Aggregator

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பதற்றம்!!

13 hours 10 minutes ago
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பதற்றம்!! யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு குருதிக் கொடை நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் துப்பாக்கியுடன் ஒருவர் சற்றுமுன்னர் நுழைந்ததால் அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளது. https://newuthayan.com/story/11/யாழ்ப்பாணம்-போதனா-மருத்துவமனையில்-பதற்றம்.html

அரசைக் காப்பாற்றுவதிலேயே த.தே.கூட்டமைப்பு கவனம்!; மைத்திரி குணரட்ண குற்றச்சாட்டு

13 hours 41 minutes ago

16954.jpg


வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படுவதை விடு த்து அரசாங்கத்தை காப்பாற்றுவ
தற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி மைத்திரி குணரட்ண தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்;றுக் காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்க ண்டவாறு தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபை தமக்கு இருக்கின்ற அதிகாரங்களை உரிய முறையில் பயன்ப டுத்திக் கொண்டு தமக்கான அதிகாரங்களைக் கோரவேண்டும்.

ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மக்களின் வாக்கைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் வெளியில் ஓடிவிடுவர். அவர் கள் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் வீடுக ளைக் கட்டிக் கொண்டு தமது குடும்பங்களு டன் சந்தோசமாக இருப்பார்கள்.

அதன் பின்னர் வாக்களித்த மக்களிடம் வருகின்ற போது விடுதிகளில் தங்கியிருப்பா ர்கள். அதுவும் தேர்தல் காலங்களிலேயே இங்கு வருவார்கள். ஆனால் நாங்கள் அப் படியில்லை. எப்போதும் மக்களுடன் மக்க ளாக இருப்போம்.

இந்த மக்களுடன் இருப்பவர்களையே எதிர்வரும் தேர்தல்களிலும் வேட்பாளர்களாக நிறுத்துவோம். வடக்கு மக்களுக்காக செய ற்படுவதற்கு நாங்கள் வடக்கிற்கு வந்திருக்கி றோம்.

அதற்கமைய வடக்கு மக்களும் தமக்காக செயற்படுகின்றன எம்மைப் போன்ற தரப்பி னர்களுக்கு தமது ஆதரவை வழங்கவேண்டும்.

அதனூடாக எதிர்காலத்தில் இந்த மக்களுக்கு எம்மாலான அனைத்தையும் பெற்றுக் கொடுக்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.     

http://www.valampurii.lk/valampurii/content.php?id=16954&ctype=news

அரசைக் காப்பாற்றுவதிலேயே த.தே.கூட்டமைப்பு கவனம்!; மைத்திரி குணரட்ண குற்றச்சாட்டு

13 hours 41 minutes ago
வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படுவதை விடு த்து அரசாங்கத்தை காப்பாற்றுவ தற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி மைத்திரி குணரட்ண தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்;றுக் காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்க ண்டவாறு தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபை தமக்கு இருக்கின்ற அதிகாரங்களை உரிய முறையில் பயன்ப டுத்திக் கொண்டு தமக்கான அதிகாரங்களைக் கோரவேண்டும். ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மக்களின் வாக்கைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் வெளியில் ஓடிவிடுவர். அவர் கள் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் வீடுக ளைக் கட்டிக் கொண்டு தமது குடும்பங்களு டன் சந்தோசமாக இருப்பார்கள். அதன் பின்னர் வாக்களித்த மக்களிடம் வருகின்ற போது விடுதிகளில் தங்கியிருப்பா ர்கள். அதுவும் தேர்தல் காலங்களிலேயே இங்கு வருவார்கள். ஆனால் நாங்கள் அப் படியில்லை. எப்போதும் மக்களுடன் மக்க ளாக இருப்போம். இந்த மக்களுடன் இருப்பவர்களையே எதிர்வரும் தேர்தல்களிலும் வேட்பாளர்களாக நிறுத்துவோம். வடக்கு மக்களுக்காக செய ற்படுவதற்கு நாங்கள் வடக்கிற்கு வந்திருக்கி றோம். அதற்கமைய வடக்கு மக்களும் தமக்காக செயற்படுகின்றன எம்மைப் போன்ற தரப்பி னர்களுக்கு தமது ஆதரவை வழங்கவேண்டும். அதனூடாக எதிர்காலத்தில் இந்த மக்களுக்கு எம்மாலான அனைத்தையும் பெற்றுக் கொடுக்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றார். http://www.valampurii.lk/valampurii/content.php?id=16954&ctype=news

