வர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அல்ல. ஆழமான அரசியல் முன்னனுபவம் இல்லாமையால் எழும் குறைபாடு தொடர்பான விமர்சனம். தேர்தல்களில் தமக்கு ஏற்பட்ட முன்னேற்றங்களை வைத்துக் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தாமே ஒரு மாற்றுத் தலைமை என கருத முற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னொரு மாற்று அணி அல்லது மாற்றுத் தலைமையின் தோற்றம் தமிழ் மக்களை மேலும் பிளவு படுத்தவே செய்யும். அது சிங்கள அரசாங்கத்துக்கு மேலும் வாய்ப்பாகப் போய்விடும். தமிழ் தேசியத்தை வலுவாக ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்று தாமே மக்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்று நிரூபிக்கும் வரை இக்கட்சிகளின் கோரிக்கைகள் அந்தக் கட்சி நலன் சார்ந்த கோரிக்கைகளாகவே பார்க்கப் படும். எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதவிடத்து சிறி லங்கா அரசும் சர்வதேசமும் தம்மோடு ஒத்துப் போகும் கட்சிகளுடன் பேசிக் கொண்டு ஒரு தீர்வுத்திட்டத்தை எம்மக்கள் மீது திணிப்பதற்கு முற்படும். இதையே நாங்கள் இன்று நடைமுறையில் காண்கிறோம். ஆனால் தமிழ் மக்கள் பேரவை போன்ற ஒரு கட்சி சாரா வெகுஜன அமைப்பினூடாக ஒரு தலைமையைக் கட்டியமைத்து அதனூடாக நம் கோரிக்கைகளை முன்வைப்போமானால்அக்கோரிக்கைகள்கட்சிசார் அரசியல் பேரங்களுக்கு அப்பால் பட்டவை. அதனாலேயே தமிழ் மக்களின் எதிர்கால அரசியலைத் தீர்மானிக்க வேண்டியது தமிழ் மக்கள் பேரவை அல்லது அது போன்ற வெகுஜன அமைப்புக்களே என்று நாம் கருதுகிறோம். ஒரு புறத்தில் தமிழ் மக்களின் நிர்க்கதியான நிலை கண்டு முதல்வர் விக்னேஸ்வரன் மனங்கலங்குவது தெரிகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கினால் தமிழ் மக்கள் நட்டாற்றில் விடப் பட்டு விடுவார்களே என்ற அவரின் ஆதங்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சட்ட வல்லுனர் என்ற முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணக்க அரசியலால் தமிழ் மக்கள் சட்ட ரீதியாக அடையப் போகும் பின்னடைவுகளை அவரால் எதிர்வு கூறி புரிந்து கொள்ள முடிகிறது. அதனாலேயே தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அறிக்கை விடுகிறார். மேடைகளில் பேசுகிறார். சர்வதேச பிரதிநிதிகளுடன் உரையாடுகிறார். செயற்பாடுகளை மேற்கொள்கிறார். இவ்வாறான சூழலில் அரசியலை விட்டு விலகியிருக்கக் கூடாது என்ற அவரது நல்லெண்ணம் புரிகிறது. தனக்கிருக்கும் அங்கீகாரத்தையும் பிரமுகர் அந்தஸ்த்தையும் பயன் படுத்தி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் புரிகிறது. ஆனால் இவை மட்டுமே அரசியலில் மாற்றுத் தலைமையை நிறுவ போதுமானவை அல்ல. இன்னொரு புறத்தில் முதல்வர் விக்னேஸ்வரனின் சித்திரை திருநாள் கேள்வி பதிலில் இன்னொரு கருத்தும் இங்கு கவனிக்கப் படவேண்டியது. தான் பதவிகளைத் தேடிப் போவதில்லை எனவும் பதவி தன்னைத் தேடி வந்தது எனவும் கூறியுள்ளார். அப்படியாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு அழைத்தால் அவர் அதனை ஏற்றுக் கொள்வார் எனவே படுகிறது. அவ்வாறெனின் அவர் கோடிட்டுக் காட்டிய மாற்று அணி உருவாகாது. அப்படியானால் ஒருவிதத்தில் இதுவும் தேர்தல் நோக்கிய