கறுப்பு ஜூலை

ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு நிகழ்வாகும்.

Aggregator

செந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை

3 weeks 1 day hence

செந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை

 

படுகாயமடைந்த பல மாணவிகள் தமது அவயங்களை இழந்துள்ளனர் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்துள்ளனர்

குருதியில் தோய்ந்து கண்ணீரால் கழுவப்படும் தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14' ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது... அழுது... ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.

 

 

முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை' சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

 

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர் அலறியடித்தவாறு செஞ்சோலை வளாகத்துக்கு ஓடிவந்தனர். கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளையும் உள்ளாளா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்ட தமது பிள்ளை தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் அங்கிருந்த அனைவரையும் அழவைத்தது. "பத்து நாளும் என்னால விட்டிட்டு இருக்க ஏலாதுண்டு முதலில் மாட்டேன் என்டுதான் சொன்னன். ஆனால், நல்ல விஷயம் எண்டு எல்லாரும் சொன்னதால தான் விட்டனான். கடைசியில இப்படியாப்போச்சு" என தலையில் அடித்து கதறிய தாயாரொருவர் தன் மகளைத் தூக்கி வா வீட்ட போவோம் என கேட்டதும் அனைவரும் கதறியழுதனர். செஞ்சோலை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை தறிகெட்ட சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. செஞ்சோலை வளாகம் புலிகளின் பயிற்சி முகாமெனவும் அங்கு சிறுவயது போராளிகளே இருந்ததாகவும் கூறி 2004 ஆம் ஆண்டு தமது விமானமொன்று எடுத்த படமொன்றையும் காட்டியுள்ளன காட்டுமிராண்டிப் படைகள். இதைவிட ஒருபடி மேலே சென்ற பேரினவாத அரசின் அமைச்சரும் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பேசவல்லவருமான கெஹகிலிய ரம்புக்வெல,"கொல்லப்பட்டது சிறுவயது போராளிகள். அரசுக்கெதிராக செயற்படும் எவராயினும் அதாவது வயது, பால் வேறுபாடின்றி கொல்வோம்" என தமது அரசும் இனவெறிபிடித்தே அலைகின்றது என்பதனை பறைசாற்றினார்.

 

 

ஆனால், சம்பவ இடத்திற்கும் வைத்தியசாலைகளும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் `யுனிசெப்'பும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மாணவிகள் என்பதனை வெளிப்படுத்தியது. எனினும், தனது பொய்ப் பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்த ஜனாதிபதி இந்த பொய்யையே மீண்டும் கூறியுள்ளார். இதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு பழிக்குப் பழிவாங்கிவிடுவார்களென்ற அச்சத்தில் தெற்கிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அங்கே வல்லிபுனத்தில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மாணவிகள் தான் என்பதனை அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வார்கள்.

 

 

பத்துநாள் பயிற்சிப்பட்டறை

 

 

உண்மையில் கொல்லப்பட்டவர்கள் யார்? ஏன் அங்கு கூடியிருந்தார்கள்? காலை 7 மணிக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வல்லிபுனம் மக்கள் குடியிருப்புகள் நெருக்கமாகவுள்ள பகுதி. குடாநாட்டிலிருந்து 1995 இல் இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்றவர்களுக்கு இதை நன்கு உணர்ந்து கொள்ளமுடியும். அங்கு தான் `செஞ்சோலை' வளாகமும் உள்ளது. செஞ்சோலை என்றதும் தாயகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த வளாகத்திலுள்ள அருகில் பல நலன்புரி நிலையங்கள், வேறு பல சிறுவர் இல்லங்கள் என பலவுள்ளன. மனிதநேய நடவடிக்கைகள் நிறைந்த ஒரு பகுதியே வல்லிபுனம்.

 

 

இந்த செஞ்சோலை வளாகத்தில் தற்போது செஞ்சோலை சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்தவர்களில்லை. இந்த வருடம் ஜனவரியில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய வளாகத்துக்கு சிறுமியர்கள் சென்றுவிட்டனர். ஆனால், வள்ளிபுனம் - செஞ்சோலை வளாகம் தொடர்ந்தும் செஞ்சோலை வளாகமாகவே உள்ளது. இங்கு வதிவிட பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்படுவது வழமையானதொன்று. காரணம் ஏற்கனவே சிறுமியர் இல்லமாக இது செயற்பட்டமையால் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இவ்வளாகம் இருப்பதே. அத்துடன், இந்த வளாகம் ஐ.நா. அமைப்புகளூடாக பயிற்சிப் பட்டறைக்கான இடமென இலங்கை அரசாங்கத்தாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால் இங்க பல பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றுவந்தன. அதேபோன்றதொரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இலங்கை அரசின் விமானப் படை கோரத்தாண்டவமாடி தமிழரை துன்பத்தில் வாடவிட்டுள்ளது.

 

 

கடந்த 11 ஆம் திகதி முதல் இச்செஞ்சோலை வளாகத்தில் க.பொ.த. உயர்தர மாணவிகளுக்கான 10 நாள் வதிவிட பயிற்சி நெறி நடைபெற்றுவந்தது. இந்தப் பயிற்சி நெறியின் 3 ஆம் நாளின் போதே இப்பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சமூக தலைமைத்துவ திறன்கள், முதலுதவி, பால் சமத்துவம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், வினைத்திறனுடனான நேர முகாமை மற்றும் குழு வேலை போன்றவற்றில் மாணவிகளுக்கு பயிற்சியளிப்பதனை நோக்கமாகக் கொண்டே இப்பயிற்சிப் பட்டறை நடைபெற்று வந்தது. இதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 க.பொ.த. உயர்தர மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது.

 

 

செய்தி கேட்டுக்கொண்டிருந்த மாணவிகளே அதிகளவில் கொல்லப்பட்டனர்.

 

 

"காலை 7 மணியளவில் மாணவிகள் ஒன்றுகூடலுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் தற்போதைய யுத்த சூழ்நிலை குறித்து அறிய வானொலியில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதன்போதே விமானங்கள் வட்டமிட்டு 16 குண்டுகளை அடுத்தடுத்து வீசின. செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களே நேரடியாக தாக்குதலுக்கு இலக்காகினர். இதில் அதிகளவானோர் கொல்லப்பட்டதுடன் பலருக்கு பின்புறத்தில் மோசமான காயங்கள் ஏற்பட்டன. வேறு வேலைகளிலிருந்த மாணவிகள் அருகேயிருந்த காட்டுப் பகுதிகளுக்குள் ஓடிவிட்டனர்" என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்திருக்கும் இடைக்கால அறிக்கை கூறுகின்றது. தீயிலிருந்தும் மின்னிலிருந்தும் எவ்வாறு தப்புவது, அதேபோல இரசாயன பதார்த்தங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாயிருப்பது, விமான தாக்குதல்களிலிருந்து எவ்வாறு தப்புவது, நாடகங்கள், இசை, நகைச்சுவை மூலமான தனிநபர் வெளிப்பாடுகள் போன்ற பயிற்சிகள் ஆசிரியர்களாலும் துறைசார் நிபுணர்களாலும் கற்பிக்கப்பட்டதாக அவ்அறிக்கை தெரிவிக்கின்றது.

 

 

இதேவேளை, இந்தப் பயிற்சிப்பட்டறை குறித்து தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளர் இளங்குமரன் கூறுகையில்;

 

 

"இதுவொரு வருடாந்த பயிற்சிப்பட்டறை. கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் நிதியுதவியையும் ஆதரவையும் வழங்கியிருந்தது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகளும் வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர்.

 

 

சிங்கள அரசு தமிழ்ச் சமூகத்தின் கல்வி உரிமையை மறுத்துள்ளது. வரலாற்றில் சிங்கள தீவிர வாதிகள் எப்போதும் தாக்கியே வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

 

 

தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. அரசின் முப்படைகளினதும் வெறியாட்டத்தால் அப்பாவித் தமிழர்கள் பட்டபாடு வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது. ஏனெனில் அந்த வலியை பதிவுசெய்யும் ஆற்றல் இந்த வார்த்தைகளுக்கு இல்லை.

 

 

இரு தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் போரில் பேரினவாத அரச படைகள் பாவித்த மிகப் பயங்கரமான விமானங்கள் பல. அவை விடுதலைப் புலிகளை தாக்கியதை விட பொதுமக்களையே பலிகொண்டன. இன்று தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறி புலத்திலுள்ளவர்களானாலும் சரி வட, கிழக்குக்கு வெளியே இருக்கும் வளர்ந்தவர்களானாலும் சரி விமானத் தாக்குதல்களில் அனுபவப்பட்டவர்களாக இருப்பார்கள். அன்று ஹெலி, சீ.பிளேன், சியாமாச் செட்டி, அன்ரனோவ், சகடை (பட்டப்பெயர்), புக்காரா என தொடங்கி தமிழரின் உயிர்குடித்த விமானங்கள் தாயகத்தின் வானில் தலைகாட்ட முடியாத நிலையில் `மிக்' என்றும் `கிபிர்' என்றும் `சுப்பசொனிக்' என்றும் அப்பாவி தமிழரின் உயிர்குடிக்க அனுப்பப்படுகின்றன. இலங்கை விமானப் படைகள் தமிழர் தாயகத்தின் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் ஏராளம். இதில் பள்ளி மாணவர்கள், பச்சிளம் குழந்தைகளை வகைதொகையின்றி பலியெடுத்த வரலாறு மிகக் கொடியது.

 

 

நாகர்கோவில் மத்திய பாடசாலை சிறார்களின் படுகொலை

 

 

அன்று 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி சின்னஞ்சிறுசுகளின் கலகலப்பான பேச்சுக்களுடன் நாகர் கோவில் மத்திய பாடசாலை பூஞ்சோலையாக காணப்பட்டது. பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணி... ஆக்கிரமிப்பு படைகளின் `புக்காரா' விமானங்கள் குண்டுகளை மாறி மாறி கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத பிஞ்சுகள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்த கொலை வெறிபிடித்தவர்களின் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது 40 அப்பாவிகள் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர்.

 

 

இது பாடசாலை மாணவர்கள் படையினரால் கூண்டோடு அழிக்கப்பட்ட மற்றுமொரு சம்பவம். இதைவிட மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் ,வயோதிபர்களென எதுவித வேறுபாடுகளுமின்றி கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம். `குமுதினி' படகில் (நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்குமிடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள படகு) பயணித்த பலரை 1984 ஆம் ஆண்டு கடற்படை வெட்டியும் குத்தியும் கொன்றது. இதில் 6 மாத பச்சிளம் பாலகன் துப்பாக்கியிலுள்ள கத்தியால் கடற்படையினரால் குத்திக் கொலை செய்யப்பட்டான். மூன்று முறை அந்த பிஞ்சு நெஞ்சில் குத்தி கொன்ற கடற்படை இன்றும் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை அரசின் முப்படைகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் இழந்த உயிர்கள், உடைமைகள் ஏராளம். ஆனால் தமது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பொய்யான,வொப்பான விளக்கங்களை பேரினவாதிகள் மாத்திரமன்றி சிங்களத்துவ ஊடகங்களும் கூறிவருகின்றன.

 

 

இதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளதை பதிலாக முன்வைக்கலாம். "இனவெறி - இதயமற்றோர் நடத்திய முல்லைத்தீவு படுகொலைக்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம் கொடுமையானது". இலங்கையில் நடைபெறும் அராஜகங்களுக்கு இந்த பழமொழியும் நன்றாக பொருந்தும் - "பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்பதே அது.

 

 

-தினக்குரல்

 

 

வீரமுனை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை

2 weeks 5 days hence

1990 ஆகஸ்ட் 12 -  கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 26 ஆம் ஆண்டு  நினைவு நாள் இன்றாகும்.

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.

இக்காலகட்டத்தில், ஆகத்து 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த (சிறிலங்கா இராணுவப்படை மற்றும் )  ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர்.

 இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

 அதிகமானோர் படுகாயமுற்றனர். 

அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இதுவரையில் இல்லை.

 இந்த படுகொலை குறித்து எந்த விசாரணையும் கூட இதுவரையில் இல்லை. நடந்தது இனப்படுகொலை என அறிந்தும் உலகம் இது பற்றி பேசவில்லை. மனிதம் உள்ள மனிதர்களே நீங்களும் மறந்து போவீர்களோ?

 

வல்வை படுகொலையின் நினைவு

1 week 3 days hence

வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்த அட்டுழியங்கள்!!!

1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.

ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை. வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.

63 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடு இன்றி.

100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.

123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.

45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.

வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது, பல ஆயிரக்கணக்கான நூல்கள். தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி, நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.

176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.

எங்கும் சடலங்கள், அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள், காயமடைந்த, கொல்லப்பட்ட உறவினர்களின் அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் ரண வடுவாக அச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர்.

வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?

முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச்செய்தி வந்தது.

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய

பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை.

வல்வெட்டித்துறை மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய இராணுவம் புரிந்த கொலைகள், கொள்ளைகள், பாலியல் கொடுமைகள், சித்திரவதைகள், வீடழிப்பு, சொத்தழிப்பு போன்றவற்றை சந்தித்தே இருக்கின்றனர். உண்மை சிலருக்கு சுடலாம் ஆனால் இவை என்றும் மறைந்துவிடாது மக்களின் மனங்களில் இருந்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்தும்.! இது பற்றி வல்வை படுகொலை எனும் நூல் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்து அவனபடுத்தப்பட்டது குறிபிடக்தக்கது.

இது பற்றி இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கனடாவிலிருந்து சேது மாதவன் அவர்கள் தனது சமுக வலைத்தளத்தில் 26 வருடங்களின் பின் இன்று இவ்வாறு எழுதியுள்ளார்.

வல்வை படுகொலைகள் நடந்து வருடங்கள் 26 ஓடிவிட்டன. அந்த பயங்கர நாட்களின் பல நிகழ்வுகள் இப்பொழுதும் என்நெஞ்சில் நிற்கின்றன. கலாதேவன், பாபு ஆட்கள் வீட்டில் நின்றபோது தாக்குதல் நடக்கப் போவதாகவும் உடனே வீட்டை விட்டு ஒடுமாறும் கூறிய அவர்கள் எதிர்வீட்டுத் தம்பி தரா ( இப்பொழுது மருத்துவர் சிவபாலன் ) . அந்த அவசர கணத்தில் கலாதேவன் அண்ணா வீட்டார் வீட்டை விட்டு வெளிக்கிடும் முன்னே ஆரம்பித்த யுத்தம். பயத்தில் அவர்களுக்கு உதவாது விட்டுவிட்டு ஓடிய என் கோழைத்தனம். அன்று மினி சினிமா செல்லவிருந்து கடைசி நேரத்தில் மனதை மாத்தி அதற்குப் போகாத நானும் கித்துளும். ஓடு ஓடு என்று ஓடி இன்பருட்டி கிராமத்தில் ஓடும் வழியில் சந்தித்த நண்பர்களுடன் தங்கியது. வழியில் திக்கத்தில் கண்ட புலிகளின் தாக்குதல் அணியினர். கூட ஓடிவந்த நண்பனை துப்பாக்கிக் காயத்துடன் வைத்திய சாலையில் விட்டுவிட்டு ஓடிவந்து வழியில் எங்களுடன் இணைந்த நவநீதன். வேறு வழியில் ஓடி வல்வெட்டியில் புகலிடம் அடைந்திருந்த வேளையில் மட்டுமட்டாக உயிர் தப்பிய என் குடும்பத்தினர்.சந்தியில் இந்தியன் Army விட்டுவிட்டுப்போன உடல்களில் தனது கணவனினது உடலும் இருக்குமோ எனத் தேடிய சிதம்பரநாதன் teacher. அவருடன் சேர்ந்து ஒவ்வொரு உடலாக செக் பண்ணிய என் அம்மா. இவ்வாறு பல சம்பவங்கள் மனதில் நிற்கின்றன.

எல்லாம் முடிந்த பின்னால் பார்த்த பொழுது எம் நண்பர்கள் உறவினர்கள் பலர் எம்மை விட்டுப் போய்விட்டதை அறிந்து கொண்டோம். மதி, செல்வானந்த வேல், ரவி அண்ணா, சங்கர் அண்ணா, புஸ்பா அண்ணாவின் அம்மா, அவரது சகோதரன், ராதன் அண்ணாவின் அப்பா அவரது அண்ணா என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. மயிரிழையில் உயிர் தப்பிய பலரது கதைகளும் ஒவ்வொன்றாக எம்மை வந்தடைந்தன. அதை நினைக்கும் பொழுது 26 வருடங்களின் பின்பும் என் உடல் மெல்ல நடுங்குகிறது.

இதன் மூலம் அந்த ஆபத்தான தருணங்களில் எமக்கு அதரவு அளித்து எம்மைப் பாது காத்த வல்வெட்டி, கம்பர்மலை, இமையாணன், திக்கம், பொலிகண்டி, இன்பருட்டி, தொண்டைமானாறு , உடுப்பிட்டி, மயிலியதனை, காட்டுப்புலம், நெல்லியடி, கரணவாய், வதிரி, மந்திகை, பருத்தித்துறை, சக்கோட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த அன்புள்ளம் மிக்க மக்களுக்கு வல்வெட்டித்துறை மக்கள் சார்பாக நன்றி கூறுகிறேன்.

அன்று உயிர் நீத்த எம்மக்கள் அனைவருக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.

அன்றைய தினத்தில் உயிர் நீத்த இந்திய இராணுவ வீரர்களுக்காக அவர்களது உறவுகளும் இன்றும் அழுது கொண்டிருப்பார்கள் எனும் யதார்த்தம் நெஞ்சை நெருடுகிறது. யுத்தம் ஏற்படுத்தும் வடுக்கள் எப்பொழுதும் ஆழமானவை.

