Aggregator

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள்

16 hours 43 minutes ago
ஆப்கானுக்கு 250 என்ற வெற்றியிலக்கை நிர்ணயித்தது பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர்' சுற்றின் நான்காவது போட்டியில் இம்ருல் கைஸ் மற்றும் மாமதுல்லாவின் சிறந்த இணைப்பாட்டம் காரணமாக பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டினை இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் மொஷ்ரபி மோர்டாசா முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். அதற்கிணங்க ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் ஹுசைன் ஷான்டோ ஆகியோர் களம் நுழைந்தனர். இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 16 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது. அதன்படி 4 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஹுசைன் ஷான்டோ 6 ஓட்டத்துடன் அத்தாப் ஆலமின் பந்து வீச்சில் ரஹ்மத்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த மொஹமட் மித்துனும் 2 ஓட்டத்துடன் முஜிபுர் ரஹ்மானின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து ரஹும் களமிறங்க அவருடன் இணைந்து ஜோடி சேர்ந்து ஆடிவந்த லிட்டன் தாஸ் நிதானமாக துடுப்பாட்டத்த‍ை வெளிப்படுத்த அணியின் ஓட்ட எண்ணிக்கை சீரானது. முதல் 10 ஓவரில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்து 34 ஓட்டத்தை பெற்றது. ஆடுகளத்தில் லிட்டன் தாஸ் 21 ஓட்டத்துடனம் ரஹிம் 5 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வர 13.2 ஆவது ஓவரில் அணி 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எனினும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் புயல் பந்துப் பறிமாற்றம் மேற்கொள்ள பந்தை கையில் எடுக்க பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தது. அதற்கிணங்க சிறப்பாக ஆடி வந்த லிட்டன் தாஸ் 41 ஓட்டத்துடன் ரஷித் கானின் பந்து வீச்சில் இஹசனுல்லாஹ் ஜெனட்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவரின் வெளியேற்றத்தையடுத்து களம் நுழைந்த ஷகிப் அல் ஹசனும் எதுவித ஓட்டமுமின்றி ரன்னவுட் முறையில் ஆட்டமிழக்க ரஹும் அவரின் வழியை பின்பற்றி ரன்னவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பங்களாதேஷ் அணி 20.5 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களை பெற்றது. அதன்பின் இம்ருல் கைஸுடன் மாமதுல்லா ஜோடி சேர்ந்தாடி வர அணியின் ஓட்ட எண்ணிக்கை 97 ஆக இருந்தபோது 25.2 ஆவது பந்தில் மாமதுல்ல ஒரு நான்கு ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ கடந்தது. இவர்கள் இருவரும் இணைந்து பொறுப்புடன் இணைந்து ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நான்கு திசைகளிலும் அடித்தாட 44.1 ஆவது பந்தில் அணி 197 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மாமதுல்லா ஒரு 6 ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஐ கடந்தது. 45.1 ஆவது பந்தில் இம்ருல் கைஸ் அரை சதம் கடந்தார். எனினும் 46.2 ஆவது ஓவரில் மாமதுல்லா 77 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை அத்தாப் ஆலமின் பந்து வீச்சில் ரஷித் கானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் மொஷ்ரபி மோர்டாசா 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இறுதியாக பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 250 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. ஆடுகளத்தில் இம்ருல் கைஸ் 72 ஓட்டத்துடனும், மெய்டி ஹசான் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அத்தாப் ஆலம் 3 விக்கெட்டினையும், முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். http://www.virakesari.lk/article/41036

இளமை புதுமை பல்சுவை

16 hours 52 minutes ago
ஒன்று, இரண்டு, மூன்று... என்ன 18-ஆ?- ஒரே காருக்குள்ள இத்தனை பேரா! அ+ அ- கோயில் திருவிழா, குடும்ப விழாவுக்கு போவதற்காக நம்மூரில் ஒரு லாரி நிறைய ஜனங்கள், டிராக்டரில் ஜனங்கள் ஏன் ட்ரை சைக்கிளில்கூட திணித்து ஆட்களை ஏற்றிச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கே ஒரு காருக்குள் 18 பேர் அடைத்து ஏற்றப்பட்டிருக்கின்றனர். டொமினிக்கன் ரிபப்ளிக்கில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேகமாக வரும் கார் ஒன்று சோதனைக்காக நிறுத்தப்படுகிறது. அந்தக் காருக்குள் இருந்து ஒருவர் பின் ஒருவராக வெளியே வர மொத்தம் 13 பேர் வெளியே வருகின்றனர். பின்னால் இருந்த டிக்கிக்குள் இருந்து 5 பேர் என 18 பேர் வெளியே வருகின்றனர். அந்த ராணுவ வீர்ர்களே அதிர்ந்து போயினர். https://www.kamadenu.in/news/world/6375-soldier-inspecting-car-takes-surprising-twist-after-18-people-get-out.html?utm_source=tamilhindu&utm_medium=TTH_home_slider_content&utm_campaign=TTH_home_slider_content

தியாக தீபம் தீலிபனுக்கு இன்று நினைவேந்தல்!!

16 hours 56 minutes ago
தியாகி திலீபனுக்கு -புங்குடுதீவில் நினைவேந்தல்!! தியாகி திலீபனின் ஒன்பதாவது நாள் நினைவேந்தல் நிகழ்புங்குடுதீவு பெருங்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் முன்னாள் போராளிகள் , தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள், பொது மக்கள், இளைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். https://newuthayan.com/story/14/தியாகி-திலீபனுக்கு-புங்குடுதீவில்-நினைவேந்தல்.html

தியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்

16 hours 57 minutes ago
நினைவேந்தலை உள்ளுராட்சி அமைப்புக்கள் நடத்துவது பொருத்தமற்றது – மாவை நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளுராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொருத்தமானது அல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் (காக்கா அண்ணா) இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாவையின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலைமை தொடர்பாக சுட்டிக்காட்டியபோதே அவர் தமது நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்தினார். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாங்கள் இந்த விடயத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் விடுத்த வேண்டுகோளையும் அவர் ஏற்றுக்கொண்டார். திலீபன் நினைவு நாளுக்கு தடைவிதிக்கக் கோரி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும், அதற்கெதிராக சுமந்திரன் வாதாட இருப்பதாகவும் வெளிவந்த செய்திகளின் பின்னணியில் நல்ல நாடகம் அரங்கேறுகிறது என முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் முன்வைத்த குற்றச்சாட்டை மாவை சேனாதிராஜா இதன்போது நிராகரித்திருந்தார். எப்படியிருந்தாலும் கடந்த வருடம் இதே இடத்தில் களியாட்டமாக நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்றவரின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வை நடத்துவது பொருத்தமற்றது என முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் சுட்டிக்காட்டினார். இந்தநிலையில் அன்றைய நினைவு நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் மாவை கேட்டபோது அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் பதிலளித்தார். http://athavannews.com/நினைவேந்தலை-உள்ளுராட்சி/

மாலைத்தீவு ஜனாதிபதி தேர்தலின் வாக்கெடுப்பு ஆரம்பமானது

17 hours 1 minute ago
மாலைத்தீவு தேர்தலில் அதிக அக்கறை செலுத்தியுள்ள சீனா – இந்தியாவுக்கும், மேற்குலகிற்கும் பேரிடி! மாலைத்தீவு ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிலையில், அதில் கடும்போக்கு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அதிகாரத்தில் தனது பிடியை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சி மற்றும் சர்வதேச குழுக்கள் அவரின் வெளிப்படைத் தன்மை மற்றும் எதிர்ப்பை அடக்குதல் போன்ற கொள்கைகளை கண்டித்துள்ளன. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள முஸ்லீம் பெரும்பான்மையை கொண்ட மாலைத்தீவு, அதன் பாரம்பரிய பங்காளியான இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் ஒரு நாடக அரங்காக மாறிவிட்டது. பெய்ஜிங்கின் அதிகரித்து வரும் செல்வாக்கு தொடர்பாக மேற்கு நாடுகளில் கவலை தற்போது வௌிப்பட்டு வருகின்றது. யாமீனின் அரசாங்கம் அவரது அரசியல் எதிரிகளாக கருதும் சிலரை குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மவுமூன் அப்துல் கயூம் போன்றோரை சிறையடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. பயங்கரவாதம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பாக அவர்கள் மீது குற்றம்சுமத்தியே இந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலில் அப்துல்லா யாமீன் இரண்டாவது முறையாகவும் போட்டியிடுகின்றார். கடந்த சில வாரங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம், மாலைத்தீவு தலைவர்கள் சிலருக்கு எதிராகத் தடைகளையும் விதித்திருந்தது. இரண்டாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி அப்துல்லா யாமீன், 24 சுற்றுலா நிறுவனங்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்ற உதவியுள்ளதாகவும் குறித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்க்கட்சி வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்று மாலை பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், வெளிப்படைத்தன்மையற்றதாக இத்தேர்தல் நடைபெற்றதாக சர்வதேச அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன், சீன நாட்டுடன் நட்புறவைப் பேணுவதோடு, அந்தநாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் மொஹமட் சொலிஹ், இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் நட்புறவைக் கொண்டுள்ளார். குறிப்பாக, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்த தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் முற்போக்குக் கட்சி வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறியது. எனினும், தற்போதைய அரசியல் தளம்பல் நிலை காரணமாக, எந்தக்கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதென சரியாக கணிப்பிட முடியாதுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மாலைத்தீவு தற்போது பாரிய கடன் தொல்லைக்குள் சிக்கியுள்ளதாகவும், இதனால் தேர்தலில் சீனாவிற்கு பாரிய அக்கறையுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் அண்மையில் தெரிவித்திருந்தார். மாலைதீவு தொடர்பில் சீனாவிற்கு பாரிய அக்கறையுள்ளது. நாங்கள் தற்போது கடன் தொல்லைக்குள் சிக்கியுள்ளோம். இது ஒரு பாரிய செயற்றிட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. முதலாவதாக விலை மனு கோரலின்றி குத்தகை வழங்கப்படுகின்றது. அதன்பின்னர் குத்தகை விலையை அதிகரித்து ஏனைய போட்டியாளர்களின் சந்தர்ப்பத்தை இழக்கச் செய்கின்றனர். சீனாவின் வர்த்தக வங்கிகள் ஊடாக பாரியளவில் கடன்களைப் பெற்றுக்கொள்கின்றனர். அந்தக் கடனை எப்போது திருப்பி செலுத்துவார்களோ. எங்களுக்கு முடியாது போனாலும் கடனைத் திருப்பி செலுத்தியாக வேண்டும். இறுதியில் நாட்டின் இறையான்மை அழிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். http://athavannews.com/மாலை-தீவு-தேர்தலில்-அதிக/

சரத் பொன்சேகா நெடுந்தீவு குதிரைகளில் அக்கறை செலுத்த வேண்டும்..