அரசியல் சதுரங்கமாகவே படுகிறது. முதலமைச்சர் கூறும் மாற்று அணி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எந்தவித சமரசமும் இன்றி முன்னிறுத்தும் என்ற நம்பிக்கை போய் கூட்டமைப்புடனான பேரத்துக்கு உதவும் என்ற நிலைக்கு சுருக்கப் பட்டு விட்டது. முதல்வரின் மாற்று அணி பற்றிய முன்மொழிவு கூட கூட்டமைப்பை நோக்கி அழுத்தம் பிரயோகிக்கும் ஒரு தந்திரமாக இருக்குமானால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி இல்லையென்றால் தேர்தல்களை முன்னிட்டு மட்டுமே தமிழ் தலைவர்கள் மாற்றுத் தலைமையைப் பற்றி சிந்திப்பது தமிழ் அரசியலின் சாபக்கேடாக வந்து விட்டது எனலாம். மேலும், முதலமைச்சராக விக்னேஸ்வரனின் நிர்வாகத் திறமையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக பல தரப்புக்களாலும் பல்வேறு தடவைகளிலும் முறைப்பாடுகள் முன்வைக்கப் பட்டன. முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான ஊழல்க் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதில் இவர் காட்டிய அசமந்தப் போக்கு இவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கே இட்டுச் சென்றது. இந்த நிலையில் இவர் இன்னொரு தடவையும் முதலமைச்சர் ஆகும் பட்சத்தில் பழைய குறைபாடுகளை நீக்கி வினைத்திறனுடன் செயற்படுவார் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை. அதாவது மாகாணசபையின் நிர்வாகத்தை நவீனமயப் படுத்தி அடுத்த படிநிலைக்கு ஏற்றுவார் என்பதற்கான சாத்தியங்கள் காணப்படவில்லை. அதேவேளை இனிவரும் முதலமைச்சர் தமிழ்த் தேசியத்தைப் பற்றி நின்றால் மட்டும் போதாது. இனிவரும் முதலமைச்சர் காணாமல் போனோரைத் தேடும் போராட்டத்துக்கு வெறுமனே ஆதரவு வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு இருந்து விட முடியாது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் கையாள வேண்டிய தேவையுள்ளது. காணிவிடுவிப்பும் முக்கியம். இப்பிரச்சனைகளை மாகாணசபை ஒரு நிறுவன ரீதியில் கையேற்க வேண்டும். போராடும் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத் தர தனது நிறுவனத்தைப் பயன் படுத்துவதற்கு எதிர்கால முதலமைச்சர் தயங்கக் கூடாது. இவ்வாறான துணிச்சலான முடிவை எடுக்கக்கூடியவர் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்னும் நிரூபிக்கவில்லை. வடமாகாண முதலமைச்சராகி தொடர்ந்தும் அதன் செயற்பாடுகளை மத்திய அரசாங்கம் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் வெறும் ஒரு நிர்வாக இயந்திரமாகத் தொடரும் முதலமைச்சர்தமிழ் மக்களுக்கு தேவை இல்லை. அந்த நிறுவனத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன் படுத்தி எமது மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடிய முதலமைச்சரே தேவை. மேலே உள்ள பந்தியிற்கூறப்பட்ட முக்கியமான பொறுப்புக்களையும் கையேற்று வினைத்திறனுடன் செயலாற்றக் கூடிய தலைமயின் கையில் அப்பதவியை ஒப்படைப்பதே இன்றைய தேவை.அவ்வாறு செயலாற்றக் கூடியவராக இதுவரை பதவி வகித்த முதல்வர் காணப்படவில்லை. இனப்படுகொலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதுடன் தமது அரசியல் கடமை முடிந்து விட்டது என மாகாணசபை நின்று விட்டது.