மட்டக்களப்பு சவுக்கடி படுகொலை

1990-09-20 - 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்

Aggregator

'மினி கோடம்பாக்கம்' என்று பொள்ளாச்சி அழைக்கப்படுவது ஏன்?

3 months 2 weeks ago
'மினி கோடம்பாக்கம்' என்று பொள்ளாச்சி அழைக்கப்படுவது ஏன்?
'மினி கோடம்பாக்கம்'

குட்டி கோடம்பாக்கம்

தமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. பொள்ளாச்சி என்ற பெயருக்கே பல்வேறு சிறப்புகள் கூறப்படுகின்றன. பொருள் புழக்கம் அதிகமாக இருந்ததால், 'பொருள் ஆட்சி' என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அது நாளடைவில், பொள்ளாச்சி என மருவி விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

பொள்ளாச்சி பாலக்காட்டுக் கணவாய்க்கு நேர் எதிரில் உள்ளதால் மேற்கு கடலிலிருந்து வீசும் காற்றுடன் மழையும் பெய்கிறது. மழை பொழிவு மிகுதியாக உள்ளதால் பசுமை படர்ந்து எப்போதும் சோலைகளாக விளங்குகிறது. இதன் காரணமாகவும் பொள்ளாச்சி என்ற பெயர் உருவாகியதாக கூறப்படுகிறது.

சோலையை பொழில்கள் என்று சொல்லப்படும். பொழில்களுக்கு இடையில் சிற்றுார் ஏற்பட்டது. சிற்றுார்களை வாய்ச்சி என்று குறிப்பிடுவது வழக்கம். பொழில்- வாய்ச்சி காலப்போக்கில் மருகி பொள்ளாச்சி என அழைக்கப்பட்டு வருகிறது.

சமவெளி பசுமை மட்டுமல்லாமல், நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்திலேயே வனங்கள் வரவேற்கும் பூலோக அமைப்பு பெற்றுள்ளது பொள்ளாச்சி. வால்பாறையின் தேயிலைத் தோட்டங்களும், இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள டாப்- சிலிப்பின் அடர்ந்த காடுகளும் திரைத்துறையின் கேமராக்களை இங்கு கொண்டுவந்து நிறுத்துவதற்கு காரணமாக உள்ளது.

'மினி கோடம்பாக்கம்'

எந்த பகுதியில் கேமராவை வைத்தாலும், அழகான ஒளிப்பதிவை கொடுக்கும் பொள்ளாச்சியை 'குட்டிக் கோடம்பாக்கம்' என்றே அழைக்கின்றனர் திரையுலகினர்.

அரை நூற்றாண்டாக நடைபெறும் படப்பிடிப்பு

தமிழக திரைத்துறை அறையை விட்டு வெளியே வந்த காலம் முதல் பொள்ளாச்சி பகுதியில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. பாகப்பிரிவினை, விடிவெள்ளி போன்ற கருப்பு - வெள்ளை திரைப்படங்கள் தொடங்கி, ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை, ரஜினிகாந்தின் முரட்டுக்காளை உள்ளிட்ட சினிமாக்களின் முழு பதிவுகளும் பொள்ளாச்சியிலேயே காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் சகலகலா வல்லவன், கரையெல்லாம் செண்பகப்பூ, தேவர்மகன், அமைதிப்படை, எஜமான், சூரியன், சூரியவம்சம், தோழர் பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சினிமாக்கள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டன.

'மினி கோடம்பாக்கம்'

தொடர்ந்து தற்போது வரை திரைத்துறையினரை பொள்ளாச்சியின் பசுமை சூழல் ஈர்த்த வண்ணமே உள்ளது. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி சினிமாக்களும் பொள்ளாச்சியை அதிகம் சுற்றி வருகின்றன.

இந்நிலையில் தொலைக்காட்ச்சிகள் பெருகிவிட்ட இந்த சூழலில் சின்னத்திரை கேமராக்களும் பொள்ளாச்சியில் முகாமிட்டு நாடகங்களை எடுத்து வருகின்றனர்.

பட்ஜெட் படங்களுக்கு ஏற்ற பகுதி

பொள்ளாச்சியின் விடுதிகளில் சினிமா தேசத்தினரின் வாசம் இல்லாத நாட்கள் அரிது. அந்த அளவிற்கு பல மாநிலங்களின் திரைத்துறையினர் பொள்ளாச்சியை நாடி வருவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது குறைந்த பட்ஜெட்டிற்குள் படங்களை எடுத்து முடிக்க முடியும் என்கிறார் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியை சேர்ந்த விவசாயி ராமபிரபாகர்.

பொள்ளாச்சியை தேடிவரும் திரையுலகினரை அவர்கள் மனநிறைவு அடையும் விதமாக வசதிகளை செய்து கொடுக்கிறோம். எந்தபகுதியில் படப்பிடிப்புகள் நடந்தாலும் பொதுமக்கள் அவர்களை நெருங்கி தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதனால் குறித்த நேரத்திற்குள் இயக்குனர்கள் நினைத்த காட்சிகளை படமாக்க முடிகிறது.

'மினி கோடம்பாக்கம்'

மேலும் படப்பிடிப்பு குழுவினருக்கு தேவையான இடவசதிகள், பொருட்கள், கிராமப்படங்களுக்கு தேவையான வீட்டு விலங்குகள், ஆட்கள் தேவையை பூர்த்தி செய்வது போன்றவை அவர்களுக்கு உடனுக்குடன் கிடைக்க செய்கிறோம்.

நடிகர்கள் மற்றும் படக் குழுவினர் தங்குவதற்கான அறைகள், உணவுகள் போன்ற விருந்தோம்பலுக்கும் எங்கள் பகுதியில் குறைவிருக்காது என்கிறார் விவசாயி ராமபிரபாகர்.

இயக்குனர் பார்வையில்

"இப்படியே போனா வீட்டைக்காரன்புதூர் வருங்களா, என்று கையை நீட்டி நடிகர் சுந்தரராஜன் கேட்க, இப்படியே போனா கைவலி தான் வரும்" என்று மணிவண்ணன் கூறும் சூரிய வம்சம் திரைப்படத்தின் வசனங்கள் அனைவரையும் குலுங்க, குலுங்க சிரிக்க வைத்த காட்சி.

அப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது. அந்த படத்தை இயக்கிய இயக்குனரும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவருமான விக்ரமன் பொள்ளாச்சி பகுதியின் சிறப்புகளையும், அனுபவங்களையும் பி பி சி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

'மினி கோடம்பாக்கம்'

என்னுடைய இரண்டாவது படமான பெரும் புள்ளியை பொள்ளாச்சியில் படமாக்கினேன். அந்த படத்தின் 80 சதவிகித காட்சிகள் பொள்ளாச்சியிலும், 20 சதவிகித கட்சிகள் மைசூரிலும் எடுக்கப்பட்டது.

படப்பிடிப்புகளுக்கு எல்லா விதமான சூழலும் பொள்ளாச்சியில் உள்ளது. 2008ல் என்னுடைய 'மரியாதை' சினிமாவும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு இருந்தது. அப்போதும் கூட பொள்ளாச்சியில் படப்பிடிப்புக்கு ஏற்ற மிதமான சூழ்நிலையே காணப்பட்டது.

இயற்கை சூழலும், கிராமிய சூழலும் பொள்ளாச்சியில் அதிகமாக உள்ளது. அதே போல் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்றால் டாப்சிலிப், ஆழியாறு, வால்பாறையில் உள்ள அட்டகட்டி போன்ற பகுதிகள் ஏதுவாக இருக்கும்.

நிறைய ஆறுகள் ஓடும் பகுதி, சர்க்கார்பதி போன்ற வனப்பகுதிகள் படப்பிடிப்புக்கு ஏற்ற இடங்கள். இந்நிலையில், முன்பு உள்ளது போல ஒருசில வனப்பகுதிகளுக்குள் வரும் இடங்களில் அனுமதி வழங்கப்படுவதில்லை.

'மினி கோடம்பாக்கம்'

அதுமட்டுமல்லாமல் பொள்ளாச்சியில் காட்ச்சிகளை எடுத்துக்கொண்டே அருகே உள்ள கேரளா மாநிலம் சாலக்குடி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சென்று பாடல்களை எடுத்துவிட்டு வந்து மீண்டும் பொள்ளாச்சியில் மற்ற காட்சிகளை படமாக்கலாம்.

அதற்கு அடுத்தாற்போல் மக்களுடைய ஒத்துழைப்பு சிறப்பான ஒன்றாக இருக்கும். அன்பும் பாசமும் நிறைந்த மக்கள் என்பதால் இயக்குனர்களுக்கான பணி மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். அதனால் எனக்கு படப்பிடிப்பிக்கு பிடித்தமான இடமாக பொள்ளாச்சி உள்ளது.

வேறொரு சிறப்பான அம்சம் பொள்ளாச்சியின் கால சூழ்நிலை ஒளிப்பதிவிற்கு ஏற்றதாக இருக்கும். சுமார் ஆறுமாத காலம் காட்சிகளை ஆசாகாக்கும் நீல நிற வானமும், அதனை ஒட்டிய நீல நிற மலைத்தொடர்களும் அதிக ஆசாகை கூட்டுவதாக இருக்கும்.

படப்பிடிப்புக்கு தேவையான இடங்களையும், வீடுகளையும் வழங்குபவர்கள் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக நம்மை நினைத்துக்கொண்டு அன்புடன் பழகி, பாசத்துடன் உணவையும் சமைத்துக் கொடுக்கும் பண்புடையவர்களாக பொள்ளாச்சி மக்கள் உள்ளார்கள் என்கிறார் இயக்குனர் விக்ரமன்.

'மினி கோடம்பாக்கம்'

மேலும், தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சிகளை பார்க்கும் மற்ற மொழி இயக்குனர்களும் பொள்ளாச்சிக்கு வந்து செல்கின்றனர். நான் எடுத்த சூரியவம்சம் படத்தை தற்போதைய கர்நாடக முதல்வர் கன்னடத்தில் தயாரித்தபோது, பொள்ளாச்சி பகுதியிலேயே அனைத்து காட்சிகளும் இருக்க வேண்டும் என விரும்பி படமாக்கினார்.

அதுபோல தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பவன்கல்யான் சினிமாக்களும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளது.

சினிமாக்கள் ஏராளம்

முரட்டுக்காளை, தேவர்மகன், பொன்னுமணி, ராஜகுமாரன், அமைதிப்படை, எஜமான், கிழக்கு வாசல், சின்னக்கவுண்டர், சகலகலா வல்லவன், சூரியவம்சம், சூரியன், வானத்தைப்போல, தூள், மன்னர் வகையறா, ஜெயம், ஜனா, காதலுக்கு மரியாதை, காசி, மஜா, தமிழன், வேலாயுதம், அரண்மனை, வேல், ஆறு, கொடி, ஷங்கரின் ஐ போன்ற நூற்றுக்கணக்கான சினிமாக்கள் பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது நடிகர் உதயா நடிக்கும் உத்தரவு மகாராஜா, விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா, விஷ்ணு நடிக்கும் ஜகஜால கில்லாடி, நடிகர் தீனா நடிக்கும் அஜித் பிரம் அருப்புக்கோட்டை, சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் ஒரு புதிய சினிமாவும் படமாக்கப்பட்டு வருகிறது.

'மினி கோடம்பாக்கம்'

மேலும், வேலு நாச்சியார், கிராமத்தில் ஒரு நாள், பேரழகி போன்ற தொலைக்காட்சி தொடர்களும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளது.

கிராமிய கதைக்கள சினிமாக்கள் அதிகம்

தென் இந்திய திரைத்துறையில் கிராமிய சூழலில் ஒரு சினிமா படமாக்கப்பதுகிறது என்றால் அதில் பொள்ளாச்சி பகுதிக்கு ஒரு முக்கிய இடம் இருக்கும். ஒரே இடத்தில் வயல், வரப்பு, நதி, புல்வெளி, மலை, காடு, கிராம குடியிருப்புகள், கோவில்கள், குளங்கள், இருபுறமும் மரங்களை கொண்ட குகை போன்ற அமைப்புடைய அழகிய சாலைகள் என பொள்ளாச்சியின் அழகிய அமைப்பை சொல்லிக்கொண்டே போகலாம் .

பொள்ளாச்சியை படப்பிடிப்புதளமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக நாட்கள் ஓடி வெற்றி படங்களாகவும் ஆனதால் திரையுலகினர் பொள்ளாச்சியை அதிர்ஷ்டமாக பார்கின்றனர்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44349404

'மினி கோடம்பாக்கம்' என்று பொள்ளாச்சி அழைக்கப்படுவது ஏன்?