ஐரோப்பா - ஜெயமோகன்

13 hours 49 minutes ago
ஐரோப்பா 9- முடிவடையாத கலைக்களஞ்சியம் உலகத்தில் தொலைந்துபோனவை எல்லாம் கடலடியில் இருக்கும் என்பார்கள், இல்லாதவை அனேகமாக பிரிட்டிஷ் மியூசியத்தில் இருக்கும். பிரிட்டிஷார் இருநூறாண்டுக்காலம் உலகை ஆண்டனர். உலகைக் கூர்ந்து நோக்கும் கண்கள் கொண்டிருந்தனர். அரியவை அனைத்தும் தங்களுக்கே என்னும் தன்முனைப்புடனும் இருந்தனர். ஆகவே லண்டனின் அருங்காட்சியகங்களில் உலகக் கலைச்செல்வங்களில் பெரும்பகுதி வந்து சேர்ந்தது. லண்டன் புளூம்ஸ்பரி பகுதியிலுள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் 80 லட்சம் அரும்பொருட்கள் உள்ளன. உலகில் உருவான முதல் தேசியப் பொது அருங்காட்சியகம் இது . 1753ல் அயர்லாந்து மருத்துவரனான சர் ஹான்ஸ் ஸ்லோன் [Sir Hans Sloane]அவர்களின் சேமிப்புகளைக் கொண்டு தொடங்கப்பட்ட இது 1759ல் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு உலகமெங்கும் பரவுந்தோறும் இவ்வருங்காட்சியகம் கட்டுக்கடங்காமல் வளர்ந்தது. இயற்கைவரலாற்று அருங்காட்சியகம் போன்று பல தனி அருங்காட்சியகங்களாகப் பிரிக்கப்பட்டது. 1972 வரை தொல்நூல்களுக்கான காப்பகமும் நூலகமும் இதனுடன் இணைந்திருந்தன, அவை தனியாகப்பிரிக்கப்பட்டன. எகிப்து, கிரேக்கம் , ரோம். மத்தியகிழக்கு, ஆசியா, தென்கிழக்காசிய பகுதிகளுக்கான தனித்தனியான வைப்புக்கூடங்கள், வரலாற்றுக்கு முந்தைய ஐரோப்பாவுக்கான கூடம், ஆப்ரிக்கா மற்றும் தென்னமேரிக்காவுக்கான கூடம் வரைச்சித்திரங்கள் மற்றும் அச்சுக்கான கூடம், , நாணயங்கள் மற்றும் பதக்கங்களுக்கான கூடம், ஆவணக்காப்பகங்கள் நூல் சேகரிப்புகள் என பல பகுதிகளாகப் பரந்திருக்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் ஒரு மாபெரும் கலைக்களஞ்சியத்துக்குச் சமானமானது. அதை எந்த மானுடனும் எவ்வகையிலும் பார்த்து முடிக்கமுடியாது. நமக்கு ஆர்வமுள்ள சிறிய பகுதியை முன்னரே வரையறுத்துக்கொண்டு அவற்றை மட்டும் பார்த்துவிட்டு வருவதே உகந்தது. அதைக்கூட பலநாட்கள் சென்று பார்த்துத்தான் சற்றேனும் நிறைவுற அறியமுடியும். நான் ஆப்ரிக்கா, எகிப்து, ரோம் மற்றும் கிரேக்க வரலாறு சார்ந்த பொருட்களை பார்த்தேன். ஐரோப்பிய வரலாறு நமக்கு இந்திய வரலாற்றுக்குச் சமானமாகவே கற்பிக்கப்பட்டிருப்பதனால் பெரும்பாலான காலகட்டங்களை மிக அணுக்கமாக உணரமுடிந்தது. கிரேக்கப் பளிங்குச்சிலைகளின் எளிமையான நேர்த்தி, ரோமாபுரிச் சிலைகளின் மாண்பும் அலங்காரமும், மறுமலர்ச்சிக்கலைகளில் இருந்த சுதந்திரமும் தத்துவ உள்ளடக்கமும் என ஏற்கனவே வாசித்தவற்றை பொருட்களாக பார்த்துச்செல்வது கனவினூடாகக் கற்பதைப்போன்ற அனுபவம். எகிப்த்ய கலைப்பொருட்கள் ஏராளமாக இருந்தன. மிகத் தொடக்க காலத்திலேயே எகிப்தை பிரிட்டன் கைப்பற்றி துல்லியமாகப் புரட்டிப்போட்டு ஆராய்ந்துவிட்டிருக்கிறது. விதவிதமான தொன்ம முகங்கள் விழித்து நோக்கி அமர்ந்திருந்தன. தங்கள் இருப்பாலேயே இருக்குமிடத்தை ஆலயமாக ஆக்கவல்லவை. அருங்காட்சியகங்களை சுற்றிநோக்குவதென்பது ஒரு பயனற்ற செயல் என்று சிலசமயம் தோன்றும். ஏனென்றால் நாம் முதலில் கிளர்ச்சி அடைகிறோம். ஆர்வத்துடன் பார்க்கிறோம். மெல்லமெல்ல உள்ளம் சலிக்கிறது. பின்னர் அரைக்கவனத்துடன் பார்த்துச்செல்கிறோம். முன்னரே நாம் பின்னணியை அறிந்து பார்க்கவிரும்பிய பொருளைப் பார்த்தால் மட்டுமே நினைவில் நிற்கிறது. பெரும்பாலானவை மிக விரைவிலேயே நினைவிலிருந்து அகன்றுவிடுகின்றன. ஏனென்றால் உள்ளம் தகவல்களை பதிவுசெய்துகொள்வதில்லை, அதனுடன் ஏதேனும் உணர்வு கலந்திருக்கவேண்டும். அதாவது சொல்வதற்குக் கதை இல்லாத எப்பொருளுக்கும் நம் அகத்தில் இடமில்லை. ஆனால் அருங்காட்சியகங்கள் மீதான மோகம் ஏறித்தான் வருகிறது. அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன் போன்ற பெருநகர்களில் மட்டுமல்லாமல் ராலே போன்ற சிற்றூர்களில் கூட நல்ல அருங்காட்சியகங்களைக் கண்டிருக்கிறேன். சிங்கப்பூர் அருங்காட்சியகமேகூட ஒரு பெரிய கலை-வரலாற்றுத் திரட்டுதான். இந்தியாவின் முக்கியமான அருங்காட்சியகங்கள் அனைத்துக்கும் சென்றிருக்கிறேன். பெரும்பாலானவை வெறும்பொருட்குவைகள் என்றாலும் பலமுறை சென்று நோக்கியிருக்கிறேன். அருங்காட்சியகங்களை நம் ஆழம் நோக்கிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களுக்கு அது ஒரு ரகசியக் கிடங்கு. நான் கண்ட அருங்காட்சியகங்களிலிருந்து பொருட்களைப்பற்றிய நுண்மையான சித்திரங்கள் வெண்முரசு போன்ற ஒரு பெருநாவல்தொடரை உருவாக்கும்போது எங்கிருந்தோ எழுந்துவருவதைக் கண்டிருக்கிறேன். நவீனநாவலை ‘கலைக்களஞ்சியத்தன்மைகொண்டது’ என விமர்சகர்கள் சொல்வதுண்டு. அது ஒருவகை அருங்காட்சியகம் என்றும் சொல்லலாம். விரிந்துபரந்த அருங்காட்சியகத்தில் எத்தனைக் கூட்டமிருப்பினும் நாம் தனியாக இருக்கமுடியும். எகிப்தியப் பிரிவில் கல்லால் ஆன சவப்பெட்டிகளில் இருந்த மம்மிகளுடன் தனித்து நின்றிருந்தபோது என்னுள் ஒரு நுண்திரவம் நலுங்கியது. ஆப்ரிக்க முகமூடிகளில் காலத்தை கடந்து உறைந்த வெறியாட்டு. செவியறியாமல் அவை எழுப்பும் கூச்சல். ரோமாபுரிச் சக்கரவர்த்தி டைபீரியஸின் மார்புருவச் சிலை அருகே நின்றிருந்தேன். நேரில்பார்ப்பதுபோன்ற சிலை. நரம்புகள்கூடத் துல்லியமாகத் தெரியும் வடிப்பு. நோக்கி நின்றிருந்தபோது ஈராயிரமாண்டுகளைக் கடந்து அவரும் நானும் விழியொடு விழி நோக்கினோம். இன்றுவரை கனவில் வந்துகொண்டே இருக்கிறார் [இதை ஒரு பயிற்சியாகவே செய்துபார்ப்பதுண்டு. சிலைகளை பத்துநிமிடம் தனியாக மிக அண்மையில் நின்று முகத்துடன் முகம் நோக்கினால் கனவில் அந்த முகம் எழுவது உறுதி] டக்ளஸ் ஆடம்ஸின் [Douglas Adams] புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரின் நூல்வடிவமான Hitchhiker’s guide to the galaxy என்னிடம் உள்ளது. அவ்வப்போது வாசிப்பது அந்நூல். அறிவியல்புனைகதைகளை பகடிசெய்யும் அக்கதைத் தொடரில் பிரபஞ்சச் செய்திகள் அனைத்தையும் தொகுத்தளிக்கும் Encyclopedia galaxia என்னும் நூலை தயாரிக்கிறார்கள். பலகோடிப் பக்கங்கள் கொண்டது, ஆகவே பெரும்பாலும் பயனற்றது. அதில் ஒவ்வொரு கோள்களுக்கும் விண்மீன்களுக்கும் அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல கோள்களுக்கு லட்சம் பக்கங்களுக்குமேல் அளிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு இரண்டு வார்த்தை- mostly harmless. லண்டன் அருங்காட்சியகத்தின் இந்தியப்பகுதி ஒப்புநோக்க பெரிதுதான். அதில் தென்னகத்தின் இடமும் குறிப்பிடும்படி உள்ளது. ஆனால் குறிப்புகள் பெரும்பாலும் சுருக்கமானவை, மேலோட்டமானவை அமராவதி ஸ்தூபம் இந்தியப்பகுதியில் ஒரு சிறு கற்கோயிலையே பெயர்த்துக் கொண்டுசென்று வைத்திருக்கிறார்கள். கற்சிலைகள், செப்புச்சிலைகள். நடராஜர்கள், உமாமகேஸ்வரர்கள், நின்ற அமர்ந்த பெருமாள்கள். ஒவ்வொரு சிலையும் கைமுத்திரைகளாலும் உடல்நெளிவாலும் விழிகளாலும் பேசிக்கொண்டிருந்தது. காற்றில் நிறைந்திருந்தது உளமறியும் மொழி ஒன்று. உண்மையில் நம்மில் பெரும்பாலானவர்கள் உலகில் எங்கு சென்று நம் சிலைகள் அங்கிருப்பதைப் பார்த்தாலும் கொதிப்பதுண்டு. எனக்கு அவை அங்கே பாதுகாப்பாக இருப்பதும், கலைஆர்வலர்களால் பார்க்கப்படுவதும் நன்று என்றே தோன்றுகிறது. குப்பைக்குவியல்கள் போல இங்கே அவை போட்டுவைக்கப்பட்டிருப்பதைத்தான் அடிக்கடிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் உதாரணமாக சென்னை அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற அமராவதி ஸ்தூபியின் பளிங்குச்சிலைப் பகுதிகள் பல உள்ளன. புத்தர் தென்னகத்தில் அமராவதி வரை வந்தார் என்பது வரலாறு. நான் சில ஆண்டுகளுக்கு முன் சென்னை அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது ஓர் அதிகாரியின் அறை அச்சிற்பங்களை வரிசையாக அடுக்கிஉருவாக்கப்பட்டிருந்ததை, அவற்றின்மேல் பொருட்கள் சாத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். லண்டன் அருங்காட்சியகத்தில் உலகுக்கே ஒரு செய்தியைச் சொல்ல அமர்ந்ததுபோல அமராவதியின் ஸ்தூபியின் சிலை இருப்பதைக் கண்டபோது எஞ்சியதும் இங்கே இருந்திருக்கலாம் என்ற எண்ணமே எழுந்தது.பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி காலின் மெக்கின்ஸி இடிந்துகிடந்த இந்த ஸ்தூபியை ஆராய்ந்து பதிவுசெய்தார். 1845ல் சர் வால்டர் எலியட் அதன் பகுதிகளை சென்னைக்குக் கொண்டுவந்தார். 1859ல் அதன் பல பகுதிகள் லண்டன் அருங்காட்சியகத்துக்கு கொண்டுவரப்பட்டன. அவை சென்னையில் இருந்தால் அழிக்கப்படும் என வால்டர் எலியட் எழுதியிருந்தார். இந்தியர்களை வெள்ளையர்கள் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். டைபீரியஸ் இந்தியர் பலரும் தேசிய உணர்வுடன் திப்புசுல்தானிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு பொம்மையை பார்த்துச்செல்வதைக் கண்டேன். ஒரு வெள்ளையனை புலி கொல்வதுபோன்ற பொம்மை. அழகோ நுட்பமோ அற்றது. அதற்கு ஒரு கேலிக்குரிய வரலாற்றுப்பின்புலம் மட்டுமே உள்ளது ஆனால் ஐரோப்பியச் சாமானியர்களுக்கு இந்தியக்கலை எவ்வகையிலும் பிடிகிடைக்கவில்லை என்றும் தெரிந்தது. அவர்கள் எகிப்து பற்றி நிறையவே அறிந்திருப்பார்கள். எகிப்தைப்பற்றி வரலாற்று நோக்கில் மட்டுமல்லாமல் திகில்,சாகசக் கதைகளாகக்கூட நிறைய எழுதப்பட்டுள்ளது. பிராம் ஸ்டாக்கர் கூட எகிப்து பற்றிய பரபரப்பு நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதைவிட மம்மி வரிசை சினிமாக்களின் பாதிப்பு. ஆகவே அங்கே அவர்களுக்கு ஒரு பரபரப்பு இருந்ததைக் கண்டேன். இந்தியச் சிற்பங்கள் கல்லால் ஆன பொம்மைகள், வெறும் அணியலங்காரப் பொருட்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள்போல. அங்கே நாங்கள் மட்டுமே நின்று நோக்கி நடந்தோம். பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலுள்ள கலைச்செல்வம் விலைமதிப்புக்கு அப்பாற்பட்டது. இருநூறாண்டுகள் உலகை எடுத்து இங்கே கொண்டுவந்து சேர்த்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அதைத் திருட்டு எனச் சொல்லிவிடமுடியாது. ஏனென்றால் அவர்கள் அப்படிக் கொண்டுவர முடியாத அனைத்துக் கலைமையங்களையும் பெரும்பொருட்செலவில் பாதுகாத்திருக்கிறார்கள். தங்கள் ஆட்சிக்குட்பட்ட இந்தியா, பர்மா,தாய்லாந்தில் உள்ள ஆலயங்களையும் விகாரங்களையும் பழுதுநோக்கியிருக்கிறார்கள். மட்டுமல்ல, தங்கள் ஆட்சிக்குக் கீழே வராத டச்சு இந்தோனேசியாவிலுள்ள பரம்பனான் ஆலயவளாகத்தை சீரமைக்கவேண்டும் என கடும் அழுத்தத்தை அளித்து தாங்களும் மீட்புப்பணியில் பங்கேற்றிருக்கிறார்கள் ஆர்.எல்.ஸ்டீவன்ஸன் கீழைநாட்டுச் செல்வம் தங்களுக்குரியது, அது தங்கள் சாகசம் வழியாகத் தேடி அடையவேண்டியது, வரலாற்றின் ஆழத்தில் தங்களுக்காகக் காத்திருப்பது என்னும் எண்ணம் பிரிட்டிஷாருக்கு உண்டு. அவர்களிடமிருந்து அது அமெரிக்கர்களுக்குச் சென்றது. அந்த எண்ணம் ஐரோப்பாவுக்கே பொதுவானது என்றாலும் போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் சென்ற இடங்களை சூறையாடி அழித்தபின்னரே கொள்ளைப்பொருட்களை கொண்டுவந்தனர். பிரெஞ்சுக்காரர்களின் உளநிலையும் ஏறத்தாழ அதுவே. இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சிசெய்ய நேரிட்டது ஒரு பெருங்கொடைதான், ஐயமில்லை. ஆர்.எல்.ஸ்டீவன்ஸனின் Treasure Island இளமையில் பலராலும் படிக்கப்பட்ட நூல். இளைஞர்கள் புதையல்நிறைந்த ஒரு தீவைக் கண்டடையும் கதை. பிரிட்டிஷ் உளவியலின் மிகச்சரியான உதாரணம் அந்நாவல். சொல்லப்போனால் அந்த ‘கொள்ளை-சாகச’ மனநிலையை ‘உலகை உரிமைகொண்டாடும்’ மனநிலையை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது. அதை முன்னோடியாகக் கொண்டு நூற்றுக்கணக்கான நாவல்கள், திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பெரியவர்களுக்கான நாவல் என்றால் King Solomon’s Mines (1885). சர். ரைடர் ஹகார்ட் அவர்களால் எழுதப்பட்டது [ Sir H. Rider Haggard.] சினிமாவாகவும் வந்துள்ளது. அமெரிக்காவில் இன்றும் அந்த உளமரபு மேலும் மூர்க்கமாகத் தொடர்கிறது, ஜார்ஜ் லூக்காஸின் இன்டியானா ஜோன்ஸ் மிகச்சிறந்த உதாரணம். ‘புதையலைத் தேடி’ச் செல்லும் வெள்ளைக்கார ‘தொல்லியலாளர்’ [அவரை திருடர் என்று மேலும் கௌரவமாகச் சொல்லலாம்] அந்த பாரம்பரியச் சொத்தைக் காப்பாற்றும் கடமையைச் செய்யும் கீழைநாட்டு மக்களையும் தென்னமேரிக்கர்களையும் கொக்குகுருவிகளைப் போல சுட்டுத்தள்ளி வெற்றிகரமாக ‘பொருளுடன்’ மீள்வதைப்பற்றிய படங்கள் அவை. புதையல்வேட்டை இன்றும் ஐரோப்பா, அமெரிக்காவில் வணிகசினிமா, வணிக வாசிப்பு, விளையாட்டுக்களில் மிகப்பெரிய கரு. ஆனால் இந்தியாவில் அதற்கு பெரிய மதிப்பில்லை. எந்தக் கதைக்கருவையும் நகல்செய்யும் தமிழ்சினிமா பலமுறை புதையல்கதைகளை எடுத்துள்ளது. பெரும்பாலும் வணிகத் தோல்விதான், மணிரத்னத்தின் திருடா திருடா வரை. அந்த உளவியலை நம் சினிமாக்காரர்களால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. ஆனால் அதை எடுத்தால் ஓடாது என அறிந்திருக்கிறார்கள். இன்னொருவர் சொத்தான புதையலுக்காக உயிரைப்பணயம் வைப்பதெல்லாம் நம் உள்ளத்துக்கு ஏற்புடையதாக இல்லை எனத் தோன்றுகிறது. டிரஃபால்கர் சதுக்கத்தில் உள்ள தேசிய கலைக் காட்சியகம் [The National Gallery is an art museum] இதைப்போல கலைப்படைப்புகளின் பெருங்களஞ்சியம். 1824 ல் உருவாக்கப்பட்ட இந்த மையத்தில் 2,300 ஓவியங்கள் உள்ளன. சென்ற அறுநூறாண்டுகளில் ஐரோப்பாவில் உருவான ஓவியங்களில் பெரும்படைப்புகள் கணிசமானவை இங்குள்ளன. ஐரோப்பாவின் பெரும்பாலான அருங்காட்சியகங்கள் அரசர்களின் சேமிப்புகளிலிருந்து உருவாகி வந்தவை. இந்தக் கலைக்கூடம் பிரிட்டிஷ் அரசு 1824ல் கலைசேகரிப்பாளரான ஜான் ஜூலியஸ் ஆங்கர்ஸ்டைன் [ John Julius Angerstein] அவர்களிடமிருந்து 38 ஓவியங்களை விலைகொடுத்து வாங்கி உருவாக்கியது. டைடன், ராஃபேல்,ரெம்பிராண்ட் போன்றவர்களை ரசிக்க குழந்தைக்குரிய விரிந்த கண் போதும். பழகிய அழகியல் கொண்ட அவை நேரடியாகவே கனவை விதைப்பவை. கிறித்தவ இறையியலும் ஓவிய அழகியலும் ஓரளவு தெரிந்திருந்தால் மேலும் அக்கனவு விரியும். குளோட் மோனே போன்ற ஓவியர்கள் நிலக்காட்சிகளுக்குள் நம்மைக் கொண்டுசெல்பவர்கள். John_Julius_Angerstein இம்ப்ரஷனிச ஓவியங்களைப் பார்க்கையில் நாம் மீள மீள உணரும் வியப்பு ஒன்றுண்டு, நாம் இயற்கைக்காட்சிகளை எப்போதுமே பலவகையான விழித்திரிபு நிலைகளாகவே காண்கிறோம். காலையின் சாய்வெயில், உச்சிவெயிலின் வெறிப்பு, தூசுப்படலம், மழைத்திரை என. ஒருபோதும் நேர்விழிகளால் நாம் இயற்கையை ‘தெள்ளத்தெளிவாக’ பார்க்கும் தருணம் அமைவதில்லை. உண்மையில் அந்த திரிபை அல்லது திரையைத்தான் நாம் அழகு என உணர்கிறோம். ஆனால் சில ஓவியர்களை தனியாகப் பயின்றுதான் அறியவேண்டியிருக்கிறது பால் செசான் நித்ய சைதன்ய யதிக்கு மிகப்பிரியமான ஓவியர். குருகுலத்தில் பல இடங்களில் செசானின் ஓவியங்களின் நகல்களைக் காணலாம். அவரைப்பற்றி நித்யா பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். செசானின் ஓவியங்களில் ஒருவகையான ‘நோட்டுப்புத்தகப் படங்களின் தன்மை’ எனக்குத் தோன்றியதுண்டு. அவை மிக அந்தரங்கமானவை, உணர்வுகளுக்கேற்ற வண்ணக்கலவையும் எளிமையான கற்பனையும் கொண்டிருப்பதனால் கலைத்தன்மை கொள்பவை என்பதை அறிந்தபின்னரே அவை நமக்கு மெய்யாகத் திறப்பு கொள்கின்றன மூல ஓவியங்களைப் பார்ப்பது மிகப்பெரிய அனுபவம், குறிப்பாக அவற்றின் பேருருவம். நம்மை முழுமையாக உள்ளே ஆழ்த்திக்கொள்கின்றன அவை. ஓர் ஓவியத்தின் முன் சொல்லடங்கி அமர்ந்திருப்பதை ஊழ்கம் என்றே சொல்லமுடியும். ரெம்ப்ராண்டின் மாபெரும் நாடகக்காட்சியோ குளோட் மோனேயின் பூத்தமலர்களின் நிலவெளியோ நமக்களிப்பது ஒரு கனவை. வாழ்தல் இனிது என காட்டுபவை கலைகள். Douglas Adams முதலில் இத்தகைய மாபெரும் ஓவியத்தொகை உருவாக்குவது மன எழுச்சி. பெரும்படைப்பாளிகளின் அரிய படைப்புகளை நேரில் காண்பதன் விரிவு. மெல்லமெல்ல உள்ளம் பிரமிக்கிறது. அனைவருமே பெரும்படைப்பாளிகள். மானுடத்தின் கலைவெளியில் மைக்கேலாஞ்சலோகூட மிகச்சிறிய குமிழிதான். அது உருவாக்கும் சோர்வு மீண்டும் ஒட்டுமொத்தமாக அந்தப்பிரம்மாண்டத்தைப் பார்க்கையில் ஒரு தரிசனமாக எழுகிறது. மானுடப் படைப்பூக்கம் பலதிசைகளில் திறந்துகொண்டு உருவாக்குவது ஒரு பெரும் ஓவியத்தை, ஓவியங்களால் ஆன ஒரு பேரோவியப் படலத்தை. ஜார்ஜ் லூயி போர்ஹெஸ் [ஸ்பானிஷ் உச்சரிப்பு ஹோர்ஹே லுயிஸ் போர்கெஸ்] எழுதிய அறிவியலின் துல்லியத்தன்மை என்ற சிறுகதை குறித்து நண்பர்களிடம் சொன்னேன். ஒரு நாட்டில் வரைபடக்கலை உச்சத்தை அடைகிறது. ஊரிலுள்ள எல்லாவற்றையும் வரைபடத்திலும் கொண்டுவர முயல்கிறார்கள். வரைபடம் வளர்ந்து ஊரளவுக்கே பரப்பு கொண்டதாக ஆகிவிடுகிறது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த அருங்காட்சியகமும் கலைக்கூடமும் அளித்த திகைப்பிலிருந்து விடுபட அச்சிரிப்பு உதவியாக இருந்தது. சும்மா “இந்த உலகமே ஒரு மாபெரும் அருங்காட்சியகம்தானே?” என்று சொல்லி வைப்போமா என யோசித்தேன். அருண்மொழிக்கு முதிராத்தத்துவம் எரிச்சலூட்டும் என்பதனால் சொல்லவில்லை. https://www.jeyamohan.in/112667#.W6iBxBbTVR4