இனப்படுகொலையின் தொடர்ச்சியாக இன்றும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்குத் தலைமையேற்க தவறி விட்டது. அந்த தீர்மானத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசுகளுடன் ஒரு நிறுவன ரீதியான அரசியல் நடவடிக்கைகளை வடமாகாண சபை எடுக்கவில்லை. அதேவேளை, வடமாகாண முதலமைச்சர் பதவியைத் தாண்டிய கடமைகளை செய்யக்கூடயவராக நீதியரசர் விக்னேஸ்வரன் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தைத் தாண்டி கிழக்கு மாகாணத்திலும் அபிமானம் பெற்ற தலைவராக விக்னேஸ்வரன் திகழ்கிறார். தமிழ்த் தேசியத்தின் பக்கம் நிற்பவராகவும் அதனூடாக மக்களை வசீகரிப்பவராகவும் அவர் இருக்கிறார்.எனவே தந்தை செல்வா போல முதல்வர் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் ஒன்று திரட்டக் கூடிய குறியீடாகத் திகழ்கிறார். அதனை அவர் தமிழ் மக்களை ஒன்று படுத்தப் பயன்படுத்த வேண்டும். இன்னொரு அணியை ஏற்படுத்திப் பிளவுகளை ஏற்படுத்தப் பயன் படுத்தக் கூடாது. தமிழ் மக்கள் பேரவையை பரந்து பட்ட மக்கள் இயக்கமாக வளர்க்கப் போவதாக முதல்வர் கூறியுள்ளார். தனது தலைமையில் அதனைச் செய்வதே தமிழ் தேசத்துக்கு மேலும் அவர் செய்யக்கூடிய உன்னத மான பணியாகும். வடமாகாணம் தாண்டி கிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் தமிழருக்கு கட்சி பேதத்தைத் தாண்டி தமது தலைமையை வழங்க வேண்டும். அவர் தனது செயற்பாடுகளை அடுத்த மேல் படிநிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவர் ஆரம்பித்த தமிழ் மக்கள் பேரவையை வலுவான பரந்து பட்ட மக்கள் இயக்கமாக கட்ட வேண்டும். அந்த மக்கள் இயக்கத்தின் ஊடாக தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும்மக்களின் அபிலாசைகள் தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த செயற்பாடுகளில் அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு உள்ளது என ஏற்கனவே கண்டுள்ளோம். முற்போக்கான உலகநாடுகளில் இளந்தலைவர்கள் தலைமைப் பதவிகளை ஏற்று அந்நாடுகளின் போக்கை புதிய திசைகளுக்கு திருப்பத் தொடங்கியிருக்கிறார்கள். கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்சின் இமானுவல் மக்றோன் போன்ற இளந்தலைவர்கள் துணிச்சலாக முடிவுகளை எடுக்கிறார்கள். அரசியல் ரீதியாக ஆபத்துக்கள் இருந்த போதும் சிரியாவிலிருந்து பெருந்தொகை அகதிகளைக் கனடாவில் குடியேற்றினார் ஜஸ்டின். சிரியாவில் அரசாங்கம் செய்யும் போர்க்குற்றங்களை விசாரிக்க ஐ.நா.வில் ரஷ்யா பங்கு பற்றாத ஒரு விசேட குழுவை உருவாக்கப் போவதாக கூறியுள்ளார் இமானுவல். இவ்வாறான துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய இளந்தலைவர்களே இன்று வடமாகாணத்துக்குத் தேவை. இளந்தலைவர்களே அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அடிக்கடி கோருவது போல “தமிழினத்தின் அரசியலை நவீனமயப்படுத்தும்” வல்லமை கொண்டவர்கள். 2017 ஆனி மாத நிமிர்வு இதழில் தமிழ்த் தேசியத்தின் குறியீடென முதல்வர் விக்னேஸ்வரனை விழித்திருந்தோம். அதையே இப்பொழுதும் மீளவும் உரக்கவும் சொல்கிறோம். தமிழ் மக்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் திரட்டக் கூடிய குறியீட்டை கட்சி அரசியலுக்குள் மூழ்கடித்து விடக்கூடாது. http://www.nimirvu.org/2018/04/blog-post_96.html

