நாகர்கோவில் படுகொலை

1995-09-22 அன்று 39 பள்ளிச்சிறார்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்

Aggregator

உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்:

3 months 2 weeks ago
உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்: இன விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமரன் நினைவிடத்திலேயே இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஜூன் 5 1974இல் பொன் சிவகுமாரன் வீரமரணம் அடைந்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டச் செயல்களைப் புரிந்த சிவகுமாரன் பிற்கால ஈழ விடுதலைப் போராட்ட எண்ணத்திற்கும் இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக செயற்பட்டார். இவரது 44ஆவது நினைவு தினம் நாளை ஆகும். இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், முன்னாள் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் நிகழ்வு ஏற்பட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் முதன் முதலில் பகிரங்மான முறையில் சிவகுமாரன் நினைவுகூரப்படுவது இதுவே முதற்தடவையாகும். http://globaltamilnews.net/2018/82211/

உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்:

3 months 2 weeks ago
உரும்பிராயில்  பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்:
 

pon-sivakumaran-d06fdf44-e38a-4013-8236-

 

இன விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமரன் நினைவிடத்திலேயே இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

ஜூன் 5 1974இல் பொன் சிவகுமாரன் வீரமரணம் அடைந்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டச் செயல்களைப் புரிந்த சிவகுமாரன் பிற்கால ஈழ விடுதலைப் போராட்ட எண்ணத்திற்கும் இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக செயற்பட்டார். இவரது 44ஆவது நினைவு தினம் நாளை ஆகும்.

இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், முன்னாள் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் நிகழ்வு ஏற்பட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் முதன் முதலில் பகிரங்மான முறையில் சிவகுமாரன் நினைவுகூரப்படுவது இதுவே முதற்தடவையாகும்.

http://globaltamilnews.net/2018/82211/

எனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது-மன்னாரில் மனோ கணேசன்

3 months 2 weeks ago
எனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது-மன்னாரில் மனோ கணேசன் நாட்டில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன ஒற்றுமையை தோற்றுவிக்கும் வகையில் தமது செயற்பாடுகள் இடம் பெற்று வருவதோடு,வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்ஸீம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மொழி மூலம் சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்தும் பாரிய பொறுப்பை தாம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அரச,அரச சார்பாற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை(4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. -மன்னார் மாவட்ட மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் மனோ கணேசன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய உற்பட அமைச்சின் பிரதி நிதிகள்,அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள்,அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன் போது மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் அரச சார்பற்ற அமைப்புக்கள்,மற்றும் சிவில் அமைப்புக்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு,குறித்த அமைப்பபுக்கள் கடந்த காலங்களில் முகம் கொடுத்த நெருக்கடி தொடர்பிலும்,தற்போதைய அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். தனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது எனவும் கண்மூடித்தனமான வேகமாக மட்டும் இருந்தால் அது ஒரு விபத்தை ஏற்படுத்தி தானும் அழிந்து என் சார்ந்தவர்களையும் அழித்து விடும். எனவே வேகமாக மட்டுமல்ல விவேகமாக சிந்தித்து செயல்பட வேண்டும்என அவர் மேலும் தெரிவித்தார். http://globaltamilnews.net/2018/82205/

எனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது-மன்னாரில் மனோ கணேசன்

3 months 2 weeks ago
எனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது-மன்னாரில் மனோ கணேசன்

DSC_0101.jpg?resize=787%2C525

 

நாட்டில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன ஒற்றுமையை தோற்றுவிக்கும் வகையில் தமது செயற்பாடுகள் இடம் பெற்று வருவதோடு,வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்ஸீம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மொழி மூலம் சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்தும் பாரிய பொறுப்பை தாம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அரச,அரச சார்பாற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை(4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

-மன்னார் மாவட்ட மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் மனோ கணேசன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய உற்பட அமைச்சின் பிரதி நிதிகள்,அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள்,அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் அரச சார்பற்ற அமைப்புக்கள்,மற்றும் சிவில் அமைப்புக்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு,குறித்த அமைப்பபுக்கள் கடந்த காலங்களில் முகம் கொடுத்த நெருக்கடி தொடர்பிலும்,தற்போதைய அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

தனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது எனவும்  கண்மூடித்தனமான வேகமாக மட்டும் இருந்தால் அது ஒரு விபத்தை ஏற்படுத்தி தானும் அழிந்து என் சார்ந்தவர்களையும் அழித்து விடும். எனவே வேகமாக மட்டுமல்ல விவேகமாக சிந்தித்து செயல்பட வேண்டும்என அவர் மேலும் தெரிவித்தார்.

DSC_0076.jpg?resize=787%2C525DSC_0079.jpg?resize=787%2C525DSC_0093.jpg?resize=787%2C525

http://globaltamilnews.net/2018/82205/

சிங்கள வைத்தியர்கள், தாதிகள் யாழில் பணிபுரிவதற்கு என்ன காரணம்?

3 months 2 weeks ago
' விவசாயிகள் மழை நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளதால் மூன்று போகமும் விவசாயம் செய்ய நீராதாரம் இல்லையென்பதை பற்றி நாங்கள் கதைத்தால் நீங்கள் குடிக்கவும் ........... கழுவவும் தண்ணீர் இறக்குமதி ஏற்றுமதி பற்றி கதைக்கிறீர்களே?? காவிரியில் நீர் வரத்து இல்லாமையால் தமிழக விவசாயிகள் படும் அவஸ்தையை பார்க்கவில்லைபோலும்!

மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கும் பிரச்னை..! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை

