Aggregator

மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும் - நிலாந்தன்

1 day 4 hours ago
மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்
Nillanthan18/11/2018

அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதுஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராகநியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும் பெண் சுபாவமும் கொண்டவராகஇருந்தார். அத்தோடு அவர் அவரது சில குறிப்பிட்ட நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலத்தில் கதைப்பவராகவும் இருந்தார்.இந்த நடவடிக்கைகள்அப்பாவை கோபத்திற்கு ஆளாக்கியது.உடனே வகுப்பாசிரியரிடம் சென்று உதவிமாணவத்தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு அடம்பிடித்திருக்கிறார்.இதனால்இரண்டு நாட்கள் பாடசாலைக்கும் செல்லவில்லையாம்.அப்பாவின் முகம்சாதாரண நிலையிலும் கோபக்காரரைப்போலவே இருந்ததால்வகுப்புத்தலைவருக்கு அவரே பொருத்தம் என கருதிய வகுப்பாசிரியர் அப்பாவின்கோரிக்கையினை நிராகரிக்க முடியாத நிலையில் உதவி மாணவத்தலைவரைபதவி நீக்கினாராம்.இந்த செய்தியை கேள்விப்பட்ட பின்னரே அப்பாபாடசாலைக்கு சென்றாராம்…..

ஜனாதிபதி அப்பா என்ற சதுரிகா சிறிசேனா வின் நூலில் இருந்து.

46165556_1850083565108903_22716778543390

சூரன் போரிலன்று வழங்கப்பட்ட தீர்ப்பு சூரனுக்கு எதிராக அமைந்துவிட்டதென்று சந்தையில் ஒரு வர்த்தகர் சொன்னார். நடந்தது சூரன் போரல்ல அது முருகனுக்கும், சூரனுக்கும் இடையிலானதல்ல. அது சூரனுக்கும் சூரனுக்கும் இடையிலானது. ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் பி.பி.சி.க்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பேட்டியை பார்த்தால் தெரியும். இனப்பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு அவர் வழுக்கி வழுக்கி பதில் சொல்கிறார். அவரிடம் துலக்கமான, திட்டவட்டமான பதில்கள் இல்லை. பெருமளவுக்கு நழுவிச் செல்லும் சமயோசிதமான பதில்களே உண்டு. அதாவது சிங்களக் கடும்போக்குவாதிகளை எதிர்த்து கொண்டு ஒரு தீர்வை முன் வைக்கும் அரசியல் திடசித்தம் அவரிடமும் இல்லை.

யாப்பு மீறப்பட்டதும், ஜனநாயக விழுமியங்கள் மீறப்பட்டதும் இதுதான் முதற் தடவை அல்ல. யாப்பு எப்பொழுது இன ஒடுக்கு முறையின் கருவியாக மாறியதோ அப்போதே அது அதன் புனிதத்தை இழந்துவிட்டது. இன ஒடுக்குமுறைதான் இலங்கை தீவின் ஜனநாயகத்தை சீரழித்தது. எனவே இன ஒடுக்கு முறைக்கு பரிகாரம் காணப்படும் போதுதான் ஜனநாயகம் செழிப்புறும், யாப்பும் மாண்புறும் அதல்லாத எல்லாச்சிறு வெற்றிகளும் மேலோட்டமானவை. தமிழ் மக்களை ஒடுக்கும் இரு பெரும் கட்சிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியை ஜனநாயக மீட்சிக்கான ஒரு புனிதப் போராக தமிழர்கள் மாறாட்டம் செய்யக்கூடாது. இரு பெரும் கட்சிகளும் தமிழ்மக்களைப் பொறுத்தவரை சூரர்கள்தான். அது சூரர்களின் நாடாளுமன்றம்தான். கடந்த வியாழனும் வெள்ளிக்கிழமையும் அதைத்தான் அவர்கள் அசிங்கமாக நிரூபித்தார்கள்

46440534_10217792880913652_8430740568316

ரணில் விக்கிரமசிங்கவின் மாமனாகிய ஜயவர்த்தன ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களை பிரயோகிக்கும் விதத்தில் யாப்பை மாற்றினார். தனக்கு கிடைத்த மிகப் பெரிய மக்கள் ஆணையை துஷ்பிரயோகம் செய்தார். மக்கள் ஆட்சிக்கெதிராக ஒரு மன்னராட்சியை ஸ்தாபிக்கும் விதத்தில் யாப்பை மாற்றியமைத்தார். ஆணைப் பெண்ணாக்க முடியாதே தவிர மற்றெல்லாவற்றையும் செய்யத்தக்க அதிகாரங்கள் நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி பதவிக்கு உண்டு என்று கூறினார். ஜயவர்த்தனவுக்குப் பின் வந்த அனைவரும் அந்த அதிகாரங்களைக் குறைப்பதாகக் கூறி வாக்குறுதியளித்தே ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால் அரசனுக்குரிய சிம்மாசனத்தில் அமர்ந்த பின் வாக்குறுதியை மறந்ததுடன் எப்படி அடுத்த தடவையும் அச்சிம்மாசனத்தில் அமர்வதென்று சிந்திக்க தொடங்கினர். பிறேமதாசவும் அப்படித்தான். சந்திரிக்காவும் அப்படித்தான். ஏன் மைத்திரியும் அப்படித்தான். ஆனால் மைத்திரியின் விடயத்தில் ஒரு சிறு வேறுபாடு உண்டு. ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களை இழப்பதற்கு தயாராக 19வது திருத்தத்தை அவர் ஏற்றுக்கொண்டார். அதன் மூலம் அவர் உள்நாட்டிலும், உலக அளவிலும் எளிமையான, சாதுவான, பேராசைகள் அதிகமற்ற ஒரு தலைவராக காட்சியளித்தார். ஆனால் அது ஒரு பொய்த்தோற்றம் என்பதையே கடந்த 26ம் திகதி அவர் நிரூபித்தார். ஆணைப் பெண்ணாக்க முடியாது என்றாலும் அதில் அமர்பவரை அதிகாரப் போதையினால் பைத்தியம் ஆக்கிவிடும் சிம்மாசனம் அது என்பதற்கு அண்மை வாரங்களாக நடந்து வரும் சம்பவங்கள் எடுத்துக்காட்டாகும்.

ஜயவர்த்தனா தனது யாப்பைப் பல தடவைகள் திருத்தினார். அதனால் அந்த யாப்பைக் குறித்து விமர்சிப்பவர்கள் பின்வருமாறு கூறுவதுண்டு. அந்த யாப்பை நூலகங்களில் ஆவணப் பகுதிக்குள் தேடக் கூடாது. பருவ இதழ் பகுதிக்குள்தான் தேட வேண்டுமென்று. ஆனால் கடந்த 26ம் திகதிக்குப் பின் மைத்திரி யாப்பை ஒரு ரொய்லற் பேப்பர்- கழிப்பறைக் கடதாசி-ஆக மாற்றி விட்டார். முடிவில் நாடாளுமன்றமே ஒரு கழிப்பறை போலாகிவிட்டது.கடந்த வியாழனும் வெள்ளியும் அங்கு நடந்தவை கழிப்பறை அரசியல்தான், இப்பொழுது யாப்பு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானதாக மாறிவிட்டது. மகிந்த வெற்றி பெரும் வரையிலும் மைத்திரி அளாப்பிக் கொண்டேயிருப்பாரா? வரும் 07ம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த யாப்பை பரிசுத்தப்படுத்துமா? இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

45917247_192954644969639_428108125012020கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட இடைக்கால தடையை ரணிலும் அவருடைய நண்பர்களும் கொண்டாடுகிறார்கள். 07ம் திகதி கிடைக்கப் போகும் தீர்ப்பும் அவர்கள் கொண்டாடத்தக்கதாக அமைந்ததால் யு.என்.பியின் ஆட்சி தொடரக்கூடும. நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பது ரணிலுக்கு கடினமாக இருக்காது என்றே தோன்றுகிறது. ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் அவர் வென்றாலும் அவரால் ஒரு ஸ்திரமான ஆட்சியை தரமுடியாது என்பதுதான். மைத்திரி ரணிலை அகற்றுவதில் குறியாயிருக்கிறார் அவரை சுமுகமாக ஆட்சி செய்ய விடமாட்டார்.

மைத்திரியோடு சேர்ந்தியங்கிய கடந்த மூன்றரை ஆண்டுகால பகுதியிலும் ரணில் விக்கிரமசிங்க துணிச்சலான முடிவுகளை எடுத்திருக்கவில்லை. குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்திற்கெதிரான நிதி குற்றச்சாட்டுக்களை துரிதமாக விசாரித்து ராஜபக்ஷக்களை ஒரு வித முற்றுகைக்குள் அல்லது தற்காப்பு நிலைக்குள் தள்ள ரணிலால் முடியவில்லை. அல்லது அவர் விரும்பவில்லை.

ஆனால் அதேசமயம் ஐ.நாவிலும் உலக அரங்கிலும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களிலிருந்து அல்லது போர் குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கை அரசை விடுவிக்கும் விடயங்களை அவர் கச்சிதமாக செய்திருக்கிறார். தமிழ் மக்கள் அனைத்துலக அளவிலான போர்க்குற்ற விசாரணை ஒன்றை கேட்கிறார்கள். ஆனால் ரணிலும், மைத்திரியும் சேர்ந்து அதை உள்நாட்டு விசாரணையாக சுருக்கி விட்டார்கள். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் குழப்பங்களில் நீதிமன்றம் யாப்பைப் பாதுகாக்குமாக இருந்தால் அது இலங்கைத்தீவின் நீதிபரிபாலன கட்டமைப்பின் அந்தஸ்தை அனைத்துலக அளவில் உயர்த்தக் கூடியது. இது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்தி விடும்.

ஜனாதிபதி யாப்பை மீறியதற்காக நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்த தரப்புக்களில் கூட்டமைப்பும் ஒன்றாகும். கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்ட இடைக்கால தடையை கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் முகநூலில் கொண்டாடினார்கள். நீதி நிலைநாட்டப்பட்டு விட்டதென்று யு.என்.பி, மனோகணேசன், முஸ்லீம் கட்சிகள் போன்ற தரப்புகளுடன் சேர்ந்து எவெற்றியைக் கொண்டாடினார்கள். ஆனால் இலங்கைத்தீவின் நீதி பரிபாலன கட்டமைப்பின் நம்பகத்தன்மை அதிகரிப்பது போல ஒரு தோற்றம் உருவாகும் பொழுது அது அனைத்துலக விசாரணைக்கான தமிழ் மக்களின் கோரிக்கையை பலவீனப்படுத்திவிடும் என்பதை கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கவனிக்கத்தவறி விட்டார்கள். இவ்வாறானதோர் பின்னணியில் வரும் 07ம் திகதி வரப்போகும் தீர்ப்பு தமிழ்த்தரப்பிற்கு எவ்வாறான புதிய வாய்ப்புக்களைத் திறக்கும்?

46447722_742265872796891_587188786898875

யு.என்.பி வென்றால் அது ஒப்பீட்டளவில் கூட்டமைப்பை விட விக்னேஸ்வரனுக்கும், கஜேந்திரகுமாருக்கும் அதிகரித்த வாய்ப்புக்களை கொடுக்கும். ஏனெனில் யு.என்.பியின் வெற்றியைப் பொறுத்தவரை கூட்டமைப்பும் ஒரு பங்காளி. எனவே யு.என்.பியின் ஆட்சியை எதிர்த்து அரசியல் செய்வதில் அவர்களுக்கு வரையறைகள் இருக்கும். ஆனால் விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் அதை செய்யலாம். அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். எதிக்கலாம். குறிப்பாக விக்னேஸ்வரன் ஒரு பலமான எதிரணியை கட்டியெழுப்புவாராக இருந்தால் அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் கூட்டமைப்பை அம்பலப்படுத்துவதன் மூலம் தனது ஆதரவு தளத்தை உறுதியாக கட்டியெழுப்பலாம்.

அதே சமயம் நீதிமன்றம் ரணிலுக்கு பாதகமான தீர்ப்பை வழங்கினால் தேர்தல்களை நடத்த வேண்டியிருக்கும். அது மகிந்தவுக்கே அதிகம் வாய்ப்பாக அமையும். ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் கொழும்பிலுள்ள படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ரணிலின் மீது அனுதாபம் அதிகரித்துள்ளது. ஆனால் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த குடும்பந்தான் இப்பொழுது யுத்த வெற்றி நாயகர்களாக போற்றப்படுகிறார்கள். எனவே ரணில் விக்கிரமசிங்க தமிழ், முஸ்லிம், மலையகக்கட்சிகள் ஏனைய சிறு கட்சிகளோடு ஒரு பலமான கூட்டை உருவாக்க வேண்டியிருக்கும்.

ஸ்திரமற்ற யு.என்.பி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வை மட்டுமல்ல. உடனடிப் பிரச்சினைகளான காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, கைதிகளின் பிரச்சினை போன்றவற்றில் கூட தீர்வுகளை காண்பது கடினம். மைத்திரியும், ரணிலும் ஒன்றாக இருந்த கடந்த மூன்றரை ஆண்டுகளில் கொண்டுவரத் தவறிய தீர்வுகளை இனி எப்படிக் கொண்டு வருவது? எனவே யு.என்.பியோடு சேர்ந்திருப்பதனால் தீர்வையும் பெற முடியாது. அதே சமயம் இணக்க அரசியலுக்கெதிரான குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனால் மறு வழமாக மகிந்த ஆட்சிக்கு வந்தால் முழுப்பழியையும் இனவாதிகளின் மீது சுமத்தி விட்டு கூட்டமைப்பானது தமிழ் மக்கள் முன் வெறும் கையோடு வந்து நிற்கும். தனது அரை இணக்க அரசியலின் தோல்வி மற்றும் தான் என்றைக்குமே நடாத்தியிராத ராஜதந்திரப் போரின் தோல்வி போன்ற எல்லாவற்றுக்குமான பழியை அவர்கள் சிங்கள இனவாதிகள் மீது சுமத்துவார்கள். இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாகத் தாங்களும் தலை கீழாக நின்று தீவிரமான எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பார்கள். இதனால் ஏற்கனவே எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் ஆதரவு தளத்தை கூட்டமைப்பும் பங்கு போடும்.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான தமிழ் மிதவாத பாரம்பரியத்தில் எதிர்ப்பு அரசியல்தான் ஒரு வாக்களிப்பு அலையை தோற்றுவித்திருக்கிறது. தேர்தல் களங்களில் தமிழ் இனமான அலை எனப்படுவது அதிக பட்சம் எதிர்ப்பு அரசியல் தடத்திற்குரியதுதான். எனவே ஒப்பீட்டளவில் ரணில் வருவதை விடவும் மகிந்த வந்தால் கூட்டமைப்பிற்கு அனுகூலம் அதிகம். சில சமயம் மகிந்த ஓர் உறுதியான ஆட்சியை அமைப்பதன் மூலம் உடனடிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைத் தர முடியும். ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தர முடியாது. ஏனெனில் அவர் தனது சொந்த வெற்றியின் கைதியாவார். ஆட்சிக்கவிழ்ப்பின் பின் அவர் நடத்திய கூட்டமொன்றில் பின்னணியில் காணப்படும் தேசியக்கொடியானது தமிழ் மக்களுக்குக் கூரான ஒரு செய்தியைத் தருகிறது. அக்கொடியில் சிறுபான்மை மக்களைக் குறிக்கும் சின்னங்கள் அகற்றப்பட்டுள்ளன.

எனவே மேற்கண்டவற்றை தொகுத்து பார்த்தால் கொழும்பில் இடம்பெற்று வரும் குழப்பங்கள் எப்படிப்பட்ட திருப்பங்களை அடைந்தாலும் அதன் மூலம் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. யாப்பை காப்பாற்றினோம். ஜனநாயகத்தை காப்பாற்றினோம் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு ஒரு மாய உலகத்துள் உழல்வதை விடவும் இலங்கை அரசுக்கட்டமைப்பை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தக்கூடிய ஒரு தருணமாக இதைப் பயன்படுத்த வேண்டும். தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை சாதகமாகப் பயன்படுத்தி அப்படிப்பட்ட ஓர் அனைத்துலக அபிப்பிராயத்தை உருவாக்கலாம். இந்த யாப்புக்குள் நின்று ஒரு தீர்வைப் பெற முடியாதென்பதற்கும் சிங்கள தலைவர்களை ஏன் நம்பக் கூடாதென்பதற்கும் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். ஒரு மூன்றாம் தரப்பின் தலையீடின்றி இலங்கை தீவில் மூன்று சமூகங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வைப் பெற முடியாது என்பதற்கு நடப்பு நிலவரங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். நிலைமாறு கால நீதியை ஏன் இலங்கைத்தீவில் வெற்றிகரமாக ஸ்தாபிக்க முடியாது என்பதற்கும் நடப்பு நிலவரங்கள் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.

இலங்கைத்தீவின் அரச கட்டமைப்பையும், யாப்பு பாரம்பரியத்தையும் நாடாளுமன்ற பாரம்பரியத்தையும் மிளகாய்த் தூள் ஜனநாயகத்தையும் அம்பலப்படுத்துவதற்கு இது போன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தத்தக்க தமிழ்த் தலைவர்களே தேவை. இன ஒடுக்கு முறையிலிருந்தே இலங்கைத் தீவின் ஜனநாயகப் பரம்பரை சீரழியத் தொடங்கியது என்பதை எடுத்துக் கூறத்தக்க தமிழ் தலைவர்களே இப்பொழுது தேவை. இரண்டு சூரர்களுக்கிடையில் ஒரு சூரனை முருகனாக்கும் அல்லது மண்டேலாக்கும் அரை இணக்க அரசியலானது வெற்றி பெறப் போவதில்லை. இரண்டுமே சூரர்கள்தான் என்று உலக சமூகத்திற்கு எடுத்துக்கூறவல்ல தலைவர்களே இப்பொழுது தேவை. அப்படிப்பட்ட தலைவர்கள் அரங்கில் யார் உண்டு?

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்து போன தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்ப சொன்னார். ஈழத்தில் ஒரு தலைமைத்துவ வெற்றிடம் நிலவுகிறதென்பதே அது. விக்னேஸ்வரனையும் முன்னால் வைத்துக் கொண்டே அவர் அதைச் சொன்னார். மேற் சொன்ன காரியங்களை செய்யத்தக்க அரசியல் திடசித்தமும், தீட்சண்ணியமும் தீர்க்கதரிசனமும் மிக்க ஒரு தலைவரே அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும்.


