தியாக தீபம் திலீபன்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் 15-09-1987

Aggregator

அவர்கள் வாழட்டும் 

3 months 2 weeks ago
எந்த நாடு, எந்த வீடாக இருந்தால் என்ன, எவ்வளவுதான் அன்னியோன்னியமான கணவன் மனைவியானாலும் சரி, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைப்படும்போது பெண் என்பவள் இயல்பாகவே பிள்ளைகளின் பக்கம் சார்ந்து விடுகிறாள்.அதனால் பிள்ளைகள் விடும் தவறுகளையும் அவளின் தாய்ப்பாசம் மறைத்து விடுகின்றது. ஆண்களால் அவற்றை அனுசரித்து போக முடிவதில்லை. அதனால் அவன் ஒரங்கட்ட படுகிறான் அல்லது தானாகவே ஒதுங்கி கொள்கிறான். இக் கதையிலும் அதுதான் நடக்கிறது. தொடருங்கள்......!

நல்லூருக்கு அருகில் மிக விரைவில் விகாரை கட்டப்படும் நிலை உருவாகும்..

3 months 2 weeks ago
நல்லூருக்கு அருகில் மிக விரைவில் விகாரை கட்டப்படும் நிலை உருவாகும்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்.. நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , முல்லைத்தீவு மாவட்ட கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அடாத்தாக வாடிகள் அமைத்து தங்கி இருந்து , சட்டவிரோதமான மீன் பிடிமுறமைகள் மூலம் மீன் பிடியில் ஈடுபடுகிறார்கள் என இந்த சபையில் மூன்று வருடங்களுக்கு மேலாக கூறி வருகின்றேன். அது தொடர்பில் மத்திய மீன் பிடி அமைச்சராக அப்போதிருந்த மஹிந்த அமரவீரவிடம் நேரில் கூட அது தொடர்பில் முறையிட்டு உள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை. கொக்கிளாய் பகுதிகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு நாயாறு , சாலை சுண்டிக்குளம் தாண்டி தற்போது யாழ்.மாவட்டம் மருதங்கேணி வரை தொடர்கின்றது. ஆனால் அதனை தடுக்க முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இவ்வாறே சென்றால் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமையும் காலம் வெகு விரைவில் இல்லை என்றே தோன்றுகின்றது என தெரிவித்தார் http://globaltamilnews.net/2018/81686/

நல்லூருக்கு அருகில் மிக விரைவில் விகாரை கட்டப்படும் நிலை உருவாகும்..

3 months 2 weeks ago
நல்லூருக்கு அருகில் மிக விரைவில் விகாரை கட்டப்படும் நிலை உருவாகும்..

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்..

Nalloor.png?resize=800%2C511

 

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.  வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.  அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

முல்லைத்தீவு மாவட்ட கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அடாத்தாக வாடிகள் அமைத்து தங்கி இருந்து , சட்டவிரோதமான மீன் பிடிமுறமைகள் மூலம் மீன் பிடியில் ஈடுபடுகிறார்கள் என இந்த சபையில் மூன்று வருடங்களுக்கு மேலாக கூறி வருகின்றேன்.
 
அது தொடர்பில் மத்திய மீன் பிடி அமைச்சராக அப்போதிருந்த மஹிந்த அமரவீரவிடம் நேரில் கூட அது தொடர்பில் முறையிட்டு உள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை.
 
கொக்கிளாய் பகுதிகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு நாயாறு , சாலை சுண்டிக்குளம் தாண்டி தற்போது யாழ்.மாவட்டம் மருதங்கேணி வரை தொடர்கின்றது.  ஆனால் அதனை தடுக்க முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இவ்வாறே சென்றால் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமையும் காலம் வெகு விரைவில் இல்லை என்றே தோன்றுகின்றது என தெரிவித்தார்

http://globaltamilnews.net/2018/81686/

யாழில் பதற்றம் : பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு

3 months 2 weeks ago
விளையாட்டு போட்டிக்கு வந்த மாணவியின் சீருடை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்.. யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் கழுத்தப்பட்டி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். அதன் போது, பாடசாலை மாணவிகள் எவருக்கும் எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை என ஆராய்ந்து உறுதிபட அவர் தெரிவித்தார் எனவும், யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி ஒன்றில் தமது பாடசாலை மாணவிகளும் பங்கேற்றதாகவும் அதற்காக மாணவிகள் அங்கு தங்கியிருந்ததாகவும், அந்தவேளையில் தவறவிடப்பட்டதாக இந்த சீருடை அடங்கிய பொதி இருக்கலாம் என அதிபர் விசாரணையின் போது தெரிவித்தார் என பொலிஸார் தெரிவித்தனர். http://globaltamilnews.net/2018/81647/