3 months 2 weeks ago
காவிரி பிரச்னையில் கர்நாடகத்தின் ஒற்றுமை! - காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 16 Chennai: ``காவிரிப் பிரச்னையில் கருணாநிதி கடந்த 20 ஆண்டுகளாகச் செய்யக்கூடாததைச் செய்தும், செய்ய வேண்டியதைச் செய்யாமலும் விட்ட பெருங்குற்றங்களால்தான், நாம் இன்று காவிரியை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலாது” என்று கருணாநிதி மீது குற்றம்சாட்டுகிறார் பூ.அர.குப்புசாமி. கருணாநிதி மீது விமர்சனம்! குப்புசாமி மட்டுமல்ல... இன்னும் பலரும் காவிரிப் பிரச்னையில் கருணாநிதி மீது குற்றம் சுமத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் அவர், “இந்திரா காந்தியின் பேச்சைக் கேட்டு, காவிரி வழக்கை உச்ச நீதிமன்றத்திலிருந்து கருணாநிதி திரும்பப் பெறாமல் இருந்திருந்தால், 1975-ம் ஆண்டுவாக்கிலேயே நடுவர் மன்றம் அமைக்கப்பட்டிருக்கும். கர்நாடகாவைப் பொறுத்தவரை, காவிரி விஷயத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் பேசி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு வந்த தி.மு.க. அரசு அதுபோன்று செய்யவில்லை” என்ற விமர்சனத்தை கருணாநிதி மீது வைக்கிறார். இவர் மட்டுமல்ல... இன்னும் பலரும் இன்றுவரை கருணாநிதி மீது விமர்சனத்தை வைக்கின்றனர். தனி திறமைசாலி! இப்படி, காவிரி விவகாரம் பற்றி எரியும்போதெல்லாம் தி.மு.க. மீதும், அதன் தலைவர் கருணாநிதி மீதும் விமர்சனம் வைக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் தமிழகத்துக்கானத் தண்ணீரைக் கேட்டு வாங்கிவிடுவதில் கருணாநிதி மிகச் சிறந்த திறமைசாலி என்கிறார் முன்னாள் பிரதமர் தேவகவுடா. இதுகுறித்து ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்ற புத்தகத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில், “தமிழகம் - கர்நாடகம் என்றாலே, காவிரிப் பிரச்னைதானே முதலில் வந்து நிற்கும். பொதுவாக, பற்றாக்குறையால் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்படும்போது, தமிழக முதல்வராக இருப்பவர், கர்நாடக முதல்வரிடம் பேசுவதும், தண்ணீர் திறந்துவிடுமாறு கடிதம் எழுதுவதும் வழக்கம். ஆனால், கருணாநிதி எப்படியாவது தண்ணீரைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காகப் புதுப்புது யுக்திகளைக் கையாள்வார். கர்நாடகத்தில் தேவராஜ் அர்ஸ் முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்தச் சமயத்தில், அங்கே நான் (தேவகவுடா) எதிர்க் கட்சித் தலைவராக இருந்தேன். தேவராஜ் அர்ஸை நேரில் சந்தித்த கருணாநிதி, ‘தமிழக விவசாயிகள் தவிக்கிறார்கள்; மறுத்துவிடாதீர்கள்’ என்று அவரிடம் தண்ணீருக்காக மிகவும் உருக்கமாகக் கோரிக்கை விடுத்தார். நீங்களும் ஒரு விவசாயி! இதுதொடர்பாக தேவராஜ் அர்ஸை நேரில் சந்தித்த நான், ‘எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது’ என்று எச்சரித்துவிட்டு வந்தேன். இந்தச் சூழலில், தேவராஜ் அர்ஸைச் சந்தித்ததோடு, யாருமே எதிர்பாராத வண்ணம் என்னையும் வந்து சந்தித்தார், கருணாநிதி. அப்போது அவர், ‘நீங்களும் ஒரு விவசாயி; சக விவசாயிகளின் வலியைக் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்... மனதுவையுங்கள்’ என்று என் கையைப் பற்றிக்கொண்டு கேட்டார். இந்த அணுகுமுறை என்னை நெகிழச் செய்துவிட்டது. அன்று தொடங்கி கவனித்துவருகிறேன். அவர், முதல்வராக இருக்கும் காலகட்டத்தில் இதுபோன்று எப்படியாவது பேசி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரை வாங்கிவிடுவார்” என்று தெரிவித்திருக்கிறார் நெகிழ்ச்சியுடன். எப்போதும் கர்நாடகத்திடமிருந்து கடுகளவுகூடத் தண்ணீரை வாங்க முடியாத சூழலில், இப்படியெல்லாம் கருணாநிதி ஏதாவது ஒன்றைச் சொல்லி உரிய நேரத்தில் தண்ணீரை வாங்கியிருக்கிறார் என்றால், உண்மையிலேயே நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். அப்படி, ஒருவேளை தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்காதநிலை வந்தால்கூட, தஞ்சையை வளர்ச்சிக்குள் கொண்டுவந்து விடுவார் என்கிறார், தி.மு.க. மூத்தத் தலைவர் எல்.கணேசன். அவர், “தஞ்சைக்கு நீர் வராமல் தரிசாகி விட்டாலும், கலைஞர் தஞ்சையைத் தொழில் மயமாக்கிவிடுவார்” என்கிறார். காவிரியைப் பற்றிப் பேசக்கூடாது! தமிழக அரசியல் வரலாற்றில், ஏன் இந்திய அரசியலிலும்கூட கருணாநிதிக்கென்று நிச்சயமாக தனியானதொரு இடமுண்டு. அந்த வரலாற்றின் ஓர் அத்தியாயத்தில் காவிரி பற்றிய செய்திகளிலும் கருணாநிதி இடம்பிடித்திருப்பார். தி.மு.க-வின் முக்கியத் தலைவரும், கருணாநிதியின் அக்காள் மகனுமான முரசொலி மாறனின் புதல்வர் கலாநிதி மாறன் - காவேரி திருமண வரவேற்பில் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய தி.மு.க. பிரமுகர்கள் பலரும், ``தலைவர் (கருணாநிதி), ‘காவிரி’யைத் (கலாநிதி மாறனின் மனைவி கர்நாடகத்தைச் சேர்ந்தவர்) தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டார்” என்றனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கலாநிதி மாறனுக்கு மணமுடித்ததால், இவ்வாறு பலரும் பேசினர். இறுதியில் பேசிய எஸ்.ஆர்.பொம்மை, ``காவிரியைக் கேட்டீர்கள்... கொடுத்துவிட்டோம். பிரச்னை முடிந்தது; இனி, யாரும் காவிரி வேண்டும் எனப் பேசக்கூடாது” என்றார். இந்தக் கூற்றைப் பார்க்கும்போது, கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரும் எந்த முதல்வரானாலும், அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவரானாலும், `தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட மாட்டோம்’ என்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்; இருந்துகொண்டு வருகிறார்கள் என்பதை நாம் தற்போதுவரை தெளிவாக உணர முடிகிறது. அதேபோல், கர்நாடகத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், தமிழகத்தில் மட்டும் காவிரிக்கு ஆதரவாகத் தலைகீழ் மாற்றம் இருக்கிறது. அதேபோல், கடந்த 2009-ம் ஆண்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை எல்லாம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அந்தச் சமயத்தில் மருத்துவர், அங்கிருந்த பெண் செவிலியரிடம், ``மயக்கம் தெளிந்து பேஷன்ட் விழிக்கும்போது, அனஸ்தீஸியாவின் பாதிப்பால் தண்ணீர் தாகம் எடுக்கும். ஆனாலும் அதிக அளவில் தண்ணீர் கொடுத்துவிடக் கூடாது. அது, உடல்நிலையைப் பாதிக்கும். எனவே, நாக்கு நனையும்படி சில சொட்டு நீரை மட்டும் கொடுங்கள்” என்று அறிவுறுத்திவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார். கருணாநிதிக்கு மெள்ள மயக்கம் தெளிய ஆரம்பித்தது. மருத்துவர் சொல்லியிருந்ததுபோலவே, அவருக்குத் தாகம் எடுத்தது. செவிலியரை அழைத்து தண்ணீர் கேட்டார். அந்தச் செவிலியரும் மருத்துவர் சொல்லியிருந்தபடியே சில துளி நீரை மட்டும் பருகக் கொடுத்தார். தாகம் தணியாத கருணாநிதி, மீண்டும் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அப்போதும், அந்தச் செவிலியர் சில துளி நீரை மட்டும் கொடுக்கவே.... “ஏம்மா... உன்பேரு என்ன ‘காவிரி’யா” என்று கேட்டேவிட்டார் கருணாநிதி. அந்த செவிலியப் பெண்ணுக்கோ அவரின் கேள்வி புரியவில்லை. ஆனால், உடனிருந்த அனைவரும் அந்தச் சூழ்நிலையிலும் சிரித்துவிட்டனர். அதாவது, காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகத்தைத்தான் அப்படி நகைச்சுவையாய் வெளிப்படுத்தியிருந்தார், கருணாநிதி. இப்படிக் காவிரி பற்றிய விவகாரங்களில் கருணாநிதியின் பெயர் பல்வேறு தருணங்களில் இடம்பெற்றிருந்தாலும், தமிழகத்தில் அவரின் ஆட்சிக்காலத்தின்போது காவிரிப் பிரச்னைக்காக எண்ணற்ற தீர்மானங்களையும் கருணாநிதி நிறைவேற்றியிருக்கிறார். அவற்றில் முக்கியமான ஒன்று, காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் 8-7-1971 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதான் எனலாம். இதையடுத்து, காவிரிப் பிரச்னை குறித்து விவாதிக்க மூன்று மாநில (கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு) முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராயினர். - காவிரி பாயும்... https://www.vikatan.com/news/tamilnadu/126727-the-abandoned-story-of-cauvery-series-16.html