46342161_998461997031514_644448426312230

 

http://www.nillanthan.com/time-line/அரசியற்-பத்தி/3159/

 

மாலைதீவின் புதிய ஜனநாயகத்தின் மீது விரும்பத்தகாத நிழலை வீழ்த்தும் இலங்கை அரசியல் நெருக்கடி

1 day 4 hours ago
மாலைதீவின் புதிய ஜனநாயகத்தின் மீது விரும்பத்தகாத நிழலை வீழ்த்தும் இலங்கை அரசியல் நெருக்கடி - பிரமா ஷெலானி இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் அரசியல் நெருக்கடியை இந்தியா அக்கறையுடன் அவதானித்துக்கொண்டிருக்கும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மது சோலீயின் பதவியேற்பு வைபவத்தில் ( நவம்பர் 17) கலந்துகொள்வதற்காக மாலே சென்றிருந்தார். மோடியின் இந்த விஜயம் இரு மாதங்களுக்கு முன்னர் தேர்தலில் அதிர்ச்சிகரமான தோல்வியடைந்த எதேச்சாதிகார ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு அதிகாரத்தை புதியவரிடம் கையளிப்பதைத் தவிர வேறுவழி கிடையாது என்பதை உறுதிப்படுத்தியது. இந்தியா இராணுவரீதியில் தலையீடு செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் உட்பட ஜனநாயக நாடுகளிடமிருந்து வந்த ஒருங்கிணைந்த நெருக்குதல்கள் மாலைதீவு ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்த உதவியிருக்கின்றன.ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு சுதந்திரமானதாகவும் நேரமையானதாகவும் அமையாவிட்டால் தடைகள் விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்திய அதேவேளை, ' பொருத்தமான நடவடிக்கைகள் ' எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை செய்திருந்தது.தேரதல் முடிவுகள் தனக்கு எதிராக அமைந்திருந்த போதிலும், தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு யாமீன் தயங்கியபோது ' மக்களின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கவேண்டும் ' என்று வாஷிங்டன் அவரிடம் அறிவுறுத்தியது. முக்கியமான சகல எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் சிறையில் அடைத்து அல்லது வெளிநாடு சென்று அஞ்ஞாதவாசம் செய்ய நிர்ப்பந்தித்து யாமீன் தனக்கு அனுகூலமான முறையில் தேர்தல் அமையக்கூடியதாக நிலைவரங்களை மாற்றியமைத்திருந்தார்.நீதியரசர்களைச் சிறைபிடித்து உச்சநீதிமன்றத்தையும் பலவீனப்படுத்தியிருந்தார். ஆனால், பெருமளவுக்கு அறியப்படாதவரான எதிரணியின் பொது வேட்பாளர் சோலீயிடம் யாமீன் கண்ட தோல்வி பொதுமக்கள் மத்தியில் அவரது சர்வாதிகார ஆட்சி மீது எந்தளவுக்கு வெறுப்பு வளர்ந்திருந்தது என்பதை வெளிக்காட்டியது. எதேச்சாதிகார ஆட்சியாளர்கள் தேர்தல்களைத் தங்களுக்கு வசதியான முறையில் அமையக்கூடியதாக மாற்றுவதற்கு சூழ்ச்சித்தனமாக முயற்சிக்காத பட்சத்தில் வாக்காளர்களின் எதிர்ப்பை அவர்களால் ஒருபோதும் கட்டுப்படுத்தவே முடியாது. இதை 2015 ஜனவரியில் இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இவ்வருடம் மே மாதத்தில் மலேசியாவில் பிரதமர் நஜீப் ரசாக்கும் கண்ட தோல்விகள் நிரூபித்தன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடுகளினால் இலங்கை இப்போது அரசியல் நெருக்கடிக்குள் மூழ்கியிருப்பது ஒரு முரண்நகையாகவுள்ளது. அவரது நடவடிக்கைகள் ராஜபக்சவின் எதேச்சாதிகாரப் பாணியில் அமைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அத்துமீறல்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கும் அரசியலமைப்பு மாற்றத்தைக்கொண்டுவருவதற்குமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சிறிசேன தற்போது தனது பதவியின் அதிகாரங்களை படுமோசமாகத் துஷ்பிரயோகம் செய்துகொண்டிருக்கிறார்.ஜனநாயகத்தை முற்றுகைக்குள்ளாக்கியிருந்த பத்து வருடகால ஆட்சியை நடத்திய ராஜபக்சவுடன் சிறிசேன தனது மட்டுமீறிய அதிகார ஆசைக்காக எதையும் தாரைவார்க்கத் தயங்காத உடன்பாடொன்றை செய்துகொண்டுள்ளார் என்பது வெளிப்படையானது. இலங்கையில் சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கூட்டணி கண்டிருக்கும் வீழ்ச்சி மாலைதீவின் ஐக்கிய கூட்டணிக்கு உண்மையிலேயே ஒரு முன்கூட்டிய எச்சரிக்கையாகும்.உயர்பதவிக்குத் தெரிவுசெய்யப்படுபவர்கள் அரசியலமைப்புச் சட்டவிதிகளை மதித்து நடக்காத பட்சத்தில், தங்களது கூட்டணியின் பங்காளிகளின் விருப்பு வெறுப்புகளையும் உணர்ந்து விட்டுக்கொடுத்துச் செயற்படாத பட்சத்தில் ஜனநாயக மீட்சி தலைகீழாக மாற்றப்படக்கூடிய சூழ்நிலை உருவாவதைத் தவிர்க்க இயலாது.மாலைதீவில் சோலீயின் வெற்றி எதிர்க்கட்சிகளின் ஐக்கியத்தினாலேயே சாத்தியமாக்கப்பட்டது.யாமீனின் கொடுங்கோன்மை ஆட்சிக்கு முடிவுகட்டவேண்டுமென்ற அவசியம் மாத்திமே எதிரணிக் கட்சிகளிடையே ஐக்கியத்தைக்கொண்டுவந்தது. சோலீயின் வெற்றியைச் சாத்தியமாக்க உதவியவர்களில் முன்னாள் ஜனாதிபதிகளான மௌமூன் அப்துல் கையூமும் முஹம்மது நஷீட்டும் முக்கியமானவர்கள். கையூம் முன்னதாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.மாலைதீவில் முதன்முறையக நடந்த பலகட்சித் தேர்தலில் கையூமைத் தோற்கடித்து ஜனாதிபதியாகப் பதவியேற்றவர் நஷீட். ஆனால் 2012 ஆம் ஆண்டில் கையூமுக்கு விசுவாசமான சக்திகள் உட்பட இஸ்லாமியவாத குழுக்களினால் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டதை அடுத்து துப்பாக்கி முனையில் நஷீட் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். கடந்த காலத்தின் இந்த நிகழ்வுப்போக்குகளை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது யாமீனுக்குப் பின்னரான மாலைதீவின் அரசியல் உறுதிப்பாடும் ஜனநாயக மேம்பாடும் சோலீயை வெற்றிபெற வைத்த எதிரணி அரசியல் கட்சிகள் அவரின் பின்னால் தொடர்ந்தும் ஐக்கியமாக அணிதிரண்டு நிற்பதில் காண்பிக்கக்கூடிய மனவுறுதியிலேயே தங்கியிருக்கிறது. தீவுக்குரிய கலாசாரங்கள் மற்றும் அரசியல் கூட்டணிகளை மாற்றிக்கொள்ளும் போக்கு உட்பட பல விடயங்களில் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையே பொதுத்தன்மை காணப்படுகிறது.மாலைதீவின் உத்தியோகபூர்வ மொழியான திவெஹி சிங்களத்தின் ஒரு கிளை மொழியாகும்.இலங்கையின் குழப்பகரமான அரசியல் திருப்ப நிகழ்வவுகள் மாலைதீவின் புதிய ஜனநாயகத் தொடக்கத்தின் மீது விரும்பத்தகாத ஒரு நிழலை வீழ்த்துகிறது. இந்தியாவின் கடல்சார் அயல்நாடுகளில் ஜனநாயக நிறுவனங்களுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் உலகின் மிகப்பெரிய எதேச்சாதிகார நாடான சீனாவின் அதிகரிக்கும் வகிபாகம் மற்றும் செல்வாக்கில் இருந்தே வருகிறது.அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது தொடக்கம் தங்களுடன இணங்கிப்போகின்ற தலைவர்களையும் அரசாங்கங்களையும் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றுவது வரை சீன ஆட்சியாளர்கள் ஜனநாயக விரோதப் போக்குகளை உற்சாகப்படுத்திவருகிறார்கள். தன்னைக் கொலைசெய்வதற்கான சதித்திட்டத்தின் பின்னணியில் இந்திய புலனாய்வு நிறுவனமான ' றோ ' இருப்பதாக அண்மையில் அமைச்சரவைக் கூட்டமொன்றில் கூறிய சிறிசேன ( அவர் ' றோ' என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று ஜனாதிபதி செயலகம் பின்னர் மறுப்பு வெளியிட்டது), அதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தான் விரும்புகிற எந்தவொரு திட்டத்துக்கும் சுமார் 30 கோடி டொலர்களை ' நன்கொடையாக' தருவதாக சீன ஜனாதிபதி சி ஜின்பிங் உறுதியளித்ததாக பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலனறுவையில் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலையைச் சீனா நிர்மாணித்துவருகிறது. நிதியுதவியையும் கடன்களையும் பெருமளவில் வழங்கி இலங்கையை ஒரு பணயக்கைதி போன்று வைத்திருப்பதற்கான முயற்சியின் மூலமாக சீனா அதன் புவிசார் கேந்திரமுக்கியத்துவ இலக்குகளை மேம்படுத்துவதில் எவ்வாறு நாட்டம் காட்டியிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சீனாவின் கடன்பொறியில் அகப்படுவதிலிருந்து எவ்வாறு தப்பித்துக்கொள்வது என்பதே புதிய ஜனாதிபதி சோலீ தலைமையிலான மாலைதீவு எதிர்நோக்கப்போகின்ற முக்கியமான சவாலாகும் .தனது பாதுகாவலரான சீனாவின் கடன்பொறிக்குள் மாலைதீவை ஆழமாக மாட்டிவிட்ட யாமீன் தனக்கு வந்த எதிிர்ப்புகளைச் சமாளிக்க ஜனநாயகத்தி்ன் குரல்வளையை நசுக்கினார்.சீனாவிடம் மாலைதீவு பெற்றிருக்கும் கடன் அந்நாட்டின் வருடாந்த வருவாயின் இரண்டு மடங்கையும் விட அதிகமானதாகும்.சீனாவின் செல்வாக்கு வலயத்திற்குள் மாலைதீவை ஆழமாகக் கொண்டுசெல்லும் முயற்சியாக யாமீன் மக்கள் வசிக்காத பல தீவுகளை ஒளிவுமறைவாக பெய்ஜிங்கிற்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார். முதலாவது உலகமகா யுத்தம் முடிவுக்கு வந்த தினத்தின் ( நவம்பர் 11) நூற்றாண்டு கடந்தவாரம் அனுஷ்டிக்கப்பட்டது.நிலப் பிராந்தியங்களையும் வளங்களையும் சார்பு அரசுகளையும் கைக்குள் போட்டுக்கொள்வதற்காக ஐரோப்பிய வல்லரசுகளிடையே ஏற்பட்ட போட்டாபோட்டியே அந்த உலக யுத்தத்தை மூளவைத்தது.இன்று சீனா அதே நோக்கத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.இந்தியாவின் கடல்சார் அயல்நாடுகளில் அதிகரித்துவரும் சீன ஊடுருவல் இந்தப் பிராந்தியத்தை பாதுகாப்பற்றதாகவும் உறுதிப்பாடு இல்லாததாகவும் வைத்திருக்கப்போகிறது. - (இந்துஸ்தான் டைம்ஸ்) http://www.virakesari.lk/article/44700

மாலைதீவின் புதிய ஜனநாயகத்தின் மீது விரும்பத்தகாத நிழலை வீழ்த்தும் இலங்கை அரசியல் நெருக்கடி

1 day 4 hours ago
மாலைதீவின் புதிய ஜனநாயகத்தின் மீது விரும்பத்தகாத நிழலை வீழ்த்தும் இலங்கை அரசியல் நெருக்கடி  

- பிரமா ஷெலானி

இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் அரசியல் நெருக்கடியை இந்தியா அக்கறையுடன் அவதானித்துக்கொண்டிருக்கும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மது சோலீயின் பதவியேற்பு  வைபவத்தில் ( நவம்பர் 17) கலந்துகொள்வதற்காக மாலே சென்றிருந்தார். மோடியின் இந்த விஜயம் இரு மாதங்களுக்கு முன்னர் தேர்தலில் அதிர்ச்சிகரமான தோல்வியடைந்த எதேச்சாதிகார ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு அதிகாரத்தை புதியவரிடம் கையளிப்பதைத் தவிர வேறுவழி கிடையாது என்பதை உறுதிப்படுத்தியது.

04.jpg

இந்தியா இராணுவரீதியில் தலையீடு செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் உட்பட ஜனநாயக நாடுகளிடமிருந்து வந்த ஒருங்கிணைந்த நெருக்குதல்கள் மாலைதீவு ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்த உதவியிருக்கின்றன.ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு சுதந்திரமானதாகவும் நேரமையானதாகவும் அமையாவிட்டால் தடைகள் விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்திய அதேவேளை, ' பொருத்தமான நடவடிக்கைகள் ' எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை செய்திருந்தது.தேரதல் முடிவுகள் தனக்கு எதிராக அமைந்திருந்த போதிலும், தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு யாமீன் தயங்கியபோது ' மக்களின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கவேண்டும் ' என்று வாஷிங்டன் அவரிடம் அறிவுறுத்தியது.

முக்கியமான சகல எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் சிறையில் அடைத்து அல்லது வெளிநாடு சென்று அஞ்ஞாதவாசம் செய்ய நிர்ப்பந்தித்து யாமீன் தனக்கு அனுகூலமான முறையில் தேர்தல் அமையக்கூடியதாக நிலைவரங்களை மாற்றியமைத்திருந்தார்.நீதியரசர்களைச்  சிறைபிடித்து உச்சநீதிமன்றத்தையும் பலவீனப்படுத்தியிருந்தார். ஆனால், பெருமளவுக்கு அறியப்படாதவரான எதிரணியின் பொது வேட்பாளர் சோலீயிடம் யாமீன் கண்ட தோல்வி பொதுமக்கள் மத்தியில் அவரது சர்வாதிகார ஆட்சி மீது எந்தளவுக்கு வெறுப்பு வளர்ந்திருந்தது என்பதை வெளிக்காட்டியது. எதேச்சாதிகார ஆட்சியாளர்கள் தேர்தல்களைத் தங்களுக்கு வசதியான முறையில் அமையக்கூடியதாக மாற்றுவதற்கு சூழ்ச்சித்தனமாக முயற்சிக்காத பட்சத்தில் வாக்காளர்களின் எதிர்ப்பை அவர்களால் ஒருபோதும் கட்டுப்படுத்தவே முடியாது. இதை 2015 ஜனவரியில் இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இவ்வருடம் மே மாதத்தில் மலேசியாவில் பிரதமர் நஜீப் ரசாக்கும் கண்ட தோல்விகள் நிரூபித்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடுகளினால் இலங்கை இப்போது அரசியல் நெருக்கடிக்குள் மூழ்கியிருப்பது ஒரு முரண்நகையாகவுள்ளது. அவரது நடவடிக்கைகள் ராஜபக்சவின் எதேச்சாதிகாரப் பாணியில் அமைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அத்துமீறல்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கும் அரசியலமைப்பு மாற்றத்தைக்கொண்டுவருவதற்குமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சிறிசேன தற்போது தனது பதவியின் அதிகாரங்களை படுமோசமாகத் துஷ்பிரயோகம்  செய்துகொண்டிருக்கிறார்.ஜனநாயகத்தை முற்றுகைக்குள்ளாக்கியிருந்த பத்து  வருடகால ஆட்சியை நடத்திய ராஜபக்சவுடன்  சிறிசேன தனது மட்டுமீறிய அதிகார ஆசைக்காக எதையும் தாரைவார்க்கத் தயங்காத உடன்பாடொன்றை செய்துகொண்டுள்ளார் என்பது வெளிப்படையானது.

இலங்கையில் சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கூட்டணி கண்டிருக்கும் வீழ்ச்சி மாலைதீவின் ஐக்கிய கூட்டணிக்கு உண்மையிலேயே ஒரு முன்கூட்டிய எச்சரிக்கையாகும்.உயர்பதவிக்குத் தெரிவுசெய்யப்படுபவர்கள் அரசியலமைப்புச் சட்டவிதிகளை மதித்து நடக்காத பட்சத்தில், தங்களது கூட்டணியின் பங்காளிகளின் விருப்பு வெறுப்புகளையும் உணர்ந்து விட்டுக்கொடுத்துச் செயற்படாத பட்சத்தில் ஜனநாயக மீட்சி தலைகீழாக மாற்றப்படக்கூடிய சூழ்நிலை உருவாவதைத் தவிர்க்க இயலாது.மாலைதீவில் சோலீயின் வெற்றி எதிர்க்கட்சிகளின் ஐக்கியத்தினாலேயே சாத்தியமாக்கப்பட்டது.யாமீனின் கொடுங்கோன்மை ஆட்சிக்கு முடிவுகட்டவேண்டுமென்ற அவசியம் மாத்திமே எதிரணிக் கட்சிகளிடையே ஐக்கியத்தைக்கொண்டுவந்தது.

சோலீயின் வெற்றியைச் சாத்தியமாக்க உதவியவர்களில் முன்னாள் ஜனாதிபதிகளான மௌமூன் அப்துல் கையூமும் முஹம்மது நஷீட்டும் முக்கியமானவர்கள். கையூம் முன்னதாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.மாலைதீவில் முதன்முறையக நடந்த பலகட்சித் தேர்தலில் கையூமைத் தோற்கடித்து ஜனாதிபதியாகப் பதவியேற்றவர் நஷீட். ஆனால் 2012 ஆம் ஆண்டில் கையூமுக்கு விசுவாசமான சக்திகள் உட்பட இஸ்லாமியவாத குழுக்களினால் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டதை அடுத்து துப்பாக்கி முனையில் நஷீட் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். கடந்த காலத்தின் இந்த நிகழ்வுப்போக்குகளை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது யாமீனுக்குப் பின்னரான மாலைதீவின் அரசியல் உறுதிப்பாடும் ஜனநாயக மேம்பாடும்  சோலீயை வெற்றிபெற வைத்த எதிரணி அரசியல் கட்சிகள் அவரின் பின்னால் தொடர்ந்தும் ஐக்கியமாக அணிதிரண்டு நிற்பதில் காண்பிக்கக்கூடிய மனவுறுதியிலேயே தங்கியிருக்கிறது.