விக்கினேஸ்வரனின் எதிர்காலம்

3 months 2 weeks ago
விக்கினேஸ்வரனின் எதிர்காலம்
 
 
Vik1.jpg

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் காட்டியுள்ளார்.  மீண்டும் முதலமைச்சர் வேட்பாளாராக தன்னை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்துவதற்கான சாத்தியம் குறைவு என்று கூறியுள்ளார். அவ்வாறு அழைக்காத பட்சத்தில் ஒரு மாற்று அணியை உருவாக்கி மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேட்பாளராக தான் தயார் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கும் படி தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிக் கட்சிகள் விக்னேஸ்வரனை பல காலமாக வருந்தி அழைத்திருந்தனர். இப்பங்காளிக் கட்சிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் அடக்கம். மாற்று அணியொன்றை உருவாக்கி இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்ய வேண்டியது என்ன என்று கூட்டமைப்புக்கும் சர்வதேசத்துக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை நிறையவே இருந்தது. ஆனால் அதற்கு முதலமைச்சர் எந்தவொரு சாதகமான பதிலையும் வழங்கவில்லை.

2017 ஆம் ஆண்டு ஆனி மாதமளவில் வட மாகாண சபையில் அவர் மீது தமிழரசுக் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். அதனை எதிர்த்து வடமாகாணமெங்கும் மக்கள், முக்கியமாக  இளைஞர்கள்,  கொதித்து எழுந்தனர்.   அவர்கள் நடத்திய பேரணியின் இறுதியில் தனது  இல்லத்தில் அவர்களைச் சந்தித்த முதல்வர் “நான் உங்களுடன் இருப்பேன்” என  வாக்குறுதி வழங்கினார்.  மாற்று அணிக்குத் தலைமை தாங்க வரும் படி அப்பொழுது இளைஞர்கள் விடுத்த கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை.  மாற்று அணியை உருவாக்குவதற்காக கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை அவர்  தவற விட்டார்.

அண்மையில் உள்ளூராட்சித் தேர்தல்களை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் இணைந்து தேர்தலில் போட்டியிட முன்வந்தன.  அதற்கு தமிழ் மக்கள் பேரவையின் ஆசியை வேண்டி நின்றன.  உண்மையிலேயே மறைமுகமாக அவர்கள் வேண்டியது தமிழ் மக்கள்  பேரவையின்  இணைத்தலைவரான முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையையே.  அப்பொழுதும் மாற்று அணிக்குத் தலைமை தாங்க கிடைத்த பொன்னான வாய்ப்பைத் தவற விட்டார்.

அது மட்டுமல்லாமல் உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் பேரவையூடாக ஒரு கட்சி சார்பற்ற மக்களின் தலைமை உருவாகுவதற்கான சந்தர்ப்பத்தையும் தவற விட்டார்.  தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை செல்வாக்குச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டது.

எமது  தேசத்தின்  விடுதலைக்கான போராட்டத்தில் இது போன்ற அரிய சந்தர்ப்பங்கள் அரசியல் கட்சிகளுக்கும் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுக்கும் அவ்வப்போது கிடைத்தன.  அப்போதிருந்த தலைமைகள் அச்சந்தர்பங்களின் தார்ப்பரியத்தைப் புரியாமலும் ஒரு தொலைநோக்கப் பார்வை இல்லாமலும் அவற்றைத் தவற விட்டன.  அதனால் எமது இனம் இழந்த இழப்புக்கள் சொல்ல முடியாதவை.  முதல்வர்  விக்னேஸ்வரனும் தனக்குக் கிடைத்த மூன்று அரிய சந்தர்ப்பங்களையும் இதே போன்று தவற விட்டுள்ளார். அவற்றை சரிவரப் புரிந்து கொண்டு பயன்படுத்தும் அரசியல் விற்பன்னம் அவரிடம் இருக்கவில்லை. அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு தனக்கு சந்தர்ப்பம் வழங்கப் போவதில்லை என்ற தொலைநோக்குப் புரிதலும் இருக்கவில்லை. துணிச்சலாக முடிவெடுக்கும் தன்மையும் அவரிடம் இல்லை.  அதே வேளை இன்று வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் ஆட்சி மாற்றம் தொடர்பாக ஒரு நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலை எழுந்துள்ளது. இதில் விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் ஒரு அணி எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்த முடியும் என்பது கேள்விக் குறியே. இதுமுதல்வர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அல்ல. ஆழமான அரசியல் முன்னனுபவம் இல்லாமையால் எழும் குறைபாடு தொடர்பான விமர்சனம்.