டி20 போட்டியில் ரஷித்கான் புதிய சாதனை

3 months 2 weeks ago
டி20 போட்டியில் ரஷித்கான் புதிய சாதனை ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் : கோப்புப்படம் - படம்: கெட்டி இமேஜஸ் சர்வதேச டி20 போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையை ஆப்கானிஸ்தான் சுழற்பந்தவீச்சாளர் ரஷித்கான் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்துவைத்த 220 நாட்களில் ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் குறிப்பிட்ட சாதனைகளை ரஷித்கான் புரிந்துள்ளார். இதற்கு முன் 40 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகவிரைவாக 100 விக்கெட்டுகளைச் சாய்த்த வீரர் எனும் பெருமையை ரஷித்கான் பெற்று இருந்தார். இப்போது டி20 போட்டிகளிலும் மிகவிரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். டேராடூனில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசிய 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ரஷித்கான் அசத்தியபோது, டி20 போட்டியில் இந்த முத்திரையைப் பதித்தார். கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி லெக் ஸ்பின்னரான ரஷித்கான் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் அறிமுகமாகினார். அதன்பின் 31 போட்டிகளில் தனது 50-வது விக்கெட்டை வீழ்த்தி ரஷித்கான் சாதித்துள்ளார். இதற்கு முன் டி20போட்டிகளில் மிகவிரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை இலங்கை வீரர் மென்டிஸ் வைத்துள்ளார். அவர் 26 போட்டிகளில் இந்த சாதனையைச் செய்தார். அதற்கு அடுத்து, தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் 31 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார். அவருக்கு இணையாக இப்போது ரஷித்கான் 50 விக்கெட்டுகளை 31 போட்டிகளில் வீழ்த்தியுள்ளார். மேலும், 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின்(35-வதுபோட்டி), பாகிஸ்தானின் உமர் குல்(36), சயித் அஜ்மல்(37) என முறையே 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர். 19வயதான ரஷித்கான் தனது கூக்ளி பந்துவீச்சு மூலம் எதிரணிகளை மிரட்டி வருவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ரஷித்கான் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். சன்ரைசர்ஸ் அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரஷித்கானின் பந்துவீச்சு முக்கியக் காரணம் என்று கூறமுடியும். சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டிகளில் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக சன்ரைசர்ஸ் அணி திகழ்ந்ததற்கு ரஷித்கான், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட சில வீரர்கள் இருந்தது முக்கியக் காரணமாகும். இதற்கு முன் ரஷித்கான் ஒருநாள் போட்டியில் தனது 100-வது விக்கெட்டை 44-வது போட்டிகளில் வீழ்த்தி, உலகிலேயே மிக விரைவாக 100-வது விக்கெட்டை வீழ்த்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்த சாதனையைச் செய்த மிக இளம் வீரர் என்ற பெயரும் ரஷித்கானுக்கு உண்டு. இதற்கு முன், மிட்ஷெல் ஸ்டார்க் 52 போட்டிகளிலும், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாக்லின் முஷ்டாக் 53 போட்டிகளிலும் 100-வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். மேலும்,ஆஸ்திரேலிய வீரர் ஷேன் பாண்ட்(54), பிரட் லீ (55) ஆகியோர் 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர். ரஷித்கான் ஒட்டுமொத்த(44ஒருநாள், 31 டி20) 75 போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 100 ஒருநாள் விக்கெட், 52 டி20 விக்கெட் அடங்கும். http://tamil.thehindu.com/sports/article24077562.ece

டி20 போட்டியில் ரஷித்கான் புதிய சாதனை

3 months 2 weeks ago
டி20 போட்டியில் ரஷித்கான் புதிய சாதனை

 

 
rasid%20kha

ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் : கோப்புப்படம்   -  படம்: கெட்டி இமேஜஸ்

சர்வதேச டி20 போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையை ஆப்கானிஸ்தான் சுழற்பந்தவீச்சாளர் ரஷித்கான் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்துவைத்த 220 நாட்களில் ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் குறிப்பிட்ட சாதனைகளை ரஷித்கான் புரிந்துள்ளார்.

   
 
 

இதற்கு முன் 40 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகவிரைவாக 100 விக்கெட்டுகளைச் சாய்த்த வீரர் எனும் பெருமையை ரஷித்கான் பெற்று இருந்தார். இப்போது டி20 போட்டிகளிலும் மிகவிரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

டேராடூனில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசிய 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ரஷித்கான் அசத்தியபோது, டி20 போட்டியில் இந்த முத்திரையைப் பதித்தார்.

Rashid-Khan-ajpg
 

கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி லெக் ஸ்பின்னரான ரஷித்கான் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் அறிமுகமாகினார். அதன்பின் 31 போட்டிகளில் தனது 50-வது விக்கெட்டை வீழ்த்தி ரஷித்கான் சாதித்துள்ளார்.

இதற்கு முன் டி20போட்டிகளில் மிகவிரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை இலங்கை வீரர் மென்டிஸ் வைத்துள்ளார். அவர் 26 போட்டிகளில் இந்த சாதனையைச் செய்தார். அதற்கு அடுத்து,  தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் 31 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார். அவருக்கு இணையாக இப்போது ரஷித்கான் 50 விக்கெட்டுகளை 31 போட்டிகளில் வீழ்த்தியுள்ளார்.

மேலும், 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின்(35-வதுபோட்டி), பாகிஸ்தானின் உமர் குல்(36), சயித் அஜ்மல்(37) என முறையே 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.

07rashid2%201jpg
 

19வயதான ரஷித்கான் தனது கூக்ளி பந்துவீச்சு மூலம் எதிரணிகளை மிரட்டி வருவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ரஷித்கான் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

சன்ரைசர்ஸ் அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரஷித்கானின் பந்துவீச்சு முக்கியக் காரணம் என்று கூறமுடியும். சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டிகளில் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக சன்ரைசர்ஸ் அணி திகழ்ந்ததற்கு ரஷித்கான், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட சில வீரர்கள் இருந்தது முக்கியக் காரணமாகும்.

இதற்கு முன் ரஷித்கான் ஒருநாள் போட்டியில் தனது 100-வது விக்கெட்டை 44-வது போட்டிகளில் வீழ்த்தி, உலகிலேயே மிக விரைவாக 100-வது விக்கெட்டை வீழ்த்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்த சாதனையைச் செய்த மிக இளம் வீரர் என்ற பெயரும் ரஷித்கானுக்கு உண்டு.

இதற்கு முன், மிட்ஷெல் ஸ்டார்க் 52 போட்டிகளிலும், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாக்லின் முஷ்டாக் 53 போட்டிகளிலும் 100-வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். மேலும்,ஆஸ்திரேலிய வீரர் ஷேன் பாண்ட்(54), பிரட் லீ (55) ஆகியோர் 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.

ரஷித்கான் ஒட்டுமொத்த(44ஒருநாள், 31 டி20) 75 போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 100 ஒருநாள் விக்கெட், 52 டி20 விக்கெட் அடங்கும்.

http://tamil.thehindu.com/sports/article24077562.ece

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!