3 months 2 weeks ago
'மினி கோடம்பாக்கம்' என்று பொள்ளாச்சி அழைக்கப்படுவது ஏன்? பகிர்க குட்டி கோடம்பாக்கம் தமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. பொள்ளாச்சி என்ற பெயருக்கே பல்வேறு சிறப்புகள் கூறப்படுகின்றன. பொருள் புழக்கம் அதிகமாக இருந்ததால், 'பொருள் ஆட்சி' என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அது நாளடைவில், பொள்ளாச்சி என மருவி விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பொள்ளாச்சி பாலக்காட்டுக் கணவாய்க்கு நேர் எதிரில் உள்ளதால் மேற்கு கடலிலிருந்து வீசும் காற்றுடன் மழையும் பெய்கிறது. மழை பொழிவு மிகுதியாக உள்ளதால் பசுமை படர்ந்து எப்போதும் சோலைகளாக விளங்குகிறது. இதன் காரணமாகவும் பொள்ளாச்சி என்ற பெயர் உருவாகியதாக கூறப்படுகிறது. சோலையை பொழில்கள் என்று சொல்லப்படும். பொழில்களுக்கு இடையில் சிற்றுார் ஏற்பட்டது. சிற்றுார்களை வாய்ச்சி என்று குறிப்பிடுவது வழக்கம். பொழில்- வாய்ச்சி காலப்போக்கில் மருகி பொள்ளாச்சி என அழைக்கப்பட்டு வருகிறது. சமவெளி பசுமை மட்டுமல்லாமல், நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்திலேயே வனங்கள் வரவேற்கும் பூலோக அமைப்பு பெற்றுள்ளது பொள்ளாச்சி. வால்பாறையின் தேயிலைத் தோட்டங்களும், இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள டாப்- சிலிப்பின் அடர்ந்த காடுகளும் திரைத்துறையின் கேமராக்களை இங்கு கொண்டுவந்து நிறுத்துவதற்கு காரணமாக உள்ளது. எந்த பகுதியில் கேமராவை வைத்தாலும், அழகான ஒளிப்பதிவை கொடுக்கும் பொள்ளாச்சியை 'குட்டிக் கோடம்பாக்கம்' என்றே அழைக்கின்றனர் திரையுலகினர். அரை நூற்றாண்டாக நடைபெறும் படப்பிடிப்பு தமிழக திரைத்துறை அறையை விட்டு வெளியே வந்த காலம் முதல் பொள்ளாச்சி பகுதியில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. பாகப்பிரிவினை, விடிவெள்ளி போன்ற கருப்பு - வெள்ளை திரைப்படங்கள் தொடங்கி, ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை, ரஜினிகாந்தின் முரட்டுக்காளை உள்ளிட்ட சினிமாக்களின் முழு பதிவுகளும் பொள்ளாச்சியிலேயே காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் சகலகலா வல்லவன், கரையெல்லாம் செண்பகப்பூ, தேவர்மகன், அமைதிப்படை, எஜமான், சூரியன், சூரியவம்சம், தோழர் பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சினிமாக்கள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து தற்போது வரை திரைத்துறையினரை பொள்ளாச்சியின் பசுமை சூழல் ஈர்த்த வண்ணமே உள்ளது. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி சினிமாக்களும் பொள்ளாச்சியை அதிகம் சுற்றி வருகின்றன. இந்நிலையில் தொலைக்காட்ச்சிகள் பெருகிவிட்ட இந்த சூழலில் சின்னத்திரை கேமராக்களும் பொள்ளாச்சியில் முகாமிட்டு நாடகங்களை எடுத்து வருகின்றனர். பட்ஜெட் படங்களுக்கு ஏற்ற பகுதி பொள்ளாச்சியின் விடுதிகளில் சினிமா தேசத்தினரின் வாசம் இல்லாத நாட்கள் அரிது. அந்த அளவிற்கு பல மாநிலங்களின் திரைத்துறையினர் பொள்ளாச்சியை நாடி வருவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது குறைந்த பட்ஜெட்டிற்குள் படங்களை எடுத்து முடிக்க முடியும் என்கிறார் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியை சேர்ந்த விவசாயி ராமபிரபாகர். பொள்ளாச்சியை தேடிவரும் திரையுலகினரை அவர்கள் மனநிறைவு அடையும் விதமாக வசதிகளை செய்து கொடுக்கிறோம். எந்தபகுதியில் படப்பிடிப்புகள் நடந்தாலும் பொதுமக்கள் அவர்களை நெருங்கி தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதனால் குறித்த நேரத்திற்குள் இயக்குனர்கள் நினைத்த காட்சிகளை படமாக்க முடிகிறது. மேலும் படப்பிடிப்பு குழுவினருக்கு தேவையான இடவசதிகள், பொருட்கள், கிராமப்படங்களுக்கு தேவையான வீட்டு விலங்குகள், ஆட்கள் தேவையை பூர்த்தி செய்வது போன்றவை அவர்களுக்கு உடனுக்குடன் கிடைக்க செய்கிறோம். நடிகர்கள் மற்றும் படக் குழுவினர் தங்குவதற்கான அறைகள், உணவுகள் போன்ற விருந்தோம்பலுக்கும் எங்கள் பகுதியில் குறைவிருக்காது என்கிறார் விவசாயி ராமபிரபாகர். இயக்குனர் பார்வையில் "இப்படியே போனா வீட்டைக்காரன்புதூர் வருங்களா, என்று கையை நீட்டி நடிகர் சுந்தரராஜன் கேட்க, இப்படியே போனா கைவலி தான் வரும்" என்று மணிவண்ணன் கூறும் சூரிய வம்சம் திரைப்படத்தின் வசனங்கள் அனைவரையும் குலுங்க, குலுங்க சிரிக்க வைத்த காட்சி. அப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது. அந்த படத்தை இயக்கிய இயக்குனரும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவருமான விக்ரமன் பொள்ளாச்சி பகுதியின் சிறப்புகளையும், அனுபவங்களையும் பி பி சி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். என்னுடைய இரண்டாவது படமான பெரும் புள்ளியை பொள்ளாச்சியில் படமாக்கினேன். அந்த படத்தின் 80 சதவிகித காட்சிகள் பொள்ளாச்சியிலும், 20 சதவிகித கட்சிகள் மைசூரிலும் எடுக்கப்பட்டது. படப்பிடிப்புகளுக்கு எல்லா விதமான சூழலும் பொள்ளாச்சியில் உள்ளது. 2008ல் என்னுடைய 'மரியாதை' சினிமாவும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு இருந்தது. அப்போதும் கூட பொள்ளாச்சியில் படப்பிடிப்புக்கு ஏற்ற மிதமான சூழ்நிலையே காணப்பட்டது. இயற்கை சூழலும், கிராமிய சூழலும் பொள்ளாச்சியில் அதிகமாக உள்ளது. அதே போல் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்றால் டாப்சிலிப், ஆழியாறு, வால்பாறையில் உள்ள அட்டகட்டி போன்ற பகுதிகள் ஏதுவாக இருக்கும். நிறைய ஆறுகள் ஓடும் பகுதி, சர்க்கார்பதி போன்ற வனப்பகுதிகள் படப்பிடிப்புக்கு ஏற்ற இடங்கள். இந்நிலையில், முன்பு உள்ளது போல ஒருசில வனப்பகுதிகளுக்குள் வரும் இடங்களில் அனுமதி வழங்கப்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல் பொள்ளாச்சியில் காட்ச்சிகளை எடுத்துக்கொண்டே அருகே உள்ள கேரளா மாநிலம் சாலக்குடி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சென்று பாடல்களை எடுத்துவிட்டு வந்து மீண்டும் பொள்ளாச்சியில் மற்ற காட்சிகளை படமாக்கலாம். அதற்கு அடுத்தாற்போல் மக்களுடைய ஒத்துழைப்பு சிறப்பான ஒன்றாக இருக்கும். அன்பும் பாசமும் நிறைந்த மக்கள் என்பதால் இயக்குனர்களுக்கான பணி மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். அதனால் எனக்கு படப்பிடிப்பிக்கு பிடித்தமான இடமாக பொள்ளாச்சி உள்ளது. வேறொரு சிறப்பான அம்சம் பொள்ளாச்சியின் கால சூழ்நிலை ஒளிப்பதிவிற்கு ஏற்றதாக இருக்கும். சுமார் ஆறுமாத காலம் காட்சிகளை ஆசாகாக்கும் நீல நிற வானமும், அதனை ஒட்டிய நீல நிற மலைத்தொடர்களும் அதிக ஆசாகை கூட்டுவதாக இருக்கும். படப்பிடிப்புக்கு தேவையான இடங்களையும், வீடுகளையும் வழங்குபவர்கள் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக நம்மை நினைத்துக்கொண்டு அன்புடன் பழகி, பாசத்துடன் உணவையும் சமைத்துக் கொடுக்கும் பண்புடையவர்களாக பொள்ளாச்சி மக்கள் உள்ளார்கள் என்கிறார் இயக்குனர் விக்ரமன். மேலும், தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சிகளை பார்க்கும் மற்ற மொழி இயக்குனர்களும் பொள்ளாச்சிக்கு வந்து செல்கின்றனர். நான் எடுத்த சூரியவம்சம் படத்தை தற்போதைய கர்நாடக முதல்வர் கன்னடத்தில் தயாரித்தபோது, பொள்ளாச்சி பகுதியிலேயே அனைத்து காட்சிகளும் இருக்க வேண்டும் என விரும்பி படமாக்கினார். அதுபோல தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பவன்கல்யான் சினிமாக்களும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளது. சினிமாக்கள் ஏராளம் முரட்டுக்காளை, தேவர்மகன், பொன்னுமணி, ராஜகுமாரன், அமைதிப்படை, எஜமான், கிழக்கு வாசல், சின்னக்கவுண்டர், சகலகலா வல்லவன், சூரியவம்சம், சூரியன், வானத்தைப்போல, தூள், மன்னர் வகையறா, ஜெயம், ஜனா, காதலுக்கு மரியாதை, காசி, மஜா, தமிழன், வேலாயுதம், அரண்மனை, வேல், ஆறு, கொடி, ஷங்கரின் ஐ போன்ற நூற்றுக்கணக்கான சினிமாக்கள் பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது நடிகர் உதயா நடிக்கும் உத்தரவு மகாராஜா, விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா, விஷ்ணு நடிக்கும் ஜகஜால கில்லாடி, நடிகர் தீனா நடிக்கும் அஜித் பிரம் அருப்புக்கோட்டை, சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் ஒரு புதிய சினிமாவும் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும், வேலு நாச்சியார், கிராமத்தில் ஒரு நாள், பேரழகி போன்ற தொலைக்காட்சி தொடர்களும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளது. கிராமிய கதைக்கள சினிமாக்கள் அதிகம் தென் இந்திய திரைத்துறையில் கிராமிய சூழலில் ஒரு சினிமா படமாக்கப்பதுகிறது என்றால் அதில் பொள்ளாச்சி பகுதிக்கு ஒரு முக்கிய இடம் இருக்கும். ஒரே இடத்தில் வயல், வரப்பு, நதி, புல்வெளி, மலை, காடு, கிராம குடியிருப்புகள், கோவில்கள், குளங்கள், இருபுறமும் மரங்களை கொண்ட குகை போன்ற அமைப்புடைய அழகிய சாலைகள் என பொள்ளாச்சியின் அழகிய அமைப்பை சொல்லிக்கொண்டே போகலாம் . பொள்ளாச்சியை படப்பிடிப்புதளமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக நாட்கள் ஓடி வெற்றி படங்களாகவும் ஆனதால் திரையுலகினர் பொள்ளாச்சியை அதிர்ஷ்டமாக பார்கின்றனர். https://www.bbc.com/tamil/arts-and-culture-44349404

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்

3 months 2 weeks ago
அகமதாபாத் காத்தாடி திருவிழா - சாந்தகுமாரி சிவகடாட்சம் நல்லவனுக்கு மட்டும்தான் வாழ்க்கை திருவிழாவாகிறது. - ரால்ப் வால்டோ எமர்சன் (Ralp Waldo Emerson) எனக்கு ஐந்து வயதானபோது இரவு வேளையில் வானத்தில் கண்சிமிட்டும் விண்மீன்களை பார்ப்பது எல்லையில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதே உணர்வை பகல் வேளையில் பலவிதமான வண்ணக் காத்தாடிகள் வானத்தில் பறக்கும்போது என்னுள் பெற்றேன். நான் சிறுமியாக இருந்த காலகட்டத்தில் காத்தாடிகளை பறக்க விடுவதற்கு எந்த விதமான தடையும் இல்லாமல் இருந்தது. கோடை விடுமுறை வந்துவிட்டால் போதும் சிறுவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி காத்தாடிகளை வானில் பறக்கவிடுவார்கள். பொது மைதானங்களும், வீட்டின் மொட்டை மாடிகளும் காத்தாடிகளை பறக்கவிடும் அரங்கங்கள் ஆகிவிடும். சிறுவர்கள் எப்பொழுதும் இரு குழுக்களாக பிரிந்துவிடுவார்கள். அதில் ஒன்றுக்கு என் அண்ணன் தலைமை வகிப்பான். கடைகளுக்குச் சென்று, விதவிதமான வண்ணங்களும், அமைப்புகளையும் கொண்ட காத்தாடிகளை வாங்கி வருவார்கள். பிறகு "மாஞ்சா'வை தயாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதற்காக ஒரு மறைவிடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். நான் பெண்பிள்ளை என்பதால் என்னை காத்தாடியை பறக்க விட அனுமதிக்க மாட்டார்கள். மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதற்குப் பிறகு, என்னை பறக்கும் காத்தாடியின் கயிற்றைப் பிடித்துக்கொள்ள மட்டும் அனுமதிப்பார்கள். "இது ஆண்களுக்கான விளையாட்டு, போய் உன் பொம்மைகளுடன் விளையாடு' என்று விரட்டுவார்கள். ஆனால் காத்தாடியை ஒரு சிறுவன் கைகளில் பிடித்துக்கொண்டு எம்பிக் குதித்து வானத்தை நோக்கி பறக்கவிட முயல, அது அவனுக்கு போக்கு காட்டி, பிறகு ஒரு வழியாக கயிற்றைப் பிடித்திருப்பவனின், இழுப்புக்கு அடிபணிந்து, காற்றைக் கிழித்துக்கொண்டு மேலே எழும்பும் அழகைப் பார்க்க கண்கோடி வேண்டும் என்று எனக்குத் தோன்றும். மாஞ்சாவை செய்யும்போது மட்டும், என் அண்ணனும் அவனுடைய நண்பர்களும் என்னுடைய உதவியை வேண்டுவார்கள். "சாந்தி போய் தண்ணீரைக் கொண்டு வா', "அம்மாவிடம் கேட்டு கொஞ்சம் மைதா மாவை எடுத்து வா', என்று அவர்கள் ஏவும் வேலைகளை சிரமேற்கொண்டு, சந்தோஷமாக செய்வேன். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் "வஞ்சரம்" என்ற ஒட்டுப்பசையைப் போட்டு, அதில் மைதா மாவையும் பொடியாக அரைக்கப்பட்ட கண்ணாடித் துகள்களையும் போட்டு கலக்குவார்கள். பிறகு சுடுமாவு என்று அழைக்கப்படுகின்ற அலுமினியம் ஆக்ஸைடையும், இரும்புத் துகள்களையும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிய கலவையில் பச்சை அல்லது பிங்க் வண்ணப்பொடியை இட்டு கலக்கினால் மாஞ்சா ரெடியாகிவிடும். இந்தக் கலவை குளிர்ந்ததும் அதை எடுத்து காத்தாடியைப் பறக்கவிடுவதற்காக வாங்கிய கயிற்றில் சமமாகத் தடவுவார்கள். ஆஹா! மாஞ்சா கயிறு தயாராகிவிட்டது. இப்பொழுது இரண்டு குழுக்களாக சிறுவர்கள் பிரிந்துவிடுவார்கள். ஒரு குழு காத்தாடியைப் பறக்கவிட, மற்றொரு குழு தங்களின் காத்தாடியில் கயிற்றால் முதல் குழுவின் காத்தாடியின் கயிற்றை அறுக்க முற்படும். அதேபோல முதல் குழுவும் இரண்டாம் குழுவின் காத்தாடியின் கயிற்றை அறுக்கப் போராடும். என்னுடைய அண்ணன், எதிர் குழுவின் காத்தாடியின் கயிற்றை அறுத்துவிட்டால் நான் குதிப்பேன், கைகளைத் தட்டி மகிழ்வேன். வெற்றி பெற்றவரின் காத்தாடி வானத்தில் தலைநிமிர்ந்து பறக்க, வெட்டுப்பட்ட காத்தாடியைப் பிடிக்க சிறுவர்கள் தலைதெறிக்க ஓடுவார்கள். 2012-ஆம் ஆண்டு அகமதாபாத்தின் ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் நின்றுகொண்டு வானத்தில் வெட்டுப்பட்டு விழுந்துகொண்டிருந்த ஒன்று அல்லது நூற்றுக்கணக்கான விதவிதமான காத்தாடிகளைப் பார்த்து நான் குதூகலத்தோடு குதித்து கைதட்டிக் கொண்டிருந்தேன், சிறுமியாக இல்லை யுவதியாக. குஜராத்தில் பல திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், எண்ணிக்கை 200-ஐத் தொட்டுவிடுமாம். "சர்வதேச காத்தாடித் திருவிழா' முதன்மையான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்த விழா, குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் வருடம்தோறும் ஜனவரி மாதத்தில் "சங்கராந்தி'க்கு, மூன்று நாட்களுக்கு முன்னால் கொண்டாடப்படுகிறது. "அது என்ன சங்கராந்தி?'' என்ற கேள்விக்கு, "நம்ம ஊர் பொங்கல் பண்டிகையைத்தான், வடஇந்தியாவில் "சங்கராந்தி' என்று அழைக்கிறார்கள்'. அகமதாபாத்தில், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற ரீதியில் ஒரே பயணத்தில் சர்வதேச காத்தாடி திருவிழாவையும், சங்கராந்தியின்போது பொதுமக்கள் ஆயிரக்கணக்கான வண்ணக் காத்தாடிகளை வானில் பறக்கவிடுவதையும் பார்க்க ஆவல் கொண்டு காத்தாடி பிரியையாகிய நான் என் கணவருடன் 2012-இல் அகமதாபாத்துக்கு சென்றேன். ஏர்போர்ட்டிலிருந்து, எங்களுடைய ஹோட்டலுக்குச் செல்லும் வழியெல்லாம் திரும்பிய திசைகளில் எல்லாம், காத்தாடிகளை விற்கும் கடைகளே கண்களில் பட்டது. தீபாவளி சமயத்தில் புற்றீசல்களாக முளைத்தெழும், பட்டாசுக் கடைகளை ஒத்து இருந்தன இந்தக் கடைகள். இதைத் தவிர மர உருளைகளில் சுற்றப்பட்டிருந்த மாஞ்சா கயிறுகள், வண்ணங்களில் இத்தனை வகை இருக்கின்றனவா என்று திகைக்க வைத்தன. கைகளில் கொத்துக் கொத்தாக காத்தாடிகளைப் பிடித்தபடி மக்கள் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். "ஒருவருக்கு ஏன் இத்தனை காத்தாடிகள்?'' என்று கார் ஓட்டுநரைக் கேட்டேன். "மேடம், சங்கராந்தி அன்றைக்கு அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கி இரவு எட்டு மணி வரை காத்தாடிகளை பறக்கவிடுவோம். ஒரு காத்தாடி வெட்டுப்பட்டால் மற்றொன்று என்று ஒவ்வொரு குடும்பமும் 100 காத்தாடிகளுக்கு குறையாமல் பறக்கவிடும்'' என்றாரே பார்க்கணும்! "உண்மையாகவா'' என்று நம்ப முடியாமல் கேட்டேன். ஆனால் அன்று மாலை நடந்தது என்ன? - தொடரும் http://www.dinamani.com