தேர்தல்களில் தமக்கு ஏற்பட்ட முன்னேற்றங்களை வைத்துக் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தாமே ஒரு மாற்றுத் தலைமை என கருத முற்பட்டுள்ளது.  இந்த நிலையில் இன்னொரு மாற்று அணி அல்லது மாற்றுத் தலைமையின் தோற்றம் தமிழ் மக்களை மேலும் பிளவு படுத்தவே செய்யும். அது சிங்கள அரசாங்கத்துக்கு மேலும் வாய்ப்பாகப் போய்விடும்.  தமிழ் தேசியத்தை வலுவாக ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்று தாமே மக்களின்  ஏகபோக  பிரதிநிதிகள்  என்று  நிரூபிக்கும் வரை இக்கட்சிகளின் கோரிக்கைகள் அந்தக் கட்சி நலன் சார்ந்த கோரிக்கைகளாகவே பார்க்கப் படும்.  எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதவிடத்து சிறி லங்கா அரசும் சர்வதேசமும் தம்மோடு ஒத்துப் போகும் கட்சிகளுடன் பேசிக் கொண்டு ஒரு  தீர்வுத்திட்டத்தை எம்மக்கள் மீது திணிப்பதற்கு முற்படும்.  இதையே நாங்கள் இன்று நடைமுறையில் காண்கிறோம்.

ஆனால் தமிழ் மக்கள் பேரவை போன்ற ஒரு கட்சி சாரா வெகுஜன அமைப்பினூடாக ஒரு தலைமையைக் கட்டியமைத்து அதனூடாக நம் கோரிக்கைகளை முன்வைப்போமானால்அக்கோரிக்கைகள்கட்சிசார் அரசியல் பேரங்களுக்கு அப்பால் பட்டவை.  அதனாலேயே தமிழ் மக்களின் எதிர்கால அரசியலைத் தீர்மானிக்க வேண்டியது தமிழ் மக்கள் பேரவை அல்லது  அது போன்ற  வெகுஜன அமைப்புக்களே என்று நாம் கருதுகிறோம்.

ஒரு புறத்தில் தமிழ் மக்களின் நிர்க்கதியான நிலை கண்டு முதல்வர் விக்னேஸ்வரன் மனங்கலங்குவது தெரிகிறது.  இந்த இக்கட்டான காலகட்டத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கினால் தமிழ் மக்கள் நட்டாற்றில் விடப் பட்டு விடுவார்களே என்ற அவரின் ஆதங்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சட்ட வல்லுனர் என்ற முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணக்க அரசியலால் தமிழ் மக்கள் சட்ட ரீதியாக அடையப் போகும் பின்னடைவுகளை அவரால் எதிர்வு கூறி புரிந்து கொள்ள முடிகிறது.  அதனாலேயே தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அறிக்கை விடுகிறார். மேடைகளில் பேசுகிறார். சர்வதேச பிரதிநிதிகளுடன் உரையாடுகிறார். செயற்பாடுகளை மேற்கொள்கிறார். இவ்வாறான சூழலில் அரசியலை விட்டு விலகியிருக்கக் கூடாது என்ற அவரது நல்லெண்ணம் புரிகிறது.  தனக்கிருக்கும் அங்கீகாரத்தையும் பிரமுகர் அந்தஸ்த்தையும் பயன் படுத்தி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் புரிகிறது. ஆனால் இவை மட்டுமே அரசியலில் மாற்றுத் தலைமையை நிறுவ போதுமானவை அல்ல.

இன்னொரு புறத்தில் முதல்வர் விக்னேஸ்வரனின் சித்திரை திருநாள் கேள்வி பதிலில் இன்னொரு கருத்தும் இங்கு கவனிக்கப் படவேண்டியது.  தான் பதவிகளைத் தேடிப் போவதில்லை எனவும் பதவி தன்னைத் தேடி வந்தது எனவும் கூறியுள்ளார். அப்படியாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு அழைத்தால் அவர் அதனை ஏற்றுக் கொள்வார் எனவே படுகிறது.  அவ்வாறெனின் அவர் கோடிட்டுக் காட்டிய மாற்று அணி உருவாகாது. அப்படியானால் ஒருவிதத்தில் இதுவும் தேர்தல் நோக்கிய அரசியல் சதுரங்கமாகவே படுகிறது.  முதலமைச்சர் கூறும் மாற்று அணி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எந்தவித சமரசமும் இன்றி முன்னிறுத்தும் என்ற நம்பிக்கை போய் கூட்டமைப்புடனான பேரத்துக்கு உதவும் என்ற நிலைக்கு சுருக்கப் பட்டு விட்டது. முதல்வரின் மாற்று அணி பற்றிய முன்மொழிவு கூட கூட்டமைப்பை நோக்கி அழுத்தம் பிரயோகிக்கும் ஒரு தந்திரமாக இருக்குமானால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி இல்லையென்றால் தேர்தல்களை முன்னிட்டு மட்டுமே தமிழ் தலைவர்கள் மாற்றுத் தலைமையைப் பற்றி சிந்திப்பது தமிழ் அரசியலின் சாபக்கேடாக வந்து விட்டது எனலாம்.