ஹிட்லர் தனது நாட்டுக்கு செய்த நன்மைகள் பல.

13 hours 54 minutes ago
நான் இன்னமும் தமிழன்தான்😎 சிங்கள இனத்தால் அடக்குமுறைக்கு உட்பட்ட தமிழர்களால் ஒரே சமயத்தில் ஹிட்லரை ஆதரிப்பதும் மகிந்தவை எதிர்ப்பதும் முரண்நகையானது. யூதர்கள் பலஸ்தீனியர்களை ஒடுக்குவதுபோல் அதிகாரம் கிடைக்கும்பட்சத்தில் தமிழர்களும் பிற இனங்களை அடக்கமுனைவார்கள் என்பதற்கான அடிப்படை எங்கள் பாரம்பரியத்தில் இருக்கின்றது என்பதுதான் இப்படியான நாஜி சிந்தனைகள் சொல்கின்றன.

திலீபன் தூபிக்கு எதிரில் இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு: அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்!

14 hours 46 minutes ago
என்னைக்கேட்டால் தமிழர் வழங்களை 100 வீதமும் சமுதாயத்தின் முன்னோக்கிய வேலைத்திட்டங்களுக்கும் இனத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் பயன்படுத்தப்படவேண்டும் என்று தான் சொல்வேன். நினைவஞ்சலி என்ற போர்வையில் களியாட்ட நிகழ்வுகளை வழங்கி விடுதலைப் போரின் வலிகளையும் மாண்டுபோன மாவீரர்களையும் தமிழர் வாழ்வில் என்றென்றும் மறக்காமல் சிங்கள அடக்குமுறையையும் இனமேலாதிக்கத்தையும் நிலைநிறுத்தி வைப்பதற்கு எதிரிகளின்ரொட்டித்துண்டுகளுக்காக ஏங்கும் புல்லுருவிகளை விலை கொடுத்து வாங்கி இதுபோன்ற வேலைகளை அவர்கள் மூலம் செய்துகொண்டு தமிழினத்தைச் சீரழிக்கிறான். தோல்வியில் பாடம் கற்றபின் நாம் அதை மறக்கவேண்டும் அதிலிருந்து நிமிர்ந்து எழவேண்டும். தோற்றதற்காக தேம்பி அழாமல் ஒருநாள் கிடைக்கப்போகும் வெற்றிக்காக வழிசமைப்போம்.

"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட்

15 hours 20 minutes ago
எனது தந்தைக்கு கொரனவிலும் தாயாருக்கு இன்னுமொரு தெற்கு நகரிலும் வாள் வெட்டுக்களுடன் குறை உயிரும் குற்றுயிருமாக கப்பலில் யாழ்ப்பாணம் திரும்பினர். நீஙகள் கொழும்பு தமிழர் என வீரம் பேசுவது எப்படி நியாயம் ஆகும்? உங்களின் அனுதாபங்கள் எத்தகையது?? பல இனப்படுகொலைகளின் சேகரிப்பு அப்பாவி தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்த ஆண்டுகள் பல பல . உங்களுக்கு விளங்காதது எப்படி பல மேற்கு நாட்டவர்களுக்கும் ஏன் சில சிங்கள மக்களுக்கும் விளங்கி உள்ளது??

