தியாக தீபம் திலீபன்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் 15-09-1987

Aggregator

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி

1 month 3 weeks ago
அந்த டிரெஸ்ஸிங் கவுண் ..போட்டவா...என்னத்தையோ...ஒரு நாளும் காணாத ஒண்டைக்கண்டது போல...உத்துப் பார்க்கிறா! இப்படி நிர்வாணமாகத் திரியிறது....ஜெயின்..சமண சமயங்களின் வழக்கமாகும்! இவருக்கு ஏதோ....ஒரு விதமான நரம்பியல் பிரச்சனை இருக்குப் போல கிடக்கு! அல்லது...நல்ல..நுழம்புக் கடியோ தெரியாது! மேலதிக படங்கள்....இருந்தால் இணைக்கவும்!

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி

1 month 3 weeks ago
இப்ப இந்த கோவில் தொடக்கத்தில் ஆகா ஓகோ என்று செய்வினம் இரண்டு மூன்று வருடங்கள் போன பின் தமிழனுக்கு என்ற சொறிக்குனம் வெளிய எட்டி பார்க்கும் பிறகென்ன மாறி மாறி போலீசுக்கும் கவுன்சிலுக்கும் பெட்டிசம் போகும் தானாகவே இந்த தீ மிதி விளயாட்டு நின்றுவிடும் .

செவ்வாய் கிரகத்தில் 20 கி.மீ பரப்பளவுள்ள ஏரி கண்டுபிடிப்பு

1 month 3 weeks ago
சந்திரனில் அமெரிக்க கொடி எத்தின விளையாட்டு போல் இவ்வளவு சிலவு செய்து ஒன்டுமில்லைஎன்று சொல்ல கூடாது பாருங்கோ .

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி

1 month 3 weeks ago
எல்லாமே.....ஒரு எடுப்புக்குத் தான்.....! ஐரோப்பியரின் கண்களுக்கு....ஒரு ஆபிரிக்க நடனம் பார்ப்பது போலவே....இருந்திருக்கும் என்பது எனது அனுமானம்!

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி

1 month 3 weeks ago
இந்த கோவிலுக்கு போவது விட அமைதியான ஏரிக்கரையில் உள்ள ரெஸ்ரராண்டில் அமர்ந்து பியர் அருந்துவதால் மன மகிழ்வும் மன அமைதியும் அதிகமாக கிடைக்கும்.

வடக்கில் அதிகரிக்கும் வன்முறைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது பெரிய விடயமல்ல: முதலமைச்சர்

1 month 3 weeks ago
ஏதோ பதில் எழுத வேண்டும் என்பதற்காக எழுதி உள்ளீர்கள். வழிபாட்டுக்கு வரை முறை உண்டு என்றால் அது நீதியானதாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்தவர்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற விதிமுறையை உருவாக்கியது யார்? கடவுளா? அது கடவுள் என்றால் இவ்வளவு ஓர வஞ்சனை உள்ளவரா கடவுள்? இதில் என்ன நீதியை கண்டு விட்டீர்கள். பிறப்பால் பிராமணர் அல்லாதோர் உண்மையான பக்தியுடன் ஆன்மீகவாதிகளாக பூஜை செய்தால் நிலமை மோசமாகி விடும் என்று எழுதி உள்ளீர்கள். அது எப்படி மோசமாகும்? நீங்கள் கூறும் மோசம் என்பது என்ன? அது உங்களுக்கே புரியாத புதிர். பிராமணர்களுக்கு அவகளின் பித்தலாட்டத்திற்கு வக்காலத்து வாங்கிவிட்டு அவரகளை நாம் தூக்கி பிடிப்பதாக ஆதாரமற்ற குற்றச்சட்டு வேறு. கோவில்கள் ஆன்மிகத்தை வளர்பதற்கு ஆடம்பர திருவிழாக்கள் தேவையில்லை. ஆன்மீகம் என்பது உண்மையில் ஒரு wellness போன்றது.மன உள அமைதியை உருவாக்கவே wellness,meditation போன்றவை உள்ளன. அதில ஒரு வகை தான் ஆன்மீகம். அதற்கு கோவில்கள் அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும் . திருவிழாக்கள் வைப்பபது உண்மையில் மத வியாபாரிகள். பார்பனர்கள் பணமீட்டவே. அப்படியான வியாபார கோவில் திருவிழாக்களில் விடுப்பு பார்பபது ஒன்றும் தவறு இல்லை. மதவியாபாரிகள் பணமீட்டும் திருவிழாக்களில் இளவட்டங்கள் Entertainment செய்வதுஇயல்பானது.

