மட்டக்களப்பு சவுக்கடி படுகொலை

1990-09-20 - 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்

Aggregator

அம்பாரி யானை

1 hour 30 minutes ago
பவா செல்லத்துரையின் கதைகள் நான் இதுவரை வாசித்ததில்லை.....தேடிபார்ப்பேன்.கிடைத்தால் வாசிக்கலாம். நன்றி கிருபன்.....!

ரத்த மகுடம்

1 hour 32 minutes ago
ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 19 திறந்த சிவகாமியின் அதரங்களை தன் உதடுகளால் கரிகாலன் மூடினான்! இருவரது அமிர்தங்களும் இரண்டறக் கலந்தன. சங்கமித்துப் பெருகின. ஒற்றியதை விலக்காமல் தன்இரு கரங்களால் அவள் வதனத்தை ஏந்தினான். போருக்கு ஆயத்தமாகும் படைக்கலன்களைப் போல் இருவரது உடல் ரோமங்களும் குத்திட்டு நின்றன. ஆற்றுப்படுத்தவும் பரஸ்பர துணையின் அவசியத்தை உணர்த்தவும் இருவருக்குமே அந்தக் கணம் தேவைப்பட்டது. தங்களைப் பூரணமாக அதற்கு ஒப்புக் கொடுத்தார்கள். தன் அதரத்தைத் தவிர வேறு எங்கும் அவன் உதடுகள் நுழையாதது இன்பத்தையும் நிம்மதியையும் வெறுமையையும் ஒருசேர சிவகாமிக்கு அளித்தது. இன்பத்துக்குக் காரணம், ஹிரண்யவர்மர் தன்மீதான ஐயங்களைக் கிளப்பியபிறகும் கரிகாலன் அவளை நம்புவதை அவன் உடல் வெளிப்படுத்தியது. நிம்மதிக்குக் காரணம், பெருக்கெடுக்கும் வெள்ளத்திலும் கரைகள் உடையாதபடி பார்த்துக் கொள்ளும் அவன் கண்ணியம். வெறுமைக்குக் காரணம், கரைகள் உடைந்தால்தான் என்ன... எதற்காக இவ்வளவு கட்டுப்பாடுடன் அதற்கு அணை போட வேண்டும்... என்ற கேள்வி. பூத்த மூன்று உணர்ச்சிகளிலும் வெறுமையே ஜெயித்தது! அதை வெளிப்படுத்தும் விதமாக அடிவயிற்றிலிருந்து பெருமூச்சை வெளியேற்றினாள். இதன் விளைவாக மூச்சை உள்ளுக்கு இழுத்தபோது எலும்புகளுடன் ஒட்டிய அவள் ஸ்தனங்கள், சுவாசத்தை வெளியேற்றும்போது அளவுக்கு மீறி வளர்ந்து கச்சையின் முடிச்சைத் தளர்த்தின! தனது உடல் தன் வசத்தில் இல்லை என்பதை வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கிய அந்நிலையிலும் உணர்ந்தாள். இச்சூழலில் தன் முகக்குறிப்பை அவன் கண்டால் என்ன நினைப்பான்..? தாங்க முடியாமல் அதரங்களை விலக்கியவள், என்ன ஏது என கரிகாலன் பார்வையால் வினவுவதற்குள் கிளைகளில் அமர்ந்திருந்த அவன் மடியில் சாய்ந்தாள். நல்லவேளை... குப்புறப் படுத்திருக்கிறோம். வதனத்தில் பீறிட்டு ஓடும் குருதியோட்டத்தை அவன் காணவில்லை என்று நினைக்கும்போதே... குழையத் தொடங்கிய அவள் உடலின் வெப்பம், அவன் தொடைகளில் அழுத்தத் தொடங்கிய தன் ஸ்தனங்களின் வழியே கரிகாலனின் உடலுக்குள் ஊடுருவுவதை உணர்ந்தாள்! கையறு நிலையில் சிவகாமி தவித்தது எத்தனை யுகங்களோ... தலைக்கு மேல் பாய்ந்த வெள்ளம் எத்தனை அடிக்கு உயர்ந்தால்தான் என்ன... என்ற முடிவுக்கு அவள் வந்தபோது அவள் செவிக்குள் அவன் சுவாசம் பாய்ந்தது! கண்களுக்குத் தெரியாமல் இருந்த அவள் உடல் ரோமங்களும் புலப்படத் தொடங்கின! இமைகளை மூடினாள்.‘‘சிவகாமி...’’ அவள் பெயர்தான். பலமுறை அழைத்துப் பழக்கப்பட்ட நாமகரணம்தான். ஆனால், அப்போது அதை உச்சரிப்பதற்குள் கரிகாலனுக்கு வியர்த்துவிட்டது! படர்ந்த கொடியைத் தாங்கும் வல்லமை அவன் உடல் என்னும் மரத்துக்கு இருந்தது. ஆனால், ஏனோ அக்கணத்தில் கொடியே மலையாகக் கனத்தது. பாரம் தாங்காமல் நிமிர்ந்தான் கரிகாலனின் தடுமாற்றம் சிவகாமிக்கு சிரிப்பை வரவழைத்தது. ஆணின் பலவீனம், பெண்ணின் உடல் குழைவதைக் காண்பதுதான் என்பதை அனுபவபூர்வமாக அப்போது உணர்ந்தாள். அறிவையும் வலுவையும் செயல்படுத்த முடியாமல் தன் முன் ஒடுங்கி நிற்பவனைப் பார்க்க பாவமாக இருந்தது! முகத்தைச் சாய்த்து இமைகளைப் பிரித்து தன் பார்வைக் கணையை அவன் நெஞ்சில் பாய்ச்சினாள்! ‘‘அழைத்தீர்களா...’’ ‘‘ம்...’’ ‘‘எதற்கு..?’’என்னவென்று சொல்லுவான்..? அவள் இடுப்பில் தன் கரங்களைத் தவழவிட்டான். தொடு உணர்ச்சி தாங்காமல் அசைந்தாள். அவர்கள் அமர்ந்திருந்த கிளையும் அசைந்து இருவரையும் நடப்புக்கு அழைத்து வந்தது. கரிகாலன் சட்டென்று கிளைகளை லேசாக விரித்து கீழே பார்த்தான். ‘‘யாராவது வந்துவிட்டார்களா..?’’ கேட்டபடி எழுந்திருக்க முற்பட்ட சிவகாமியைத் தடுத்து, முன்பு போலவே படுக்க வைத்தான். ‘‘இல்லை...’’ ‘‘சாளுக்கிய வீரர்கள் வரவில்லையா..?’’‘‘இல்லை என்றேனே...’’ காரணமில்லாமல் எரிந்து விழுந்தான். சிவகாமிக்குச் சிரிப்பு வந்தது. ‘‘அதற்கு...’’‘‘ம்...’’ இருவருக்குமே வார்த்தைகள் வரவில்லை. எந்த சாளுக்கிய வீரனும் சந்தேகப்பட்டு இங்கு வராததால் நாம் இப்படியே இருக்கப் போகிறோமா... என்று கேட்க நினைத்தாள். வார்த்தைகள் வெளிவர மறுத்தன. அவன் கை விரல்கள் தன் முதுகில் கோடு கிழிக்கத் தொடங்கியதும் பார்வையைத் தாழ்த்தினாள். ‘‘சிவகாமி...’’இப்போது ‘ம்’ கொட்டுவது அவள் முறையானது. ‘‘ம்...’’‘‘எதற்காக உன்னை அழைத்தேன் என்று கேட்டாய் அல்லவா..?’’ எப்போது கேட்டாள்... ஆம். சில கணங்களுக்கு முன். ஏன் கேட்டாள்... அவன் விரல்கள் ஏன் இப்படி முதுகில் ஊர்கின்றன... கச்சையின் முடிச்சுப் பக்கமாக நகர்கிறதே... முடிச்சை நிமிண்டுகிறானே... ஏற்கனவே முடிச்சின் இறுக்கம் தளர்ந்திருக்கிறதே... ஒருவேளை... ‘‘ஆம் கேட்டேன்...’’‘‘பதில் தெரிய வேண்டாமா..?’’ எந்த பதில்..? தளர்ந்த கச்சையின் உட்புறத்துக்குள் விரல் நுழையப் போகிறதா... இந்த இடம்... இச்சூழல்... ‘‘சொல்லுங்கள்...’’ ‘‘எதைச் சொல்ல வேண்டும்..?’’பித்து நிலை. மாறி மாறிப் பிதற்றுவதை இருவரும் அறிந்தே இருந்தார்கள். உடல்களின் மொழி அதன் போக்கில் உரையாடலைத் தொடர... பேச்சு மொழி தொடர்பற்று ஒலித்துக் கொண்டிருந்தது. ‘‘எதற்காக என்னை அழைத்தீர்கள் என்பதை..!’’ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இதை உச்சரித்தாள். ஆனால், அதுவே அதுவரை மறைந்திருந்த அனைத்தையும் கரிகாலனுக்கு நினைவுபடுத்திவிட்டது! குறிப்பாக மரத்தின் மீது தாங்கள் அமர்ந்திருக்கும் காரணத்தை. கச்சையின் முடிச்சை தன் கை கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் உருட்டிக்கொண்டிருந்த கரிகாலன், நிதானத்துக்கு வந்தான். அதுவரை தன் வெற்று முதுகில் அளைந்துகொண்டிருந்த அவன் விரல்கள் ஒரு நிலைக்கு வந்ததிலிருந்து அவனது மனப்போக்கை சிவகாமி ஊகித்துவிட்டாள். மேற்கொண்டு உரையாடலைத் தொடர்ந்த அவனது குரலின் தொனியும் அவன் மனநிலை மாறிவிட்டதை வெளிப்படுத்தியது.‘‘வனத்தைச் சுற்றி சாளுக்கிய வீரர்கள் இருக்கிறார்கள். அப்படி யிருக்க இங்கிருந்து எப்படி வெளியேறப் போகிறோம்... பல்லவ இளவலைச் சந்திக்கப் போகிறோம்... என்று கேட்டாய் அல்லவா..?’’