அர­சி­யலைத் தாண்­டிய பொரு­ளா­தார அடா­வ­டித்­தனம் உலக ஒழுங்கை மீறி பொரு­ளா­தா­ரத்தை அபா­யத்தில் தள்ளும் ட்ரம்ப்

3 months 2 weeks ago
அர­சி­யலைத் தாண்­டிய பொரு­ளா­தார அடா­வ­டித்­தனம் உலக ஒழுங்கை மீறி பொரு­ளா­தா­ரத்தை அபா­யத்தில் தள்ளும் ட்ரம்ப் சதீஷ் கிருஷ்­ண­பிள்ளை உலக வல்­ல­ரசின் ஜனா­தி­பதி பதவி. அந்தப் பத­வியை அலங்­க­ரிப்­பவர் சற்று நிதானம் தவ­றி­ய­வ­ராக இருந்தால் போதும். ஒட்­டு­மொத்த உல­கமும் பாது­காப்­பற்­ற­தாக மாறி விடும். இன்­றைய அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனல்ட் ட்ரம்ப். தாம் மன­நல ஆரோக்­கி­யத்­துடன் இருப்­பதை உள­வியல் மருத்­துவ சோத­னைகள் மூலம் நிரூ­பிக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட தலைவர். உலக நலன் கரு­திய மரபு சார்ந்த சிந்­த­னை­களைத் தாண்டி, வல்­ல­ரசு மனப்­பான்­மை­யுடன் முதலில் அமெ­ரிக்கா(America First) என்ற கொள்­கையை முன்­னி­றுத்­தி­யவர். அதன் அடிப்­ப­டையில் ஆட்­சி­பீடம் ஏறி அர­சியல் செய்­பவர். இந்த மனி­தரின் அதி­ரடி அர­சியல் கொள்­கை­களும், ஆபத்­தான ட்விற்றர் செய்­தி­களும் ஒட்­டு­மொத்த உல­கத்­தையும் எந்­த­ள­வுக்கு பாது­காப்­பற்­ற­தாக மாற்­றி­யி­ருக்­கி­றது என்­பதை ஏறத்­தாழ அனை­வரும் அறி­வார்கள். இன்று இந்த மனிதர் போட்டி நாடு­களை மாத்­தி­ர­மன்றி, நேச நாடு­க­ளையும் புறந்­தள்ளி தன்­னிச்­சை­யான பொரு­ளா­தாரத் தீர்­மா­னங்­களை எட்டத் தலைப்­பட்­டுள்ளார். இத்­த­கைய அடா­வ­டி­யான தீர்­மா­னங்கள் உலகை ஆபத்­தா­ன­தாக மாற்­றி­யி­ருக்கும் விதம் ஆரா­யப்­பட வேண்­டி­யது. டொனல்ட் ட்ரம்ப்பின் அழிவு தரும் அர­சியல் தீர்­மா­னங்கள் பற்றி நெடுந்­தூரம் செல்ல வேண்­டி­ய­தில்லை. ஈரா­னு­ட­னான அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் இருந்து வில­கி­ய­தையும், இஸ்­ரே­லிய சுதந்­திரப் பிர­க­டனத் தினத்­தன்று அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை ஜெரு­ச­லே­மிற்கு மாற்­றி­ய­தையும் விப­ரித்தால் போது­மா­னது. இன்று மத்­திய கிழக்கில் பலம் பொருந்­திய நாடாக பரி­ண­மித்து வரும் ஈரான். இந்தத் தேசத்தை வலு­வி­ழக்கச் செய்து ஓரங்­கட்ட வேண்டும் என்ற சுய­நல நோக்கம் கார­ண­மாக, சர்­வ­தேச மட்­டத்­தி­லான உடன்­ப­டிக்­கையில் இருந்து அமெ­ரிக்கா வில­கு­வ­தாக டொனல்ட் ட்ரம்ப் அறி­வித்­தி­ருந்தார். இதன் விளை­வாக, சிரி­யாவின் கோலான் மேட்டு நிலப்­ப­ரப்பு இஸ்­ரே­லுக்கும் ஈரா­னுக்கும் இடை­யி­லான போர்க்­க­ள­மாக மாறி­யுள்­ளது. சிரி­யாவின் மீது வலிந்து திணிக்­கப்­பட்ட யுத்­தத்தில் ஒரு­பு­றத்தில் ரஷ்யா, ஈரான், ஈராக் முத­லான நாடு­களும், மறு­பு­றத்தில் பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி முத­லான நாடு­களும் சம்­பந்­தப்­பட்­டுள்­ளன. ஈரான் - இஸ்ரேல் நெருக்­க­டியில் இவை தீவி­ர­மாக உள்­ளீர்க்­கப்­படும் அபாயம் உரு­வா­கி­யுள்­ளது. தூத­ர­கத்தை ஜெரு­ச­லே­மிற்கு மாற்­றிய தீர்­மா­னத்தின் விளை­வு­களை விப­ரிக்­கவே தேவை­யில்லை. 1948ஆம் ஆண்டில் இஸ்­ரே­லிய தேசம் உரு­வாக்­கப்­பட்­டதால் தமது மண்ணை இழந்த சோகத்தை பலஸ்­தீ­னர்கள் நினை­வு­கூர்ந்த தினம். அந்த நாளில் ஜெரு­ச­லேத்தை பலஸ்­தீனத் தலை­ந­க­ராக அங்­கீ­க­ரிக்கும் திட்­டத்­திற்கு அமைய, அமெ­ரிக்க தூத­ரகம் இடம் மாற்­றப்­பட்­டது. அன்று தொடக்கம் மத்­திய கிழக்குப் பிராந்­தி­யத்தில் மீண்டும் இரத்­தக்­க­ளரி. இவ்­விரு தீர்­மா­னங்­களும் உலக பொரு­ளா­தா­ரத்தில் பெருந்­தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. குறிப்­பாக, ஈரா­னு­ட­னான அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் இருந்து விலகி, அதன் மீது பொரு­ளா­தாரத் தடை­களை விதிக்கப் போவ­தாக டொனல்ட் ட்ரம்ப் அறி­வித்­ததைத் தொடர்ந்து, பங்குச் சந்­தைகள் கிடு­கி­டு­வென சரிந்­தன. உலக சந்­தையில் மச­கெண்­ணெயின் விலை சடு­தி­யாக அதி­க­ரித்­தது. எண்ணெய் விலை­யேற்­றத்தின் தாக்கம் இலங்கை, இந்­தியா போன்ற நாடு­களில் கூட வெளிப்­ப­டை­யாக பிர­தி­ப­லித்­ததை நினை­வு­கூர முடியும் இன்­றைய பிரச்சினை அடா­வ­டித்­த­ன­மான அர­சியல் தீர்­மா­னங்கள் கார­ண­மாக பொரு­ளா­தா­ரத்தின் மீது ஏற்­ப­டுத்தும் தாக்கம் சம்­பந்­தப்­பட்­டது அல்ல. மாறாக, சுய­நலம் கரு­திய தீர்க்க தரி­சனம் அற்ற பொரு­ளா­தாரத் தீர்­மா­னங்கள் உலக வணி­கத்தில் தாக்கம் செலுத்தி, ஒட்­டு­மொத்த உல­கத்­தையும் எந்­த­ள­வுக்கு பாது­காப்­பற்­ற­தாக மாற்­றி­யி­ருக்­கி­றது என்­பது பற்­றி­ய­தாகும். தமது ஆட்சி பீடத்தில் ஏறிய நாள் தொடக்கம் டொனல்ட் ட்ரம்ப் தீமை தரும் பொரு­ளா­தாரத் தீர்­மா­னங்­களை எட்­டி­யி­ருக்­கிறார். இவற்­றிற்­கெல்லாம் மகுடம் வைத்­தாற்­போல அமைந்த இரு தீர்­மா­னங்கள் உள்­ளன. சீனாவின் உற்­பத்­திகள் மீதான இறக்­கு­மதித் தீர்வை முத­லா­வது தீர்­மானம். ஐரோப்­பிய ஒன்­றியம், மெக்­ஸிக்கோ, கனடா ஆகிய நாடு­களில் இருந்து அமெ­ரிக்கா தரு­விக்கும் உருக்கு மற்றும் அலு­மி­னியம் மீதான தீர்­வைகள் என்­பது இரண்­டா­வது தீர்­மா­ன­மாகும். சீனாவில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் 1,333 வகை­யான பொருட்­க­ளுக்கு அமெ­ரிக்­காவில் தீர்­வைகள் விதிக்­கப்­படும் என கடந்த ஏப்ரல் மாதம் ட்ரம்ப் அறி­வித்­தி­ருந்தார். கடந்த வியாழன் நள்­ளி­ரவு தொடக்கம் ஐரோப்­பிய ஒன்­றியம், மெக்­ஸிக்கோ, கனடா ஆகி­ய­வற்றில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் உருக்கின் மீதும், அலு­மி­னி­யத்தின் மீதும் வரி விதிக்­கப்­ப­டு­வ­தாக ட்ரம்ப் அதி­ரடி அறி­விப்பை மேற்­கொண்டார். இந்த இடங்­களில் இருந்து தரு­விக்­கப்­படும் உருக்கின் மீது 25 சத­வீத வரியும், அலு­மி­னி­யத்தின் மீது 10 சத­வீத வரியும் விதிக்­கப்­படும். அமெ­ரிக்­கா­விற்கும் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கும் இடை­யி­லான வர்த்­த­கத்தில் பொருட்­களின் மீது விதிக்­கப்­படும் வரி மூன்று சத­வீ­தத்தைத் தாண்­டு­வ­தில்லை என்­பதை நினை­வு­ப­டுத்த வேண்டும். இவ்­வாறு அதி­க­மாக வரி விதிக்க வேண்­டி­யதன் காரணம் என்ன? இதனை பொரு­ளா­தார உலகில் Protectionism என்று கூறு­வார்கள். இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீது கூடு­த­லான வரியை விதிப்­பதன் மூலம் வெளி­நாட்டுப் போட்­டியில் இருந்து உள்­நாட்டு தொழிற்­சா­லை­களைப் பாது­காப்­பது என்று விப­ரிக்­கலாம். அமெ­ரிக்­காவில் போதிய அளவு உருக்கும் அலு­மி­னி­யமும் இருக்­கின்­றன. இவற்றை வெளி­நா­டு­களில் இருந்து தரு­வித்து உள்­நாட்டுக் கைத்­தொ­ழில்கள் மீது தாக்­கத்தை ஏற்­ப­டுத்தத் தேவை­யில்லை என்­பது டொனல்ட் ட்ரம்பின் வாத­மாக இருக்­கி­றது. இந்த வாதத்தின் கீழ், அமெ­ரிக்­காவின் தேசிய பாது­காப்பு என்ற சுய­நலம் மறைந்­துள்­ளது. தாம் பொரு­ளா­தார வல்­ல­ர­சாகத் திகழ்ந்தால் மாத்­தி­ரமே அமெ­ரிக்கா பாது­காப்­பான தேச­மாக இருக்கும் என்­பது சுய­நல சிந்­த­னையின் சாராம்சம் எனலாம். இது 16ஆம், 17ஆம் நூற­றாண்டு கால கொள்­கை­யாகும். அந்தக் காலத்தில் நாடுகள் தனித்­தி­ருந்­தன. ஒவ்­வொரு நாடும் எந்­த­ளவு செல்­வத்தைக் கொண்­டி­ருக்­கி­றதோ, அந்­த­ள­வுக்கு இரா­ணுவ ரீதி­யான வல்­லமை இருக்கும் என்­பது அந்தக் காலத்து நியதி. எனவே, அந்தக் காலத்து நாடுகள் தங்­கத்தின் வடிவில் செல்­வத்தை சேர்ப்­பதில் குறி­யாக இருந்­தன. தமது நாட்டில் மிகை­யாக உள்ள பொருட்­களை ஏற்றிக் கொண்டு செல்லும் கப்­பல்கள், தங்­கத்­தையும் வெள்­ளி­யையும் குவித்துக் கொண்டு நாடு திரும்பும். இந்தத் தங்கம் வணி­கத்தின் மூலம் பெறப்­பட்­ட­தாக இருக்­கலாம். படைப்­ப­லத்தைப் பயன்­ப­டுத்தி அப­க­ரிக்­கப்­பட்­ட­தா­கவும் இருக்க முடியும். இந்த நடை­மு­றையில் வணி­கத்தில் ஈடு­படும் இரு­த­ரப்­பு­களும் பரஸ்­பரம் நன்மை பெறுதல் என்ற பேச்­சுக்கே இட­மில்லை. இதில் ஒருவர் வெற்­றி­யா­ள­ராக இருப்பார், மற்­றவர் நிச்­சயம் தோற்­ற­வ­ராக இருக்க வேண்டும். இன்று சிக்­க­லா­ன­தொரு வணிக பொரு­ளா­தார நடை­முறை காணப்­ப­டு­கி­றது. இதில் ஒருவர் வெற்றி பெற்றால் மற்­றவர் தோற்க வேண்டும் என்ற நிய­தி­யெல்லாம் கிடை­யாது. எந்­த­வொரு வணி­கத்­து­டனும் சம்­பந்­தப்­பட்ட சகல தரப்­பு­க­ளுக்கும் சம­மாக நன்மை பெர வேண்டும் என்ற நியா­ய­மான அபி­லாஷை உள்­ளது. சகல செல்­வத்­தையும் தம்பால் குவித்துக் கொள்­வ­தற்கு பதி­லாக, சகல நாடு­களும் ஒத்­து­ழைப்­புடன் செல்­வத்தைப் பெருக்க முயல வேண்டும் என்ற பொரு­ளா­தார கோட்­பா­டுகள் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய பின்­பு­லத்தில், அமெ­ரிக்­காவின் சுய­ந­லத்­திற்கு முக்­கி­யத்­துவம் அளித்து உலக முன்­னேற்­றத்தை பின்­னோக்கித் திருப்பும் செயற்­பா­டா­கவே டொனல்ட் ட்ரம்பின் தீர்­மானம் அமைந்­தி­ருக்­கி­றது. அமெ­ரிக்­கா­விற்கு உருக்­கையும், அலுமீ­னி­யத்­தையும் கூடு­த­லாக ஏற்­று­மதி செய்யும் நாடு­களில் ஜெர்­ம­னியும், இத்­தா­லியும் முன்­னிலை வகிக்­கின்­றன. கனடா, மெக்­ஸிக்கோ போன்ற நாடு­களும் கணி­ச­மான அளவு ஏற்­று­மதி செய்­கின்­றன. அமெ­ரிக்கா விதித்த தீர்வை கார­ண­மாக, அந்­நா­டு­களின் பொரு­ளா­தா­ரத்தில் ஓர­ளவு தாக்கம் ஏற்­ப­டலாம். அது பிரச்சினை அல்ல. அர­சியல் ரீதி­யான நட்பு நாடுகள் என்­ப­தையும் பொருட்­ப­டுத்­தாமல், அந்­நா­டு­களை வலியுறச் செய்யும் சுய­நலம் தான் பிரச்சினை. இந்தத் தீர்­வைக்கு ஐரோப்­பிய நாடு­களும், கன­டாவும், மெக்­ஸிக்­கோவும் நிச்­ச­ய­மாக பதி­லடி கொடுக்­கத்தான் போகின்­றன. அமெ­ரிக்­காவில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீது வரி விதிக்கப் போவ­தாக பல நாடுகள் ஏற்­கெ­னவே அறி­வித்­துள்­ளன. இது நிச்­ச­ய­மாக பதி­லுக்கு பதில் என்ற போக்­கிற்கு வித்­திடும். இது வர்த்­தகப் போரை ஏற்­ப­டுத்தும். இன்­றைய பொரு­ளா­தார கட்­ட­மைப்பில் எந்­த­வொரு நாடும் வர்த்­தகப் போரை தாங்கிக் கொள்­ளக்­கூ­டிய நிலையில் இருக்­குமா என்­பது சந்­தே­கமே. ஒரு நாட்டில் வர்த்­தகப் போர் நில­வு­மானால், அதன் உள்­நாட்டு வெளி­நாட்டு முத­லீ­டுகள் பாதிக்­கப்­படும். அது உற்­பத்தித் திறனைக் குன்றச் செய்யும். இங்கு இன்­னொரு விட­யத்­தையும் ஆரா­யலாம். இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீதான வரி அதி­க­ரிக்­கையில், அந்த வரியை செலுத்­து­வது ஏற்­று­ம­தி­யா­ளர்கள் அல்லர். இறக்­கு­மதி செய்யும் நாட்டில் உள்ள வாடிக்­கை­யா­ளர்­களே. இதனை இவ்­வாறு விளக்­கலாம். பிரிட்­டனில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் உருக்­கிற்கு அமெ­ரிக்கா வரி விதிக்­கி­றது. இதற்குப் பதி­லாக, அமெ­ரிக்­காவில் இருந்து தரு­விக்­கப்­படும் விஸ்­கியின் மீது பிரிட்டன் வரி விதிப்­ப­தாக வைத்துக் கொள்வோம். அப்­போது, பிரிட்டன் சாராயக் கடையில் விஸ்­கியின் விலை அதி­க­ரிக்கும். அதி­க­ரித்த தொகையை செலுத்த வேண்­டி­யது விஸ்­கியை வாங்கும் பிரிட்டன் பிர­ஜையே. இது பண­வீக்­கத்தை அதி­க­ரித்து, வாழ்க்கைச் செலவை உயர்த்தும். இதன் கார­ண­மாக, பிரிட்டன் பிர­ஜை­களின் வாழ்க்கைத் தரம் குன்றும். இன்­றைய சர்வதேச வணிக உலகம் சிக்கலானதாக இருந்தாலும், உலக நாடுகள் ஒரு ஒழுங்கை அனுசரிக்கின்றன. இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் 'தீர்வைகள் மற்றும் வணிகத்தின் மீதான பொது உடன்படிக்கை' ஏற்படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையில் குறைபாடொன்று உள்ளது. ஏதேனும் போர் நிகழ்ந்தாலோ, தேசிய ரீதியிலான அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தின் அடிப்படையில் ஒரு நாடு தீர்வை விதிக்கலாம் அல்லது வர்த்தக ரீதியான தடைகளை ஏற்படுத்தலாம். ஆனால், கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்கா உள்ளிட்ட சகல நாடுகளும் இந்த ஏற்பாட்டைத் தவிர்த்து வந்தன. ஒரு தவறான ஏற்பாட்டை சுயநலத்திற்காக பயன்படுத்தி மற்றைய நாடுகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்திற்காக அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தின் அடிப்படையில் உருக்கு மற்றும் அலுமிய தீர்வைகளை அமுலாக்கியதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி கனவான் உடன்படிக்கையை மீறியுள்ளார். அவர் உலக ஒழுங்கையும் மீறியிருக்கிறார் என்பதே யதார்த்தம். http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-06-03#page-3