இளமை புதுமை பல்சுவை

3 months 2 weeks ago
பிட்ஸ் பிரேக் `பாலிவுட் ராணி' கங்கனா ரணாவத்துக்கு அசைவம் என்றால் அவ்வளவு இஷ்டம். மூன்றுவேளையும் கூட பிரியாணி சாப்பிடக்கூடியவர். சமீபத்தில் சைவமாக மாறி இருக்கிறார். ‘மணிகர்னிகா: தி குயீன் ஆஃப் ஜான்சி’ படத்தில் ஜான்சி ராணியாக நடித்துக்கொண்டிருக்கிறார். படத்துக்காக உடலை பக்காவாக மெயின்டெயின் பண்ணத்தான் இந்த சைவ மாற்றமாம்! கிரிக்கெட்டின் மிஸ்டர் 360 ஏ.பி.டி வில்லியர்ஸ் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். "நான் களைத்துவிட்டேன்" என்று சொல்லி யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஓய்வு முடிவை அறிவித்துவிட, `டி வில்லியர்ஸே இல்ல, இனி எப்படி 2019 உலகக் கோப்பையை ஜெயிக்கிறது?' என்று கண்ணீர் விடுகிறார்கள் தென்னாப்பிரிக்க ரசிகர்கள். அவர்களின் கவலை ஒருபுறமிருக்க, ‘இனி ஐ.பி.எல்-ல ஆடுவாரா மாட்டாரா?' என்று அடுத்த ஐ.பி.எல் பற்றி ஃபீல் செய்து கொண்டிருக்கிறார்கள் இந்தியர்கள். இந்தக் கவலைகளுக்கு நடுவே அவரின் ஸ்பைடர்மேன் கேட்சுகளையும், 360 டிகிரி சிக்ஸர்களையும் நினைத்து நாஸ்டால்ஜியா மோடில் ஆழ்ந்திருக்கிறார்கள் ஏ.பி. டிவிலியர்கள்! எப்போதுமே மிஸ்.படபட வரலக்ஷ்மி சரத்குமார். இப்போது மிஸ்டர். சந்திரமௌலி படத்தில் அமைதிப்பெண்ணாக நடித்திருக்கிறாராம். 'தனக்குக் கதைதான் முக்கியம். கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்ற ஆசையில்லை' என்று கூறும் வரலக்ஷ்மி, சினிமா மற்றும் சமூக சேவை இரண்டையும் ஒருசேர பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறார். ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்பது `வரு’வின் லட்சியம்! https://www.vikatan.com

நத்தை கிரேவி... உலகம் முழுவதும் பல்லாண்டுகளாக இது மிக ருசியான ஸ்பெஷல் ரெஸிப்பிகளில் ஒன்று!

3 months 2 weeks ago
என்ன கோளாறு என்டாலும் முதலில் நீங்கள் இருவரும் பரீட்ச்சித்து பார்க்கவும். மற்றவர்கள் பாவம் அவர்களை விட்டு விடுங்கள்.....!

ரம்ஜான் ஸ்பெஷல் : நோன்புக் கஞ்சி

3 months 2 weeks ago
நோன்பு கஞ்சி தூக்கலாக இருக்கின்றது. இவ்வளவு விஸ்தாரமாக கஞ்சி ஆக்கும் போது அது வயிற்று கோளாறுகளை சரி செய்து விடும். மேலும் அதது அந்தந்த பண்டிகை காலங்களில் செய்து சாப்பிடும் போதுதான் அதற்கு தனியான சுவை இருக்கும். ஏனைய நாட்களில் எப்படித்தான் ஆக்கினாலும் அந்த ருசியைப் பெற முடியாது......! 😋

அபார சுவை கொண்டது ‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி?

3 months 2 weeks ago
சிம்பிளாக கரி இட்டு கிரில் போடும் அடுப்பில் செய்யலாம் என்று சொல்லுறிங்கள். சும்மாவே எனக்கு தேங்காய் சொட்டு சீவிச் சாப்பிட மிகவும் பிடிக்கும்.அதில் இவ்விதம் எல்லாம் சேர்த்து எண்டால் , சொல்லி வேல இல்லை....! 😋

சமையல் செய்முறைகள் சில

3 months 2 weeks ago
விதம் விதமான பதார்த்தங்களில் செய்யப்படும் விதம் விதமான உணவு வகைகள்...... எல்லாமே நன்றாக உள்ளது.....! 😄 இந்த காராமணி கடலை வகையறா எல்லாம் இங்கு அடையார்(ன்) கடைகளில் வாங்கலாம்.....!