தீவுக்குரிய கலாசாரங்கள் மற்றும் அரசியல் கூட்டணிகளை மாற்றிக்கொள்ளும் போக்கு உட்பட பல விடயங்களில் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையே பொதுத்தன்மை காணப்படுகிறது.மாலைதீவின் உத்தியோகபூர்வ மொழியான திவெஹி சிங்களத்தின் ஒரு கிளை மொழியாகும்.இலங்கையின் குழப்பகரமான அரசியல் திருப்ப நிகழ்வவுகள் மாலைதீவின் புதிய ஜனநாயகத் தொடக்கத்தின் மீது விரும்பத்தகாத ஒரு நிழலை வீழ்த்துகிறது.

இந்தியாவின் கடல்சார் அயல்நாடுகளில் ஜனநாயக நிறுவனங்களுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் உலகின் மிகப்பெரிய எதேச்சாதிகார நாடான சீனாவின் அதிகரிக்கும் வகிபாகம் மற்றும் செல்வாக்கில் இருந்தே வருகிறது.அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது தொடக்கம் தங்களுடன இணங்கிப்போகின்ற தலைவர்களையும் அரசாங்கங்களையும் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றுவது வரை சீன ஆட்சியாளர்கள் ஜனநாயக விரோதப் போக்குகளை உற்சாகப்படுத்திவருகிறார்கள்.

தன்னைக் கொலைசெய்வதற்கான சதித்திட்டத்தின் பின்னணியில் இந்திய புலனாய்வு நிறுவனமான ' றோ ' இருப்பதாக அண்மையில் அமைச்சரவைக் கூட்டமொன்றில் கூறிய சிறிசேன ( அவர்  ' றோ' என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று  ஜனாதிபதி செயலகம் பின்னர் மறுப்பு வெளியிட்டது), அதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தான் விரும்புகிற எந்தவொரு திட்டத்துக்கும் சுமார் 30 கோடி டொலர்களை ' நன்கொடையாக' தருவதாக சீன ஜனாதிபதி சி ஜின்பிங் உறுதியளித்ததாக பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலனறுவையில் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலையைச் சீனா நிர்மாணித்துவருகிறது.

நிதியுதவியையும் கடன்களையும் பெருமளவில் வழங்கி இலங்கையை ஒரு பணயக்கைதி போன்று வைத்திருப்பதற்கான முயற்சியின் மூலமாக சீனா அதன் புவிசார் கேந்திரமுக்கியத்துவ இலக்குகளை மேம்படுத்துவதில் எவ்வாறு நாட்டம் காட்டியிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சீனாவின் கடன்பொறியில் அகப்படுவதிலிருந்து எவ்வாறு தப்பித்துக்கொள்வது என்பதே புதிய ஜனாதிபதி சோலீ தலைமையிலான மாலைதீவு எதிர்நோக்கப்போகின்ற முக்கியமான சவாலாகும் .தனது பாதுகாவலரான சீனாவின் கடன்பொறிக்குள் மாலைதீவை ஆழமாக மாட்டிவிட்ட யாமீன் தனக்கு வந்த எதிிர்ப்புகளைச் சமாளிக்க ஜனநாயகத்தி்ன் குரல்வளையை நசுக்கினார்.சீனாவிடம் மாலைதீவு பெற்றிருக்கும் கடன் அந்நாட்டின் வருடாந்த வருவாயின் இரண்டு மடங்கையும் விட அதிகமானதாகும்.சீனாவின் செல்வாக்கு வலயத்திற்குள் மாலைதீவை ஆழமாகக் கொண்டுசெல்லும் முயற்சியாக யாமீன் மக்கள் வசிக்காத பல தீவுகளை ஒளிவுமறைவாக  பெய்ஜிங்கிற்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார்.

முதலாவது உலகமகா யுத்தம் முடிவுக்கு வந்த தினத்தின் ( நவம்பர் 11) நூற்றாண்டு கடந்தவாரம் அனுஷ்டிக்கப்பட்டது.நிலப் பிராந்தியங்களையும் வளங்களையும் சார்பு அரசுகளையும் கைக்குள் போட்டுக்கொள்வதற்காக ஐரோப்பிய வல்லரசுகளிடையே ஏற்பட்ட போட்டாபோட்டியே அந்த உலக யுத்தத்தை மூளவைத்தது.இன்று சீனா அதே நோக்கத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.இந்தியாவின் கடல்சார் அயல்நாடுகளில் அதிகரித்துவரும் சீன ஊடுருவல் இந்தப் பிராந்தியத்தை பாதுகாப்பற்றதாகவும் உறுதிப்பாடு இல்லாததாகவும் வைத்திருக்கப்போகிறது.

 - (இந்துஸ்தான் டைம்ஸ்)

 

http://www.virakesari.lk/article/44700

 

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

1 day 4 hours ago
57 ஓட்டத்தினால் தோல்வியை தழுவி தொடரை இழந்தது இலங்கை இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பாமன இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிக்காக 336 ஓட்டங்களை குவித்தது. இதன் மூலம் இலங்கை அணி 46 ஓட்டத்துடன் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 346 ஓட்டங்களை குவித்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 301 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 301 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவின் போது 65.2 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட்டினை இழந்து 226 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனையடுத்து போட்டியின் ஐந்தாம் நாளான இன்று 226 ஓட்டங்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 74 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 243 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 57 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது. அணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் 88 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 57 ஓட்டங்களையும், ரோஷான் சில்வா 37 ஓட்டத்தையும், திக்வெல்ல 35 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேக் 5 விக்கெட்டுக்களையும், மொய்ன் அலி 4 விக்கெட்டுக்களையும், அடீல் ரஷித் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனால் மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வவரும் 23 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. http://www.virakesari.lk/article/44705

இந்தியப் பிரதமரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக எழுத்தாளர் வரவரராவ் கைது :

1 day 5 hours ago
இந்தியப் பிரதமரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக எழுத்தாளர் வரவரராவ் கைது : November 18, 2018 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்பட்டு ஹைதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் பீமா கோரே காலில் நடைபெற்ற சாதிய வன்முறை தொடர்பாகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஹைதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ் உள்ளிட்ட கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, வெர்னான் கன்சல்லெஸ் முதலான ஐந்துபேரை மகாராஷ்டிரா மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இதனால், எழுத்தாளர் வரவரராவை கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி முதல் ஹைதராபாத் அசோக்நகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. தம் மீதான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்யுமாறுகோரி வரவரராவ் புனே நீதிமன்றத்தில் இவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். எனினும் குறித்த மனுவை விசாரித்த புனே நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள வரவரராவ் வீட்டுக்கு நேற்று இரவு சென்ற காவல்துறையினர் வீட்டு காவலில் இருந்த வரவரராவை கைது செய்துள்ளனர். பின்னர் காந்தி அரச வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றதுடன் நள்ளிரவு ஹைதராபாத்தில் இருந்து புனேயிற்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இன்றைய தினம் இன்று புனே செசன்ஸ் நீதிமன்றில் அவரை காவல்துறையினர் முன்னிலைப்படுத்துகின்றனர். http://globaltamilnews.net/2018/103717/

யாழ். பண்ணை பகுதியில் ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்பு

1 day 5 hours ago
யாழ். பண்ணை பகுதியில் ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்பு November 18, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். பண்ணை பகுதியில் இருந்து ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்கபட்டு உள்ளன. யாழ்ப்பாண காவல்துறையினருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டன. பண்ணை பகுதியில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்படும் பகுதியில் இருந்து ஒரு தொகை சி – 4 வகை வெடி மருந்துக்களை தாம் மீட்டதாகவும் , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். http://globaltamilnews.net/2018/103706/

யாழ். பண்ணை பகுதியில் ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்பு

1 day 5 hours ago
யாழ். பண்ணை பகுதியில் ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்பு

November 18, 2018


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

யாழ். பண்ணை பகுதியில் இருந்து ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்கபட்டு உள்ளன. யாழ்ப்பாண காவல்துறையினருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டன.

பண்ணை பகுதியில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்படும் பகுதியில் இருந்து ஒரு தொகை சி – 4 வகை வெடி மருந்துக்களை தாம் மீட்டதாகவும் , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

http://globaltamilnews.net/2018/103706/

நாடாளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு!

1 day 5 hours ago
நாடாளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு! நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அத்துடன், கடந்த வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் மருத்துவ அறிக்கைகளையும் பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த அணியினர், நேற்று முந்தினம் சபாநாயகரின் அக்ராசனத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியதுடன், சபை அமர்விற்கும் இடமளிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் அக்ராசனத்தில் அமர்ந்திருந்தார். அத்துடன், சபாநாயகரின் பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்த பொலிஸார் மீதும் அவர்கள், சபையில் இருந்த தளபாடங்கள் மற்றும் புத்தகங்களால் வீதி தாக்குதல்களை நடாத்தியிருந்தனர். இந்த தாக்குதல்களில், 16 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர். இதுதவிர, மஹிந்த தரப்பினர் மிளகாய்த்தூள் கலந்த நீர் பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தனர். இந்த தாக்குதல்கள் காரணமாக பொலிஸார், மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மலிக் சமரவிக்கிரம மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நாடாளுமன்ற-மோதல்-சம்பவம்/

நாடாளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு!

1 day 5 hours ago
llllllllll-720x450.jpg நாடாளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு!

நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன், கடந்த வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் மருத்துவ அறிக்கைகளையும் பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த அணியினர், நேற்று முந்தினம் சபாநாயகரின் அக்ராசனத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியதுடன், சபை அமர்விற்கும் இடமளிக்கவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் அக்ராசனத்தில் அமர்ந்திருந்தார்.

அத்துடன், சபாநாயகரின் பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்த பொலிஸார் மீதும் அவர்கள், சபையில் இருந்த தளபாடங்கள் மற்றும் புத்தகங்களால் வீதி தாக்குதல்களை நடாத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல்களில், 16 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர். இதுதவிர, மஹிந்த தரப்பினர் மிளகாய்த்தூள் கலந்த நீர் பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதல்கள் காரணமாக பொலிஸார், மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மலிக் சமரவிக்கிரம மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாடாளுமன்ற-மோதல்-சம்பவம்/

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை – சபாநாயகர்

1 day 5 hours ago
ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை – சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார். இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில், கட்சிகளுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே குறித்த விசேட கூட்டத்தில் சபாநாயகர் பங்கேற்கமாட்டார் என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதேவேளை, குறித்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என முன்னதாக மக்கள் விடுதலை முன்னணியும் அறிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஜனாதிபதியுடனான-சந்திப்-3/

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை – சபாநாயகர்

1 day 5 hours ago
president-720x450.jpg ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை – சபாநாயகர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில், கட்சிகளுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே குறித்த விசேட கூட்டத்தில் சபாநாயகர் பங்கேற்கமாட்டார் என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என முன்னதாக மக்கள் விடுதலை முன்னணியும் அறிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஜனாதிபதியுடனான-சந்திப்-3/

தமிழர் விளையாட்டுகள் - உறியடித்தல்

1 day 5 hours ago
பண்டைய தமிழனின் அதி அற்புதமான கலை ..! எத்தனை பேருக்கு இதை தெரியும் ..? தமிழன் கண்டு பிடித்ததை எழுதி வைத்து இருந்தால், இன்று உலகம் அவன் காலடியில்