பிரபாகரன் மகிந்தவிடம் பணம் பெற்றுக்கொண்டது உண்மை! டக்ளஸ் தேவானந்தா

15 hours 32 minutes ago
இம்முறையும் ஏதாவது பிடுங்கலாம் என மகிந்த அறிவுவறுத்தி இருப்பார் அதற்கேற்ப வாலாட்டுகிறார் . இவ்வளவு காலமும் வாயை ஏன் மூடி இருந்தார்?? ஊடகவியலாளர் முன் தனது சகோதரர் வி.புலிகளால் கொல்லப்பட்டார் என சொல்பவர் இவரால் கொல்லப்பட்டவர்கள் பற்றி செய்தியாளரும் கேட் கவில்லை. இவரும் சொல்லவில்லை என்றால் எத்தகைய செவ்வி என மாற்று கருத்தாளர்களும் பதில் சொல்லலாம்.

கைதிகள் விடயம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்

15 hours 40 minutes ago
கைதிகள் விடயம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் (ரொபட் அன்­டனி) தீர்வு விட­யத்தில் ஜனா­தி­பதி உறு­தி­யாக இருக்­கின்றார் என்­கிறார் சம்­பந்தன் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்தில் விரை வில் சில நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்ளேன். அவை தொடர்பில் நாங்கள் செய்­ய­வேண்­டி­ய­வற்றை செய்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். மேலும் அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தை அடை­வது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்னும் உறு­தி­யாக இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. நாம் அதற்­கான கரு­மங்­களை செய்வோம் என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் குறிப்­பிட்டார். உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் விவ­காரம் மற்றும் அண்­மைய ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந­திப்பு குறித்து வின­வி­ய­போதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் இவற்றை குறிப்­பிட்டார். அவர் இது குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில் அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தமிழ் அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரதம் தொடர்­கின்­றது. அது தொடர்பில் என்ன செய்­யப்­போ­கின்­றீர்கள்? பதில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்தில் விரைவில் சில நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்ளேன். அவை தொடர்பில் நாங்கள் செய்­ய­வேண்­டி­ய­வற்றை செய்வோம். சில நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது. கேள்வி சில தினங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­தீர்கள். என்ன விட­யங்­களை பேசி­னீர்கள்? பதில் அர­சியல் தீர்வு தொடர்பில் கலந்­து­ரை­யா­டினேன். ஜனா­தி­பதி பங்­கேற்ற அர­சியல் நிகழ்வில் நானும் பங்­கேற்று உரை­யா­டினேன். ஜனா­தி­ப­தியை பொறுத்­த­வரை அர­சியல் தீர்வு விட­யத்தில் இன்னும் உறு­தி­யா­கவே இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. கேள்வி இராணுவ வீரர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து பாதுகாப்பது குறித்து ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு யோசனை முன்வைக்கவுள்ளமை குறித்து பேசினீர்களா? பதில் அது தொடர்பில் பேசவில்லை. http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-24#page-1

கைதிகள் விடயம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்

15 hours 40 minutes ago
கைதிகள் விடயம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்
City-Page-01-ColorGMGPage1Image0014-41075013df0b5a05d7058b267341438043133b11.jpg

 

(ரொபட் அன்­டனி)

தீர்வு விட­யத்தில் ஜனா­தி­பதி உறு­தி­யாக இருக்­கின்றார் என்­கிறார் சம்­பந்தன் 

உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்தில் விரை வில் சில நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்ளேன். அவை தொடர்பில் நாங்கள் செய்­ய­வேண்­டி­ய­வற்றை செய்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.  

மேலும் அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தை அடை­வது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்னும் உறு­தி­யாக இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. நாம் அதற்­கான கரு­மங்­களை செய்வோம் என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் குறிப்­பிட்டார்.

உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் விவ­காரம் மற்றும் அண்­மைய ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந­திப்பு குறித்து வின­வி­ய­போதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் இவற்றை குறிப்­பிட்டார்.

அவர் இது குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்

அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தமிழ் அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரதம் தொடர்­கின்­றது. அது தொடர்பில் என்ன செய்­யப்­போ­கின்­றீர்கள்?

பதில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்தில் விரைவில் சில நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்ளேன். அவை தொடர்பில் நாங்கள் செய்­ய­வேண்­டி­ய­வற்றை செய்வோம். சில நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.

கேள்வி சில தினங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­தீர்கள். என்ன விட­யங்­களை பேசி­னீர்கள்?

பதில் அர­சியல் தீர்வு தொடர்பில் கலந்­து­ரை­யா­டினேன். ஜனா­தி­பதி பங்­கேற்ற அர­சியல் நிகழ்வில் நானும் பங்­கேற்று உரை­யா­டினேன். ஜனா­தி­ப­தியை பொறுத்­த­வரை அர­சியல் தீர்வு விட­யத்தில் இன்னும் உறு­தி­யா­கவே இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது.

கேள்வி இராணுவ வீரர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து பாதுகாப்பது குறித்து ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு யோசனை முன்வைக்கவுள்ளமை குறித்து பேசினீர்களா?

பதில் அது தொடர்பில் பேசவில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-24#page-1

உரிமைகளைக் கேட்டால் -பயங்கரவாதிகள் என்கின்றனர்- வடக்கு முதல்வர்!!

15 hours 41 minutes ago
உரிமைகளைக் கேட்டால் -பயங்கரவாதிகள் என்கின்றனர்- வடக்கு முதல்வர்!!

 

 

தமிழ் மக்­கள் தமது உரி­மை­க­ளைக் கேட்­டால் பயங்­க­ர­வாதி, தீவி­ர­வாதி, புலி என்று நாமஞ் சூட்டி அவர்­கள் வாய்­களை அடைத்து விடு­கின்­றார்­கள். இத­னால்த்­தான் எம் தலை­வர்­கள் எமக்­கேன் இந்த வம்பு? என்று ஆற்­றுப்­ப­டுத்­த­லுக்­குள் அகப்­பட்டு நிற்­கின்­றார்கள்.

இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

சிப்­பிக்­குள் முத்து நூல் வெளி­யீட்டு விழா கொழும்­பில் நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இரண்டு நாள்­க­ளுக்கு முன்­னர் ஒரு பத்­தி­ரி­கைச் செய்தி வாசித்­தேன். ‘இன்று வடக்­கில் செயற்­ப­டும் ஆவாக்­குழு உறுப்­பி­னர்­கள் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரின் முன்­னாள் புலி உறுப்­பி­னர்­களே. விடு­த­லைப்­பு­லி­க­ளின் சிந்­தனை, இன­வா­தம் மற்­றும் ஈழப் பிரி­வினை வாதத்தை அவர் அங்­குள்ள இளை­யோர் மத்­தி­யில் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார், என்று பொது எதி­ரணி உறுப்­பி­னர் ஒரு­வர் கூறி­ய­தா­கச் செய்­தி­யைக் கண்­டேன். இதன் தாற்­ப­ரி­யம் என்ன?

தமிழ் மக்­கள் தமது உரி­மை­களை, உரித்­துக்­களை, தன்­மா­னத்தை எப்­பொ­ழுது வலி­யு­றுத்­தப் பார்க்­கின்­றார்­களோ அப்­போது அவ்­வா­றான காரி­யங்­க­ளில் ஈடு­ப­டு­வோர்­க­ளைத் தீவி­ர­வா­தி­கள் என்றோ, பயங்­க­ர­வா­தி­கள் என்றோ, புலி­கள் என்றோ, வன்­மு­றை­யைத் தூண்டி விடு­ப­வர்­கள் என்றோ, நாட்­டைப் பிரிப்­ப­வர்­கள் என்றோ அவர்­களை அடை­யா­ளப்­ப­டுத்தி அவர்­க­ளைப் பின்­வாங்க வைத்­து­வி­டு­வார்­கள். இதற்­குப் பயந்தே எமது தமிழ்த் தலை­வர்­கள் பெரும்­பான்­மை­யி­னர் தரு­வ­தா­கக் கூறும் அர­சி­யல் தீர்­வு­க­ளுக்­குச் சம்­ம­தம் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

பிரச்சினை எமது, பாதிக்­கப்­பட்­டோர் நாங்­கள், எமது வருங்­கா­லமே எமது கரி­சனை ஆனால் தீர்­வா­னது தம்­மால்த்­தான் தரப்­பட வேண்­டும் என்ற மனோ­நி­லை­யில் பெரும்­பான்­மை­யி­னர் இருக்­கின்­றார்­கள்.

சிறு­பான்­மை­யி­னரை அடக்கி ஆள வேண்­டும் என்ற எண்­ணங்­க­ளி­லி­ருந்து இன்­றும் மாற­வில்லை. தம்மை மாற்­றவோ, உண்­மையை உண­ரவோ, உலக நாடு­க­ளின் மனித உரி­மைக் கோட்­பா­டு­களை மதிக்­கவோ அவர்­கள் இப்­பொ­ழு­தும் தயா­ரில்லை. மனி­தப் படு­கொலை செய்த இரா­ணு­வத்­தி­னரை தண்­டிக்­கப்­ப­டாது என்­பதே எமது அரச தலை­வ­ரின் திட­மான எதிர்­பார்ப்பு.

அதா­வது இந்த நாடு எங்­க­ளு­டை­யது. சிறு­பான்­மை­யி­னர் வந்­தேறு குடி­கள். மரத்­தைச் சுற்றி வள­ரும் கொடி­கள் போன்று எமக்கு அனு­ச­ர­ணை­யாக சிறு­பான்­மை­யி­னர் இந்த நாட்­டில் வாழ வேண்­டுமே ஒளிய தமக்­கென உரித்­துக்­கள் எவற்­றை­யும் பெற எத்­த­னிக்­கப்­ப­டாது என்­பதே அவர்­கள் கருத்து – என்­றார்.

https://newuthayan.com/story/09/உரிமைகளைக்-கேட்டால்-பயங்கரவாதிகள்-என்கின்றனர்-வடக்கு-முதல்வர்.html

 

 

இரா­ணுவம் தண்­டிக்­கப்­ப­டக்­கூ­டாது என்­பதே ஜனா­தி­ப­தியின் திட­மான எதிர்­பார்ப்பு
City-Page-01-ColorGMGPage1Image0015-2bb65beed38710242037e62f838477cf424b965d.jpg

 

(எம்.சி.நஜி­முதீன்)

இந்த நிலையில் உரி­மை­யினைக் கேட்டால் தீவி­ர­வாதி என்­கின்­றனர்; சி.வி. விசனம்

மனிதப் படு­கொலை செய்த இரா­ணு­வத்­தி­னரை தண்­டிக்­கக்­கூ­டாது என்­பதே எமது ஜனா­தி­ப­தியின் திட­மான எதிர்­பார்ப்பு. இப்­பேர்ப்­பட்ட சூழ்­நி­லை­யில்தான் தமிழ் மக்கள் தமது உரி­மை­களைக் கேட்டால் பயங்­க­ர­வாதி, தீவி­ர­வாதி,

 புலி என்று நாமஞ் சூட்டி அவர்­களின் வாய்­களை அடைத்து விடு­கின்­றார்கள். பிரச்­சினை எங்­க­ளு­டை­யது, பாதிக்­கப்­பட்­டோரும் நாம்தான். நமது வருங்­கா­லமே எமது கரி­ச­னைதான். ஆனால் தீர்­வா­னது தம்­மால்தான் தரப்­பட வேண்டும் என்ற மனோ­நி­லையில் பெரும்­பான்­மை­யினர் உள்­ளனர்.