பழம்பெரும் இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் காலமானார்

3 months 2 weeks ago
முக்தா சீனிவாசன் எனும் நிறைகுடம்! தமிழ்த் திரையுலகிலும் அரசியலிலும் அறுபதாண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட முக்தா வி.சீனிவாசன் மறைந்துவிட்டார். பழைய தலைமுறைத் திரைப்பட ரசிகர்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். இன்றைய தலைமுறை ரசிகர்கள் அவரிடம் தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு. விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த முக்தா வி.சீனிவாசன் 1940-களில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். மணலி கந்தசாமி, கே.பாலதண்டாயுதம், ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி போன்றவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். கம்யூனிஸ்ட் இயக்கம் தடைசெய்யப்பட்ட போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அரசுப் பணியை இழக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. தமிழ்த் திரைத் துறைக்கு ஒரு நல்ல தயாரிப்பாளர் இப்படித்தான் கிடைத்தார். இயக்குநர் சீனிவாசன் கீழிருந்து மேலே வந்தவர் சீனிவாசன். எழுத்துத் துறையோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தவர். ஆரம்பக் காலத்தில் பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு இருந்தது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இணைந்து டி.ஆர்.சுந்தரத்திடம் வசனப் பிரிவில் பணியில் இணைந்தார். அங்கேதான் மு.கருணாநிதியுடன் நட்பு ஏற்பட்டது. எல்லீஸ் ஆர்.டங்கன், வீணை எஸ்.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தார். அந்த அனுபவம் அவரது திரையுலகப் பயணத்துக்கு உதவியாக இருந்தது. 1957-ல் சீனிவாசன் இயக்கிய முதல் திரைப்படமான ‘முதலாளி’ வெளிவந்தது. முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற பெருமை அவருக்கு உண்டு. சீனிவாசன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘நிறைகுடம்’, ‘அந்தமான் காதலி’, ‘இமயம்’ போன்ற படங்கள் அவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன. ஜெயலலிதா நடித்த ‘பொம்மலாட்டம்’, ‘அன்பைத் தேடி’ போன்ற படங்களை இயக்கிய பெருமை முக்தா சீனிவாசனுக்கு உண்டு. ஜெயலலிதாவின் சிறந்த நடிப்புத் திறனை வெளிக்கொணர்ந்த ‘சூரியகாந்தி’ முக்தா சீனிவாசனின் படைப்புதான். ஜெயலலிதா, சீனிவாசன் மீது இறுதி வரை மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். சீனிவாசன் இயக்கிய ‘இதயத்தில் நீ’ திரைப்படத்தின் மூலமாகத்தான் ஒரு பாடலாசிரியராகப் பெரும் புகழ் பெற்றார் வாலி. கமல்ஹாசன் நடித்த ‘அந்தரங்கம்’ படம் சீனிவாசன் இயக்கியதே. இப்படத்தில்தான் முதன்முதலில் கமல்ஹாசன் பாடகர் அவதாரம் எடுத்தார் (‘ஞாயிறு ஒளி மழையில்’). ரஜினிகாந்த் நடித்த, ‘சிவப்பு சூரியன்’, ‘பொல்லாதவன்’ போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார். என்றாலும் சீனிவாசனின் பெரிய சாதனை என்று அவருடைய தயாரிப்பையே சொல்வேன். கச்சிதத்துக்குப் பேர் போனவர் எல்லாவற்றையும் முன்கூட்டி திட்டமிட்டும் கச்சிதமாகப் பணிகளை முடிப்பதும் சீனிவாசனின் பாணி. குறைந்த நாட்களில் படம் எடுப்பதை ஒரு கலையாக அவர் மாற்றினார். அதேசமயம், இயக்குநர்களுக்குக் குறுக்கே நிற்காதவராகவும் இருந்தார். சீனிவாசனும், அவரது அண்ணன் வி.