 

காரசாரமான மீன் ஊறுகாய் செய்வது எப்படி?

1 hour 16 minutes ago
Nathamuni சும்மா இருந்த என்னை மாட்டி விட்டிட்டீங்களே. உங்கள் பெயரில் ra சேர்த்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் சொன்ன பொடி மெனிக்காவின்ரை மீன் ஊறுகாயை செய்து வீட்டுக்காரியை அசத்தலாம் என்று செய்து கொடுத்துட்டு பவ்வியமா நின்றால், “அச்சாறு பரவாயில்லை” என்கிறாள். இப்பொழுது எனக்கு தெரியவேண்டியது, சிங்களத்தில் அச்சாறு என்பது ஊறுகாயைத்தானா என்பது

நடு வழியில் நின்ற ரயில்... இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. முதுகை படிக்கட்டாக்கி உதவிய போலீஸ்..!

1 hour 40 minutes ago
நடு வழியில் நின்ற ரயில்... இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. முதுகை படிக்கட்டாக்கி உதவிய போலீஸ்! சென்னை: சில நேரங்களில் தமிழக போலீசார் செய்யும் செயல்கள் நம்மை திக்குமுக்காட செய்துவிடகிறது. திடீரென்று உணர்ச்சிப் பிழம்பான காரியங்களை செய்துவிட்டு, "காவல்துறை உங்கள் நண்பனேதான்" என்பதை அடிக்கடி நமக்கு பறைசாற்றி வருகின்றனர். அதற்கு ஒரு உதாரணம்தான் இது. நேற்று தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று சிக்னல் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அதனால், அந்த ரயிலானது, கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களின் இடையே நின்றுவிட்டது. பாதி வழியில் ரயில் நின்றுவிட்டதால், பெரும்பாலான பயணிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனால் ரயிலிலிருந்து இறங்கி நடந்து சென்றுவிடலாம் என்று ஒவ்வொருவராக இறங்க தொடங்கினர். அப்போது அமுதா என்ற கர்ப்பிணி பெண்ணும் கீழே இறங்க முயற்சித்தார். நடைமேடை இல்லை என்பதாலும், படிக்கட்டுகள் உயரமாக இருந்ததாலும் அமுதாவால் இறங்க முடியவில்லை. வெகுநேரம் எப்படி ரயிலை விட்டு இறங்குவது என தெரியாமல் தவித்தார். இப்படியே 2 மணி நேரம் ஆகிவிட்டது. அமுதாவால் கடைசிவரை கீழே இறங்கவே முடியவில்லை. அப்போது போலீசார் இரண்டு பேர் அங்கு வந்தனர். அமுதா கீழே இறங்க முடியாமல் தடுமாறி கொண்டிருப்பதை கண்ட அவர்கள், திடீரென ரயிலின் நுழைவு வாயிலில் படிக்கட்டு போல குனிந்து நின்றனர். இப்போது அமுதாவை தங்கள் மீது கால்வைத்து கீழே இறங்குமாறு சொன்னார்கள். அமுதாவும் ஒரு சிறு தயக்கத்திற்கு பின்னர், தன் கால்களை போலீசார் இருவரின் முதுகுகளின் மீது வைத்து கீழே இறங்கினார். இதேபோல அங்கு கீழே இறங்க முடியாமல் தவித்த வயதானவர்களுக்கும் இதேபோல படிக்கட்டு போல குனிந்து நின்றனர் இரு போலீசாரும். போலீசாரின் இந்த மனிதநேய மிக்க செயலை அங்குள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே பாராட்டி வருகிறார்கள். புல்லரிக்க வைத்த அந்த இரண்டு போலீசாருக்கும் பெரிய சல்யூட் ஒன்று நாம் அடித்தே ஆக வேண்டும்..! தற்ஸ் தமிழ் My sincere salute to these two policeman..!

இளமை புதுமை பல்சுவை

2 hours 20 minutes ago
உலகத்தை முதன்முதலில் சுற்றி வந்த முதல் மனிதர் வைலி போஸ்ட் (22-7-1933) அ-அ+ வைலி போஸ்ட் என்ற மனிதர் 1933-ம் ஆண்டு ஜுலை 22-ந்தேதி உலகத்தை 7 நாட்களில் 18 மணி 45 நிமிடங்களில் 15596 கிலோ மீட்டர் சுற்றி சாதனைப் படைத்தார். உலகத்தை முதன்முதலில் தனியே சுற்றியவரும் இவர்தான். இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள்:- * 1812 - வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர். வைலி போஸ்ட் என்ற மனிதர் 1933-ம் ஆண்டு ஜுலை 22-ந்தேதி உலகத்தை 7 நாட்களில் 18 மணி 45 நிமிடங்களில் 15596 கிலோ மீட்டர் சுற்றி சாதனைப் படைத்தார். உலகத்தை முதன்முதலில் தனியே சுற்றியவரும் இவர்தான். இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள்:- * 1812 - வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர். * 1823 - யாழ்ப்பாணத்தில் டாக்டர் டானியல் வோரன் புவர் தலைமையில் அமெரிக்க மிஷனின் பட்டிக்கோட்டா செமினறி திறக்கப்பட்டது. * 1916 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். நாசாவின் 'மரைனர்-I' விண்கலம் வெடித்து சிதறியது : 22-7-1962 அ-அ+ அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வுக்கழகம் 1962-ம் ஆண்டு ஜுலை மாதல் 22-ந்தேதி மரைனர்-I என்ற விண்கலத்தை ஏவியது. ஆனால் ஏசிய 5 நிமிடத்தில் வெடித்து சிதறியது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வுக்கழகம் 1962-ம் ஆண்டு ஜுலை மாதல் 22-ந்தேதி மரைனர்-I என்ற விண்கலத்தை ஏவியது. ஆனால் ஏசிய 5 நிமிடத்தில் வெடித்து சிதறியது. இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள்:- * 1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது. * 1999 - விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது. * 2003 - ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான். * 2009 - 21-ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது. https://www.maalaimalar.com

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!

2 hours 29 minutes ago
87. சேரிடம் அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. சற்று திடுக்கிட்டாற்போலத் தான் தெரிந்தது. அதனால் என்ன? எனக்குள் ஒரு பாறையை உடைத்துவிட்டாற்போலத் தோன்றியது. மகிழ்ச்சியாக இருந்தது. ஐந்து ரூபாய் எதற்கு? டீ வேண்டுமானால் குடித்துக்கொள் என்று அவன் சொன்னான். ‘இல்லை. நான் கழிப்பிடம் செல்ல வேண்டும். குளிக்க வேண்டும். அதன் பிறகுதான் உணவைப் பற்றியோ பானத்தைப் பற்றியோ நினைக்க முடியும்’ என்று சொன்னேன். ‘வெளியூரா?’ ‘ஆம். தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன்’. ‘பையை - பணத்தைத் தவறவிட்டுவிட்டாயா?’ ‘அப்படி எதுவும் இல்லை. நான் பணமில்லாமல்தான் கிளம்பி வந்தேன். அல்லது இருந்த பணம் தீர்ந்துவிட்டது’. ‘இங்கே யாரைத் தேடி வந்தாய்?’ ‘தெரியவில்லை’ என்று சொன்னேன். அதற்குமேல் அவன் என்னுடன் பேசவில்லை. கடையின் உட்பக்கம் கை காட்டி, உள்ளே இருக்கும் கழிப்பறை, குளியலறையை உபயோகித்துக்கொள்ளச் சொன்னான். அவனுடைய வேட்டி சட்டை ஒன்றை எனக்குத் தந்தான். நான் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு உள்ளே போனேன். இருபது நிமிடங்களில் புத்துணர்ச்சி பெற்று வெளியே வந்தேன். அவன் எனக்கு ஒரு டீ போட்டுக் கொடுத்தான். அதைக் குடித்தேன். பன் வேண்டுமா என்று கேட்டான். ஏனோ சட்டென்று வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். உண்மையில் எனக்கு மிகுந்த பசி இருந்தது. எதையாவது உண்ண வேண்டும் போலத்தான் உணர்ந்தேன். ஆனாலும் என்னை மீறி வேண்டாம் என்று வாயில் வந்துவிட்டது. சிறிது வருத்தப்பட்டேன். ‘பரீட்சையில் பெயில் ஆகிவிட்டாயா?’ என்று அவன் என்னைக் கேட்டான். ‘இல்லை’. ‘வீட்டில் கோபித்துக்கொண்டு ஓடி வந்துவிட்டாயா?’ ‘நிச்சயமாக இல்லை. என் வீட்டில் யாரையும் என்னால் கோபித்துக்கொள்ளவே முடியாது’. ‘அப்புறம் என்ன? காதல் பிரச்னையா?’ நான் அதுவும் இல்லை என்று சொன்னேன். உண்மையில் ஒருவன் வீட்டை விட்டு ஓடிப் போக நியாயமான ஒரே காரணம் அவனுக்கு வீட்டில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதுதான். இதை எப்படிச் சொல்லி என்னால் புரியவைக்க முடியும்? அந்தக் கடைக்காரனுக்கு என்ன காரணத்தாலோ என்னைப் பிடித்திருக்க வேண்டும். கடைக்கு ஒரு பையன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருக்கலாம். ஒருவேளை நான் பிழைப்புத் தேடி ஓடி வந்திருந்தால் அவனுக்கு மிகவும் வசதியாக இருந்திருக்குமோ? ‘ஐயா, நான் வேலை பார்க்க வரவில்லை. எதற்காக வந்தேன் என்பதையே இனிதான் கண்டுபிடிக்க வேண்டும். என்னை அதிகம் நம்பாதீர்கள்’ என்று மட்டும் சொன்னேன். அதோடு, சரி கிளம்பு என்று சொல்லிவிடுவான் என்று எதிர்பார்த்தேன். நான் முற்றிலும் எதிர்பாராத விதமாக, நான் முன்னர் கேட்ட ஐந்து ரூபாயை அப்போது என் கையில் கொடுத்து, ‘போய் வா’ என்று சொன்னான். ‘இது எதற்கு? நீங்கள்தான் உங்கள் கழிவறையை உபயோகித்துக்கொள்ள அனுமதித்துவிட்டீர்களே’. ‘பரவாயில்லை. வைத்துக்கொள்’ என்று சொன்னான். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. மரியாதையாக அந்தப் பணத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘தேவை இல்லாதபோது பணம் ஒரு சுமை’ என்று சொன்னேன். ‘ஆனால் அடுத்த வேளை உனக்குப் பசிக்குமே?’ ‘அதை அப்போது பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எனக்கு இவ்வளவு செய்ததே அதிகம். உங்களை நான் மறக்கமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு அவனிடம் விடைபெற்றேன். அன்று மாலை இருட்டும் வரை கால் போன திசைகளில் நடந்துகொண்டிருந்துவிட்டு, இருட்டியதும் ஒரு சிறிய கோயிலின் முன் மண்டபத்தில் சென்று படுத்துக்கொண்டேன். அது ஒரு அம்மன் கோயில். இங்கெல்லாம் யாரும் படுக்கக் கூடாது என்று சொல்லி யாராவது விரட்டி விடுவார்களா என்று யோசனையாக இருந்தது. அப்படி யாரும் வரவில்லை. ஆனால் குளிர் பயங்கரமாக இருந்தது. நினைத்து நினைத்து மழை வேறு பெய்துகொண்டே இருந்தது. ஓர் இரவு முழுவதும் இந்தக் குளிரில் எப்படிப் படுத்துக் கிடப்பது என்று கவலையாகிவிட்டது. நெடு நேரம் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். உடலை ஒடுக்கி ஒடுக்கிப் பார்த்தும் குளிர் அதிகரிக்கத்தான் செய்ததே தவிர சற்றும் குறையவில்லை. விரைவில் எனக்கு உடலே ஒரு பெரிய ஐஸ் கட்டி போல் விரைத்துவிடும் என்று தோன்றியது. மூச்சு விடுவதுகூட சிரமமாக இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். படுத்துக்கொண்டும் உட்கார்ந்துகொண்டும் இருப்பதைவிட நடப்பது பலனளிக்கும் என்று தோன்றியது. சட்டென்று எழுந்து நடக்க ஆரம்பித்தேன். கோயிலை விட்டு வெளியே வந்து கால் போன வழியில் போய்க்கொண்டே இருந்தேன். காற்றின் ஈரப்பதம் காதுகள் வழியே அடி வயிறு வரை சென்று தாக்கியது. குளிரில் என் விரல்கள் நடுங்கின. உதடு துடித்தது. ஊரடங்கிய இருளில் நான் ஒருவன் மட்டும் ஒதுங்க இடமின்றித் திரிந்துகொண்டிருந்தேன். ஒரு வகையில் அந்தக் கொடும் தனிமையை நான் ரசித்தேன் என்று நினைக்கிறேன். எனக்கு அது வேண்டியிருந்தது. வெறும் வினாக்களால் நிரம்பிய மூளையை அந்தக் குளிரும் தனிமையும் கொத்திக் கொத்தி குப்பையள்ளிப் போட்டுக்கொண்டிருந்தன. என் கேள்விகள் அனைத்தும் உதிர்ந்துவிட்டால் குளிர் என்னை விட்டுப் போய்விடும் என்று தோன்றியது. குளிரை என் அச்சங்களின் ஸ்தூலமாகக் கண்டேன். இந்த அனுபவம் எனக்கு நிச்சயம் தேவை என்று தோன்றியது. நெடு நேரம் நடந்துகொண்டே இருந்ததில் ஒரு கட்டத்தில் குளிர் எனக்குப் பழகிவிட்டிருந்தது. ஒரு சிறந்த குளிரால் ஒருவனைச் சித்திரவதை செய்ய முடியுமே தவிரக் கொல்ல முடியாது என்று நினைத்தேன். ஒருவேளை கொல்லும் குளிர் வேறாக இருக்கலாம். இது இல்லை. இந்த ஊர்க் குளிர் கொல்லாது என்பது புரிந்துவிட்டது. மகிழ்ச்சியாக இருந்தது. அன்று இரவு முழுதும் நேர்த்திக்கடன் போல மடிகேரியைச் சுற்றிக்கொண்டே இருந்தேன். ஓரிடத்தில்கூட நான் அமரவில்லை. ஓய்வெடுக்க நினைக்கவில்லை. ஒரே இரவில் ஒரு ஊரின் புவியியல் முழுவதையும் கண்டறிந்துகொண்டுவிடும் வேட்கை வந்துவிட்டதா என்ன? அதற்குமுன் மடிகேரி என்ற ஊரின் பெயரைக்கூட நான் கேள்விப்பட்டதில்லை. குடகில் காவிரி பிறக்கிறது என்று எனக்குத் தெரியும். நான் வந்து சேர்ந்த இடம் குடகுதான் என்பதே வந்த பின்புதான் எனக்குத் தெரியும். இடங்களோ, மனிதர்களோ இனி எந்நாளும் எனக்கு முக்கியமாக இராது என்று எண்ணிக்கொண்டேன். எது முக்கியம் என்பதைக் கண்டறிந்துகொள்ள முழு வாழ்நாளும் மிச்சம் இருக்கிறது. பிறகு பார்த்துக்கொள்ளலாம். மறுநாள் அதிகாலை நான் அந்த ஆசிரமத்தின் வாசலைச் சென்றடைந்திருந்தேன். அந்த இடத்துக்குப் பெயரெல்லாம் இல்லை. உள்ளே ஒரு சாது இருக்கிறார்; அவருக்கு நான்கு சீடர்கள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. முதலில் அது ஒரு ஆசிரமம் என்பதேகூட எனக்குத் தெரியாது. இடைவெளிவிட்டு நான்கைந்து குடில்கள் இருந்தன. ஒரே ஒரு சிறிய கட்டடம். சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டு வேலியெங்கும் மலர்க்கொடிகள் படர விட்டிருந்தார்கள். அது ஒரு தொடக்கப்பள்ளிக்கூடமாக இருக்கும் என்றுதான் முதலில் நினைத்தேன். சிறிது நேரம் உள்ளே சென்று ஓய்வெடுக்கலாம் என்று எண்ணி வேலிப் படலைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே போனேன். கதவற்ற குடிசைக்குள் ஓர் இளைஞன் உறங்கிக்கொண்டிருந்தான். அடுத்தக் குடிலுக்குப் போனபோதும் அங்கொரு இளைஞன் உறங்கிக்கொண்டிருக்கக் கண்டேன். அந்தக் குடிலுக்கும் கதவில்லை. அங்கிருந்த நான்கு குடில்களிலும் தலா ஓர் இளைஞன் உறங்கிக்கொண்டிருக்கக் கண்டேன். நான்கு பேருமே சட்டை அணியாதிருந்தார்கள். வேட்டியும் மேல் துண்டும் மட்டுமே அணிந்திருந்தார்கள். மேல் துண்டை கழுத்தைச் சுற்றிப் போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தார்கள். இந்தக் குளிரில் இவர்களுக்கு மட்டும் எப்படி உறக்கம் வருகிறது என்று எனக்கு வியப்பாக இருந்தது. போர்வை, தலையணை, படுக்கை இருந்துவிடுமானால் இதே குளிர் சுகமானதாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை. நான் அங்கிருந்து நகர்ந்து நான்கு குடில்களுக்கும் எதிரே இருந்த அந்தச் சிறிய கட்டடத்தை நெருங்கினேன். அது ஒரு வீடு போலவோ, அரங்கம் போலவோ இல்லை. கோயில், மடம் என்று என்னவாகவும் என்னால் அதை வரையறுக்க இயலவில்லை. மிகச் சிறிய கட்டடம்தான். மிஞ்சினால் பதினைந்தடிக்கு இருபதடி இருக்கும். எந்த அலங்காரமும் இல்லாமல் சுவர்களுக்குச் சுண்ணாம்புகூடப் பூசாமல் வெறும் செங்கல் கட்டடமாக இருந்தது. பாதி கட்டப்பட்ட கட்டடமாக இருக்கும் என்று நினைத்தேன். அல்லது அதற்குமேல் கட்டுவதற்குப் பண வசதி இல்லாதிருந்திருக்கலாம். பார்க்கப் புதிய கட்டடமாகவும் தெரியவில்லை. நான் அந்தக் கட்டடத்தைச் சுற்றிக்கொண்டு முன் பக்கம் வந்தேன். ஒரு கதவு இருந்தது. ஆனால் லேசாக மூடப்பட்டிருந்ததே தவிர, மூடித் தாழிடப்பட்டிருக்கவில்லை. கதவுகளை நம்பாமல் வாழும் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் என்னை வசீகரித்தார்கள். நான் அந்தக் கட்டடத்தின் உள்ளே நுழைந்ததுமே ‘யாரது?’ என்றொரு குரல் கேட்டது. இருட்டில் எனக்கு உருவம் சரியாகத் தெரியவில்லை. யாரோ ஒரு நபர் எழுந்து சென்று விளக்கப் போடுவதைப் பார்த்தேன். இப்போது எனக்கு அவரும் அவருக்கு நானும் முழுதாகத் தெரிந்தோம். ‘யார்?’ என்று அவர் கேட்டார். ‘நான் ஒரு வழிப்போக்கன். இந்த இரவு தங்க இடமின்றித் திரிந்துகொண்டிருந்தேன். கதவற்ற இந்த இடத்தில் சிறிது நேரம் இளைப்பாறிச் செல்லலாம் என்று நினைத்தேன்’ என்று சொன்னேன். ‘அப்படியா? சரி உட்கார்’ என்று அவர் சொன்னார். முற்றிலும் நனைந்திருந்த என் தோற்றம் அவரை வருத்தியிருக்க வேண்டும். என்னை அமரச் சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு துண்டும் வேறு வேட்டி ஒன்றும் கொண்டு வந்து கொடுத்தார். நான் நன்றி சொல்லி அதை வாங்கி ஈரத்தைத் துடைத்தேன். ‘தலைமுடியை நன்றாகத் துடை. இல்லாவிட்டால் ஜலதோஷம் பிடிக்கும்’ என்று சொன்னார். நான் அப்படியே செய்தேன். நான் அணிந்திருந்த அந்தக் கடைக்காரனின் வேட்டியைக் கழட்டிவிட்டு அவர் அளித்த புதிய வேட்டியை அணிந்துகொண்டேன். மேல் சட்டையை அவிழ்த்ததும், ‘அடடா. உனக்குத் தர இங்கே மாற்றுச் சட்டை இல்லையே’ என்று அவர் சொன்னார். அவர் காவி நிறத்தில் ஒரு ஜிப்பா அணிந்திருந்தார். ‘எனக்கு அம்மாதிரி ஒரு ஜிப்பா தர முடிந்தால்கூடப் போதும்’ என்று சொன்னேன். ‘சரி இரு’ என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்று ஒரு ஜிப்பாவை எடுத்து வந்து கொடுத்தார். அது எனக்கு மிகவுமே பொருந்தாமல் தொளதொளவென்று இருந்தது. இருந்தாலும் ஈர உடையை அவிழ்த்துவிட்டு, காய்ந்த உடைகளை அணிந்தது சற்று இதமாக இருந்தது. நான் அவருக்கு மீண்டும் நன்றி சொல்லிவிட்டு, ‘நீங்கள் ஏன் தூங்காமல் இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அவர் சிறிது நேரம் என்னை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு சொன்னார், ‘நீ வருவாய் என்றுதான்’. (தொடரும்) http://www.dinamani.com