அர­சி­யலைத் தாண்­டிய பொரு­ளா­தார அடா­வ­டித்­தனம் உலக ஒழுங்கை மீறி பொரு­ளா­தா­ரத்தை அபா­யத்தில் தள்ளும் ட்ரம்ப்

3 months 2 weeks ago
அர­சி­யலைத் தாண்­டிய பொரு­ளா­தார அடா­வ­டித்­தனம் உலக ஒழுங்கை மீறி பொரு­ளா­தா­ரத்தை அபா­யத்தில் தள்ளும் ட்ரம்ப்
03-487d5ed267fc432c6e88e3d502fe72abc0602537.jpg

 

சதீஷ் கிருஷ்­ண­பிள்ளை   

உலக வல்­ல­ரசின் ஜனா­தி­பதி பதவி. அந்தப் பத­வியை அலங்­க­ரிப்­பவர் சற்று நிதானம் தவ­றி­ய­வ­ராக இருந்தால் போதும். ஒட்­டு­மொத்த உல­கமும் பாது­காப்­பற்­ற­தாக மாறி விடும்.

இன்­றைய அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனல்ட் ட்ரம்ப். தாம் மன­நல ஆரோக்­கி­யத்­துடன் இருப்­பதை உள­வியல் மருத்­துவ சோத­னைகள் மூலம் நிரூ­பிக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட தலைவர்.

உலக நலன் கரு­திய மரபு சார்ந்த சிந்­த­னை­களைத் தாண்டி, வல்­ல­ரசு மனப்­பான்­மை­யுடன் முதலில் அமெ­ரிக்கா(America First) என்ற கொள்­கையை முன்­னி­றுத்­தி­யவர். அதன் அடிப்­ப­டையில் ஆட்­சி­பீடம் ஏறி அர­சியல் செய்­பவர்.

இந்த மனி­தரின் அதி­ரடி அர­சியல் கொள்­கை­களும், ஆபத்­தான ட்விற்றர் செய்­தி­களும் ஒட்­டு­மொத்த உல­கத்­தையும் எந்­த­ள­வுக்கு பாது­காப்­பற்­ற­தாக மாற்­றி­யி­ருக்­கி­றது என்­பதை ஏறத்­தாழ அனை­வரும் அறி­வார்கள்.

இன்று இந்த மனிதர் போட்டி நாடு­களை மாத்­தி­ர­மன்றி, நேச நாடு­க­ளையும் புறந்­தள்ளி தன்­னிச்­சை­யான பொரு­ளா­தாரத் தீர்­மா­னங்­களை எட்டத் தலைப்­பட்­டுள்ளார். இத்­த­கைய அடா­வ­டி­யான தீர்­மா­னங்கள் உலகை ஆபத்­தா­ன­தாக மாற்­றி­யி­ருக்கும் விதம் ஆரா­யப்­பட வேண்­டி­யது.

டொனல்ட் ட்ரம்ப்பின் அழிவு தரும் அர­சியல் தீர்­மா­னங்கள் பற்றி நெடுந்­தூரம் செல்ல வேண்­டி­ய­தில்லை. ஈரா­னு­ட­னான அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் இருந்து வில­கி­ய­தையும், இஸ்­ரே­லிய சுதந்­திரப் பிர­க­டனத் தினத்­தன்று அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை ஜெரு­ச­லே­மிற்கு மாற்­றி­ய­தையும் விப­ரித்தால் போது­மா­னது.

இன்று மத்­திய கிழக்கில் பலம் பொருந்­திய நாடாக பரி­ண­மித்து வரும் ஈரான். இந்தத் தேசத்தை வலு­வி­ழக்கச் செய்து ஓரங்­கட்ட வேண்டும் என்ற சுய­நல நோக்கம் கார­ண­மாக, சர்­வ­தேச மட்­டத்­தி­லான உடன்­ப­டிக்­கையில் இருந்து அமெ­ரிக்கா வில­கு­வ­தாக டொனல்ட் ட்ரம்ப் அறி­வித்­தி­ருந்தார்.

இதன் விளை­வாக, சிரி­யாவின் கோலான் மேட்டு நிலப்­ப­ரப்பு இஸ்­ரே­லுக்கும் ஈரா­னுக்கும் இடை­யி­லான போர்க்­க­ள­மாக மாறி­யுள்­ளது. சிரி­யாவின் மீது வலிந்து திணிக்­கப்­பட்ட யுத்­தத்தில் ஒரு­பு­றத்தில் ரஷ்யா, ஈரான், ஈராக் முத­லான நாடு­களும், மறு­பு­றத்தில் பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி முத­லான நாடு­களும் சம்­பந்­தப்­பட்­டுள்­ளன. ஈரான் - இஸ்ரேல் நெருக்­க­டியில் இவை தீவி­ர­மாக உள்­ளீர்க்­கப்­படும் அபாயம் உரு­வா­கி­யுள்­ளது.

தூத­ர­கத்தை ஜெரு­ச­லே­மிற்கு மாற்­றிய தீர்­மா­னத்தின் விளை­வு­களை விப­ரிக்­கவே தேவை­யில்லை. 1948ஆம் ஆண்டில் இஸ்­ரே­லிய தேசம் உரு­வாக்­கப்­பட்­டதால் தமது மண்ணை இழந்த சோகத்தை பலஸ்­தீ­னர்கள் நினை­வு­கூர்ந்த தினம். அந்த நாளில் ஜெரு­ச­லேத்தை பலஸ்­தீனத் தலை­ந­க­ராக அங்­கீ­க­ரிக்கும் திட்­டத்­திற்கு அமைய, அமெ­ரிக்க தூத­ரகம் இடம் மாற்­றப்­பட்­டது. அன்று தொடக்கம் மத்­திய கிழக்குப் பிராந்­தி­யத்தில் மீண்டும் இரத்­தக்­க­ளரி.