3 months 2 weeks ago
49. மருந்தாகுதல் மூடிய கண்களின் மீது இரண்டு வெள்ளரித் துண்டுகளை நறுக்கி வைத்திருந்தேன். மானசீகத்தில் எனக்கு அந்தத் துண்டுகள் சஹஸ்ரஹார சக்கரமாக உருமாறி, மெல்லக் கீழிறங்கி வந்து சுழலுவதுபோல் இருந்தது. அதன் குளிர்ச்சி மெல்ல மெல்ல என் விழிகளுக்குள் இறங்கி தலைக்குள் செல்வதுபோல எண்ணிக்கொண்டேன். எண்ணிக்கொள்வதுதான். உண்மையில் எந்த உணர்ச்சியையும் உறுப்புகளுக்கு நம்மால் கடத்த முடிவதில்லை. அது அங்கங்கே தன்னியல்பாக உற்பத்தியாவது. கணப்பொழுது மூளையுடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துவிட்டுத் தன் தேவைகளை உறுப்புகள் நிறைவேற்றிக்கொண்டுவிடுகின்றன. உணர்ச்சிகளை மூளையின் கட்டளையாக என்னால் எண்ணிப் பார்க்க முடிந்ததில்லை. உணர்வின் மிகத் தெளிவான எதிர்நிலையில் என் மனத்தையும் மூளையையும் நிறுத்தப் பழக்கிக்கொண்டிருந்தேன். துக்கத்தில் புன்னகை செய்வதற்கும் மகிழ்ச்சிக்குரிய தருணங்களில் அதில் மறைந்திருக்கும் பிசிறுகளை ஆராயவும் எனக்குப் பிடித்தது. எந்தத் தருணத்திலும் நான் என் உணர்வின் வசத்தில் விழமாட்டேன் என்று எப்போதும் நினைத்துக்கொள்வேன். அந்நினைவு ஒரு போர்வை. கதகதப்பானது. சுகமளிப்பது. அது எனக்கு அவசியம் என்று நினைத்தேன். நான் மைசூரில் இருந்தேன். மிருதுளாவின் தந்தைதான் என்னை அங்கே அழைத்து வந்திருந்தார். ‘நீங்கள் ஒருவரைச் சந்திக்க வேண்டும். மிகப்பெரிய மனிதர். ஆனால் வெளியே சொல்ல முடியாத ஒரு பெருங்கஷ்டத்தில் இருக்கிறார். அவரது துக்கம் உங்களால் தீருமானால் நான் சந்தோஷப்படுவேன்’ என்று சொன்னார். நகரத்தின் ஆகப்பெரிய நட்சத்திர விடுதியில் அறையெடுத்து என்னைத் தங்கவைத்திருந்தார். பளபளப்பான பித்தளைப் பூண் போட்ட தேக்கு மரக் கதவுகளும் பச்சைத் தரை விரிப்புகளும் படுத்தால் ஓரடி ஆழத்துக்குப் புதைத்துக்கொள்ளும் படுக்கையும் இதர வசதிகளுமாக அந்த விடுதி அமர்க்களமாக இருந்தது. ஜன்னல் திரைச் சீலைகளை விலக்கி வெளியே பார்த்தபோது, நீல நிறத்தில் ஒரு துணியை விரித்து உலர்த்தியதுபோல நீச்சல் குளம் தென்பட்டது. ஆண்களும் பெண்களும் நீந்திக் களித்துக்கொண்டிருந்தார்கள். குளக்கரையில் சாய்வு நாற்காலிகள் காலியாக இருந்தன. எனக்கு அங்கே போய் அமர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது. அறையைப் பூட்டிக்கொண்டு குளக்கரைக்குச் சென்றேன். சிறிது நேரம் குளத்தைப் பார்த்தபடி படுத்திருந்துவிட்டு, சிப்பந்தியிடம் சொல்லி இரண்டு துண்டு வெள்ளரி எடுத்துவரச் சொல்லி கண் மீது வைத்துக்கொண்டு மீண்டும் சாய்ந்து படுத்தேன். மிருதுளாவின் தந்தைக்கு நான் சூரிய நமஸ்காரம் செய்யக் கற்றுக்கொடுத்திருந்தேன். தவிரவும் பிராணாயாமம். மிக எளிய இந்த இரு பயிற்சிகளால் அவருக்கு இருந்த சைனஸ் தொந்தரவும் முதுகு வலியும் அவரைவிட்டு நீங்கியிருந்தன. அது ஒரு சுவாரசியமான சம்பவம். ஒருநாள் தொடர்ந்து ஏழெட்டு வியாதிகளைப் பற்றியும் அவற்றால் தான் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் சொல்லி மிகவும் வருந்திக்கொண்டிருந்தார். ‘எங்கே உங்கள் கையை நீட்டுங்கள்?’ என்று சொல்லி நாடி பிடித்துச் சில விநாடிகள் பார்த்தேன். இந்த நாடி பார்ப்பது ஒரு கலை. நாடி ஜோதிடம் போன்றதல்ல. இது வேறு. இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையைப் பொறுத்து ஒருவனின் நாடி நடை அமையும். இதயத்தின் துடிப்பும் நாடியின் துடிப்பும் பெரும்பாலும் ஒத்திருக்கும். இதில் என்னவாவது சிக்கல் இருக்குமானால் நாடி வழியே இதயம் அதை வெளிப்படுத்தும். நாடியை மணிக்கட்டில் பார்க்கலாம். கண்டத்தில் பார்க்கலாம். காலின் பெருவிரல், கணுக்காலில்கூடப் பார்க்கலாம். என் குருநாதர் கணுக்காலில்தான் எப்போதும் நாடி பிடித்துப் பார்ப்பார். அது அத்தனை உத்தமம் இல்லை என்றாலும் அவருக்கு அதுதான் சௌகரியமாக இருக்கிறது என்று சொல்லுவார். ‘விமல், நல்ல வைத்தியன் என்றால் நாடி ஒன்று போதும். சரீரத்தில் சிலேட்சுமம் ஒரு பங்கு, பித்தம் இரண்டு பங்கு, வாதம் நாலு பங்கு இருந்தால் ரோக சாத்தியம் குறைவு. இதில் மாற்றம் காணும்போது சிகிச்சை அவசியமாகிவிடும்’ என்று என்பார். எனக்கு அவரிடம் வைத்திய சாஸ்திரம் பயிலப் பெரிய விருப்பம் இல்லை. ஆனால் அவசரத்துக்கு உதவும் என்று ஒரு சிலவற்றை மட்டும் கற்றிருந்தேன். அங்காகர்ஷண நாசகாரி. ஆம்ல நாசகாரி. உதரவாத ஹரகாரி. கபஹரகாரி. ஸ்மிருதிரோதகாரி. சுரஹரகாரி. பூதி நாசகாரி. மூத்திர வர்த்தனகாரி. விஷநாசகாரி. எளிய வியாதிகளுக்கான எளிய தீர்வுகள். அவர் எனக்கு மருந்துகளை அறிமுகப்படுத்தியதேயில்லை. எல்லா வியாதிகளுக்கும் மூச்சில் உள்ளது தீர்வு என்று சொல்வார். ஆசிரமத்தில் யாருக்கு என்ன ரோகமென்றாலும் கூப்பிட்டு உட்காரவைத்துக் கணுக்காலில் நாடி பார்த்துவிட்டு மூச்சுப் பயிற்சியைத்தான் ஆரம்பிக்க வைப்பார். வியாதிக்கேற்ற பயிற்சி. ஒழுங்காகச் செய்யும்வரை விடவே மாட்டார். ஆனால் சொல்லிவைத்தாற்போல் மூன்று நான்கு தினங்களில் எப்பேர்ப்பட்ட நோயும் குணம் கண்டுவிடும். ‘குருஜி, ஞானமார்க்கத்தில் மருத்துவத்துக்கு இருக்கிற இடம் ஏன் மற்றக் கலைகளுக்கு இருப்பதில்லை?’ ‘ஞானம் என்பது பிரம்மத்தை அறிவது என்றா நினைக்கிறாய்? என்னைப் பொறுத்தவரை அது உடலை அறிவது. உடல் அழியும்போது பிரம்மம் அழிகிறது.’ ‘ஆ, அகம் பிரம்மம்!’ ‘அதுவல்ல. நீயே பிரம்மம், உனக்குள் பிரம்மம் என்பதெல்லாம் தத்துவம். நான் சொல்வது பிரம்மம் என்பது உன் புனைபெயர்.’ நான் அவரை இறுக்கிப் பிடித்துக்கொண்டதற்கு இதுதான் காரணம். தத்துவங்களுக்கு எதிர்நிலையில் ஒரு ஞான மையத்தை நிறுவும் முயற்சியில் அவர் இருந்தார். அதுதான் என்னை ஈர்த்தது. அவரது நூற்றுக்கணக்கான கடவுள்களை ஒருநாள் எனக்குக் காட்டித் தந்தபோது, அவர் மீதான பிரமிப்பும் மரியாதையும் மிகுந்தது. மனிதர்களின் விதவிதமான ரேகைகளைப் போலவே ஒவ்வொருவரின் சுவாச ஓட்டமும் வேறு வேறாக இருக்கும் என்று அவர் சொன்னார். மூச்சுக்காற்றின் போக்குவரத்தை அவர் கடவுளாகக் கருதினார். அதன் வேகம், அதன் இயல்பு, அதன் மணம், ருசி மாறுகிறபோது அவற்றை எண்களில் குறித்து வேறு வேறு கடவுள்களாகச் சொன்னார். எப்பேர்ப்பட்ட மனிதர்! ‘நீ இன்னும் சற்று உள்ளே வரலாம். உனக்கு வைத்திய சாஸ்திரம் எளிதாக அப்பியாசமாகும்’ என்று ஒருநாள் என்னிடம் சொன்னார். ‘எனக்கு டாக்டராகும் விருப்பமில்லை குருஜி. பத்து ரூபாய் செலவிட்டால் ஒரு நல்ல டாக்டரும் சிறந்த மருந்துகளும் கிடைத்துவிடும் என்றால் அது என்ன பெரிய கலை?’ ‘அப்படியா நினைக்கிறாய்?’ என்று புன்னகை செய்தவர், அப்போதுதான் எனக்கு இயேசுநாதரின் கதையைச் சொன்னார். ‘நீ பைபிள் படிக்க வேண்டும் விமல். மனித குலத்துக்கு எந்நாளும் செய்துகொண்டே இருப்பதற்கு நூறாயிரம் வைத்தியங்களின் தேவை இருந்தபடியே இருக்கிறது. தத்துவங்களும் தருக்கங்களும் தீர்க்காத சந்தேகங்களை ஒரு எளிய ஜலதோஷ நிவாரணி தீர்த்து வைத்துவிடும்.’ ‘உண்மையாகவா?’ ‘ஆம். உன் வாய்ச்சாலம் உனக்குக் கூட்டத்தைக் கட்டிப்போட்டு உட்காரவைக்கும். அதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் ஒரு கூட்டம் உன்னை நெருங்கிவர உன்னிடம் ஒரு மிட்டாயாவது இருக்க வேண்டியது அவசியம்.’ ‘இயேசுநாதரின் மிட்டாய்!’ என்றேன் சிரித்தபடி. அரைக் கணம் யோசித்துவிட்டு அவர் சொன்னார். ‘ஆம். அவர் ஒரு நல்ல மிட்டாய் வியாபாரி.’ நான் ஒரு சில மிட்டாய்களை எடுத்துக்கொண்டுதான் மைசூருக்கு வந்திருந்தேன். மிருதுளாவின் தந்தை குறிப்பிட்ட பிரமுகர், மரணத்தின் வெளி வாசலில் நின்றுகொண்டிருப்பதாகச் செய்தித் தாள்களில்கூட வர ஆரம்பித்திருந்தது. பழம்பெரும் அரசியல்வாதி. பழம்பெரும் திரைப்பட நடிகர். மூன்றோ அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலோ திருமணங்கள் புரிந்துகொண்டு குடும்பத்தைப் பல்கலைக் கழகமாக்கியிருந்தவர். அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தது எனக்குத் தெரியும். முன்பொரு காலத்தில், அவர் திருவிடந்தைக்குப் படப்பிடிப்புக்கு வந்தபோது நானேகூட அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கிறேன். ஆனால் அவர் அரசியலுக்குப் போனதெல்லாம் எனக்குத் தெரியாது. மிருதுளாவின் தந்தை சொன்னார், ‘அவர் எங்களுக்கு முக்கியம். அவர் முக்கியம் என்றால் அவர் உயிருடன் இருப்பது. குறைந்தது இன்னும் சில ஆண்டுகளுக்கு.’ நான் யோசித்தேன். தவறான எந்த நம்பிக்கையையும் இந்த மனிதருக்குத் தந்துவிடக் கூடாது என்று தோன்றியது. ‘ஐயா, நான் வைத்தியன் அல்ல. எனக்குத் தெரிந்தவையெல்லாம் பிராண சக்தியைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சில முறைகள் மட்டுமே. நான் முற்றிலும் பயின்றவனல்ல. அது என் துறையுமல்ல.’ ‘அதனாலென்ன? அவரை கவனித்துக்கொள்ளப் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்வதை அவர்கள் செய்யட்டும். நீங்கள் செய்வதை நீங்கள் செய்யுங்கள்’ என்று சொன்னார். ஒரு முதுகுவலிப் பிரச்னை தீர்ந்ததுதான் இந்த மனிதரை என்பால் எத்தனைத் தீவிர நம்பிக்கை கொள்ள வைத்துவிட்டது! ஆனால் எனக்கென்னவோ, அவர் வியாதி சொஸ்தத்துக்காக மட்டும் என்னை அந்தப் பழம்பெரும் அரசியல்வாதியிடம் அழைத்துப் போக நினைப்பதாகத் தோன்றவில்லை. வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும். பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். பிற்பகல் மூன்று மணிக்கு எங்களுக்குக் கார் வந்தது. நாங்கள் அதில் ஏறிப் புறப்பட்டோம். மைசூரைத் தாண்டி கார் தெற்கே பெங்களூர் செல்லும் சாலையில் போய்க்கொண்டிருந்தது. ‘எங்கே இருக்கிறார் அவர்?’ என்று கேட்டேன். ‘வீடு மைசூரில்தான் உள்ளது. ஆனால் இப்போது சிலகாலமாக ஸ்ரீரங்கப்பட்டணத்தில் வசிக்கிறார். அங்கே அவருக்கு இன்னொரு வீடு உண்டு.’ ‘தீவிர அரசியலில் இப்போது அவர் இல்லை அல்லவா?’ ‘ஆம். ஆனால் இன்னமும் அவர் ஒரு தீர்மானிக்கும் சக்தியாகத்தான் இருக்கிறார். எந்த ஆட்சி இங்கே வந்தாலும் அவரைக் கேட்காமல் ஒன்றும் நடக்காது.’ ‘அப்படியா?’ அவர் இன்னும் என்னென்னவோ சொன்னார். அந்த மனிதரின் அந்தரங்கக் கதைகள். அவருக்கு இருக்கும் வங்கிக் கணக்குகள். அயல் தேசத்துத் தொடர்புகள். இந்தியாவில் அவரை மட்டுமே அறிந்த சில வெளிநாட்டு ஆயுதக் குழுக்களைப் பற்றிக் கேள்விப்பட்டபோது எனக்கு வியப்பாக இருந்தது. ‘அதெல்லாமும் உண்டா?’ என்று கேட்டேன். ‘நீங்கள் நேரில் பார்த்துப் பேசுங்கள். உங்களுக்கே அனைத்தும் புரியும்’ என்று சொன்னார். நாங்கள் ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது வெளிச்சம் சாயத் தொடங்கிவிட்டிருந்தது. அவரது பங்களா ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய மாந்தோப்புக்குள் இருந்தது. காம்பவுண்டு சுவருக்கு வெளியே நின்று பார்த்தால் உள்ளே ஒரு பங்களா இருப்பதே தெரியாது. தோப்புக்குள் சுமார் எழுநூறு மீட்டர் தூரம் பயணம் செய்த பிறகுதான் வீடு கண்ணில் படும். புராதனமான பங்களா. முன்புறம் கார்கள் நிறுத்துவதற்குப் புதிதாகப் பெரிய போர்டிகோ அமைத்திருந்தார்கள். நான் வண்டியைவிட்டு இறங்கியபோது அங்கு ஏழெட்டு கார்கள் நின்றுகொண்டிருந்தன. கட்டிப்போடப்பட்ட நான்கு பெரிய நாய்கள் இருந்தன. ஏராளமான வேலைக்காரர்கள் சுற்றிக்கொண்டே இருந்தார்கள். எங்களை உள்ளே அழைத்துச் சென்று வரவேற்பரையில் அமரவைத்தவர், ஐந்து நிமிடங்கள் காத்திருக்கும்படிச் சொல்லிவிட்டு உள்ளே போனார். அங்கிருந்த பத்திரிகை ஒன்றை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன். யாரோ வெளியே வரும் சத்தம் கேட்டது. நான் பத்திரிகையில் இருந்து கண்ணை விலக்கிப் பார்த்தபோது முதலில் என்னால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் சில விநாடிகளில் கண்டுபிடித்துவிட்டேன். வினய்யைப் பார்த்து எத்தனை வருடங்களாகிவிட்டன! (தொடரும்) http://www.dinamani.com/junction