‘நிழல்கள்’ ரவி இப்போ ‘அனிபிக்ஸ்’ ரவி..! - ’அப்போ-இப்போ’ கதை சொல்கிறார் ‘நிழல்கள்’ ரவி

2 hours 31 minutes ago
``அப்போ நடிகை; இப்போ ஹோட்டல் எம்.டி..!’’ - விசித்ரா :`அப்போ இப்போ’ பகுதி 16 ``சென்னைதான் என்னோட சொந்த ஊர். எங்க அப்பா அரசாங்க வேலையில் இருந்தார். அம்மா ஹவுஸ் வொய்ஃப். எங்க வீட்டுல மூணு பசங்க. எங்க மூணு பேரையும் நல்ல சி.பி.எஸ்.இ ஸ்கூல்ல அப்பா படிக்க வெச்சார்'' என்று உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் நடிகை விசித்ரா. ``என்னோட அம்மா, அப்பா காதல் திருமணம் செஞ்சவங்க. அவங்க ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருந்தப்போ, ஆஃபீஸ் விழாவில் நடந்த கலைநிகழ்ச்சியில ஒண்ணாச் சேர்ந்து நடிச்சாங்க. அப்போதான் ரெண்டு பேருக்கும் இடையில காதல் மலர்ந்து இருக்கு. திருமணம் முடிச்சு சக்சஸ்ஃபுல் தம்பதியா வாழ்ந்தாங்க. அப்பாவுக்கு சினிமா பிடிக்கும். கமல் சாருடைய `மனிதரில் இத்தனை நிறங்களா' படத்துல நடிச்சிருக்கார். இதுதவிர ஆல் இந்தியா ரேடியோவில் வேலைப் பார்த்திருக்கார். அரசாங்க வேலை கிடைச்சதனால கலைத்துறையில் அவரால் தொடர்ந்து நீடிக்க முடியலை. நான் பத்தாவது படிச்சிட்டு இருக்கும் போது என்னோட முதல் சினிமா வாய்ப்பு அமைஞ்சது. ஆனா, நான் நடிச்ச முதல் படம் ரிலீஸ் ஆகலை. ரெண்டாவது படமா எனக்கு அமைஞ்சது `ஜாதி மல்லி'. பாலசந்தர் சார் வாய்ப்புக் கொடுத்தார். அதன்பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சேன். இயக்குநர் பிரதாப் போத்தன் எடுத்த `ஆத்மா' படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுனேன். அந்தப் படம் எனக்கு நல்ல வாய்ப்புகளை அதன்பிறகு ஏற்படுத்திக் கொடுத்துச்சு. டான்ஸ் ஆடுறது எனக்கு ஈஸியான விஷயமாத்தான் இருந்துச்சு. ஏன்னா, சின்ன வயசுலேயே பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். சினிமாவுக்கு வந்ததுக்குப் பிறகு கலா மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டேன். சினிமாவுல இருந்த எல்லா டான்ஸ் மாஸ்டர்ஸ் கூடவும் வொர்க் பண்ணியிருக்கேன். சினிமாவுல நடிச்சிட்டு இருக்கும் போதே, சீரியலிலும் நடிச்சேன். நல்ல கேரக்டர்ஸ் தேடி வர ஆரம்பிச்சது. கமல் சார் தவிர சினிமாவில் எல்லா சீனியர் நடிகர்கள் கூடவும் நடிச்சிட்டேன். `முத்து' படத்துல என் கேரக்டர் எல்லாருக்கும் பிடிச்சிருந்துச்சு. ரதிதேவி என்கிற கேரக்டருல நடிச்சிருந்தேன். இந்த கேரக்டருல நான் நடிச்சா நல்லாயிருக்கும்னு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சார்கிட்ட சொன்னதே ரஜினி சார்தான். அவர் மூலமாகத்தான் இந்தப் படத்தோட வாய்ப்புக் கிடைச்சது. `வீரா' படத்துல அவர்கூட ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுனேன். அதனால அவருக்கு என்னோட நடிப்புத் திறமை தெரியும்ங்குறனால அவருடைய படங்களில் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். இந்த நேரத்தில் ரஜினி சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். ரொம்ப பிஸியா நடிச்சிட்டிருந்த காலத்திலேயே சினிமாவை விட்டு விலகிட்டேன். நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, எல்லாத்தையும் தவிர்த்தேன். அதுக்குக் காரணம் என் திருமணம். 2001 ம் வருஷம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்னோட கணவரை முதன் முதலா கேரளாவில் இருக்கிற ரெஸ்டாரன்ட்ல பார்த்தேன். ஜி.எம்.மா வொர்க் பண்ணுனார். ரெண்டு பேரும் பேசிப் பழகுனோம்; பிடிச்சிருந்துச்சு. பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவர் ஹோட்டல் துறையில் இருந்ததுனால மும்பை, பூனே, பெங்களூருனு ஒவ்வொரு ஊரா வேலை விஷயமா ஷிப்ட் ஆக வேண்டிருந்தது. அதனால, சினிமாவுக்கு குட்பைய் சொல்லிட்டு கணவர்கூட நானும் பயணம் செய்ய ஆரம்பிச்சுட்டேன். எங்களுக்கு மூணு ஆண் குழந்தைகள். பெரிய பையன் பத்தாவது படிக்குறான். அடுத்து ட்வின்ஸ். அவங்க நாலாவது படிக்குறாங்க. பசங்க படிப்பு காரணமா இப்போ மைசூரில் செட்டில் ஆகிட்டோம். பத்தாவது படிக்கும் போதே சினிமாவுக்கு நடிக்க வந்திருந்தாலும் தபால் மூலமா காலேஜ் படிச்சேன். பி.ஏ.சைக்கலாஜி படிச்சேன். திருமணம் முடிந்து பசங்க பிறந்ததுக்குப் பிறகு எம்.எஸ்.சி சைக்கோ தெரபி கவுன்சலிங் படிச்சேன். அதனால ப்ரைவேட்டா கவுன்சலிங் கொடுத்துட்டு இருக்கேன். நிறையப் பெற்றோர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பேன். என் பசங்க படிக்குற ஸ்கூலுக்கும் கவுன்சலிங் கொடுக்க அப்பப்போ போவேன். மன திருப்தியுடன் இதைச் செஞ்சிட்டு இருக்கேன். இதுதவிர மைசூரில் எங்களுக்குச் சொந்தமா ரெண்டு ஸ்டார் ஹோட்டல்ல இருக்கு. அப்புறம், ஜெயா கிச்சன்ஸ்னு ஒரு கம்பெனியும் நடத்திட்டு வரேன். இந்த கம்பெனிக்கு நான்தான் எம்.டி. என்னோட வாழ்க்கை சந்தோஷமா இருக்குறதுக்கு என் கணவர் ஷாஜிதான் காரணம். எனக்குப் பக்க பலமா இருப்பார். அழகான குடும்பம், பிசினஸ்னு செட்டில் ஆயிட்டேன். வாழ்க்கை சந்தோஷமாப் போகுது'' என்று சொல்லிச் சிரிக்கிறார் நடிகை விசித்ரா. https://cinema.vikatan.com/others/cinema-serials/129572-appo-ippo-series-part-16-actress-vichitra.html

யாழில் பெண்கள் மகாநாடு நாளை ஆரம்பம்

2 hours 34 minutes ago
பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை – மைத்­திரி ரணில் யாழ்ப்­பா­ணத்­தில் ஆதங்­கம்!! இலங்­கை­யின் சட்­டத்­தில் பெண்­கள் பாது­காப்­புத் தொடர்­பாக அதி­க­ள­வான நடை­மு­றை­கள் இருந்த போதி­லும் தற்­போது, இடம்­பெ­றும் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வற்கு எந்த நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை என்­பது வருத்­தத்­துக்­கு­ரி­யது. இவ்­வாறு தலைமை அமைச்­ச­ரின் பாரி­யா­ரும், பேரா­சி­ரி­ய­ரு­மான மைத்­திரி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். போரின் பின்­ன­ரான சூழ­லில் பெண்­க­ளின் தலை­மைத்­து­வம் மற்­றும் வலு­வூட்­டல் என்ற தலைப்­பி­லான பன்­னாட்­டுப் பெண்­கள் மாநாடு யாழ்ப்­பா­ணம் பொது­நூ­லக கேட்­போர் கூடத்­தில் நேற்று ஆரம்­ப­மா­னது. யாழ்ப்­பாண மாவட்ட அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளில் இணை­யத்­தின் ஏற்­பாட்­டில் நேற்று ஆரம்­ப­மான இந்த மாநாடு, இன்­றும் நடை­பெ­ற­வுள்­ளது. மாநாட்­டின் மாலை நிகழ்­வில் தலைமை அதி­தி­யா­கக் கலந்து கொண்ட, தலைமை அமைச்­ச­ரின் பாரி­யார் மைத்­திரி ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் தெரி­வித்­த­தா­வது, பெண்­க­ளின் பாது­காப்பு, பெண்­ணி­யக் கோட்­பா­டு­கள் எல்­லோ­ருக்­கும் பொது­வாக அமை­ய­வேண்­டும். போரின் பின்­னர் வடக்­கில் பெண்­க­ளின் உரி­மை­கள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. பெண்­களை வலு­வூட்­டும் செயற்­பாடு அர­சி­யல் உள்­ளிட்ட சகல வழி­க­ளி­லும் பல­வீ­ன­மா­கவே இருக்­கின்­றது. பெண்­களை வலு­வூட்­டும் செயற்­பா­டு­க­ளுக்கு போதி­ய­ளவு உத­வி­கள் கிடைக்­கப் பெறு­வ­தில்லை. முத­லா­வது பெண் தலைமை அமைச்­சரை உரு­வாக்­கிய நாடு இலங்கை. இந்­தச் சிறப்பு இருந்­தா­லும், இன்று பெண் தலை­வர்­களை உரு­வாக்­கு­வது மிகக் குறை­வாக இருக்­கின்­றது. 225 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் 15 பேரே பெண் உறுப்­பி­னர்­க­ளா­கக் காணப்­ப­டு­கின்­ற­னர். அதி­லும் யாழ்ப்­பா­ணத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி ஒரு பெண் பிர­தி­நி­தியே காணப்­ப­டு­கின்­றார். பெண் தலை­வர்­கள் உரு­வாக வேண்­டிய கட்­டா­யம் காணப்­ப­டு­கி­றது. பால்­நிலை சமத்­து­வம் தொடர்­பில், ‘ஜென்­டர் செல்’ என்ற திட்­டத்­தின் மூலம் முக்­கி­ய­மாக அனைத்­துப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளி­லும் காணப்­ப­டும் பகி­டி­வ­தை­களை கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரும் நோக்­கில் எந்த நேரத்­தி­லும் பகிடி வதை சம்­பந்­த­மான முறைப்­பா­டு­க­ளைச் செய்­யக் கூடி­ய­வாறு உமா குமா­ர­சாமி என்­ப­வ­ரின் நெறி­யாள்­கை­யில் திட்­ட­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது – என்­றார். இந்த நிகழ்­வில், வர­வேற்­பு­ரை­யினை மக­ளிர் அபி­வி­ருத்தி நிலை­யத்­தின் பணிப்­பா­ளர் திரு­மதி சறோஜா சிவ­சந்­தி­ரன் வழங்­கி­னார். தலைமை உரை­யினை, அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளின் இணைத் தலை­வர் தே.தேவா­னந்த் வழங்­கி­னார். ‘வளர்ந்த நாடு­கள் ஆய்­வு­க­ளுக்­கா­கப் பெருந்­தொ­கைப் பணத்தை செல­வி­டு­கின்­றன. ஆனால் வளர்­முக நாடு­கள் அவ்­வாறு செய்­வ­தில்லை. வளர்ந்த நாடு­கள் எம்­மைப் பற்றி ஆய்வு நடத்தி முடிவு சொல்­லும் நிலை­யி­லேயே நாங்­கள் இருக்­கின்­றோம்’ என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக விரி­வு­ரை­யா­ளர் திரு­மதி தே.ஜனனி தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணத்­தில் 30 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­கள் இருப்­ப­தாக, யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக மேல­திக மாவட்­டச் செய­லர் திரு­மதி சுகு­ண­ரதி தெய்­வேந்­தி­ரம் தெரி­வித்­தார். போருக்­குப் பின்­னர் பெண்­கள் எல்லா நேர­மும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­றார்­கள் என்­ப­தைத்­தான் சகல போர்­க­ளும் உணர்த்துவ­தாக, இந்­தி­யப் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர் திரு­மதி டி.ஆர்.அரங்க மல்­லிகா தெரி­வித்­தார். நேற்­றைய முத­லாம் நாள் நிகழ்­வில், 7 ஆய்­வு­ரை­கள் முன்­வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. http://newuthayan.com/story/09/பெண்­க­ளுக்கு-எதி­ரான-வன்­முறை-கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை-மைத்­திரி-ரணில்-யாழ்ப்­பா­ணத்­தில்-ஆதங்­கம்.html