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

1 month 3 weeks ago
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்! June 22, 2018 பீஷ்மர் இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24 மட்டக்களப்பில் செயற்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை போராளிகளிற்குள் குழப்பம் ஏற்படுத்தி, அவர்களை தன்னுடன் இழுத்தெடுக்க கருணா முயற்சித்தார் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். புலனாய்வுத்துறை அணியிலிருந்து விலகி, மட்டக்களப்பு மாவட்ட அணியுடன் செயற்படவிருப்பதாக அவர்கள் புலிகளின் தலைமைச்செயலகத்திற்கு கடிதம் எழுதினார்கள். இது புலிகளிற்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அப்போது தலைமைசெயலகத்திற்கு பொறுப்பாக இருந்தவர் தேவன். பிரபாகரனின் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர். அவரை பற்றிய சிறு குறிப்பொன்றை தந்துவிட்டு, கிழக்கு பிரச்சனையை தொடர்கிறோம். இம்ரான் பாண்டியன் படையணி தளபதியாக இருந்தவர் கடாபி (ஆதவன்). இம்ரான் பாண்டியன் படையணிதான் அப்போது பிரபாகரனது பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தது. (பின்னர்தான் ராதா படையணியாக மாறியது) அதனால் அந்த படையணியில் இரகசியம் பேணுவது முக்கியமானது. விடுதலைப்புலிகளிடம் புலனாய்வு அமைப்பொன்று இருந்தாலும், இம்ரான் பாண்டியன் படையணியும் தனியாக ஒரு புலனாய்வு அமைப்பை உருவாக்கினார்கள். அதன் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்து மரணமடைந்த மேஜர் கௌதமனின் (முல்லைத்தீவு ஓயாத அலைகள் 1 தாக்குதலில் மரணமானார்) பெயரை அந்த அணிக்கு சூட்டியிருந்தனர். பிரபாகரன்- இரட்ணம் மாஸ்ரர் இரட்ணம் மாஸ்ரர்தான் இதன் பொறுப்பாளர். பிரபாகரனின் பாதுகாப்பில் அக்கறையாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்துடன், இம்ரான் பாண்டியன் படையணியில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. பாதுகாப்பு பிரிவில் இருப்பவர்கள் தவறு செய்தால், வீடு செல்லப்போகிறோம் என்றால், இந்த புலனாய்வுத்துறையின் கீழிருந்த சிறைச்சாலையில் அடைத்து விடுவார்கள். அங்கு கடுமையான நடைமுறைகள் இருந்தன. இதனால் போராளிகள் உடல்ரீதியாக கடுமையான பாதிப்புக்களை சந்திக்க ஆரம்பித்தனர். இதனால் இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடுமையான பாதிப்பிற்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ பிரிவின் மருத்துவமனைகளிற்கு சென்று கொண்டிருந்தார்கள். தாக்குதலில் கடுமையான காயமடைந்து, உடல்பாதிப்பிற்குள்ளாகுவதுதான் வழக்கம். ஆனால், அப்படி இல்லாமல், ஒரு படையணியில் இருந்து கடுமையான பாதிப்புப்புடன் போராளிகள் வருகிறார்களே, என்ன விசயமாக இருக்கும் என டொக்ரர் அன்ரி (எழுமதி கரிகாலன்) தான் முதன்முதலில் இதில் கவனம் செலுத்தினார். (டொக்ரர் அன்ரி- புலிகளின் கிழக்கு அரசியல்துறை பொறுப்பாளராகவும், பின்னர் பொருண்மிய மேம்பாட்டு பிரிவின் பொறுப்பாளராகவும் இருந்த கரிகாலனின் மனைவி. யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடத்தின் முதலாவது அணியில் கற்கையை பூர்த்தி செய்தவர். ஆரம்பகாலத்திலிருந்தே புலிகளுடன் நெருக்கமாக