‘காலாவை விட காவிரிதான் முக்கியம்’: குமாரசாமி சந்திப்புக்கு பின் கமல்

3 months 2 weeks ago
‘காலாவை விட காவிரிதான் முக்கியம்’: குமாரசாமி சந்திப்புக்கு பின் கமல்

 

 

 
kamal

கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பெங்களூரில் இன்று சந்தித்த காட்சி

காலாவைவிட காவிரிதான் முக்கியம் என்று கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்தித்தபின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடம் கிடைக்காததையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. அங்கு முதல்வராக எச்.டி.குமாரசாமி உள்ளார்.

 

கடந்த மாதம் குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவுக்குக் கூட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரைக் கமல் ஹாசன் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்திக்க கமல் ஹாசன் இன்றுகாலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். பெங்களூருவில் முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்தித்த கமல் ஹாசன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார். அதில் குறிப்பாக காவிரி நீர் பங்கீடு தொடர்பாக அவரிடம் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்புக்குப்பின் முதல்வர் எச்.டி. குமாரசாமியும், கமல்ஹாசனும் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டி அளித்தனர். அப்போது குமாராசாமியிடம் நிருபர்கள் காவிரி விவகாரம் குறித்து பேசத் தயாராக இருக்கிறீர்களா எனக் கேட்டபோது, அதற்கு பதில் அளித்தஅவர், தமிழக அரசு தயாராக இருந்தால், நானும் தயார்.

இரு மாநிலங்களுக்கும் இடையே சுமூகமான உறவு நிலவ வேண்டும். இரு மாநிலங்களின் விவசாயிகள் நலன் கருத்தில் கொள்ளப்படும். எந்தவிதமான பிரச்சினை இருந்தாலும், இருவரும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவேண்டும். விவசாயிகள் நலன் மிகவும் முக்கியமானது. கடந்த 100 ஆண்டுகளாக நிலவும் காவிரி விவகாரத்தால், இரு மாநில விவசாயிகளும் மனச்சோர்வடைந்து இருக்கிறார்கள்.

எங்களுடைய இந்தச் சந்திப்பில், காவிரி விவகாரத்தைத் தவிர வேறு எந்த விஷயத்தையும் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. காலா திரைப்படம் ரிலீஸ் குறித்தோ, ரஜினிகாந்த் குறித்தோ பேசவில்லை. இது முழுக்க திரைத்துறை தொடர்புடையதாகும் எனத் தெரிவித்தார்.

கமல் ஹாசன் நிருபர்களிடம் கூறுகையில், நான் தமிழக மக்களின் பிரதிநிதியாக இங்கு வந்து கர்நாடக முதல்வரை காவிரிக்காகச் சந்தித்தேன். ஒரு நடிகராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ இங்கு வரவில்லை. இருமாநிலங்களுக்கு இடையே பாலமாக இருந்து செயல்பட நான் தயாராக இருக்கிறேன். குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்குத் தண்ணீர் தேவை. என்னுடைய கோரிக்கைக்கு முதல்வர் குமாரசாமி சாதகமான பதில் அளித்துள்ளார். இங்குள்ள மக்களும் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை முதல்வர் பேச்சில் இருந்து அறிய முடிந்தது.

இரு மாநில மக்களும் ஒருங்கிணைய வேண்டும் அதுதான் இப்போது முக்கியம். மக்களின் மனநிலையை அறிந்து அதன்படியே முன்நோக்கிச் செல்லவேண்டும். குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட வந்தேன். இந்தச் சந்திப்பு கூட்டணிக்கானதோ, திரைப்படம் தொடர்பானதோ இல்லை முற்றிலும் மக்களுக்கானது என்றார்.

இதன் பின்னர் நிருபர்கள், `காலா' திரைப்படம் குறித்து பேசினீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த கமல், 'காலா' கர்நாடகாவில் வெளியாவது அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை. திரைப்படங்களைவிடக் காவிரி நீர் மிக முக்கியமானது. எனவே, காவிரி குறித்து மட்டுமே எங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/india/article24079679.ece?homepage=true

‘காலாவை விட காவிரிதான் முக்கியம்’: குமாரசாமி சந்திப்புக்கு பின் கமல்

3 months 2 weeks ago
‘காலாவை விட காவிரிதான் முக்கியம்’: குமாரசாமி சந்திப்புக்கு பின் கமல் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பெங்களூரில் இன்று சந்தித்த காட்சி காலாவைவிட காவிரிதான் முக்கியம் என்று கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்தித்தபின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடம் கிடைக்காததையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. அங்கு முதல்வராக எச்.டி.குமாரசாமி உள்ளார். கடந்த மாதம் குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவுக்குக் கூட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரைக் கமல் ஹாசன் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்திக்க கமல் ஹாசன் இன்றுகாலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். பெங்களூருவில் முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்தித்த கமல் ஹாசன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார். அதில் குறிப்பாக காவிரி நீர் பங்கீடு தொடர்பாக அவரிடம் பேசியுள்ளார். இந்தச் சந்திப்புக்குப்பின் முதல்வர் எச்.டி. குமாரசாமியும், கமல்ஹாசனும் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டி அளித்தனர். அப்போது குமாராசாமியிடம் நிருபர்கள் காவிரி விவகாரம் குறித்து பேசத் தயாராக இருக்கிறீர்களா எனக் கேட்டபோது, அதற்கு பதில் அளித்தஅவர், தமிழக அரசு தயாராக இருந்தால், நானும் தயார். இரு மாநிலங்களுக்கும் இடையே சுமூகமான உறவு நிலவ வேண்டும். இரு மாநிலங்களின் விவசாயிகள் நலன் கருத்தில் கொள்ளப்படும். எந்தவிதமான பிரச்சினை இருந்தாலும், இருவரும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவேண்டும். விவசாயிகள் நலன் மிகவும் முக்கியமானது. கடந்த 100 ஆண்டுகளாக நிலவும் காவிரி விவகாரத்தால், இரு மாநில விவசாயிகளும் மனச்சோர்வடைந்து இருக்கிறார்கள். எங்களுடைய இந்தச் சந்திப்பில், காவிரி விவகாரத்தைத் தவிர வேறு எந்த விஷயத்தையும் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. காலா திரைப்படம் ரிலீஸ் குறித்தோ, ரஜினிகாந்த் குறித்தோ பேசவில்லை. இது முழுக்க திரைத்துறை தொடர்புடையதாகும் எனத் தெரிவித்தார். கமல் ஹாசன் நிருபர்களிடம் கூறுகையில், நான் தமிழக மக்களின் பிரதிநிதியாக இங்கு வந்து கர்நாடக முதல்வரை காவிரிக்காகச் சந்தித்தேன். ஒரு நடிகராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ இங்கு வரவில்லை. இருமாநிலங்களுக்கு இடையே பாலமாக இருந்து செயல்பட நான் தயாராக இருக்கிறேன். குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்குத் தண்ணீர் தேவை. என்னுடைய கோரிக்கைக்கு முதல்வர் குமாரசாமி சாதகமான பதில் அளித்துள்ளார். இங்குள்ள மக்களும் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை முதல்வர் பேச்சில் இருந்து அறிய முடிந்தது. இரு மாநில மக்களும் ஒருங்கிணைய வேண்டும் அதுதான் இப்போது முக்கியம். மக்களின் மனநிலையை அறிந்து அதன்படியே முன்நோக்கிச் செல்லவேண்டும். குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட வந்தேன். இந்தச் சந்திப்பு கூட்டணிக்கானதோ, திரைப்படம் தொடர்பானதோ இல்லை முற்றிலும் மக்களுக்கானது என்றார். இதன் பின்னர் நிருபர்கள், `காலா' திரைப்படம் குறித்து பேசினீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த கமல், 'காலா' கர்நாடகாவில் வெளியாவது அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை. திரைப்படங்களைவிடக் காவிரி நீர் மிக முக்கியமானது. எனவே, காவிரி குறித்து மட்டுமே எங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்தார். http://tamil.thehindu.com/india/article24079679.ece?homepage=true

