நாகர்கோவில் படுகொலை

1995-09-22 அன்று 39 பள்ளிச்சிறார்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்

Aggregator

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை விழா

3 months 2 weeks ago
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை விழா
 
 

- எஸ்.ஜெகநாதன்

image_e8bbc2020b.jpgimage_03399ccee6.jpg

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ் மாநகரசபை, வடமாகாண விவசாய அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் யாழ் பிரதேச செயலகம் ஆகியன ஒன்றிணைந்து முன்னெடுக்கும் மரம் நடுகை விழா யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலில் இன்று (05) இடம்பெற்றது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மரம்-நடுகை-விழா/71-217124

இன்­னொரு பிர­பா­க­ர­னால் மட்­டுமே – வடக்­கைக் காப்­பாற்ற முடி­யும்!!

3 months 2 weeks ago
இன்­னொரு பிர­பா­க­ர­னால் மட்­டுமே – வடக்­கைக் காப்­பாற்ற முடி­யும்!! Capture-81-750x430.jpg
 
 
 

வட­ப­கு­தி­யில் குற்­றச் செயல்­கள் துரி­த­மா­கப் பெருகி வரு­ வ­தைக் காண முடி­கின்­றது. திருட்டு, கொள்ளை, கொலை, போதைப் பொருள்­க­ளின் விற்­பனை ஆகி­யவை நாளுக்கு நாள் அதி­க­ரித்­துச் செல்­வ­தை­யும் காண முடி­கின்­றது.

வவு­னி­யா­வில் இரவு வேளை­யில் தாயு­டன் உறங்­கிக் கொண்­டி­ருந்த எட்டு மாதக் குழந்­தையை வீட்­டுக் கதவை உடைத்­துக் கொண்டு உள்ளே நுழைந்த சிலர் கடத்­திச் சென்­றமை வடக்­கின் பாது­காப்பு நிலைமை எந்த அள­வில் உள்­ள­தென்­ப­தைத் தூலம்­ப­ர­மாக எடுத்­துக்­காட்­டி­விட்­டது.

இரவு வேளை­யில் நிம்­ம­தி­யா­கப் படுத்து உறங்க முடி­யாத அள­வுக்கு சமூக விரோ­தி­க­ ளின் தொல்லை இங்கு அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­கின்­றது. இடைக்­கிடை வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளுக்­கும் குடாநாட்­டில் குறை­வில்லை. வட­ப­குதி மக்­கள் அமை­தியை விரும்­பு­ப­வர்­கள் எனப் பெயர் பெற்­ற­வர்­கள்.

 

ஆனால் ஒரு சில­ரின் அடா­வ­டித்­த­னங்­கள் அனைத்து மக்­க­ளுக்­கும் கெட்ட பெய­ரைச் சம்­பா­தித்­துக் கொடுத்­து­விட்­டன. எதிர்­கா­லத் தலை­வர்­க­ளாக உரு­வாக வேண்­டிய இளை­ஞர்­களே குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­டு­கின்­றமை தாங்க முடி­யாத சோகத்தை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது.

நிலைமை இவ்­வாறு தொட­ரு­மா­னால் வட­ப­கு­தி­யின் எதிர்­கா­லமே சூனிய­மா­கி­வி­டும். இங்­குள்ள அர­சி­யல்­வா­தி­கள் குடா­நாட்­டின் தற்­போ­தைய அவல நிலை தொடர்­பா­கச் சிறி­தும் கவ­னம் செலுத்­து­வ­தா­கத் தெரி­ய­வில்லை. மாகாண சபை­யும் எமக்கு அதி­கா­ரம் வழங்­கப்­ப­டா­த­தால் எதை­யுமே செய்ய முடி­ய­வில்­லை­ யெ­னப் பழைய பல்­ல­வி­யையே பாடிக்­கொண்­டி­ருக்­கி­றது.

வட­ப­குதி மக்­கள் செய்த பாவம்­தான் என்ன? அவர்­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்கு இன்­னொரு பிர­பா­க­ரன்­தான் தோன்ற வேண்­டும்.

பா.வளர்­மதி, கொக்­கு­வில்

http://newuthayan.com/story/13/இன்­னொரு-பிர­பா­க­ர­னால்-மட்­டுமே-வடக்­கைக்-காப்­பாற்ற-முடி­யும்.html

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்

3 months 2 weeks ago
அரும்பாடுபட்ட ஆஸ்திரேலியா டிம் காஹில் - REUTERS டிம் காஹில் - REUTERS ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவது இது 4-வது முறையாகும். அந்த அணி 1974-ல் ஜெர்மனியில் நடைபெற்ற கால்பந்து தொடரில் முதன்முறையாக விளையாடியது. அந்தத் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறிய ஆஸ்திரேலிய அணி அதன் பின்னர் 32 வருடங்களுக்கு பிறகு 2006-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது. ஜெர்மனியில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி நாக் அவுட் சுற்றுவரை முன்னேறியது. அந்தத் தொடரில் பலம் வாய்ந்த இத்தாலியுடன் மோதி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு ஆஸ்திரேலிய அணி வெளியேறியிருந்தது. இதன் பின்னர் 2010 மற்றும் 2014-ம் ஆண்டு தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் சுற்றுடன் மூட்டை கட்டியிருந்தது. இம்முறை உலகக் கோப்பை தொடருக்கு படாதபாடுபட்டே ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. ஆசிய அளவிலான தகுதிச் சுற்று போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்திருந்த ஆஸ்ரேலியா 3-வது இடத்தையே பிடித்திருந்தது. இதனால் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதற்கு இரு பிளே ஆஃப் ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் சிரியா அணியை 2-1 என்ற கோல் கணக்கிலும், ஹோண்டூராஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷ்ய உலகக் கோப்பைக்கு தொடருக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலிய அணி. சிரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டிம் காஹில் இரு கோல்களை அடித்த நிலையில் ஹோண்டூராஸ் அணிக்கு எதிராக கேப்டன் மைல் ஜெடினக் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தியிருந்தார். ஹோண்டூராஸ் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற உடனேயே பயிற்சியாளராக இருந்த போஸ்ட்கோக்ளோ தனது பதவியை ராஜினாமா செய்தார். தகுதிச் சுற்று ஆட்டங்களின் போது கள யுத்தியில் போஸ்ட்கோக்ளோ, சென்ட்ரல் டிபன்ஸில் 3 வீரர்களை பயன்படுத்தினார். இந்த வியூகத்தை தகவமைத்துக் கொண்டு விளையாடுவதில் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாற்றம் கண்டனர். ஆசிய கண்டத்தில் இருந்து எளிதாக தகுதி வாய்ப்பிருந்ததும் ஆஸ்திரேலிய அணி நெருக்கடியை சந்தித்ததற்கு இதுவே காரணம் என கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாகவே போஸ்ட்கோக்ளோ பதவியில் இருந்து விலக நேரிட்டது. இதன் பின்னர் இடைக்கால பயிற்சியாளராக பெர்ட் வான் மார்விஜ் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ்தான் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடரை சந்திக்கிறது. வான் மார்விஜ் பொறுப்பேற்ற பின்னர் ஆஸ்திரேலிய அணி நட்புரீதியிலான ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் நார்வே அணியிடம் தோல்வி கண்டது. அதன் பின்னர் கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிரா செய்திருந்தது. இது குறித்து வான் மார்விஜ் கூறும்போது, “நான் மந்திரவாதி ஒன்றும் இல்லை. இரண்டே நாட்களில் அணி வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிட முடியாது. நிறைய நேரம் செலவாகும். தற்போது துருக்கியில் 4 வார காலங்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகிறாம். உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இரு பயிற்சி ஆட்டங்கள் போதுமானது. என்னை பொறுத்தவரையில் முதல் சுற்றை கடந்தாலே மகிழ்ச்சியடைவேன். அதை செய்ய முடியாவிட்டால் நான் என்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியாது. நான் ஒரு யதார்த்தவாதி, அதேவேளையில் சிறிது நம்பிக்கையும் கொண்டவன். சிறந்த திறனை வெளிப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேவேளையில் அழுத்தம் அதிகமாக இருந்துவிடக்கூடாது. அழுத் தம் இல்லாமல் சிறந்த திறனை வெளிப்படுத்தவும் முடியாது” என்றார். ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கடினமான ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் பலம் வாய்ந்த பிரான்ஸ், டென்மார்க், பெரு அணிகள் இடம் பிடித்துள்ளன. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெரும்பாலானோர் ஐரோப்பா மற்றும் ஆசிய அளவில் நடைபெறும் தொழில் ரீதியிலான கால்பந்து தொடர்களில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளனர். நடுகள வீரரான ஆரோன் மூய், கோல்கீப்பர் மேம் ரேயான், டாம் ரோஜிக், 38 வயதான டாம் காஹில், கேப்டன் மைல் ஜெடினக், இளம் வீரர்களான டேனியல் அர்ஸானி, பிரான் கார்சிக் ஆகியோரை ஆஸ்திரேலிய பெரிதும் நம்பியுள்ளது. இவர்களில் டாம் காஹில் தகுதி சுற்று ஆட்டங்களில் 11 கோல்கள் அடித்து அசத்தியிருந்தார். தலையால் முட்டி கோல் அடிப்பதில் பிரபலம் வாய்ந்த அவர், இம்முறை சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடும். http://tamil.thehindu.com/sports/article24085204.ece

உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்:

3 months 2 weeks ago
தியாகி பொன் சிவகுமாரனின் 44ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 44ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் நடைபெற்றது. யாழ். உரும்பிராய் சந்திக்கருகில் அமைந்துள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் காலை 09.30 மணியளவில் நடைபெற்றது. தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்தி போராடினார். அதனால் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் கடந்த 1974ஆம் ஆண்டு ஜீன் மாதம் 05ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் காவல்துறையினரின் சுற்றிவளைப்பினுள் சிக்கிக்கொண்ட போது சயனைட் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார். ஈழ போராட்ட வரலாற்றில் முதல் முதலாக சயனைட் அருந்தி உயிர் நீத்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது. http://globaltamilnews.net/2018/82368/ மேலும் சில படங்கள்.... நன்றி முகநூல்

எண்ட சைக்கிளை ஆட்டையை போட்டு விட்டார்கள்.