அவள் வினவியது, ‘எப்படி வனத்திலிருந்து வெளியேறுவது..?’ என்று மட்டும்தான். ஆனால், அவள் சொல்லாமல் விட்ட சகலத்தையும் கரிகாலன் சொல்லிவிட்டான். எனில், ஏதோ திட்டம் வகுத்திருக்கிறான் என்று அர்த்தம். அதைக் கேட்பதற்காக எழுந்திருக்க முற்பட்டாள். ‘‘எதுவாக இருந்தாலும் இப்படியே கேள்...’’ கரிகாலன் அதட்டினான். ‘‘இ..ப்..ப..டி..யே..வா..?’’‘‘ஆம். இப்படியே...’’ சொன்ன கரிகாலன் மீண்டும் அவள் முதுகில் தன் விரல்களைப் படரவிட்டான். முன்பு அவன் விரல்கள் படர்ந்து அளைந்தன என்றால் இப்போது அதே விரல்கள் யாழை மீட்டுவதுபோல் அவள் சருமத்தை வருடின. அதை அனுபவித்தபடியே தொடர்ந்தாள். ‘‘ஆம்... எப்படி வெளியேறப் போகிறோம் என்று கேட்டேன்... வழி கிடைத்துவிட்டதா..?’’ ‘‘கிடைத்துவிட்டது...’’ சொன்ன கரிகாலன் இமை மூடித் திறப்பதற்குள் தளர்ந்திருந்த அவளது கச்சையின் முடிச்சை அவிழ்த்தான்! அதிர்ந்துபோய் முகத்தைத் திருப்பி அவனைப் பார்க்க அவள் முற்படுவதற்குள், கச்சையை இறுக்கி முடிச்சிட்டான். தன்னை பிரமையுடன் ஏறிட்டவளின் அதரங்களை நோக்கிக் குனிந்தவன் தன் உதடுகளால் அவளை அழுத்தி முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தான். அவள் முதுகைத் தடவிக்கொண்டிருந்த இடது கை, அவள் தலையைக் கோதத் தொடங்கியது. அங்கிருந்து நகர்ந்து அவள் கன்னங்களைத் தடவிவிட்டு பழையபடி முதுகுக்கு வந்தது. ‘‘சிவகாமி, நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் தெரியுமா..?’’லேசாகப் புரண்டு தன் ஸ்தனங்களை இன்னும் அழுத்தமாக அவன் தொடையில் பதித்தபடி, வந்த சிரிப்பை வாயைப் பொத்தி அடக்கினாள். ‘‘கள்ளி!’’ அவள் கன்னத்தைக் கிள்ளி அதே இடத்தில் முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தான். ‘‘மல்லை மாநகரத்துக்கு வடமேற்கே...’’ சொன்ன கரிகாலன் மீண்டும் கிளைகளை விலக்கி கீழேயும் பக்கவாட்டிலும் ஆராய்ந்தான். சாளுக்கிய வீரர்கள் சல்லடை யிட்டுச் சலித்துக் கொண்டிருந்தார்கள். உதட்டோரம் புன்னகை வழிய அவளை ஏறிட்டவன் அவள் இடுப்பு முடிச்சைத் தளர்த்தி ஆடையை சற்றே கீழிறக்கினான். தடுக்க உயர்ந்த அவள் கரங்களை கெட்டியாகப் பிடித்தான்.‘‘கவனி சிவகாமி... ஏனெனில் மறுமுறை சொல்ல நேரம் இருக்காது...’’‘‘அப்படியானால் அமர்ந்து கொள்கிறேன்... ’’‘‘தேவையில்லை... செவிகளைத் திறந்து வை... தவிர உன் உடலில் நான் வரையப் போகும் கோடுகளை நன்றாக உள்வாங்கு...’’ இரு கரங்களையும் முன்னோக்கி நகர்த்தி சிவகாமியை நன்றாக தன்னை நோக்கி இழுத்தான். கச்சையின் முடிச்சிலிருந்து இடுப்பைத் தளர்த்தி, தான் வெளிப்படுத்திய பிரதேசம் வரை தன் வலது உள்ளங்கையால் நன்றாகத் தேய்த்தான். பின்னர் அப்பகுதியின் நான்கு புறங்களிலும் தன் ஆள்காட்டி விரலால் கோடு இழுத்தான்.‘‘இதுதான் தொண்டை மண்டலம் சிவகாமி. வடக்கில் இருப்பது வேங்கடம். கிழக்கில் உள்ளது கெடிலநதிக்கரை. இதைக் கடந்தால் நடுநாடு. அங்கிருந்து சோழநாடு. தென்பக்கத்து எல்லை வழியாக மட்டுமல்ல, மேற்குப் பக்கமாகவும் கொங்குப் பகுதிக்குள் நுழையலாம். பெரும்பாலும் குன்றுகளும் மலைகளும்தான்...’’ என்றபடியே அவள் பின்புற மேட்டின் பக்கம் தன் விரல்களைக் கொண்டு சென்றவன், ‘‘ம்...’’ என சிவகாமி அதட்டியதும் கண்களைச் சிமிட்டி விட்டு தொடர்ந்தான். ‘‘தொண்டை மண்டலத்தின் வடக்குப் பாகம் குன்றுகள் அடர்ந்தது. அழகானது. கிழக்கு, தெற்குப் பாகங்கள் தட்டையானவை. சாரமுள்ள பூமி. அதனாலேயே வேளாண்மை நடைபெற்று வருகிறது. குன்றுகள் அடர்ந்திருந்தாலும் இயற்கையாகவே பள்ளத்தாக்குகள் அனேக இடங்களில் இருப்பதால் ஏரி, குளங்களை வெட்டி பல்லவர்கள் நீர்ப்பாசனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். காவேரிப்பாக்கமும், மாமண்டூரும் எப்போதும் நீருள்ள ஏரிகள். தொண்டை மண்டலத்தில் பாயும் நதிகளில் முக்கியமானது பாலாறு. இதன் வடக்குப் பாகம் வடசுபா. தெற்குப் பாகம் தென் சுபா. இங்குள்ள மலைகள் தென்மேற்கிலுள்ள கங்குந்தியில் நுழைந்து வடக்கு நோக்கிச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக வேங்கடம் வரை கிழக்கு நோக்கிச் செல்கின்றன. கரகம்பாடி, மாமண்டூர் கிராமங்கள் வழியாக வடக்கு நோக்கி கடப்பைக்கு போகும் ஒரு நீண்ட பள்ளத்தாக்கினால் இம்மலைத்தொடர்ச்சி பிளக்கப்பட்டு, மாமண்டூர் பள்ளத்தாக்கில் மறுபடியும் மேலெழும்பி காளஹஸ்தி என்கிற காயலா ஸ்தலத்தில் இருந்து வட கிழக்காகச் செல்கிறது...’’ நிறுத்திய கரிகாலன் அவள் எதிர்பாராத நேரத்தில் குனிந்து அவள் அதரங்களை முத்தமிட்டு விட்டு தொடர்ந்தான். ‘‘இங்கு கீழிருந்து மேலாகச் செல்ல ஏராளமான கணவாய்கள் உண்டு. ஆனால், வண்டிகள் போகக் கூடியவை கல்லூர், மொகிலி, செய்னகுந்தா ஆகிய மூன்று கணவாய்களே! சந்திரகிரியிலுள்ள கல்லூர் கணவாய், கடப்பைப் பியலூருக்குள் நுழைந்து தாமல்செருவு பள்ளத்தாக்கை ஒட்டிச் செல்கிறது. செய்னகுந்தா கணவாய் பழமானேரிக்குச் சென்று மொகிலியிலிருந்து வரும் செங்குத்தான பாதையுடன் இணைகிறது...’’ மூச்சுவிடாமல் பல்லவ நாட்டின் எல்லைகளைக் குறிப்பிட்டபடியே வந்த கரிகாலனின் குரல் சட்டென உணர்ச்சிவசப்பட்டது.‘‘தொண்டை மண்டலத்தின் சிறப்பு என ஜவ்வாது குன்றுகளைச் சொல்லலாம். அது இங்கிருக்கிறது...’’ என சிவகாமியின் கச்சையி லிருந்து கீழ்நோக்கிக் கோடிழுத்தான். அவன் விரலுக்கும் தன் ஸ்தனத்துக்கும் அதிக தூரமில்லை என்பதை உணர்ந்த சிவகாமியின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.‘‘பல்லவ நாட்டின் தென் மேற்கில் இவை இருக்கின்றன. இவற்றை பள்ளத்தாக்கு ஒன்று பிரிக்கிறது. இப்பள்ளத்தாக்கு பின்னர் குறுகி மலையுடன் இணைந்து கொங்குப் பகுதியில் பெரிதாகிறது. வேங்கட மலை வழியே பல சிறு மலைத் தொடர்கள் வடக்கு, மேற்கு என தனித்தனியே நகர்கின்றன. வடக்கில் இருக்கும் சிறுமலையின் அகன்ற பள்ளத்தாக்குக்குக் கிழக்கே காளஹஸ்தியில் வடக்கு நோக்கி நகரிக் குன்றுகளால் அடைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் மூங்கில் காடுகளுக்குத்தான் நாம் செல்ல வேண்டும்....’’ கரிகாலன் சொல்லச் சொல்ல சிவகாமியின் கண்கள் விரிந்தன. ‘‘இங்குதான் பல்லவ இளவல் ராஜசிம்மர் இருக்கிறாரா..?’’‘‘இல்லை...’’ கரிகாலனின் குரல் அழுத்தமாக ஒலித்தது. ‘‘பின் எதற்காக அங்கு செல்லவேண்டும்..?’’ ‘‘அங்குதான் ஹிரண்யவர்மர் நமக்காகச் சேகரித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் இருக்கின்றன!’’ (தொடரும்) - கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14250&id1=6&issue=20180921