அப்புக்குட்டி 

1 day 5 hours ago
அப்புக்குட்டி முன்பொரு காலத்தில் ஒரு புல்லாங்குழல் தயாரிப்பவர் தன் மனைவியுடனும், தனது ஏழு மகன்களுடனும் வாழ்ந்து வந்தார். அவ்வேழு மகன்களில் முதல் மகனுக்குப் பத்து வயது, கடைசி மகனுக்கு 7 வயது. அந்தக் குடும்பம் ஏழ்மையில் வாழ்ந்து வந்தது. அதனால் அந்த ஏழு மகன்களுக்கும் உணவளிப்பது கடினமாக இருந்தது. கடைசி மகன் மிகவும் பலவீனமாக இருந்தான். அவனால் சரியாகப் பேசவும் முடியாது. அதனால் அவனை அனைவரும் கேலி செய்து மகிழ்ந்தனர். அவன் பிறந்த பொழுது மிகவும் சிறியவனாக, அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அப்பு கமலைவிட குள்ளமாக ஒருவருடைய கட்டைவிரல் அளவிற்குதான் இருந்தான். அதனால் அவனை அனைவரும் அப்புக்குட்டி என்றே அழைத்தனர். அதனையும் சுருக்கி அப்பு என்றே அழைத்தனர். அப்புவை அனைவரும் அடிமை போல் நடத்தினர். அவன் எது செய்தாலும் அவன் மீது பழி சுமத்தி அவனைக் கேலி செய்தனர். இருப்பினும் அப்பு அவனது சகோதரர்களைவிட புத்திசாலி. சிறிதளவு பேசினாலும் கருத்தாகப் பேசுவான். நல்ல சிந்தனையாளனாகவும் இருந்தான். சுருங்கக் கூறினால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தான். ஒரு வருடத்தில் அவர்கள் வசித்த நாடு முழுவதும் பஞ்சம் தலைவிரித்தாடியது. அதனால் அப்புவின் பெற்றோர் தங்களது ஏழு குழந்தைகளையும் எங்காவது கண்காணாத இடத்தில் விட்டுவிட நினைத்தனர். ஒரு நாள் அவ்வேழு பிள்ளைகளும் தூங்கிய பிறகு அப்புவின் தந்தையும் தாயும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்புவின் தந்தை மனதில் பாரத்துடனும் கண்ணில் கண்ணீருடனும் இருந்தான். “நம்மால் நமது குழந்தைகளைக் காப்பாற்ற முடியாது, நமக்குப் போதிய வருமானம் இல்லை, நாட்டிலும் பசி பஞ்சம் என்று இருக்கிறது. ஒரு வேளை சோற்றுக்கே நாம் அல்லல்படுகிறோம். எனது குழந்தைகள் எனது கண் முன்னே இறப்பதை என்னால் காண இயலாது. அதனால் அவர்களைக் கண்காணாத காட்டில் கொண்டு சென்று விட்டுவிடுவோம். அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு மூங்கில் காட்டிற்குச் சென்று அங்கு புல்லாங்குழல் செய்ய மூங்கில் மரங்களைப் பறித்து வருவோம் என்று கூறுவோம். அவர்கள் மூங்கில்களை சேகரித்துக் கொண்டிருக்கும்ப் பொழுது அவர்களறியா வண்ணம் நாம் திரும்பிவிடுவோம்” என்றார் அப்புவின் தந்தை. பெருங்குரலெடுத்து அழுதாள் அப்புவின் தாய். “உங்கள் மனது என்ன கல்லா? நமது குழந்தைகளை இப்படித் தனித்துவிட எப்படி உங்களுக்கு மனது வருகிறது?” என்று அழுதாள். அவள் அழுத அழுகையெல்லாம் வீணாய்ப் போனது. என்னதான் அந்த ஏழு குழந்தைகளின் தாய் என்றாலும் வறுமையால் அவளது கணவன் பேச்சிற்கு மறுபேச்சும் பேச முடியவில்லை. தன் கண் முன்னரே தனது குழந்தைகள் இறப்பதை விட காட்டில் சென்று இறந்தாள் தனது துக்காமாவது குறையும் என்றெண்ணி அழுது கொண்டே தூங்கச் சென்றாள். அப்பு தன் பெற்றோர்கள் ஏதோ தங்களது வணிகம் சார்ந்து பேசுகின்றனர் என்றெண்ணி மெதுவாக எழுந்து பூனை போல் நடந்து தனது தந்தையின் இருக்கை அருகே இருந்துக் கொண்டு அவர்கள் பேசுவதனைத்தையும் அவர்களறியாது ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். தந்தையும் தாயும் தூங்கியதும் அவனும் தனது படுக்கைக்குச் சென்றான். புரண்டு புரண்டு படுத்தாலும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். அதிகாலையிலேயே எழுந்து ஒரு வற்றிய ஆற்றின் அருகே சென்று அங்கிருந்த கூழாங்கற்களைத் தனது கால்சட்டைப்பை முழுவதும் நிரப்பிக் கொண்டு தன் வீட்டிற்குத் திரும்பினான். எல்லோரும் அன்று காலைவேளையில் காட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்பு தமக்கும் தனது சகோதரர்களுக்கும் என்ன நடக்கப்போகிறது என்பதைத் தெரிவிக்காமல் அமைதியாகவே அவர்களுடன் ஏதுமறியாப் பாலகனாய் பயணித்தான். அவர்கள் ஒரு அடர்ந்த காட்டிற்குச் சென்றனர். பத்தடிக்கு அப்பால் உள்ளவரைக் கூட அந்தக் காட்டில் யாரும் காண முடியாதளவிற்கு அடர்ந்த காடு அது. அப்புவின் தந்தை மூங்கில்களை வெட்டி தனது குழந்தைகளிடம் கொடுத்தார். அவர்களும் அவற்றை வாங்கிச் சேகரித்தனர். குழந்தைகள் மும்முரமாக மூங்கில் குச்சிகளைச் சேகரிப்பதைக் கண்ட அப்புவின் தாயும் தந்தையும் அப்பச்சிளம் பாலகர்கள் அறியாவண்ணம், மெதுவாக அக்காட்டில் அவர்களைத் தவிக்கவிட்டு அகன்றனர். ஓட்டமும் நடையுமாக இருவரும் தங்களது இல்லத்திற்கு வந்துவிட்டனர். தாயையும் தந்தையையும் காணாமல் பாலகர் அனைவரும் பயந்தனர். காட்டின் பல இடங்களில் தேடியும் அவர்கள் இல்லாத காரணத்தால் அழுது புரண்டனர்; கதறினர்; கரைந்தனர். அப்பு மட்டும் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் வழி தெரியும். அவன் தன் வசமிருந்த கூழாங்கற்களை ஒவ்வொன்றாக வீட்டிலிருந்து தொடர்ச்சியாகக் காடு வரை போட்டுக் கொண்டே வந்திருந்தான். சகோதரர்கள் அனைவரும் அழுது முடிந்து அயற்சியடைந்ததும், அப்பு “சகோதரர்களே! கவலை கொள்ளாதீர்கள். தாயும் தந்தையும் நம்மைத் தனியாக இங்கே தவிக்கவிட்டுச் சென்றுவிட்டனர். எனக்கு வீட்டிற்குச் செல்லும் வழி தெரியும். என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள்”, என்று கூறி கூழாங்கற்களைக் கண்டவாறே தனது வீட்டிற்குத் தன் சகோதரர்களோடு வந்து சேர்ந்தான். அதற்குள் இரவு வந்திருந்தது. வீட்டிற்கு வந்தாலும் வீட்டிற்குள் நுழையாமல் வீட்டின் வாயிற்கதவருகே அனைவரும் நின்று தங்களது பெற்றோர்கள் என்ன பேசுகின்றனர் என்று ஒட்டுக்கேட்டவாறே இருந்தனர். அப்புவின் தந்தையும் தாயும் வீட்டிற்கு வந்த மறுகணம், அரசர் முன்பொரு காலத்தில் அப்புவிடம் வாங்கிய புல்லாங்குழலுக்காக 10 வராகன்களைத் தனது பணியாளர் வசம் கொடுத்து அனுப்பியிருந்தார். அரசர் அந்தப் பத்து வராகன்களைத் தருவார் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை அப்புவின் தந்தை. அந்தப் பத்து வராகன்களைக் கொண்டு புதிய வாழ்க்கை வாழலாம், இத்தனை நாள் பட்டினி இருந்தது போதும் இன்றிரவு நன்றாக விருந்துண்ண வேண்டும் என்று நினைதார் அப்புவின் தந்தை. தனது மனைவியை அழைத்துக் கறி சாப்பிட்டு எத்தனை நாட்கள் ஆகிவிட்டது, நீ கறிக்கடைக்குச் சென்று நல்ல ஆட்டுக்கறி வாங்கி வா என்று கட்டளையிட்டார். மனைவியும் நிறைய ஆட்டுக்கறியுடன் வாங்கி வந்து இரவு விருந்துண்டனர். பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அவர்கள் பசியாறிய பின்புதான் அப்புவின் தாய்க்குத் தனது குழந்தைகள் பற்றிய எண்ணமே வந்தது. அப்புவின் தாய் அழத்தொடங்கினார். “ஏதுமறியா என் பச்சிளம் குழந்தைகள் எங்கே? அவர்கள் இங்கிருந்தால் அவர்களுக்கும் நல்ல விருந்து கிடைத்திருக்கும், அவர்கள சாப்பிட்டார்களோ இல்லையோ? என்ன செய்கிறார்களோ? அந்தக் காட்டில் எப்படி அல்லாடுகிறார்களோ? உன்னால்தான் எல்லாம். இந்த வீட்டில் எல்லாமே உங்களது விருப்பப்படிதான் நடக்க வேண்டும், எங்களுக்கு எல்லாம் உணர்ச்சிகளே இருக்கக் கூடாது. அவர்கள் மீது சிறிது கரிசனம் கூட உங்களுக்கு இல்லை. அங்கே காட்டிலுள்ள நரிகளும் நாய்களும் எனது குழந்தைகளைக் கொன்று உண்டிருக்கும். நீ மனிதனே அல்ல. எனது குழந்தைகளை இப்படித் தொலைத்துவிட்டாயே”, என்று புலம்பினாள். “உங்களுக்கு நமது குழந்தைகள் மீது கொஞ்சம் கூட இரக்கமே இல்லை. இரக்கமே இல்லாத கல் நெஞ்சக்காரனடா நீ” என்று இருபது முறைக்கு மேல் கூறிவிட்டாள் அப்புவின் தந்தை. அவனது தந்தைக்கு ஆத்திரம் வர “வாயை மூடு”, என்று கூறி அவளை அடிப்பதற்குக் கையை ஓங்கினார். அப்புவின் தந்தைகுக்கும் அவரது குழந்தைகளைப் பிரிந்த துக்கம் நிறையவே இருந்தது. ஆனாலும் அவளை வாயை மூடி அமைதியாக இருக்குமாறு கூறினார். மனதில் பாரத்தோடு அழுது கொண்டே, “எங்கே எனது குழந்தைகள்? ஏதுமறியாப் பச்சிளம் பாலகர்கள் அவர்கள்”, என்று கூக்குரலிட்டாள் அப்புவின் தாய். அவளது கூக்குரல் வாயிற்கதவருகே இருக்கும் பாலகர்களுக்கும் கேட்டது. “நாங்கள் இங்கிருக்கிறோம். இங்கிருக்கிறோம்”, என்று கூறியவாறே அனைத்து குழந்தைகளும் அழுதுகொண்டே வந்து சேர்ந்தனர். அப்புவின் தாய் அனைத்துக் குழந்தைகளையும் உள்ளே அழைத்து அரவணைத்துப் பாசமழை பொழிந்தாள். “உங்களைக் கண்டபின்புதான் எனக்கு உயிரே வந்தது. இப்பொழுதுதான் எனக்கு ஆனந்தமாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் அயற்சியோடும் பசி மயக்கத்திலும் இருப்பீர்கள். உங்கள் உடலெல்லாம் சேறாக இருக்கிறது. உங்களைக் குளிப்பாட்டி உணவளிக்கிறேன்”, என்றாள் அப்புவின் தாய். அவர்கள் குளித்து முடித்து உணவருந்த அமர்ந்தனர். அவர்கள் உணவருந்தும் பொழுதே அவர்கள் காட்டில் அச்சத்துடன் உலவியதையும் துயரத்தில் உழன்றதையும் தங்களது தாய் தந்தையிடம் கூறினர். அவர்கள் அனைவரும் ஒன்றாக ஆனந்தமாக வாழ்ந்தனர். ஆனால் அந்த ஆனந்தம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. பத்து வராகன்கள் விரைவிலேயே தீர்ந்து போனது, மீண்டும் வறுமை வாட்டியது. மீண்டும் குழந்தைகளைக் காட்டில் விட்டுவிட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார் அப்புவின் தந்தை. இந்த முறை கண்டிப்பாகத் தொலைதூரத்தில் கொண்டு சென்றுவிட வேண்டும் என்றெண்ணினார் அப்புவின் தந்தை. இந்த முறையும் தாயும் தந்தையும் ரகசியமாகப் பேசியதை அப்பு ஒட்டுக்கேட்டுவிட்டான். இந்த முறையும் கடந்த முறை போன்றே திட்டம் தீட்டி வந்துவிட வேண்டும் என்று நினைத்தான் அப்பு. அதிகாலையில் எழுந்து மீண்டும் கூழாங்கற்களை எடுத்து வர எழுந்தான். ஆனால் கதவின் தாழ்ப்பாள் இந்த முறை கீழும் மேலுமாக இரண்டிலும் போடப்பட்டிருந்தது. அப்புவால் உயரத்தில் உள்ள தாழ்ப்பாளைத் திறக்க முடியவில்லை. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனது தந்தை அனைவருக்கும் சாப்பிட ரொட்டிகளைக் கொடுத்தார். அப்பு கூழாங்கல்லிற்குப் பதிலாக ரொட்டியைப் பயன்படுத்த எண்ணினான். ரொட்டியைத் தூளாக்கித் தனது கால்சட்டைப்பையில் நிரப்பிக் கொண்டான். அப்புவின் பெற்றோர் மிக அடர்ந்த காட்டின் நடுப்பகுதி வரை குழந்தைகளோடு சென்றுவிட்டனர். அப்புவிற்கு அக்காட்டினைக் கண்டோ அல்லது தனது தந்தை காட்டின் மையப்பகுதிக்குக் கொண்டு சென்றது பற்றியோ கவலை இல்லை. அவன் எப்படியும் வீட்டை, தான் தூவி வந்த ரொட்டித் துண்டுகள் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தான். அவனது பெற்றோர்கள் இவனைத் தனித்துவிட்டுச் சென்றதும், அவன் திரும்பும் வழியைத் தேடினான். சிறிது தூரத்திலேயே அவனால் வீட்டிற்குச் செல்லும் வழியை அறிய முடியவில்லை. அவனது ரொட்டித் துண்டுகள் அனைத்தினையும் பறவைகளும் எறும்புகளும் கடத்திச் சென்றுவிட்டன. குழந்தைகள் அனைவரும் இப்பொழுது சிக்கலில் மாட்டிக்கொண்டனர். காட்டிற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தனர். காட்டினை விட்டு வெளியேறும் வழியை அவர்களால் கண்டறியமுடியவில்லை. இரவு வரை தேடியும் எந்த வழியும் தெரியவில்லை. காற்று பலமாக ஓலமிட அவர்களுக்குப் பயம் அதிகமானது. அனைத்துத் திசைகளிலும் ஓநாய்கள் ஓலமிட அவர்களை நோக்கிதான் ஓநாய்கள் வருவதாக நினைத்தனர். தலையைத் திருப்பி ஓலமிடும் சத்தம் வரும் திசையில் பார்க்கக் கூட பயம் கொண்டனர். மூச்சுவிடக் கூட பயந்தனர். சிறுது நேரத்திற்கெல்லாம் மாமழை காட்டில் பொழிந்தது. மழையில் அவர்கள் உடல் முழுவதும் நனைந்துவிட்டது. குளிர் அவர்களது எலும்பையே உருக்கும் அளவிற்கு மழை குளிர்ச்சியைத் தந்தது. காட்டில் அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சகதியில் சறுக்கியது. சறுக்கிச் சறுக்கிச் சகதியில் விழுந்து புரண்டனர். உடை, கை, கால்கள் என உடலின் அனைத்துப் பகுதியிலும் சகதியானது. அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பு அங்கிருந்த ஒரு உயரமான மரத்தில் குரங்கைப் போன்று வேகமாக ஏறினான். மரத்தின் உச்சியிலிருந்து ஏதாவது வழி தெரிகிறதா என்று பார்த்தான். அனைத்துத் திசைகளிலும் நோக்கியதில் தொலைதூரத்தில் ஒரு சிறிய மெழுகுவர்த்தியின் ஒளியைக் கண்டான். மரத்திலிருந்து வேகமாகக் கீழிறங்கி வந்தான். இப்பொழுது அவனால் எந்த ஒளியையும் காண முடியவில்லை. ஆனால் அவன் ஒளி வந்த திசையை அறிந்திருந்த காரணத்தால் தனது சகோதரர்களுடன் ஒளி வரும் திசை நோக்கி அவர்களைக் கவலையுடன் அழைத்துச் சென்றான். சிறிது நேரத்தில் ஒளி வந்த பகுதியைக் கண்டு கொண்டான், காட்டினை விட்டு வெளியேறிய காரணத்தால் ஒளி வரும் திசை தெளிவாகத் தெரிந்தது. ஒளி வரும் திசையை வைத்தே நடக்க ஆரம்பித்தனர்.. ஆற்றில் விழுந்த எறும்பிற்கு ஒரு சிறு இலை உயிர் பிழைக்கும் வாய்ப்பை அழித்தது போன்று இந்த ஒளியை தங்களது உயிர் பிழைக்கும் ஒரு வரமாகக் கருதி பயமேதுமின்றி அந்த ஒளி வந்த வீட்டிற்கே வந்து விட்டனர். அந்த வீட்டில் இந்த இரவு மட்டும் தங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். வீட்டின கதவைத் தட்ட ஒரு அழகிய கருணையுள்ளம் கொண்ட பெண் வந்து கதவைத் திறந்து பார்த்தார். அங்கே ஏழு குழந்தைகள் இருப்பதைக் கண்டு கவலையுடன் அவர்களைப் பார்த்தார். “குழந்தைகளே, எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த வீடு யாருடையது என்று தெரியுமா? குழந்தை நரமாமிசம் சாப்பிடும் எனது கணவனின் வீடு. அவன் பச்சிளங்குழந்தைகளை உண்பவன்”, என்று கவலையோடு கூறினார். “அப்படியா அம்மா”, என்று கேட்டான் அப்பு. அனைவரும் உடம்பில் குளிரோடும் மனதில் துயரோடும் அங்கே நின்றிருந்தனர். “இப்பொழுது என்ன செய்வது? நீங்கள் எங்களுக்கு உங்களது இவ்வீட்டில் அடைக்கலம் தரவில்லையென்றால் காட்டில் இருக்கும் இரக்கமற்ற ஓநாய்கள் எங்களைக் கொன்று உண்டுவிடும். அதற்குப் பதிலாக உங்களது கணவர் எங்களை உண்டால் பருவாயில்லை. குறைந்தபட்சம் நீங்கள் உங்களது கணவரிடம் பேசி எங்களைக் காப்பாற்ற வழியுண்டு, ஆனால் ஓநாய்களுடன் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது, அவற்றிடமிருந்து கருணையையும் எதிர்பார்க்க முடியாது. எங்களுக்காக உங்களது கணவரிடம் இறைஞ்சுங்கள்”, என்றான் அப்பு. அப்பெண் தனது நரமாமிசக் கணவரிடம் இருந்து இவர்களைக் காப்பாற்ற எங்காவது ஒளித்துவைக்க வேண்டும் என்றெண்ணினாள். காலை வரை இவர்களை மறைத்து வைத்துவிட்டால் இவர்களைக் காப்பாற்றிவிடலாம் என்று கூறி அவர்களை வீட்டிற்குள் அழைத்தாள். தீமூட்டி அதில் குளிர்காயச் சொல்லி உடல்களையும் காய வைக்கக் கூறினாள் அப்பெண். தனது கணவருக்காக ஒரு முழு ஆட்டை வெட்டிச் சமைத்து வைக்க வெட்டிக் கொண்டிருந்தாள். அப்பு தன் சகோதரர்களுடன் குளிர் காயும் பொழுதே, யாரோ வரும் ஒலி கேட்டது. கதவினை மூன்று நான்கு முறை தட்ட, வந்திருப்பது அந்த நரமாமிச மனிதன் என்பதை அறிந்து கொண்டார்கள். அவசர அவசரமாக, அப்பெண் அப்புவையும் அவனது சகோதரர்களையும் ஒரு படுக்கைக்குள் மறைத்து வைத்துவிட்டு கதவினைத் திறக்க