ராமசாமியும் இணைந்து நடத்திய ‘முக்தா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் 45 படங்களைத் தயாரித்தது. இவற்றில் 20 படங்கள் மிகப் பெரிய வசூலைப் பெற்றன. தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றிய ‘நாயகன்’ படத்தைத் தயாரித்தவர் சீனிவாசன்தான். சிக்கனத்துக்கும் நாணயத்திற்கும் பெயர் பெற்ற நிறுவனமாக ‘முக்தா பிலிம்ஸ்’ திகழ்ந்தது. “சம்பளம் கொஞ்சம் குறைவாகக்கூட இருக்கலாம்; ஆனால், சொன்ன தேதியில் சொன்னபடி சல்லிக்காசு பாக்கியில்லாமல் தந்துவிடுவார் சீனிவாசன்” என்ற பெயர் எப்போதும் அவருக்கு இருந்தது. படம் வெற்றியடையாவிட்டால், பெரும்பாலும் முழுமையான சம்பளம் வந்தடையாது என்ற சூழல் நிலவும் தமிழ்த் திரையுலக நிசர்சனத்துடன் ஒப்பிட்டால்தான் சீனிவாசனின் நேர்மையைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு காலத்தில் தெளிவாகத் திட்டமிட்டு திரைப்படங்களைத் தயாரித்து, வெளியிட்டு வசூலில் சாதனை புரிந்து நிறைய சொத்துகளை முக்தா சகோதரர்கள் வாங்கினார்கள். ஆனால், பிற்காலத்தில் பல நஷ்டங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால், யாரையும் அவர்கள் நஷ்டப்படுத்தவில்லை. முக்தா திருமண மண்டபம், முக்தா தொழிற்கூடம் தொடங்கி அவர்களுடைய வீடுகள் வரை விற்று கடன்களை அடைத்தனர். சென்னையில் இன்று பாஜக தலைமையகம் உள்ள இடம் ஒருகாலத்தில் சீனிவாசனின் வீடாக இருந்தது. அரசியல் பயணம் காந்தியிடம் சீனிவாசனுக்குப் பெரிய ஈர்ப்பு இருந்தது. அவரிடம் வெளிப்பட்ட எளிமை, சிக்கனம், நேர்மை இவற்றுக்கெல்லாம் காந்தியின் தாக்கம் ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லலாம். அரசியலில் அவருக்கு ஆர்வம் இருந்தது. 1961-ல் காமராஜர் தலைமையை ஏற்று காங்கிரஸில் இணைந்தார். 1970-களில் சிவாஜி ரசிகர் மன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டார். 1989-ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ஜி.கே.மூப்பனார் நியமிக்கப்பட்ட பின் தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திற்கு நாள்தோறும் வருகைபுரிய ஆரம்பித்தார். இருவரும் பால்ய சிநேகிதர்கள். இருவரும் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்கள். பக்கத்துப் பக்கத்து ஊர்க்காரர்கள். அந்த வகையில் இருவர் இடையிலும் அபரிதமான நட்பும் மரியாதையும் இருந்தது. 1999 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட சீனிவாசன் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதுவே அவருடைய அரசியல் வீழ்ச்சியாகவும் மாறியது. திரையில் பல வெற்றிகளைக் கண்டிருந்தாலும் அரசியலில் வெற்றி பெறாதது பற்றிய வருத்தம் அவருக்கு இறுதிவரை இருந்தது. அதேபோல எழுத்துலகுடனும் நெருக்கமான உறவில் அவர் இருந்தார். இறுதிக் காலத்தில் ‘திருவிடம்’ என்கிற பதிப்பகத்தைத் தொடங்கி நிறைய நூல்களை எழுதி, வெளியிட ஆரம்பித்தார். ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’, ‘20 ஆம் நூற்றாண்டு சாதனைகள்’ (5 பாகங்கள்), ‘இணையற்ற சாதனையாளர்கள்’ (5 பாகங்கள்) போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. சென்னைப் புத்தகக்காட்சியில் தனது அரங்கில் புத்தகங்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பார். அரங்குக்கு வரும் அனைவரையும் ‘வாங்க.. வாங்க’ என்று வாஞ்சையுடன் வரவேற்பார். அடுத்த புத்தகக்காட்சியில் சீனிவாசனைப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர் நினைவின்றி எவரும் கடக்கவும் முடியாது! - ஆ.கோபண்ணா, தலைவர், ஊடகத்துறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி http://tamil.thehindu.com/opinion/columns/article24043228.ece