மேலும், முதலமைச்சராக விக்னேஸ்வரனின் நிர்வாகத் திறமையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக பல தரப்புக்களாலும் பல்வேறு தடவைகளிலும் முறைப்பாடுகள் முன்வைக்கப் பட்டன.  முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான ஊழல்க் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதில் இவர் காட்டிய அசமந்தப் போக்கு இவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கே இட்டுச் சென்றது.  இந்த நிலையில் இவர் இன்னொரு தடவையும் முதலமைச்சர் ஆகும் பட்சத்தில் பழைய குறைபாடுகளை நீக்கி வினைத்திறனுடன் செயற்படுவார் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.  அதாவது மாகாணசபையின் நிர்வாகத்தை நவீனமயப் படுத்தி அடுத்த படிநிலைக்கு ஏற்றுவார் என்பதற்கான சாத்தியங்கள் காணப்படவில்லை.

அதேவேளை இனிவரும் முதலமைச்சர் தமிழ்த் தேசியத்தைப் பற்றி நின்றால் மட்டும் போதாது.  இனிவரும் முதலமைச்சர் காணாமல் போனோரைத் தேடும் போராட்டத்துக்கு வெறுமனே ஆதரவு வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு இருந்து விட முடியாது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் கையாள வேண்டிய தேவையுள்ளது. காணிவிடுவிப்பும் முக்கியம்.  இப்பிரச்சனைகளை மாகாணசபை ஒரு நிறுவன ரீதியில் கையேற்க வேண்டும்.  போராடும் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத் தர தனது நிறுவனத்தைப் பயன் படுத்துவதற்கு எதிர்கால முதலமைச்சர் தயங்கக் கூடாது. இவ்வாறான துணிச்சலான முடிவை எடுக்கக்கூடியவர் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்னும் நிரூபிக்கவில்லை.

வடமாகாண முதலமைச்சராகி தொடர்ந்தும் அதன் செயற்பாடுகளை மத்திய அரசாங்கம் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் வெறும் ஒரு நிர்வாக இயந்திரமாகத் தொடரும் முதலமைச்சர்தமிழ் மக்களுக்கு தேவை இல்லை.  அந்த நிறுவனத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன் படுத்தி எமது மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடிய முதலமைச்சரே தேவை. மேலே உள்ள பந்தியிற்கூறப்பட்ட முக்கியமான பொறுப்புக்களையும் கையேற்று வினைத்திறனுடன் செயலாற்றக் கூடிய தலைமயின் கையில் அப்பதவியை ஒப்படைப்பதே இன்றைய தேவை.அவ்வாறு செயலாற்றக் கூடியவராக இதுவரை பதவி வகித்த முதல்வர் காணப்படவில்லை.  இனப்படுகொலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதுடன் தமது அரசியல் கடமை முடிந்து விட்டது என மாகாணசபை நின்று விட்டது.இனப்படுகொலையின் தொடர்ச்சியாக இன்றும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்குத் தலைமையேற்க தவறி விட்டது.  அந்த தீர்மானத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசுகளுடன் ஒரு நிறுவன ரீதியான அரசியல் நடவடிக்கைகளை வடமாகாண சபை எடுக்கவில்லை.

அதேவேளை, வடமாகாண முதலமைச்சர்  பதவியைத் தாண்டிய  கடமைகளை செய்யக்கூடயவராக நீதியரசர் விக்னேஸ்வரன் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தைத் தாண்டி கிழக்கு மாகாணத்திலும் அபிமானம் பெற்ற தலைவராக விக்னேஸ்வரன் திகழ்கிறார்.  தமிழ்த் தேசியத்தின் பக்கம் நிற்பவராகவும் அதனூடாக மக்களை வசீகரிப்பவராகவும் அவர் இருக்கிறார்.எனவே தந்தை செல்வா போல முதல்வர் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் ஒன்று திரட்டக் கூடிய குறியீடாகத் திகழ்கிறார். அதனை அவர் தமிழ் மக்களை ஒன்று படுத்தப் பயன்படுத்த வேண்டும். இன்னொரு அணியை ஏற்படுத்திப் பிளவுகளை ஏற்படுத்தப் பயன் படுத்தக் கூடாது.