இவ்­விரு தீர்­மா­னங்­களும் உலக பொரு­ளா­தா­ரத்தில் பெருந்­தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. குறிப்­பாக, ஈரா­னு­ட­னான அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் இருந்து விலகி, அதன் மீது பொரு­ளா­தாரத் தடை­களை விதிக்கப் போவ­தாக டொனல்ட் ட்ரம்ப் அறி­வித்­ததைத் தொடர்ந்து, பங்குச் சந்­தைகள் கிடு­கி­டு­வென சரிந்­தன. உலக சந்­தையில் மச­கெண்­ணெயின் விலை சடு­தி­யாக அதி­க­ரித்­தது. எண்ணெய் விலை­யேற்­றத்தின் தாக்கம் இலங்கை, இந்­தியா போன்ற நாடு­களில் கூட வெளிப்­ப­டை­யாக பிர­தி­ப­லித்­ததை நினை­வு­கூர முடியும்

இன்­றைய பிரச்சினை அடா­வ­டித்­த­ன­மான அர­சியல் தீர்­மா­னங்கள் கார­ண­மாக பொரு­ளா­தா­ரத்தின் மீது ஏற்­ப­டுத்தும் தாக்கம் சம்­பந்­தப்­பட்­டது அல்ல. மாறாக, சுய­நலம் கரு­திய தீர்க்க தரி­சனம் அற்ற பொரு­ளா­தாரத் தீர்­மா­னங்கள் உலக வணி­கத்தில் தாக்கம் செலுத்தி, ஒட்­டு­மொத்த உல­கத்­தையும் எந்­த­ள­வுக்கு பாது­காப்­பற்­ற­தாக மாற்­றி­யி­ருக்­கி­றது என்­பது பற்­றி­ய­தாகும்.

தமது ஆட்சி பீடத்தில் ஏறிய நாள் தொடக்கம் டொனல்ட் ட்ரம்ப் தீமை தரும் பொரு­ளா­தாரத் தீர்­மா­னங்­களை எட்­டி­யி­ருக்­கிறார். இவற்­றிற்­கெல்லாம் மகுடம் வைத்­தாற்­போல அமைந்த இரு தீர்­மா­னங்கள் உள்­ளன. சீனாவின் உற்­பத்­திகள் மீதான இறக்­கு­மதித் தீர்வை முத­லா­வது தீர்­மானம். ஐரோப்­பிய ஒன்­றியம், மெக்­ஸிக்கோ, கனடா ஆகிய நாடு­களில் இருந்து அமெ­ரிக்கா தரு­விக்கும் உருக்கு மற்றும் அலு­மி­னியம் மீதான தீர்­வைகள் என்­பது இரண்­டா­வது தீர்­மா­ன­மாகும்.

சீனாவில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் 1,333 வகை­யான பொருட்­க­ளுக்கு அமெ­ரிக்­காவில் தீர்­வைகள் விதிக்­கப்­படும் என கடந்த ஏப்ரல் மாதம் ட்ரம்ப் அறி­வித்­தி­ருந்தார். கடந்த வியாழன் நள்­ளி­ரவு தொடக்கம் ஐரோப்­பிய ஒன்­றியம், மெக்­ஸிக்கோ, கனடா ஆகி­ய­வற்றில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் உருக்கின் மீதும், அலு­மி­னி­யத்தின் மீதும் வரி விதிக்­கப்­ப­டு­வ­தாக ட்ரம்ப் அதி­ரடி அறி­விப்பை மேற்­கொண்டார். இந்த இடங்­களில் இருந்து தரு­விக்­கப்­படும் உருக்கின் மீது 25 சத­வீத வரியும், அலு­மி­னி­யத்தின் மீது 10 சத­வீத வரியும் விதிக்­கப்­படும். அமெ­ரிக்­கா­விற்கும் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கும் இடை­யி­லான வர்த்­த­கத்தில் பொருட்­களின் மீது விதிக்­கப்­படும் வரி மூன்று சத­வீ­தத்தைத் தாண்­டு­வ­தில்லை என்­பதை நினை­வு­ப­டுத்த வேண்டும்.

இவ்­வாறு அதி­க­மாக வரி விதிக்க வேண்­டி­யதன் காரணம் என்ன? இதனை பொரு­ளா­தார உலகில் Protectionism என்று கூறு­வார்கள். இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீது கூடு­த­லான வரியை விதிப்­பதன் மூலம் வெளி­நாட்டுப் போட்­டியில் இருந்து உள்­நாட்டு தொழிற்­சா­லை­களைப் பாது­காப்­பது என்று விப­ரிக்­கலாம். அமெ­ரிக்­காவில் போதிய அளவு உருக்கும் அலு­மி­னி­யமும் இருக்­கின்­றன. இவற்றை வெளி­நா­டு­களில் இருந்து தரு­வித்து உள்­நாட்டுக் கைத்­தொ­ழில்கள் மீது தாக்­கத்தை ஏற்­ப­டுத்தத் தேவை­யில்லை என்­பது டொனல்ட் ட்ரம்பின் வாத­மாக இருக்­கி­றது. இந்த வாதத்தின் கீழ், அமெ­ரிக்­காவின் தேசிய பாது­காப்பு என்ற சுய­நலம் மறைந்­துள்­ளது. தாம் பொரு­ளா­தார வல்­ல­ர­சாகத் திகழ்ந்தால் மாத்­தி­ரமே அமெ­ரிக்கா பாது­காப்­பான தேச­மாக இருக்கும் என்­பது சுய­நல சிந்­த­னையின் சாராம்சம் எனலாம்.

இது 16ஆம், 17ஆம் நூற­றாண்டு கால கொள்­கை­யாகும். அந்தக் காலத்தில் நாடுகள் தனித்­தி­ருந்­தன. ஒவ்­வொரு நாடும் எந்­த­ளவு செல்­வத்தைக் கொண்­டி­ருக்­கி­றதோ, அந்­த­ள­வுக்கு இரா­ணுவ ரீதி­யான வல்­லமை இருக்கும் என்­பது அந்தக் காலத்து நியதி. எனவே, அந்தக் காலத்து நாடுகள் தங்­கத்தின் வடிவில் செல்­வத்தை சேர்ப்­பதில் குறி­யாக இருந்­தன. தமது நாட்டில் மிகை­யாக உள்ள பொருட்­களை ஏற்றிக் கொண்டு செல்லும் கப்­பல்கள், தங்­கத்­தையும் வெள்­ளி­யையும் குவித்துக் கொண்டு நாடு திரும்பும். இந்தத் தங்கம் வணி­கத்தின் மூலம் பெறப்­பட்­ட­தாக இருக்­கலாம். படைப்­ப­லத்தைப் பயன்­ப­டுத்தி அப­க­ரிக்­கப்­பட்­ட­தா­கவும் இருக்க முடியும். இந்த நடை­மு­றையில் வணி­கத்தில் ஈடு­படும் இரு­த­ரப்­பு­களும் பரஸ்­பரம் நன்மை பெறுதல் என்ற பேச்­சுக்கே இட­மில்லை. இதில் ஒருவர் வெற்­றி­யா­ள­ராக இருப்பார், மற்­றவர் நிச்­சயம் தோற்­ற­வ­ராக இருக்க வேண்டும்.

இன்று சிக்­க­லா­ன­தொரு வணிக பொரு­ளா­தார நடை­முறை காணப்­ப­டு­கி­றது. இதில் ஒருவர் வெற்றி பெற்றால் மற்­றவர் தோற்க வேண்டும் என்ற நிய­தி­யெல்லாம் கிடை­யாது. எந்­த­வொரு வணி­கத்­து­டனும் சம்­பந்­தப்­பட்ட சகல தரப்­பு­க­ளுக்கும் சம­மாக நன்மை பெர வேண்டும் என்ற நியா­ய­மான அபி­லாஷை உள்­ளது. சகல செல்­வத்­தையும் தம்பால் குவித்துக் கொள்­வ­தற்கு பதி­லாக, சகல நாடு­களும் ஒத்­து­ழைப்­புடன் செல்­வத்தைப் பெருக்க முயல வேண்டும் என்ற பொரு­ளா­தார கோட்­பா­டுகள் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய பின்­பு­லத்தில், அமெ­ரிக்­காவின் சுய­ந­லத்­திற்கு முக்­கி­யத்­துவம் அளித்து உலக முன்­னேற்­றத்தை பின்­னோக்கித் திருப்பும் செயற்­பா­டா­கவே டொனல்ட் ட்ரம்பின் தீர்­மானம் அமைந்­தி­ருக்­கி­றது.

அமெ­ரிக்­கா­விற்கு உருக்­கையும், அலுமீ­னி­யத்­தையும் கூடு­த­லாக ஏற்­று­மதி செய்யும் நாடு­களில் ஜெர்­ம­னியும், இத்­தா­லியும் முன்­னிலை வகிக்­கின்­றன. கனடா, மெக்­ஸிக்கோ போன்ற நாடு­களும் கணி­ச­மான அளவு ஏற்­று­மதி செய்­கின்­றன. அமெ­ரிக்கா விதித்த தீர்வை கார­ண­மாக, அந்­நா­டு­களின் பொரு­ளா­தா­ரத்தில் ஓர­ளவு தாக்கம் ஏற்­ப­டலாம். அது பிரச்சினை அல்ல. அர­சியல் ரீதி­யான நட்பு நாடுகள் என்­ப­தையும் பொருட்­ப­டுத்­தாமல், அந்­நா­டு­களை வலியுறச் செய்யும் சுய­நலம் தான் பிரச்சினை. இந்தத் தீர்­வைக்கு ஐரோப்­பிய நாடு­களும், கன­டாவும், மெக்­ஸிக்­கோவும் நிச்­ச­ய­மாக பதி­லடி கொடுக்­கத்தான் போகின்­றன. அமெ­ரிக்­காவில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீது வரி விதிக்கப் போவ­தாக பல நாடுகள் ஏற்­கெ­னவே அறி­வித்­துள்­ளன. இது நிச்­ச­ய­மாக பதி­லுக்கு பதில் என்ற போக்­கிற்கு வித்­திடும். இது வர்த்­தகப் போரை ஏற்­ப­டுத்தும்.

இன்­றைய பொரு­ளா­தார கட்­ட­மைப்பில் எந்­த­வொரு நாடும் வர்த்­தகப் போரை தாங்கிக் கொள்­ளக்­கூ­டிய நிலையில் இருக்­குமா என்­பது சந்­தே­கமே. ஒரு நாட்டில் வர்த்­தகப் போர் நில­வு­மானால், அதன் உள்­நாட்டு வெளி­நாட்டு முத­லீ­டுகள் பாதிக்­கப்­படும். அது உற்­பத்தித் திறனைக் குன்றச் செய்யும். இங்கு இன்­னொரு விட­யத்­தையும் ஆரா­யலாம். இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீதான வரி அதி­க­ரிக்­கையில், அந்த வரியை செலுத்­து­வது ஏற்­று­ம­தி­யா­ளர்கள் அல்லர். இறக்­கு­மதி செய்யும் நாட்டில் உள்ள வாடிக்­கை­யா­ளர்­களே. இதனை இவ்­வாறு விளக்­கலாம். பிரிட்­டனில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் உருக்­கிற்கு அமெ­ரிக்கா வரி விதிக்­கி­றது. இதற்குப் பதி­லாக, அமெ­ரிக்­காவில் இருந்து தரு­விக்­கப்­படும் விஸ்­கியின் மீது பிரிட்டன் வரி விதிப்­ப­தாக வைத்துக் கொள்வோம். அப்­போது, பிரிட்டன் சாராயக் கடையில் விஸ்­கியின் விலை அதி­க­ரிக்கும். அதி­க­ரித்த தொகையை செலுத்த வேண்­டி­யது விஸ்­கியை வாங்கும் பிரிட்டன் பிர­ஜையே. இது பண­வீக்­கத்தை அதி­க­ரித்து, வாழ்க்கைச் செலவை உயர்த்தும். இதன் கார­ண­மாக, பிரிட்டன் பிர­ஜை­களின் வாழ்க்கைத் தரம் குன்றும்.

இன்­றைய சர்வதேச வணிக உலகம் சிக்கலானதாக இருந்தாலும், உலக நாடுகள் ஒரு ஒழுங்கை அனுசரிக்கின்றன. இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் 'தீர்வைகள் மற்றும் வணிகத்தின் மீதான பொது உடன்படிக்கை' ஏற்படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையில் குறைபாடொன்று உள்ளது. ஏதேனும் போர் நிகழ்ந்தாலோ, தேசிய ரீதியிலான அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தின் அடிப்படையில் ஒரு நாடு தீர்வை விதிக்கலாம் அல்லது வர்த்தக ரீதியான தடைகளை ஏற்படுத்தலாம். ஆனால், கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்கா உள்ளிட்ட சகல நாடுகளும் இந்த ஏற்பாட்டைத் தவிர்த்து வந்தன. ஒரு தவறான ஏற்பாட்டை சுயநலத்திற்காக பயன்படுத்தி மற்றைய நாடுகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்திற்காக அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தின் அடிப்படையில் உருக்கு மற்றும் அலுமிய தீர்வைகளை அமுலாக்கியதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி கனவான் உடன்படிக்கையை மீறியுள்ளார். அவர் உலக ஒழுங்கையும் மீறியிருக்கிறார் என்பதே யதார்த்தம்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-06-03#page-3

உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்:

3 months 2 weeks ago
உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்: இன விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமரன் நினைவிடத்திலேயே இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஜூன் 5 1974இல் பொன் சிவகுமாரன் வீரமரணம் அடைந்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டச் செயல்களைப் புரிந்த சிவகுமாரன் பிற்கால ஈழ விடுதலைப் போராட்ட எண்ணத்திற்கும் இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக செயற்பட்டார். இவரது 44ஆவது நினைவு தினம் நாளை ஆகும். இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், முன்னாள் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் நிகழ்வு ஏற்பட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் முதன் முதலில் பகிரங்மான முறையில் சிவகுமாரன் நினைவுகூரப்படுவது இதுவே முதற்தடவையாகும். http://globaltamilnews.net/2018/82211/

உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்:

3 months 2 weeks ago
உரும்பிராயில்  பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்:
 

pon-sivakumaran-d06fdf44-e38a-4013-8236-

 

இன விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமரன் நினைவிடத்திலேயே இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

ஜூன் 5 1974இல் பொன் சிவகுமாரன் வீரமரணம் அடைந்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டச் செயல்களைப் புரிந்த சிவகுமாரன் பிற்கால ஈழ விடுதலைப் போராட்ட எண்ணத்திற்கும் இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக செயற்பட்டார். இவரது 44ஆவது நினைவு தினம் நாளை ஆகும்.

இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், முன்னாள் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் நிகழ்வு ஏற்பட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் முதன் முதலில் பகிரங்மான முறையில் சிவகுமாரன் நினைவுகூரப்படுவது இதுவே முதற்தடவையாகும்.

http://globaltamilnews.net/2018/82211/

எனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது-மன்னாரில் மனோ கணேசன்

3 months 2 weeks ago
எனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது-மன்னாரில் மனோ கணேசன் நாட்டில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன ஒற்றுமையை தோற்றுவிக்கும் வகையில் தமது செயற்பாடுகள் இடம் பெற்று வருவதோடு,வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்ஸீம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மொழி மூலம் சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்தும் பாரிய பொறுப்பை தாம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அரச,அரச சார்பாற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை(4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. -மன்னார் மாவட்ட மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் மனோ கணேசன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய உற்பட அமைச்சின் பிரதி நிதிகள்,அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள்,அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன் போது மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் அரச சார்பற்ற அமைப்புக்கள்,மற்றும் சிவில் அமைப்புக்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு,குறித்த அமைப்பபுக்கள் கடந்த காலங்களில் முகம் கொடுத்த நெருக்கடி தொடர்பிலும்,தற்போதைய அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். தனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது எனவும் கண்மூடித்தனமான வேகமாக மட்டும் இருந்தால் அது ஒரு விபத்தை ஏற்படுத்தி தானும் அழிந்து என் சார்ந்தவர்களையும் அழித்து விடும். எனவே வேகமாக மட்டுமல்ல விவேகமாக சிந்தித்து செயல்பட வேண்டும்என அவர் மேலும் தெரிவித்தார். http://globaltamilnews.net/2018/82205/

எனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது-மன்னாரில் மனோ கணேசன்

3 months 2 weeks ago
எனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது-மன்னாரில் மனோ கணேசன்

DSC_0101.jpg?resize=787%2C525

 

நாட்டில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன ஒற்றுமையை தோற்றுவிக்கும் வகையில் தமது செயற்பாடுகள் இடம் பெற்று வருவதோடு,வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்ஸீம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மொழி மூலம் சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்தும் பாரிய பொறுப்பை தாம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அரச,அரச சார்பாற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை(4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

-மன்னார் மாவட்ட மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் மனோ கணேசன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய உற்பட அமைச்சின் பிரதி நிதிகள்,அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள்,அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் அரச சார்பற்ற அமைப்புக்கள்,மற்றும் சிவில் அமைப்புக்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு,குறித்த அமைப்பபுக்கள் கடந்த காலங்களில் முகம் கொடுத்த நெருக்கடி தொடர்பிலும்,தற்போதைய அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

தனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது எனவும்  கண்மூடித்தனமான வேகமாக மட்டும் இருந்தால் அது ஒரு விபத்தை ஏற்படுத்தி தானும் அழிந்து என் சார்ந்தவர்களையும் அழித்து விடும். எனவே வேகமாக மட்டுமல்ல விவேகமாக சிந்தித்து செயல்பட வேண்டும்என அவர் மேலும் தெரிவித்தார்.

DSC_0076.jpg?resize=787%2C525DSC_0079.jpg?resize=787%2C525DSC_0093.jpg?resize=787%2C525

http://globaltamilnews.net/2018/82205/

சிங்கள வைத்தியர்கள், தாதிகள் யாழில் பணிபுரிவதற்கு என்ன காரணம்?

3 months 2 weeks ago
' விவசாயிகள் மழை நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளதால் மூன்று போகமும் விவசாயம் செய்ய நீராதாரம் இல்லையென்பதை பற்றி நாங்கள் கதைத்தால் நீங்கள் குடிக்கவும் ........... கழுவவும் தண்ணீர் இறக்குமதி ஏற்றுமதி பற்றி கதைக்கிறீர்களே?? காவிரியில் நீர் வரத்து இல்லாமையால் தமிழக விவசாயிகள் படும் அவஸ்தையை பார்க்கவில்லைபோலும்!

மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கும் பிரச்னை..! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை

3 months 2 weeks ago
காவிரி பிரச்னையில் கர்நாடகத்தின் ஒற்றுமை! - காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 16 Chennai: ``காவிரிப் பிரச்னையில் கருணாநிதி கடந்த 20 ஆண்டுகளாகச் செய்யக்கூடாததைச் செய்தும், செய்ய வேண்டியதைச் செய்யாமலும் விட்ட பெருங்குற்றங்களால்தான், நாம் இன்று காவிரியை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலாது” என்று கருணாநிதி மீது குற்றம்சாட்டுகிறார் பூ.அர.குப்புசாமி. கருணாநிதி மீது விமர்சனம்! குப்புசாமி மட்டுமல்ல... இன்னும் பலரும் காவிரிப் பிரச்னையில் கருணாநிதி மீது குற்றம் சுமத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் அவர், “இந்திரா காந்தியின் பேச்சைக் கேட்டு, காவிரி வழக்கை உச்ச நீதிமன்றத்திலிருந்து கருணாநிதி திரும்பப் பெறாமல் இருந்திருந்தால், 1975-ம் ஆண்டுவாக்கிலேயே நடுவர் மன்றம் அமைக்கப்பட்டிருக்கும். கர்நாடகாவைப் பொறுத்தவரை, காவிரி விஷயத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் பேசி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு வந்த தி.மு.க. அரசு அதுபோன்று செய்யவில்லை” என்ற விமர்சனத்தை கருணாநிதி மீது வைக்கிறார். இவர் மட்டுமல்ல... இன்னும் பலரும் இன்றுவரை கருணாநிதி மீது விமர்சனத்தை வைக்கின்றனர். தனி திறமைசாலி! இப்படி, காவிரி விவகாரம் பற்றி எரியும்போதெல்லாம் தி.மு.க. மீதும், அதன் தலைவர் கருணாநிதி மீதும் விமர்சனம் வைக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் தமிழகத்துக்கானத் தண்ணீரைக் கேட்டு வாங்கிவிடுவதில் கருணாநிதி மிகச் சிறந்த திறமைசாலி என்கிறார் முன்னாள் பிரதமர் தேவகவுடா. இதுகுறித்து ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்ற புத்தகத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில், “தமிழகம் - கர்நாடகம் என்றாலே, காவிரிப் பிரச்னைதானே முதலில் வந்து நிற்கும். பொதுவாக, பற்றாக்குறையால் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்படும்போது, தமிழக முதல்வராக இருப்பவர், கர்நாடக முதல்வரிடம் பேசுவதும், தண்ணீர் திறந்துவிடுமாறு கடிதம் எழுதுவதும் வழக்கம். ஆனால், கருணாநிதி எப்படியாவது தண்ணீரைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காகப் புதுப்புது யுக்திகளைக் கையாள்வார். கர்நாடகத்தில் தேவராஜ் அர்ஸ் முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்தச் சமயத்தில், அங்கே நான் (தேவகவுடா) எதிர்க் கட்சித் தலைவராக இருந்தேன். தேவராஜ் அர்ஸை நேரில் சந்தித்த கருணாநிதி, ‘தமிழக விவசாயிகள் தவிக்கிறார்கள்; மறுத்துவிடாதீர்கள்’ என்று அவரிடம் தண்ணீருக்காக மிகவும் உருக்கமாகக் கோரிக்கை விடுத்தார். நீங்களும் ஒரு விவசாயி! இதுதொடர்பாக தேவராஜ் அர்ஸை நேரில் சந்தித்த நான், ‘எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது’ என்று எச்சரித்துவிட்டு வந்தேன். இந்தச் சூழலில், தேவராஜ் அர்ஸைச் சந்தித்ததோடு, யாருமே எதிர்பாராத வண்ணம் என்னையும் வந்து சந்தித்தார், கருணாநிதி. அப்போது அவர், ‘நீங்களும் ஒரு விவசாயி; சக விவசாயிகளின் வலியைக் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்... மனதுவையுங்கள்’ என்று என் கையைப் பற்றிக்கொண்டு கேட்டார். இந்த அணுகுமுறை என்னை நெகிழச் செய்துவிட்டது. அன்று தொடங்கி கவனித்துவருகிறேன். அவர், முதல்வராக இருக்கும் காலகட்டத்தில் இதுபோன்று எப்படியாவது பேசி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரை வாங்கிவிடுவார்” என்று தெரிவித்திருக்கிறார் நெகிழ்ச்சியுடன். எப்போதும் கர்நாடகத்திடமிருந்து கடுகளவுகூடத் தண்ணீரை வாங்க முடியாத சூழலில், இப்படியெல்லாம் கருணாநிதி ஏதாவது ஒன்றைச் சொல்லி உரிய நேரத்தில் தண்ணீரை வாங்கியிருக்கிறார் என்றால், உண்மையிலேயே நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். அப்படி, ஒருவேளை தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்காதநிலை வந்தால்கூட, தஞ்சையை வளர்ச்சிக்குள் கொண்டுவந்து விடுவார் என்கிறார், தி.மு.க. மூத்தத் தலைவர் எல்.கணேசன். அவர், “தஞ்சைக்கு நீர் வராமல் தரிசாகி விட்டாலும், கலைஞர் தஞ்சையைத் தொழில் மயமாக்கிவிடுவார்” என்கிறார். காவிரியைப் பற்றிப் பேசக்கூடாது! தமிழக அரசியல் வரலாற்றில், ஏன் இந்திய அரசியலிலும்கூட கருணாநிதிக்கென்று நிச்சயமாக தனியானதொரு இடமுண்டு. அந்த வரலாற்றின் ஓர் அத்தியாயத்தில் காவிரி பற்றிய செய்திகளிலும் கருணாநிதி இடம்பிடித்திருப்பார். தி.மு.க-வின் முக்கியத் தலைவரும், கருணாநிதியின் அக்காள் மகனுமான முரசொலி மாறனின் புதல்வர் கலாநிதி மாறன் - காவேரி திருமண வரவேற்பில் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய தி.மு.க. பிரமுகர்கள் பலரும், ``தலைவர் (கருணாநிதி), ‘காவிரி’யைத் (கலாநிதி மாறனின் மனைவி கர்நாடகத்தைச் சேர்ந்தவர்) தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டார்” என்றனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கலாநிதி மாறனுக்கு மணமுடித்ததால், இவ்வாறு பலரும் பேசினர். இறுதியில் பேசிய எஸ்.ஆர்.பொம்மை, ``காவிரியைக் கேட்டீர்கள்... கொடுத்துவிட்டோம். பிரச்னை முடிந்தது; இனி, யாரும் காவிரி வேண்டும் எனப் பேசக்கூடாது” என்றார். இந்தக் கூற்றைப் பார்க்கும்போது, கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரும் எந்த முதல்வரானாலும், அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவரானாலும், `தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட மாட்டோம்’ என்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்; இருந்துகொண்டு வருகிறார்கள் என்பதை நாம் தற்போதுவரை தெளிவாக உணர முடிகிறது. அதேபோல், கர்நாடகத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், தமிழகத்தில் மட்டும் காவிரிக்கு ஆதரவாகத் தலைகீழ் மாற்றம் இருக்கிறது. அதேபோல், கடந்த 2009-ம் ஆண்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை எல்லாம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அந்தச் சமயத்தில் மருத்துவர், அங்கிருந்த பெண் செவிலியரிடம், ``மயக்கம் தெளிந்து பேஷன்ட் விழிக்கும்போது, அனஸ்தீஸியாவின் பாதிப்பால் தண்ணீர் தாகம் எடுக்கும். ஆனாலும் அதிக அளவில் தண்ணீர் கொடுத்துவிடக் கூடாது. அது, உடல்நிலையைப் பாதிக்கும். எனவே, நாக்கு நனையும்படி சில சொட்டு நீரை மட்டும் கொடுங்கள்” என்று அறிவுறுத்திவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார். கருணாநிதிக்கு மெள்ள மயக்கம் தெளிய ஆரம்பித்தது. மருத்துவர் சொல்லியிருந்ததுபோலவே, அவருக்குத் தாகம் எடுத்தது. செவிலியரை அழைத்து தண்ணீர் கேட்டார். அந்தச் செவிலியரும் மருத்துவர் சொல்லியிருந்தபடியே சில துளி நீரை மட்டும் பருகக் கொடுத்தார். தாகம் தணியாத கருணாநிதி, மீண்டும் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அப்போதும், அந்தச் செவிலியர் சில துளி நீரை மட்டும் கொடுக்கவே.... “ஏம்மா... உன்பேரு என்ன ‘காவிரி’யா” என்று கேட்டேவிட்டார் கருணாநிதி. அந்த செவிலியப் பெண்ணுக்கோ அவரின் கேள்வி புரியவில்லை. ஆனால், உடனிருந்த அனைவரும் அந்தச் சூழ்நிலையிலும் சிரித்துவிட்டனர். அதாவது, காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகத்தைத்தான் அப்படி நகைச்சுவையாய் வெளிப்படுத்தியிருந்தார், கருணாநிதி. இப்படிக் காவிரி பற்றிய விவகாரங்களில் கருணாநிதியின் பெயர் பல்வேறு தருணங்களில் இடம்பெற்றிருந்தாலும், தமிழகத்தில் அவரின் ஆட்சிக்காலத்தின்போது காவிரிப் பிரச்னைக்காக எண்ணற்ற தீர்மானங்களையும் கருணாநிதி நிறைவேற்றியிருக்கிறார். அவற்றில் முக்கியமான ஒன்று, காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் 8-7-1971 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதான் எனலாம். இதையடுத்து, காவிரிப் பிரச்னை குறித்து விவாதிக்க மூன்று மாநில (கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு) முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராயினர். - காவிரி பாயும்... https://www.vikatan.com/news/tamilnadu/126727-the-abandoned-story-of-cauvery-series-16.html