குள்ளன் பினு

2 hours 35 minutes ago
குள்ளன் பினு - சிறுகதை சாம்ராஜ் - ஓவியங்கள்: ரமணன் 11 மணிக்கு அப்பன் உட்காரும் இடத்தில் வழக்கம்போல் பீடியையும் தீப்பெட்டியையும் வைத்த பினு, சோற்றை வடிக்க உள்ளே போனான். பினுவை நீங்கள் கோட்டயம் வீதியில் பார்த்திருக்கலாம். பார்த்த மாத்திரத்தில் அவனுடைய உடைகள் உங்களை ஈர்த்திருக்கும். கண்களை உறுத்தும் நிறத்தில் ஒரு பனியனைப் போட்டுக்கொண்டு காதில் ஹெட்போனுடன் சைக்கிளிலோ, ஆக்டிவாவிலோ செல்வதை; மீன் மார்க்கெட்டிலோ, கோழிச்சந்தை இறக்கத்திலோ திருனக்காரா அம்பலத்துக்கு அருகிலோ, மேமன் மாப்பிள்ளை சதுக்கத்திலோ பார்த்திருப்பீர்கள். அதையும் தாண்டி அவனை உங்களுக்கு மறக்காதிருப்பதற்கான காரணம் அவனது உயரம். வண்டியை நிறுத்தி, காலை ஊன்றுவதற்குத் தோதாக இடம் தேடுவான். மூன்று ரவுண்டு அடித்து அங்கும் இங்கும் தேடி ஓர் இடத்தைக் கண்டுபிடிப்பான். அவன் இடத்தைத் தேடுவது, நீரோட்டம் பார்க்கிறவர்கள் தண்ணீர் தேடுவதுபோலிருக்கும். அந்தத் தேடுதல் கோட்டயம் மார்க்கெட்டில் பிரசித்தம். பினு என்பது, அவனை வீட்டில் கூப்பிடும் செல்லப்பெயர். பதிவேட்டில் `வர்கீஸ் டொமினிக்.’ நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் `பினுவேட்டன்.’ கோட்டயத்தில் பல்வேறு பினுக்கள் உண்டு. கஞ்சிக்குழி பினு, துபாய் பினு, மோரீஸ் பினு, வெல்டர் பினு, தடியன் பினு. மற்றவர்களிலிருந்து இவனை வேறுபடுத்திக்காட்ட, கோட்டயத்துக்காரர்களுக்கு இவன் `குள்ளன் பினு.’ நேரில் யாரும் சொல்வது கிடையாது. ஆனால், அதுதான் தன் முதுகுக்குப் பின் சொல்லப்படுகிறது என்பது பினுவுக்குத் தெரியும். பினுவின் அப்பா டொமினிக் வகையறாவிலும், அம்மா குன்னங்குளம் தெரசா வகையறாவிலும் உயரம் குறைந்தவர்கள் என்று யாரும் கிடையாது. டொமினிக் மத்தாயி குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக எல்லோரும் உயரம்தான். மாம்பழமோ, முருங்கையோ பறிக்க அந்தக் குடும்பத்துக்குத் தொரட்டியே வேண்டியதில்லை என்பது கோட்டயத்தின் சொல்வழக்கு. பினுவின் தாத்தன் மத்தாயி, இடுக்கியில் கஞ்சா விவசாயத்தில் சம்பாதித்த காசோடு கோட்டயம் திரும்பியவர், தன் உறவுக்குள் இருப்பதிலேயே உயரமான பேபி கொச்சம்மாளைத் திருமணம் செய்துகொண்டு உயரமான குழந்தைகளை உற்பத்திசெய்யத் தொடங்கினார். அதேசமயம் மர வியாபாரத்தையும் தொடங்க, பிள்ளைகளும் கடையில் நிற்கும் மரத்துக்குப் போட்டியாக உயரமாய் வளர்ந்தார்கள். ஐந்து ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள். பஞ்சபாண்டவருடன் மூன்று அம்பைகளும் அங்கு சேர்ந்து பிறந்திருப்பதாக ஸ்ரீகண்ட நாயர் சொல்லிச் சிரிப்பார். உயரம், அந்தக் குடும்பத்துக்குக் கோட்டயத்தின் சட்டாம்பிள்ளை அந்தஸ்தை வழங்கியிருந்தது. திருவிழாவில் சப்பரத்துக்கு முன்னால் புனித சிலுவையைத் தூக்கிக்கொண்டு போகிறவர்களாகவும், சவ ஊர்வலத்தில் பாதிரியார்களுக்குப் பக்கத்தில் குடை பிடித்துக்கொண்டு போகிறவர்களாகவும், அடிதடியில் முதலில் கை நீட்டுகிறவர்களாகவும் அவர்கள் குடும்பம் இருந்தது. பெண்களும் ஆண்களுக்கு நிகராகவே உயரமாய் வளர்ந்திருந்தார்கள். அவர்கள் உயரத்துக்குத் தோதாக மாப்பிள்ளை தேடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். தாத்தன் மத்தாயின் மரக்கடை, குமரகம் போகும் சாலையில் இருந்தது. அந்தக் காலத்தில் கோட்டயத்தில் மர வியாபாரத்துக்கு நல்ல மவுசு. ரப்பர் வியாபாரத்தில் கிடைத்த பெரும் வருமானத்தில் கோட்டயத்தின் பணக்காரர்கள், வீடுகளைப் புதுப்பிக்கத் தொடங்கியிருந்தார்கள். தரகன் பவுல் குடும்பம், மரக்கடை ஒன்றைக் கஞ்சிக்குழி ஜங்ஷனில் தொடங்கியது. மதியவேளை ஒன்றில் மத்தாயியும் அவரின் ஐந்து மகன்களும் வெறும் கைகளாலேயே அந்தக் கடையை அடித்து நொறுக்கித் தீயிட்ட கதை, இப்போதும் கள்ளுக்கடையில் பேசப்படுவதுண்டு. விஷயம் ஃபாதர் பிரான்சிஸ் சைமனுக்கு முன் பஞ்சாயத்துக்குப் போக, திருச்சபைக்குக் கோட்டயம் - குமுளி சாலையில் களத்தம்படியில் உள்ள மூன்று ஏக்கர் நிலம் மத்தாயி குடும்பத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஃபாதர் சைமனும் கர்த்தனும் சமாதானப்பட்டார்கள். ``தங்கள் விரோதிகளிடமும் அன்பாய் இருக்க வேண்டும்’’ என, தரகன் பவுல் குடும்பத்துக்கு ஃபாதர் சைமன் அருளாசி வழங்கினார். தரகன் பவுல் குடும்பம், தொழிலை மாற்றி ஜவுளிக்கடையைத் தொடங்கியது. அது பின்பு பெரும் ஜவுளி சாம்ராஜ்ஜியமாய் விரிவடைந்தது வேறு கதை. பினு பிறந்த ஒரு வருடம் கழித்தே, தாத்தன் மத்தாயி அவனைப் பார்க்க வந்தார். அவருக்கு இடுக்கியில் வேறொரு குடும்பம் இருப்பது ஊரறிந்த ரகசியம். ``இவன், நம் குடும்பத்தின் சாபம்!’’ எனச் சொல்லி, பினுவைத் தொட்டிலில் இட்டார். பினு, தன் இரண்டு அக்காக்களுடன் வளர்ந்தான். உயரத்தில் அல்ல, வயதில். மத்தாயி தாத்தன், கடைசிவரை அவனைக் கொஞ்சவேயில்லை; அப்பன் டொமினிக்கும். குடும்ப விசேஷங்களில் பெரியப்பன், சிற்றப்பன் குடும்பத்தின் பிள்ளைகள் உயர உயரமாய் வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்கும் ஓட, அவர்களுக்குப் பின்னால் ஒரு சித்திரக்குள்ளனைப்போலத் தொடர்வான் பினு. அம்மா தெரசா மட்டுமே அவனுடன் அன்பாய் இருந்தாள். பள்ளிக்கூடத்துக்குப் போய்த் திரும்பும் பினு, வீட்டுக்குள் நுழைந்தவுடன் பையைக் கடாசிவிட்டு ``அம்மா பால்..!’’ என, ஸ்டூலை எடுத்துப் போட்டு அம்மா ஜாக்கெட்டை விலக்கி சாவதானமாய் பால் குடிப்பான். `டொமினிக்குக்குப் பொறந்த ஒரு ஆம்பளப்புள்ளையும் கீரிப்புள்ளையா போச்சே!’ என, ஞாயிற்றுக்கிழமையில் சர்ச்சில் அவர் காதுபடவே பேசினார்கள். பினுவுக்கு, கூட்டாளிகளே இல்லை. அக்காக்களுக்குத் திருமணம் ஆகும்வரையில் அவர்களுடனேயே விளையாடினான். அவர்கள் திருமணம் செய்துகொண்டு போன பிறகு, சுவர்களில் அடர்பாசி படிந்திருக்கும் தோட்டத்துக்குள் அவனாக ஓடி ஓடி ஒரு விளையாட்டை உருவாக்கிக்கொண்டான். வீட்டின் மேல்புறத்துக் குன்றில் குடியிருக்கும் பாருக்குட்டி, மாலைவேளைகளில் தலை சீவும்போது பினுவைப் பார்த்து ``பால் வேணுமாடா?’’ எனக் கேட்பாள். பினு வெட்கப்பட்டு வீட்டுக்குள் ஓடிவிடுவான். அவர்கள் வீடு, திருனக்காரா அம்பலத்திலிருந்து பழைய போட் ஜெட்டி போகும் பாதையில் இருந்தது. பழைய காலத்தில் அந்த போட் ஜெட்டி வழியேதான் ஆலப்புழையிலிருந்து எல்லாச் சரக்குகளும் படகில் கோட்டயம் வந்து இறங்கும். தாத்தன் மத்தாயி இறந்தபோது மற்ற அண்ணன்கள், ``ஒரே ஆம்பளப் புள்ளைய வெச்சிருக்க. அதுவும் குள்ளன். அவன வெச்செல்லாம் மர வியாபாரம் பண்ண முடியாது. வேற ஏதாவது செஞ்சிக்க’’ என மரக்கடையிலிருந்து டொமினிக்கைப் பிரித்துவிட்டார்கள். டொமினிக், போட் ஜெட்டி பாதையில் இருக்கும் வீட்டைத் தனது பங்காக வாங்கி, ஒரு மெஸ்ஸைத் தொடங்கினார். பெயர்ப்பலகை எதுவும் இல்லாவிட்டாலும், அது `தெரசா மெஸ்’ என்று அழைக்கப்பட்டது. கோட்டயத்தில் புகழ்பெற்ற மெஸ்ஸாக மாறியது. வேலைக்கு வெளியாள்கள் என யாரும் கிடையாது. தெரசா, மகள்கள், பினு, உறவுகளில் பாவப்பட்ட இருவர் என வேலைசெய்தனர். டொமினிக், மெஸ்ஸுக்குத் தேவையான பொருள்களை வாங்கிப்போடுவது மட்டுமே அவரது வேலையாக வைத்துக்கொண்டார். 12 மணிக்குக் கடை தொடங்கி 3 மணிக்கு முடியும். ஞாயிற்றுக்கிழமையில் கர்த்தனுக்கு அச்சப்பட்டு, கடை திறப்பது கிடையாது. கடை தொடங்கும்போது, வராந்தாவின் திண்டில் அமர்ந்து பீடி குடிக்கத் தொடங்குவார் டொமினிக். வீட்டின் முன்னறையையே சாப்பாட்டுக் கூடமாக மாற்றியிருந்தார்கள். போட் ஜெட்டி பக்கத்தில் இருப்பதால், நிறைய லோடுமேன்களும் டிரைவர்களும் வருவார்கள். வம்புச்சண்டையை சாப்பாட்டோடு தொடுகறியாகத் தொட்டுச் சாப்பிட மிகவும் விரும்புவர். தெரசா மெஸ்ஸில் அது எதுவும் சாத்தியமில்லை. சாப்பாட்டுக்கூடத்தில் சத்தம் மிகுந்தால் டொமினிக் லேசாகச் செருமுவார். பிறகு, தண்ணீர் குடிப்பதைத் தவிர வேறு சத்தம் வராது. மூன்று மணி நேரம் அசையாது, உறைந்த ஒரு சித்திரம்போல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஸ்டூலில் உட்கார்ந்திருப்பார். சாப்பாட்டுக்கூடத்தைக் கழுவத் தொடங்கும்போது சட்டை போட்டுக்கொண்டு வெளியே போகிறவர், இரவு 7 மணிக்குத் திரும்புகையில் கையில் கள் போத்தல் இருக்கும்; வயிற்றிலும். இயேசு படத்தின் முன் சிறிய மின்விளக்கு பதற்றமாய் மினுங்கிக்கொண்டிருக்க, மறுபடியும் ஸ்டூலில் அமர்வார். பக்கத்தில் சாப்பாடு எடுத்து வைக்கப்பட்டிருக்கும். எப்போது சாப்பிடுவார் என யாருக்கும் தெரியாது. அப்பா நடுராத்திரியிலும் ஸ்டூலில் உட்கார்ந்திருப்பதாக பினுவுக்குத் தோன்றும். அவர் வந்த பிறகு சாப்பாட்டுக்கூடம் பக்கம் யாரும் வரவே மாட்டார்கள். வீட்டுக்கு இன்னொரு வாசல் இருந்தது. கோட்டயத்தில் வெள்ளம் வரும் என எல்லோரும் பயந்துகொண்டிருந்த ஒரு பெரும் மழைநாளில் டொமினிக் மரித்துப்போனார். போட் ஜெட்டியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் தண்ணீர் வரும் எனக் காத்திருக்கையில், டொமினிக்கின் சவ ஊர்வலம் மார்த்தோமா ஆலயத்தை நோக்கிப் போகத் தொடங்கியது. பினு 25 வயதைக் கடந்திருந்தாலும், ஒரு சிறுவனுக்கான தோற்றத்தோடு மழையில் அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தான். டொமினிக்கின் சவப்பெட்டியைத் தூக்கும்போது பினுவும் தூக்குவதற்கு முன்னால் போக, அவன் பெரியப்பன் பிரான்சிஸ் அவனைப் பிடித்துத் தள்ளினார். ``போடா அந்தப் பக்கம்... வந்துட்டான் குள்ளன், சவப்பெட்டியைத் தூக்க!’’ - டொமினிக்கைக் குழியில் இறக்கும்போது பினு மிகவும் பிரயத்தனப்பட்டு அப்பன் சவப்பெட்டியைப் பார்க்க முயன்றான். பாதிரியாரின் அங்கியைத்தான் அவனால் பார்க்க முடிந்தது. பினுவின் அழுகையை மழை மறைத்தது. அப்பன் போன பிறகு, அப்பன் செய்த காரியங்களை பினு செய்யத்தொடங்கினான். திருமணமாகிப் போன அக்கா மார்த்தா தன் மகள் பிளஸியுடன் திரும்பி வர, தெரசா மெஸ் உள்கூடத்தில் நிறைய பெண்கள் இங்கும் அங்கும் பரபரப்பாய் அலைய, எப்போதும்போல் இயங்கியது. நடிகர் கொச்சி ஹனீபாவைக் குட்டி பாட்டிலுக்குள் அமுக்கி வைத்ததைப்போல, கட்டம் போட்ட கைலியும் கைவைத்த பனியனுமாய் இடுப்பில் தடித்த பெல்ட்டுமாய் பரபரப்பாய் வேலைசெய்வான் பினு. உயரம் இல்லை என்பதால், பெண் கிடைக்கவில்லை. வியாபாரம் தொடங்கும் முன், அப்பன் உட்காரும் இடத்தில் இரண்டு பீடிக்கட்டுகளையும் தீப்பெட்டியையும் வைப்பான். 3 மணிக்கு சாப்பாட்டுக்கூடம் கழுவப்பட்டதும், பினு வேறு ஆள். ஒருநாள் டென்னிஸ் பேட் எடுத்துக்கொண்டு கோட்டயம் க்ளப்புக்கு விளையாடப் போவான். இன்னொரு நாள், அக்காடியா ஹோட்டல் பார் அல்லது சஜியின் ரப்பர் தோட்டம் அல்லது பிரத்யேகமானவர்கள் மட்டும் கூடும் சக்காரியாவின் முன்னிரவுச் சபை. எல்லா இடங்களிலும் பினு மௌனன்தான். யாருடனும் பேச மாட்டான். குடிப்பான், கூடிப்போனால் ஒரு புன்னகை. அவன் எங்கு இருந்தாலும் உமரின் ஆட்டோ 9:15 மணிக்கு அவனைச் சந்திக்கும். அவன் அம்மா ஸ்தோத்திரம் சொல்லத் தொடங்குகையில், வீட்டுப்படிக்கட்டில் ஏறுவான். இந்த நிகழ்ச்சிநிரலில் மாற்றமே கிடையாது. உறவினர் வீட்டுத் துக்கங்களுக்கோ, விசேஷங்களுக்கோ அவன் போவதே இல்லை. எல்லாவற்றுக்கும் அம்மாதான். கொஞ்ச நாளாக அவனிடம் புகார் சொல்லத் தொடங்கியிருந்தாள் அக்கா. அவர்கள் வீட்டுக்கு எதிரே கோட்டயம் முனிசிபாலிட்டியின் குடோன் இருந்தது. முன்பெல்லாம் அங்கே மலையாளப்பட ஷூட்டிங் நடக்கும். பிரேம் நசீர்கள், ஜெயன்கள், மம்மூட்டிகள், மோகன்லால்கள் வில்லன்களை அங்கேவைத்து நையப்புடைப்பர். பழைய காலத்தில் அது பரபரப்பான வியாபார ஸ்தலம். போட் ஜெட்டி அங்கிருந்து செறியங்காடிக்கு மாறிய பிறகு, அது கைவிடப்பட்ட கட்டடமாய்... வழி இல்லாதவர்களுக்கு முனிசிபாலிட்டி குறைந்த வாடகைக்குவிடும் கட்டடமாய் மாறியிருந்தது. அங்கு தங்கியிருக்கும் நான்கைந்து திருவனந்தபுரத்துப் பையன்கள், மாலையானால் பினுவின் அக்கா மகளை விசில் அடித்துக் கூப்பிடுவதும், `கூகூகூ...’ எனக் கத்துவதுமாய் இருந்தனர். ``ரோட்டில் போனால் பின்னாலேயே வருகிறார்கள். அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்பதுபோல் தெரியவில்லை’’ என்றாள் அக்கா. பினு, மாறாத தனது நிகழ்ச்சிநிரலை மாற்றி அன்றைக்கு வீட்டில் காத்திருந்தான். 5 மணியானதும் அவர்கள் அறையிலிருந்து விசிலும் கூச்சலும் தொடங்கியது. பால்கனியில் ஏறி நின்று இவர்கள் வீட்டைப் பார்த்துக் கை காட்டினார்கள். பினு விறுவிறுவென குடோனை நோக்கி நடந்தான். குடோன் பாழடைந்து கிடந்தது. நாய்களும் பெருச்சாளிகளும் குறுக்கும்நெடுக்கு மாய் ஓட, பினு தூசி நிறைந்த மரப்படிக்கட்டு வழியாக மேலேறி அவர்கள் அறை முன்னால் நின்றவன், மெதுவாக மரக்கதவைத் தட்டினான். அது கூடுதலாய் அதிர்ந்தது. உள்ளேயிருந்து கதவைப் படக்கெனத் திறந்து வெளியே வந்தவன், ``டேய், குள்ளன்டா!’’ என உள்பக்கம் திரும்பிக் கத்தினான். பினு பார்க்க முடிந்த கதவின் இடுக்கின் வழியே மதுக்குப்பிகள் தெரிந்தன. உள்ளேயிருந்து மற்றொருவன் கொச்சையாகக் கிண்டலடிக்க, அறை சிரிப்பில் அதிர்ந்தது. பினு மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான். மிக நிதானமாக தன்முன்னால் இருப்பவனை விலக்கி அறைக்குள் நுழைந்து ``இதை நிறுத்திக்கிட்டீங்கன்னா உங்களுக்கு நல்லது. இல்லைன்னா கஷ்டம்’’ என்று சொல்லிவிட்டு, படக்கென அறையை விட்டு வெளியே வந்தான். ``போடா குஞ்சக்கூனா!’’ என யாரோ கத்தினார்கள். அதன் பிறகு கொஞ்ச காலம் அவர்கள் அடங்கியிருந்தார்கள். பழைய போட் ஜெட்டியை பார்க் ஆக்கும் வேலையில் முனிசிபாலிட்டி இறங்க, போட் ஜெட்டியில் இருக்கும் வெங்காயத்தாமரைகள் நீள் இரும்புக்கைகள்கொண்ட வாகனங்களால் அள்ளப்பட்டுக்கொண்டிருக்க, வேலைவெட்டியில்லாதவர்கள் மதியவேளையில் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். திருனக்காரா அம்பலத்திலிருந்து போட் ஜெட்டிக்குப் புதிய தார் ரோடு போடும் வேலையும் நடந்துகொண்டிருந்தது. வடகிழக்கு வேலையாள்கள் மும்முரமாய் இந்தியும் பான்பராக்குமாய்க் கலந்து வேலை செய்துகொண்டிருக்க, பினு தன் பேட்டை எடுத்துக்கொண்டு க்ளப்புக்குப் போக ரோட்டில் இறங்கினான். சாலையின் மறுமுனையில் அக்கா மகள் பிளஸி, கல்லூரியிலிருந்து வந்துகொண்டிருந்தாள். பினு பார்த்துக் கொண்டிருக்கையி லேயே குடோனில் தங்கியிருப்ப வர்கள் அவளைக் கடந்து முன்னால் வந்து பயமுறுத்துவதற்காக சடக்கெனத் திரும்பி, தன் கையில் இருக்கும் பந்தை வீசுவதுபோல ஒருவன் பாவனை செய்தான். மற்றவன், அந்தப் பந்தைப் பிடுங்கி நிஜமாகவே அவள் மார்பை நோக்கி எறிந்தான். பிளஸி பயந்து, பின்னால் ஓடினாள். பினு பேட்டோடு அவர்களை நோக்கி ஓடினான். பினுவைப் பார்த்த அந்த நால்வரில் ஒருவன் ``டேய் குள்ளன்டா!’’ எனக் கத்த, பினு வடக்கத்தியத் தொழிலாளிகளைத் தள்ளிக்கொண்டு அவர்கள் ரோட்டில் கொட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் இரும்புத்தட்டுகளைத் தட்டிவிட்டு நால்வரில் முன்னால் இருந்தவன் மீது பாய்ந்தான். வடக்கத்தியத் தொழிலாளர்கள் பீகாரியில் கத்த, பினு குவித்துவைக்கப்பட்டிருக்கும் ஜல்லியின் மீது நின்று முதலாமவன் முகத்தில் குத்தினான். ``மாரோ... மாரோ..!’’ என்று யாரோ இந்தியில் கத்த, வெங்காயத்தாமரை அள்ளுவதை வேடிக்கை பார்த்துச் சலிப்படைந்திருந்த கூட்டம், சண்டையை நோக்கி ஓடிவந்தது. பினு சன்னதம் வந்தவனாய் நால்வர்மீதும் பாய்ந்து பாய்ந்து அடித்தான். அவன் குள்ளமாய் இருப்பது சண்டைக்கு மிக ஏதுவாய் இருந்தது. அவர்களால் அவன் முகத்தில் குத்த முடியவில்லை. அவன் சடக்கெனக் குனிந்து அவர்கள் கவட்டைக்குள் புகுந்து நிலைகுப்புற அவர்களைக் கீழே தள்ள முடிந்தது. வீட்டிலிருந்து தெரசாவும் மார்த்தாவும் மற்றவர்களும் ஓடிவர, பிளஸி ஓரமாய் நின்று அழுதுகொண்டிருந்தாள். பினுவைக் கூட்டம் ஆதரித்து, ஆரவாரமாய்க் கூச்சல் எழுப்பியது. பினுவை விலக்க வந்த இரண்டொருவரை பினு அப்படியே தள்ளிவிட்டான். நால்வரும் பினுவின் தாக்குதலால் அயர்ந்துபோயிருந்தார்கள். பினு, கைக்குக் கிடைத்ததையெல்லாம் எடுத்து அவர்களை அடித்தான். அப்போதுதான் போடப்பட்டிருக்கும் தார் ரோட்டில் பைத்தியமாய் குறுக்கும்நெடுக்குமாய் பினு ஓடினான். போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜீப்பில் வந்து இறங்கும் வரை, பினுவை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், டொமினிக் குடும்பத்துக்குப் பரிச்சயமானவர். பினுவை ஆச்சர்யத்துடன் பார்த்தார். சிறு வயதிலிருந்து பினு அவர் பார்த்து வளர்ந்த பையன்தான். பினுவிடம் ஒன்றும் கேட்கவில்லை. அந்த நால்வரையும் உள்ளே அழைத்துச் சரமாரியாக அடித்தார். உடனடியாக அவர்கள் குடோன் அறையைக் காலிசெய்யவேண்டும் என்று சொல்லி, `இனி வம்பு ஏதும் செய்ய மாட்டோம்!’ என எழுதி வாங்கிக்கொண்டு, பினுவிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். நால்வரும் பினுவிடம் மன்னிப்பு கேட்க, பினு சலனமில்லாமல் அவர்களைப் பார்த்தான். நால்வரும் வெளியேற சுகுமாரன் பினுவைப் பார்த்து ``என்னடா, ஆள்களை அடிச்சவுடனே உயரமாயிட்டியா நீ?’’ எனக் கேட்க, பினு அப்போதுதான் கவனித்தான், அவனுடைய இரண்டு கேன்வாஸ் ஷூக்களிலும் அரையடிக்குத் தார் அப்பியிருப்பதை. அடுத்த மூன்று நாள், கோட்டயம் வீதியெங்கும் பினு நடந்தே திரிந்தான். உமரின் ஆட்டோவை வேண்டாம் எனச் சொல்லிவிட்டான். எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் அவனைப் பார்க்க, ஷூவும் தாருமாய்த் திரிந்தான். உறவினர் வீடுகளின் வாசல் வரை போய் உள்ளே போகாமல் வாசலோடு நின்று பேசிவிட்டு வந்தான். வழியில் ஃபாதரைப் பார்த்தவன் மரியாதையாக ஸ்தோத்திரம் சொன்னான். பினுவின் வாழ்வில் முதல்முறையாக ஃபாதர் குனியாமல் அவனுக்குப் பதில் ஸ்தோத்திரம் சொன்னார். ஃபாதர், திரும்பித் திரும்பி அவனைப் பார்த்தபடி நடந்தார். பினு வீட்டுக்கே போகவில்லை. அக்காடியா ஹோட்டலில் ரூம் எடுத்தான். வீட்டில் இருக்கும் ஒரே வெஸ்டர்ன் டாய்லெட்டை அம்மா மட்டுமே பயன்படுத்துவாள். இண்டியன் டாய்லெட் போனால் காலில் தண்ணீர் படும். இந்த மூன்று நாளில் மூத்திரம் இருக்கும்போது அவன்மீது தெறிக்கவேயில்லை. பாரில் உயரமான ஸ்டூலில் ஏறி அமர்ந்து குடித்தான். அம்மாவும் அக்காவும் ஹோட்டல் ரூமில் வந்து அவனைப் பார்த்தபோது, பினு ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. மீனச்சல் ஆற்றோரமாக, தனியே அமர்ந்திருந்தான் பினு. ஆற்றுக்கு அவனை ஒற்றையாய்ப் பார்த்துதான் பழக்கம். ஆள்கள் வராத பொழுதில்தான் பினு குளிக்க வருவான். பினு எழுந்து தண்ணீர் அருகே போனான். தூரத்தே சூரியன் மறைந்துகொண்டிருக்க, அவனது நிழல் நீளமாய் ஆற்றின் நடுப்பகுதி வரை நீண்டு தெரிய, அதிர்ந்து சட்டெனப் பின்வாங்கினான் பினு. https://www.vikatan.com/