காயமடைந்தவர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் நிதியுதவி #Liveupdates

3 months 2 weeks ago
நெட்டிசன் நோட்ஸ்: அந்த சமூக விரோதிகள் யார் ரஜினி? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை இன்று (புதன்கிழமை) காணச் சென்ற நடிகர் ரஜினிகாந்த்தை இளைஞர் ஒருவர் நீங்கள் யார்? என்று கேட்பார் அதற்கு ரஜினி நான்தான்பா ரஜினிகாந்த் என்று கூறியிருந்தார். மேலும் சமூக விரோதிகள்தான் தூத்துக்குடி வன்முறைக்கு காரணம் என்றும் ரஜினி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து #நான்தான்பாரஜினிகாந்த் #ரஜினிகாந்த என்ற ஷாஸ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது. இதுகுறித்த நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்.... திரு ‏கட்சி ஆரம்பிக்கும் வரை அரசியல் பேச மாட்டேன்னு சொன்னாரு... அதை தாண்டி இப்படி உளறி கொட்டவச்சது போராட்டங்கள் மீதான பயம்... முதலாளிகள் மேல் உள்ள பற்று... ஆனா அவர் அரசியல் பாதை, கொள்கைகளை தெளிவாக்கியதற்கு நன்றி சொல்லணும்... பாலா #நான்தான்பாரஜினிகாந்த் #யார்நீங்க என்று அந்த இளைஞர் கேட்டதில் பொதிந்திருந்தது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோபம். எங்கள் மண்ணில் நின்று கொண்டு எங்களையே சமூகவிரோதி என்று அழைக்கும்... Thamizh vanan சினிமாவில் தலைவனை தேடியது போதும் இனியாவது படிச்சவனை தேடுங்க இல்லனா நாளைக்கு உனக்கும் 10 இலட்சம் தான் !#நான்தான்பாரஜினிகாந்த் Vignesh Masilamani ‏"நீங்க யாரு" இந்த கேள்வியை 40 வருசத்து முன்னாடி எம்.ஜி.ஆர்-ஐ பாத்து கேட்டிருந்தா நம்ம தமிழ்நாடு இந்நேரம் எங்கயோ போயிருக்கும்... Dr.Strange ‏இதுக்கு அப்புறமும் அவர் பின்னால பாஜக இல்ல சொந்தமா யோசிக்குறாரு ஆன்மீக அரசியல்ன்னு முட்டு குடுக்கப்போற ரசிகாச நெனச்சா தான் பாவமா இருக்கு Black Panther ‏அந்த சமூக விரோதிகள் யார்? 13 பேரை சுட்டுக்கொன்ற ஏவலாளிகள் மீது நடவடிக்கை இல்லையா? அதிகார வர்க்கத்தின் ஊது குழலே ரஜினி Liandar Dass(தமிழன்) ‏#நான்தான்பாரஜினிகாந்த் யாருயா நீ . . . நான் தான் பா ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் . . . இருந்திட்டு போ 100 நாளா எங்கயா போன . . . Thamizh vanan ‏ரஜினி கருத்துக்கு தமிழிசை ஆதரவு ! புரிஞ்சிக்கோ பிழைச்சக்கோ கார்த்திக் ‏#நான்தான்பாரஜினிகாந்த் நான் மாது வந்திருக்கேன் is a word நான் தான் பா ரசினிகாந்த் Is emotion பிலால் அகமது ‏நா இமயமலைக்கே போயிருப்பேன் என்னைய இங்க வர வச்சி இட்லி ‏ஜல்லிக்கட்டு, தூத்துக்குடின்னு எல்லா மக்கள் போராட்டமும் சமூக விரோதிகளால தான் வன்முறையா மாறுது! ஆனா இதுவரை அந்த வன்முறைல ஒரே ஒரு உண்மையான சமூக விரோதி கைதாகுறதில்ல! குண்டடிபடுறதில்ல! பவிரக்‌ஷா ‏யாரவது ஒரு பத்திரிக்கையாளராவது "சமூக விரோத கும்பல்" என்றால் என்ன, அதன் வரையறை என்ன என்று கேட்டுத்தொலையுங்களேன். ஊழல் குற்றச்சாட்டின் முதன்மை குற்றவாளி இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் என்று சொல்லிவிட்டு ஊழலுக்கு எதிராக ஏன் பேசவேண்டும் ? இராவணன் ‏அட சமூகவிரோதிக ஊடுருவினதாவே இருக்கட்டுமப்பா ஊடுருவின சமூக விரோதிகள விட்டுட்டு அப்பாவிகள சுட்டுக்கொன்னுருக்க காவல்துறையை, அரச எதாவது கண்டிச்சிருக்கானா பார் சங்கி மெண்டல் ரஜினி. போராட்டம் பண்ணினதுக்கு உங்களுக்கு அடிபட்டது தேவதாண்டா இந்தா ஆப்பிள் சாப்புட்டு மூடிட்டு இருனு சொல்றான் KASSIM. Mohamed ‏#நான்தான்பாரஜினிகாந்த் தங்களுக்காகவும், தங்கள் குல கொழுந்துகளுக்காகவும் போராடி உயிர் நீத்த எம் தமிழ் குல சகோதரர்களையும், சகோதரிகளையும் சமூக விரோதிகள் என்று சொல்லும் இந்த கன்னட நடிகனை வரவேற்க இத்தனை கூட்டமா? நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை எண்ணி!!! ஆரூர் உதயசங்கர் ‏1980 ல சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும். 2018 - #நான்தான்பாரஜினிகாந்த் உத்தமன் ‏ஆமா நீங்க யாரு.? எல்லாருக்கும் சத்தம்போட்டு சொல்லுறேன்.. அட #நான்தான்பாரஜினிகாந்த் லொல்லு-மன்னன் ‏மக்கள் ஓரளவு விழித்து விட்டார்கள் என்பதற்க்கான முதல் பதிவு அந்த பையன் கேட்ட இந்த வார்த்தை... SHRiNY ‏#நான்தான்பாரஜினிகாந்த் ரஜினியின் தெள்ளத்தெளிவான ஆன்மிக அரசியல் பேட்டி கேள்வி-துப்பாக்கிச் சூடு நடத்தியது ? ரஜினி-அதைத்தான் தவறு என்று சொல்லி விட்டேனே. கேள்வி-அப்போ விஷமிகள் ஊடுருவியது ? ரஜினி-அதை தடுக்கணும் கேள்வி-ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியா ? ரஜினி-ஆலையை திறக்கக்கூடாது http://tamil.thehindu.com