3 months 2 weeks ago
குசும்பல்ல, எரிச்சல்.. CCTV பதிவு இருக்கும். போலீசுக்குப் போனால் போதும்.... கள்ளரையும் உள்ள போட்டு, சைக்கிள்ள வீட்ட வரலாம் எண்டு கண பேருக்கு ஜடியா இருக்குது. உங்க அப்படி ஒரு கோதாரியும் நடவாது எண்டு சொல்ல வந்தேன்.

முடிவின்றி முடிந்த யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் :

3 months 2 weeks ago
நீங்கள் வேற எங்கன்ட சிட்னி முருகனுக்கு ஒரு கார் பார்க்கும் கலியாணமண்டபமும் கட்ட .....சீனியர் யூனியர் என்று இழுபட்டு கொண்டு திரியினம்.....அதாவது யூனியர்மார் எதாவது செயல் திட்டம் கொண்டு வந்தால் சீனியர்மார் விட மாட்டினம்....பொது நோக்கு என்ற கொள்கை, மனபக்குவம் இன்னும் எம்மவர்களுக்கு வரவில்லை அது கவலைக்குறிய விடயம்.....அடுத்த சந்ததியினரை கெடுக்காமல் இருந்தால் நல்லம்....

யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கும் நிதி போதாது. – பிரதமரை கேட்டால் சிரிக்கின்றார்…..

3 months 2 weeks ago
சரி வடமாகாணத்துக்கு ஒதுக்கிய நிதி எல்லாம் செலவழிச்சு முடிந்துவிட்டதா. அதைக்கேட்டால் முதல்வரும் சிரிக்கிறார்.

உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்:

3 months 2 weeks ago
தயவு செய்து மீளாய்வு செய்து செய்திகளை வெளியிடுங்கள் தீபச்செல்வன்/குருபரன். வரலாறு முக்கியம் ஆசிரியரே. சிவகுமாரன் பிறந்தது 26 செப்ரெம்பர் 1950.

வணக்கம் தாய்நாடு .... உயிரிழை அமைப்பின் புதிய கட்டிட திறப்பு விழா |

3 months 2 weeks ago
உயிரிழை அமைப்பின் புதிய கட்டிட திறப்பு விழா முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான பராமரிப்பு நிலைய திறப்பு விழா - உயிரிழை மாங்குளம்

இளமை புதுமை பல்சுவை

3 months 2 weeks ago
ஹலோ... உலகம் அழியப் போகிறது. என்னவெல்லாம் எடுத்துக் கொள்வீர்கள்? அது 2012-ன் இறுதி. டிசம்பர் 31. இரவு ஒரு போன்கால் வந்தது. அவனை ஒரு பயணத்தில் சந்தித்தது. மீன் பிடித் தொழில் செய்பவன். மரக்காணம் பக்கத்தில் இருக்கும் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவன். ``ண்ணா...இன்னிக்கு நைட்டு உலகம் அழிஞ்சிரும்ன்னு சொல்றாங்களே உண்மையா? நாங்க பசங்க எல்லாரும்...கடலுக்குள்ள தீவுக்குப் போறாம்னா. உலகத்தோட கடைசி இரவு... சந்தோஷமா, நிம்மதியா கடல்லேயே இருக்கலாம்ன்னு போறோம். நீங்களும் வாங்க..." அவன் அதை அவ்வளவு சீரியஸாகச் சொன்னான். நான் மெதுவாக சிரித்தபடி... ``அப்படி எல்லாம் உலகம் அழிஞ்சிடாது தம்பி..." என்றேன். ``என்னமோ ண்ணா...நாங்க கடலுக்குப் போய் கடைசியா சாப்பாடெல்லாம் செஞ்சு கொண்டாடப் போறோம். ஒருவேளை உலகம் அழியாம இருந்தா சந்திப்போம்" என்று சொல்லிவிட்டு போன் வைத்தான். ``உலகம் அழியப் போகிறது"... இந்த வாக்கியம் நிஜ வாழ்க்கையில் நடக்கும் என்றால் அது மிகப் பெரிய இழப்புகளையும், வலியையும் ஏற்படுத்தக் கூடியது. ஆனால், இந்த வழக்கமான பொதுச் சமூக வாழ்வு நமக்கு ஏற்படுத்தியிருக்கும் சலிப்போ அல்லது மொத்த வாழ்வின் பிரச்னைகளிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான வழியோ அல்லது ஹாலிவுட் படங்களின் தாக்கமோ... ஏதோ ஒன்று அந்தக் கற்பனையை நமக்கு சுவாரஸ்யப்படுத்துகிறது. உலக அழிவை ஆங்கிலத்தில் `அபோகலைப்ஸ்' (Apocalypse) என்று சொல்வார்கள். ஒரு வேளை அபோகலைப்ஸ் நிகழ்ந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று ஒரு ஹாலிவுட் படத்தையே மண்டையில் ஓடவிட்டபடி இணையத்தில் அது குறித்து சில விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது குறிப்பாக ஒரு விஷயம் சற்று வித்தியாசமாக கண்ணில்பட்டது. அபோகலிப்ஸ் நடக்கும்போது நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய பொருள்கள் என ஒரு பட்டியலைக் கொடுத்திருந்தது. உலகம் அழியப்போகிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும் என்ற கற்பனையோடு இதைப் படித்துப் பாருங்கள். அபோகலிப்ஸிற்குத் தேவையான பொருள்களைச் சேகரிக்க முதலில் நமக்கு ஒரு பேக் (Bag) வேண்டும். இதை ஆங்கிலத்தில் 'பக் அவுட் பேக்' (Bug Out Bag) என்று சொல்கிறார்கள். அழிவு நடந்து குறைந்தபட்சம் அடுத்த 72 மணி நேரத்துக்கு உயிர் வாழ்வதற்கான பொருள்களைக் கொண்டிருப்பதுதான் `பக் அவுட் பேக்'. அதன் கொள்ளளவு 75லி. தங்கத் தேவை டென்ட்: நிலநடுக்கத்தினாலோ, சுனாமியினாலோ இன்னும் பல இயற்கை சீற்றங்களினாலோ அல்லது ஹாலிவுட் படங்களில் காட்டப்படுவது போல் ஜாம்பிக்களினாலோ (Zombies) இந்த உலகம் அழியலாம். முதலில், நாம் பாதுகாப்பாக தங்க ஒரு இடம் வேண்டும். அதற்கு அந்த பேக்கில் ஒரு டென்ட்டை நாம் எடுத்துச் செல்ல வேண்டும். அது இருவர் படுக்குமளவுக்கு இருக்க வேண்டும். கூடவே, ஸ்லீப்பிங் பேக் (Sleeping Bag) வைத்திருப்பது அவசியம். இது இரண்டும் இருந்தால், உலகில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் தப்பித்துச் சென்று, பாதுகாப்பாகத் தங்கலாம். தண்ணீர் : உலகம் அழிந்து, சூழலை உணர சில மணி நேரங்களாவது ஆகும். சமயங்களில் ஒரு நாள் கூட ஆகலாம். சூழலைப் புரிந்து நீர் இருக்கும் இடத்துக்கு ஆபத்துகளைக் கடந்து பத்திரமாக சென்றடைவது சற்று சிரமமாக இருக்கலாம். அதுவரை பிழைத்திருக்க தண்ணீர் அவசியம். தண்ணீர் பாட்டில் ஒன்றோடு சேர்த்து `ஹைட்ரேடிங் பேக்' (Hydrating Bag) அவசியம். நீண்ட தூரம் நடந்துப் போக இருக்கும் சூழலில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். உணவு: உலகம் அழிந்துவிடும். எல்லா கடைகளும் சூறையாடப்பட்டிருக்கும். முடிந்தால் நாமும் அப்படி சென்று தின்பண்டங்களைச் சேகரித்து, பைகளில் நிரப்பிக் கொள்ளலாம். குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான் அவசியம். மிட்டாய்களும், இனிப்புகளும் உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். கூடவே, கையடக்க அடுப்புகளும், சில பாத்திரங்களையும் பையில் வைத்துக்கொள்ளலாம். முதல் சில நாள்களைக் கடந்துவிட்டால், ஏதோ ஓர் தீவிலோ, காட்டிலோ வாழ்கிறோம் என்றால் உணவைச் சேகரித்து சமைக்க அது உதவும். நெருப்பு: ஆதி கால கற்கால மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு நெருப்பு. ஆனால், அவனைப் போல் கற்களைக் கொண்டு நெருப்பு கொண்டு வரும் திறன் நமக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அதனால், முடிந்தால் ஒரு லைட்டர் கூடவே மெக்னீசியம் கட்டி (Magnesium Bar with Striker) போன்றவைகளை எடுத்துக்கொள்ளலாம். கூடவே, டார்ச் லைட்டுகள் வெளிச்சத்துக்கு அவசியம். உலகம் அழிகிறது என்றால், இன்று நமக்கு இருக்கும் எந்த நவீன வசதிகளும் நமக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். எனவே, சோலார் பேட்டரிகள், சோலார் கொண்டு இயங்கும் விளக்குகள் போன்றவைகளை எடுத்துக் கொள்வது நல்லது. பாதுகாப்பு கத்திகள்: கத்தி. மிகவும் அவசியமான ஒன்று. நம்மை தற்காத்துக் கொள்ளவும், இன்னும் பல உபயோகங்களுக்கும் கத்திகள் கண்டிப்பாகத் தேவைப்படும். கத்தியின் கைப்பிடிகள் சமயங்களில் கண்ணாடிகளை உடைக்க உதவலாம். நல்ல உறுதியான, தரமான கத்தியை எடுத்துக் கொள்வது அவசியம். கூடவே, `மல்ட்டி டூல் கிட்' (Multi Tool Kit) எடுத்துச் செல்வதும் அவசியம். சின்ன வயதில் நாம் கல் விட்டு விளையாடியிருப்போமே உண்டிகோல்...அதுவும் முக்கியமானதாக நமக்கு இருக்கும். வழிகாட்டும் ஆப்ஸ்: உலகமே அழிந்தாலும் கண்டிப்பாக மொபைல் போன் குறிப்பிட்ட காலம் வரை அழியாமல் தான் இருக்கும். அதில் சில வழிகாட்டும் ஆப்களை வைத்திருப்பது நல்லது. குறிப்பாக, "Back Country Navigator Topo GPS" (இது ஆன்ட்ராய்ட் போன்களுக்கு), "GAIA GPS" (இது ஐபோன்களுக்கு) போன்ற இன்டெர்நெட் வசதியில்லாமல் இயங்கும் வழிகாட்டும் ஆப்களை உபயோகிக்கலாம். மொபைலை சார்ஜ் செய்ய, சோலாரில் இயங்கும் சில "External Chargers"யை பயன்படுத்தலாம். அதே சமயம், ஒரு காம்பஸையும், பேப்பர் மேப்பையும் வைத்துக்கொள்வதும் அவசியம். இன்னும், சில கயிறுகள், `டக்ட் டேப்" (Duct Tape), தண்ணீரை வடிகட்ட மெலிதான துணி ஒன்று, `ஃபர்ஸ்ட் எய்ட் கிட்" (First Aid Kit) போன்றவைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று கண்டிப்பாக செருப்புகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். நல்ல பூட் ஷூக்களை அணிய வேண்டும். வெயிலைத் தவிர வேறு எந்த சீதோஷ்ணத்துக்கும் காட்டன் பயன்படாது என்பதால் காட்டன் உடைகளைத் தவிர்ப்பது நல்லது. மாறாக,சிந்தெட்டிக் உடைகளை அணிவது நல்லது. "உலகம் எப்போதும் அழியலாம் என்ற நிலை. அது எப்போது என்பது நமக்குத் தெரியாது. அதனால் அவசரப்படாமல், பிடித்த வாழ்க்கையை வாழுங்கள்." - தாமஸ் மெர்டன் ( அமெரிக்க கவிஞர்) https://www.vikatan.com