இருந்தவர். தலைவர் பிரபாகரனின் குடும்ப வைத்தியரும் இவர்தான். பிரபாகரன் குடும்பத்துடன் தனிப்பட்ட நெருக்கத்தையும் பேணினார். அதனால், எந்த விவகாரத்தையும் பிரபாகரனின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவரால் முடிந்தது). கரிகாலன்- எழுமதி (டொக்ரர் அன்ரி) இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடுமையான பாதிப்புடன் வைத்தியசாலைக்கு வரும் போராளிகளின் விபரங்களை ஆராய்ந்த டொக்ரர் அன்ரி, அது அவர்களின் புலனாய்வு பிரிவின் நடைமுறைகளின் விளைவு என்பதை புரிந்து கொண்டார். எந்த தயக்கமுமின்றி உடனடியாக, இது பற்றி பிரபாகரனிற்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அறிக்கையை படித்த பிரபாகரன், அந்த சிறைச்சாலையை உடனடியாக இடிக்க சொன்னார். அப்போது தலைமைசெயலக பொறுப்பாளராக இருந்த தேவனிடம் அதை கண்காணிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார். தேவன், இம்ரான்பாண்டியன் படையணியிலிருந்து வளர்ந்தவர். பிரபாகரனின் பாதுகாப்பு அணி பொறுப்பாளராகவும் இருந்தவர். பிரபாகரனின் பாதுகாப்பு அணி பொறுப்பாளராக வளர்ந்தவர்களை, அடுத்த கட்டமாக ஒரு மாவட்ட தளபதியாகவோ, அல்லது முக்கிய பொறுப்பாளராகவோ அனுப்பும் வழக்கமிருந்தது. பிரபாகரனின் கண் முன்னால் வளர்ந்தவர்களை, அவர்களின் திறமையை கண்டு பிரபாகரனே வளர்ந்துவர சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தவர்களை- முக்கியமான பொறுப்பில் வெற்றிடம் ஏற்படும்போது, அங்கு அனுப்புவார். 1995 இல் மணலாறு மாவட்ட தளபதியாக குமரன் நியமிக்கப்பட்டபோது, அவரின் வயது இருபத்துகளின் ஆரம்பமாக இருந்தது. பிரபாகரனின் பாதுகாப்பு அணிக்கு பொறுப்பாக இருந்தவர். மணலாறு தளபதியாக இருந்த வெள்ளை, மணலாறு தாக்குதலில் சறுக்க- அந்த இடத்திற்கு குமரன் நியமிக்கப்பட்டார். பிரபாகரனின் தெரிவு மிகச்சரி என்பதை குமரன் நிரூபித்தார். 1993 இல் லெப்.கேணல் அன்பு இருந்த சமயத்தில் மணலாறு காடு எப்படி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததோ, அப்படியான நிலைமையை குமரன் ஏற்படுத்தினார். தேவனும் பிரபாகரனின் பாதுகாப்பு அணி பொறுப்பாளராக இருந்தபோது, தலைமை செயலக பொறுப்பாளராக இருந்த பதுமன் திருகோணமலைக்கு தளபதியாக அனுப்பப்பட்டார். அந்த வெற்றிடத்திற்கு தேவன் நியமிக்கப்பட்டார். கடாபி கடாபியை மீறி சிறையை உடைக்க தேவன் விரும்பவில்லை. கடாபியும் உடைக்க விரும்பவில்லை. அதனால் சிறை உடைக்கப்படாமலேயே இருந்தது. சிறையை உடைக்க சொன்ன பிரபாகரன், அதை மறந்திருப்பார் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், பிரபாகரன் அதை மறக்கவில்லை. சிறிய இடைவெளியின் பின், இருவரையும் அழைத்து, சிறை உடைக்கப்பட்டு விட்டதா என வினவினார். அது உடைக்கப்படவில்லை! கடாபி, தேவன் இருவரையுமே அவர்களின் பொறுப்பிலிருந்து நீக்கினார். 