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்

3 months 2 weeks ago
பந்து கோல் வலையைத் தாக்கிய போது... - குரேஷியாவை வீழ்த்தியது குறித்து நெய்மர் நெகிழ்ச்சி குரேஷியாவுக்கு எதிராக முதல் கோலை அடித்த நெய்மர். | ராய்ட்டர்ஸ். வலது பாதத்தில் அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டு கடும் உடல் மற்றும் கால்பந்தாட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் மீண்டும் வந்து குரேஷியாவுக்கு எதிராக கோல் அடிக்க, பிரேசில் 2-0 என்று வெற்றி பெற்றதை பிரேசில் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர், உலகக்கோப்பைக்குத் தான் முழுதும் தயார் என்பதை ஆட்டம் தொடங்கி 23வது நிமிடத்திலேயே நெய்மர் நிரூபித்தார். ஆன்பீல்டில் நடைபெற்ற இந்த சர்வதேச நட்புக் கால்பந்தாட்டத்தில் இடைவேளை வரை பெரிய அளவில் பிரேசில் வீரர்களை குரேஷிய வீரர்கள் ‘மார்க்’ செய்தனர். ஆனால் பெர்னாண்டினியோவுக்குப் பதில் நெய்மர் களமிறங்கியவுடன் வில்லியன், கேப்ரியல் ஜீசஸ் ஆகியோருடன் இனைந்து கொஞ்சம் கலகலப்பூட்டினார், குரேஷியாவுக்குப் பிரச்சினைகள் தொடங்கின. நெய்மர், வில்லியன், கேப்ரியல் ஜீசஸ் ஆகியோர் முன்களத்தில் உலகக்கோப்பை கால்பந்தில் என்ன நடக்கும் என்பதற்கான அறிகுறியைக் காட்டினர். முதல் பாதியில் பெரும்பாலும் அமைதிகாத்த பிரேசில் ரசிகர்கள் நெய்மர் களம் கண்டவுடன் பெரிய அளவுக்கு ஆரவாரத்தில் இறங்கினர். பிரேசில் அணியாகத் திரண்டு எழுந்து ஆடியதிலும் பெரிய முன்னேற்றம் காணப்பட்டது, நெய்மரின் தனிப்பட்ட திறமையிலும் பெரிய முன்னேற்றம், வேகம் தெரிந்தது. ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் பெனால்ட்டி பாக்சின் இடது ஓரத்தில் பந்தைப் பெற்ற நெய்மர் குரேஷிய தடுப்பணை வீரர்களான சிமி வ்ரசாலைகோ, டூஜே கலேட்டா-கர் ஆகியோரை அனாயசமாகக் கடைந்து கடந்து வலது காலால் வலையில் தூக்கி விட்டு கோலாக்கினார் நெய்மர். ஆட்டம் முடிந்து நெய்மர் கூறுகையில், “3 மாதகால கடினப்பாட்டிலிருந்து மீண்டுள்ளேன். பந்து கோல் வலையைத் தாக்க்கியபோது எனக்கு உதவி செய்தவர்களை நினைத்துக் கொண்டேன். டாக்டர் லஸ்மார், என் குடும்பம் மற்றும் நண்பர்க்ளை நினைத்துக் கொண்டேன். மீண்டும் கால்பந்தாட்டத்தில் நான்... இதற்காகத்தான் காத்திருந்தேன். லிவர்பூல் அணிக்கு ஆடும் பிரேசில் வீரர் ரொபர்ட்டோ பர்மினோ 2வது கோலை அடிக்க அதுவே வெற்றி கோலாக அமைந்தது. நெய்மரின் மீள்வருகை எதிர்பார்ப்புகளையும் கடந்து விட்டது, இதனால்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது, உலகக்கோப்பையில் அவர் உச்சத்துக்குச் செல்ல வேண்டும். நெய்மரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டோம். ஏனெனில் அவர் வித்தியாசமான ஒரு வீரர். உலகக்கோப்பைக்கு முன்னதாக வரும் ஞாயிறன்று வியன்னாவில் ஆஸ்திரியாவுக்கு எதிராக இன்னொரு நட்புமுறை போட்டியில் ஆடுகிறது பிரேசில். http://tamil.thehindu.com/sports/article24079079.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

இளமை புதுமை பல்சுவை

3 months 2 weeks ago
தாம்பத்ய வாழ்க்கை இனிக்க ஐ லவ் யூ வேண்டாம்... ஆனால்..?! எல்லாக் காலத்திலும் தாம்பத்யம் என்பது, நான்கு கரங்களில் இருக்கும் ஒற்றைக் கண்ணாடிப் பாத்திரம்தான். ஒரு கரம் பலவீனமானாலும் தாம்பத்யம் தள்ளாட ஆரம்பித்துவிடும். கொஞ்சம் ஏமாந்தாலும் தரையில் விழுந்து சுக்குநூறாகிவிடும். சரி, தாம்பத்யம் உடையாமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் தம்பதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? ``சின்னச் சின்ன விஷயங்கள்தாம் தாம்பத்யத்தை உடைக்கும் வில்லன்கள் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, சின்னச் சின்ன விஷயங்களே ஒரு தாம்பத்யத்தைக் காப்பாற்ற போதும் என்பதும்'' என்கிற உளவியல் நிபுணர் டி.வி. அசோகன் சொல்வதைக் கேளுங்கள். * `நான்', `எனது', `என்னுடைய', `தனித்தன்மை' என இருப்பவர்களைவிட `ஒருவனுக்கு ஒருத்தி', `கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் என் வாழ்க்கைத் துணை' போன்ற பழைய சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்களின் தாம்பத்யம், அவ்வளவு எளிதில் உடைவதில்லை என்கிறது ஓர் ஆராய்ச்சி. இந்தக் காலத்துப் பெண்கள் தனித்தன்மையுடன் எல்லாவற்றிலும் ஜெயித்துக்கொண்டிருப்பது தவறு என்று சொல்லவில்லை. அதனுடன், உங்கள் பெற்றோர்களின் தாம்பத்திய வெற்றி சூத்திரத்தையும் பின்பற்றுங்கள். உங்கள் தாம்பத்ய பில்டிங்கின் பேஸ்மென்ட்டும் வலுவாக இருக்கும். * பல ஆளுமைப் பண்புகள் இணைந்துதான் ஒரு பர்சனாலிட்டி உருவாகும். பதற்றம் என்பதும் ஓர் ஆளுமை, சந்தேகம் நிறைய இருந்தால் சந்தேக ஆளுமை, சார்புநிலை ஆளுமை, அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஆளுமை, இரக்க ஆளுமை, சின்னச் சின்ன விஷயங்களுக்கும் பயப்படும் ஆளுமை என்று ஒருவருக்குள்ளேயே பல ஆளுமைகள் அடங்கியிருக்கும். இதில், தைரியமான ஆளுமை பயந்த ஆளுமையை விரும்பலாம். அதுபோலவே, பயந்த ஆளுமை இன்னொரு பயந்த ஆளுமையையும் விரும்பும். கோபம் அமைதியை லவ் பண்ணும்; கோபத்தைக் கோபமும் லவ் பண்ணும். உங்களுடைய ஆளுமை எது, உங்கள் துணையின் ஆளுமை எது என்பதைத் தெரிந்துகொள்வதும் தாம்பத்யத்தைத் தாங்கிப்பிடிக்கும் ஒரு டிரிக். * பத்துக்கு ஏழு பொருத்தம் இருந்தால், கல்யாணம் பண்ணலாம் என்பார்கள். உளவியலைப் பொறுத்தவரை மனைவிக்கு இருக்கும் 10 விருப்பங்களில் 7 விருப்பங்கள் கணவருக்கு இருந்துவிட்டாலே அங்கே ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். `எனக்கு எதிலும் பெருசா ஈடுபாடு கிடையாது' என்கிற ரசனையற்ற அல்லது விட்டேற்றியான மனப்பான்மை தாம்பத்தியத்தை ருசியற்றதாக்கிவிடும் * ஒரு காலத்தில் குழந்தைகள்தாம் தாம்பத்யத்தைப் பிடித்துவைத்திருந்தார்கள். தற்போது, `என் மனைவியை நம்பலாம்', `என் கணவனை நம்பலாம்' என்கிற நம்பிக்கை உணர்வு மட்டுமே குடும்ப வண்டியை ஓடவைக்கும் அச்சாணியாக இருக்கிறது. * ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது... இதை, பொருளாதார ரீதியாகச் சொல்லவில்லை. `இவரில்லாமல் நானில்லை', `இவள் அருகில் இல்லாமல் எனக்கு நிம்மதியில்லை' என்பது போன்ற மனதளவிலான சார்பு நிலை, கணவன் மனைவிக்கிடையே வரும் பிரச்னைகளை இரும்புக்கரத்தால் அடக்கிவிடும். * தம்பதிகளுக்கு ஒரு வார்த்தை, உங்கள் தவறுகளைச் சரியாக்க வாழ்க்கை துணையுடன் சண்டைப் போடாதீர்கள். பிறகு, கல்யாண வாழ்க்கை கரும்பின் நுனிபோல ஆகிவிடும். தவறுகளை ஒத்துக்கொண்டு பாருங்கள், அடிக்கரும்பாக இனிக்கும். * வாழ்க்கை துணை சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். இந்த இயல்பு பொதுவாகவே பெண்களிடம் உண்டு. ஆண்களுக்கு 50 வயதுகளில்தாம் வருகிறது. ஒருவருக்கொருவர் காது கொடுப்பது தாம்பத்தியத்துக்கு நல்லது. * எல்லோரிடமும் பாசிட்டிவ் ஃபேக்டர், நெகட்டிவ் ஃபேக்டர் இருக்கும். இதில், நெகட்டிவ் குணத்துக்காக தன் லைஃப் பார்ட்னரைவிட்டு யாரும் பிரிவதில்லை. தன் லைஃப் பார்ட்னரிடம் பாசிட்டிவ் குணங்களே இல்லாதபோதுதான் தாம்பத்யம் பிளவுபடுகிறது. காலங்காலமாகத் தவறு செய்கிற பல கணவன்மார்களை, மனைவிகள் மன்னித்துக் குடும்பம் நடத்தியதற்குக் காரணம், பொருளாதார ரீதியாகக் கணவனைச் சார்ந்து இருந்தது மட்டுமல்ல; கணவர்களிடம் இருக்கும் பாசிட்டிவ் குணத்துக்காகவும்தான். * மனதுக்குள் நீங்கள் சந்தோஷமாக இருந்த நினைவுகளைச் சேமித்துவையுங்கள். பிரச்னை வரும் நேரம், இவை உங்கள் திருமண வாழ்வைக் காப்பாற்றிவிடும். * நிறையப் பேசுங்கள். எதிர்காலத்துக்கு என்ன செய்யப்போகிறோம், குழந்தைகளுக்கு என்ன சேமித்துவைத்திருக்கிறோம் என்பதைத் தாண்டி, வெட்டியாகப் பேசுவதற்கு உங்கள் இருவரிடமும் நிறைய கதைகள் இருக்கின்றன என்றால், உங்கள் தாம்பத்யத்தை சீரியல் வில்லிகளே வந்தாலும் அசைக்க முடியாது. * காதல், காமம் இரண்டையும்விட நட்பாக இருங்கள். * ஹோட்டல் சர்வர் மாதிரி வாழ்க்கை துணைக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் பரிமாறுங்கள். * மூன்றாவது மனிதர்களைத் தலையிட விடாதீர்கள். இந்த உலகத்தில் எப்போதும் அடுத்தவன் கதை அல்வா மாதிரிதான். மற்றவர்களை உங்கள் பிரச்னைகளின் நீதிபதிகளாக ஆக்கிவிடாதீர்கள். * மொபைலை டேபிளின் மேல் வைத்துவிட்டு தைரியமாக ரெஸ்ட்ரூம் போகமுடிகிறது என்றால், உங்கள் தாம்பத்யம் படு சேஃபாக இருக்கிறது. போன் வந்தவுடன் பால்கனி போய் குசுகுசுவென்று பேசுகிறீர்கள் என்றால், உங்கள் இல்லற வாழ்க்கை படு பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். * பெட்ரூமுக்குள் டிவி. இருப்பதும் உறவைக் கெடுக்கும் வில்லன்தான் தம்பதிகளே. * தாம்பத்யத்தைக் காப்பாற்ற, `ஐ லவ் யூ' சொல்லவேண்டிய அவசியமே இல்லை. தவறு நேர்கிற இடங்களில் `ஸாரி' சொல்லிப் பழகினாலே தாம்பத்யம் இனிக்கும். https://www.vikatan.com