டி20 போட்டியில் ரஷித்கான் புதிய சாதனை

3 months 2 weeks ago
டி20 போட்டியில் ரஷித்கான் புதிய சாதனை ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் : கோப்புப்படம் - படம்: கெட்டி இமேஜஸ் சர்வதேச டி20 போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையை ஆப்கானிஸ்தான் சுழற்பந்தவீச்சாளர் ரஷித்கான் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்துவைத்த 220 நாட்களில் ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் குறிப்பிட்ட சாதனைகளை ரஷித்கான் புரிந்துள்ளார். இதற்கு முன் 40 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகவிரைவாக 100 விக்கெட்டுகளைச் சாய்த்த வீரர் எனும் பெருமையை ரஷித்கான் பெற்று இருந்தார். இப்போது டி20 போட்டிகளிலும் மிகவிரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். டேராடூனில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசிய 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ரஷித்கான் அசத்தியபோது, டி20 போட்டியில் இந்த முத்திரையைப் பதித்தார். கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி லெக் ஸ்பின்னரான ரஷித்கான் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் அறிமுகமாகினார். அதன்பின் 31 போட்டிகளில் தனது 50-வது விக்கெட்டை வீழ்த்தி ரஷித்கான் சாதித்துள்ளார். இதற்கு முன் டி20போட்டிகளில் மிகவிரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை இலங்கை வீரர் மென்டிஸ் வைத்துள்ளார். அவர் 26 போட்டிகளில் இந்த சாதனையைச் செய்தார். அதற்கு அடுத்து, தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் 31 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார். அவருக்கு இணையாக இப்போது ரஷித்கான் 50 விக்கெட்டுகளை 31 போட்டிகளில் வீழ்த்தியுள்ளார். மேலும், 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின்(35-வதுபோட்டி), பாகிஸ்தானின் உமர் குல்(36), சயித் அஜ்மல்(37) என முறையே 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர். 19வயதான ரஷித்கான் தனது கூக்ளி பந்துவீச்சு மூலம் எதிரணிகளை மிரட்டி வருவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ரஷித்கான் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். சன்ரைசர்ஸ் அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரஷித்கானின் பந்துவீச்சு முக்கியக் காரணம் என்று கூறமுடியும். சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டிகளில் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக சன்ரைசர்ஸ் அணி திகழ்ந்ததற்கு ரஷித்கான், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட சில வீரர்கள் இருந்தது முக்கியக் காரணமாகும். இதற்கு முன் ரஷித்கான் ஒருநாள் போட்டியில் தனது 100-வது விக்கெட்டை 44-வது போட்டிகளில் வீழ்த்தி, உலகிலேயே மிக விரைவாக 100-வது விக்கெட்டை வீழ்த்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்த சாதனையைச் செய்த மிக இளம் வீரர் என்ற பெயரும் ரஷித்கானுக்கு உண்டு. இதற்கு முன், மிட்ஷெல் ஸ்டார்க் 52 போட்டிகளிலும், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாக்லின் முஷ்டாக் 53 போட்டிகளிலும் 100-வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். மேலும்,ஆஸ்திரேலிய வீரர் ஷேன் பாண்ட்(54), பிரட் லீ (55) ஆகியோர் 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர். ரஷித்கான் ஒட்டுமொத்த(44ஒருநாள், 31 டி20) 75 போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 100 ஒருநாள் விக்கெட், 52 டி20 விக்கெட் அடங்கும். http://tamil.thehindu.com/sports/article24077562.ece

டி20 போட்டியில் ரஷித்கான் புதிய சாதனை

3 months 2 weeks ago
டி20 போட்டியில் ரஷித்கான் புதிய சாதனை

 

 
rasid%20kha

ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் : கோப்புப்படம்   -  படம்: கெட்டி இமேஜஸ்

சர்வதேச டி20 போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையை ஆப்கானிஸ்தான் சுழற்பந்தவீச்சாளர் ரஷித்கான் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்துவைத்த 220 நாட்களில் ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் குறிப்பிட்ட சாதனைகளை ரஷித்கான் புரிந்துள்ளார்.

   
 
 

இதற்கு முன் 40 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகவிரைவாக 100 விக்கெட்டுகளைச் சாய்த்த வீரர் எனும் பெருமையை ரஷித்கான் பெற்று இருந்தார். இப்போது டி20 போட்டிகளிலும் மிகவிரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

டேராடூனில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசிய 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ரஷித்கான் அசத்தியபோது, டி20 போட்டியில் இந்த முத்திரையைப் பதித்தார்.

Rashid-Khan-ajpg
 

கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி லெக் ஸ்பின்னரான ரஷித்கான் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் அறிமுகமாகினார். அதன்பின் 31 போட்டிகளில் தனது 50-வது விக்கெட்டை வீழ்த்தி ரஷித்கான் சாதித்துள்ளார்.

இதற்கு முன் டி20போட்டிகளில் மிகவிரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை இலங்கை வீரர் மென்டிஸ் வைத்துள்ளார். அவர் 26 போட்டிகளில் இந்த சாதனையைச் செய்தார். அதற்கு அடுத்து,  தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் 31 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார். அவருக்கு இணையாக இப்போது ரஷித்கான் 50 விக்கெட்டுகளை 31 போட்டிகளில் வீழ்த்தியுள்ளார்.

மேலும், 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின்(35-வதுபோட்டி), பாகிஸ்தானின் உமர் குல்(36), சயித் அஜ்மல்(37) என முறையே 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.

07rashid2%201jpg
 

19வயதான ரஷித்கான் தனது கூக்ளி பந்துவீச்சு மூலம் எதிரணிகளை மிரட்டி வருவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ரஷித்கான் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

சன்ரைசர்ஸ் அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரஷித்கானின் பந்துவீச்சு முக்கியக் காரணம் என்று கூறமுடியும். சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டிகளில் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக சன்ரைசர்ஸ் அணி திகழ்ந்ததற்கு ரஷித்கான், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட சில வீரர்கள் இருந்தது முக்கியக் காரணமாகும்.

இதற்கு முன் ரஷித்கான் ஒருநாள் போட்டியில் தனது 100-வது விக்கெட்டை 44-வது போட்டிகளில் வீழ்த்தி, உலகிலேயே மிக விரைவாக 100-வது விக்கெட்டை வீழ்த்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்த சாதனையைச் செய்த மிக இளம் வீரர் என்ற பெயரும் ரஷித்கானுக்கு உண்டு.

இதற்கு முன், மிட்ஷெல் ஸ்டார்க் 52 போட்டிகளிலும், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாக்லின் முஷ்டாக் 53 போட்டிகளிலும் 100-வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். மேலும்,ஆஸ்திரேலிய வீரர் ஷேன் பாண்ட்(54), பிரட் லீ (55) ஆகியோர் 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.

ரஷித்கான் ஒட்டுமொத்த(44ஒருநாள், 31 டி20) 75 போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 100 ஒருநாள் விக்கெட், 52 டி20 விக்கெட் அடங்கும்.

http://tamil.thehindu.com/sports/article24077562.ece

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!