அத்­துடன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றச்­சாட்­டுக்­காக தன்னைக் குற்­ற­வாளிக் கூண்டில் ஏற்ற பிர­யத்­த­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

இந்து சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் வெளி­யீ­டாக வந்­துள்ள அமரர் கி.லக்ஷ்­மணன் எழு­திய கட்­டு­ரை­களின் தொகுப்பு “சிப்­பிக்குள் முத்து” நூல் வெளி­யீட்டு விழா நேற்று மாலை பம்­ப­லப்­பிட்டி சரஸ்­வதி மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு சிறப்­புரை நிகழ்த்­தும்­போதே இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

சரித்­தி­ரத்தைத் திரி­வு­ப­டுத்தி பிழை­யான வர­லா­று­களைப் பரவ விட்டு பெரும்­பான்மை இனக்­க­லா­சா­ரத்தை உட்­பு­குத்தத் துடிக்கும் பெரும்­பான்­மை­யின அர­சி­யல்­வா­தி­க­ளிடம் உண்­மையைக் கூற விழைந்தால் தாராக்­களின் உடல் மேல் தண்ணீர் ஊற்­றி­யது போல் சறுக்கிப் போய்­வி­டு­கி­றது. அது மாத்­தி­ர­மல்­லாது உண்­மையை அவர்­க­ளுக்குப் புரிய வைக்க எத்­த­னிப்­பதை ஒரு பார­தூ­ர­மான குற்­ற­மென அவர்கள் கூக்­குரல் இடு­வதை எம்மால் தடுக்க முடி­யாது போய்­வி­டு­கி­றது.

நாம் ஒற்­றுமை பற்றி இப்­பொ­ழுதும் கூறிக்­கொண்­டுதான் இருக்­கின்றோம். ஆனால் ஒற்­றுமை வந்­த­பா­டில்லை. எமது மனோ­பா­வங்­களும், மனங்­களும், நோக்­கு­களும் மாற­வில்லை. ஏனென்றால் இருக்கும் எமது சிந்­த­னை­களை மாற்றக் கார­ணங்கள் ஏதும் எழ­வில்லை. சில தரு­ணங்­களில் ஒரு பாரிய விபத்து அல்­லது பேரா­பத்து எங்கள் மனங்­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­துண்டு.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமிப் பேரலை ஏற்­பட்­ட­போது சுமார் மூன்று நாட்கள் புலி­களும் அரச படை­க­ளைளும் சேர்ந்து மக்­க­ளுக்கு உதவி புரிந்­தனர். தம்முள் வேறு­பா­டின்றி பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவி புரிந்­தார்கள். ஆனால் அதன் பின் நிலை­மைகள் மாறி­விட்­டன.

அர­சியல் களத்தில் முன்னர் நடந்து கொண்ட விதத்தைப் பின்­பற்­றியே இன்றும் காய்கள் நகர்த்­தப்­பட்டு வரு­கின்­றன. “ஆவாக்­குழு உறுப்­பி­னர்கள் வட­மா­காண முத­ல­மைச்­சரின் முன்னாள் புலி உறுப்­பி­னர்­களே. விடு­த­லைப்­பு­லி­களின் சிந்­தனை, இன­வாதம் மற்றும் ஈழப் பிரி­வி­னை­வா­தத்தை அவர் அங்­குள்ள இளைஞர், யுவ­திகள் மத்­தியில் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கின்றார்” என கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்­ததை ஊடகம் மூலம் அறிந்து கொண்டேன்.

தமிழ் மக்கள் தமது உரி­மை­களை, உரித்­துக்­களை, தன்­மா­னத்தை எப்­பொ­ழுது வலி­யு­றுத்தப் பார்க்­கின்­றார்­களோ அப்­போது அவ்­வா­றான காரி­யங்­களில் ஈடு­ப­டு­வோர்­களைத் தீவி­ர­வா­திகள் என்றோ, பயங்­க­ர­வா­திகள் என்றோ, புலிகள் என்றோ, வன்­மு­றையைத் துண்டி விடு­ப­வர்கள் என்றோ, நாட்டைப் பிரிப்­ப­வர்கள் என்றோ அடை­யா­ளப்­ப­டுத்தி அவர்­களைப் பின்­வாங்க வைத்­து­வி­டு­வார்கள். இதற்குப் பயந்தே எமது தமிழ்த் தலை­வர்கள் பெரும்­பான்­மை­யினர் தரு­வ­தாகக் கூறும் அர­சியல் தீர்­வு­க­ளுக்குச் சம்­மதம் தெரி­வித்து வரு­கின்­றனர்.

பிரச்­சினை எங்­க­ளு­டை­யது, பாதிக்­கப்­பட்­டோரும் நாம்தான். எமது வருங்­கா­லமே எமது கரி­ச­னைதான். ஆனால் தீர்­வா­னது தம்­மால்தான் தரப்­பட வேண்டும் என்ற மனோ­நி­லையில் பெரும்­பான்­மை­யினர் இருக்­கின்­றார்கள்.

1919ஆம் ஆண்டில் சேர் பொன்­னம்­பலம் அரு­ணா­சலம், அப்­போ­தைய பெரும்­பான்­மை­யினத் தலை­வர்­களால் ஏமாற்­றப்­பட்ட காலத்தில் இருந்து அரச அதி­கா­ரத்தைப் பெரும்­பான்­மை­யினர் தம்­கை­வசம் ஆக்கிக் கொண்­டார்கள்.

சிறு­பான்­மை­யி­னரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்­ணங்கள் அவர்­க­ளி­டையே வலுப்­பெற்­றன. அந்த நிலை இன்றும் மாற­வில்லை. தம்மை மாற்­றவோ, உண்­மையை உண­ரவோ, உலக நாடு­களின் மனித உரிமைக் கோட்­பா­டு­களை மதிக்­கவோ அவர்கள் இப்­பொ­ழுதும் தயா­ரில்லை. மனிதப் படு­கொலை செய்த இரா­ணு­வத்­தி­னரை தண்­டிக்­கப்­ப­டாது என்­பதே எமது ஜனா­தி­ப­தியின் திட­மான எதிர்­பார்ப்பு. இப்­பேர்ப்­பட்ட சூழ்­நி­லை­யில்தான் தமிழ் மக்கள் தமது உரி­மை­களைக் கேட்டால் பயங்­க­ர­வாதி, தீவி­ர­வாதி, புலி என்று நாமஞ் சூட்டி அவர்கள் வாய்­களை அடைத்து விடு­கின்­றார்கள்.

இந்த நாடு எங்­க­ளு­டை­யது. சிறு­பான்­மை­யினர் வந்­தேறு குடிகள். மரத்தைச் சுற்றி வளரும் கொடிகள் போன்று எமக்கு அனு­ச­ர­ணை­யாக சிறு­பான்­மை­யினர் இந்த நாட்டில் வாழ வேண்­டுமே ஒளிய தமக்­கென உரித்­துக்கள் எவற்­றையும் பெற எத்­த­னிக்­கக்­கூ­டாது என்­பதே பெரும்­பான்­மை­யி­னரின் கருத்­தாகும்.

நாட்­டுக்குள் வரும் வெளி­நாட்டுப் பய­ணி­க­ளிடம் “உல­கி­லுள்ள சிறப்­ப­னைத்­துக்கும் நாமே உறை­விடம். எமது பாரம்­ப­ரியம் 2500 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்­டது. தமி­ழர்கள் 10 ஆம் நூற்­றாண்டில் சோழர் காலத்­திலே வந்­தே­றிய குடிகள்” என்று கூறப்­ப­டு­கி­றது.

எனினும் உண்­மை­யென்ன? சிங்­கள மொழி பிறந்­ததே கி.பி 6 ஆம் அல்­லது 7ஆம் நூற்­றாண்­டி­லே­யேதான். அதற்கு முன்னர் சிங்­கள மொழி பேசுவோர் இந் நாட்டில் இருக்­க­வில்லை. மகா­வம்சம் கூட பாளி­மொ­ழி­யி­லேயே எழுதப்பட்டது. கி.பி 6 ஆம், 7ஆம் நூற்றாண்டிலேயே அம் மொழி பேசும் மக்கள் கூட்டம் அடையாளப்படுத்தப்பட்டது என்றால் சிங்களப் பாரம்பரியம் 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று எவ்வாறு கூறுவது?

இவற்றை கேட்க விடாமல் பண்ணவே எங்கள் வாய்கள் அடைக்கப்படுகின்றன. வன்முறைகள் ஏவப்படுகின்றன. ஆகவே ஒற்றுமைக்கு வழியைப் பெரும்பான்மை மக்களே தமது சிந்தனை மாற்றத்தால் உண்டுபண்ண வேண்டும். மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக என்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-24#page-1

கொழும்பை பாதுகாக்கும் திட்டம் – கொமாண்டோ படைக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவு

15 hours 49 minutes ago
புலிகளின் பெயரை கேட்டாலே பின்னங்கால் பிடரியில் பட ஓடும் சிங்கள கூலிப்படைகள்( ஒரு காலத்தில் நானும் ஒரு சாட்சி) புலிகளின் பிரசன்னம் இல்லாத போது எதற்காக இப்படியான படங்காட்டல் என விளங்கவில்லை. டக்ளஸ் போன்றவர்களின் காலத்துக்கு ஏற்ப கருத்து சொல்லும் சுயநலவாதி போலல்லாமல் நியத்தை பேசலாம்.

