Aggregator

போதைப் பொருள் பாவனையை ஒழிக்குமாறு யாழ் நாகவிஹாரை விஹாராதிபதி கோரிக்கை

11 hours 3 minutes ago
இணக்கம் தெரிவித்தார் சுரேன் ராகவன்…….. வடக்கு மாகாணத்தில் மத நல்லிணகக்கத்தினை மேலும் பலப்படும் நோக்கில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ்ப்பாணத்தின் சமயத் தலைவர்கள் சிலரை நேற்று (15) பிற்பகல் மற்றும் இன்று (16) காலை சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டார். அத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் நயினை நாகபூஷணி அம்மான் கோவில்களுக்கும்; சென்று ஆளுநர் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி வண.மீஹகாஜதுரே விமல தேரரையும், நயினாதீவு விஹராதிபதி வண. நமதகல பத்மகித்தி தேரர் மற்றும் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையையும்; சந்தித்ததுடன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார். வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவனை நியமித்தமையானது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மிகச்சிறந்ததொரு தீர்மானமாவே தான் பார்ப்பதாக குறிப்பிட்ட யாழ்ப்பாணம் நாகவிஹாரை விஹாராதிபதி விமல தேரர், ஆளுநருடன் இணைந்து வடக்கில் மதங்களுக்கிடையில் நல்லுறவினை கட்டியெழுப்ப ஒன்றுபட்டு செயற்பட தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு வடக்கு மாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பாவனைகள் தொடர்பில் விசேடமாக குறிப்பிட்ட விகாராதிபதி இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச்செல்லும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர்;, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது நேரடிக் கண்காணிப்பில் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதுடன் ஜனாதிபதியின் இந்த செயற்திட்டத்துடன் இணைந்து வடக்கில் இளையோரை தவறானை பாதைக்கு வழிநடத்தும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அடிகளாருடனான சந்திப்பின் போது வடக்கு மாகாண மக்கள் தற்போது எதிர்நோக்கும் உடனடி மற்றும் நீண்டகால பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவை தொடர்பிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைளை மேற்கொள்ள தான் எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார். இதேவேளை முஸ்லிம் சமயத் தலைவர்களை நாளை (17) ஆளுநர் சந்திக்கவுள்ளார். http://globaltamilnews.net/2019/110138/

போதைப் பொருள் பாவனையை ஒழிக்குமாறு யாழ் நாகவிஹாரை விஹாராதிபதி கோரிக்கை

11 hours 3 minutes ago

இணக்கம் தெரிவித்தார் சுரேன் ராகவன்……..

Suren-At-nagavihari1.jpg?zoom=1.21000002

வடக்கு மாகாணத்தில் மத நல்லிணகக்கத்தினை மேலும் பலப்படும் நோக்கில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ்ப்பாணத்தின் சமயத் தலைவர்கள் சிலரை நேற்று (15) பிற்பகல் மற்றும் இன்று (16) காலை சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.

அத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் நயினை நாகபூஷணி அம்மான் கோவில்களுக்கும்; சென்று ஆளுநர் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி வண.மீஹகாஜதுரே விமல தேரரையும், நயினாதீவு விஹராதிபதி வண. நமதகல பத்மகித்தி தேரர் மற்றும் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையையும்; சந்தித்ததுடன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார்.

வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவனை நியமித்தமையானது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மிகச்சிறந்ததொரு தீர்மானமாவே தான் பார்ப்பதாக குறிப்பிட்ட யாழ்ப்பாணம் நாகவிஹாரை விஹாராதிபதி விமல தேரர், ஆளுநருடன் இணைந்து வடக்கில் மதங்களுக்கிடையில் நல்லுறவினை கட்டியெழுப்ப ஒன்றுபட்டு செயற்பட தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Suren-At-nagavihari4.jpg?zoom=1.21000002

அத்தோடு வடக்கு மாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பாவனைகள் தொடர்பில் விசேடமாக குறிப்பிட்ட விகாராதிபதி இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச்செல்லும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர்;, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது நேரடிக் கண்காணிப்பில் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதுடன் ஜனாதிபதியின் இந்த செயற்திட்டத்துடன் இணைந்து வடக்கில் இளையோரை தவறானை பாதைக்கு வழிநடத்தும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அடிகளாருடனான சந்திப்பின் போது வடக்கு மாகாண மக்கள் தற்போது எதிர்நோக்கும் உடனடி மற்றும் நீண்டகால பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவை தொடர்பிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைளை மேற்கொள்ள தான் எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார்.