17 hours 2 minutes ago
சரத் பொன்சேகா நெடுந்தீவு குதிரைகளில் அக்கறை செலுத்த வேண்டும்.. யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளைப் பராமரிக்க மற்றும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் எவரும் அக்கறையின்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நெடுந்தீவில் வரட்சி காரணமாக குதிரைகள் பல உயிரிழக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளமையும் உரிய பராமரிப்பு இன்மையினால் ஆகும் என குற்றம் சுமத்துகின்றனர். இப் பகுதியில் குதிரைகள் இறப்பதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவற்றை பராமரிப்பதற்கான செயற்பாடுகள் எவையும் உருப்படியாக எவரும் மேற்கொள்ளப்படவில்லை.எனவே வனஜீவராசிகள் திணைக்களமாவது இதில் கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். குறித்த நெடுந்தீவுக் குதிரைகள் போத்துக்கேயரது ஆட்சிக் காலத்தில் அவர்களால் எடுத்துவரப்பட்ட குதிரைகளின் வழித்தோன்றல்களாக காணப்படுவதுடன் மிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழ்கின்றமையினால் இக்குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகமாக உயிரியலாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இக்குதிரைகள் சுற்றுலாச் சிறப்பு மிக்க நெடுந்தீவில் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற உயிரியற் சொத்தாகவும் உள்ளது. மேலும் அங்கு காணப்படும் குதிரைகளை அப்பகுதி மக்கள் சவாரி செய்வதற்கும் மாடுகள் கலைப்பதற்கும் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேற்குறித்த குதிரை இனங்களை பாதுகாக்க முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையிலான ஒரு குழுவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நியமித்திருந்தார். இக்குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் வை.தவநாதன் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் நெடுந்தீவு பிரதேச செயலர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இவர்களும் ஏலவே குதிரைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த நிலையில் எந்த வேலைத்திட்டமும் ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை. இக்குதிரைகள் பாதுகாக்கப்பட்ட மரபுரிமைச் சொத்தாக தேசிய மரபுரிமைத் திணைக்களத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இக்குதிரைகளை வேறிடங்களுக்கு கொண்டு செல்வதுசட்டவிரோதமாகும். ஆனால் ஒரு சிலரினால் இவை கடல் மார்க்கமாக கடத்திச் செல்லப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். இதே போன்று நெடுந்தீவுக்கே உரித்தான இவ்வாறான குதிரைகள் இவ்வாறு தொடர்ச்சியாக வேறுபகுதிகளுக்கும் கடத்தபட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்படுகிறது. உல்லாசப் பயணிகளுக்கான கேந்திர நிலையமாக நெடுந்தீவை மாற்றுவதற்கான நடவடிக்கைகளைதொல்பொருள் திணைக்களத்தினரும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் இக்குதிரைகளின் நலன்களில் எவ்வித அக்கறையும் செலுத்தியதாக தெரியவில்லை. தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வறண்டு போய் இருக்கின்றன.குதிரைகளுக்கு குடிப்பதற்கு நீர் இல்லாமலும் மேய்ச்சலுக்கென போதிய புல் இல்லாமலும் குதிரைகள் இறப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. மிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழுகின்ற குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகத்தைச் சேர்ந்தது என அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட சுற்றுலா சிறப்பு மிக்க நெடுந்தீவில் 400க்கும் மேற்பட்ட குதிரைகள் இருப்பதாகக் கணிப்பிடப்பட்டிருக்கின்றது. செய்தி – படங்கள் – பாறுக் ஷிஹான்.. http://globaltamilnews.net/2018/96793/

சரத் பொன்சேகா நெடுந்தீவு குதிரைகளில் அக்கறை செலுத்த வேண்டும்..

17 hours 2 minutes ago
சரத் பொன்சேகா நெடுந்தீவு குதிரைகளில் அக்கறை செலுத்த வேண்டும்..  

 

 

horse-3.jpg?resize=800%2C533

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளைப் பராமரிக்க மற்றும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் எவரும் அக்கறையின்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நெடுந்தீவில் வரட்சி காரணமாக குதிரைகள் பல உயிரிழக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளமையும் உரிய பராமரிப்பு இன்மையினால் ஆகும் என குற்றம் சுமத்துகின்றனர்.

 

இப் பகுதியில் குதிரைகள் இறப்பதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவற்றை பராமரிப்பதற்கான செயற்பாடுகள் எவையும் உருப்படியாக எவரும் மேற்கொள்ளப்படவில்லை.எனவே வனஜீவராசிகள் திணைக்களமாவது இதில் கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த நெடுந்தீவுக் குதிரைகள் போத்துக்கேயரது ஆட்சிக் காலத்தில் அவர்களால் எடுத்துவரப்பட்ட குதிரைகளின் வழித்தோன்றல்களாக காணப்படுவதுடன் மிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழ்கின்றமையினால் இக்குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகமாக உயிரியலாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இக்குதிரைகள் சுற்றுலாச் சிறப்பு மிக்க நெடுந்தீவில் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற உயிரியற் சொத்தாகவும் உள்ளது. மேலும் அங்கு காணப்படும் குதிரைகளை அப்பகுதி மக்கள் சவாரி செய்வதற்கும் மாடுகள் கலைப்பதற்கும் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

horse-6.jpg?resize=800%2C533

மேற்குறித்த குதிரை இனங்களை பாதுகாக்க முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையிலான ஒரு குழுவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நியமித்திருந்தார். இக்குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் வை.தவநாதன் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் நெடுந்தீவு பிரதேச செயலர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இவர்களும் ஏலவே குதிரைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த நிலையில் எந்த வேலைத்திட்டமும் ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை.

இக்குதிரைகள் பாதுகாக்கப்பட்ட மரபுரிமைச் சொத்தாக தேசிய மரபுரிமைத் திணைக்களத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இக்குதிரைகளை வேறிடங்களுக்கு கொண்டு செல்வதுசட்டவிரோதமாகும். ஆனால் ஒரு சிலரினால் இவை கடல் மார்க்கமாக கடத்திச் செல்லப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். இதே போன்று  நெடுந்தீவுக்கே உரித்தான இவ்வாறான குதிரைகள் இவ்வாறு தொடர்ச்சியாக வேறுபகுதிகளுக்கும் கடத்தபட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்படுகிறது.

horse-4.jpg?resize=800%2C533

உல்லாசப் பயணிகளுக்கான கேந்திர நிலையமாக நெடுந்தீவை மாற்றுவதற்கான நடவடிக்கைகளைதொல்பொருள் திணைக்களத்தினரும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் இக்குதிரைகளின் நலன்களில் எவ்வித அக்கறையும் செலுத்தியதாக தெரியவில்லை. தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வறண்டு போய் இருக்கின்றன.குதிரைகளுக்கு குடிப்பதற்கு நீர் இல்லாமலும் மேய்ச்சலுக்கென போதிய புல் இல்லாமலும் குதிரைகள் இறப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

மிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழுகின்ற குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகத்தைச் சேர்ந்தது என அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட சுற்றுலா சிறப்பு மிக்க நெடுந்தீவில் 400க்கும் மேற்பட்ட குதிரைகள் இருப்பதாகக் கணிப்பிடப்பட்டிருக்கின்றது.