இளமை புதுமை பல்சுவை

1 hour 33 minutes ago
இவன் ஃபீல்டர்களை ரசிகர்களாக்குவான்... ரசிகர்களை ஃபீல்டர்களாக்குவான்...! #HBDGayle #UniversalBoss எந்தத் தொடருக்குச் சென்றாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை தன் வசமாக்கி விடுவார். இவர் ஆட்டத்தைக் காண்பதற்காக மட்டுமே பல ஆயிரம் பேர் கூடுவர். கெய்ல் களத்துக்கு வந்தால் கேலரியில்தான் ஃபீல்டர்களுக்கு இடம் என்பதை தன் ஒவ்வோர் ஆட்டங்களிலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். நவம்பர் 13, 2012. வங்கதேச - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் பந்து. பொதுவாக டி-20 போட்டியாக இருந்தாலும், முதல் ஓவரை பேட்ஸ்மேன்கள் பொறுமையாகவே எதிர்கொள்வார்கள். ஆனால், அந்தப் பந்து 90 மீட்டர்கள் தாண்டிப் போய் விழுந்தது. டெஸ்ட் போட்டியில் இப்படியொரு தொடக்கமா. களத்தில் நிற்பது கிறிஸ் கெய்ல் எனும் அரக்கனாக இருந்தால் இது சாத்தியமே. சேவாக் பத்துப் பந்துகளுக்கு ஒரு முறை காட்டும் அதிரடியை இவர் அனைத்துப் பந்துகளிலும் காட்டத் தொடங்கினார். ஜாம்பவான்கள் விவ் ரிச்ர்ட்ஸ், ப்ரையன் லாரா க்ளாசிக் ஷாட்கள் மூலம் கவனம் ஈர்த்தனர் எனில், தன் மேஸ்ஸிவ் ஷாட்களால் சிலிர்க்க வைத்தார் இந்த யுனிவர்சல் பாஸ். இந்தியா விளையாடும் டெஸ்ட்டையே பார்க்க யோசிக்கும் காலத்தில் வெஸ்ட் இண்டிஸின் டெஸ்ட் போட்டிகளையும் பார்க்க வைத்தவர் கெய்ல். #HBDGayle டெஸ்ட் போட்டிகளிலேயே இந்தக் காட்டு காட்டும் இவர் ஒரு நாள் போட்டிகளில் சும்மா இருப்பாரா. தனது ஆரம்பகாலங்களிலேயே அசால்ட்டாக பேட்டைச் சுழற்றி ஆஸ்திரேலியாவையே கதிகலங்க வைத்தார். 2004 மற்றும் 2006 சாம்பின்ஸ் டிராபியின் போது அசுர ஆட்டத்தினால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த, இவர் கிரிக்கெட்டின் விதிமுறைகள் நுணுக்கங்கள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர். ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப் ஷாட் என்று தனக்குப் பரிட்சயமில்லாததை என்றும் இவர் செயல்படுத்தியதே இல்லை. இவரின் 6.4 அடி உயரத்தைப் போலவே இவரின் ரன்களும் ஆறு நான்குகளிலேயேதான் இருக்கும். இவரின் மொத்த ரன்களில் 55 சதவிகிதத்துக்கு மேல் பௌண்டரிகளால் மட்டுமே எடுத்தவை. சிங்கிள்ஸ், டபுள்ஸ் என ஓடி ஓடி ரன் எடுப்பது இவருக்குப் பிடிக்காத செயல். வேகமாக வரும் பந்தின் வேகம் குறையாமலும், வேகம் குறைந்து வரும் பந்துகளின் வேகத்தைக் கூட்டியும் அவுட் ஆஃப் ஸ்டேடியம் ஆக்குவதுதான் இவரின் ஆல் டைம் அஜெண்டா. இவர் அடித்த சிக்சர்கள் கேலரியில் இருக்கும் பல ரசிகர்கள் முகத்தைப் பதம் பார்த்திருக்கிறது. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், ஒரு இன்னிங்க்ஸில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள், டி20ல் அதிக சிக்ஸர்கள், அதிக செஞ்சுரிகள் என எண்ணிலடங்கா சாதனைகளைச் சுமந்து கொண்டே திரிகிறார். சர்வதேசப் போட்டிகள் மட்டுமன்றி உள்நாட்டு கிரிக்கெட்டிலும் கெய்லின் ஆதிக்கம் தொடரத்தான் செய்கிறது. 2008-ம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் போட்டியில் 3 வருடங்கள் இருந்த இடம் தெரியாமல் கொல்கத்தா அணியில் இவர் இருக்க, ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு ஆளானார். அடுத்த அத்தியாயம் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஆரம்பமானது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளில் ஐந்து சதங்களோடு ஐ.பி.எல் தொடரை தனது ராஜாங்கமாக்கிக் கொண்டார். அதிலும், புனே வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் இவர் ஆடிய ரணகள ஆட்டம் இன்னும் யூ-டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தில் நடக்கும் ஓர் உள்ளூர் ஆட்டத்தை உலக ரசிகர்கள் மத்தியில் டிரெண்டிங்காக்கியது இந்த கெய்ல் ஃபேக்டர். ஐ.பி.எல் மட்டுமல்லாது வங்கதேச ப்ரீமியர் லீக்கையும் இவர் விட்டுவைக்கவில்லை. BPL-ல் மொத்தமாக 500 பார்வையாளர்கள் இருந்தாலே ஆச்சர்யம். ஆனால், இவரின் வருகைக்குப் பிறகு கிட்டத்தட்ட 5,000 ரசிகர்களைக் கொண்டு அரங்கமே நிரம்பி வழிந்தது. ராங்க்பூர் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் 18 சிக்ஸர்கள் அடித்து தன் சாதனையைத் தானே முறியடித்தார். இது, தோல்வியையும் குறைந்தபட்ச ரன்களையும் மட்டுமே கண்ட வங்கதேச உள்ளூர் ரசிகர்களுக்கு, இவரது அதிரடி ஆட்டம் வெகுவாகக் கவர்ந்தது. வெளியூரிலேயே இப்படியென்றால் உள்ளூரில் கேட்க வேண்டுமா. 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கரீபியன் ப்ரீமியர் லீக்கில் அதிகபட்ச ரன் குவித்தவர் கெய்ல்தான். ஜமைக்கா, கிட்ஸ் அண்ட் நேவிஸ் என இவரின் டீம்கள் மாறிக் கொண்டே இருந்தபோதும் இவரின் யுக்தி ஒன்றுதான்... அது அதிரடி. முக்கியமாக, கெய்ல் போன்ற அதிரடி பேட்ஸ்மென்கள், எப்போதும் கிரீஸைவிட்டு இரண்டு அடி இறங்கியே நிற்பார்கள். இது முன்னணி பவுலர்களையே சற்று தடுமாற செய்துவிடும். லைன் பிடிப்பதே சிரம்மான ஒன்றாகிவிடும். புது பவுலர் என்றால் கேட்கவே வேண்டாம். இவ்வகை அதிரடி பேட்ஸ்மேன்கள், மற்ற பேட்ஸ்மேன்கள்போல இல்லாமல் பந்தைத் தேடி போய் விளாசும் குணம் கொண்டவர்கள். இதனால் பவுலர்களுக்கு அவ்வளவு எளிதில் கான்ஃபிடன்ஸும் கிடைக்காது. கிரிக்கெட்டை திருவிழாவாகப் பார்க்கும் கரீபிய மக்களிடையே இவரின் அணுகுமுறை கொண்டாட்டம் கலந்ததாக இருக்கும். ஒவ்வொரு வெற்றியின்போதும் சிக்ஸ் பேக் தெரியக் கொண்டாடுவது, தன் ரசிகர்களைக் களத்துக்கே அழைத்து அவர்களோடு கங்கம் ஸ்டைலில் ஆடுவது எனக் கொண்டாடிக் களிப்பார் இந்தக் கரீபியன் கிங். எந்தத் தொடருக்குச் சென்றாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை தன் வசமாக்கி விடுவார். இவர் ஆட்டத்தைக் காண்பதற்காக மட்டுமே பல ஆயிரம் பேர் கூடுவர். கெய்ல் களத்துக்கு வந்தால் கேலரியில்தான் ஃபீல்டர்களுக்கு இடம் என்பதை தன் ஒவ்வோர் ஆட்டங்களிலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். களத்தில் மட்டுமன்றி நிஜ வாழ்க்கையிலும் மக்களின் மனதை வென்றவராகவே இருக்கிறார். 2012-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பெங்களூரில் நடந்த ஒரு போட்டியில், தான் அடித்த சிக்ஸர் ஒரு சிறுமியின் மீது பட்டு காயம் ஏற்பட்டது. மேட்ச் முடிந்த உடன் சிறுமியை நலம் விசாரித்து தனக்கு வழங்கப்பட்ட ஆட்ட நாயகன் விருதையும் அளித்தார். தங்கள் நாட்டு வீரர்களுக்கு நிகராக கிறிஸ் கெய்லைக் கொண்டாடும் ரசிகர்கள்தாம் இவரின் ஆட்டத்துக்கான அங்கீகாரம். 2019 உலகக் கோப்பையோடு தன் ஓய்வை அறிவித்திருக்கும் இந்தச் சூறாவளியின் சாதனைகள், கிரிக்கெட் சரித்திரத்தின் தவிர்க்க முடியாத பக்கங்கள். https://www.vikatan.com

"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட்

1 hour 58 minutes ago
தமிழர்கள் புலம்பெயர்ந்த மேலை நாடுகளில் இந்தச் சாதியம் அவர்களிடம் ஒரு தலைமுறையோடு அழியத்தொடங்கியிருப்பதைக் காணலாம். நிலத்திலும் அந்த நிகழ்வு தொடங்கி இருந்தாலும் அது நிறைவேற பல தலைமுறைகள் செல்லும் எனத் தெரிகிறது.

இன்று ரஜினி திரணகம நினைவு நாள் 

2 hours 12 minutes ago
இன்று ரஜினி திரணகம நினைவு நாள் இவரின் நினைவு நாளில் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் EPRLF கும்பலின் எச்சங்கள் தலித் அமைப்பு என்றும் மனித உரிமை குழுக்கள் இலக்கிய குழுக்கள் என பல பெயர்களில் மனித உரிமை பாடம் எடுப்பதும் அவரை புத்தியீவி என கதை எழுதுவதும் தொடர்ந்து நடக்குகிறது. 2009 களுக்கு பின்னால் இவை அதிகரித்து வருகிறது உண்மையில் தனிப்பட்ட காரணம் உடபட இரண்டு காரணங்களை முன் வைத்து ரஜினி திரணகம கொல்லப்பட்டார் . முறிந்த பனை நூல் புலிகளை விமரிசித்து இருந்தாலும் இந்தியா அமைதிப்படை மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கி வடக்கு கிழக்கில் பத்மநாபா தலைமையில் கொலை களவு கடத்தல் பாலியல் வல்லுறவு என வெறியாட்டம் ஆடிய EPRLF ஆயுத கும்பலை பற்றியும் பேசி இருந்தது . இந்தியா ஆமி கொடூரங்கள் இந்த புத்தகங்கள் வழியாக வெளிவருவதை இந்தியா ஆமியின் ஒரு சாரார் விரும்பவில்லை .இந்தியா ஆமியின் சார்பில் கொலை செய்வதற்கான திட்டத்தை இந்தியா ஆமி தளபதிகளில் ஒருவரான கேணல் சசிகுமார் EPRLF அமைப்பின் ரஃபிக் என்பவரோடு சேர்ந்து திட்டமிட்டார் . இந்த திட்டத்தின் படி EPRLF அமைப்பின் கார்த்திக் மற்றும் தாமஸ் ஆகிய இருவரும் இந்த கொலையை செய்தனர் .திட்டத்தின் படி கொலை விழுந்த மறு கணமே புலிகள் மீது குற்றம் சுமத்தி EPRLF அறிக்கை வெளியிட்டது ..அதை மக்கள் மத்தியில் இந்தியா ஆமி ஏற்பாட்டில் EPRLF கொண்டு சென்றது ..புலிகள் இயக்கம் மணலாறு காட்டுக்குள் ஒடுக்கப்பட்ட நிலையில் இதை EPRLF கும்பல் வேகமாக செய்தது .இந்தியா படை வெளியேறிய பின்னர் கொலை செய்த தாமஸ் டக்ளஸ் கும்பலில் செயல்பட்டு வந்தார் .கார்த்திக் சில காலம் சுரேஷ் பிரம்மச்சந்திரனின் உதவியாளராக இயங்கி பின்னர் வெளிநாடு சென்று விட்டார் .பிற்காலத்தில் தாமஸ் திருகோணமலை பகுதியில் தனிப்பட்ட தகராறு ஒன்றில் வெட்டி கொல்லப்பட்டார் இந்த கொலை திட்டத்தை செய்லபடுத்திய கேணல் சசிகுமார் என்கிற இந்தியா ஆமி அதிகாரி கொலை நடந்த சில நாளில் மணியம்தோட்ட பகுதியில் வைத்து புலிகளால் கொல்லப்பட்டார் . இந்த கொலையை பகிரங்கமாக அம்பலப்படுத்திய EPRLF கும்பலின் முன்னை நாள் உறுப்பினரும் டக்ளஸ் குழுவை சேர்ந்தவருமான அற்புதனை இலங்கை ராணுவ ஏற்பாட்டில் டக்லஸ் மற்றும் சந்திரகுமார் (கிளிநொச்சி) சுட்டு கொன்றனர் .இந்த கொலையை சந்திரகுமார் நெறிப்படுத்தி இருந்தார். இந்த கொலையை தொடர்ந்து அற்புதனின் மனைவி மற்றும் பிள்ளைகளை டக்ளஸ் கும்பல் கொடூரமாக ஏமாற்றி இலங்கையில் இருந்து விரட்டி விட்டு தினமுரசு பத்திரிகையை அபகரித்தனர் .இதற்க்கு இன்றும் சட்டத்தரணியாக தொழில் புரியும் CV Vivekananthan சாட்சியாக இருக்கிறார் PS 1: இந்த EPRLF கும்பல் இந்தியா ஆமி காலத்தில் வடக்கில் பிரபல ஆசிரியர் கிருசானந்தன் கிழக்கில் வண பிதா சந்திரா அடிகள் என ஆயிரக்கணக்கான அப்பாவிகளை வேட்டையாடியது .இதனால் தான் இந்தியா ஆமியோடு சேர்ந்து கும்பல் இந்தியா தப்பி ஓடியது. 2009 க்கு பின்னர் மீண்டும் இந்தியா ஆமி அனுசரணையில் வரதராஜ பெருமாள் தரையிறக்க பட்டு இருக்கிறார் .இந்த கும்பலின் எச்சங்கள் இந்தியா புலனாய்வு துறையின் ஏற்பாட்டில் இலக்கிய அமைப்புகள் , தலித் அமைப்புகள் என பல பெயர்களில் மீண்டும் இயக்க முயற்சிக்கப்படுகிறது . கிளிநொச்சியில் புலிகளின் சஞ்சிகை ஒன்றில் வேலை செய்த கருணாகரன் என்கிற ஒரு நபர் இந்த குழுக்களை இலக்கிய கூட்டங்கள் என்கிற பெயரில் ஒருங்கிணைக்கும் முகவராக செய்லபாடுகிறார் PS 2: புலிகள் பெயரில் இந்தியா புலனாய்வு அமைப்பு கொலைகளை செய்ய தொடங்கியது புலிகள் டெலோ மோதலுக்கு முற்பட்ட காலமாகும் . நாடாளமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் (சித்ததார்த்தன் தந்தை ) ஆலாலசுந்திரம் ஆகியோரை டெலோ புலிகள் பெயரில் கொலை செய்து இருந்தது ..பின்னர் டெலோ அமைப்பு மோதலுக்கு முற்பட்ட காலம் ஒன்றில் புலிகள் இதை அம்பலப்படுத்தி இருந்தனர் .பாராளமன்ற உறுப்பினர் சித்ததார்த்தன் இதற்க்கு இன்றும் சாட்சி டக்ளஸ் கும்பல் தன்னுடைய கும்பலை சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதத்தை கொலை செய்ததும் இப்படியான ஏற்பாடு தான் ..ஆனால் இந்த கொலை தனிப்பட்ட காரணம் ஒன்றுக்காக நடத்தப்பட்டது

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் தெரியுமா?- வைரலாகும் நித்தியின் வீடியோ

2 hours 21 minutes ago
ஆஹா, இனி கேரளாவுக்கு அனுப்பப்படும் மாடுகள் எல்லாம் கெஞ்சிக் கூத்தாடி முடிந்தால் மிரட்டி தப்பித்து விடுங்கள்.அநேக ஓட்டல்களின் கதவுகள் அறைந்து சாத்தப்படுவது உறுதி......! 😪

பிரான்ஸின் உயர் விருதான செவாலிய விருதை பெற்றார் முன்னாள் ஜனாதிபதி!