இதேவேளை முஸ்லிம் சமயத் தலைவர்களை நாளை (17) ஆளுநர் சந்திக்கவுள்ளார்.

 Suren-At-nagavihari2.jpg?zoom=1.21000002  Suren-At-nagavihari5.jpg?zoom=1.21000002

http://globaltamilnews.net/2019/110138/

துருக்கியை அழித்துவிடுவோம்! – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

11 hours 7 minutes ago
குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் துருக்கி பேரழிவை சந்திக்க நேரிடும் : டிரம்ப் எச்சரிக்கை வாஷிங்டன், சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011–ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. அந்த சூழலை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சிரியாவில் காலூன்றியது. அவர்கள் அரசு படைகள் மற்றும் ளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி நாட்டின் பெரும்பாலான நகரங்களை கைப்பற்றினர். இதையடுத்து, சிரியாவை சேர்ந்த குர்து இன போராளிகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் இறங்கினர். அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2015–ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில் 2,000 அமெரிக்க வீரர்கள் சிரியா சென்றனர். அவர்கள் குர்து இன போராளிகளுடன் இணைந்து, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி, பல நகரங்களை அவர்களிடம் இருந்து மீட்டனர். இப்படி குர்து இன போராளிகளுக்கு அமெரிக்க வீரர்கள் பக்கபலமாக இருந்து வந்தனர். இந்தநிலையில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த மாத இறுதியில் அதிரடியாக அறிவித்தார். இது குர்து இன போராளிகளுக்கு பேரிடியாக அமைந்தது. மேலும் குர்து இன போராளிகள் மீது துருக்கி தாக்குதல் நடத்துவதற்கான சூழல் உருவானது. அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் முடிவு, ‘‘ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, ஐ.எஸ். அமைப்பு மீண்டும் உயிர்த்தெழ வழிவகுக்கும்’’ என்று குர்து போராளிகள் தலைமையிலான ஐ.எஸ். எதிர்ப்பு கூட்டணி எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ‘‘சிரியாவில் குர்து இன போராளிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படாது’’ என அறிவித்தார். ஆனால் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கிவிட்டதாகவும், அமெரிக்க வீரர்கள் ராணுவ தளவாடங்களுடன் சிரியாவில் இருந்து வெளியேறி வருவதாகவும் அமெரிக்க தலைமையிலான கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் கடந்த 11–ந்தேதி தெரிவித்தார். இது குர்து இன போராளிகளை மீண்டும் கலக்கமடைய செய்துள்ளது. இந்த நிலையில் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்ட பின்னர் குர்து இன போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார ரீதியில் துருக்கி பேரழிவை சந்திக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். அதே சமயம் துருக்கியை எரிச்சலூட்டக்கூடாது என குர்து இன போராளிகளை அவர் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியதாவது:– சிரியாவில் குர்து இன போராளிகள் மீது துருக்கி தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அந்நாடு பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும். குர்து இன போராளிகளை நெருங்காமல் பல மைல்களுக்கு அப்பால் இருப்பதே துருக்கிக்கு பாதுகாப்பாக இருக்கும். அதே போல் குர்து இன போராளிகளும் துருக்கியை எரிச்சலடைய செய்யாமல் விலகி இருக்க வேண்டும். சிரியாவில் இன்னும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் நிலையில் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது கடினமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் தலைத்தூக்கினால் அமெரிக்க படைகள் அவர்களை அழிக்க தவறாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். இந்த நிலையில் டிரம்புக்கு பதில் அளிக்கும் விதமாக துருக்கி அதிபர் தயீப் எர்டோகனின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் காலின் தனது டுவிட்டரில் ‘‘சிரிய குர்து மக்களையும், குர்து இன தீவிரவாதிகளையும் சமமாக ஒப்பிட்டு டிரம்ப் மிகப்பெரிய தவறிழைத்து வருகிறார். நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராகதான் போராடுகிறோம். குர்து இன மக்களுக்கு எதிராக இல்லை’’ என தெரிவித்துள்ளார். https://www.dailythanthi.com/News/World/2019/01/15022613/Turkey-may-face-catastrophe-Trump-Warning.vpf