ஓடினாள். கதவைத் திறந்தவுடன், சாராயப்புட்டியுடன் நுழைந்த அவளது கணவன், “இரவு உணவு தயாரா?” என்று கேட்டவாறே உணவருந்தும் மேசைக்குச் சென்றான். ஆட்டுக்கறி சமைக்கப்படாமல பச்சையாக இருந்தது, ஆட்டுக்கறியின் மாமிச வாடை அவனது பசியை அதிகமாக்கியது. மாமிச வாடையை மோப்பம் பிடித்துத் திரியும் பூனை போன்று தனது தலையை இடமும் வலமும் அசைத்து, “எனக்கு நல்ல மாமிச வாடை அடிக்கிறது” என்றான். ஒரு வேளை குழந்தைகள் இருப்பதை அறிந்து கொண்டானோ என்ற பயத்துடன் “என்ன மாமிச வாடை. இப்பொழுதுதான் ஒரு முழு ஆட்டை வெட்டி சமையல் செய்ய அடுப்படியில் வைத்திருக்கிறேன்” என்றாள் அவனது மனைவி. “நான் திரும்பவம் கூறுகிறேன், எனக்கு நல்ல மாமிச வாடை வருகிறது” என்று கூறி தன் மனைவியை எரிக்கும் கண்களோடு கண்டான். “இந்த மாமிச வாடை வேறு, அது இங்கு எப்படி வருகிறது என்பது எனக்குத் தெரியவில்லை”, என்றான். பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவன் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து சட்டென்று படுக்கையறை நோக்கிச் சென்றான். “ஓ! நீ என்னை ஏமாற்ற நினைக்கிறாயா? நான் ஏன் உன்னையும் இவர்களோடு சேர்த்துச் சாப்பிடக்கூடாது? இது எனக்கு அத்தனை கடினமான காரியமாக இருக்கப் போவது இல்லை”, என்று தனது மனைவியைப் பார்த்துக் கூறினான். “இதுதான் உங்களுக்கான பரிசு. எனது நரமாமிச நண்பர்கள் மூவர் இன்றோ நாளையோ இங்கு வருவார்கள், அவர்களுக்கு உங்களை உணவாக்குகிறேன்”, என்றான் அந்த நரமாமிசம் உண்ணும் மனிதன். ஏழு குழந்தைகளையும் ஒருவர்பின் ஒருவராக படுக்கையின் மறைவிலிருந்து வெளியிலெடுத்தான். அனைத்துக் குழந்தைகளும் அவனது காலடியில் விழுந்து மன்றாடின. ஆனால் காட்டில்விட்ட தங்களது தந்தையினும் கொடியவனாக இருந்தான் அவன். சிறிதும் இரக்கமின்றி நடந்து கொண்டான். உங்கள் மீது இரக்கம் காட்ட முடியாது என்றான். அவர்களை உண்டே தீர்வது என்ற முடிவில் உறுதியாக இருந்தான். தனது மனைவியிடம், இவர்கள் அனைவரையும் நல்ல சுவையாக சமைத்து, அதன் மீது குழம்பு ஊற்றி வை என்றான். கூறியதோடு நில்லாமல் ஒரு பெரிய கத்தியை எடுத்துக் கொண்டு குழந்தைகளருகே வந்தான். கத்தியை அங்கிருந்த ஒரு உரைகல்லில் உரசிக் கூர்மையாக்கினான். அப்புவின் சகோதரர்கள் ஒருவனைக் கையிலேந்தினான். “என்ன செய்யப் போகிறீர்கள்? எதற்கு இத்தனை அவசரம்? அவர்களை நாளை நானே வெட்டி சமைக்கிறேன். உங்களது நண்பர்களை அழையுங்கள்”, என்றாள் அவனது மனைவி. “உனது பிதற்றலை நிறுத்து, என் நண்பர்களுக்கு நல்ல மாமிசக் கறி வேண்டும்” என்றான். “ஆனால் ஏற்கனவே இங்கு நிறைய மாமிசம் உள்ளது, ஒரு இளங்கன்று, இரண்டு ஆடுகள், ஒரு பன்றி. இவை இன்றைக்கு உங்களது பசிக்குப் போதுமானதாக இருக்கும்”, என்றாள் அவனது மனைவி,. “அதுவும் சரிதான். சரி இவர்களுக்கு நல்ல உணவளி, ஆனால் அவர்கள் சாப்பிட்டே குண்டாகிவிடக் கூடாது. சாப்பிட பின்பு அவர்களை இங்கு படுக்க வை” என்றான் அவன். அவனது மனைவிக்கு மிக்க மகிழ்ச்சி, அந்த ஏழு குழந்தைகளுக்கும் நல்ல உணவளித்தாள். ஆனால் அக்குழந்தைகள் பயத்தில் நடுங்கின. அதனால் சரியாக உண்ணவில்லை. நரமாமிச மனிதன் குடிக்க ஆரம்பித்தான். தனது நண்பர்களை நாளை விருந்துக்கு அழைக்கவிருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் இருந்தான். மகிழ்ச்சி மிகுதியால் அளவுக்கதிமாகவே போதை தலைக்கேறும் வரை குடித்தான். அதன் பிறகு தனது படுக்கையறைக்குச் சென்று படுத்தான். நரமாமிசனுக்கு ஏழு பெண் குழந்தைகளிருந்தனர். அவர்களும் பச்சிளங்குழந்தைகளே. ஒவ்வொரு குழந்தையும் சிவப்பு நிறத்தில், தலையில் மகுடம் சூடி, கருவிழிகளுடனும், கிளி மூக்குடனும், செவ்விதழ்களுடனும், நீண்ட கூர்மையான பற்கள் வாயின் வெளியில் தெரியும் வண்ணம் இருந்தனர். அவர்கள் நரமாமிசம் சாப்பிடும் அளவிற்குப் பயிற்சி பெறவில்லை. ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறு குழந்தைகளைக் கடித்துச் சுவைக்க ஒரு முறை தங்களது தந்தையால் பழக்கப்படுத்தப்பட்டிருந்தனர். அவ்வேழு பெண் குழந்தைகளும் ஒரே படுக்கையில் ஒன்றாகப் படுத்துறங்கினர். இந்த ஏழு பெண் குழந்தைகள் படுத்துறங்கும் படுக்கையும், அப்புவும் அவனது ஆறு சகோதரர்களும் உறங்கும் படுக்கையும் ஒரே மாதிரியானவையாக இருந்தன. ஏழு பெண் குழந்தைகளையும், ஏழு சகோதரர்களையும் படுக்கையில் படுக்கவைத்து உறங்குமாறு கூறிவிட்டு நரமாமிசனின் மனைவி தன் படுக்கைக்குச் சென்றுவிட்டான். அப்பு அவ்வேழு பெண் குழந்தைகளின் தலையில் இருக்கும் மகுடத்தினைக் கண்டுகொண்டான். அப்பு பயந்து கொண்டே இருந்தான், ஒரு வேளை நடுநிசியில் எழுந்து நரமாமிசன் தங்களைக் கொன்று உண்டுவிட்டாள் என்ன செய்வது என்றஞ்சினான். அப்பு நடுநிசிக்கு முன்னரே எழுந்து கொண்டான். தனது சகோதரர்கள் அணிந்திருந்த குல்லாவை எடுத்துக் கொண்டு மெதுவாக பூனை போல் நடந்து, நரமாமிசனின் பெண் குழந்தைகள் இருந்த அறைக்குச் சென்றான். அக்குழந்தைகளின் மகுடத்தினை மெதுவாகக் கழற்றிவிட்டுத் தான் கொண்டு வந்திருந்த குல்லாக்களை அவர்களுக்கு அணிவித்துவிட்டான். மகுடங்கள் அனைத்தினையும் தனக்கும் தனது சகோதரர்களின் தலையிலும் அணிவித்துவிட்டுத் தூங்கிவிட்டான். ஒருவேளை, நரமாமிசன் விழித்துக் கொண்டால் கூட தங்களைக் கொல்லாமல், அவனது குழந்தைகளைத்தான் கொல்வான் என்று கணக்கிட்டான். அப்பு எண்ணியது போலவே, நரமாமிசன் நடுராத்திரியில் எழுந்து கொண்டான், எதற்காக நாளை வரை காத்திருக்க வேண்டும், இப்பொழுதே அவ்வேழு பாலகர்களையும் கொல்ல வேண்டும் என்று கூறி தனது படுக்கையிலிருந்து தாவிக் குதித்தான். ஒரு பெரிய கத்தியை எடுத்துக் கொண்டு பாலகர்கள் இருந்த அறைக்குச் சென்றான். “அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறேன், அந்த ஏழு குட்டி குறும்பர்காளும் என்ன செய்தாலும் கவலையில்லை, அவர்களைக் கொல்வது தவிர்த்து இப்பொழுது வேறெந்த வேலையும் இல்லை”, என்று கூறியவாறே அவர்கள் அறையை அடைந்தான். அவர்கள் அடையை அடையும் பொழுது அப்பு விழித்துக் கொண்டான். அவனது சகோதரர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். அப்பு மட்டும் பயத்துடனே படுத்திருந்தான். நரமாமிசன் அப்புவின் அறைக்கு வந்ததும் அவனது இதயம் தாறுமாறாய்த் துடித்தது. அவனது தலையிலிருக்கும் மகுடத்தினையும் தனது சகோதரர்களின் தலையிலிருக்கும் மகுடங்களையும் ஒருமுறை ஓரக்கண்ணால் சரி பார்த்துக் கொண்டான். நரமாமிசன் வந்து மகுடங்களைப் பார்த்தான். “என்ன ஒரு அருமையான மகுடங்கள். நான் இவற்றை இன்னும் அழகாக அற்புதமாகச் செய்திருக்க வேண்டும். எனக்குப் போதை அதிகமாகிவிட்டது. அதனால்தான் படுக்கையறை மாறிவந்துவிட்டேன்”, என்று புலம்பியவாறே, தனது மகள்கள் உறங்கும் அறை நோக்கிச் சென்றான். அங்கே அப்புவின் சகோதரர்களுடைய குல்லாவை அணிந்தவாறு அவனது மகள்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். “ஓ! இங்குதான் சுகமாகத் தூங்குக் கொண்டிருக்கிறீர்களா எனதருமை ருசியான உணவுகளே? உங்கள் கதையை முடிக்கிறேன்” என்று கூறி முடித்த மறுகணம் அவனது கத்தியால் அனைத்து மகள்களையும் ஒரே வெட்டால் கொலை செய்தான். நரமாமிசனின் அலறல் சத்தம் கேட்டதும், ஒரு போர்வைக்குள் அப்பு தனது சகோதரர்களை ஒளியுமாறு கூறி தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு கூறினான். திருட்டுத்தனமாக அன்னம் போல் நடந்து, பூனை போன்று மதிலேறி அங்கிருந்து ஏழ்வரும் தப்பிச் சென்றனர். அவ்விரவு முழுவதும் தலைதெறிக்க ஓடினர். எங்கு ஓடுகிறோம் எதற்கு ஓடுகிறோம் எத்திசைக்குச் செல்கிறோம் என்று தெரியாமல் ஏழ்வரும் ஓடினர். மறுநாள் அதிகாலையில் எழுந்த நரமாமிசன் தனது மனைவியை அழைத்து, “மேல்மாடிக்குச் சென்று நேற்று நமக்கு விருந்தாக வந்த அந்த ஏழு குட்டி குழந்தைகளையும் (உணவாய்) அலங்காரம் செய்து எடுத்து வா”, என்று கட்டளையிட்டான். கணவரது பேச்சுக்கு மறுப்பேதும் கூறாமல் மேல்மாடிக்குப் படியேறினாள் அவனது மனைவி. படியேறும் பொழுதே அவர்களை எப்படி அலங்கரிப்பது என்பதைச் சிந்தித்தவாறு சென்றாள். அவள் அவர்களுக்கு அழகான ஆடை அணிவித்து அலங்காரமாகக் கூட்டி வரவேண்டும் என்றே எண்ணினாள். மேல்மாடிக்குச் சென்றதும் தனது ஏழு மகள்களும் இறந்து கிடப்பது கண்டு மூர்ச்சையடைந்தாள். அப்படியே மயங்கி விழுந்தவள் வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. தனது மனைவி ஏன் இத்தனை நேரம் எடுத்துக் கொள்கிறாள் அவர்களைச் சமைத்து அலங்காரம் செய்ய என்று சந்தேகம் கொண்டு அவனும் மேல்மாடிக்குச் சென்றான். அவனுக்கும் அவனது மகள்களின் நிலைகண்டு தலை சுற்றியது. “ஓ! நான் என்ன செய்துவிட்டேன்? நான் செய்த பாவத்திற்கு இத்தனை விரைவில் எனக்குத் தண்டனை கிடைக்க வேண்டுமா?” என்று அழுதான். அவனது மனைவியின் முகத்தில் நீர் தெளித்து அவளை எழுப்பி, அவளது முகத்தருகில் சென்று, “எனது காலணியை எடுத்துவா, நான் அந்த ஏழ்வரையும் உடனே பிடித்து வருகிறேன்”, என்று கோபத்தோடு கூறினான். அக்காலணியைப் பயன்படுத்தி ஒரு அடி எடுத்து வைத்தால், ஒரு மைல் தூரம் செல்ல முடியும். அவன் காட்டுப்பகுதியிலிருந்து கிளம்பி அருகிலிருந்த கிராமம் முழுவதும் தேடினான். அனைத்துத் திசைகளிலும் தேடினான். அவனது ஒரே தாவலில் ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்குத் தாவினான். ஒரே பாய்ச்சலில் ஒரு நதியினைக் கடந்தான். இறுதியாக அந்தக் குழந்தைகள் வசித்த வீட்டருகே வந்தான். அந்த வீட்டிற்கும் அவனுக்கும் நூறடிதான் தூரம் இருந்தது. அப்பு அவனது வீட்டருகே இருந்த ஒரு பாறை அருகே தனது சகோதரர்களை மறைத்து வைத்திருந்தான். மிகதூரம் கடந்து வந்த பயணக் கலைப்பால் அவன் ஓய்வெடுக்க எண்ணினான். அப்பு மறைந்திருந்த பாறையருகேதான் நரமாமிசனும் வந்தமர்ந்தான். அவனது கலைப்பாலும் அவனுக்கு அதிக பசி எடுத்ததாலும், அப்படியே தூங்கிவிட்டான், சிறிது நேரத்திற்கெல்லாம் படுத்துறங்க ஆரம்பித்தான். பயங்கரமாக குறட்டையும் விட்டான். அவனது குறட்டைச் சத்தம் கேட்ட குழந்தைகள் பயந்தனர். அவனது குறட்டையை விட அவனது கையிலிருந்த கத்தியைக் கண்டுதான் அதிகமாகப் பயம் கொண்டனர். அந்தக் கத்தியால் தங்களைக் கொன்றுவிடுவான் என்றஞ்சினர். அப்புவும் அவனது சகோதரர்கள் போன்றே பயந்திருந்தான். அப்பு தன் சகோதரர்களிடம், “இவன் தூங்கியதும் உடனே ஒரே ஓட்டமாக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்” என்றான். அவன் தூங்கியதும், அப்பு கூறியவாறே ஒரே ஓட்டமாக அவர்கள் வீட்டிற்குச் சென்றனர். அப்பு மட்டும் மெதுவாக நரமாமிசன் அருகே சென்று அவனது காலணியை மெதுவாக கழற்றித் தனது கால்களில் அணிந்து கொண்டான். அவனது கால்களுக்கு அது மிகப் பெரியதாக இருந்தது. ஆனால் அந்தக் காலணிக்கு ஒரு சிறப்பு உண்டு, யார் அணிகிறார்களோ அவர்களது கால் அளவிற்கு ஏற்றவாறு அது மாறிக் கொள்ளும். அதனால் சிறிது நொடியில் அப்புவின் காலிற்கு ஏற்றவாறு காலணி மாறி அவனது காலிற்கே தனித்துவமாகத் தயாரித்த மாதிரி இருந்தது. அப்பு ஒரே தாவலில் நரமாமிசனின் வீட்டிற்குச் சென்றான். அங்கே நரமாமிசனின் மனைவி தன் குழந்தைகள் இறந்த துக்கத்தில் அழுது கொண்டிருந்தாள். “உங்கள் கணவர் பெரும் ஆபத்தில் இருக்கிறார். உங்கள் கணவரை ஒரு திருடர்கள் கூட்டம் கடத்திச் சென்றுவிட்டது. அந்தத் திருட்டுக் கூட்டம் உங்களிடம் இருக்கும் தங்க வெள்ளி நகைகளைத் தரவில்லையென்றால் உங்கள் கணவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்காள். அதைக் கேட்ட மறுகணம், உங்களது கணவர் என்னிடம் அவரைக் காப்பாற்றுமாறு கெஞ்சினார். அவரது நிலைமையை உங்களிடம் எடுத்துக் கூறி, உங்கள் வீட்டிலிருக்கும் அனைத்து நகை சொத்துக்களை வாங்கி வருமாறு கூறினார். சீக்கிரம் கொடுங்கள். இல்லையென்றால் இரக்கமின்றி அத்திருட்டுக் கூட்டம் உங்கள் கணவரைக் கொன்றுவிடுவார்கள். இது மிக மிக அவசரம் என்பதால் அவரது காலணியை எனக்குக் கொடுத்தார். அதைத்தான் எனது கால்களில் அணிந்திருக்கின்றேன். இதோ பாருங்கள். நான் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. உங்களுக்கு உங்களது கணவனைக் காப்பாற்றும் எண்ணம் இருந்தால் மட்டும் கொடுத்தனுப்புங்கள்”, என்றான் அப்பு. பயந்து போன நரமாமிசனின் மனைவி, தனது வசமிருந்த அனைத்தையும் கொடுத்தனுப்பினாள், என்னதான் சிறு குழந்தைகளைக் கொன்று புசித்தாலும் எனது கணவர் மிக நல்லவர். அப்பு நரமாமிசனின் வீட்டிலிருந்த அனைத்து நகை பணங்களையும் சுருட்டிக் கொண்டு தனது தந்தை வீட்டிற்குச் சென்றான். அவன் கொண்டு வந்த சொத்துக்களைக் கண்டு அவனது வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் அப்பு திருடி வந்ததாகப் பலரும் குற்றம் சுமத்தினர். அவன் திருடியது தவறு என்று கூறினர். அப்பு தான் நரமாமிசனிடம் இருந்து எதுவும் திருடவில்லை தான் திருடியது அந்தக் காலணி மட்டும்தான், அக்காலணியை வேறு எதற்காகவும் பயன்படுத்தவில்லை, எனது சகோதரர்களைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் கொண்டுவர மட்டும் பயன்படுத்தினேன் என்றான். ஆனால் அவனைக் குற்றம் சாட்டிய அனைவரும் தனது தந்தையுடன் குடித்துக் கும்மாளமிட்டு தன் தந்தையின் சொத்துக்களைக் காலி செய்தவர்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து அப்பு நரமாமிசனின் காலணியைத் திருடினான் என்று கூறி நீதிமன்றத்திற்கு அனுப்பினர். அந்தக் காலணி பற்றி நீதிமன்றத்தில் அப்பு எடுத்துக் கூறினான். அவர்கள் தங்களுக்கு ஒரு ராணுவத்தினால் தொல்லை இருக்கிறது. அவர்கள் 200 மைல் தொலைவில் இருக்கிறார்கள். அவர்களை உன்னால் வெல்ல முடியமா என்று கேட்டனர். அப்பு நீதிமன்றத்திலிருந்து அரசனிடம் சென்றான். நான் விரும்பினால் அந்த ராணுவத்தினை அழித்த செய்தியை இன்று இரவில் கூறுவேன் என்று கூறினான். அரசன் அந்த ராணுவத்தினை அழித்தால் நிறைய பணம் தருகிறேன் என்றார். அப்பு அன்றிரவே அந்த ராணுவத்தினை அழித்த செய்தியோடு வந்தான். அப்பு அவன் விருப்பத்திற்கு அதிகமாகவே பணங்களை ஈட்டினான். அரசனும் தொல்லை கொடுத்த ராணுவத்தினை அழித்த காரணத்தினால் அதிக பணமளித்தான். பல காதலர்கள் தங்களது காதலர்களுக்கு தூது அனுப்ப அப்புவைப் பயன்படுத்தினர். அவனும் அக்காலணியைக் கொண்டு வெகு விரைவாக செய்தியைக் கொண்டு சேர்த்தான். அதனால் அவனுக்கு அதிக வருமானம் கொட்டியது. சில நேரங்களில் வணிகம் சார்ந்த செய்திகளுக்கும் தூதனுப்பிய காரணத்தால் அவனுக்கு அதிக சொத்துக்கள் கிடைத்தது. அந்த சொத்துக்களையெல்லாம் தனது தந்தைக்குக் கொடுத்தான். அவர்களது குடும்பமே ஆனந்தமாக இருந்தது. அவனது சகோதரர்களுக்கும் பல வீடுகளைக் கட்டிக் கொடுத்து அவர்களை ஆனந்தமாக வாழவைத்தான். எல்லாருக்கும் ஆனந்தம் அளித்துவிட்டு அவனும் வெற்றிகரமாக தனது வாழ்க்கையை வாழ்ந்தான். https://tamilkanithan.wordpress.com/2018/03/25/அப்புக்குட்டி-ஐரோப்பிய/