தமிழ் மக்கள் பேரவையை பரந்து பட்ட மக்கள் இயக்கமாக வளர்க்கப் போவதாக முதல்வர் கூறியுள்ளார். தனது தலைமையில் அதனைச் செய்வதே தமிழ் தேசத்துக்கு மேலும் அவர் செய்யக்கூடிய உன்னத மான பணியாகும். வடமாகாணம் தாண்டி கிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் தமிழருக்கு கட்சி பேதத்தைத் தாண்டி தமது தலைமையை வழங்க வேண்டும். அவர் தனது செயற்பாடுகளை அடுத்த மேல் படிநிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவர் ஆரம்பித்த தமிழ் மக்கள் பேரவையை வலுவான பரந்து பட்ட மக்கள் இயக்கமாக  கட்ட வேண்டும். அந்த மக்கள் இயக்கத்தின் ஊடாக தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும்மக்களின் அபிலாசைகள் தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த செயற்பாடுகளில் அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு உள்ளது என ஏற்கனவே கண்டுள்ளோம்.

முற்போக்கான உலகநாடுகளில் இளந்தலைவர்கள் தலைமைப் பதவிகளை ஏற்று அந்நாடுகளின் போக்கை புதிய திசைகளுக்கு திருப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.  கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்சின் இமானுவல் மக்றோன் போன்ற இளந்தலைவர்கள் துணிச்சலாக முடிவுகளை எடுக்கிறார்கள்.  அரசியல் ரீதியாக ஆபத்துக்கள் இருந்த போதும் சிரியாவிலிருந்து பெருந்தொகை அகதிகளைக் கனடாவில் குடியேற்றினார் ஜஸ்டின். சிரியாவில் அரசாங்கம் செய்யும் போர்க்குற்றங்களை விசாரிக்க ஐ.நா.வில் ரஷ்யா பங்கு பற்றாத ஒரு விசேட குழுவை உருவாக்கப் போவதாக கூறியுள்ளார் இமானுவல்.  இவ்வாறான துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய இளந்தலைவர்களே இன்று வடமாகாணத்துக்குத் தேவை. இளந்தலைவர்களே அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அடிக்கடி கோருவது போல “தமிழினத்தின் அரசியலை நவீனமயப்படுத்தும்” வல்லமை கொண்டவர்கள்.

2017 ஆனி மாத நிமிர்வு இதழில் தமிழ்த் தேசியத்தின் குறியீடென முதல்வர் விக்னேஸ்வரனை விழித்திருந்தோம்.  அதையே இப்பொழுதும் மீளவும் உரக்கவும் சொல்கிறோம்.  தமிழ் மக்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் திரட்டக் கூடிய குறியீட்டை கட்சி அரசியலுக்குள் மூழ்கடித்து விடக்கூடாது.

 

http://www.nimirvu.org/2018/04/blog-post_96.html

ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்தவர்கள் யார்?

3 months 2 weeks ago
இந்த கட்டுரையே ஒரு முரண்பாடு...பிள்ளையான் கொலை செய்ததை நேரில் கண்டவர்கள் இருக்கிறார்கள் என எழுதி போட்டு கடைசிப் பந்தியில் பிள்ளையான் கொலை செய்திருக்காட்டிலும் என்று எழுதுகிறார்.😵

உதவி: 3 கிழமைகளுக்குள் தன் பெற்றோரை ஒவ்வொருவராக இழந்த என் நண்பனின் 6 வயது மகன்

3 months 2 weeks ago
இறந்தவர்களது ஆத்மா சாந்தியடையட்டும்...கணவர்,மனைவி மேல் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார் ...அச் சிறுவன் இத் துயரில் இருந்து சீக்கிரம் மீண்டு வர வேண்டும்....ஒரு சின்ன ஆறுதல் இந்த சிறுவன் புலத்தில் இருக்கிறான்...எத்தனையோ குழந்தைகள் போரில் கண் முன்னே பெற்றோரை இழந்து அனாதரவாய் நிற்கிறார்கள்