UNPயின் முக்கியஸ்தர், யாழ் குடியிருப்பு பகுதிகளில், உணவகம் – விடுதி அமைப்பதற்கு முயற்சி…

3 months 2 weeks ago
UNPயின் முக்கியஸ்தர், யாழ் குடியிருப்பு பகுதிகளில், உணவகம் – விடுதி அமைப்பதற்கு முயற்சி… மக்களை அச்சுறுத்துவம் வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், காவற்துறையினரும், புலனாய்வுத்துறையினரும் அங்கு செல்வதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்…. யாழ். பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உணவகம் மற்றும் விடுதி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன குறித்த உணவகம் மற்றும் விடுதி அமைக்கப்படுவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை கொழும்பில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவரே முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு விடுதி மற்றும் உணவகம் அமைக்க தீர்மானித்திருக்கும் காணிக்குள் 20 க்கும் மேற்பட்டோர் பிரதேச மக்களை அச்சுறுத்துவம் வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், காவற்துறையினரும், புலனாய்வுத்துறையினரும் அங்கு செல்வதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.இந்த விடயங்கள் தமக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா , இந்த நடவடிக்கைகள் குறித்து, அரசியல் உயர் மட்டங்களுடன் கலந்துரையாடி முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படும் எனவும், இல்லையெனில் இதனை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தினூடாக சட்டரீதியன நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர முதல்வரின பிரத்தியோக இணைப்பாளர் ஜனாப் ஏ.ஜி.நெளபரின் அழைப்பினை ஏற்று உணவம் மற்றும் விடுதி அமைக்கும் நடவடிக்கைகளை, மாவை சோனாதிராஜா பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/82238/

UNPயின் முக்கியஸ்தர், யாழ் குடியிருப்பு பகுதிகளில், உணவகம் – விடுதி அமைப்பதற்கு முயற்சி…

3 months 2 weeks ago
UNPயின் முக்கியஸ்தர், யாழ் குடியிருப்பு பகுதிகளில், உணவகம் – விடுதி அமைப்பதற்கு முயற்சி…

 

 

மக்களை அச்சுறுத்துவம் வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், காவற்துறையினரும், புலனாய்வுத்துறையினரும் அங்கு செல்வதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்….


யாழ். பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உணவகம் மற்றும் விடுதி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன குறித்த உணவகம் மற்றும் விடுதி அமைக்கப்படுவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை கொழும்பில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவரே முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இவ்வாறு விடுதி மற்றும் உணவகம் அமைக்க தீர்மானித்திருக்கும் காணிக்குள் 20 க்கும் மேற்பட்டோர் பிரதேச மக்களை அச்சுறுத்துவம் வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், காவற்துறையினரும், புலனாய்வுத்துறையினரும் அங்கு செல்வதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.இந்த விடயங்கள் தமக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா , இந்த நடவடிக்கைகள் குறித்து, அரசியல் உயர் மட்டங்களுடன் கலந்துரையாடி முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படும் எனவும், இல்லையெனில் இதனை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தினூடாக சட்டரீதியன நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர முதல்வரின பிரத்தியோக இணைப்பாளர் ஜனாப் ஏ.ஜி.நெளபரின் அழைப்பினை ஏற்று உணவம் மற்றும் விடுதி அமைக்கும் நடவடிக்கைகளை, மாவை சோனாதிராஜா பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/82238/

வலி.வடக்­கில் 33 ஏக்­கர் காணிகளுக்கு -விரை­வில் விடுதலை!!

3 months 2 weeks ago
வலி.வடக்கில் – 33 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு!! வலி வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. வலி வடக்கில் பளை, வீமன்காமம் வடக்கில் உள்ள ஜே -.236 கிராம சேவகர் பிரிவில் 33 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிகள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம், யாழ்.மாவட்ட இராணுவ தலைமையகத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தக் காணிகள் 27 ஆண்டுகளின் பின்னர் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், மாவிட்டபுரம் கோவிலினை கடந்து சென்று காங்கேசன்துறை சீமெந்து தொழற்சாலையின் பிரதான வாயிலுக்கு எதிராகவுள்ளது. விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள தமது காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். http://newuthayan.com/story/16/வலி-வடக்கில்-33-ஏக்கர்-இன்று-விடுவிப்பு.html