 horse-5.jpg?resize=800%2C533

horse-2.jpg?resize=800%2C533horse-1.jpg?resize=800%2C533

செய்தி – படங்கள் – பாறுக் ஷிஹான்..

http://globaltamilnews.net/2018/96793/

'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே'

19 hours 8 minutes ago
'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹரப்பா, மொஹஞ்சதரோ இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு, அந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு (செப்டம்பர் 20, 1924) 94 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், சிந்துச் சமவெளிப் பகுதியிலும் தமிழக பகுதிகளிலும் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள ஒற்றுமைகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்பதை நிறுவ முடியும் என்கிறார் ஒடிஷா மாநில கூடுதல் தலைமைச் செயலரும் ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன். சென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் The Pot Route: from Indus to Vaigai என்ற தலைப்பில் வியாழக்கிழமையன்று இது தொடர்பாக உரை நிகழ்த்திய ஆர்.பாலகிருஷ்ணன், தன் உரைக்குப் பிறகு பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார். அதிலிருந்து. கே. சிந்துச் சமவெளி ஆய்வு முடிவுகள் வெளியாகி 94 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. அந்த ஆய்வு முடிவென்பது தமிழ் வரலாற்று ஆய்வில் எவ்வளவு முக்கியமானது? ப. 1924 செப்டம்பர் 20 என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்த நாகரிகம் குறித்த செய்திகள் வரும் முன்பாக நம்முடைய புரிதல் வேறு மாதிரி இருந்தது. இப்படி ஒரு நாகரிகம் இருந்ததே தெரியாது. அது தெரிந்த பிறகுதான் இந்திய வரலாற்றை வேறு மாதிரி பார்க்கும் பழக்கமே ஏற்பட்டது. ஆய்வு முடிவு வெளிவந்தபோதே இது திராவிட நாகரிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறதென அப்போதே சொல்லப்பட்டது. அதற்குப் பிறகும் பலரும் இது குறித்துப் பேசியிருக்கிறார்கள். சாட்டர்ஜி, கிராஸ் பாதிரியார், அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற பல ஆய்வாளர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். Image captionஆர். பாலகிருஷ்ணன் இப்போது பல்துறைகளைச் சேர்ந்த ஆய்வுகள், அதில் கிடைத்த தரவுகள் மூலமாக இது ஒரு திராவிட நாகரீகமாக இருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு உண்டு என்று சொல்வதையெல்லாம் தாண்டி, இது ஒரு திராவிட நாகரிகமே என்று சொல்லக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது. கே. இந்த ஆய்வு முடிவு வெளியாகும் முன்பாக இந்திய வரலாற்றைப் பார்ப்பது எப்படி இருந்தது, இந்த நாகரிகம் குறித்த முடிவுகள் வெளியான பிறகு எப்படி மாறியது? ப. தரைக்குள் இப்படி ஒன்று இருந்தது தெரியாத காலகட்டதில் நம் நாகரிகத்தைப் பற்றிச் சொல்ல இலக்கியங்கள் மட்டுமே இருந்தன. அப்போது வெளிநாட்டு ஆய்வாளர்களால் படிக்கக்கூடிய வகையில் இருந்தது வடமொழி இலக்கியங்கள்தான். அதனால், இந்தியப் பண்பாட்டின் துவக்கத்தை வேதத்திலிருந்து துவங்கும் பழக்கம் இருந்தது. வேதகால நாகரிகத்திற்கு முன்பாக வசித்தவர்கள் பண்பாடற்றறவர்கள் போலவும் அதற்குப் பிறகுதான் பண்பாடு வந்ததுபோலவுமே வரலாறு அணுகப்பட்டது. ஆனால், 4,500 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மிகப் பெரிய நகரம் இருந்தது, அது தரையில் புதைந்து கிடந்தது என்பது தெரிந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது. கே. பானை ஓடுகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் குறித்து சில முடிவுகளுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். என்ன முடிவு அது? ப. யானை சென்ற பாதையைவைத்து யானைத் தடத்தைக் கண்டுபிடிப்பதுபோல, இது பானைத் தடம். Silk route, Spice route என்றெல்லாம் இருப்பதைப் போல இது Pot Route என்பதை நாங்கள் முன்வைக்கிறோம். ஹரப்பாவில் கிடைத்த பானை வகைகளில் பெரும்பாலானவை கறுப்பு - சிவப்பு வண்ணம் கொண்டவை. ஆனால், கங்கைச் சமவெளிப் பகுதிகளில் கிடைத்தவை வண்ணம் தீட்டப்பட்ட பழுப்பு நிற மண் பாண்டங்கள். ஆனால், ஹரப்பாவுக்கு தென்பகுதியில் குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் கிடைப்பது எல்லாமே கறுப்பு - சிவப்பு வண்ணம் கொண்டவைதான். ஆனால், வரலாற்றாளர்கள், இதனை முதுமக்கள் தாழியோடு தொடர்புபடுத்தி பெருங்கற்கால மட்பாண்டங்கள் என்று ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள். அதற்கு மேல் ஏதும் நடப்பதில்லை. இப்போது நாங்கள் முதல் முறையாக ஒரு மேப்பை தயார் செய்து, painted greyware என்ற பழுப்பு நிற பானை ஓடுகள் கிடைத்த கங்கைச் சமவெளியைச் சுற்றி, கறுப்பு - சிவப்பு வண்ண பானைகளைப் பயன்படுத்தும் கலாசாரம்தான் சூழ்ந்திருந்தது; ஆகவே இந்த கறுப்பு - சிவப்பு வண்ணப் பானைகளைப் பயன்படுத்தும் கலாச்சாரத்தின் தொடர்ச்சியை ஆராய வேண்டுமென்ற கருத்தை முன்வைத்த்திருக்கிறோம். கே. பானை ஓடுகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என எப்படி நிறுவுவீர்கள்? ப. முன்பு சொன்னதைப் போல இதுவும் ஒரு பல்துறை ஆய்வுதான். சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்ததைப் போன்ற பானை ஓடுகள் கீழடியிலும் கிடைத்திருக்கின்றன. பானைகள் புலம் பெயர்ந்து வந்திருக்க முடியுமா? ஒவ்வொரு பானைக்கு பின்னாலும் ஒரு பானை செய்பவர் இருக்கிறார். அவருடைய சமூகப் பின்புலத்தை ஆராய வேண்டும். சிந்துச் சமவெளி நாகரீகத்தில் பானை செய்பவர் என்னவாக அழைக்கப்பட்டிருப்பார் என்பது தெரியவில்லை. ஆனால், அவருடைய இடம் முக்கியமானதாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இம்மாதிரி ஒரு நகரத்தில் செங்கல் சூளை வைத்திருந்தவர்கள், பானை செய்பவர்கள் ஆகியோருக்குத்தான் முக்கியத்துவம் இருந்திருக்கும். அதுபோன்ற ஒரு முக்கியத்துவத்தை பானை செய்பவர்களுக்குக் கொடுத்த இலக்கியம் சங்க இலக்கியம்தான். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சங்க இலக்கியத்தில் பானை செய்யும் குயவனை முதுவாய்க்குயவ என்று அழைக்கிறார்கள். அதாவது நீண்டகால அறிவைக் கொண்ட குயவர் என்று பொருள். இந்த நீண்டகால அறிவு என்பது எதைக் குறிக்கிறது? அதுதான் அந்த நாகரிகத்தின் ஆழம். அதேபோல முதுமக்கள் தாழி செய்யும் குயவரை கலம்செய் கோவே என்கிறார்கள். அதாவது பானை செய்பவரை தலைவன் என்று அழைக்கும் சமூகப் பண்பாடு அப்போது இருந்திருக்கிறது. இந்த சமூகப் பண்பை நாம் மறுக்க முடியாது. இந்த சமூகப் பண்பு வட மாநிலங்களில் உள்ள சமூகப் பண்புக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. குயவர்களுக்கு இருக்கக்கூடிய குலப் பெயர்கள், வம்சாவழிப் பெயர்கள், குடிப் பெயர்கள், சாமி பெயர்கள், கோவில் பெயர்கள் எல்லாமே அந்தப் பாதை நெடுக இருக்கிறது. பானை என்பது அந்தப் பானை மட்டுமல்ல. அந்த பானை, அதைச் செய்பவர் சார்ந்த சமூகம். கே. சிந்துச் சமவெளியில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த எழுத்துகளுக்கும் தமிழ்நாட்டில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த எழுத்துகளுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்திருக்கிறதா? ப. நிறைய இடங்களில் இருந்திருக்கிறது. ஆங்கிலத்தில் grafitti என்பார்கள். அதாவது பானைகளில் இருக்கக்கூடிய கீறல்கள். இந்தக் கீறல்கள் எழுத்துகளாக மாறியிருக்கின்றன. இந்த எழுத்துக் கீறல் உள்ள பானை என்று சொன்னால், இந்தியாவில் கிடைத்த பானைகளில் 80 சதவீதம் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கிறது. எழுத்துகள் எழுதப்பட ஆரம்பித்ததே பானைகளிலாகத்தான் இருக்க முடியும். கஷ்டப்பட்டு கற்களில் எழுதியிருக்கலாம். ஆக, எழுத்து வரிவடிவம் ஆகியவை ஆரம்பித்ததே பானைகளில்தான். இம்மாதிரி எழுதுவது சிந்துச் சமவெளியிலும் தமிழகத்திலும் அதிகமாக இருக்கிறது. சங்க இலக்கியத்தில் இது குறிப்பிடப்படுகிறது. பீடும் பெயரும் எழுதி என்று குறிப்பிடுகிறார்கள். இப்படியாக பானைகளில் எழுதியது நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. அதற்குப் பிறகு தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதியது கிடைக்கிறது. இது ஒரு தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. இதைத்தான் நான் சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்று சொல்கிறேன். சிந்துவெளி எப்போது இல்லாமல் போகிறதோ அப்போது சங்க இலக்கியம் பேச ஆரம்பிக்கிறது. சங்க இலக்கியம் பேசும் நிகழ்வுகள் எல்லாம் அப்போதைய நிகழ்கால நிகழ்ச்சிகள் அல்ல. அவர்கள் கேள்விப்பட்ட நிகழ்ச்சிகளை, ஆயிரம் ஆண்டுகளாக தம் சமூகத்திற்குள் கேட்டுவந்த கதைகளைத்தான் அவர்கள் கவிதையாக மாற்றுகிறார்கள். அதில் பேசப்படும் விஷயம் எல்லாம் பழைய விஷயம். அது பழைய நகரங்களோடு தொடர்புடையதாக இருக்கு. ஹரப்பாவுக்கென ஒரு இலக்கியம் இருந்தால் அது இப்படித்தான் இருக்கும். கே. ஹரப்பா, மொஹஞ்ச - தாரோ பகுதிகள் இந்தியாவின் வட மேற்கில் இருக்கின்றன. சங்க இலக்கியம் தென்னிந்தியாவில் தோன்றியது. இடைப்பட்ட நிலப்பரப்பில் என்ன நடந்தது? ப. கலாசாரம் நிலங்களைக் கடந்து பயணிக்கும். ஆஃப்கானிஸ்தானில் சார்த்துகை என்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடம் மொஹஞ்ச-தரோவிலிருந்து வட மேற்கில் 1900 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. செல்வதற்கான பாதையே மிகக் கடினமான பாதை. அந்த சார்த்துகையில் லாபஸ் லாஜுலி என்ற விலை உயர்ந்த கற்கள் கிடைக்கும். அவற்றை வைத்து அணிகலன்களைச் செய்வதற்காக சிலர் அங்கே குடியேறினார்கள். அங்கேயும் இதேபோல பானைகளைச் செய்தார்கள். அதை இப்போது ஹரப்பிய நாகரிகம் என ஒப்புக்கொள்கிறோம். மொஹஞ்ச-தரோவுக்கும் கீழடிக்கும் இடையில் கிட்டத்தட்ட அவ்வளவு தூரம்தான் இருக்கும். இந்த இரு நிலப்பரப்பிற்கும் இடையில் தொடர்ச்சி இருக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத் குயவர்களுடைய வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் தென்னிந்திய குயவர்களோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆக பழக்க-வழக்க தொடர்பு இருக்கிறது, இலக்கியத் தொடர்பு இருக்கிறது. இவற்றைத் தனித்தனியாகப் பார்க்கக்கூடாது. கே. சிந்துவெளி நாகரிகத்தில் பானை செய்பவர்கள் உயர்ந்த இடத்தில் இருந்ததாகச் சொன்னீர்கள். அவர்கள் சமூகத்தில் அடைந்த வீழ்ச்சியும் வேதகால நாகரிகத்தின் எழுச்சியும் சந்திக்கும் புள்ளி ஒன்றாக இருந்ததா? ப. அப்படித்தான் தெரிகிறது. கன்வர்ஸ் என்ற ஆய்வறிஞர் இந்த கறுப்பு - சிவப்பு பானை செய்பவர்களும் பழுப்பு நிற பானை செய்பவர்களும் கங்கைச் சமவெளியில் சில நூறு கி.