சமையல் செய்முறைகள் சில

3 months 2 weeks ago
சம்மர் ஸ்பெஷல்: 30 வகை ஊறுகாய் & தொக்கு ஊறுகாய்ப் பொடி தேவை: காய்ந்த மிளகாய் - 100 கிராம், வெந்தயம் - 25 கிராம், பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன் , கடுகு - 2 டீஸ்பூன் (விரும்பினால்). செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள், கடுகு ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஊறுகாய் செய்யும்போது இந்தப் பொடியில் தேவையான அளவு சேர்க்கலாம். சிறப்பு: இந்தப் பொடி மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும். மாங்காய் இஞ்சி ஊறுகாய் தேவை: மாங்காய் இஞ்சி - 200 கிராம் (கழுவி, தோல் சீவி, வட்டமாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 4 (வட்டமாக நறுக்கவும்), சிறிய எலுமிச்சைப்பழம் - 2 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்) , மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தண்ணீர் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து இறக்கி ஆறவிடவும் நீர் வெதுவெதுப்பாக இருக்கும்போது மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து ஊறவிடவும். ஒருநாள் கழித்துப் பயன்படுத்தலாம். நன்றாக ஊறியதும் ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். மாங்காய் இஞ்சி - மாங்காய்த் தொக்கு தேவை: மாங்காய் இஞ்சித் துருவல், மாங்காய்த் துருவல் - தலா ஒரு கப் (250 மில்லி கப்), நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் , கடுகு - முக்கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் மாங்காய்த் துருவல், மாங்காய் இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, உப்பு சேர்த்துச் சுருள வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். தோசைக்காய் ஆவக்காய் ஊறுகாய் தேவை: விதைகள் நீக்கி நறுக்கிய தோசைக்காய்த்துண்டுகள் (மஞ்சள் வெள்ளரிக்காய்) - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: உப்புடன் மிளகாய்த்தூள், கடுகு சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்தெடுக்கவும். அகலமான பீங்கான் பவுலில் தோசைக்காய்த் துண்டுகள், அரைத்த பொடி, நல்லெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 24 மணி நேரம் ஊறியதும் பரிமாறவும். இதைச் சாதம், சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம். சிறப்பு: ஆந்திராவில் மாங்காய் கிடைக்காத சீஸனில் தோசைக்காய் வைத்து ஆவக்காய் ஊறுகாய் செய்வார்கள். இது ஆவக்காய் ஊறுகாய் போலவே இருக்கும். இந்த ஊறுகாயைச் சாதத்தில் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம். எலுமிச்சை ஊறுகாய் தேவை: சதுரத்துண்டுகளாக நறுக்கிய எலுமிச்சைப்பழம் - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - முக்கால் கப். செய்முறை: எலுமிச்சைத்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து இரண்டு நாள்கள் ஊறவிடவும். பிறகு, இதை இரண்டு நாள்கள் வெயிலில் வைத்து எடுக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். மறுநாள் வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு தாளித்து ஊறுகாயுடன் கலந்து பரிமாறவும். குறிப்பு: உடனடியாக எலுமிச்சை ஊறுகாய் தேவையானால் எலுமிச்சைப்பழத் துண்டுகளைத் தண்ணீரில் வேகவைத்தும் செய்யலாம். மிளகாய்த் தூளுக்குப் பதிலாக காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தை வெறும் வாணலியில் வறுத்து அரைத்தும் சேர்க்கலாம். பச்சை மிளகு ஊறுகாய் தேவை: பச்சை மிளகு - 50 கிராம் (அரை இன்ச் துண்டுகளாக்கவும்), எலுமிச்சைப்பழம் - 3 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ஒன்றரை டீஸ்பூன். செய்முறை: எலுமிச்சைச் சாற்றுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் பச்சை மிளகுத்துண்டுகளைச் சேர்த்து இரண்டு நாள்கள் ஊறவைத்துப் பயன்படுத்தலாம். மாகாளிக்கிழங்கு ஊறுகாய் தேவை: மாகாளிக்கிழங்கு - 300 கிராம், எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), கடுகு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 , கடைந்த தயிர் - 125 மில்லி (அரை கப்) , உப்பு - தேவையான அளவு. செய்முறை: மாகாளிக்கிழங்கை மண்போக கழுவி, 12 மணி நேரம் (இரவு முழுவதும்) ஊறவைக்கவும். மறுநாள் தோல் சீவி, நடுவில் உள்ள தடிமனான வேரை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும். கடுகுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். பெரிய பாத்திரத்தில் மாகாளிக்கிழங்கு, அரைத்த பொடி, தயிர், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். நன்றாக ஊறியதும் தயிர் சாதத்துடன் பரிமாறவும். சிறப்பு: இது நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும். மாவடு தேவை: மாவடு - அரை கிலோ, விளக்கெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 20, உப்பு - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: மாவடுவின் காம்பை நீக்கி, கழுவித் துடைக்கவும். அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்துப் பிசிறவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். இதை மாவடுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். (தேவையானால் சிறிதளவு தண்ணீரைச் சூடாக்கி ஆறவைத்துச் சேர்க்கலாம்). இதை இரண்டு நாள்கள் வெயிலில் வைக்கவும். நன்றாக ஊறியதும் தயிர் சாதத்துடன் பரிமாறவும். குறிப்பு: காம்புள்ள வடுவாக வாங்கவும். அப்போதுதான் ஊறுகாய் நன்றாக இருக்கும். ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய் தேவை: மாங்காய்த்துண்டுகள் - இரண்டரை கப், உப்பு, மிளகாய்த்தூள் - தலா கால் கப், வெல்லத்தூள் (அ) சர்க்கரை - கால் கப், கடுகு - 2 டீஸ்பூன், வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன். தாளிக்க: நல்லெண்ணெய் - கால் கப், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், தோல் சீவி துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன் (தேவையானால்), கறிவேப்பிலை, பூண்டு - சிறிதளவு. செய்முறை: மாங்காயுடன் உப்பு சேர்த்து ஊறவைக்கவும். இரண்டு நாள்கள் கழித்து மாங்காயைப் பிழிந்து எடுத்து வெயிலில் காயவைக்கவும். தண்ணீரையும் வெயிலில் வைக்கவும். மறுநாள் மாங்காயை மட்டும் வெயிலில் வைக்கவும். மாங்காய்த் தண்ணீரை லேசாகக் கொதிக்க வைக்கவும். ஆறியதும் அதனுடன் மிளகாய்த்தூள், வெல்லத்தூள் (அ) சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். கடுகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துச் சேர்க்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து மாங்காய்த் தண்ணீர்க் கலவையில் சேர்க்கவும். அதனுடன் காயவைத்த மாங்காய்த்துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து பயன்படுத்தவும். குஜராத்தி ஸ்வீட் மாங்காய் ஊறுகாய் தேவை: மாங்காய்த் துருவல் - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பட்டைத்தூள், லவங்கத்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன். செய்முறை: மாங்காய்த் துருவலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும். (மாங்காயில் சிறிதளவு தண்ணீர் விட்டிருக்கும்). அதனுடன் சர்க்கரை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பட்டைத்தூள், லவங்கத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைக்கவும் (ஏழு நாள்கள் வெயிலில் வைக்கவும்). காலையும் மாலையும் ஊறுகாயை நன்றாகக் கிளறிவிடவும். சர்க்கரைப்பாகு இரண்டு கம்பிப் பதம் வந்தவுடன் வெயிலில் வைப்பதை நிறுத்திவிடவும். மற்றொரு முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வைத்து இரண்டு கம்பிப் பதம் பாகு வரும் வரை கிளறி இறக்கவும். இந்த ஊறுகாயைச் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: பட்டைத்தூள், லவங்கத்தூள் ஆகியவற்றை விருப்பப்பட்டால் சேர்க்கலாம். ஃப்ரெஷ் மஞ்சள் ஊறுகாய் (குஜராத்தி ஹல்டி பிக்கிள்) தேவை: ஃப்ரெஷ் மஞ்சள் (பசும் மஞ்சள்) - 100 கிராம் (தோல் சீவி, மெல்லிய வட்டமான துண்டுகளாக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), சிறிய எலுமிச்சைப்பழம் 4 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), உப்பு - முக்கால் டீஸ்பூன். செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அகலமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து ஒருநாள் முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் எடுத்துப் பயன்படுத்தலாம். குறிப்பு: இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்த ஊறுகாயை நான்கு நாள்கள் வெளியே வைத்து உபயோகிக்கலாம். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். சிறப்பு: இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இது மாங்காய் இஞ்சி ஊறுகாய் போல இருக்கும். ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஃப்ரெஷ் மஞ்சள் - இஞ்சி ஊறுகாய் (குஜராத்) தேவை: ஃப்ரெஷ் மஞ்சள் (பசும் மஞ்சள்) - 100 கிராம் (தோல் சீவி, வட்டமான வில்லைகளாக நறுக்கவும்), தோல் சீவிய இஞ்சி - 2 இன்ச் துண்டு (வட்டமாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சை - 3 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), உப்பு - தேவையான அளவு. செய்முறை: அகலமான பாத்திரத்தில் எலுமிச்சைச்சாற்றுடன் உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒருநாள் முழுவதும் ஊறவிடவும். மறுநாள் பயன்படுத்தலாம். பூண்டு ஊறுகாய் தேவை: தோலுரித்த பூண்டு - 250 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்), எலுமிச்சைப்பழம் - 6 (சாறு பிழிந்து விதைகளை நீக்கவும்), மல்லி (தனியா), வெந்தயம், சீரகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 25, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் தனியா, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு சிறிதளவு வதங்கியதும் அரைத்த பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து வேகவிடவும். பூண்டு முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறி வேகவிட்டு இறக்கவும். குறிப்பு: அவரவர் விருப்பத்துக்கேற்ப மிளகாயைக் கூட்டியோ, குறைத்தோ சேர்க்கலாம். கடா நார்த்தங்காய் ஊறுகாய் தேவை: கழுவி, விதை நீக்கி நறுக்கிய கடா நார்த்தங்காய்த்துண்டுகள் (கிடாரங்காய்) - 3 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 12 வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் ,நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை கப். செய்முறை: கடா நார்த்தங்காய்த்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு ஊறவிடவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஊறவைத்த நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பயன்படுத்தவும். நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய் தேவை: நெல்லிக்காய் - 10 (கொட்டைகளை நீக்கி, நீளவாக்கில் நறுக்கவும்), சர்க்கரை - அரை கப் , குங்குமப்பூ - 2 சிட்டிகை, மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள், கறுப்பு உப்பு - தலா கால் டீஸ்பூன். செய்முறை: வாணலியில் நெல்லிக்காயுடன் சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நெல்லிக்காய் பாதியளவு வெந்ததும் குங்குமப்பூ, மிளகுத்தூள், கறுப்பு உப்பு சேர்த்து வேகவிடவும். பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதை வெளியிலேயே வைத்துப் பயன்படுத்தலாம். குறிப்பு: நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து உதிர்த்தும் சேர்க்கலாம். சிறப்பு: சப்பாத்தி, தோசை, பூரிக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. நெல்லிக்காய் கார ஊறுகாய் தேவை: நெல்லிக்காய் - கால் கிலோ, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி - முக்கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன் உப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்துக் கொட்டைகளை நீக்கி, சுளைகளாகத் தனியாக எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் நெல்லிக்காய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு இறக்கி தயிர் சாதத்துடன் பரிமாறவும். ஆவக்காய் ஊறுகாய் தேவை: மாங்காய் - அரை கிலோ, கடுகு - 30 கிராம் (3 டேபிள்ஸ்பூன்), காய்ந்த மிளகாய் - 30 கிராம் (20), வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளைக் கொண்டைக்கடலை - 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 100 மில்லி, உப்பு - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: மாங்காயைக் கழுவி தோல், கொட்டையுடன் சதுரத்துண்டுகளாக நறுக்கவும் (உள்ளிருக்கும் பருப்புப் பகுதியை எடுத்துவிடவும்). வெறும் வாணலியில் பாதியளவு வெந்தயத்தைச் சேர்த்து வறுத்து அரைத்தெடுக்கவும். காய்ந்த மிளகாய், கடுகை வெயிலில் காயவைத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஜாடியில் வெந்தயப்பொடி, மிளகாய் - கடுகுப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் மீதமுள்ள வெந்தயம், வெள்ளைக் கொண்டைக்கடலை, நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதை வெயிலில் மூன்று நாள்கள் வைக்கவும். தினமும் ஊறுகாயைக் கிளறிவிடவும். அப்போதுதான் மாங்காய் நன்றாக மசாலாவுடன் கலந்து ஊறும். 10 நாள்கள் ஊறிய பிறகு பயன்படுத்தலாம். பிரண்டைத் தொக்கு தேவை: இளம் பிரண்டைத்துண்டுகள் - ஒரு கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, பிரண்டை சேர்த்து நன்றாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை வதக்கவும். (அப்போதுதான் பிரண்டையின் அரிப்புத் தன்மை போகும்). இதனுடன் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும். நாரத்தை இலைப்பொடி (வேப்பிலைக் கட்டி) தேவை: இளசான நாரத்தை இலை - 25 (நடு நரம்பை நீக்கவும்), காய்ந்த மிளகாய் - 15, ஓமம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை டேபிள்ஸ்பூன். செய்முறை: நாரத்தை இலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விடாமல் அரைத்தெடுக்கவும். இந்தப் பொடியைச் சிறிய உருண்டைகளாகப் பிடித்துச் சேகரிக்கவும். தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். குறிப்பு: நாரத்தை இலை கிடைக்காவிட்டால், எலுமிச்சை இலையிலும் செய்யலாம். உப்பு எலுமிச்சை ஊறுகாய் தேவை: எலுமிச்சைப்பழம் - 10 (ப்ளஸ் போல நான்கு துண்டுகளாக லேசாக நறுக்கவும்; முழுவதுமாக நறுக்க வேண்டாம்), உப்பு - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: எலுமிச்சைப்பழத்துக்குள் உப்பை அடைக்கவும். இதை பாட்டில் (அ) ஜாடியில் சேகரித்து மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைத்து எடுக்கவும். (வீட்டின் உள்ளேயும் வைக்கலாம்). பழம் நன்றாக ஊறிவிடும். இந்த ஊறுகாய் இரண்டு வருடங்கள் வரை நன்றாக இருக்கும். தேவைப்படும் நேரத்தில் இதை எடுத்து எலுமிச்சைத் தொக்கு செய்துகொள்ளலாம். நன்றாக ஊறியதும் எலுமிச்சையில் இருந்து உப்பு நீர் கசிந்து மிருதுவாக இருக்கும். குறிப்பு: இதேபோல நாரத்தங்காயிலும் செய்யலாம். நன்றாக ஊறியவுடன் வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும். இரண்டு