குள்ளன் பினு

2 hours 35 minutes ago
குள்ளன் பினு - சிறுகதை
 
சாம்ராஜ் - ஓவியங்கள்: ரமணன்

 

11 மணிக்கு அப்பன் உட்காரும் இடத்தில் வழக்கம்போல் பீடியையும் தீப்பெட்டியையும் வைத்த பினு, சோற்றை வடிக்க உள்ளே போனான்.

பினுவை நீங்கள் கோட்டயம் வீதியில் பார்த்திருக்கலாம். பார்த்த மாத்திரத்தில் அவனுடைய உடைகள் உங்களை ஈர்த்திருக்கும். கண்களை உறுத்தும் நிறத்தில் ஒரு பனியனைப் போட்டுக்கொண்டு காதில் ஹெட்போனுடன் சைக்கிளிலோ, ஆக்டிவாவிலோ செல்வதை; மீன் மார்க்கெட்டிலோ, கோழிச்சந்தை இறக்கத்திலோ திருனக்காரா அம்பலத்துக்கு அருகிலோ, மேமன் மாப்பிள்ளை சதுக்கத்திலோ பார்த்திருப்பீர்கள். அதையும் தாண்டி அவனை உங்களுக்கு மறக்காதிருப்பதற்கான காரணம் அவனது உயரம். வண்டியை நிறுத்தி, காலை ஊன்றுவதற்குத் தோதாக இடம் தேடுவான். மூன்று ரவுண்டு அடித்து அங்கும் இங்கும் தேடி ஓர் இடத்தைக் கண்டுபிடிப்பான். அவன் இடத்தைத் தேடுவது, நீரோட்டம் பார்க்கிறவர்கள் தண்ணீர் தேடுவதுபோலிருக்கும். அந்தத் தேடுதல் கோட்டயம் மார்க்கெட்டில் பிரசித்தம்.

48p1_1531823679.jpg

பினு என்பது, அவனை வீட்டில் கூப்பிடும் செல்லப்பெயர். பதிவேட்டில் `வர்கீஸ் டொமினிக்.’ நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் `பினுவேட்டன்.’ கோட்டயத்தில் பல்வேறு பினுக்கள் உண்டு. கஞ்சிக்குழி பினு, துபாய் பினு, மோரீஸ் பினு, வெல்டர் பினு, தடியன் பினு. மற்றவர்களிலிருந்து இவனை வேறுபடுத்திக்காட்ட, கோட்டயத்துக்காரர்களுக்கு இவன் `குள்ளன் பினு.’ நேரில் யாரும் சொல்வது கிடையாது. ஆனால், அதுதான் தன் முதுகுக்குப் பின் சொல்லப்படுகிறது என்பது  பினுவுக்குத் தெரியும்.

பினுவின் அப்பா டொமினிக் வகையறாவிலும், அம்மா குன்னங்குளம் தெரசா வகையறாவிலும் உயரம் குறைந்தவர்கள் என்று யாரும் கிடையாது. டொமினிக் மத்தாயி குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக எல்லோரும் உயரம்தான். மாம்பழமோ, முருங்கையோ பறிக்க அந்தக் குடும்பத்துக்குத் தொரட்டியே வேண்டியதில்லை என்பது கோட்டயத்தின் சொல்வழக்கு.

பினுவின் தாத்தன் மத்தாயி, இடுக்கியில் கஞ்சா விவசாயத்தில் சம்பாதித்த காசோடு கோட்டயம் திரும்பியவர், தன் உறவுக்குள் இருப்பதிலேயே உயரமான பேபி கொச்சம்மாளைத் திருமணம் செய்துகொண்டு உயரமான குழந்தைகளை உற்பத்திசெய்யத் தொடங்கினார். அதேசமயம் மர வியாபாரத்தையும் தொடங்க, பிள்ளைகளும் கடையில் நிற்கும் மரத்துக்குப் போட்டியாக உயரமாய் வளர்ந்தார்கள். ஐந்து ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள். பஞ்சபாண்டவருடன் மூன்று அம்பைகளும் அங்கு சேர்ந்து பிறந்திருப்பதாக ஸ்ரீகண்ட நாயர் சொல்லிச் சிரிப்பார்.

உயரம், அந்தக் குடும்பத்துக்குக் கோட்டயத்தின் சட்டாம்பிள்ளை அந்தஸ்தை வழங்கியிருந்தது. திருவிழாவில் சப்பரத்துக்கு முன்னால் புனித சிலுவையைத் தூக்கிக்கொண்டு போகிறவர்களாகவும், சவ ஊர்வலத்தில் பாதிரியார்களுக்குப் பக்கத்தில் குடை பிடித்துக்கொண்டு போகிறவர்களாகவும், அடிதடியில் முதலில் கை நீட்டுகிறவர்களாகவும் அவர்கள் குடும்பம் இருந்தது. பெண்களும் ஆண்களுக்கு நிகராகவே உயரமாய் வளர்ந்திருந்தார்கள். அவர்கள் உயரத்துக்குத் தோதாக மாப்பிள்ளை தேடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.

தாத்தன் மத்தாயின் மரக்கடை, குமரகம் போகும் சாலையில் இருந்தது. அந்தக் காலத்தில் கோட்டயத்தில் மர வியாபாரத்துக்கு நல்ல மவுசு. ரப்பர் வியாபாரத்தில் கிடைத்த பெரும் வருமானத்தில் கோட்டயத்தின் பணக்காரர்கள், வீடுகளைப் புதுப்பிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

தரகன் பவுல் குடும்பம், மரக்கடை ஒன்றைக் கஞ்சிக்குழி ஜங்ஷனில் தொடங்கியது. மதியவேளை ஒன்றில் மத்தாயியும் அவரின் ஐந்து மகன்களும் வெறும் கைகளாலேயே அந்தக் கடையை அடித்து நொறுக்கித் தீயிட்ட கதை, இப்போதும் கள்ளுக்கடையில் பேசப்படுவதுண்டு.

48p3_1531823696.jpg

விஷயம் ஃபாதர் பிரான்சிஸ் சைமனுக்கு முன் பஞ்சாயத்துக்குப் போக, திருச்சபைக்குக் கோட்டயம் - குமுளி சாலையில் களத்தம்படியில் உள்ள மூன்று ஏக்கர் நிலம் மத்தாயி குடும்பத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஃபாதர் சைமனும் கர்த்தனும் சமாதானப்பட்டார்கள். ``தங்கள் விரோதிகளிடமும் அன்பாய் இருக்க வேண்டும்’’ என, தரகன் பவுல் குடும்பத்துக்கு ஃபாதர் சைமன் அருளாசி வழங்கினார். தரகன் பவுல் குடும்பம், தொழிலை மாற்றி ஜவுளிக்கடையைத் தொடங்கியது. அது பின்பு பெரும் ஜவுளி சாம்ராஜ்ஜியமாய் விரிவடைந்தது வேறு கதை.

பினு பிறந்த ஒரு வருடம் கழித்தே, தாத்தன் மத்தாயி அவனைப் பார்க்க வந்தார். அவருக்கு இடுக்கியில் வேறொரு குடும்பம் இருப்பது ஊரறிந்த ரகசியம். ``இவன், நம் குடும்பத்தின் சாபம்!’’ எனச் சொல்லி, பினுவைத் தொட்டிலில் இட்டார். பினு, தன் இரண்டு அக்காக்களுடன் வளர்ந்தான். உயரத்தில் அல்ல, வயதில். மத்தாயி தாத்தன், கடைசிவரை அவனைக் கொஞ்சவேயில்லை; அப்பன் டொமினிக்கும்.

குடும்ப விசேஷங்களில் பெரியப்பன், சிற்றப்பன் குடும்பத்தின் பிள்ளைகள் உயர உயரமாய் வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்கும் ஓட, அவர்களுக்குப் பின்னால் ஒரு சித்திரக்குள்ளனைப்போலத் தொடர்வான் பினு. அம்மா தெரசா மட்டுமே அவனுடன் அன்பாய் இருந்தாள். பள்ளிக்கூடத்துக்குப் போய்த் திரும்பும் பினு, வீட்டுக்குள் நுழைந்தவுடன் பையைக் கடாசிவிட்டு ``அம்மா பால்..!’’ என, ஸ்டூலை எடுத்துப் போட்டு அம்மா ஜாக்கெட்டை விலக்கி சாவதானமாய் பால் குடிப்பான். `டொமினிக்குக்குப் பொறந்த ஒரு ஆம்பளப்புள்ளையும் கீரிப்புள்ளையா போச்சே!’ என, ஞாயிற்றுக்கிழமையில் சர்ச்சில் அவர் காதுபடவே பேசினார்கள்.