3 months 2 weeks ago
49. மருந்தாகுதல் மூடிய கண்களின் மீது இரண்டு வெள்ளரித் துண்டுகளை நறுக்கி வைத்திருந்தேன். மானசீகத்தில் எனக்கு அந்தத் துண்டுகள் சஹஸ்ரஹார சக்கரமாக உருமாறி, மெல்லக் கீழிறங்கி வந்து சுழலுவதுபோல் இருந்தது. அதன் குளிர்ச்சி மெல்ல மெல்ல என் விழிகளுக்குள் இறங்கி தலைக்குள் செல்வதுபோல எண்ணிக்கொண்டேன். எண்ணிக்கொள்வதுதான். உண்மையில் எந்த உணர்ச்சியையும் உறுப்புகளுக்கு நம்மால் கடத்த முடிவதில்லை. அது அங்கங்கே தன்னியல்பாக உற்பத்தியாவது. கணப்பொழுது மூளையுடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துவிட்டுத் தன் தேவைகளை உறுப்புகள் நிறைவேற்றிக்கொண்டுவிடுகின்றன. உணர்ச்சிகளை மூளையின் கட்டளையாக என்னால் எண்ணிப் பார்க்க முடிந்ததில்லை. உணர்வின் மிகத் தெளிவான எதிர்நிலையில் என் மனத்தையும் மூளையையும் நிறுத்தப் பழக்கிக்கொண்டிருந்தேன். துக்கத்தில் புன்னகை செய்வதற்கும் மகிழ்ச்சிக்குரிய தருணங்களில் அதில் மறைந்திருக்கும் பிசிறுகளை ஆராயவும் எனக்குப் பிடித்தது. எந்தத் தருணத்திலும் நான் என் உணர்வின் வசத்தில் விழமாட்டேன் என்று எப்போதும் நினைத்துக்கொள்வேன். அந்நினைவு ஒரு போர்வை. கதகதப்பானது. சுகமளிப்பது. அது எனக்கு அவசியம் என்று நினைத்தேன். நான் மைசூரில் இருந்தேன். மிருதுளாவின் தந்தைதான் என்னை அங்கே அழைத்து வந்திருந்தார். ‘நீங்கள் ஒருவரைச் சந்திக்க வேண்டும். மிகப்பெரிய மனிதர். ஆனால் வெளியே சொல்ல முடியாத ஒரு பெருங்கஷ்டத்தில் இருக்கிறார். அவரது துக்கம் உங்களால் தீருமானால் நான் சந்தோஷப்படுவேன்’ என்று சொன்னார். நகரத்தின் ஆகப்பெரிய நட்சத்திர விடுதியில் அறையெடுத்து என்னைத் தங்கவைத்திருந்தார். பளபளப்பான பித்தளைப் பூண் போட்ட தேக்கு மரக் கதவுகளும் பச்சைத் தரை விரிப்புகளும் படுத்தால் ஓரடி ஆழத்துக்குப் புதைத்துக்கொள்ளும் படுக்கையும் இதர வசதிகளுமாக அந்த விடுதி அமர்க்களமாக இருந்தது. ஜன்னல் திரைச் சீலைகளை விலக்கி வெளியே பார்த்தபோது, நீல நிறத்தில் ஒரு துணியை விரித்து உலர்த்தியதுபோல நீச்சல் குளம் தென்பட்டது. ஆண்களும் பெண்களும் நீந்திக் களித்துக்கொண்டிருந்தார்கள். குளக்கரையில் சாய்வு நாற்காலிகள் காலியாக இருந்தன. எனக்கு அங்கே போய் அமர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது. அறையைப் பூட்டிக்கொண்டு குளக்கரைக்குச் சென்றேன். சிறிது நேரம் குளத்தைப் பார்த்தபடி படுத்திருந்துவிட்டு, சிப்பந்தியிடம் சொல்லி இரண்டு துண்டு வெள்ளரி எடுத்துவரச் சொல்லி கண் மீது வைத்துக்கொண்டு மீண்டும் சாய்ந்து படுத்தேன். மிருதுளாவின் தந்தைக்கு நான் சூரிய நமஸ்காரம் செய்யக் கற்றுக்கொடுத்திருந்தேன். தவிரவும் பிராணாயாமம். மிக எளிய இந்த இரு பயிற்சிகளால் அவருக்கு இருந்த சைனஸ் தொந்தரவும் முதுகு வலியும் அவரைவிட்டு நீங்கியிருந்தன. அது ஒரு சுவாரசியமான சம்பவம். ஒருநாள் தொடர்ந்து ஏழெட்டு வியாதிகளைப் பற்றியும் அவற்றால் தான் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் சொல்லி மிகவும் வருந்திக்கொண்டிருந்தார். ‘எங்கே உங்கள் கையை நீட்டுங்கள்?’ என்று சொல்லி நாடி பிடித்துச் சில விநாடிகள் பார்த்தேன். இந்த நாடி பார்ப்பது ஒரு கலை. நாடி ஜோதிடம் போன்றதல்ல. இது வேறு. இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையைப் பொறுத்து ஒருவனின் நாடி நடை அமையும். இதயத்தின் துடிப்பும் நாடியின் துடிப்பும் பெரும்பாலும் ஒத்திருக்கும். இதில் என்னவாவது சிக்கல் இருக்குமானால் நாடி வழியே இதயம் அதை வெளிப்படுத்தும். நாடியை மணிக்கட்டில் பார்க்கலாம். கண்டத்தில் பார்க்கலாம். காலின் பெருவிரல், கணுக்காலில்கூடப் பார்க்கலாம். என் குருநாதர் கணுக்காலில்தான் எப்போதும் நாடி பிடித்துப் பார்ப்பார். அது அத்தனை உத்தமம் இல்லை என்றாலும் அவருக்கு அதுதான் சௌகரியமாக இருக்கிறது என்று சொல்லுவார். ‘விமல், நல்ல வைத்தியன் என்றால் நாடி ஒன்று போதும். சரீரத்தில் சிலேட்சுமம் ஒரு பங்கு, பித்தம் இரண்டு பங்கு, வாதம் நாலு பங்கு இருந்தால் ரோக சாத்தியம் குறைவு. இதில் மாற்றம் காணும்போது சிகிச்சை அவசியமாகிவிடும்’ என்று என்பார். எனக்கு அவரிடம் வைத்திய சாஸ்திரம் பயிலப் பெரிய விருப்பம் இல்லை. ஆனால் அவசரத்துக்கு உதவும் என்று ஒரு சிலவற்றை மட்டும் கற்றிருந்தேன். அங்காகர்ஷண நாசகாரி. ஆம்ல நாசகாரி. உதரவாத ஹரகாரி. கபஹரகாரி. ஸ்மிருதிரோதகாரி. சுரஹரகாரி. பூதி நாசகாரி. மூத்திர வர்த்தனகாரி. விஷநாசகாரி. எளிய வியாதிகளுக்கான எளிய தீர்வுகள். அவர் எனக்கு மருந்துகளை அறிமுகப்படுத்தியதேயில்லை. எல்லா வியாதிகளுக்கும் மூச்சில் உள்ளது தீர்வு என்று சொல்வார். ஆசிரமத்தில் யாருக்கு என்ன ரோகமென்றாலும் கூப்பிட்டு உட்காரவைத்துக் கணுக்காலில் நாடி பார்த்துவிட்டு மூச்சுப் பயிற்சியைத்தான் ஆரம்பிக்க வைப்பார். வியாதிக்கேற்ற பயிற்சி. ஒழுங்காகச் செய்யும்வரை விடவே மாட்டார். ஆனால் சொல்லிவைத்தாற்போல் மூன்று நான்கு தினங்களில் எப்பேர்ப்பட்ட நோயும் குணம் கண்டுவிடும். ‘குருஜி, ஞானமார்க்கத்தில் மருத்துவத்துக்கு இருக்கிற இடம் ஏன் மற்றக் கலைகளுக்கு இருப்பதில்லை?’ ‘ஞானம் என்பது பிரம்மத்தை அறிவது என்றா நினைக்கிறாய்? என்னைப் பொறுத்தவரை அது உடலை அறிவது. உடல் அழியும்போது பிரம்மம் அழிகிறது.’ ‘ஆ, அகம் பிரம்மம்!’ ‘அதுவல்ல. நீயே பிரம்மம், உனக்குள் பிரம்மம் என்பதெல்லாம் தத்துவம். நான் சொல்வது பிரம்மம் என்பது உன் புனைபெயர்.’ நான் அவரை இறுக்கிப் பிடித்துக்கொண்டதற்கு இதுதான் காரணம். தத்துவங்களுக்கு எதிர்நிலையில் ஒரு ஞான மையத்தை நிறுவும் முயற்சியில் அவர் இருந்தார். அதுதான் என்னை ஈர்த்தது. அவரது நூற்றுக்கணக்கான கடவுள்களை ஒருநாள் எனக்குக் காட்டித் தந்தபோது, அவர் மீதான பிரமிப்பும் மரியாதையும் மிகுந்தது. மனிதர்களின் விதவிதமான ரேகைகளைப் போலவே ஒவ்வொருவரின் சுவாச ஓட்டமும் வேறு வேறாக இருக்கும் என்று அவர் சொன்னார். மூச்சுக்காற்றின் போக்குவரத்தை அவர் கடவுளாகக் கருதினார். அதன் வேகம், அதன் இயல்பு, அதன் மணம், ருசி மாறுகிறபோது அவற்றை எண்களில் குறித்து வேறு வேறு கடவுள்களாகச் சொன்னார். எப்பேர்ப்பட்ட மனிதர்! ‘நீ இன்னும் சற்று உள்ளே வரலாம். உனக்கு வைத்திய சாஸ்திரம் எளிதாக அப்பியாசமாகும்’ என்று ஒருநாள் என்னிடம் சொன்னார். ‘எனக்கு டாக்டராகும் விருப்பமில்லை குருஜி. பத்து ரூபாய் செலவிட்டால் ஒரு நல்ல டாக்டரும் சிறந்த மருந்துகளும் கிடைத்துவிடும் என்றால் அது என்ன பெரிய கலை?’ ‘அப்படியா நினைக்கிறாய்?’ என்று புன்னகை செய்தவர், அப்போதுதான் எனக்கு இயேசுநாதரின் கதையைச் சொன்னார். ‘நீ பைபிள் படிக்க வேண்டும் விமல். மனித குலத்துக்கு எந்நாளும் செய்துகொண்டே இருப்பதற்கு நூறாயிரம் வைத்தியங்களின் தேவை இருந்தபடியே இருக்கிறது. தத்துவங்களும் தருக்கங்களும் தீர்க்காத சந்தேகங்களை ஒரு எளிய ஜலதோஷ நிவாரணி தீர்த்து வைத்துவிடும்.’ ‘உண்மையாகவா?’ ‘ஆம். உன் வாய்ச்சாலம் உனக்குக் கூட்டத்தைக் கட்டிப்போட்டு உட்காரவைக்கும். அதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் ஒரு கூட்டம் உன்னை நெருங்கிவர உன்னிடம் ஒரு மிட்டாயாவது இருக்க வேண்டியது அவசியம்.’ ‘இயேசுநாதரின் மிட்டாய்!’ என்றேன் சிரித்தபடி. அரைக் கணம் யோசித்துவிட்டு அவர் சொன்னார். ‘ஆம். அவர் ஒரு நல்ல மிட்டாய் வியாபாரி.’ நான் ஒரு சில மிட்டாய்களை எடுத்துக்கொண்டுதான் மைசூருக்கு வந்திருந்தேன். மிருதுளாவின் தந்தை குறிப்பிட்ட பிரமுகர், மரணத்தின் வெளி வாசலில் நின்றுகொண்டிருப்பதாகச் செய்தித் தாள்களில்கூட வர ஆரம்பித்திருந்தது. பழம்பெரும் அரசியல்வாதி. பழம்பெரும் திரைப்பட நடிகர். மூன்றோ அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலோ திருமணங்கள் புரிந்துகொண்டு குடும்பத்தைப் பல்கலைக் கழகமாக்கியிருந்தவர். அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தது எனக்குத் தெரியும். முன்பொரு காலத்தில், அவர் திருவிடந்தைக்குப் படப்பிடிப்புக்கு வந்தபோது நானேகூட அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கிறேன். ஆனால் அவர் அரசியலுக்குப் போனதெல்லாம் எனக்குத் தெரியாது. மிருதுளாவின் தந்தை சொன்னார், ‘அவர் எங்களுக்கு முக்கியம். அவர் முக்கியம் என்றால் அவர் உயிருடன் இருப்பது. குறைந்தது இன்னும் சில ஆண்டுகளுக்கு.’ நான் யோசித்தேன். தவறான எந்த நம்பிக்கையையும் இந்த மனிதருக்குத் தந்துவிடக் கூடாது என்று தோன்றியது. ‘ஐயா, நான் வைத்தியன் அல்ல. எனக்குத் தெரிந்தவையெல்லாம் பிராண சக்தியைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சில முறைகள் மட்டுமே. நான் முற்றிலும் பயின்றவனல்ல. அது என் துறையுமல்ல.’ ‘அதனாலென்ன? அவரை கவனித்துக்கொள்ளப் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்வதை அவர்கள் செய்யட்டும். நீங்கள் செய்வதை நீங்கள் செய்யுங்கள்’ என்று சொன்னார். ஒரு முதுகுவலிப் பிரச்னை தீர்ந்ததுதான் இந்த மனிதரை என்பால் எத்தனைத் தீவிர நம்பிக்கை கொள்ள வைத்துவிட்டது! ஆனால் எனக்கென்னவோ, அவர் வியாதி சொஸ்தத்துக்காக மட்டும் என்னை அந்தப் பழம்பெரும் அரசியல்வாதியிடம் அழைத்துப் போக நினைப்பதாகத் தோன்றவில்லை. வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும். பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். பிற்பகல் மூன்று மணிக்கு எங்களுக்குக் கார் வந்தது. நாங்கள் அதில் ஏறிப் புறப்பட்டோம். மைசூரைத் தாண்டி கார் தெற்கே பெங்களூர் செல்லும் சாலையில் போய்க்கொண்டிருந்தது. ‘எங்கே இருக்கிறார் அவர்?’ என்று கேட்டேன். ‘வீடு மைசூரில்தான் உள்ளது. ஆனால் இப்போது சிலகாலமாக ஸ்ரீரங்கப்பட்டணத்தில் வசிக்கிறார். அங்கே அவருக்கு இன்னொரு வீடு உண்டு.’ ‘தீவிர அரசியலில் இப்போது அவர் இல்லை அல்லவா?’ ‘ஆம். ஆனால் இன்னமும் அவர் ஒரு தீர்மானிக்கும் சக்தியாகத்தான் இருக்கிறார். எந்த ஆட்சி இங்கே வந்தாலும் அவரைக் கேட்காமல் ஒன்றும் நடக்காது.’ ‘அப்படியா?’ அவர் இன்னும் என்னென்னவோ சொன்னார். அந்த மனிதரின் அந்தரங்கக் கதைகள். அவருக்கு இருக்கும் வங்கிக் கணக்குகள். அயல் தேசத்துத் தொடர்புகள். இந்தியாவில் அவரை மட்டுமே அறிந்த சில வெளிநாட்டு ஆயுதக் குழுக்களைப் பற்றிக் கேள்விப்பட்டபோது எனக்கு வியப்பாக இருந்தது. ‘அதெல்லாமும் உண்டா?’ என்று கேட்டேன். ‘நீங்கள் நேரில் பார்த்துப் பேசுங்கள். உங்களுக்கே அனைத்தும் புரியும்’ என்று சொன்னார். நாங்கள் ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது வெளிச்சம் சாயத் தொடங்கிவிட்டிருந்தது. அவரது பங்களா ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய மாந்தோப்புக்குள் இருந்தது. காம்பவுண்டு சுவருக்கு வெளியே நின்று பார்த்தால் உள்ளே ஒரு பங்களா இருப்பதே தெரியாது. தோப்புக்குள் சுமார் எழுநூறு மீட்டர் தூரம் பயணம் செய்த பிறகுதான் வீடு கண்ணில் படும். புராதனமான பங்களா. முன்புறம் கார்கள் நிறுத்துவதற்குப் புதிதாகப் பெரிய போர்டிகோ அமைத்திருந்தார்கள். நான் வண்டியைவிட்டு இறங்கியபோது அங்கு ஏழெட்டு கார்கள் நின்றுகொண்டிருந்தன. கட்டிப்போடப்பட்ட நான்கு பெரிய நாய்கள் இருந்தன. ஏராளமான வேலைக்காரர்கள் சுற்றிக்கொண்டே இருந்தார்கள். எங்களை உள்ளே அழைத்துச் சென்று வரவேற்பரையில் அமரவைத்தவர், ஐந்து நிமிடங்கள் காத்திருக்கும்படிச் சொல்லிவிட்டு உள்ளே போனார். அங்கிருந்த பத்திரிகை ஒன்றை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன். யாரோ வெளியே வரும் சத்தம் கேட்டது. நான் பத்திரிகையில் இருந்து கண்ணை விலக்கிப் பார்த்தபோது முதலில் என்னால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் சில விநாடிகளில் கண்டுபிடித்துவிட்டேன். வினய்யைப் பார்த்து எத்தனை வருடங்களாகிவிட்டன! (தொடரும்) http://www.dinamani.com/junction

‘காலாவை விட காவிரிதான் முக்கியம்’: குமாரசாமி சந்திப்புக்கு பின் கமல்

3 months 2 weeks ago
‘காலாவை விட காவிரிதான் முக்கியம்’: குமாரசாமி சந்திப்புக்கு பின் கமல்

 

 

 
kamal

கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பெங்களூரில் இன்று சந்தித்த காட்சி

காலாவைவிட காவிரிதான் முக்கியம் என்று கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்தித்தபின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடம் கிடைக்காததையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. அங்கு முதல்வராக எச்.டி.குமாரசாமி உள்ளார்.

 

கடந்த மாதம் குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவுக்குக் கூட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரைக் கமல் ஹாசன் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்திக்க கமல் ஹாசன் இன்றுகாலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். பெங்களூருவில் முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்தித்த கமல் ஹாசன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார். அதில் குறிப்பாக காவிரி நீர் பங்கீடு தொடர்பாக அவரிடம் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்புக்குப்பின் முதல்வர் எச்.டி. குமாரசாமியும், கமல்ஹாசனும் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டி அளித்தனர். அப்போது குமாராசாமியிடம் நிருபர்கள் காவிரி விவகாரம் குறித்து பேசத் தயாராக இருக்கிறீர்களா எனக் கேட்டபோது, அதற்கு பதில் அளித்தஅவர், தமிழக அரசு தயாராக இருந்தால், நானும் தயார்.

இரு மாநிலங்களுக்கும் இடையே சுமூகமான உறவு நிலவ வேண்டும். இரு மாநிலங்களின் விவசாயிகள் நலன் கருத்தில் கொள்ளப்படும். எந்தவிதமான பிரச்சினை இருந்தாலும், இருவரும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவேண்டும். விவசாயிகள் நலன் மிகவும் முக்கியமானது. கடந்த 100 ஆண்டுகளாக நிலவும் காவிரி விவகாரத்தால், இரு மாநில விவசாயிகளும் மனச்சோர்வடைந்து இருக்கிறார்கள்.

எங்களுடைய இந்தச் சந்திப்பில், காவிரி விவகாரத்தைத் தவிர வேறு எந்த விஷயத்தையும் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. காலா திரைப்படம் ரிலீஸ் குறித்தோ, ரஜினிகாந்த் குறித்தோ பேசவில்லை. இது முழுக்க திரைத்துறை தொடர்புடையதாகும் எனத் தெரிவித்தார்.

கமல் ஹாசன் நிருபர்களிடம் கூறுகையில், நான் தமிழக மக்களின் பிரதிநிதியாக இங்கு வந்து கர்நாடக முதல்வரை காவிரிக்காகச் சந்தித்தேன். ஒரு நடிகராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ இங்கு வரவில்லை. இருமாநிலங்களுக்கு இடையே பாலமாக இருந்து செயல்பட நான் தயாராக இருக்கிறேன். குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்குத் தண்ணீர் தேவை. என்னுடைய கோரிக்கைக்கு முதல்வர் குமாரசாமி சாதகமான பதில் அளித்துள்ளார். இங்குள்ள மக்களும் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை முதல்வர் பேச்சில் இருந்து அறிய முடிந்தது.

இரு மாநில மக்களும் ஒருங்கிணைய வேண்டும் அதுதான் இப்போது முக்கியம். மக்களின் மனநிலையை அறிந்து அதன்படியே முன்நோக்கிச் செல்லவேண்டும். குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட வந்தேன். இந்தச் சந்திப்பு கூட்டணிக்கானதோ, திரைப்படம் தொடர்பானதோ இல்லை முற்றிலும் மக்களுக்கானது என்றார்.

இதன் பின்னர் நிருபர்கள், `காலா' திரைப்படம் குறித்து பேசினீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த கமல், 'காலா' கர்நாடகாவில் வெளியாவது அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை. திரைப்படங்களைவிடக் காவிரி நீர் மிக முக்கியமானது. எனவே, காவிரி குறித்து மட்டுமே எங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/india/article24079679.ece?homepage=true