வருடங்கள் நன்றாக இருக்கும். இஞ்சி - புளி ஊறுகாய் தேவை: தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப், பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்), புளி - சிறிய எலுமிச்சை அளவு, வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை , வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , உப்பு - தேவையான அளவு. தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும். அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். குறிப்பு: தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம். சிம்பிள் மாங்காய் ஊறுகாய் தேவை: கிளிமூக்கு மாங்காய் - 2 (தோலுடன் சிறிய துண்டுகளாக்கவும்) மிளகாய்த்தூள், கல் உப்பு - தலா 2 டீஸ்பூன். செய்முறை: மாங்காய்த்துண்டுகளுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து வெயிலில் மூன்று முதல் நான்கு நாள்கள் வரை வைத்தெடுக்கவும். பிறகு, ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். தேவையானால் கடுகு தாளித்துச் சேர்க்கலாம். குறிப்பு: கிளிமூக்கு மாங்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் நீண்ட நேரம் வெளியே வைத்தால் கெட்டுவிடும். சிறப்பு: இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ஆரஞ்சுத்தோல் பச்சடி தேவை: ஆரஞ்சுத்தோல் - ஒரு கப் (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) , கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன் , மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஆரஞ்சுத்தோல் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் புளிக்கரைசல் ஊற்றி நன்கு வேகவிடவும். இறுதியாக வெல்லம் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மாங்காய் இஞ்சித் தொக்கு தேவை: மாங்காய் இஞ்சி - கால் கிலோ (தோல் சீவி, துண்டுகளாக்கவும்) , எலுமிச்சைப்பழம் - 2 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் , மஞ்சள்தூள், வெந்தயப்பொடி - தலா கால் டீஸ்பூன், கடுகு - முக்கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் , உப்பு - தேவையான அளவு. செய்முறை: மாங்காய் இஞ்சியுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தொக்கு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நாரத்தங்காய் ஊறுகாய் தேவை: நாரத்தங்காய் - 3 (சதுரத்துண்டுகளாக்கி, விதைகளை நீக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் , உப்பு - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: ஜாடியில் நாரத்தைத்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். இதை பத்து நாள்கள் வரை தினமும் கிளறிவிடவும். வெறும் வாணலியில் வெந்தயம், காய்ந்த மிளகாயைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். நன்கு ஊறிய நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும். குறிப்பு: நாரத்தங்காய் ஊறுவதற்கு 10 நாள்களாகும். தேவைப்படும்போது தாளித்துக்கொண்டால் ஊறுகாய் ஃப்ரெஷ்ஷாகவும், மேலும் சுவையாகவும் இருக்கும். தக்காளித் தொக்கு தேவை: தக்காளி - அரை கிலோ (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடுகு - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிதளவு வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். இறுதியாக வெல்லம் சேர்த்து, கலவை சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். ஆறியதும் பாட்டிலில் சேகரிக்கவும். செட்டிநாட்டு வெந்தய மாங்காய் தேவை: புளிப்பு மாங்காய் - 2, காய்ந்த மிளகாய் - 15, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - 4 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: மாங்காயைத்தோல், கொட்டையுடன் சதுரத்துண்டுகளாக நறுக்கவும் (உள்ளிருக்கும் பருப்புப் பகுதியை நீக்கவும்). மிளகாய், உப்பைத் தனித்தனியாக மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். வெறும் வாணலியில் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அகலமான பாத்திரத்தில் மாங்காய்த்துண்டுகளுடன் வெந்தயப்பொடி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி வெயிலில் 10 முதல் 15 நாள்கள் வரை வைத்து எடுத்துப் பயன்படுத்தலாம். செட்டிநாட்டுப் பல ஊறுகாய் தேவை: பிஞ்சு வெள்ளை மிளகாய், தோலுரித்த பூண்டு, பிஞ்சு சுண்டைக்காய் - தலா 50 கிராம், எலுமிச்சைப்பழம் - 3 (சாறு பிழிந்து விதைகளை நீக்கவும்), காய்ச்சி ஆறவைத்த நீர் - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் (தேவையானால்), உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெள்ளை மிளகாய், சுண்டைக்காயின் காம்பை நீக்கி கீறிவிடவும். பீங்கான் ஜாடியில் எலுமிச்சைச்சாறு, காய்ச்சி ஆறவைத்த நீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து உப்பு கரையும் வரை கலக்கவும். அதனுடன் சுண்டைக்காய், பூண்டு, வெள்ளை மிளகாய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, ஜாடியின் வாய்ப்பகுதியை மெல்லிய துணியால் கட்டி வெயிலில் நான்கு நாள்கள் வைத்து எடுக்கவும். குறிப்பு: இதனுடன் பிஞ்சு முருங்கைக்காய், பிஞ்சு கொத்தவரங்காய் ஆகியவற்றை அரை இன்ச் அளவுக்கு நறுக்கி சேர்க்கலாம். செட்டிநாட்டு மாங்காய் ஊறுகாய் தேவை: மாங்காய்த்துண்டுகள் - 4 கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன் , கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: மாங்காய்த்துண்டுகளுடன் உப்பு சேர்த்து இரண்டு நாள்கள் ஊறவிடவும். மூன்றாவது நாள் அதனுடன் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து ஊறுகாயுடன் சேர்க்கவும். ஆப்பிள் ஊறுகாய் தேவை: ஆப்பிள் - ஒன்று (விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்), மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன் , மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன் , கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஆப்பிள் துண்டுகளுடன் எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு தாளித்து ஊறுகாயுடன் கலந்து பரிமாறவும். குறிப்பு: கிரீன் ஆப்பிள் பயன்படுத்தினால் எலுமிச்சைச்சாறு குறைவாகச் சேர்க்கவும். ஊறுகாய் இல்லாத உணவு மேஜையா? நினைக்கும்போதே நாவில் நீர் ஊறவைக்கும் உணவு வகைகளில் ஊறுகாய்க்குத் தனி இடம் உண்டு. கையால் தொட்டு வாயில் இடும்போதே `சுர்ர்ர்’ என்று சுண்டியிழுக்கும் சுவை ஊறுகாய்க்கே உரித்தான சிறப்பு. உணவு காம்பினேஷன்களில் தயிர் சாதம் - ஊறுகாய்க்கு ஈடு இணை கிடையாது. ஊறுகாய்களில் ஒரு வாரம் முதல் இரண்டாண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய வகைகள் உள்ளன. ஊறுகாய், தொக்கு வகைகளை சப்பாத்தி, தோசைக்கும்கூட சைடிஷ்ஷாகப் பயன்படுத்தலாம். இப்படி உணவு மேஜையில் ஆபத்பாந்தவனாக விளங்கும் ஊறுகாய், தொக்கு வகைகள் பலவற்றை இந்த இணைப்பிதழில் படங்களுடன் வழங்குகிறார் சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்... ``மாங்காய், மாவடு, எலுமிச்சை, மாங்காய் இஞ்சி, கடாரங்காய், தோசைக் காய், பூண்டு, மாகாளிக்கிழங்கு, நெல்லிக்காய், பச்சை மிளகு, தக்காளி, பிரண்டை எனப் பலவற்றிலும் தயார் செய்யக் கூடிய ஊறுகாய், தொக்கு வகைகளின் ரெசிப்பிகளை வழங்கியுள்ளேன். இவை உங்கள் டைனிங் அறையை `யம்மி ஏரியா’வாக மாற்ற உதவும். சாப்பாட்டு நேரத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அழைப்பு விடுக்காமலே அங்கு ஆஜராகிவிடுவார்கள்’’ என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார். ஹேப்பி ஈட்டிங்! https://www.vikatan.com