2 hours 24 minutes ago
விருதுகள் எதற்காக வழங்குவது என்பதில் மேற்குலகமும் தள்ளாடுகிறது. விரைவில் மகிந்தவுக்கும் கொடுத்து விடுவார்கள் போல உள்ளது.

பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் பலி…

2 hours 24 minutes ago
சிங்களப் பகுதிகளிலிருந்து இப்படியான ரயில் விபத்துப் பற்றிய செய்திகள் வருவது அரிதாக இருக்கிறதே காரணம் என்ன...??

"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட்

2 hours 26 minutes ago
அப்படி காப்பாற்றியே இத்தனை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால் எதனை கொடிய கொலைகாரர்கள் தெற்கில் வாழ்கிறார்கள் என்பது தெரியும்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள்

2 hours 28 minutes ago
அஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258 பாகிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் இரண்டவது போட்டியில் ஷஹாதி மற்றும் அஸ்கர் காட்டிய அதிரடியினால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ... ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ஆஸ்கர் ஆப்கான் முதலில் களமிறங்க தீர்மானித்தார். அதன்படி மொஹமட் ஷஹ்சாதும், இஷ்சனுல்லா ஜனாத்தும் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கி ஆடி வர 8.6 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 26 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது தனது முதில் விக்கெட்டை பறிகொடுத்தது. அதற்கிணங்க இஷ்சனுல்லா ஜனாத் 10 ஓட்டத்துடன் மொஹமட் நவாஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, ரஹ்மத் ஷா களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எனினும் 10.1 ஆவது ஓவரில் மொஹமட் நவாஸின் பந்து வீச்சில் மொஹமட் ஷஹ்சாத்தும் 20 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, ரஹ்மத் ஷாத்துடன் ஜோடி சேர்ந்தாட ஷஹதி களமிறங்கினார். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை நான்கு திசைகளிலும் அடித்தாட 13.5 ஓவரில் அணி 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஷஹதி 19 ஓட்டத்துடனும் ரஹ்மத் ஷா 23 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இந் நிலையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 94 ஆக இருக்கும்போது மீண்டும் மொஹமட் நவாஸ் பந்து பறிமாற்றம் மேற்கொள்ள ரஹ்மத் ஷா 36 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இவரையடுத்து களம் நுழைந்த அணியித் தலைவர் அஸ்கர் ஆப்கான் தான் எதிர்கொண்ட முதல் பந்திலே ஒரு 6 ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 26 ஆவது ஓவரில் 100 ஐ கடந்தது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த 35 ஆவது ஓவரில் ஆப்கான் அணி 132 ஓட்டத்தை பெற்றது. 36 ஆவது ஓவருக்காக மொஹமட் நவாஸ் பந்து வீச அஸ்கர் ஆப்கான் அடுத்தடுத்து ஒரு 4 நான்கு ஓட்டத்தையும் ஒரு 6 ஓட்டத்தையும் பெற்று அதிரடி காட்ட 37.2 ஆவது ஓவரில் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டத்தை பெற்றது. இதையடுத்து ஷஹதி 86 பந்துகளில் அரைசதம் கடக்க, மறுமுணையில் 45 பந்துகளை எதிர்கொண்ட அஸ்கர் ஆப்கன் 45 பந்துகளில் 8 ஆவது அரைசதத்தை விளாசினார். எனினும் மைதானத்தில் தொடர்ந்தும் அதிரடி காட்டி வந்த அஸ்கர் 56 பந்துகளை எதிர்கொண்டு 5 ஆறு ஓட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 67 ஓட்டத்துடன் ஷாஹீன் அப்ரீடியின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க இவரையடுத்து களமிறங்கிய மொஹமட் நபி 7 ஓட்டத்துடனும் நஜிபுல்லா ஸத்ரான் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க‍ ஆப்கான் அணி 46.2 ஆவது ஓவருக்கு 6 விக்கெட்டினை இழந்து 212 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வந்தது. ஷஹதி தொடர்ந்தும் மைதானத்தை அதிர விட இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்டினை இழந்து 257 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 258 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஷஹதி 97 ஓட்டத்துடனும், நைய்ப் 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். http://www.virakesari.lk/article/40931

``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும்

2 hours 39 minutes ago
``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும் #VikatanExclusive ``22 வருஷம் ஓடிடுச்சு. ஒருவேளை அன்னிக்கு இரவு சில்க்கை சந்திக்க நான் போயிருந்தால், அவளின் பிரச்னைக்குத் தீர்வு சொல்லியிருப்பேன். அதனால சில்க் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருக்கலாம். அப்படி நடக்கலை. அதனால, சில்க்கின் மரணத்துக்கு நானும் ஒரு காரணம்னு குற்ற உணர்வு இன்னைக்கு வரை எனக்கிருக்கு." சில்க் ஸ்மிதா... சினிமாவில் இவர் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. 1980, 90-களில், இவர் பெயரை உச்சரிக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை தன் வசீகர நடிப்பாலும், நடனத்தாலும், உடலமைப்பாலும் கவர்ந்த கவர்ச்சிக் கன்னி. ஹீரோ, ஹீரோயின்களைவிட, இவரின் கால்ஷீட்டுக்குப் பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருந்த காலம் உண்டு. இந்தக் கவர்ச்சி காந்தம் சினிமா உலகில் வலுப்பெற்றிருந்த காலத்திலேயே, 1996-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி திடீரென மரணத்தைத் தழுவிக்கொண்டது. அவரின் நினைவு தினம் வருவதையொட்டி அவரின் தோழியும், நடிகையுமான அனுராதா, சில்க் ஸ்மிதாவுடன் நெருங்கிப் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார். ``சில்க் ஸ்மிதா, என் நெருங்கின தோழி. நிறைய படங்கள்ல சேர்ந்து வேலை பண்ணியிருக்கிறோம். ஆனா, அவங்க வயதிலும் சினிமாவிலும் எனக்கு சில ஆண்டுகள் சீனியர். ஆரம்பத்தில் நான் ஹீரோயினா நடிச்சுகிட்டு இருந்தேன். அப்போ கிளாமர் டான்ஸ்ல சில்க் பெரிய புகழுடன் இருந்தாங்க. 32 படங்கள்ல ஹீரோயினா நடிச்ச நிலையில, ஒரு படத்தில் கிளாமர் டான்ஸ் ஆடினேன். அந்தப் படம் பெரிய ஹிட். பிறகு, அப்படியான வாய்ப்புகளே எனக்கு நிறைய வர ஆரம்பிச்சுது. அவை ஹிட்டாச்சு. அதனால சில்க்கின் மார்கெட் சரிய தொடங்கினதாவும், சில்குக்கு என் மேல கோபம் இருந்ததாகவும் பேசப்பட்டுச்சு. நான் அதைப் பெரிசா எடுத்துக்கலை. அப்போகூட நாங்க இருவரும் பல படங்கள்ல ஒண்ணா வேலை பார்த்தோம். ஆனா, நாங்க பேசிகிட்டதில்லை. அதேநேரம், எங்களுக்குள் போட்டியோ, கோபமோ இருந்ததில்லை. இந்நிலையில சில்க் ஒரு தெலுங்குப் படத்தைத் தயாரிச்சு நடிச்சாங்க. `நீங்க இப்போ பீக்ல இருக்கீங்க. என் படத்தில் ஒரு டான்ஸ் ஆடுங்க'னு என்கிட்ட கேட்டாங்க. நானும் நடிச்சேன். அப்போதிலிருந்துதான் எங்க நட்பு படிப்படியா வளர ஆரம்பிச்சுது. `சில்க் ரொம்ப தலைக்கனம் உள்ளவங்க; திமிரு பிடிச்சவங்க; பெரிசா யாரையும் மதிக்க மாட்டாங்க'னு அப்போ பலரும் சொல்லுவாங்க. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்கிட்ட சில்க் ரொம்ப தைரியமா, திமிரா பேசுவாங்க. அதை, அவங்களோடு வொர்க் பண்ணின போது நானும் உணர்ந்தேன். அந்தக் கெத்தான குணம் எனக்குக்கூட இதுவரை வந்ததில்லை. ஆனா, எங்க நட்பு ஆழமான பிறகுதான், மத்தவங்க சொன்னதுல ஒண்ணுகூட உண்மையில்லை என்பதை உணர்ந்தேன்" என்கிற அனுராதா, சில்க் ஸ்மிதா உடனான நட்புத் தருணங்களைப் பகிர்கிறார். ``சினிமாவில் பல ஹீரோ, ஹீரோயினுக்கும் மீறிய புகழை, தன் கிளாமர் டான்ஸால் சில்க் பெற்றாங்க. ஆனா, அந்தப் புகழ் அவருக்கு அவ்வளவு எளிதா கிடைச்சுடலை. சினிமா துறையினர் உட்பட பலராலும் பல விதத்துலயும் அவங்க நிறைய மனவேதனைகளை சந்திச்சிருக்காங்க. அந்தப் படிப்பினைகளிலிருந்துதான், தன்னைக் கோபக்காரி மாதிரி வெளிப்படுத்திகிட்டாங்க. வெளியே கோபமான ரூபத்தில் பேசினாலும், `இப்படிப் பேசிட்டோமே'னு பயமும் கவலையும் அவர் மனசுல இருக்கும். இப்படித் தனக்குத் தானே ஒரு வேலி போட்டுக்கிட்டாங்க. அதனால சில்க்கைப் பலரும் தப்பா பேசினாலும், அவரைக் கெட்ட எண்ணத்துடன் எளிதா நெருங்க முடியாம இருந்துச்சு. தன் மனசுல நிறைய வலிகள் இருந்தாலும் அவற்றை எப்போதும் பிறர்கிட்ட பகிர்ந்துக்க மாட்டாங்க. சில்க்குக்கு டான்ஸ் வராது. அவரோட வசீகர முகமும், உடலமைப்பும் பெரிய ப்ளஸ். அதை கேரக்டர் மற்றும் டான்ஸ் தன்மைக்கு ஏற்ப சிறப்பா நளினத்துடன் வெளிப்படுத்துவாங்க. அந்த உடலமைப்பு வேறு எந்த நடிகைக்கும் வராது; இதுவரைக்கும் வரலை. அதனால் நானும் பலமுறை ஆச்சர்யப்பட்டிருக்கேன். அதைச் சில்க் கிட்டயே சொல்லியிருக்கேன். இருவருக்கும் ஓய்வுநேரம் கிடைச்சா, மீட் பண்ணுவோம். நிறைய பேசுவோம். காமெடியா பேசுவாங்க. சந்தோஷமான விஷயங்களைப் பத்திச் சொல்லுவாங்க. தன் மனசுல இருக்கிற எதார்த்தமான விஷயங்களைப் பத்தியும் சொல்லுவாங்க. ஆனால், தன் பர்சனல் விஷயங்களை யார்கிட்டயும் பகிர்ந்துக்க மாட்டாங்க. நானும் கேட்டதில்லை. ஒரு லிமிட்டுக்கு உண்டான வகையில் எங்கிட்ட பல விஷயங்களைச் சொல்லியிருக்காங்க" என்கிறார், அனுராதா. சில்க் ஸ்மிதாவின் இறப்புப் பற்றிப் பேசுகையில், அனுராதாவின் குரல் உடைகிறது. ``அவளின் மரணம் இப்போ வரை மர்மமாகவே இருக்குது. அதற்கு இப்போவரை பல காரணங்கள் சொல்லப்படுது. நிறைய விஷயங்களை வெளிப்படையா சொல்ல முடியாதுங்க. அவங்க எப்படியான சூழல்ல இருந்து தவிச்சுட்டு இருந்தாங்கனு எனக்கு ஓரளவுக்குத் தெரியும். அதையெல்லாம் இப்போ பேசுறது சரிவராது. ஆனா, அவங்க ஒருத்தரைக் காதலிச்சாங்க. அந்தக் காதல் தோல்வியடைந்ததால், மனதளவில் வலிகளுடன் இருந்தாங்க. இந்த விஷயத்தைப் பத்தி ஓரளவுக்கு எங்கிட்ட பகிர்ந்துகிட்டாங்க. முழு விவரங்களும் எனக்குத் தெரியாது. அப்போ என் வீடு கே.கே.நகர்லயும், சில்க் வீடு சாலிகிராமத்துலயும் இருந்துச்சு. அவ திடீர்னு போன் பண்ணி வீட்டுக்கு வரச்சொல்லுவாள். நான் ஃப்ரீயா இருந்தா, உடனே போவேன். மனம்விட்டுப் பேசுவோம். செப்டம்பர் 23, 1996-ம் ஆண்டு. அப்போ, ஒரு கன்னடப் படத்தைத் தயாரிச்ச சில்க், அதில் நடிச்சுட்டும் இருந்தாங்க. அந்தப் படத்தில் என் கணவர் சதீஷ்தான் நடன இயக்குநர். சில்க்கின் டான்ஸ் போர்ஷனை முடிச்சு அவளை அனுப்பிட்டு, பிற நடிகர்களின் டான்ஸ் போர்ஷனையும் முடிச்சுட்டு கணவர் எங்க வீட்டுக்கு வந்துட்டு இருக்கார். இரவு 9 மணி இருக்கும். சில்க்கிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு. `அனு, பிஸியா இருக்கியாடீ? என் வீடு வரைக்கும் வர்றியா? கொஞ்சம் பேசணும்'னு சொன்னாங்க. `இப்போதான் நானும் ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன். பிள்ளைக்குச் சாப்பாடு கொடுத்து தூங்க வைக்கணும். சதீஷூம் வீட்டுக்கு வந்துட்டு இருக்கார். அவர் வருவதற்குள் சாப்பாடு ரெடி பண்ணணும். நாளைக்குப் பிள்ளையை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு, நேரா உன் வீட்டுக்கு வரேன். ஏதாச்சும் பிரச்னையா? போன்ல சொல்லு. ரொம்ப அவசர விஷயம்னா உடனே வரேன்'னு சொன்னேன். `பரவாயில்லை. நாளைக்கு வா. நேர்ல பேசுவோம்'னு சொல்லிட்டாங்க. அதனால நானும் வீட்டு வேலைகளை முடிச்சுட்டு தூங்கிட்டேன். காலையில சமையல் முடிச்சுட்டு, என் மகளை ஸ்கூலுக்கு அழைச்சுட்டுப் போகும் பரபரப்புல இருந்தேன். என் கணவர் சதீஷ் டிவியில நியூஸ் போட்டார். உடனே, `நடிகை சில்க் ஸ்மிதா மரணம்'னு ஃப்ளாஷ் நியூஸ் ஒளிபரப்பாச்சு. எனக்குப் பேரதிர்ச்சி. கதறி அழுதேன். உடனே சில்க் உடலைப் பார்க்க அவங்க வீட்டுக்குப் போனேன். நடிகை வித்யாவும் அப்போ அங்க வந்தாங்க. சில்க்கின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய விஜயா ஹாஸ்பிட்டல் கொண்டுபோயிருப்பதாகச் சொன்னாங்க. உடனே நாங்க இருவரும் ஹாஸ்பிட்டல் போனோம். சொந்தங்கள் இருந்தும், சில்க் தனிமை வாழ்க்கையைத்தான் வாழ்ந்தாங்க. ஹாஸ்பிட்டல்லதான் சில்க்கின் அம்மாவை முதன் முதலா பார்த்தேன். சில்க்கை கடைசியா பார்த்த அந்தத் தருணம் மறக்க முடியாதது. 22 வருஷம் ஓடிடுச்சு. ஒருவேளை அன்னிக்கு இரவு சில்க்கை சந்திக்க நான் போயிருந்தால், அவளின் பிரச்னைக்குத் தீர்வு சொல்லியிருப்பேன். அதனால சில்க் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருக்கலாம். அப்படி நடக்கலை. அதனால, சில்க்கின் மரணத்துக்கு நானும் ஒரு காரணம்னு குற்ற உணர்வு இன்னைக்கு வரை எனக்கிருக்கு. மத்தவங்க பர்சனல் விஷயத்துல தலையிடமாட்டாள்; தன் பர்சனலையும் பிறர்கிட்ட பகிர்ந்துக்க மாட்டாள். ரொம்ப நல்ல மனுஷி. போல்டான பெண். ஆனா, இப்படி ஒரு தவறான முடிவைத் தேர்ந்தெடுத்துக்கிட்டு, தன் 35 வயசுலயே இறந்துட்டாள். சினிமா துறை அழகான, சிறந்த நடிகையை இழந்துடுச்சு. அவளோட இடத்தை இப்போவரை எந்த நடிகையாலும் ஈடுசெய்ய முடியலை" எனக் கண்ணீருடன் முடித்தார் அனுராதா. https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/137590-actress-anuradha-talks-about-her-friend-silk-smitha-memories.html