இந்­தி­யாவின் கனவைக் கலைக்கும் நேபாளம்

15 hours 57 minutes ago
இந்­தி­யாவின் கனவைக் கலைக்கும் நேபாளம் வங்­காள விரி­குடா விளிம்பு நாடு­களின் கூட்­ட­மைப்­பான பிம்ஸ்ரெக் இப்­போது, சர்­வ­தேச அரங்கில் பலம்­பெற்று வரும், பிராந்­திய நாடு­களின் மற்­றொரு கூட்­ட­மைப்­பாக மாறத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இது ஒன்றும் புதிய அமைப்பு அல்ல. 1997ஆம் ஆண்­டி­லேயே உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால், கிட்­டத்­தட்ட இரண்டு தசாப்த கால­மாக அது பெரி­ய­ளவில் இயங்­க­வில்லை. 2016ஆம் ஆண்டு மீண்டும் உயிர்த்துக் கொண்­டது. இதற்குக் காரணம், பாகிஸ்­தா­னுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் தோன்­றிய பிரச்­சினை. அது­வரை தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தின் வலு­வான பிராந்­திய நாடு­களின் கூட்­ட­மைப்­பாக சார்க் அமைப்புத் தான் இருந்­தது. 2016ஆம் ஆண்டு சார்க் மாநாடு பாகிஸ்­தானில் நடை­பெ­ற­வி­ருந்த நிலையில் இந்­தியா அதனைப் புறக்­க­ணிப்­ப­தாக அறி­வித்­தது. அது­போ­லவே, இலங்கை, பூட்டான் ஆகிய நாடு­களும் முடி­வெ­டுத்­தன. இதனால் பாகிஸ்­தானில் நடக்க வேண்­டிய சார்க் மாநாடு நடக்­க­வில்லை. பாகிஸ்தான் பல்­வேறு முயற்­சி­களை எடுத்தும் அது கைகூ­ட­வில்லை. சார்க் அமைப்பில் பாகிஸ்தான் உறுப்பு நாடாக இருக்­கி­றது. சீனா­வுக்கும் கண்­கா­ணிப்பு நாடு என்ற அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது. இது இந்­தி­யா­வுக்கு அசௌ­க­ரி­யத்தைக் கொடுத்­தது. பாகிஸ்­தா­னுடன் ஏற்­பட்ட முரண்­பா­டு­களை அடுத்து. சார்க் அமைப்பை பல­வீ­னப்­ப­டுத்தும் முடி­வுக்கு இந்­தியா வந்­தது. 2016ஆம் ஆண்டு அந்த திட்டம் நிறை­வே­றி­யது. உட­ன­டி­யா­கவே, இந்­தியா, பிம்ஸ்ரெக் கூட்­ட­மைப்­புக்கு மீளுயிர் கொடுத்­தது. கோவாவில் நடந்த பிறிக்ஸ் நாடு­களின் தலை­வர்­களின் உச்சி மாநாட்­டுடன் இணைந்­த­தாக, பிம்ஸ்ரெக் தலை­வர்­களின் உச்சி மாநாட்­டையும் இந்­தியா நடத்­தி­யது. அதற்குப் பின்னர் கடந்த ஓகஸ்ட் மாதம், 30, 31ஆம் திக­தி­களில் பிம்ஸ்ரெக் அமைப்பின் உச்சி மாநாடு நேபா­ளத்தில் நடந்­தது. இந்த பிம்ஸ்ரெக் அமைப்பில், பாகிஸ்தான், மாலை­தீவு, ஆப்­கா­னிஸ்தான் ஆகிய சார்க் நாடுகள் இல்லை. இலங்கை, பங்­க­ளாதேஷ், நேபாளம், பூட்டான், இந்­தியா ஆகிய ஐந்து சார்க் நாடு­க­ளுடன், மேல­தி­க­மாக மியன்­மாரும், தாய்­லாந்தும் இடம்­பெற்­றுள்­ளன. பிராந்­திய நாடு­களின் அமைப்­பு­களை வழி­ந­டத்தும்- தலைமை தாங்கும் ஆர்வம் இந்­தி­யா­வுக்கு உள்­ளது. சார்க் அமைப்பு சற்று விரி­வ­டைந்து, .இந்­தி­யாவின் தலை­மைத்­து­வத்­துக்கு சவால்­களைத் தோற்­று­விக்கும் சூழல் ஏற்­பட்ட போது, அதனை ஓரம்­கட்டும் முடி­வுக்கு வந்­தது இந்­தியா. இப்­போது, பாகிஸ்­தானை தவிர வேறெ­வரும் பெரி­தாக சார்க் பற்றி பேசு­வ­தில்லை. அண்­மையில், நேபா­ளத்தில் பிம்ஸ்ரெக் மாநாட்­டுக்குச் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, காத்­மண்­டுவில் உள்ள சார்க் செய­ல­கத்­துக்கும் சென்­றி­ருந்தார். இது நாங்கள் நடு­நி­லை­யாக இருக்­கிறோம் என்று பாகிஸ்­தா­னுக்கு சமிக்­ஞையை வெளிப்­ப­டுத்தும் யுக்தி. பிராந்­திய அர­சியல், இரா­ஜ­தந்­திர, பொரு­ளா­தார ரீதி­யாக பிம்ஸ்ரெக் அமைப்பை பலப்­ப­டுத்­து­வதில் அக்­கறை காட்­டிய இந்­தியா, இந்த ஆண்டு அதனை இன்­னொரு கட்­டத்­துக்குக் கொண்டு சென்­றி­ருக்­கி­றது. பிம்ஸ்ரெக் மாநாடு தொடங்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே, இந்­தியா அதி­கா­ரிகள் மட்­டத்தில் பேச்­சுக்­களை நடத்தி, பிம்ஸ்ரெக் நாடு­களின் இரா­ணுவக் கூட்டுப் பயிற்சி ஒன்­றுக்கு ஒழுங்கு செய்­தது. புனேயில் ஒரு வார காலம் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்­பெற்­றது. ஒவ்­வொரு நாட்டில் இருந்தும், தலா 30 படை­யினர் பங்­கேற்­றனர். ஆரம்­பத்தில், பிம்ஸ்ரெக் அமைப்பின் 7 நாடு­களும் இதற்கு இணங்­கின. எனினும், பின்னர், இலங்கை, பங்­க­ளாதேஷ், மியன்மார், பூட்டான் ஆகிய நான்கு நாடுகள் தான் இந்­தி­யா­வுக்கு தமது படை­யி­னரை அனுப்பி வைத்­தன. தாய்­லாந்து, கூட்டுப் பயிற்­சிக்கு தமது படை­யி­னரை அனுப்­ப­வில்லை. கண்­கா­ணிப்பு அதி­கா­ரி­களை மாத்­திரம் அனுப்­பி­யது. நேபாளம் தான் கடைசி நேரத்தில் இந்­தி­யா­வுக்கு அதிர்ச்­சியைக் கொடுத்­தது. புனேக்கு நேபாள இரா­ணுவ அணி புறப்­ப­டு­வ­தற்கு முதல் நாள் தான், இந்தக் கூட்டுப் பயிற்­சியில் பங்­கேற்­ப­தில்லை என்று முடிவு செய்­தது நேபாளம். இது இந்­தி­யா­வுக்கு அதிர்ச்­சி­யையும் ஏமாற்­றத்­தையும் கொடுத்­தது. ஏனென்றால், இந்த பிம்ஸ்ரெக் வியூ­கத்தில் நேபாளம் முக்­கி­ய­மா­ன­தொரு நாடு. பிம்ஸ்ரெக் அமைப்பை இந்­தியா வலுப்­ப­டுத்­தி­ய­மைக்கு இரண்டு கார­ணிகள். ஒன்று பாகிஸ்தான். இரண்­டா­வது சீனா. சார்க் அமைப்­புக்குள் இருந்து பாகிஸ்­தானை விலக்கி வைப்­பது இந்­தி­யாவின் ஒரு நோக்கம் என்றால், சீனாவின் பிராந்­திய ரீதி­யான தலை­யீட்டை ஓரம்­கட்­டு­வது இன்­னொரு நோக்கம். சார்க் அமைப்பின் கண்­கா­ணிப்பு நாடு என்ற அந்­தஸ்தை பெறும் அள­வுக்கு சீனா முன்­னே­றி­யி­ருந்­தது. இந்­தியப் பெருங்­க­டலில் சீனாவின் ஆதிக்கம் வலு­வ­டைந்து வந்த நிலையில், அதற்கு முடி­வு­கட்­டு­வ­தற்­கான மாற்று உபா­ய­மா­கவும், சார்க்கை முடக்கி பிம்ஸ்­ரெக்கை உரு­வாக்­கி­யது இந்­தியா. நேபாளம், நீண்­ட­கா­ல­மா­கவே இந்­தி­யாவின் ஒரு மாநிலம் போலத் தான் இருந்து வந்­தி­ருக்­கி­றது. இன்னும் கூட நேபா­ளத்தைச் சேர்ந்­த­வர்கள் தான், இந்­தி­யாவில் காவல் பணி­களில் கூர்க்­காக்­க­ளாக இருக்­கி­றார்கள். இந்­திய இரா­ணு­வத்­தி­னரால் கூர்க்கா ரெஜிமென்ட் என்ற படைப்­பி­ரிவும் இருக்­கி­றது. நேபா­ளத்­துக்கு கடலோ, துறை­முக வச­தி­களோ கிடை­யாது. இம­ய­ம­லையில் உள்ள நாடாக நேபா­ளத்­துக்­கான அத்­தி­யா­வ­சியப் பொருட்கள், நிதி என்று இந்­தி­யாவே கொடுத்து வந்­தி­ருக்­கி­றது. ஆனால் அண்­மைக்­கா­ல­மாக நேபாளம் இந்­தி­யாவின் கட்­டுப்­பாட்­டுக்குள் இல்லை. அங்கு சீனாவின் தலை­யீ­டுகள் அதி­க­ரித்து விட்­டன. இந்­தி­யாவை விட அதி­க­மா­கவே நேபா­ளத்­துக்கு கொட்டிக் கொடுக்க சீனா தயா­ராக இருக்­கி­றது. சீனாவின் பேச்சைக் கேட்டு இந்­தி­யா­வுடன் அடிக்­கடி முரண்டு பிடிக்கும் நிலைக்கும் நேபாளம் வந்­தி­ருக்­கி­றது. இரண்டு நாடு­க­ளுக்கும் நடுவே இருப்­பதால், நேபா­ளத்தை கைக்குள் போட்டுக் கொள்­வது இப்­போது இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான, ஒரு பனிப்­போ­ரா­கவே நடந்து கொண்­டி­ருக்­கி­றது. பிம்ஸ்ரெக் அமைப்பில் நேபாளம் அங்கம் வகித்­தி­ருந்­தாலும், அர­சியல், இரா­ஜ­தந்­திர ரீதி­யாக இந்­தி­யா­வுடன் இணைந்­தி­ருப்­ப­தாக காட்டிக் கொண்­டாலும், இரா­ணுவ மற்றும் பாது­காப்பு விவ­கா­ரங்கள் என்று வந்து விட்டால், நேபாளம் இந்­தி­யாவின் சொல்­லுக்குத் தலை­யாட்டும் நிலையில் இல்லை. புனேயில் நடந்த பிம்ஸ்ரெக் நாடு­களின் இரா­ணுவ கூட்டுப் பயிற்­சியில் இருந்து விலக நேபாளம் எடுத்­தி­ருந்த முடிவே இதனை உறு­திப்­ப­டுத்­து­கி­றது. நேபா­ளத்தின் இந்த முடிவை இந்­தியா எதிர்­பார்க்­க­வில்லை. ஏற்­க­னவே, இந்­தி­யாவின் அண்டை நாடு­களில் ஒன்­றான, மாலை­தீவை இந்­தியா கிட்­டத்­தட்ட சீனா­விடம் இழந்து விட்­டது. மாலே விமான நிலைய அபி­வி­ருத்தித் திட்­டத்தில் இருந்து இந்­தி­யாவை வெளி­யேற்ற எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கையில் இருந்து தொடங்­கி­யது அந்தப் பிரச்­சினை. மாலை­தீவில் அவ­சர உதவித் தேவை­க­ளுக்­காக இந்­திய விமா­னப்­ப­டையின் எம்.ஐ.17 ஹெலி­கொப்­டர்கள் மூன்றும், 48 விமா­னப்­ப­டை­யி­னரும், அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளனர். இந்­திய ஹெலி­கொப்­டர்­களை அகற்­று­மாறும், இந்­திய விமா­னப்­ப­டை­யி­னரின் வீசா முடி­வுக்கு வந்து விட்­ட­தா­கவும், அண்­மையில் மாலை­தீவு அறி­வித்த போது இந்­தியா குழப்­ப­ம­டைந்­தது, கடை­சி­யாக இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டையில் நடத்­தப்­பட்ட பேச்­சுக்­களை அடுத்து, இந்­திய ஹெலி­களும், விமா­னப்­ப­டை­யி­னரும் தங்­கி­யி­ருக்க தற்­கா­லிக அனு­ம­தியை வழங்­கி­யி­ருக்­கி­றது மாலை­தீவு. அதே­போன்­ற­தொரு நிலையை நோக்­கியே நேபா­ளமும் செல்லத் தொடங்­கி­யுள்­ளதா என்ற அச்சம் இந்­தி­யா­வுக்கு இருக்­கவே செய்­கி­றது. பிம்ஸ்ரெக் நாடு­களின் இரா­ணுவக் கூட்டுப் பயிற்­சியின் ஒரு கட்­ட­மாக, உறுப்பு நாடு­களின் இரா­ணுவத் தள­ப­திகள் பங்­கேற்ற மாநாடு ஒன்றும், புனேயில் நடை­பெற்­றது. அதில் இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­கவும் பங்­கேற்­றி­ருந்தார். அதில் உரை­யாற்­றிய இந்­திய இரா­ணுவத் தள­பதி ஜெனரல் பிபின் ராவத், சீனா­விடம் இருந்து உதவி பெறும் நாடுகள், அந்த உத­விகள் எது­வுமே இல­வசம் அல்ல என்­பதை தெரிந்து கொள்­வார்கள் என்று எச்­ச­ரித்­தி­ருந்தார். அத்­துடன், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் இந்­தி­யாவின் பக்கம் சாய வேண்டும் என்றும், ஏனென்றால் அது தான் புவி­யியல் என்றும் அவர் கூறி­யி­ருந்தார். பாகிஸ்­தா­னுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் முன்­பி­ருந்த நெருக்கம் இல்­லாமல் போனது போலவே, நேபா­ளத்­துக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான நெருக்கம் தற்­கா­லி­க­மா­னது தான் என்ற தொனியில் அவர் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். இந்­திய இரா­ணுவத் தள­பதி ஒருவர் பிராந்­திய அர­சியல் பற்றி அதிகம் வெளி­யிட்ட கருத்­தாக இதனைக் கொள்­ளலாம். இது, பிராந்­திய அர­சி­யலை விட, பிராந்­திய பாது­காப்­புக்கு இந்­தியா முக்­கி­யத்­துவம் கொடுக்­கி­றது என்­பதை காட்­டி­யி­ருக்­கி­றது. ஆனாலும், சார்க் அமைப்பில் தனக்கு அடங்­காத நாடு­க­ளான, பாகிஸ்தான், மாலை­தீவை விலக்கி வைத்துக் கொண்டு, தனக்குக் கீழ் செயற்­படக் கூடிய நாடு­களை உள்­ள­டக்கி பிம்ஸ்ரெக் அமைப்பை பலப்­ப­டுத்­திய இந்­தி­யா­வுக்கு நேபாளம் சவா­லா­கவே இருக்­கி­றது. புனே இரா­ணுவப் பயிற்சி நிறைவு நிகழ்வில் உரை­யாற்­றிய இந்­திய இரா­ணுவத் தள­பதி, இந்­தி­யாவின் பிரதான பொருளாதாரப் போட்டியாளராக சீனாவே உள்ளது, இரண்டு நாடுகளும், தெற்காசியாவின் ஆதிக்கத்துக்காக போட்டியிடுகின்றன என்ற உண்மையை உடைத்திருந்தார். அதுபோலவே, இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே, பிம்ஸ்ரெக் பிராந்தியத்தில், தீவிரவாதம் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியா கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். பிராந்தியத் தலைமைத்துவத்தை வகிக்க இந்தியா விரும்புகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அவ்வாறு பிராந்திய தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவது உறுப்பு நாடுகள் தான். தலைமைக்கு அடங்கிப்போகும் உறுப்பு நாடுகள் இருக்கும் வரை தான் அது சாத்தியம். நேபாளம் குறுக்கே இழுத்துக் கொண்டு செல்வது. இந்தியாவின் அந்த தலைமைத்துவ கனவுக்கு சவாலாகவே இருக்கும். http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-23#page-3