மீ. தூரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு வாழ்ந்திருந்தாலும் அவர்களுக்கு இடையில் எந்தப் பரிமாற்றமும் இருக்கவில்லை. ஐநூறு, அறநூறு ஆண்டுகளுக்குப் பிறகே இரு பண்பாடுகளும் சந்தித்துக்கொண்டன. ஒரு பக்கம் ஹரப்பா நாகரிகத்தில் பானை, செங்கல் செய்பவர்கள் உயர்ந்த இடத்தில் இருந்திருப்பார்கள் என்று யூகிப்பதற்கு அங்கு கிடைத்த தொல்பொருள் தடயங்கள் ஆதாரமாக இருக்கின்றன. அவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்டார்கள். அவர்களே விழாக்களை அறிவித்தார்கள். அவர்களே பூசாரிகளாக இருந்தார்கள். அவர்களே தலைவன் என அறிவிக்கப்பட்டார்கள். இதற்கெல்லாம் சங்க இலக்கியத்திலும் நம்முடைய மட்பாண்டக் கீறல்களிலும் தடயங்கள் இருக்கின்றன. ஏதோ உயர்ந்த இடத்திலிருந்து கீழே வந்துவிட்டோம் என்ற உணர்வு இந்தியாவில் உள்ள எல்லாக் குயவர்கள் மத்தியிலும் இருக்கிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம், எழுச்சி, சரிவு, வீழ்ச்சி ஆகியவையும் பானை செய்வோரின் தோற்றம், எழுச்சி, சரிவு, வீழ்ச்சி ஆகியவையும் இணையாக நடந்திருக்கின்றன. எப்போதுமே ஒரு வருத்தம், இழந்தது குறித்த கோபம், மனத்தாங்களல் அவர்களுடைய வாய்மொழி மரபில் இருந்துகொண்டேயிருக்கிறது. இது ஒரு கூட்டு மனப்பான்மையாக இருக்கிறது. இதை அவர்கள் காலம்காலமாக கடத்திவந்திருக்கிறார்கள். இதை ஆராய வேண்டியிருக்கிறது. தொல்லியல் என்பது கிடைக்கும் பொருட்கள் சம்பந்தப்பட்டது. ஆனால் இம்மாதிரியான வரலாற்று ஆய்வு எல்லாத் துறைகளையும் சேர்ந்ததாக இருக்க வேண்டும். கே. சிந்துவெளிக்கு அருகில் இருப்பது கங்கைச் சமவெளி. நீங்கள் குறிப்பிடும் வைகைச் சமவெளி வெகுதூரத்தில் இருக்கிறது. சிந்துவெளி நாகரிகம் ஏன் கங்கைச் சமவெளிக்குப் பரவவில்லை? ப. சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பித்தபோது எல்லோருமே அங்கிருந்து தெற்கு நோக்கி வந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் அங்கேயே தங்கிவிட்டார்கள். சிலர் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கைச் சமவெளியை அடைந்தார்கள். அங்கிருந்த நாகரிகத்தின் மீது அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதேபோல கங்கைச் சமவெளி நாகரிகத்தின் தாக்கம் அவர்களிடமும் இருந்திருக்கும். புதிய மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொண்டிருந்திருப்பார்கள். பண்பாட்டுத் தாக்கம் இருந்திருக்கும். ஆனால், தமிழ்நாடு மிகவும் வெளியில் இருப்பதால் அவர்கள் தங்கள் பண்பாட்டுக் கூறுகளைத் தக்கவைத்திருப்பார்கள். மற்ற இடங்களில் அது குறைவாக இருந்திருக்கும். அதனால் அடையாளம் காண்பது சிரமமாக இருக்கும். இந்தியாவில் யாரைச் சுரண்டிப் பார்த்தாலும் ஹரப்பாவின் கூறு ஏதாவது இருக்கும். யாரிடம் அதிகம் இருக்கும் என்பது விவாதத்திற்குரியது. படத்தின் காப்புரிமைNASA/USGS Image captionசிந்து நாகரிகத்தின் நகர்ப்புற குடியேற்றங்கள் தற்போதைய வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பரவியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாம் பெரிதாக அகழ்வாய்வுகளைச் செய்யவில்லை. திராவிடக் கருதுகோள்களின் அடிப்படையில் நாம் ஆய்வுகளைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அந்த ஆய்வை குஜராத், மகாராஷ்டிரா, சிந்து, கங்கைச் சமவெளி, வைகைச் சமவெளி என எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும். கே. வைகைக் கரையில் ஏற்கனவே கீழடியில் அகழ்வு செய்யப்பட்டிருக்கிறது. வேறு எங்கு செய்ய வேண்டும்? ப. வைகைக் கரையை ஒட்டிய 200 இடங்கள் அகழ்வாய்வு தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை. நான் ஏற்கனவே கீழ் - மேல் என்பது குறித்து சொல்லியிருக்கிறேன் (அதாவது கீழ் என்பது எப்போதும் கிழக்குப் பகுதியிலும் மேல் என்பது மேற்குப் பகுதியிலும் இருப்பதோடு, உயர்வானதாகவும் கருதப்படும். சிந்துவெளியிலும் இப்படித்தான் இருந்தது என்பது பாலகிருஷ்ணனின் வாதம்). இந்த இடங்களில் கீழ்-மேல் விகுதிகளோடு உள்ள இடங்கள், வைகைக் கரையோரமாக இருக்கும் அகழாய்வு சாத்தியமுள்ள இடங்களை நிச்சயம் ஆய்வுசெய்ய வேண்டும். இதில் இடங்களின் பெயர்கள் மிக முக்கியமானவை. அவை சாகாவரம் பெற்றவை. அவை நாகரிகத்தின் துவக்கத்திற்கும் மலர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சாட்சியமாக இருக்கின்றன. அவை சாவதில்லை. கே. உங்களுடைய முந்தைய ஆய்வு சிந்துவெளியின் இடப்பெயர்கள் பற்றியது. அதில் நீங்கள் சொல்லியிருப்பது என்ன? ப. மனிதன் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டேயிருப்பவன். இப்படி புலம்பெயர்வது என்பது மனிதனின் அடிப்படைகளில் ஒன்று. இப்படிப் புலம்பெயரும்போது அவன் எதை எடுத்துச்செல்ல முடியும்? அவன் தன் பூமியைத் தோண்டி எடுத்துச்செல்ல முடியாது. நினைவுகளைத்தான் எடுத்துச்செல்ல முடியும். தான் செல்லும் புதிய இடத்தில் அவன் தன் பழைய இடத்தை மீள் உருவாக்கம் செய்வான். அப்படிச் செய்யும்போது தன் பழைய ஊர்ப் பெயரை எடுத்துச் செல்வான். கடவுள் நம்பிக்கையை எடுத்துச்செல்வான். இப்படிப் புலம் பெயர்பவர்களோடு, இடப்பெயர்களும் புலம்பெயரும். அப்படி தமிழகத்திலும் சிந்துச்சமவெளியிலும் இருந்த இடப் பெயர்களை நான் என் ஆய்வில் ஒப்பிட்டிருக்கிறேன். கே. தற்போது வெளியாகியிருக்கும் ராகிகடி மரபணு ஆய்வு முடிவுகள், சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று சுட்டிக்காட்டுவதைப்போல இருப்பதாகச் சொல்கிறது... ப. ராகிகடி ஆய்வு முடிவுகள் இப்போதுதான் வெளியாகத் துவங்கியிருக்கின்றன. முறைப்படி இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால், இந்த முடிவு தனிப்பட்ட முறையில் எனக்கு வியப்பு எதையும் தரவில்லை. கிட்டத்தட்ட எதிர்பார்த்த விஷயம்தான். முழுமையான முடிவை நானும் அவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். https://www.bbc.com/tamil/india-45615010