``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும்

2 hours 39 minutes ago
``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும் #VikatanExclusive
303_thumb.jpg
 
``22 வருஷம் ஓடிடுச்சு. ஒருவேளை அன்னிக்கு இரவு சில்க்கை சந்திக்க நான் போயிருந்தால், அவளின் பிரச்னைக்குத் தீர்வு சொல்லியிருப்பேன். அதனால சில்க் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருக்கலாம். அப்படி நடக்கலை. அதனால, சில்க்கின் மரணத்துக்கு நானும் ஒரு காரணம்னு குற்ற உணர்வு இன்னைக்கு வரை எனக்கிருக்கு."
``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும் #VikatanExclusive
 

சில்க் ஸ்மிதா... சினிமாவில் இவர் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. 1980, 90-களில், இவர் பெயரை உச்சரிக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை தன் வசீகர நடிப்பாலும், நடனத்தாலும், உடலமைப்பாலும் கவர்ந்த கவர்ச்சிக் கன்னி. ஹீரோ, ஹீரோயின்களைவிட, இவரின் கால்ஷீட்டுக்குப் பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருந்த காலம் உண்டு. இந்தக் கவர்ச்சி காந்தம் சினிமா உலகில் வலுப்பெற்றிருந்த காலத்திலேயே, 1996-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி திடீரென மரணத்தைத் தழுவிக்கொண்டது. அவரின் நினைவு தினம் வருவதையொட்டி அவரின் தோழியும், நடிகையுமான அனுராதா, சில்க் ஸ்மிதாவுடன் நெருங்கிப் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார். 

சில்க் ஸ்மிதா

``சில்க் ஸ்மிதா, என் நெருங்கின தோழி. நிறைய படங்கள்ல சேர்ந்து வேலை பண்ணியிருக்கிறோம். ஆனா, அவங்க வயதிலும் சினிமாவிலும் எனக்கு சில ஆண்டுகள் சீனியர். ஆரம்பத்தில் நான் ஹீரோயினா நடிச்சுகிட்டு இருந்தேன். அப்போ கிளாமர் டான்ஸ்ல சில்க் பெரிய புகழுடன் இருந்தாங்க. 32 படங்கள்ல ஹீரோயினா நடிச்ச நிலையில, ஒரு படத்தில் கிளாமர் டான்ஸ் ஆடினேன். அந்தப் படம் பெரிய ஹிட். பிறகு, அப்படியான வாய்ப்புகளே எனக்கு நிறைய வர ஆரம்பிச்சுது. அவை ஹிட்டாச்சு. அதனால சில்க்கின் மார்கெட் சரிய தொடங்கினதாவும், சில்குக்கு என் மேல கோபம் இருந்ததாகவும் பேசப்பட்டுச்சு. நான் அதைப் பெரிசா எடுத்துக்கலை. அப்போகூட நாங்க இருவரும் பல படங்கள்ல ஒண்ணா வேலை பார்த்தோம். ஆனா, நாங்க பேசிகிட்டதில்லை. அதேநேரம், எங்களுக்குள் போட்டியோ, கோபமோ இருந்ததில்லை.

 

 

அனுராதா

இந்நிலையில சில்க் ஒரு தெலுங்குப் படத்தைத் தயாரிச்சு நடிச்சாங்க. `நீங்க இப்போ பீக்ல இருக்கீங்க. என் படத்தில் ஒரு டான்ஸ் ஆடுங்க'னு என்கிட்ட கேட்டாங்க. நானும் நடிச்சேன். அப்போதிலிருந்துதான் எங்க நட்பு படிப்படியா வளர ஆரம்பிச்சுது. `சில்க் ரொம்ப தலைக்கனம் உள்ளவங்க; திமிரு பிடிச்சவங்க; பெரிசா யாரையும் மதிக்க மாட்டாங்க'னு அப்போ பலரும் சொல்லுவாங்க. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்கிட்ட சில்க் ரொம்ப தைரியமா, திமிரா பேசுவாங்க. அதை, அவங்களோடு வொர்க் பண்ணின போது நானும் உணர்ந்தேன். அந்தக் கெத்தான குணம் எனக்குக்கூட இதுவரை வந்ததில்லை. ஆனா, எங்க நட்பு ஆழமான பிறகுதான், மத்தவங்க சொன்னதுல ஒண்ணுகூட உண்மையில்லை என்பதை உணர்ந்தேன்" என்கிற அனுராதா, சில்க் ஸ்மிதா உடனான நட்புத் தருணங்களைப் பகிர்கிறார்.

 

 

``சினிமாவில் பல ஹீரோ, ஹீரோயினுக்கும் மீறிய புகழை, தன் கிளாமர் டான்ஸால் சில்க் பெற்றாங்க. ஆனா, அந்தப் புகழ் அவருக்கு அவ்வளவு எளிதா கிடைச்சுடலை. சினிமா துறையினர் உட்பட பலராலும் பல விதத்துலயும் அவங்க நிறைய மனவேதனைகளை சந்திச்சிருக்காங்க. அந்தப் படிப்பினைகளிலிருந்துதான், தன்னைக் கோபக்காரி மாதிரி வெளிப்படுத்திகிட்டாங்க. வெளியே கோபமான ரூபத்தில் பேசினாலும், `இப்படிப் பேசிட்டோமே'னு பயமும் கவலையும் அவர் மனசுல இருக்கும். இப்படித் தனக்குத் தானே ஒரு வேலி போட்டுக்கிட்டாங்க. அதனால சில்க்கைப் பலரும் தப்பா பேசினாலும், அவரைக் கெட்ட எண்ணத்துடன் எளிதா நெருங்க முடியாம இருந்துச்சு. தன் மனசுல நிறைய வலிகள் இருந்தாலும் அவற்றை எப்போதும் பிறர்கிட்ட பகிர்ந்துக்க மாட்டாங்க. 

சில்க் ஸ்மிதா

சில்க்குக்கு டான்ஸ் வராது. அவரோட வசீகர முகமும், உடலமைப்பும் பெரிய ப்ளஸ். அதை கேரக்டர் மற்றும் டான்ஸ் தன்மைக்கு ஏற்ப சிறப்பா நளினத்துடன் வெளிப்படுத்துவாங்க. அந்த உடலமைப்பு வேறு எந்த நடிகைக்கும் வராது; இதுவரைக்கும் வரலை. அதனால் நானும் பலமுறை ஆச்சர்யப்பட்டிருக்கேன். அதைச் சில்க் கிட்டயே சொல்லியிருக்கேன். இருவருக்கும் ஓய்வுநேரம் கிடைச்சா, மீட் பண்ணுவோம். நிறைய பேசுவோம். காமெடியா பேசுவாங்க. சந்தோஷமான விஷயங்களைப் பத்திச் சொல்லுவாங்க. தன் மனசுல இருக்கிற எதார்த்தமான விஷயங்களைப் பத்தியும் சொல்லுவாங்க. ஆனால், தன் பர்சனல் விஷயங்களை யார்கிட்டயும் பகிர்ந்துக்க மாட்டாங்க. நானும் கேட்டதில்லை. ஒரு லிமிட்டுக்கு உண்டான வகையில் எங்கிட்ட பல விஷயங்களைச் சொல்லியிருக்காங்க" என்கிறார், அனுராதா.