அதிகாரிகளின் அசமந்தம் – செயலிழக்கும் நிலையில் அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையம்…

3 months 2 weeks ago
அதிகாரிகளின் அசமந்தம் – செயலிழக்கும் நிலையில் அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையம்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி.. கிளிநொச்சி அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள நாற்பது கடைகளில் இரண்டு கடைகள் மாத்திரமே இயங்கி வருகின்றன. விரைவில் அதுவும் மூடப்பட்டு பொருளாதார மத்திய நிலையம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கபடுகிறது. கடந்த வருடம் ஒக்ரோபர் 14 ஆம் திகதி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் நாற்பது கடைகள் காணப்படுகின்றன. இதில் தற்போது இரண்டு கடைகள் மாத்திரமே இயங்கி வருகின்றன. இந்த இரண்டு கடைகளையும் தங்களாலும் தொடர்ந்தும் இயக்க முடியுமா என்பது சந்தேகமே என அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். நாற்பது கடைகளும் மாவட்டச் செயலகத்தினால் கேள்வி மனுக் கோரப்பட்டு வழங்கப்பட்டன. ஆனால் எட்டுமாதம் ஆன நிலையில் இரண்டு கடைகள் மாத்திரம் இயங்குகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையிலும், மொத்த வியாபார செயற்பாடுகளை விரிவாக்கி நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையிலும் அம்பாள்குளத்தில் பல மில்லியன்கள் ரூபா செலவில் குறித்த பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டது. பொருத்தமான இடத்தில் இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிலையில் இந் நிலையத்தின் செயற்பாடுகளை விரிவாக்கும் வகையில் மாவட்டத்தில் எவ்விதமான தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பொருளாதார மத்திய நிலையத்தை வினைத்திறனுடன் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய மாவட்ட மட்ட உயரதிகாரிகள், அரசியல் தரப்பினர்கள் என அவர்களும் அக்கறையின்றி காணப்படுகின்றனர் என தற்போது கடையினை நடத்துகின்ற ஒருவர் தெரிவித்தார். http://globaltamilnews.net/2018/81660/

அதிகாரிகளின் அசமந்தம் – செயலிழக்கும் நிலையில் அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையம்…

3 months 2 weeks ago
அதிகாரிகளின் அசமந்தம் – செயலிழக்கும் நிலையில் அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையம்…

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி..

ambalkulam1.jpg?resize=800%2C533

 

கிளிநொச்சி அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள நாற்பது கடைகளில் இரண்டு கடைகள் மாத்திரமே இயங்கி வருகின்றன. விரைவில் அதுவும் மூடப்பட்டு பொருளாதார மத்திய நிலையம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கபடுகிறது.