யாழ் வீராங்கனை எழிலேந்தினியின் கன்னிப் போட்டியில் இலங்கைக்கு வெற்றி

3 months 2 weeks ago
ஆசியாவின் சிறந்த வீராங்கனையாக வரும் கனவுடன் எழில் இலங்கை தேசிய வலைப்பந்து அணிக்கு தெரிவாகி, அண்மையில் நிறைவடைந்த நான்கு அணிகள் பங்கு கொண்ட சர்வதேச தொடரில் விளையாடியதன் பின்னர் கருத்து தெரிவித்த யாழ் வீராங்கனை S.எழிலேந்தினி.

கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க

3 months 2 weeks ago
கனடா குளோபல் டி20 கிரிக்கெட் லீக் அணிகள், வீரர்கள் பயிற்சியாளர்கள் கெட்டி இமேஜஸ். இம்மாதத்தில் கனடாவில் நடைபெறவுள்ள குளோபல் டி20 லீக் கிரிக்கெட் போட்டிகள் டொராண்டோவிலிருந்து 25 மைல்கள் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் நடைபெறுகிறது. இந்த டி20 லீக் கிரிக்கெட்டில் பால் டேம்பரின் தடை பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உட்பட பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா, மே.இ.தீவுகளின் சூப்பர் ஸ்டார் கிறிஸ் கெய்ல், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், டேரன் சமி டிவைன் பிராவோ ஆகியோரும் ஆடுகின்றனர். கனடா குளோபல் டி20 கிரிக்கெட்: அணிகளும் வீர்ர்களும் வருமாறு: டொராண்டோ நேஷனல்ஸ்: டேரன் சமி, ஸ்டீவ் ஸ்மித், கெய்ரன் பொலார்ட், கம்ரன் அக்மல், ஹுசைன் தலத், ரும்மான் ரயீஸ், நிகில் தத்தா, ஜான்சன் சார்லஸ், கேஸ்ரிக் வில்லியம்ஸ், நவேத் அகமட், நிஸகத் கான், ஃபர்ஹான் மாலிக், நிதிஷ் குமார், உசாமா மீர், ரோஹன் முஸ்தபா, மொகமத் உமைர் கனி, பயிற்சியாளர்: பில் சிம்மன்ஸ். வான்கூவர் நைட்ஸ்: கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸல், எவின் லூயிஸ், டிம் சவுதி, சாத்விக் வால்ட்டன், ஃபவாத் அகமட், பாபர் ஹயாத், ஷெல்டன் காட்ரெல், சாத் பின் ஸஃபர், ருவிந்து குணசேகரா, ஸ்ரீமந்தா விஜெரத்னே, காமவ் லெவராக், ஸ்டீவன் ஜேகப்ஸ், சல்மான் நாசர், ரேசி வான் டெர் டுசென், ஜெரமி கார்டன், பயிற்சியாளர்: டோனவன் மில்லர். எட்மண்டன் ராயல்ஸ்: ஷாகித் அஃப்ரிடி, கிறிஸ் லின், லூக் ரோங்கி, மொகமட் இர்ஃபான், சொஹைல் தன்வீர், கிறிஸ்டியன் ஜோங்கர், வெய்ன் பார்னெல், ஆசிப் அலி, ஹசன் கான், ஆகா சல்மான், ஷைமன் அன்வர், அமர் கலித், சத்சிம்ரஞ்ஜித் திண்ட்சா, அகமட் ரஸா, சைமன் பர்வேஸ், அப்ராஷ் கான். பயிற்சியாளர்: மொகமத் அக்ரம். மாண்ட்ரீல் டைகர்ஸ்: லஷித் மலிங்கா, சுனில் நரைன், திசர பெரேரா, மொகமத் ஹபீஸ், தினேஷ் ராம்தின், சந்தீப் லாமிச்சேன், சிகந்தர் ரஸா, தாசுன் ஷனகா, இசுரு உதனா, ஜார்ஜ் வொர்க்கர், நஜிபுல்லா ஸத்ரான், சிசில் பர்வேஸ், இப்ராஹிம் கலீல், டில்லான் ஹெய்லிகர், நிகோலஸ் கிர்டன், ரயான் பத்தான், பயிற்சியாளர்: டாம் மூடி. வினிபெக் ஹாக்ஸ்: டிவைன் பிராவோ, டேவிட் மில்லர், டேவிட் வார்னர், லெண்டில் சிம்மன்ஸ், டேரன் பிராவோ, பிடல் எட்வர்ட்ஸ், ரயாத் எம்ரிட், பென் மெக்டர்மாட், அலி கான், ஹம்சா தாரிக், ஜுனைத் சித்திகி, டியான் வெப்ஸ்டர், ரிஸ்வான் சீமா, ஹிரால் படேல், மார்க் தேயால், கைல் பிலிப், பயிற்சியாளர்: வக்கார் யூனிஸ். http://tamil.thehindu.com/sports/article24080409.ece

அப்பிள் நிறுவனம் அறிவித்த முக்கிய அம்சங்கள் !

3 months 2 weeks ago
அப்பிள் நிறுவனம் அறிவித்த முக்கிய அம்சங்கள் ! அப்பிள் நிறுவனத்தின் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்களை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஐ.ஓ.எஸ். 12 முதல் வொட்ச் ஓ.எஸ்., டி.வி. ஓ.எஸ், மெக் ஓ.எஸ். என அப்பிள் சாதனங்களுக்கான இயங்குதளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயங்குதளத்திலும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் ஹார்ட்வேர் சார்ந்த எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை. சிரி சேவையை மேம்படுத்தியிருக்கும் அப்பிள், அக்மென்ட்டெட் ரியாலிட்டி, ஏ.ஆர்.கிட் போன்றவற்றை ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் இணைத்திருக்கிறது. இத்துடன் மெக் மற்றும் அப்பிள் வொட்ச் சாதனங்களை முன்பை விட மிக எளிமையாக இயக்க வழி செய்யும் அம்சங்களை புதிய இயங்குதளங்கள் கொண்டிருக்கின்றன. ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து இருப்பதை அப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12 தளத்தின் புதிய அம்சம் மூலம் தெரிவித்திருக்கிறது. டு நொட் டிஸ்டர்ப் (DND), ஸ்கிரீன்டைம் ஒப் உள்ளிட்டவை ஸ்மார்ட்போன் பயன்பாட்டை டிராக் செய்து தகவல்களை மிக துல்லியமாக வழங்குகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பயன்பாடு குறித்த தகவல்களை பார்த்து, அதற்கு ஏற்ப செட்டிங்களை மாற்றியமைக்க முடியும். இதேபோன்று அனைவரும் தங்களின் பயன்பாட்டை குறைக்க புதிய செட்டிங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு செயலியை பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து விட்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கை செய்யப்படும். இதன் மூலம் செயலிகளில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க முடியும். அப்பிள் நிறுவனத்தின் அனிமோஜி அம்சத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக மீமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களது முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஐமெசேஜில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. மெசேஜஸ் கேமராவில் இதுபோன்ற பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று பேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கோல்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கோல்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் பேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அப்பிள் வொட்ச் கொண்டு ஓடியோ முறையிலும் பதில் அளிக்க முடியும். அப்பிள் வொய்ஸ் அசிஸ்டன்ட் சேவை சிறப்பாக இருந்தாலும் அதிக வசதிகளை வழங்குவதில் அமேசானின் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த இரு சேவைகளும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வடிவில் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன. 2018 டெவலப்பர் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் சிரி ஷொர்ட்கட்களை அறிமுகம் செய்தது. இதைக்கொண்டு சில செயலிகளில் குறிப்பிட்ட கொமன்டுகளை உருவாக்க முடியும். இத்துடன் உங்களின் அன்றாட பயன்பாட்டை வைத்து சிரி இனி உங்களுக்கு பயன்தரும் பரிந்துரைகளை வழங்கும். ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தின் முதல் அறிவிப்பாக ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி இருந்தது. ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் டிஜிட்டல் புகைப்படங்களை நிஜ உலகில் பிரதிபலித்து விசேஷ ஹெட்போன்கள் மூலம் அவற்றை போன்களில் பார்க்க வழி செய்கின்றன. போக்கிமான் கோ அல்லது ஃபில்ட்டர்கள் மற்றும் லென்ஸ்கள் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டியின் பிரபல கேம் மற்றும் செயலிகளாக இருந்தன. ஒரு ஆண்டுக்கு முன் அப்பிள் டெவலப்பர் நிகழ்வில் அந்நிறுவனம் டெவலப்பர்களுக்காக ஏஆர் கிட் அறிமுகம் செய்தது. இந்த கிட் பயன்படுத்தி டெவலப்பர்கள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிக்களை உருவாக்க முடியும். மேலும் வால்வ் நிறுவனத்துடன் இணைந்து விர்ச்சுவல் ரியாலிட்டி தளத்தை டெஸ்க்டொப் மெக் சாதனங்களுக்கு கொண்டு வரவுள்ளதாக அப்பிள் அறிவித்து இருந்தது. இந்த ஆண்டு அப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தளத்துக்கென USDZ எனும் புதிய போர்மெட் அறிமுகம் செய்துள்ளது. இந்த போர்மேட்டை பயன்படுத்தி பல்வேறு வசதிகளை வழங்க அப்பிள் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் அடோப் நிறுவனம் மெஷர் எனும் புதிய ஏஆர் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் அப்பிள் நிறுவனம் ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்து, அதில் செய்யக்கூடியவற்றை நிகழ்ச்சியின் மேடையிலேயே நிகழ்த்தி காண்பித்தது. விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்துக்கான சந்தை வரும் ஆண்டுகளில் பெருமளவு வளர்ச்சி பெறவிருக்கிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் சுமார் 2.2 கோடி விஆர் மற்றும் ஏஆர் ஹெட்செட்களை வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/34456

உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்:

3 months 2 weeks ago
தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அதாவது 1958இல் ஓகஸ்ட் 26ஆம் திகதி பொன். சிவகுாமரன் பிறந்தார். பொன்னுத்துரை, அன்னலட்சுமி இவரது பெற்றோர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவனாக இவர் கல்வி பயின்றார். அக் காலத்தில் கல்வி தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. இது சிவகுாமரனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மாணவனாய் தன்னுடைய மாணவ சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்டு தாம் ஒடுக்கப்பட்டபோது சிவகுமாரன் போராடத் துணிந்தார். கல்வித் தரப்படுத்தலுக்கு எதிராக தொடங்கிய மாணவர் பேரவையில் அவர் தன்னையும் இணைத்தார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தாக்குதலையும் பொன். சிவகுமாரனே நடத்தினார். கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்டசிறிமா ஆட்சியில் அமைச்சரவையில் இடம்பிடித்த யாழ் நகரத் தந்தை அல்பிரட் துரையப்பாவை கொல்வதற்கு அவரது வாகனத்தில் சிவகுமாரன் குண்டு பொருத்தினார். எனினும் துரையப்பா வருவதற்கு முன்பாகவே அந்தக் குண்டு வெடித்தமையால் அதிலிருந்து அவர் தப்பினார். பின்னர் துரையப்பா கொலை முயற்சிக்காக இரண்டு வருடங்கள் சிவகுமாரன் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் சிறையிலிருந்து வெளியேறிய சிவகுமாரன் தனித் தாக்குதல் முயற்சிகளுடன் உண்ணாவிரதப் போராடட்டம் போன்றவற்றில் தன்னை இணைத்தார். இளைஞர் பேரவையின் உண்ணாவிரதப் போராட்டங்களில் பங்கெடுத்தார். 1970களில் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசில் அமைச்சரவையில் இடம்பெற்ற சோமவீர சந்திரசிறியின் வாகனத்திற்கு குண்டு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் சிவகுமாரன் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாணம் தமிழரராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சிவகுமாரனிடத்தில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது. படுகொலைகளை நடத்திய சந்திரசிறியை கொலை செய்ய வேண்டும் என்று சிவகுமாரன் வெளிப்படையாக கூறும் நிலையை அடையுமளவில் சினத்திற்குள்ளானார். இதனால் சிவகுமாரன் தேடப்படும் நபரானார். கோப்பாயில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்ட சிவகுமாரன் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது சயனைட் அருந்தி தன்னை தானே மாய்த்துக்கொண்டார். ஜூன் 05, 1974இல் தன்னுடைய 24ஆவது வயதில் தன்னை மாய்த்த சிவகுமாரனின் 44 ஆவது நினைவுதினம் இன்றாகும். ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலில் சயனைட் அருந்தி உயிர்நீத்தவர் சிவகுமாரனே. இவரே ஈழவிடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் என்றும் முக்கியம் பெறுகிறார். தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இலங்கை அரசின் அநீதிகளுக்கு எதிராக போராடும் வல்லமையை இளைஞர்களிடத்தில் சிவகுமாரன் ஏற்படுத்தினார். இவரது மரண நிகழ்வின்போது முதன் முதலில் பெண்கள் சுடலைக்கு வருகை தந்த மாற்றமும் இடம்பெற்றது. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் சிவகுமாரனின் மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஈழத் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகவும் ஈழத் தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட ரீதியில் ஒடுக்கப்பட்டபோதும் சிவகுமாரன் போராட்டத்தை கையில் எடுத்தார். இலங்கை அரசியலில் ஏற்பட்ட இனப்பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட கல்வித் தரப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் குறித்தும் தமிழ் மிதவாத தலைமைகளால் எதுவும் செய்ய முடியாதபோது சிவகுமாரன் அகிம்சைப் பாதையிலிருந்து விலகி ஆயுதப் பாதையில் சென்றார். தமிழ் அரசியல் தலைமைகளின் கோரிக்கைகளை ஆளும் சிங்களத் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ளாமல் ஒடுக்குமுறையை ஈழ மக்களிடத்தில் பிரயோகித்த போது சிவகுமாரன் ஆயுதப் பாதையை கையில் எடுத்தார். சிவகுமாரனின் வாழ்வையும் மரணத்தையும் கையில் எடுத்த போராட்டத்தையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. சாதாரணமாக எல்லா மாணவர்களையும் போல தன் படிப்பில் மாத்திரம் அவன் கவனம் செலுத்தியிருக்கவில்லை. அவன் எல்லா மாணவர்களின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். அவன் எல்லா மாணவர்களின் நலனினும் கவனம் செலுத்தினான். அவன் ஈழ மக்களின் நலனின் கவனம் செலுத்தினான். தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்காது, தொடர்ந்தும் அவர்களை ஒடுக்கியபோது சிவகுமாரன் இப்படியான போராட்டம் ஒன்றே தேவை என உணர்ந்தான். தனி ஒருவனாய் சிவகுமாரன் முன்னெடுத்த போராட்டமே பின்னர் ஈழவிடுதலை ஆயுதப் போராட்டமாக விரிந்தது. சிவகுமாரன் ஏன் ஆயுதத்தை கையில் எடுத்தான் என்பதையும் அவன் எப்படியான காலத்தில் தன் தாக்குதல்களை நடத்தினான் என்பதையும் இன்றைய நாளில் ஆராய்வது மிகவும் அவசியமானது. சிவகுமாரனின் தனிமனித போராட்ட சரித்திரம் நினைவுகூரவும் மதிப்பிடவும் பாடங்களை கற்றுக்கொள்ளவும் வேண்டிய ஒன்றாகும். குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் http://globaltamilnews.net/2018/82338/

நலம் நல்லது!

3 months 2 weeks ago
ட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை! #TreadmillTips இப்போதெல்லாம் வாக்கிங் செல்பவர்களைவிட, ட்ரெட்மில்லில் ஓடுபவர்கள்தாம் அதிகம். பலரும் இதை வரப்பிரசாதமாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில் பயிற்சி செய்வதெல்லாம் அந்தக் காலம். இப்போது வீட்டிலேயே வாங்கிவைத்துப் பயிற்சி செய்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இதில் பயிற்சி செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விளக்குகிறார் உடற்பயிற்சி ஆலோசகர் கோதண்டன்... ``சுற்றுச்சூழல் மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக, நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்கும், தினமும் வெளியில் சென்று பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கும் ட்ரெட்மில் சிறந்த தீர்வு. ஆனால், இதைச் சரியாக, முறையாகப் பயன்படுத்தினால்தான் அதன் நன்மைகளைப் பெற முடியும். நன்மைகள்... * உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், ட்ரெட்மில்லில் தாராளமாகப் பயிற்சி மேற்கொள்ளலாம். 6 mph (Miles per Hour) என்ற வேகத்தில், 20 நிமிடங்கள் நடந்தால் உடலிலுள்ள 229 கலோரிகளைக் குறைக்கலாம். 8 mph (Miles per Hour) என்றால், 300 கலோரிகளைக் குறைக்கலாம். இந்தப் பயிற்சிகளோடு சேர்த்து ஊட்டச்சத்திலும் கவனம் எடுத்துக்கொண்டால், விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம். * இதயச் செயல்பாடுகள் சீராகும். ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு, அந்தப் பிரச்னை தீரும். * ட்ரெட்மில்லில் ஓடும்போது, உடலின் அனைத்துத் தசைகளும் இயங்குவதால், தசைகள் வலுப்பெறும். முக்கியமாக, கால் மற்றும் தொடைப் பகுதி தசைகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மூட்டுவலிப் பிரச்னை சரியாகும். * ஃப்ளாட்டான பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டால், அதிகக் கலோரிகளைக் குறைக்கலாம். அந்த வகையில், வெளியில் சென்று பயிற்சி செய்வதைவிட, ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வது நல்லது. * ட்ரெட்மில் பயன்படுத்துவதால், உடல் மட்டுமல்ல... உள்ளமும் புத்துணர்ச்சி பெறும். கவனம்! * பின் முதுகில் வலி இருப்பவர்கள், ட்ரெட்மில்லில் பயிற்சி செய்யக் கூடாது. * ட்ரெட்மில்லில் பயிற்சி செய்யும்போது, அதற்குத் தேவையான ஷூ வகைகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மூட்டுவலி, குதிகால்வலி, ப்ளான்டர்ஸ் ஃபேஸிடிஸ் (Plantars fasciitis) போன்ற பிரச்னைகள் ஏற்படும். * சிலருக்குக் கால் பாதம் தட்டையாக இருக்கும். அவர்கள், மீடியம் லார்ஜ் இன்சோல் (Insole) வாங்கி, அதை ஷூவில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். * ட்ரெட்மில்லில் பயிற்சி செய்ய ஆரம்பித்த முதல் சில நாள்களுக்கு மூட்டுவலி, கால்வலி போன்றவை ஏற்படும். அவற்றைப் பொருட்படுத்தாமல், அன்றாடம் பயிற்சி மேற்கொண்டால், போகப் போக பிரச்னை சரியாகிவிடும். * மற்ற நேரத்தைவிட, காலை நேரத்தில் ட்ரெட்மில் பயிற்சி செய்வது நல்லது. உடலுக்குப் புத்துணர்ச்சியும் கிடைக்கும். * வெகு நாள்கள் கழித்து ட்ரெட்மில் பயன்படுத்துபவர்கள், புதிதாக உபயோகிப்பவர்கள், நேர விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே அதிக நேரம் ஓடக் கூடாது. அரை கிலோமீட்டரிலிருந்து தொடங்கலாம். ஒவ்வோர் ஐந்து அல்லது ஆறு நாள் இடைவெளியில் இந்த நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்துக்கொள்ளலாம்’’ என்கிறார் கோதண்டன். ``ட்ரெட்மில்லில் பயிற்சி செய்பவர்கள் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது?’’ என்று பிசியோதெரபிஸ்ட் பிருந்தா ஆனந்திடம் கேட்டோம். ``ட்ரெட்மில் பயன்படுத்தும்போது, டிரெஸ்ஸிங் சரியாக இருக்க வேண்டும். வெறுங்காலுடன் நடக்கக் கூடாது. சரியான ஷூ, ஷாக்ஸ், டி-ஷர்ட், ட்ராக்ஸ் அணிந்திருக்க வேண்டும். பயிற்சி செய்யும்போது, உடலும் மனதும் ரிலாக்ஸாக இருக்கவேண்டியது அவசியம். * ட்ரெட்மில்லில் நடக்கும்போது, வியர்வையைத் துடைத்துக்கொள்ள பக்கத்திலேயே ஒரு துண்டு வைத்துக்கொள்வது நல்லது. ஜிம் சென்று பயிற்சி மேற்கொள்பவர்கள், இதைக் கண்டிப்பாகப் பின்பற்றவும். * முதன்முதலாக ட்ரெட்மில் உபயோகிப்பவர்கள், வேகத்தை எப்படிக் கூட்டிக்கொள்வது அல்லது குறைப்பது, எமெர்ஜென்சி ஸ்டாப் எப்படிச் செய்வது, பாடல் கேட்பது அல்லது வீடியோக்கள் பார்ப்பது எப்படி என்பதையெல்லாம் பயிற்சியாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். * ட்ரெட்மில்லின் ப்ளஸ், அதன் டிஜிட்டல் திரை. ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் பயிற்சி செய்திருக்கிறீர்கள், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறீர்கள், பயிற்சியால் உடலில் எவ்வளவு கலோரிகள் கரைந்திருக்கின்றன, இதயத்துடிப்பின் வேகம் எவ்வளவு இருக்கிறது போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முடியும். * உடல் பருமனாக இருப்பவர்கள், ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில் பயிற்சியை ஆரம்பிப்பதுச் சிறப்பு. காரணம், அங்கு வைக்கப்பட்டிருக்கும் இயந்திரங்கள், மிக உறுதியாக இருக்கும். * பயிற்சி செய்யும்போது வெளியேறும் வியர்வை, பயிற்சியை முடிக்கும்போது டீஹைட்ரேஷன் பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே, பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னர், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்’’ என்கிறார் பிருந்தா ஆனந்த். https://www.vikatan.com/news/health/126744-dos-and-donts-on-treadmill.html