 
 

 

சில்க் ஸ்மிதாவின் இறப்புப் பற்றிப் பேசுகையில், அனுராதாவின் குரல் உடைகிறது. ``அவளின் மரணம் இப்போ வரை மர்மமாகவே இருக்குது. அதற்கு இப்போவரை பல காரணங்கள் சொல்லப்படுது. நிறைய விஷயங்களை வெளிப்படையா சொல்ல முடியாதுங்க. அவங்க எப்படியான சூழல்ல இருந்து தவிச்சுட்டு இருந்தாங்கனு எனக்கு ஓரளவுக்குத் தெரியும். அதையெல்லாம் இப்போ பேசுறது சரிவராது. ஆனா, அவங்க ஒருத்தரைக் காதலிச்சாங்க. அந்தக் காதல் தோல்வியடைந்ததால், மனதளவில் வலிகளுடன் இருந்தாங்க. இந்த விஷயத்தைப் பத்தி ஓரளவுக்கு எங்கிட்ட பகிர்ந்துகிட்டாங்க. முழு விவரங்களும் எனக்குத் தெரியாது. அப்போ என் வீடு கே.கே.நகர்லயும், சில்க் வீடு சாலிகிராமத்துலயும் இருந்துச்சு. அவ திடீர்னு போன் பண்ணி வீட்டுக்கு வரச்சொல்லுவாள். நான் ஃப்ரீயா இருந்தா, உடனே போவேன். மனம்விட்டுப் பேசுவோம். 

சில்க் ஸ்மிதா

செப்டம்பர் 23, 1996-ம் ஆண்டு. அப்போ, ஒரு கன்னடப் படத்தைத் தயாரிச்ச சில்க், அதில் நடிச்சுட்டும் இருந்தாங்க. அந்தப் படத்தில் என் கணவர் சதீஷ்தான் நடன இயக்குநர். சில்க்கின் டான்ஸ் போர்ஷனை முடிச்சு அவளை அனுப்பிட்டு, பிற நடிகர்களின் டான்ஸ் போர்ஷனையும் முடிச்சுட்டு கணவர் எங்க வீட்டுக்கு வந்துட்டு இருக்கார். இரவு 9 மணி இருக்கும். சில்க்கிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு. `அனு, பிஸியா இருக்கியாடீ? என் வீடு வரைக்கும் வர்றியா? கொஞ்சம் பேசணும்'னு சொன்னாங்க. `இப்போதான் நானும் ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன். பிள்ளைக்குச் சாப்பாடு கொடுத்து தூங்க வைக்கணும். சதீஷூம் வீட்டுக்கு வந்துட்டு இருக்கார். அவர் வருவதற்குள் சாப்பாடு ரெடி பண்ணணும். நாளைக்குப் பிள்ளையை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு, நேரா உன் வீட்டுக்கு வரேன். ஏதாச்சும் பிரச்னையா? போன்ல சொல்லு. ரொம்ப அவசர விஷயம்னா உடனே வரேன்'னு சொன்னேன். `பரவாயில்லை. நாளைக்கு வா. நேர்ல பேசுவோம்'னு சொல்லிட்டாங்க. அதனால நானும் வீட்டு வேலைகளை முடிச்சுட்டு தூங்கிட்டேன். காலையில சமையல் முடிச்சுட்டு, என் மகளை ஸ்கூலுக்கு அழைச்சுட்டுப் போகும் பரபரப்புல இருந்தேன். என் கணவர் சதீஷ் டிவியில நியூஸ் போட்டார். உடனே, `நடிகை சில்க் ஸ்மிதா மரணம்'னு ஃப்ளாஷ் நியூஸ் ஒளிபரப்பாச்சு. எனக்குப் பேரதிர்ச்சி. கதறி அழுதேன். உடனே சில்க் உடலைப் பார்க்க அவங்க வீட்டுக்குப் போனேன். நடிகை வித்யாவும் அப்போ அங்க வந்தாங்க. சில்க்கின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய விஜயா ஹாஸ்பிட்டல் கொண்டுபோயிருப்பதாகச் சொன்னாங்க. உடனே நாங்க இருவரும் ஹாஸ்பிட்டல் போனோம். சொந்தங்கள் இருந்தும், சில்க் தனிமை வாழ்க்கையைத்தான் வாழ்ந்தாங்க. ஹாஸ்பிட்டல்லதான் சில்க்கின் அம்மாவை முதன் முதலா பார்த்தேன். சில்க்கை கடைசியா பார்த்த அந்தத் தருணம் மறக்க முடியாதது.

22 வருஷம் ஓடிடுச்சு. ஒருவேளை அன்னிக்கு இரவு சில்க்கை சந்திக்க நான் போயிருந்தால், அவளின் பிரச்னைக்குத் தீர்வு சொல்லியிருப்பேன். அதனால சில்க் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருக்கலாம். அப்படி நடக்கலை. அதனால, சில்க்கின் மரணத்துக்கு நானும் ஒரு காரணம்னு குற்ற உணர்வு இன்னைக்கு வரை எனக்கிருக்கு. மத்தவங்க பர்சனல் விஷயத்துல தலையிடமாட்டாள்; தன் பர்சனலையும் பிறர்கிட்ட பகிர்ந்துக்க மாட்டாள். ரொம்ப நல்ல மனுஷி. போல்டான பெண். ஆனா, இப்படி ஒரு தவறான முடிவைத் தேர்ந்தெடுத்துக்கிட்டு, தன் 35 வயசுலயே இறந்துட்டாள். சினிமா துறை அழகான, சிறந்த நடிகையை இழந்துடுச்சு. அவளோட இடத்தை இப்போவரை எந்த நடிகையாலும் ஈடுசெய்ய முடியலை" எனக் கண்ணீருடன் முடித்தார் அனுராதா.

 

https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/137590-actress-anuradha-talks-about-her-friend-silk-smitha-memories.html

காபன் வெளியேற்றம்: 2050ஆம் ஆண்டில் வடக்கில் அதிக பாதிப்பு

2 hours 39 minutes ago
காபன் வெளியேற்றம்: 2050ஆம் ஆண்டில் வடக்கில் அதிக பாதிப்பு பூகோள ரீதியாக, காபன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050ஆம் ஆண்டில், வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும் மாகாணங்களில், மிக மோசமாகப் பாதிக்கப்படும் மாகாணமாக, வட மாகாணமே அமையுமென, உலக வங்கி எச்சரித்துள்ளது. வெப்பநிலை, மழை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால், தெற்காசியாவில் ஏற்படப்போகும் மாற்றங்கள் தொடர்பான அறிக்கையை, உலக வங்கி, நேற்று (20) வெளியிட்டது. இதில், இலங்கை தொடர்பான பார்வையில், அதிகமாகப் பாதிக்கப்படும் மாகாணமாக, வடக்கு உள்ளது. குறைவான பாதிப்பு, மத்திய மாகாணத்தில் ஏற்படும். இதில், வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மோசமான மாற்றங்களைத் தவிர, நீர் கிடைக்கின்ற வாய்ப்பு குறைவாகவுள்ள மாகாணமாகவும், வட மாகாணம் காணப்படுகிறது. வட மாகாணமளவுக்கு, மத்திய மாகாணத்திலும், நீரின் கிடைக்கக்கூடிய தன்மை, குறைவாகக் காணப்படும். மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களின் பட்டியலில், யாழ்ப்பாண மாவட்டமே முதலிடத்தில் உள்ளதோடு, முதல் 4 மாவட்டங்களில் 3 மாவட்டங்கள், வட மாகாணத்தைச் சேர்ந்தவையாகும். இரண்டாவது இத்திலுள்ள புத்தளம் மாவட்டத்தைத் தொடர்ந்து, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. அத்தோடு, வடக்கின் ஏனைய மாவட்டங்களான முல்லைத்தீவும் வவுனியாவும், மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் முறையே 9ஆவது, 10ஆவது இடங்களில் காணப்படுகின்றன. http://www.tamilmirror.lk/செய்திகள்/காபன்-வெளியேற்றம்-2050ஆம்-ஆண்டில்-வடக்கில்-அதிக-பாதிப்பு/175-222333

காபன் வெளியேற்றம்: 2050ஆம் ஆண்டில் வடக்கில் அதிக பாதிப்பு

2 hours 39 minutes ago
காபன் வெளியேற்றம்: 2050ஆம் ஆண்டில் வடக்கில் அதிக பாதிப்பு
 

பூகோள ரீதியாக, காபன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050ஆம் ஆண்டில், வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும் மாகாணங்களில், மிக மோசமாகப் பாதிக்கப்படும் மாகாணமாக, வட மாகாணமே அமையுமென, உலக வங்கி எச்சரித்துள்ளது.

வெப்பநிலை, மழை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால், தெற்காசியாவில் ஏற்படப்போகும் மாற்றங்கள் தொடர்பான அறிக்கையை, உலக வங்கி, நேற்று (20) வெளியிட்டது.  

இதில், இலங்கை தொடர்பான பார்வையில், அதிகமாகப் பாதிக்கப்படும் மாகாணமாக, வடக்கு உள்ளது. குறைவான பாதிப்பு, மத்திய மாகாணத்தில் ஏற்படும்.  

இதில், வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மோசமான மாற்றங்களைத் தவிர, நீர் கிடைக்கின்ற வாய்ப்பு குறைவாகவுள்ள மாகாணமாகவும், வட மாகாணம் காணப்படுகிறது. வட மாகாணமளவுக்கு, மத்திய மாகாணத்திலும், நீரின் கிடைக்கக்கூடிய தன்மை, குறைவாகக் காணப்படும்.  

மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களின் பட்டியலில், யாழ்ப்பாண மாவட்டமே முதலிடத்தில் உள்ளதோடு, முதல் 4 மாவட்டங்களில் 3 மாவட்டங்கள், வட மாகாணத்தைச் சேர்ந்தவையாகும். இரண்டாவது இத்திலுள்ள புத்தளம் மாவட்டத்தைத் தொடர்ந்து, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. அத்தோடு, வடக்கின் ஏனைய மாவட்டங்களான முல்லைத்தீவும் வவுனியாவும், மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் முறையே 9ஆவது, 10ஆவது இடங்களில் காணப்படுகின்றன.   

http://www.tamilmirror.lk/செய்திகள்/காபன்-வெளியேற்றம்-2050ஆம்-ஆண்டில்-வடக்கில்-அதிக-பாதிப்பு/175-222333

 

திருகோணமலை எண்ணெய்குதங்களை இந்தியாவுக்கு இரகசியமாக வழங்க நடடிக்கை - அனுரகுமார

2 hours 51 minutes ago
திருகோணமலை எண்ணெய்குதங்களை இந்தியாவுக்கு இரகசியமாக வழங்க நடடிக்கை - அனுரகுமார (ஆர்.யசி) திருக்கோணமலை எண்ணெய் குதங்களை எந்தவித முன் அறிவித்தலும் இல்லாது இந்தியாவிற்கு வழங்கும் இரகசிய நகர்வுகள் முன்னெடுக்கபட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் குற்றம் சுமத்தினார். இந்த அரசாங்கத்தில் தரகர்களின் அமைச்சரவையாக உள்ளமையாலேயே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் எனவும் அவர் சாடினார். பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளைகள் 27/2 கீழ் எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திச்சாநாயக்க, பெற்றோலியவள அமைச்சர் அர்ஜுன ரணத்துங்கவிடம் எழுப்பிய கேள்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், திருகோணமலை சீனக்குடா துறைமுகத்திலுள்ள எண்ணெய் குதங்களில் 15 எண்ணெய் குதங்களை முற்று முழுதாக இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிறுவனமொன்றுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும், 85 எண்ணெய் குதங்களை இலங்கை - இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனங்களின் கூட்டு நிறுவனமொன்றிற்கு பெற்றுக்கொடுக்கவும் அமைச்சரவையில் கடந்த மாதம் தீர்மானமொன்றை எடுத்திருந்தது. அதன் அடிப்படையில் 16 எண்ணெய்க் குதங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் நிர்வகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. http://www.virakesari.lk/article/40919

திருகோணமலை எண்ணெய்குதங்களை இந்தியாவுக்கு இரகசியமாக வழங்க நடடிக்கை - அனுரகுமார

2 hours 51 minutes ago
திருகோணமலை எண்ணெய்குதங்களை இந்தியாவுக்கு இரகசியமாக வழங்க நடடிக்கை - அனுரகுமார

 

 
 

(ஆர்.யசி)

திருக்கோணமலை எண்ணெய் குதங்களை எந்தவித முன் அறிவித்தலும் இல்லாது இந்தியாவிற்கு வழங்கும் இரகசிய நகர்வுகள் முன்னெடுக்கபட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் குற்றம் சுமத்தினார். 01.jpg

 

இந்த அரசாங்கத்தில்  தரகர்களின் அமைச்சரவையாக உள்ளமையாலேயே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் எனவும் அவர் சாடினார். 