பினுவுக்கு, கூட்டாளிகளே இல்லை. அக்காக்களுக்குத் திருமணம் ஆகும்வரையில் அவர்களுடனேயே விளையாடினான். அவர்கள் திருமணம் செய்துகொண்டு போன பிறகு, சுவர்களில் அடர்பாசி படிந்திருக்கும் தோட்டத்துக்குள் அவனாக ஓடி ஓடி ஒரு விளையாட்டை உருவாக்கிக்கொண்டான். வீட்டின் மேல்புறத்துக் குன்றில் குடியிருக்கும் பாருக்குட்டி, மாலைவேளைகளில் தலை சீவும்போது பினுவைப் பார்த்து ``பால் வேணுமாடா?’’ எனக் கேட்பாள். பினு வெட்கப்பட்டு வீட்டுக்குள் ஓடிவிடுவான்.

அவர்கள் வீடு, திருனக்காரா அம்பலத்திலிருந்து பழைய போட் ஜெட்டி போகும் பாதையில் இருந்தது. பழைய காலத்தில் அந்த போட் ஜெட்டி வழியேதான் ஆலப்புழையிலிருந்து எல்லாச் சரக்குகளும் படகில் கோட்டயம் வந்து இறங்கும்.

தாத்தன் மத்தாயி இறந்தபோது மற்ற அண்ணன்கள், ``ஒரே ஆம்பளப் புள்ளைய வெச்சிருக்க. அதுவும் குள்ளன். அவன வெச்செல்லாம் மர வியாபாரம் பண்ண முடியாது. வேற ஏதாவது செஞ்சிக்க’’ என மரக்கடையிலிருந்து டொமினிக்கைப் பிரித்துவிட்டார்கள். டொமினிக், போட் ஜெட்டி பாதையில் இருக்கும் வீட்டைத் தனது பங்காக வாங்கி, ஒரு மெஸ்ஸைத் தொடங்கினார். பெயர்ப்பலகை எதுவும் இல்லாவிட்டாலும், அது `தெரசா மெஸ்’ என்று அழைக்கப்பட்டது. கோட்டயத்தில் புகழ்பெற்ற மெஸ்ஸாக மாறியது. வேலைக்கு வெளியாள்கள் என யாரும் கிடையாது. தெரசா, மகள்கள், பினு, உறவுகளில் பாவப்பட்ட இருவர் என வேலைசெய்தனர். டொமினிக், மெஸ்ஸுக்குத் தேவையான பொருள்களை வாங்கிப்போடுவது மட்டுமே அவரது வேலையாக வைத்துக்கொண்டார்.

48p2_1531823711.jpg

12 மணிக்குக் கடை தொடங்கி 3 மணிக்கு முடியும். ஞாயிற்றுக்கிழமையில் கர்த்தனுக்கு அச்சப்பட்டு, கடை திறப்பது கிடையாது. கடை தொடங்கும்போது, வராந்தாவின் திண்டில் அமர்ந்து பீடி குடிக்கத் தொடங்குவார் டொமினிக். வீட்டின் முன்னறையையே சாப்பாட்டுக் கூடமாக மாற்றியிருந்தார்கள். போட் ஜெட்டி பக்கத்தில் இருப்பதால், நிறைய லோடுமேன்களும் டிரைவர்களும் வருவார்கள். வம்புச்சண்டையை சாப்பாட்டோடு தொடுகறியாகத் தொட்டுச் சாப்பிட மிகவும் விரும்புவர். தெரசா மெஸ்ஸில் அது எதுவும் சாத்தியமில்லை. சாப்பாட்டுக்கூடத்தில் சத்தம் மிகுந்தால் டொமினிக் லேசாகச் செருமுவார். பிறகு, தண்ணீர் குடிப்பதைத் தவிர வேறு சத்தம் வராது.

மூன்று மணி நேரம் அசையாது, உறைந்த ஒரு சித்திரம்போல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஸ்டூலில் உட்கார்ந்திருப்பார். சாப்பாட்டுக்கூடத்தைக் கழுவத் தொடங்கும்போது சட்டை போட்டுக்கொண்டு வெளியே போகிறவர், இரவு 7 மணிக்குத் திரும்புகையில் கையில் கள் போத்தல் இருக்கும்; வயிற்றிலும்.

இயேசு படத்தின் முன் சிறிய மின்விளக்கு பதற்றமாய் மினுங்கிக்கொண்டிருக்க, மறுபடியும் ஸ்டூலில் அமர்வார். பக்கத்தில் சாப்பாடு எடுத்து வைக்கப்பட்டிருக்கும். எப்போது சாப்பிடுவார் என யாருக்கும் தெரியாது. அப்பா நடுராத்திரியிலும் ஸ்டூலில் உட்கார்ந்திருப்பதாக பினுவுக்குத் தோன்றும். அவர் வந்த பிறகு சாப்பாட்டுக்கூடம் பக்கம் யாரும் வரவே மாட்டார்கள். வீட்டுக்கு இன்னொரு வாசல் இருந்தது.

கோட்டயத்தில் வெள்ளம் வரும் என எல்லோரும் பயந்துகொண்டிருந்த ஒரு பெரும் மழைநாளில் டொமினிக் மரித்துப்போனார். போட் ஜெட்டியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் தண்ணீர் வரும் எனக் காத்திருக்கையில், டொமினிக்கின் சவ ஊர்வலம் மார்த்தோமா ஆலயத்தை நோக்கிப் போகத் தொடங்கியது.

பினு 25 வயதைக் கடந்திருந்தாலும், ஒரு சிறுவனுக்கான தோற்றத்தோடு மழையில் அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தான். டொமினிக்கின் சவப்பெட்டியைத் தூக்கும்போது பினுவும் தூக்குவதற்கு முன்னால் போக, அவன் பெரியப்பன் பிரான்சிஸ் அவனைப் பிடித்துத் தள்ளினார். ``போடா அந்தப் பக்கம்... வந்துட்டான் குள்ளன், சவப்பெட்டியைத் தூக்க!’’ - டொமினிக்கைக் குழியில் இறக்கும்போது பினு மிகவும் பிரயத்தனப்பட்டு அப்பன் சவப்பெட்டியைப் பார்க்க முயன்றான். பாதிரியாரின் அங்கியைத்தான் அவனால் பார்க்க முடிந்தது. பினுவின் அழுகையை மழை மறைத்தது.

48p4_1531823730.jpg

அப்பன் போன பிறகு, அப்பன் செய்த காரியங்களை பினு செய்யத்தொடங்கினான். திருமணமாகிப் போன அக்கா மார்த்தா தன் மகள் பிளஸியுடன் திரும்பி வர, தெரசா மெஸ் உள்கூடத்தில் நிறைய பெண்கள் இங்கும் அங்கும் பரபரப்பாய் அலைய, எப்போதும்போல் இயங்கியது.

நடிகர் கொச்சி ஹனீபாவைக் குட்டி பாட்டிலுக்குள் அமுக்கி வைத்ததைப்போல, கட்டம் போட்ட கைலியும் கைவைத்த பனியனுமாய் இடுப்பில் தடித்த பெல்ட்டுமாய் பரபரப்பாய் வேலைசெய்வான் பினு. உயரம் இல்லை என்பதால், பெண் கிடைக்கவில்லை.

வியாபாரம் தொடங்கும் முன், அப்பன் உட்காரும் இடத்தில் இரண்டு பீடிக்கட்டுகளையும் தீப்பெட்டியையும் வைப்பான்.

3 மணிக்கு சாப்பாட்டுக்கூடம் கழுவப்பட்டதும், பினு வேறு ஆள். ஒருநாள் டென்னிஸ் பேட் எடுத்துக்கொண்டு கோட்டயம் க்ளப்புக்கு விளையாடப் போவான். இன்னொரு நாள், அக்காடியா ஹோட்டல் பார் அல்லது சஜியின் ரப்பர் தோட்டம் அல்லது பிரத்யேகமானவர்கள் மட்டும் கூடும் சக்காரியாவின் முன்னிரவுச் சபை. எல்லா இடங்களிலும் பினு மௌனன்தான். யாருடனும் பேச மாட்டான். குடிப்பான், கூடிப்போனால் ஒரு புன்னகை. அவன் எங்கு இருந்தாலும் உமரின் ஆட்டோ 9:15 மணிக்கு அவனைச் சந்திக்கும். அவன் அம்மா ஸ்தோத்திரம் சொல்லத் தொடங்குகையில், வீட்டுப்படிக்கட்டில் ஏறுவான். இந்த நிகழ்ச்சிநிரலில் மாற்றமே கிடையாது. உறவினர் வீட்டுத் துக்கங்களுக்கோ, விசேஷங்களுக்கோ அவன் போவதே இல்லை. எல்லாவற்றுக்கும் அம்மாதான்.

கொஞ்ச நாளாக அவனிடம் புகார் சொல்லத் தொடங்கியிருந்தாள் அக்கா. அவர்கள் வீட்டுக்கு எதிரே கோட்டயம் முனிசிபாலிட்டியின் குடோன் இருந்தது. முன்பெல்லாம் அங்கே மலையாளப்பட ஷூட்டிங் நடக்கும். பிரேம் நசீர்கள், ஜெயன்கள், மம்மூட்டிகள், மோகன்லால்கள் வில்லன்களை அங்கேவைத்து நையப்புடைப்பர். பழைய காலத்தில் அது பரபரப்பான வியாபார ஸ்தலம். போட் ஜெட்டி அங்கிருந்து செறியங்காடிக்கு மாறிய பிறகு, அது கைவிடப்பட்ட கட்டடமாய்... வழி இல்லாதவர்களுக்கு முனிசிபாலிட்டி குறைந்த வாடகைக்குவிடும் கட்டடமாய் மாறியிருந்தது.

அங்கு தங்கியிருக்கும் நான்கைந்து திருவனந்தபுரத்துப் பையன்கள், மாலையானால் பினுவின் அக்கா மகளை விசில் அடித்துக் கூப்பிடுவதும், `கூகூகூ...’ எனக் கத்துவதுமாய் இருந்தனர். ``ரோட்டில் போனால் பின்னாலேயே வருகிறார்கள். அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. எவ்வளவோ  சொல்லியும் அவர்கள் கேட்பதுபோல் தெரியவில்லை’’ என்றாள் அக்கா.

48p5_1531823752.jpg

பினு, மாறாத தனது நிகழ்ச்சிநிரலை மாற்றி அன்றைக்கு வீட்டில் காத்திருந்தான். 5 மணியானதும் அவர்கள் அறையிலிருந்து விசிலும் கூச்சலும் தொடங்கியது. பால்கனியில் ஏறி நின்று இவர்கள் வீட்டைப் பார்த்துக் கை காட்டினார்கள். பினு விறுவிறுவென குடோனை நோக்கி நடந்தான். குடோன் பாழடைந்து கிடந்தது. நாய்களும் பெருச்சாளிகளும் குறுக்கும்நெடுக்கு மாய் ஓட, பினு தூசி நிறைந்த மரப்படிக்கட்டு வழியாக மேலேறி அவர்கள் அறை முன்னால் நின்றவன், மெதுவாக மரக்கதவைத் தட்டினான். அது கூடுதலாய் அதிர்ந்தது.

உள்ளேயிருந்து கதவைப் படக்கெனத் திறந்து வெளியே வந்தவன், ``டேய், குள்ளன்டா!’’ என உள்பக்கம் திரும்பிக் கத்தினான். பினு பார்க்க முடிந்த கதவின் இடுக்கின் வழியே மதுக்குப்பிகள் தெரிந்தன. உள்ளேயிருந்து மற்றொருவன் கொச்சையாகக் கிண்டலடிக்க, அறை சிரிப்பில் அதிர்ந்தது. பினு மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான். மிக நிதானமாக தன்முன்னால் இருப்பவனை விலக்கி அறைக்குள் நுழைந்து ``இதை நிறுத்திக்கிட்டீங்கன்னா உங்களுக்கு நல்லது. இல்லைன்னா கஷ்டம்’’ என்று சொல்லிவிட்டு, படக்கென அறையை விட்டு வெளியே வந்தான். ``போடா குஞ்சக்கூனா!’’ என யாரோ கத்தினார்கள்.

அதன் பிறகு கொஞ்ச காலம் அவர்கள் அடங்கியிருந்தார்கள். பழைய போட் ஜெட்டியை பார்க் ஆக்கும் வேலையில் முனிசிபாலிட்டி இறங்க, போட் ஜெட்டியில் இருக்கும் வெங்காயத்தாமரைகள் நீள் இரும்புக்கைகள்கொண்ட வாகனங்களால் அள்ளப்பட்டுக்கொண்டிருக்க, வேலைவெட்டியில்லாதவர்கள் மதியவேளையில் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். திருனக்காரா அம்பலத்திலிருந்து போட் ஜெட்டிக்குப் புதிய தார் ரோடு போடும் வேலையும் நடந்துகொண்டிருந்தது. வடகிழக்கு வேலையாள்கள் மும்முரமாய் இந்தியும் பான்பராக்குமாய்க் கலந்து வேலை செய்துகொண்டிருக்க, பினு தன் பேட்டை எடுத்துக்கொண்டு க்ளப்புக்குப் போக ரோட்டில் இறங்கினான். சாலையின் மறுமுனையில் அக்கா மகள் பிளஸி, கல்லூரியிலிருந்து வந்துகொண்டிருந்தாள்.

பினு பார்த்துக் கொண்டிருக்கையி லேயே குடோனில் தங்கியிருப்ப வர்கள் அவளைக் கடந்து முன்னால் வந்து பயமுறுத்துவதற்காக சடக்கெனத் திரும்பி, தன் கையில் இருக்கும் பந்தை வீசுவதுபோல ஒருவன் பாவனை செய்தான். மற்றவன், அந்தப் பந்தைப் பிடுங்கி நிஜமாகவே அவள் மார்பை நோக்கி எறிந்தான். பிளஸி பயந்து, பின்னால் ஓடினாள். பினு பேட்டோடு அவர்களை நோக்கி ஓடினான். பினுவைப் பார்த்த அந்த நால்வரில் ஒருவன் ``டேய் குள்ளன்டா!’’ எனக் கத்த, பினு வடக்கத்தியத் தொழிலாளிகளைத் தள்ளிக்கொண்டு அவர்கள் ரோட்டில் கொட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் இரும்புத்தட்டுகளைத் தட்டிவிட்டு நால்வரில் முன்னால் இருந்தவன் மீது பாய்ந்தான்.

வடக்கத்தியத் தொழிலாளர்கள் பீகாரியில் கத்த, பினு குவித்துவைக்கப்பட்டிருக்கும் ஜல்லியின் மீது நின்று முதலாமவன் முகத்தில் குத்தினான். ``மாரோ... மாரோ..!’’ என்று யாரோ இந்தியில் கத்த, வெங்காயத்தாமரை அள்ளுவதை வேடிக்கை பார்த்துச் சலிப்படைந்திருந்த கூட்டம், சண்டையை நோக்கி ஓடிவந்தது. பினு சன்னதம் வந்தவனாய் நால்வர்மீதும் பாய்ந்து பாய்ந்து அடித்தான். அவன் குள்ளமாய் இருப்பது சண்டைக்கு மிக ஏதுவாய் இருந்தது. அவர்களால் அவன் முகத்தில் குத்த முடியவில்லை. அவன் சடக்கெனக் குனிந்து அவர்கள் கவட்டைக்குள் புகுந்து நிலைகுப்புற அவர்களைக் கீழே தள்ள முடிந்தது. வீட்டிலிருந்து தெரசாவும் மார்த்தாவும் மற்றவர்களும் ஓடிவர, பிளஸி ஓரமாய் நின்று அழுதுகொண்டிருந்தாள்.

48p6_1531823768.jpg

பினுவைக் கூட்டம் ஆதரித்து, ஆரவாரமாய்க் கூச்சல் எழுப்பியது. பினுவை விலக்க வந்த இரண்டொருவரை பினு அப்படியே தள்ளிவிட்டான். நால்வரும் பினுவின் தாக்குதலால் அயர்ந்துபோயிருந்தார்கள். பினு, கைக்குக் கிடைத்ததையெல்லாம் எடுத்து அவர்களை அடித்தான். அப்போதுதான் போடப்பட்டிருக்கும் தார் ரோட்டில் பைத்தியமாய் குறுக்கும்நெடுக்குமாய் பினு ஓடினான். போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜீப்பில் வந்து இறங்கும் வரை, பினுவை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், டொமினிக் குடும்பத்துக்குப் பரிச்சயமானவர். பினுவை ஆச்சர்யத்துடன் பார்த்தார். சிறு வயதிலிருந்து பினு அவர் பார்த்து வளர்ந்த பையன்தான். பினுவிடம் ஒன்றும் கேட்கவில்லை. அந்த நால்வரையும் உள்ளே அழைத்துச் சரமாரியாக அடித்தார். உடனடியாக அவர்கள் குடோன் அறையைக் காலிசெய்யவேண்டும் என்று சொல்லி, `இனி வம்பு ஏதும் செய்ய மாட்டோம்!’ என எழுதி வாங்கிக்கொண்டு, பினுவிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். நால்வரும் பினுவிடம் மன்னிப்பு கேட்க, பினு சலனமில்லாமல் அவர்களைப் பார்த்தான். நால்வரும் வெளியேற சுகுமாரன் பினுவைப் பார்த்து ``என்னடா, ஆள்களை அடிச்சவுடனே உயரமாயிட்டியா நீ?’’ எனக் கேட்க, பினு அப்போதுதான் கவனித்தான், அவனுடைய இரண்டு கேன்வாஸ் ஷூக்களிலும் அரையடிக்குத் தார் அப்பியிருப்பதை.