தெருவாசகம்

3 months 2 weeks ago
தெருவாசகம்: கோவையின் ரங்கநாதன் தெரு பொருளாதாரம் மிகுந்திருந்தால் இன்று எந்த நகரத்தாலும் சடுதியில் நவீனமயமாகிவிட முடியும். கோவை அப்படியான நகரம். அந்த நகரத்தின் நவீனம் முன்னேறிய நாடுகளின் நகரங்களுக்கு இணையாகக் கோவையை மாற்றியிருக்கிறது. உலகின் பெரு நகரங்களில் நிறைந்திருக்கும் நவீன அங்காடிகளும் விற்பனைக் கூடங்களும் (மால்கள்) திரையரங்குகளும் இன்று கோவையிலும் உள்ளன. சொல்லப்போனால், மற்ற நகரங்களில் இல்லாத வசதிகளும் இன்று கோவையில் உள்ளன. ஆனால் கோவையின் சிறப்பு இந்த நவீனமய வளர்ச்சியில் இல்லை, அது நவீனமயத்தின் அசுர வளர்ச்சியை மீறித் தன்னுடைய பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அதன் பாங்கில் உள்ளது. கோவையின் அந்தச் சிறப்புக்கு வலு சேர்க்கும் தெருக்களுள் ஒன்றே உப்புக் கிணறு தெரு. உப்புக்கிணறு தெருவை கோவையின் ரங்கநாதன் தெரு எனலாம். சென்னை தி.நகரில் இருக்கும் ரங்கநாதன் தெருவைப் போன்று இதுவும் வணிகத்துக்குப் பெயர்போனது. இந்தத் தெரு டவுன் ஹாலை ஒட்டி இருக்கும் சந்தைப் பகுதியில் உள்ளது. இது ராஜா தெருவுக்குச் செங்குத்தாகவும் ஒப்பணக்காரத் தெருவுக்கு இணையாகவும் உள்ளது. தள்ளுபடி கால விற்பனை என்ற ஒன்று இந்தத் தெருவுக்குத் தனியே கிடையாது. இங்கு விற்கப்படும் பொருட்களின் விலை எப்போதும் தள்ளுபடி கால விற்பனையைவிடக் குறைவாகவே இருக்கும். அடித்தட்டு மக்களும் நடுத்தர மக்களும் பெரும்பாலும் அவர்களுக்கு வேண்டியதை அந்தத் தெருவில் வாங்கிக் கொள்வது வாடிக்கை. துணிக்கடைகளும் கட் பீஸ் கடைகளும் அந்தத் தெருவினுள் மிகுதியாக உள்ளன. எண்ணிக்கையில் அவற்றுக்கு அடுத்தபடியாக கவரிங் நகை கடைகளும் ஃபான்ஸி ஸ்டோர்ஸ்களும் உள்ளன. சில வைரநகை கடைகள் அந்தச் சிறு கடைகளின் கூட்டத்தில் ஒட்டாமல் தனித்து நிற்கின்றன. எப்போதும் இந்தத் தெருவில் விற்பனை கொடிகட்டி பறக்கும். அதுவும் பண்டிகைக் காலம் என்றால் கேட்கவே வேண்டாம். அப்போது கோவைவாசிகள் மட்டுமல்லாமல்,அருகிலிருக்கும் கேரள எல்லைப் பகுதியிலிருந்தும் மக்கள் மலைபோல் குவிந்து இருக்கும் துணிமணிகளை அள்ளிச் செல்வர். சுடிதாரைத் துணியாக வாங்குவோர் அதை எங்குத் தைப்பது என்று கையைப் பிசையத் தேவையில்லை. தி.நகரில் இருக்கும் ரங்கநாதன் தெருவைப் போன்று இங்கேயும் தையல்காரர்கள் நிறைந்து இருக்கின்றனர். அந்தச் தெருவில் இருக்கும் ‘ஓட்டேஜஸ்’ பில்டிங்கினுள் நுழைந்தால், துரித உணவகம் போன்று துரித தையலகங்கள் நிரம்பி வழிகின்றன. துணியை அவர்களிடம் கொடுத்த பத்தாவது நிமிடத்தில் அது சுடிதாராக உங்கள் கையில் திரும்பி வந்துவிடும். அதுவே பிளவுஸ் என்றால் சுமார் இரண்டு மணி நேரம் பிடிக்கும். மேலும், நீங்கள் வாங்கிய சுடிதாரின் அளவுகளில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் அதை உடனடியாக மாற்றித்தரும் ஆல்ட்ரேஷன் தையல்காரர்களும் அங்கு உள்ளனர். கல்லூரி மாணவிகளும் வேலைக்குச் செல்லும் இளம் பெண்களும் பெரும்பாலும் தங்கள் தோழிகளுடன் அங்குதான் ‘விண்டோ ஷாப்பிங்’ செய்கின்றனர். அதிக செலவின்றி, நிறைய நேரம் சுற்றி, அரட்டையடித்தபடியே பேரம் பேசி, கைநிறையைச் சாமான்களை வாங்கிச் செல்வது அவர்களின் வாடிக்கையாக உள்ளது. ஊக்குகள், ஹேர் பேண்டுகள் அலங்கார தலை மாட்டிகள் நகப்பூச்சுகள் போன்றவைதான் அவர்களால் பெரிதும் வாங்கப்படுகின்றன. அங்கு இருக்கும் இந்திரா ஸ்டோர்ஸ் இந்தப் அலங்காரப் பொருட்களுக்கு மிகவும் பெயர் போனது. இன்று அந்தத் தெருவினுள் ஜாக்கிரதையாக நாம் செல்ல வேண்டியது அவசியம், அந்தத் தெருவினுள் நடந்து செல்லும்போது சட்டென்று நின்றுவிடக் கூடாது. மீறி நின்றால், பின்னால் வரும் நபரால் நாம் கீழே தள்ளப்படக்கூடும். அங்குள்ள கடைகளில் தொங்கும் வண்ணச் சேலையோ துப்பட்டாவோ நம் கவனத்தை கவர்ந்து இழுத்தால், இடம் வலம் திரும்பிப் பார்த்து, பின் அங்குச் செல்வது உடம்புக்கு நல்லது. அந்தத் தெருவினுள் நடக்கும்போது, கடைகளுக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் சிறு பையன்களின் கண்களைப் பார்க்காமல் கடந்து செல்வது உசிதம். இல்லையென்றால், ‘அக்கா இங்க வாங்க, அண்ணா இங்க வாங்க, சுடிதாரா? சாரியா?’ என்ற வார்த்தைகள், நீங்கள் வீடு திரும்பிய பின்னும், பல நாட்கள் உங்கள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டு இருக்கும். ஜாஸ்மின் வாசனைத் திரவியம், முப்பது ரூபாய்க்கு செயின், கம்மல் செட், பத்து ரூபாய்க்கு கூலிங் கிளாஸ், பெல்ட், ரிவால்விங் பக்கிள்ஸ் என இங்குப் பல வகைப்பட்ட பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. எந்திரன் திரைப்படம் வெளியான சமயம், இந்தத் தெரு வேறொரு விஷயத்துக்காக மிகவும் புகழ்பெற்று விளங்கியது. ஆம், எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் கையில் போட்டிருந்த மெஹந்தி டிசைன், அந்தத் தெருவில்தான் முதன் முதலாகப் பெண்களுக்குப் போட்டுவிடப்பட்டது. கோவையில் வசிக்கும் இன்றைய தலைமுறையினருக்கு அந்த மெஹந்தி விஷயம் தெரியும். அந்தத் தெருவின் ஓரங்களில் இருக்கும் சிறு கடைகளும் அங்கு விற்கப்படும் பொருட்களும் தெரியும். ஆனால், முன்பு அங்கிருந்த உப்புத் தண்ணீர் கிணறோ அதனால்தான் அந்தத் தெருவுக்கு உப்புக்கிணறு தெரு என்று பெயர் வந்த விஷயமோ தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. படங்கள்: எம்.செந்தில்குமார் http://tamil.thehindu.com/society/real-estate/article24054798.ece