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளைகள்  27/2 கீழ் எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திச்சாநாயக்க, பெற்றோலியவள அமைச்சர் அர்ஜுன ரணத்துங்கவிடம்  எழுப்பிய கேள்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

திருகோணமலை சீனக்குடா துறைமுகத்திலுள்ள எண்ணெய் குதங்களில் 15 எண்ணெய் குதங்களை முற்று முழுதாக இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிறுவனமொன்றுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும், 85 எண்ணெய் குதங்களை இலங்கை - இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனங்களின் கூட்டு நிறுவனமொன்றிற்கு  பெற்றுக்கொடுக்கவும் அமைச்சரவையில்  கடந்த மாதம் தீர்மானமொன்றை  எடுத்திருந்தது. 

அதன் அடிப்படையில் 16 எண்ணெய்க் குதங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் நிர்வகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. 

http://www.virakesari.lk/article/40919

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!

2 hours 54 minutes ago
124. இரண்டு இட்லிகள் அந்தக் குடியரசு தின தேநீர் விருந்தை வினய்யால் மறக்கவே முடியாது. அவனது இடாகினி அவனை ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கும் ஓர் அதிகாரியின் தோற்றத்துக்கு மாற்றியிருந்தது. கோட் சூட் அணிந்து, பளபளக்கும் ஷூக்கள் அணிந்து ஒரு விலை உயர்ந்த காரில் அவன் முன்னதாக மூன்று மணிக்கே ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றுவிட்டிருந்தான். இடாகினி தெளிவான உத்தரவுகள் கொடுத்திருந்தது. அவன் பேசக் கூடாது. அவனுக்குப் பதிலாக அது பேசும். அதன் குரல் ஒலிக்கும்போதெல்லாம் பொருத்தமாக அவன் வாயசைத்தால் போதும். யாரைக் கண்டாலும் சிறிதாக ஒரு புன்னகை. எதிராளி வணங்கினால் பதிலுக்கு வணக்கம் சொல்ல வேண்டும். அவர் கறாராகப் பேசினால், அதற்கேற்ற முகபாவத்தைக் கொண்டு வர வேண்டும். ஆனால் பேச வேண்டிய பொறுப்பு அதனுடையது. ‘உன்னை நான் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று அமர வைத்துவிடுவேன். போன் அடித்தால் எடுத்துக் காதில் வைத்துக்கொள். பேசவேண்டியதை நான் பார்த்துக்கொள்கிறேன். யாராவது வந்தால் அவர் கண்ணை மட்டும் நேராக உற்றுப் பார்த்தால் போதும். என் குரலுக்கு வாயசைத்துவிட்டு அமைதியாக இருந்துவிடு’ என்று சொன்னது. ‘நான் என்ன உத்தியோகமா பார்க்கப் போகிறேன்?’ ‘விருந்து நேரம் தொடங்கும்வரை அங்கே இருந்தாக வேண்டுமே’. ‘ஐயோ பாவம் யாரந்த அதிகாரி? அவரை என்ன செய்தாய்?’ ‘ஒன்றுமில்லை. விருந்து முடிந்ததும் அவர் வீட்டுக்குப் போய்விடுவார். கவலைப்படாதே’ என்று இடாகினி சொன்னது. மாலை ஐந்தரை மணி முதல் ஜனாதிபதியின் விருந்தினர்கள் மாளிகைக்கு வரத் தொடங்கினார்கள். பெரிய பெரிய கார்கள் வந்து நின்று சென்றுகொண்டே இருந்தன. ஊழியர்கள் சலாமிட்டு அவர்களை சிவப்புக் கம்பளத்தில் நடத்தி அழைத்துக்கொண்டு போனார்கள். வினய்க்கு அந்தக் காட்சியே பிரமிப்பாக இருந்தது. அவனால் அன்று மாளிகை முழுவதும் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிந்தது. யாரும் எதுவும் கேட்கவில்லை. யாருக்கும் எந்தச் சந்தேகமும் எழவில்லை. அவனை அணுகிப் பேசிய ஒவ்வொருவருக்கும், அவன் சார்பில் இடாகினி பதில் சொல்லிக்கொண்டிருந்தது. அவன் வெறுமனே வாயசைத்தும் புன்னகை செய்தும் சமாளித்தான். உயர்ந்த சுவர்களும் பாறைகளைப் போல உருண்டு திரண்டு தொங்கிக்கொண்டிருந்த மேநாட்டு விளக்கு அலங்காரங்களும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட திரைச் சீலைகளும் மேசை விரிப்புகளும் கம்பளங்களும் கலையழகோடு வடிவமைக்கப்பட்ட பாத்திரங்களும் சீசாக்களும் பார்க்கப் பார்க்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் இருந்தது. உண்மையில் அவன் சாப்பிட ஆசைப்பட்டுத்தான் அங்கு சென்றான். ஆனால் சாப்பிடவே தோன்றவில்லை. விருந்து தொடங்கி, ஜனாதிபதி சிறிதாக ஓர் உரையாற்றியபின் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாகப் பிரமுகர்கள் கூடி நின்று தமக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். ஜனாதிபதியும் அவரது மனைவியும் மரியாதை நிமித்தம் ஒவ்வொருவரையும் அணுகி சில வார்த்தைகள் பேசிவிட்டு அடுத்தவரை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தார்கள். செய்தித்தாள்களில் மட்டுமே பார்த்திருந்த பல முகங்களை வினய் அன்று நேரில் கண்டான். கால் வலிக்குமளவுக்கு அங்கே சுற்றிச் சுற்றி வந்தான். விருந்து இரவு பத்து மணி வரை நீடித்தது. விருந்தினர்கள் ஒவ்வொருவராகக் கலைந்துபோகத் தொடங்கியபோது, வினய்க்கு சாப்பிடலாம் என்று தோன்றியது. இஷ்டப்பட்ட பலகாரங்களை எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொண்டு திருப்தியாக உண்டான். ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள் மிகவும் மரியாதையுடன் அவனை உட்காரச் சொல்லி, அவர்களே எடுத்துவந்து பரிமாறினார்கள். உண்டு முடித்ததும், விருந்தின் ஞாபகார்த்தமாக அனைவருக்கும் ஒரு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. வினய்க்கும் அந்தப் பரிசு கிடைத்தது. அழகான பரிசுப் பொதியாகக் கட்டப்பட்ட ஏதோ ஒன்று. அவனுக்கு அதெல்லாம் முக்கியமாகவே படவில்லை. திரும்பத் திரும்ப ஒன்றைத்தான் அவன் சிந்தித்துக்கொண்டிருந்தான். இந்த மனிதர் இந்த மாளிகைக்குள் நுழைய எத்தனை ஆண்டுக் காலம் அரசியல் ஊறி உழைத்திருப்பார்! வந்திருந்த ஒவ்வொரு விருந்தினருமே அப்படித்தான். அன்றைய விருந்துக்கு இரண்டு மூன்று வெளிநாட்டு அதிபர்களும் வந்திருந்தார்கள். இருபதாண்டுகள், முப்பதாண்டுகள் அரசியலில் போராடி மேலே வந்திருக்கக்கூடியவர்களால் மட்டுமே நுழைய முடியக்கூடிய இடம். எத்தனை சுலபத்தில் என்னால் இந்த விருந்தில் கலந்துகொள்ள முடிந்துவிட்டது! ஒரு கட்டத்தில் அவன், வந்திருந்த விருந்தினர் யாரோ ஒருவரின் கேள்விக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தபோது, ஜனாதிபதி அவன் அருகே வந்துவிட்டார். ‘திவாரி! நீங்கள் வெகுநேரமாக வேலை செய்துகொண்டே இருக்கிறீர்கள். சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று மிகுந்த வாஞ்சையுடன் அவர் சொன்னபோது வினய் புன்னகை செய்து, மரியாதையுடன் அவரது அன்பை ஏற்றான். அந்தத் திவாரி யார் என்றுகூட அவன் கண்டதில்லை. அந்தப் பெயரையே அப்போதுதான் முதல் முதலில் கேள்விப்படுகிறான். ஒரு நிலைக்கண்ணாடி இருக்குமானால், திவாரி எப்படி இருப்பார் என்று எதிரே நின்று பார்த்துக்கொள்ளலாம். மாளிகையில் அவன் சுற்றிவந்த இடங்களில் எங்கும் ஒரு நிலைக்கண்ணாடி தென்படவில்லை. அறைகளுக்குள் இருக்கும். அவனுக்கு அங்கேயெல்லாம் செல்ல விருப்பமில்லை. யாருடைய அந்தரங்கத்துக்கும் இடையூறாக இருந்துவிடக் கூடாது என்று நினைத்தான். அவன் சாப்பிட்டு ஆனதும், கிளம்பலாமா என்று இடாகினி கேட்டது. ‘இரவு இங்கேயே படுத்து உறங்க முடிந்தால் நன்றாக இருக்கும்’ என்று வினய் சொன்னான். சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘உறங்குவதில் சிக்கல் இல்லை. ஆனால், விடிந்ததும் அந்தத் திவாரி இங்கேதான் ஓடி வருவான். அப்போது நீ இங்கே இருக்கக்கூடாதே' என்று இடாகினி சொன்னது. ‘அதுவும் சரிதான். பாவம் அந்த மனிதர். ஒரு நல்ல விருந்தை இழந்துவிட்டார்’. ‘உனக்குத் திருப்திதானே?’ ‘மிகவும்’. ‘எனக்கு அது போதும்’ என்று சொன்னது. சில விநாடிகளில் அவன் புறப்பட வேண்டிய காரை அதுவே ஓட்டிக்கொண்டு வந்து நிறுத்தியது. வினய் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது. கரோல் பாக் வரை ஓடிய கார், யுஎன்ஐ செய்தி நிறுவன வாசலில் சென்று நின்றது. ‘இங்கே ஏன் நிறுத்தினாய்?’ ‘இதுதான் நாம் இறங்க வேண்டிய இடம்’. ‘அப்படியா?’ ‘ஆம். திவாரி தனது காரை இங்கேதான் நிறுத்திவிட்டு உள்ளே போனார். நான் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்’. வினய் சிரித்துக்கொண்டே காரை விட்டு இறங்கினான். இடாகினியை எடுத்து மீண்டும் கட்டை விரலுக்குள் பொருத்தி, துணியை வைத்து இறுக்கிக் கட்டினான். தனது கோட் சூட்களைக் கழட்டி காரிலேயே போட்டுவிட்டு பழைய நான்கு முழம் வேட்டிக்கு மாறினான். காரின் கண்ணாடியில் அவன் முகம் பார்த்தபோது, அவன் வினய்யாகவே இருந்ததைக் கண்டான். திருப்தியாக இருந்தது. போதும் போ என்று நடக்க ஆரம்பித்தான். மறுநாள் செய்தித்தாள்களில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் கார் திருடுபோனது பற்றிய செய்தி சிறிதாக வந்திருந்தது. ஆனால், திருடுபோன கார் திரும்ப வந்து அதே இடத்தில் நின்ற செய்தி அதற்கு அடுத்த நாள் வந்ததா என்று வினய்க்குத் தெரியவில்லை. அவன் அன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு குருக்ஷேத்திரத்துக்குப் போய்விட்டிருந்தான். வினய் எனக்குச் சொன்ன இந்த சம்பவத்தை நான் வினோத்திடம் சொன்னபோது அவன் சட்டென்று கேட்டான், ‘இதில் என்ன சாதித்தாய்?’ ‘உனக்குப் புரியாது வினோத். எனக்கு ஜனாதிபதி மாளிகையின் அமைப்பும் வழிகளும் இப்போது மனப்பாடம். ஆயிரம் மைல்கள் தள்ளி அமர்ந்துகொண்டு என்னால் அங்கே சில காரியங்களைச் செய்ய முடியும்’. ‘இதற்கும் ஆன்மிகத்துக்கும் என்ன சம்மந்தம்?’ என்று வினோத் கேட்டபோது நான் சிரித்தேன். ‘பிரச்னையே அதுதான் வினோத். ஆன்மிகம் என்று அவன் நம்பிச் சென்று விழுந்த இடம் இது’ என்று சொன்னேன். ‘இல்லை. இது அதர்வத்தில் ஒரு பகுதியாக வருகிற கலை. என் மனோசக்தியைத் தூர உள்ள பிரபஞ்சப் பொருள்களின் மீது செலுத்தி அவற்றை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர என்னால் முடியும்’. ‘பொருள்களை மட்டும்தானே’. வினய் சிறிது யோசித்தான். ‘ஆம். பொருள்களைத்தான். சிறிது முயற்சி செய்தால் மனிதர்களையும் செய்யலாம்’. ‘என்ன லாபம் அதில்?’ ‘நீ பசி பார்த்திருக்க மாட்டாய் வினோத். அதான் இப்படிக் கேட்கிறாய். நான் மாதக்கணக்கில் பட்டினி கிடந்தவன். இரண்டு இட்லிக்காக ஒரு பெரிய தெருச்சண்டை போட்டிருக்கிறேன். ஒரு சமயம், ஒரு டீக்கடை பாய்லரைத் தூக்கிப்போட்டு உடைத்திருக்கிறேன்’ என்று வினய் சொன்னான். எனக்கு அது மிகவும் பரிதாபமாக இருந்தது. ‘தவறு செய்துவிட்டாய் வினய். ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூச்செண்டை உன்னால் உன்னிடத்துக்கு வரவழைக்க முடியும் என்றால், இரண்டு இட்லிகளை வரவழைத்துத் தின்ன முடியாதா?’ ‘முடியும். ஆனால் அது தவறு. அதை நான் செய்தால் என் சக்திகள் என்னைவிட்டுப் போய்விடும்’. ‘அப்படியா?’ ‘ஆம்’ என்று சொல்லிவிட்டுச் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு, ‘நான் அனைத்தையும் இழந்ததே அப்படி ஒரு தருணத்தில்தான்’ என்று சொன்னான். (தொடரும்) http://www.dinamani.com/junction/yathi/2018/sep/06/124-இரண்டு-இட்லிகள்-2994769.html