இந்தியாவிடம் இருந்து 1000 மில்லியன் டொலர் நிதியைப் பெறும் முயற்சியில் சிறிலங்கா

11 hours 10 minutes ago
இந்தியப் பிச்சைக்கார அரசியல்வாதிகளுக்கு அதில் எத்தனை வீதம் தரகு/அன்பளிப்பு/கையூட்டு வழங்கப்படவுள்ளது?

புதிய அரசியல் அமைப்பு குறித்து போலித்தகவல்களை வழங்க வேண்டாம்

11 hours 12 minutes ago
சிங்களக் கொலைகாரர்கள் இலங்கையில் இருந்து அகற்றப்படும் போது நாடு பிளவுபடாமல் இருக்கும் சந்தர்ப்பம் கிட்டலாம்.

வாழ்த்துகள் வாழ்த்துக்கள் எது சரி.

12 hours 6 minutes ago
வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - இரண்டில் எது சரி ? ‘வாழ்த்துக்கள்’ என்று பலரும் எழுதுவதைச் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி காணக்கிடைக்கிறது. இது தொடர்பில் பலர் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதையும் உணரமுடிகிறது. தமிழகத்துக் கவிஞர் மகுடேசுவரன் அவர்கள் இந்தக் குழப்பத்தைப் போக்கும் வகையில் அருமையாக விளக்கியிருக்கிறார். அவரது விளக்கம் தொடர்கிறது. வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - இரண்டில் எது சரி ? கள்’ விகுதிக்கு வலிமிகும் மற்றும் மிகா இடங்கள்பற்றி இலக்கண விதிகள் என்று எதுவுமில்லை. ஆனால், வழியொற்றிய மரபின்படி பின்பற்றப்பட வேண்டிய விதி தெளிவாக இருக்கிறது. 1. ஒரு சொல் - ஓரெழுத்து ஒருமொழி (பூ, பா, ஈ) என்ற வகையில் தனி நெடிலாக இருந்தால் கள்’ விகுதிக்கு வலிமிகும். பூக்கள், பாக்கள், ஈக்கள். 2. நெடில் எழுத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். புறாக்கள், விழாக்கள், பலாக்கள். 3. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் உகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். அணுக்கள், பருக்கள், குழுக்கள். வடுக்கள். 4. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் இகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகுவதில்லை. மொழிகள், வழிகள், படிகள். 5. மூன்று அடுத்தடுத்த குறில் எழுத்துகளால் ஆகிய சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகாது. அழகுகள், செலவுகள், உருமிகள், அரிசிகள். 6. கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளில் முடியும் சொற்கள் குற்றியலுகரங்கள். இவற்றில் க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என்று முடியும் சொற்களில் அவை வன்தொடர்க் குற்றியலுகரங்கள். ங்கு, ஞ்சு, ந்து, ம்பு என்று முடியும் சொற்களில் அவை மென் தொடர்க் குற்றியலுகரங்கள். பொதுவாக, வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் (படித்துச் சொல்). மென் தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது (பணிந்து செல்). இந்த விதியைப் பின்பற்றுபவர்கள் வாழ்த்துக்கள் என்று எழுதுவதற்கு நியாயம் சொல்வார்கள். பரிமேலழகர் தம் உரையில் ‘எழுத்துக்கள்’ என்றே எழுதியிருக்கிறார் என்பர். இந்த இடையூறான போக்கால்தான் வாழ்த்துக்கள் என்றெழுதுவது வழக்கானது. கள் என்பது பன்மை கருதி வந்த, தனிப்பொருளற்ற விகுதி (இடைநிலை என்பாரும் உளர்) என்பதால், அதற்குச் சொற்களுக்குக் கற்பிக்கின்ற வலிமிகும் விதி பொருந்தித் தோன்றாது என்பதே ஏற்புடையதாகும். ஆகவே, வாழ்த்துகள் என்றெழுதுவதே சரி. 