2001 வரை விடுதலைப்புலிகள் அமைப்பின் மிக சக்தி வாய்ந்த நபராக இருந்தவர் கடாபி. பிரபாகரனது பாதுகாப்பு, விமான எதிர்ப்பு அணி, தரை கரும்புலிகள், விக்டர் கவச எதிர்ப்பு படையணி, ராங்கி அணி, விடுதலைப்புலிகள் வாங்கும் எந்த புதியரக கனரக ஆயுதமானாலும் அது கடாபியின் கீழ்தான் வரும், ஏனைய படையணிகளிற்கான கனரக ஆயுத பயிற்சி என பலபிரிவுகளிற்கு கடாபி பொறுப்பாக இருந்தார். இந்த சிறை சம்பவத்துடன் (வேறு சில சம்பவங்களும் இருந்தன) அவரை வேறு பொறுப்பிற்கு மாற்றினார் பிரபாகரன். புலிகளிற்குள் இந்தவகையான நடவடிக்கைக்கு ‘காற்று இறக்கல்’ என்ற சொல் பாவிக்கப்படும். புதிய போராளிகளிற்கு பயிற்சியளிப்பதற்கு பொறுப்பாக கடாபி நியமிக்கப்பட்டார். தேவன் திருகோணமலைக்கு மாற்றப்பட்டார். இந்த தேவன் தலைமைசெயலகத்திற்கு பொறுப்பாக இருந்த சமயத்தில்தான் மட்டக்களப்பில் இருந்து ரெஜினோல்ட் உள்ளிட்ட சிலரது கடிதம் வந்தது. இது புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்ட விசயம். இந்த இடத்தில் புலிகளின் தலைமைசெயலகம் பற்றிய சிறு விளக்கம் தர வேண்டும். அனைத்து போராளிகளின் பதிவும், ஆயுதங்களின் பதிவும் தலைமைசெயலகத்தில் இருக்கும். சில இரகசிய செயற்பாட்டில் இருக்கும் போராளிகள் பற்றிய விபரம் தலைமை செயலகத்தில் இருக்காது. அதேபோல, புலிகள் புதிதாக ஏதாவது இரகசிய ஆயுதங்கள் இறக்குமதி செய்து பாவனையில் வைத்திருந்தால், அதுவும் பதிவிற்கு வராது. புலிகள் 1996 இல் SPG 9 என்ற ராங்கி எதிர்ப்பு ஆயுதத்தை இறக்குமதி செய்ததாக முன்னர் குறிப்பிட்டிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் தலைமைசெயலக பதிவிற்கு அது செல்லவில்லை. அதுபோல, ஆயுத களஞ்சியங்களில் உள்ள ஆயுதங்களின் விபரமும் இருக்காது. படையணி மாற்றப்படும் போராளிகள் தலைமைச்செயலகம் சென்று, அங்கிருந்தான் செல்வார்கள். ஆனால் தலைமைசெயலகமாக யாரையும் இடமாற்றம் செய்யவோ, படையணி மாற்றம் செய்யவோ முடியாது. அமைப்பிற்குள் நடக்கும் மாற்றங்களை பதிவு செய்வார்கள் அவ்வளவுதான். ஆனால் போராளிகளின் பிரச்சனைகளை, கருத்துக்களை தலைமைசெயலகத்திற்கு எழுதினால், சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்து முடிவெடுப்பார்கள். மட்டக்களப்பு புலனாய்வுத்துறை முக்கியஸ்தர்கள் ரெஜினோல்ட் தலைமையில் தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதியதும், அது பெரிய குழப்பமாகியது. தலைமைசெயலகம் இதில் நடவடிக்கை எடுக்க முடியாது. மட்டக்களப்பிலுள்ள தலைமைசெயலக பொறுப்பாளரை தொடர்பு கொண்டு, ரெஜினோல்ட் ஆட்களுடன் பேசி காரணத்தை அறிய சொன்னார்கள். மட்டக்களப்பு தலைமை செயலக பொறுப்பாளர் உடனே ரெஜினோல்ட் ஆட்களை அழைத்து என்ன பிரச்சனையென விசாரித்தார். ரெஜினோல்ட் ஆட்கள் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்கள்- ‘நாங்கள் அம்மானின் கட்டளையின் கீழ் செயற்படவே விரும்புகிறோம்’ என. தலைமை செயலகத்தில் இருப்பவர்கள் அடிக்கடி இப்படியான பிரச்சனைகளை சந்திப்பது வழக்கம்தான். ‘இந்த தளபதியின் கீழ் செயற்படமாட்டேன். அந்த தளபதியின் கீழ்தான் செயற்படுவேன்’ என போராளிகள் சொல்வது சகஜம்தான். ஆனால் மட்டக்களப்பில் நடந்தது வேறு வகை. ஒரு பின்னணி சக்தியின் துணையுடன் போராளிகள் ஆட்டுவிக்கப்பட்டனர். சிவப்பு அடையாளமிட்டவர் தேவன். பிரபாகரனின் பாதுகாப்பு அணி பொறுப்பாளராக இருந்தபோது. அருகில் சிலம்பரசன் (சாதாண உடை- பின்னர் பாதுகாப்பு அணி பொறுப்பாளராக இருந்தவர். இறுதி யுத்தத்தில் மரணமானவர்) மற்றும் வீரமணி (தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்) இந்த