அடுத்த மூன்று நாள், கோட்டயம் வீதியெங்கும் பினு நடந்தே திரிந்தான். உமரின் ஆட்டோவை வேண்டாம் எனச் சொல்லிவிட்டான். எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் அவனைப் பார்க்க, ஷூவும் தாருமாய்த் திரிந்தான். உறவினர் வீடுகளின் வாசல் வரை போய் உள்ளே போகாமல் வாசலோடு நின்று பேசிவிட்டு வந்தான். வழியில் ஃபாதரைப் பார்த்தவன் மரியாதையாக ஸ்தோத்திரம் சொன்னான். பினுவின் வாழ்வில் முதல்முறையாக ஃபாதர் குனியாமல் அவனுக்குப் பதில் ஸ்தோத்திரம் சொன்னார். ஃபாதர், திரும்பித் திரும்பி அவனைப் பார்த்தபடி நடந்தார். பினு வீட்டுக்கே போகவில்லை. அக்காடியா ஹோட்டலில் ரூம் எடுத்தான். வீட்டில் இருக்கும் ஒரே வெஸ்டர்ன் டாய்லெட்டை அம்மா மட்டுமே பயன்படுத்துவாள். இண்டியன் டாய்லெட் போனால் காலில் தண்ணீர் படும். இந்த மூன்று நாளில் மூத்திரம் இருக்கும்போது அவன்மீது தெறிக்கவேயில்லை. பாரில் உயரமான ஸ்டூலில் ஏறி அமர்ந்து குடித்தான். அம்மாவும் அக்காவும் ஹோட்டல் ரூமில் வந்து அவனைப் பார்த்தபோது, பினு ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

மீனச்சல் ஆற்றோரமாக, தனியே அமர்ந்திருந்தான் பினு. ஆற்றுக்கு அவனை ஒற்றையாய்ப் பார்த்துதான் பழக்கம். ஆள்கள் வராத பொழுதில்தான் பினு குளிக்க வருவான். பினு எழுந்து தண்ணீர் அருகே போனான். தூரத்தே சூரியன் மறைந்துகொண்டிருக்க, அவனது நிழல் நீளமாய் ஆற்றின் நடுப்பகுதி வரை நீண்டு தெரிய, அதிர்ந்து சட்டெனப் பின்வாங்கினான் பினு.

https://www.vikatan.com/

பதவி பறி­போ­னா­லும் -மவுசு குறை­யாத விஜ­ய­கலா!!

2 hours 40 minutes ago
பதவி பறி­போ­னா­லும் -மவுசு குறை­யாத விஜ­ய­கலா!! சர்­சை­க­ளுக்­குள் சிக்கி, ஐக்­கிய தேசி­யக் கட்­சித் தலை­மை­யி­னா­லேயே பதவி பிடுங்­கப்­பட்ட, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு, தலைமை அமைச்­சர் வடக்­கில் நேற்­றுப் பங்­கேற்ற நிகழ்­வு­க­ளில் முதன்மை ஆச­னம் வழங்­கப்­பட்­டது. உள்­நாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் மற்­றும் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் உள்­ளிட்­டோர் யாழ்ப்­பா­ணத்­தில் பங்­கேற்ற நிகழ்­வில் உரை­யாற்­றிய திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று சாரப்­பட கருத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார். இந்­தக் கருத்து தெற்­கில் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­மைப்­பீ­டம், அவ­ரது இரா­ஜாங்க அமைச்­சர் பத­வி­யைப் பறித்­தது. அத்­து­டன் அவ­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­க­ளும் முடுக்கி விடப்­பட்­டுள்­ளது. தற்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மாத்­தி­ரமே அவர் பதவி வகிக்­கின்­றார். தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வடக்­கில் நேற்­றுப் பல்­வேறு நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­றார். அமைச்­சர்­க­ளுக்கு இணை­யாக, ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இல்­லாத சிறப்­பு­ரி­மை­யாக, முன்­வ­ரிசை ஆச­னம், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு வழங்­கப்­பட்­டது. http://newuthayan.com/story/09/பதவி-பறி­போ­னா­லும்-மவுசு-குறை­யாத-விஜ­ய­கலா.html

பதவி பறி­போ­னா­லும் -மவுசு குறை­யாத விஜ­ய­கலா!!

2 hours 40 minutes ago
பதவி பறி­போ­னா­லும் -மவுசு குறை­யாத விஜ­ய­கலா!!

 

37517938_1269518503185681_21702462488193

 
 

சர்­சை­க­ளுக்­குள் சிக்கி, ஐக்­கிய தேசி­யக் கட்­சித் தலை­மை­யி­னா­லேயே பதவி பிடுங்­கப்­பட்ட, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு, தலைமை அமைச்­சர் வடக்­கில் நேற்­றுப் பங்­கேற்ற நிகழ்­வு­க­ளில் முதன்மை ஆச­னம் வழங்­கப்­பட்­டது.

உள்­நாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் மற்­றும் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் உள்­ளிட்­டோர் யாழ்ப்­பா­ணத்­தில் பங்­கேற்ற நிகழ்­வில் உரை­யாற்­றிய திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று சாரப்­பட கருத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­தக் கருத்து தெற்­கில் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­மைப்­பீ­டம், அவ­ரது இரா­ஜாங்க அமைச்­சர் பத­வி­யைப் பறித்­தது. அத்­து­டன் அவ­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­க­ளும் முடுக்கி விடப்­பட்­டுள்­ளது. தற்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மாத்­தி­ரமே அவர் பதவி வகிக்­கின்­றார்.

 

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வடக்­கில் நேற்­றுப் பல்­வேறு நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­றார். அமைச்­சர்­க­ளுக்கு இணை­யாக, ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இல்­லாத சிறப்­பு­ரி­மை­யாக, முன்­வ­ரிசை ஆச­னம், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு வழங்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/09/பதவி-பறி­போ­னா­லும்-மவுசு-குறை­யாத-விஜ­ய­கலா.html

எத்­த­கைய எதிர்ப்புகள் வரினும் மரண தண்­டனை அமு­லாக்­கப்­படும் முன்­வைத்த காலை பின்­வைக்கப்போவ­தில்லை என்­கிறார் ஜனா­தி­பதி

2 hours 42 minutes ago
எத்­த­கைய எதிர்ப்புகள் வரினும் மரண தண்­டனை அமு­லாக்­கப்­படும் முன்­வைத்த காலை பின்­வைக்கப்போவ­தில்லை என்­கிறார் ஜனா­தி­பதி போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு நீதி­மன்­றத்தால் விதிக்­கப்­பட்ட மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பாக எடுத்த தீர்­மா­னத்தில் எவ்­வித மாற்­ற­முமில்லை. திட்­ட­மிட்­ட­படி மரண தண்­டனை நிறை­வேற்­றப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். பொலன்­ந­று­வையில் சீன-­இ­லங்கை நட்­பு­றவு தேசிய சிறு­நீ­ரக விசேட வைத்­தி­ய­சாலை நிர்­மா­ணிப்­ப­தற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், நாட்டில் அதி­க­ரித்­து­வரும் போதைப்­பொருள் தொடர்­பான செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்தும் முக­மாக கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மாக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. இதன் கார­ண­மாக மூன்று வாரத்­திற்கு நடை­பெற்ற அமைச்­ச­ரவை கூட்ட அமர்­வின்­போது முன்­ன­தாக போதைப்­பொருள் செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான அனு­ம­தியை கோரி­யி­ருந்தேன். அதற்­கான அனு­மதி கிடைத்­தி­ருந்­தது. அவ்­வாறு இருக்­கையில் எமது நாட்டின் தேசிய பத்­தி­ரி­கைகள் போதைப்­பொருள் குற்­ற­வா­ளிக்கு எதி­ராக மர­ண­தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வதை நிறுத்­தப்­ப­ட­வி­ருப்­ப­தாக பிர­தான தலைப்­பிட்டு செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. அச்­செய்தி முற்­று­மு­ழு­தாக உண்­மைக்கு புறம்­பா­ன­தொன்­றாகும். எத்­த­கைய எதிர்ப்­புக்கள் ஏற்­பட்­டாலும் போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வதில் நான் முன்­வைத்த காலை பின்­வைக்கப் போவ­தில்லை. எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை சட்­டமா அதிபர், நீதி மற்றும் சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு அமைச்சு மற்றும் திணைக்­கள அதி­கா­ரிகள், ஆகி­யோ­ருடன் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் கலந்­து­ரை­யா­ட­லொன்­றுக்கு அழைத்­துள்ளேன். அச்­ச­ம­யத்தில் குழு­வொன்று நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது. அக்­கு­ழுவே போதைப்­பொருள் குற்­றச்­சாட்டில் மரண தண்­ட­னைக்­குட்­பட்டு தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டி­ய­வர்கள் யார்? அத்­தண்­ட­னையை எப்­போது நிறை­வேற்­று­வது என்­பது தொடர்பில் தீர்­மா­னிக்­க­வுள்­ளது. போதைப்­பொருள் செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக மரண தண்­ட­னையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு சில தரப்­புக்கள் எதிர்ப்­புக்­களை வெளி­யிட்­டுள்­ளன. அவ்­வாறு எதிர்ப்­புக்­களை வெளியிட்டுள்ளவர்கள் இந்த நாட்டினையும் எதிர்கால சந்ததியினரையும் மோசமாக பாதிக்கச் செய்யும் போதைப்பொருள் செயற்பாடுகளை கட்டப்படுத்துவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்கின்றேன். ஆகவே மரண தண்டனை தொடர்பில் நான் எடுத்த தீர்மானத்தினை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்றார். http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-07-22#page-1

எத்­த­கைய எதிர்ப்புகள் வரினும் மரண தண்­டனை அமு­லாக்­கப்­படும் முன்­வைத்த காலை பின்­வைக்கப்போவ­தில்லை என்­கிறார் ஜனா­தி­பதி

2 hours 42 minutes ago
எத்­த­கைய எதிர்ப்புகள் வரினும் மரண தண்­டனை அமு­லாக்­கப்­படும்

 

முன்­வைத்த காலை பின்­வைக்கப்போவ­தில்லை என்­கிறார் ஜனா­தி­பதி

போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு நீதி­மன்­றத்தால் விதிக்­கப்­பட்ட மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பாக எடுத்த தீர்­மா­னத்தில் எவ்­வித மாற்­ற­முமில்லை. திட்­ட­மிட்­ட­படி மரண தண்­டனை நிறை­வேற்­றப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். பொலன்­ந­று­வையில் சீன-­இ­லங்கை நட்­பு­றவு தேசிய சிறு­நீ­ரக விசேட வைத்­தி­ய­சாலை நிர்­மா­ணிப்­ப­தற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டில் அதி­க­ரித்­து­வரும் போதைப்­பொருள் தொடர்­பான செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்தும் முக­மாக கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மாக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. இதன் கார­ண­மாக மூன்று வாரத்­திற்கு நடை­பெற்ற அமைச்­ச­ரவை கூட்ட அமர்­வின்­போது முன்­ன­தாக போதைப்­பொருள் செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான அனு­ம­தியை கோரி­யி­ருந்தேன். அதற்­கான அனு­மதி கிடைத்­தி­ருந்­தது. அவ்­வாறு இருக்­கையில் எமது நாட்டின் தேசிய பத்­தி­ரி­கைகள் போதைப்­பொருள் குற்­ற­வா­ளிக்கு எதி­ராக மர­ண­தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வதை நிறுத்­தப்­ப­ட­வி­ருப்­ப­தாக பிர­தான தலைப்­பிட்டு செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

அச்­செய்தி முற்­று­மு­ழு­தாக உண்­மைக்கு புறம்­பா­ன­தொன்­றாகும். எத்­த­கைய எதிர்ப்­புக்கள் ஏற்­பட்­டாலும் போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வதில் நான் முன்­வைத்த காலை பின்­வைக்கப் போவ­தில்லை. எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை சட்­டமா அதிபர், நீதி மற்றும் சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு அமைச்சு மற்றும் திணைக்­கள அதி­கா­ரிகள், ஆகி­யோ­ருடன் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் கலந்­து­ரை­யா­ட­லொன்­றுக்கு அழைத்­துள்ளேன். அச்­ச­ம­யத்தில் குழு­வொன்று நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது. அக்­கு­ழுவே போதைப்­பொருள் குற்­றச்­சாட்டில் மரண தண்­ட­னைக்­குட்­பட்டு தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டி­ய­வர்கள் யார்? அத்­தண்­ட­னையை எப்­போது நிறை­வேற்­று­வது என்­பது தொடர்பில் தீர்­மா­னிக்­க­வுள்­ளது.

போதைப்­பொருள் செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக மரண தண்­ட­னையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு சில தரப்­புக்கள் எதிர்ப்­புக்­களை வெளி­யிட்­டுள்­ளன. அவ்­வாறு எதிர்ப்­புக்­களை வெளியிட்டுள்ளவர்கள் இந்த நாட்டினையும் எதிர்கால சந்ததியினரையும் மோசமாக பாதிக்கச் செய்யும் போதைப்பொருள் செயற்பாடுகளை கட்டப்படுத்துவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்கின்றேன். ஆகவே மரண தண்டனை தொடர்பில் நான் எடுத்த தீர்மானத்தினை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-07-22#page-1

நாளிதழ்களில் இன்று: “ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது” - அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புதல்

2 hours 46 minutes ago
நாளிதழ்களில் இன்று: “ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது” - அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: "ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது" ஊழல் என்பது எல்லா காலத்திலும் நடந்து இருக்கிறது. தற்போது ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால் ஊழல்கள் வெளி உலகத்திற்கு தெரிகின்றன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ். மதுரை ஆரப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறாக கூறியதாக விவரிக்கும் அந்நாளிதழ், "ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமித்ஷாவின் கருத்து பொதுவாக சொல்லப்பட்டது. அ.தி.மு.க. தான் என்று அவர் குறிப்பிட்டு கூறவில்லை. ஊழல் என்பது எல்லா காலத்திலும் நடந்து இருக்கிறது. தற்போது ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால் ஊழல்கள் வெளி உலகத்திற்கு தெரிகின்றன. ராகுல்காந்தி வளர்ந்து வரக்கூடிய ஒரு இளம் தலைவர். அவருடைய தந்தை ராஜீவ்காந்தி போல, எளிமையாக பழகுவார். நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி, மோடியை கட்டிப்பிடித்தது அரசியல் நாகரிகமானது. பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக அ.தி. மு.க. வாக்களித்தது. இது நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாகும்" என்று அவர் கூறியதாக குறிப்பிட்டுள்ளது அந்நாளிதழ் செய்தி. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "நூறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறைப்பு" படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஏறத்தாழ நூற்றுக்கும் மேலான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ள செய்தி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் முதல் பக்கத்தில் இடம் பிடித்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடுத்தர வர்கத்தின் வாக்குகளை கவரும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறது அந்நாளிதழ், இதனால் அரசாங்கத்திற்கு 15 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்றும் விவரிக்கிறது. தி இந்து தமிழ்: "கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விவரங்களை மறைக்க முற்படுகின்றனர்" கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விவரங்களை மறைக்க முற்படுகின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ். "ஈரோட்டை அடுத்த கொடுமணல் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பிரம்மி எழுத்துகள், அமெரிக்காவில் உள்ள பழம்பெரும் ஆய்வுக் கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கிறிஸ்து பிறப்புக்கு முன்பு 350-லிருந்து 375 ஆண்டுக்கு காலத்து எழுத்துகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா மொழிகளைவிட தொன்மையான மொழி தமிழ் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர். நம்முடைய பூமி பழமையானது என்று நம்முடைய பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். தமிழரின் நாகரீகம் பழமையான நாகரீகமாகும். பழமையான நாகரீகம் என்று கீழடியை கூறுகின்றனர். கீழடி நாகரீகம் என்பது பழமையானது என்று கூறும்போது, அதனை மறைக்க முற்படுகின்றனர். பண்டைய காலத்தில் போர் தொடுத்து வந்து நம்முடைய வரலாற்று சின்னங்களை அழித்தார்கள். இப்போது நம்முடைய அறியாமையால் அழித்து வருகிறோம். நமது வசிப்பிடம் அருகே உள்ள பழமையான கல்வெட்டுகள், பொருட்களை பார்த்தால், அது குறித்து அரசு அலுவலர்கள் அல்லது தொல்லியல் ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், நம்முடைய வரலாற்றை அழியாமல் பாதுகாக்க முடியும். நம்முடைய தொன்மையான வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும்." என்று அவர் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி. தினமணி: "கட்டடத்தின் சாரம் சரிந்து விபத்து" சென்னை கந்தன்சாவடியில் சனிக்கிழமை கட்டட சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் இறந்தார். 23 பேர் காயமடைந்தனர் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "சென்னை கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை 8 தளங்களுடன் கூடிய கட்டடத்தை சில மாதங்களுக்கு முன்பிருந்து கட்டி வருகிறது. இப்பணியில் பிஹார், ஒடிஸா மாநிலங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 4 தளங்கள் கட்டப்பட்ட நிலையில், அந்தக் கட்டடத்தின் அருகிலேயே ஜெனரேட்டர் வைப்பதற்கு 9 அடி உயரத்தில் அண்மையில் இரும்பு மேடை அமைக்கப்பட்டது. இந்த மேடை இரும்பு தூணில் இருந்தது. இந்த மேடையின் மேல்பகுதியில் கூரை அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. பலவீனமாக இருந்த அந்த மேடையின் இரும்புத் தூண்கள் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் திடீரென சரிந்து, அருகே இருந்த 4 மாடி கட்டடத்தின் இரும்பு சாரத்தின் மீது விழுந்தது.இதில் ஜெனரேட்டரும் இரும்பு சாரத்தின் மீது விழுந்ததால், சாரம் பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது. இதனால், தரைத்தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இரும்பு சாரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தனர்" என்று விவரிக்கிறது அச்செய்தி. https://www.bbc.com/tamil/india-44914642

நாளிதழ்களில் இன்று: “ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது” - அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புதல்

2 hours 46 minutes ago
நாளிதழ்களில் இன்று: “ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது” - அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புதல்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது"

ஊழல் என்பது எல்லா காலத்திலும் நடந்து இருக்கிறது. தற்போது ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால் ஊழல்கள் வெளி உலகத்திற்கு தெரிகின்றன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.