திராவிடத் திரிபுவாதம்

1 day 5 hours ago

திராவிடத் திரிபுவாதம்

சங்க இலக்கியத்தில் மொகஞ்சொதாரோ –
அரப்பா இருக்கிறதா?
எதிர்வினை:
‘திராவிடமும் இந்தியமும் உடன் கட்டை ஏறவேண்டும்’ என்றும், ‘சங்க
இலக்கியத்தில், காப்பிய இலக்கியத்தில் பக்தி இலக்கியங்களில் திராவிடர்
என்ற சொல் இல்லை’ என்றும் பெ.மணியரசன் பேசியதைத் தமிழ்த்
தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் (ஏப்ரல் 16‡30,2012)
வெளியிட்டிருந்தீர்கள்.
‘திராவிடம்’ என்ற சொல் தமிழனை, தமிழை, தமிழ் இனத்தைக் குறிக்கத்
திரித்துச் சொல்லப்பட்ட சொல்தான். திரிந்த தமிழ்ச் சொல்லே தவிர
வடசொல் அல்ல.

தமிழன் என்று சொன்னால் தமிழனை மட்டும் குறிக்கும். திராவிடன்
என்று சொன்னால் தமிழனையும் குறிக்கும், மொழியால் தெலுங்கராக,
கன்னடராக, மலையாளியாக, துளுவராகத் திரிந்துபோனவர்களையும்

குறிக்கும். அவர்கள் எல்லாம் மொழியால் திரியாமல் இருந்த காலத்தில்
ஆரியரால் சொல்லப்பட்ட திரிபுச்சொல்லே திராவிடம்.
தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று சொல்லிக்கொள்வதை
இழிவாகக்கருதினால் சிந்துவெளி நாகரிகம் எங்கள் நாகரிகம் என்று
உரிமை கொண்டாடக்கூடாது. சிந்துவெளிக் காளைச் சின்னத்தைத் தமிழர்
கண்ணோட்டத்திலிருந்து எடுத்துவிடவேண்டும். அது திராவிட
நாகரிகத்தின் குறியீடு.
மொகஞ்சொதாரோ, அரப்பா நாகரிகம் திராவிட நாகரிகம் என்று டாக்டர்
பானர்ஜி கூறியிருக்கிறார். வரலாற்று உலகம் தமிழனைத் திராவிடன்
என்றுதான் அடையாளப்படுத்தி உள்ளது.
‘திராவிடம்’ என்ற சொல்சங்க இலக்கியத்தில் இல்லை.
மொகஞ்சொதாரோ, அரப்பாவும் சங்க இலக்கியத்தில் இல்லை. அதில்
மட்டும் எப்படி உரிமைகொண்டாட முடியும்?
‘நெஞ்சுக் கிறாள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ நன்னூற்றுரை’
என்ற பெரிய திருமொழிச் சிறப்புப்பாயிரத்தில் வரும் ‘தமிழ
நன்னூற்றுரை’ என்பதற்கு திராவிட சாத்திரம் என்றார் பிள்ளை லோகாச்
சாரிய ஜீயர். 500 ஆண்டுகளுக்கு முன்பே 18‡ஆம் நூற்றாண்டில்
தாயுமானவர் ‘கல்லாத பேர்களே நல்லவர்கள்’ என்ற பாடலில்
‘வடமொழியிலே வல்லான் ஒருவன் வரவும் திராவிடத்திலே வந்ததா
விவகரிப்பேன்’ என்று கூறியுள்ளார். இதில் தமிழைத்தான் திராவிடம்
என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆழ்வார்களின் நாலாயிரத்திவ்விய பிரபந்தங்கள் திராவிட வேதம் என்று
குறிக்கப்படுகின்றன. இயக்கத்திற்குத் திராவிடம் என்று பெயரிட்டு
திராவிடம் பேசிய தலைவர்கள் பெரியார் முதல் இன்றுள்ளவர்கள் வரை
தமிழனுக்காக, தமிழுக்காக, தமிழ் நிலத்திற்காக உழைத்திருக்கிறார்கள்
என்பதை எவராலும் மறுக்க முடியாது.

****
மறுவினை:
தேவையில்லை திராவிடத் திரிபுவாதம்
பெ.மணியரசன்
“திராவிடம்” என்பது திரிந்த தமிழ்ச் சொல் என்கிறார் புலவர் முருகேசன்.
அத்திரிபு தமிழர்களிடையே ஏற்பட்டதா, அயல் இனத்தவரான
ஆரியரிடையே ஏற்பட்டதா? அவர்களிடம் அது எப்போது ஏற்பட்டது? இவ்
வினாக்களுக்கு விடையளிக்கும் போதுதான் “திராவிடர்” என்பது அயல்
இனத்தார் தமிழரை அழைத்த கொச்சை வடிவம் என்று புரியும்.
இந்தியா என்று இப்பொழுது அழைக்கப்படும் இத்துணைக்கண்டமெங்கும்
தமிழர்களே வாழ்ந்த காலத்தில் அயல் இனத்தவரான ஆரியர் இங்கு
வந்தபோது, தமிழ், தமிழர் என்பதை ஒலிக்கத் தெரியாமல் திரமிள,
திராவிட என்று ஒலித்தனர். அவ்வாறே திராவிடர் என்று பிராக்ருத,
சமற்கிருத மொழிகளில் எழுதியும் வைத்தார்கள். அக்கொச்சைச்
சொல்லை அப்போதும் சரி, அதன்பின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள்
கழிந்த பின்பும் சரி தமிழர்கள் ஏற்கவில்லை. “திராவிடர்” என்று தங்களை
அழைத்துக் கொள்வதைத் தமிழர்கள் இழிவாகக் கருதியதால்தான், சங்க
இலக்கியங்களிலோ, காப்பிய இலக்கியங்களிலோ, பக்தி
இலக்கியங்களிலோ “திராவிடர்” என்ற சொல்லைத் தமிழர்கள் பயன்
படுத்தவில்லை என்று நான் பேசி வருகிறேன்; எழுதி வருகிறேன்.
எனது அக்கருத்தை மறுக்கவந்த புலவர் முருகேசன், ஆழ்வார்கள் காலப்
பெரிய திருமொழியில் திராவிடர் என்று கூறியுள்ளதாகப்
புனைந்துரைக்கிறார். பெரிய திருமொழியின் சிறப்புப் பாயிரப் பாட்டையும்
எடுத்துப் போட்டுள்ளார். அவர் சான்று காட்டியுள்ள பாடலே எனது
கருத்துக்கு வலுவான சான்றாகும். பெரிய திருமொழியை எழுதியவர்
திருமங்கை ஆழ்வார். அவரது காலம் கி.பி. 9‡ஆம் நூற்றாண்டு.
அப்பாடலில் “நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ நன்னூற்றுறை” என்று
உள்ளது. இதில் “தமிழ நன்னூல்கள்” பற்றிக் கூறப் பட்டுள்ளது. புலவர்
முருகேசன் புனைந்துரைப் பது போல் “திராவிட நன்னூல்கள்” என்று

கூறப்பட வில்லை. பெரிய திருமொழிக்கு ‡ அதில் உள்ள மேற்படிப்
பாடலுக்குப் பிற்காலத்தில் பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் உரை
எழுதிய பிள்ளை லோகாச்சாரி ஜீயர் என்பவர் தமிழ நன்னூல்கள்
என்பதற்குத் “திராவிட சாத்திரம்” என்று விளக்கம் தந்துள்ளார் என்கிறார்.
நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய ‡ எழுதிய பக்திப் பாடல்கள்
காலத்தைப் பக்தி இலக்கியக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள்
வரையறுத்தார்கள். கி.பி. 7 ‡ஆம் நூற்றாண்டு தொடங்கி சேக்கிழாரின்
பெரியபுராணம் எழுதப்பட்ட 12‡ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலம்
வரை உள்ள காலப் பகுதியைப் பக்தி இலக்கியக் காலம் என்பர். நான்
இந்தப் பக்தி இலக்கியக் காலநூல்கள் ஏதாவதொன்ஷீல் “திராவிடம்”
என்ற சொல் பயன் படுத்தப்பட்டதா என்று வினவி, இல்லை என்று
விடையிறுத்திருந்தேன்.

புலவர் முருகேசன் பக்தி இலக்கியக் காலநூல் ஒன்றுக்கு பக்தி இலக்கியக்
காலம் முடிந்து 400 ஆண்டுகள் கழிந்தபின் எழுதிய விளக்கவுரையில்
“திராவிட” என்ற சொல் இருக்கிறது என்கிறார். இது என்ன வாதம்!
விதண்டாவாதம்! வரலாற்று ஆசிரியர்கள் வரையறுத்த கால அளவை
வைத்தே நான் சங்க காலம், காப்பியக் காலம், பக்தி இலக்கியக் காலம்
என்று வரிசைப் படுத்தி அவற்றுள் எதிலும் “திராவிட” என்ற சொல்
பயன்படுத்தப்பட வில்லை, காரணம் தமிழர்கள் தங்களைத் திராவிடர்
என்று சொல்லிக் கொள்வதைக் கேவலமாகக் கருதிய காலங்கள் அவை
என்றேன்.
பெரிய திருமொழி நூலில் இருக்கிறது “திராவிடம்” என்று புலவர்
முருகேசன் காட்டியிருந்தால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். அது
எழுதப்பட்டு, 700 ஆண்டுகள் கழித்து, பக்தி இலக்கியக் காலம் முடிந்து 400
ஆண்டுகளுக்குப் பின், பெரிய திருமொழிக்கு உரை எழுதிய பிராமணரான
பிள்ளை லோக்காச்சாரி ஜீயர் தம் சொந்த சொல்லாகப் பயன்படுத்திய
“திராவிட” என்ற வைக்கோல் துரும்பை எடுத்துக்கொண்டு வாள் வீசுகிறார்
புலவர் முருகேசன். அசலான தமிழ் இனத்தை ‡ தமிழ் மொழியைப்
புறந்தள்ளி விட்டுப் போலியான திராவிடத்தை எடுத்துக் கொள்வதுதான்
திராவிட இயக்க மரபு.

கருணாநிதியிலிருந்து புலவர் முருகேசன் வரை உள்ள திராவிடச்
சிந்தனையாளர்களுக்குக் கிடைத்த திராவிடச் சான்று அனைத்தும்
ஆரியம் தந்த சான்றுகள் தாம்!
சங்க காலம், காப்பியக் காலம், பக்தி இலக்கியக் காலம் ஆகிய மூன்று
காலப் பகுதிகளிலும் தமிழர் என்ற இனப் பெயரும், ஆரியர் என்ற இனப்
பெயரும் பல இடங்களில் பதிவாகியுள்ளன. ஆனால் ஓரிடத்தில் கூட
திராவிட என்ற இனப் பெயரோ அல்லது மொழிப் பெயரோ
பதிவாகவில்லை. காரணம் தமிழர் என்பதும் ஆரியர் என்பதும் அசலான
இனப்பெயர்கள். திராவிடம் என்பது மாயை.
தெலுங்கினத்தைச் சேர்ந்த நாயக்க மன்னர்கள் தமிழ் நாட்டை ஆண்ட
காலம் கி.பி. 16‡ஆம் நூற்றாண்டு. அப் போது சமற்கிருதமும் தெலுங்கும்
தமிழகத்தில் கோலோச்சின. தமிழ் புறந்தள்ளப் பட்டது.
அக்காலத்தில்தான் மணிப்பிரவாள நடையை உரையாசிரியர்கள் அதிகம்
பயன்படுத்தினார்கள். அதிலும் வைணவ ஆச்சாரியார்கள் (பிராமணர்கள்)
மணிப்பிரவாள நடையை அதிகம் பயன்படுத்தினர். சமற்கிருதமும்
தமிழும் சரிக்குச் சரியாகக் கலந்து எழுதுவதற்குப் பெயர்
மணிப்பிரவாளம்! மணிப்பிரவாளத்தில் தமிழைத் தமிழ் என்று சொல்ல
மாட்டார்கள், திராவிடம் என்றே சொல்வார்கள். ஆரியப் பிராமணரான
பிள்ளை லோகாச்சாரி ஜீயர் பயன்படுத்திய மணிப்பிரவாள “திராவிடம்”
தான் புலவர் முருகேசன் அவர்களுக்குக் கிடைத்த ஆகப்பெரிய சான்று!

18‡ஆம் நூற்றாண்டில் தான் முதல்முதலாகத் தமிழ்ச் செய்யுளில்
தாயுமானவர் “திராவிட” என்றச் சொல்லைப் பயன்படுத்தினார்.
பிராமணர்களின் மணிப்பிரவாளம் மலிந்திருந்த காலம் அது.
தாயுமானவரும் தமது நேர் கூற்றாகத் “திராவிடம்” என்ற
சொல்லைப்பயன் படுத்தவில்லை. விதண்டாவாதம் செய்பவர்களைச்
சாடிய தாயுமானவர், ‘இது என்றால் அது என்பர், அது என்றால் இது என்பர்’
என்று கூறி நையாண்டி செய்தார். “முதலில் வடமொழியில்
வந்ததென்பார்; வட மொழியில் வல்லவர் ஒருவர் வந்து விட்டால்
திராவிட மொழியில் வந்ததென்பார்” என்று கூறினார் தாயுமானவர்.
இதனால் படித்தவர்களை விடப்படிக்காதவர்களே மேல் என்றார்.


“சங்க இலக்கியத்தில் மொகஞ்சொதாரோ, அரப்பா என்ற சொற்கள் இடம்
பெற்றிருக்கின்றனவா? இல்லை. அவை இடம் பெற வில்லை என்பதற்காக
அவை இல்லை என்று ஆகிவிடுமா” என்று கேட்கிறார் முருகேசன்.

1920‡களில் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப் பட்டவை, புதையுண்டு
கிடந்த மொகஞ் சொதாரோ, அரப்பா நகரங்கள். இந்நகர நாகரிகம் 3500
ஆண்டுகளுக்கு முன் நிலவிய தமிழர் நாகரிகமாகும். சிந்து வெளி
நாகரிகம் ‡ மொகஞ் சொதாரோ, அரப்பா போன்றவற்றை சங்க
இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன என்று ஐராவதம் மகாதேவன்
கூறுகிறார். சிந்துவெளித் தமிழர் நாகரிகத்தின் பல பகுதிகள் குசராத்திலும்
இருந்தன. அங்குள்ள துவாரகையை தலை நகராகக் கொண்டு தமிழக
வேளிர் ஆண்டனர் என்ற குறிப்பைக் கபிலர் கூறியுள்ளார். புறநானூறு 201‡
ஆம் பாடலில் இக் குறிப்புள்ளது.

பாரி மகளிரை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்ளுமாறு
இருங்கோவேளை வேண்டிய பொழுது, கபிலர் இருங்கோவேளின்
முன்னோர் துவாரகையை ஆண்ட வேளிர் ஆவர். அவ்வேளிர் மரபில் நீ
49‡ஆவது தலைமுறை என்றார்.
“நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே”
என்று கபிலர் கூறினார். இவ்வரிகளுக்கு உ.வே. சாமிநாதய்யர் பிழையான
விளக்கம் எழுதியுள்ளார் என்று ஐராவதம் மகாதேவன் கூறி மேலே
சொன்ன புதிய விளக்கம் தந்துள்ளார். (சிந்து வெளிப்பண்பாடும் சங்க
இலக்கியமும் ‡ முனைவர் ஐராவதம் மகாதேவன் ‡ செம்மொழித்
தமிழாய்வு நிறுவன வெளியீடு, சனவரி ‡ 2010)
துவரை என்பதை துவார சமுத்திரம் என்று உ.வே.சா. கூறியிருப்பது
சரியன்று என்று மகாதேவன் சுட்டுகிறார். உ.வே.சா. பிழையாகக் கருதிய

துவார சமுத்திரம் என்ற கருத்தைப் பின்னர் வந்த அவ்வை சு. துரைசாமிப்
பிள்ளை போன்றோரும் அவ்வாறே எடுத்துக் கொண்டனர்.

பாரி மகளிரை ஏற்க மறுத்த இருங்கோவேள் மீது கபிலர் சினந்து பாடிய
பாடல், புறம் 203‡ஆம் செய்யுளில் உள்ளது. அப்பாடலில் வரும் “அரையம்”
என்ற சொல் அரப்பாவைக் குறிப்பிடுகிறது என்கிறார் ஐராவதம்
மகாதேவன். தமக்கு முன் பி.எல்.சாமி அரையம் என்பதை அரப்பா என்று
செந்தமிழ்ச்செல்வி சனவரி 1994 இதழில் எழுதியதையும் சுட்டிக்
காட்டுகிறார் மகாதேவன்.
“இருபாற் பெயரிய வருகெழு மூதூர்க்
கோடி பல வடுக்கிய பொருமணுக்குதவிய
நீடுநிலை அரையத்துக் கேடுங் கேளினி”
என்ற வரிகளில் அழிந்து போன இருபெரும் சிந்து வெளி நகரங்களைக்
குறிக்கின்றார் என்கிறார் மகாதேவன். தம் கூற்றுக்கு மேலும் சான்றுகளாக
அகம் 15, 208, 372, 375 ஆகிய பாடல் களையும் மற்ற சங்கப் பாடல்களையும்
அவர் கூறுகிறார். எனவே, எடுத்தேன் கவிழ்த் தேன் பாணியில் சங்க
இலக்கியங்களில் சிந்துவெளி நாகரிக நகரங்கள் குறிப்பிடப் பட வில்லை
என்று கூற வேண்டியதில்லை. புதிது புதிதாய் வருகின்ற ஆய்வுகளையும்
புலவர் முருகேசன் போன்ற திராவிடச் சிந்தனையாளர்கள் கவனத்தில்
கொள்ளவேண்டும். தெலுங்கு நாயக்கமன்னர்கள் காலத்திலேயே திளைத்
திருக்கக் கூடாது; கால்டு வெல் காலத்திலேயேகளித் திருக்கக்கூடாது.
அடுத்து,தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதை
இழி வாகக் கருதினால், ‘சிந்து வெளி நாகரிகம் எங்கள் நாகரிகம்’ என்று
உரிமை கொண்டாடக் கூடாது என்கிறார். ஏன் உரிமை
கொண்டாடக்கூடாது? தஞ்சாவூரை ஒலிக்கத் தெரியாமல் (உச்சரிக்கத்
தெரியாமல்) டேஞ்சூர் என்றனர் வெள்ளையர். தஞ்சாவூரை டேஞ்சூர்
என்றுதான் இன்றும் சொல்லவேண்டும், தஞ்சாவூர் என்று சொன்னால்,
தமிழர்கள் தஞ்சாவூருக்கு உரிமை கொண் டாடக்கூடாது என்று ஒருவர்
சொன்னால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது புலவர் முருகேசன்
கூற்று!

“தமிழர்”என்பதை ஒலிக்கத் தெரியாமல், திரமிள, திராவிடர் என்றனர்
வந்தேறிகளான ஆரியர்கள். அந்தக் கொச்சைத் திரிபைத் தமிழர்கள்
இன்றும் கட்டி அழ வேண்டுமா?

அடுத்து, தமிழர் என்ற மரபினத்திலிருந்து தெலுங்கர், கன்னடர்
போன்றோர் பிரிந்து போய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டன.
பால் தயிரான பிறகு, தயிர் மீண்டும் பால் ஆகாததுபோல் தமிழரிலிருந்து
பிரிந்துசென்ற தெலுங்கர், கன்னடர், மலையாளி போன்றோர் மீண்டும்
தமிழராகமாட்டார், அவர்கள் மொழியும் தமிழாகாது என்றார் தேவநேயப்
பாவாணர்.
எந்தக்காலத்திலும் பழந் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத “திராவிடர்”
என்ற சொல்லை இந்தக் காலத்தில் தமிழர்கள் என்ன காரணம் பற்றி
ஏற்கவேண்டும்? ஆரியர்களும், ஆரியப் பார்ப்பனர்களும் மட்டுமே அந்தக்
காலத்திலிருந்து இன்றுவரை “திராவிடம்” என்று பேசி தமிழரைக்
கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் முதலியோர் தாங்கள் தமிழர் என்ற
மரபினத்திலிருந்து தோன்றியவர்கள் என்றோ, தங்கள் மொழி,
தமிழிலிருந்து பிரிந்தது என்றோ ஏற்றுக் கொள் கிறார்களா? அதுவும்
இல்லை. தமிழ் நாட்டில் மட்டும் திராவிடத்தைப் பேசி தமிழினத்தைச்
சீரழிக்கும் கீழறுப்பு வேலைகளை இன்றும் தொடர்வது ஞாயமா?
நேர்மையா?