ஸ்டீவ் ஸ்மித் அதிரடி வருகை: 85 ரன்கள் விளாசினார்

19 hours 12 minutes ago
ஸ்டீவ் ஸ்மித் அதிரடி வருகை: 85 ரன்கள் விளாசினார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது கிளப் அணி சார்பில் பங்கேற்ற ஆட்டத்தில் 85 ரன்களை விளாசி தனது திறமையை பறை சாற்றியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது, பந்தை சேதப்படுத்த முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர், வீரர் பேங்க்கிராப்ட் ஆகியோரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சஸ்பெண்ட் செய்தது. ஸ்மித், வார்னருக்கு தலா ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.சர்வதேச கிரிக்கெட் போட்டி தவிர உள்ளூர் ஆட்டங்களில் பங்கேற்று ஆடலாம் என சிஏ அறிவித்தது. கனடா கிரிக்கெட் லீக் போட்டியில் ஆடி வந்த ஸ்மித் ஆஸ்திரேலியாவில் தனது கிளப் அணியான சதர்லேண்டுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 92 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். இதன் மூலம் தான் தனது ஆட்டத்திறனை நிரூபித்துள்ளார் ஸ்மித்.வரும் மார்ச் மாதம் 28-ஆம் தேதியோடு அவர்கள் மீதான தடை நீங்குவதால், உலகக் கோப்பையில் போட்டியில் ஆட இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. http://www.dinamani.com/sports/sports-news/2018/sep/23/ஸ்டீவ்-ஸ்மித்-அதிரடி-வருகை-85-ரன்கள்-விளாசினார்-3005937.html

ஸ்டீவ் ஸ்மித் அதிரடி வருகை: 85 ரன்கள் விளாசினார்

19 hours 12 minutes ago
ஸ்டீவ் ஸ்மித் அதிரடி வருகை: 85 ரன்கள் விளாசினார்

 

 

 
STEVE_SMITH

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது கிளப் அணி சார்பில் பங்கேற்ற ஆட்டத்தில் 85 ரன்களை விளாசி தனது திறமையை பறை சாற்றியுள்ளார்.
 கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது, பந்தை சேதப்படுத்த முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர், வீரர் பேங்க்கிராப்ட் ஆகியோரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சஸ்பெண்ட் செய்தது.
 ஸ்மித், வார்னருக்கு தலா ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.சர்வதேச கிரிக்கெட் போட்டி தவிர உள்ளூர் ஆட்டங்களில் பங்கேற்று ஆடலாம் என சிஏ அறிவித்தது. கனடா கிரிக்கெட் லீக் போட்டியில் ஆடி வந்த ஸ்மித் ஆஸ்திரேலியாவில் தனது கிளப் அணியான சதர்லேண்டுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 92 பந்துகளில் 85 ரன்களை குவித்தார்.
 இதன் மூலம் தான் தனது ஆட்டத்திறனை நிரூபித்துள்ளார் ஸ்மித்.வரும் மார்ச் மாதம் 28-ஆம் தேதியோடு அவர்கள் மீதான தடை நீங்குவதால், உலகக் கோப்பையில் போட்டியில் ஆட இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

http://www.dinamani.com/sports/sports-news/2018/sep/23/ஸ்டீவ்-ஸ்மித்-அதிரடி-வருகை-85-ரன்கள்-விளாசினார்-3005937.html