7. ஆட்கள், நாட்கள் என்றெழுதுகிறார்கள். ஆனால், தோள்கள் கோள்கள் என்று இன்னோரிடத்தில் புணர்த்தாமல் எழுதுகிறார்கள். தோட்கள், கோட்கள் என்றெழுதுவதே இல்லை. ஆள்கள், நாள்கள், தோள்கள், கோள்கள் என்றெழுதுவதே சரியாகும். 8. அதே சமயம் முட்கள், புற்கள், சொற்கள் என்று முள், புல், சொல் போன்ற சொற்களில் கள்’விகுதி சேர்த்துப் புணர்த்தி எழுதுவது தொன்று தொட்டு வழக்காகியுள்ளது. 9. தனி நெடிலால் ஆகிய ஓரெழுத்து ஒருமொழியிலும், நெடிலில் முடியும் சொற்களிலும் கள்’விகுதியோடு வலிமிகும் என்று முதல் பத்தியில் படித்தீர்கள் அல்லவா, ஐகாரத்தில் முடியும் சொற்களில் (ஔகாரத்தையும் சேர்க்கலாம், அதில் சொற்கள் இல்லை) வலிமிகுவதில்லை. கைகள், பைகள், பண்டிகைகள், தேவதைகள். இலக்கணத்தில் ஐகாரக் குறுக்கங்கள் என்று சொல்வார்கள். அதுவும் குற்றியலுகரம் போன்ற ஒன்று. 10. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது என்பது மொத்த விதி அல்லவா, அதிலும் விதிவிலக்காக ‘பந்துக்கள் (உறவுகள்), இந்துக்கள்’ என்றெழுதுவது ஏற்புடையதாயிருக்கிறது. கள்’ விகுதி தொடர்பாக எழும் எல்லா ஐயங்களையும் மேலே விரிவாகத் தொகுத்துள்ளேன். கள்’ விகுதியை முன்னிட்டு எழும் வலிமிகும் வலிமிகா இடங்கள் குறித்த ஐயங்களுக்கு நடைமுறைத் தெளிவைப் பின்பற்றுங்கள். வாழ்த்துகள்! (நன்றி கவிஞர் Magudeswaran Govindarajan)

இயற்கை, நவீனம், போலிகள்: ஒரு ஆரோக்கிய வட்டமேசை

12 hours 59 minutes ago
நன்றி சஹாரா. ஆயிரக்கணக்கான நோய்கள் மருந்துகள் பற்றி போலியான தகவல்கள் வருவதற்கு சில அடிப்படையான தகவல்கள் தெரியாமல் இருப்பதே காரணம் எனக் கருதுவதால் அப்படியான தகவல்களை ஒரே இடத்தில் பதிவில் வைத்திருப்பதற்காக இதை ஆரம்பித்தேன். உங்கள் சந்தேகங்களுக்கு விடைகள் கிடைத்தால் மகிழ்ச்சி. மேலும், கீழே ஒரு நூலக இணைப்பு இருக்கிறது. கொக்றேன் நூலகம் என்பது உலகம் முழுவதும் உள்ள மருத்துவ ஆய்வாளர்களால் இலாப நோக்கமின்றி நடத்தப்படும் ஒரு மாதாந்த வெளியீடு. சகல விதமான மருத்துவ முறைகள் பற்றியும் கிடைக்கும் ஆய்வு முடிவுகளை எவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் தருவதே இவர்களின் வேலை. உங்களுக்குக் கேள்விகள் ஏதும் இருந்தாலும் அதை இவர்களுக்குச் சமர்ப்பிக்கலாம். அதை எடுத்துக் கொண்டு சில மாதங்களில் பதிலை ஆய்வு முடிவாகப் பிரசுரிப்பார்கள். https://www.cochranelibrary.com/cdsr/about-cdsr