“திராவிடம்” என்ற சொல்லை வடமொழியில் உள்ள மனுதர்ம
நூலிலிருந்தும், பிற சமற்கிருத நூல்களிலிருந்தும் எடுத்தேன் என்கிறார்
கால்டுவெல். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய
மொழிகளுக்கு மூலமொழி (Proto Language) திராவிடம் என்றார். மூல மொழி
தமிழ்தானே தவிர, திராவிடம் அல்ல என்பதைத் தேவநேயப் பாவாணர்
உள்ளிட்ட மொழி நூல் அறிஞர் பலர் நிறுவியுள்ளனர்! ஆனால் தமிழ்
நாட்டுத் திராவிட அரசியல்வாதிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல்,
ஆரியர்கள் உருவாக்கிய திராவிடத்தை விடாப்பிடியாகப்
பிடித்துக்கொண்டு தமிழின் மேன்மையைக் குலைக்கின்றனர்.

கால்டுவெல் தவறாகப் பெயர் சூட்டிய திராவிடத்தைப் பின்பற்றியே
மேலை ஆய்வாளர்கள் தமிழர் நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகத்தை
திராவிட நாகரிகம் என்று கூறினர். அதற்காக ‡ அது திராவிட நாகரிகம்
ஆகி விடாது. தமிழர் நாகரிகமே!

காசி பாரத வித்யா பீடம் உ.வே.சாமிநாதய்யருக்கு “திராவிட பாஷாவித்வ”
என்று பட்டம் கொடுத்தது. காஞ்சி மடம் அவருக்கு “தட்சிணாய கலாநிதி”
என்று பட்டம் கொடுத்தது. இவை இரண்டும் ஆரியப் பார்ப்பன பீடங்கள்.
அவை “தமிழ்” மொழியை வெறுப்பவை. தமிழ் என்று ஒலிப்பதும் இழிவு
என்று கருதுபவை. அப்படிப் பட்டோர் கொடுத்த “திராவிட வித்வ” என்ற
பட்டத்தைத் தான் தமது திராவிடச் சித்தாந் தத்துக்குச் சான்றாகக்
கருணாநிதி கூறுகிறார். பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து சான்று காட்ட
வேண்டியது தானே என்று நாம் கருணாநிதியைப் பார்த்துக் கேட்கிறோம்.
உடனே புலவர் முருகேசன் சீறிப்பாய்கிறார். இதோ பழந்தமிழ் இலக்கியச்
சான்று என்று ஆரியப் பார்ப்பனர் பிள்ளை லோகாச் சாரி ஜீயர் 16‡ஆம்
நூற்றாண்டில் எழுதிய விளக்க உரையைத் தூக்கிப் போடுகிறார்.

கருணாநிதியாக இருந்தாலும் முருகேசனாக இருந்தாலும் திராவிடத்
திரிபு வாதத்திற்குக் கிடைக்கும் சான்றெல்லாம் ஆரியப் பார்ப்பனச்
சான்றுகள் மட்டுமே!

“திராவிடம் என்ற சொல் தமிழனை, தமிழை, தமிழ் நிலத்தைக் குறிக்கத்
திரித்துச் சொல்லப்பட்ட சொல்தான்“ என்கிறார் புலவர் முருகேசன். தமிழ்,
தமிழர், தமிழகம் என்ற அசல் இருக்கும்போது ஆரியர் திரித்துச்சொன்ன
திராவிடத்தை ஏன் நீங்கள் பயன் படுத்துகிறீர்கள்? நீங்களும்
ஆரியரைப்போல் ஏதோ ஒரு வகையில் திரிபுவாதிகளா? தஞ்சாவூர்,
தூத்துக்குடி என்ற அசல் தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது டேஞ்சூர்,
டூட்டுக் கொரின் என்ற அயலாரின் திரிபுகளை ஏன் பயன் படுத்தவேண்டும்?
கி.பி. 7‡ஆம் நூற்றாண்டில் ஜைன சமயத்தைச் சேர்ந்த ஆரியரான
வஜ்ரநந்தி தமிழகத்தில் “திராவிட சங்கம்” ஒன்றை உருவாக்கினார்.
ஜைனம், பெளத்தம் ஆகியவை முற்போக்கு மதங்கள் தாம். ஆனால் அவை
ஆரியத்தில் தோன்றியவை. அச்சமயங்களின் குருமார்கள் தமிழ் நாட்டில்

பிராக்கிருதம், சமற் கிருதம், பாலி போன்ற அயல் மொழிகளைத்தாம்
பரப்பினர். அவர்கள் தமிழை மதிக்க வில்லை, ஏற்கவில்லை. எனவே தான்
ஆரியரான வஜ்ரநந்தி தமிழ்நாட்டில் திராவிட சங்கம் தொடங்கினார்.

சமண மதத்திலிருந்து விலகி சிவநெறிக்கு வந்த தமிழரான
திருநாவுக்கரசர் “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” என்று
சிவபெருமானைப் பாடினார். அவர் “திராவிடன் கண்டாய்” என்று
பாடவில்லை. “திராவிடன்“ என்பதைத் தமிழர்கள் இழிவாகக்
கருதினார்கள். திருநாவுக்கரசர் காலமும் கி.பி. 7‡ஆம் நூற்றாண்டே!
நாலாயிரத்திவ்வியப் பிரபந்த நூல்களை நாயக்கர் ஆட்சிக் காலத்தில்
பார்ப்பனர்கள் “திராவிட வேதம்” என்று கூறியதை ஒரு சான்றாக
முருகேசன் குறிப்பிடுகிறார். ஆரியர் உருவாக்கிய மண் குதிரையை
நம்பித்தான் திராவிடப் பயணம் நடை பெறுகிறது என்பதற்கு இது இன்னும்
ஒரு சான்று.

“திராவிடம்” என்ற பெயரில் தானே பெரியார் தொடங்கி இன்றுள்ள
திராவிடத் தலைவர்கள் வரை தமிழர்களுக்குப் பாடு பட்டார்கள் என்கிறார்
புலவர் முருகேசன். ஏன், தமிழர்கள் என்ற இனப்பெயரில் செயல்
பட்டிருந்தால் பேரிழப்புகள் ஏற்பட்டிருக்குமோ? அத்தலைவர்கள்
தங்களுக்கு மட்டும் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர் என்று பட்டம்
சூட்டிக் கொண்டார்கள். திராவிடர் தலைவர், திராவிட இனத்தலைவர்
என்று பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டியதுதானே!

தமிழன் என்று சொன்னால் தமிழனை மட்டும் குறிக்கும், திராவிடன்
என்று சொன்னால் தமிழனையும், தெலுங்கர், கன்னடர், மலையாளி,
துளுவர் ஆகியோரையும் குறிக்கும் என்கிறார் முருகேசன். எதற்காக
தெலுங்கர், கன்னடர், மலையாளிகளைத் தமிழருடன் இணைத்து
ஒன்றாகப் பேச வேண்டும். தமிழர்களின் காவிரி உரிமை, முல்லைப்
பெரியாறு அணை உரிமை, பாலாற்று உரிமை ஆகியவற்றைப் பறித்தது
போதாதா? கர்நாடகத்திலும்,கேரளத்திலும் காலம்காலமாக வாழும்
தமிழர்களைத் தாக்கி அகதிகளாக விரட்டியது போதாதா? தமிழ்ப்
பெண்களை மானபங்கப்படுத்தியது போதாதா? தமிழர் தாயக

ஊர்களையும், நகரங்களையும் ஆயிரக்கணக்கில் மேற் படி மூன்று
இனத்தாரும் அபகரித்துக் கொண்டது போதாதா?
அந்த மூன்று மாநிலத்தவர்களும் தமிழர்களையும் இணைத்துக்கொண்டு
தங்களைத் திராவிடர் என்று கூறுகிறார்களா? இல்லை. பின்னர் தமிழ்
நாட்டில் மட்டும் திராவிடத் தலைவர்கள் தெலுங்கர், கன்னடர்,
மலையாளிகளுக்காகப் பரிந்து பேசுவதும், திராவிடர் என்று தான்
இனப்பெயர் வைத்துக் கொள்ளவேண்டும் என்று வரிந்து கட்டுவதும் ஏன்?
இதிலுள்ள சூழ்ச்சி என்ன? தெலுங்கர், கன்னடர், மலையாளிகளிடம்
தமிழர்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? இனியும் ஏமாற்றத் துடிப்பதேன்
திராவிடக் கட்சிகள்?


தமிழ்த் தேசியம் என்ற மிகச்சரியான தேசிய இன, அரசியல் விடுதலை
முழக்கம் தமிழர்களிடையே எழுச்சிப் பெற்று வருவதை சகித்துக் கொள்ள
முடியாமல்தான் திராவிடத் திரிபுவாதிகள் குறுக்குச்சால் ஓட்டுகிறார்கள்.
இனியும் தமிழர்கள் திராவிடத்தைச் சுமக்க மாட்டார்கள்; தன்னழிவுப்
பாதையில் போக மாட் டார்கள்.
கடைசியாக ஒன்று, பிற்காலத்தில் “திராவிடர்’ என்ற சொல் தென்னாட்டுப்
பிராமணர்களை மட்டுமே குறித்தது என்று பிரித்தானியக்
கலைக்களஞ்சியம் விளக்குவதை முனைவர் த. செயராமன் சுட்டியுள்ளார்.