விடயம் பிரபாகரன், பொட்டம்மானிடமும் சென்றது. அவர்களிடம் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று- பிரச்சனையை கிளப்புகிறார்கள் என ஒரேயடியாக வீட்டுக்கே அனுப்பிவிடலாம். அப்படி நடந்தால் அது கருணாவையும் சீண்டும். கருணா நீண்ட நாளுக்கு ஒழித்து பிடித்து விளையாட முடியாது. இரண்டாவது தெரிவு- விட்டு பிடிப்பது. ரெஜினோல்ட் ஆட்களின் விருப்பபடி, புலனாய்வுதுறை நிர்வாகத்திலிருந்து விலகி, கருணாவின் கீழ் செயற்பட அனுமதிப்பது. இப்படி செய்தால், கிழக்கு சிக்கல் உடனடியாக வளராது. புலிகள் இரண்டாவதையே தெரிவு செய்தனர். ரெஜினோல்ட் ஆட்கள் விரும்பியபடி கருணாவின் கீழ் செயற்படலாமென புலிகள் அனுமதித்தனர். கிட்டத்தட்ட பதினேழு வரையான புலனாய்வுதுறை போராளிகள் இந்த சமயத்தில் கருணாவின் கீழ் சென்றனர். பதினேழு பேர் என்பது புலனாய்வு செயற்பாட்டில் பெரிய தொகை. ஆனால், புலிகளிற்கு அது பெரிதாக இடிக்கவில்லை. காரணம், அதில் பெரும்பாலானவர்கள் புதியவர்கள். நீண்டகாலம் இயக்கத்தில் இருந்தவர்களும் புலனாய்வு செயற்பாட்டில் கில்லாடிகள் கிடையாது. புலனாய்வு செயற்பாட்டில் இரண்டு வகையானவர்கள் இருப்பார்கள். ஒன்று, நுணுக்கமாக திட்டமிட்டு பின்னணியில் இருந்து அதை செயற்படுத்தபவர்கள். மற்றையது, இப்படி நுணுக்கமான திட்டமிடும் திறமைகள் இல்லாவிட்டாலும், துணிந்து அதை செய்யும் ஆற்றல். புலனாய்வுத்துறையிலிருந்து வெளியேறியவர்கள் பெரும்பாலானவர்கள் இந்த வகையானவர்கள்தான். ரெஜினோல்ட் தலைமையில் புலனாய்வுத்துறையிலிருந்து ஒரு அணி வெளியேறியதும், பொட்டம்மான் நீலன் தலைமையில் புதிய நிர்வாக கட்டமைப்பொன்றை உருவாக்கினார். நீலன் எற்கனவே மட்டக்களப்பில் புலனாய்வுதுறையின் வேறொரு வேலையாக நின்றவர். ரெஜினோல்ட் தலைமையில் சென்றவர்களை வைத்து கருணா தனக்கு கீழ் இன்னொரு புலனாய்வு அணியை உருவாக்கினார். ஏற்கனவே ரமணனின் கீழ் ஒரு புலனாய்வு அணி இருக்க, ரெஜினோல்ட்டின் கீழ் இன்னொரு அணி உருவாக்கப்பட்டது. இரகசிய நடவடிக்கைகள் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அணி அது! 2001ம் ஆண்டு. புல்லுமலையில் ஒரு கிளைமோர் தாக்குதல் நடந்தது. புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த அற்புதன் மாஸ்ரரின் மீது அந்த தாக்குதல் நடந்தது. அற்புதன் மாஸ்ரர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ரெஜினோல்ட் அணி வெளியேறிய பின்னர், அற்புதன் மாஸ்ரர்தான் மட்டக்களப்பு விவகாரங்களை கவனிக்க (நீலனின் கீழ்தான் செயற்பட்டவர்) பொட்டம்மானால் நியமிக்கப்பட்டவர். அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதல் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியால் நடத்தப்பட்டதென, புலிகளின் தலைமைக்கு கருணாவின் தகவல் மையத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. புல்லுமலை புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டு பிரதேசம். அங்கு அதற்கு முன்னரும் இராணுவத்தின் கிளைமோர் தாக்குதல் நடக்கவில்லை. பின்னரும் நடக்கவில்லை. அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதலின் பின்னணி என்னவென்பது புலிகளில் இரண்டு தளபதிகளிற்கு தெரியும். ஒன்று- கருணா. மற்றையது- பொட்டம்மான்! (தொடரும்) http://www.pagetamil.com/9260/