தினத்தந்தி: "ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது"

மதுரை ஆரப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறாக கூறியதாக விவரிக்கும் அந்நாளிதழ், "ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமித்ஷாவின் கருத்து பொதுவாக சொல்லப்பட்டது. அ.தி.மு.க. தான் என்று அவர் குறிப்பிட்டு கூறவில்லை. ஊழல் என்பது எல்லா காலத்திலும் நடந்து இருக்கிறது. தற்போது ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால் ஊழல்கள் வெளி உலகத்திற்கு தெரிகின்றன.

ராகுல்காந்தி வளர்ந்து வரக்கூடிய ஒரு இளம் தலைவர். அவருடைய தந்தை ராஜீவ்காந்தி போல, எளிமையாக பழகுவார். நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி, மோடியை கட்டிப்பிடித்தது அரசியல் நாகரிகமானது.

பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக அ.தி. மு.க. வாக்களித்தது. இது நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாகும்" என்று அவர் கூறியதாக குறிப்பிட்டுள்ளது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line
  •  

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "நூறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறைப்பு"

"நூறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறைப்பு"படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஏறத்தாழ நூற்றுக்கும் மேலான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ள செய்தி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் முதல் பக்கத்தில் இடம் பிடித்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடுத்தர வர்கத்தின் வாக்குகளை கவரும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறது அந்நாளிதழ், இதனால் அரசாங்கத்திற்கு 15 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்றும் விவரிக்கிறது.

Presentational grey line

தி இந்து தமிழ்: "கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விவரங்களை மறைக்க முற்படுகின்றனர்"

கீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விவரங்களை மறைக்க முற்படுகின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ்.

"ஈரோட்டை அடுத்த கொடுமணல் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பிரம்மி எழுத்துகள், அமெரிக்காவில் உள்ள பழம்பெரும் ஆய்வுக் கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கிறிஸ்து பிறப்புக்கு முன்பு 350-லிருந்து 375 ஆண்டுக்கு காலத்து எழுத்துகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா மொழிகளைவிட தொன்மையான மொழி தமிழ் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர். நம்முடைய பூமி பழமையானது என்று நம்முடைய பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். தமிழரின் நாகரீகம் பழமையான நாகரீகமாகும். பழமையான நாகரீகம் என்று கீழடியை கூறுகின்றனர். கீழடி நாகரீகம் என்பது பழமையானது என்று கூறும்போது, அதனை மறைக்க முற்படுகின்றனர்.

பண்டைய காலத்தில் போர் தொடுத்து வந்து நம்முடைய வரலாற்று சின்னங்களை அழித்தார்கள். இப்போது நம்முடைய அறியாமையால் அழித்து வருகிறோம். நமது வசிப்பிடம் அருகே உள்ள பழமையான கல்வெட்டுகள், பொருட்களை பார்த்தால், அது குறித்து அரசு அலுவலர்கள் அல்லது தொல்லியல் ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், நம்முடைய வரலாற்றை அழியாமல் பாதுகாக்க முடியும். நம்முடைய தொன்மையான வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும்." என்று அவர் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line

தினமணி: "கட்டடத்தின் சாரம் சரிந்து விபத்து"

சென்னை கந்தன்சாவடியில் சனிக்கிழமை கட்டட சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் இறந்தார். 23 பேர் காயமடைந்தனர் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"சென்னை கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை 8 தளங்களுடன் கூடிய கட்டடத்தை சில மாதங்களுக்கு முன்பிருந்து கட்டி வருகிறது. இப்பணியில் பிஹார், ஒடிஸா மாநிலங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 4 தளங்கள் கட்டப்பட்ட நிலையில், அந்தக் கட்டடத்தின் அருகிலேயே ஜெனரேட்டர் வைப்பதற்கு 9 அடி உயரத்தில் அண்மையில் இரும்பு மேடை அமைக்கப்பட்டது. இந்த மேடை இரும்பு தூணில் இருந்தது. இந்த மேடையின் மேல்பகுதியில் கூரை அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

பலவீனமாக இருந்த அந்த மேடையின் இரும்புத் தூண்கள் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் திடீரென சரிந்து, அருகே இருந்த 4 மாடி கட்டடத்தின் இரும்பு சாரத்தின் மீது விழுந்தது.இதில் ஜெனரேட்டரும் இரும்பு சாரத்தின் மீது விழுந்ததால், சாரம் பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது. இதனால், தரைத்தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இரும்பு சாரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தனர்" என்று விவரிக்கிறது அச்செய்தி.

https://www.bbc.com/tamil/india-44914642

இந்திய அணியில் 4-ம் இடத்துக்கு பொருத்தமான பேட்ஸ்மேன் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ், ரோஹித்?- என்ன சொல்கிறார் மஞ்ச்ரேக்கர்

2 hours 50 minutes ago
இந்திய அணியில் 4-ம் இடத்துக்கு பொருத்தமான பேட்ஸ்மேன் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ், ரோஹித்?- என்ன சொல்கிறார் மஞ்ச்ரேக்கர் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர்: கோப்புப்படம் இந்திய அணியில் நடுவரிசையில் முக்கியமான 4-ம் இடத்தில் யாரைக் களமிறக்குவது என்பது பல்வேறு விதத்தலும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு வரும் நிலையில், ரோஹித் சர்மா, ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், விராட் கோலி ஆகியோரில் ஒருவரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பரிந்துரை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொருவரையும் எந்த இடத்தில் களமிறக்கினால், எப்படி இருக்கும் என்பதையும் விளக்கியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரில் சிறப்பாக விளையாடி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆனால், ஒருநாள் தொடரில் 2-1 என்று தொடரை இங்கிலாந்திடம் இந்திய அணி இழந்தது. இந்தத் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங் வரிசையைத் திறம்படக் கையாளாததும், பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக விளையாடமல் போனதுமே காரணம் என மூத்த வீரர்கள் சேவாக், கங்குலி, கவாஸ்கர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். அதிலும், தொடக்க வீரர்களாக ஷிகர் தவண், ரோஹித் சர்மா, 3-வது வீரராக விராட் கோலி ஆகியோர் களமிறங்கிய நிலையில், 4-வது, 5-வது வீரராக யாரை இறக்குவது என்ற குழப்பம் இந்த ஒருநாள் தொடரில் நீடித்தது. அதற்குச் சரியான பேட்ஸ்மேன் கிடைக்காத காரணத்தால், ரன் சேர்க்க வேண்டிய போட்டிகளில் எல்லாம் இந்திய அணி கோட்டைவிட்டது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சில நேரங்களில் விரைவாக ஆட்டமிழக்கும் போது, நடுவரிசை வீரர்கள்தான் அணியைத் தூக்கி நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். அந்த வகையில் இந்தப் போட்டிகளில் தோனிக்கு அந்தப் பொறுப்பு வந்தபோது, அதை அவர் சரிவரக் கையாளாமல், அதிகமான பந்துகளில் குறைந்த ரன்களைச் சேர்த்தார் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக அவர் மந்தமாக விளையாடினார் ஓய்வுக்கான நேரம் நெருங்கிவிட்டது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில், இந்திய அணியில் 4-ம் இடத்தில் களமிறங்கிய வேண்டிய வீரர்கள் குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை கிரிக்இன்போ தளத்தில் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதில் அவர் கூறியிருப்பதாவது: ''இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் விளையாடிய 11 வீரர்களை கேப்டன் விராட் கோலி தேர்வு செய்த வித்த்தில் எனக்கு உடன்பாடில்லை. நீண்டகாலத்துக்கு இந்திய அணியில் 4-ம் இடத்துக்கு வலுவான பேட்ஸ்மேன்களை உருவாக்க இரு சிறந்த வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று விராட் கோலி 4—ம் இடத்தில் விளையாடுவது. அவரின் பொறுப்பான, நிதானமான ஆட்டம் அணியைச் சரிவில் இருந்து எப்போது வேண்டுமானாலும் மீட்கும். அந்த அளவுக்கு கோலி தரமான வீரர். அதேசமயம், 3-ம் இடத்துக்கு விராட்கோலி விளையாடும் இடத்தில், கே.எல். ராகுலை விளையாட வைக்க வேண்டும். கே.எல். ராகுல் 4-ம் 5, 6-ம் இடங்களில் விளையாடுவதற்குச் சிறந்த பேட்ஸ்மேன் இல்லை என்பது எனது கருத்தாகும். மிகச்சிறந்த பேட்ஸ்மேனான ராகுலை கடைநிலையில் களமிறக்கக்கூடாது. 4-வது இடத்துக்கு மற்றொரு தகுதியான வீரர் ஸ்ரேயாஸ் அய்யர். நான்காவது வரிசையில் ஆடும் வீரர்களுக்கு அனைத்து வகையிலும் விளையாடும் திறமை இருக்க வேண்டும். அதாவது, சிங்கில் ரன்கள் அதிகமாகச் சேர்க்க வேண்டும், அவ்வப்போது பவுண்டரிகளும் அடிக்க வேண்டும். ஒருவேளை நிலைத்து ஆடிவிட்டால், கடைசி 10 ஓவர்களில் நிலைத்து ஆடி அதிரடியாக பேட்டிங் செய்ய வேண்டும். இந்த அனைத்துத் தகுதிகளும் ஸ்ரேயாஸ் அய்யரிடம் இருப்பதை நான் பார்க்கிறேன். 4-ம் இடத்தில் விளையாட என்னுடைய கடைசி வாய்ப்பு ரோஹித் சர்மா. ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் 4-வது வீரராக களமிறங்கி விளையாடிய அனுபவம் ரோஹித் சர்மாவுக்கு உண்டு. ஆதலால், ரோஹித் சர்மாவை 4-ம் இடத்தில் களமிறக்கிப் பயிற்சிஅளிக்கலாம். இவ்வாறு பேட்டிங் வரிசையை வரிசைப்படுத்தினால் அணியின் பலம் கூடும். தொடக்க வீரராக ஷிகர் தவணுடன் கே.எல். ராகுலைக் களமிறக்கலாம். அதிரடியாக ரன்களை பவர் ப்ளேயில் குவிக்கும் திறமை ராகுலுக்கு உண்டு. வீரர்கள் தனிப்பட்ட முறையில் எப்படி உணர்கிறார்கள், அணிக்கு எந்த இடத்தில் விளையாடுதல் சிறப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து களமிறக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல், ரோஹித் சர்மா ஆகியோரில் 4 பேருமே 4-வது இடத்துக்குத் தகுதியானவர்கள். இதில் ஒரு சிலர் தொடக்க வீரராக களமிறங்கிவிட்டேன், 3-வது வீரராகக் களமிறங்கிவிட்டேன் என்று கூறுவதை விடுத்து அணியின் நீண்டகால நலனைத்தான் பார்க்க வேண்டும்.'' இவ்வாறு மஞ்ச்ரேக்கர் தெரிவித்தார். https://tamil.thehindu.com/sports/article24483724.ece

இந்திய அணியில் 4-ம் இடத்துக்கு பொருத்தமான பேட்ஸ்மேன் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ், ரோஹித்?- என்ன சொல்கிறார் மஞ்ச்ரேக்கர்

2 hours 50 minutes ago
இந்திய அணியில் 4-ம் இடத்துக்கு பொருத்தமான பேட்ஸ்மேன் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ், ரோஹித்?- என்ன சொல்கிறார் மஞ்ச்ரேக்கர்

 

 
batsmen

ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர்: கோப்புப்படம்

 இந்திய அணியில் நடுவரிசையில் முக்கியமான 4-ம் இடத்தில் யாரைக் களமிறக்குவது என்பது பல்வேறு விதத்தலும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு வரும் நிலையில், ரோஹித் சர்மா, ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், விராட் கோலி ஆகியோரில் ஒருவரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பரிந்துரை செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொருவரையும் எந்த இடத்தில் களமிறக்கினால், எப்படி இருக்கும் என்பதையும் விளக்கியுள்ளார்.

 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரில் சிறப்பாக விளையாடி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆனால், ஒருநாள் தொடரில் 2-1 என்று தொடரை இங்கிலாந்திடம் இந்திய அணி இழந்தது.

இந்தத் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங் வரிசையைத் திறம்படக் கையாளாததும், பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக விளையாடமல் போனதுமே காரணம் என மூத்த வீரர்கள் சேவாக், கங்குலி, கவாஸ்கர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிலும், தொடக்க வீரர்களாக ஷிகர் தவண், ரோஹித் சர்மா, 3-வது வீரராக விராட் கோலி ஆகியோர் களமிறங்கிய நிலையில், 4-வது, 5-வது வீரராக யாரை இறக்குவது என்ற குழப்பம் இந்த ஒருநாள் தொடரில் நீடித்தது. அதற்குச் சரியான பேட்ஸ்மேன் கிடைக்காத காரணத்தால், ரன் சேர்க்க வேண்டிய போட்டிகளில் எல்லாம் இந்திய அணி கோட்டைவிட்டது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சில நேரங்களில் விரைவாக ஆட்டமிழக்கும் போது, நடுவரிசை வீரர்கள்தான் அணியைத் தூக்கி நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

அந்த வகையில் இந்தப் போட்டிகளில் தோனிக்கு அந்தப் பொறுப்பு வந்தபோது, அதை அவர் சரிவரக் கையாளாமல், அதிகமான பந்துகளில் குறைந்த ரன்களைச் சேர்த்தார் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக அவர் மந்தமாக விளையாடினார் ஓய்வுக்கான நேரம் நெருங்கிவிட்டது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில், இந்திய அணியில் 4-ம் இடத்தில் களமிறங்கிய வேண்டிய வீரர்கள் குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை கிரிக்இன்போ தளத்தில் தெரிவித்துள்ளார்.

sanjayjpg

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் விளையாடிய 11 வீரர்களை கேப்டன் விராட் கோலி தேர்வு செய்த வித்த்தில் எனக்கு உடன்பாடில்லை. நீண்டகாலத்துக்கு இந்திய அணியில் 4-ம் இடத்துக்கு வலுவான பேட்ஸ்மேன்களை உருவாக்க இரு சிறந்த வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன.

ஒன்று விராட் கோலி 4—ம் இடத்தில் விளையாடுவது. அவரின் பொறுப்பான, நிதானமான ஆட்டம் அணியைச் சரிவில் இருந்து எப்போது வேண்டுமானாலும் மீட்கும். அந்த அளவுக்கு கோலி தரமான வீரர். அதேசமயம், 3-ம் இடத்துக்கு விராட்கோலி விளையாடும் இடத்தில், கே.எல். ராகுலை விளையாட வைக்க வேண்டும்.

கே.எல். ராகுல் 4-ம் 5, 6-ம் இடங்களில் விளையாடுவதற்குச் சிறந்த பேட்ஸ்மேன் இல்லை என்பது எனது கருத்தாகும். மிகச்சிறந்த பேட்ஸ்மேனான ராகுலை கடைநிலையில் களமிறக்கக்கூடாது.

4-வது இடத்துக்கு மற்றொரு தகுதியான வீரர் ஸ்ரேயாஸ் அய்யர். நான்காவது வரிசையில் ஆடும் வீரர்களுக்கு அனைத்து வகையிலும் விளையாடும் திறமை இருக்க வேண்டும். அதாவது, சிங்கில் ரன்கள் அதிகமாகச் சேர்க்க வேண்டும், அவ்வப்போது பவுண்டரிகளும் அடிக்க வேண்டும். ஒருவேளை நிலைத்து ஆடிவிட்டால், கடைசி 10 ஓவர்களில் நிலைத்து ஆடி அதிரடியாக பேட்டிங் செய்ய வேண்டும். இந்த அனைத்துத் தகுதிகளும் ஸ்ரேயாஸ் அய்யரிடம் இருப்பதை நான் பார்க்கிறேன்.

4-ம் இடத்தில் விளையாட என்னுடைய கடைசி வாய்ப்பு ரோஹித் சர்மா. ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் 4-வது வீரராக களமிறங்கி விளையாடிய அனுபவம் ரோஹித் சர்மாவுக்கு உண்டு. ஆதலால், ரோஹித் சர்மாவை 4-ம் இடத்தில் களமிறக்கிப் பயிற்சிஅளிக்கலாம். இவ்வாறு பேட்டிங் வரிசையை வரிசைப்படுத்தினால் அணியின் பலம் கூடும்.

தொடக்க வீரராக ஷிகர் தவணுடன் கே.எல். ராகுலைக் களமிறக்கலாம். அதிரடியாக ரன்களை பவர் ப்ளேயில் குவிக்கும் திறமை ராகுலுக்கு உண்டு.

வீரர்கள் தனிப்பட்ட முறையில் எப்படி உணர்கிறார்கள், அணிக்கு எந்த இடத்தில் விளையாடுதல் சிறப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து களமிறக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல், ரோஹித் சர்மா ஆகியோரில் 4 பேருமே 4-வது இடத்துக்குத் தகுதியானவர்கள். இதில் ஒரு சிலர் தொடக்க வீரராக களமிறங்கிவிட்டேன், 3-வது வீரராகக் களமிறங்கிவிட்டேன் என்று கூறுவதை விடுத்து அணியின் நீண்டகால நலனைத்தான் பார்க்க வேண்டும்.''

இவ்வாறு மஞ்ச்ரேக்கர் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/sports/article24483724.ece