இந்­தி­யாவின் கனவைக் கலைக்கும் நேபாளம்

15 hours 57 minutes ago
இந்­தி­யாவின் கனவைக் கலைக்கும் நேபாளம்
Untitled-7-824e0b4432f75ea08b1c6c422bad8b23811ca223.jpg

 

வங்­காள விரி­குடா விளிம்பு நாடு­களின் கூட்­ட­மைப்­பான பிம்ஸ்ரெக் இப்­போது, சர்­வ­தேச அரங்கில் பலம்­பெற்று வரும், பிராந்­திய நாடு­களின் மற்­றொரு கூட்­ட­மைப்­பாக மாறத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

இது ஒன்றும் புதிய அமைப்பு அல்ல. 1997ஆம் ஆண்­டி­லேயே உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால், கிட்­டத்­தட்ட இரண்டு தசாப்த கால­மாக அது பெரி­ய­ளவில் இயங்­க­வில்லை.

2016ஆம் ஆண்டு மீண்டும் உயிர்த்துக் கொண்­டது. இதற்குக் காரணம், பாகிஸ்­தா­னுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் தோன்­றிய பிரச்­சினை.

அது­வரை தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தின் வலு­வான பிராந்­திய நாடு­களின் கூட்­ட­மைப்­பாக சார்க் அமைப்புத் தான் இருந்­தது.

2016ஆம் ஆண்டு சார்க் மாநாடு பாகிஸ்­தானில் நடை­பெ­ற­வி­ருந்த நிலையில் இந்­தியா அதனைப் புறக்­க­ணிப்­ப­தாக அறி­வித்­தது. அது­போ­லவே, இலங்கை, பூட்டான் ஆகிய நாடு­களும் முடி­வெ­டுத்­தன.

இதனால் பாகிஸ்­தானில் நடக்க வேண்­டிய சார்க் மாநாடு நடக்­க­வில்லை. பாகிஸ்தான் பல்­வேறு முயற்­சி­களை எடுத்தும் அது கைகூ­ட­வில்லை.

சார்க் அமைப்பில் பாகிஸ்தான் உறுப்பு நாடாக இருக்­கி­றது. சீனா­வுக்கும் கண்­கா­ணிப்பு நாடு என்ற அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது. இது இந்­தி­யா­வுக்கு அசௌ­க­ரி­யத்தைக் கொடுத்­தது.

பாகிஸ்­தா­னுடன் ஏற்­பட்ட முரண்­பா­டு­களை அடுத்து. சார்க் அமைப்பை பல­வீ­னப்­ப­டுத்தும் முடி­வுக்கு இந்­தியா வந்­தது. 2016ஆம் ஆண்டு அந்த திட்டம் நிறை­வே­றி­யது.

உட­ன­டி­யா­கவே, இந்­தியா, பிம்ஸ்ரெக் கூட்­ட­மைப்­புக்கு மீளுயிர் கொடுத்­தது. கோவாவில் நடந்த பிறிக்ஸ் நாடு­களின் தலை­வர்­களின் உச்சி மாநாட்­டுடன் இணைந்­த­தாக, பிம்ஸ்ரெக் தலை­வர்­களின் உச்சி மாநாட்­டையும் இந்­தியா நடத்­தி­யது.

அதற்குப் பின்னர் கடந்த ஓகஸ்ட் மாதம், 30, 31ஆம் திக­தி­களில் பிம்ஸ்ரெக் அமைப்பின் உச்சி மாநாடு நேபா­ளத்தில் நடந்­தது.

இந்த பிம்ஸ்ரெக் அமைப்பில், பாகிஸ்தான், மாலை­தீவு, ஆப்­கா­னிஸ்தான் ஆகிய சார்க் நாடுகள் இல்லை. இலங்கை, பங்­க­ளாதேஷ், நேபாளம், பூட்டான், இந்­தியா ஆகிய ஐந்து சார்க் நாடு­க­ளுடன், மேல­தி­க­மாக மியன்­மாரும், தாய்­லாந்தும் இடம்­பெற்­றுள்­ளன.

பிராந்­திய நாடு­களின் அமைப்­பு­களை வழி­ந­டத்தும்- தலைமை தாங்கும் ஆர்வம் இந்­தி­யா­வுக்கு உள்­ளது. சார்க் அமைப்பு சற்று விரி­வ­டைந்து, .இந்­தி­யாவின் தலை­மைத்­து­வத்­துக்கு சவால்­களைத் தோற்­று­விக்கும் சூழல் ஏற்­பட்ட போது, அதனை ஓரம்­கட்டும் முடி­வுக்கு வந்­தது இந்­தியா.

இப்­போது, பாகிஸ்­தானை தவிர வேறெ­வரும் பெரி­தாக சார்க் பற்றி பேசு­வ­தில்லை.

அண்­மையில், நேபா­ளத்தில் பிம்ஸ்ரெக் மாநாட்­டுக்குச் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, காத்­மண்­டுவில் உள்ள சார்க் செய­ல­கத்­துக்கும் சென்­றி­ருந்தார். இது நாங்கள் நடு­நி­லை­யாக இருக்­கிறோம் என்று பாகிஸ்­தா­னுக்கு சமிக்­ஞையை வெளிப்­ப­டுத்தும் யுக்தி.

பிராந்­திய அர­சியல், இரா­ஜ­தந்­திர, பொரு­ளா­தார ரீதி­யாக பிம்ஸ்ரெக் அமைப்பை பலப்­ப­டுத்­து­வதில் அக்­கறை காட்­டிய இந்­தியா, இந்த ஆண்டு அதனை இன்­னொரு கட்­டத்­துக்குக் கொண்டு சென்­றி­ருக்­கி­றது.

பிம்ஸ்ரெக் மாநாடு தொடங்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே, இந்­தியா அதி­கா­ரிகள் மட்­டத்தில் பேச்­சுக்­களை நடத்தி, பிம்ஸ்ரெக் நாடு­களின் இரா­ணுவக் கூட்டுப் பயிற்சி ஒன்­றுக்கு ஒழுங்கு செய்­தது.