https://naanthamizhmaanavan.blogspot.com/2018/01/blog-post.html

திராவிடத் திரிபுவாதம்

1 day 5 hours ago
திராவிடத் திரிபுவாதம் சங்க இலக்கியத்தில் மொகஞ்சொதாரோ – அரப்பா இருக்கிறதா? எதிர்வினை: ‘திராவிடமும் இந்தியமும் உடன் கட்டை ஏறவேண்டும்’ என்றும், ‘சங்க இலக்கியத்தில், காப்பிய இலக்கியத்தில் பக்தி இலக்கியங்களில் திராவிடர் என்ற சொல் இல்லை’ என்றும் பெ.மணியரசன் பேசியதைத் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் (ஏப்ரல் 16‡30,2012) வெளியிட்டிருந்தீர்கள். ‘திராவிடம்’ என்ற சொல் தமிழனை, தமிழை, தமிழ் இனத்தைக் குறிக்கத் திரித்துச் சொல்லப்பட்ட சொல்தான். திரிந்த தமிழ்ச் சொல்லே தவிர வடசொல் அல்ல. தமிழன் என்று சொன்னால் தமிழனை மட்டும் குறிக்கும். திராவிடன் என்று சொன்னால் தமிழனையும் குறிக்கும், மொழியால் தெலுங்கராக, கன்னடராக, மலையாளியாக, துளுவராகத் திரிந்துபோனவர்களையும் குறிக்கும். அவர்கள் எல்லாம் மொழியால் திரியாமல் இருந்த காலத்தில் ஆரியரால் சொல்லப்பட்ட திரிபுச்சொல்லே திராவிடம். தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று சொல்லிக்கொள்வதை இழிவாகக்கருதினால் சிந்துவெளி நாகரிகம் எங்கள் நாகரிகம் என்று உரிமை கொண்டாடக்கூடாது. சிந்துவெளிக் காளைச் சின்னத்தைத் தமிழர் கண்ணோட்டத்திலிருந்து எடுத்துவிடவேண்டும். அது திராவிட நாகரிகத்தின் குறியீடு. மொகஞ்சொதாரோ, அரப்பா நாகரிகம் திராவிட நாகரிகம் என்று டாக்டர் பானர்ஜி கூறியிருக்கிறார். வரலாற்று உலகம் தமிழனைத் திராவிடன் என்றுதான் அடையாளப்படுத்தி உள்ளது. ‘திராவிடம்’ என்ற சொல்சங்க இலக்கியத்தில் இல்லை. மொகஞ்சொதாரோ, அரப்பாவும் சங்க இலக்கியத்தில் இல்லை. அதில் மட்டும் எப்படி உரிமைகொண்டாட முடியும்? ‘நெஞ்சுக் கிறாள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ நன்னூற்றுரை’ என்ற பெரிய திருமொழிச் சிறப்புப்பாயிரத்தில் வரும் ‘தமிழ நன்னூற்றுரை’ என்பதற்கு திராவிட சாத்திரம் என்றார் பிள்ளை லோகாச் சாரிய ஜீயர். 500 ஆண்டுகளுக்கு முன்பே 18‡ஆம் நூற்றாண்டில் தாயுமானவர் ‘கல்லாத பேர்களே நல்லவர்கள்’ என்ற பாடலில் ‘வடமொழியிலே வல்லான் ஒருவன் வரவும் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்’ என்று கூறியுள்ளார். இதில் தமிழைத்தான் திராவிடம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆழ்வார்களின் நாலாயிரத்திவ்விய பிரபந்தங்கள் திராவிட வேதம் என்று குறிக்கப்படுகின்றன. இயக்கத்திற்குத் திராவிடம் என்று பெயரிட்டு திராவிடம் பேசிய தலைவர்கள் பெரியார் முதல் இன்றுள்ளவர்கள் வரை தமிழனுக்காக, தமிழுக்காக, தமிழ் நிலத்திற்காக உழைத்திருக்கிறார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. **** மறுவினை: தேவையில்லை திராவிடத் திரிபுவாதம் பெ.மணியரசன் “திராவிடம்” என்பது திரிந்த தமிழ்ச் சொல் என்கிறார் புலவர் முருகேசன். அத்திரிபு தமிழர்களிடையே ஏற்பட்டதா, அயல் இனத்தவரான ஆரியரிடையே ஏற்பட்டதா? அவர்களிடம் அது எப்போது ஏற்பட்டது? இவ் வினாக்களுக்கு விடையளிக்கும் போதுதான் “திராவிடர்” என்பது அயல் இனத்தார் தமிழரை அழைத்த கொச்சை வடிவம் என்று புரியும். இந்தியா என்று இப்பொழுது அழைக்கப்படும் இத்துணைக்கண்டமெங்கும் தமிழர்களே வாழ்ந்த காலத்தில் அயல் இனத்தவரான ஆரியர் இங்கு வந்தபோது, தமிழ், தமிழர் என்பதை ஒலிக்கத் தெரியாமல் திரமிள, திராவிட என்று ஒலித்தனர். அவ்வாறே திராவிடர் என்று பிராக்ருத, சமற்கிருத மொழிகளில் எழுதியும் வைத்தார்கள். அக்கொச்சைச் சொல்லை அப்போதும் சரி, அதன்பின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்பும் சரி தமிழர்கள் ஏற்கவில்லை. “திராவிடர்” என்று தங்களை அழைத்துக் கொள்வதைத் தமிழர்கள் இழிவாகக் கருதியதால்தான், சங்க இலக்கியங்களிலோ, காப்பிய இலக்கியங்களிலோ, பக்தி இலக்கியங்களிலோ “திராவிடர்” என்ற சொல்லைத் தமிழர்கள் பயன் படுத்தவில்லை என்று நான் பேசி வருகிறேன்; எழுதி வருகிறேன். எனது அக்கருத்தை மறுக்கவந்த புலவர் முருகேசன், ஆழ்வார்கள் காலப் பெரிய திருமொழியில் திராவிடர் என்று கூறியுள்ளதாகப் புனைந்துரைக்கிறார். பெரிய திருமொழியின் சிறப்புப் பாயிரப் பாட்டையும் எடுத்துப் போட்டுள்ளார். அவர் சான்று காட்டியுள்ள பாடலே எனது கருத்துக்கு வலுவான சான்றாகும். பெரிய திருமொழியை எழுதியவர் திருமங்கை ஆழ்வார். அவரது காலம் கி.பி. 9‡ஆம் நூற்றாண்டு. அப்பாடலில் “நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ நன்னூற்றுறை” என்று உள்ளது. இதில் “தமிழ நன்னூல்கள்” பற்றிக் கூறப் பட்டுள்ளது. புலவர் முருகேசன் புனைந்துரைப் பது போல் “திராவிட நன்னூல்கள்” என்று கூறப்பட வில்லை. பெரிய திருமொழிக்கு ‡ அதில் உள்ள மேற்படிப் பாடலுக்குப் பிற்காலத்தில் பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் உரை எழுதிய பிள்ளை லோகாச்சாரி ஜீயர் என்பவர் தமிழ நன்னூல்கள் என்பதற்குத் “திராவிட சாத்திரம்” என்று விளக்கம் தந்துள்ளார் என்கிறார். நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய ‡ எழுதிய பக்திப் பாடல்கள் காலத்தைப் பக்தி இலக்கியக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் வரையறுத்தார்கள். கி.பி. 7 ‡ஆம் நூற்றாண்டு தொடங்கி சேக்கிழாரின் பெரியபுராணம் எழுதப்பட்ட 12‡ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரை உள்ள காலப் பகுதியைப் பக்தி இலக்கியக் காலம் என்பர். நான் இந்தப் பக்தி இலக்கியக் காலநூல்கள் ஏதாவதொன்ஷீல் “திராவிடம்” என்ற சொல் பயன் படுத்தப்பட்டதா என்று வினவி, இல்லை என்று விடையிறுத்திருந்தேன். புலவர் முருகேசன் பக்தி இலக்கியக் காலநூல் ஒன்றுக்கு பக்தி இலக்கியக் காலம் முடிந்து 400 ஆண்டுகள் கழிந்தபின் எழுதிய விளக்கவுரையில் “திராவிட” என்ற சொல் இருக்கிறது என்கிறார். இது என்ன வாதம்! விதண்டாவாதம்! வரலாற்று ஆசிரியர்கள் வரையறுத்த கால அளவை வைத்தே நான் சங்க காலம், காப்பியக் காலம், பக்தி இலக்கியக் காலம் என்று வரிசைப் படுத்தி அவற்றுள் எதிலும் “திராவிட” என்ற சொல் பயன்படுத்தப்பட வில்லை, காரணம் தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொள்வதைக் கேவலமாகக் கருதிய காலங்கள் அவை என்றேன். பெரிய திருமொழி நூலில் இருக்கிறது “திராவிடம்” என்று புலவர் முருகேசன் காட்டியிருந்தால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். அது எழுதப்பட்டு, 700 ஆண்டுகள் கழித்து, பக்தி இலக்கியக் காலம் முடிந்து 400 ஆண்டுகளுக்குப் பின், பெரிய திருமொழிக்கு உரை எழுதிய பிராமணரான பிள்ளை லோக்காச்சாரி ஜீயர் தம் சொந்த சொல்லாகப் பயன்படுத்திய “திராவிட” என்ற வைக்கோல் துரும்பை எடுத்துக்கொண்டு வாள் வீசுகிறார் புலவர் முருகேசன். அசலான தமிழ் இனத்தை ‡ தமிழ் மொழியைப் புறந்தள்ளி விட்டுப் போலியான திராவிடத்தை எடுத்துக் கொள்வதுதான் திராவிட இயக்க மரபு. கருணாநிதியிலிருந்து புலவர் முருகேசன் வரை உள்ள திராவிடச் சிந்தனையாளர்களுக்குக் கிடைத்த திராவிடச் சான்று அனைத்தும் ஆரியம் தந்த சான்றுகள் தாம்! சங்க காலம், காப்பியக் காலம், பக்தி இலக்கியக் காலம் ஆகிய மூன்று காலப் பகுதிகளிலும் தமிழர் என்ற இனப் பெயரும், ஆரியர் என்ற இனப் பெயரும் பல இடங்களில் பதிவாகியுள்ளன. ஆனால் ஓரிடத்தில் கூட திராவிட என்ற இனப் பெயரோ அல்லது மொழிப் பெயரோ பதிவாகவில்லை. காரணம் தமிழர் என்பதும் ஆரியர் என்பதும் அசலான இனப்பெயர்கள். திராவிடம் என்பது மாயை. தெலுங்கினத்தைச் சேர்ந்த நாயக்க மன்னர்கள் தமிழ் நாட்டை ஆண்ட காலம் கி.பி. 16‡ஆம் நூற்றாண்டு. அப் போது சமற்கிருதமும் தெலுங்கும் தமிழகத்தில் கோலோச்சின. தமிழ் புறந்தள்ளப் பட்டது. அக்காலத்தில்தான் மணிப்பிரவாள நடையை உரையாசிரியர்கள் அதிகம் பயன்படுத்தினார்கள். அதிலும் வைணவ ஆச்சாரியார்கள் (பிராமணர்கள்) மணிப்பிரவாள நடையை அதிகம் பயன்படுத்தினர். சமற்கிருதமும் தமிழும் சரிக்குச் சரியாகக் கலந்து எழுதுவதற்குப் பெயர் மணிப்பிரவாளம்! மணிப்பிரவாளத்தில் தமிழைத் தமிழ் என்று சொல்ல மாட்டார்கள், திராவிடம் என்றே சொல்வார்கள். ஆரியப் பிராமணரான பிள்ளை லோகாச்சாரி ஜீயர் பயன்படுத்திய மணிப்பிரவாள “திராவிடம்” தான் புலவர் முருகேசன் அவர்களுக்குக் கிடைத்த ஆகப்பெரிய சான்று! 18‡ஆம் நூற்றாண்டில் தான் முதல்முதலாகத் தமிழ்ச் செய்யுளில் தாயுமானவர் “திராவிட” என்றச் சொல்லைப் பயன்படுத்தினார். பிராமணர்களின் மணிப்பிரவாளம் மலிந்திருந்த காலம் அது. தாயுமானவரும் தமது நேர் கூற்றாகத் “திராவிடம்” என்ற சொல்லைப்பயன் படுத்தவில்லை. விதண்டாவாதம் செய்பவர்களைச் சாடிய தாயுமானவர், ‘இது என்றால் அது என்பர், அது என்றால் இது என்பர்’ என்று கூறி நையாண்டி செய்தார். “முதலில் வடமொழியில் வந்ததென்பார்; வட மொழியில் வல்லவர் ஒருவர் வந்து விட்டால் திராவிட மொழியில் வந்ததென்பார்” என்று கூறினார் தாயுமானவர். இதனால் படித்தவர்களை விடப்படிக்காதவர்களே மேல் என்றார். “சங்க இலக்கியத்தில் மொகஞ்சொதாரோ, அரப்பா என்ற சொற்கள் இடம் பெற்றிருக்கின்றனவா? இல்லை. அவை இடம் பெற வில்லை என்பதற்காக அவை இல்லை என்று ஆகிவிடுமா” என்று கேட்கிறார் முருகேசன். 1920‡களில் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப் பட்டவை, புதையுண்டு கிடந்த மொகஞ் சொதாரோ, அரப்பா நகரங்கள். இந்நகர நாகரிகம் 3500 ஆண்டுகளுக்கு முன் நிலவிய தமிழர் நாகரிகமாகும். சிந்து வெளி நாகரிகம் ‡ மொகஞ் சொதாரோ, அரப்பா போன்றவற்றை சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன என்று ஐராவதம் மகாதேவன் கூறுகிறார். சிந்துவெளித் தமிழர் நாகரிகத்தின் பல பகுதிகள் குசராத்திலும் இருந்தன. அங்குள்ள துவாரகையை தலை நகராகக் கொண்டு தமிழக வேளிர் ஆண்டனர் என்ற குறிப்பைக் கபிலர் கூறியுள்ளார். புறநானூறு 201‡ ஆம் பாடலில் இக் குறிப்புள்ளது. பாரி மகளிரை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்ளுமாறு இருங்கோவேளை வேண்டிய பொழுது, கபிலர் இருங்கோவேளின் முன்னோர் துவாரகையை ஆண்ட வேளிர் ஆவர். அவ்வேளிர் மரபில் நீ 49‡ஆவது தலைமுறை என்றார். “நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச் செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை உவரா ஈகைத் துவரை யாண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே” என்று கபிலர் கூறினார். இவ்வரிகளுக்கு உ.வே. சாமிநாதய்யர் பிழையான விளக்கம் எழுதியுள்ளார் என்று ஐராவதம் மகாதேவன் கூறி மேலே சொன்ன புதிய விளக்கம் தந்துள்ளார். (சிந்து வெளிப்பண்பாடும் சங்க இலக்கியமும் ‡ முனைவர் ஐராவதம் மகாதேவன் ‡ செம்மொழித் தமிழாய்வு நிறுவன வெளியீடு, சனவரி ‡ 2010) துவரை என்பதை துவார சமுத்திரம் என்று உ.வே.சா. கூறியிருப்பது சரியன்று என்று மகாதேவன் சுட்டுகிறார். உ.வே.சா. பிழையாகக் கருதிய துவார சமுத்திரம் என்ற கருத்தைப் பின்னர் வந்த அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை போன்றோரும் அவ்வாறே எடுத்துக் கொண்டனர். பாரி மகளிரை ஏற்க மறுத்த இருங்கோவேள் மீது கபிலர் சினந்து பாடிய பாடல், புறம் 203‡ஆம் செய்யுளில் உள்ளது. அப்பாடலில் வரும் “அரையம்” என்ற சொல் அரப்பாவைக் குறிப்பிடுகிறது என்கிறார் ஐராவதம் மகாதேவன். தமக்கு முன் பி.எல்.சாமி அரையம் என்பதை அரப்பா என்று செந்தமிழ்ச்செல்வி சனவரி 1994 இதழில் எழுதியதையும் சுட்டிக் காட்டுகிறார் மகாதேவன். “இருபாற் பெயரிய வருகெழு மூதூர்க் கோடி பல வடுக்கிய பொருமணுக்குதவிய நீடுநிலை அரையத்துக் கேடுங் கேளினி” என்ற வரிகளில் அழிந்து போன இருபெரும் சிந்து வெளி நகரங்களைக் குறிக்கின்றார் என்கிறார் மகாதேவன். தம் கூற்றுக்கு மேலும் சான்றுகளாக அகம் 15, 208, 372, 375 ஆகிய பாடல் களையும் மற்ற சங்கப் பாடல்களையும் அவர் கூறுகிறார். எனவே, எடுத்தேன் கவிழ்த் தேன் பாணியில் சங்க இலக்கியங்களில் சிந்துவெளி நாகரிக நகரங்கள் குறிப்பிடப் பட வில்லை என்று கூற வேண்டியதில்லை. புதிது புதிதாய் வருகின்ற ஆய்வுகளையும் புலவர் முருகேசன் போன்ற திராவிடச் சிந்தனையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். தெலுங்கு நாயக்கமன்னர்கள் காலத்திலேயே திளைத் திருக்கக் கூடாது; கால்டு வெல் காலத்திலேயேகளித் திருக்கக்கூடாது. அடுத்து,தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதை இழி வாகக் கருதினால், ‘சிந்து வெளி நாகரிகம் எங்கள் நாகரிகம்’ என்று உரிமை கொண்டாடக் கூடாது என்கிறார். ஏன் உரிமை கொண்டாடக்கூடாது? தஞ்சாவூரை ஒலிக்கத் தெரியாமல் (உச்சரிக்கத் தெரியாமல்) டேஞ்சூர் என்றனர் வெள்ளையர். தஞ்சாவூரை டேஞ்சூர் என்றுதான் இன்றும் சொல்லவேண்டும், தஞ்சாவூர் என்று சொன்னால், தமிழர்கள் தஞ்சாவூருக்கு உரிமை கொண் டாடக்கூடாது என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது புலவர் முருகேசன் கூற்று! “தமிழர்”என்பதை ஒலிக்கத் தெரியாமல், திரமிள, திராவிடர் என்றனர் வந்தேறிகளான ஆரியர்கள். அந்தக் கொச்சைத் திரிபைத் தமிழர்கள் இன்றும் கட்டி அழ வேண்டுமா? அடுத்து, தமிழர் என்ற மரபினத்திலிருந்து தெலுங்கர், கன்னடர் போன்றோர் பிரிந்து போய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டன. பால் தயிரான பிறகு, தயிர் மீண்டும் பால் ஆகாததுபோல் தமிழரிலிருந்து பிரிந்துசென்ற தெலுங்கர், கன்னடர், மலையாளி போன்றோர் மீண்டும் தமிழராகமாட்டார், அவர்கள் மொழியும் தமிழாகாது என்றார் தேவநேயப் பாவாணர். எந்தக்காலத்திலும் பழந் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத “திராவிடர்” என்ற சொல்லை இந்தக் காலத்தில் தமிழர்கள் என்ன காரணம் பற்றி ஏற்கவேண்டும்? ஆரியர்களும், ஆரியப் பார்ப்பனர்களும் மட்டுமே அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை “திராவிடம்” என்று பேசி தமிழரைக் கொச்சைப்படுத்தி வருகின்றனர். தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் முதலியோர் தாங்கள் தமிழர் என்ற மரபினத்திலிருந்து தோன்றியவர்கள் என்றோ, தங்கள் மொழி, தமிழிலிருந்து பிரிந்தது என்றோ ஏற்றுக் கொள் கிறார்களா? அதுவும் இல்லை. தமிழ் நாட்டில் மட்டும் திராவிடத்தைப் பேசி தமிழினத்தைச் சீரழிக்கும் கீழறுப்பு வேலைகளை இன்றும் தொடர்வது ஞாயமா? நேர்மையா? “திராவிடம்” என்ற சொல்லை வடமொழியில் உள்ள மனுதர்ம நூலிலிருந்தும், பிற சமற்கிருத நூல்களிலிருந்தும் எடுத்தேன் என்கிறார் கால்டுவெல். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளுக்கு மூலமொழி (Proto Language) திராவிடம் என்றார். மூல மொழி தமிழ்தானே தவிர, திராவிடம் அல்ல என்பதைத் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட மொழி நூல் அறிஞர் பலர் நிறுவியுள்ளனர்! ஆனால் தமிழ் நாட்டுத் திராவிட அரசியல்வாதிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல், ஆரியர்கள் உருவாக்கிய திராவிடத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு தமிழின் மேன்மையைக் குலைக்கின்றனர். கால்டுவெல் தவறாகப் பெயர் சூட்டிய திராவிடத்தைப் பின்பற்றியே மேலை ஆய்வாளர்கள் தமிழர் நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று கூறினர். அதற்காக ‡ அது திராவிட நாகரிகம் ஆகி விடாது. தமிழர் நாகரிகமே! காசி பாரத வித்யா பீடம் உ.வே.சாமிநாதய்யருக்கு “திராவிட பாஷாவித்வ” என்று பட்டம் கொடுத்தது. காஞ்சி மடம் அவருக்கு “தட்சிணாய கலாநிதி” என்று பட்டம் கொடுத்தது. இவை இரண்டும் ஆரியப் பார்ப்பன பீடங்கள். அவை “தமிழ்” மொழியை வெறுப்பவை. தமிழ் என்று ஒலிப்பதும் இழிவு என்று கருதுபவை. அப்படிப் பட்டோர் கொடுத்த “திராவிட வித்வ” என்ற பட்டத்தைத் தான் தமது திராவிடச் சித்தாந் தத்துக்குச் சான்றாகக் கருணாநிதி கூறுகிறார். பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து சான்று காட்ட வேண்டியது தானே என்று நாம் கருணாநிதியைப் பார்த்துக் கேட்கிறோம். உடனே புலவர் முருகேசன் சீறிப்பாய்கிறார். இதோ பழந்தமிழ் இலக்கியச் சான்று என்று ஆரியப் பார்ப்பனர் பிள்ளை லோகாச் சாரி ஜீயர் 16‡ஆம் நூற்றாண்டில் எழுதிய விளக்க உரையைத் தூக்கிப் போடுகிறார். கருணாநிதியாக இருந்தாலும் முருகேசனாக இருந்தாலும் திராவிடத் திரிபு வாதத்திற்குக் கிடைக்கும் சான்றெல்லாம் ஆரியப் பார்ப்பனச் சான்றுகள் மட்டுமே! “திராவிடம் என்ற சொல் தமிழனை, தமிழை, தமிழ் நிலத்தைக் குறிக்கத் திரித்துச் சொல்லப்பட்ட சொல்தான்“ என்கிறார் புலவர் முருகேசன். தமிழ், தமிழர், தமிழகம் என்ற அசல் இருக்கும்போது ஆரியர் திரித்துச்சொன்ன திராவிடத்தை ஏன் நீங்கள் பயன் படுத்துகிறீர்கள்? நீங்களும் ஆரியரைப்போல் ஏதோ ஒரு வகையில் திரிபுவாதிகளா? தஞ்சாவூர், தூத்துக்குடி என்ற அசல் தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது டேஞ்சூர், டூட்டுக் கொரின் என்ற அயலாரின் திரிபுகளை ஏன் பயன் படுத்தவேண்டும்? கி.பி. 7‡ஆம் நூற்றாண்டில் ஜைன சமயத்தைச் சேர்ந்த ஆரியரான வஜ்ரநந்தி தமிழகத்தில் “திராவிட சங்கம்” ஒன்றை உருவாக்கினார். ஜைனம், பெளத்தம் ஆகியவை முற்போக்கு மதங்கள் தாம். ஆனால் அவை ஆரியத்தில் தோன்றியவை. அச்சமயங்களின் குருமார்கள் தமிழ் நாட்டில் பிராக்கிருதம், சமற் கிருதம், பாலி போன்ற அயல் மொழிகளைத்தாம் பரப்பினர். அவர்கள் தமிழை மதிக்க வில்லை, ஏற்கவில்லை. எனவே தான் ஆரியரான வஜ்ரநந்தி தமிழ்நாட்டில் திராவிட சங்கம் தொடங்கினார். சமண மதத்திலிருந்து விலகி சிவநெறிக்கு வந்த தமிழரான திருநாவுக்கரசர் “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” என்று சிவபெருமானைப் பாடினார். அவர் “திராவிடன் கண்டாய்” என்று பாடவில்லை. “திராவிடன்“ என்பதைத் தமிழர்கள் இழிவாகக் கருதினார்கள். திருநாவுக்கரசர் காலமும் கி.பி. 7‡ஆம் நூற்றாண்டே! நாலாயிரத்திவ்வியப் பிரபந்த நூல்களை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர்கள் “திராவிட வேதம்” என்று கூறியதை ஒரு சான்றாக முருகேசன் குறிப்பிடுகிறார். ஆரியர் உருவாக்கிய மண் குதிரையை நம்பித்தான் திராவிடப் பயணம் நடை பெறுகிறது என்பதற்கு இது இன்னும் ஒரு சான்று. “திராவிடம்” என்ற பெயரில் தானே பெரியார் தொடங்கி இன்றுள்ள திராவிடத் தலைவர்கள் வரை தமிழர்களுக்குப் பாடு பட்டார்கள் என்கிறார் புலவர் முருகேசன். ஏன், தமிழர்கள் என்ற இனப்பெயரில் செயல் பட்டிருந்தால் பேரிழப்புகள் ஏற்பட்டிருக்குமோ? அத்தலைவர்கள் தங்களுக்கு மட்டும் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர் என்று பட்டம் சூட்டிக் கொண்டார்கள். திராவிடர் தலைவர், திராவிட இனத்தலைவர் என்று பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டியதுதானே! தமிழன் என்று சொன்னால் தமிழனை மட்டும் குறிக்கும், திராவிடன் என்று சொன்னால் தமிழனையும், தெலுங்கர், கன்னடர், மலையாளி, துளுவர் ஆகியோரையும் குறிக்கும் என்கிறார் முருகேசன். எதற்காக தெலுங்கர், கன்னடர், மலையாளிகளைத் தமிழருடன் இணைத்து ஒன்றாகப் பேச வேண்டும். தமிழர்களின் காவிரி உரிமை, முல்லைப் பெரியாறு அணை உரிமை, பாலாற்று உரிமை ஆகியவற்றைப் பறித்தது போதாதா? கர்நாடகத்திலும்,கேரளத்திலும் காலம்காலமாக வாழும் தமிழர்களைத் தாக்கி அகதிகளாக விரட்டியது போதாதா? தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தியது போதாதா? தமிழர் தாயக ஊர்களையும், நகரங்களையும் ஆயிரக்கணக்கில் மேற் படி மூன்று இனத்தாரும் அபகரித்துக் கொண்டது போதாதா? அந்த மூன்று மாநிலத்தவர்களும் தமிழர்களையும் இணைத்துக்கொண்டு தங்களைத் திராவிடர் என்று கூறுகிறார்களா? இல்லை. பின்னர் தமிழ் நாட்டில் மட்டும் திராவிடத் தலைவர்கள் தெலுங்கர், கன்னடர், மலையாளிகளுக்காகப் பரிந்து பேசுவதும், திராவிடர் என்று தான் இனப்பெயர் வைத்துக் கொள்ளவேண்டும் என்று வரிந்து கட்டுவதும் ஏன்? இதிலுள்ள சூழ்ச்சி என்ன? தெலுங்கர், கன்னடர், மலையாளிகளிடம் தமிழர்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? இனியும் ஏமாற்றத் துடிப்பதேன் திராவிடக் கட்சிகள்? தமிழ்த் தேசியம் என்ற மிகச்சரியான தேசிய இன, அரசியல் விடுதலை முழக்கம் தமிழர்களிடையே எழுச்சிப் பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாமல்தான் திராவிடத் திரிபுவாதிகள் குறுக்குச்சால் ஓட்டுகிறார்கள். இனியும் தமிழர்கள் திராவிடத்தைச் சுமக்க மாட்டார்கள்; தன்னழிவுப் பாதையில் போக மாட் டார்கள். கடைசியாக ஒன்று, பிற்காலத்தில் “திராவிடர்’ என்ற சொல் தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே குறித்தது என்று பிரித்தானியக் கலைக்களஞ்சியம் விளக்குவதை முனைவர் த. செயராமன் சுட்டியுள்ளார். https://naanthamizhmaanavan.blogspot.com/2018/01/blog-post.html