கடந்த வருடம் ஒக்ரோபர் 14 ஆம் திகதி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் நாற்பது கடைகள் காணப்படுகின்றன. இதில் தற்போது இரண்டு கடைகள் மாத்திரமே இயங்கி வருகின்றன.  இந்த இரண்டு கடைகளையும் தங்களாலும் தொடர்ந்தும் இயக்க முடியுமா என்பது சந்தேகமே என அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாற்பது கடைகளும் மாவட்டச் செயலகத்தினால் கேள்வி மனுக் கோரப்பட்டு வழங்கப்பட்டன. ஆனால் எட்டுமாதம் ஆன நிலையில் இரண்டு கடைகள் மாத்திரம் இயங்குகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையிலும், மொத்த வியாபார செயற்பாடுகளை விரிவாக்கி நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையிலும் அம்பாள்குளத்தில் பல மில்லியன்கள் ரூபா செலவில் குறித்த பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டது.

பொருத்தமான இடத்தில் இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிலையில் இந் நிலையத்தின் செயற்பாடுகளை விரிவாக்கும் வகையில் மாவட்டத்தில் எவ்விதமான தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பொருளாதார மத்திய நிலையத்தை வினைத்திறனுடன் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய மாவட்ட மட்ட உயரதிகாரிகள், அரசியல் தரப்பினர்கள் என அவர்களும் அக்கறையின்றி காணப்படுகின்றனர் என தற்போது கடையினை நடத்துகின்ற ஒருவர் தெரிவித்தார்.

ambalkulam3.jpg?resize=800%2C533ambalkulam2.jpg?resize=800%2C533

ambalkulam4.jpg?resize=597%2C800

http://globaltamilnews.net/2018/81660/

சர்ச்சைப்பேச்சு எதிரொலி: ரஜினி வீட்டுக்கு கடும் போலீஸ் பாதுகாப்பு

3 months 2 weeks ago
சர்ச்சைப்பேச்சு எதிரொலி: ரஜினி வீட்டுக்கு கடும் போலீஸ் பாதுகாப்பு

 

 

 
download%201

ரஜினி, ரஜினி வீட்டு முன் பாதுகாப்பு அதிகரிப்பு படம்: எல் சீனிவாசன்

சர்ச்சைக்குரிய பேட்டியை அளித்த நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படலாம் என்பதால் ரஜினி வீட்டுமுன் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று 1996 முதல் கூறிவந்த நிலையில் கடந்த ஜனவரி 31 அன்று தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இதுவரை கட்சியின் பெயர், கொடி, சின்னம் எதையும் வெளியிடவில்லை.

 
 

கட்சியின் மாநில நிர்வாகியாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய ராஜு மகாலிங்கம் என்பவரை நியமித்தார். ரசிகர்களை மட்டுமே சந்தித்தும், ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டும் வந்த ரஜினி தனது ரசிகர்கள் யாருக்கும் பதிலளிக்க கூடாது நேரடியாக தேர்தல் நேரத்தில் களம் இறங்குவதாக அறிவித்தார்.

தனது கொள்கை குறித்து கேட்டபோது ஆன்மிக அரசியல் என்றார். பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்ற பெயரை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஒவ்வொரு தடவையும் அரசியல் அழுத்தம் வரும்போது மட்டும் கருத்துக்களை வெளியிடுவதும் பின்னர் மாற்றிக்கொள்வதும் ரஜினியை சர்ச்சையில் சிக்க வைத்தது.

ஐபிஎல் போராட்டத்தில் ஆரம்பத்தில் ஆதரவாக கருத்து தெரிவித்தவர், பின்னர் பின் வாங்கி போராட்டக்காரர்களை கண்டித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்த ரஜினி, அனைவரும் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நேரத்தில் தான் போகாமல் இருந்தால் அது சரியல்ல என்ற எண்ணத்தில் தூத்துக்குடி சென்றார்.

அங்கும் போராட்டம் குறித்த ரஜினியின் விமர்சனமும், அரசுக்கு ஆதரவாக பேசியது, இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பியதும் பெரிய ட்ரெண்டானது. இந்நிலையில் ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ஏய் என ஏக வசனத்தில் பேசினார். காலா பட ரிலீஸுக்காகத்தான் மக்களை சந்திக்க வெளியே வந்தார் என்ற விமர்சனமும் வந்தது.