இளமை புதுமை பல்சுவை

2 hours 55 minutes ago
தேவதைகளின் உலகம்... விக்டோரியா சீக்ரெட்டின் ரகசியம்! இதன் முக்கிய நோக்கமே, பெண்களின் பிரத்தியேக உடைகளுக்காக ஆண்கள் எந்தவொரு தயக்கமும் இன்றி ஷாப்பிங் செய்ய வேண்டும் என்பதுதான். `ஜீன்ஸ்னா லீவைஸ், டீ-ஷர்ட்டுனா டாமி ஹில்ஃபிகர், ஷூனா நைகீ' இப்படி நாம் அன்றாட உபயோகிக்கும் உடை, இணை ஆபரணங்கள் பிராண்டுகளின் மீதுள்ள 'லவ்' கண்மூடித்தனமானவை. அதிலும் பெண்கள் உள்ளாடை நிறுவனமான, 'விக்டோரியாஸ் சீக்ரெட்டின்' (Victoria's Secret) மீது உலகளவில் இருக்கும் காதல், வேற லெவல். உள்ளாடைகள்தான், ஆனால், உலகளவில் ஏன் இவ்வளவு க்ரேஸ்? அப்படி அதில் என்ன சீக்ரெட், யார் அந்த விக்டோரியா, 'விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோ'வுக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு? பார்ப்போம்... வரலாறு உலகின் மாபெரும் உள்ளாடை நிறுவனமான விக்டோரியாஸ் சீக்ரெட்டை உருவாக்கியவர், அமெரிக்காவைச் சேர்ந்த ராய் ரேமண்ட். தன் மனைவிக்கு உள்ளாடை வாங்கச் சென்றபோது, ராய்க்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே இப்படியொரு நிறுவனத்தை உருவாக்கத் தூண்டியது. மிகவும் சுமாரான நைட்வேர் (Night Wear), பளீரென ஒளிரும் மின் விளக்குகள், வேற்றுகிரகவாசியைப் பார்ப்பதுபோல் அங்கிருக்கும் விற்பனை பெண், ராயை பார்த்த பார்வை அனைத்தும் ரேமண்டுக்கு அசௌகரியமான அனுபவத்தைத் தந்தது. இந்த அனுபவமே, எட்டு வருடங்களுக்குப் பிறகு 'விக்டோரியாஸ் சீக்ரெட்' எனும் மாபெரும் ஸ்டோரை உருவாக்கியது. இதன் முக்கிய நோக்கமே, பெண்களின் பிரத்தியேக உடைகளுக்காக ஆண்கள் எந்தவொரு தயக்கமும் இன்றி ஷாப்பிங் செய்ய வேண்டும் என்பதுதான். உள்ளாடை அணிபவர்கள் எதுபோன்ற டிசைன்களை விரும்புகிறார்கள், விலை பட்டியல் எப்படியிருக்கலாம் என்ற அடிப்படைத் தகவல்களைச் சேகரித்து, தன் மனைவியோடு இணைந்து 1977-ம் ஆண்டு, முதல் விக்டோரியா சீக்ரெட் ஸ்டோரை திறந்தனர். யாரு அந்த விக்டோரியா? வரலாற்றிலேயே கவுன், எம்ப்ராய்டரி ஆடைகள் என விதவிதமான உடைகளை முதல்முதலில் உடுத்தி 'ஆடை புரட்சி' செய்தது, 'விக்டோரியன் சகாப்தம் (Victorian Era)'. 'அவர்களின் ரகசியத்தை வெளிக்காட்டும் விதமாக இருக்கும்!' என்று எண்ணியே அவரின் பெயரை வைத்துள்ளனர், இல்லை இல்லை பயன்படுத்திக்கொண்டனர் ராய் மற்றும் அவரின் மனைவி கேயி. அதற்கேற்ப, அவர்களின் ஸ்டோரையும் Dark Wood தரை, ஓரியன்டல் விரிப்புகள், வெல்வெட் திரைச்சீலைகள் போன்ற விக்டோரியன் சகாப்த தனியறை செட்-அப்களுடன் வடிவமைத்தனர். என்ன ஒரு வில்லத்தனம்! சீக்ரெட் மற்ற பிறாண்டுகளைப்போல் இல்லாமல், இவர்களின் உள்ளாடைகளைத் தரமான பட்டு மற்றும் இயற்கை ஃபைபர்களை கொண்டு தயாரிக்கிறார்கள். இதுவே, இவர்களின் தனித்தன்மைக்கு காரணம். பிறகு, விதவிதமான நிறங்களில், வெவ்வேறு வடிவங்களில் உள்ளாடைகளைத் தயாரிக்கத் தொடங்கினர். இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும், அனைவராலும் வாங்க முடியாத நிலை உருவானது. அவ்வளவு காஸ்ட்லி! மார்க்கெட்டின் உச்சியில் இருந்த நிறுவனம் மெள்ள மெள்ள சரியவும் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பெரும் கடனிலும் மூழ்கிப்போனது. ஆனால், மனந்தளராத இவர்களின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை மறுபடியும் தேடிக்கொடுத்தது. ஸ்ட்ராப்லெஸ், ஆஃப் ஷோல்டர் போன்ற வடிவங்களோடு மீண்டும் ஃபேஷன் உலகில் கால்பதித்தனர். அன்றுவரை 'ஆடம்பர பிராண்டு' என்றிருந்த விக்டோரியா சீக்ரெட், விலைகளில் மாற்றம் செய்யப்பட்டு சாமான்ய மக்கள் வரை சென்றடைந்தது. இளைஞர்களைக்கூட அதிகமாகவே கவர்ந்தது. இவர்களின் மற்றுமொரு சீக்ரெட், விளம்பரங்கள். பெரும்பாலான விளம்பரங்கள், ஆண்களைக் கவரும் விதமாக இருக்கும். கடைகளில் விற்பனையாளர்களின் கனிவான கவனிப்பு திரும்பத்திரும்ப மக்களை வரச்செய்தது. இப்படி உள்ளாடைகள் வரலாற்றில் புரட்சி செய்தவர்கள் இவர்கள் மட்டுமே! ஃபேஷன் ஷோவும் தேவதைகளும் ராயின் பிசினஸ் பார்ட்னரான வெக்ஸ்னர், விக்டோரியா சீக்ரெட்டுக்கென அடையாள முகத்தை உருவாக்க நினைத்தார். அதற்காகக் கற்பனை கதை ஒன்றைத் தயார்செய்து, அதற்கான 'தேவதை' அதாவது மாடல் முகத்தை மக்களிடம் பதிய செய்தார். இதுவே நாளடைவில் மாபெரும் ஃபேஷன் ரன்வேவாக மாறியது. சுமார் இருபது மில்லியன் மக்கள் பார்க்கும் ஒரே ஃபேஷன் ஷோ இதுதான். இதற்கான மேடை, ஒளி விளக்குகள், மாதிரிகளை தேர்ந்தெடுப்பது முதல் ஃபேன்டஸி (Fantasy) உள்ளாடைகள் வடிவமைப்பது வரை, இவர்கள் எடுத்துக்கொள்ளும் காலநேரம், ஒரு முழு ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் வைரம் முதலிய ரத்தினக் கற்கள் பதித்த, 10 முதல் 15 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உள்ளாடையை இந்த ஃபேஷன் ஷோவில், தேர்ந்தெடுக்கப்பட்ட 'தேவதை' அணிந்து வருவது வழக்கம். இதுவே இந்நிகழ்ச்சியின் ஹைலைட். இதற்காக மாடல்களுள் பெரிய போட்டியே வரும். இந்த விக்டோரியா சீக்ரெட் ரன்வேயில் அதிகமுறை பூனைநடையிட்ட தேவதை, பிரேசிலைச் சேர்ந்த அட்ரியானா லீமா. சின்ன நோக்கத்தில் மிகவும் சிறியதாய் தொடங்கிய இந்த ஸ்டோர், தற்போது உலகளவில் சுமார் 1,000 கடைகளைக் கொண்டிருக்கின்றன. அதுவும் எல்லாம் டாப் க்ளாஸ்! இதன் ஸ்டிச்சிங் யூனிட் இந்தியாவிலும் உள்ளது! https://www.vikatan.com

இன்றைய நாணய மாற்று விகிதம்

2 hours 57 minutes ago
இன்றைய நாணய மாற்று விகிதம் - 21.09.2018 இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 170.6569 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (21.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு. நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா) அவுஸ்திரேலிய டொலர் 120.3759 125.6037 கனடா டொலர் 128.4628 133.3833 சீன யுவான் 24.0545 25.2339 யூரோ 195.2570 202.3326 ஜப்பான் யென் 1.4717 1.5279 சிங்கப்பூர் டொலர் 121.6538 125.9491 ஸ்ரேலிங் பவுண் 220.2872 227.6673 சுவிஸ் பிராங்க் 172.7609 179.5014 அமெரிக்க டொலர் 166.7839 170.6569 வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்) நாடு நாணயம் மதிப்பு (ரூபா) பஹ்ரைன் தினார் 445.6481 குவைத் தினார் 555.3295 ஓமான் ரியால் 436.4400 கத்தார் ரியால் 46.1498 சவூதி அரேபியா ரியால் 44.8031 ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 45.7459 நாடு நாணயம் மதிப்பு (ரூபா) இந்தியா ரூபாய் 2.3333 இன்றைய நாணய மாற்று விகிதம் - 21.09.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA நாடு நாணயம் மதிப்பு (ரூபா) பஹ்ரைன் தினார் 439.2855 குவைத் தினார் 546.7686 ஓமான் ரியால் 430.1699 கத்தார் ரியால் 45.4816 சவூதி அரேபியா ரியால் 44.1634 ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 45.0928 நாடு நாணயம் மதிப்பு (ரூபா) இந்தியா ரூபாய் 2.2780 http://www.thinakaran.lk/2018/09/21/பொருளாதாரம்/27147/இன்றைய-நாணய-மாற்று-விகிதம்-21092018