மீண்டும் வீதிக்கிறங்கிய சுமனரத்தன தேரர்

19 hours 15 minutes ago
நீதி கிடைக்கும் வரை போராடுவேன் – அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு எல்லை கிராமமான கௌலியாமடு பன்சல்கல விகாரை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு வனபரிபாலன திணைக்களம் அறிவித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குளக்கட்டில் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். விகாரையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘குறித்த குளத்தின் புனரமைப்பு பணிகள் 75 வீதம் முடிவடைந்த நிலையில் புனரமைப்பு ஒப்பந்தகாரரிடம் பொலிஸார் இலஞ்சமாக இலட்சக்கணக்கில் பணம் கேட்டனர். இதனால் மாதக்கணக்கில் புனரமைப்பு பணிகளை இடைநிறுத்தியிருந்தேன். எனினும், மீண்டும் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வனவரிபாலன திணைக்களத்தினர் அதனை நிறுத்துமாறு அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். எனினும், இதற்கு இன்றுவரை நியாயமான பதில் கிடைக்கவில்லை. எனவே நியாயம் கிடைக்கும் வரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் குளக்கட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார். http://athavannews.com/நீதி-கிடைக்கும்-வரை-போரா/

மலையகத்தவர்கள் சிந்தும் இரத்தத்திற்கு ஜனாதிபதி பதில் கூற வேண்டும் ; போராட்டக்களத்தில் ஸ்ரீதரன் எம்.பி

19 hours 17 minutes ago
மலையகத்தவர்கள் சிந்தும் இரத்தத்திற்கு ஜனாதிபதி பதில் கூற வேண்டும் ; போராட்டக்களத்தில் ஸ்ரீதரன் எம்.பி மலையக தோட்ட தொழிலாளர்கள் சிந்துகின்ற இரத்தத்திற்கு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதில் சொல்ல வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் இன்று காலை ஏற்பாடு செய்த சம்பள போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தொழிலாளர்களின் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களுடைய ஒரு நாள் சம்பளத்தை அதிகரிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் நாங்கள் இவ்வளவு காலமும் பட்ட துன்பங்களிலிருந்து முதலாளிமார் சுரண்டல்களிலிருந்து நாங்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த மைதானத்தில் நாங்கள் ஒன்றுக்கூடியுள்ளோம். தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானதும், ஏற்றுக்கொள்ள கூடியதுமாகும். இந்த கோரிக்கைகளை அரசாங்கம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். மலையக மக்களின் வாழ்வில் மாற்றம் பெற வேண்டும் என்றால் முதலாவதாக மக்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் பெற வேண்டும். அடிப்படை சம்பளம் 500 ரூபாயிலிரந்து 1000 ரூபாய்க்கு உயர்த்தப்பட வேண்டும் இதற்காகவே நாங்கள் ஒன்றுதிரண்டுள்ளோம். நாங்கள் பட்ட துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும். இதற்கு நாட்டின் ஜனாதிபதியும் , பிரதமரும் செவி சாய்க்க வேண்டும். தொழிலாளர்கள் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு, உழைப்பில் நிமிர்ந்து நிற்கின்ற மக்களாக உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெறுகின்ற மக்களாக தொழிலாளர்களை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என்றார். http://www.virakesari.lk/article/41027

மலையகத்தவர்கள் சிந்தும் இரத்தத்திற்கு ஜனாதிபதி பதில் கூற வேண்டும் ; போராட்டக்களத்தில் ஸ்ரீதரன் எம்.பி

19 hours 17 minutes ago
மலையகத்தவர்கள் சிந்தும் இரத்தத்திற்கு ஜனாதிபதி பதில் கூற வேண்டும் ; போராட்டக்களத்தில் ஸ்ரீதரன் எம்.பி 

 

 
 

மலையக தோட்ட தொழிலாளர்கள் சிந்துகின்ற இரத்தத்திற்கு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதில் சொல்ல வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

sridharan_mp.jpg

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் இன்று காலை ஏற்பாடு செய்த சம்பள போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தொழிலாளர்களின் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களுடைய ஒரு நாள் சம்பளத்தை அதிகரிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் நாங்கள் இவ்வளவு காலமும் பட்ட துன்பங்களிலிருந்து முதலாளிமார் சுரண்டல்களிலிருந்து நாங்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த மைதானத்தில் நாங்கள் ஒன்றுக்கூடியுள்ளோம்.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானதும், ஏற்றுக்கொள்ள கூடியதுமாகும். இந்த கோரிக்கைகளை அரசாங்கம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

மலையக மக்களின் வாழ்வில் மாற்றம் பெற வேண்டும் என்றால் முதலாவதாக மக்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் பெற வேண்டும். அடிப்படை சம்பளம் 500 ரூபாயிலிரந்து 1000 ரூபாய்க்கு உயர்த்தப்பட வேண்டும் இதற்காகவே நாங்கள் ஒன்றுதிரண்டுள்ளோம்.

நாங்கள் பட்ட துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும். இதற்கு நாட்டின் ஜனாதிபதியும் , பிரதமரும் செவி சாய்க்க வேண்டும்.

தொழிலாளர்கள் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு, உழைப்பில் நிமிர்ந்து நிற்கின்ற மக்களாக உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெறுகின்ற மக்களாக தொழிலாளர்களை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/41027

திலீபனையும், அவர் நினைவையும், தடைசெய்யுமாறு, நீதிமன்றில் காவற்துறை விண்ணப்பம்…

19 hours 41 minutes ago
செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்க இந்தியாவிடம் அகிம்சைவழியில் போராடி இறந்துபோன திலீபன் தான் இவையளுக்கு குத்துது குடையுது ஆக்கும் வால் வெடுக்குழுவினால் யாழில் பல பகுதிகள் இயல்புக்கு மாறாய் இருக்கிறது அதை ஒழுங்குக்கு கொண்டு வர வக்கில்லை திலீபன் விடயத்துக்கு வந்துவிட்டினம் .