புனேயில் ஒரு வார காலம் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்­பெற்­றது. ஒவ்­வொரு நாட்டில் இருந்தும், தலா 30 படை­யினர் பங்­கேற்­றனர். ஆரம்­பத்தில், பிம்ஸ்ரெக் அமைப்பின் 7 நாடு­களும் இதற்கு இணங்­கின.

எனினும், பின்னர், இலங்கை, பங்­க­ளாதேஷ், மியன்மார், பூட்டான் ஆகிய நான்கு நாடுகள் தான் இந்­தி­யா­வுக்கு தமது படை­யி­னரை அனுப்பி வைத்­தன.

தாய்­லாந்து, கூட்டுப் பயிற்­சிக்கு தமது படை­யி­னரை அனுப்­ப­வில்லை. கண்­கா­ணிப்பு அதி­கா­ரி­களை மாத்­திரம் அனுப்­பி­யது. நேபாளம் தான் கடைசி நேரத்தில் இந்­தி­யா­வுக்கு அதிர்ச்­சியைக் கொடுத்­தது.

புனேக்கு நேபாள இரா­ணுவ அணி புறப்­ப­டு­வ­தற்கு முதல் நாள் தான், இந்தக் கூட்டுப் பயிற்­சியில் பங்­கேற்­ப­தில்லை என்று முடிவு செய்­தது நேபாளம். இது இந்­தி­யா­வுக்கு அதிர்ச்­சி­யையும் ஏமாற்­றத்­தையும் கொடுத்­தது.

ஏனென்றால், இந்த பிம்ஸ்ரெக் வியூ­கத்தில் நேபாளம் முக்­கி­ய­மா­ன­தொரு நாடு.

பிம்ஸ்ரெக் அமைப்பை இந்­தியா வலுப்­ப­டுத்­தி­ய­மைக்கு இரண்டு கார­ணிகள். ஒன்று பாகிஸ்தான். இரண்­டா­வது சீனா.

சார்க் அமைப்­புக்குள் இருந்து பாகிஸ்­தானை விலக்கி வைப்­பது இந்­தி­யாவின் ஒரு நோக்கம் என்றால், சீனாவின் பிராந்­திய ரீதி­யான தலை­யீட்டை ஓரம்­கட்­டு­வது இன்­னொரு நோக்கம்.

சார்க் அமைப்பின் கண்­கா­ணிப்பு நாடு என்ற அந்­தஸ்தை பெறும் அள­வுக்கு சீனா முன்­னே­றி­யி­ருந்­தது.

இந்­தியப் பெருங்­க­டலில் சீனாவின் ஆதிக்கம் வலு­வ­டைந்து வந்த நிலையில், அதற்கு முடி­வு­கட்­டு­வ­தற்­கான மாற்று உபா­ய­மா­கவும், சார்க்கை முடக்கி பிம்ஸ்­ரெக்கை உரு­வாக்­கி­யது இந்­தியா.

நேபாளம், நீண்­ட­கா­ல­மா­கவே இந்­தி­யாவின் ஒரு மாநிலம் போலத் தான் இருந்து வந்­தி­ருக்­கி­றது. இன்னும் கூட நேபா­ளத்தைச் சேர்ந்­த­வர்கள் தான், இந்­தி­யாவில் காவல் பணி­களில் கூர்க்­காக்­க­ளாக இருக்­கி­றார்கள். இந்­திய இரா­ணு­வத்­தி­னரால் கூர்க்கா ரெஜிமென்ட் என்ற படைப்­பி­ரிவும் இருக்­கி­றது.

நேபா­ளத்­துக்கு கடலோ, துறை­முக வச­தி­களோ கிடை­யாது. இம­ய­ம­லையில் உள்ள நாடாக நேபா­ளத்­துக்­கான அத்­தி­யா­வ­சியப் பொருட்கள், நிதி என்று இந்­தி­யாவே கொடுத்து வந்­தி­ருக்­கி­றது.

ஆனால் அண்­மைக்­கா­ல­மாக நேபாளம் இந்­தி­யாவின் கட்­டுப்­பாட்­டுக்குள் இல்லை. அங்கு சீனாவின் தலை­யீ­டுகள் அதி­க­ரித்து விட்­டன. இந்­தி­யாவை விட அதி­க­மா­கவே நேபா­ளத்­துக்கு கொட்டிக் கொடுக்க சீனா தயா­ராக இருக்­கி­றது.

சீனாவின் பேச்சைக் கேட்டு இந்­தி­யா­வுடன் அடிக்­கடி முரண்டு பிடிக்கும் நிலைக்கும் நேபாளம் வந்­தி­ருக்­கி­றது.

இரண்டு நாடு­க­ளுக்கும் நடுவே இருப்­பதால், நேபா­ளத்தை கைக்குள் போட்டுக் கொள்­வது இப்­போது இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான, ஒரு பனிப்­போ­ரா­கவே நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

பிம்ஸ்ரெக் அமைப்பில் நேபாளம் அங்கம் வகித்­தி­ருந்­தாலும், அர­சியல், இரா­ஜ­தந்­திர ரீதி­யாக இந்­தி­யா­வுடன் இணைந்­தி­ருப்­ப­தாக காட்டிக் கொண்­டாலும், இரா­ணுவ மற்றும் பாது­காப்பு விவ­கா­ரங்கள் என்று வந்து விட்டால், நேபாளம் இந்­தி­யாவின் சொல்­லுக்குத் தலை­யாட்டும் நிலையில் இல்லை.

புனேயில் நடந்த பிம்ஸ்ரெக் நாடு­களின் இரா­ணுவ கூட்டுப் பயிற்­சியில் இருந்து விலக நேபாளம் எடுத்­தி­ருந்த முடிவே இதனை உறு­திப்­ப­டுத்­து­கி­றது. நேபா­ளத்தின் இந்த முடிவை இந்­தியா எதிர்­பார்க்­க­வில்லை.

ஏற்­க­னவே, இந்­தி­யாவின் அண்டை நாடு­களில் ஒன்­றான, மாலை­தீவை இந்­தியா கிட்­டத்­தட்ட சீனா­விடம் இழந்து விட்­டது. மாலே விமான நிலைய அபி­வி­ருத்தித் திட்­டத்தில் இருந்து இந்­தி­யாவை வெளி­யேற்ற எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கையில் இருந்து தொடங்­கி­யது அந்தப் பிரச்­சினை.

மாலை­தீவில் அவ­சர உதவித் தேவை­க­ளுக்­காக இந்­திய விமா­னப்­ப­டையின் எம்.ஐ.17 ஹெலி­கொப்­டர்கள் மூன்றும், 48 விமா­னப்­ப­டை­யி­னரும், அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்­திய ஹெலி­கொப்­டர்­களை அகற்­று­மாறும், இந்­திய விமா­னப்­ப­டை­யி­னரின் வீசா முடி­வுக்கு வந்து விட்­ட­தா­கவும், அண்­மையில் மாலை­தீவு அறி­வித்த போது இந்­தியா குழப்­ப­ம­டைந்­தது,

கடை­சி­யாக இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டையில் நடத்­தப்­பட்ட பேச்­சுக்­களை அடுத்து, இந்­திய ஹெலி­களும், விமா­னப்­ப­டை­யி­னரும் தங்­கி­யி­ருக்க தற்­கா­லிக அனு­ம­தியை வழங்­கி­யி­ருக்­கி­றது மாலை­தீவு.

அதே­போன்­ற­தொரு நிலையை நோக்­கியே நேபா­ளமும் செல்லத் தொடங்­கி­யுள்­ளதா என்ற அச்சம் இந்­தி­யா­வுக்கு இருக்­கவே செய்­கி­றது.

பிம்ஸ்ரெக் நாடு­களின் இரா­ணுவக் கூட்டுப் பயிற்­சியின் ஒரு கட்­ட­மாக, உறுப்பு நாடு­களின் இரா­ணுவத் தள­ப­திகள் பங்­கேற்ற மாநாடு ஒன்றும், புனேயில் நடை­பெற்­றது. அதில் இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­கவும் பங்­கேற்­றி­ருந்தார்.

அதில் உரை­யாற்­றிய இந்­திய இரா­ணுவத் தள­பதி ஜெனரல் பிபின் ராவத், சீனா­விடம் இருந்து உதவி பெறும் நாடுகள், அந்த உத­விகள் எது­வுமே இல­வசம் அல்ல என்­பதை தெரிந்து கொள்­வார்கள் என்று எச்­ச­ரித்­தி­ருந்தார்.

அத்­துடன், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் இந்­தி­யாவின் பக்கம் சாய வேண்டும் என்றும், ஏனென்றால் அது தான் புவி­யியல் என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

பாகிஸ்­தா­னுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் முன்­பி­ருந்த நெருக்கம் இல்­லாமல் போனது போலவே, நேபா­ளத்­துக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான நெருக்கம் தற்­கா­லி­க­மா­னது தான் என்ற தொனியில் அவர் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

இந்­திய இரா­ணுவத் தள­பதி ஒருவர் பிராந்­திய அர­சியல் பற்றி அதிகம் வெளி­யிட்ட கருத்­தாக இதனைக் கொள்­ளலாம். இது, பிராந்­திய அர­சி­யலை விட, பிராந்­திய பாது­காப்­புக்கு இந்­தியா முக்­கி­யத்­துவம் கொடுக்­கி­றது என்­பதை காட்­டி­யி­ருக்­கி­றது.

ஆனாலும், சார்க் அமைப்பில் தனக்கு அடங்­காத நாடு­க­ளான, பாகிஸ்தான், மாலை­தீவை விலக்கி வைத்துக் கொண்டு, தனக்குக் கீழ் செயற்­படக் கூடிய நாடு­களை உள்­ள­டக்கி பிம்ஸ்ரெக் அமைப்பை பலப்­ப­டுத்­திய இந்­தி­யா­வுக்கு நேபாளம் சவா­லா­கவே இருக்­கி­றது.

புனே இரா­ணுவப் பயிற்சி நிறைவு நிகழ்வில் உரை­யாற்­றிய இந்­திய இரா­ணுவத் தள­பதி, இந்­தி­யாவின் பிரதான பொருளாதாரப் போட்டியாளராக சீனாவே உள்ளது, இரண்டு நாடுகளும், தெற்காசியாவின் ஆதிக்கத்துக்காக போட்டியிடுகின்றன என்ற உண்மையை உடைத்திருந்தார்.

அதுபோலவே, இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே, பிம்ஸ்ரெக் பிராந்தியத்தில், தீவிரவாதம் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியா கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார்.

பிராந்தியத் தலைமைத்துவத்தை வகிக்க இந்தியா விரும்புகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

அவ்வாறு பிராந்திய தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவது உறுப்பு நாடுகள் தான். தலைமைக்கு அடங்கிப்போகும் உறுப்பு நாடுகள் இருக்கும் வரை தான் அது சாத்தியம்.

நேபாளம் குறுக்கே இழுத்துக் கொண்டு செல்வது. இந்தியாவின் அந்த தலைமைத்துவ கனவுக்கு சவாலாகவே இருக்கும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-23#page-3