இன்றைய நாளில் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்த நீதிபதி இளஞ்செழியனின் செயல்

1 month 3 weeks ago
ஒரு வருடத்தின் முன்னர் எதற்கும் கலங்காமல் தீர்ப்பு வழங்கும் ஒரு துறையில் இருக்கும் நீதிபதிக்கு காவலாய் இருந்தவர் கொல்லப்பட்டபோது , அந்த காவலரின் குடும்பத்தின் காலில் விழுந்து அழுததும், அவர் குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்காய் உதவியதும் நெகிழ்வான விஷயமே அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை... ஆனால் அந்த சம்பவத்தின் பின்னர்... அவரின் நடமாட்டங்கள் ,நடவடிக்கைகள் எதுவும் ரகசியமாய் வைக்கப்பட்டு,, விஷேட அதிரடிப்படையின் பாதுகாப்பில்... இலங்கையில் இருக்கும் நீதிபதிகளில் அதி உச்ச பாதுகாப்பு கொண்டவராக இருக்கும் இளஞ்செழியன் ஐயா அவர்களின்... வருகையும் , அவர் பாதுகாவலருக்கு ஓராண்டின் பின்னரும் வழங்கிய உதவிகளும் சராசரி ஊடகங்களில்,படங்களாகவும் செய்தியாகவும் எப்படி வருவதற்கு இலங்கை அரசும், ஐயாவும் வழிவிட்டார்கள்,ஏன் வழிவிட்டார்கள் என்று உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைச்சிருக்கா? கிடைத்திருந்தால் சொல்லுங்கள், என் கருத்தை மீள பெறுவதில் எந்த தயக்கமும் இல்லை! ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும், பலகோடி மக்களை சுற்றி வாழும் நாங்கள் எல்லாம் ஒருவரின் கருத்துக்கு பதில் சொல்லும் சகிப்பு தன்மை இன்றி வாழ்பவர்களாய் இருந்தால் நாங்கள் தூர விலகி இருக்க வேண்டியதில்லை...நம்மை சூழ இருக்கும் சமூகமே எங்களை தூர விலக்கி வைக்கும்,! சமூக தளத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது என்னால் புரிந்துகொள்ளகூடியதாகவே உள்ளது... ஆனால் உங்களை தூரவிலக்கி வைக்கும் ஐடியா எனக்கு இல்லை, நீங்களும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம்! மனசாட்சிக்கு ஊடக வெளிச்சம் ஏன் தேவைபடுகிறது என்பதற்கு உங்களிடம் ஏதாவது விளக்கம் இருக்குமா? அறிந்துகொள்ள ஆசை அவ்வளவுதான்!

சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி

1 month 3 weeks ago
படங்களைப் பார்த்தால் பக்தி தோன்றவில்லை, அந்நியமாக தெரிகிறது 'பிட்சா'விற்குள் இட்லி சாம்பரை கலந்து குழப்பிவிட்டமாதிரி..!

இங்கிலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்

1 month 3 weeks ago
அஸ்வின், ஜடேஜாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவை அணியில் சேர்க்க நூறு முறையாவது யோசிக்க வேண்டும்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பர்மிங்ஹாமில் தொடங்குகிறது. இந்நிலையில் ஒருநாள், டி20 ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசிய குல்தீப் யாதவை டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றில் எழுதியதாவது: இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் முதன்மைத் தேர்வாக இருக்கும்பட்சத்தில் அது அஸ்வின், ஜடேஜாவுக்கு நியாயம் செய்வதாக இருக்காது. இருவரும் அணியில் நிரந்தர இடம் பிடிக்கக் கடுமையாக உழைத்துள்ளார்கள். குல்தீப் அபாரமான திறமையாளர். ஆனால் அஸ்வின், ஜடேஜாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவை அணியில் சேர்க்க நான் நூறுமுறையாவது யோசிப்பேன். மேலும் மெதுவான ஆடுகளத்தில் குல்தீப் யாதவால் தாக்கத்தை ஏற்படுத்தமுடியாது. அஸ்வினிடம் இந்தப் பிரச்னை உண்டு. இதுபோன்ற தருணங்களில் ஜடேஜா அற்புதமாகப் பந்துவீசுவார். இந்திய அணி இரு சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு ஆடுவதாக இருந்தால் குல்தீப் யாதவ், இரண்டாவது வீரராகவே இருக்கவேண்டும். அதேநேரம் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்று சொல்லி குல்தீப்பைத் தேர்வு செய்தால் அது அவருக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தரும். இருவர் என்றால் என் தேர்வு ஜடேஜா - குல்தீப். இது அஸ்வின் - குல்தீப் இணையை விடவும் சிறப்பாக அமையும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார். http://www.dinamani.com/sports/sports-news/2018/jul/25/if-india-play-two-spinners-kuldeep-can-be-your-second-spinner-says-sanjay-manjrekar-2967555.html

எம்.ஜி.ஆரின் புனித பிம்பத்தை உடைத்தெறியும் ‘பிம்பச் சிறை’

1 month 3 weeks ago
ஈழமக்களிடமும் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்ற ஆசை எம்ஜிஆரிடம் நிறையவே இருந்ததாக கேள்விப்பட்டேன். அவர் மறைவிற்கு பின் தமிழ் தேசியத்தலைவர் என்ற நிலைவரும்போது கருணாநிதிக்கு அது மிக எரிச்சலூட்டியதாகவும் இருந்தது.ஈழப்போர் கடைக்கூறில் திமுகாவின் பாராமுகத்திற்கு அது காரணமல்ல......அதுவும் ஒரு காரணம்.