மருந்து தொலைக்காட்சி.(Marundhu TV)

13 hours 11 minutes ago

                                                                                                                                                                                                                                                                                                 

 

ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து, "மெத்தைக்குள்" மறைந்து ஸ்பெயின் நாட்டுக்கு வந்த இரு ஏதிலிகள் பிடிபட்டனர்.

13 hours 55 minutes ago
இன்று தான் கவனித்தேன்..... (காப்ரி) இனத்தை இழிவு படுத்தும் சொல் என்பதால் நீக்கம் என நிழலி குறித்துள்ளதை. காப்பிரி என்பது இனத்தை குறிப்பது என்று எவ்வாறு முடிவு செய்தீர்கள், நிழலி? காப்பிரி என்பது சாம்பியா நாட்டில் உள்ள நகரம். இன்னும் ஒருவகை உச்சரிப்பில், இத்தாலியின் ஒரு தீவு. காப்பிரி என்ற சொல் ஒரு இனத்தை குறிப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு சான்றையும் தாருங்கள். (அல்லது) ஆப்பிரிக்காவின் சாம்பிய நாட்டின் காப்ரி நகரை சேர்ந்தவர்கள் என ஏன் கருத முடியாது என விளக்க முடியுமா? நான் அறிந்த வரை நீக்கிரோ தான் ஒரு.....highly offensive சொல். அதே வேளை அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டு இங்கே வாசிக்க வர மாட்டார்கள் என கருதும் அதே வேளை, நாகரிகமாக இருக்காது என்பதையும் அறிவேன். I think it is a bit of little more political correctness, right?😇

விடுதலைப் புலிகள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடுதான் என்ன? சுமனிடம் கேட்ட வித்தி!

15 hours 48 minutes ago
சுமந்திரன் அரசியலமைப்புச் சபையில் இருந்து தீர்வுத் திட்டத்திற்கு வேலை செய்தது, வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் தெளிவான பேச்சாளராக இருப்பது, சிங்களவர்களின் அனுமதியின்றி மாவட்ட சபை கூட பாசாகாது என்று விளங்கி சிங்களவர்களுக்கு விளக்கமளிக்க முயற்சியாவது செய்வது, இவையே என் சும் தொடர்பான நம்பிக்கைக்குக் காரணங்கள். இதற்கு முன் வந்த தமிழ் எ. பி மார், சம்பந்தன் தவிர, தங்களுக்கு வேண்டியோருக்கு அரச வேலை வாங்கி கொடுத்து விட்டு ஓய்வு பெறுவதையே நல்ல பணியாகக் கொண்டிருந்த நிலையில், நீண்ட கால நோக்கில் வேலை செய்யும் ஒருவராக, தீர்வுக்காக சும் இருப்பதே அவர் மீதான என் நம்பிக்கையின் காரணம். இலுப்பைப் பூ தான், ஆனால் இலுப்பைப் பூவை விட்டால் வெறென்ன அங்கே இப்போது இருப்பது? இதை நான் பல தடவை சொல்லி விட்டேனெ? இப்ப தேர்தல்கள் நடக்கின்றன. தாயகத்தில் இருப்போர் நினைத்தால் சும் மை என்ன யாரையும் தூக்கி எறியலாம்! நான் குப்புறப் படுத்து ஓவென்று அழப் போவதில்லை சும் போனால். அடுத்து வருபவர் என்ன செய்வார் என்று பார்ப்பேன். ஆனால், சும் (ஒரு விவாதத்திற்காக) வென்றால், நீங்கள் அதை மக்கள் தீர்ப்பாக ஏற்றுக் கொண்டு சும் எதிர்ப்பை நிதானம் செய்வீர்களா?