காலா படத்தில் போராட வேண்டும் என காட்சிகளை வைத்துவிட்டு நிஜ வாழ்க்கையில் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஸ்டாக் ட்விட்டரில் இந்தியா முழுதும் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் ரஜினியின் பேச்சு பலத்த கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஜினி வீட்டின் முன் போராட்டக்காரர்கள் முற்றுகையிடலாம் என்ற தகவல் அடிப்படையில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article24044262.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

சர்ச்சைப்பேச்சு எதிரொலி: ரஜினி வீட்டுக்கு கடும் போலீஸ் பாதுகாப்பு

3 months 2 weeks ago
சர்ச்சைப்பேச்சு எதிரொலி: ரஜினி வீட்டுக்கு கடும் போலீஸ் பாதுகாப்பு ரஜினி, ரஜினி வீட்டு முன் பாதுகாப்பு அதிகரிப்பு படம்: எல் சீனிவாசன் சர்ச்சைக்குரிய பேட்டியை அளித்த நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படலாம் என்பதால் ரஜினி வீட்டுமுன் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று 1996 முதல் கூறிவந்த நிலையில் கடந்த ஜனவரி 31 அன்று தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இதுவரை கட்சியின் பெயர், கொடி, சின்னம் எதையும் வெளியிடவில்லை. கட்சியின் மாநில நிர்வாகியாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய ராஜு மகாலிங்கம் என்பவரை நியமித்தார். ரசிகர்களை மட்டுமே சந்தித்தும், ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டும் வந்த ரஜினி தனது ரசிகர்கள் யாருக்கும் பதிலளிக்க கூடாது நேரடியாக தேர்தல் நேரத்தில் களம் இறங்குவதாக அறிவித்தார். தனது கொள்கை குறித்து கேட்டபோது ஆன்மிக அரசியல் என்றார். பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்ற பெயரை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஒவ்வொரு தடவையும் அரசியல் அழுத்தம் வரும்போது மட்டும் கருத்துக்களை வெளியிடுவதும் பின்னர் மாற்றிக்கொள்வதும் ரஜினியை சர்ச்சையில் சிக்க வைத்தது. ஐபிஎல் போராட்டத்தில் ஆரம்பத்தில் ஆதரவாக கருத்து தெரிவித்தவர், பின்னர் பின் வாங்கி போராட்டக்காரர்களை கண்டித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்த ரஜினி, அனைவரும் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நேரத்தில் தான் போகாமல் இருந்தால் அது சரியல்ல என்ற எண்ணத்தில் தூத்துக்குடி சென்றார். அங்கும் போராட்டம் குறித்த ரஜினியின் விமர்சனமும், அரசுக்கு ஆதரவாக பேசியது, இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பியதும் பெரிய ட்ரெண்டானது. இந்நிலையில் ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ஏய் என ஏக வசனத்தில் பேசினார். காலா பட ரிலீஸுக்காகத்தான் மக்களை சந்திக்க வெளியே வந்தார் என்ற விமர்சனமும் வந்தது. காலா படத்தில் போராட வேண்டும் என காட்சிகளை வைத்துவிட்டு நிஜ வாழ்க்கையில் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஸ்டாக் ட்விட்டரில் இந்தியா முழுதும் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் ரஜினியின் பேச்சு பலத்த கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஜினி வீட்டின் முன் போராட்டக்காரர்கள் முற்றுகையிடலாம் என்ற தகவல் அடிப்படையில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. http://tamil.thehindu.com/tamilnadu/article24044262.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

இளமை புதுமை பல்சுவை

3 months 2 weeks ago
டி-சர்ட்டா அல்லது சட்டையா?- இணையத்தில் விவாதத்தை கிளப்பிய ஆடை பகிர்க படத்தின் காப்புரிமைBALENCIAGA பெலேன்சியாகா என்னும் ஃபேஷன் நிறுவனம், 2018-ம் ஆண்டுக்கான இலையுதிர் கால கலெக்‌ஷனாக, 1290 டாலருக்கு ஆண்களுக்கான டி-ஷர்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை பலரை ஆச்சரியப்படுத்தவில்லை என்றாலும், இதன் வடிவமைப்பு பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு டி சர்ட்டின் முன்பு, கட்டம் போட்ட சட்டை குத்தி வைத்திருப்பது போல இதன் வடிவமைப்பு உள்ளது. இது பலருக்கு குழப்பத்தை விளைவித்துள்ளது. View image on Twitter இந்த ஆடையினை, இரண்டு முறைகளில் அணியலாம் என பெலேன்சியாகா வலைதளம் கூறியுள்ளது. ஆனால், பலர் தாங்களாகவே இதுபோன்ற ஆடையை தயாரித்து, நிறைய பணத்தை சேமிக்க முடிவு செய்தனர். இந்த மர்மத்தைத் தீர்க்க, அந்நிறுவனத்திற்கு நாங்கள் தொடர்புகொண்டோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. https://www.bbc.com